Astrology ஜோதிடமும், மனித முயற்சியும்!
மனித முயற்சி என்பதற்குப் பலன் எதுவும் கிடையாதா?
ஏன் இல்லை? முயற்சிக்குப் பலன் உண்டு.
நீ மாட்டை வைத்துதான் பிழைப்பு நடத்த வேண்டுமென்பதுதான் விதியென்றால் நீ மாட்டை வைத்துத்தான் பிழைப்பை நடத்தியாக வேண்டும். ஆனால் மாட்டின் எண்ணிக்கையை இறைவன் தீர்மானிப்பதில்லை.
அது உன் கையில்தான் உள்ளது. உன் முயற்சியில்தான் உள்ளது. 4 மாடுகளா அல்லது 40 மாடுகளா என்பது உன் முயற்சியால் நிர்ணயிக்கப்படும்.
-----------------------------------------------------
ஒரு ஏழைப் பால் வியாபாரி இருந்தான். இரண்டு மாடுகளை வைத்துப் பால் வியாபாரம் செய்து கொண்டிருந்தான். வருமானம் போதவில்லை. பற்றாக்குறை. வீட்டில் அவன் மனைவி, பிள்ளைகளைச் சேர்த்து ஐந்து ஜீவன்கள்
வீட்டு வாசல் திண்ணையில் கவலையோடு அவன் அமர்ந்திருந்தபோது, அந்த வழியாகச் சென்ற முனிவர் ஒருவர், அவனை நோக்கிக் கேட்டார், ”தம்பி, சற்றுக் களைப்பாக இருக்கிறது, பசியாற ஏதாவது கிடைக்குமா?”
அவன் பதறிவிட்டான். பசியின் கொடுமை அறிந்தவனல்லவா? உடனே திண்ணையை விட்டுக் குதித்துக் கீழே வந்தவன், “அய்யா நல்ல மோர் இருக்கிறது, தரட்டுமா?” என்று கேட்டான்.
அவர் சம்மதம் சொல்ல, ஒரு செம்பு நிறைய மோரைக் கொண்டு வந்து கொடுத்தான்.
வாங்கி அமைதியாகக் குடித்தார் முனிவர். குடித்தபிறகுதான் அவனை உற்று நோக்கினார். அவன் முகத்தில் கவலை குடிகொண்டிருந்தது.
தன் ஞானக்கண்ணால் அவனுடைய நிலைமையை முழுதாக உணர்ந்தவர் சொன்னார்:
“நாளை அதிகாலை என்னை வந்துபார். உன் கவலைகளை ஓட்டும் வழியைச் சொல்லித் தருகிறேன்”
அவன் அவருடைய இருப்பிடத்தை அறிந்து கொண்டு, அடுத்த நாள் உதயத்தில், நம்பிக்கையுடன், அவரைச் சென்று பார்த்தான்.
அவர் அவனுடன் அதிகமாகப் பேசவில்லை. ஆனால் தீர்க்கமாக ஒன்றைச் சொன்னார் “உன்னிடம் இருக்கும் இரண்டு மாடுகளையும் ஓட்டிக் கொண்டு போய் பக்கத்து ஊர்ச் சந்தையில் விற்று விட்டு வந்து, விற்ற பணத்தை உன் வீட்டில் பத்திரமாக வை.”
அவன் அதிர்ந்து போய் விட்டான்.
மாடுகள் இரண்டையும் விற்று விட்டால் வயிற்றுப் பிழைப்பிற்கு என்ன செய்வது என்று அவரிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளும் முனைப்பில், “அய்யா...” என்று இழுத்தான்.
அது தெரியாதா அவருக்கு? கையைக் உயர்த்திக் காட்டியதோடு, சொன்னார், “ சொன்னதைச் செய், மற்றது தானாக நடக்கும், மீண்டும் நீயே வந்து என்னைப் பார்ப்பாய், இப்போது போ!”
அவன் அவர் சொன்னபடியே செய்தான். இரண்டு மாடுகளும் நல்ல விலைக்குப் போயிற்று. விற்ற பணத்தைக் கொண்டு வந்து, வீட்டுப் பரணின் மேலிருந்த பானைக்குள் வைத்து மூடினான். பிறகு நன்றாகச் சாப்பிட்டுவிட்டு, பாயைப் போட்டு படுத்து உறங்கிவிட்டான்.
தூக்கம் என்றால் அப்படியொரு தூக்கம்.
மாலை ஆறு மணிக்குத்தான், ”அம்மா...” என்று தன் மாடுகள் கத்தும் ஒலி கேட்டுத் திடுக்கிட்டு எழுந்தவன், ஓடிப்போய் தன் வீட்டிற்குப் பின் புறம் இருந்த தொழுவத்தில் பார்த்தான். அங்கே அவனுடைய மாடுகள் இரண்டும் நின்று கொண்டிருந்தன. மயக்கம் வராத குறை அவனுக்கு.
அதோடு அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. விற்று விட்டு வந்த மாடுகள் எப்படித் திரும்பி வந்தன?
இருட்டி விட்டதால் வீட்டிலேயே தங்கி விட்டு, அடுத்த நாள் காலையில் ஒட்டமும் நடையுமாகச் சென்று முனிவரைப் பார்த்தான்.
தியானத்தில் இருந்த அவர் இவன் உள்ளே வந்த ஒலி கேட்டு, கண்களைத் திறந்து பார்த்தார். பார்த்தவர் கேட்டார்,” என்ன உன்னுடைய மாடுகள் இரண்டும் திரும்பி வந்து விட்டனவா?”
அவன் ஆச்சரியத்தின் எல்லைக்கே போய் விட்டான்.
