மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

18.7.07

கண்மணியே சற்றுக் கை கொடு!

கண்மணியே சற்றுக் கை கொடு!

என்னுடைய மின்னஞ்சலில் உள்ள பெட்டியைத் திறந்தால் வந்துள்ள கடிதங்களின் தலைப்பு இப்படிக் காட்சியளிக்கிறது - அதாவது பெயர் தெரியாமல் - வெறும் கேள்விக்குறிகளாகவே தெரிகிறது
என்ன குறை? நிவர்த்திக்கு என்ன வழி - வகுப்புக்கு வரும் கண்ணைகளில் ஒருவர் அதைச் சரி செய்வதற்கு
உதவ வேண்டுகிறேன்
------------------------------------------------------------------------


ஒரு வாரத்திற்கு முன்பு சரியாக இருந்த நிலை!

17.7.07

சனி என்ன செய்யும்? என்ன செய்யாது?


நன்றி - தினமலர்
-----------------------------------------------------------------------
சனி என்ன செய்யும்? என்ன செய்யாது?

சனிப் பெயர்ச்சியை வைத்து நாளிதழ்களும் சரி,
குறு இதழ்களும் சரி பரபரப்பாக எழுதிக் கொண்டிருக்கின்றன.
சாதாரணக் குடிமகனுக்கு - என்ன தெரியும்? ஒன்றும் சரிவரத் தெரியாது?

சனிப்பெயர்ச்சி என்றால், சனீஸ்வரன் மூட்டை முடிச்சுக்களை
யெல்லாம் கட்டிக்கொண்டு தன் குடும்பத்தாருடன் அடுத்த
ஊருக்குக் குடி பெயர்ந்து போகிறார் என்று நினைத்துக்கொண்டிருப்பான்.

வானவெளியின் வட்டத்திலுள்ள 360 டிகிரிகளையும் (பாகை
களையும்) 30 வருடங்களில் (அதாவது 360 மாதங்களில் மாதம்
ஒரு டிகிரி என்ற விகிதத்தில்) கடந்து ஒரு சுற்றை முடிக்கும்
சனீஸ்வரன், ஒரு ராசியின் 30 டிகிரிகளையும் கடந்து அடுத்த
ராசியின் எல்லைக்குள் பிரவேசம் செய்வதுதான் சனிப் பெயர்ச்சி.

கடக ராசியில் சுமார் இரண்டரை வருடங்களுக்கு முன்பு
பிரவேசித்தவர், அந்த ராசியின் முழு தூரத்தையும் தாண்டி
இப்போது 121வது டிகிரியில் துவங்கும் சிம்ம ராசிக்குள்
பிரவேசிக்கின்றார்

அதனால் என்ன நடக்கும்?

பத்திரிக்கைகளில் சனிக்கென்று எழுதியுள்ள ராசி பலன்களில் குறிப்பிட்டுள்ளதைப் போலதான் அவ்வளவு ராசிக்
காரர்களுக்கும் நடக்குமா?

அப்படி நடக்காது! அப்படியே நடக்காது!

ஏன் நடக்காது?

இந்தியாவின் ஜனத்தொகை சுமார் 108 கோடி மக்கள். 12 ஆல்
வகுத்தால் சராசரியாக ஒரு ராசிக்கு 9 கோடி என்ற அளவில்
மக்கள் இருக்கலாம். அந்த ஒன்பது கோடி மக்களுக்கும்
அவர்களுடைய ராசிப்படி குறிப்பிட்டுள்ள பலன்கள் எப்படி
ஒரே மாதிரியாக நடக்கும்?

அபத்தமாக இல்லையா?

பின் எப்படி நடக்கும்?

ஒவ்வொருவருடைய, பிறந்த ஜாதகம், அவர்களுடைய
இன்றைய வயது, ஜாதகத்திலுள்ள கிரகங்களின் வலிமை,
அஷ்டவர்க்கத்தில் அந்த ஜாதகருடைய குறிப்பிட்ட ராசியி
லுள்ள பரல்கள், முக்கியமாக ஜாகதருடைய நடப்பு
தசா புக்தி போன்றவைகளை வைத்துத்தான் கோச்சார
சனியுடைய தீய பலன்கள் அல்லது நல்ல பலன்கள்
இருக்கும்.

