மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

21.5.19

அடடா, அப்படியா?


அடடா, அப்படியா?

என்ன?

வாத்தியாருக்கு உடல்நிலை சரியில்லை!!!

அடடா, அப்படியா? என்ன செய்கிறதாம்?

Urinary infection and Gastric problem  + Vomitting + நெஞ்சு படபடப்பு எல்லாம் ஏற்பட்டு, மருத்த்துவமனையில் சேர்க்கப்பெற்றார். Intensive Care Unitl (3 days) + Ward Room (3 days) சிகிச்சைக்குப் பிறகு வீட்டிற்குத் திரும்பி வந்தார். இன்னும் ஐந்து தினங்களுக்கு காலையிலும், மாலையிலும் அதே மருத்துவமனைக்குச் சென்று injections போட்டுக் கொண்டு திரும்பவேண்டும்!!!!! பூரண குணமாக இன்னும் ஒரு வார காலம் ஆகும்.

அனைவரும் பொறுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.

ஒருவாரம் கழித்து பதிவுகள் தொடரும்!!!!

அன்புடன்
வாத்தியார்


================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

10.5.19

Astrology: ஜோதிடம்: ஒன்றிற்கு இரண்டு ஏன்?


Astrology: ஜோதிடம்: ஒன்றிற்கு இரண்டு ஏன்?

அன்பர் ஒருவரின் ஜாதகத்தைக் கீழே கொடுத்துள்ளேன். ஜாதகருக்கு இரண்டு முறை திருமணம் (That is more than one marriage) 25 வயதில் முதல் திருமணம். 37வது வயதில் மனைவி இறந்து விட்டார். 40 வது வயதில் 2வது முறையாக திருமணம் செய்து கொண்டார். ஜாதகப்படி இருதார மனத்திற்கு என்ன காரணம்? ஜாதகத்தை அலசி நீங்கள் பதில் சொல்லுங்கள்!!!!!

சரியான விடை இரண்டு நாட்களில் தெரியும்

உங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்த்து,
அன்புடன்
வாத்தியார்
----------------------------------------------
கேள்விக்குரிய ஜாதகம்:

========================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

9.5.19

அறிவுரைகள்தான்; முடிந்தவரை கேட்டு வைப்போம்!!!!!

அறிவுரைகள்தான்; முடிந்தவரை கேட்டு வைப்போம்!!!!!

முயற்சி செய்யாமல் பிறரைக் குறை கூறுவதை விட, முயற்சி செய்து தோற்றாலும் அதை அமைதியாய் ஏற்று கொள்வதே மேல்.

எத்தனை முறை நீ ஏமாற்றப் பட்டாலும் ஒரு போதும் அடுத்தவரை ஏமாற்ற கற்றுக் கொள்ளாதீர்கள். அவரவர் பலன் அவரவர் அனுபவிப்பார்கள் நேர்மைக்கு என்றுமே மரணமில்லை. கவலையை விடுங்கள்.

தனிமையில் வாழப் பழகி விட்டால் எவரையும் குற்றம் கூறவும்  முடியாது. நம்மளையும் யாரும் குறை கூற வழியும்  இருக்காது.

யாரிடமும் பேச வேண்டாம் என்ற மனநிலை உருவாகக் காரணம் அதிகமாக பேசியதன் விளைவாகத் தான் இருக்கும்.

எங்கே என்ன நடந்தாலும் அதில் பாதிக்கப் பட்டோரின் மன நிலையுடன் நம் குடும்பத்தில், உறவுகளில், நமக்கே நடந்தது போல் ஒப்பிட்டுப் பார்க்கும் இந்த மனசு தாங்க மனிதம் மனதில் இருப்பதற்கு சான்றாக இருக்கிறது.

உலகத்துலேயே நாம விரும்பாத ஒன்னு, நமக்கு இலவசமா கிடைக்குது'னா அது அட்வைஸ் ஒன்னு தான்.

நம்மை பிடிக்காத உறவினர்களிடம் பேசும் போது நாம் எப்படி வார்த்தைகளை கவனமாக தேர்ந்தெடுத்து பேசினாலும், இறுதியில் அதை அப்படியே திசை திருப்பி விடுகிறார்கள்.

இன்றைய மனிதர்களிடம் படிப்பு அதிகமாக இருக்கிறது. ஆனால் பண்பாடு குறைவாக இருக்கிறது. இது தான் இன்றைய நெருக்கடிகளுக்கு எல்லாம் மூல காரணம். படிப்பதோடு பண்பாட்டையும் நாம் அடுத்த தலைமுறைக்கு கிடைக்க முயற்சி செய்வோம்.

கொஞ்சம் வைத்திருப்பவன் ஏழையல்ல. அதிகம் விரும்புகிறவன் தான் ஏழை.

கணவன், மனைவி, குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள் என பலரிடமிருந்து எவ்வளவு சங்கடங்கள் வந்தாலும், நிதானமாக பிரச்சினைகளை அணுகி வெற்றி காண்பவர்களே சிறந்த மனிதர்கள்.

