மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label Lessons 581 - 590. Show all posts
Showing posts with label Lessons 581 - 590. Show all posts

16.10.12

Astrology அன்னை வளர்ப்பினால் மட்டும் வருவதல்ல குணம்!

 Astrology அன்னை வளர்ப்பினால் மட்டும் வருவதல்ல குணம்!

ஒவ்வொரு கிரகத்திற்கும் தனித் தன்மைகள் உண்டு. ஒரு ஜாதகத்தில்
அக்கிரகங்களின் ஆதிக்கம் மேலோங்கும்போது, அந்த ஜாதகனுக்கு அக்கிரகங்களின் குணங்களும் சேர்ந்துகொள்ளும்

ஒருவருடைய ஜாதகத்தில், லக்கின அதிபதியும், லக்கினத்தில் வந்து அமரும் கிரகமும் அல்லது கிரகங்களும், லக்கினத்தைப் பார்க்கும் கிரகமும் அல்லது கிரகங்களும் சேர்ந்து ஜாத்கனின் குணத்தை நிர்ணயம் செய்யும்

மேற்சொன்ன அமைப்பில் எந்த கிரகத்தின் ஆதிக்கம் ஜாதகத்தில் மேலோங்கி நிற்கிறதோ, அந்தக் கிரகத்தின் குணமே ஜாதகனுக்கு அதிகமாக இருக்கும்

சுபக்கிரகங்களான குரு, சந்திரன், சுக்கிரன் ஆகியவற்றின் ஆதிக்கம் அதிகமாக இருந்தால் ஜாதகன் நல்ல குணங்கள் நிரம்பியவனாக, பலராலும் விரும்பப் படுபவனாக இருப்பான். அதற்கு நேர் மாறாக சனி, ராகு அல்லது போன்ற தீய கிரகங்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்தால், ஜாதகன் அவனுக்கு மட்டுமே நல்லவனாக இருப்பான்:-)))

1
சிலர் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பார்கள். எத்தனை துன்பம் இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் சிரித்த முகத்துடனேயே இருப்பார்கள்.

2.
சிலர் எப்போதும் அழுது வழிந்துகொண்டே இருப்பார்கள். தங்கள் மகிழ்ச்சியை ஒருபோதும் வெளிப்படுத்தவே மாட்டார்கள்

3.
சிலர் அனைவரையும் அனுசரித்துக்கொண்டு போகும் குணத்துடன் இருப்பார்கள்.

4.
சிலர் எதற்கெடுத்தாலும் முரண்டு பிடிக்கும் அல்லது வாக்குவாதம் செய்து சண்டையிடும் குணத்துடன் இருப்பார்கள்.

5.
சிலர் அன்பான மனைவி மக்களுடன் கூட எரிச்சலுடன் பேசுபவர்களாக இருப்பார்கள்.

6
சிலர் அதற்கு மாறாக அன்பில்லாத உற்வுகளுடன் கூட கனிவாகப் பேசுபவர்களாக இருப்பார்கள்.

7.
சிலருக்கு எல்லா விஷயத்திலும் ரசனையும் ஈடுபாடும் இருக்கும்

8.
சிலருக்கு எதையும் ரசிக்கும் உணர்வோ, லாபம் இல்லாத எதிலும் ஈடுபாடோ இருக்காது

9.
சிலர் முன்பின் தெரியாதவர்களிடம் கூட கலகலப்பாகப் பேசும் தன்மை உடையவர்களாக இருப்பார்கள்

10
சிலர் நன்றாகத் தெரிந்தவர்களிடம் கூடபேசும் பழக்கமின்றி உம்மன்னா மூஞ்சி ஆசாமியாக இருப்பார்கள்

11.
சிலர் ஒளிவு மறைவில்லாமல் பேசுபவர்களாக, வெள்ளந்தியாக இருப்பார்கள்

12.
சிலர் கள்ளம் கபடு சூது வாது நிறைந்தவர்களாக எதையும் மறைத்துப் பேசுபவர்களாக இருப்பார்கள்

13.
சிலரைப் பார்த்தாலே கவர்ந்திழுப்பவர்களாக இருப்பார்கள். நமக்கே வலியச் சென்று அவர்களிடம் பேசும் ஆசை உண்டாகும்

14.
சிலரைப் பார்த்தலே பயம் உண்டாகும் தோற்றத்தில் இருப்பார்கள். நமக்கு ஒதுங்கிப்பொகும் எண்ணம்தான் உண்டாகும்

15
சிலர் தேவையில்லாத சின்ன விஷயத்திற்குகூட கவலைப் படுபவர்களாக இருப்பார்கள் அல்லது கோபப் படுபவர்களாக இருப்பார்கள்.

16
சிலர் இடியே விழுந்தாலும் கவ்லைப் படாதவர்களாக, எதையும் டேக் இட் ஈஸி என்று எடுத்துக்கொள்பவர்களாக இருப்பார்கள்

17
சிலர் பரோபகாரிகளாக் யாருக்கும் உதவி செய்பவர்களாக இருப்பார்கள்

18.
சிலர் தாமுண்டு தம் வேலை உண்டு என்று தன்னலம் மட்டுமே உள்ளவர்களாக இருப்பார்கள்

19
சிலர் தர்ம சிந்தனை மிக்கவர்களாக இருப்பார்கள்

20
சிலர் எந்த சிந்தனையும் இல்லாமல் பணம் சம்பாதிப்பது, அதைச் சேர்ப்பது என்று ஒரே ஒரு குறிக்கோள் மட்டும் உடையவர்களாக இருப்பார்கள்

இப்படி எழுதிக்கொண்டே போக்லாம்.

நூற்றுக் கணக்கான குண வேறுபாடுகள் உள்ளன.

