மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label Social Service. Show all posts
Showing posts with label Social Service. Show all posts

22.2.17

சீமைக் கருவேல மரங்கள் படுத்தும் பாடு!


சீமைக் கருவேல மரங்கள் படுத்தும் பாடு!

இந்த பதிவை படிப்பவர்கள் முடிந்தவரை இந்த செய்தியை மற்றவர்களிடம் கொண்டுபோய் சேர்த்து ஒரு சிறிய விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்..

1950 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின் போது விறகிற்கு பயன்படும் என்று வெளிநாட்டிலிருந்து சீமை கருவேலம் (Prosopis Juliflora) விதைகள்
கொண்டுவரப் பட்டு இங்கே தூவப்பட்டன..

இதன் விஷத்தன்மை பற்றி முழுதாய் தெரியாமல்…!

கடந்த 62 ஆண்டுகளில் இவை தமிழகம் முழுவதும் கிளை படர்ந்து ஏறத்தாழ 25 சதவித  விளை நிலங்களை ஆக்கிரமித்து பாழ்படுத்திக்
கொண்டிருக்கின்றன.

இதை வேருடன் களையாவிட்டால் நிலத்தடி நீரும் விஷமாகி விடும்.
சீமைக் கருவேல மரங்கள்…

இந்த மரத்தினை பார்க்காத ஒரு தமிழன் தமிழ் நாட்டில் இருக்க முடியாது.
தமிழ்நாட்டின் எல்லா மாவட்டங்களிலும் வளர்ந்துக் கொண்டு இருக்கிற ஒரு மரம்.

எந்த ஒரு வறண்ட நிலத்திலும் எந்த ஒரு தட்ப வெப்பத்திலும் இது தழைத்து வளர்ந்து கொண்டு இருப்பதை நீங்கள் பார்த்து இருப்பீர்கள்.

சாலை ஓரங்களிலும், பல கிராமங்களின் வயல் வெளிகளிலும் சகஜமாக இருக்க கூடிய முள் மரம் இது .தமிழகத்தின் இன்றைய வறட்சியான
நிலைக்கு இந்த மரங்கள் தான் காரணம் என்று உறுதியாக சொல்ல முடியும்.

இந்த கருவேல மரங்கள் எந்தவித வறட்சியிலும், கடும் கோடையிலும் நன்கு வளரக்கூடியது. மழை பெய்யாமல் போனாலும், நிலத்தில் நீரே இல்லாமல்
இருந்தாலும் இவை கவலைப்படாது.

ஏனெனில் ஒரு கருவேலமரம் தனது வேர்களை பூமியின் ஆழத்தில் நாற்பது அடி, அகலத்தில் நாற்பது அடி வரையில் அனுப்பி மண்ணின் நீரை

உறிஞ்சி, தன் இலைகளை வாடவிடாமல் பார்த்துக் கொள்கிறது.
இதனால் நிலத்தடி நீர் முற்றிலுமாக வற்றி அந்த பூமியே வறண்டு விடுகிறது.

இதன் கொடூரம் அத்துடன் நிறைவு பெறுவது இல்லை, ஒருவேளை நிலத்தில் நீரே கிடைக்கவில்லை என்றாலுமே தன்னை சுற்றி இருக்கும் காற்றில்
இருக்கும் ஈரப்பதத்தையும் இம்மரம் உறிஞ்சி விடுகிறது.

காற்றில் ஈரப்பதம் இருந்தால் கூட உறிஞ்சி விடுகிற இம்மரம்
மனிதர்களையும் விட்டு வைப்பதில்லை.தன்னை சுற்றி இருக்கிற மனிதர்களின் உடலில் இருக்கிற ஈரப்பசையையும், எண்ணெய்ப்
பசையையும் கூட உறிஞ்சி விடுவதால் இந்த மரத்தின்
அருகாமையில் வசிக்கிறவர்களின் உடல் தோல்கள் வறண்டு போய் விடுகிறது.

தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம். கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் போன்ற மாவட்டங்களின் வறட்சிக்கு இந்த மரங்களே முக்கிய காரணம்
என்பது யாருக்கும் இது வரை புரியவில்லை.