சாதித்த பிறகு வருமே ஒரு அமைதி அது இந்த பிரபஞ்சத்தின் தொலை தூர ஓசை போன்றது.

கடன் வாங்கியவன் உறங்கலாம். கடன் கொடுத்தவன் உறங்குவதேயில்லை.

தனக்குக் கிடைக்கும் ஊதியத்தின் மதிப்பை விட, தன்னுடைய உழைப்பின் மதிப்பை உயர்த்திக் காட்டும் மனிதன் தான் சமூகத்தில் முன்னேற முடியும்.

இப்பெல்லாம் கடன் வாங்கினவனை விட, கடன் கொடுத்தவன் தான் தூக்கம் இல்லாமல் தவிக்கிறான்.

ஒரு தந்தை தான் நினைத்தை எல்லாம் தன் பிள்ளை சாதிக்க வேண்டும் என்பதற்கும், என் பிள்ளை நினைத்தை எல்லாம் சாதிக்க நான் துணை நிற்பேன் என்பதற்கும் அதிக வேறுபாடு இருக்கிறது.

ஒவ்வொருவரும் கட்டளையிடவே விரும்புகின்றனர் யாரும் வேலை செய்யத் தயாராக இல்லை.

அந்தக் காலத்தில் குடும்பத்தில் முதியவர்களை பிள்ளைகள் கவனித்தனர். இப்போ தன் பிள்ளைகளை கவனிக்க முதியவர்களை வைத்திருக்கின்றனர்

பிறர் வெற்றியை தவறான வழியில் தட்டிப் பறிப்பது சாமர்த்தியம் அல்ல. சமூகத்தின் சீர்கேடு.

உனக்கெல்லாம் காலம் பதில் சொல்லும் என்று விட்டு விட்டு, அதை மறந்து போயிடனும், எப்ப தான் கெட்டு போவார் என நினைத்தால் நம் நிம்மதி போய் விடும்.

பிறர் குறைகளை கண்டு பிடிப்பதில் இருக்கும் வேகம், சுய குற்றங்களை கண்டு பிடிப்பதில் குறைவு.

எல்லாம் நன்மைக்கே : நல்லதே நடக்கும்
--------------------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
============================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

8.5.19

மனிதர்களில் நல்லவர்கள் ...


மனிதர்களில் நல்லவர்கள் !!!!!

இன்று சென்னையிலிருந்து பல்லவனில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தேன்.டிக்கெட் பரிசோதகர் சோதனை செய்து கொண்டு வந்த போது ஒரு பெண்மணி தனியாக வந்து அவரிடம் சிக்கினார்.

மாட்டிக் கொண்ட அந்தப் பெண் ஒரே அழுகை. ஆன்லைன் புக்கிங் செய்த அவருக்கு வெயிட்டிங் லிஸ்ட்டில் தான்  இருந்தது. கன்ஃபர்ம் ஆகவில்லை. அவரது கணவர் வண்டியில் ஏற்றி விட்டு விட்டு வெயிட்டிங் லிஸ்டை டிடிஇ க்கு காண்பி அவர் ஏதாவது டிக்கெட் அட்ஜஸ்ட் செய்து தருவார் என்று கூறி பணம் கூட எதுவும் தராமல் சென்று விட்டாராம்.

இன்று சனிக்கிழமை ஆதலால் பல்லவன் முழுதும் நிரம்பி வழிய பரிசோதகர் அந்தப் பெண்ணிடம் ரூ 500 அபராதம் தந்தால் தான் ஆயிற்று இல்லை என்றால் விழுப்புரத்தில் ஸ்டேஷனில் ஒப்படைத்து விடுவேன் என்று கூறிவிட்டார்.

அந்த பெண்மணியின் கையில் நூறோ நூற்று ஐம்பதோ தான் வைத்திருக்கிறார். அவர் கணவனுக்கு போன் செய்து ஏதாவது செய்யுங்கள் என்று கூறுகிறார்.

அவள் கணவர் டிக்கெட் பரிசோதகரிடம் பேசியும் பலன் இல்லை. ஸ்குவாட் யாராவது வந்தால் நானும் மாட்டிக் கொள்வேன் என்கிறார் பரிசோதகர் .

அந்தப் பெண்மணி மிகவும் பயந்து போய் அழுது கொண்டே இருக்கிறார்.

இதைப் பார்த்த அருகில் இருந்த ஒருவர் 500 ரூபாயை எடுத்து அந்த பெண்ணிடம் நீட்டுகிறார். இதைக் கட்டி விட்டு ஊர் போய் சேருங்கள் அழ வேண்டாம் என்கிறார்.

அந்த பெண்மணி அவருக்கு கால் பிடிக்காத குறையாக நன்றி சொல்லி  விட்டு டிக்கெட் பரிசோதகரை நோக்கி ஓடுகிறார். அபராதம் செலுத்த .

எனக்கு மிகவும் ஆச்சர்யமாகி விட்டது. நான் 500 ரூபாய் தரலாமா என யோசித்துக் கொண்டிருக்கும் போதே அவர் எடுத்துத் தந்து விட்டார்!

