மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label karma மனவளக்கட்டுரைகள். Show all posts
Showing posts with label karma மனவளக்கட்டுரைகள். Show all posts

11.5.22

ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்கிறது என்ற கவலையா? இதைப் படியுங்கள்!!!!


ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்கிறது என்ற கவலையா? இதைப் படியுங்கள்!!!!

 நமக்கு சோதனைகள், கஷ்டங்கள், துன்பங்கள் வந்தால் கடவுளிடம் நாம் கேட்பது *"ஏன் எனக்கு மட்டும் இப்படி செய்கிறாய்?"*

இந்த கேள்விக்கு ஒரு டென்னிஸ் வீரர் மிக அழகாக பதில் தந்திருக்கிறார்.

அந்த *டென்னிஸ் வீரரின் பெயர் ஆர்தர் ராபர்ட் ஆஷ் ஜூனியர்* விம்பிள்டன் ஓப்பன், யூ எஸ் ஓப்பன், ஆஸ்ட்ரேலியா ஓப்பன் ஆகிய *மூன்று கிராண்ட்ஸ்லாம் டைட்டில்களையும் வென்றே ஒரே மகன்.* தொழில் முறை போட்டியில் இருந்து 1980 ம் ஆண்டில் ஓய்வு பெற்ற வீரர். *1983 ஆம் ஆண்டில் இதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட பொழுது ரத்தம் தானமாகப் பெற்றுக் கொண்டதன் மூலமாக அவருக்கு எய்ட்ஸ் வந்தது.* அவரது ரசிகர்கள் மிகவும் வருத்தம் அடைந்தார்கள். அப்பொழுது பலரும் அவருக்கு எழுதிய கடிதத்தில் கேட்டது: *"உங்களுக்கு கடவுள் ஏன் இப்படி செய்கிறார்?"* 

இதை அடிப்படையாகக் கொண்டு அவர்  செய்தித்தாளில் ஒரு கட்டுரை எழுதினார். அந்த கட்டுரையின் தலைப்பு: 

*"WHY ME ?"*
*"ஏன் எனக்கு மட்டும்? "* 

கட்டுரையில் அவர் எழுதியது பின்வருமாறு:

உலகில் எத்தனையோ மனிதர்கள் இருக்கும் பொழுது ஏன் எனக்கு மட்டும் எய்ட்ஸ் தந்தாய்?
குடி பழக்கம் உள்ளவர்கள் எத்தனையோ பேர் இருக்கும் பொழுது அந்த பழக்கம் இல்லாத எனக்கு, ஏன் எனக்கு மட்டும் எய்ட்ஸ் தந்தாய்?
சிகரெட் பிடிப்பவர்கள் எத்தனையோ பேர் இருக்கும் பொழுது அந்த பழக்கம் இல்லாத எனக்கு, ஏன் எனக்கு மட்டும் எய்ட்ஸ் தந்தாய்? 
பல பெண்களிடம் தொடர்பு உடையவர்கள் பலர் இருக்கும் பொழுது அந்தப் பழக்கம் இல்லாத எனக்கு ஏன் எனக்கு எய்ட்ஸ் தந்தாய்? இப்படியாக நீண்டு கொண்டே போனது  அந்த கட்டுரை. அதன் முடிவில் சொன்னார்:

இதனது தொடர்ச்சி அடுத்த வாரம்.

இதைப் படித்த மக்கள் அனைவரும் மிகவும் வருந்தினார்கள். அவர் என்னதான் பதில் தரப்போகிறார் என்று காத்திருந்தார்கள்.

அடுத்த வாரம் *WHY ME PART II ஏன் எனக்கு மட்டும் பாகம்-2 வெளிவந்தது.*

அதில் அவர் எழுதியிருந்தார்:

உலகில்  *500 லட்சம்* பேர் *டென்னிஸ் விளையாடத் துவங்குகிறார்கள்.*
அதில் *50 லட்சம்* பேர் தான் *டென்னிஸ் கற்றுக் கொள்கிறார்கள்.*
அதில் *5 லட்சம்* பேர் தான் *தொழில்முறை டென்னிஸ்க்கு* வருகிறார்கள்.
அதில் *50,000*  பேர் தான் *சர்க்யூட் லெவல் டென்னிஸ்* க்கு முன்னேறுகிறார்கள். 
அதில் *5000* பேர் தான் *கிராண்ட்ஸ்லாம்* லெவல் டென்னிஸ் க்கு முன்னேறுகிறார்கள்.
அதில் *50* பேர் தான் *விம்பிள்டன்* விளையாடுகிறார்கள். 
அதில் *4* பேர் தான் *அரையிறுதிக்கு* வருகிறார்கள்.
அதில் *2* பேர் தான் *இறுதிப்* போட்டிக்கு வருகிறார்கள்.
அதில் *ஒருவர்தான் வெற்றி பெறுகிறார்*

*அந்த வெற்றி பெற்ற ஒருவராக, அந்த வெற்றிக் கோப்பையை கையில் மகிழ்ச்சியோடு தாங்குபவராக என்னை கடவுள் ஆக்கிய பொழுது நான் கேட்கவில்லை "ஏன் எனக்கு மட்டும்?" என்று.* 

*வெற்றி மேல் வெற்றி தந்த பொழுது நான் கடவுளிடம் கேட்கவில்லை ஏன் எனக்கு மட்டும் என்று.* 

*பேரும் புகழும் குவிந்தன. அப்போது கடவுளிடம் கேட்கவில்லை ஏன் எனக்கு மட்டும் என்று.*

*பணம் மழைபோல கொட்டியது. அப்பொழுது கேட்கவில்லை ஏன் எனக்கு மட்டும் என்று.*

*அப்போதெல்லாம் கேட்காத நான் இப்பொழுது கேட்பதற்கு என்ன தகுதி இருக்கிறது? நான் கேட்க மாட்டேன். கடவுள் இது வரை தந்ததை  எப்படி மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டேனோ அது போல இதையும் நான் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்கிறேன்.*

 *இதுவரை எனக்காக வாழ்ந்த நான் இனி பிறருக்காக வாழப் போகிறேன்.* என்னுடைய பணம், புகழ், செல்வம், மீதமுள்ள வாழ்நாள் அனைத்தையும் இந்த நோய் பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், இதற்கான மருந்து தயாரிக்கும் ஆராய்ச்சிகளிலும் நான் செலவு செய்யப் போகிறேன். கடவுள் அனைவரையும் ஆசீர்வதிக்கட்டும். நன்றி.

என்று முடித்திருந்தார்.