ஆனால், இதை அறியாமல் தமிழ் மக்கள் இன்னும் புதிதாக இம்மரங்களை வளர்த்து பராமரிக்கிறார்கள்.

தங்கள் வீடுகளுக்கும், வயல்களுக்கும் வேலியாக இம்மரத்தை நட்டு வைக்கிறார்கள்.வணிக ரீதியாகவும் இதை நம் தமிழ்நாட்டில் விறகிற்காக இந்த மரத்தை வளர்த்து வருகின்றனர்.

இது பேராபத்தை இந்த மண்ணுக்கு செய்கிறது என்பதை அவர்கள் அரியாது இருக்கிறார்கள்.

இந்த மரத்தின் இலை, காய், விதை என எதுவுமே எந்த உயிரினத்துக்கும் பயன்படாது.முக்கியமான விஷயம் ஒன்றும் உள்ளது ஆச்சரியமாக இருந்தாலும் உண்மை அது தான்.

இந்த மரத்தில் கால்நடைகளை கட்டி வைத்து வளர்த்தால் அவை மலடாகி விடும், அதாவது சினை பிடிக்காமலேயே போய்விடும், ஒருவேளை மீறி
கன்று ஈன்றாலுமே அது ஊனத்துடன் தான் பிறக்கும்.

ஒருபுறம் இதன் வேர் நிலத்தடி நீரை விஷமாக மாற்றி விடுகிறது மற்றொரு புறம் இதன் நிழலில் மற்ற உயிரினங்கள் வாழ முடியாத நிலை இருக்கிறது.
இதன் பக்கத்தில் வேறு எந்த செடியும் வளராது, தவிர இம்மரத்தில் எந்த பறவை இனங்களும் கூடுகட்டுவதும் இல்லை.

காரணம் என்னவென்றால் இந்த சீமைக் கருவேல மரங்கள், பிராணவாயுவை மிக குறைந்த அளவே உற்பத்தி செய்கிறது.

ஆனால் கரியமிலவாயுவை மிக அதிக அளவில் வெளியிடுவதால் சுற்றுப்புற காற்று மண்டலமே நச்சுத் தன்மையாக மாறிவிடுகிறது.

நமது அண்டை மாநிலமான *கேரளாவில்* இந்த மரத்தை பற்றிய விழிப்புணர்வை வனத்துறையினர் மக்களிடம் ஏற்படுத்தி உள்ளனர்.
அதனால் கேரளாவில் இந்த மரத்தை ஓர் இடத்தில் கூட காண முடியாது

சில ஆண்டுகளுக்கு முன் ஒரு திட்டமிடலுடன் செயல் பட்டு இந்த மரத்தை அவர்கள் தேடி தேடி அழித்து இருக்கிறார்கள்.வெட்டி போட்டு கொளுத்தி விட்டு சுற்றி நின்று கூத்தாடி இருக்கிறார்கள்.

அதனால் தான் இன்று கேரளா நீர் வளத்தில் அபரிமிதமான நாடாக இருக்கிறது.
அங்கே நீரானது பூத்துக் குலுங்குகிறது. இப்போதும் இந்த மரத்தை அவர்கள் எங்கேயாவது கண்டு விட்டால் சாத்தானை கண்டு விட்டது போல் அலறி, அதை வெட்டி தீயிலிட்டு கொளுத்தி விட்டு தான் அப்பால் நகருகிறார்கள்.

கேரளாவில் தொழில்சாலைகளுக்கு விறகுக்கு என்ன செய்கிறார்கள் தெரியுமா?நம் தமிழ் நாட்டிலிருந்து தான் விறகு செல்கிறது.

அவர்கள் தங்கள் ஆறுகளை பாதுகாக்க அதில் மண் அள்ள மாட்டார்கள்,
ஆனால் நம் ஆறுகளில் இருந்து மண் அங்கே போகும்.கருவேல மரங்களை முற்றிலும் அழித்துவிட்டார்கள் ஆனால் அவர்களின்  தேவைகளுக்கு மரம் இங்கே இருந்து செல்கிறது…!

சீமை கருவையை அழித்துவிட்டால் நம் நாடும் கேரளா
போல் குளுமை பெறும்.

