மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label பாஸந்தி பதிவுகள். Show all posts
Showing posts with label பாஸந்தி பதிவுகள். Show all posts

13.10.11

பாஸந்தி, பக்கோடா மற்றும் ஃபில்டர் காஃப்பி

பாஸந்தி, பக்கோடா & ஃபில்டர் காஃபி
வயதானவர்களுக்கு: பாஸந்தி, பக்கோடா & ஃபில்டர் காஃபி

இளைஞர்களுக்கு: பாஸந்தி, பக்கோடா, ஃபில்டர் காஃபி & வில்ஸ் ஃபில்டர் (வில்ஸ் ஃபில்டர் பதிவின் கடைசியில் உள்ளது. எடுத்துப் புகைத்தாலும் சரி அல்லது சட்டைப் பைக்குள் போட்டுக்கொண்டு போனாலும் சரி, வாத்தியார் கண்டு கொள்ள மாட்டார்!)
-----------------------------------------------------------------------------------
over to table

பாஸந்தி கிண்ணம் ஒன்று

 
கல்லூரி இட்லி!யும், கவியரசர் கண்ணதாசனும்!

கவியரசர் கண்ணதாசன் ஒருமுறை லயோலா கல்லூரியின் தமிழ் மன்றத்தில் உரையாற்றச் சென்றிருந்தார். விழா துவங்குமுன்பாக, மாணவர்கள், கவியரசருக்கு தங்கள் கல்லூரி உணவு விடுதியில் சிறுண்டி வழங்கினார்கள்.

சூடாக இருந்த இட்லியைக் கவியரசர் விரும்பிச் சுவைத்தார்.

மாணவர்களில் ஒருவர்,”ஐயா நீங்கள் எதைப் பற்றியும் கவிதை எழுதுவீர்கள் இல்லையா?”
என்று கேட்கவும், கவியரசர், “ஆமாம்’” என்று பதில் சொன்னார்.

உட்னே, அந்த மாணவர், ”எங்கள் விடுதி இட்லியைப் பற்றி இரண்டு வரிகளில் சொல்லுங்கள் ஐயா!” என்றார்.

சட்டென்று அடுத்த நொடியே கவியரசர் இப்படிச் சொன்னார்:

“இட்டிலியே ஏன் இளைத்துவிட்டாய்? - எவனை
இங்கே நீ காதலித்தாய்?”


அதுதான் கவியரசர்!
---------------------------------------------------------------------
 பாஸந்தி கிண்ணம் இரண்டு




                            உன்பாடல் பாதி; என்பாடல் பாதி
                                   ஒன்றாகும்போது கீதம் - இனி
                            தன்பாதை மாறி உன்பாதை தேடி
                                   வந்தாடும் எந்தன் பாதம்!

                                                      - கவிஞர் மு.மேத்தா
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
பக்கோடா
1

இரண்டாயிரம் ரூபாய்க்கு வாங்கிய சைக்கிள், ஒரு ரூபாய்க் காற்று இல்லையெனில் பயன்படாது.

முன்னூறு ரூபாய்க்கு வாங்கிய செருப்பைக் காலில்தான் அணிகிறோம். முப்பது பைசா குங்குமம் நெற்றிக்குப் போகிறது.

அதுதான் வாழ்க்கை
-----------------------------------

பக்கோடா
2


பாசம், மென்மை, விவேகம், மெல்லிய உணர்வுகள், ரசனை கொண்டவளே முழுமையான பெண்

பக்கோடா
3







இந்தப் பதிவு எண்ணைப் பெறுவதற்கு வாகனத்தின் உரிமையாளர் மூன்று லட்சத்துப் பத்தாயிரம் ரூபாய் செலவழித்திருக்கிறார். ஆமாம் ஏலத்தில் எடுத்திருக்கிறார். ஏலம் நடந்த இடம் சண்டிகரில் உள்ள வாகனப் பதிவு அலுவலகம். உண்மையான எண் 'CH01-AK-0047'. அதைச் சுருக்கி இப்படி வைத்துள்ளார். இந்தியா முன்னேறவில்லை என்று யார் சொன்னது?


---------------------------------------------------------------------------------
ஃபில்டர் காஃப்பி!



நானும்  கிருஷ்ணமூர்த்தியும் திரு ராமநாதனைச் சந்தித்து ஒரு நடிகையின் அவசரத் தேவையைச் சொன்னோம்.

செல்வி தர்மா என்று அவரோடு ரேடியோ நாடகத்தில் நடிப்பதற்காக ஒருவர் வந்திருக்கும் விஷயத்தைத் தெரிந்து கொண்டு என் நாடகத்தில் அவரை நடிக்க ஏற்பாடு செய்து தரமுடியுமா என்று ராமநாதனைக் கேட்டேன். ரேடியோ நாடகம் இரவு ஒன்பது மணியளவில் முடிந்துவிட்டபின், அந்த நடிகையை ஸ்ரீரங்கம் அழைத்துச் சென்று பாடங்களைக் கொடுத்து, நாளை நடக்கவிருக்கின்ற என் நாடகத்தைச் சிறப்பாக நடத்திவிடலாம் என்று எனக்கொரு நப்பாசை!

ராமநாதன் சொன்னார்:

“நாங்கள் எல்லோரும் இன்று இரவே சென்னை திரும்பி விடுவோம். செல்வி தர்மா உங்கள் நாடகத்தில் நடிக்க சம்மதித்தாலும் அவரைத் தனியாக விட்டு விட்டு, நாங்கள் சென்னை திரும்புவது சரியாக இருக்காதே.”

அந்தப் பெண்ணிடம் பேசிப்பார்க்கும்படி நான் ராமநாதனை வேண்டினேன். நாளை நாடகம் முடிந்து பத்திரமாக Ladies Compartmentஇல் சென்னைக்கு அனுப்பி வைப்பதாக உத்திரவாதமும் தந்தேன்.

செல்வி தர்மாவிடம் ராமநாதன் என் பொருட்டு பேசினார். எனக்கு ஏற்பட்டிருக்கும் கஷ்டத்தையும் எடுத்துச் சொன்னார்.

என்னுடைய அவஸ்தையைக் கண்டு அந்தப் பெண்ணின் உள்ளம் இளகியது. இருப்பினும் தனியாக ஸ்ரீரங்கத்தில் தங்கி நாடகத்தில் நடித்துக் கொடுத்துதவித் தனியாக சென்னை திரும்ப வேண்டியது குறித்து சற்று யோசித்தார்,

பிறகு தங்களது குழுவில் சென்னையிலிருந்து வந்திருந்த நடன ஆசிரியர் திரு. நடராஜன் என்பவரைத் தனக்குத் துணையாக இருக்கும்படி தர்மாவே வேண்டிக் கேட்டுக்கொள்ள, என்னுடைய நல்லகாலம் நடராஜனும் அதற்குச் சம்மதித்தார். நான் நீண்ட பெருமூச்சைவிட்டு சுயநிலைக்கு வந்தேன்.

செல்வி தர்மா ஸ்ரீரங்கம் வந்து தங்கி, இரவெல்லாம் கண்விழித்துப் பாடம் செய்து, நாடகத்தில் சிறப்பாக நடித்து, நான் கொடுத்த சிறு ஊதியத்தையும் முகம் சுளிக்காமல் பெற்றுக்கொண்டு சென்னை திரும்பினார்.