எல்லாக் குழந்தைகளும் ஒரு தாயின் வயற்றில்தான் உருவாகின்றன் என்றாலும் முகங்கள் வேறுபடுவதுபோல குணங்களும் வேறுபடும்!
ஏன் ஒரு தாய் வயிற்றிலேயே பிறந்த இரண்டு குழந்தைகளின் குணம் கூட ஒன்றுபோல் இருப்பதில்லை

என்ன காரணம்?

பதிவின் துவக்கத்தில் உள்ள முதல் எட்டு வரிகளைப் படியுங்கள்! அதுதான் காரணம்

லக்கினத்தைவைத்துத்தான் குணம் அமையும் என்றாலும், 3, 6 8 மற்றும்; 12ஆம் வீடுகளைவைத்தும் சில குணாதிசய்ங்கள் சேர்ந்து கொள்ளும்

எந்தக் குணமும் அடுத்தவர்களைப் பாதிக்காத அளவில் இருப்பது முக்கியம்

பதிவின் நீளம் கருதி இன்று இத்துடன் நிறைவு செய்கிறேன்

பாடம் தொடரும்

அன்புடன்
வாத்தியார்

++++++++++++++++++

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

15.10.12

Astrology பிறவிக் குணம் எப்படியடா போகும்?


Astrology பிறவிக் குண்ம் எப்படியடா போகும்?

Post dated 15.10.2012


ஆசிரமம் ஒன்றில் முற்றும் துறந்த சந்நியாசி ஒருவர் இருந்தார். அவருக்கு நான்கு இளம் சீடர்கள் இருந்தார்கள்.

முற்றும் துறந்தவருக்கு எதற்கு ஆசிரமம்? எதற்கு சீடர்கள்? என்கிறீர்களா. அதுவும் சரிதான். அதை எல்லாம் நானும் கேட்டுக் கொண்டிருந்தால் கதையை எப்படி நகர்த்துவது?

சில விஷயங்களைக் கேட்காமல் கருத்தை மட்டும் பார்ப்பதுதான் நமக்கு நல்லது. ஆகவே கதைக்கு வருகிறேன்.

அசிரமத்தின் அன்றாடத் தேவைகளை, அந்த ஆசிரமத்தின் மேல் மதிப்பு வைத்திருந்த - உங்கள் மொழியில்  சொன்னால் அந்த ஆசிரமத்தின்மேல் பிடிப்பு அல்லது காதல் கொண்டிருந்த உள்ளூர் மக்கள் பார்த்துக் கொண்டார்கள்.

ஆசிரமம் செழிப்பாக இருந்தது. காலையிலும், மாலையிலும் சாமியார், மக்களை நல்வழிப்படுத்தும் முகமாக உரை நிகழ்த்துவார். கூட்டு வழிபாடு செய்வார்.

ஒரு நாள், அந்த நான்கு சீடர்களில் மூன்று பேர்கள் சாமியாரிடம் வந்து,” ஐயா நாங்கள் அருகிலிருக்கும் புண்ணிய நதிகளிலும், நீர் நிலைகளிலும் தீர்த்தமாடிவிட்டுவர ஆசைப் படுகிறோம். அனுமதி கொடுங்கள்” என்றார்கள்

”ஏன் நம்மூர் ஆற்றிற்கு என்னாயிற்று?” என்று கேட்டார்.

”அதில்தான் தினமும் நீராடிக்கொண்டிருக்கிறோமே! ஒரு மாறுதலுக்காக மற்ற புண்ணிய நதிகளிலும் நீராடிவிட்டுவர விரும்புகிறோம்” என்றார்கள்.

“சென்று வாருங்கள்” என்றார்.

அவர்களில் ஒருவன்,”ஐயா நீங்களும் வர வேண்டும்!” என்றான்.

“இல்லை, நீங்கள் மட்டும் சென்று வாருங்கள்!” என்றார்

மற்ற இருவரும் இப்போது அவனுடன் சேர்ந்து வலியுறுத்தவே, சாமியார் சுற்று முற்றும் பார்த்தார். அருகில் இருந்த பாகற்காய் கொடியில் நிறையக் காய்கள் காய்த்துத் தொங்கிக் கொண்டிருந்தன. அவற்றில் ஒன்றைப் பறித்து அவர்களிடம் கொடுத்தவர், இப்படிச் சொன்னார்: “இந்தக்காயை நான் என்று நினைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் நீராடும்  இடங்களில் எல்லாம் இதையும் மூன்று முறைகள் நமச்சிவாயா என்று சொல்லி நீரில் முக்கி எடுத்துக் கொண்டு வாருங்கள்”

அவர்கள் புறப்பட்டுச் சென்றார்கள். உள்ளூர் ஆசாமி ஒருவன் அவர்களுக்கு வாகனம் ஒன்றை ஏற்பாடு செய்து  கொடுத்திருந்தான். இரண்டு நாட்கள் பயணம் மேற்கொண்டு நான்கு நதிகளில் நீராடிவிட்டுத் திரும்பினார்கள். திரும்பி  வந்தவுடன், சாமியாரை நெடுஞ்சான் கிடையாக விழுந்து வணங்கினார்கள்.

சாமியார் கேட்டார்,”பாகற்காய் என்ன ஆயிற்று?”

“நீங்கள் சொன்னபடியே பாகற்காயையும் நீராட்டிக் கொண்டு வந்திருக்கிறோம்”

“இன்று அதைச் சமையலில் சேர்த்து விடுங்கள்” என்றார் அவர்.

அப்படியே செய்தார்கள்.

மதியம் சாப்பிடும்போது, சாமியார் கேட்டார், "பாகற்காயில் ஏதாவது மாறுதல் தெரிகிறதா?”

சீடர்கள் மூவரும் ஒருமித்த குரலில் சொன்னார்கள், "இல்லை ஐயா, எப்போதும் போல அது கசப்பாகத்தான்  இருக்கிறது!”

