மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

30.7.16

உங்களுக்கு உபயோகமான தகவல்!!!


உங்களுக்கு உபயோகமான தகவல்!!!

"நான் சென்ட்ரல் வந்துட்டேன். கே.கே.நகருக்கு நான் எப்படி வரணும்? பஸ் பிடிச்சு வரணுமா இல்லை ஆட்டோவா?'' - இனி அதிகாலை நேரத்தில் சென்னைக்கு வந்து இறங்கியதும் யாருக்கும் போன் செய்து வழி கேட்க வேண்டிய அவசியம் இல்லை. உங்களுக்கே உங்களுக்காக வந்துவிட்டது 'ரூட்ஸ்’. சென்னையில் எந்த வழித்தடத்தையும் ஒரே போனில் தெரிந்துகொள்ளலாம்.

''இந்த ஐடியா நல்லா இருக்கே?'' என்று அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்களில் ஒருவரான அஸ்வின் குமாரிடம் கேட்டால் ''ஒரு நாள் ராத்திரி கிண்டி பக்கத்துல டீக்கடையில நின்னுட்டு இருந்தேன். அந்த டீக்கடைக்காரர்கிட்ட வெளியூர்க்காரங்க வந்து வழி கேட்டுட்டுப் போனாங்க. அவருக்கும் ரூட் தெரியலை. அந்த நொடிதான் 'சென்னையில தினமும் இப்படி எத்தனை பேரு பஸ் ரூட் தெரியாம தவிக்குறங்க? அவங்களுக்கு வழிகாட்ட ஏதாவது செய்யணும்’னு முடிவுபண்ணி, என்னோட நண்பர் பரத் சோமானிகிட்ட இதுபத்திப் பேசினேன். ரெண்டு பேரும் சேர்ந்து சென்னையில் ஒட்டுமொத்த பஸ் ரூட் சம்பந்தமான அத்தனை தகவல்களையும் சேகரிச்சோம்.

திரட்டின தகவல்களை நெட்டுல போடுறதுல எந்தப் பிரயோஜனமும் இல்ல. நடுரோட்டுல நிற்கிறவங்களால இன்டர்நெட் பார்க்க முடியாது. அதனால நம்பர் கொடுத்து, நீங்க எங்கே போகணுமோ நாங்க ரூட் சொல்றோம்னு விளம்பரப்படுத்தினோம்.

ஒரு நாளைக்கு 2,500 கால்கள் வர ஆரம்பிச்சுருச்சு.

அப்புறம்தான் இந்த 'ரூட்ஸ்’ கம்பெனியை ஆரம்பிச்சிட்டோம்.

8695959595 நம்பருக்கு யார் போன் செஞ்சாலும், அவங்களுக்குத் தேவையான பஸ் ரூட், லோக்கல் டிரெய்ன் ரூட், டைம்னு எல்லா விஷயங்களும் சொல்வோம்.

அதோட நீங்க வெளியூர் கிளம்பினால், அந்த ஊருக்கு ரயில் வசதி இருக்குதா? அதில் இடம் இருக்குதானு அத்தனை தகவல்களும் கொடுப்போம்'' என்றார்.

நல்ல தொடக்கம்! வாழ்த்துக்கள்! !!!

பணமே பிரதானம்!எனும் நாட.டில் இப்படி ஒரு சமூக சேவை செய்வது மிகப்பெரிய சேவை!வாழ்க வளர்க!!
======================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

18 comments:

Subathra Suba said...

Good morning sir.very good information

Visvanathan N said...

Respected sir,

Great thing done by Mr Aswin and Somani. Congrats to both. In these days neighbor also not helping for any queries, providing information to the unknown people who required travel information is a great thing. Thank you very much for the message given Vaathiyar guru.

kind regards,

Visvanathan N

வரதராஜன் said...

வணக்கம் குருவே!
வாத்தியார் வாத்தியார் தான்! பாருங்க
எப்படிப்பட்ட பயனுள்ள தகவல்! வகுப்பறை மாணவ சமுதாயத்துக்குத்
தெரியப்படுத்திய இந்த செய்தி எத்தனையோ பேரைச் சென்றடைந்து பயனும் பெறுவர்.எனவே எங்களின்
வாழ்த்துக்களும் பாராட்டுதல்களும் தங்களுக்கு உரித்தாகுக!

adithan said...

வணக்கம் ஐயா மிகவும் உபயோகமான பதிவு.வெளியூருக்கு போனாலே ரூட் பிரச்சினைதான்.அதுவும் பெருநகரங்களிலே இது கண்டிப்பாக பெரும் பிரச்சினைதான்.அந்த இளைஞர்களுக்கு வாழ்த்துக்கள்.நன்றி.

mohan said...

Iyya Vanakkam.
Very useful message.

Fancy number
86 95 95 95 95 super.

Nanri Iyya.


Selvam R said...

