மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label Lessons 601 - 610. Show all posts
Showing posts with label Lessons 601 - 610. Show all posts

11.12.12

Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 6


Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 6

ஜோதிடத் தொடர் - பகுதி 6

இதற்கு முன் பகுதியைப் படித்திராதவர்கள் அதைப் படித்துவிட்டு வரும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்
------------------------------------------------------------------------------------------------
6. மிருகசீரிஷம் நட்சத்திரத்தின் முதல் இரண்டு பாதங்கள் மட்டும் (ரிஷப ராசி)

இது செவ்வாய் கிரகத்திற்கு உரிய நட்சத்திரம்.

1. அஸ்விணி
2. பரணி
3. கார்த்திகை
4. ரோஹிணி
5. திருவாதிரை
6. பூசம்
7. உத்திரம்
8. ஹஸ்தம்
9. சுவாதி
10. விசாகம்
11. அனுஷம்
12. கேட்டை
13. மூலம்
14. பூராடம்
15. உத்திராடம்
16. திருவோணம்
17. சதயம்
18. பூரட்டாதி
19. உத்திரட்டாதி
20. ரேவதி
ஆகிய 20 நட்சத்திரங்களும் பொருந்தக்கூடிய் நட்சத்திரங்களாகும்.

இதில் சித்திரை 3 & 4ஆம் பாதங்கள் துலாம் ராசிக்கு உரியதாகும். ஜோதிடர்கள் ரிஷபத்திற்கு ஆறாம் இடம் துலாம் வீடு. துலாமிற்கு எட்டாம் வீடு ரிஷப வீடு. அஷ்டம சஷ்டம நிலைப்பாடு (6/8 position to each rasi)  வேண்டாம் என்பார்கள். ஆகவே அதை விலக்கிவிடுவது நல்லது.

அதே நிலைப்பாடு மூலம் மற்றும் பூராடம், மற்றும் உத்திராடம் முதல் பாத நட்சத்திரங்களுக்கு உண்டு. அது தனுசு ராசிக்கு உரிய நட்சத்திரம் ஆகும். ரிஷபத்திற்குத் தனுசு எட்டாம் வீடு. தனுசுவிற்கு ரிஷபம் ஆறாம் வீடு. (8/6 position to each rasi)  வேண்டாம் என்பார்கள். ஆகவே அதையும் விலக்கிவிடுவது நல்லது.

அதே நிலைப்பாடு அஸ்விணி, பரணி மற்றும் கார்த்திகை முதல் பாத நட்சத்திரங்களுக்கும் உண்டு. அது மேஷ ராசிக்கு உரிய நட்சத்திரம் ஆகும். ரிஷபத்திற்கு மேஷம் பன்னிரெண்டாம் வீடு. மேஷத்திற்கு ரிஷபம் இரண்டாம் வீடு. (12/1 position to each rasi)  வேண்டாம் என்பார்கள். ஆகவே அதையும் விலக்கிவிடுவது நல்லது.

ஆக மொத்தத்தில் 14 நட்சத்திரங்கள் மட்டுமே சிறப்பாகத் தேரும்.

சித்திரை, அவிட்டம் ஆகிய 2 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களாகும். அவற்றை விலக்கி விடுவது நல்லது.

பெண்ணிற்கும், பையனுக்கும் மிருகசீரிஷம் ஒரே நட்சத்திரமாக இருந்தால், ஏக நட்சத்திரப் பொருத்தம் இந்த நட்சத்திரத்திற்கு மத்திமமான பொருத்தம் ( average) ஆகும் சிறப்பான பொருத்தம் கிடைக்காமல் அல்லாடுபவர்கள், இந்த நட்சத்திர வரன் கிடைத்தால் தெரிவு செய்யலாம்

அதுபோல புனர்பூசம். ஆயில்யம் ஆகிய 2 நட்சத்திரங்களும் இந்த நட்சத்திரத்திற்கு மத்திமமான பொருத்தம் ( average) உடையவை ஆகும். சிறப்பான பொருத்தம் கிடைக்காமல் அல்லாடுபவர்கள், இந்த நட்சத்திர வரன் கிடைத்தால் தெரிவு செய்யலாம்

மகம், பூரம், ஆகிய இரண்டு நட்சத்திரங்களும் பொருந்தாது!
-------------------------------------------------------------------------------
(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்





வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

10.12.12

Astrology ஏன்(டா) எனக்கு மட்டும் திருமணத்திற்கு டிக்கெட் கிடைக்கவில்லை?

------------------------------------------------------------------------------------------------------------------------
Astrology ஏன்(டா) எனக்கு மட்டும் திருமணத்திற்கு டிக்கெட் கிடைக்கவில்லை?

அந்தக்காலத்தில், அதாவது எண்பது ஆண்டுகளுக்கு முன்பு பால்ய விவாகம் நிலவியது. ஒவ்வொரு வீட்டிலும் நிறையக் குழந்தைகள். குடும்பக்கட்டுபாடு என்றால் என்ன என்பதே தெரியாத அல்லது கவலைப் படாத காலம் அது.

தங்கள் குழந்தைகளுக்கு பத்து முதல் 13 வயதிற்குள் திருமணத்தை செய்து வைத்தார்கள். ஜாதகம் பார்த்துத் திருமணம் செய்யும் வேலை எல்லாம் அப்போது கிடையாது. உறவுகளுக்குள்தான் திருமணங்கள். அதனால் கோளாறான ஜாதகங்களை உடைய பெண் குழந்தைகள், பதினைந்து வயது அல்லது பதினாறு வயதிலேயே விதைவையான அவலங்கள் (கதைகள், சம்பவங்கள் எல்லாம்) நிறைய உண்டு. அனாலும் அதைப் பற்றி எல்லாம் கவலைப் படாமல் திருமணங்கள் நடந்தன. வரதட்சினைக் கொடுமைகள் எல்லாம் அப்போது இல்லை.

என் தந்தைக்கு, அவருடைய பதினோறாவது வயதில் திருமணம் ஆனது! அதனால் பால்ய விவாகங்களைப் பற்றி, அவர் சொல்ல கேட்டு, எனக்குப் பலகதைகள் தெரியும்!

பவுன் விலை ( Price of 8 grams of Gold) பதின்மூன்று ரூபாயாக இருந்த காலம் அது! மாதம் ஆறு ரூபாயில் ஒரு தம்பதியர் தங்கள் குடும்பத்தை நடத்தலாம்.

இன்று முடியுமா? நினைத்துப் பாருங்கள்! கோவையில் ஒரு நல்ல ஃபில்டர் காப்பியின் விலை இருபது ரூபாய். ஒரு எலட்ரீஷியன் அல்லது ஒரு கார்பெண்ட்டரின் ஒரு நாள் கூலி 500 முதல் 650 ரூபாய் வரை உள்ளது.

அதற்குப் பிற்கு (அதாவது 1950ஆம் ஆண்டிற்குப் பிறகு) பெண்ணிற்குப் பதினெட்டு வயதிலும் பையனுக்கு 21 வயதிலும் திருமணத்தை நடத்தி வைத்தார்கள்.

இப்போது தலைகீழ் மாற்றம். படிப்பு, வேலை வாய்ப்பு, தோது (வரதட்சினை) குடும்பத்தின் சமூக அந்தஸ்து (Status) என்று பல காரணங்களால் திரும்ணங்கள் தள்ளிக்கொண்டே போகின்றன. தாமதமாகிக் கொண்டே போகின்றன. இரு பாலருக்கும் அது பொருந்தும். சராசரியாக 28 வயதிற்கு மேல்தான் திருமணங்கள் இப்போது  நடைபெறுகின்றன. சிலருக்கு 30 அல்லது 32 வயதிற்கு மேல்தான் திருமணம் நடக்கிறது.

எனக்கு வரும் மின்னஞ்சல்களில் சில, 36 வயதாகியும் திருமணமாகாத ஆண்கள் மற்றும் அதே எண்ணிக்கை உடைய பெண்களிடம் இருந்து வரும். 36 வயது என்னும் போது, பெண்ணின் வசந்தகாலத்தில் 23 வருடங்கள் காலியாகியிருக்கும். 13 வருடங்களே பாக்கியிருக்கும். ஆண்களும் 18 வயதிற்கு மேல் 36 வ்யதிற்கு மேல், இடையில் சென்ற 18 வருடங்களில் தங்களது வாலிப சேட்டைகளால், பல தீய பழக்கங்களுக்கு (என்ன பழக்கங்கள் என்று எழுத்தில் எழுத முடியாது)  ஆளாகியிருப்பார்கள். சிலர் அதற்கு விதிவிலக்காக இருக்கலாம். அவர்களுடைய ஒழுக்கத்திற்குத் தலை வண்க்கிவிட்டு மேலே தொடர்வோம்!.