இப்போது சாமியார், அவர்களுக்குப் புரியும்படியாக அழுத்தமான குரலில் சொன்னார். "எத்தனை புண்ணிய நிதிகளில் முக்கி எடுத்தாலும் பாகற்காயின் குணம் போகவில்லை அல்லவா? அதுபோலத்தான்  எத்தனை புண்ணிய நதிகளில் நீராடினாலும் அல்லது எத்தனை ஆலயங்களில் வழிபட்டாலும் மனிதனின் இயற்கைக் குணம் மாறாது!”
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஆமாம் மனிதனின் இயற்கைக் குணம் என்றுமே மாறாது. அதைப் பிறவிக் குணம் என்பார்கள். அதை வலியுறுத்திச் சொல்லவே இந்தக் கதை.

மிளகாய் என்றுமே மிளகாய்தான்
மாங்காய் என்றுமே மாங்காய்தான்
புளியங்காய் என்றுமே புளியங்காய்தான்
எத்தனை இனிப்புப் போட்டுச் சமைத்தாலும் அவற்றின் இயற்கைத் தன்மை மாறாது!

அதுபோல கஞ்சன் என்றுமே கஞ்சன்தான். எத்தனை செல்வம் வந்தாலும்,அந்தக் கஞ்சத்தன்மை மாறாது. அதுபோல  காமுகன் என்றும் காமுகன்தான். எத்தனை பெண்களை அவனுக்குக் கட்டிவைத்தாலும் அவன் திருந்த மாட்டான். உலகில் உள்ள அத்தனை அழகான பெண்களையும் அவனுக்குக் கட்டி வைப்பதாகச் சொன்னாலும், தேவமங்கைகள்
என்று சொல்கிறார்களே, அவர்கள் கிடைப்பார்களா? என்றுதான் கேட்பான்.

அதுபோல கோபம், சோம்பேறித்தனம், பொறாமை, படபடப்பு, பிடிவாதம் என்றுள்ள பல மனித குணங்கள் பிறவியிலேயே வருவது. அது என்றுமே மாறாதது. மனிதன் செத்துச் சாம்பலாகும் வரை அவனுடனேயே இருப்பது.
எந்தக் கொம்பனாலும் அவற்றை மாற்ற முடியாது. அல்லது மாற்றிக் கொள்ள முடியாது.

ஏன் அப்படி?

அதுதான் வாங்கி வந்த வரம்!

உங்கள் மொழியில் சொன்னால், பிறந்த லக்கினத்தாலும், மற்றும் பிறந்த நேரத்தில் உள்ள கிரக அமைப்புக்களாலும் ஏற்படுவது அது!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Benefic planets such as Jupiter, Venus, Mercury and the luminous Moon do very well in first house. However, the presence of the malefics such as Rahu, Ketu,  Saturn and Mars can create very difficult situations in life. Strongly afflicted, it  produces difficult birth or even infant mortality. It can also cause psychological,  emotional and physical disorders.

லக்கினத்துடன் சந்திரன், குரு, சுக்கிரன், புதன் போன்ற நன்மையளிக்கும் கிரகங்கள் சம்பந்தப் படும்போது மனிதன் பல நல்ல குணங்களைப் பெற்றவனாக இருப்பான். சனி, ராகு, கேது, செவ்வாய் போன்ற தீய கிரகங்கள் சேரும்போது  மன வக்கிரங்கள், உணர்வுச் சீரழிவுகள் கொண்டவனாக ஜாதகன் இருப்பான்.

லக்கினங்களைப் பற்றித் தொடர்ந்து அலசுவோம்.

நாளை, முதலில் மேஷ லக்கினம்

அன்புடன்
வாத்தியார்

-----------------------------------------

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

11.10.12

Astrology வலியைப் போக்க என்ன (டா) செய்ய வேண்டும்?

Astrology வலியைப் போக்க என்ன (டா) செய்ய வேண்டும்?

பேராசிரியர் பாடத்தைத் துவங்கினார்

அவருடைய கையில் ஒரு கண்ணாடி டம்ளர். அதாவது குவளை. தண்ணீரால் அது நிரப்பப்பெற்றிருந்தது.

பேராசியர் டம்ளரை உயர்த்திப் பிடித்தவர், கேட்டார்:

   “இந்தக் குவ்ளையை இப்ப்டியே சில நிமிடங்களுக்குக் கையில் பிடித்திருந்தால் என்ன ஆகும்?”

   “நத்திங்” (ஒன்றும் ஆகாது) என்று கோரசாகப் பதில் வந்தது

   “ஓக்கே” என்று சொன்னவர் தொடர்ந்து கேட்டார்: “சரி, இதையே நான் ஒரு மணி நேரம் தொடர்ந்து பிடித்துக்கொண்டிருந்தால் என்ன ஆகும்?”

ஒரு மாணவன் எழுந்து சொன்னான்: “உங்கள் கை வலிக்கத் துவங்கும்!”

“நீ சொல்வது சரி!” என்ற பேராசிரியர், தொடர்ந்து கேட்டார்....: “அதே வேலையை ஒரு நாள் முழுக்கச் செய்தால் என்ன ஆகும்?”

“கைச் சதையில் அதீதமான அழுத்தமும், வலியும் உண்டாகும். உங்கள் கையில் நடுக்கம் ஏற்படலாம். உங்களை மருத்துவமனையில் சேர்க்க வேண்டியதாயிருக்கும்” என்று இன்னொருவன் எழுந்து சொல்ல வகுப்பில் அனைவரும் சிரிக்கத் துவங்கினார்கள்

“எக்ஸலெண்ட்” என்று ஒப்புக்கொண்ட பேராசிரியர் அடுத்துக் கேட்டார்: “இது ந்டக்கும்போது, அதாவது இதைச் செய்யும்போது டம்ளரின் எடையில் மாற்றம் ஏற்படுமா?”