உதாரணத்திற்கு லாபாதிபதியுனுடைய தசை நடந்து
கொண்டிருக்கும் ஜாதகனை, அந்த லாபதிசைக்கு அதிபதி
யான கிரகம் அணைத்துக் கொள்ளூம். Bullet Proof ஜாக்கெட்
போட்ட மனிதனை எப்படித் துப்பாக்கிக் குண்டுகள்
அனுகாதோ அப்படி என்று வைத்துக் கொள்ளுங்கள்.
இல்லை Black Cat Commandos with AK47 Riffle படையுடன்
இருக்கும் ஒரு நபரைத் தீய சக்திகள் எப்படி அனுக
முடியாதோ, அப்படி என்று வைத்துக் கொள்ளுங்கள்.
அதேபோல் 30 பரல்களுக்கு மேல் உள்ள ராசிகளில்
சஞ்சாரம் செய்யும் சனி அந்த ஜாதகனை ஒன்றும் செய்யாது.

இதை எதற்காக எழுதுகிறேன் என்றால் பெயர்ச்சி
பலன்கள் பொதுவானவை. மழை பெய்வதைப் போல!
வீட்டிற்குள் பாதுகாப்பாக இருப்பவன் மழையைப்பற்றிக்
கவலைப்பட வேண்டாம். காருக்குள், கண்ணாடிகளை
ஏற்றிவிட்டு அமர்ந்து செல்பவனும் கவலைப்பட
வேண்டாம். குடை வைத்திருப்பவன், பாதி நனைய
வாய்ப்புண்டு அவன் சற்றுக் கவலைபடலாம். ரெயின் கோட்
போட்டிருப்பவனும் சிறிது நனைய வாய்ப்புண்டு அவனும்
சற்றுக் கவலைபடலாம். முழுதாகக் கவலைப் பட வேண்டியன்
இவை எதுவுமே இல்லாமல் நடுத் தெருவில் மாட்டிக்
கொண்டவன் மட்டுமே.

ஆகவே உங்கள் வயது to நடப்பு தாசாபுக்தி என்று மேற்
சொன்னவை மட்டுமே சனியின் பெயர்ச்சிப் பலனை
நிர்ணயம் செய்யும். அதன்படிதான் பலன்களும் இருக்கும்.
யாரும் பொதுப்பலன்களைப் படித்து விட்டுக் குழம்ப
வேண்டாம்!

திருநள்ளாறு கோவிலின் அதிகாரபூர்வ அறிக்கை சனிப்
பெயர்ச்சி (வாக்கிய பஞ்சாங்கப்படி) வரும் ஆகஸ்ட் மாதம்
5ஆம் தேதி சனிப் பெயர்ச்சி என்று கூறுகிறது. ஆனால் சனி
இடம் மாறி இரண்டு நாள் ஆகிவிட்டது. ஆதாரம் கீழே
கொடுத்துள்ளேன் (இது திருக்கணிதப் படி - Based on Indian
Ephemeries)

தேதியையும், சனி சிம்மராசியில் இருப்பதையும் (Sa = Saturn)
கவனியுங்கள்

வாழ்க வளமுடன்: வாழ்க நலமுடன்!
------------------------------------------------------------


16.7.07

சிபிக்காக ஒரு சிறப்புப் பதிவு!

இந்தப் பதிவு எனது நண்பர் நாமக்கல் சிபிக்காக வலை
யேற்றப்பெற்றுள்ளது! அவருக்கு இது போன்ற செய்தி
களில் ஆர்வம் அதிகம் உண்டு!