*இன்பம் வந்தபோது ஏனென்று கேட்காத நாம் துன்பம் வரும்போது மட்டும் ஏன் என்று கேட்பது எப்படி சரியாக இருக்க முடியும்?*

 *இன்பம், துன்பம் இரண்டையும் கடவுளே தருகிறார்.* இரண்டுமே நம் நன்மைக்குத்தான் என்று உணர்வோம். வாழ்வில் மகிழ்ச்சியாக இருப்போம்.
--------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
==========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

2.2.22

தர்மத்தின் அளவுகோல் எது..?


தர்மத்தின் அளவுகோல் எது..?

தர்ம குணம் படைத்த மாமன்னன் போஜன்.

மகளின் திருமணத்திற்காக மன்னரிடம் பணம் பெற எண்ணிய ஒரு விவசாயி மன்னரை காண தலைநகர் புறப்பட்டார்.

வழியில் பசித்தால் உதவும் என்று சில ரொட்டிகளை பொட்டலம் கட்டிக் கொண்டார்.

வழி நெடுக.,

திருமணத்திற்கு வேண்டிய அளவு பணம் தர மன்னர் சம்மதிக்க வேண்டுமே என்று கடவுளை வேண்டிக் கொண்டே வந்தார்.

பசி எடுக்கவே,

ஒரு குளக்கரையில் அமர்ந்து., எடுத்து வந்த ரொட்டியை சாப்பிட கையில் எடுத்தார்.

மனதிற்குள் இந்த உணவைக் கொடுத்த கடவுளுக்கு விவசாயி நன்றி சொன்னார்.

அப்போது நாய் ஒன்று அவர் எதிரில் எலும்பும் தோலுமாக வந்து நின்றது.

இரக்கப்பட்ட விவசாயி ஒரு ரொட்டியை அதனிடம் வீசினார்.

ஒரே விழுங்காக உள்ளே தள்ளிய நாய்., மீண்டும் ஆவலுடன்பார்த்தது.

இரக்கப்பட்ட விவசாயி அத்தனை ரொட்டியையும் கொடுத்து விட்டார்.

ஒரு நாள் சாப்பிடாவிட்டால் உயிரா போய்விடும்... என்று நினைத்து.

அரசர் அவர் தகுதிக்கு தானம் கொடுத்தால்., பிரஜையான நாமும்., நம்மால் முடிந்ததை செய்வதுதானே முறை., என தனக்கு தானே சமாதானம் சொல்லிக் கொண்டார்.

பசியை பொறுத்துக் கொண்டு தலைநகரை அடைந்தார்.

அங்கிருந்த தர்மசத்திரத்தில் சாப்பிட்டார்.

பிறகு மன்னனை சந்தித்து தான் வந்த விஷயத்தைச் சொன்னார்.

மன்னர் போஜன் விவசாயியிடம்., "என்னிடம் தர்மம் கேட்டு வந்துள்ளீர்களே., நீங்கள் ஏதாவது தர்மம் செய்திருந்தால் சொல்லுங்கள்.

அதை நிறுக்கும் தராசு என்னிடம் இருக்கிறது.

அது எந்த அளவு எடை காட்டுகிறதோ., அந்த அளவுக்கு தங்கம் வாங்கிக் கொள்ளுங்கள்" என்றார் மன்னர்.

"தர்மம் செய்யும் அளவு பணம் என்னிடம் இருந்தால்., பணம் வேண்டி உங்களிடம் ஏன் நான் வரப் போகிறேன்..?

வழியில் பசித்திருந்த நாய்க்கு உணவளித்தேன்

அதற்கு ஈடாகத்தான் உங்கள் சத்திரத்தில் நான் சாப்பிட்டு விட்டேன்.

எனவே நான் ஏதும் பெரிதாக தர்மம் செய்ததில்லை." என்று அடக்கமாக சொன்னார் விவசாயி.

"உங்கள் பசியை பொறுத்து கொண்டு நாய்க்கு உணவிட்டதும் புண்ணியமே." என்று போஜன் தராசை கையில் எடுத்தார்.

ஒரு தட்டில் விவசாயி செய்த தர்மத்தையும்., மறுதட்டில் தங்கத்தையும் வைத்து நிறுத்தார் மன்னர்.

கஜனாவில் இருந்த தங்கம் முழுதும் வைத்தும் கூட தராசுத்தட்டு சமமாகவில்லை.

வியந்த மன்னன், "உங்களை பார்த்தால் சாதாரணமானவராக தெரியவில்லை. என்னைச் சோதிக்க வந்திருக்கும் தாங்கள் யார்..?" என்றார்.

"மன்னா நான் ஒரு விவசாயி. என்னைப் பற்றி சொல்லுமளவு வேறு ஏதுமில்லை." என்றார் பணிவுடன்.

அப்போது தர்ம தேவதை அங்கு தோன்றினாள்.

"போஜனே..! தராசில் நிறுத்துப் பார்ப்பது அல்ல தர்மம்.

கொடுத்தவரின் மனமே அதனது அளவுகோல்.

இவர் மனம் மிகப் பெரியது.

பகட்டுக்காக தர்மம் செய்யாமல்., ஆத்மார்த்தமாக., வேண்டிய உயிருக்கு தன்னிடம் இருப்பதையெல்லாம்., அதுவும் உணவை கொடுத்து விட்டார்.

அதனால் நீ எவ்வளவு பொன் வைத்தாலும்., தராசு முள்  அப்படியேதான் இருக்கும்.

ஆகவே அவர் என்ன கேட்டு வந்துள்ளாரோ., அதை கேட்டு., கொடுத்தால் போதுமானது." என்றாள்.

இதை ஏற்ற மன்னன் விவசாயிக்கு வேண்டிய அளவு தங்கம் கொடுத்து வழி அனுப்பினார்.

விவசாயி மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்தினார்.

ஆத்மார்த்த மனதுடன் உன் தர்மத்தை/கடமையைச் செய்.

பலன்தானாக வரும்.

அதுவே உலகின் மிகச் சிறந்த தர்மமாகும்.
-----------------------------------------------------
படித்தேன்:பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
=======================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

16.9.21

மனவளக் கட்டுரை: மருத்துவப் படிப்பு!


மனவளக் கட்டுரை: மருத்துவப் படிப்பு!

"உன் கழுத்துல அந்த stethoscope மாட்டி ஒரு வாட்டி பாத்துரனும். பாத்துட்டேனா நா நிம்மதியா கண்ணை மூடுவேன்" இந்த மாறி  குழந்தைகளிடம் பேசும் பெற்றோர்களுக்கு இந்த பதிவு.* 

நீங்கள் நினைப்பதை விட MBBS படிப்பு மிக மிக கடினம். அது மட்டுமில்லாமல் இப்போது ஏகப்பட்ட டாக்டர்கள் உள்ளார்கள் தமிழகத்தில். இனிமே புதுசா டாக்டராகி survive பண்றது ரொம்ப கஷ்டம். 
 
