மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

4.12.12

Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 4

 Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 4

ஜோதிடத் தொடர் - பகுதி 4

இதற்கு முன் பகுதியைப் படித்திராதவர்கள் அதைப் படித்துவிட்டு வரும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்
------------------------------------------------------------------------------------------------
4. கார்த்திகை நட்சத்திரம் 2, 3, மற்றும் 4ஆம் பாதங்கள் (ரிஷப ராசி)

ஒரு திருமண பந்தத்தில், பெண்ணிற்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்பெற்றுள்ளது. பெண்ணின் நட்சத்திரத்தை வைத்து, அதற்குப் பொருத்தமான நட்சத்திரத்தைத் தேரிவு செய்வதுதான் வழக்கத்தில் உள்ளது. மீண்டும் ஒருமுறை அதை வலியுறுத்திச் சொல்கிறேன். அதே பொருத்தம் இரு பாலருக்குமே பொதுவானதுதான். அதையும் மனதில் வையுங்கள்.

இது சூரியனின் நட்சத்திரம். இந்த நட்சத்திரத்திற்குக் குறிப்பிட்டுள்ள் பாதங்களுக்கு,

1. அஸ்விணி
2. மிருகசீரிஷம்
3. பூசம்
4. ஆயில்யம்
5. மகம்
6 ஹஸ்தம்
7. சுவாதி
8. அனுஷம்
9. கேட்டை
10. மூலம்
11. சதயம்
12. ரேவதி
ஆகிய 12 நட்சத்திரங்களும் சிறப்பாகப் பொருந்தக்கூடிய் நட்சத்திரங்களாகும்.

இதில் சுவாதி துலாம் ராசிக்கு உரியதாகும். ஜோதிடர்கள் ரிஷபத்திற்கு ஆறாம் இடம் துலாம் வீடு. துலாமிற்கு எட்டாம் வீடு ரிஷப வீடு. அஷ்டம சஷ்டம
நிலைப்பாடு (6/8 position to each rasi)  வேண்டாம் என்பார்கள். ஆகவே அதை விலக்கிவிடுவது நல்லது.

அதே நிலைப்பாடு மூல நட்சத்திரத்திர்ற்கு உண்டு. அது தனுசு ராசிக்கு உரிய நட்சத்திரம் ஆகும். ரிஷபத்திற்குத் தனுசு எட்டாம் வீடு. தனுசுவிற்கு ரிஷபம்
ஆறாம் வீடு. (8/6 position to each rasi)  வேண்டாம் என்பார்கள். ஆகவே அதையும் விலக்கிவிடுவது நல்லது.

அதே நிலைப்பாடு அஸ்விணி நட்சத்திற்கும் உண்டு. அது மேஷ ராசிக்கு உரிய நட்சத்திரம் ஆகும். ரிஷபத்திற்கு மேஷம் பன்னிரெண்டாம் வீடு. மேஷத்திற்கு
ரிஷபம் இரண்டாம் வீடு. (12/1 position to each rasi)  வேண்டாம் என்பார்கள். ஆகவே அதையும் விலக்கிவிடுவது நல்லது.

ஆக மொத்தத்தில் 9 நட்சத்திரங்கள் மட்டுமே சிறப்பாகத் தேரும்.

புனர்பூசம், உத்திரம், விசாகம், உத்திராடம், பூரட்டாதி ஆகிய 5 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களாகும். அவற்றை விலக்கி விடுவது  நல்லது.

பெண்ணிற்கும், பையனுக்கும் கார்த்திகை ஒரே நட்சத்திரமாக இருந்தால், ஏக நட்சத்திரப் பொருத்தம் இந்த நட்சத்திரத்திற்கு மத்திம பொருத்தம் ஆகும் அதாவது  சராசரிப் பொருத்தம். ஒன்றும் தேராவிட்டால் இதைத் தெரிவு செய்யலாம்!

சித்திரை, பூராடம் ஆகிய இரண்டு நட்சத்திரங்களும் பொருந்தாது!

மிருகசீரிஷம் 1 & 2ஆம் பாதங்கள் உத்தமம் பொருந்தும்
மிருகசீரிஷம் 3 & 4ஆம் பாதங்கள் (மிதுன ராசி) பொருந்தாது. மத்திம பொருத்தம் ஆகும் அதாவது சராசரிப் பொருத்தம். ஒன்றும் தேறாவிட்டால் இதைத் தெரிவு  செய்யலாம்!

1. பரணி
2. திருவாதிரை
3. பூரம்
4. திருவோணம்
5. அவிட்டம்
6. உத்திரட்டாதி
ஆகியவை மத்திம பொருத்தம் உடையவை. அதாவது சராசரி - average பொருத்தம் மத்திம பொருத்தம் உடையவை. சிறப்பான பொருத்தம் கிடைக்காமல் அல்லாடுபவர்கள், இந்த நட்சத்திரங்களில் 8ல் ஒன்றைத் தெரிவு செய்யலாம்
-------------------------------------------------------------------------------
காதல் திருமணங்களுக்கு இந்தப் பொருத்தம் பார்க்க வேண்டுமா?
தேவையில்லை. பலமுறை சொல்லியுள்ளேன். விவரம் முன் பதிவில் உள்ளது

இன்றையப் பாடம் இத்துடன் நிறைவுறுகிறது!

(தொடரும்)
அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++

12 comments:

KJ said...

Good morning sir. Thanks for the lesson.

Udhaya Kumar said...

குருவிற்கு வணக்கம்
நன்றி.

ananth said...

