மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

28.10.09

Lesson on transit Rahu & Ketu: ராகு கேது பெயர்ச்சி!

+++++++++++++++++++++++++++++++++++++++++
Lesson on transit Rahu & Ketu: ராகு கேது பெயர்ச்சி!

ராகு மாதிரி அடிப்பவரும் இல்லை; கேது மாதிரி ஞானத்தைக் கெடுப்பவரும் இல்லை என்பார்கள்.

ராகு என்ன நம் விரோதியா? பேட்டை தாதாவா? அவராக வந்து அடிப்பதற்கு? பூர்வ புண்ணியப் பலன்களின் படி, எதைத் தரவேண்டுமோ, அதைத் தருவார். எங்கே அடிக்க வேண்டுமோ, அங்கே அடிப்பார். சிலரை அடிக்காமலும் விட்டுவிடுவார்.

சிலரைச் சும்மா தட்டுவார். சிலரை லத்தி வைத்துத் தட்டுவார். சிலரை நனைய வைத்து அடிப்பார். சிலரைத் தொங்க விட்டு அடிப்பார். அது அவரவர் வாங்கி வந்த வரத்தைப் பொறுத்து மாறுபடும்.ஜாதகத்தில் உள்ள பல நல்ல அம்சங்கள், நம்மை அடி வாங்காமல் பாதுகாக்கும். அல்லது வாங்கிய அடிகளுக்கு ஒத்தடம் கொடுத்து நம்மைத் தேற்றும்.

நம் ஜாதகத்தின் படி என்னென்ன பலாபலன்கள் உள்ளதோ - அதாவது நம் கர்மவினைப்படி என்ன பலன்கள் store ஆகியுள்ளதோ - அதைக் கொடுப்பது கிரகங்களின் பணி! அவ்வளவுதான். ஆகவே கிரகங்களின் பெயர்ச்சியைக் கண்டு பயப்பட வேண்டாம்.
+++++++++++++++++++++++++++++++++++++++++
ஒரு ரயில்வே ஸ்டேசனுக்குத் தினமும் பல ரயில்கள் வந்து செல்லும். இரண்டு அல்லது மூன்று திசைகளில் இருந்து வந்து செல்லும். அப்படி வரும் ரயில்களில் விரைவு ரயில்களும் இருக்கும், சாதாரணப் பயணிகள் ரயிலும் இருக்கும், சரக்கு ரயில்களும் இருக்கும். அந்த நிலைய மேலாளருக்கு அவற்றால் வேலைப் பளு இருந்தாலும், பழகிப்போயிருக்கும். கவலைப் பட மாட்டார். அவருக்கு அத்தனை வண்டிகளும் ஒன்றுதான். அவருடைய நிலைய எல்லையைத் தாண்டி அவற்றை அனுப்பி விட்டால் போதும், அவருடைய வேலை முடிந்து விடும். அவருக்கு பல நவீன சாதனங்களின் உதவிகள் இருக்கும், சில நிலையங்களில் இரு வழிப்பாதைக்கான தண்டவாளங்கள் இருக்கும். அப்படி இருப்பவைகள் அவருடைய வேலையை எளிமைப் படுத்திவிடும்.

அதுபோல நமது ஜாதகத்தில் அடிப்படை விஷயங்கள் வலுவாக இருந்தாலும், நல்ல தசா புத்தி என்னும் இருவழிப் பாதைகள் இருந்தாலும், இந்த வந்துபோகும் ரயில்களுக்காக (அதாவது பெயர்ச்சியில் வரும் கிரகங்களுக்காக) நாம் கவலைப்படத் தேவையில்லை!
++++++++++++++++++++++++++++++++++++++++++
அக்டோபர் மாதம் 27ஆ‌ம் தே‌தி செவ்வாய்க்கிழமை, காலை 9:15 மணிக்கு ராகு பகவான் மகர ராசியில் இருந்து தனுசு ராசிக்கும், கேது பகவான் கடக ராசியில் இருந்து மிதுன ராசிக்கும் இடம் பெயர்கிறார்கள். சுமார் ஒன்றரை ஆண்டு காலம் அந்த ராசிகளில் சஞ்சரிப்பார்கள். அதாவது இருப்பார்கள். அதை ஒட்டி 12 ராசிக்காரர்களுக்கும் ஏற்படும் பலா பலன்களைச் சுருக்கமாகக் கீழே கொடுத்துள்ளேன்.
++++++++++++++++++++++++++++++++++++++++++
மற்ற கிரகங்கள் எல்லாம் கடிகாரச் சுற்றில் வலம் வரும். ராகுவும் கேதுவும் கடிகாரச் சுற்றிற்கு எதிர்ச் சுற்றில் வலம் வரும். இரண்டும் ஒரு முழுச்சுற்றைச் சுற்றி முடிக்க 18 ஆண்டு காலம் ஆகும்!

ராகு கேது பெயர்ச்சியால் நன்மை அடையவிருக்கும் ராசிகள்:
மேஷம், கடகம், சிம்மம் , துலாம், மகரம், கும்பம்

சற்று சிரமங்களை அனுபவிக்க இருக்கும் ராசிகள்:
ரிஷபம், மிதுனம், கன்னி, விருச்சிகம், தனுசு, மீனம்
-------------------------------------------------------
சிரமங்கள் என்பது, பண வரவு குறையலாம், செலவுகள் எகிறலாம். செய்யும் வேலையில் தடைகள் எதிர்ப்படலாம். அலைச்சல்கள் இருக்கலாம். தாமதங்கள் ஏற்பட்டு நம்முடைய பொறுமையைச் சோதிக்கலாம். உடல் உபாதைகள் ஏற்படலாம். மனைவி, உற்றார் உறனருடன் கருத்து வேறுபாடுகள் உண்டாகலாம். வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். வம்பு வழக்குக்கள் உண்டாகலாம். நிலுவையில் இருக்கும் வழக்குகளில், தோல்விகள் ஏற்படலாம். இப்படிப் பலருக்கும் பலவிதமான வழிகளில் உபத்திரவங்கள் ஏற்படலாம்.