10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பில் 100இற்கு 98,99 வாங்கிய மாணவர்கள் MBBS முதலாம் ஆண்டில் JUST PASS ஆகி தேர்ச்சி பெற முடியாமல் அவ்வளவு பேர் FAIL ஆவார்கள் என்று உங்களுக்கு தெரியுமா ? 

அப்படி FAIL ஆனவர்கள் , ARREARS உடன் 2ND YEAR  செல்ல முடியாது . முதலாம் ஆண்டில் தேர்ச்சி பெற்ற பிறகு தான் 2ND YEAR போக முடியும். 
நீங்கள் நினைப்பது போல MBBS படிப்பு 5 ஆண்டுகள் கிடையாது. 

1ST YEAR -1 ஆண்டு
2ND YEAR -1½ ஆண்டுகள்
3RD YEAR -1 ஆண்டு
FINAL YEAR -1 ஆண்டு
HOUSE SURGEON -1 ஆண்டு , 

 FAIL ஆகாமல் தேர்ச்சி பெற்றாலே ஆக மொத்தம் ஐந்தே முக்கால் ஆண்டுகள் ஆகி விடும். நடுவுல FAIL ஆனா, 6 ஆண்டுகள், 7 ஆண்டுகள் என நீண்டு கொண்டே போகும்.

ஒரு MBBS மாணவன் 3RD YEAR படிக்கும் போது, அவனோடு 12படித்த நண்பன் TIER 1 கல்லூரிகளில் B.E , B. TECH இல் சேர்ந்தவன் "மச்சி நா கேம்பஸ் இன்டர்வியூ ல செலக்ட் ஆயிட்டேன். மாசம் 50,000 சம்பளம் " என்று போன் பண்ணி சொல்லி depression ஆக்கி விடுவான். " நாம தப்பா MBBS எடுத்துட்டோமோனோ "நினைக்க வைத்து விடுவான். 

ஒரு வழியா MBBS முடிச்சு degree வாங்கியாச்சு. அடுத்து என்ன செய்வது ?
பெரிய மருத்துவமனைகளில் duty doctor ஆக பணியில் சேரலாம். மாசம் 25,000-30,000 கிடைக்கும். 
கிளினிக் ஆரமிச்சா "அவன் வெறும் MBBS டாக்டர், அவன்கிட்ட போவாத. MD டாக்டர் கிட்ட போ" னு ஒரு கேசும் வராது. 

சரி. MD படிக்கணும்னா, அதுக்கும் NEET நுழைவுத்தேர்வு இருக்கு. அதுக்கு  2-3 வருஷம் PREPARE பண்ணனும். அதுக்கப்புறம் MD  சேர்ந்து 3 வருஷம் படிக்கணும். இதெல்லாம் முடிக்க 35 வயதாகிடும். ( அதற்குள் முடிப்பவர்களும் இருக்கிறார்கள். கொஞ்சம் rare) 

அதுக்குள்ள அந்த கேம்பஸ் இன்டர்வியூ ல செலக்ட் ஆன என்ஜினீயரிங் நண்பன், 10 வருஷம் நல்லா சம்பாரிச்சு, EMI ல கார் வாங்கிருப்பான். HOME LOAN போட்டு வீடு கட்டிருப்பான். இல்லனா USA/AUSTRALIA ல செட்டில் ஆயிருப்பான். 

சரி பரவால்ல, லேட் ஆனா என்ன ? அதான் MD முடிச்சாச்சே இனிமே நல்ல பிரகாசமான எதிர்காலம் இருக்கும் னு நீங்க நினைக்கலாம். அங்க தான் ட்விஸ்ட். 

1.அரசு பணியில் சேர்ந்து மக்களுக்கு சேவை செய்யலாம். அப்படி அரசு பணியில் சேர்ந்த மருத்துவர்கள் , ஊதியம் போதவில்லை என்று போராட்டம் நடத்தும்போது, " அதான் கிளினிக் ல நல்லா சம்பாரிக்கிராங்களே. இவனுங்க பாக்குற  வேலைக்கு இந்த சமபளம் போதாதா ?" என்று மருத்துவர்களை  திட்டியவர்களில் நீங்களும் ஒருவர் என்பதை மறவாதீர்கள்

2.கார்ப்பரேட் மருத்துவமனைகளில் வேலைக்கு சேரலாம். ஆனால் அங்கே நாம் 12ஆவது முடித்தவுடன் குடுக்கும் பேட்டியில் செய்வதாக சொல்லிய சேவையெல்லாம் செய்ய முடியாது. HOSPITAL  POLICIES மற்றும் PROTOCOL களுக்கு கட்டுப்பட்டு தான் வேலை செய்ய முடியும். சுயமாக ஏதும் செய்ய முடியாது. 

3.இன்றைய கால கட்டத்தில் சொந்தமா இடம் வாங்கி, கிளினிக் கட்டுவது ரொம்ப சிரமம். அப்படியே புதுசா கட்டினாலும், நோயாளிகள் வர மாட்டார்கள். ஒன்னு அரசு மருத்துவமனைக்கு போவார்கள். இல்லைனா, கார்ப்பரேட் மருத்துவமனை, இல்லைனா அதே ஊரில் ரொம்ப வருஷமா வைத்தியம் பார்க்கும் சீனியர் டாக்டரிடம் தான் போவார்கள்.  கிளினிக்கில் கூட்டம் வர எப்படியும் 5-10 வருடங்கள் ஆகி விடும் .

கிளினிக்கில் வெற்றி பெற,  புத்தக அறிவு மட்டும் போதாது, நோயாளிகளின் நாடி துடிப்பை பார்த்தால் மட்டும் போதாது. அவர்களின் மன ஓட்டத்தை அறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும். அப்படியே எல்லாம் செஞ்சாலும், கடைசியா அவர்கள் ஒரு வார்த்தை வைத்திருப்பார்கள். அதான் "கைராசி" 
அது இல்லைனு முத்திரை குத்திட்டாங்கன்னா அவ்ளோ தான். கிளினிக் ல ஒக்காந்து ஈ தான் ஓட்டனும்.