அன்பு ஆசிரியரே!, வணக்கம். மிக அருமையான தகவல். மிக மிக அருமையான‌ சேவை. 1993ம் ஆண்டு நான் என்னுடைய , 12வது வகுப்பு முடிந்து விடுமுறையில், பெறியல்கான‌ நுழைவு தேர்வு பயர்ச்சிக்காக சென்னை சென்றேன். அது தான் முதல் முறை சென்னைக்கு சென்றது. அப்பொழுது பாரிமுனையில் தான் உள்ளூர் பேருந்துகள் இருக்கும். நான் திருநின்றவூர் 71ஜெ பிடிக்க எனக்கு வழிகாட்ட நானும் என் அப்பாவும், உச்ச நீதி மன்றத்தே இரண்டும் முறை சுற்றிவிட்டோம். நம்ம செல்லவேண்டிய பேருந்து ஒரிடத்தில் போய் நிற்கும். ஓடி பிடிப்பதற்குள் சென்று விடும். ஆகா.. சரி இங்கு தான் நம்ம‌ பேருந்து வரும் என்று அடுத்த பேருந்துக்கு காத்துக் கொண்டிருந்தால், அடுத்த பேருந்து வேறு ஒரு இடத்தில் நிற்கும். இப்படி 1 அல்லது 2 மனி நேரம் வெறும் பேருந்து பிடிப்பதற்கே அலுத்துப் போய்விடும்.
இந்த சேவையை நினைத்து பார்த்தால் அதன் பயன் என் கண் முன்னே தெரிகிறது. பகிர்வுக்கு நன்றி! இந்த சேவை தொலைபேசி எண்ணை நன்பர்களிடம் பகிரட்டுமா.. உங்கள் அனுமதியுடன்.. நன்றி!

Subbiah Veerappan said...

////Blogger Subathra Suba said...
Good morning sir.very good information/////

நல்லது. நன்றி சகோதரி!

Subbiah Veerappan said...

/////Blogger Visvanathan N said...
Respected sir,
Great thing done by Mr Aswin and Somani. Congrats to both. In these days neighbor also not helping for any queries, providing information to the unknown people who required travel information is a great thing. Thank you very much for the message given Vaathiyar guru.
kind regards,
Visvanathan N//////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

//////Blogger வரதராஜன் said...
வணக்கம் குருவே!
வாத்தியார் வாத்தியார் தான்! பாருங்க
எப்படிப்பட்ட பயனுள்ள தகவல்! வகுப்பறை மாணவ சமுதாயத்துக்குத்
தெரியப்படுத்திய இந்த செய்தி எத்தனையோ பேரைச் சென்றடைந்து பயனும் பெறுவர்.எனவே எங்களின்
வாழ்த்துக்களும் பாராட்டுதல்களும் தங்களுக்கு உரித்தாகுக!///////

எனக்கு எதற்கு பாராட்டு? அந்த இளைஞர்களைத் தொடர்பு கொண்டு பாராட்டுங்கள்!

Subbiah Veerappan said...

/////Blogger adithan said...
வணக்கம் ஐயா மிகவும் உபயோகமான பதிவு.வெளியூருக்கு போனாலே ரூட் பிரச்சினைதான்.அதுவும் பெருநகரங்களிலே இது கண்டிப்பாக பெரும் பிரச்சினைதான்.அந்த இளைஞர்களுக்கு வாழ்த்துக்கள்.நன்றி./////

நல்லது.உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஆதித்தன்!

Subbiah Veerappan said...

/////Blogger mohan said...
Iyya Vanakkam.
Very useful message.
Fancy number
86 95 95 95 95 super.
Nanri Iyya./////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி மோகன்!

Subbiah Veerappan said...

/////Blogger Selvam R said...
அன்பு ஆசிரியரே!, வணக்கம். மிக அருமையான தகவல். மிக மிக அருமையான‌ சேவை. 1993ம் ஆண்டு நான் என்னுடைய , 12வது வகுப்பு முடிந்து விடுமுறையில், பெறியல்கான‌ நுழைவு தேர்வு பயர்ச்சிக்காக சென்னை சென்றேன். அது தான் முதல் முறை சென்னைக்கு சென்றது. அப்பொழுது பாரிமுனையில் தான் உள்ளூர் பேருந்துகள் இருக்கும். நான் திருநின்றவூர் 71ஜெ பிடிக்க எனக்கு வழிகாட்ட நானும் என் அப்பாவும், உச்ச நீதி மன்றத்தே இரண்டும் முறை சுற்றிவிட்டோம். நம்ம செல்லவேண்டிய பேருந்து ஒரிடத்தில் போய் நிற்கும். ஓடி பிடிப்பதற்குள் சென்று விடும். ஆகா.. சரி இங்கு தான் நம்ம‌ பேருந்து வரும் என்று அடுத்த பேருந்துக்கு காத்துக் கொண்டிருந்தால், அடுத்த பேருந்து வேறு ஒரு இடத்தில் நிற்கும். இப்படி 1 அல்லது 2 மணி நேரம் வெறும் பேருந்து பிடிப்பதற்கே அலுத்துப் போய்விடும்.
இந்த சேவையை நினைத்து பார்த்தால் அதன் பயன் என் கண் முன்னே தெரிகிறது. பகிர்வுக்கு நன்றி! இந்த சேவை தொலைபேசி எண்ணை நண்பர்களிடம் பகிரட்டுமா.. உங்கள் அனுமதியுடன்.. நன்றி!/////

நன்றாகப் பகிருங்கள். நன்றி!!!

வரதராஜன் said...

வணக்கம் குருவே?
இன்றே பாராட்டுகிறேன்,ஐயா!
நன்றி!

lrk said...

ஐயா வணக்கம்
பயனுள்ள செய்தி ஐயா
நன்றி
கண்ணன்.

வேப்பிலை said...

நல்லது
நடக்கட்டும்

Subbiah Veerappan said...

/////Blogger வரதராஜன் said...
வணக்கம் குருவே?
இன்றே பாராட்டுகிறேன்,ஐயா!
நன்றி!/////

நல்லது. நன்றி வரதராஜன்!

Subbiah Veerappan said...

////Blogger lrk said...
ஐயா வணக்கம்
பயனுள்ள செய்தி ஐயா
நன்றி
கண்ணன்./////

நல்லது. நன்றி கண்ணன்!

Subbiah Veerappan said...

/////Blogger வேப்பிலை said...
நல்லது
நடக்கட்டும் /////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி வேப்பிலையாரே!