ஸ்ரீரங்கம் ரெயில்வே ஸ்டேசனில் நான் வழியனுப்பி வைத்தேன். அப்போது ஆண்டவனிடம் அந்தப் பெண்ணுக்குக்காக வேண்டிக்கொண்டேன். இறைவா! இன்று என் மானம் காத்த இந்தப் பெண்ணுக்கு மகோன்னதமான வாழ்வை நீ அருள வேண்டும்!

மகோன்னதமான வாழ்வை நான் வேண்டிக்கொண்டபடி ஆண்டவன் அந்தப் பெண்ணுக்கு அட்டியின்றி வழங்கினார்.

செல்வி தர்மா என்று அன்று அழைக்கப்பட்ட திருமதி தர்மாம்பாள் தமிழினத்தலைவரின் இருமுறை நாடாண்ட முதல்வரின் வாழ்க்கைத் துணைவியானார்கள்.

தன் மகள் திருமணத்திற்கு கொட்டும் மழையில் என் வீட்டிற்கு வந்து கல்யாணப் பத்திரிக்கை கொடுத்துவிட்டுப் போனார். காலத்தால் ஒரு தமிழ்க் கவிஞனுக்கு ஆற்றிய உதவியைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, அந்த அம்மையாரை வாழ்வின் உச்சத்திற்கு உயர்த்தினான் ஆண்டவன்.

உள்ளத்தைப் பொறுத்தே உயர்வு என்கிறார் வள்ளுவர்

“வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனைய உயர்வு”


இது குறள்; திருமதி தர்மாம்பாள் இதன் பொருள்

- கவிஞர் வாலி (தனது ‘நானும் இந்த நூற்றாண்டும்” என்னும் நூலில்)
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஓமப்பொடி


கலக்கலான் காணொளி. ஓமப்பொடிக்காரர்கள் நிச்சயம் இரசிப்பார்கள்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
புதிர்

பகலில் எந்த வேலையும் செய்யாமல் சம்பாதிப்பது யார்?
------------------------------------------------------------------------------------

கனவுக் கன்னி படம்?
அது இல்லாமலா?
வழக்கம்போல கீழே உள்ளது!
V
V
V
V
V
V


நடிகை S.D. சுப்புலெட்சுமி அவர்கள் (1938)
முகத்தைச் சுழிக்காதீர்கள். மூத்த குடிமகன்களுக்காக இதைப் போட்டுள்ளேன்.
இளவட்டங்களுக்கான படம் அடுத்து உள்ளது!
V
V
V
V
V
V
அனுஷ்கா சர்மா
--------------------------------------------------------------------------------------------
நட்புடன்
வாத்தி (யார்)

வாழ்க வளமுடன்!

6.10.11

பாஸந்தி, பக்கோடா மற்றும் ஃபில்டர் காஃபி - பகுதி மூன்று

 +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வயதானவர்களுக்கு: பாஸந்தி, பக்கோடா & ஃபில்டர் காஃபி

இளைஞர்களுக்கு: பாஸந்தி, பக்கோடா, ஃபில்டர் காஃபி & வில்ஸ் ஃபில்டர் (வில்ஸ் ஃபில்டர் பதிவின் கடைசியில் உள்ளது. எடுத்துப் புகைத்தாலும் சரி அல்லது சட்டைப் பைக்குள் போட்டுக்கொண்டு போனாலும் சரி, வாத்தியார் கண்டு கொள்ள மாட்டார்!)

-----------------------------------------------------------------------------------
over to table


பாஸந்தி கிண்ணம் ஒன்று



ஆனைக்கா அகிலாவும் திருவரங்கம் வாலியும்!

பேசும் படம் பிறந்த 1931ஆம் ஆண்டில்தான் கவிஞர் வாலியும் பிறந்தார். இயற்பெயர் திரு.ரங்கராஜன்.

பிறந்தது, வளர்ந்தது எல்லாம் திருவரங்க மண்ணில்தான். சிறு வயதில் குடித்ததெல்லாம் காவிரி ஆற்றுத் தண்ணீர்! படித்ததெல்லாம் பாசுரங்கள்!

திருவரங்கத்தில் பிறந்திருந்தாலும் கொண்ட காதலெல்லாம் அருகில் இருந்த ஆனைக்காமேல்தான். ஆமாம் திருவானைக்கோவில் மீதுதான்.

காளமேகத்துக்குப் பிறகு ஆனைக்கா அகிலாண்டேஷ்வரியின் பார்வை இவரின் மேல் விழுந்தது. தினமும் சுற்றி வருகிறானே பையன் என்று
தமிழை வசப்படுத்திக் கொடுத்தாள்.

அதை வாலி அவர்களும் மறக்காமல் மனதில் வைத்திருந்து, பின்னொரு நாளில் பாட்டரங்கம் ஒன்றில் கவிதை வரிகளால் அகிலாண்டேஷ்வரிக்குத் தன் நன்றியைச் சமர்ப்பித்தார்.

“ஆனைக்கா அம்பிகையின்
அடியொற்றிப் பாட்டிசைத்தால்
மோனைக்கா பஞ்சமுண்டு?
முற்றெதுகை முதலான
சேனைக்கா பஞ்சமுண்டு?
சூழ்கொண்ட செந்தமிழின்
சோனைக்கா பஞ்சமுண்டு?
சுடர்கவிதை துளிர்க்காதோ?”


எப்படியிருக்கிறது பாட்டு....?
---------------------------------------------------------
பாஸந்தி கிண்ணம் 2


கவியரசர் கண்ணதாசனிடம் ஒரு சோகப் பாடல் எழுதிக் கொண்டுபோக வந்திருந்தார் அந்தத் திரைப் படத்தயாரிப்பாளர்.கதாநாயகியின் சோகத்தை அப்படியே பிழிந்து பாடலாக வடித்துக் கொடுத்துவிட்டார் கவியரசர்.

பாடலைப் பாருங்கள்:

“தேரேது, சிலையேது, திருநாளேது
தெய்வத்தையே மனிதரெல்லாம் மறந்தபோது
பூவேது, கொடியேது, வாசனையேது
புன்னகையே கண்ணீராய் மாறும்போது”

பதினைந்து தினங்கள் கழித்து அதே தயாரிப்பாளர். கிளைமாக்ஸில் தன் துயரங்கள் எல்லாம் தீர்ந்து கதாநாயகி மகிழ்ச்சியின் எல்லைக்குப் போய்விடுவதாகப் படத்தை முடிக்க உள்ளோம். அதற்கு ஒரு பாட்டு வேண்டும் என்றார்.

கவியரசர் சொன்னார், முன்பு எழுதிய பாட்டையே இரண்டொரு வார்த்தைகள் மாற்றிக் கொடுத்துவிடுகிறேன். பாடல் தொடர்பும் சுவையாக இருக்கும் என்ற போது தயாரிப்பாளர், "அது முழுவதும் சோகமயமான பாடல் ஆயிற்றே, அதை எப்படி மாற்ற முடியும்? " என்று கேட்டார்

கவியரசர், அவர் வியக்கும் வண்ணம் அதைச் சில வார்த்தை மாற்றங்களுடன் அதே பாடலை சந்தோஷப் பாடலாக மாற்றிக்கொடுத்தார்.