அவ்வளவு ஏன் ? சாதாரண மக்களுக்கு கொரோனா இறப்பு சதவீதம் 2% . டாக்டர்களின் இறப்பு சதவீதம் 15%

எனவே பெற்றோர்களே,  நீங்கள் நினைப்பது போல மருத்துவ படிப்பும், மருத்துவர்கள் வாழ்வும் அவ்வளவு சுலபம் அல்ல. உங்கள் ஆசைகளை உங்கள் பிள்ளைகள் மீது தினிக்காதீர்கள். " என் மீது நீங்கள் வைத்திருக்கும் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவேணா என்று தெரியவில்லை " என்று NEET தேர்வுக்கு முதல் நாள் கடிதம் எழுதி வைத்து விட்டு மாணவச்செல்வங்கள்  இறப்பது மிகவும் வேதனையான விஷயம். 
வீட்டிலேயே உட்கார்ந்து 2 ஆண்டுகளாக NEET தேர்வுக்கு படிப்பதெல்லாம் மிகப்பெரிய மன அழுத்தத்தை அளிக்க கூடியவை. MBBS கிடைக்கலைனா, Genetic engineering, Robotics, Microbiology, Embryology, Agri போன்ற படிப்புகளில் சேர்த்து விடுங்கள். அவை தான் எதிரகாலத்தில் மிகவும் most wanted படிப்புகளாக இருக்கப்போகிறது. 

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா என்று தோளில் கோட் போட்டு பாடும் முரளி, வானத்தை போல பிரபுதேவா போன்ற டாக்டர் கேரக்டர்களை மனதிலிருந்து எடுத்து விடுங்கள்.  ஆதித்ய வர்மா/அர்ஜுன் ரெட்டிய  நினைச்சுகோங்க. அதான் இன்றைய நிலை.

Dr. பிரகாஷ் மூர்த்தி MBBS, MD
மன்னார்குடி🦚🔥🦚🔥🦚🔥🦚🔥
படித்ததில் பிடித்தது

--------------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

27.4.21

மூன்று வகை மனிதர்கள்!


மூன்று வகை மனிதர்கள்!
.................................................

உலகில் மூவகை நிலைகளில் இயங்கும் மனிதர்கள் இருக்கிறார்கள். தன்னைப் பற்றிய பொறுப்பைக்கூட ஏற்றுக் கொள்ளாமல், யார் கையிலாவது தன்னை ஒப்படைக்க காத்திருப்பவர்கள் ஒருவகை, அவர்கள் புழுவை விடக் கேவலமானவர்கள்...

மற்றவர்களைப் பற்றி கவலையின்றி, தன்னை மட்டும் பார்த்துக்கொள்பவர் அடுத்த வகை, இவர் தன்நலவாதி. மிருகத்தைப் போன்றவர்...

மிருகங்கள் பொதுவாக எதற்கும் தீங்கு நினைப்பதில்லை. சிங்கம் பசித்திருக்கும்போது எதிரே போனால், அது உங்களை உணவாகப் பார்க்கிறது. மற்ற நேரத்தில் அது உங்களை எதிரியாக கூடப் பார்க்காது...

தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு ஒரு தேவை என்றால் அவர்கள் கேட்காமலேயே, தாமாகவே முன் வந்து,அவர்களின் தேவையை அறிந்து உதவி செய்பவர்கள் மூன்றாவது வகை...

இவர்கள்தாம் மனிதன் என்ற சொல்வதற்கு அருகதை உள்ளவர்கள்...
ஒருவருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு, ஒரு புதிய அறை ஒதுக்கப்பட்டது. தனக்குக் கீழே பணிபுரிபவர்களுக்கு எதிரில் தன்னை பெரிய ஆளாகக் காட்டிக் கொள்ள விரும்பினார்...

அவரது அறைக் கதவு தட்டப்பட்ட போது, சட்டென்று தொலைபேசியை எடுத்து காதில் வைத்துக் கொண்டார். நிறுவனத்தின் முதலாளியுடன் உரிமையோடு பேசுவது போல் பாவனை செய்தார்.

பிறகுதான் உள்ளே வந்தவரை கவனித்ததாகக் காட்டிக் கொண்டு, "சொல் தம்பி, உனக்கு உனக்கு என்ன வேண்டும்...?” என்றார்...

அவரோ!,  மென்சிரிப்பு சிரித்துவிட்டு சொன்னார், ஐயா!, தங்கள் அறையில் உள்ள தொலைபேசிக்கு இணைப்பு கொடுக்க வந்திருக்கிறேன் என்றார்...

மற்றவர்களிடத்தில் செயற்கையாக தன் பிம்பத்தை உயர்த்திக் காட்டுவதற்காக முனைபவர்கள் இப்படித்தான் மூக்கு உடைபடுவார்கள்...

*ஆம் நண்பர்களே...!*

🟡 *பொறுப்புகளை தட்டிக் கழிக்காதீர்கள், தப்பி ஓடப் பார்க்காதீர்கள். அப்படி செய்தால் உங்களுக்கு மன அமைதி கிடைக்காது. அதிகமான கவலைகள்தான் வந்து சேரும்...!*

🔴 *தன்நலத்திற்காக மற்றவர்களை பயன்படுத்தாதீர்கள். மரம் உதவுகிறது நிழல் தந்து. புல்லங்குழல் உதவுகிறது இசைக்கு தன் உயிர் தந்து, ஏணி கூட உதவுகிறது நம்மை மேலே ஏற்றி விட...!!*

⚫ *ஆறறிவு உள்ள மனிதர்களான நாம் இயன்றவரை பிறருக்கு, அவர்கள் கேட்காமலே அவர்களின் தேவை உணர்ந்து உதவி செய்யவேண்டும். நாம் செய்தது நமக்கே திரும்ப வரும் என்பதுதான் நியதி. இயன்றவரை உதவுவோம்...!!!*
-------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

12.4.21

அறிவுக் கூர்மை என்பது யாதெனில்...!


அறிவுக் கூர்மை என்பது யாதெனில்...!

ஒருவர் வியாபாரத்தில் அறிவாளியாக இருப்பார். மற்றொருவர் கணிணித் துறையில் அறிவாளியாக இருப்பார். இன்னொருவர் காலணியைத் தைப்பதில் அனுபவம் மிகுந்தவர்களாக இருப்பார். மற்றொருவர் சமையல் செய்வதில் சிறந்தவராக இருப்பார். வேறொருவர் அரசியலில் கொடிகட்டிப் பறப்பார்...

இப்படி ஒரு குறிப்பிட்ட செயலில் திறமையாக இருந்து விட்டால், இவர்கள் எல்லாத்துறைகளிலும் அறிவாளிகள் என்று பொருளாகுமா...?