தாங்கள் நகைச்சுவை துணுக்குகளை பதிவிட்டு வெகு நாட்களாகி விட்டன. (திடீரென்று சீரியஸாகி விட்டீர்களா) அடுத்து அதை பதிவிடுங்கள்.

geetha lakshmi said...

வணக்கம் ஐயா,இன்றைய பாடம் எழிமையாகவும்,புரியும் படியும் உள்ளது. நன்றி ஐயா.

ananth said...

//காதல் திருமணங்களுக்கு இந்தப் பொருத்தம் பார்க்க வேண்டுமா?//

இதற்கு மனப் பொருத்தம் ஒன்றே போதுமே. உனக்கும் எனக்கும்தான் பொருத்தம்; இதில் எத்தனை கண்களுக்கு வருத்தம்; நம் இருவருக்கும் உள்ள நெருக்கம்; இனி யாருக்கு இங்கே கிடைக்கும் என்று பாடி மகிழலாம்.

அய்யர் said...

காதல் திருமணத்திற்கு
கட்டாயம் வேறு ஒரு பொருத்தம் பார்க்கனும்

அதை அப்புறம்
அன்புள்ள வாத்தியாரே சொல்லுவார்

இப்போ சுழலவிடுகிறோம் வாத்தியாரின்
இந்த பாடலினை (சுவைக்க ரசிக்க)

என்ன பொருத்தம் நமக்குள் இந்தப் பொருத்தம்ஆஹா..
காதல் என்னும் நாடகத்தில் கல்யாணம் சுபமே..

கல்யாணப் பந்தல் கட்டி போடட்டும் மேடை
கட்டிக் கொண்டாடட்டும் வண்ணப் பட்டாடை

நாட்டியமாடட்டும் நாடகப் பாவை
நானதை பார்க்கட்டும் ஆனந்தப் பாவை
பார்க்கட்டுமா.. கேட்கட்டுமா..

சம்சாரக் கப்பல் கொஞ்சம் போகட்டும் நேரே
தந்தையும் தாய் என்று ஆன பின்னாலே

போராட்டம் தீர்ப்பது பிள்ளையின் வேலை
பேரனைச் சுமப்பது பாட்டனின் சேவை

SP.VR. SUBBAIYA said...

/////Blogger KJ said...
Good morning sir. Thanks for the lesson.////

நல்லது. நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

////Blogger Udhaya Kumar said...
குருவிற்கு வணக்கம்
நன்றி.////

உங்களின் வணக்கத்திற்கும் வருகைப் பதிவிற்கும் நன்றி உதயகுமார்!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger ananth said...
தாங்கள் நகைச்சுவை துணுக்குகளை பதிவிட்டு வெகு நாட்களாகி விட்டன. (திடீரென்று சீரியஸாகி விட்டீர்களா) அடுத்து அதை பதிவிடுங்கள்./////

விதித்தபடிதான் வாழ்க்கை நடக்கும் என்று தெரிந்ததால், நான் எப்போதுமே ஜாலியான ஆசாமிதான். எதிலும் Take it easy policyதான்!
உங்கள் விருப்பம் நிறைவேற்றப்படும்! வாழ்க உங்களின் நகைச்சுவை உணர்வு!

SP.VR. SUBBAIYA said...

////Blogger geetha lakshmi said...
வணக்கம் ஐயா,இன்றைய பாடம் எளிமையாகவும்,புரியும் படியும் உள்ளது. நன்றி ஐயா.////

உங்களின் பாராட்டிற்கு நன்றி சகோதரி!!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger ananth said...
//காதல் திருமணங்களுக்கு இந்தப் பொருத்தம் பார்க்க வேண்டுமா?//
இதற்கு மனப் பொருத்தம் ஒன்றே போதுமே. உனக்கும் எனக்கும்தான் பொருத்தம்; இதில் எத்தனை கண்களுக்கு வருத்தம்; நம் இருவருக்கும் உள்ள நெருக்கம்; இனி யாருக்கு இங்கே கிடைக்கும் என்று பாடி மகிழலாம்./////

நெருக்கம் கிடைத்தால் மகிழ்ச்சிதான்! வாழ்க காதல்! வாழ்க காதல்! வாழ்க காதல்!

SP.VR. SUBBAIYA said...

////Blogger அய்யர் said...
காதல் திருமணத்திற்கு
கட்டாயம் வேறு ஒரு பொருத்தம் பார்க்கனும்
அதை அப்புறம்
அன்புள்ள வாத்தியாரே சொல்லுவார்
இப்போ சுழலவிடுகிறோம் வாத்தியாரின்
இந்த பாடலினை (சுவைக்க ரசிக்க)
என்ன பொருத்தம் நமக்குள் இந்தப் பொருத்தம்ஆஹா..
காதல் என்னும் நாடகத்தில் கல்யாணம் சுபமே..
கல்யாணப் பந்தல் கட்டி போடட்டும் மேடை
கட்டிக் கொண்டாடட்டும் வண்ணப் பட்டாடை
நாட்டியமாடட்டும் நாடகப் பாவை
நானதை பார்க்கட்டும் ஆனந்தப் பாவை
பார்க்கட்டுமா.. கேட்கட்டுமா..
சம்சாரக் கப்பல் கொஞ்சம் போகட்டும் நேரே
தந்தையும் தாய் என்று ஆன பின்னாலே
போராட்டம் தீர்ப்பது பிள்ளையின் வேலை
பேரனைச் சுமப்பது பாட்டனின் சேவை////

பாடலைச் சுழ்ல விடுவது விஸ்வநாதனின் வேலையா? நன்றி!