இப்போது பாடலைப் பாருங்கள்:

தேரேது, சிலையேது, திருநாளேது
தெய்வம்போல் மனிதரெல்லாம் இருக்கும்போது
பூவேது, கொடியேது, வாசனையேது
புன்னகையே பூவாக மலரும்போது!
-------------------------------------------------------------------------------------
பக்கோடா ப்ளேட் 1

மீன்பிடிக்கக் கடலுக்குள் சென்றபோது இறந்துவிட்ட தன் கணவனைப் பற்றி மீனவப் பெண் பொங்கிவந்த அழுகையோடு இப்படிச் சொன்னாள்:

“அலையொடு போன மச்சான்
அலையை மட்டும் அனுப்பி வச்சான்”


பக்கோடா ப்ளேட் 2

“வாய்மூடி
மெளனமாய் இருங்கள்
என்று ஆனியிடுவது
நூலக
அறிவிப்பு மட்டுமல்ல
எங்கள் கேன்டீன்
அல்வாவும்தான்!

- ஒரு கல்லுரி மாணவி
------------------------------------------
 ஓமப்பொடி



அந்தக் காலத்தில், கர்நாடக இசை மற்றும் மெல்லிசையில் அற்புதமாகப் பல பாடல்களைப் பாடியவர். டி.ஆர்.மஹாலிங்கம் அவர்கள்
“இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை” என்னும் ஜீவனுள்ள பாடலைப் பாடி (படம் திருவிளையாடல்) பல உள்ளங்களைக் கொள்ளை கொண்டவர் அவர். அவர் பாடிய சில சிறந்த பாடல்களைப் பட்டியல் இட்டுள்ளேன்

1. ஆடைகட்டி வந்த நிலவோ, படம்: அமுதவல்லி, உடன்படியவர் பி.சுசீலா
2. ஆண்டவன் தரிசனமே - படம்: அகத்தியர்
3. எங்கள் திராவிட பொன்னாடே - படம்: மாலையிட்ட மங்கை
4. இசைத் தமிழ் நீ செய்த அருஞ்சாதனை - படம்: திருவிளையாடல்
5. செந்தமிழ் தேன்மொழியாள் - படம்: மாலையிட்ட மங்கை
6. சொட்டு சொட்டுன்னு சொட்டுது பாரு படம்: ஆடவந்த தெய்வம்
7. விடுதலை விடுதலை படம்: நாம் இருவர்
8. நமச்சிவாய எனச் சொல்வோமே - படம்: திருவருட்செல்வர்
9. பாட்டு வேணுமா: படம்: மோகனசுந்தரம்
10. திங்கள் முடி சூடும்: படம்: மாலையிட்ட மங்கை
--------------------------------------------------------------------------------------

ஃபில்டர் காஃபி

சில ஆண்டுகள் வடக்கே இருந்து விட்டு ஒரு முறை ஸ்ரீரங்கம் போன போது வழக்கம்போல் ரங்கு கடையில் போய் உட்கார்ந்தேன். ரங்கு ‘அன்று கண்ட மேனிக்கு அழிவில்லாமல்’ அப்படியே இருந்தான். புதுசாக கூலிங்கிளாஸ் போட்டிருந்தான். ஆண்டாளின் பையன் அமெரிக்காவில் இருக்கிறானே  பாச்சாவோ, யாரோ அவன் கொடுத்ததாம். வழக்கம்போல் தம்பு, சீது போன்றவர்கள் வந்து அரசியலையும் சினிமாவையும் அலசினார்கள். தம்பு தேவகாந்தாரிக்கும் ஆரபிக்கும் வித்தியாசம் என்னவென்று பாடிக் காட்டினான். சீது யாருக்கு மொட்டைக் கடுதாசி எழுதலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தான்.

‘‘நீ எப்ப வந்தே?’’ என்று கேட்டான் ரங்கு.

‘‘நேத்திக்குதான்.’’

‘‘கொஞ்ச நாள் இருப்பியா?’’

‘‘ஒரு மாசம் இருக்கலாம்னு ஆன்யுவல் லீவ்ல வந்திருக்கேன்.’’

‘‘நீ ஏர்ஃபோர்ஸ்லதான இருக்கே?’’

‘‘ஏர்போர்ட்ல.’’

‘‘ப்ளேன் எல்லாம் ஓட்டுவியாமே! பாகிஸ்தான் மேல நீதான் பாம் போட்டதா பேசிக்கிறா.’’

‘‘ரங்கா பாரு, சரியா புரிஞ்சுக்கோ! நான் இருக்கறது ஏர்போர்ட். டெல்லில சப்தர்ஜங்னு பேரு  விமானநிலையம். நீ சொல்றது ஏர்ஃபோர்ஸ். அது ‘பாலம்’கிற இடத்தில் இருக்கு.’’

‘‘ரெண்டும் ஒண்ணுதானே.’’

‘‘இல்லை.’’

‘‘பின்ன ஏர்ஃபோர்ஸ்ல யார் இருக்கா?’’

‘‘மேலச் சித்திரை வீதில ரங்காச்சாரிடா அது - அவன்கூட பைலட் இல்லை.’’

‘‘ஏர்ஃபோர்ஸ்னா எல்லாரும் பறக்க மாட்டாளோ?’’

‘‘மாட்டா!!’’

‘‘அப்ப நீ ஏர்ஃபோர்ஸ்ல இல்லை?’’

‘‘ஏர்போர்ட்,  ஏர்போர்ட்!’’

‘‘பின்ன யாரோ, நீ ப்ளேன் ஓட்டறதா சொன்னாளே..?’’

‘‘அது சின்ன ப்ளேன். டிரெய்னிங் ப்ளேன்.’’

‘‘ஏர்போர்ட்ல பெரிய ப்ளேன்தானே  இருக்கும்! போட்டுக் குழப்பறாங்கப்பா!’’

நான் அவனுக்கு மேலும் விளக்கும் முயற்சியைக் கைவிட்டேன். ரங்குவின் உலகம் அவன் வீடு, கடை இரண்டை விட்டு வெளியே எதும் கிடையாது. உலகம் முழுக்க அவன் கடைக்கு அரட்டையடிக்க வரும். இவன் இடத்தைவிட்டு நகரமாட்டான். பெருமாளைக்கூட பங்குனி, சித்திரை உற்சவங்களில் கடையைக் கடந்து செல்லும்போதுதான் சேவிப்பான்.

அப்போது ஒரு கிழவனார் கையில் சொம்புடன், ஒரு சிறுவன் குச்சியைப் பிடித்துக்கொண்டு அழைத்துச் செல்ல ‘உயர்வற உயர்நலம் உடையவன் எவனவன்’ என்று ஏறத்தாழ உளறலாகச் சொல்லிக்கொண்டு நட்ட நடுத் தெருவில் வந்துகொண்டிருந்தார். முகத்தில் ஒரு வாரத்துக்கு உண்டான வெண் தாடி. மார்பில் பூணூல். சவுக்கம். பத்தாறு வேஷ்டி.

‘‘ரங்கு, இது யாரு?’’

‘‘இவர் பேரு தேசிகாச்சாரி. ஜி.பி-னு ஐஸ்கூல்ல மேத் டீச்சர் இருக்காரே, அவரோட அப்பா.’’

‘‘ஆமாம். எதுக்கு சொம்பை கைல வெச்சுண்டு பிரபந்தம் சொல்லிண்டுபோறார்?’’

யாரோ அவர் சொம்பில் அரிசி போட்டுவிட்டு வணங்கி விட்டுச் சென்றார்கள்.

