மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

1.10.09

அனபா யோகம்!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++
அனபா யோகம்!

அனபா யோகம் என்றால் என்ன?

சந்திரன் இருக்கும் இடத்தில் அதற்குப் பன்னிரெண்டாம் வீட்டில்,
அதாவது உங்கள் சந்திர ராசிக்குப் பன்னிரெண்டில்,
சூரியனைத் தவிர, மற்ற கிரகங்களில் ஒன்று இருந்தால்
அதற்கு அனபா யோகம் என்று பெயர்.

ராகு & கேதுவிற்கு முழு கிரக அந்தஸ்து இல்லை.
இருந்தாலும் இந்த யோகத்திற்கு அவற்றைக் கணக்கில் எடுத்துக்
கொள்ள வேண்டும்.
+++++++++++++++++++++++++++++++++++
அதன் பலன் என்ன?

1
அந்த இடத்தில் செவ்வாய் இருந்தால்:
ஆசாமி வலிமையானவன். சுய கட்டுப்பாடு உள்ளவன்.
விரும்பத்தகாத வேலைகளைச் செய்பவனாகவும், அதுபோன்ற
செயல்களில் ஈடுபடுபவர்களுக்குத் தலைமை ஏற்பவனாகவும்
இருப்பான்
..........................
2
அந்த இடத்தில் புதன் இருந்தால்:
ஆசாமி எல்லா வித்தைகளும் தெரிந்தவனாகவும்,
மிகச் சிறந்த பேச்சாளனாகவும் இருப்பான்.
யாரையும் கவரக்கூடிய வகையில் பேசும் திறமையைப்
பெற்றிருப்பான்
.........................
3.
அந்த இடத்தில் குரு இருந்தால்:
ஜாதகன் எதையும் விளையாட்டாக எடுத்துக் கொள்பவன் அல்ல!
சீரியசான ஆசாமி. அறவழியில் செல்லக்கூடியவன். தன்
செல்வத்தை அல்லது வருமானத்தில் ஒரு பகுதியை தர்ம
காரியங்களுக்காகச் செலவிடக்கூடியவன்.
.............................
4.
அந்த இடத்தில் சுக்கிரன் இருந்தால்:
ஆசாமி பெண்களிடத்தில் வழியக்கூடியவன். அல்லது
பெண்களிடம் கரையக்கூடியவன். அல்லது உருகக்கூடியவன்
எப்படி வேண்டுமென்றாலும் வைத்துக் கொள்ளுங்கள்.
மொத்தத்தில் பெண்பித்தன் (womanizer)
ஆனால் அதிகாரமுடையவர்களின் நன் மதிப்பைப் பெற்றவன்
...................................................
5.
அந்த இடத்தில் சனி இருந்தால்:
ஜாதகன் தவறான நம்பிக்கைகளுக்கு எதிரானவன்.
மாயை’களில் இருந்து விடுபடக்கூடியவன்.
மொத்தத்தில் முற்போக்குவாதி!
................................................
6
ராகு அல்லது கேது இருந்தால்:
ஆசாமி அதிரடியானவன்.
யாருக்கும் கட்டுப்படாதவன்
எந்த விதிகளுக்கும், ஒழுங்கு முறைகளுக்கும் கட்டுப்படமாட்டான்.
மொத்ததில் அடங்காதவன்!
..............................................
மொத்ததில் இந்த யோகம்
ஜாதகனுக்கு நல்ல உடல் அமைப்பையும்,
நல்ல பண்புகளையும்,
சுய மரியாதையையும் கொடுக்கும்
-----------------------------------
அடுத்த பாடம் நாளை!

அன்புடன்,
வாத்தியார்



வாழ்க வளமுடன்!

57 comments:

  1. Hi Sir,
    Moon is placed in first place and Mars/Jupiter/Venus placed in 12th place. Is this combination good?

    Thanks

    ReplyDelete
  2. அய்யா,
    இணைய இணைப்பில்லாததால் ஒரு வாரம் வகுப்புக்கு வரஇயலவில்லை...மன்னிக்கவும்.
    அன்பாயோகம எனக்கு இல்லை...
    (அதுசரி ...எல்லா ஜீஸ் அய்டங்களும் இருக்கு அதுஎன்ன கடைசியில் பூண்டு ஜீஸ...?)