பரிகாரம்:
ராகு, கேது பகவானைத் துதிப்பதுதான் பரிகாரம்.

ராகுவிற்கான பரிகாரப் பாடல்:

அரவெனும் ராகு ஐயனே போற்றி
கரவாது அருள்வாய் கடும் துயர் போற்றி
இறவா இன்பம் எதிலும் வெற்றி
ராகு தேவே இறைவா போற்றி!

கேதுவிற்கான பரிகாரப் பாடல்:

கேது தேவே கீர்த்தி திருவே
பாதம் போற்றிபாவம் தீர்ப்பாய்
வாதம் வம்பு வழக்குகளின்றி
கேது தேவா கேண்மையாய் ரட்சி

(பரிகாரப் பாடல் உபயம்: நன்றி தினமலர் நாளிதழ்)

இ‌ந்த ராகு, கேது பெயர்ச்சியினால் ஒவ்வொரு ராசிதாரரின் வாழ்விலும் ஏற்படக்கூடிய மாற்றங்கள், பாதிப்புகள் அதற்கான பரிகாரங்கள் ஆகியன ராசி வாரியாக தொகுத்து கீழே உள்ள தளங்களில் கொடுக்கப்பெற்றுள்ளது! விரிவான பெயர்ச்சிப் பொதுப்பலன்களுக்கான தளங்கள் அவைகள்! உங்கள் ராசிக்கான பகுதியைக் க்ளிக் செய்து, படித்து முழு விவரங்களையும் அறிந்து கொள்ளுங்கள். அதற்கான சுட்டி கீழே உள்ளது.
----------------------------------------------------
இந்தப் பொதுப்பலன்களைப் பற்றி ஒரு விஷயம். அவைகள் பொதுவானவை அவ்வளவுதான். அவர்கள், பத்திரிக்கைகள் தங்கள் வாசகர்களுக்காகப் பொதுப் பலன்களை எழுதுகிறார்கள். நாமும் மாய்ந்து மாய்ந்து படிக்கிறோம். அது எப்படி நமக்குப் பொருந்தும்?

ராகுல் காந்திக்கும், நடிகை ரகசியாவிற்கும், கே.எஸ், ரவிகுமாருக்கும், நடிகர் சூரியாவிற்கும் அய்யம்பேட்டை ஆரோக்கியசாமிக்கும், தஞ்சாவூர் தமிழரசனுக்கும் ஒரே ராசி என்று வைத்துக் கொள்ளூங்கள், இந்தப் பொதுப் பலன்களின்படியா, அவர்கள் அனைவருக்கும் இன்ப, துன்பங்கள் வரப் போகின்றன. இல்லை!

110 கோடி மக்கள் வகுத்தல் 12 ராசிகள் = 9.16 கோடி மக்கள்
இந்த 9.16 கோடி மக்களுக்கும் எப்படிப் பலன் ஒருவிதமாகப் பொருந்தும்?

அவரவர்களின் ஜாதகப்படிதான் பலன்கள் அமையும்.
++++++++++++++++++++++++++++++++++++++++
1. உங்கள் ஜாதகத்தில் ஏகப்பட்ட யோகங்கள் இருந்து, அதற்கான தசாபுத்தி நடந்து
கொண்டிருந்தால், இந்தக் கோச்சாரங்கள் வழிவிட்டு விடும்.

2. நல்ல தசை அல்லது புத்தி நடந்து கொண்டிருந்தாலும் கோள்சாரங்கள்
பாதிப்பை ஏற்படுத்தாது.

சுருங்கச் சொன்னால், கோள்சாரத்தைவிட, தசை/புத்தி முக்கியம்.

இன்னொரு முக்கியமான விஷ்யம். அக்கிரகங்கள் இடம் மாறியுள்ள உங்கள் ராசியில் 30ம் அதற்கு மேற்பட்ட பரல்களும் இருக்குமாயின், இந்த மாற்றங்களால் உங்களுக்கு பாதிப்புக்கள் இருக்காது!

ஒரு சாலையில் முதலமைச்சர் வருகிறார். அவருக்கு முன், அவருடைய பைலட் மற்றும் பாதுகாப்பு வாகனங்கள் வருகின்றன என்றால் மொத்த சாலையும் துடைக்கப்பட்டு, வழி ஏற்படுத்தப் பட்டிருக்கும் இல்லையா? ஏன் தப்பித்தவறி நீங்கள் சென்றாலும், வழி விட்டு ஒதுங்கி நிற்ப்பீர்கள் இல்லையா?
அதுபோலத்தான் இதுவும்.
------------------------------------------------------------------
முழு பொதுப்பலன்களுக்கான சுட்டிகள் இங்கே!

1. தினமலர்:

2. தினத்தந்தி:
=============================================
அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!

74 comments:

 1. ஒரு கேள்வி ஆசானே,ராகு கேது எந்தஎந்த விட்டை பார்வைகள் செய்வர் ?

  ReplyDelete
 2. ராகுவும் கேதுவும்
  இருக்கும் வீட்டில் இருந்து
  அவர்கள் தருவதையே செய்வார்கள் . .

  ஊரான் வூட்டு நெய்யே . .
  என் பொன்டாட்டி கையேன்னு

  ஒரு பழமொழியை வாத்தியார் அய்யா சேர்த்துக்குவாருன்னு பார்த்தேன் . .

  நமக்கு எல்லாருமே நல்லவங்க தான் . .

  ReplyDelete
 3. வணக்கம் அய்யா.
  என்னதான் கிரகங்கள் நம் வாழ்க்கையை
  ஆட்சி செய்தாலும், இந்த மாதிரி
  ஆறுதலா நாலு வார்த்தை நம்ம வாத்தியார்
  எழுதி அதை நம் மனதில் உள் வாங்கினாதான்
  மனசுக்கு நிம்மதியை தருது.
  நன்றி அய்யா.

  ReplyDelete
 4. http://www.scribd.com/groups/discussion/169-rahu-and-ketu-s-aspect
  ராகு கேது பார்வையைப் பற்றி இங்கே படிக்க நேர்ந்தது. இருக்கு இல்லை என்ற பிரச்சினைதான்.

