மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

30.11.17

யாரை நீங்கள் நியமிக்க முடியாது?


யாரை நீங்கள் நியமிக்க முடியாது?

மனவளக் கட்டுரை

பணம் பணம் பணம் என்று அதை நோக்கியே நேர் வ்ழியிலும் சரி, குறுக்கு வ்ழியிலும் சரி செயல்படும் நண்பர்களுக்கு..

உலகமே வியந்த, பொறாமைப்பட்ட, உச்சமான நிலையைத் தொட்ட ஆப்பிள் நிறுவ்னத்தின் அதிபர் ஸ்டீவ் ஜாப்ஸ் உடல்நலம் குன்றி
56 வ்யதில் உலகைப் பிரிவதற்கு முன்பாக விட்டுச் சென்ற செய்தியை அவரின் ஆங்கிலத்திலிருந்து தமிழ்ப் படுத்திச் சொல்கிறேன்..

"வர்த்தக உலகில் வெற்றியின் உச்சம் தொட்டேன். மற்றவர் பார்வையில் என் வாழ்க்கை வெற்றிக்கு உதாரணமாகக் காட்டப்பட்டது. நோயுற்று படுக்கையில் இருக்கும் இப்போது
என் முழு வாழ்க்கையையும் நினைத்துப் பார்க்கிறேன். பெற்ற புகழும், செல்வமும் அதனால் அடைந்த பெருமையும் இப்போது எனக்கு அர்த்தமற்றதாகத் தோன்றுகிறது.

உங்கள் காரை ஓட்ட யாரையாவது நியமிக்கலாம்.
உங்களுக்காக சம்பாரிக்க எத்தனைப் பேரை வேண்டுமானாலும் நியமிக்கலாம்.
ஆனால் உங்கள் நோயையும் அதனால் சந்திக்கும் 
வலிகளையும் ஏற்றுக் கொள்ள யாரையும் நியமிக்க முடியாது.

எந்தப் பொருள் தொலைந்தாலும் மீண்டும் தேடிவிட முடியும். ஆனால் வாழ்க்கை தொலைந்துவிட்டால்? திரும்ப கிடைக்கவே கிடைக்காது.

வாழ்க்கை எனும் நாடக மேடையில் இப்போது நீங்கள் எந்த காட்சியில் நடித்துக்கொண்டிருந்தாலும் நாடகம் முழுமையாக முடியும் என்று சொல்ல முடியாது. நடுவிலேயே எப்போது வேண்டுமானாலும் திரை விழலாம்.

நாம் பக்குவமடையும்போதுதான் சில விஷயங்கள் புரியும்.

முப்பது ரூபாய் கெடிகாரமும் சரி, மூன்று லட்சம் ரூபாய் கெடிகாரமும் சரி.. ஒரே நேரம்தான் காட்டும்.

செலவழிக்க வாய்ப்பு இல்லாதபோது உங்கள் மணிபர்சில் நூறு ரூபாய் இருந்தாலும் ஒன்றுதான். ஒரு கோடி இருந்தாலும் ஒன்றுதான்.

நீங்கள் தனிமையான பிறகு 300 சதுர அடி வீட்டில் வசிப்பதும்
30,000 சதுர அடி பங்களாவில் வசிப்பதும் ஒன்றுதான்.

ஆகவே..உங்களைச் சுற்றிலும் இருக்கும் உறவினர்கள், நண்பர்கள், நெருக்கமான குடும்பத்தினர் அனவரிடமும் அன்புடன் பேசிப் பழகுங்கள். அதுதான் உண்மையான மகிழ்ச்சி. அது நீங்கள் வாங்கிய அல்லது வாங்க விரும்பும் எந்தப் பொருளிலும் இல்லை.

பின் குறிப்பு:
ஸ்டீவ் ஜாப்ஸ் மறைந்த போது அவர் விட்டுச் சென்ற சொத்துக்களின் மதிப்பு 2011ல் 10.2 பில்லியன் டாலர்ஸ்!
( இந்திய மதிப்பில் அறுபத்து ஐந்தாயிரம் கோடிக்கு மேல்)

படித்தேன்: உங்களுக்காக பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
===================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

29.11.17

அரசுக்கு ஓர் ஆலோசனை!


அரசுக்கு ஓர் ஆலோசனை!

ஒரு ஜேசிபி மெசினின் விலை 30 லட்சம்....
40 மெசின்களின் விலை 12 கோடி ரூபாய்.
அதில் ஒரு மெசினில் வேலை செய்பவருக்கு ஊதியம் மாதம்
20 ஆயிரம்.
ஒரு மாதம் இரண்டு ஷிப்டில் வேலை செய்ய இரண்டுபேர் வீதம்
40 மெசினுக்கு 16 லட்சம்.

மாதத்திற்கு.. டீசல் விலை மாதம் 10 லட்சம் தோரயமாக.
ஆகமொத்தம் மாதம் 26 லட்சம்...

இதை வைத்து 10 நாட்களில் ஒரு மாவட்டத்தில் உள்ள கருவேல மரங்களை சுத்தம் செய்து விடலாம்....

32 மாவட்டத்தில் ஒரு வருடத்தில் அனைத்தையுமே சுத்தம் செய்து விடலாம்.

ஆக வருட செலவு 3.5 கோடி.
மெசின்களின் செலவுடன் சேர்த்து 16 கோடி.

இதே கணக்கின் படி ஒரு மாவட்டத்தில் உள்ள குளங்கள், கண்மாய்களையும் தூர்வார 16 கோடிதான் செலவு.

ஆக மொத்தமாக ஒரு வருடத்திற்கு 50 கோடி ஒதுக்கி, அதை
சரியாக கண்காணித்து... இந்த வேலையை செய்தால் அடுத்த வருடத்திற்கான நீரைத் தேக்கிவைக்கலாம். விவசாயத்தையும் செழிக்கவைக்கலாம்.!

இப்படி செய்தாலே மக்களிடம் நல்ல பெயர் வாங்கிவிடலாம்.

இதை விடுத்து அரசியல்வாதிகள் ஏன் ஒரு தேர்தலுக்கு இவ்வளவு கோடி செலவு செய்கிறார்கள் என்று தெரியவில்லை.
இவ்வளவு இலவசம் கொடுக்கிறார்கள் என்பதும் புரியவில்லை.
எதற்காக முந்நூறு கோடியில் சினிமா எடுக்கிறார்கள் என்பது புரியவில்லை.

இதை ஏன் எந்த ஊடகமும் முக்கியத்துவம் கொடுத்து பேச மாட்டேன் என்கிறதும் புரியவில்லை.

நம்மில் கூட ஓரிருவர் தவிர பேசுவதுமில்லை. இதற்கான காரியங்களில் முயல்வதும் இல்லை.
தேவைகளை பற்றிய தெளிவுகள் தெரிந்து பேச ஆரம்பிப்போம்.
அடுத்தவரை எல்லாம் குறைகூறுவதை நிறுத்திவிட்டு நாம் பேசுவோம்.
அரசியலும் சினிமாவும் பேசுவது போலவாவது அத்தியாவசியம் குறித்தும் பேசுவோம்.

நமக்கு நம்மூரிலேயே வாழத் தெரியாவிட்டால்...
அசலூரில் போய் அரசாளவா போகிறோம்;
அடிமை வேலைதானே செய்ய போகிறோம்!

அருமையான இந்த செய்தியை அவரவர் நட்பு பல குழுவிற்கு பகிர்ந்து பலரையும் சென்றடைய செய்தால் நிச்சயம் நல்லதே நடக்கும்

படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
=============================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

28.11.17

நாம் அதிகம் கேட்டிராத மகாபாரத நிகழ்வு!!!!


நாம் அதிகம் கேட்டிராத மகாபாரத நிகழ்வு!!!!

மகாபாரதத்தில் நடந்த ஒரு நிகழ்வு இதுவரை நாம் அதிகம் கேட்டிராதது.!

பாண்டவர்களும் திரௌபதியும் எல்லோரையும் பந்தியில் உபசரித்து உணவு பரிமாறினார்கள். துரியோதனன், துச்சாதனன், கர்ணன், சகுனி முதலானோர் வரிசையாக அமர்ந்திருந்தனர்.

திரௌபதி பரிமாறிக் கொண்டே துரியோதனன் இலைக்கு அருகில் வந்தாள். அவளை அவமானப்படுத்த எண்ணிய துரியோதனன், ஐவரின் பத்தினியே... இன்று யாருடைய முறை?'' என்று கேட்டான்.

திரௌபதிக்குத் தூக்கி வாரிப்போட்டது. நாடி நரம்புகளெல்லாம் தளர்ந்தன. அவளால் அந்தக் கேள்வியை ஏற்க முடியவில்லை. செய்வதறியாது, பரிமாறுவதை நிறுத்திவிட்டு உள்ளே ஓடினாள். கண் கலங்கினாள் அதேநேரம் அங்கு தோன்றினார் பகவான் ஸ்ரீகிருஷ்ணர்.

கலங்காதே திரௌபதி! நடந்ததை நானும் கவனித்தேன்,எல்லோர் முன்னிலையிலும் உன்னை அவமானப்படுத்தி அழவைக்க நினைத்திருக்கிறான் துரியோதனன், அவனுக்கு பாடம் கற்பிக்கலாம். நான் சொல்வது போல் செய்.
நீ மீண்டும் உணவு பரிமாறப் போ! துரியோதனன் மீண்டும் உன்னிடம் அதே கேள்வியைக் கேட்டு, 'ஏன் பதில் கூறவில்லை?’ என்பான்.

உடனே நீ, 'தக்ஷகன் முறை’ என்று சொல், அதன் பிறகு துரியோதனன் அந்த இடத்திலேயே இருக்கமாட்டான்'' என்றார் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்.

கிருஷ்ணனின் வார்த்தையைத் தட்டமுடியாமல் விருந்து மண்டபத்துக்குச் சென்றாள் திரௌபதி, துரியோதனன் இலை அருகில் அவள் வந்ததும், விஷமத்துடன் அதே கேள்வியை மீண்டும் கேட்டான். 'எனக்குப் பதில் கூறவில்லையே... இன்று யாருடைய முறை?'

ஸ்ரீகிருஷ்ணன் சொல்லியனுப்பியது போலவே,  இன்று "தக்ஷகன் முறை" என்று பளிச்சென பதில் தந்தாள் திரௌபதி. அதைக் கேட்டு விஷ நாகம் தீண்டியது போன்று அதிர்ந்தான் துரியோதனன். சட்டென எழுந்து அங்கிருந்து வெளியேறினான்.

திரௌபதிக்கு ஆச்சரியம். கண்ணனிடம் ஓடோடி வந்தாள். ''கண்ணா! இதென்ன மாயம்? யாரந்த தக்ஷகன்? அவன் பெயரைக் கேட்டதும் துரியோதனன் ஏன் இப்படிப் பேயறைந்தாற்போல் பதறி, பயந்து ஓடுகிறான்?'' என்று கேட்டாள்.

கண்ணன் அதற்கான காரணத்தையும் கதையையும் சொன்னான்.

துரியோதனனின் மனைவி பானுமதி மகா பதிவிரதை. கணவனையே தெய்வமாகக் கருதும் உத்தமி. ஆனால், துரியோதனனோ பாண்டவர்களின் ராஜ்ஜியத்தை அடைவதில் குறியாக இருந்தான். மனைவியிடம் அன்புடன் பேசக்கூட அவனுக்கு நேரம் இல்லை.

திருமணமாகி மாதங்கள் பல கடந்தும், மண வாழ்க்கையின் பயனை அடையும் பாக்கியம் பானுமதிக்குக் கிட்டவில்லை. அவனது அன்புக்காக ஏங்கினாள். தெய்வங்களை வேண்டினாள். அவள் தவம் பலிக்கும் வேளை வந்தது.

