முக்கிய அறிவிப்பு:
நமது வகுப்பறையின் மூத்த மாணவர்களில் ஒருவரின் வேண்டுகோளை ஏற்று இன்று வரவேண்டிய புதிர் பகுதி, ஒரு நாள் தள்ளிவைக்கப் பெற்றிருக்கிறது. அது நாளை காலை வெளியாகும். அனைவரும் பொறுத்தருள்க!
அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------------------------------------------------
என்ன பாட்டுடா சாமி!!!!
சில பாடல்களைக் கேட்கும்போது, அவை நம்மை உள்ளே இழுத்துக் கொண்டுவிடும். பாடலின் தாக்கம் அன்று முழுவதும் நம் மனத்திரையில் ஓடிக்கொண்டிருக்கும்.
அப்படித் தாக்கம் நிறைந்த தத்துவப் பாடல் ஒன்றை, உங்களுக்காகப் பதிவிட்டுள்ளேன். கவிஞர் வாலி அவர்கள் எழுதிய இந்தப் பாடல், குணா என்னும் திரைப்படத்தில் வந்ததாகும். 5.11.1991ல் வந்த படம். சுமார் 22 ஆண்டுகள் ஆகியும் இன்னும் பாடல் புதிதாகவே உள்ளது. கேட்கக்
கேட்கப் புதிதாகவே உள்ளது. அதுதான் இந்தப் பாடலின் சிறப்பு!
பாடலை உயர்த்திப் பிடிப்பது திருவாளர் இளையராஜா அவர்களின் வளமான குரல் என்றால் அதை மறுப்பதற்கில்லை.
பாடலைக் கேட்டுப் பாருங்கள். வரிக்கு வரி கேளுங்கள். என்னவொரு அற்புதமான வரிகள்.அற்புதமான பாடல்.
அன்புடன்
வாத்தியார்
------------------------------------
பாடலின் வரி வடிவம் கீழேற் உள்ளது. அதைத் தொடர்ந்து ஒலி, மற்றும் ஒளி வடிவமும் உள்ளது.
அப்பனென்றும் அம்மையென்றும்
ஆணும் பெண்ணும் கொட்டி வச்ச
குப்பையாக வந்த உடம்பு - ஞானப் பெண்ணே
குப்பையாக வந்த உடம்பு
அது புத்தன் என்றும் சித்தன் என்றும் பித்தன் என்றும்
ஆவதென்ன சக்கையாக போகும் கரும்பு - ஞானப் பெண்ணே
சக்கையாக போகும் கரும்பு
பந்தா பாச சேற்றில் வந்து விழுந்த தேகம்
எந்த கங்கை ஆற்றில் இந்த அழுக்கு போகும்
(அப்பன் என்றும் அம்மை என்றும் .)..
குத்தம் குறை ஏதும் அற்ற ஜீவன் இங்க யாரடா
சுத்தம் என்று யாரும் இல்லை பாவ மூட்டை தானடா
சிவனைக் கூட பித்தன் என்று பேசுகின்ற ஊரடா
புத்தி கேட்ட மூடருக்கு என்றும் ஞானப்பார்வை ஏதடா
ஆதி முதல் அந்தம் உன் சொந்தம்
உன் பந்தம் நீ உள்ளவரைதான்
வந்து வந்து கூடும் கூட்டம்தான்
விட்டோடும் ஓர் சந்தைக்கடைதான்
இதில் நீ என்ன நான் என்ன
வந்தாலும் சென்றாலும் என்னாச்சு விட்டுத் தள்ளு
கையும் காலும் மூக்கும் கொண்டு ஆட வந்த காரணம்
ஆடித்தானே சேத்து வச்ச பாவம் யாவும் தீரணும்
ஆட ஆட பாவம் சேரும் ஆடி ஓடும் மானிடா
ஆட நானும் மாட்டேன் என்று ஓடிப்போனது யாரடா
தட்டுக் கெட்டு ஓடும் தள்ளாடும்
எந்நாளும் உன் உள்ளக் குரங்கு
நீ போடு மெய்ஞான விலங்கு
மனம் ஆடாமல் வாடாமல்
மெய்ஞானம் உண்டாக
அஞ்ஞானம் அற்று விழும்
(அப்பன் என்றும் ...)++++++++++++++++++++++++++++++++++++++++++
Our sincere thanks to the person who uploaded this song in the net
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++