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  3. ஏற்கனவே அனபா யோகத்தைப் பற்றி 12/09/09 அன்று பதிவிட்டுருக்கிறீர்கள். இது என்ன revisionனா

    ReplyDelete
  4. உள்ளேன் ஐயா,

    சந்திரன்க்கு 12ல் சனி வக்ரம் அடைந்தால் பலன் என்ன?

    ReplyDelete
  5. உள்ளேன் ஐயா,

    சந்திரன்க்கு 12ல் சனி வக்ரம் அடைந்தால் பலன் என்ன?

    ReplyDelete
  6. உள்ளேன் ஐயா,

    சந்திரன்க்கு 12ல் சனி வக்ரம் அடைந்தால் பலன் என்ன?

    ReplyDelete
  7. மீண்டும் வகுப்புக்குள்
    என்பதனால்
    படித்த பாடத்தை
    திருப்பி பார்த்தது போல் . .

    சந்திரன் மீது அத்தனை கோபமா. . .
    ஒரு கிரகம் கூட அக்கம் பக்கத்தில் (12ல் அல்லது 2ல்) இல்லை . .

    நாலு கிரகங்கள் கூட்டனி போட்டது போல் லக்கினத்திற்கு 12ல் உட்கார்ந்து இருக்கின்றன . .
    9 கிரகங்களும் அல்லது அதிகமான கிரகங்கள் ஒரே ராசியில் இருப்பது போல
    ஏதாவது ஜாதகம் ஆசிரியர் அனுபவத்தில் உண்டா . . அதன் பலன் குறித்து அறிய விரும்புகிறோம்

    ReplyDelete
  8. அய்யா ஒரு சந்தேகம் . .

    பங்கு சந்தையை
    நிர்ணயிக்கிற . . நிர்வகிக்கிற கிரகம்
    செவ்வாயும் சுக்கிரனும் தானே . . .

    இது தொடர்பாக கிரக அமைப்பு மற்றும் யோக பலன் ....

    ஆ... நல்லா இருக்கு(ம்). . .

    ReplyDelete
  9. அன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம்,

    சந்திரன் (கன்னியில்) அதற்க்கு பன்னிரெண்டில் (சிம்மத்தில்) புதன் (19 Le 26' 57.20") ஐந்து பரல்களுடன் சுக்கிரன் (26 Le 20' 25.19")நான்கு பரல்களுடன் ராகு (27 Le 33' 49.39") ஐந்து பரல்களுடன். எப்படி எடுத்துக்கொள்வது.

    இன்னொரு சந்தேகம் சந்திரன் மூன்று பரல்களுடன் அதற்க்கு ஏழில் சனி இரண்டு பரல்களுடன் இதில் யாரின் பார்வை யார்மீது இந்த பார்வை நல்லதா?.

    நன்றிகள் ஐயா,

    அன்புடன்,

    ஆலாசியம் கோ.

    ReplyDelete
  10. எனக்கு செவ்வாய்தான் இருக்கிறது, ஆனால் கடத்தில் நீசம். ஆதாலால் நான் விரும்பதாக காரியங்கள் எல்லாம் செய்ய மாட்டேன்னு நினைக்கிறன், சரியா ஜயா. கல்பாக்கத்தில் இருந்து பதிப்பகத்திற்கு மணியார்டர் அனுப்பி உள்ளார் என் சகோதரர். மிகவும் காலதாமததிற்கு மன்னிக்கவும் ஜயா.

    ReplyDelete
  11. அம்மாவாசை சந்திரன் என்றால், சந்திர யோகங்கள் அவ்வளவு பயன் தராது என்று கொள்ளலாமா அய்யா.

    ReplyDelete
  12. எனக்கு அனபாயோகம் இருக்கு.சந்திரனுக்கு
    பன்னிரன்டில் ராகு.
    ஆனால்வாத்தியார் சொன்ன குண‌
    நலன்களெல்லாம் கிடையாதே.
    நான் எல்லோருக்கும் அடங்கி
    நடப்பவன்.
    ஏதாவது விதி விலக்கு இருக்குமோ?
    நன்றி அய்யா.

    ReplyDelete
  13. ஜாதகன் நல்ல தோற்றத்தை உடையவனாக இருப்பான்.
    பெருந்தன்மை உடையவனாக இருப்பான்.
    மென்மையானவனாக இருப்பான்
    சுயமரியாதை உடையவனாக இருப்பான்.
    வயதான காலத்தில் ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொள்வான்
    இந்த பலன் எனக்கு பொருத்தமாக‌

    இருக்கு அய்யா.