இந்த மரங்களை நீங்கள் சிறிய செடியாக இருந்தால் கூட புடுங்கி எறியுங்கள் !

அது வளரும் வரை காத்திருக்க வேண்டாம்.

நம் அடுத்த தலை முறை குழந்தைகளுக்கும் தெரியப்படுத்துங்கள்

*இந்த பதிவை படிப்பவர்களும் முடிந்தவரை இந்த செய்தியை மற்றவர்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் ஒரு சிறிய விழிப்புணர்வை
ஏற்படுத்துங்கள்*.

மரங்களை வளர்ப்பது எவ்வளவு அவசியமோ அதை விட இந்த மரத்தில் ஒன்றையாவது வெட்டி அழிப்பது அதை விட அவசியம்..
வெட்டுவதோடு மட்டும் நில்லாமல்..

நம் பாரம்பரிய பூ அரச மரம், புங்கை மரம் , வேப்பம் மரம் போன்றவற்றை அந்த இடத்திலேயே நட்டு பராமரிப்போம்..

*இந்த மரத்தை வெட்டி வீழ்த்துவோம்*.....!
நம் மண்ணின் மாண்பை காப்போம்!!
------------------------------------------
படித்தேன்: பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
-----------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

30.7.16

உங்களுக்கு உபயோகமான தகவல்!!!


உங்களுக்கு உபயோகமான தகவல்!!!

"நான் சென்ட்ரல் வந்துட்டேன். கே.கே.நகருக்கு நான் எப்படி வரணும்? பஸ் பிடிச்சு வரணுமா இல்லை ஆட்டோவா?'' - இனி அதிகாலை நேரத்தில் சென்னைக்கு வந்து இறங்கியதும் யாருக்கும் போன் செய்து வழி கேட்க வேண்டிய அவசியம் இல்லை. உங்களுக்கே உங்களுக்காக வந்துவிட்டது 'ரூட்ஸ்’. சென்னையில் எந்த வழித்தடத்தையும் ஒரே போனில் தெரிந்துகொள்ளலாம்.

''இந்த ஐடியா நல்லா இருக்கே?'' என்று அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்களில் ஒருவரான அஸ்வின் குமாரிடம் கேட்டால் ''ஒரு நாள் ராத்திரி கிண்டி பக்கத்துல டீக்கடையில நின்னுட்டு இருந்தேன். அந்த டீக்கடைக்காரர்கிட்ட வெளியூர்க்காரங்க வந்து வழி கேட்டுட்டுப் போனாங்க. அவருக்கும் ரூட் தெரியலை. அந்த நொடிதான் 'சென்னையில தினமும் இப்படி எத்தனை பேரு பஸ் ரூட் தெரியாம தவிக்குறங்க? அவங்களுக்கு வழிகாட்ட ஏதாவது செய்யணும்’னு முடிவுபண்ணி, என்னோட நண்பர் பரத் சோமானிகிட்ட இதுபத்திப் பேசினேன். ரெண்டு பேரும் சேர்ந்து சென்னையில் ஒட்டுமொத்த பஸ் ரூட் சம்பந்தமான அத்தனை தகவல்களையும் சேகரிச்சோம்.

திரட்டின தகவல்களை நெட்டுல போடுறதுல எந்தப் பிரயோஜனமும் இல்ல. நடுரோட்டுல நிற்கிறவங்களால இன்டர்நெட் பார்க்க முடியாது. அதனால நம்பர் கொடுத்து, நீங்க எங்கே போகணுமோ நாங்க ரூட் சொல்றோம்னு விளம்பரப்படுத்தினோம்.

ஒரு நாளைக்கு 2,500 கால்கள் வர ஆரம்பிச்சுருச்சு.

அப்புறம்தான் இந்த 'ரூட்ஸ்’ கம்பெனியை ஆரம்பிச்சிட்டோம்.

8695959595 நம்பருக்கு யார் போன் செஞ்சாலும், அவங்களுக்குத் தேவையான பஸ் ரூட், லோக்கல் டிரெய்ன் ரூட், டைம்னு எல்லா விஷயங்களும் சொல்வோம்.