மிகவும் தாமதமான திருமணம் என்பதெல்லாம் ஒரு திரைப்படத்தை இடைவேளைக்குப் (interval) பிற்கு சென்று பார்ப்பதைப் போன்றது

ஆகவே, வேலை, கிடைக்கின்ற சம்பளம், ஸ்ரீதனம் என்று எந்தக் கருமத்தையும் பார்க்காமல் உரிய காலத்தில், அட்லீஸ்ட் 25 வயதிற்குள் திருமணம் செய்து கொள்வதுதான் உத்தமம்

இதை அனைவரும் மனதில் கொள்ள வேண்டும்!
-----------------------------------------------------
பெரும்பாலும் இன்று அனைவரும் ஜாதகம் பார்த்துத்தான் தங்கள் குழந்தைகளுக்குத் திருமணம் செய்கிறார்கள்.

அப்படிப் பார்க்கும்போது, தங்கள் பெண்ணிற்கு அல்லது பையனுக்கு பத்துப் பொருத்தங்கள், தோஷம், தசா சந்திப்பு போன்ற விஷ்யங்களை மட்டுமே பார்ப்பார்கள். பொருந்தவில்லை என்றால் பொருத்தமான வரனைத் தேடி அலைந்து கொண்டே இருப்பார்கள். அப்படி அலைபவர்கள் சிலரை எனக்குத் தெரியும்.

ஆனால் ஒன்றை மட்டும் பார்க்க மறந்து விடுவார்கள். அதாவது தங்கள் பையனுக்கோ அல்லது பெண்ணிற்கோ திருமண யோகம் உள்ளதா? அல்லது இல்லையா? என்பதை மட்டும் பார்க்கத் தவறிவிடுவார்கள்.

திருமண பாக்கியம் இல்லாத (Horoscope with denial of marriage) ஜாதகத்திற்கு நீங்கள் எத்தனை ஆண்டுகள் தொடர்ந்து முயன்றாலும், திருமணம் ஆகாது. திருமணம் ஆகாத முதிர் கன்னிகள் பலர் உள்ளார்கள். வாலிபம் காலாவதியாகி, தலை முடியெல்லாம் கொட்டிப்பொய் 50ஐத் தொடும் வயதில் உள்ள முதிர் இளைஞர்களையும் எனக்குத் தெரியும்!

அதுபோன்று, திருமணம் மறுக்கப்பெற்ற ஜாதகம் ஒன்றை உங்கள் பார்வைக்காகக் கீழே கொடுத்துள்ளேன். ஜாதகர் 1940ஆம் ஆண்டு பிறந்தவர். கடைசிவரை திருமணமே ஆகவில்லை. ஜாதகரும் தற்சம்யம் உலகில் இல்லை. இறைவனடி சேர்ந்துவிட்டார்.

ஜாதகருக்கு திருமணத்திற்கான டிக்கெட் கிடைக்கவில்லை! களத்திரகாரகன் சுக்கிரன் பாராமுகமாக இருந்துவிட்டான். ஆனால் மேலே செல்வதற்கு டிக்கெட் கிடைத்தது. சனீஷ்வரன் எப்போதுமே பாராமுகமாக இருக்கமாட்டான். டிக்கெட்டைக் கொடுத்துவிடுவான்!

கீழே ஜாதகம் உள்ளது: பாருங்கள்:


கன்னி லக்கின ஜாதகர். மிருகசீரிஷ நட்சத்திரம். லக்கினத்திற்கு ஏழில் அந்த வீட்டின் அதிபதி இருக்கிறார். உடன் உச்சம் பெற்ற சுக்கிரன் இருக்கிறார். அத்துடன் அவர் களத்திரகாரகர். காரகர் வீட்டில் இருந்தால் பாவநாசம் என்பார்கள். அதை எல்லாம் விட முக்கியமாக கேது அங்கே காண்ட்ராக்ட் போட்டு குடியிருக்கிறார். அவர் அந்த வீட்டின் பாக்கியங்களைக் கெடுத்து வைத்தார். உடன் இருந்தே கெடுத்து வைத்தார்

நாம் நமது அஷ்டகவர்க்கப் பாடத்திற்கு வருவோம்.

ஏழாம் வீட்டில் 15 பரல்கள் மட்டுமே
ஏழாம் அதிபதி குருவும் 15 பரல்கள் உள்ள வீட்டில்தான் இருக்கிறார்
காரகன் சுக்கிரனும் அதே வீட்டில் அதே 15 பரல்களுடன்தான் இருக்கிறார்

சராசரி எண்ணான 28ல் பாதி மதிப்பெண்தான் பெற்றுள்ளார்கள். அதாவது பாதிக்கிணற்றை மட்டும் தாண்டினால் என்ன ஆகுமோ அது நடந்துள்ளது

இது அஷ்டகவர்க்கப் பாட வகுப்பில் நடத்தப்பெற்ற பாடம். அனைவருக்கும் பயன் படட்டும் என்று இங்கே வலை ஏற்றியுள்ளேன். இன்னும் 5 அல்லது 6 மாத காலத்தில் அஷ்டகவர்க்கப்பாடங்கள் புத்தக வடிவில் வரவுள்ளது. அப்போது அனைவரும் படிக்கலாம்!

அன்புடன்
வாத்தியார்



வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

5.12.12

Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 5

Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 5

ஜோதிடத் தொடர் - பகுதி 5

இதற்கு முன் பகுதியைப் படித்திராதவர்கள் அதைப் படித்துவிட்டு வரும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்
------------------------------------------------------------------------------------------------
5. ரோஹிணி நட்சத்திரம் (ரிஷப ராசி)

ஒரு திருமண பந்தத்தில், பெண்ணிற்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்பெற்றுள்ளது. பெண்ணின் நட்சத்திரத்தை வைத்து, அதற்குப் பொருத்தமான நட்சத்திரத்தைத் தேரிவு செய்வதுதான் வழக்கத்தில் உள்ளது. மீண்டும் ஒருமுறை அதை வலியுறுத்திச் சொல்கிறேன். அதே பொருத்தம் இரு பாலருக்குமே பொதுவானதுதான். அதையும் மனதில் வையுங்கள்.

இது சந்திரனின் நட்சத்திரம். சந்திரன் இங்கே (ரிஷபத்தில்) உச்சம் அடைவார். இந்த நடசத்திரத்திற்குப் பெரும்பாலான நட்சத்திரங்கள் பொருந்தும். விவரம் கீழே தந்துள்ளேன்!

1. அஸ்விணி
2. பரணி
3. கார்த்திகை
4. மிருகசீரிஷம்
5. புனர்பூசம்
6. ஆயில்யம்
7. உத்திரம்
8. சித்திரை
9. விசாகம்
10. அனுஷம்
11. கேட்டை
12. மூலம்
13. பூராடம்
14. உத்திராடம்
15. அவிட்டம்
16. பூரட்டாதி
17. உத்திரட்டாதி
18. ரேவதி
ஆகிய 18 நட்சத்திரங்களும் சிறப்பாகப் பொருந்தக்கூடிய் நட்சத்திரங்களாகும்.

இதில் சித்திரை 3 & 4ஆம் பாதங்கள் துலாம் ராசிக்கு உரியதாகும். ஜோதிடர்கள் ரிஷபத்திற்கு ஆறாம் இடம் துலாம் வீடு. துலாமிற்கு எட்டாம் வீடு ரிஷப வீடு. அஷ்டம சஷ்டம நிலைப்பாடு (6/8 position to each rasi)  வேண்டாம் என்பார்கள். ஆகவே அதை விலக்கிவிடுவது நல்லது.

அதே நிலைப்பாடு மூலம் மற்றும் பூராட நட்சத்திரங்களுக்கு உண்டு. அது தனுசு ராசிக்கு உரிய நட்சத்திரம் ஆகும். ரிஷபத்திற்குத் தனுசு எட்டாம் வீடு. தனுசுவிற்கு ரிஷபம் ஆறாம் வீடு. (8/6 position to each rasi)  வேண்டாம் என்பார்கள். ஆகவே அதையும் விலக்கிவிடுவது நல்லது.

அதே நிலைப்பாடு அஸ்விணி, பரணி மற்றும் கார்த்திகை முதல் பாத நட்சத்திரங்களுக்கும் உண்டு. அது மேஷ ராசிக்கு உரிய நட்சத்திரம் ஆகும். ரிஷபத்திற்கு மேஷம் பன்னிரெண்டாம் வீடு. மேஷத்திற்கு ரிஷபம் இரண்டாம் வீடு. (12/1 position to each rasi)  வேண்டாம் என்பார்கள். ஆகவே அதையும் விலக்கிவிடுவது நல்லது.

