மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

29.7.16

பதினேழு வயது இளைஞனின் பாராட்டப்பட வேண்டிய செயல்!பதினேழு வயது இளைஞனின் பாராட்டப்பட வேண்டிய செயல்!

மும்பையில் 17 வயது மாணவர். அவர் செய்து இருக்கும் தனது அட்டகாசமானச் செயலால் வடக்கு மும்பையில் ஒரு திடீர் ஹீரோவாக உருவாகியிருக்கிறார்.

மும்பை “சாதே’ நகரில் ஒதுக்குபுறமாக ஒரு சேரி பகுதி உள்ளது. இங்குள்ள குழந்தைகள் பள்ளிக்கு செல்ல வேண்டுமெனில் சேரிப் பகுதியை ஒட்டியுள்ள 50 அடி நீள சாக்கடையை கடந்து தான் செல்ல வேண்டியிருந்தது.

இதனை சாதே நகரில் அடுக்கு மாடியில் வசிக்கும் 17 வயது இ­ஷான் பல்பாலே என்கிற இளைஞன் தினசரி பார்த்திருக்கிறார். சீருடை அணிந்த குழந்தைகள் சாக்கடையில் இறங்கி பள்ளிக்கு செல்வதை பார்த்து தனது பெற்றோர்களிடமும், நண்பர்களிடமும் சமூக அமைப்பினர்களிடமும் முறையிட்டு இருக்கிறார். உள்ளூர் நகராட்சிகளிடமும் இந்த விஷயம் சென்று இருக்கிறது.

ஆனால் ,அவர்கள் கடமையை செய்வதில் தமிழ்நாட்டை விட சிறந்தவர்கள். தப்பித்தவறிக் கூட அந்த சேரி பக்கம் சென்று பார்க்கவில்லை.

வெறுத்துப்போன இஷான் தனது சேமிப்புப்பணம், நண்பர்களின் கடன் என பெரும் பணம் திரட்டி சேரி குழந்தைகள் சாக்கடையை கடக்க 50 அடி நீளம், 5 அடி அகலத்தில் ஒரு பாலத்தையே கட்டிவிட்டார்.

அடிப்படையில் இவர் ஒரு சிவில் பொறியாளர் மாணவன் என்பதால் தனது முதல் புராஜக்டை பட்டம் வாங்காமலேயே செய்து அசத்தி உள்ளார். முழுக்க முழுக்க மரக்கட்டைகள் கொண்டே எட்டே நாட்களில் இந்த பாலத்தை கட்டிவிட்டார். தற்போது பள்ளிக் குழந்தைகள் மட்டுமின்றி சேரிப்பகுதிகளில் குடியிருக்கும் 15,000 மக்களுக்கும் இந்த பாலம் தான் சாக்கடையை கடக்க உதவி செய்கிறது.

பிற்பாடு இதே பாலத்தை பயன்படுத்தியே எம்.எல்.ஏக்களும் எம்.பிக்களும் ஓட்டு கேட்க வரலாம் யார் கண்டது. சரி, இஷான் பல்பலேவைப் பாராட்டலாம் என தொடர்பு கொண்டால், அவர் அடுத்தப் புராஜெக்ட்டில் பிஸியாக இருக்கிறாராம். அதாவது, சேரிக் குழந்தைகளுக்குக் கழிவறை கட்டும் பணியில். பலே ! பல்பாலே.
====================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

20 comments:

 1. குருஜி அவர்களுக்கு வணக்கம். அருமையான பணி இது. இஷான் செய்த பணி மிகவும் பாராட்ட வேண்டிய ஒன்று. வாழ்த்துக்கள் இஷான் அவர்களே!. செய்தியாக பதிவு செய்த வாத்தியாருக்கு நன்றி. தங்கள் உடல் நிலை எவ்வாறு உள்ளது? சில நாட்களாக உங்கள் பதிவுகளை தொடர்ந்து படிக்க முடியவில்லை. மன்னிக்கவும். ஒரு சின்ன சந்தேகம். குருபெயர்ச்சி வருகிறது. அந்த குருவானது(கோள்சாரம்) ராசிக்கு 3 வது இடத்திலும், லக்னத்திற்கு 9 வது இடத்திலும் வருகிறது. நமது உள்ளுர் ஜோதிட ஜாம்பவான்கள் ராசிக்கு 50 சதவிதமும், லக்னத்திற்கு 50 சதவிதமும் பலன் தரும் என்கிறார்கள். இது சரியா தவறா?
  புரியும் படி விளக்கம் தர வேண்டுகிறேன்.