இவர்களால் தொழில் தொடர்புற்ற மற்ற சுழ்நிலைகளில் வெற்றியடைய இயலாமல் போகலாம். அப்போழுது இவர்களின் தொழில் திறமை பொருளற்றதாகிவிடும்.

இவர்கள் பணம் சம்பாதிப்பதிலும், வியாபாரத்திலும்,
அரசியலிலும் வெற்றி அடையலாம். இப்படி பிழைப்பையே வாழ்க்கையின் நோக்கமாக இருப்பவர்களை அறிவாளிகள் என்று அழைக்கவியலாது...

இவர்கள் தங்கள் வாழ்க்கையை நல் வழியில் ஈடுபடுத்தாமல், வசதிகளை மட்டும் அதிகப்படுத்திக் கொள்பவர்களின் அதுபோன்ற அறிவுக் கூர்மை நமக்குத் தேவையில்லை...

*நாம் எப்போதும் சிக்கல்களால் அறிவு குறைந்துவிட்டது என்ற அவசர முடிவுக்கு வந்துவிடக் கூடாது...*

*எந்தச் சூழ்நிலையையும்  எப்படி அணுகுகிறோம் என்பதில்தான் சிக்கல்களுக்குத் தீர்வு இருக்கிறது...*

ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையை  விரும்பவில்லை என்பதால்,அந்தச் சூழ்நிலையைத் துரத்திவிட இயலாது...

அப்போது நாம் அறிவுக் கூர்மையைப் பயன்படுத்தி, என்ன செய்தால் குறைவான பாதிப்பு இருக்கும் என்று ஆலோசித்து செயல்பட வேண்டும்...

*எனவே எந்தச் சூழ்நிலையையும் விருப்பு வெறுப்பு இன்றி அணுக வேண்டும்...*

ஒவ்வொரு நிகழ்வுகளையும் நம் முன்னேற்றத்திற்கு எவ்வாறு பயன்படுத்தலாம் என்று  நம் அறிவுக் கூர்மையோடு திறந்த மனதோடு ஆராய்தல் வேண்டும்..

*ஆம் நண்பர்களே...!*

*சிக்கல்களா...?,இல்லையா...? என்பது நிகழ்வுகளில் இல்லை. அதை நாம் எப்படி அறிவுக் கூர்மையோடு நாம் ஏற்கின்றோம் என்பதில்தான் இருக்கிறது...*

*கிடைத்ததை வைத்து வாழ்க்கையில் மேல்நோக்கி எப்படிப் பயணிப்பது என்று காண்பதுதான் உண்மையான அறிவுக் கூர்மை...*
---------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
==================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

18.3.21

நேர மேலாண்மை" (Time Management)



நேர மேலாண்மை" (Time Management)

காலையில் எழுந்ததும் ஒவ்வொருவருக்கும் இருபத்து நான்கு மணிநேரம் கிடைக்கிறது. அதை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்தே ஒருவரின் வெற்றி வாய்ப்பு முடிவு செய்யப்படுகிறது...

நேரம், இன்றைக்கு உலகின் மிகப் பெரிய தேவை. எல்லோருக்குமே இது அவசியத் தேவை. நேரம் ஒரு பெரிய வளம். ஆனால்!, பணத்தைப் போல, பொருள்களைப் போல நேரத்தைச் சேமித்துவைக்க முடியாது...

நேரத்தைக் கையாள முடியாத நாம் நேரமின்மையைப் பற்றிப் புலம்புவதைத் நாள்தோறும் நடவடிக்கையாகக் கொண்டிருக்கிறோம்...

நமக்கு நெருக்கமான நபர்கள் பேசுவதைக்கூட நம்மால் செவி சாய்த்து கேட்க முடியாமல் போகிறது. கிடைக்கின்ற காலத்தை வீண் பொழுது போக்குகளில் செலவழிப்பவா்கள் வாழ்வில் வெற்றி பெற இயலாது...

"நேரம் என்பது உங்களுக்கு கொடுக்கப்பட்ட ஒரே செல்வம். அந்த செல்வத்தை எப்படி செலவு செய்ய வேண்டுமென்ற உாிமை உங்களுக்குத்தான் கொடுக்கப்படுகிறது.

உங்களுடைய அந்தச் செல்வத்தை மற்றவா்கள் தங்களது நலத்திற்காகப் பயன்படுத்திக் கொள்ள அனுமதித்து ஏமாந்து விடாதீா்கள்." என்கிறாா் அமொிக்க எழுத்தாளா் காா்ல் சான்ட்பா்க்...

உங்கள் நேரம் உங்களுக்காகவே. அதை அடுத்தவருக்காக இழக்காதீா்கள். உங்கள் நேரத்தை, உங்கள் இலக்குகளை அடையும் முயற்சிக்காக செலவிடுங்கள்...

எதையும் நாளை செய்வோம் என்று தள்ளிப்போட வேண்டாம். நாளை, நாளை என்று தள்ளிப்போடும் பழக்கம் நல்லதல்ல. தற்போது இருக்கின்ற காலம் மட்டுமே உங்களுக்கு உாியது. மன உறுதியோடு வாழ்க்கையை நடத்துங்கள்...

நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் திட்டமிடுங்கள். ஒரு குறிப்பிட்ட வேலையை இவ்வளவு நேரத்திற்குள் செய்து முடிக்க வேண்டும் என்ற பழக்கத்தை வளா்த்து கொள்ளுங்கள்.

நீங்கள் திட்டமிட்டு செய்யும் செயல்களில் மனநிறைவு இருக்கும். கால விரயத்தைத் தடுக்கலாம்...

ஆம் நண்பர்களே...!

கால நேரத்தை பணிக்கு ஏற்றவாறு ஒதுக்கி நடைமுறைப்படுத்த வேண்டும். இதனால் சரியான நேரத்தில் பணிகள் முடிந்து நமது வேலைபளு மீதமாகும். அதோடு மனதுக்கு அமைதியும், மகிழ்ச்சியும் கிடைக்கும்...!

மறுநாள் வேலைக்கு முதல்நாளே திட்டமிடுங்கள். நாம் எவ்வளவுதான் திட்டம் போட்டாலும், நாம் எதிர்பாராத வேறு வேலைகள் வரலாம். அதற்கும் நேரம் ஒதுக்க வேண்டும். அதை செய்யும் நேரத்தில், நீங்கள் ஏற்கனவே திட்டமிட்டிருந்த ஒரு சில வேலைகள் தாமதமாகலாம். அவைகளைச் செய்ய நேரம் ஒதுக்க வேண்டும்...!!