நான் அவரிடம் சென்று அவர் கை பிடித்து பாராட்டினேன். விசாரித்த போது அவர் ஒரு ராணுவ வீரர் என்றும் விடுமுறைக்கு அரியலூர் பக்கம் சொந்த ஊருக்கு வந்ததாகவும் கூறினார். அவருக்கு ஒரு சல்யூட் அடித்து விட்டு ஒரு செல்பி எடுக்கலாமா எனக்கேட்டேன். ஆனால் அவர் மறுத்து விட்டார். மீண்டும் ஒரு முறை அவரைப் பாராட்டினேன். அதற்குள் அவரது சக நண்பர்கள் அவரை சூழ்ந்து கொள்ள நான் சீட்டிற்கு வந்து விட்டேன்.

சற்று நேரம் கழித்து வந்த அந்த பெண்மணி அவரிடம் அந்த 500 ரூபாயை திருப்பிக் கொடுத்தார்.

அவர் ஏன் அபராதம் கட்டவில்லையா என்று விசாரிக்க அந்தப் பெண்மணி , இல்லை டிக்கெட் பரிசோதகர் - விருத்தாசலம் வரை தான் ஸ்குவாட் வர சான்ஸ் - இனி வர வாய்பில்லை. எனவே அபராதம் வேண்டாம் என்று சொல்லி விட்டதாகக் கூறினார்.

எங்கும் ஏமாற்றுபவர்கள் நிறைந்த இந்த காலத்தில் 500 ரூபாய் யோசிக்காமல் எடுத்துத் தந்த அந்த ராணுவ வீரர் ஒரு புறம், அந்த பெண்மணியின் பரிதாப நிலை கண்டு அபராதம் தவிர்த்த டிக்கெட் பரிசோதகர் ஒருபுறம் , அபராதம் வேண்டாம் என்றவுடன் அந்த பணத்தைத் தானே வைத்துக் கொள்ளாமல்  திரும்ப வந்து அழுகையுடன் நன்றி கூறி திரும்ப தந்த அந்த பெண்  ஒருபுறம்...

மனிதர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்று என்னை நெகிழ வைத்த தருணங்கள் ...

ஊர், பெயர் அறியாத அந்த ராணுவ வீரருக்கு ஒரு சல்யூட்.. நன்றி
------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
=======================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

7.5.19

அமெரிக்கா செல்ல நீங்கள் கொடுக்கும் விலை!!!!!


அமெரிக்கா செல்ல நீங்கள் கொடுக்கும் விலை!!!!!

அமெரிக்கா செல்வதற்கு கொடுக்கும் மறைமுகமான விலைகள் சில உண்டு. அவற்றைப் புரிந்துகொண்டு செல்லுங்கள். அவை இவை-

1. திரும்ப வரமாட்டீர்கள்… இது கட்டாயம், நூறு சதவிகிதம் நிகழும் ஒரு விளைவு. போய்விட்டு படிப்பு முடித்துவிட்டு உடனே வருகிறேன் என்று சொல்வதெல்லாம் பொய். அந்த நாடு உங்கள் மேல் படரும் நாடு. ஒரு ஆக்டோபஸ், அல்லது மலைப்பாம்பின் இறுக்கம் போல அது உங்களை விடாது. அதன் கிரெடிட் கார்டு சமூகத்தில் உங்களை மூன்றாவது தலைமுறை வரை கடன் வாங்க வைத்துவிடுவார்கள். மீளவே முடியாத கடன் சொர்க்கம் அது. அதைத் தெளிவாக அறிந்து கொள்ளுங்கள்.

2. அங்கே போனபின் உறவு, பாசம் இவற்றுக்கெல்லாம் புதிய அர்த்தங்கள் தோன்றும். எதற்காக அப்பா அம்மாவைக் கவனித்துக்கொள்ள வேண்டும். அவர்கள் கடமையைச் செய்தார்கள். வருஷம் ஒரு முறை ஃபாதர்ஸ் டே, மதர்ஸ் டே கார்டு அனுப்பினால் போதுமே… அல்லது அவ்வப்போது நூறு டாலர், இருநூறு டாலர்… - இப்படித் தோன்றும் இந்த எண்ணத்தையும் தவிர்க்க முடியாது. குறிப்பாக, பிசுநாரித்தனம் அங்கு கொஞ்சம் அதிகமாகும்.

3. அங்கே போய் நிறைய சம்பாதிக்கத் தொடங்கியதும் இந்திய விஷயங்கள் மேல் ஒரு ஏளனம் தோன்றும். என்னப்பா உங்க ஊர்ல சரியா ஒரு டாய்லெட் கட்டமாட்டாங்களா. வாட் ட்ராஃபிக்! ஐம் கெட்டிங் ம்யாட். ரோடுல ஒண்ணுக்கு போறவரைக்கும் உங்க தேசம் உருப்படாது… (கவனிக்கவும் உங்க ஊர். உங்க தேசம்)

4. தமிழ் பேசும் வழக்கத்தையும் மெள்ள இழக்க வேண்டியிருக்கும். நாங்கள் தமிழில் பேசினால் நீங்கள் இங்கிலீஷில் பதில் சொல்வீர்கள். நாளடைவில் தமிழ் படிக்கவே மறந்து போய்விட்டது என்று புளுகுவீர்கள்.இந்தப் பக்கவிளைவுகள் எல்லாம் பரவாயில்லை என்றால் தாராளமாக வெளிநாடு செல்லுங்கள்.