ஒருமுறை, முனிவர் ஒருவர் பானுமதியின் துயர் நீக்கும் வழி ஒன்றைக் கூறினார். மகிமை மிக்க மூலிகை வேர் ஒன்றை மந்திரித்து அவளிடம் கொடுத்து, அதைப் பாலில் இட்டு கணவனுக்குக் கொடுக்கும்படி கூறினார் முனிவர்.

பானுமதியும் அதன்படியே பால் காய்ச்சி, அதில் இனிப்பும் இன்சுவையும் சேர்த்து, முனிவர் தந்த வேரையும் அதில் இட்டு, கணவனின் வருகைக்காகக் காத்திருந்தாள்.

அன்று பௌர்ணமி. இரவின் இரண்டாம் யாமத்தில் அந்தப்புரம் வந்தான் துரியோதனன்,

அப்போது அவன் மது அருந்தியிருந்தான் பால் அருந்தும் மனோநிலையில் அவன் இல்லை. ஆசையுடன் மனைவி நீட்டிய
பால் கிண்ணத்தைப் புறங்கையால் ஒதுக்கினான்.

கை தவறிய கிண்ணத்தில் இருந்த பால் தரையில் சிந்தியது. அப்போது அங்கே சென்றுகொண்டிருந்த  'தக்ஷகன்’ எனும் நாகம் அந்தப் பாலைச் சுவைத்தது.

தக்ஷகன் சர்ப்பங்களின் ராஜன். பாலைப் பருகியதும் அதிலிருந்த வேரின் வசிய சக்தியால், அவனுக்குப் பானுமதி மீது ஆசையும் நேசமும் பிறந்தது.

உடனே அவன் மனித உருவில் அவள் முன் தோன்றித் தன் ஆவலை வெளியிட்டான். தன்னை வருந்தி அழைத்தது அவள்தான் என்றும் வாதாடினான். பதிவிரதையான பானுமதி பதறினாள் துடிதுடித்தாள்.

துரியோதனனுக்குத் தன் மனைவியின் உயர்ந்த கற்பு நெறி பற்றி நன்கு தெரியும். தான் அவளது அன்பையும் பிரேமையையும் புரிந்து நடக்காததால் விளைந்த விபரீதத்தை எண்ணித் தவித்தான்.

தக்ஷகன் கால்களில் விழுந்து தன் மனைவியின் கற்பைக் காக்க வேண்டினான். தக்ஷகன் பாம்பு எனினும் பண்பு மிக்கவன். பாலில் கலந்திருந்த வேரின் சக்தியால் உந்தப் பெற்றதால்தான், அவன் உள்ளம் பானுமதியை விரும்பியது. எனினும், அவளுக்குக் களங்கம் விளைவிக்க அவன் விரும்பவில்லை.

அதே நேரம், அவளின் வசியம் செய்த பாலை குடித்ததனால் பானுமதியின் அன்பை இழக்கவும் தயாராக இல்லை. எனவே ஒரு நிபந்தனை விதித்தான். 'அந்தப்புரத்தில் அமைந்துள்ள அரச விருட்சத்தின் அடியில் உள்ள புற்றுக்கு, பௌர்ணமிதோறும் பானுமதியைக் காண வருவேன். பானுமதி புற்றில் பால் ஊற்றி என்னை உபசரித்து, வணங்கி அனுப்ப வேண்டும். அப்போது அவள் கற்புக்குக் களங்கம் இல்லை என்பதற்குச் சாட்சியாக அவளின் கணவனான துரியோதனனும் என்னை வணங்க வேண்டும்’ என்று கூறிவிட்டு மறைந்தான் தக்ஷகன்.

அன்று முதல் இன்றுவரை பௌர்ணமி தோறும் பாம்புக்குப் பாலூற்றி வருகிறாள் பானுமதி. துரியோதனனும் பயபக்தி யோடு பங்குகொள்கிறான்.

இந்தச் சம்பவம் துரியோதனனுக்கும் பானுமதிக்கும் தக்ஷகனுக்கும் மட்டுமே தெரியும். 'இதனை வெளியே யாரிடமும் சொல்வதில்லை’ என்பது அவர்களுக்குள் செய்து கொண்ட ஒப்பந்தம். இதை நீ கூறியதுதான் துரியோதனனின் அதிர்ச்சிக்குக் காரணம்'' என்றார் ஸ்ரீகிருஷ்ணர்.

துரியோதனனால் தனக்கு நேர்ந்த அவமானத்தைத் துடைத்து ஆறுதல் கூறிய கண்ணனுக்கு நன்றி கூறினாள் திரௌபதி.

*"ஸ்ரீ கிருஷ்ணா உன் திருவடிகளே சரணம்!."*

------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது.
அன்புடன்
வாத்தியார்
=========================================================
வாத்தியார் 3 நாட்கள் காரைக்குடிக்குப் பயணம்.
பாடங்கள் தொடர்ந்து வரும். அது கூகுள் ஆண்டவர் உபயம்
ஆனால் உங்களுடைய பின்னூட்டங்களும் (comments), அதற்கான வாத்தியாரின் பதில்களும் 2-12-2017 சனிக்கிழமை அன்றுதான் வெளியாகும்
========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

27.11.17

அஷ்டமி, நவமி திதிகளை ஏன் தவிர்க்கிறோம்?


அஷ்டமி, நவமி திதிகளை ஏன் தவிர்க்கிறோம்?

அஷ்டமியன்றும், நவமி அன்றும் கிளம்பும் ரயில்கள் என்ன நடுவழியிலா நிற்கிறது ? அதே நாளில் கிளம்பும் விமானங்கள் கடலில் விழுந்துவிடுகிறதா ? பகுத்தறிவு வாதிகள் கேட்பார்கள்.

நம் முன்னோர்கள் முட்டாள்கள் அல்ல .

நம் முன்னோர்கள் அஷ்டமி  அன்றும் , நவமி அன்றும் நல்ல காரியங்கள் ஏன் செய்வதில்லை ?  அதற்க்கு என்ன காரணம் ?

அதில்தான் விஞ்ஞானம் இருக்கிறது. நம் முன்னோர்களின் வானியல் அறிவு அதில் பளிச்சிடுகிறது.

கிருஷ்ண பரமாத்மா அஷ்டமி அன்று பிறந்ததால் ஒரு மிகப்பெரிய போரை நடத்த வேண்டி இருந்தது.

ஸ்ரீ ராமன் நவமி அன்று பிறந்ததால் அவரது வாழ்வில் 14 வருடம் காட்டில் கழிக்க வேண்டி இருந்தது. இதுதான் காரணமா ?

இல்லை !!!!

பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்வதை ஒரு நாள் என்று சொல்கிறோம்.

அதே பூமி தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனை சுற்றி வருவதை ஒரு வருடம் என்கிறோம்.

நிலவு தன்னைத்தானே சுற்றிக்கொண்டு பூமியை சுற்றி  வருவதை ஒரு மாதம் என்கிறோம். அதனால் தான் மாதத்திற்கு திங்கள் என்ற பெயர் உண்டு. ( திங்கள் என்றால் சந்திரன்)

நிலவு தன்னைத்தானே சுற்றிக்கொண்டு பூமியை சுற்றிவரும்போது ஒரு பாதி சுற்று ( 15 நாட்கள் அமாவாசையாகவும் ) அடுத்த 15 நாட்கள் பௌர்ணமி என்றும் சொல்கிறோம்.

அமாவாசைக்கும், பௌர்ணமிக்கு இடைப்பட்ட எட்டாவது நாளை அஷ்டமி என்று சொல்கிறோம். ஒரு மாதத்திற்கு இரண்டு அஷ்டமி வரும்.தேய்பிறை அஷ்டமி என்றும் வளர்பிறை அஷ்டமி என்றும் சொல்கிறோம்.

சரியாக அஷ்டமி தினத்தன்று நாம் வாழும் பூமியானது சூரியனுக்கும், சந்திரனுக்கும் நடுவில் வருகிறது.

அவ்வேளையில் சூரியனின் சக்தியும் , சந்திரனின் சக்தியும் பூமியை தங்கள் பக்கம் இழுப்பதால் ஒருவித Vibration ஏற்படுகிறது.

அந்த Vibration  பூமியில் உள்ள அனைத்து ஜீவராசிகளிடமும் எதிரொலிக்கும்.

பேருந்தில் நாம் பயணம் செய்யும்போது நம்மால் சரியாக எழுத்முடிவதில்லை அல்லவா ? அதைப்போன்று.

அதன்காரணமாக எந்த ஜீவராசியாலும் ஒரு நிலையான முடிவை எடுக்க முடியாது. அவ்வேளைகளில் நாம் எடுக்கும் முடிவும் நிலையற்றதாக இருக்கும்.

நவமி கழிந்தபிறகே பூமி தனது இயல்பு நிலைக்கு திரும்பும். அப்போதுதான் மனிதர்கள் உட்பட அனைத்து ஜீவராசிகள் மனமும் நிலை பெரும்.

அதனால் அஷ்டமி அன்றும், நவமி நவநாழிகை வரை எந்த முடிவையும் எடுக்கக்கூடாது என்று நம் முன்னோர்கள் முடிவெடுத்தார்கள்.

இப்போது சொல்லுங்கள் நம் முன்னோர்கள் சொல்வது சரிதானே?

படித்தேன்: பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
=================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

25.11.17

Astrology: ஜோதிடம்: 24-11-2017ம் தேதி புதிருக்கான விடை!


Astrology: ஜோதிடம்: 24-11-2017ம் தேதி புதிருக்கான விடை!

அந்த ஜாதகத்திற்கு உரியவர் பிரபல தொழிலதிபர் திரு முகேஷ் அம்பானி அவர்கள்,
பிறந்த நாள்: 19 ஏப்ரல் 1957 @ 19.53 மணி
பிறந்த ஊர்: அடென் பெரெக் - ஏமன் நாடு

நான் எதிர்பார்த்தபடி நிறைய அன்பர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். சுமார் 19 பேர்கள் சரியான விடையை எழுதி உள்ளார்கள். அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்! அவர்களின் பெயர்கள் அவர்களுடைய பின்னூட்டங்களுடன் கீழே கொடுத்துள்ளேன். பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்

மீண்டும் ஒரு புதிருடன் அடுத்த வெள்ளிக்கிழமை (1-12-2017) சந்திப்போம்!