முதலில் கடினம் என்று தோன்றினாலும் சிறிது கட்டுப்பாட்டுடன் முயற்சித்தால் நேர மேலாண்மையை எளிதாக செய்யலாம். எந்தவொரு செயலையும் செய்ய ஒரு முறைக்கு, இருமுறை ஆலோசித்து முடிவெடுங்கள்...!!!

நேர்மை தவறாமல், நேரம் தவறாமல் எதையும் பின்பற்றினாலே வாழ்க்கையில் நிச்சயமாக முன்னேறலாம். வெற்றியின் முதுகெலும்பு இவை இரண்டும்தான்...!
-------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
===============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

23.12.20

ஒப்பீடு வேண்டாம்!


ஒப்பீடு வேண்டாம்!    

*மினிமலிசம் (Minimalism)..*

சான்பிரான்சிஸ்கோ பெடரல் ரிசர்வ் வங்கி தற்கொலைக்கும், வருமானத்துக்கும் என்ன தொடர்பு என ஆராய்ந்தது.

அதில் தெரிய வந்த ஒரு விவரம் மிக ஆச்சரியகரமானது...ஒருவரின் அண்டைவீட்டார், நண்பர்கள்...இவர்களின் வருமானம் உயர்ந்தால் அவர் தற்கொலை செய்துகொள்ளும் வாய்ப்பு 10% கூடுகிறது. ஏழை, பணகாரர் வேறுபாடே இதில் கிடையாது...

அண்டை வீட்டார், நண்பர்களின் வருமானம் உயர்ந்தால் நாம் ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்?

ஒப்பீடல் தத்துவம் தான்...

"அவனுக்கு வருமானம் உயர்கிறது, பெரிய கார் வாங்கிட்டான், பாரின் ட்ரிப் போறான், பையன்/பொண்ணு பெரிய காலேஜ்ல படிக்கறாங்க..."

யாருடன் நீங்கள் உங்களை சமமாக கருதி ஒப்பிடுகிறீர்களோ, அவர்கள் வருமானம் எல்லாம் மேலேறி, உங்கள் வருமானம் ஏறவில்லை எனில் வருத்தபட்டு தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

சேரன் இயக்கத்தில் "திருமணம்" எனும்  திரைப்படம் கண்டேன். திருமணத்தில் மினிமலிசம் எனும் கோட்பாட்டை வலியுறுத்தி அழகாக எடுக்கபட்ட படம். அதில் சொல்லப்பட்ட பல விசயங்கள் அதிர்ச்சியை அளித்தன.

கல்யாணம் இன்விடேசன் ஒன்றுக்கு ஐநூறு ரூபாய். 

3000 பேருக்கு இன்விடேசன் கொடுக்க 12 லட்சம் ரூபாய் செலவு ஆகிறது.

கல்யாணம் மண்டப செலவு ஆறு லட்சம்.

சுமாரான மிடில்க்ளாஸ் கல்யாணம் செலவு 35 லட்சம் வருகிறது.

எல்லாம் ஒரு நாள் விசேசத்துக்கு...

மகள் கல்யாணத்துக்கு கடன் வாங்கி, கடனை கட்ட முடியாமல் திணறும் மேலதிகாரி.

"என் அண்ணனுக்கு பெண் கொடுத்த இடத்தில் அவனை நல்லா சப்போர்ட் பண்றாங்க. எனக்கு அப்படி சப்போர்ட் பண்ணி விடற மாதிரியான மாமனார் வேணும்" என ஆசைப்படும் அவரது மருமகன்...இதனால் லஞ்சம் வாங்கும் நிலைக்கு போய் கைது ஆகிறார் மாமனார்.

இதற்கும் மருமகன் நல்ல வேலைக்கு தான் போகிறான். ஆனால் அதைவிட நல்ல ஸ்டேடஸ் வேணும் என ஆசை.

ஆக மற்றவர்களுடன் தன்னை அனைத்திலும் ஒப்பிட்டுகொள்வது.

அவர்களை விட குறைவாக செலவு செய்தால் ஸ்டேடஸ் போய்விடும், அவர்கள் நம்மை மதிக்க மாட்டார்கள் என நினைத்துக்கொள்வது.

கடன் வாங்கி ஆடம்பரமாக செலவு செய்வது.

அதை பார்த்து அனைவரும் காப்பி அடித்து அதை ஒரு மரபாக, கலாசாரமாக உருவாக்கி வைத்திருப்பது.

*அதை கேள்வி கேட்பவர்களை "கஞ்சம், பிசினாரி" என ஏளனம் செய்வது...*

"இந்திந்த செலவை இப்படித்தான் செய்யணும்" என்பதையே ஒரு மரபாக ஆக்கி வைத்திருப்பது, அதை வைத்து பெண்வீட்டார், மாப்பிள்ளை வீட்டார் அடித்துக்கொள்வது.

"எங்க அந்தஸ்துக்கு தக்க மாதிரி பண்ணிடுங்க" என்பது.

*"கல்யாணத்துக்கு பெரிய மனுசங்க வர்ராங்க, சிக்கனமா செஞ்சா அவங்க என்ன நினைப்பாங்க.."* என்பதையே காரணம் காட்டி செலவுகளை ஏற்றுவது.

"கடன் வாங்கி ஆடம்பரமா கல்யானம் பண்ணனும்னு எந்த வேதத்தில், சாஸ்திரத்தில் சொல்லிருக்கு" என சேரன் அழகாக கேட்பார்.

*இம்மாதிரி செலவுகளை செய்கையில் நல்லா இருக்கும்.  செய்து முடித்த பின் வாழ்நாள் முழுக்க கடன், நல்லபடி துவங்கவேண்டிய திருமண வாழ்க்கை அடிதடியில் துவங்குவது*.

இது தான் கலாசாரம், மரபு என எங்கே யார் சொன்னார்கள்?

மற்றவர்களை பார்த்து எதையும் செய்வதை நிறுத்த வேண்டும்.

கடன் வாங்குவதில், தண்ட செலவு செய்வதில் இருக்கும் போட்டியால் தான் குடும்பமானமோ, மரியாதையோ  காப்பாற்ற படுகிறது என எதுவும் கிடையாது.

இதை எல்லாம் பழைய தலைமுறைகளை சார்ந்தவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.

இப்போதைய தலைமுறைதான் சிக்கனமான திருமணம், மினிமலிசம் அடிப்படையிலான வாழ்க்கை எனும் புதிய மரபை முன்னெடுக்க வேண்டும்.
[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
===============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

25.11.20

கவலையைத் தூக்கி எறியுங்கள்!!!

கவலையைத் தூக்கி எறியுங்கள்!!!