“இல்லை” என்று அனைவரும் ஒரே குரலில் பதிலளித்தார்கள்

“பிறகு, அதாவது எடையில் மாற்றம் இல்லை என்னும் நிலையில், கையில் ஏற்படும் வலிக்கும், கைச் சதையில் ஏற்படும் அழுத்ததிற்கும் என்ன காரணம்?

("Then what caused the arm ache & the muscle stress?")

சரியான பதிலைச் சொல்லத் தெரியாமல் அனைவரும் மெளனமாக இருந்தார்கள்

அடுத்துப் பேராசிரியர் கேட்டார்: “சரி இப்போது வலியில் இருந்து விடுபட வேண்டுமென்றால், நான் என்ன செய்ய வேண்டும்?”

சட்டென்று ஒருவன் எழுந்து பதில் சொன்னான்: “டம்ளரைக் கீழே வைத்து விடுங்கள்”

“அதுதான் சரியான முடிவு” என்று சொன்னவர், தொடர்ந்து பேசினார்.

வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் பிரச்சினைகளையும் அப்படித்தான் கையாள வேண்டும். பிரச்சினைகளுக்கும் அதைத்தான் தீர்வாகக் கொள்ள வேண்டும்.. பிரச்சினைகளைச் சில நிமிடங்கள் மனதிற்குள் வைத்திருக்கலாம். அதில் தவறில்லை. ஆனால் அதையே தொடர்ந்து மனதிற்குள் வைத்திருந்தீர்கள் என்றால அது மனதிற்குக் கடுமையான வலியைக் கொடுக்கத் துவங்கி விடும்! உங்களால் வேறு எந்த வேலையிலும் ஈடுபட முடியாத நிலை ஏற்படும்! உங்களை அது முடக்கிப் போட்டுவிடும்

உண்மையில் நம்மால் உடனடியாக எதுவும் செய்ய முடியாது. அதற்குரிய நேரமும், காலமும் வரும்போது அதைப் பார்த்துக்கொள்ளலாம். அப்போது அதைத் தீர்வுக்குக் கொண்டு வரலாம் என்று தற்காலிகமாக அதைக் கீழே வைத்துவிட வேண்டும். அதாவது ஒதுக்கி வைத்துவிட்டு அல்லது மறந்து விட்டு அடுத்த வேலையைப் பார்க்க வேண்டும்

ஆகவே கையில் எந்தக் குவளையையும் தாங்கிக் பிடித்துகொண்டிருக்காமல் கீழே வைத்து விட்டு, ஒவ்வொரு நாளையும் புதிதாகத் துவங்குங்கள்!
-------------------------------------------------------------
   “வாத்தி (யார்)  எதற்காக இந்தக் கதை ?”

    “ஜோதிடப் பாடம் படிக்கும் பலரும் இதைததான் செய்கிறீர்கள். ஜோதிடத்தில் ஒரு ஒவ்வாத விதியைப் (rule) படித்து விட்டு, அதை உங்கள் ஜாதகத்துடன் இணைத்துப் பார்ப்பதுடன் அல்லாம்ல கவலைப்பட வேறு துவங்கி விடுகிறீர்கள். அதைப் பற்றிய தெளிவு பிறக்க என்ன செய்யலாம், யாரைக் கேட்கலாம் என்று குழம்ப வேறு ஆரம்பித்துவிடுகிறீர்கள். அவ்வாறு செய்யாதீர்கள். Put the rules down. படித்தவற்றைக் கீழே வைத்து விடுங்கள். அல்லது அதைக் குறித்துவைத்துக் கொண்டு, அடுத்து வரும் கேள்வி பதில் வகுப்பின்போது (session) அதைக் கேட்டுத் தெளிவு பெறலாம் என்று முடிவு செய்து விட்டு நிம்மதியாக இருங்கள்.”
------------------------------------------------------------
நண்பர் ஒருவர் மின்னஞ்சலில் அனுப்பிய கதை. கதை ஆங்கிலத்தில் இருந்தது. மொழியாக்கம் மட்டும் அடியேனுடைய கைவண்ணம்.

அன்புடன்
வாத்தியார்

--------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

10.10.12

Astrology - Popcorn Post உறவு வரும் பகையும் வரும் ஜாதகம் ஒன்றுதான்!


Astrology - Popcorn Post உறவு வரும் பகையும் வரும் ஜாதகம் ஒன்றுதான்!

Popcorn Post No.28
பாப்கார்ன் பதிவுகள் - எண்.28


தேதி 10.10.2012 புதன் கிழமை
-----------------------------
கிரக உறவுகள்

கிரகங்களில் சில ஒன்றிற்கொன்று நட்பாக இருக்கும். அல்லது பகையாக இருக்கும் அல்லது சமம் என்ற நிலைப்பாட்டுடன் இருக்கும். அது நன்றாக - அதாவது தூக்கத்தில் எழுப்பிக் கேட்டால் கூட சொல்லும் அளவிற்கு அவற்றை மனப்பாடம் செய்து வைத்திருப்பது நல்லது. ஜாதகத்தில் பலனை அலசும்போது அது உதவும்!