அதோட நீங்க வெளியூர் கிளம்பினால், அந்த ஊருக்கு ரயில் வசதி இருக்குதா? அதில் இடம் இருக்குதானு அத்தனை தகவல்களும் கொடுப்போம்'' என்றார்.

நல்ல தொடக்கம்! வாழ்த்துக்கள்! !!!

பணமே பிரதானம்!எனும் நாட.டில் இப்படி ஒரு சமூக சேவை செய்வது மிகப்பெரிய சேவை!வாழ்க வளர்க!!
======================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

29.7.16

பதினேழு வயது இளைஞனின் பாராட்டப்பட வேண்டிய செயல்!



பதினேழு வயது இளைஞனின் பாராட்டப்பட வேண்டிய செயல்!

மும்பையில் 17 வயது மாணவர். அவர் செய்து இருக்கும் தனது அட்டகாசமானச் செயலால் வடக்கு மும்பையில் ஒரு திடீர் ஹீரோவாக உருவாகியிருக்கிறார்.

மும்பை “சாதே’ நகரில் ஒதுக்குபுறமாக ஒரு சேரி பகுதி உள்ளது. இங்குள்ள குழந்தைகள் பள்ளிக்கு செல்ல வேண்டுமெனில் சேரிப் பகுதியை ஒட்டியுள்ள 50 அடி நீள சாக்கடையை கடந்து தான் செல்ல வேண்டியிருந்தது.

இதனை சாதே நகரில் அடுக்கு மாடியில் வசிக்கும் 17 வயது இ­ஷான் பல்பாலே என்கிற இளைஞன் தினசரி பார்த்திருக்கிறார். சீருடை அணிந்த குழந்தைகள் சாக்கடையில் இறங்கி பள்ளிக்கு செல்வதை பார்த்து தனது பெற்றோர்களிடமும், நண்பர்களிடமும் சமூக அமைப்பினர்களிடமும் முறையிட்டு இருக்கிறார். உள்ளூர் நகராட்சிகளிடமும் இந்த விஷயம் சென்று இருக்கிறது.

ஆனால் ,அவர்கள் கடமையை செய்வதில் தமிழ்நாட்டை விட சிறந்தவர்கள். தப்பித்தவறிக் கூட அந்த சேரி பக்கம் சென்று பார்க்கவில்லை.

வெறுத்துப்போன இஷான் தனது சேமிப்புப்பணம், நண்பர்களின் கடன் என பெரும் பணம் திரட்டி சேரி குழந்தைகள் சாக்கடையை கடக்க 50 அடி நீளம், 5 அடி அகலத்தில் ஒரு பாலத்தையே கட்டிவிட்டார்.

அடிப்படையில் இவர் ஒரு சிவில் பொறியாளர் மாணவன் என்பதால் தனது முதல் புராஜக்டை பட்டம் வாங்காமலேயே செய்து அசத்தி உள்ளார். முழுக்க முழுக்க மரக்கட்டைகள் கொண்டே எட்டே நாட்களில் இந்த பாலத்தை கட்டிவிட்டார். தற்போது பள்ளிக் குழந்தைகள் மட்டுமின்றி சேரிப்பகுதிகளில் குடியிருக்கும் 15,000 மக்களுக்கும் இந்த பாலம் தான் சாக்கடையை கடக்க உதவி செய்கிறது.

பிற்பாடு இதே பாலத்தை பயன்படுத்தியே எம்.எல்.ஏக்களும் எம்.பிக்களும் ஓட்டு கேட்க வரலாம் யார் கண்டது. சரி, இஷான் பல்பலேவைப் பாராட்டலாம் என தொடர்பு கொண்டால், அவர் அடுத்தப் புராஜெக்ட்டில் பிஸியாக இருக்கிறாராம். அதாவது, சேரிக் குழந்தைகளுக்குக் கழிவறை கட்டும் பணியில். பலே ! பல்பாலே.
====================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

29.10.15

ஏ டி எம் மெஷின் மூலம் குடிநீரும் கிடைக்கிறதாம்! நம்ம ஊருக்கு எப்போது வருமாம்? கேட்டுச் சொல்லுங்கள் சாமிகளா!