  ReplyDelete
 5. அன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம்,

  ராகு / கேது பெயர்ச்சிப் பற்றியப் பாடங்களுக்கு நன்றிகள் அய்யா.

  தினத் தந்தியில் ராசிப் பலன்கள் அருமையாக இருக்கும் என்பது எனது சிரம் தாழ்ந்த கருத்துக்கள்.
  சிவல்புரி சிங்காரம்
  (கீழச் செவல்ப்பட்டி சிங்காரம் செட்டியார் என்றுக் கேள்வி)
  தங்களுக்கு அவரை நன்குத் தெரிந்து இருக்கும் என நினைக்கிறேன்.

  நன்றிகள் குருவே!

  அன்புடன்,
  ஆலாசியம் கோ.

  ReplyDelete
 6. ஐயா வணக்கம்..
  வர்கோத்தமப் பாடத்திலேயே இந்த சந்தேகம் கேட்க எண்ணினேன்...
  முதல் மூன்று வேதங்களின் ரகசியத்தை கடக ராகுவும் நான்காவது வேத ரகசியத்தை மகரக் கேதுவும் காவல் காப்பதாக படித்த ஞாபகம்...
  கடக ராகு மகரக் கேது வர்கோத்தமம் சந்நியாச யோகமாக கருதப்படுமா?

  ReplyDelete
 7. மாணவர்களின் வேண்டுகோளை உடனே நிறைவேற்றும் ஆசானே!!!! வணக்கம் ஐயா.
  இன்றைய பாடம் மிக அருமை.

  தின தந்தி ராகு கேது பெயர்ச்சி பலன் இவ்வாறு சொல்கிறது "அரவு கிரகங்கள் அற்புதமான பலன்களை தர வேண்டுமானால் மறைவிடங்களில் தான் சஞ்சரிக்க வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது".

  இதை பற்றி தங்களுடைய கருத்தை தெரிவிக்கவும்.

  இதே போல, கேட்ட கிரகங்கள் (சனி, செவ்வாய், சூரியன்) மறைவிடங்களில் இருந்தால் என்ன பலன் கிடைக்கும்?

  ReplyDelete
 8. Dear Sir,

  Last 4 days I was travelling and did not have time to access internet. Hence I was absent to our class (But memtally present Sir!)

  Best Regards
  Saravana

  ReplyDelete
 9. அய்யா வணக்கம் ,

  இந்த அரவு கிரகங்ளின் பெயர்ச்சி இந்திய பங்கு சந்தை ஏதாவது பெரிய வீழ்ச்சி ஏர்படுதுமா?அடியேன் பகுதி நேரமாக பங்கு வணிகம் செய்கின்றேன் ,,,பங்கு வணிகம் செய்ய உகந்த ஜாதக அமைப்பு பத்தி ஒரு பதிவு போடுங்க அய்யா ,,,இந்த முறை வழக்கம் போல் 11 ம் இடம் நன்றாக உள்ளவர்கள் பங்கு வணிகம் செய்யலாம் என்று சொல்லி விடாதீர் அய்யா ....

  பதிவு அருமை அனைவரும் தன் நம்பிகை கொள்ள வேண்டும் என்ற உங்கள் நோக்கம் போற்றுதலுக்கு உரியது

  நன்றி வணக்கம்

  ReplyDelete
 10. ////சிங்கைசூரி said...
  ஒரு கேள்வி ஆசானே,ராகு கேது எந்தஎந்த விட்டை பார்வைகள் செய்வர் ?////

  Rahu aspects 12,9,7,5 in reverse order due to retrograde nature. Which becomes 2,5,7,9 when

  counted in forward. கேதுவிற்குப் பார்வை கிடையாது. போதுமா?

  ReplyDelete
 11. ////iyer said...
  ராகுவும் கேதுவும்
  இருக்கும் வீட்டில் இருந்து
  அவர்கள் தருவதையே செய்வார்கள் . .
  ஊரான் வூட்டு நெய்யே . .
  என் பொன்டாட்டி கையேன்னு
  ஒரு பழமொழியை வாத்தியார் அய்யா சேர்த்துக்குவாருன்னு பார்த்தேன் . .
  நமக்கு எல்லாருமே நல்லவங்க தான் . .////

  எப்படியும் நீங்கள் வந்து சொல்வீர்கள் என்றுதான் சேர்க்கவில்லை!

  ReplyDelete
 12. ////thirunarayanan said...
  வணக்கம் அய்யா.
  என்னதான் கிரகங்கள் நம் வாழ்க்கையை ஆட்சி செய்தாலும், இந்த மாதிரி ஆறுதலா நாலு

  வார்த்தை நம்ம வாத்தியார் எழுதி அதை நம் மனதில் உள் வாங்கினாதான் மனசுக்கு நிம்மதியைத்

  தருது. நன்றி அய்யா.////

  பாடம் நடத்துவதன் நோக்கமும் அதுதான் திருநாராயணன்!

  ReplyDelete
 13. ////DHANA said...
  உள்ளேன் ஐயா!/////

  வருகைப்பதிவு போட்டாயிற்று நண்பரே!

  ReplyDelete
 14. ////ananth said...
  http://www.scribd.com/groups/discussion/169-rahu-and-ketu-s-aspect
  ராகு கேது பார்வையைப் பற்றி இங்கே படிக்க நேர்ந்தது. இருக்கு இல்லை என்ற

  பிரச்சினைதான்.....//////

  உண்மைதான். அவைகளுக்கு சொந்த வீடுகள் கிடையாது. பார்வையும் கிடையாது. எனும் கருத்தும் உள்ளது. சிலர் கேதுவிற்குப் பார்வை கிடையாது. ராகுவிற்கு மட்டும் உண்டு என்பார்கள். நாம் நம் விருப்பப்படி எடுத்துக்கொள்ள வேண்டியதுதான் ஆனந்த்!

