மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

21.12.12

Devotional: படிகளுக்கும் பாட்டிற்கும் என்னடா சம்பந்தம்?


Devotional: படிகளுக்கும் பாட்டிற்கும் என்னடா சம்பந்தம்?

பக்தி மலர்

படிகளுக்கும் பாட்டிற்கும் என்னடா சம்பந்தம்?’ என்று கேட்டால் சம்பந்தம் இருக்கிறது என்கிறது சீர்காழியாரின் பாட்டு. நம் வீட்டுப் படிகளைப் பற்றி அவர் சொல்லவில்லை.

முருகப் பெருமான் குடியிருக்கும் திருத்தணி மலைப் படிகளைப் பற்றி அவர் அப்படிச் சொல்கிறார். அவர் சிறந்த முருக பக்தர். அவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும். நம்பிக்கை கொள்வோம். பக்தி மார்க்கத்தின் முதல்படி நம்பிக்கைதான். அவர் பாடியுள்ள 'தணிகை மலைப் படிகளெல்லாம்' என்ற பல்லவியுடன் துவங்கும் பாடலைப் பக்திப்  பரவசத்துடன் இன்று வலையேற்றுகிறேன். அனைவரும் கேட்டு மகிழுங்கள்

அன்புடன்
வாத்தியார்

-------------------------------------------------------------------------
தணிகை மலை படிகளெல்லாம் திருப்புகழ் பாடும் - திருத்
தணிகை மலை படிகளெல்லாம் திருப்புகழ் பாடும் -அங்கே
தனை மறந்து மயில்களெல்லாம் நாட்டியமாடும்

(தணிகை மலை)

அங்கே தனை மறந்து மயில்களெல்லாம் நாட்டியமாடும்

(தணிகை மலை)

கனிவுடனே முருகவேளும் சிரித்திடும் காட்சி

கனிவுடனே முருகவேளும் சிரித்திடும் காட்சி -அதைக்
காண்பவர்க்கு எந்த நாளும் இல்லையே வீழ்ச்சி

(திருத்தணிகை ... )

விளங்கிவரும் சேவற்கொடி விண்ணதில் ஆடும் -அது
வேல்முருகன் அடியவர்தம் வினையினைச் சாடும்

குலுங்கிவரும் தென்றலங்கே ...

குலுங்கிவரும் தென்றலங்கே இசை முழக்கும்
திருக்குமரன் பேர் சொல்லிச்சொல்லி நமை மயக்கும்

(தணிகை மலை)

அங்கே தனை மறந்து மயில்களெல்லாம் நாட்டியமாடும்

(தணிகை மலை).   


பாடியவர்: 'பத்மஸ்ரீ' சீர்காழி கோவிந்தராஜன்++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

15 comments:

raja said...

காலையில் உங்கள் இறை பதிவில் மக்ழிதேன்.....

ஐயா உங்களுடை பதிலை கண்டு.... கீழே தெளிவாக கொடுத்துள்ளேன்... எனக்கு பதில் தறுமாறு வேண்டுகிறேன்.


2ம் அதிபதி செவ்வாய் சனிவுடன் 12ல் சுய பரல் செவ்வாய்க்கு 3 சனிக்கு 2. 12ல்
24 பரல், 2ல் 34 பரல் யோககாரகன் சனியின் 3ம் பார்வை 2ல்......

தனகாரகன் குரு(6 பரல்)லக்னத்தில்(துலாம்)10ம் அதிபதி சந்திரனுடன்(6 பரல்). 1ல்
29 பரல்....


இவர்களுக்கும் இத்த பங்கு சந்தை வணிகம் பொருந்துமா ஐயா...

ஐயா மேலும் பரல்கள் போடுவதை உங்களுடை ஆசியினாலும் எனது குரு சற்குருவின்
ஆசியினாலும் கற்று கொண்டு மகிழ்தேன்......

kmr.krishnan said...