    ReplyDelete
  14. வணக்கம் ஐயா. உங்களுடைய இன்றைய பாடத்தில் "ஜாதகனுக்கு" என்று பெரும்பான்மையான பலன்கள் உள்ளன. உதாரணத்திற்கு, "அந்த இடத்தில் சுக்கிரன் இருந்தால்:
    ஆசாமி பெண்களிடத்தில் வழியக்கூடியவன். அல்லது
    பெண்களிடம் கரையக்கூடியவன். அல்லது உருகக்கூடியவன்
    எப்படி வேண்டுமென்றாலும் வைத்துக் கொள்ளுங்கள்.
    மொத்தத்தில் பெண்பித்தன் (womanizer)"...

    இந்த யோகத்திற்கு, பெண்களின் ஜாதக பலன் எப்படி இருக்கும்?. ஒரு தாழ்ந்த விண்ணப்பம். பலன்களை பொதுவாக, ஆண் & பெண் இருவருக்கும் பொருந்தும்படி கொடுத்தல் மிக்க நன்றாக இருக்கும்.

    ReplyDelete
  15. அய்யா எனக்கு அனபா யோகம் இல்ல சுரியன் 12 ல இருதால் என்ன பலன் என்க்கு 12 ல சுரியன் அப்படியெ attendence போட்ருங்அ அய்யா

    ReplyDelete
  16. Dear Sir,

    சந்திரனுக்கு முன்னால் (12) யாரும் இல்லை, ஆனால் (2) இல் குரு உண்டு. any compensation in yoga sir :-)))?

    Thanks
    Saravana

    ReplyDelete
  17. உள்ளேன் அய்யா, எனக்கு பன்னிரண்டில் குரு :)

    ReplyDelete
  18. ////subscription said...
    Hi Sir,
    Moon is placed in first place and Mars/Jupiter/Venus placed in 12th place. Is this combination good?
    Thanks///

    பலமுறை சொல்லியிருக்கிறேன். இரண்டிற்கு மேற்பட்ட கிரகங்கள் ஒரு இடத்தில் இருந்தால், அது நன்மைக்குரியது அல்லை! கிரக யுத்தக் கணக்கில் வரும்!

    ReplyDelete
  19. ///வேலன். said...
    அய்யா,
    இணைய இணைப்பில்லாததால் ஒரு வாரம் வகுப்புக்கு வரஇயலவில்லை...மன்னிக்கவும்.
    அன்பாயோகம எனக்கு இல்லை...
    (அதுசரி ...எல்லா ஜீஸ் அய்டங்களும் இருக்கு அதுஎன்ன கடைசியில் பூண்டு ஜீஸ...?)
    வாழ்க வளமுடன்,
    வேலன்.////

    இதயத்திற்கு நல்லது! அதையும் ஜீஸ் வைத்துக் குடியுங்கள்

    ReplyDelete
  20. ///ananth said...
    ஏற்கனவே அனபா யோகத்தைப் பற்றி 12/09/09 அன்று பதிவிட்டுருக்கிறீர்கள். இது என்ன revisionனா////

    கவனக்குறைவு.மன்னிக்கவும். ரிவிஸன் என்று வைத்துக்கொள்ளுங்கள் குறை நீங்கிவிடும்!

    ReplyDelete
  21. ///DHANA said...
    உள்ளேன் ஐயா,
    சந்திரன்க்கு 12ல் சனி வக்ரம் அடைந்தால் பலன் என்ன?/////

    வக்கிரமடையும் கிரகம், அதன் காரகத்துக்கு உரிய பலனை முழுமையாகத் தராது!

    ReplyDelete
  22. /////iyer said...
    மீண்டும் வகுப்புக்குள்
    என்பதனால்
    படித்த பாடத்தை
    திருப்பி பார்த்தது போல் . .
    சந்திரன் மீது அத்தனை கோபமா. . .
    ஒரு கிரகம் கூட அக்கம் பக்கத்தில் (12ல் அல்லது 2ல்) இல்லை . .
    நாலு கிரகங்கள் கூட்டனி போட்டது போல் லக்கினத்திற்கு 12ல் உட்கார்ந்து இருக்கின்றன . .
    9 கிரகங்களும் அல்லது அதிகமான கிரகங்கள் ஒரே ராசியில் இருப்பது போல
    ஏதாவது ஜாதகம் ஆசிரியர் அனுபவத்தில் உண்டா . . அதன் பலன் குறித்து அறிய விரும்புகிறோம்////

    ராஜிவ் காந்தி ஜாதகத்தில் 5 கிரகங்கள் லக்கினத்தில் இருக்கும்!