அண்மையில் நான் ஹாசன் சென்றிருந்தேன். கர்நாடக மாநிலத்தின் மத்தியில் உள்ள சிறிய டவுன். அங்கே இன்சாட் 2-இ செயற்கைக்கோளின் கட்டுப்பாட்டுக் கேந்திரம் உள்ளது. பல இளம் இன்ஜினீயர்களைச் சந்தித்தேன்.

24 மணி நேரமும் இந்தியாவின் செயற்கைக்கோளை திசை பிசகாமல் கட்டுப்படுத்தும் ஷிஃப்ட் வேலை பார்க்கிறார்கள். அவர்களில் ஒருவரைக் கேட்டேன். அமெரிக்கா போயிருக்கலாமே…

அவர், போயிருக்கலாம். அட்மிஷன் கூட கிடைத்தது, ஸ்காலர்ஷிப்புடன் என்றார்.

ஏன் போகலை?

எல்லாரும் போய்ட்டா எப்படி? ஒன்றிரண்டு பேர் தங்கி நாட்டுக்கு சேவை செய்ய வேண்டாமா? என்றார்.

கார்கிலிலிருந்து துவங்கி நம் பிற்பட்ட கிராமங்களில் வயற்புறங்கள் வரை பணிபுரியும் இளைஞர்கள் இருக்கிறார்கள். இவர்கள் மேல்தான் எனக்கு மரியாதை. என்னைக் கேட்டால் இங்கேயே இருந்துகொண்டு எல்லா அசௌகரியங்களுக்கு மத்தியிலும் எதாவது சாதிக்கும் இளைஞர்கள் இந்நாட்டின் கண்கள்… நீங்களோ, நீங்கள் அனுப்பப்போகும் டாலரோ அல்ல! தாராளமாக செல்லுங்கள். சம்பாதியுங்கள். ஆனால், இந்தியாவைக் கேலி செய்யாதீர்கள்.

ஆக்கம்:- சுஜாதா
--------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
==============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

6.5.19

Astrology: ஜோதிடம்: 3-5-2019 புதிருக்கான விடை!


Astrology: ஜோதிடம்: 3-5-2019 புதிருக்கான விடை!

ஒரு இளைஞனின் ஜாதகத்தைக் கொடுத்து, ஆசாமி பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறவில்லை. அதற்குப் பிறகு படிக்கவில்லை. ஏராளமான நண்பர்கள். அவர்களுடன் சேர்ந்து ஊரைச் சுற்றிக் . கொண்டிருக்கிறார். பெற்றவர்களுக்கு ஒரே கவலை. பையன் உருப்படுவானா அல்லது மாட்டானா என்ற கவலை. இருக்காதா பின்னே? ஜாதகத்தை அலசி நீங்கள் பதில் சொல்லுங்கள் பையனுக்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்கிறதா? அல்லது இல்லையா?” என்று கேட்டிருந்தேன்.

சரியான விடை: லக்கினத்தில் விரையாதிபதி (12th Lord) செவ்வாயின் ஆதிக்கம். அத்துடன் லக்கினாதிபதி குருவின் மேலும் அவருடைய பார்வை உள்ளது.
ஆறு வயது வரை கேது திசை..அதற்குப் பிறகு சுக்கிர திசை. குட்டிச் சுக்கிரன் கூடிக் கெடுக்கும். இவை எல்லாம் சேர்ந்து பையனின் இளம் வயது வாழ்க்கையைக் கெடுத்தன.
ஆனால் லக்கினாதிபதி குரு பகவான் உச்சம் பெற்று வலுவாக இருப்பதாலும், பத்தாம் வீட்டுக்காரன் புதனின் மேல் பார்வையைச் செலுத்துவதாலும், பின் வாழ்க்கை சரியானது. புதன் வர்கோத்தமம் பெற்றிருப்பதைப் பாருங்கள்.  பையனின் வாழ்க்கை ஒளி மயமானது, தாமதமாக ஒளி கிடைத்தது. out door activities களில் பையன் முனைப்பாக இருந்ததால் யோகா வாத்தியாராக மாறி நன்கு சம்பாதிக்கத்துவங்கினான்.

புதிருக்கான பதிலை 6 அன்பர்கள் எழுதியுள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது மனம் நிறைந்த பாராட்டுக்கள். அவர்களுடைய பெயர்கள் கீழே உள்ளன. பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்

அடுத்து 10-5-2019 வெள்ளிக்கிழமை  அன்று மீண்டும் வேறு ஒரு புதிருடன் நாம் சந்திப்போம்!!!!