‘‘உஞ்சவிருத்தி.’’

‘‘புரியலை. ஜி.பி. இவரை வெச்சுக் காப்பாத்தலியா?’’

‘‘அதெல்லாம் இல்லை. பிடிவாதம்.’’

‘‘பணம் காசு இல்லையா? ஜி.பி. நிறையச் சம்பாதிக்கிறாரே!’’

‘‘இவருக்கே நிறைய சொத்து இருக்கு. சித்திரை வீதில ஜி.பி. இருக்கற வீடு இவர்துதான். மகேந்திரமங்கலத்தில் நெலம் எல்லாம் இருக்கு.’’

‘‘உஞ்சவிருத்தின்னா பிச்சை எடுக்கறதில்லையோ?!’’

‘‘ஆமாம். ‘பவதி பிக்ஷாம் தேஹி’ன்னு சொல்லலே - அவ்ளவுதான்!’’

‘‘புரியலை ரங்கு.’’

‘‘சில வேளைல பெரியவர்களுடைய பிடிவாதங்கள் புரியாது நமக்கு. இந்த பிராமணனுக்கு வீம்பு. போக்கடாத்தனம்.’’

ஜி.பி. என்னும் பார்த்தசாரதி செயலாக இருப்பவர். கணக்குப் பாடப் புத்தகம், நோட்ஸ் எல்லாம் போடுபவர். லட்சக்கணக்கில் விலை போகும்.

எஸ்.எஸ்.எல்.சிக்கு ஒரு செக்ஷனுக்கு கிளாஸ் டீச்சர். ஹைஸ்கூலில் சீனியர் டீச்சர் என்று மதிக்கப்பட்ட ஆசிரியர். தேசிய விருது வாங்கியிருக்கிறார். அடுத்த ஹெட்மாஸ்டர் அவர்தான் என்று பேசிக்கொண்டார்கள். அவர் தந்தையார் பிச்சை எடுக்கிறார் என்றால்

‘‘வேணும்னுட்டே, மகனை அவமானப்படுத்தறதுக்குன்னுட்டே..’’

‘‘கண்ணு வேற தெரியலை.’’

‘‘கண்ணெல்லாம் நன்னாத் தெரியறது. தன்மேல சிம்பதியை வரவழைச்சுக்க, கண் தெரியாத மாதிரி பாடசாலைப் பையனை வெச்சுண்டு குச்சியைப் பிடிச்சுண்டு போறார்.’’

‘‘என்ன ப்ராப்ளம் அவருக்கு?’’

‘‘வரார். கேட்டுப் பாரேன்.’’

இவ்வாறு பேசிக்கொண்டிருக்கும் போது அவரே கடைக்கு வந்து பெஞ்ச்சில் உட்கார்ந்தார். அவருடன் கொஞ்சம் ஈரம் காயாத வேஷ்டியின் நாற்றமும் வந்தது. எதையோ வாயிலே மென்றுகொண்டிருந்தார். கிட்டப் பார்க்கையில் ஆரோக்கியமாகத்தான் இருந்தார். நல்ல மூங்கில் கம்பு. அதைப் பையன் ஒரு ஓரத்தில் வைத்துவிட்டு நின்றுகொண்டிருக்க

‘‘ஓய்! லைப்பாய், ரெக்சோனான்னு சோப்பு ஏதாவது போட்டுக் குளிக்கிறதுதானே? கிட்ட வந்தாலே கத்தாழை நாத்தம்!’’

‘‘மாட்டுப்பொண்ணு எங்கடா சோப்பு கொடுக்கறா? ஒரு அண்டா தண்ணிகூட வெக்கமாட்டேங்கறா ரங்கு.’’

‘‘ஜி.பி கிட்ட சொல்றதுதா&ன?’’

‘‘அவனா? பொண்டாட்டிதாசன்..! தொச்சு, அது என்னடா சாக்லெட்டு?’’

‘‘பட்டை சாக்லெட் தாத்தா.’’

‘‘அது எனக்கு ஒண்ணு இவனுக்கு ஒண்ணு கொடு! ரங்கநாதா..!’’ என்று பெஞ்ச்சில் உட்கார்ந்து, ‘‘தீர்த்தம் இருக்குமா? என்ன வெயில்.. என்ன வெயில்!’’

ரங்கு சாக்லெட் எடுத்துத் தர, மடியிலிருந்து அஞ்சு ரூபாய் நோட்டை எடுத்துக் கொடுத்தார்.

‘‘நீ யாரு கோதை பேரன்தானே?’’ என்றார் என்னைப் பார்த்து.

‘‘ஆமாம் மாமா!’’

‘‘நீ ஏர்போர்ஸ்ல இருக்கியா?’’

‘‘ஏர்போர்ட்! மாமா, எதுக்காக இந்த வெயில்ல அலையறீங்க? வெயில்தாழ வீதிப் பிரதட்சணம் போகக்கூடாதா?’’

‘‘பாரு, வைஷ்ணவனா பொறந்தா பஞ்ச சம்ஸ்காரங்கள்னு அஞ்சு காரியங்கள் செய்யணும். அதான் ஐயங்கார். ஊர்த்வ புண்ட்ரம், சமாஸ்ரணம், திருவாராதனம், ஆசார்யன்கிட்ட உபதேசம் கேக்கறது, பரன்யாசம் வாங்கிண்டப்றம் உஞ்ச விருத்தி. பிச்சைபோடற அரிசியைத் தான் சாதம் வெச்சு சாப்பிடணும்!’’

‘‘மாமா, அதெல்லாம் வசதியில்லாதவாளுக்கு!’’

‘‘இல்லை. வைஷ்ணவனா பொறந்த எல்லாருக்கும். உனக்கு, எனக்கு - அந்த நாராயணனே மகாபலிகிட்ட யாசகம் போனான்.’’

‘‘நீங்க இப்படித் தெருவில போறது அந்தக் கடமையை நிறைவேத்தறதுக்காகவா?’’

‘‘ஆமா, வேறென்ன..?’’

‘‘உங்க ஃபேமிலியில அவாளுக்கு சங்கடமா இருக்காதோ?’’

‘‘எதுக்குச் சங்கடப்படணும்? எதுக்குங்கறேன்?’’

‘‘இல்லை மாமா உங்க சன் பெரிய கணக்கு வாத்தியார். ஹெட்மாஸ்டர் ஆகப் போறார். நேஷனல் அவார்டெல்லாம் வாங்கினவர்.’’

‘‘அதனால?’’

‘‘மத்தவாள்ளாம் என்ன நினைச்சுப்பா? தோப்பனாரை சரியா வெச்சுக்காம தெருவில யாசகம் பண்ண அனுப்பிச்சுட்டார் பாரு, இவர் என்ன வாத்தியார்னுதானே  நினைச்சுப்பா?’’

‘‘நினைக்கத்தான் நினைச்சுப்பா. அதுக்கு நான் என்ன பண்ண முடியும்?’’

ரங்கு சில சமயம் பட்டென்று போட்டு உடைத்துவிடுவான்.

‘‘ஓய் உமக்கு மாட்டுப் பெண்ணோட சண்டை. ஜி.பி. அவ பேச்சைக் கேட்டுக்கறார். அந்தக் கோபத்தைத்தான் நீங்க இப்படி அவரை அவமானப்படுத்திக் காட்டறீர்னு ஊர் உலகமெல்லாம் பேசிக்கிறது. உஞ்சவிருத்தி  குஞ்சவிருத்தியெல்லாம் சால்ஜாப்பு!’’