கிரகங்கள் உச்சம்பெற்று இருக்கும் நிலை உன்னதமானது. ஜாதகத்தில் இரண்டிற்கும் மேற்பட்ட கிரகங்கள் உச்சமாக இருந்தால் ஜாதகன் அதிர்ஷ்டமானவன்

1. சூரியன் மேஷத்தில் உச்சம். அது செவ்வாயின் வீடு. நட்பு வீடு
2. புதன் கன்னியில் உச்சம். அது அவருக்கு சொந்த வீடு.
3. குரு கடகத்தில் உச்சம் அது சந்திரனின் வீடு. நட்பு வீடு
4. சனி துலாமில் உச்சம் அது சுக்கிரனின் வீடு. நட்பு வீடு
---------------------------------------------------
5. சந்திரன் ரிஷபத்தில் உச்சம். ஆனால் அது நட்பு வீடல்ல சம வீடு
6. செவ்வாய் மகரத்தில் உச்சம். அது சனியின் வீடு அது செவ்வாய்க்கு நட்பு வீடல்ல சம வீடு
7. சுக்கிரன் மீனத்தில் உச்சம் அது குருவின் வீடு. சுக்கிரனுக்கு அது நட்பு வீடல்ல சம வீடு
-----------------------------------------------------
8 & 9 ராகுவும், கேதுவும் உச்சம் பெறுவது விருச்சிகத்தில். ஆனால் அது பகை வீடு!
(பகை வீட்டில் எப்படி உச்சம் என்று யாரும் கேட்க வேண்டாம். பதில் சொல்ல அதை வகுத்தவர்கள் இன்று உயிருடன் இல்லை)
-----------------------------------------------------------
உங்கள் வசதிக்காக, கிரகங்கள் ஒன்றிற்கொன்று உள்ள உறவை அட்டவணைப் படுத்திக் கொடுத்துள்ளேன். அதை மனதில் ஏற்றி வைத்துக்கொள்ளுங்கள்





அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

8.10.12

Astrology எப்போதுடா என் கஷ்டம் தீரும்?



Astrology எப்போதுடா என் கஷ்டம் தீரும்?

அலசல் பாடம்

எனது கஷ்டங்கள் எப்பொது தீரும்? என்னும் தலைப்பில் முன் பாடங்களில் சூரியன், மற்றும் சந்திரனை வைத்துப் பலன்களை அலசுவதைப் பற்றி எழுதியிருந்தேன். இன்று குருவை வைத்து எப்படி அலசுவது என்று பார்ப்போம்!

குருதான் தனகாரகன்.Authority for finance (குழந்தை பாக்கியத்திற்குக் காரகனும் கூட)

இன்று பல பிரச்சினைகளுக்குக் காரணம் பணமின்மை அல்லது பணப் பற்றாக்குறை!

இன்றைய வாழ்க்கைச் சூழ்நிலையில், தேவைகளும் அதிகமாகிவிட்டன. செலவுகளும் அதிகமாகிவிட்டன. விலவாசிகளும் கட்டுப்படுத்த யாரும் இல்லாமல் தன்னிச்சையாக ஏறிக்கொண்டிருக்கிறது!

பணப்பற்றாக்குறை இல்லாதவரே இல்லை என்று சொல்லலாம்.

சம்பளக்காரனுக்கும் பணத்தேவை உள்ளது. செல்வந்தனுக்கும் பணத்தேவை உள்ளது. சைபர்களின் எண்ணிக்கை தான் வித்தியாசம். பத்தாயிரம் தேவை உள்ளவனும் இருக்கிறான். பத்து லட்சம் தேவை உள்ளவனும் இருக்கிறான்.

ஆசைப்படாதே. இருப்பதை வைத்துக்கொண்டு சந்தோஷமாக இரு என்று வயதானவர்களுக்கு வேண்டுமென்றால் சமாதானம் சொல்லலாம். அதே சமாதானம் இளைஞர்களிடமும், நடுத்தர வயதுக்காரர்களிடமும் எடுபடாது!
_________________________________________________________________________
பணமின்மையில் இரண்டு விதம் உள்ளது.

ஒன்று ஏழ்மை அல்லது வறுமை! இன்னொன்று தற்காலிகப் பணமின்மை.

ஜாதகப்படி, இரண்டாம் வீடும், பதினொன்றம் வீடும் அடிபட்டுப் போயிருந்தால் அல்லது கெட்டுப்போய் இருந்தால்,  வாழ்க்கை முழுவதும் பணக்கஷ்டம் இருக்கும். submissive level என்பார்களே -

அதாவது கைக்கும் வாய்க்குமான நிலைமை என்பார்களே அந்த நிலையில் வாழ்க்கை நடத்த வேண்டியதிருக்கும். அதற்கு ஜாதகத்தை அலசி எப்போது பணம் வரும் என்று பார்க்கத் தேவையில்லை.

எப்போதுமே submissive level தான்!

தற்காலிக நிலைமையை இப்பொது அலசுவோம்!

1. ஜாதகத்தில் மாந்தி அமர்ந்திருக்கும் வீட்டின் அதிபதியினுடைய தசா அல்லது புத்தி நடந்தால் பணக் கஷ்டம் உண்டாகும். கொடுத்த பணம் வராது. தொழிலில் அல்லது வியாபாரத்தில் சிக்கல்கள் உண்டாகி, பணம் எங்காவது முடங்கிப்போய்விடும்.

2. ஆறாம் அதிபதியின் திசை நடந்தாலும் அதே நிலைமைதான். குறிப்பாக வைத்தியச் செலவு, நம்பிக்கைத் துரோகம் போன்ற செயல்களால், நமது பணம் முடங்கிவிடும் அபாயம் உண்டாகும்

3. பன்னிரெண்டாம் அதிபதியின் திசை நடந்தால், எதிர்பாராத செலவுகள் உண்டாகி பணப் பற்றாக்குறை ஏற்படும். பங்குச் சந்தைபோன்ற இடங்களில் பணத்தை இழக்க நேரிடும். பொதுவாக விரையத்தால் பணத்தை இழக்க நேரிடும்.

4. எட்டாம் அதிபதியின் திசை நடந்தாலும் அதே நிலைமைதான்.

5. நடப்பு தசா அல்லது புத்தி நாதன் 6, 8 அல்லது 12ஆம் வீடுகளில் இருந்தாலும் தற்காலிகப் பணக் கஷ்டங்கள் உண்டாகும். அந்தக் குறிபிட்ட திசை முடிந்தவுடன் அது நிவர்த்தியாகும்.