அன்புடன்
வாத்தியார்
----------------------------------------.
1
Blogger csubramoniam said...
ஐயா கேள்விக்கான பதில்
1 .லக்கினாதிபதி உச்சம் பெற்று எட்டாம் இடத்தில் அமர்ந்துள்ளார்
2 .அவரின் பார்வை நாலாம் இடத்தின் மேல் உள்ளது
3 .புதன் பனிரெண்டில் அமர்த்ததால் படிப்பில் கவனம் செலுத்தவில்லை
4 .ஆயினும்பத்தாம் இடத்து புதன் ஒன்பதாம் அதிபதி சூரியனுடன் அமர்ந்ததால் செல்வாக்கு மிக்கவராய் ஆக்குகிறது
5 .மேலும் குருவின் பார்வை நாளில்
தங்களின் பதிலை ஆவலுடன்
நன்றி
Saturday, May 04, 2019 2:07:00 PM
-----------------------------------------
2
Blogger kmr.krishnan said...
ஜாதகர் 10 டிசம்பர் 1978 அன்று காலை 7 மணி 50 நிமிடம் போல பிறந்த‌வர். பிறந்த‌ இடம் சென்னை என்று எடுத்துக்கொண்டேன்.
1.ல‌க்கினாதிபதி குரு 8ல் மறைவு.உச்ச்மடைந்த குரு 8ல் அமர்ந்து வக்கிரமும் அடைந்தார்.
2.8ம் அதிபன் சந்திரன் 5ல் அமர்ந்தது பூர்வ புண்ணியம் சுமார்தான் என்பதைக் குறிக்கிறது.
3.9ம் அதிபன் சூர்யன் 12ல் மறைந்தது.
4.7ம் அதிபனும் 10ம் அதிபனும் ஆன புதன் 12ல் மறைந்தது.புதன் அஸ்தங்கதம் அடைந்தது.வக்கிரம் அடைந்தது.
5.12ம் அதிபனும் 5ம் அதிபனுமான செவ்வாய் லக்கின பாவத்திலேயே அமர்ந்தது.செவ்வாய் அஸ்தங்கதம் அடைந்தது
6.கேது தசாவில் துவங்கிய வாழ்வு, முதல் ஆறுவருடம் கேது தசா. அடுத்து 20 ஆண்டுகள், 26 வயதுவரை சுக்கிரதசா. ஜாலியான வாழ்வு மற்றவர்கள் சம்பாத்தியத்தில் நடத்தியிருப்பார்.அடுத்து 6 ஆண்டுகள் சூரிய தசா 12ல் மறைந்த சூரியனால் பலன் ஒன்றும் இல்லை.அடுத்து 10 ஆண்டுகள் 8ம் அதிபன் சந்திரனின் தசா. செப் 2020 வரை சந்திர தசா. பலனில்லை.42 வயதுவரை முன்னேற்றத் தடை.அடுத்த 7 ஆண்டுகள் செவ்வாய் தசாவும் பலன் இல்லை. 49 வயதில் வரும் குருதசா பலன் அளிக்க வாய்ப்பு
உண்டு.
Saturday, May 04, 2019 6:16:00 PM
----------------------------------------
3
Blogger P. CHANDRASEKARA AZAD said...
தங்கள் கேள்விக்கான ஒளிமயமான எதிர்காலம் தெரிகிறதா?
### எனது பதில் : ஒளிமயமான எதிர்காலம் எனது உள்ளத்தில் இந்த ஜாதகருக்கு இருப்பதாக தெரியவில்லை. ஏனென்றால்
1. தனுசு லக்கினத்திற்கு அதிபதி குரு உச்சமாக இருந்தாலும் எட்டில் மறைந்து , ஜாதகருக்கு ஓரளவு நன்மையே தந்தது. குருவாக இருப்பதால் தான் ஓரளவு நன்மை வந்தது.
2. மேலும் கல்வி ஸ்தானமான குரு எட்டில் மறைந்து இருந்து சுமாரான படிப்பையையும் , மேலும் வித்யா காரகன் புதன் பன்னிரண்டில் மறைந்து சரியான முறையான படிப்பை தரவில்லை.
3. மற்ற யோகாதிபதியான சூரியனும் பன்னிரண்டில் மறைந்து முறையான பலன்களை தரவில்லை. செவ்வாய் லக்கினத்தில் அமர்ந்தாலும் ஓரளவு நல்ல பலன்களையே தர முடிந்தது.
4. ஆறாம் அதிபதி சுக்கிரன் பனிரொன்றில் வலு பெற்று நல்ல பலன்களை தரவில்லை.
5. மேலும் ஜாதகருக்கு இருப்பது வயது வரை சுக்கிரன் தசை இருந்து நல்ல பலன்கள் கிடைக்கவில்லை. அதற்கு அடுத்து வந்த சூரியன் தசை பனிரெண்டில் மறைந்ததால் ஓரளவு நல்ல பலன்களே கிடைத்தது.
6. சந்திரா தசையில் சர்விஸ் சம்பந்தமான வேலை கிடைத்தாலும் சரியாக அமையவில்லை.
7. அதற்கு அடுத்து வந்த செவ்வாய் தசை நல்ல பலன்களை கொடுத்து , கொஞ்சம் வாழ்வை சரி செய்தது.
நன்றி
ப. சந்திரசேகர ஆசாத்
MOB: 8879885399
Saturday, May 04, 2019 7:00:00 PM
-------------------------------------------
4
Blogger Deepika said...
11ல் ஆட்சி பெற்ற சுக்கிரனால் ஜாதகர்க்கு அதீத நண்பர்கள். கல்விக்குரிய 2ஆம் அதிபதி அந்த இடத்திற்கு அஷ்டம ஸ்தானமான 9ல். ராகு சேர்க்கை வேறு. புதனும் லக்னத்திற்கு 12ல் மறைந்து கல்வியை தடை செய்தார்.
ஆனால் 10 அதிபதியான புதன் சூரியன் சேர்க்கை பெற்று உச்சம் பெற்ற லக்ன அதிபதி பார்வை பெற்றதால் நல்ல சம்பாதிக்கும் அமைப்பு இந்த ஜாதகத்தில் உண்டு.
Sunday, May 05, 2019 12:04:00 AM
----------------------------------------
5
Blogger Ramanathan said...
Lagna lord Guru is exalted
11th house lord Sukran in 11th house. Sukran Dasa during childhood gave all luxury and did not allow him to concentrate on studies
9th house and 10th house lord in 12th house aspected by Guru, negating negative effect
10th house lord is varthagomam.
Rahu in 9th house will give benefit during all of rahu dasa
following guru dasa is also good due to guru being lagna lord
2nd house lord saturn aspecting 11th house and 11th house lord from being in 9th house.
Good chances to become a successful business man.
Due to saturn/sukran combination, he would shine in any art form
Sunday, May 05, 2019 7:06:00 PM
-------------------------------------------------
6
Blogger வகுப்பறை said...
தனுர் லக்னம். ஒளிமயமான எதிர்காலம் உண்டு. கேது தசை சுக்கிர தசை முடிந்து சூரிய தசை வரும்போது...
Sunday, May 05, 2019 10:36:00 PM
=======================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