‘‘சரி, அப்படியே பேசிக்கிறான்னா நீ என்ன செய்யணும்?’’

அவர் ‘நீ’ என்று அழைத்தது ரங்குவை அல்ல. அங்கு இல்லாத தன் மகன் ஜி.பி-யை. ‘‘நீ என்ன செய்திருக்கணும்? ‘அப்பா, நீங்க சொல்றதிலயும் நியாயம் இருக்கு. கொஞ்சம் தழைஞ்சு போங்கப்பா. நானும் அவளைத் தூக்கி எறிஞ்சு பேசாம இருக்கச் சொல்றேன்’னு சமாதானமா போகலாம் இல்லையோ..? எப்ப பார்த்தாலும் ‘அவ சொல்றதுதான் ரைட்டு, அப்பா வாயை மூடுங்கோ’னு அதட்டினா எனக்கு எப்படி இருக்கும்..?’’

‘‘தனியா இருந்து பாருமேன்.’’

‘‘அதைத்தான் யோசிச்சிண்டிருக்கேன்.’’

‘‘இப்ப வீட்ல சாப்பிடறதில்லையா?’’

‘‘ரெண்டு தளிகை. எனக்கு உண்டான ஒரு மெந்தியக் குழம்பு, அப்பளத்தை நானே பண்ணிக்கறேன். ஒரு நெய் கிடையாது, கறமுது கிடையாது, தயிர் கிடையாது. மோர்தான். ஓட்டல் சாப்பாடு ஒத்துக்கலையே ரங்கா! பேதியாறது. அவா என்னவோ சாப்ட்டுட்டுப் போகட்டும். எனக்கு?’’

‘‘பிள்ளை?’’

‘‘அவனோட பேசியே ஒரு மாசம் ஆச்சு, ஒரே ஆத்துல இருந்துண்டு.’’

‘‘இதெல்லாம் சரி, உஞ்சவிருத்தி எப்டி உடம்புக்கு ஆறது உமக்கு? ரேஷன் அரிசியும் புழுங்கரிசியும் கைக்குத்தலும் கலந்திருக்குமே?’’

‘‘ஏதோ ரங்கநாதன் கிருபையில கல்லையும் ஜீரணிக்கிறது இந்த வயிறு. ஓடிண்டிருக்கு வண்டி.. இன்னும் எத்தனை நாள் பார்க்கலாம். நான் செத்துப் போனேன்னா இந்தப் பாடசாலைப் பையன்தான் எனக்குக் கொள்ளி போடணும், கேட்டுக்கோ ரங்கு.’’

‘‘நீர் எங்கே செத்துப் போவீர்? இருக்கறவாளை சாகடிச்சுட்டுத்தான் போவீர். ஆயுசு கெட்டி உமக்கு!’’

அவர் மறுபடி வீதி பிரதட்சிணத்துக்குப் புறப்பட, ‘‘ஸ்ட்ரேஞ்ச், வெரி ஸ்ட்ரேஞ்ச்’’ என்றேன்.
- எழுத்தாளர் திருவாளர் சுஜாதா அவர்கள் எழுதிய உஞ்சவிருத்தி என்ற கதையின் ஒரு பகுதி. முழுப்பகுதியையும் படிக்க விருப்பமுள்ளவர்கள் இங்கே சென்று படிக்கலாம். முடிவு சூப்பராக இருக்கும் http://balhanuman.wordpress.com

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++=
புதிர் 1

அதை அளக்க முடியும்.ஆனால் அதற்கு நீள - அகல - உயரம் கிடையாது. அது என்ன?

புதிர் 2
படத்தில் இருக்கும் பெண்மணி யார்? க்ளூ: பிரபலமான நடிகை

 +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கவர்ச்சிப்படம் - அது இல்லாமலா?
ஸ்க்ரோல் டவுன் செய்து படத்தைப் பாருங்கள்:
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V

என்ன எதிர்பார்த்து வந்த படம் எதுவும் இல்லையா? 
பதிவிற்கு வரும் மங்கையர் திலங்களுக்காக படம் மாறியுள்ளது. அவர்களின் சாபத்திற்கு ஆளாகக்கூடாது இல்லையா? 
வாராவாரம் அம்மணிகளின் படத்தையோ போட்டுக்கொண்டிருந்தால் எப்படி என்று அவர்கள் கேட்கக்கூடாது.
அதனால் இந்தவாரக் கவர்ச்சிப் படத்தை இவர் அலங்கரிக்கின்றார்!
--------------------------------------------------------------------------------------
நட்புடன்
வாத்தி (யார்)



வாழ்க வளமுடன்!

29.9.11

பாஸந்தி, பக்கோடா மற்றும் ஃபில்டர் காஃபி - பகுதி இரண்டு

 ----------------------------------------------------------------------------------------------------
பாஸந்தி, பக்கோடா மற்றும் ஃபில்டர் காஃபி - பகுதி இரண்டு

வயதானவர்களுக்கு: பாஸந்தி, பக்கோடா & ஃபில்டர் காஃபி

இளைஞர்களுக்கு: பாஸந்தி, பக்கோடா, ஃபில்டர் காஃபி & வில்ஸ் ஃபில்டர் (வில்ஸ் ஃபில்டர் பதிவின் கடைசியில் உள்ளது. எடுத்துப்  புகைத்தாலும் சரி அல்லது சட்டைப் பைக்குள் போட்டுக்கொண்டு போனாலும் சரி, வாத்தியார் கண்டு கொள்ள மாட்டார்!)
-----------------------------------------------------------------------------------
over to table

பாஸந்தி முதல் கிண்ணம்

-----------------------------------------------------------------------------
மார்கழித் திங்கள் அல்லவா
மதிகொஞ்சும் நாளல்லவா - இது
கண்ணன் வரும் பொழுதல்லவா
ஒருமுறை உனது திருமுகம் பார்த்தால்
விடைபெறும் உயிரல்லவா!

- கவிஞர் வைரமுத்து

சங்கமம்’ என்னும் திரைப் படத்தில் வரும் பாடலின் துவக்க வரிகள் இவைகள். என்ன அசத்தலான வரிகள் பாருங்கள். நாயகி நாயகனை  நினைத்துப் பாடுகிறாள். ஒரு முறை அவனது திருமுகம் பார்த்தால் போதும். அதற்குப் பிறகு உயிர் போனாலும் பரவாயில்லை என்னும்  தொனியில் “ஒருமுறை உனது திருமுகம் பார்த்தால் விடைபெறும் உயிரல்லவா!” என்கிறாள்

இதல்லவா காதல் மயக்கத்தில் வரும் கலக்கலான உணர்வு. கவிஞர் அசத்தியிருக்கிறார்.

இந்தப் பாடலின் முதல் இரண்டு வரிகளை எங்கோ கேட்ட மாதிரி இருக்கும். அது வேறு ஒன்றுமில்லை. ஆண்டாள் பாசுரத்தில் வரும் வரிகள் அவைகள். அதையும் உங்கள் பார்வைக்காகக் கொடுத்துள்ளேன்.