  வெங்கடேஷ்.சி
  சென்னை.

  ReplyDelete
 2. வணக்கம் குருவே!
  இன்றைய தலைமுறையில் இப்படிப்பட்ட ஒரு காரியத்தை இளைஞர் இஷான் செய்துள்ளாரே, என்று ஆச்சரியப் பாராட்டுக்கு உரியவர் என்பதில்
  எள்ளளவும் சந்தேகமேயில்லை!!அது அவரது முதல் ப்ராஜக்ட் ஆகவும் முடிந்துள்ளதில் இரட்டிப்பு சந்தோஷம்! இறைவன் அவருக்கு நல்ல எதிர்காலத்தை பிரகாசமான வாழ்வுடன்
  நோயின்றி இருக்கவும் எமது பிரார்த்தனைகள்!

  ReplyDelete
 3. ஆசிரியருக்கு வணக்கம்
  வர இருக்கும் குரு பெயர்ச்சி பலன்களை லக்னத்தை வைத்து பார்ப்பதா ராசியை வைத்து பார்ப்பதா என்பதை தயவுசெய்து
  விளக்கமாக பதிவிடுமாறு அன்புடன் வேண்டுகிறேன் .
  அரசு

  ReplyDelete
 4. அன்பு ஆசிரியரே!, வணக்கம். மிக பார்ட்டிற்குரிய செயல். அரசாங்கம் செய்யவில்லை என்றால். நமக்கு நாமே செய்து கொள்ள வேண்டும் என்று உணர்த்துகிறார். பதிவுக்கு நன்றி ஐயா.!

  ReplyDelete
 5. ////Blogger kmr.krishnan said...
  Let his tribe grow./////

  நல்லது. உங்களின் ஆசியின்படி அந்த இளைஞன் நல்லபடியாக முன்னேறட்டும். நன்றி கிருஷ்ணன் சார்!

  ReplyDelete
 6. //////Blogger C.P. Venkat said...
  குருஜி அவர்களுக்கு வணக்கம். அருமையான பணி இது. இஷான் செய்த பணி மிகவும் பாராட்ட வேண்டிய ஒன்று. வாழ்த்துக்கள் இஷான் அவர்களே!. செய்தியாக பதிவு செய்த வாத்தியாருக்கு நன்றி. தங்கள் உடல் நிலை எவ்வாறு உள்ளது? சில நாட்களாக உங்கள் பதிவுகளை தொடர்ந்து படிக்க முடியவில்லை. மன்னிக்கவும். ஒரு சின்ன சந்தேகம். குருபெயர்ச்சி வருகிறது. அந்த குருவானது(கோள்சாரம்) ராசிக்கு 3 வது இடத்திலும், லக்னத்திற்கு 9 வது இடத்திலும் வருகிறது. நமது உள்ளுர் ஜோதிட ஜாம்பவான்கள் ராசிக்கு 50 சதவிதமும், லக்னத்திற்கு 50 சதவிதமும் பலன் தரும் என்கிறார்கள். இது சரியா தவறா?
  புரியும் படி விளக்கம் தர வேண்டுகிறேன்.
  வெங்கடேஷ்.சி
  சென்னை.//////

  திங்கட்கிழமை 1-8-2016 அன்று ஒரு பதிவை வலை ஏற்ற உள்ளேன். அந்தப் பதிவு உங்களின் சந்தேகத்தைப் போக்கும். பொறுத்திருங்கள்!

  ReplyDelete
 7. ////Blogger வரதராஜன் said...
  வணக்கம் குருவே!
  இன்றைய தலைமுறையில் இப்படிப்பட்ட ஒரு காரியத்தை இளைஞர் இஷான் செய்துள்ளாரே, என்று ஆச்சரியப் பாராட்டுக்கு உரியவர் என்பதில்
  எள்ளளவும் சந்தேகமேயில்லை!!அது அவரது முதல் ப்ராஜக்ட் ஆகவும் முடிந்துள்ளதில் இரட்டிப்பு சந்தோஷம்! இறைவன் அவருக்கு நல்ல எதிர்காலத்தை பிரகாசமான வாழ்வுடன்
  நோயின்றி இருக்கவும் எமது பிரார்த்தனைகள்!////

  உங்களின் பிரார்த்தனைகளுக்கு, அந்த இளைஞனின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்!

  ReplyDelete
 8. /////Blogger C Jeevanantham said...
  Great student.////

  நல்லது. நன்றி ஜீவானந்தம்!