ஏ டி எம் மெஷின் மூலம் குடிநீரும் கிடைக்கிறதாம்! நம்ம ஊருக்கு எப்போது வருமாம்? கேட்டுச் சொல்லுங்கள் சாமிகளா!

ஏ டி எம் மெஷின் மூலம் குடிநீர்! – ஆந்திராவில் அமோகம்.!

ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆட்சியில் கிராமங்களின் நிலை நகரத்திற்கு இணையாக மாறிக் கொண்டு வருகிறது.
இதையொட்டி பல்வேறு கிராம மக்களுக்கு, துாய்மையான குடிநீர்
கிடைக்க கிராமங்கள் தோறும், ஏ.டி.டபிள்யூ., குடிநீர் திட்டம் ஏற்படுத்தப்
பட்டுள்ளது.

கடந்த, 2012 ஏப்ரல் 7ல், ஆந்திர மாநிலம், வரங்கல் மாவட்டத்தின் வெங்கடாபுரத்தில் இத்திட்டம் முதன் முதலாக செயல்படுத்தப் பட்டது.இத்திட்டம்

பெரும் வர்வேற்பைப் பெற்றதால், ஆந்திரா, தெலுங்கானா, மஹாராஷ்ட்ரா உள்பட, 351 கிராமங்களில் இதை அறிமுகப்படுத்தி உள்ளனர்.

‘பாலவிகாஸ்’ என்ற நிறுவனம் இந்த இயந்திரத்தை வடிவமைத்துள்ளது.’துாய்மை குடிநீர்’ திட்டத்தின் கீழ்
702 ஏ.டி.டபிள்யூ., ப்ளான்டை இந்நிறுவனம் கிராமங்கள் தோறும்
ஏற்படுத்தி உள்ளது.இந்த இயந்திரங்களை அமைக்க கிராம
மக்களிடமிருந்து ஒரு குடும்பத்திற்கு 1,000 ரூபாய் வசூலித்து மீதி
தொகையை பாலவிகாஸ் நிறுவனம் ஏற்று ஒவ்வொரு கிராமத்திலும்
இரண்டு ஏ.டி.டபிள்யூ., இயந்திரங்களை ஏற்படுத்தியது.

ஆயிரம் ரூபாய் அளித்த குடும்பத்தினருக்கு அவர்களின் பெயரில்
ஒரு, ஏ.டி.டபிள்யூ., கார்டு வழங்கப்பட்டது.அந்த கார்டை இயந்திரத்தில் சொருகி துாய்மையான குடிநீர் பெறலாம். ஒரு கார்டு மூலம் ஒரு ரூபாய் அளித்து நாள் ஒன்றுக்கு 20 லிட்டர் குடிநீர் வரை பெற்றுக் கொள்ளலாம்.

 காலை, 6:00 மணி முதல் மாலை, 7:00 மணி வரை குடிநீர் வரும்படி
இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அடிஷனல் தேவைக்கு நான்கு
ரூபாய் செலுத்தி 20 லிட்டர் குடிநீர் பெறலாம்.

இதற்காக, ஆண்டுக்கு 360 ரூபாய் மட்டுமே இந்நிறுவனம் வசூலிக்கிறது.
இந்த கார்டுகளை ஆண்டுக்கு ஒருமுறை, ‘ரீசார்ஜ்’ செய்து கொள்ள
வேண்டும். அத்துடன் எவ்வளவு தண்ணீர் பெற்றுள்ளனர், அதற்குண்டான தொகை அனைத்தையும், அந்த இயந்திரத்தில் கார்டு செலுத்தி தெரிந்து
கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
---------------------------------------------------
அங்கே கிடைப்பதுபோல நம் ஊருக்கும் நல்ல குடிநீர் வந்தால்
எத்தனை மகிழ்ச்சியாக இருக்கும்.? 20 லிட்டர் தண்ணீரின் விலை
ஒரு ரூபாய்தானாம் சாமி. இங்கே (கோவையில்) 20 வாட்டர் கேனின்
விலை ரூ.40:00

அப்பனே குரு பகவானே கொஞ்சம் கண் திறந்து பார்த்து தமிழ்நாட்டிற்கும் இந்த வசதி கிடைக்க வழி செய்யப்பா சாமி!

அன்புடன்,
வாத்தியார்
==========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!