கவலைப்படும் பழக்கம் ஒரு நோய். கவலை எனப்படுவது தொடக்கத்தில் ஒரு பழக்கமாகி, பின்னால் அதுவே ஒரு நோயாக ஆகிவிடுகிறது என்கின்றனர் உளவியலாளர்கள்...

அதாவது!, கவலைப்படுவது என்பது ஒருவனது இயல்பு, குணம் என்றாகி விடுகிறது. பயம், நடுக்கம், கவலை என்பதெல்லாம் பிறர் 
உருவாக்குவதில்லை. நாமே உருவாக்கிக் கொள்கிறோம்...நம்முடைய அறியாமையால் உருவாக்கிக் கொண்டு அவதிப்படுகிறோம்.  ஒவ்வொருவனின் தலை மீதும் இரண்டு சுமைகள். அதுவே அவனை 
அவதிக்கு உள்ளாக்குகின்றன...

ஒன்று!, கடந்த காலத்தில் அவன் பட்ட துன்பங்களின் மறு நினைவு. மற்றொன்று எதிர்காலத்தில் என்னாகுமோ என்ற அச்ச விளைவு...

வெற்றியை விரும்புவோர் இந்த இரண்டு சுமைகளையும் தூக்கித் தூர எறிந்து விட்டு, வாழ்க்கையை அனுபவிக்கவும், அதை முன்னோக்கிச் செலுத்தவும் கற்றுக்கொள்ள வேண்டும்...

உளவியல் அறிஞர் வழக்கம் போல் கணினித் துறை ஊழியர்களுக்கு மன இருக்க மேலாண்மை குறித்து பாடம் எடுத்து கொண்டிருக்கிறார்...

எளிமையாக அனைவரிடமும் கலந்துரையாடிக் கொண்டே மேசையின் மீது வைக்கப்பட்டிருந்த தண்ணீர் நெகிழ்பானின் மூடியை திறந்து பக்கத்தில் வைத்திருந்த கண்ணாடி குடுவையில் தண்ணீரை ஊற்றினார்...

குடிப்பதற்கு தான் தண்ணீர் ஊற்றுகின்றார் என அனைவரும் எண்ணிக் கொண்டிருக்கும் வேளையில், அதைக் குடிக்காமல் கையில் எடுத்து அனைவருக்கும் தெரியும்படி உயர்த்தினார்...இந்த கையில் வைத்திருக்கும் தண்ணீர் அளவு எவ்வளவு இருக்கும் என வினவினார்...? 

எல்லோரும் ஒவ்வொரு அளவைக் கூறினார்கள்...

நீங்கள் கூறும் அளவுகளில் ஏதேனும் ஒன்றேனும் உறுதியாக இருக்கும். ஆனால்!, நான் இதை எவ்வளவு நேரம் இதை இப்படியே கையில் உயர்த்திப் பிடித்துக் கொண்டிருக்க இயலும்...

ஒரு விநாடிகள் வைத்திருந்தால் ஒன்றும் ஆகாது. ஒருவேளை ஒரு மணி நேரம் வைத்திருந்தால் என் கை வலிக்கும். அனால்!, நாள் இதை நாள் முழுக்க இப்படியே வைத்திருந்தால் என் நிலை என்ன ஆகும் என ஆலோசியுங்கள்...

நம் கவலையும் இப்படித் தான். ஒரு சில வினாடிகள் நினைத்து வருந்தினால் ஒன்றும் ஆகாது. ஒருவேளை ஒரு சில மணிநேரம் என்றால் மனதை பாதித்துவிடும்...

எப்பொழுதுமே நினைத்துக் கொண்டிருத்தால் நமது வாழ்வின் 
ஏற்றத்தையே அழிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுவோம். இந்த
உரையை கேட்ட அரங்கம் கரவோசைகளால் 
நிரம்பியது...

*ஆம் நண்பர்களே...!*

*கவலைகள் ஒருவனின் உடலில் இருக்கும் மின்சார சக்தியை உறிஞ்சி விடுகின்றன. ஆகவே!, நீங்கள் ஒருபோதும் கவலைப்படும் மனிதனாக உருவெடுக்காதீர்கள்...!*

🔴 *நீங்கள் வெற்றியாளராகும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள விரும்பினால் கவலைப்படும் பழக்கத்தை உடனே மாற்றிக் கொள்ளுங்கள்...!!*

⚫ *எனவே!, மனதில் உள்ள கவலையை களைத்து எறியுங்கள். ஒவ்வொரு வினாடியும் அனுபவித்து கொண்டாடுங்கள்...!!!*

*எதுவுமே இல்லையென்ற கவலையே வேண்டாமே...*

மகிழ்ச்சி என்ற ஒன்று இருந்தால் அனைத்துமே இங்கு சாத்தியம்.
-------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
=======================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

19.11.20

இழப்பின் மறுபக்கம்!!!



இழப்பின் மறுபக்கம்!!!

*🦀🦀இழந்தது எல்லாம் திரும்பத்தா எனக் கேட்டேன்🦀*

*🦀🦀இழந்தது எவை என இறைவன் கேட்டான்🦀*

*🦀🦀பலவும் இழந்திருக்கிறேன் கணக்கில்லை என்றேன்🦀*

*🦀பட்டியல் ஒன்றிட்டுச் சொல்லவா இயலும்🦀*

🦀🦀கால மாற்றத்தில் *இளமையை* இழந்தேன்🦀

🦀🦀கோலம் மாறி *அழகையும்* இழந்தேன்🦀

🦀🦀வயதாக ஆக *உடல் நலம்* இழந்தேன்🦀

🦀🦀எதை என்று சொல்வேன் நான்🦀

🦀🦀இறைவன் கேட்கையில்🦀

🦀🦀எதையெல்லாம் இழந்தேனோ 🦀

🦀🦀அதையெல்லாம் மீண்டும் தா என்றேன்🦀

*🦀🦀அழகாகச் சிரித்தான் இறைவன்🦀*

🦀🦀கல்வி கற்றதால் *அறியாமையை* இழந்தாய்🦀

🦀🦀உழைப்பின் பயனாய் *வறுமையை* இழந்தாய்🦀

🦀"உறவுகள் கிடைத்ததால் *தனிமையை* இழந்தாய்"🦀

🦀🦀"நல்ல பண்புகளால் *எதிரிகளை* இழந்தாய்"🦀

🦀🦀சொல்ல இன்னும் பல உண்டு இதுபோல🦀

*🦀🦀தரட்டுமா அனைத்தையும் திரும்ப என்றான்🦀*

*🦀திகைத்தேன் 🦀*

🦀🦀இழப்பின் மறுபக்கம் எதுவென்று உணர்ந்தேன்🦀

🦀🦀வாழ்க்கையின் ஓட்டத்தில் இழப்பும் பேறு தான்🦀

*🦀🦀இழந்ததை அறிந்தேன் இதயம் தெளிந்தேன்🦀*

*🦀🦀இறைவன் மறைந்தான்..*🦀🦀

*🦀படித்ததில் பிடித்தது
-------------------------------------------------------------
அன்புடன்
வாத்தியார்
======================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

12.11.20

30 வயதிற்குப் பிறகு என்ன ஆகும்?