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------
1
Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
Good morning sir the celebrity was famous business person Thiru Mukesh Ambani born on 19/04/1957 place Aden-Yemen Time 7.45pm.
Friday, November 24, 2017 5:13:00 AM 
-------------------------------------------------
2
Blogger Thanga Mouly said...
திரு. முகேஷ் அம்பானி!! பிறந்த திகதி: 19/04/1957
Friday, November 24, 2017 5:51:00 AM
------------------------------------------------
3
Blogger sundinesh1 said...
Mukesh Ambani
Friday, November 24, 2017 7:37:00 AM 
--------------------------------------------------
4
Blogger Maheswari Bala said...
mukesh ambani april 19,1957
Friday, November 24, 2017 8:17:00 AM 
---------------------------------------------------
5
Blogger Ananthakrishnan K R said...
வணக்கம்,
ஜோதிடப்புதிர் 5: ஜாதகர் முகேஷ் அம்பானி
பிறந்த நாள்: 19 ஏப்ரல் 1957 @ 19.53 மணி
பிறந்த ஊர்: அடென் பெரெக்
நன்றியுடன்,
க இரா அனந்தகிருஷ்ணன்
சென்னை
Friday, November 24, 2017 8:48:00 AM
-------------------------------------------------
6
Blogger kmr.krishnan said...
This is Sri.Mukesh Ambani's horoscope. Date of birth 19 April 1957 Time of birth 10.10PM. Yemen born as per internet information.
Friday, November 24, 2017 9:05:00 AM 
----------------------------------------------------
7
Blogger csubramoniam said...
மதிப்பிற்குரிய ஐயா,
ஜாதகர் இந்தியாவின் பணக்காரர்களில் முதல்வரான முகேஷ் அம்பானி அவர்கள்
(CHAIRMAN OF RELIANCE INDUSTRIES)
பிறந்த தேதி :19 ஏப்ரல் 1957
பிறந்த நேரம் இரவு 7 :53
பிறந்த இடம் :ஏடன் பெர்க் ,ஏமன்
நன்றி
Friday, November 24, 2017 10:08:00 AM
-----------------------------------------------------
8
Blogger amuthavel murugesan said...
Mukesh Dhirubhai Ambani
19 April 1957
M.Santhi
Friday, November 24, 2017 10:37:00 AM 
---------------------------------------------------
9
Blogger SELVARAJ said...
Answer: Mukesh Ambani.
Is the Given data correct?
Friday, November 24, 2017 11:28:00 AM 
-------------------------------------------------
10
Blogger angr said...
ரிலையன்ஸ் அதிபர் திரு முகேஸ் அம்பானி அவர்கள்
Friday, November 24, 2017 12:04:00 PM
---------------------------------------------------
-----
Blogger Sinavar said...
இப்படியான புதிருக்கு எப்படி விடை காண்பதென தயவுசெய்து விளக்க முடியுமா ?
Friday, November 24, 2017 1:05:00 PM

புதிருக்கு மேல் பகுதியில் கொடுத்துள்ளேனே சாமி!
மற்றும் விரிவான முறையில் முன்பு பதிவில் எழுதியுள்ளேன். த்ஹெடிப் பிடித்துப் படிக்க வேண்டுகிறேன்
------------------------------------------------
11
Blogger Shruthi Ramanath said...
Sir I think its the MUKESH AMBANI
Date of birth: 19- april-1957
Time of birth: 7.53 PM
Place of birth: Aden berek
Friday, November 24, 2017 3:06:00 PM 
---------------------------------------------------
12
Blogger Palani Shanmugam said...
மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,
இந்தப் புதிரில் உள்ள ஜாதகத்துக்குச் சொந்தக்காரர் பிரபல தொழில் அதிபர் திரு. முகேஷ் திருபாய் அம்பானி அவர்கள்.
எஸ். பழனிச்சாமி
Friday, November 24, 2017 3:59:00 PM
------------------------------------------------
13
Blogger கதிரவன் said...
முகேஷ் அம்பானி
Friday, November 24, 2017 4:53:00 PM
------------------------------------------------------
14
Blogger guru said...
DOB:19-Apr-1957
Person: Mukesh Ambani
Friday, November 24, 2017 4:59:00 PM 
----------------------------------------------------
15
Blogger bala said...
vanakkam Iyya,
Mukesh ambani avargal :) 
nandri,
Bala
Friday, November 24, 2017 7:52:00 PM 
---------------------------------------------------
16
Blogger GOWDA PONNUSAMY said...
Ayya vanakkangal!
Given horoscope belongs to Shri.MUKESH AMBANI. DOB 19 April 1957.
Regards
Ponnusamy
Friday, November 24, 2017 9:13:00 PM 
----------------------------------------------------
17
Blogger umajana said...
ஐயா,
இந்த ஜாதகத்துக்கு உரியவர் திரு. முகேஷ் அம்பானி அவர்கள். அவர் பிறந்த தேதி 19/04/1957 இரவு 8:30 மணியளவில் தோராயமாக.
Friday, November 24, 2017 9:35:00 PM
----------------------------------------------------
18
Blogger சர்மா said...
வணக்கம் ஐயா தாமதமாக வகுப்பறை யில் வந்ததற்கு மன்னிக்கவும். புதிருக்கான விடை. திரு. முகேஷ் அம்பானி 19.04.1957 மும்பை 19.53hrs
Friday, November 24, 2017 11:49:00 PM /////
-----------------------------------------------------------
19
Blogger ravichandran said...
Respected Sir,
Happy morning... My answer for our Quiz no.5:
The native of the horosocope is Shri Mukesh Ambani (Chairperson of Reliance Group)
Born on April 19, 1957 time: 17:53 Place: Aden Berek (Yemen Country)
Have a great day.
With kind regards,
Ravi-avn
Saturday, November 25, 2017 1:15:00 AM 
========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

24.11.17

Astrology: Quiz. 5 : ஜோதிடப் புதிர் 5 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!


Astrology: Quiz. 5 : ஜோதிடப் புதிர் 5 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!

நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டு பிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும்  ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்ல லாம்.  Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள்

சென்ற வாரம் நிறைய அன்பர்கள் கலந்து கொண்டதோடு சரியான விடையைச் சொல்லி அசத்திவிட்டார்கள்!

தேதியைக் கண்டு பிடித்து விடுங்கள், மற்றதற்கு கூகுள் ஆண்டவர் உதவி செய்வாரே!


க்ளூ வேண்டுமா? அகில இந்திய பிரபலம். எந்தத் துறையில் என்று சொன்னால் கோளாறாகிவிடும். ஆகவே சொல்லவில்லை!

சரியான விடை நாளை வெளியாகும்!
அன்புடன்
வாத்தியார்
--------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

23.11.17

Short Story: சிறுகதை: இறைவன் கொடுத்த வரம்!!!


Short Story: சிறுகதை: இறைவன் கொடுத்த வரம்!!!

இந்த மாதம், மாத இதழ் ஒன்றிற்காக அடியேன் எழுதிய சிறுகதை, அந்த இதழ் வாசகர்களின் பாராட்டுக்களைப் பெற்றது. அந்தக்
கதையை நீங்கள் அனைவரும் படித்து மகிழ இன்று வலை ஏற்றியுள்ளேன். படித்துவிட்டு உங்கள் கருத்தைச் சொல்ல
வேண்டுகிறேன்.

அன்புடன்
வாத்தியார்
----------------------------------------------
சிறுகதை: இறைவன் கொடுத்த வரம்!

கருப்பையா செட்டியார் தன் மகளுக்கு வரன் பார்க்கத்  துவங்கியபோது, அவர் மகள் மீனாட்சி இரண்டே இரண்டு
கோரிக்கைகளைத்தான் முன் வைத்தாள்.

”அப்பச்சி, படித்து முடித்துவிட்டு இப்போது வீட்டில் இருப்பது போலவே, திருமணத்திற்குப் பிறகும், ஹோம் மேக்கராக
வீட்டிலேயே இருப்பதைத்தான் விரும்புகிறேன். வேலைக்குச் செல்வதில் எனக்கு விருப்பம் இல்லை. ஆகவே கை நிறையச் சம்பாதித்து, தன் செலவிலேயே குடும்பத்தை நடத்தக் கூடிய மாப்பிள்ளையாகப் பாருங்கள். மாப்பிள்ளை தோற்றத்தில் எப்படியிருந்தாலும் பரவாயில்லை - ஆனால் நல்ல குணமுடையவராக இருக்க வேண்டும். மனைவியை மதித்து வைத்துக் கொள்ளக்கூடியவராக இருக்க வேண்டும்....”

“மாப்பிள்ளையின் உண்மையான குணம் எல்லாம், கல்யாணத்திற்குப் பிறகுதானே அம்மா தெரியும்...”

“ஜாதகத்தைப் பார்த்தால் தெரியாதா? கோட்டூர்புரம் ஜோதிடர் கோவிந்தசாமி அய்யாதான் பெரிய ஜோதிடராயிற்றே?
அத்துடன் உங்களுக்கு அவர் நெருங்கிய நண்பரும் ஆயிற்றே? ஜாதகங்களை அவரிடம் காட்டினால் பார்த்துச் சொல்ல மாட்டாரா?”

"அவர் உன்னுடைய ஜாதகத்தைப் பார்த்துவிட்டு ஏற்கனவே சொல்லிவிட்டார். பெண்ணின் ஜாதகத்தில் 7ம் வீடு சூப்பராக
இருக்கிறது. அத்துடன் 7ம் வீட்டு அதிபதி குரு பகவானின் பார்வையும் 7ம் வீட்டின் மேல் இருக்கிறது. மேலும் சுக்கிரனும் குருவும் ஒருவருக்கொருவர் நேரடிப்பார்வையில் இருக்கிறார்கள். ஆகவே நல்ல மாப்பிள்ளை கிடைக்கும். அத்துடன் பெண்ணின் திருமண வாழ்க்கையும் மகிழ்ச்சி நிரம்பியதாக இருக்கும் என்று சொல்லியிருக்கிறார். ஆகவே நீ ஒன்றுக்கும் கவலைப் படாதே!
பழநியாண்டவரைப் பிரார்த்தித்துக் கொள் மற்றதை எல்லாம் அவர் பார்த்துக்கொள்வார்”

பெண்ணை மாப்பிள்ளை வீட்டார் பார்க்கும் நிகழ்விலேயே  அவள் அதைத் தெரிந்து கொண்டாள்.

வடபழநி முருகன் கோவிலில்தான் பெண் பார்க்கும் நிகழ்வு
நடந்தது.

மீனாட்சி, திரைப்பட நட்சத்திரம் அனுஷ்காவைப் போல் பளிச்சென்ற தோற்றத்துடன் இருப்பாள். ஐந்தடி ஏழங்குல
 உயரம். தன் உயரத்திற்குத் தகுந்ததைப் போலவே மாப்பிள்ளை இருக்க வேண்டுமென்பதுதான் அவளுடைய விருப்பம்.

மாப்பிள்ளை தன் பெற்றோருடன் வந்திருந்தார். வந்தவர் கையில் பூங்கொத்தோடு (பொக்கே) வந்திருந்தார். அதைக் கருப்பையா
செட்டியாரின் கையில் பணிவுடன் கொடுத்துவிட்டு இரு கைகளையும் கூப்பி வணங்கினார்.

ஆறடி உயரம். களையான முகம். ஜீன்ஸ் கால்சட்டையும், கிளாசிக் போலோ டி சட்டையும் அணிந்திருந்தார்.

மாப்பிள்ளைக்குப் பெண்ணைப் பிடித்துவிட்டது. கண் ஜாடையிலேயே தன் தாயாரிடம் தன் சம்மதத்தைத் தெரிவிக்க, அந்த ஆச்சியும், கையில் கொண்டுவந்திருந்த பையில் இருந்து நான்கு முழம் மல்லிகைப் பூவை எடுத்து, ஒரு முழம் அளவிற்கு வெட்டி மீனாட்சியின் தாயாரிடம் கொடுத்து விட்டு, மீதிப் பூவை மீனாட்சியிடம் கொடுத்து தலையில் சூடிக் கொள்ளச் சொன்னார்.

“நீங்களே வைத்து விடுங்கள்!” என்று மீனாட்சி சொல்லிவிட்டு தலையைக் குனிந்து அவரிடம் காட்ட, அவரும் பூவைச் சூட்டி
விட்டார்.

கருப்பையா செட்டியார் கோவிலுக்கு வெளியே சென்று
பெரிய மாலை ஒன்றையும், தேங்காய், பழம், வெற்றிலை
பாக்குடன் அர்ச்சனைத் தட்டு ஒன்றையும் வாங்கிக் கொண்டு வந்தார்.