4.5.19

Astrology: ஜோதிடம்: ஒளிமயமான எதிர்காலம் தெரிகிறதா அல்லது இல்லையா?


Astrology: ஜோதிடம்: ஒளிமயமான எதிர்காலம் தெரிகிறதா அல்லது இல்லையா?

கீழே ஒரு இளைஞனின் ஜாதகத்தைக் கொடுத்துள்ளேன். ஆசாமி பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறவில்லை. அதற்குப் பிறகு படிக்கவில்லை.

ஏராளமான நண்பர்கள். அவர்களுடன் சேர்ந்து ஊரைச் சுற்றிக் . கொண்டிருக்கிறார். பெற்றவர்களுக்கு ஒரே கவலை. பையன் உருப்படுவானா
அல்லது மாட்டானா என்ற கவலை. இருக்காதா பின்னே? ஜாதகத்தை அலசி நீங்கள் பதில் சொல்லுங்கள் பையனுக்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்கிறதா? அல்லது இல்லையா?

சரியான விடை இரண்டு நாட்களில் தெரியும்

உங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்த்து,
அன்புடன்
வாத்தியார்
----------------------------------------------
கேள்விக்குரிய ஜாதகம்:


====================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

2.5.19

சீனர் சொன்ன தத்துவக் கதை!


சீனர் சொன்ன தத்துவக் கதை!

*சீன அதிபர் சொன்ன தத்துவக் கதை.*..

``சிறு வயதில் நான் மிகுந்த சுயநலக்காரனாக இருந்தேன். நல்ல பொருள் எதுவாக இருந்தாலும், எது கிடைத்தாலும், அதை நானே கைப்பற்றிக் கொள்வேன்.

இந்தக் குணத்தின் காரணமாகவே, மெதுவாக எல்லோரும் என்னை விட்டு விலக ஆரம்பித்தார்கள்.

ஒரு கட்டத்தில் எனக்கு நண்பர்களே இல்லாமல் போய் விட்டார்கள். நானோ என் மீது தவறு இருக்கிறது என்றே நினைக்கவில்லை;

மற்றவர்களைக் குறை சொல்லிக் கொண்டிருந்தேன். அந்தச் சமயத்தில் என் அப்பா எனக்குக் கற்றுக் கொடுத்த மூன்று வாக்கியங்கள் தாம்  வாழ்க்கையில் எனக்கு உதவியாக இருந்தன.

ஒருநாள் அப்பா, இரண்டு அகலமான பாத்திரங்களில் நூடுல்ஸ் சமைத்து எடுத்து வந்தார்.