    ReplyDelete
  23. ////singaiSuri said...
    உள்ளேன் ஐயா.////

    வருகைப்பதிவு போட்டாயிற்று சூரி!

    ReplyDelete
  24. ////iyer said...
    அய்யா ஒரு சந்தேகம் . .
    பங்கு சந்தையை
    நிர்ணயிக்கிற . . நிர்வகிக்கிற கிரகம்
    செவ்வாயும் சுக்கிரனும் தானே . . .
    இது தொடர்பாக கிரக அமைப்பு மற்றும் யோக பலன் ....
    ஆ... நல்லா இருக்கு(ம்). . ./////

    இந்தியாவில் பங்குச் சந்தையை நிர்ணயிக்கும் கிரகத்தின் பெயர் முகேஷ் அம்பானி!

    ReplyDelete
  25. ////Alasiam G said...
    அன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம்,
    சந்திரன் (கன்னியில்) அதற்க்கு பன்னிரெண்டில் (சிம்மத்தில்) புதன் (19 Le 26' 57.20") ஐந்து பரல்களுடன் சுக்கிரன் (26 Le 20' 25.19")நான்கு பரல்களுடன் ராகு (27 Le 33' 49.39") ஐந்து பரல்களுடன். எப்படி எடுத்துக்கொள்வது.
    இன்னொரு சந்தேகம் சந்திரன் மூன்று பரல்களுடன் அதற்க்கு ஏழில் சனி இரண்டு பரல்களுடன் இதில் யாரின் பார்வை யார்மீது இந்த பார்வை நல்லதா?.
    நன்றிகள் ஐயா,
    அன்புடன்,
    ஆலாசியம் கோ./////

    பலமுறை சொல்லியிருக்கிறேன். இரண்டிற்கு மேற்பட்ட கிரகங்கள் ஒரு இடத்தில் இருந்தால், அது நன்மைக்குரியது அல்லை! கிரக யுத்தக் கணக்கில் வரும்!

    ReplyDelete
  26. /////பித்தனின் வாக்கு said...
    எனக்கு செவ்வாய்தான் இருக்கிறது, ஆனால் கடத்தில் நீசம். ஆதாலால் நான் விரும்பதாக காரியங்கள் எல்லாம் செய்ய மாட்டேன்னு நினைக்கிறன், சரியா ஜயா. கல்பாக்கத்தில் இருந்து பதிப்பகத்திற்கு மணியார்டர் அனுப்பி உள்ளார் என் சகோதரர். மிகவும் காலதாமததிற்கு மன்னிக்கவும் ஜயா./////

    உண்மை. உங்கள் சகோதரர் அனுப்பிய பணம் வந்துவிட்டது.

    ReplyDelete
  27. ////chaks said...
    அம்மாவாசை சந்திரன் என்றால், சந்திர யோகங்கள் அவ்வளவு பயன் தராது என்று கொள்ளலாமா அய்யா./////

    சந்திரன் அஸ்தமனம் பெற்றிருந்தால் பயனளிக்காது!

    ReplyDelete
  28. ////thirunarayanan said...
    எனக்கு அனபாயோகம் இருக்கு.சந்திரனுக்கு
    பன்னிரன்டில் ராகு.
    ஆனால்வாத்தியார் சொன்ன குண‌
    நலன்களெல்லாம் கிடையாதே.
    நான் எல்லோருக்கும் அடங்கி
    நடப்பவன்.
    ஏதாவது விதி விலக்கு இருக்குமோ?
    நன்றி அய்யா.////

    இருக்கும்! உங்களுடைய அடுத்த பின்னூட்டத்தைப் பாருங்கள்

    ReplyDelete
  29. thirunarayanan said...
    ஜாதகன் நல்ல தோற்றத்தை உடையவனாக இருப்பான்.
    பெருந்தன்மை உடையவனாக இருப்பான்.
    மென்மையானவனாக இருப்பான்
    சுயமரியாதை உடையவனாக இருப்பான்.
    வயதான காலத்தில் ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொள்வான்
    இந்த பலன் எனக்கு பொருத்தமாக‌
    இருக்கு அய்யா.////

    நல்லது. நன்றி!