6. அதே போல தீய கிரகங்களான, சனி, ராகு அல்லது கேது ஆகியவற்றின் திசை அல்லது புத்திகளிலும் பணக் கஷ்டங்கள் உண்டாகும். (அக்கிரகங்கள், உச்சம், கேந்திர, திரிகோணங்களில் இருந்தால், விதிவிலக்காகும்)
------------------------------------------------------------------------------------------------------------
சரி எப்போது பணம் அதுவாக வரும்? (That is free flow of money)

1. 2ஆம் அதிபதியின் திசை, பதினொன்றாம் அதிபதியின் திசை, பாக்கிய அதிபதியின் திசைகளில் பணம் அபரிதமாக வரும் (ஜாதகத்தில் அவர்கள், உச்சம், கேந்திர திரிகோணங்களில் இருக்க வேண்டும்)

2.. கோச்சாரக்குரு, இரண்டு, ஐந்து, ஏழு, பதினொன்றாம் வீடுகளில் சஞ்சரிக்கும் காலங்களில் பணம் வரும்

3. கோச்சார சனி, 30 பரல்களுக்கு மேல் உள்ள வீடுகளில் சஞ்சரிக்கும் காலங்களில் பணம் வரும்
------------------------------------------------------------------------------------------------------------
பணம் எப்போதும் ஒரே மாதிரியாக வந்து கோண்டிருக்காது. புத்திசாலித்தனமாக அது வரும் காலத்தில் அதைப் பிடித்துப் பத்திரப் படுத்திவைத்துக் கொள்ள வேண்டும்.

மழைகாலத்தில் குளத்தை நிரப்பி வைத்தால்தான் வெய்யில் காலத்தில் குடிக்கத் தண்ணீர்கிடைக்கும். அதுபோலத் தான் இதுவும்.

இது மேல்நிலைப் பாடங்களில் ஒன்று. அனைவருக்கும் (மற்றவர்களுக்கும்) பயன்படட்டும் என்று அதை இன்று இங்கே பதிவிட்டு உள்ளேன்

வாத்தியார் வெளியூர்ப் பயணம். அதனால் வகுப்பறைக்கு 9.10.2012 செவ்வாயன்று விடுமுறை. அடுத்த வகுப்பு புதன் கிழமை ( 10.10.2012) யன்று நடைபெறும். கிடைக்கும் நேரத்தில் பழைய பாடங்களைத் திரும்பப் படியுங்கள்.

அன்புடன்
வாத்தியார் 


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++==

4.10.12

Astrology எதை முதலில் பார்க்க வேண்டும்?



Astrology எதை முதலில் பார்க்க வேண்டும்?

முற்காலத்தில் ஒருஅரசன் இருந்தான்!

எந்த நாட்டில்?

நாடெல்லாம் முக்கியமில்லை.

கதையை மட்டும் படியுங்கள்
-------------------------------------
தன் பேரரசிற்கு ஒரு முதன் மந்திரியை நியமிக்க விரும்பினான் அவன்.
கவிராயர்கள், குருமார்கள், கல்விமான்கள், விகடகவிகள் என்று தன் அரசபையில் இருக்கும் பலரில கல்வித்தகுதி மற்றும் வயதில் சமமாக இருக்கும் 4 பேர்களை முதலில் அவனாகவே தெரிவு செய்தான். பிறகு தன் அரச சபையில் தன் தெரிவுகளை அறிவித்ததோடு, அவர்கள் நால்வருக்கும் ஒரு பரிட்சை வைக்கப்போவதாகவும், அதில் யார் முதல் நிலையில் தேர்வு
பெறுகிறாரோ, அவரே முதன் மந்திரியாகும் வாய்ப்பைப் பெறுவார் என்றும் அறிவித்தான்.

மற்றவர்கள் எப்படியோ, ஆனால் அந்த நால்வரும் பரபரப்பிற்கு உள்ளாகிவிட்டார்கள்.

ஒரு வாரம் சென்றது. ஒரு நாள் அவர்கள் நால்வரையும் அழைத்த மன்னன் சொன்னான்.

“நான் ஒரு பூட்டைத் தயார் செய்து வைத்துள்ளேன். கணித அடைப்படையில் விஞ்ஞான பூர்வமாக செய்யப்பெற்ற பூட்டு அது. நாளை காலை உங்கள் நால்வருக்கும் அந்தப் பூட்டைத் திறக்கும் வாய்ப்பு வழங்கப்பெறும். யார் ஒருவர் குறுகிய நேரத்திற்குள் சாமர்த்தியமாக அந்தப் பூட்டைத் திறக்கிறீர்களோ அவரே வெற்றி பெற்றவராவார். முதன் மந்திரி பதவியும் அவருக்குத்தான்”

அவ்வாறு மன்னன் சொன்னதைக் கேட்ட அவர்கள் நால்வரும், அரசசபையில் இருந்து தத்தம் வீட்டிற்குச் சென்று பலத்த சிந்தனைக்கு ஆளானார்கள். எப்படியாவது வெற்றி பெற்றுப் பதவியைக் கைப்பற்ற வேண்டும் என்ற ஆர்வம் அவர்கள் நால்வருக்கும் இருந்தது.

பூட்டுக்களின் செய்முறையை பற்றிய பழைய நூல்களையும், கணிதக் குறிப்புக்களில் பூட்டுக்களுக்கான செய்திகளையும் படித்து குறிப்பு எடுத்துவைத்துக்கொண்டார்கள்.

அவர்களில் மூவர் இரவு முழுவதும் தூங்காமல் பல நூல்களையும், ஏடுகளையும் படித்து மனதில் தக்க வைத்துக்கொண்டார்கள். ஒருவர் மட்டும் சில ஏடுகளைப் புரட்டிப் பார்த்ததோடு நிறுத்திக்கொண்டு, சீக்கிரமே நித்திரைக்கு ஆளாகி, நன்றாக உறங்கிவிட்டார்.