அந்த இரண்டையும் சாப்பாட்டு மேஜை மேல் வைத்தார். ஒரு பாத்திரத்திலிருந்த நூடுல்ஸின் மேல் மட்டும் ஒரு முட்டை வைக்கப்பட்டிருந்தது;

இன்னொன்றின் மேல் முட்டையில்லை. அப்பா என்னிடம் கேட்டார்... `கண்ணு... உனக்கு இந்த இரண்டில் எது வேண்டுமோ, நீயே எடுத்துக் கொள்!’ என்றார். அந்த நாட்களில் முட்டை கிடைப்பது அரிதாக இருந்தது.

புத்தாண்டின் போதோ, பண்டிகைகளின் போதோ தான் எங்களுக்குச் சாப்பிட முட்டை கிடைக்கும். எனவே, நான் முட்டை வைத்திருந்த நூடுல்ஸ் கிண்ணத்தை எடுத்துக் கொண்டேன்.

நாங்கள் சாப்பிட ஆரம்பித்தோம். என்னுடைய புத்திசாலித்தனமான முடிவுக்காக எனக்கு நானே என்னைப் பாராட்டிக் கொண்டேன். முட்டையை ஒரு வெட்டு வெட்டினேன். என் தந்தை அவருடைய கிண்ணத்தை எடுத்து சாப்பிட ஆரம்பித்த போது எனக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. அவருடைய கிண்ணத்தில் நூடுல்ஸுக்கு அடியே இரண்டு முட்டைகள் இருந்தன.

அதைப் பார்த்து விட்டு நான் மிகவும் வருத்தப்பட்டேன். அவசரப்பட்டு நான் எடுத்த முடிவுக்காக என்னை நானே திட்டிக் கொண்டேன். அப்பா மென்மையாகச் சிரித்தபடி என்னிடம் சொன்னார்...

`மகனே நினைவில் வைத்துக் கொள்... உன் கண்கள் பார்ப்பது உண்மையில்லாமல் போகலாம். மற்றவர்களுக்குக் கிடைப்பதை நீ அடைய வேண்டும் என நினைத்தால் இழப்பு உனக்குத் தான்.’’

அடுத்த நாளும் என் அப்பா இரண்டு பெரிய கிண்ணங்கள் நிறைய நூடுல்ஸ் சமைத்துக் கொண்டு வந்து சாப்பாட்டு மேஜையில் வைத்தார்.

முதல் நாளைப் போலவே ஒரு கிண்ணத்திலிருந்த நூடுல்ஸின் மேல் ஒரு முட்டை வைக்கப்பட்டிருந்தது; இன்னொன்றில் இல்லை. அப்பா என்னிடம் கேட்டார்... `

மகனே... உனக்கு இந்த இரண்டில் எது வேண்டுமோ, நீயே தேர்ந்தெடுத்துக் கொள்!’ இந்த முறை நான் கொஞ்சம் புத்திசாலித்தனமாக யோசித்தேன். முட்டை வைக்கப்படாத கிண்ணத்தை எடுத்துக் கொண்டேன். அன்றைக்கும் எனக்கு ஆச்சர்யம் காத்திருந்தது.

நூடுல்ஸை அள்ளும் குச்சியால், கிண்ணத்துக்குள் அடிவரை எவ்வளவு துழாவிப் பார்த்தும் ஒரு முட்டை கூடக் கிடைக்கவில்லை. அன்றைக்கும் அப்பா சிரித்தபடி சொன்னார்...

மகனே... எப்போதும் அனுபவங்களின் அடிப்படையிலேயே ஒன்றை நம்பக் கூடாது.

ஏனென்றால், சில நேரங்களில் வாழ்க்கை உன்னை ஏமாற்றக் கூடும், தந்திரத்தில் விழ வைக்கும். இதை ஒரு பாடமாக எடுத்துக் கொள். இதை எந்தப் பாடப்புத்தகங்களிலிருந்தும் கற்றுக் கொள்ள முடியாது.’

மூன்றாவது நாள், அப்பா மறுபடியும் இரு பெரிய கிண்ணங்களில் நூடுல்ஸ் சமைத்து எடுத்து வந்தார். இரு கிண்ணங்களையும் மேஜையின் மேல் வைத்தார்.

வழக்கம் போல ஒரு கிண்ணத்திலிருந்த நூடுல்ஸில் முட்டை; மற்றொன்றில் இல்லை. அப்பா கேட்டார்... மகனே நீயே தேர்ந்தெடுத்துக் கொள். உனக்கு இவற்றில் எது வேண்டும்?’ இந்த முறை அவசரப்பட்டு கிண்ணத்தை எடுத்து விடாமல் நான் பொறுமையாக அப்பாவிடம் சொன்னேன்...

அப்பா நீங்கள் தான் இந்தக் குடும்பத்தின் தலைவர். நீங்கள் தான் நம் குடும்பத்துக்காக உழைக்கிறீர்கள். எனவே, முதலில் நீங்கள் உங்களுக்கான கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். மற்றதை நான் எடுத்துக் கொள்கிறேன்’ என்றேன்.