பின்னர் ஆறு பேரும் முருகன் சன்னிதானத்திற்குள் நுழைந்து அங்கே உறைந்திருக்கும் வடபழநியாண்டவரை வணங்கி
விட்டுத் திரும்பினார்கள்.

எல்லாம் நல்லபடியாக முடிந்தது. இருவீட்டாரும் சேர்ந்து பேசி அடுத்து இரண்டு மாதங்களில் வந்த தை மாதத்தில், முதல்
முகூர்த்தத்திலேயே திருமணத்தை நடத்தி வைத்தார்கள்!

              ********************************************************

கருப்பையா அண்ணனுக்கு காரைக்குடி முத்துப் பட்டிணத்தில் வீடு. மாப்பிள்ளையும் உள்ளூர்தான். மெ.மெ.வீதியில் வீடு.

கல்யாணம் முடிந்த கையோடு, அப்பத்தா வீடு, ஆயா வீடு
காய்ச்சி ஊற்றுதல், குன்றக்குடி கோவில், இலுப்பக்குடி,
இளங்குடிக் கோவில், குலதெய்வக்கோவில் என்று எல்லாக் கோவில்களுக்கும் சென்றுவிட்டு நான்காவது நாளே
மீனாட்சியும், அவளுடைய உள்ளம் கவர்ந்த கணவன் சோமசுந்தரமும் பெங்களூருக்குப் புறப்பட்டார்கள்.

எந்த சாமானும் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். எல்லா சாமான்களும் கேஸ் அடுப்பிலிருந்து வாஷிங் மெஷின்வரை
பெங்களூர் வீட்டில் இருப்பதால் நான்கு பெரிய பெட்டிகளில் துணிகளைத் தவிர வேறு ஒரு லக்கேஜூம் இல்லை.

இரண்டு வீட்டுப் பெரியவர்களும் மெதுவாகச் செல்லுங்கள்
என்று மட்டும் சொல்லிவிட்டு, வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்கள்.

பெங்களூரில் சர் சி.வி.ராமன் நகரில் உள்ள பக்மானே டெக்னோ பார்க்கில் உள்ள பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் சோமுவிற்கு
டிசைன் இஞ்சினியர் வேலை. சென்னை ஐ.ஐ.டி யில் எம்.ஈ வரை படித்தவன். மாதம் இரண்டு லெட்ச ரூபாய் சம்பளம்.

ஹூண்டாய் ஐ 20 கார். பயணத்திற்கு சூப்பராக இருந்தது. திருமணத்திற்கு ஒரு மாதம் முன்புதான் தன்னுடைய பழைய காரைக் கொடுத்துவிட்டு இந்த வண்டியை அவன் வாங்கியிருந்தான்.

மீனாட்சிக்கு மகிழ்ச்சியாக இருந்தது. காரைக்குடியில் இருந்து திருச்சி, சேலம், கிருஷ்ணகிரி என்று வழியில் உள்ள
ஊர்களையெல்லாம் தாண்டி ஏழு மணி நேரத்தில் ஹோசூருக்குப் போய்ச் சேர்ந்தார்கள். அங்கிருந்து பெங்களூரில் உள்ள அவர்கள்
வீட்டுக்குப் போய்ச் சேர ஒன்றரை மணி நேரமாகிவிட்டது. சாலைகளில் வாகன நெரிசல் காரணம்

வழியில் ஹோசூரில் உள்ள அடையார் ஆனந்தபவன்
ஹோட்டலில் இரவு உணவை முடித்துகொண்டு வந்தவர்கள்
பயணக் களைப்பில், வீட்டிற்கு வந்தவுடன் படுத்து உறங்கி விட்டார்கள்

                        *******************************************

மீனாட்சி சூரிய உதயத்திற்கு முன்பு எழுந்து பழக்கப்பட்டவள். அதிகாலையில் எழுந்தவள் காலைக் கடன்களை முடித்துவிட்டு,
காப்பி போட்டு எடுத்துக் கொண்டு வந்து வைத்து விட்டு,
கணவனை எழுப்பினாள்.

அவளைப் படுக்கையில் தன் அருகே அமரச் சொன்னவன், மெதுவாகக் கேட்டான்.

“வீடு நன்றாக இருக்கிறதா? உனக்குப் பிடித்திருக்கிறதா?”

“எனக்கு எல்லாம் பிடித்திருக்கிறது!  உங்களை, உங்கள் பெற்றோர்களை, உங்கள் காரைக்குடி வீட்டை, உங்கள்
புதுக்காரை, இந்த வீட்டை என்று எனக்கு எல்லாம்
பிடித்திருக்கிறது!”

“திருமணமாகி நான்கு நாட்கள்தானே ஆகிறது. அதற்குள் என் பெற்றோர்களை எப்படிப் புரிந்து கொண்டாய்?”

“ஒரு பானை சோற்றிற்கு ஒரு சோறு பதம் என்பார்கள். உங்கள் தாயாரின் நல்ல குணத்தை அவர்களின் செயல்களில் இருந்து
புரிந்து கொண்டேன். திருமணப் பேச்சு வார்த்தையின்போது,
என்ன தோது எதிர்பார்க்கிறீர்கள் என்று? என் தந்தையார்
கேட்டார்களாம்.அதற்கு உங்கள் தாயார் எதுவும் யோசிக்காமல் சட்டென்று பதில் சொன்னார்களாம். எங்களுக்கு எந்த
எதிர்பார்ப்பும் இல்லை. உங்கள் பெண்ணிற்கு உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள் என்றார்களாம்.”

புன்னகைத்த சோமு, சொன்னான். “ திருமணத்திற்காக ஏழு
லெட்ச ரூபாய் பணம் சேர்த்து வைத்திருந்தேன். திருமணத்திற்கு
முன்பு  என்னுடைய வங்கி டெபிட் கார்டை என் தாயார் கையில் கொடுத்து, திருமணச் செலவிற்கான பணத்தை என் வங்கிக்
கணக்கில் இருந்து எடுத்துக் கொள்ளுங்கள் என்றேன். என்
தாயார் மறுத்து விட்டார்கள். உன் கல்யாணத்திற்காக நான்
பத்து லெட்ச ரூபாய் எங்களுடைய வங்கிக் கணக்கில் வைத்திருக்கிறேன். அதில் இருந்துதான் செலவழிக்கப்
போகிறேன் என்றார்கள்.அதோடு பெண் வீட்டிலிருந்து அவர்கள் ஏதாவது ரொக்கம் கொடுத்தால், அதை உங்கள் இருவரின்
பெயரில் வைப்புத் தொகையாகப் போட்டு விடுவதாக
இருக்கிறேன் என்றார்கள்”

“என் தந்தையார் ஸ்ரீதனமாகக் கொடுத்த ஐந்து லெட்ச ரூபாய்களையும் அப்படியே வங்கியில் வைப்புத்
தொகையாகப் போட்டு விட்டு அதன் ரசீதை என் தந்தையிடம் காட்டினார்களாம். அத்துடன் இன்னொன்றும் செய்தார்கள் தெரியுமா?”

“என்ன?” சோமு ஆர்வமாகக் கேட்டான்.

“நாம் இங்கே புறப்பட்டு வருவதற்கு முன்பு உள் வீட்டிற்குள்
என்னை அழைத்தவர்கள், கையில் ஐநூறு ரூபாய்க் கட்டு
ஒன்றைக் கொடுத்தோடு சொன்னார்கள். என் மகன் சிக்கனமானவன். ஒவ்வொரு செலவையும் கணக்கெழுதி செலவழிப்பவன்.  ஆகவே ஒவ்வொரு வீட்டுச் செலவிற்கும் அவனைக் கேட்டு நீ செலவு செய்ய முடியாது. ஆகவே
அவசரத்திற்கு இதில் இருந்து எடுத்து செலவழித்துக்கொள் என்றார்கள். என் மகனிடம் இதைச் சொல்ல வேண்டாம் என்றும் சொன்னார்கள். நமக்குள் ஒளிவு மறைவு இருக்கக் கூடாது என்பதற்காக இதை நான் உங்களிடம் சொல்கிறேன். இந்த
விஷயம் நமக்குள் இருக்கட்டும்.....”  என்று  சொன்னவள், உள் அறைக்குள் சென்று தன் பெட்டியிலிருந்த அந்த புது ஐநூறு
ரூபாய்க் கட்டைக் கொண்டு வந்து அவனிடம் கொடுத்தாள்.

“இல்லை நீயே வைத்துக்கொள்” என்றவன் தொடர்ந்து
சொன்னான், “நம் திருமணத்திற்கு அடுத்த நாள் மறுவழிச் சாப்பாட்டிற்காக உங்கள் வீட்டிற்கு வந்த போது, உன் தந்தையார் என்னிடம் தங்கத்தில் கற்பகப் பிள்ளையார் ஒன்றைக் கொடுத்தார். கால் கிலோ எடையாம். அவருடைய மாமனார், அவருடைய திருமணத்தின்போது பரிசாகக் கொடுத்ததாம். மாமனார் என்ற முறையில் அடுத்த தலைமுறை மாப்பிள்ளையான உங்களுக்குப் பரிசாகக் கொடுப்பதுதான் முறை. ஆகவே வைத்துக் கொள்ளுங்கள். என் பெண்னிடம் இப்போது சொல்ல வேண்டாம். சர்ப்ரைசாக இருக்கட்டும். பெங்களூர் போனதற்குப் பிறகு
அங்கே சொல்லுங்கள். இந்தப் பிள்ளையார் மிகவும்
இராசியான பிள்ளையார். எல்லா வளமும் உங்களைத் தேடி வரும்” என்று ஆசீர்வதித்துக் கொடுத்தார். ”அது என் பெட்டியில் துணிகளுக்குக் கீழே உள்ளது எடுத்துப் பார்”

மீனாட்சி அசந்து போய் விட்டாள். தன் தந்தையையும் தன் கணவனையும் ஒரு சேர நினைத்துப் பார்த்தவளின் கண்கள் பனித்து விட்டன!

" ஆனந்த குயிலின் பாட்டு தினம் எங்களின் வீட்டுக்குள்ளே
பூக்களில் நனையும் காற்று தினம் எங்களின் தோட்டத்திலே
கிளிகளின் கூட்டுக்குள்ளே புது உலகம் பிறந்ததே
அன்பு கொண்ட நெஞ்சுக்குள்ளே ஒரு வானம் விரிந்ததே!"

என்ற பாடல் வரிகள் அவள் மனதிற்குள் ஒலித்தது!!!!

                    ***********************************************

மூன்று மாதங்கள் சென்றதே தெரியவில்லை. மீனாட்சியின் பெரியப்பச்சி மகள் அகிலா என்ற அகிலாண்டேஷ்வரி
வெளிநாட்டிலிருந்து 18 நாட்கள் விடுப்பில் சென்னைக்கு வந்தவள், மீனாட்சியைப் பார்க்க தன் மூன்று வயதுக் குழந்தையுடன்
பெங்களூருக்கு வந்திருந்தாள்.

வந்தவளுக்கு எல்லாமும் ஆச்சரியமாக இருந்தது.

ஆச்சரியத்தில் பெரிய ஆச்சரியம், மீனாட்சி தன் கணவனை ’அய்த்தான்’ என்று ஒவ்வொருமுறையும் அழைத்தது. அவள் கணவன் சோமுவும் மீனாட்சியைப் பெயர் சொல்லி
அழைக்காமல் “கண்மணி’ என்று அழைத்ததும் ஆச்சரியமாக இருந்தது.