ஆக மொத்தத்தில் 13 நட்சத்திரங்கள் மட்டுமே சிறப்பாகத் தேரும்.

பூரம், பூராடம், பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகிய 5 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களாகும். அவற்றை விலக்கி விடுவது நல்லது.

பெண்ணிற்கும், பையனுக்கும் ரோஹிணி ஒரே நட்சத்திரமாக இருந்தால், ஏக நட்சத்திரப் பொருத்தம் இந்த நட்சத்திரத்திற்கு உத்தமமான பொருத்தம் ஆகும்

மகம், பூரம், ஆகிய இரண்டு நட்சத்திரங்களும் பொருந்தாது!

பூசம் (இது மட்டும் மத்திம பொருத்தம்) அதாவது சராசரி - average . சிறப்பான பொருத்தம் கிடைக்காமல் அல்லாடுபவர்கள், இந்த நட்சத்திர வரன் கிடைத்தால் தெரிவு செய்யலாம்
-------------------------------------------------------------------------------
காதல் திருமணங்களுக்கு இந்தப் பொருத்தம் பார்க்க வேண்டுமா?
தேவையில்லை. பலமுறை சொல்லியுள்ளேன். விவரம் முன் பதிவில் உள்ளது 

இன்றையப் பாடம் இத்துடன் நிறைவுறுகிறது!

(தொடரும்)
அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

4.12.12

Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 4

 Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 4

ஜோதிடத் தொடர் - பகுதி 4

இதற்கு முன் பகுதியைப் படித்திராதவர்கள் அதைப் படித்துவிட்டு வரும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்
------------------------------------------------------------------------------------------------
4. கார்த்திகை நட்சத்திரம் 2, 3, மற்றும் 4ஆம் பாதங்கள் (ரிஷப ராசி)

ஒரு திருமண பந்தத்தில், பெண்ணிற்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்பெற்றுள்ளது. பெண்ணின் நட்சத்திரத்தை வைத்து, அதற்குப் பொருத்தமான நட்சத்திரத்தைத் தேரிவு செய்வதுதான் வழக்கத்தில் உள்ளது. மீண்டும் ஒருமுறை அதை வலியுறுத்திச் சொல்கிறேன். அதே பொருத்தம் இரு பாலருக்குமே பொதுவானதுதான். அதையும் மனதில் வையுங்கள்.

இது சூரியனின் நட்சத்திரம். இந்த நட்சத்திரத்திற்குக் குறிப்பிட்டுள்ள் பாதங்களுக்கு,

1. அஸ்விணி
2. மிருகசீரிஷம்
3. பூசம்
4. ஆயில்யம்
5. மகம்
6 ஹஸ்தம்
7. சுவாதி
8. அனுஷம்
9. கேட்டை
10. மூலம்
11. சதயம்
12. ரேவதி
ஆகிய 12 நட்சத்திரங்களும் சிறப்பாகப் பொருந்தக்கூடிய் நட்சத்திரங்களாகும்.

இதில் சுவாதி துலாம் ராசிக்கு உரியதாகும். ஜோதிடர்கள் ரிஷபத்திற்கு ஆறாம் இடம் துலாம் வீடு. துலாமிற்கு எட்டாம் வீடு ரிஷப வீடு. அஷ்டம சஷ்டம
நிலைப்பாடு (6/8 position to each rasi)  வேண்டாம் என்பார்கள். ஆகவே அதை விலக்கிவிடுவது நல்லது.

அதே நிலைப்பாடு மூல நட்சத்திரத்திர்ற்கு உண்டு. அது தனுசு ராசிக்கு உரிய நட்சத்திரம் ஆகும். ரிஷபத்திற்குத் தனுசு எட்டாம் வீடு. தனுசுவிற்கு ரிஷபம்
ஆறாம் வீடு. (8/6 position to each rasi)  வேண்டாம் என்பார்கள். ஆகவே அதையும் விலக்கிவிடுவது நல்லது.

அதே நிலைப்பாடு அஸ்விணி நட்சத்திற்கும் உண்டு. அது மேஷ ராசிக்கு உரிய நட்சத்திரம் ஆகும். ரிஷபத்திற்கு மேஷம் பன்னிரெண்டாம் வீடு. மேஷத்திற்கு
ரிஷபம் இரண்டாம் வீடு. (12/1 position to each rasi)  வேண்டாம் என்பார்கள். ஆகவே அதையும் விலக்கிவிடுவது நல்லது.

ஆக மொத்தத்தில் 9 நட்சத்திரங்கள் மட்டுமே சிறப்பாகத் தேரும்.

புனர்பூசம், உத்திரம், விசாகம், உத்திராடம், பூரட்டாதி ஆகிய 5 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களாகும். அவற்றை விலக்கி விடுவது  நல்லது.

பெண்ணிற்கும், பையனுக்கும் கார்த்திகை ஒரே நட்சத்திரமாக இருந்தால், ஏக நட்சத்திரப் பொருத்தம் இந்த நட்சத்திரத்திற்கு மத்திம பொருத்தம் ஆகும் அதாவது  சராசரிப் பொருத்தம். ஒன்றும் தேராவிட்டால் இதைத் தெரிவு செய்யலாம்!

சித்திரை, பூராடம் ஆகிய இரண்டு நட்சத்திரங்களும் பொருந்தாது!

மிருகசீரிஷம் 1 & 2ஆம் பாதங்கள் உத்தமம் பொருந்தும்
மிருகசீரிஷம் 3 & 4ஆம் பாதங்கள் (மிதுன ராசி) பொருந்தாது. மத்திம பொருத்தம் ஆகும் அதாவது சராசரிப் பொருத்தம். ஒன்றும் தேறாவிட்டால் இதைத் தெரிவு  செய்யலாம்!

1. பரணி
2. திருவாதிரை
3. பூரம்
4. திருவோணம்
5. அவிட்டம்
6. உத்திரட்டாதி
ஆகியவை மத்திம பொருத்தம் உடையவை. அதாவது சராசரி - average பொருத்தம் மத்திம பொருத்தம் உடையவை. சிறப்பான பொருத்தம் கிடைக்காமல் அல்லாடுபவர்கள், இந்த நட்சத்திரங்களில் 8ல் ஒன்றைத் தெரிவு செய்யலாம்
-------------------------------------------------------------------------------
காதல் திருமணங்களுக்கு இந்தப் பொருத்தம் பார்க்க வேண்டுமா?
தேவையில்லை. பலமுறை சொல்லியுள்ளேன். விவரம் முன் பதிவில் உள்ளது

இன்றையப் பாடம் இத்துடன் நிறைவுறுகிறது!

(தொடரும்)
அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++

3.12.12

Astrology என்ன (டா) செய்யும் ராகு?

சோமஸ்கந்தர் - திருநாகேஷ்வரம்
Astrology என்ன (டா) செய்யும் ராகு?

எல்லா நாளிதழ்களிலும் ராகு மற்றும் கேதுவின் பெயர்ச்சியைப் பற்றி நான்கு கால செய்தியைப் போட்டு, ந்ம்மைக் கவலைப்பட வைத்திருக்கிறார்கள்.

யாரும் கவலைப் பட வேண்டாம். நம்மைப் படைத்த இறைவன் பார்த்துக்கொள்வான் என்று மன தைரியத்துடன் இருங்கள்

அது என்ன பெயர்ச்சி?

கோள்சாரத்தில் (transit of planets) ராகுவும் கேதுவும் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு இடம் மாறுகிறார்கள். உங்கள் மொழியில் சொன்னால் transfer ஆகிப் போகிறார்கள். மாற்றல் உத்தரவு தேவையில்லாத ஆசாமிகள் அவர்கள்.

ராகு விருச்சிக ராசியில் இருந்து துலாம் ராசிக்கு இடம் மாறுகின்றார் (anti clockwise) கேது ரிஷப ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இடம் மாறுகின்றார் (anti clockwise)

2.12.2012 அன்று இடம் மாறும் அவர்கள், அந்த இடத்தில் சுமார் 18 மாதங்கள் தங்கியிருப்பார்கள். 21.6.2014 வரை அங்கே இருப்பார்கள். அவர்களின் இடம் மாற்றத்தில் சிலருக்கு நன்மையும், சிலருக்கு தீமையும் உண்டாகும்.