(ஆண்டாள் பாமலை:
மார்கழித் திங்கள், மதி நிறைந்த நன்னாளால்,
நீராடப் போதுவீர், போதுமினோ நேரிழையீர்?
சீர் மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்,

ஏர் ஆர்ந்த கண்ணி யசோதை இளம் சிங்கம்,
கார்மேனி, செங்கண், கதிர் மதியம் போல் முகத்தான்!
நாராயணனே நமக்கே பறை தருவான்!!
பாரோர் புகழப் படிந்து, ஏலோர் எம்பாவாய்!)

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
பாஸந்தி இரண்டாவது கிண்ணம். 

பாஸந்தி இனிப்பு. திகட்டும் என்று நினைப்பவர்கள் தாவிக்குதித்து அடுத்த ஐட்டத்திற்குப் போய் விடலாம்.

------------------------------------------------------------------------------
ஒரு பெண்ணின் ஏக்கத்தை, உள்ளத் துவளலை, எட்டு வரியில் என்னமாகச் சொல்லியிருக்கிறார் கவியரசர் கண்ணதாசன். பாடல் வரிகளைப் பாருங்கள்:

"பறந்து செல்ல நினைத்து விட்டேன் எனக்கும் சிறகில்லையே
பழக வந்தேன் தழுவ வந்தேன் பறவை துணையில்லையே
எடுத்துச் சொல்ல மனமிருந்தும் வார்த்தை வரவில்லையே
என்னென்னவோ நினைவிருந்தும் நாணம் விடவில்லையே


ஒரு பொழுது மலராக கொடியில் இருந்தேனா
ஒரு தடவை தேன் கொடுத்து மடியில் விழுந்தேனா
இரவினிலே நிலவினிலே என்னை மறந்தேனா
இளமை தரும் சுகத்தினிலே கன்னம் சிவந்தேனா"


மலரையும். மங்கையையும், தேனையும் எப்படிக் கொக்கி போட்டு எழுதியுள்ளார் பார்த்தீர்களா? முழுப் பாடலும் வேண்டும் என்பவர்களுக்காக
பாடல் வரிகளை முழுமையாகக் கீழே கொடுத்துள்ளேன்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
பக்கோடா

1.
    சுடும்போதும் சிரிப்பேன்; துன்பம்
         சுட்டபின் தென்றல் வந்து
    தொடும்போதும் சிரிப்பேன்; தீய
         சொல்லினால் நெஞ்சில் காயப்
    படும்போதும் சிரிப்பேன்; இந்தப்
         பாரெல்லாம் போற்றி மாலை
    இடும்போதும் சிரிப்பேன்; என்றன்
         இதயமே இறைவன் சோலை!

    - கவிதாயினி திருமதி செளந்தரா கைலாசம்

2.

    அண்டவெளிக்குச் சென்றவனும்
    திரும்பி விட்டான்
    அதையடுத்துச் சந்திரனுக்குச்
    சென்றவனும் திரும்பிவிட்டான்
    ஆனால்....
    அடுத்துள்ள சுடுகாட்டிற்குச்
    சென்றவன் எவனும்
    இதுவரை திரும்பவில்லை - ஏனோ?

    - கவிஞர் குருவிக்கரம்பை சண்முகம்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஓமப்பொடி
(பக்கோடாவைக் கடித்து சாப்பிட முடியாதவர்களுக்காக)

கவிஞர் தஞ்சை ராமையாதாஸ் அவர்கள் எழுதிய அசத்தலான திரையிசைப் பாடல்கள். பள்ளி ஆசிரியான இவர் நாடக உலகில் நுழைந்து,  பிறகு திரையுலகில் கோலோச்சினார். கவியரசர் கண்ணதாசன் அவர்களே இவர் பாடல்களுக்கான ரசிகர் என்னும் போது, இவர் பாடல்களின் அருமை தெரியவரும்!

சில பாடல்களை இங்கே கொடுத்துள்ளேன். இவைகள் எல்லாம் அந்தக் காலத்தில் பல இதயங்களைக் கலக்கிய பாடல். அதை மனதில் கொள்க!

1
ஆடைகட்டி வந்த நிலவோ - கண்ணில்
மேடைகட்டி ஆடும் எழிலோ!

படம்: அமுதவல்லி (1959) பாடியவர்கள். டி.ஆர்.மகாலிங்கம். பி.சுசீலா இசை. விஸ்வநாதன் ராமமூர்த்தி

2
ஆஹா இன்ப நிலாவினிலே
ஓஹோ ஜெகமே ஆடிடுதே..

இசை பாடிடுதே
-படம் மாயா பஜார் (1957) பாடியவர்கள். கண்டசாலா & பி.லீலா. இசை கண்டசாலா

3
அழைக்காதே நினைக்காதே
அவைதனிலே என்னை ஏ ராஜா

படம்- மணாளனே மங்கையின் பாக்கியம் (1957) பாடியவர்.பி.சுசீலா, இசை: ஆதி நாராயண ராவ்    

4.
இன்று போய் நாளை வா
படம்: சம்பூர்ணராமாயணம் (1961) பாடியவர். சி.எஸ். ஜெயராமன். இசை: கே.வி.மகாதேவன்

5
கல்யாண சமையல் சாதம்
காய்கறிகளும் பிரமாதம்

- படம். மாயாபஜார் (1957) பாடியவர். திருச்சி லோகநாதன் இசை. கண்டசாலா

6.
கண்களும் கவி பாடுதே
படம் அடுத்த வீட்டுப் பெண் (1960) சீர்காழி எஸ்.கோவிந்தராஜன் & பி.பி.ஸ்ரீனிவாஸ், இசை:ஆதி நாராயண ராவ்

7.
கண்ணாலே பேசிப் பேசிக் கொல்லாதே
காதாலே கேட்டுக் கேட்டுச் செல்லாதே

- படம்: அடுத்த வீட்டுப் பெண் (1960) பாடியவர் P.B ஸ்ரீநிவாஸ், இசை ஆதி நாராயணராவ்   

8
மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ
இனிக்கும் இன்ப இரவே நீ வா வா

- படம் குலேபகாவலி (1955) பாடியவர்கள் ஏ.ஏம்.ராஜா & ஜிக்கி இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி

9.
மோகனப் புன்னகை வீசிடும் நிலவே
மேகத்திலே நீ மறையாதே

- படம். வணங்காமுடி (1957) பாடியவர்கள். டி.எம்.எஸ் & பி.சுசீலா, இசை. ஜி.ராமநாதன்

10
வாராயோ வெண்ணிலாவே
கேளாயோ எங்கள்கதையை!

- படம்: மிஸ்ஸியம்மா (1955) இசை.எஸ். ராஜேஷ்வரராவ். பாடியவர்கள். ஏ.எம்.ராஜா & பி.லீலா
-------------------------------------------------------------------------------------
3
ஃபில்டர் காஃபி

     “எல்லாம் முடிந்து விட்டது.இனி நம்மைக் காப்பாற்ற யாராலும் முடியாது” என்ற உச்சகட்ட சோதனைக்கு ஆளாகித் தற்கொலை பண்ணிக் கொள்ள நினைக்கிற அவசரக்காரப் பிறவிகளுக்கு விமோசனம் தரக்கூடிய பதிலைத் தேடியே அந்த மனிதன் அந்த அமாவாசை இருட்டில் மலைமேல் ஏறிக்கொண்டிருந்தான் போலிருக்கிறது.