    ReplyDelete
  30. /////Scorpion King said...
    வணக்கம் ஐயா. உங்களுடைய இன்றைய பாடத்தில் "ஜாதகனுக்கு" என்று பெரும்பான்மையான பலன்கள் உள்ளன. உதாரணத்திற்கு, "அந்த இடத்தில் சுக்கிரன் இருந்தால்:
    ஆசாமி பெண்களிடத்தில் வழியக்கூடியவன். அல்லது
    பெண்களிடம் கரையக்கூடியவன். அல்லது உருகக்கூடியவன்
    எப்படி வேண்டுமென்றாலும் வைத்துக் கொள்ளுங்கள்.
    மொத்தத்தில் பெண்பித்தன் (womanizer)"...
    இந்த யோகத்திற்கு, பெண்களின் ஜாதக பலன் எப்படி இருக்கும்?. ஒரு தாழ்ந்த விண்ணப்பம். பலன்களை பொதுவாக, ஆண் & பெண் இருவருக்கும் பொருந்தும்படி கொடுத்தல் மிக்க நன்றாக இருக்கும்./////

    தாய்க்குலத்தை அப்படிக் குறிப்பிட்டு எழுதலாமா? நீங்களாகவே புரிந்து கொள்ள வேண்டும்.
    அதொடு, பெண்களின் ஜாதகத்திற்கு சில விசேட விதிமுறைகள் உள்ளன. அது பற்றி பின்னால் எழுத உள்ளேன்!

    ReplyDelete
  31. /////astroadhi said...
    அய்யா எனக்கு அனபா யோகம் இல்ல சுரியன் 12ல் இருந்தால் என்ன பலன் எனக்கு 12ல் சூரியன். அப்படியே attendence போட்ருங்க அய்யா/////

    இருவரும் முக்கியமான கிரகங்கள் ஒருவருக்குப் பன்னிரெண்டில் இன்னொருவர் எனும்போது இருவராலும் ஏற்படும் mutual benefits ஜாதகனுக்குக் கிடைக்காது!

    ReplyDelete
  32. ////Blogger Saravana said...
    Dear Sir,
    சந்திரனுக்கு முன்னால் (12) யாரும் இல்லை, ஆனால் (2) இல் குரு உண்டு. any compensation in yoga sir :-)))?
    Thanks
    Saravana////

    சந்திரனுக்குப் 12ல் யாரும் இல்லை அல்லவா? அதை ஏன் முன்னால் என்று போட்டுக் குழப்பியிருக்கிறீர்கள்? compensationஆ.... வகுப்பறையில் இருக்கும் பெஞ்சுகளில் 2 அல்லது 3ஐ எடுத்துக் கொள்ளூங்கள்

    ReplyDelete
  33. /////Blogger Prabhu said...
    உள்ளேன் அய்யா, எனக்கு பன்னிரண்டில் குரு :)////

    உங்கள் பெயருக்குப் பொருத்தமாகத்தான் உள்ளது!

    ReplyDelete
  34. ////Blogger Arul said...
    உள்ளேன் ஐயா!!!////

    வ.ப.போட்டாயிற்று!

    ReplyDelete
  35. ஐயா,

    ரிவிசன் என்பதால் ஒரு கேள்வி. சூரியன் இருந்தால் என்னவாகும்? யோகம் இல்லை என்று புரிகிறது. அது ஒரு அவயோகமா? அப்படி இருந்தால் பலன் என்ன? எனக்கு தெரிந்த ஒருவர் ஜாதகதில் உள்ளது.

    -சங்கர்

    ReplyDelete
  36. Just now, I read the others Q/A. I got the answers for my question.

    Shankar

    ReplyDelete
  37. அய்யா ,
    ஒரு கிரகதிர்க்கு 12 ல ம்ட்ரோரு கிரகம் இருபதால் mutual benefits கிட்டாது என்பதால்,எனக்கு என்ன பாதிப்பு தனுசு லக்னம் ,chandiran ku 12 il suryan .....

    ReplyDelete
  38. இராதா கிருஷ்ணன் said...
    Present Sir.

    வருகைப் பதிவு போட்டாயிற்று!

    ReplyDelete
  39. ////hotcat said...
    ஐயா,
    ரிவிசன் என்பதால் ஒரு கேள்வி. சூரியன் இருந்தால் என்னவாகும்? யோகம் இல்லை என்று புரிகிறது. அது ஒரு அவயோகமா? அப்படி இருந்தால் பலன் என்ன? எனக்கு தெரிந்த ஒருவர் ஜாதகதில் உள்ளது.
    -சங்கர்////

    உங்களுடைய அடுத்த பின்னூட்டத்தைப் பாருங்கள்!