சலனமற்று காட்சியளித்த அவர் சொன்னார்,”நேற்றுச் செய்ததுபோல இன்றும் செய்; ஒன்றும் கேட்காதே, பிறகு சொல்கிறேன் இப்போது போய் வா”
வந்த வேகத்திலேயே திரும்பியவன், அவர் சொல்லியபடியே அன்றும் செய்தான். மறுபடியும் கிட்டத்தட்ட அதே அளவு தொகை கிடைத்தது. வீட்டிற்குக் கொண்டு வந்து, பானைக்குள் போட்டுப் பரணுக்குள் வைத்துவிட்டு, எப்போதும் போல சாப்பிட்டு விட்டுக் கண் அயர்ந்தான்.
நேற்று நடந்தது போலவே இன்றும் நடந்தது. அவன் அதிசயப்படும் விதமாக அவனுடைய இரண்டு மாடுகளும் இன்றும் திரும்பி வந்து தொழுவத்தில் நின்று கொண்டிருந்தன!
இது தொடர்ந்தது. ஒரு நாள் அல்ல இரு நாள் அல்ல பத்து நாட்கள் தொடர்ந்தது. வழக்கப்படி பதினோறாம் நாள் காலையில் முனிவரைச் சென்று பார்த்தான்
அவர் சொன்னார், “இனிமேல் அந்த அதிசயம் தொடராது. உன்னிடம் இப்போது 20 மாடுகளுக்கான தொகை இருக்கிறது. இன்று சந்தைக்குப்போ; நல்ல மாடுகளாகக் கிடைக்கும் 20 மாடுகளை வாங்கி வந்து இன்று முதல் உன் பால் வியாபாரத்தை நல்லபடியாகச் செய்!”
அவன் நெகிழ்ந்து விட்டான். கண்கள் பனிக்கக் கேட்டான், “அய்யா உங்களுக்கு நான் மிகுந்த நன்றிக் கடன் பட்டவனாக இருப்பேன். இதுவரை அந்த அதியசம் எப்படி நடந்தது என்பதைச்சொன்னீர்கள் என்றால் நான் சற்று மன நிம்மதியோடு போவேன்.”
“உன் தலையெழுத்து மாடுகளை வைத்து பிழைப்பதுதான். ஆனால் நீ முயற்சி எதுவும் செய்யாமல், இருப்பதை வைத்து இதுவரை உன் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டு வந்திருக்கிறாய். உனக்கு உதவும் பொருட்டே, எனது சித்து வேலையால் நான் அப்படிச் செய்தேன். எதற்கும் ஒரு அளவு உண்டு. அது தெரிந்து நான் நேற்றோடு நிறுத்திவிட்டேன். இனிமேல் நான் நினைத்தால்கூட உனக்கு உதவ முடியாது. இறைவனை வேண்டிக்கொள். உன் பிரச்சினைகள் எல்லாம் தீரும் அதோடு இனிச் சோம்பியிருக்காமல் முயற்சி செய்து கடுமையாக உழைத்தாய் என்றால் உன் மாடுகளின் எண்ணிக்கை கூடிய சீக்கிரம் 100 ஆகும், பிறகு 200 ஆகும். போய்ப் பிழைத்துக் கொள்!” என்று முடித்தார்.
கதை அவ்வளவுதான். முயற்சி எப்படி வேலை செய்யும் என்பதற்குத்தான் இந்தக் கதை!
நமக்கும் ஒரு முனிவர் வருவாரா என்று யாரும் காத்துக் கொண்டிருக்க வேண்டாம். இது கலியுகம். முனிவரெல்லாம் வரமாட்டார். முனி வேண்டும் என்றால் வரும்.
முனி என்றால் என்னவா? அதுதான் நட்பு என்ற பெயரில் வரும் டாஸ்மார்க், சல்பேட்டா பார்ட்டிகள் அதாவது தண்ணியடிக்கும் ஆசாமிகள்.
--------------------------------------------------------------
சரி துவக்கத்திற்கு வருகிறேன். நல்ல வாழ்க்கைக்கு ஜாதகம் எப்படியிருக்க வேண்டும்?
ஒன்று, ஒன்பது, பத்து, மற்றும் பதினோறாம் வீடுகளில் 30ற்கும் மேற்பட்ட பரல்கள் இருக்க வேண்டும்.
அதவது First House (Lagna), Ninth House (House of gains), 10th House (House of Profession) 11th House (House of Profit) ஆகிய நான்கு இடங்களிலும் 30 பரல்களோ அல்லது 30ற்கு மேற்பட்ட எண்ணிக்கையில் பரல்கள் இருக்க வேண்டும்.
அவைகளுக்கு மட்டும் முக்கியத்துவம் ஏன் ஏன் என்பதை இன்னொரு நாள் விரிவாகச் சொல்கிறேன்!
மற்ற இடங்களெல்லாம் முக்கியமில்லையா? இல்லை!
அப்படியிருந்தால் வாழ்க்கை எப்படியிருக்கும்?
சூப்பராக இருக்கும்!
படிக்கும் வாசகர்கள் யாருக்காவது அப்படியிருக்கிறதா? இருந்தால் சொல்லுங்கள்
எனக்குத் தெரிந்து என்னுடைய உறவினர்கள் இரண்டு பேருக்கு இருக்கிறது. அவர்களது வாழ்க்கையும் சூப்பராக இருக்கிறது. அவர்களுடைய ஜாதகத்தை நான் பர்த்திருக்கிறேன். அதனால்தான் அடித்துச் சொல்கிறேன்.
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
---------------------------------------------------------------