  ReplyDelete
 9. //////Blogger ARASU said...
  ஆசிரியருக்கு வணக்கம்
  வர இருக்கும் குரு பெயர்ச்சி பலன்களை லக்னத்தை வைத்து பார்ப்பதா ராசியை வைத்து பார்ப்பதா என்பதை தயவுசெய்து
  விளக்கமாக பதிவிடுமாறு அன்புடன் வேண்டுகிறேன் .
  அரசு/////

  ராசியை வைத்துத்தான் பார்க்க வேண்டும்! திங்கட்கிழமை 1-8-2016 அன்று ஒரு பதிவை வலை ஏற்ற உள்ளேன். அந்தப் பதிவு உங்களின் சந்தேகத்தைப் போக்கும். பொறுத்திருங்கள்

  ReplyDelete
 10. /////Blogger Selvam R said...
  அன்பு ஆசிரியரே!, வணக்கம். மிக பார்ட்டிற்குரிய செயல். அரசாங்கம் செய்யவில்லை என்றால். நமக்கு நாமே செய்து கொள்ள வேண்டும் என்று உணர்த்துகிறார். பதிவுக்கு நன்றி ஐயா.!//////

  உண்மைதான்! உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி செல்வராஜ்!

  ReplyDelete
 11. Can you please give us a study chat where the life happenings are contradicting to astro chart?

  Between the philosophical, logical, astrology and belief systems, astrology make more sense logically but if a belief system can overrule for ones life due to its philosophical thoughts, it will be interesting to see how it reflected on a chart.

  Like per astro rules he may not get child, but due to God's grace child born (#124 lesson on reference from stars).

  ReplyDelete
 12. இஷான் இதுபோல தொடர்ந்து பொதுமக்களிற்கு சேவை செய்யவேண்டும். இப்படிப்பட்ட heroes இந்தியாவிலிருப்பின் India will be the best place to live. Commendations to Ishan and shame all the ministers and municipal officers.
  Regards
  Rajam Anand

  ReplyDelete
 13. வணக்கம் ஐயா,இதுபோல எண்ணங்கள் பதினேழு வயது மாணவனுக்கு வருகிறதென்றால் அவன் வளர்க்கப்பட்ட விதம் அப்படி இருந்திருக்க வேண்டும்.அந்த மாணவனும்,அவரது பெற்றோர்களும் நிச்சயமாக பாரட்டப்பட வேண்டியவரகள்தான்.நன்றி.

  ReplyDelete
 14. /////Blogger selvaspk said...
  Can you please give us a study chat where the life happenings are contradicting to astro chart?
  Between the philosophical, logical, astrology and belief systems, astrology make more sense logically but if a belief system can overrule for ones life due to its philosophical thoughts, it will be interesting to see how it reflected on a chart.
  Like per astro rules he may not get child, but due to God's grace child born (#124 lesson on reference from stars)./////

  வெறுமனே ஜோதிடத்தை மட்டும் நம்பிக்கொண்டு உழன்று போகாமல், இறைவனையும் பிரார்த்தனை செய்யுங்கள் என்று எழுதியுள்ளதைக் குறிப்பிட்டுள்ளீர்கள். அது உண்மை. இறையருளால் என்ன வேண்டுமென்றாலும் நடக்கும்! நம்பிகையோடு பிரார்த்தனை செய்வது முக்கியம்!

  ReplyDelete
 15. /////Blogger Rajam Anand said...
  இஷான் இதுபோல தொடர்ந்து பொதுமக்களிற்கு சேவை செய்யவேண்டும். இப்படிப்பட்ட heroes இந்தியாவிலிருப்பின் India will be the best place to live. Commendations to Ishan and shame all the ministers and municipal officers.
  Regards
  Rajam Anand/////

  நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!

  ReplyDelete
 16. ////Blogger adithan said...
  வணக்கம் ஐயா,இதுபோல எண்ணங்கள் பதினேழு வயது மாணவனுக்கு வருகிறதென்றால் அவன் வளர்க்கப்பட்ட விதம் அப்படி இருந்திருக்க வேண்டும்.அந்த மாணவனும்,அவரது பெற்றோர்களும் நிச்சயமாக பாரட்டப்பட வேண்டியவரகள்தான்.நன்றி./////

  உண்மைதான். உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி ஆதித்தன்!

  ReplyDelete
 17. let us support this kind of person atleast by words

  ReplyDelete
 18. ////Blogger raja naren said...
  let us support this kind of person atleast by words////

  உண்மைதான். தொலைபேசி மூலம் அந்த இளைஞனைப் பாராட்டுங்கள் நண்பரே!

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com