மற்றவர்கள பார்க்கக்கூடாதா? தாராளமாகப் பார்க்கலாம்.
ஆனால் எந்தக் கேள்விகளுக்கும் இப்போது பதில் இல்லை
அல்லது கிடைக்காது

ஜோதிடப் பாடத் தொடர் முடிந்தவுடன், இது போன்ற
பல அமானுஷ்ய விஷயங்கள் ஆதாரங்களுடன்
இணைப்புத் தொடராக வ்ரும். அப்போது அன்பர்கள்
கேள்வி கேட்கலாம்

என்ன, சரிதானே!
----------------------------------------------------------------------



நன்றி - தினமலர்

15.7.07

ஜோதிடம் - பாடம் எண்.32


--------------------------------------------------------------------------
ஜோதிடம் - பாடம் எண்.32

தலைப்பு: கால சர்ப்ப தோஷம் Cum யோகம்

அதென்ன தோஷம் cum யோகம் என்று அனேகம் பேர்களுக்கு சந்தேகம் வரும். ஒன்று தோஷம் என்று சொல்ல வேண்டும் அல்லது யோகம் என்று சொல்ல வேண்டும் - அதுதானே முறை!

அல்ல!

ஒரு குழந்தையை வளர்த்துப் பட்டப்படிப்பு படிக்க வைக்கின்ற வயதுவரை - சுமார் 21 வருட காலம் என்று வைத்துக் கொள்வோம் - செலவு செய்ய வேண்டிய காலம். அதே குழந்தை படித்துமுடித்தவுடன் வேலை கிடைத்துச் சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டால், அதற்குப் பிறகு அது வரவு வரும் காலமாக மாறிவிடும் அல்லவா - அது போலத்தான் இதுவும்.

கால சர்ப்ப தோஷம் அமைந்த ஜாதகன் முதலில் பல சிரமங்களை அனுபவிக்க நேரிடும். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு தோஷம் நீங்கி அவன் வாழ்க்கை அசுர வேகத்தில் செழிப்பு மற்றும் சந்தோஷம் மிக்கதாக மாறிவிடும். அந்த செழிப்பு மற்றும் சந்தோஷத்தின் அளவு அவனுடைய ஜாதகத்தில் (Basic Chart) உள்ள கிரகங்களின் சுய பலத்தையும், அமைப்பை யும் வைத்து மாறுபடும்

சரி, கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன? அதை முதலில் தெரிந்து கொள்வோம்.

ராகு மற்றும் கேது ஆகிய இரண்டு தீய கிரகங்கள், வானவெளியில் 180 டிகிரியில் இன்றை ஒன்று எதிர் நோக்கியவாறு இருக்கும். சுழற்சியில் இரண்டின் வேகமும் ஒரே அளவு என்பதால். அந்த 180 டிகிரில் ஒரு இம்மி கூட மாற்றம் இருக்காது.

அவை இரண்டைத் தவிர மற்றும் உள்ள ஏழு கிரகங்கள், அடுத்தடுத்தோ அல்லது கூட்டாகவோ அந்த இரண்டு கிரகங்களுக்கு நடுவே வானவெளியில் இருக்கும் சூழ்நிலையில் பிறக்கும் குழந்தைகளின் ஜாதகத்தில், ராகு மற்றும் கேதுவிற்கு இடையில் அந்த கிரகங்கள் மாட்டிக்கொண்டுவிடும்.

All the other seven planets will be hemmed or sandwitched between Rahu and Ketu. This position in a horoscope is called as Kala Sarppa Dosha

அதன் கால அளவு பற்றி இரண்டு விதமான கருத்துக்கள் உண்டு. சிலர் அதை 33 வருட காலம் என்று சொல்வார்கள். வேறு சிலர் அதை லக்கினத்தில் எத்தனை பரல்கள் உள்ளனவோ, அததனை வருடம் அது உணடெ ன்பார்கள். அந்தக் கருத்துப் பிரச்சினைகள் எல்லாம் இடையில் பல ஜோதிட வல்லுனர்களால் ஏற்பட்டவை.பொதுவாக முப்பது ஆண்டுகள் என்பதுதான் அனுபவ உண்மை.

நடக்கப்போகும் நன்மையைப் பிறகு பார்த்துக்கொள்வோம். அதற்குத் தீர்வு உண்டா என்றால் இல்லை.