அடுத்த நாள் காலை!

அரசசபையில் பூட்டு கொண்டு வரப்பெற்று அவர்கள் முன்பாக வைக்கப்பெற்றது. அதன் அருகே மன்னனும் இருந்தார்.

பூட்டு அளவிலும் சரி, தொழில் நுட்பத்திலும் சரி அனைவரையும் ஆச்சரியப் படுத்தும் விதமாக பெரிதாக இருந்தது.

பூட்டின் படம் கீழே உள்ளது. நீங்களும் பாருங்கள்



ஒருவருக்குப் பின் ஒருவராக பூட்டின் அருகே சென்று பார்ப்பதற்கு அவர்கள் நால்வருக்கும் அனுமதியளிக்கப்பெற்றது. தாங்கள் எடுத்து மனதில் தேக்கி ந்வைத்திருந்த  குறிப்புக்களின் படி, தங்களுக்குத் தெரிந்த விதத்தில் அல்லது தங்களுக்கு யோசனை தோன்றிய விதத்தில் அந்தப் பூட்டை அவர்கள் திற்க்க முயன்றார்கள்.

இரவு தன்னுடைய தூக்கத்தைக் கெடுத்துக்கொள்ளாமல் சீக்கிரமாகப் படுத்து உறங்கினானே, அவன் தான் அந்த நால்வரில் இறுதியாகப் பூட்டின் அருகே வந்தான். பூட்டை நன்றாகப் பரிசோத்தித்துப் பார்த்தான். அவனுடைய வியப்பைப் பல மடங்கு அதிசயப்படுத்தும் விதமான் ஒன்றை அப்போதுதான் அவன் கவனித்தான். அந்தப் பூட்டு பூட்டப்படாமலேயே இருந்தது.

சாவியைப் பயன் படுத்தாமல், பூட்டின் மேற்பகுதியில் இருந்த இணைப்புக் கம்பியை விலக்கிவிட்டு (by removing the hook) பூட்டை எளிதாக அவன் திறந்து விட்டான்.

சொல்லவும் வேண்டுமா?

அவனுக்குத்தான் முதன் மந்திரிப் பதவியும் கிடைத்தது.

உண்மை என்னவென்றால், அந்தப் பூட்டு பூட்டப் படவில்லை.(The fact was, the lock was not locked.)

மற்ற மூவரும் பரபரப்பினாலும், வெற்றிபெற வேண்டுமே என்ற ஆதங்கத்தினாலும் அதைக் கவனிக்கவில்லை.

அதாவது முதலில் எதைச் செய்திருக்க வேண்டுமோ அதை அவர்கள் செய்யவில்லை
------------------------------------------------------------------------------------
”வாத்தி (யார்) இந்தக் கதை எதற்காக?”

”ஜோதிடப் பாடம் படிக்கும் பலரும் இதைததான் செய்கிறீர்கள். பூட்டைத்தான் பார்க்கிறீர்கள். பாடத்தைத்தான் பார்க்கிறீர்கள். பூட்டு பூட்டப் பட்டுள்ளதா என்பதை முதலில் பார்க்காததைப்போல, விதிவிலக்குகளைப் பார்ப்பதில்லை. ஆகவே  விதிவிலக்குகள் உள்ளதா என்று முதலில் பாருங்கள்”

To solve a problem, one must first understand the problem.To understand the problem, the mind should be calm, without tension or agitation. This will facilitate seeing things objectively.

நமது வகுப்பறை நண்பர் திரு.பிரகாஷ் அவர்கள் தான் படித்ததாகக் கூறி மின்னஞ்சலில் அனுப்பிய கதை.  கதை ஆங்கிலத்தில் இருந்தது. மொழியாக்கம் மற்றும் அடியேனுடைய கைவண்ணம். அவருக்கு நம் நன்றிகள் உரித்தாகுக!

அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------------


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

3.10.12

Astrology - Popcorn Post ராசி எத்தனை ராசியடா?


Astrology - Popcorn Post ராசி எத்தனை ராசியடா?

Popcorn Post No.27
பாப்கார்ன் பதிவுகள் - எண்.27

தேதி 3.10.2012 புதன் கிழமை
-----------------------------
நெருப்பு ராசிகள் (Fire)
மேஷம், சிம்மம், தனுசு Aries, Leo, Sagittarius ஆகியவை நெருப்பு ராசிகள் எனப்படும். இந்த மூன்று ராசிகளில் ஏதாவது ஒன்றைச் சேரந்தவர்கள் - அதாவது லக்கினமாகப் பெற்றவர்கள் தன்நம்பிக்கை உள்ளவர்களாகவ்ய்ம், துணிச்சல் மிக்கவர்களாகவும், சுயமாக சிந்தித்து முடிவு எடுப்பவர்களாகவும் இருப்பார்கள். தலைமை தாங்கும் வல்லமை படைத்தவர்களாகவும் இருப்பார்கள்

நெருப்புராசியை ஜீவனமாகப் பெற்றவர்கள் (அதாவது 10ம் வீடாகப் பெற்றவர்கள்) நெருப்பு சம்மந்தப்பட்ட தொழிலில் இருக்கும் வாய்ப்பு உண்டு.
------------------------------
நில ராசிகள்:(Earth)
ரிஷபம்,கன்னி, மகரம்  Taurus, Virgo Capricorn, ஆகியவை மூன்றும் நில ராசிகள் எனப்படும். இந்த ராசியை லக்கினமாகப் பெற்றவர்கள் மிகவும் நிதானமாகச் செயல்படக் கூடியவர்களாகவும், எதையும் யதார்த்தமாக எடுத்துக் கொள்பவர்களாகவும் இருப்பார்கள். Take it easy policy காரர்கள். சிக்கனவாதிகள். இவர்களிடம் காசு கேட்டு வாங்குவதற்குள் அடுத்தவனுக்குப் பிராணன் போய்விடும் வாய்ப்பு உண்டு:-))) உப்புப் பெறாத சின்ன விஷயங்களுக்குக்கூட கவலை கொள்ளக்கூடியவர்கள்.