  ReplyDelete
 15. Alasiam G said...
  அன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம்,
  ராகு / கேது பெயர்ச்சிப் பற்றியப் பாடங்களுக்கு நன்றிகள் அய்யா.
  தினத் தந்தியில் ராசிப் பலன்கள் அருமையாக இருக்கும் என்பது எனது சிரம் தாழ்ந்த

  கருத்துக்கள். சிவல்புரி சிங்காரம் (கீழச் செவல்பட்டி சிங்காரம் செட்டியார் என்றுக் கேள்வி)
  தங்களுக்கு அவரை நன்குத் தெரிந்து இருக்கும் என நினைக்கிறேன்.
  நன்றிகள் குருவே!
  அன்புடன்,
  ஆலாசியம் கோ.////

  ஆமாம், அவரை நான் நன்கு அறிவேன். அவருக்கும் என்னைத் தெரியும். கதைகள் எழுதுவேன் என்று மட்டுமே தெரியும். ஜோதிடத்தைப் பற்றி எழுதிக்கொண்டிருப்பது அவருக்குத் தெரியாது.
  புத்தகங்களின் பிரதிகளைக் கொடுத்து, அவரை மகிழ்விக்க வேண்டும் என்று எண்ணியுள்ளேன்!

  ReplyDelete
 16. ///கார்த்திகேயன் said...
  ஐயா வணக்கம்..
  வர்கோத்தமப் பாடத்திலேயே இந்த சந்தேகம் கேட்க எண்ணினேன்...
  முதல் மூன்று வேதங்களின் ரகசியத்தை கடக ராகுவும் நான்காவது வேத ரகசியத்தை மகரக்

  கேதுவும் காவல் காப்பதாக படித்த ஞாபகம்...
  கடக ராகு மகரக் கேது வர்கோத்தமம் சந்நியாச யோகமாக கருதப்படுமா?////

  தெரியவில்லை நண்பரே! நீங்கள் சொல்லும் செய்திகள் எனக்குப் புதிது!

  ReplyDelete
 17. ////Scorpion King said...
  மாணவர்களின் வேண்டுகோளை உடனே நிறைவேற்றும் ஆசானே!!!! வணக்கம் ஐயா.
  இன்றைய பாடம் மிக அருமை.
  தினத்தந்தி ராகு கேது பெயர்ச்சி பலன் இவ்வாறு சொல்கிறது "அரவு கிரகங்கள் அற்புதமான

  பலன்களை தர வேண்டுமானால் மறைவிடங்களில் தான் சஞ்சரிக்க வேண்டும் என்று சாஸ்திரம்

  சொல்கிறது".
  இதை பற்றி தங்களுடைய கருத்தை தெரிவிக்கவும்./////

  6,8,12ல் சஞ்சரிக்கும் தீய கிரகங்களால் ஜாதகருக்கு உபத்திரவங்கள் குறைந்து நன்மையான பலன்கள் ஏற்படும்!
  >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

  இதே போல, கேட்ட கிரகங்கள் (சனி, செவ்வாய், சூரியன்) மறைவிடங்களில் இருந்தால் என்ன

  பலன் கிடைக்கும்?////

  இவர்கள் சில காரகங்களுக்கு அதிபதிகள், அந்தப் பொதுப் பலன்கள் இவர்களுக்குச் செல்லாது!
  >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

  ReplyDelete
 18. ////Saravana said...
  Dear Sir,
  Last 4 days I was travelling and did not have time to access internet. Hence I was absent to

  our class (But memtally present Sir!)
  Best Regards
  Saravana////

  நன்றி முருகா!

  ReplyDelete
 19. /////astroadhi said...
  அய்யா வணக்கம் ,
  இந்த அரவு கிரகங்ளின் பெயர்ச்சி இந்திய பங்கு சந்தை ஏதாவது பெரிய வீழ்ச்சி

  ஏற்படுத்துமா?அடியேன் பகுதி நேரமாக பங்கு வணிகம் செய்கின்றேன் ,,,பங்கு வணிகம் செய்ய

  உகந்த ஜாதக அமைப்பு பத்தி ஒரு பதிவு போடுங்க அய்யா ,,,இந்த முறை வழக்கம் போல் 11 ம் இடம்

  நன்றாக உள்ளவர்கள் பங்கு வணிகம் செய்யலாம் என்று சொல்லி விடாதீர் அய்யா ....
  பதிவு அருமை அனைவரும் தன் நம்பிகை கொள்ள வேண்டும் என்ற உங்கள் நோக்கம்

  போற்றுதலுக்கு உரியது
  நன்றி வணக்கம்/////

  As per astrological laws, unless material gains are promised in the natal chart of an individual, the
  prosperity is hard to come. There always has been desire of a person to live a comfortable and
  blissful life. However, affluence does play dominant part in providing exuberant life style for which the past karmas are much to say in it. ஆகவே தனிப்பட்ட ஜாதகங்களில் 2, 10 & 11ஆம் வீடுகள் 30ம் 30ற்கு மேற்பட்ட பரல்களுடனும் இருந்தால் மட்டுமே, ஒருவர் பங்கு வணிகத்தில் பணம் சேர்க்க இயலும்.

  ReplyDelete
 20. அய்யா, எங்கள் வேண்டுகோளுக்கு இணங்கி எழுதியமைக்கு நன்றி! இத்துடன் இன்னொரு சுட்டியும் உள்ளது, அதில் பலன்கள் நுணுக்கமாக இருப்பதாக எனது தாழ்மையான கருத்து.
  http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=3332

  ReplyDelete
 21. rail nilaya melaalar uthaaranam migavum arumai ayya.. ippoluthu ellam palan galai parti kavalai paduvathillai.. nadappathu than nadakkum endra mana pakkuvam vanthu vittathu.. jothidam padipathey athan kaaranam endru thondru girathu ayya.. kadamaiyai sei, Kadavulai vazhipadu, palanai ethirpaarathey enbathe enbathey ippothu vazhikai thathuvam aagi vittathu.. :)

  ReplyDelete
 22. வாத்தியார் ஐயா... ஒரு போது கேள்வி. இது நிறைய பேருக்கு விளக்கம் கொடுக்கும் என்பதால் இங்கே கேட்கிறேன்.