அனுபவித்துத்தான் ஆகவேண்டும்.

You can't shift or shed down it

பரிகாரம் உண்டா? உண்டு! அது இறைவழிபாடு மட்டுமே!

கும்பகோணத்திற்கு அருகிலுள்ள திருநாகேச்சுவரம் கோவில், காஞ்சிபுரத்தில் ஊள்ள சித்திர குப்த சுவாமி திருக்கோவில், ராமேஸ்வரம், ஸ்ரீகாளஹஸ்தி ஆகிய ஊர்களில் உள்ள கோவில்கள் அதற்குரிய ஸ்தலங்களாகும்.

அங்கே சென்று மனமுருகி வழிபட்டால், வரும் தீமைகளை எதிர் கொள்ளும் சக்தியைப் பெறலாம். நன்றாகக் கவனிக்கவும் - தீமைகள் இம்மிகூடக் குறையாது. ஆனால் அதை Just like that எதிர் கொள்ளும் மன வலிமை கிடைக்கும்.

காலசர்ப்ப தோசத்தினால் ஏற்படும் தீமைகளை வகைப் படுத்த முடியுமா?

முடியும்!

அதைப் பற்றி அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்!

(தொடரும்)
------------------------------------------------------------------------------------------
காலசர்ப்ப தோசத்தினால் இளம் வயதில் மிகவும் சிரமப்பட்டுப் பிறகு சிறப்பானதொரு வாழ்வைப்பெற்ற - நமக்கெல்லாம் மிகவும் பரீட்சயமான இருவரின் ஜாதகங்களைக் கீழே கொடுத்துள்ளேன். அது உங்கள் பார்வைக்காக!





பயிற்சி வகுப்பு:(Practical Class)
1
பாக்யராஜ் அவர்களின் ஜாதகத்தில் லக்கினாதிபதி எங்கே இருக்கிறார்? அதன் சிறப்பு என்ன? உச்சம்பெற்ற கிரகம் எது? அதன் பலன் என்ன? அவருடைய ஜாதகத்தில் மிகவும் சிறப்பான இடத்தில் அமர்ந்திருக்கும் கிரகம் எது? சிறப்பு என்று சொல்வதன் காரணம் என்ன?

2.
இளையராஜா அவர்களின் ஜாதகத்தில் லக்கினாதிபதி யார்? அவர் யாருடன் சேர்க்கை பெற்றிருக்கிறார்? அதன் பலன் என்ன? பரிவத்தனை பெற்ற கிரகங்கள் எவை? லக்கினத்தில் சனி வந்து அமர்ந்ததின் சிறப்பு என்ன?

முன்பு நடத்திய பாடங்கள் மறக்காமல் இருந்தால் இதற்குப் பதில் சொல்லலாம்?

சரி, யார் யார் சரியாகப் பதில் சொல்லப்போகிறீர்கள் - யார் யார் பெஞ்ச் மேல் நிற்கப்போகிறீர்கள் என்று தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன்

நாளை சந்திப்போம்!

13.7.07

அன்பான கண்மணிகளே!

அன்பான மாணவக் கண்மணிகளே!

முதலில் வாத்தியாரின் வணக்கத்தை ஏற்றுக்
கொள்ளுங்கள்

கடந்த இரண்டு மாதங்களாக ஒரு புத்தகத தொகுப்பு,
மற்றும் வெளியீடு, கவியரசர் கண்ணதாசன்
முத்தமிழ் விழா என்று கடுமையான வேலைப் பளு

வகுப்பறை பக்கம் வரமுடியாமற் போய்விட்டது
வருத்தம்தான். மன்னிக்கவும்

உங்களைப் போன்ற நல்ல மாணவர்கள்
கிடைத்தது என் பேறு.

வழக்கமான உற்சாகத்துடன் வகுப்பறை வரும்
திங்கட்கிழமை (16.07.2007) முதல் மீண்டும் துவங்கும்

அனைவரும் ஒன்று சேர்ந்து வந்து வகுப்பைக்
கலகலப்பாக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்

அன்புடன்
வாத்தியார்