ராசி வாரியாக அதைப் பார்ப்போம்:

1. மேஷ ராசி: நன்மையும் தீமையும் சரி சமமாகக் கலந்த கலவையான பலன்

2. ரிஷப ராசி. இதுவரை பிடித்திருந்தவர்கள் விட்டு விலகிப் போவதால் இனி எல்லாமுமே நல்லதாக நடக்கும்

3. மிதுன ராசி இன்றைய நிலவரப்படி அது (கேதுவிற்கு) 11ஆம் இடம். பெரும்பாலும் யோகமான பலன்களே நடைபெறும். வேலையில் தொழிலில் முன்னேற்றங்கள் உண்டாகும்

4. கடக ராசி. பெரும்பாலும் யோகமான பலன்களே நடைபெறும்.

5. சிம்ம ராசி. ராசிக்கு மூன்றில் ராகு வருகிறார். அது மறைவிடம். இந்த ராசிக்காரர்களுக்கு இனி எல்லாமுமே யோகமான பலன்கள்தான். வளம் உண்டாகும். நினைத்ததெல்லாம் நிறைவேறும்.

6. கன்னி ராசி. ராசிக்கு இரண்டில் ராகு வருகிறார். ஏற்கனவே சனியிடம் ஒரு பக்கம் உதை வாங்கிக் கொண்டிருக்கும் இந்த ராசிக்காரர்களை ராகுவும் உதைக்கத்துவங்குவான். சுமாரான பலன்களே. இறைவழிபாடு ஒன்றுதான் பரிகாரம்

7. துலாம் ராசி. ராசிக்கு ஒன்றில் ராகு வருகிறார். ஏற்கனவே சனியிடம் ஒரு பக்கம் உதை வாங்கிக் கொண்டிருக்கும் இந்த ராசிக்காரர்களை ராகுவும் உதைக்கத் துவங்குவான். சுமாரான பலன்களே. இறைவழிபாடு ஒன்றுதான் பரிகாரம்

8. விருச்சிக ராசி. இதுவரை பிடித்து அமுக்கி வைத்திருந்த ராகு விட்டு விலகிப் போவதால் இனி நல்லகாலம்தான். பெரும்பாலும் நன்மையான பலன்களாகவே நடைபெறும்.

9. தனுசு ராசி. இன்றையப் பெய்ர்ச்சிப்படி அது ராகுவிற்கு (from thanusu) பதினொன்றாம் இடம். யோகமான பலன்களே நடைபெறும்

10. மகர ராசி. ராகு 10ல், கேது 4ல். நல்ல அமைப்பு இல்லை. இருந்தாலும் கவலைப்பட வேண்டாம். நம்ம ஆள் - அதாங்க ராசி நாதன் சனீஷ்வரனின் சேர்க்க, மற்றும் பார்வையில் அவர்கள் இருப்பதால், அவர் பார்த்துக் கொள்வார்.

11. கும்ப ராசி. கேது 3ல். உபத்திரவம் இருக்காது. உற்சாகமே அதிகமாக இருக்கும். எதையும் துணிச்சலாகச் செய்வீர்கள். பணவரவுகள் இருக்கும்.

12. மீன ராசி. எட்டில் ராகு. முன்பாகவே அஷ்டமச்சனியும் அங்கே உள்ளார். ஆகவே கைக்காசெல்லாம் கரைந்து போகும் (2ல் இருக்கும் கேது அதைச் செய்வார்)

இவை எல்லாமுமே பொதுப் பலன்கள்தான்!

நல்ல தசா புத்திகள் நடப்பவர்களை, இந்தப் பெயர்ச்சிகள் ஒன்றும் செய்யாது. தசாபுத்திகள்தான் முக்கியம். கோளசாரத்திற்கு இரண்டாம் இடம்தான். ஆகவே உங்கள் ஜாதகப்படி தற்சமயம் உங்களுக்கு நல்ல தசா புத்திகள் நட்ந்தால், நீங்கள் நிம்மதியாக இருக்கலாம். மற்ற எதுவும் உங்களைப் பாதிக்காது.

அதுபோல துலாம் ராசியிலும், மேஷராசியிலும் சர்வாஷ்டகப்பரல்களின்படி 30ம் அத்ற்கு மேற்பட்ட பரல்களும் உடையவர்களையும் இந்தப் பெயர்ச்சிகள் ஒன்றும் செய்யாது. அதையும் கவனத்தில் கொள்க

சனியின் சுற்றிலும் அதுதான் அஷ்டகவர்க்க விதி. சனி வரும் இடத்தில் 30 பரல்களோ அல்லது மேலாகவோ இருந்தால் சனியின் பாதிப்பு எதுவும் இருக்காது. அந்த இடம் 30 பரல்களுடன் இருப்பதால், அது வலிமையான இடம். அங்கே தீய கிரகங்களின் ஆட்டம் செல்லாது. அவைகள் அடக்கி வாசிக்கும். அதையும் மனதில் கொள்க!!!!!

அன்புடன்
வாத்தியார்

-------------------------------------
மேலதிகத் தகவல்

Naganatha Swami temple - Rahu stalam (தகவல்: விக்கி மஹாராஜா)
கும்பகோண்த்தில் இருந்து எட்டு கிலோமீட்டர் தூரத்தில் இந்த ஸ்தலம் உள்ளது


Naganatha Swami (Naga in Tamil/Sanskrit means Snake and Natha means God) is a temple dedicated to Lord Shiva. An important feature of Naganatha Swami temple is that of Rahu bhagawan (one of the nine celestial bodies) sannathi. It is the 29th in the series of Tevara Stalams located south of the river Kaveri. Here milk abhishekam is performed daily during Rahukaalam. At this time, the milk that is poured on the statue turns blue when it passes over the body and once again to white after it reaches the floor. This wonder is watched by many daily during the Raahu Kaalam. This is also the only place wherein one can view Rahu bhagawan with his consorts. The mythological serpents Aadi Seshan, Dakshan and Kaarkotakan worshipped Shiva here. Nala worshipped Shiva here too. Gautama Maharishi, Parashara and Bhageerata are also associated with this temple.


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

28.11.12

Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 3

Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 3
ஜோதிடத் தொடர் - பகுதி 3

இதற்கு முன் பகுதியைப் படித்திராதவர்கள் அதைப் படித்துவிட்டு வரும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்
------------------------------------------------------------------------------------------------
3. கார்த்திகை நட்சத்திரம் 1ஆம் பாதம் (மேஷ ராசி)

ஒரு திருமண பந்தத்தில், பெண்ணிற்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்பெற்றுள்ளது. பெண்ணின் நட்சத்திரத்தை வைத்து, அதற்குப் பொருத்தமான நட்சத்திரத்தைத் தேரிவு செய்வதுதான் வழக்கத்தில் உள்ளது. அதே பொருத்தம் இரு பாலருக்குமே பொதுவானதுதான். அதை மனதில் வையுங்கள்.

இது சூரியனின் நட்சத்திரம். இந்த நட்சத்திரத்திற்கு,

1. அஸ்விணி
2. பூசம்
3. ஆயில்யம்
4. மகம்
5 ஹஸ்தம்
6. சுவாதி
7. அனுஷம்
8. கேட்டை
9. மூலம்
10. சதயம்
11. ரேவதி
ஆகிய 11 நட்சத்திரங்களும் சிறப்பாகப் பொருந்தக்கூடிய் நட்சத்திரங்களாகும்.

இதில் ஹஸ்தம் கன்னி ராசிக்கு உரியதாகும். ஜோதிடர்கள் மேஷத்திற்கு ஆறாம் இடம் கன்னி வீடு. கன்னிக்கு எட்டாம் வீடு மேஷ வீடு. அஷ்டம சஷ்டம நிலைப்பாடு (6/8 position to each rasi)  வேண்டாம் என்பார்கள். ஆகவே அதை விலக்கிவிடுவது நல்லது.

அதே நிலைப்பாடு அனுஷம், கேட்டை நட்சத்திரங்களுக்கும் உண்டு. அது விருச்சிக ராசிக்கு உரிய நட்சத்திரம் ஆகும். மேஷத்திற்கு விருச்சிகம் எட்டாம் வீடு. விருச்சிகத்திற்கு மேஷம் ஆறாம் வீடு. (6/8 position to each rasi)  வேண்டாம் என்பார்கள். ஆகவே அதையும் விலக்கிவிடுவது நல்லது.

அதே நிலைப்பாடு ரேவதி நட்சத்திற்கும் உண்டு. அது மீன ராசிக்கு உரிய நட்சத்திரம் ஆகும். மேஷத்திற்கு மீனம் பன்னிரெண்டாம் வீடு. மீனத்திற்கு மேஷம் இரண்டாம் வீடு. (12/1 position to each rasi)  வேண்டாம் என்பார்கள். ஆகவே அதையும் விலக்கிவிடுவது நல்லது.