மீனாட்சியின் கணவன் தன்னுடைய அலுவலகத்திற்குப்
புறப்பட்டுச் சென்றவுடன், அகிலா மெதுவாகக் கேட்டாள்:

“என்னடி நடக்கிறது இங்கே? நீ அய்த்தான் அய்த்தான் என்று குழைகிறாய். அவர் பதிலுக்குக் கண்மணி கண்மணி என்று
குழைகிறார்.....என்ன ஆச்சு உங்களுக்கு? எந்தக் காலத்தில் இருக்கிறீர்கள் நீங்கள்?

“எதற்காக கேட்கிறீர்கள் ஆச்சி?”

”இந்தக் காலத்து இளம் பெண்கள் அனைவருமே தங்கள்
கணவனை பெயர் சொல்லித்தானே அழைக்கிறார்கள். நான்
என் கணவர் இராமநாதனை ராம் என்று தான் அழைக்கிறேன்.
அவர் என்னை அகில் என்றுதான் அழைக்கிறார்!”

அது ஒவ்வொருவரின் பழக்கத்தைப் பொறுத்தது. அன்பு,
அபிமானம், வைத்திருக்கும் மரியாதையைப் பொறுத்தது.
அவர் தங்கமான மனிதர். என்னைவிட ஆறு வயது மூத்தவர். அவரைப் பெயர் சொல்லி அழைக்க என் மனம் ஒப்பவில்லை. அவரிடமே கேட்டேன். உங்களை அய்த்தான் என்று
அழைக்கட்டுமா? பத்தாம் பசலி என்று நீங்கள் நினைக்ககூடாது அதனால்தான் கேட்கிறேன் என்றேன். அதற்கு அவர் உன் விருப்பம்போல எப்படி வேண்டுமென்றாலும் அழைக்கலாம்
என்று சொல்லிவிட்டார். ஆரம்பத்தில் இருந்து அவரும் என்னைக் கண்ணின் மணி - கண்மணி என்றுதான் அழைக்கிறார்”

”போகட்டும், காலையில் எழுந்தவுடன் தரையில் பாயை
விரித்துக் கொண்டு அமர்ந்து, சமையலுக்கு வேண்டிய காய்கறிகளை எல்லாம் அழகாக நறுக்கித் தட்டில் அடுக்கிக் கொடுத்து விடுகிறாரே! அதுவும் எனக்கு ஆச்சரியமாக
உள்ளது. என் கணவர் இருந்த இடத்தைவிட்டு நகர மாட்டார்.
காப்பி குடித்த டம்ளரை சிங்கில் கொண்டு போய்  போடமாட்டார். நான்தான் எடுத்துக் கொண்டுப்போய்ப் போட வேண்டும். அவர் குளிக்கச் சென்றால், உள்ளாடைகள், டவல் என்று எல்லாவற்றையும் நான் தான் கொண்டுபோய்க் குளியலறையில் போட வேண்டும். எல்லாவற்றிலும் மிதப்பாக இருப்பார். ஒத்தாசையாக இருக்க மாட்டார். அது பற்றிப் பேசினால் சண்டைதான் வரும். ஆகவே
நான் எதுவும் பேசுவதில்லை. குணம் அறிந்ததால், தலையைக் கொடுத்துவிட்டோம் என்று சரி பண்ணிக் கொண்டு போகிறேன்.”

“காலப்போக்கில் எல்லாம் சரியாவிகிடும் ஆச்சி. பொறுமையாக இருங்கள்!”

“வேறு வழியில்லை. அப்படித்தான் இருக்க வேண்டும். ஆமாம்
கேட்க வேண்டும் என்று நினைத்தேன். சென்றமுறை, அதாவது
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உன்னை நான் பார்த்தபோது, கலக்கலாக இருப்பாயே - இப்போது அடியோடு மாறிவிட்டாயே -
எப்படி மாறினாய்? என்ன காரணம்?”

“எங்கள் ஆத்தாவின் அறிவுரைதான் காரணம். என்னுடைய திருமணத்திற்கு முன்பிருந்தே தினமும் எனக்கு பல அறிவுரைகளைச் சொன்னார். அதில் மூன்று அறிவுரைகள் முக்கியமானவை. அதன்படிதான் நடக்கிறேன்.”

“என்ன அறிவுரை? எனக்கும் சொல்லேன்!”

“இனிமேல் உனக்கு உன் கணவர்தான் முக்கியம். நாங்கள் யாரும் உடன் வரமாட்டோம். அவரின் மனம் நோகாமல் நடந்து கொள்.
அவரை மகிழ்ச்சியாக வைத்துக்கொள். வியாபாரத்தில், வாடிக்கையாளர் எது செய்தாலும் சரியாக இருக்கும் என்கின்ற பொன்மொழி உண்டு - அதாவது customer is always right'  என்பதுதான் தாரக மந்திரம். அது போல தாம்பத்திய
வாழ்க்கையில் கணவர் எப்போதுமே சரியானவர் என்பதுதான் தாரக மந்திரம் Husband is always right.  அவரை எதிர்த்துப் பேசாதே. எந்த சூழ்நிலையிலும் அவருடன் சண்டை போடாதே. இதுதான் முதல் அறிவுரை”

“இரண்டாவது........”

“கணவருக்கு மரியாதை கொடு. ஒருமையில் அழைக்காதே! மூன்றாவது அறிவுரை முக்கியமனது. அவரிடம் நேர்மையாக
நடந்து கொள். ஒளிவு மறைவாக எதையும் செய்யாதே!”

 “அருமை! இதையெல்லாம் மீறி ஒன்று இருக்கிறது தெரியுமா? அதுதான் தலை எழுத்து! நாம் வாங்கி வந்த வரம்! மனைவி
அமைவதெல்லம் இறைவன் கொடுத்த வரம் என்ற பாடலைக் கவியரசர் கண்ணதாசன் அற்புதமாக எழுதினார். ஆனால்
அவர் கணவனுக்காக என்ன எழுதினார் என்பது தெரியவில்லை! நல்ல கணவர் அமைவதும் இறைவன் கொடுத்த வரம்தான்!”

இவ்வாறு பேசி முடிக்க முடிக்க அகிலாவின் கண்களில் நீர் துளிர்த்தது.

அதைக் கேட்ட மீனாட்சியின் கண்களும் பனித்து விட்டன!!!                  ****************************************************************************
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

22.11.17

நகைச்சுவை: இறக்கும் தருவாயில் பிரித்துக் கொடுத்த சொத்துக்கள்!



நகைச்சுவை: இறக்கும் தருவாயில் பிரித்துக் கொடுத்த சொத்துக்கள்!

ஒரு மனிதன் சென்னை மருத்துவமனை அறையில் இறக்கும் தருவாயில் தன் மனைவி, மூத்த மகன், மகள், இளைய மகன் இவர்களிடம் சொன்ன கடைசி வார்த்தைகள்....

மூத்த மகனிடம் : மகனே நீ அண்ணா நகரில் இருக்குற 14 பங்களாக்களை பார்த்துக்கணும்.

மகளிடம்: மகளே நீ T-நகர்ல இருக்குற 18 கடைகளையும் பார்த்துக்கணும்.

இளைய மகனிடம் : சின்னவனே என் செல்லக்குட்டி நீதான்யா கிண்டில இருக்குற 26 கம்பெனிகளையும் பார்த்துக்கணும்.

மனைவியிடம் : கண்ணே உன்னைவிட்டு பிரியபோகிறேன்... மயிலபூர்ல இருக்குற 16 அப்பார்ட்மெட்டைகளையும் நீதான் பார்த்துக்கணும்

இவ்வாறு சொல்லிவிட்டு இறந்துவிட்டார்....

இதை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்த இருந்த நர்ஸ் அவரின் மனைவியை பார்த்து, “நீங்க ரொம்ப குடுத்துவச்சவங்க உங்க கணவர் அவரோட எல்லா சொத்தையும் உங்களுக்கு குடுத்துட்டு போயிட்டார்னு சொன்னாங்க....”

அதற்கு அவர் மனைவி சொன்னார்....

சொத்தா.....? எங்க கீது... பால் ஊத்துற பேமானிமா இது... கஸ்மாலம் பால் ஊத்துற ஏரியாவைப் பிரிச்சிக்குடுத்துட்டு பூடுச்சி....!!!!
-----------------------------------------------------------------------
2
ஹலோ, இந்த நம்பர்ல இருந்து ஒரு மிஸ்ட் கால் வந்திருந்தது. யாரு கூப்பிட்டது?"

"எப்போ?"

"ஒரு அஞ்சு நிமிஷம் முன்னாடி"

"ஓ, அதுவா சார் என் ஹஸ்பென்ட் தான் கூப்பிட்டார்."

"எதுக்கு?"

'தெரியலை சார்"

'சரி அவரை பேசச்சொல்லுங்க"

'அவர் இப்போ இங்க இல்லை சார்."

'சரி வந்தவுடனே பேசச் சொல்லுங்க'

'அவர் இப்போ உங்களைப் பார்க்கத்தான் வந்திட்டு இருக்கார்?"

"யாரு அவரு தெரியலயே?"

'அவரு என் ஹஸ்பெண்டு சார். நான் அவரோட வைஃப் ..என்னை உங்களுக்குத் தெரியாது. என் ஹஸ்பன்ட்டுக்கு தான் சார் உங்களைத் தெரியும்."

"இல்லம்மா, ஃபோன் பண்ணவங்க பேர் என்ன?"

"ஃபோன் என் மாமனார் பேர்ல தான் இருக்கு. ஆனா ஃபோன் பண்ணினது என் ஹஸ்பன்ட்"

"சரி என்ன விஷயமா ஃபோன் பண்ணினார்"

"அதை சொல்லத்தான் உங்கள பார்க்க வந்துட்டு இருக்கார்"

"சரி எங்கே இருந்து வர்றாரு?"

"எங்க வீட்லேர்ந்து தான் வர்றாரு"

"ரொம்ப சந்தோஷம் இதுக்கு மேல என்னால முடியாது ..ஃபோனை வெச்சிடறேன் ..அவர் வரட்டும் பார்த்துக்கறேன்"
..................................................................
"ஏண்டி, யார் கிட்ட இவ்ளோ நேரம் பேசிட்டு இருந்தே?"

"தெரியாம ஒரு ராங்க் கால் பண்ணிட்டேங்க...அந்த நம்பர்லேர்ந்து ஒருத்தரு கூப்ட்டாரு.. அதான் டைம்பாஸ்... ச்சும்ம்மா பேசிட்டு இருந்தேன்".

(ஹா..ஹா..ஹா.. பொண்டாட்டியா கொக்கா...! )
--------------------------------------------------
3

நான் : சென்னையில் நீங்கள் எந்த ஏரியா ?


அவர் : சென்னை மொத்தமுமே இப்ப
ஏரியாத்தான் இருக்கு
----------------------------------------------------
4
மனைவி : ஏங்க! சாதாரணமா இருக்கறப்ப முத்தே, மணியே-ன்னு கொஞ்சறீங்க.... குடிச்சா மட்டும் பேயே, பிசாசே-ன்னு திட்டுறீங்களே?

கணவன் : என்னடி பண்றது! போதை ஏறிட்டா எனக்குப் பொய்யே வரமாட்டேங்குது.
------------------------------------------------------------------
5
மனைவி : மாட்டுப் பொங்கல் அன்னைக்கு நம்ம மாட்டுக்கு என் கையால நானே பொங்கல் பண்ணி ஊட்டி விடணும்ங்க ?

கணவன் : நமக்கு நல்லது செய்யற வாயில்லா ஜீவனுக்கு நீ செய்யற பதில் நன்றி இதுதானா ?

மனைவி : ???
-------------------------------------------------------------------
6
மனைவி : டாக்டர், என் ஹஸ்பெண்ட் ராத்திரியெல்லாம் தூக்கத்துல பேசிகிட்டே இருக்கார். என்ன பண்ணறதுன்னே தெரியல...