 அப்பா என் கோரிக்கையை நிராகரிக்கவில்லை. முட்டை இருந்த நூடுல்ஸ் கிண்ணத்தை எடுத்துக் கொண்டார். நான் எனக்கான நூடுல்ஸைச் சாப்பிட ஆரம்பித்தேன்.

நிச்சயமாக இந்தப் பாத்திரத்தில் முட்டை இருக்காது என்று தான் நினைத்தேன். அன்றைக்கும் எனக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. கிண்ணத்தின் அடியில் இரண்டு முட்டைகளிருந்தன.

அப்பா கண்களில் அன்பு கனிய என்னைப் பார்த்தார். பிறகு புன்முறுவலோடு சொன்னார்... மகனே, நினைவில் வைத்துக் கொள். மற்றவர்களுக்கு நீ நல்லது நினைக்கும் போதெல்லாம், உனக்கும் நல்லதே நடக்கும்!’

அப்பா சொன்ன இந்த மூன்று வாசகங்களை, வாழ்க்கைப் பாடங்களை எப்போதும் நான் நினைவில் வைத்திருக்கிறேன். அதன்படி தான் நான் செயலாற்றுகிறேன்.

உண்மையைச் சொல்லப் போனால், நான் வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறேன்.
--------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!!!!
அன்புடன்
வாத்தியார்
============================================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

1.5.19

குட்டிக்கதை: கடைசி இலை!!!


குட்டிக்கதை: கடைசி இலை!!!

*“கடைசி இலை’*

என்பது ஓர் ஆங்கிலக் கதையின் தலைப்பு.

இதன் கதாநாயகன் ஒரு நோயாளி. மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேருகிறான்.

அவன் மனதில் அணுவளவு கூட தாம் குணமடைவோம் என்ற நம்பிக்கையில்லை. இதனால் மனமும் பாதிக்கப்பட்டு விட உட்கொள்ளும் மருந்தினால் எவ்வித நன்மையும் ஏற்படவில்லை.

ஆனால் அவனைப்  பேணும் செவிலிப் பெண் மட்டும் நம்பிக்கையுடன் அவனை எப்போதும் ஊக்கப்படுத்தி  கொண்டே இருக்கிறாள்.

அவனது அறையின் வெளியில் ஒரு மரம் தனது இலைகளை  தினமும் உதிர்த்து  கொண்டே வருகிறது. அந்தக் காட்சி அவனை மிகவும் பாதித்தது.

அதைச் சுட்டிக் காட்டி அதைப்போல தானும் செத்துக் கொண்டிருப்பதாக புலம்ப ஆரம்பிக்கிறான்.

மரத்தின் ஓர் இலையை தவிர அனைத்து இலைகளும் உதிர்ந்து போகின்றன.

அந்தக் கடைசி இலை விழும் போது தானும் இறந்து விடுவோம் என அஞ்சுகிறான்.

சோகத்தின் பிள்ளையாய் மாறிக் கொண்டே வருகிறான்.

செவிலி எவ்வளவு தைரியம் சொல்லியும் அவன் நம்பவில்லை.

நாளைக் காலை கடைசி இலை உதிரும் போது தானும் உதிர்வோம் என்றே நம்பினான்.

பொழுது விடிந்தது. என்ன ஆச்சரியம்! அந்த ஒற்றை இலை உதிரவில்லை.!

இதைக் கண்டதும் அவனுக்கு மகிழ்ச்சி பிறந்து விட்டது.

நம்பிக்கை விதை முளை விட்டது. அந்த ஒற்றை இலை போல் தானும் வாழலாம் என எண்ண ஆரம்பித்து விட்டான்.

மருத்துவரோடும், மருந்துகளோடும் நன்கு ஒத்துழைத்தான். விரைவில் குணமடைந்தான்.

அவன் வீட்டுக்குச்  செல்லும் நாள் வந்தது. செவிலி வந்து அவனை மரத்தருகில் அழைத்துச் சென்றாள். அந்த ஒற்றை இலையை  பறித்து அவனிடம் தந்தாள்.

அது வெறும் துணியில் வரையப்பட்ட செயற்கை இலை என்பது தெரிகிறது.

அதை அந்தச் செவிலி, மரத்தின் கடைசி இலை உதிர்வதற்கு முன் ஓர் ஓவியனைக் கொண்டு வரைந்த இலையை மரத்தில் பொருத்தியிருந்தாள். அது அவனது நம்பிக்கையை வளர்க்கும் கருவியாகி வெற்றி பெற்றது.

பார்த்தீர்களா! நம்பிக்கை என்னென்ன செய்கிறதென்று! திடமான உள்ளமும், தன்னம்பிக்கையும் இருந்தால், உடலென்ன, உலகையே வென்று காட்டலாம்.

இதை உண்மையென்று நம்புங்கள். உடலும், உள்ளமும் ஒன்றோடு ஒன்று தொடர்புள்ளவை.

ஆம், நண்பர்களே,

சிறு நம்பிக்கைத் தூறல் பட்டாலே போதும். செடிகளும், பூக்களும் பூத்துக் குலுங்க ஆரம்பித்து விடும்.!
------------------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
=================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!