நம்மை உயர்த்தி விட்டு விட்டு தாஙகள் அதே இடத்தில் இருப்பவை படிகளும் ஏணிகளும், ஆசிரியர்களும் தான்.படி என்ற சொல் நம்மை படிக்கவும் சொல்கிறது.மேலும் 'பணிந்து போ' என்றும் சொல்கிறது.'அடியாத மாடு படியாது!'படி நம்மை அளந்து போடச் சொல்கிறது. 'ஆற்றில் போட்டாலும் அளந்து போடு!'படி என்பது 'பேட்டா' என்றும் பொருள் படும். 'பஞ்சப்படி!'
'படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே'என்பார் ஆழ்வார்.
சபரிமலையில் 18 படிகளும் புனிதமானதாகக் கருதப்படுகின்றன.விர‌தம் இல்லாதவர்கள், இருமுடி இல்லாதவர்கள் பதினெட்டு படிகளைக் கடக்க முடியாது.

சீர்காழியின் பாடல்களை எழுதிக்கொடுத்தது கவிஞர் உளுந்தூர்பேட்டை சண்முகம்.அவர் சீர்காழியின் மைத்துனர்தான். சொற்களை அழகுடன் கோர்ப்பதில் வல்லவர் சண்முகம் . அவர் புகழ் ஏனோ பலருக்கும் தெரியவில்லை. அதிகம் சினிமா பக்கம் போகாததுதான் காரணமோ?

பாடலுக்கு மிக்க நன்றி அய்யா!

SP.VR. SUBBAIYA said...

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com

SP.VR. SUBBAIYA said...

/////Blogger raja said...
காலையில் உங்கள் இறை பதிவில் மக்ழிதேன்.....
ஐயா உங்களுடை பதிலை கண்டு.... கீழே தெளிவாக கொடுத்துள்ளேன்... எனக்கு பதில் தறுமாறு வேண்டுகிறேன்.
2ம் அதிபதி செவ்வாய் சனிவுடன் 12ல் சுய பரல் செவ்வாய்க்கு 3 சனிக்கு 2. 12ல்
24 பரல், 2ல் 34 பரல் யோககாரகன் சனியின் 3ம் பார்வை 2ல்......
தனகாரகன் குரு(6 பரல்)லக்னத்தில்(துலாம்)10ம் அதிபதி சந்திரனுடன்(6 பரல்). 1ல்
29 பரல்....
இவர்களுக்கும் இத்த பங்கு சந்தை வணிகம் பொருந்துமா ஐயா...
ஐயா மேலும் பரல்கள் போடுவதை உங்களுடை ஆசியினாலும் எனது குரு சற்குருவின்
ஆசியினாலும் கற்று கொண்டு மகிழ்தேன்......//////

இரண்டாம அதிபதி மருத்துவமனையில் இருக்கிறார் (12ல்)
தனகாரகன் குரு மருத்துவமனைப் பக்கம் எட்டிக்கூடப் பார்க்கவில்லை (1/12 நிலையில்)
ஆகவே நீங்கள் பங்குச் சந்தைப் பக்கம் எட்டிப் பார்க்க வேண்டாம்
அத்துடன் உங்கள் ஜாதகத்தை வைத்துக் கேள்விகளைப் பின்னூட்டத்தில் கேட்க வேண்டாம். அவ்வாறு கேள்விகளுடன் வரும் பின்னூட்டங்கள் பதிவில் வெளியாகாது. பதிவிற்கு சம்பந்தம் இல்லாத மேட்டர்கள் எல்லாம் மின்னஞ்சல்கள் மூலம் மட்டுமே கேட்க வேண்டும்.
வகுப்பறைக்கு கேட் வழியாக வாருங்கள். சுவர் ஏறிக்குத்தித்து வரக்கூடாது!

SP.VR. SUBBAIYA said...