டாக்டர் : அவரைப் பகல் வேளையில கொஞ்சம் பேசவிடுங்க.

மனைவி : ???
-------------------------------------------------------------------------
7
*டாக்டர் : வாங்க ,                உட்காருங்க ,               சட்டைய கழட்டுங்க , வாயைத் திறங்க ,           நாக்க நீட்டுங்க..          திரும்பி உட்காருங்க , இழுத்து மூச்சு விடுங்க ....இப்ப சொல்லுங்க என்ன செய்யுது ?

*வந்தவர் :  ஒண்ணுமில்லை டாக்டர் , என் மகளுக்குக் கல்யாணம். பத்திரிகை கொடுக்க வந்தேன் .....!
------------------------------------------------------------------------------

மேலே உள்ளவற்றில் எது மிகவும் நன்றாக உள்ளது?

அன்புடன்
வாத்தியார்
====================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

21.11.17

ஆங்கிலத்தில் அதிகமான மகிழ்ச்சியைக் கொடுக்கும் 5 எழுத்து வார்த்தை எது?


ஆங்கிலத்தில் அதிகமான மகிழ்ச்சியைக் கொடுக்கும் 5 எழுத்து வார்த்தை எது?

Most pleasing 5 letter word in English:

பலரும் சொல்லும் வார்த்தை Money!

ஆனால், அதுவல்ல சரியான பதில்!

பின் எது சரியான வார்த்தை? தெரிந்து கொள்ள கீழே உள்ள காணொளியைப் பாருங்கள்

1


---------------------------------------------------------------------
2

எல்லோரிடமும் நல்ல பெயர் எடுப்பது எப்படி?

திருமதி. தேசமங்கை சொல்லித்தருகிறார். காணொளியைப் பாருங்கள்:

2


----------------------------------------------------------------------
3.
குழந்தைகளை அற்புதமாக வளர்ப்பதெப்படி?

7 வயதுக் குழந்தை செல்வி. உமையாளின் தாயார் சொல்லித் தருகிறார்; காணொளியைப் பாருங்கள்:

3


---------------------------------------------------
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

20.11.17

வங்கிகளில் பணம் அனுப்பும் முறை பற்றி தெரிந்து கொள்வோம்!


வங்கிகளில் பணம் அனுப்பும் முறை பற்றி தெரிந்து கொள்வோம்!

வங்கிகளில் பணம் அனுப்பும் முறை RTGS, NEFT, IMPS, UPI பற்றி தெரிந்து கொள்வோம்!

RTGS : Real Time Gross Settlement.

வார நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி
வரையிலும், சனிக்கிழமை வேலை நாட்களில் காலை 9 மணி
முதல் மதியம் 2 மணி வரையிலும் RTGS மூலம் பணம் அனுப்பலாம். (வங்கிக் கிளைகளின் வேலை நேரத்தைப் பொறுத்து இது
மாறுபடும்).குறைந்தபட்சம் 2 லட்ச ரூபாய் அனுப்ப வேண்டும்.

தொகை அனுப்பிய உடனேயே பெறுநரின் வங்கிக்கு தகவல் தரப்படும். அடுத்த 30 நிமிடங்களுக்குள் தொகையை பெறுநரின்
வங்கிக் கணக்கில் வரவு வைக்க வேண்டும். எதுவும் பிரச்னை என்றால் உடனடியாக அனுப்புனரின் வங்கிக்கு பெறுன்ரின் வங்கி
தொகையைத் திருப்பி அனுப்பி விட வேண்டும்.
_____

NEFT : National Electronic Fund Transfer

வார நாட்களில் காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை. சனிக்கிழமை வேலை நாட்களில் காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை.

இதில் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ஒரு தடவை அனுப்பும் வங்கியிலிருந்து மும்பையில் உள்ள NEFT சர்வீஸ் செண்டருக்கு
தகவல் அனுப்பும். அங்கிருந்து பெறுநரின் வங்கிக்கு தகவல் அனுப்பப்பட்டு பணம் பெறுநரின் வங்கிக் கணக்கில் டெபாசிட்
செய்யப்படும். Core banking சிஸ்டத்தில் செயல்படுவதால் சம்பந்தப்பட்ட வங்கிக் கிளை செயல்பட்டாலும், இல்லாவிட்டாலும்
பிரச்னை இல்லை. உள்ளூர் விடுமுறை தினங்களிலும் கூட பாதிப்பு இருக்காது.

NEFT-ல் அனுப்பப்படும் தொகையை அடுத்த 2 மணி நேரத்துக்குள் பெறுநரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்காவிட்டால்
அனுப்புநரின் வங்கிக் கணக்கிற்கு அடுத்த ஒரு மணி நேரத்தில் திருப்பி அனுப்பப்பட்டு விட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி
உத்தரவிட்டுள்ளது.
_______

மேலே உள்ள இரண்டுமே வங்கி வேலை நாட்களில், வேலை நேரத்தில் மட்டுமே செயல்படுத்தப்படும்.

IMPS : Immediate Payment Service

24x7 எந்த நேரத்திலும் உடனடியாக பணம் அனுப்பும் முறை. இண்டர்நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங், ஏ.டி.எம். ஆகிய
வழிகளில் IMPS சர்வீஸ் வசதி உள்ள எந்தவொரு வங்கிக் கணக்கிற்கும் எப்போது வேண்டுமானாலும் பணம் அனுப்பலாம். அடுத்த நொடியில் பெறுநரின் வங்கிக் கணக்கில் பணம் இருக்கும்.

UPI : Unified Payments Interface

இதுவும் IMPS போல தான். ஆனால் NEFT, RTGS, IMPS போன்றவற்றையெல்லாம் ஆன்லைனில் நான் உபயோகிக்கும் போது பெறுநரின் வங்கிக் கணக்கு விபரங்களை நாம் முதலில் பதிவு செய்து அதன் பிறகே தொகை அனுப்ப இயலும். புதிதாக பெறுநரைப் பதிவு செய்தால் சில வங்கிகளில் 30 நிமிடங்களில் தொகை அனுப்பும் வசதி செயல்படுத்தப்படும். சில வங்கிகளில் 24 மணி நேரமாகும். UPI-ஐயைப் பொறுத்தவரை பதிவு செய்து காத்திருக்கத் தேவையில்லை. நேரடியாக பெறுநரின் மொபைல் எண் (அவரும் upi-யில் பதிவு செய்திருக்க வேண்டும்), அல்லது
ஆதார் எண், அல்லது வங்கிக் கணக்கு எண் + IFS கோடு (IFSC)
ஆகியவற்றைக் கொண்டு உடனடியாக எப்போது வேண்டுமானாலும் தொகை மாற்ற முடியும். இதில் இன்னும்
சில வங்கிகள் இணையவில்லை.

அந்தந்த வங்கியின் இண்டர்நெட் பேங்கிங்கிலும், மொபைல் செயலியிலும் UPI என்ற ஆப்ஷன் இருக்கும். அல்லது BHIM என்ற
மொபைல் செயலியைத் தரவிறக்கிக் கொண்டும் இதனை உபயோகித்துக் கொள்ளலாம்.

UPI பற்றி இன்னும் சில தகவல்:

ஒரு முறை BHIM Appல் ரிஜிஸ்டர் செய்துவிட்டால் அதன்பிறகு இன்டர்நெட் இல்லாமலே *99# மூலமாக பணப் பரிமாற்றம்
செய்யலாம். UPI வகை பரிவர்த்தனைக்கு கட்டணம் கிடையாது ஆனால் ஒரு நாளைக்கு ₹10,000 விதம் ₹1 லட்சம் மட்டுமே
ஒருவருக்கு பரிவர்த்தனை செய்யமுடியும்.

படித்தேன்; பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
======================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

18.11.17

Astrology: ஜோதிடம்: 17-11-2017 புதிருக்கான விடை!


Astrology: ஜோதிடம்: 17-11-2017 புதிருக்கான விடை!

அந்த ஜாதகத்திற்கு உரியவர் நம் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் திருவாளர் கபில் தேவ் அவர்கள். அவருடைய தலைமையினாலும், சிறந்த ஆட்டத்தினாலும்தான் நாம் 1983ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்று வாகை சூடினோம்
அவர் பிறந்த தேதி : 6-1-1959 காலை 2:30 மணி சண்டிகார் நகரம்.

நான் எதிர்பார்த்தபடி நிறைய அன்பர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். சுமார் 15 பேர்கள் சரியான விடையை எழுதி உள்ளார்கள். அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்! அவர்களின் பெயர்கள் அவர்களுடைய பின்னூட்டங்களுடன் கீழே கொடுத்துள்ளேன். பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்

மீண்டும் ஒரு புதிருடன் அடுத்த வெள்ளிக்கிழமை (24-11-2017) சந்திப்போம்!

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------
1
Blogger sundinesh1 said...
Kapil dev
Friday, November 17, 2017 5:55:00 AM 
--------------------------------------------------------------------
2
Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
Good morning sir,the celebrity was famous farmer Indian cricket capten Kapil Dev was born on 6-01-1959 time 2.30am Place Chandigarh Punjab.thanks Sir vazhga valamudan
Friday, November 17, 2017 7:06:00 AM 
---------------------------------------------------------
Blogger kmr.krishnan said...
Classroom friend's!! PLease read vathiyar's post dt.15 Nov2017
Friday, November 17, 2017 9:22:00 AM 