    ஏதோ விரக்தி. கல்லையும், முள்ளையும் இருட்டில் மித்துக்கொண்டு மலை உச்சியை நோக்கி வழி தெரியாமல் தட்டுத் தடுமாறிப் போய்க் கொண்டிருந் தான். மழையும் பிடித்துக் கொண்டது. மலை உச்சியை அடைய கொஞ்ச தூரம்தான் இருக்க வேண்டும். அவன் கால் வைத்த பாறை ஒன்று சறுக்கியது. கால் தடுமாறி கீழே உருளத் துவங்கிவிட்டான் அந்த மனிதன். அதிர்ஷ்ட வசமாக அந்த இருட்டிலும் ஒரு மரத்தின்  கிளையைப் பற்றிக் கொண்டு அந்தரத்தில் தொங்கியபடி கதறி அழத் துவங்கினான். எந்த வினாடியும் மரணம் காத்திருக்கிறது. நேரம் ஆக ஆகப் பற்றியிருந்த கிளை முறியத்துவங்குகிறது. அவனோ பிடியை விடவில்லை. இதோ....மரணம்.....

    காலை உதயம். எங்கும் வெளிச்சம். அந்த மனிதன் கீழே பார்த்தான். அப்படிப் பார்த்த பொழுது அவன் கால்களுக்கும் பூமிக்கும்  இருந்த இடைவெளி ஒரு அடி தூரம்தான். ஒரே ஒரு அடிதான்!

    எப்பேற்பட்ட பிரச்சினைக்கும் உரிய தீர்வு, விமோசனம், உங்கள் பக்கத்திலேயே  இருக்கிறது. அதைத் தெரிந்து கொள்ள  வழியில்லாமல் வாழ்வில் தடுமாறுகின்றவர்களுக்காகத்தான், அந்த மனிதன் இரவு முழுவதும் மரக்கிளையில் தொங்கியபடி சித்திரவதையை அனுபவித்திருக்கிறான்.
    ஆக்கம்: முள்ளும்மலரும் படப்புகழ் இயக்குனர் மகேந்திரன்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அடுத்து இளைஞர்களுக்காக க.க.படம்: க.க. என்றால் முன்பே சொல்லியிருக்கிறேன். கவர்ச்சிக் கன்னி என்று பொருள் கொள்ளவும்.
இந்த வாரம் யாராக இருக்கும்?. நீங்களே பாருங்கள்

V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V

சத்தியமாக தமிழ் சினிமாவின் முதல் கவர்ச்சிக் கன்னி இவர்தான். 
யாரென்று தெரிகிறதா? தெரியாவிட்டால் விட்டுவிடுங்கள் 
நஷ்டம் ஒன்றுமில்லை. இவர் பெயரில் சென்னை பாண்டி பஜாரில் 
இவர் கட்டிய திரையரங்கு ஒன்று இருக்கிறது. 
மனோகரா திரைப் படத்தில்  வசந்தசேனை என்ற பெயரில் 
சிவாஜியுடன் கல்லா கட்டியவர் இவர்!
=========================================================
புதிர்


இந்தப் பெண்மணி மிகவும் பிரபலமானவர்.
யாரென்று சொல்லுங்கள் பார்க்கலாம்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இதோ அந்தப் பாடல்:

சிட்டுக் குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திடக் கண்டேனே
செவ்வானம் கடலினிலே கலந்திடக் கண்டேனே
மொட்டு விரித்த மலரினிலே வண்டு மூழ்கிடக் கண்டேனே
மூங்கிலிலே காற்று வந்து மோதிடக் கண்டேனே

(சிட்டு)

பறந்து செல்ல நினைத்து விட்டேன் எனக்கும் சிறகில்லையே
பழக வந்தேன் தழுவ வந்தேன் பறவை துணையில்லையே
எடுத்துச் சொல்ல மனமிருந்தும் வார்த்தை வரவில்லையே
என்னென்னவோ நினைவிருந்தும் நாணம் விடவில்லையே

(சிட்டு)

ஒரு பொழுது மலராக கொடியில் இருந்தேனா
ஒரு தடவை தேன் கொடுத்து மடியில் விழுந்தேனா
இரவினிலே நிலவினிலே என்னை மறந்தேனா
இளமை தரும் சுகத்தினிலே கன்னம் சிவந்தேனா

(சிட்டு)

படம்: புதிய பறவை
பாடியவர்: பி.சுசீலா
படலின் நாயகி. பி.சரோஜாதேவி
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்


======================================
வாழ்க வளமுடன்!

22.9.11

பாஸந்தி, பக்கோடா & ஃபில்டர் காஃபி

----------------------------------------------------------------------------------------
பாஸந்தி, பக்கோடா மற்றும்  ஃபில்டர் காஃபி

புதுப் பகுதி

வயதானவர்களுக்கு: பாஸந்தி, பக்கோடா & ஃபில்டர் காஃபி

இளைஞர்களுக்கு: பாஸந்தி, பக்கோடா, ஃபில்டர் காஃபி & வில்ஸ் ஃபில்டர் (வில்ஸ் ஃபில்டர் பதிவின் கடைசியில் உள்ளது. எடுத்துப் புகைத்தாலும் சரி அல்லது சட்டைப் பைக்குள் போட்டுக்கொண்டு போனாலும் சரி, வாத்தியார் கண்டு கொள்ள மாட்டார்!)
-----------------------------------------------------------------------------------
over to table



1. பாஸந்தி

பெண்ணை வர்ணிப்பதற்கு - அதுவும் கேட்பவன் அசந்து போகும் அள்விற்கு வர்ணிப்பதற்கு கவியரசர் கண்ணதாசனை விட்டால் யார் இருக்கிறார்கள்?

ஒரு அழகான பெண்ணை அவர் இப்படி வர்ணிக்கின்றார்:

"மின்னல் பாதி தென்றல் பாதி
உன்னை ஈன்றதோ - நீ
விடியும் காலை வெள்ளி
புது விபரம் சொல்லும் பள்ளி
எங்கும் உன் எண்ணமே
எல்லாம் என் வண்ணமே"


அடடா,  மின்னல் பாதி, தென்றல் பாதி (அதாவது இரண்டும் சேர்ந்து) உன்னை ஈன்றதோ (பெற்றதோ)  என்கிறாரே! இதற்கும் மேலே கற்பனை செய்ய எங்கே வழியிருக்கிறது? அத்தோடு விட்டாரா?

நீ விடியும் காலை வெள்ளி
புது விபரம் சொல்லும் பள்ளி

என்று வேறு அடுக்கிக் கொண்டே போகிறார்

என்னவொரு அசத்தலான கற்பனை!!!!

முழுப்பாடலையும் தெரிந்து கொள்ள வேண்டுமா? பதிவின் இறுதியில் கொடுத்திருக்கிறேன்
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
பாஸந்தி இரண்டாவது கிண்ணம்



குறும்பு

“என் விழிகளே
விரல்களாக நீண்டு
உன் இடுப்பு மடிப்புகளில்
வருட நினைக்கும்போது
உன் மேனிவீட்டை
முந்தானைக் கதவால்
மூடிக் கொள்கிறாயே -
தென்றலுக்கு
லஞ்சம் கொடுத்து
அதைத்
திறக்கச் சொல்ல
மாட்டேனா?

- கவிஞர் வாலி
-----------------------------------
அது ஏன்?
மரங்கள்
தமக்குள்
முனகிக் கொண்டன.