////Blogger kmr.krishnan said...
நம்மை உயர்த்தி விட்டு விட்டு தாஙகள் அதே இடத்தில் இருப்பவை படிகளும் ஏணிகளும், ஆசிரியர்களும் தான்.படி என்ற சொல் நம்மை படிக்கவும் சொல்கிறது.மேலும் 'பணிந்து போ' என்றும் சொல்கிறது.'அடியாத மாடு படியாது!'படி நம்மை அளந்து போடச் சொல்கிறது. 'ஆற்றில் போட்டாலும் அளந்து போடு!'படி என்பது 'பேட்டா' என்றும் பொருள் படும். 'பஞ்சப்படி!'
'படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே'என்பார் ஆழ்வார்.
சபரிமலையில் 18 படிகளும் புனிதமானதாகக் கருதப்படுகின்றன.விர‌தம் இல்லாதவர்கள், இருமுடி இல்லாதவர்கள் பதினெட்டு படிகளைக் கடக்க முடியாது.
சீர்காழியின் பாடல்களை எழுதிக்கொடுத்தது கவிஞர் உளுந்தூர்பேட்டை சண்முகம்.அவர் சீர்காழியின் மைத்துனர்தான். சொற்களை அழகுடன் கோர்ப்பதில் வல்லவர் சண்முகம் . அவர் புகழ் ஏனோ பலருக்கும் தெரியவில்லை. அதிகம் சினிமா பக்கம் போகாததுதான் காரணமோ?
பாடலுக்கு மிக்க நன்றி அய்யா!////

கருத்துக்களுடன் கூடிய உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

ஜி ஆலாசியம் said...

அருமையானதொறுப் பாடல் அதுவும்
ஆறுமுகனைப் புகழ்ந்து வரும்
இனிமையானப் பாடல் இதற்கு
ஈடு இணையில்லை இந்த
உலகிலே இருந்தும் இப்பாடல்
ஊக்கம் அளித்தது என்னை
எளிமையானப் பாடல் ஒன்றை
ஏற்றமுடன் நான் எழுத....
ஐயனை என்றும் பாட அவனருள வேண்டும்
ஒப்பில்லா மணியவன் நாம்
ஓதும் மறை பொருள்
ஒளவைக்கு அருளியவன் நமக்கும் அருளட்டும்
அஃதே நமது வேண்டுதலும்..

சீர்காழியாருக்கு ஒரு சிறப்பு பாடல்!

வெங்கலக்குரலால் வெளியெலாம் பக்திப் பரப்பிய
தங்க மகன் சீர்காழி -இவரென்றும்
மங்காப்புகழ் கொண்ட படைப்பு; என்னே
அங்கமெல்லாம் நீறுபூத்த அழகியச்சிரிப்பு!
************************************************************

ஜி ஆலாசியம் said...

எல்லோரும் இன்பம் பெற இதோ எனதுப் பாடல்!

தணிகைமலை உறை தமிழ்க் குமரா
இனிமையென்னும் சொல்லுக்குப் நீ பொருளல்லவா
பனித்தலையன் நெற்றிக்கண்ணில் பூத்த நெருப்பல்லவா
கனிந்தமுகம் காட்டிடுவாய் மறைத்தலைவா!

ஞானத்தின் உதயமே தேவர்களின் இதயமாக
ஞாலம் போற்றும் தேவாதி தேவனே
நாடு போற்றும் நல்வேதமே -நாங்கள்
நாடி வந்தோம் உந்தன் பாதமே!

கொள்ளை கொண்டாய் குமரா என்மனம்
கொள்ளைக் கொண்டாய் அருட்குமரா!
எல்லையில்லாக் கருணையின் மறுவுருவே -உந்தன்
பிள்ளையெனை பேறுசெய்வாய் இறைவா!

கள்ளமில்லா மனம்வேண்டும் கந்தா -எந்தன்
உள்ளமெல்லாம் நிறைத்திடுவாய் நித்யக் குமரா
பொன்னொடுப் பொருளும் புகழும் பூதுடலுக்கே என்றும்
கண்ணாய் இருப்பாய் எந்தனுயிருக்கே!


கல்லுக்குள்ளும் ஈரம் வைத்தக் கருணா
சொல்லுக்குள் பொருளானாய் சுரத்திற்குள் ஒலியானாய்
அல்லலுறும் பக்தருக்கு ஆறுதலுமானாய்!