  பொதுவாக, சூரிய & சந்திர கிரகணம் கர்ப்பிணி பெண்களுக்கு உகந்தது அல்ல என்பது உண்மை.

  ஜோதிட படி, ராகு மற்றும் கேது சூரிய சந்திரரை விழுங்குவதால் (மறைப்பதால்) கிரகணம் ஏற்படுகிறது.

  இத்தகைய சூரிய & சந்திர கிரகணத்தின் போது குழந்தை பிறந்தால் அதனுடைய எதிர் காலம் எப்படி இருக்கும்?

  நன்றி.

  ReplyDelete
 23. ஐயா! இன்றைய பாடம் புரிந்தது!

  ---

  உங்களின் ஒரு பதிவு திருடப்பட்டிருக்கிறது. சுட்டி இங்கே http://ramya-willtolive.blogspot.com/2009/10/blog-post_27.html

  நன்றி.

  ReplyDelete
 24. ///RVC said...
  அய்யா, எங்கள் வேண்டுகோளுக்கு இணங்கி எழுதியமைக்கு நன்றி! இத்துடன் இன்னொரு சுட்டியும் உள்ளது, அதில் பலன்கள் நுணுக்கமாக இருப்பதாக எனது தாழ்மையான கருத்து.
  http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=3332////

  மேலதிகத் தகவலுக்கு நன்றி நண்பரே!

  ReplyDelete
 25. ////arivom said...
  rail nilaya melaalar uthaaranam migavum arumai ayya.. ippoluthu ellam palan galai parti kavalai paduvathillai.. nadappathu than nadakkum endra mana pakkuvam vanthu vittathu.. jothidam padipathey athan kaaranam endru thondru girathu ayya.. kadamaiyai sei, Kadavulai vazhipadu, palanai ethirpaarathey enbathe enbathey ippothu vazhikai thathuvam aagi vittathu.. :)////

  நல்லது. அதற்காகத்தான் அந்த உதாரணத்தைக் கொடுத்தேன்.

  ReplyDelete
 26. ////Scorpion King said...
  வாத்தியார் ஐயா... ஒரு போது கேள்வி. இது நிறைய பேருக்கு விளக்கம் கொடுக்கும் என்பதால் இங்கே கேட்கிறேன்.
  பொதுவாக, சூரிய & சந்திர கிரகணம் கர்ப்பிணி பெண்களுக்கு உகந்தது அல்ல பது உண்மை. ஜோதிடப்படி, ராகு மற்றும் கேது சூரிய சந்திரரை விழுங்குவதால் (மறைப்பதால்) கிரகணம் ஏற்படுகிறது.
  இத்தகைய சூரிய & சந்திர கிரகணத்தின் போது குழந்தை பிறந்தால் அதனுடைய எதிர் காலம் எப்படி இருக்கும்?/////

  இப்போது பிறக்காமலா இருக்கின்றன? லக்கினம், மற்ற கோள்களின் நிலையைவைத்து அக்குழந்தைகளின் எதிர்காலம் இருக்கும். அவர்களுக்கும் பரல்கள் 337தான். அதை நினைவில் வையுங்கள்!

  ReplyDelete
 27. ////Blogger karmegaraja said...
  ஐயா! இன்றைய பாடம் புரிந்தது!
  உங்களின் ஒரு பதிவு திருடப்பட்டிருக்கிறது. சுட்டி இங்கே http://ramya-willtolive.blogspot.com/2009/10/blog-post_27.html
  நன்றி.////

  நன்றி. அது திருடப்பட்டதாக நினைக்க வேண்டாம். மின்னஞ்சலில் உலா வந்தது அது. நான் எனது நடையில் மொழியாக்கம் செய்து போட்டத்தைப் போலவே அவரும் செய்திருக்கிறார். போட்டால் போடட்டும். அதில் ஒன்றும் குறைந்து விடாது. நன்றி!

  ReplyDelete
 28. நல்ல தெளிவான பதிவு. காளஹஸ்திக்கு சமீபத்தில் சென்றேன். அது தமிழ் மன்னர்கள் கட்டிய கோவில் அங்கு தமிழ் வழிபாடுகள் நடைபெறுகின்றன. ராகு கேது பரிகார பூஜை செய்கிறார்கள்.

  ReplyDelete
 29. குரு வணக்கம்,

  ஒரு இராசியின் பலன், அந்த இராசியை லக்கனமாக கொண்டவர்களுக்கும் பொருந்துமா?

  நன்றி

  ReplyDelete
 30. ஐயா!,,
  இதற்க்கும் சேர்த்து தான் தாங்கள் மேற்சொன்ன பதிலா?
  கடக ராகு மகரக் கேது வர்கோத்தமம் சந்நியாச யோகமாக கருதப்படுமா? ...

  ReplyDelete
 31. Sir,

  Reagrding Share Market...

  I have 27, 31, 44 parals in 2, 10 & 11 hosues. But I never tried in
  Share market side. would you advise me to do that?

  Will I het benifit out of it? I ready to do sir...

  Thanks
  Saravana

  ReplyDelete
 32. Thanks sir,

  I'm present.

  Balakumaran

  ReplyDelete
 33. உள்ளேன் ஐயா.

  ராகு-கேது நிழல் கிரகங்கள்.
  Scientific-காக பார்த்தால், பார்வை என்பது Reflection of Enery Waves. மற்ற கிரகங்கள் only can do that.
  ராகு/கேது வால் எதிரொளிக்க முடியாது. அதனால் அவற்றுக்கு பார்வை கிடையாது.

  (இது என்னுடைய சொந்த கருத்து.Subject to approval by SIR)

  ReplyDelete
 34. நேற்று வானில் ஒரு அதிசயம் நடந்தது.

  வியாழன் (Jupiter) கிரகம் நிலாவுக்கு மிக அருகில் இருந்தது. இது பூமிக்கு மிக அருகே வந்ததால் வெறும் கண்களால் பார்க்க முடிந்தது.