ஆக மொத்தத்தில் 7 நட்சத்திரங்கள் மட்டுமே சிறப்பாகத் தேரும்.

புனர்பூசம், உத்திரம், விசாகம், உத்திராடம், பூரட்டாதி ஆகிய 5 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களாகும். அவற்றை விலக்கி விடுவது நல்லது.

பெண்ணிற்கும், பையனுக்கும் கார்த்திகை ஒரே நட்சத்திரமாக இருந்தால், ஏக நட்சத்திரப் பொருத்தம் இந்த நட்சத்திரத்திற்கு மத்திம பொருத்தம் ஆகும் அதாவது சராசரிப் பொருத்தம். ஒன்றும் தேராவிட்டால் இதைத் தெரிவு செய்யலாம்!

மிருகசீரிஷம் 3 & 4ஆம் பாதங்கள் (மிதுன ராசி) பொருந்தாது. மிருகசீரிஷம் 1 & 2ஆம் பாதங்கள் மத்திம பொருத்தம் ஆகும் அதாவது சராசரிப் பொருத்தம். ஒன்றும் தேறாவிட்டால் இதைத் தெரிவு செய்யலாம்!

1. பரணி
2. ரோஹிணி
3. திருவாதிரை
4. பூரம்
5. சித்திரை 1 & 2ஆம் பாதங்கள் (கன்னி ராசி) பொருந்தாது. சித்திரை 3 & 4ஆம் பாதங்கள் (துலாம் ராசி) மத்திம பொருத்தம்
6. திருவோணம்
7. அவிட்டம்
8. உத்திரட்டாதி
ஆகியவை மத்திம பொருத்தம் உடையவை. அதாவது சராசரி - average பொருத்தம் மத்திம பொருத்தம் உடையவை. சிறப்பான பொருத்தம் கிடைக்காமல் அல்லாடுபவர்கள், இந்த நட்சத்திரங்களில் 8ல் ஒன்றைத் தெரிவு செய்யலாம்
-------------------------------------------------------------------------------
காதல் திருமணங்களுக்கு இந்தப் பொருத்தம் பார்க்க வேண்டுமா?

தேவையில்லை. விவரம் முன் பதிவில் உள்ளது  இன்றையப் பாடம் இத்துடன் நிறைவுறுகிறது!

(தொடரும்)
அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

27.11.12

Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 2

Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 2

ஜோதிடத் தொடர் - பகுதி 2

இதற்கு முன் பகுதியைப் படித்திராதவர்கள் அதைப் படித்துவிட்டு வரும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்
------------------------------------------------------------------------------------------------
2. பரணி நட்சத்திரம் (மேஷ ராசி)

இது சுக்கிரனின் நட்சத்திரம்.இந்த நட்சத்திரத்திற்கு,

1. அஸ்விணி
2. கார்த்திகை
3. மிருகசீரிஷம்
4. புனர்பூசம்
5. ஆயில்யம்
6. மகம்
7. உத்திரம்
8. சுவாதி
9. கேட்டை
10. மூலம்
11. உத்திராடம்
12. திருவோணம்
13. சதயம்
14. ரேவதி
ஆகிய 14 நட்சத்திரங்களும் சிறப்பாகப் பொருந்தக்கூடிய் நட்சத்திரங்களாகும்.

இதில் உத்திரம் 2 ,3 & 4ஆம் பாதங்கள் கன்னி ராசிக்கு உரியதாகும். ஜோதிடர்கள் மேஷத்திற்கு ஆறாம் இடம் கன்னி வீடு. கன்னிக்கு எட்டாம் வீடு மேஷ வீடு. அஷ்டம சஷ்டம நிலைப்பாடு (6/8 position to each rasi)  வேண்டாம் என்பார்கள். ஆகவே அதை விலக்கிவிடுவது நல்லது.

அதே நிலைப்பாடு கேட்டை நட்சத்திற்கும் உண்டு. அது விருச்சிக ராசிக்கு உரிய நட்சத்திரம் ஆகும். மேஷத்திற்கு விருச்சிகம் எட்டாம் வீடு. விருச்சிகத்திற்கு  மேஷம் ஆறாம் வீடு. (6/8 position to each rasi)  வேண்டாம் என்பார்கள். ஆகவே அதையும் விலக்கிவிடுவது நல்லது.

அதே நிலைப்பாடு ரேவதி நட்சத்திற்கும் உண்டு. அது மீன ராசிக்கு உரிய நட்சத்திரம் ஆகும். மேஷத்திற்கு மீனம் பன்னிரெண்டாம் வீடு. மீனத்திற்கு மேஷம்  இரண்டாம் வீடு. (12/1 position to each rasi)  வேண்டாம் என்பார்கள். ஆகவே அதையும் விலக்கிவிடுவது நல்லது.

ஆக மொத்தத்தில் 11 நட்சத்திரங்கள் மட்டுமே சிறப்பாகத் தேரும்.

பரணிக்கு பூரம், பூராடம், பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகிய 5 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களாகும். அவற்றை விலக்கி  விடுவது நல்லது.

பெண்ணிற்கும், பையனுக்கும் பரணி ஒரே நட்சத்திரமாக இருந்தால், ஏக நட்சத்திரப் பொருத்தம் இந்த நட்சத்திரத்திற்குக் கிடையாது.. ஆகவே அதை விலக்கி  விடுவது நல்லது.

திருவாதிரை (மிதுன ராசி) பொருந்தாது.

1. ரோஹிணி (ரிஷபம்)
2. புனர்பூசம் (1,2,3ஆம் பாதங்கள் - மிதுன ராசி மட்டும்)
3. ஹஸ்தம் (கன்னி ராசி)
4. சித்திரை
5. விசாகம்
6. அவிட்டம்
7. பூரட்டாதி
ஆகியவை மத்திம பொருத்தம் உடையவை. அதாவது சராசரி - average பொருத்தம் மத்திம பொருத்தம் உடையவை. சிறப்பான பொருத்தம் கிடைக்காமல்  அல்லாடுபவர்கள், இந்த நட்சத்திரங்களில் 7ல் ஒன்றைத் தெரிவு செய்யலாம்
-------------------------------------------------------------------------------
காதல் திருமணங்களுக்கு இந்தப் பொருத்தம் பார்க்க வேண்டுமா?

நான் சென்ற பதிவில் சொல்லியதையே மீண்டும் சொல்கிறேன். எதற்காகப் பார்க்க வேண்டும்? 3 அல்லது 4 வருடங்கள் உருகி உருகிக் காதலித்துவிட்டு,
மகாபலிபுரம் போன்ற் இடங்களில் காட்டேஜ் போட்டு ஒருவருடன் ஒருவர் முழுமையாகக் கலந்து விட்டு, இந்தக் கருமத்தை எல்லாம் எதற்காகப் பார்க்க
வேண்டும்? இதைப் பார்த்துவிட்டு, பொருத்தம் இல்லை என்று அவனை விட்டுவிட முடியுமா? இல்லை அவள்தான் விட்டு விடுவாளா? ருசி கண்ட பூனை சும்மா விடுமா? ஆகவே காதலர்கள், காதல் தோற்கக்கூடாது என்ற உலகப் பொது மறையின்ப்டி திருமணம் செய்துகொள்ள வேண்டியதுதான். திருமணத்திற்குப் பிறகு காதலன்/காதலி ஒத்துவந்தால் சரி! இல்லை என்றால் குடும்ப நீதி மன்றம் உள்ளது. மகளிர் காவல் நிலையங்களும் உள்ளன! அதைவிட மேலாக இருவருக்கும் வேலை, கை நிறையச் சம்பளம், உலகக் கண்ணோட்டம், பொருளாதார சுதந்திரம் என்று எல்லா ஆயுதங்களும் உள்ளன ஆகவே அவர்கள் இதை எல்லாம் பார்க்க வேண்டாம்  அவர்களுக்கு இதிலிருந்து முழுமையான விதிவிலக்கு உண்டு:-))))

அவர்களுக்கான, அதாவது காதலுக்கான,  ஜாதக அமைப்புக்களை விரிவாக, ஒரு தொடராகப் பின்னால் அலசுவோம்!!!!

இன்றையப் பாடம் இத்துடன் நிறைவுறுகிறது!

(தொடரும்)
அன்புடன்
வாத்தியார்





வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

26.11.12

Astrology எப்போது (டா) உடல்; உபாதை வரும்?


Astrology எப்போது (டா) உடல்; உபாதை வரும்?

தலைப்பில் உள்ள ‘டா’ எனக்காக நான் எழுதிக்கொள்வது. அப்போதுதான் எழுதுவதற்கு ஒரு உற்சாகம பிறக்கிறது!