30 வயதிற்குப் பிறகு என்ன ஆகும்?

30 வயசுக்கு அப்புறம், இரவும், பகலும் ஒண்ணு தான். 

(கொஞ்ச நாள் தூங்கலன்னா கூட சமாளிச்சிட்டு போக கத்துக்குவோம்).

40 வயசுக்கு அப்புறம், அதிகமா படிச்சிருந்தாலும், குறைவா படிச்சிருந்தாலும் ஒண்ணு தான்

 (குறைவா படிச்சவங்க பெரும்பாலும் முதலாளியா இருப்பாங்க, அதிகமாவும் சம்பாதிப்பாங்க).

50 வயசுக்கு அப்புறம், அழகா இருந்தாலும், அசிங்கமா இருந்தாலும், வெள்ளையா இருந்தாலும், கருப்பா இருந்தாலும் ஒண்ணு தான்.

 (எவ்வளவு அழகா இருந்தாலும், இந்த வயசில், முகத்தில் சுருக்கங்கள், கரும் புள்ளிகள் வந்துரும்).

60 வயசுக்கு அப்புறம், மேலதிகாரி, கீழதிகாரி எல்லாரும் ஒண்ணு தான்.

 (ரிட்டயர் ஆனப்புறம், எல்லார் நிலையும் ஒண்ணு தான்).

70 வயசுக்கு அப்புறம், பெரிய வீடோ, குட்டி வீடோ எல்லாம் ஒண்ணு தான்

 (மூட்டு வலி, தள்ளாமை, நடக்க முடியா நிலை எல்லாமே வந்துரும். கொஞ்ச இடத்தில் மட்டுமே புழங்க முடியும்).

80 வயசுக்கு அப்புறம், பணம் இருந்தாலும் பணம் இல்லன்னாலும் எல்லாமே ஒண்ணு தான்.

 (அதிகமா செலவழிக்க முடியாது, தேவைகளும் குறைஞ்சிரும், ஆசைகளும் குறைஞ்சிருக்கும்).

90 வயசுக்கு அப்புறம், ஆணோ, பெண்ணோ எல்லாரும் ஒண்ணு தான்

 (ஆணுக்கு உரிய தன்மைகளும், பெண்ணுக்கு உரிய தன்மைகளும்.. எல்லாமே மங்கி போயிருக்கும்).

100 வயசுக்கு அப்புறம், படுத்து இருந்தாலும், நடந்துட்டு இருந்தாலும் எல்லாம் ஒண்ணு தான்

 (நடக்க முடிஞ்சா கூட, செய்யுறதுக்கு எந்த வேலையுமே இருக்காது).

அதனால வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்..
என்ன இருக்கோ, அதுக்காக சந்தோஷப்பட கத்துக்குவோம், இல்லாதத நினைச்சு வருத்தப்படுறத விட்டு விடுவோம்.

மனித வாழ்வில் நாற்பது வயதுக்குள் நாம் என்ன மாதிரியான வாழ்க்கையை வாழப்போகிறோம் என்பது முடிவு செய்யப்பட்டு விடுகிறது...

 நண்பர்களே உங்களின் வாழ்க்கையை வளமாக்கும் வழிமுறைகளை கண்டறிந்து உங்களின் வாழ்க்கையை நிலைநிறுத்துங்கள். 🙏🏻🙏🏻🙏🏻
=================================================
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
====================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

15.10.20

இதைப் படியுங்கள் உங்களுக்கு மிகுந்த தைரியம் வரும்!!!!!

இதைப் படியுங்கள் உங்களுக்கு மிகுந்த தைரியம் வரும்!!!!!

*படித்தவுடன் மிகுந்த தைரியம் வரும்.*

இறைவன் படைப்பில் நீ எதற்காக பூலோகத்திற்கு வந்தாயோ அந்த கர்ம காலம் முடியும் வரை கரோனா மட்டுமல்ல வேறு எந்த விதத்திலும் உனக்கு மரணம் சம்பவிக்காது ! 

பயம் கவலைகளை விட்டு நிம்மதியாக வாழுங்கள் ! 

கர்ம காலம் முடிவுக்கு வந்து விட்டால் கரோனா என்ன ஒரு புல் கூட உன் மரணத்துக்கு காரணமாகி விடும் ! படைத்த ஆண்டவனே நினைத்தால் கூட உன்னை காப்பாற்ற முடியாது ! 

கர்ம காலம் முடியாததால் நேருக்கு நேர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்ட MGR & ராதா இருவருமே சாகவில்லை ! 

ஆனால் கட்டுமஸ்தான உடல்  பெற்ற முத்துராமன் ஊட்டியில் காலையில் jogging போகும் போது புல்தரையில் வழுக்கி கீழே விழுந்து மரணமடைந்தார் ! 

புராணங்களிலும் இதற்கான உதாரணம் உண்டு ! பாண்டவர்களின் பாரம்பரியத்தில் ஆட்சி புரிந்த பரீட்சித் மகாராஜா தன் வாழ்க்கை இன்னும் ஒரு வாரத்தில் முடிய போகிறது அதுவும் நாகம் தீண்டி சம்பவிக்கும் என்பதை முன் கூட்டியே தெரிந்து அதிலிருந்து தப்ப மிகுந்த பாதுகாப்புடன் இருந்தும் ஏழாம் நாள் அவர் பூஜை செய்யும் பூவிலிருந்தோ பழத்திலிருந்தோ வெளிப்பட்ட ஒரு பூநாகம் தீண்டி உயிரிழந்தார் ! 

அதனால் நம் கர்ம காலம் முடியும் வரை எதனாலும் நம்மைக் கொல்லமுடியாது என்ற முழு நம்பிக்கையுடன் பயமில்லாமல் வாழுங்கள் ! பயமே பல நோய்களுக்கு காரணமாகி விடும் !

தென்னமரத்திலிருந்து விழுந்து பிழைத்தவனும் உண்டு, திண்ணையிலிருந்து விழுந்து போனவனும் உண்டு.

 அமைதியும் ஆனந்தமும் பெற்று வாழ்க!  இறைவா நன்றி .
====================================================
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
===========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!