முருகன் அருள் வகுப்பறையில் என்றும் பரவிடும்!!!
பகிர்விற்கு நன்றிகள் ஐயா!

Thanjavooraan said...

திரு ஆனந்தமுருகனின் கருத்துப்படம் அருமை. எந்தக் காரியத்தையும் தொடங்குமுன் அதை எப்படி முடிப்பது என்பதை அறிந்திருக்க வேண்டும். நல்ல அறிவுரை. சீர்காழியாரின் அற்புதமான பாடலைத் தந்திருக்கிறீர்கள். திருத்தணி மலையின் ஒவ்வொரு படியும் திருப்புகழைச் சொல்லும் என்பது உண்மையான கருத்து. அதனால்தான் அறுபது எழுபது ஆண்டுகளுக்கு முன்பாகவே, திருப்புகழ்மணி எனப் புகழ் பெற்ற பெரியவர் ஒவ்வோராண்டும் ஜனவரி முதல் தேதியன்று திருத்தணியில் ஒவ்வொரு படியிலும் ஒரு திருப்புகழைப் பாடிக் கொண்டு மலையேறும் வழக்கத்தைக் கொண்டு வந்தார். அப்போதெல்லாம் ஜனவரி முதல் தேதி அரசாங்க அதிகாரிகள் தங்கள் எஜமானர்களைச் சென்று கண்டுகொண்டு கையில் ஒரு எலுமிச்சம்பழம் அல்லது ஆப்பிள் கொடுத்து வணங்கிவிட்டு வருவார்கள். இதனை மாற்றி இறைவனிடம் பக்தி செலுத்தும்படியாக இந்தப் படித்திருவிழா திருத்தணியில் தொடங்கப்பட்டு பின்னர் மலையுள்ள இடமெல்லாம் குடியேறிய கந்தன் வாழும் மலைகளிலெல்லாம் இது கடைபிடிக்கப்பட்டு வந்தது. இந்த சூழ்நிலைக்காகவே எழுதப்பட்ட பாட்டாக இருக்கலாம் இது. சீர்காழியாரின் மைத்துனரும், தமிழ்ப் பேராசிரியருமான உளுந்தூர்பேட்டை சண்முகம் அவருக்குப் பாடல்களை எழுதிக் கொடுத்து வந்தார் என்று அறிந்திருக்கிறேன்.

அய்யர் said...

முருகா...
முருகா...

Parvathy Ramachandran said...

மிக அற்புதமான பதிவு.மிக அருமையான பாடல். சீர்காழியாரின் அருமையான குரலில், அழகு கொஞ்சும் பாடல். மழை மேகத்தைக் கண்டால் ஆடும் மயில்கள், தணிகைப் படிகள் பாடும் திருப்புகழைக் கேட்டு ஆடுகின்றன இங்கே. முருகனின் வாகனமான மயிலுக்கு, அவன் புகழ்பாடும் திருப்புகழே மழை மேகம். சேவற்கொடி அடியவரின் தீராத வினை தீர்க்க, முருகனின் புன்னகை, அடியவரின் வாழ்வில் ஏற்றம் மட்டுமே தந்து வாழ்விக்கிறது. செந்தூரில், கோபப் புயலாக சூரசம்ஹாரம் செய்யும் வேலன், சினம் தணிந்த தென்றலாய் தணிகை மலை அமர்ந்ததால், நதியில் விளையாடி கொடியில் தலைசீவி நடக்கும் இளந்தென்றல், இங்கு, முருகனின் திருப்பெயரை, இசையோடு பாடி மயக்குகிறது. கவிஞரின் கற்பனையின் வீச்சு பிரமிக்க வைக்கிறது. ஒரே பாடலில், வாகனம், கொடி, முருகனின் புன்னைகை பொங்கும் திருமுகம், அதை வழிபடும் அடியவர் அடையும் நற்பலன்கள் என எல்லாம் வந்துவிட்டன. படிக்கப் படிக்கத் திகட்டாத பாடல். மிக்க நன்றி ஐயா. சகோதரர் திரு. ஆலாசியம் அவர்களின் கவிதையும் அருமை.