பயிற்சிப்பாடம்

ஜோதிடம் கற்றுக் கொள்வது எளிதன்று. கடுமையான முயற்சி செய்து ஜோதிடப்பாடங்களைப் படிப்பதோடு, படித்ததை மனதில் தக்கவைத்துக் கொண்டால் மட்டுமே, அதில் தேர்ச்சி பெறமுடியும்.

படிக்கின்ற அத்தனை பாடங்களையும், அத்தனை, விதிகளையும் மனதில் தக்கவைக்க முடியாது. ஆனால் முக்கியமான விதிகளைத் தக்கவைத்துக் கொள்ளலாம். அதாவது மனதில் நிறுத்திவைக்கலாம்.

முக்கியமான பாடங்கள் எது? அவற்றை எப்படித் தக்கவைப்பது எப்படி என்பதே இந்தப் பயிற்சி வகுப்பின் (மேல்நிலை வகுப்பின்) நோக்கமாகும்.

இது மேல் நிலை வகுப்பிற்காக எழுதப்பெற்ற பாடம். உங்களுக்கும் (அனைவருக்கும்) பயன் படட்டும் என்பதற்காக இன்று  இங்கே பதிவிட்டுள்ளேன்.

பாடங்களைப் படிப்பதோடு மட்டும் அல்லாமல், பல ஜாதகங்களை பரிசீலித்துப் பார்ப்பதுடன், ஜோதிடம் தெரிந்த சிலருடன் அடிக்கடி உரையாடுவதன் மூலமும் நாம் அனுபவங்களைப் பெறமுடியும். அனுபவங்கள் மனதில் தங்கிவிடும்.

கிடைக்கும் உதாரண ஜாதகங்களை எல்லாம் சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டும். அதற்காக மெனக்கெட வேண்டாம். கிடைக்கின்றபோது அவற்றைச் சேகரித்துவைத்துக்கொள்ளலாம். முன்பு எல்லாம் நோட்டுப் புத்தகங்களில் குறித்து வைத்துக்கொண்டே வருவார்கள். இப்போது அந்தத் தொல்லை இல்லை. கணினியில் ஒரு Main Folder, Various Sub Folderகளை உருவாக்கி அவைகளைச் சேர்த்துக்கொண்டே வரலாம். அந்த வசதி ஒரு அற்புதமான வசதியாகும். அனைவரையும் அவ்வாறே செய்ய வேண்டுகிறேன். பல உதாரண ஜாதகங்களை நான் உங்களுக்குத் தரவுள்ளேன். அடுத்தடுத்து ஒவ்வொன்றாக அவைகள் வரும். பொறுத்திருங்கள்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எல்லா மனிதர்களுக்குமே ஒரு பொதுவான கேள்வி உண்டு. "நான் கஷ்டப்படுகிறேன். எனது கஷ்டங்கள் எப்போது தீரும்?"

கஷ்டப்படாத மனிதர்களே கிடையாது. கஷ்டங்கள் பலருக்கும் பலவிதமாக இருக்கும்.

கஷ்டங்களை அல்லது துன்பங்களை அல்லது துயரங்களை அல்லது தொல்லைகளை இரண்டு வகைப்படுத்தலாம்.

1. நிரந்தரக் கஷ்டம். மாற்ற முடியாத நிரந்தரக் கஷ்டம்
2. தற்காலிகமான (Temporary) கஷ்டம்

இதிலும் ஒவ்வொரு வீட்டை வைத்தும், கிரகத்தைவைத்தும், கஷ்டங்கள் பலவகைப்படும். ஒவ்வொன்றாக அலசுவோம்.

முதலில் சூரியனை வைத்துப்பார்ப்போம்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சூரியன் உடல்காரகன். சூரியனை வைத்து வரும் கஷ்டங்கள் எப்படி வகைப்படும்?

1. உடல் ஊனம் இருந்தால், ஆஸ்த்துமா போன்ற நோய்கள் இருந்தால் அது நிரந்தரக் கஷ்டம்.
2. சிக்கன் குனியா காய்ச்சல், பல்வலி, மூட்டுவலி போன்றவைகள் தற்காலிகக் கஷ்டங்கள்.

அதுபோல சூரியன் தந்தைக்குக் காரகன்.

1. இளம் வயதிலேயே தந்தை இல்லாமல் இருந்தால், அல்லது தந்தையால் பலன் எதுவும் இல்லை என்றால் அது
நிரந்தரக் கஷ்டம்.
2. தந்தையோடு மனஸ்தாபம், அல்லது தந்தையாரோடு விரோதப்போக்கு என்றால் அது தற்காலிகக் கஷ்டம்

வீடுகளும், அதனுடன் சம்பந்தப்பட்ட மனித உடற்பகுதிகளும்:

1 ஆம் வீடு (லக்கினம்): தலை, மூளை, தலைமுடி, தோற்றம் Head, Brain, Hair, Appearance

2 ஆம் வீடு: முகம், கழுத்து, தொண்டை, கண்கள், பற்கள், நாக்கு,  மூக்கு,தைராய்ட் சுரப்பி, குரல்வளை Face, Right Eye, Neck, Throat, Teeth, Tongue, Nose, Mouth, Speech, Nails

3 ஆம் வீடு: காது,நுரையீரல், கைகள், தோள்பட்டைகள், கைகள், நரம்பு மண்டலம் Ears, Right Ear, Lungs, Shoulders, Arms, Hands, Upper part of Eusophagus, Clavicles, Mobility

4 ஆம் வீடு: மார்பு, இதயம், உணவு மற்றும் மூச்சுக்குழல்கள் Breasts, Chest, Lungs, Heart, Diaphragm

5 ஆம் வீடு: வயிறு,, தண்டுவடம், முதுகின் மேற்பகுதி Upper Abdomen, Stomach, Liver, Gall Bladder, Spleen, Pancreas, Duodenum

6 ஆம் வீடு: குடற்பகுதிகள்,intestines, spleen, and nervous system Intestines, Digestion, Absorption, Appendix, Lowerback, Injuries, Wounds

7. 7ஆம் வீடு: ஜீரண உறுப்புக்கள், சிறுநீரகம், Urinary Tract, Kidneys, Sexual Organs, Uterus, Ovaries, Testicles, Semen, Lower Back

8. 8ஆம் வீடு:  தோல், புஜம் External Genital Organs, Anus, Perineum

9. 9ஆம் வீடு: இடுப்பு, தொடைப்பகுதிகள், Hips, Thighs, reproductive system, sexual organs, bowels, and excretory system
 
10. 10ஆம் வீடு:  கல்லீரல்  hips, thighs, liver, and sciatic nerve

11. 11ஆம் வீடு: முழங்கால், இணைப்பு எலும்புகள் மற்றும் skeletal system,calves, and circulatory system Left Ear, Calves, Ankles, Lower Legs

12. 12ஆம் வீடு: கால்கள், பாதம், Feet lymphatic system, and adipose tissue

உடல் ஆரோக்கியத்தில் சனியின் பங்கு! Saturn and Health

அதீதமான துரதிர்ஷ்டத்தை அளிப்பவர் சனீஷ்வரன். துன்பங்கள், தடைகள் ஆகியவற்றிற்கும் காரணகர்த்தா அவர்தான். மனிதனுக்குப் பலவிதமான நோய்களைக் கொடுப்பவர் அவர்தான். (Saturn is the chief planet in producing diseases)

6, 8, 12ஆம் வீடுகளுக்கு அவர்தான் காரகர் (authority) சிறிய, பெரிய நோய்களுக்கும் மருத்துவமனையில் படுப்பதற்கும் தொடர்பு உடைய வீடுகள் அவைகள் (6th, 8th and 12th houses are connected with short or long ailments and hospitalization)

சூரியனுக்குக் கடும் பகைவர் அவர். சூரியனுடன் அவர் சேர்ந்திருந்தாலும் அல்லது சூரியனுக்கு 7ஆம் வீட்டில் நேரடிப் பார்வையில் இருந்தாலும், அவர் ஜாதகனுக்கு சம்பந்தப்பட்ட வீட்டிற்கு உரிய (அதாவது சூரியன் இருக்கும் பகுதிக்குரிய உடற்பகுதியில்) ஊனத்தை அல்லது கடும் நோயை ஏற்படுத்துவார்.

உதாரணத்திற்குப் பன்னிரெண்டில் சூரியன் இருந்து, 6ஆம் வீட்டில் சனியிருந்தால், ஜாதகனுக்குப் பாதத்தில் ஊனம் அல்லது தீராத நோய் இருக்கும். தற்சமயம் இல்லை என்றாலும் சனி திசை சூரிய புத்தியில் அல்லது சூரிய தசை சனிபுத்தியில் உண்டாகும்.