  மேலும் தகவலுக்கு கீழே உள்ள சுட்டி-ஐ படிக்கவும்.

  http://thatstamil.oneindia.in/art-culture/essays/2009/1027-spectacular-moon-jupiter-conjunction-today.html

  ReplyDelete
 35. aasiriyarin paarvaikku varukai pathivu

  ReplyDelete
 36. ஐயா வணக்கம்
  என்க்கும் டிசம்பர் மாத புத்தகம் வேண்டும் நீங்க என்ன புத்தகமெல்லாம் வெளியிடுகிறீர்களோ அவையெல்லாம் என்க்கு தேவை. சரியாக ப்ணம் தந்துவிடுவேன் நான் ராகு கேது பெயர்ச்சி படிக்கவில்லை நெருடலாயிருக்கிறது
  நான் மீன ராசி.
  உங்கள் மாணவி
  சுந்தரி

  ReplyDelete
 37. அன்புள்ள சகோதர சகோதரிகளுக்கும் ம்ற்றும் வாத்தியார் ஐயாவுக்கும்
  கவலை வேண்டாம் ராகு,கேது நம்மை ஒன்றும் செய்யாது எனென்றால் நாம்
  காலதேவனுக்கே காலத்தை நிர்ணயம் செய்வேர்ம் அந்த அள்வுக்கு வாத்தியார்
  நமக்கு ஜாதகத்தையும் சாமாளிக்கும் திறனையும் கற்று தருகிறார். எல்லோருக்கும் என் ம்ன்மார்ந்த ராகு கேது
  வாழ்த்துகள்
  உஙகள் சகோதரி/மாணவி
  சுந்தரி.

  ReplyDelete
 38. Dear Sakothari Sundari,

  Raghu & Kethu Vazthukkal. Puthumaiyaga ullathu. Ungalukkum Raghu & Kethu Vazthukkal (Same to you)

  Thanks
  Saravana

  ReplyDelete
 39. ////krish said...
  நல்ல தெளிவான பதிவு. காளஹஸ்திக்கு சமீபத்தில் சென்றேன். அது தமிழ் மன்னர்கள் கட்டிய கோவில் அங்கு தமிழ் வழிபாடுகள் நடைபெறுகின்றன. ராகு கேது பரிகார பூஜை செய்கிறார்கள்.////

  நல்லது. தகவலுக்கு நன்றி!

  ReplyDelete
 40. ////raja said...
  குரு வணக்கம்,
  ஒரு இராசியின் பலன், அந்த இராசியை லக்கனமாக கொண்டவர்களுக்கும் பொருந்துமா?
  நன்றி////

  நிச்சயம் பொருந்தும்!

  ReplyDelete
 41. //////கார்த்திகேயன் said...
  ஐயா!,,
  இதற்கும் சேர்த்து தான் தாங்கள் மேற்சொன்ன பதிலா?
  கடக ராகு மகரக் கேது வர்கோத்தமம் சந்நியாச யோகமாக கருதப்படுமா? ...////

  தெரியவில்லை. எதைவைத்து இதைச் சொல்கிறீர்கள்?

  ReplyDelete
 42. /////Saravana said...
  Sir,
  Reagrding Share Market...
  I have 27, 31, 44 parals in 2, 10 & 11 hosues. But I never tried in
  Share market side. would you advise me to do that?
  Will I het benifit out of it? I ready to do sir...
  Thanks
  Saravana////

  முதலில் திருமணச் சந்தையில் ஒரு பெண்ணைப் பிடித்துக் கொண்டு வாருங்கள் சரவணன். பிறகு பங்குச் சந்தையைப் பார்க்கலாம்!

  ReplyDelete
 43. /////KUMARAN said...
  Thanks sir,
  I'm present.
  Balakumaran////

  வருகைப் பதிவு போட்டாயிற்று!

  ReplyDelete
 44. ////JS said...
  உள்ளேன் ஐயா.
  ராகு-கேது நிழல் கிரகங்கள்.
  Scientific-காக பார்த்தால், பார்வை என்பது Reflection of Enery Waves. மற்ற கிரகங்கள் only can do that.
  ராகு/கேது வால் எதிரொளிக்க முடியாது. அதனால் அவற்றுக்கு பார்வை கிடையாது.
  (இது என்னுடைய சொந்த கருத்து.Subject to approval by SIR)/////

  நல்லது. நன்றி!

  ReplyDelete
 45. /////Scorpion King said...
  நேற்று வானில் ஒரு அதிசயம் நடந்தது.
  வியாழன் (Jupiter) கிரகம் நிலாவுக்கு மிக அருகில் இருந்தது. இது பூமிக்கு மிக அருகே வந்ததால் வெறும் கண்களால் பார்க்க முடிந்தது.
  மேலும் தகவலுக்கு கீழே உள்ள சுட்டி-ஐ படிக்கவும்.
  http://thatstamil.oneindia.in/art-culture/essays/2009/1027-spectacular-moon-jupiter-conjunction-today.html////

  தகவலுக்கு நன்றி நண்பரே!

  ReplyDelete
 46. /////prabakar.l.n said...
  aasiriyarin paarvaikku varukai pathivu////

  வருகைப் பதிவு போட்டாயிற்று!

  ReplyDelete
 47. //////sundari said...
  ஐயா வணக்கம்
  என்க்கும் டிசம்பர் மாத புத்தகம் வேண்டும் நீங்க என்ன புத்தகமெல்லாம் வெளியிடுகிறீர்களோ அவையெல்லாம் என்க்கு தேவை. சரியாக பணம் தந்துவிடுவேன் நான் ராகு கேது பெயர்ச்சி படிக்கவில்லை நெருடலாயிருக்கிறது
  நான் மீன ராசி.
  உங்கள் மாணவி
  சுந்தரி/////

  புத்தகங்கள் உங்களுக்கும் கிடைக்கும்.