SP.VR. SUBBAIYA said...

/////Blogger ஜி ஆலாசியம் said...
அருமையானதொறுப் பாடல் அதுவும்
ஆறுமுகனைப் புகழ்ந்து வரும்
இனிமையானப் பாடல் இதற்கு
ஈடு இணையில்லை இந்த
உலகிலே இருந்தும் இப்பாடல்
ஊக்கம் அளித்தது என்னை
எளிமையானப் பாடல் ஒன்றை
ஏற்றமுடன் நான் எழுத....
ஐயனை என்றும் பாட அவனருள வேண்டும்
ஒப்பில்லா மணியவன் நாம்
ஓதும் மறை பொருள்
ஒளவைக்கு அருளியவன் நமக்கும் அருளட்டும்
அஃதே நமது வேண்டுதலும்..

சீர்காழியாருக்கு ஒரு சிறப்பு பாடல்!
வெங்கலக்குரலால் வெளியெலாம் பக்திப் பரப்பிய
தங்க மகன் சீர்காழி -இவரென்றும்
மங்காப்புகழ் கொண்ட படைப்பு; என்னே
அங்கமெல்லாம் நீறுபூத்த அழகியச்சிரிப்பு!//////

பக்திப் பாடல்களில் சீர்காழியாரின் பாடல்களுக்கு எப்போதும் ஒரு தனியிடம் உண்டு! அதற்கு அவருடைய அந்த அழுத்தமான, கம்பீரமான குரலே காரணம்! நன்றி ஆலாசியம்!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger ஜி ஆலாசியம் said...
எல்லோரும் இன்பம் பெற இதோ எனதுப் பாடல்!

தணிகைமலை உறை தமிழ்க் குமரா
இனிமையென்னும் சொல்லுக்குப் நீ பொருளல்லவா
பனித்தலையன் நெற்றிக்கண்ணில் பூத்த நெருப்பல்லவா
கனிந்தமுகம் காட்டிடுவாய் மறைத்தலைவா!
ஞானத்தின் உதயமே தேவர்களின் இதயமாக
ஞாலம் போற்றும் தேவாதி தேவனே
நாடு போற்றும் நல்வேதமே -நாங்கள்
நாடி வந்தோம் உந்தன் பாதமே!
கொள்ளை கொண்டாய் குமரா என்மனம்
கொள்ளைக் கொண்டாய் அருட்குமரா!
எல்லையில்லாக் கருணையின் மறுவுருவே -உந்தன்
பிள்ளையெனை பேறுசெய்வாய் இறைவா!
கள்ளமில்லா மனம்வேண்டும் கந்தா -எந்தன்
உள்ளமெல்லாம் நிறைத்திடுவாய் நித்யக் குமரா
பொன்னொடுப் பொருளும் புகழும் பூதுடலுக்கே என்றும்
கண்ணாய் இருப்பாய் எந்தனுயிருக்கே!
கல்லுக்குள்ளும் ஈரம் வைத்தக் கருணா
சொல்லுக்குள் பொருளானாய் சுரத்திற்குள் ஒலியானாய்
அல்லலுறும் பக்தருக்கு ஆறுதலுமானாய்!
முருகன் அருள் வகுப்பறையில் என்றும் பரவிடும்!!!
பகிர்விற்கு நன்றிகள் ஐயா!/////

உங்களின் கவிதை வரிகளுக்கு நன்றி! முருகன் அருள் நமக்கு எப்போதும் உண்டு ஆலாசியம்!

SP.VR. SUBBAIYA said...