ஆமாம். பாருங்கள் இதுவரை உதவிக்கரம் நீட்டியவர்களின் பெயர்கள் தெரியவரும்!!!
-------------------------------------------------------
3
Blogger amuthavel murugesan said...
Name : Kapil Dev Ram lal Nikhanj
Born : 6 January 1959 
M.Santhi
Friday, November 17, 2017 9:58:00 AM 
--------------------------------------------------------
4
Blogger GOWDA PONNUSAMY said...
அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்!
ஜாதகர் திருவாளர் கபில் தேவ் அவர்கள்.
ஜனவரி 06,1959 அன்று காலை 03-05 மணிக்கு பஞ்ஜாப் மாநிலம் சண்டிகரில் பிற்ந்தவர்.
இந்திய கிரிக்கெட் வீரர். இவரது தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி 1983 ல் உலக கோப்பையை வென்று சாம்பியன் ஆனது!
அப்பாடா!.... சரியாக சொல்லியுள்ளேனா?
அன்புடன்,
-பொன்னுசாமி.
Friday, November 17, 2017 10:36:00 AM
-----------------------------------------------------------
5
Blogger Ananthakrishnan K R said...
வணக்கம் ஐய்யா
ஜோதிடப்புதிர் - 4
ஜாதகர் கபில் தேவ்
பிறந்த நாள் ஜனவரி 6 ஆம் தேதி 1959 ஆம் வருடம் 2 மணி 29 நிமிடம்
பிறந்த ஊர் - சண்டிகர், பஞ்சாப்
நன்றியுடன்,
க இரா அனந்தகிருஷ்ணன்
சென்னை
Friday, November 17, 2017 10:41:00 AM
------------------------------------------------------
6
Blogger Palani Shanmugam said...
மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,
இந்த ஜாதகத்துக்கு உரியவர் ஜனவரி 6, 1959ல் பிறந்த பிரபல கிரிக்கெட் வீரர் ஆல்ரவுண்டர் கபில்தேவ் அவர்கள்.
எஸ். பழனிச்சாமி
Friday, November 17, 2017 12:21:00 PM
-------------------------------------------------------
7
Blogger csubramoniam said...
ஐயா,
ஜொதிட புதிர்க்கான விடை
ஜாதகத்திற்கு சொந்தக்காரர் : பிரபல கிரிக்கெட் வீரர் கபில்தேவ் அவர்கள்
பிறந்த தேதி :6 /ஜனவரி 1959
பிறந்த நேரம் : காலை 2 :30
இடம் :சண்டிகர்
நன்றி
Friday, November 17, 2017 12:31:00 PM
----------------------------------------------------
8
Blogger Shruthi Ramanath said...
Sir I think its the great cricketer KAPIL DEV... 
Date of birth: 6-january-1959
Time of birth: 2.30 AM
Place of birth: Chandigarh
Friday, November 17, 2017 1:44:00 PM 
--------------------------------------------------
9
Blogger bala said...
vanakkam iyya,
Jathagar kapil dev avargal. Indian cricketer kapil dev.
6th Jan 1959 - 2 hrs 20 mins at chandigarh, india
https://en.wikipedia.org/wiki/Kapil_Dev
nandri,
Bala
Friday, November 17, 2017 2:16:00 PM 
--------------------------------------------------
10
Blogger kmr.krishnan said...
இது கிரிக்கெட் கேப்டன் உயர்திரு கபில்தேவின் ஜாத‌கம்.
ஜாதகர் பிறந்ததேதி: 6 ஜனவரி 1959
பிறந்த நேரம்: அதிகாலை 2 மணி 34 நிமிடங்கள்.
பிறந்த ஊர் : சண்டிகர்=பஞ்சாப்
ருச‌க யோகம், கஜகேசரி யோகம், சதாசஞ்சார யோகம் உடையவர்.
செவ்வாய் ஆட்சியில் இருப்பதால் தலைமைப் பண்பு உடையவர்.
Friday, November 17, 2017 4:03:00 PM
---------------------------------------------------
11
Blogger guru said...
DOB: Jan-06-1959
Two popular(!!) people born on that day .
1. Kapil dev - cricketer
2.Beant Singh - who involved in Indira Gandhi Death
Based on the clue, It should be Beant Singh.
Friday, November 17, 2017 4:24:00 PM 
----------------------------------------------------
12
Blogger Maheswari Bala said...
Kapil dev cricketer
Friday, November 17, 2017 8:10:00 PM 
-----------------------------------------------------
13
Blogger Yogesh Thanigaivel said...
ஐயா வணக்கம்,
ஜாதகர் - கபில் தேவ் - கிரிக்கெட் வீரர் (KAPIL DEV - CRICKETER)
பிறந்த நாள் - 6.1.1959 - 2.30 am - Chandigarh
நன்றி
தணிகைவேல்.
Friday, November 17, 2017 11:11:00 PM
-------------------------------------------------
14
Blogger ravichandran said...
Respected Sir,
Happy morning... My answer for our Quiz No.4:
The Native of the horosocope is Shri Kapil Dev, Former Indian Cricketer.
Born on Jan 6, 1959 at 2:30am Chandigarh
With regards,
Ravi-avn
Saturday, November 18, 2017 1:29:00 AM 
-------------------------------------------
15
 Mr. Kapil Dev (Born:6th January 1959 at Chandigarh) – Former Captain of Indian Cricket Team.

DOB: 06.01.1956
TOB: 00.50 AM ( around this time)
POB: Chandigarh
Regards
Ramesh Ganapathy

Nigeria
====================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

17.11.17

Astrology: Quiz. 4 : ஜோதிடப் புதிர் 4 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!


Astrology: Quiz. 4 : ஜோதிடப் புதிர் 4 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!

நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டு பிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும்  ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்ல லாம்.  Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள்

சென்ற வாரம் நிறைய அன்பர்கள் கலந்து கொண்டதோடு சரியான விடையைச் சொல்லி அசத்திவிட்டார்கள்!

தேதியைக் கண்டு பிடித்து விடுங்கள், மற்றதற்கு கூகுள் ஆண்டவர் உதவி செய்வாரே!


க்ளூ வேண்டுமா? அகில இந்திய பிரபலம். எந்தத் துறையில் என்று சொன்னால் கோளாறாகிவிடும். ஆகவே சொல்லவில்லை!

சரியான விடை நாளை வெளியாகும்!
அன்புடன்
வாத்தியார்
--------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

16.11.17

Cinema: சிவாஜி கணேசன் அவர்கள் நக்கிரராக நடித்த படத்தை பார்த்திருக்கிறீர்களா?


Cinema: சிவாஜி கணேசன் அவர்கள் நக்கிரராக  நடித்த படத்தை பார்த்திருக்கிறீர்களா?

சிவாஜி கணேசன் அவர்கள் நக்கீரராகவும் சிவனாகவும்  அதாவது இரண்டு வேடங்களிலும் நடித்த படம்’ 14-1-1956ம் ஆண்டில் வெளிவந்த ’நான் பெற்ற செல்வம்’ என்ற படம். அந்தப் படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதியவர் ஏ.பி.நாகராஜன். இயக்கம்.கே.சோமு அவர்கள்

அதன் காட்சி கீழே உள்ளது உங்கள் பார்வைக்காக:




-----------------------------------------------------------------------------------------
2

இதே நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் சிவனாகவும் ஏ.பி.நாகராஜன் அவர்கள் நக்கீரராகவும் நடித்து 31-7-1965 ம் ஆண்டில் வெளிவந்த படம் ‘ திருவிளையாடல்.  அதில் தருமியாக நடித்த நாகேஷ் கலக்கியிருப்பார். அந்த காட்சியின் காணொளியும் கீழே உங்கள் பார்வைக்காக உள்ளது. அதையும் பாருங்கள்



அன்புடன்
வாத்தியார்
=========================================================
வாழ்க வளமுடன்!வளர்க நலமுடன்!

15.11.17

உதவிக்கரம் நீட்டுங்கள்!


உதவிக்கரம் நீட்டுங்கள்!

நம் வகுப்பறையின் மூத்த மாணவர்.கே.முத்துராமகிருஷ்ணன் (KMRK) லால்குட, அவர்களின் சமூகசேவை.

அவர் பல ஆண்டுகளாக சமூக சேவை செய்து வருகிறார். அதுபற்றி முன்பு வெளியான கட்டுரையின் சுட்டியைக் கொடுத்துள்ளேன். அனைவரும் படித்துப் பாருங்கள்:

http://classroom2007.blogspot.in/2011/04/blog-post_11.html

அவரைப் பல ஆண்டுகளாக நான் நன்கு அறிவேன்’

தற்சமயம் தனக்குச் சொந்தமான 4000 சதுர அடி பிளாட் ஒன்றினை சேவாலயா(www.sevalaya.org) என்ற தொண்டு நிறுவனத்திற்கு தானமாக அளித்துள்ளார்.

அவர் அளித்துள்ள மனைக்கட்டில் அவர்கள் அவருடைய தந்தையாரின் பெயர் (காந்தி ஆசிரமம் கிருஷ்ணன்) சூட்டி ஒரு முதியோர் இல்லம் கட்டிடம் கட்டி நிர்வகிக்க வேண்டும் என்பது அவருடைய வேண்டுகோள்.அதனை அவர்கள் ஏற்று ஆயத்தப் பணிகள் நடந்து வருகின்றன.

அதற்காக நன்கொடை வேண்டி பலரையும் அணுகியுள்ளார்கள். கட்டிடப் பணிகளுக்கு ஒரு சதுர அடிக்கு ரூ2000/‍ தேவைப்படுகிறது.  அது போல 2000 சதுர அடி கட்ட ரூ 40 லட்சம் போல வேண்டியுள்ளது.

அதற்கான வேண்டுகோள் மடல் ஒன்றை எழுதியுள்ளார். நம் வகுப்பறையில் வெளியிடவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். சேவாலயா நிறுவனத்தைப் பற்றிய தகவல்கள் கீழே உள்ளன.

மேல் அதிகத் தகவல்களுக்கு அவருடைய மின் அஞ்சல் முகவரிக்கு எழுதலாம்.

சேவாலயாவின் வங்கிக் கணக்கு விபரங்களை அவர் உங்களுக்கு அனுப்பி வைப்பார்.

K.Muthuramakrishnan
email ID:  kmrk1949@gmail.com
mobile number : 9047516699

நல்ல மனம் வாழ்க!!!!
நாடு போற்ற வாழ்க!!!

உங்கள் ஆதரவைத் தெரிவிப்பதன் மூலம் ஒரு நல்ல சமூக சேவையில் பங்கு கொள்ள அனைவரையும் வேண்டுகிறேன்



அன்புடன்
வாத்தியார்
=========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

14.11.17

உங்களை எச்சரிக்கும் காணொளிகள் . அவசியம் பாருங்கள்


உங்களை எச்சரிக்கும் காணொளிகள் . அவசியம் பாருங்கள்

1. உங்கள் வங்கிக் கணக்கு விபரம் மற்றும் ஆதார் எண்ணைக் கேட்டு அழைப்பு வந்தால் என்ன செய்ய வேண்டும்? இந்தக் காணொளியைப் பாருங்கள்!


2. மழை நேரங்களில் அதிக மின் அழுத்தம் உள்ள பவர் லைனுக்கு அருகில் இருந்து மொபைல் பேசினால் என்ன ஆகும்?
இந்தக் காணொளியைப் பாருங்கள்!


3. பாத்ரூம் கெமிக்கல்ஸ் பற்றிய எச்சரிக்கைக் காணொளி: அவசியம் பாருங்கள்:


அன்புடன்
வாத்தியார்
------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

13.11.17

எப்படி வாழ வேண்டும்?


எப்படி வாழ வேண்டும்?

மகாபாரதம் உணர்த்தும் உண்மைகள்!!!

மோகத்தில் வீழ்ந்துவிட்டால்
மொத்தமாய் வீழ்ந்திடுவாய்
சாந்தனுவாய்....

சத்தியம் செய்துவிட்டால்
சங்கடத்தில் மாட்டிடுவாய்
கங்கை மைந்தானாய்..

முற்பகல் செய்யின்
பிற்பகல் விளையும்
பாண்டுவாய்....

வஞ்சனை நெஞ்சில் கொண்டால்
வாழ்வனைத்தும் வீணாகும்
சகுனியாய்...

ஒவ்வொரு வினைக்கும்
எதிர்வினை உண்டு
குந்தியாய்...

குரோதம் கொண்டால்
விரோதம் பிறக்கும்
திருதராஷ்டிரனாய்....

பெற்றோர்கள் செய்யும் பாவங்கள்
பிள்ளைகளை பாதிக்கும்
கௌரவர்கள்...

பேராசை உண்டாக்கும்
பெரும் அழிவினையே
துரியோதனனாய்...

கூடா நட்பு
கேடாய் முடியும்
கர்ணனாய்...

சொல்லும் வார்த்தை
கொல்லும் ஓர்நாள்
பாஞ்சாலியாய்..

தலைக்கணம் கொண்டால்
தர்மமும் தோற்கும்
யுதிஷ்டிரனாய்.....

பலம் மட்டுமே
பலன் தராது
பீமனாய்....

இருப்பவர் இருந்தால்
கிடைப்பதெல்லாம் வெற்றியே
அர்ஜூனனாய்....

சாஸ்திரம் அறிந்தாலும்
சமயத்தில் உதவாது
சகாதேவனாய்..

விவேகமில்லா வேகம்
வெற்றியை ஈட்டாது
அபிமன்யூ

நிதர்சனம் உணர்ந்தவன்
நெஞ்சம் கலங்கிடான்
கண்ணனாய்....

வாழ்க்கையும் ஒரு பாரதம்தான்....
வாழ்ந்திடலாம் பகுத்தறிந்து...நேர்மையாய் வாழ்ந்தால்!!!