  ReplyDelete
 48. /////sundari said...
  அன்புள்ள சகோதர சகோதரிகளுக்கும் மற்றும் வாத்தியார் ஐயாவுக்கும்
  கவலை வேண்டாம் ராகு,கேது நம்மை ஒன்றும் செய்யாது எனென்றால் நாம்
  காலதேவனுக்கே காலத்தை நிர்ணயம் செய்வோம் அந்த அளவுக்கு வாத்தியார்
  நமக்கு ஜாதகத்தையும் சாமாளிக்கும் திறனையும் கற்று தருகிறார். எல்லோருக்கும் என் மனமார்ந்த ராகு கேது வாழ்த்துகள்
  உஙகள் சகோதரி/மாணவி
  சுந்தரி./////

  காலதேவனைப் பற்றித் தெரியாமல் சொல்லியிருக்கிறீர்கள். எல்லாம் ஒரு அதீத நம்பிக்கையால் எழும் பேச்சு!

  ReplyDelete
 49. ////Saravana said...
  Dear Sakothari Sundari,
  Raghu & Kethu Vazthukkal. Puthumaiyaga ullathu. Ungalukkum Raghu & Kethu Vazthukkal (Same to you)
  Thanks
  Saravana/////

  முருகா! முருகா! முருகா!

  ReplyDelete
 50. Dear brother saravana,

  Thanks dear brother sorry i told it for raghu kethu payarchi . pl donot take serious. pl forgive me.
  your lovingly
  sundari.p

  ReplyDelete
 51. Dear Sir

  Dinamalar Pathippu Dailythanthi padithen. Nandru..

  Thodarum thondu. Thodum Thondaga mariyulladhu.

  Thank you

  Loving Stundent
  Arulkumar Rajaraman

  ReplyDelete
 52. /////Priya said...
  Prsent sir.....////

  வருகைப்பதிவு போட்டாயிற்று!

  ReplyDelete
 53. /////Arulkumar Rajaraman said...
  Dear Sir
  Dinamalar Pathippu Dailythanthi padithen. Nandru..
  Thodarum thondu. Thodum Thondaga mariyulladhu.
  Thank you
  Loving Stundent
  Arulkumar Rajaraman////

  நன்றி ராஜாராமன்!

  ReplyDelete
 54. அய்யா நான் கடக ராசி 6ம் வீட்டிலும் 12ம் வீட்டிலும் 32, 33 பரல்கள். தப்பித்தேன்...

  ReplyDelete
 55. Well explained and thanks for the links too.

  Few Questions Sir,

  With this Ragu / Ketu transit on Dhanusu / Midunam what will be the effect of a person who unergoes Ragu desa and raghu puthi now?.

  As per Janana Laknam ( midunam ), Ragu is in 4 (Kanni) , Kethu in 10th ( Meenam ) ?.

  Will there be any issue on Work environment? or any change for relocation?

  Thanks

  ReplyDelete
 56. பொதுப்பலன் சொல்வதைத் தாஙகள் விரும்பவில்லை என்பது நன்றாகவே புரிகிற்து. சனிப் பெயர்ச்சியின் போதும் தினமலருக்கே திருப்பிவிட்டீர்கள்.
  இப்போதும் அப்படியே.ஆனாலும் வாத்தியாரின் touch and feel கிடைக்குமா
  அய்யா? வீட்டு சாப்பாடு கேட்டால் விடுதியைக் கை காண்பிக்கிறீர்களே அய்யா!

  ReplyDelete
 57. This comment has been removed by the author.

  ReplyDelete
 58. அய்யா நான் கடக ராசி 6ம் வீட்டிலும் 12ம் வீட்டிலும் 32, 33 பரல்கள். தப்பித்தேன்...

  tamil templs ayya 6 am veedu kadan thollaikal kurikkum veedu 12 aam veedu viraya selavukal kurikkum veedu but rendu veeedum athika paral kal vaanguvathu nalathu illaiye

  ReplyDelete
 59. போச்சா...பிரபாகர் அய்யா.....எனக்கு 9ல் குரு....தனுசு லக்கினம்... consession உண்டா?

  ReplyDelete
 60. வணக்கம்....ஐயா

  மற்ற கிரகங்கள் எல்லாம் கடிகாரச் சுற்றில் வலம் வரும். ராகுவும் கேதுவும் கடிகாரச் சுற்றிற்கு எதிர்ச் சுற்றில் வலம் வரும். ஏன்???...

  நன்றி...

  ReplyDelete
 61. ஐயா..

  நாளை எனது பிறந்தநாள்.... உங்களுடைய ஆசி வேண்டி அடியேன்....என்னுடைய ராசி நல்ல ராசி...

  நன்றி

  ReplyDelete
 62. கோசரத்தில் இருந்து ராகு, கேது முதலிய கிருஹங்கள் ஒரு இடம் விட்டு இன்னொரு இடம் போவது குறித்து
  அதிகம் கவலை வேண்டாம். அவரவர் ஜாதகத்தில் இருக்கும் கிருஹ நிலைகள் நல்லவையாக இருக்கும் பட்சத்தில்
  இந்த ராகு, கேது பெயர்ச்சி பற்றி அதிகம் கவலைப்படவேண்டாம் என அழகாக, அழுத்தமாகச் சொல்லியமைக்கு
  மிக்க நன்றி.

  நிற்க. குஜவத் ராகு, சனிவத் கேது ( சரிதானே ? ) என்றொரு வசனம் உண்டு.
  அதே போல், ராகுவும் கேதுவும் சாயா கிருஹங்கள் என்பதால், அவர்கள் இருக்கும் இடத்தின் அதிபதியைப்
  பிராதானமாக வைத்துக்கொண்டு பலன் சொல்லவும் செய்கிறார்கள்.

  இது கோசர விதிகளுக்குப் பொருந்துமா ? அல்லது ஒருவனது சுய ஜாதகத்தைப் பார்த்து சொல்லும்பொழுது மட்டுமே
  பொருந்துமா ?

  சுப்பு ரத்தினம்.