    இந்த மனிதர்கள் -
    நம்மைக் கொண்டு
    பல
    சிலுவைகளைச்
    செய்து விடுகிறார்கள்....

    ஆனால்....

    தம்மைக் கொண்டு
    அவர்களால்
    இன்னமும்
    ஓர்
    ஏசுவைத்
    தயாரிக்க
    இயலவில்லையே!
    அது ஏன்?

    - கவிஞர் வாலி
----------------------------------------------------
2. பக்கோடா

குடியரசு தினம்

“ஆளுநர் மாளிகையில்
விருந்து
அனைத்துக் கட்சித்
தலைவர்களுக்கும்!

பரிமாறிக் கொண்டிருந்த
பணியாளர்கள் தமக்குள்
பேசிக் கொண்டனர்.

“யார்
யாரைச்
சாப்பிடப் போகிறார்களோ?”

- கவிஞர் மு.மேத்தா
------------------------------------------------
அமெரிக்கா

தலையில் எண்ணெய்
தடவுவார்கள் உலகில்
அமெரிக்காவோ
எண்ணெய்க்காக
வளைகுடா நாடுகளின்
தலையைத் தடவுகிறது......

- கவிஞர் மு.மேத்தா
---------------------------------------------------
3. ஃபில்டர் காஃபி


   “சுவாமி, இரண்டு ஸ்லோகம் சொல்லட்டுமா?

   “சொல்லுங்கோ”

   வாசலில் கிழிந்த மேல் துண்டும், எட்டு நாள் தாடியும், அழுக்கு பூணூலும், சின்னதாய் நரைத்த குடுமியும், குழி விழுந்த கண்களூமாய் ஒரு    பிராமணன்.

   ஆதி சங்கரரின் கனகதாரா ஸ்தோத்திரம். எனக்கும் மனனம்.

   சொல்லச் சொல்ல கூடவே என் மனசும் முணு முணுக்கிறது.

   “சுவாமி நான் வரட்டுமா?

   “ரொம்ப சந்தோஷம்” இரண்டு கை அறைந்து கூப்புகிறார் அப்பா.

   “தட்சிணை தரேளா? கார்த்தாலேர்ந்து ஒரே பசி...”

   இடுப்பு பர்ஸை எடுத்துப் பிரித்து பத்து பைசாவைத் தூக்கி, நீட்டின உள்ளங்கைகளில் போடுகிறார்

   “வழியோட போற பிராமணனுக்கு வைத்தியோட சன்மானம் பத்து கட்டி வராகன்”

    எதுவும் சொல்லாது பத்து பைசா கொடுத்திருக்கலாம். பத்து கட்டி வராகன் என்று நீட்டி முழங்கியதுதான் நஞ்சு.

    வாசலில் நின்றது வெறித்துப் பார்க்கிறது. நான் மாறி மாறி இருவரையும் பார்க்கிறேன். குழி விழுந்த கண்களில் வெறுப்பும், கோபமும் தெரிகின்றன. அங்கேயும் நஞ்சு கொப்பளித்துவிட்டது.

   “பதினாறும் பெத்து பெரு வாழ்க்கை வாழணும். நீங்க போறபோது இந்த பத்துபைசா கூடவரும்”

   “எச்சக்கலை படவா, என் வாசலில் நின்னு, நான் போறது பத்தியா பேசறே” தகப்பன் சீறி எழ.....

   “பத்து பைசாவிற்கு இதுதான் பேச முடியும்” நின்று பதில் சொல்லிவிட்டு போகிறது அது.

   “பிராமணனாடா நீ! சவண்டி நாயே..” தெருவை உலுக்கும் என் தகப்பன் குரல். வந்தது காதில் போட்டுக்கொள்ளவேயில்லை.நீள நடை. நான் வீட்டிற்குள் ஓடி, என் ட்ரங்கு பெட்டியைத் திறந்து, தினமணி பேப்பர் கீழே வைத்திருந்த ஒரு ரூபாய் நாணயம் எடுத்து கால் சட்டைப் பைக்குள் போட்டுக்கொள்கிறேன். அம்மா காதில் ரகஸியமாய் சொல்கிறேன்.

   “என்கிட்ட ஒரு ரூவா இருக்கும்மா, போய் போட்டுறட்டா?”

   “போ..போ...சீக்கிரம் போ. அப்பா சொன்னது தப்புன்னு மன்னிப்பு கேளு” அதே ரகசியக் குரலில் அம்மா சொல்கிறாள்.

   - முன்கதை சுருக்கம் என்னும் தன்னுடைய சுய சரிதை நூலில், ஒரு பிரபல எழுத்தாளர் எழுதியதில் ஒரு பக்கம். அவரின் இயற்பெயர் ஸ்ரீனிவாசன். பள்ளி மற்றும் எழுத்துலகில் அவரின் பெயர் ‘பாலகுமாரன்’
-----------------------------------------------------------------------------------------------------
அடுத்து க.க. லெட்சுமி ராயின் படம் (க.க. என்பதற்கு கவர்ச்சிக் கன்னி என்று பொருள் கொள்ளவும்)
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
‘மங்காத்தா’ புகழ் லெட்சுமி ராயை நினைத்துக் கொண்டு 
நீங்கள் வந்திருந்தால், அதற்கு நான் பொறுப்பில்லை!
நம்புங்கள் எங்கள் காலத்து லெட்சுமி ராய் இவர்தான்
--------------------------------------------------------------------------------------------------
புதிர்

இந்தப் படத்தில் உள்ள பெண்மணி யார்? 
முடிந்தால் கண்டு பிடித்துச் சொல்லுங்கள்!
க்ளூ வேண்டுமா? நம் வகுப்பறை - ஜப்பான் மைனருக்கு நன்றாகத் தெரிந்தவர். ஆனால் ஜப்பானுக்கு இவர் இதுவரை போனதில்லை!
--------------------------------------------------------------------------------------------------
நட்புடன்
வாத்தியார்

22.9.2011
-----------------------------
இதோ அந்தப் பாடல்:

சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே
பிறக்கும் சங்கீதமே - அது
வடிக்கும் கவிதை ஆயிரம்
அவை எல்லாம் உன் எண்ணமே - என்
கண்ணே பூவண்ணமே

(சிரிப்பில்)

மின்னல் பாதி தென்றல் பாதி
உன்னை ஈன்றதோ - நீ
விடியும் காலை வெள்ளி
புது விபரம் சொல்லும் பள்ளி
எங்கும் உன் எண்ணமே
எல்லாம் என் வண்ணமே

நிலவென வளரட்டும்
கவிதை வெள்ளம்
நினைவுகள் தெளியட்டும்
இளைய உள்ளம்
என்னை உன்னோடு கண்டேன்.. ஓ..
உன்னைக் கண்ணாகக் கொண்டேன்

தங்கம் பாதி வைரம் பாதி
அங்கம் என்பதோ
நூல் இழையில் வாழும் பெண்மை
உன் இசையில் ஆடும் பொம்மை
எங்கும் உன் வண்ணமே
எல்லாம் உன் எண்ணமே

(சிரிப்பில்)
படம் : எங்கிருந்தோ வந்தாள்
குரல் : டி.எம்.எஸ்., சுசீலா
பாடல் : கண்ணதாசன்
இசை : எம்.எஸ்.வி.
நடிகர்கள் : சிவாஜி, ஜெயலலிதா

++++++++++++++++++++++++++++++++===

வாழ்க வளமுடன்!