ஏழில் சூரியன் இருந்து, சனியின் பார்வையும் அவர்மேல் இருந்தால், கிட்னியில் பிரச்சினைகள் உண்டாகும். அதுபோல அந்த வீட்டுடன் சம்பந்தப்பட்ட உடற்பகுதியிலும் பிரச்சினைகள் உண்டாகும். இப்படி ஒவ்வொரு வீட்டிற்கும் பார்த்த்துக்கொள்ளுங்கள்.

சூரியன் சனியின் நேரடி பார்வையில் இருக்கக்கூடாது. இருந்தால் சூரியன் இருக்கும் வீடும் அது சம்பந்தப்பட்ட உடலின் பகுதியும் பாதிக்கப்படும்

அதுபோல சூரியனுடன் சனி அல்லது ராகு கூட்டணி போட்டிருந்தாலும் உடற்கோளாறுகள் உண்டாகும்.

நல்ல ஆரோக்கியமான உடம்பிற்கு சூரியன் ஜாதகத்தில் நீசமாகாமலும், தீய கிரகங்களின் கூட்டணி மற்றும் பார்வை பெறாமலும் இருக்க வேண்டும்!

சூரியன் ஒரு ராசிக்கு ஒரு மாதம் வீதம் 12 ராசிகளையும் கடந்து தனது சுற்றை ஆண்டுக்கு ஒருமுறை நிறைவு செய்யும். சித்திரை ஒன்றாம் தேதி (தமிழ்வருடப்பிறப்பு அன்று) மேஷ ராசியில் அடியெடுத்துவைக்கும் சூரியன் ஒரு மாதகாலம் அங்கே இருந்து விட்டு வைகாசி மாதம் முதற் தேதியில் ரிஷப ராசிக்கு வரும்

1.சித்திரை மாதத்தில் - மேஷம்
2.வைகாசி மாதத்தில் - ரிஷபம்
3.ஆனி மாதத்தில் - மிதுனம்
4.ஆடி மாதத்தில் - கடகம்
5.ஆவணி மாதத்தில் - சிம்மம்
6.புரட்டாசி மாதத்தில் - கன்னி
7.ஐப்பசி மாதத்தில் - துலாம்
8.கார்த்திகை மாதத்தில் - விருச்சிகம்
9.மார்கழி மாதத்தில் - தனுசு
10.தை மாதத்தில் - மகரம்
11.மாசி மாதத்தில் - கும்பம்
12.பங்குனி மாதத்தில் - மீனம்

இப்படிச் சூரியன் வலம் வரும்போது, தனது சுயவர்க்கத்தில் எந்த இடத்தில் பரல்கள் மிகவும் குறைவாக உள்ளதோ, அந்த இடத்தில் இருக்கும் ஒரு மாத காலத்தில், அதற்குள்ளான காலத்தில், தற்காலிக நோய்களைக் கொடுப்பான். காய்ச்சல், சளி, உடல் அசதி, உடல் வலி, தூக்கமின்மை என்பது போன்று அது எந்த வடிவில் வேண்டுமென்றாலும் வரும்.

அந்தக் காலகட்டத்தில் ஜாதகனுக்கு தற்காலிக உடல் உபாதைகள் ஏற்படும். அது காய்ச்சலில் இருந்து constipationவரை எதுவாக வேண்டுமென்றாலும் இருக்கலாம்.

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++

20.11.12

Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ!


Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ!

தொடர் பாடம். பகுதி ஒன்று!

பார்த்தால் பசி தீரும் என்னும் திரைப்படத்தில் கவியரசர் கண்ணதாசன் ஒரு பாடலை எழுதினார். அந்தக் காலகட்டத்தில் அது மிகவும் பிரபலமான பாடல்
திருமதி. பி .சுசிலா அம்மையார் பாடிய அந்தப் பாடலின் வரிகளைக் கீழே கொடுத்துள்ளேன்.
-------------------------------------------------------

யாருக்கு மாப்பிள்ளை யாரோ
அவர் எங்கே பிறந்திருக்கின்றாரோ?
எந்தப் பார்வை பட்டு சொந்த உள்ளம் கேட்டு
எங்கே மயங்கி நின்றாரோ?

(யாருக்கு மாப்பிள்ளை)

கட்டவிழ்ந்து கண் மயங்குவாரோ
அதில் கை கலந்து காதல் புரிவாரோ
தொட்டுத் தொட்டுப் பேசி மகிழ்வாரோ
இல்லை தூர நின்று ஜாடை புரிவாரோ

எந்தப் பார்வை பட்டு சொந்த உள்ளம் கேட்டு
எங்கே மயங்கி நின்றாரோ
யாருக்கு மாப்பிள்ளை யாரோ
அவர் எங்கே பிறந்திருக்கின்றாரோ

ஊரறிய மாலையிடுவாரோ
இல்லை ஓடி விட எண்ணி விடுவாரோ
சீர் வரிசை தேடி வருவாரோ
இல்லை சின்ன இடை எண்ணி வருவாரோ

எந்தப் பார்வை பட்டு சொந்த உள்ளம் கேட்டு
எங்கே மயங்கி நின்றாரோ
யாருக்கு மாப்பிள்ளை யாரோ
அவர் எங்கே பிறந்திருக்கின்றாரோ?

-------------------------------------------------------
சின்ன இடை எண்ணி வருகிறவர்கள்தான் இன்று அதிகம். சீர்வரிசைகளை எல்லாம் வீட்டில் உள்ள பெரிய டிக்கெட்டுக்கள்தான் தேடிக் கொண்டிருக்கும்.

ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்தை உடைய ஜாதகரின் மனைவி எந்த நட்சத்திரத்தை உடையவராக இருப்பார் என்று சொல்ல முடியுமா? முடியும். அதற்கான ஃபார்முலா ஒன்று உள்ளது. அதை இந்தத் தொடரின் இறுதியில் கொடுக்க உள்ளேன். பொறுமையாகப் படித்துக்கொண்டு வாருங்கள்

ஒரு திருமண பந்தத்தில், பெண்ணிற்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்பெற்றுள்ளது. பெண்ணின் நட்சத்திரத்தை வைத்து, அதற்குப் பொருத்தமான நட்சத்திரத்தைத் தேரிவு  செய்வதுதான் வழக்கத்தில் உள்ளது. அதே பொருத்தம் இரு பாலருக்குமே பொதுவானதுதான். அதை மனதில் வையுங்கள்.

நட்சத்திரப் பொருத்தம் மட்டும் போதுமா?

மற்ற பொருத்தங்கள் முக்கியமில்லையா?

தசா சந்திப்பு இன்றி இருப்பது. தோஷ்ங்கள் இல்லாமல் இருப்பது, இருந்தால் இருவருக்கும் இருப்பதுப்பொன்ற மற்ற விஷயங்களும் உள்ளன. எல்லாவற்றையும் ஒன்றாக  ஊற்றினால் சாப்பிடமுடியாது. முதலில் பருப்பு, நெய், அடுத்து சாம்பார், அடுத்து வற்றல்குழம்பு, அடுத்து ரசம், அடுத்து தயிர், அடுத்து பாயாசம் என்று வரிசையாகப் பார்ப்போம் (சாப்பிடுவோம்) எல்லாவற்றையும் தட்டில் ஒன்றாக ஊற்றி, கலக்கி அடியுங்கள் என்றால் எப்படிச் சாப்பிட முடியும்?

ஆகவே முதலில் நட்சத்திரப் பொருத்தத்தை மட்டும் தொடர்ந்து பார்ப்போம். பிறகு மற்ற கதைகளுக்கு வருவோம்!

   “சார். திருமணம் ஆக வேண்டியவர்கள் மட்டும் இதைப் பார்த்தால் போதுமல்லவா?”

   “திருமணம் ஆனவர்களும் பார்க்கலாம். பொருத்தமில்லாத தேவதையைத்தான் மணந்து கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்து அவளை அனுசரித்துக்கொண்டு  போகலாம் இல்லையா?”

-----------------------------------------------------
1.அஸ்விணி நட்சத்திரம்

இந்த நட்சத்திரத்திற்கு
1. பரணி
2.கார்த்திகை
3 ரோஹிணி
4. புனர்பூசம்
5, பூசம்
6. பூரம்
7. உத்திரம்
8. அனுஷம்
9. பூராடம்
10. உத்திராடம்
11. திருவோணம்
12. சதயம்
13. உத்திரட்டாதி
ஆகிய 13 நட்சத்திரங்களும் சிறப்பாகப் பொருந்தக்கூடிய் நட்சத்திரங்களாகும்.