  ReplyDelete
 63. Good evening brother success,
  "HAPPY BIRTH DAY TO U, MANY MORE HAPPY RETURN OF THE DAY.

  your lovingly sister,
  sundari.p

  ReplyDelete
 64. ////tamiltemples said...
  அய்யா நான் கடக ராசி 6ம் வீட்டிலும் 12ம் வீட்டிலும் 32, 33 பரல்கள். தப்பித்தேன்...////

  நீங்கள் தப்பித்ததில் எனக்கும் மகிழ்ச்சிதான்!

  ReplyDelete
 65. ////Rajan said...
  Well explained and thanks for the links too.
  Few Questions Sir,
  With this Ragu / Ketu transit on Dhanusu / Midunam what will be the effect of a person who unergoes Ragu desa and raghu puthi now?.//////

  ராகு தசை ராகு புத்தி (சுயபுத்தி) பெரிய பாதிப்பு இருக்காது.
  >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
  /////As per Janana Laknam ( midunam ), Ragu is in 4 (Kanni) , Kethu in 10th ( Meenam ) ?.
  Will there be any issue on Work environment? or any change for relocation?
  Thanks////

  10ஆம் அதிபதி குரு, கர்மகாரகன் சனி, பத்தாம் வீட்டிலுள்ள பரல்கள் என்று பல மேட்டர்கள் உள்ளன. வந்தால் பார்த்துக்கொள்ளலாம. இப்போதே வீண் கவலை எதற்கு?
  >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>........

  ReplyDelete
 66. ////kmr.krishnan said...
  பொதுப்பலன் சொல்வதைத் தாஙகள் விரும்பவில்லை என்பது நன்றாகவே புரிகிற்து. சனிப் பெயர்ச்சியின் போதும் தினமலருக்கே திருப்பிவிட்டீர்கள்.
  இப்போதும் அப்படியே.ஆனாலும் வாத்தியாரின் touch and feel கிடைக்குமா
  அய்யா? வீட்டு சாப்பாடு கேட்டால் விடுதியைக் கை காண்பிக்கிறீர்களே அய்யா!/////

  வீட்டுச் சாப்பாடுதான் போடுக்கொண்டிருக்கிறேன். வாழைப்பழங்கள் சாப்பிட மட்டும் உங்களைக் கடைக்கு அனுப்புகிறேன் சார்!:-)))

  ReplyDelete
 67. /////prabakar.l.n said...
  அய்யா நான் கடக ராசி 6ம் வீட்டிலும் 12ம் வீட்டிலும் 32, 33 பரல்கள். தப்பித்தேன்... tamil templs ayya 6 am veedu kadan thollaikal kurikkum veedu 12 aam veedu viraya selavukal kurikkum veedu but rendu veeedum athika paral kal vaanguvathu nalathu illaiye/////

  அவரை ஏண் பயமுறுத்துகிறீர்கள். அதிகப் பரல்கள் அவருக்குத் தாக்குப் பிடிக்கும் சக்தியைக் கொடுக்கும்!

  ReplyDelete
 68. //////tamiltemples said...
  போச்சா...பிரபாகர் அய்யா.....எனக்கு 9ல் குரு....தனுசு லக்கினம்... consession உண்டா?/////

  பாக்கியஸ்தானத்துக் குரு 5ஆம் பார்வையாக லக்கினத்தைப் பார்த்துக்கொள்ளும். அது பெரிய
  consession. கவலையின்றி இருங்கள்!

  ReplyDelete
 69. /////Success said...
  வணக்கம்....ஐயா
  மற்ற கிரகங்கள் எல்லாம் கடிகாரச் சுற்றில் வலம் வரும். ராகுவும் கேதுவும் கடிகாரச் சுற்றிற்கு எதிர்ச் சுற்றில் வலம் வரும். ஏன்???...
  நன்றி.../////

  அப்படித்தான் வலம் வந்து கொண்டிருக்கின்றன. ஏன் என்று யாரைக் கேட்க முடியும்? சிலவற்றைக் கேள்வி கேட்காமல் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான்.

  ReplyDelete
 70. /////Success said...
  ஐயா..
  நாளை எனது பிறந்தநாள்.... உங்களுடைய ஆசி வேண்டி அடியேன்....என்னுடைய ராசி நல்ல ராசி...
  நன்றி//////

  16 பேறுகளையும் பெற்றுப் பெரு வாழ்வு வாழுங்கள்.
  வாழ்த்துக்கள்
  வாத்தியார்

  ReplyDelete
 71. /////sury said...
  கோச்சாரத்தில் இருந்து ராகு, கேது முதலிய கிருஹங்கள் ஒரு இடம் விட்டு இன்னொரு இடம் போவது குறித்து அதிகம் கவலை வேண்டாம். அவரவர் ஜாதகத்தில் இருக்கும் கிருஹ நிலைகள் நல்லவையாக இருக்கும் பட்சத்தில் இந்த ராகு, கேது பெயர்ச்சி பற்றி அதிகம் வலைப்படவேண்டாம் என அழகாக, அழுத்தமாகச் சொல்லியமைக்கு
  மிக்க நன்றி.
  நிற்க. குஜவத் ராகு, சனிவத் கேது ( சரிதானே ? ) என்றொரு வசனம் உண்டு.
  அதே போல், ராகுவும் கேதுவும் சாயா கிருஹங்கள் என்பதால், அவர்கள் இருக்கும் இடத்தின் அதிபதியைப் பிராதானமாக வைத்துக்கொண்டு பலன் சொல்லவும் செய்கிறார்கள்.
  இது கோசர விதிகளுக்குப் பொருந்துமா ? அல்லது ஒருவனது சுய ஜாதகத்தைப் பார்த்து சொல்லும்பொழுது மட்டுமே பொருந்துமா ?
  சுப்பு ரத்தினம்.//////

  கோச்சாரவிதிகளுக்குப் பொருந்தாது!

  ReplyDelete
 72. ////sundari said...
  Good evening brother success,
  "HAPPY BIRTH DAY TO U, MANY MORE HAPPY RETURN OF THE DAY.
  your lovingly sister,
  sundari.p//////

  நானும் சொல்லிவிட்டேன். தாய்க்குலம் சொன்னதில் அவர் அதிகம் மகிழ்ந்திருப்பார்!
  நன்றி அம்மணி!

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com