    ReplyDelete
  40. ///hotcat said...
    Just now, I read the others Q/A. I got the answers for my question.
    Shankar////

    நல்லது! நன்றி!

    ReplyDelete
  41. /////astroadhi said..
    அய்யா ,
    ஒரு கிரகத்திற்கு 12 ல மற்றொரு கிரகம் இருபதால் mutual benefits கிட்டாது என்பதால்,எனக்கு என்ன பாதிப்பு தனுசு லக்னம் ,chandiran ku 12 il suryan .....////

    சூரியனுடைய தசையில் சந்திரபுத்தியும். சந்திர தசையில் சூரிய புத்தியும் நன்மையளிக்காது
    6/8 position & 1/12 position of Dasa/bukthi lords will not yield good results!

    ReplyDelete
  42. எனக்கு ஒரு சந்தேகம், என் ஜாதகத்தில் அனபா யோகம் இல்லை. ஆனால் நவாம்சத்தில் சந்திரனுக்கு பனிரென்டில் புதனும்/ராகுவும் இருக்கின்றன. யோகம் பார்க்கும்போது ராசி சக்கரம் மட்டும்தான் பார்க்கணுமா அல்லது நவாம்சத்தையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டுமா?

    ReplyDelete
  43. Thanks for thr this review lesson..Take care..for a week..(may be)
    Bye..to Professor..and mates too...

    ReplyDelete
  44. Good evening sir,

    Today i did not ask any question sir due to i donot have anaba yogam. Today, nanu vandhu ungaluku vanakam mattum solara sir. Anaba yogam lesson super sir. i studied yoga. a lot of thanks sir.

    your lovingly
    sundari

    ReplyDelete
  45. Present Sir !!!! Anbha yogam Enaku illai.. there are three planets are in the 12th place.

    ReplyDelete
  46. Dear Sir

    Enakku Chandranukku 12il Guru(7il) - 100% unmai.

    Padam Arumai.

    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  47. ////Uma said...
    எனக்கு ஒரு சந்தேகம், என் ஜாதகத்தில் அனபா யோகம் இல்லை. ஆனால் நவாம்சத்தில் சந்திரனுக்கு பனிரென்டில் புதனும்/ராகுவும் இருக்கின்றன. யோகம் பார்க்கும்போது ராசி சக்கரம் மட்டும்தான் பார்க்கணுமா அல்லது நவாம்சத்தையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டுமா?////

    பலமுறைகள் சொல்லியிருக்கிறேன் சகோதரி. Navamsam is the magnified version of rasi chakra!

    ReplyDelete
  48. ////minorwall said...
    Thanks for thr this review lesson..Take care..for a week..(may be)
    Bye..to Professor..and mates too...////

    நீங்கள் வீட்டை மாற்றி விட்டு, மாற்றிய அலைச்சலுக்காக ஓய்வெடுத்துக்கொண்டுவிட்டுப் பிறகு வாருங்கள்!

    ReplyDelete
  49. ////sundari said...
    Good evening sir,
    Today i did not ask any question sir due to i donot have anaba yogam. Today, nanu vandhu ungaluku vanakam mattum solara sir. Anaba yogam lesson super sir. i studied yoga. a lot of thanks sir.
    your lovingly
    sundari////

    உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  50. ////Karthi said...
    Present Sir !!!! Anbha yogam Enaku illai.. there are three planets are in the 12th place.////

    நன்றி கார்த்திக்!

    ReplyDelete
  51. /////Arulkumar Rajaraman said...
    Dear Sir
    Enakku Chandranukku 12il Guru(7il) - 100% unmai.
    Padam Arumai.
    Thank you
    Loving Student
    Arulkumar Rajaraman////

    நன்றி ராஜராமன்!

    ReplyDelete
  52. 12 ல ஒண்ணும் இல்லை .

    உள்ளேன் ஐயா....

    Priya

    ReplyDelete
  53. ////Priya said...
    12 ல ஒண்ணும் இல்லை .
    உள்ளேன் ஐயா....
    Priya////

    ஒன்றும் இல்லையென்றால் பரவாயில்லை. ஜாதகத்தில் வேறு யோகங்கள் இருக்கும். அடுத்தடுத்து வரும் பாடங்களைப் படியுங்கள் சகோதரி!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com