இதில் உத்திரம் 2 ,3 & 4ஆம் பாதங்கள் கன்னி ராசிக்கு உரியதாகும். ஜோதிடர்கள் மேஷத்திற்கு ஆறாம் இடம் கன்னி வீடு. கன்னிக்கு எட்டாம் வீடு மேஷ வீடு. அஷ்டம  சஷ்டம நிலைப்பாடு (6/8 position to each rasi)  வேண்டாம் என்பார்கள். ஆகவே அதை விலக்கிவிடுவது நல்லது.

அதே நிலைப்பாடு அனுஷ நட்சத்திற்கும் உண்டு. அது விருச்சிக ராசிக்கு உரிய நட்சத்திரம் ஆகும். மேஷத்திற்கு விருச்சிகம் எட்டாம் வீடு. விருச்சிகத்திற்கு மேஷம் ஆறாம்  வீடு. (6/8 position to each rasi)  வேண்டாம் என்பார்கள். ஆகவே அதையும் விலக்கிவிடுவது நல்லது.

அதே நிலைப்பாடு உத்திரட்டாதி நட்சத்திற்கும் உண்டு. அது மீன ராசிக்கு உரிய நட்சத்திரம் ஆகும். மேஷத்திற்கு மீனம் பன்னிரெண்டாம் வீடு. மீனத்திற்கு மேஷம்  இரண்டாம் வீடு. (12/1 position to each rasi)  வேண்டாம் என்பார்கள். ஆகவே அதையும் விலக்கிவிடுவது நல்லது.

ஆக மொத்தத்தில் 10 நட்சத்திரங்கள் மட்டுமே சிறப்பாகத் தேரும்.

அஸ்விணிக்கு, மகம், மூலம், ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகிய 5 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களாகும். அவற்றை விலக்கி விடுவது  நல்லது.

பெண்ணிற்கும், பையனுக்கும் அஸ்விணி ஒரே நட்சத்திரமாக இருந்தால், ஏக நட்சத்திரப் பொருத்தம் உண்டு. ஆகவே அதைக் கணக்கில் எடுத்துக்கொள்ளலாம்.

மிருகசீரிஷம் 3 & 4ஆம் பாதம் (மிதுன ராசி)
திருவாதிரை (மிதுன ராசி)
சித்திரை (1 & 2ஆம் பாதம் கன்னி ராசி)
ஆகிய 3 நட்சத்திரங்களும் (பாதங்களைக் கவனிக்க) பொருந்தாது.

கார்த்திகை
மிருகசீரிஷம் 1 & 2ஆம் பாதம் (ரிஷப ராசி)
புனர்பூசம் 1, 2 & 3ஆம் பாதங்கள் (மிதுன ராசி)
உத்திரம் 2, 3 & 4ஆம் பாதம் (கன்னி ராசி)
ஹஸ்தம் (கன்னி ராசி)
சித்திரை 3 & 4ஆம் பாதம் (துலாம் ராசி)
சுவாதி (துலாம் ராசி)
விசாகம்
அவிட்டம்
பூரட்டாதி
ஆகியவை மத்திம பொருத்தம் உடையவை (அதாவது average)
----------------------------------------------------------------------------
காதல் திருமணங்களுக்கு இந்தப் பொருத்தம் பார்க்க வேண்டுமா?

எதற்காகப் பார்க்க வேண்டும்? 3 அல்லது 4 வருடங்கள் உருகி உருகிக் காதலித்துவிட்டு, மகாபலிபுரம் போன்ற் இடங்களில் காட்டேஜ் போட்டு ஒருவருடன் ஒருவர்  முழுமையாகக் கலந்து விட்டு, இந்தக் கருமத்தை எல்லாம் எதற்காகப் பார்க்க வேண்டும்? இதைப் பார்த்துவிட்டு, பொருத்தம் இல்லை என்று அவனை விட்டுவிட  முடியுமா? ருசி கண்ட பூனை சும்மா விடுமா? ஆகவே காதலர்கள், காதல் தோற்கக்கூடாது என்ற உலகப் பொது மறையின்ப்டி திருமணம் செய்துகொள்ள வேண்டியதுதான்.

திருமணத்திற்குப் பிறகு காதலன் ஒத்துவந்தால் சரி! இல்லை என்றால் குடும்ப நீதி மன்றம் உள்ளது. மகளிர் காவல் நிலையங்களும் உள்ளன! அதைவிட மேலாக இருவருக்கும் வேலை, கை நிறையச் சம்பளம், உலகக் கண்ணோட்டம், பொருளாதார சுதந்திரம் என்று எல்லா ஆய்தங்களும் உள்ளன ஆகவே அவர்கள் இதை எல்லாம் பார்க்க வேண்டாம்  அவர்களுக்கு இதிலிருந்து முழுமையான விதிவிலக்கு உண்டு:-)))) அவர்களுக்கான ஜாதக அமைப்புக்களை விரிவாக, ஒரு தொடராகப் பின்னால் அலசுவோம்!!!!

(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++

19.11.12

Astrology பழம் எப்போது (டா) கிடைக்கும்?


Astrology பழம் எப்போது (டா) கிடைக்கும்?
அலசல் பாடம்!

வாரியார் சுவாமிகள் அடிக்கடி சொல்வார். “உருவத்தால் உயர்ந்த மரங்களேயாயினும், பருவத்தால் அன்றிப் பழுக்காது”

அதாவது பழுக்கும் காலம் வந்தால்தான், பூக்கும், காய்க்கும், பழுக்கும்.

படிப்பு, வேலை, திருமணம், குழந்தை பாக்கியம், வீடு வாங்குதல் போன்ற முக்கியமான செயல்கள், ஜாதகப்படி, அதற்கு உரிய நேரம் வரும்போதுதான் நடக்கும். ஜாதகன் தானாக என்ன முக்கினாலும், அல்லது முயற்சி செய்தாலும் நடக்காது!

அதை மேலோட்டமாக இன்று பார்ப்போம்
--------------------------------------------------------
என்ன முயற்சி செய்தும் ஒரு ஜாதகனுக்கு உரிய வேலை கிடைக்கவில்லை. ஜாதகப்படி காரணம் என்ன? எப்போது கிடைக்கும்?

பல இளைஞர்களை வாட்டும் முக்கியமான நிலைப்பாடு (சூழல்) இது.

இன்று அதை அலசுவோம். அதாவது அந்த நிலைமைக்கான காரணங்களை அலசுவோம்
--------------------------------------------------------
கீழே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்


சிம்ம லக்கினம். லக்கினத்தில் கேது.
விரையாதிபதி - 12ஆம் இடத்து அதிபதி சந்திரன். 7ல் இருந்து லக்கினத்தைத் தன் பார்வையில் வைத்திருக்கிறான்.
லக்கினாதிபதி சூரியன் நீசம்.இந்தக் காரணஙகளால் லக்கினாதிபதியும், லக்கினமும் வலுவாக இல்லை.
நான் எப்போதும் சொல்வதைப் போல, லக்கினம் வலுவாக இல்லை என்றால் ஜாதகன் கஷ்டப்பட நேரிடும். உரிய நேரத்தில் எதுவும் கிடைக்காது. அல்லது அமையாது.

தொழில்காரகன் சனி நீசம் (He is the authority for work)
அத்துடன் அவர் தொழில் மற்றும் வேலை ஸ்தானத்திற்கு, அதாவது அந்த இடத்திற்குப் பன்னிரெண்டில் இருக்கிறார்.
அது நல்ல நிலைமை இல்லை.

ஜாதகனுக்கு அவனுடைய 38ஆவ்து வயதுவரை சனி மகா திசை.
தொழில் ஸ்தானத்து அதிபதி சுக்கிரன் நீசம்,
அவனுக்கும் தசாநாதனுக்கும் உள்ள உறவு 6/8 positionல் உள்ளது.

கிரக நிலைகளும், தசா நிலைமையும் ஜாதகனுக்கு ஆதரவாக இல்லை. அதனால் உரிய வேலையின்றி ஜாதகன் அல்லல்பட நேர்ந்த்து.

அடுத்து வந்த புதன் மகா திசை ஜாதகனுக்குக் கை கொடுத்தது. ஜாதகன் ஒரு நல்ல வேலையில் சேர்ந்தான்.

புதன் உச்சம் பெற்று இருப்பதுடன், 10ஆம் அதிபதி சுக்கிரனுடன் கூட்டாகச் சேர்ந்து லக்கினத்திற்கு இரண்டாம் வீட்டில் இருப்பதைக் கவனியுங்கள்.

இப்படித்தான் ஒரு ஜாதகத்தை அலச வேண்டும்
அன்புடன்
வாத்தியார்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!