//////Blogger Thanjavooraan said...
திரு ஆனந்தமுருகனின் கருத்துப்படம் அருமை. எந்தக் காரியத்தையும் தொடங்குமுன் அதை எப்படி முடிப்பது என்பதை அறிந்திருக்க வேண்டும். நல்ல அறிவுரை. சீர்காழியாரின் அற்புதமான பாடலைத் தந்திருக்கிறீர்கள். திருத்தணி மலையின் ஒவ்வொரு படியும் திருப்புகழைச் சொல்லும் என்பது உண்மையான கருத்து. அதனால்தான் அறுபது எழுபது ஆண்டுகளுக்கு முன்பாகவே, திருப்புகழ்மணி எனப் புகழ் பெற்ற பெரியவர் ஒவ்வோராண்டும் ஜனவரி முதல் தேதியன்று திருத்தணியில் ஒவ்வொரு படியிலும் ஒரு திருப்புகழைப் பாடிக் கொண்டு மலையேறும் வழக்கத்தைக் கொண்டு வந்தார். அப்போதெல்லாம் ஜனவரி முதல் தேதி அரசாங்க அதிகாரிகள் தங்கள் எஜமானர்களைச் சென்று கண்டுகொண்டு கையில் ஒரு எலுமிச்சம்பழம் அல்லது ஆப்பிள் கொடுத்து வணங்கிவிட்டு வருவார்கள். இதனை மாற்றி இறைவனிடம் பக்தி செலுத்தும்படியாக இந்தப் படித்திருவிழா திருத்தணியில் தொடங்கப்பட்டு பின்னர் மலையுள்ள இடமெல்லாம் குடியேறிய கந்தன் வாழும் மலைகளிலெல்லாம் இது கடைபிடிக்கப்பட்டு வந்தது. இந்த சூழ்நிலைக்காகவே எழுதப்பட்ட பாட்டாக இருக்கலாம் இது. சீர்காழியாரின் மைத்துனரும், தமிழ்ப் பேராசிரியருமான உளுந்தூர்பேட்டை சண்முகம் அவருக்குப் பாடல்களை எழுதிக் கொடுத்து வந்தார் என்று அறிந்திருக்கிறேன்./////

ஆமாம, உளுந்தூர்பேட்டை திரு சண்முகம் அவர்கள் எழுதிய பாடல்கள் அனைத்துமே சிறப்பாக இருக்கும்! உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கோபாலன் சார்!

SP.VR. SUBBAIYA said...

////Blogger அய்யர் said...
முருகா...
முருகா../////.


கந்தா!
கடம்பா!
கதிர்வேலா!
கார்த்திகேயா!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger Parvathy Ramachandran said...
மிக அற்புதமான பதிவு.மிக அருமையான பாடல். சீர்காழியாரின் அருமையான குரலில், அழகு கொஞ்சும் பாடல். மழை மேகத்தைக் கண்டால் ஆடும் மயில்கள், தணிகைப் படிகள் பாடும் திருப்புகழைக் கேட்டு ஆடுகின்றன இங்கே. முருகனின் வாகனமான மயிலுக்கு, அவன் புகழ்பாடும் திருப்புகழே மழை மேகம். சேவற்கொடி அடியவரின் தீராத வினை தீர்க்க, முருகனின் புன்னகை, அடியவரின் வாழ்வில் ஏற்றம் மட்டுமே தந்து வாழ்விக்கிறது. செந்தூரில், கோபப் புயலாக சூரசம்ஹாரம் செய்யும் வேலன், சினம் தணிந்த தென்றலாய் தணிகை மலை அமர்ந்ததால், நதியில் விளையாடி கொடியில் தலைசீவி நடக்கும் இளந்தென்றல், இங்கு, முருகனின் திருப்பெயரை, இசையோடு பாடி மயக்குகிறது. கவிஞரின் கற்பனையின் வீச்சு பிரமிக்க வைக்கிறது. ஒரே பாடலில், வாகனம், கொடி, முருகனின் புன்னைகை பொங்கும் திருமுகம், அதை வழிபடும் அடியவர் அடையும் நற்பலன்கள் என எல்லாம் வந்துவிட்டன. படிக்கப் படிக்கத் திகட்டாத பாடல். மிக்க நன்றி ஐயா. சகோதரர் திரு. ஆலாசியம் அவர்களின் கவிதையும் அருமை./////

பாடலைப் பற்றிய உங்களுடைய மேன்மையான விமர்சனத்திற்கு நன்றி சகோதரி!