படித்தேன்
பகர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

11.11.17

Astrology: ஜோதிடம்: 10-11-2017 புதிருக்கான விடை!


Astrology: ஜோதிடம்: 10-11-2017 புதிருக்கான விடை!

அந்த ஜாதகத்திற்கு உரிய பிரபலம், சுவாமி விவேகானந்தா அவர்கள்! அவர் பிறந்த தேதி: 12-1-1863 - 6:20 AM  கல்கத்தா

நான் எதிர்பார்த்தபடி நிறைய அன்பர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். சுமார் 19 பேர்கள் சரியான விடையை எழுதி உள்ளார்கள். அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்! அவர்களின் பெயர்கள் அவர்களுடைய பின்னூட்டங்களுடன் கீழே கொடுத்துள்ளேன். பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்

மீண்டும் ஒரு புதிருடன் அடுத்த வெள்ளிக்கிழமை (17-11-2017) சந்திப்போம்!

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------
1
Blogger karthikeyan said...
Swami vivekanathar
Friday, November 10, 2017 5:31:00 AM 
-----------------------------------------------
2
Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
Good morning sir,the above horoscope corresponding to the great indian philosopher Swamy Vivekananda,born on 12/01/1863 at Kolkata
Friday, November 10, 2017 8:11:00 AM 
---------------------------------------------------------
3
Blogger KJ said...
Swami Vivekananda Horoscope sir..
Friday, November 10, 2017 8:21:00 AM 
--------------------------------------------------------
4
Blogger kmr.krishnan said...
This is the horoscope of Swami Vivekananda Born on 12 Jan 1863 at 6.33 am at Kolkotta
Friday, November 10, 2017 8:27:00 AM 
-------------------------------------------------
5
Blogger sundinesh1 said...
Swami vivekananda
Friday, November 10, 2017 8:29:00 AM 
---------------------------------------------------
6
Blogger amuthavel murugesan said...
Name: Swami Vivekananda
Date of Birth: Monday, January 12, 1863
Time of Birth: 06:20:00
Place of Birth: Calcutta 
M.Santhi
Friday, November 10, 2017 10:05:00 AM 
---------------------------------------------------------
7
Blogger Palani Shanmugam said...
மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு
புதிரில் குறிப்பிட்ட ஜாதகம் 12.01.1863 ல் பிறநத சுவாமி விவேகானந்தரின் ஜாதகம்.
எஸ். பழனிச்சாமி
Friday, November 10, 2017 12:27:00 PM
-------------------------------------------------------
8
Blogger Shruthi Ramanath said...
Sir... I think its the great philosopher SWAMI VIVEKANANDA... 
Date of birth: 12-January-1863
Time of birth: 6.33 AM
Place of birth:kolkatta
Friday, November 10, 2017 2:55:00 PM 
------------------------------------------------------
9
Blogger umajana said...
ஐயா ,
இந்த ஜாதகத்துக்கு உரியவர் சுவாமி விவேகானந்தர். இவர் பிறந்த தினம்
12/01/1863 காலை 6:30 மணியளவில்.
Friday, November 10, 2017 3:55:00 PM
-------------------------------------------------
10
Blogger sudesi jayakumar said...
Swami Vivekananda
Friday, November 10, 2017 4:07:00 PM
----------------------------------------------------
11
Blogger Yogesh Thanigaivel said...
ஐயா வணக்கம்,
புதிருக்கான விடை-
சுவாமி விவேகானந்தா
பிறந்த நாள் - 11 (அ)12.01.1863
பிறந்த நேரம் சூரிய உதயத்தின் போது (5.50 to 6.35 am something)
நன்றி
தணிகைவேல். ம
Friday, November 10, 2017 4:34:00 PM
--------------------------------------------------------------
12
Blogger Thanga Mouly said...
சுவாமி விவேகானந்தர் அவர்கள். DOB: 12 JAN 1863
Friday, November 10, 2017 4:38:00 PM
-------------------------------------------------------
13
Blogger siva kumar said...
வணக்கம் சார்
ஜாதகர்
மாகான் சுவாமி விவேகானந்தர் ஐயா
இவருடைய ஜாதகத்தை நீங்கள் வகுப்பறையில் தெளிவாக அலசி உள்ளிர்கள் ஐயா.1/3/2012 அன்றைய வகுப்பில் சார்
Friday, November 10, 2017 7:00:00 PM
------------------------------------------------------
14
Blogger adithan said...
வணக்கம் ஐயா,சுவாமி விவேகானந்தரின் ஜாதகம்.பிறந்த தேதி 12-01-1863,கல்கத்தா,நேரம் 06-20.வருடம்,மாதம்,உத்தேச நேரம் தெரிந்தது. தேதி கண்டுபிடிக்க உபாயம் தெரியவில்லை.அவை கூகுள் உபயம்.நன்றி.
Friday, November 10, 2017 7:14:00 PM
--------------------------------------------------------
15
Blogger சர்மா said...
Swami Vivekananda's Horoscope
Swami Vivekananda
Name: Swami Vivekananda
Date of Birth: Monday, January 12, 1863
Time of Birth: 06:20:00
Place of Birth: Calcutta
Longitude: 88 E 20
Latitude: 22 N 30
Time Zone: 5.5
Information Source: Lagna Phal (Garg)
Friday, November 10, 2017 8:45:00 PM 
---------------------------------------------------
16
Blogger bala said...
Vanakkam Iyya,
Swami vivekanandha avargal :) :) 
12th Jan 1863 :) 
https://en.wikipedia.org/wiki/Swami_Vivekananda
Nandri,
Bala
Friday, November 10, 2017 9:01:00 PM 
---------------------------------------------------
17
Blogger thozhar pandian said...
விவேகானந்தர் பிறந்தது 12 ஜனவரி 1863
Saturday, November 11, 2017 12:28:00 AM
--------------------------------------------------
18
Blogger ravichandran said...
Respected Sir,
Happy morning... My answer for our Quiz No.3.
The Native of the horoscope is Shri Swami Vivekanda.
Born on 12-01-1863 5:30 am
Have a great day.
With kind regards,
Ravi-avn
Saturday, November 11, 2017 1:15:00 AM 
-----------------------------------------------------
19
Blogger Chandrasekaran Suryanarayana said...
Swami Vivekanandhar
January 12th,1863
06.33.00
22 N 34, 88 E 20
Saturday, November 11, 2017 4:22:00 AM 
---------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

10.11.17

Astrology: Quiz. 3 : ஜோதிடப் புதிர் 3 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!


Astrology: Quiz. 3 : ஜோதிடப் புதிர் 3 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!

நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டு பிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும்
இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச்
சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும்  ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை
வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்ல லாம்.  Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்?

எங்கே முயற்சி செய்யுங்கள்

சென்ற வாரம் நிறைய அன்பர்கள் கலந்து கொண்டதோடு சரியான விடையைச் சொல்லி அசத்திவிட்டார்கள்!

தேதியைக் கண்டு பிடித்து விடுங்கள், மற்றதற்கு கூகுள் ஆண்டவர் உதவி செய்வாரே!


க்ளூ வேண்டுமா? 19ம் நூற்றாண்டில் - அதாவது 1900ம் ஆண்டுக்கு முன்பாகப் பிறந்தவர். அவர் காலத்தில் மட்டுமல்ல, என்றும்
பிரபலமான மனிதர்.

சரியான விடை நாளை வெளியாகும்!
அன்புடன்
வாத்தியார்
=============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

9.11.17

கவியரசரைப் பற்றி எழுத்தாளர் சுஜாதா!


கவியரசரைப் பற்றி எழுத்தாளர் சுஜாதா!

கவிஞர் கண்ணதாசனை நீங்கள் சந்தித்ததுண்டா ?

எழுத்தாளர் சுஜாதா அவர்களின் பதில்:

உண்டு. “நினைத்தாலே இனிக்கும்” கம்போசிங்கின்போது.. சில பொதுக்கூட்ட மேடைகளில்,
.
எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்!

(கற்றதும் பெற்றதும் கட்டுரை ஒன்றில் அவர் எழுதியது)

எம்.எஸ்.வீயும், கவிஞரும் அன்யோன்யமாகப் பழகிக்கொண்டார்கள்.

“விசு, என்ன ட்யூன் ?”

“அண்ணே! சங்கீதத்தைப் பற்றிய உற்சாகமான ட்யூன்!”

“வாசி! “

விஸ்வநாதனின் விரல்கள் ஆர்மோனியத்தில் உலவ, அவருக்கே உரிய வசீகரமான குரலில், “தன் னானே தன்னானே தன்னானே
தன்னானே” என்று பாடினார். உடனேயே கவிஞர், “எங்கேயும் எப்போதும் சங்கீதம், சந்தோஷம் ” என்றார். “பாடிப் பாரு !”

“கச்சிதமாக இருக்கு, கவிஞரே !”"அடுத்த அடி. ?”"தானனன்னே தானனன்னே தானனன்னே தானனன்னே!”"தன்னானேக்கு பதில்
தான னன்னேயா ? சரி கொஞ்சம் தத்துவம் பேசலாமா ?” என்று டைரக்டரைப் பார்த்தார், கவிஞர்.

பாலசந்தர், “தாராளமா! உங்களுக்குச் சொல்லணுமா கவிஞரே ! “

“ராத்திரிகள் வந்துவிட்டால் சாத்திரங்கள் ஓடிவிடும்!” “சரியா ?”

“Perfect !”

விஸ்வநாதன் பாடப் பாட, கண்ணதாசன் அத்தனை சரணங்களையும் (“காலை ஜப்பானில் காபி. மாலை நியூயார்க்கில் காபரே… அவங்க ஊரூரா போறாங்கல்ல ? “) உடனுக்குடன் உதிர்த்தத  கண்மணி சுப்பு அழகான கையெழுத்தில் எழுதித்தர,
சில மணி நேரங்களில் முழுப் பாட்டும் எழுதப்பட்டது.

இடையிடையே, கண்ணதாசனுடன் பேச்சுக் கொடுத்தேன். “எப்படி இவ்வளவு சரளமா வார்த்தைகள் வருது ? “

“தமிழ்ல ஆதார சந்தத்தைப் பிடிச்சுட்டாப் போதும்! பாருங்க, சீதைக்கு எத்தனை பெயர்கள் ? சீதா — நேர் நேர்; ஜானகி —
நேர்நிரை; ஜனகா — நிரைநேர்; வைதேகி — நேர் நேர் நேர் …. இப்படி எந்தச் சந்தம் வேணுமோ அந்தச் சந்தத்துக்கு வார்த்தைகள்
போட்டுக்கலாம். என்ன, எல்லா வார்த்தையும் தெரியணும் அவ்வளவு தான். கம்ப இராமாயணத்தில் ஒவ்வொரு படலத்திலும்,
பாடலிலும் ஒரு புது வார்த்தை கிடைக்கும் !”...

*ஏறத்தாழ 40 ஆண்டுகளாகியும் அந்தப் பாடல் இன்றும்கூட எல்லா மெல்லிசை நிகழ்ச்சிகளிலும் கட்டியம் கூறும் பாடலாகப்
பாடப்படுகிறது. கண்ணதாசன் அதைத்தான் செய்தார் எங்கேயும் எப்போதும் சங்கீதத்தையும், சந்தோஷத்தையும் பரப்பினார்.

உலகில் தமிழர்கள் வாழும் ஏதாவது ஒரு மூலையில் பயணிக்கும் கார்களிலும், இல்லங்களிலும் அவரது ஏதாவது ஒரு வரி ஒலிக்காத
நேரமே இல்லை!..*

---------------------------------------
படித்தேன், ரசித்தேன், பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
=====================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!