பத்தாம் வீடு  நில ராசியாக வந்தால் நிலம், கட்டிடம் சம்மந்தமான தொழில்கள், வேலைகள், விவசாயம் ஆகியவை நல்ல பலன்களைத் தரும்.
------------------------------------------
காற்று ராசிகள் :(Air) 
துலாம், கும்பம், மிதுனம், Libra, Aquarius, Gemini ஆகியவைகள் காற்று ராசிகள்எனப்படும். நிறைவான, நல்ல குணங்களை உடையவர்கள் இவர்கள். புத்திசாலிகள். ஆர்வம் மிகுந்தவர்கள்.

பத்தாம் வீடு காற்று ராசியாக இருந்தால், ஜாதகன் கணக்காய்வாளர், வழக்குரைஞர், ஆசிரியர் போன்ற தொழில்களைச் செய்தால் வெற்றி பெறலாம். மேன்மையடையலாம்.
--------------------------------------
ஜலராசிகள்:(Water)
கடகம், விருச்சிகம், மீனம் Cancer, Scorpio, Pisces ஆகியவைகள் ஜலராசிகளாகும்  இந்த ராசிக்காரர்கள் மிகுந்த கூச்ச சுபாவம் உடையவர்கள். கற்பனை வளம் உடையவர்கள். எதையும் வெற்றிகரமாகச் செய்து முடிக்கும் ஆற்றல் மிக்கவர்கள்.

ஜலராசி 10-வது வீடாக வந்தால் தண்ணீர் சம்மந்தப்பட்ட தொழில் அமையும் வாய்ப்பு உண்டு. குளிர் பானங்கள், துணிமணி சம்மந்தப்பட்ட தொழில், கப்பல் சம்மந்தப் பட்ட தொழில் ஆகியவறறில் ஒன்றைச் செய்தால், சிறப்பாகச் செய்து பொருள் ஈட்டக்கூடியவர்கள்
----------------------------------------
இதில் குறிப்பிடப்பட்டுள்ள தொழில்கள் எல்லாம் பொது விதிகள். உங்களுக்கு அப்படி அமையவில்லை என்றால், ஜாதகப்படி அதற்கு வேறு காரண காரியங்கள் இருக்கும். ஆகவே குழப்பம் அடைந்து, மண்டையைப் பிய்த்துக்கொண்டு பின்னூட்டம் இடுவதைத் தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன்

அன்புடன்,
வாத்தியார்

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

1.10.12

Astrology யாருக்கு யார் யோககாரகன்?




Astrology யாருக்கு யார் யோககாரகன்?


ஜோதிடப் பாடம்

தேதி.1.10.2012

Key Points (தொடர் பகுதி)

யாருக்கு யார் யோககாரகன்?

யோகம் என்றால் அதிர்ஷ்டம் (Good Luck) என்று பொருள்படும். யோககாரகன் என்பதற்கு அதிர்ஷ்டத்தைக் கொடுப்பவன்

என்று பொருள் கொள்ளுங்கள். ஜாதகத்தில் கிரகங்கள் உச்சமாக இருப்பதைவிட, யோகத்தைக் கொடுக்ககூடிய கிரகம் உச்சமாக இருந்தால் பல நன்மைகள் ஏற்படும். அதுபோல யோககாரகன், ஆட்சி, கேந்திர திரிகோணங்களில் இருந்தாலும் பலவித நன்மைகள் உண்டாகும்

1. ரிஷப லக்கினத்திற்கு சனி யோககாரகன் (9 & 10ஆம் இடங்களுக்கு உரியவன்)

2. துலா லக்கினத்திற்கு சனி யோககாரகன் (4 & 5ஆம் இடங்களுக்கு உரியவன்)

3. கடக லக்கினத்திற்கு செவ்வாய் யோககாரகன் (5 & 10ஆம் இடங்களுக்கு உரியவன்)

4. சிம்ம லக்கினத்திற்கு செவ்வாய் யோககாரகன் (4 & 9ஆம் இடங்களுக்கு உரியவன்)

5. மகர லக்கினத்திற்கு சுக்கிரன் யோககாரகன் (5 & 10ஆம் இடங்களுக்கு உரியவன்)

6. கும்ப லக்கினத்திற்கு சுக்கிரன் யோககாரகன் (4 & 9ஆம் இடங்களுக்கு உரியவன்)

7. மேஷ லக்கினக்காரகளுக்கு சூரியனும், சந்திரனும் சேர்ந்திருந்தால் பலத்த யோகத்தைக் கொடுக்கக்கூடியவர்கள். அவர்கள் 4ஆம் வீடு & 5 ஆம் வீடுகளுக்கு அதிபதிகள். அதை நினைவில் வையுங்கள்.

8. விருச்சிக லக்கினக்காரர்களுக்கு சூரியனும், சந்திரனும் சேர்ந்திருந்தால் பலத்த யோகத்தைக் கொடுக்கக்கூடியவர்கள் அவர்கள் 9ஆம் வீடு & 10 ஆம் வீடுகளுக்கு அதிபதிகள். அதை நினைவில் வையுங்கள்.

9. தனுசு மற்றும் மீன லக்கினங்களுக்கு யோககாரகன் என்று தனியாக யாரும் கிடையாது. லக்கினாதிபதி குருவே யோககாரகன் வேலையையும் செய்வார். அவர் முதல் நிலை சுபக்கிரகம் அதை மனதில் வையுங்கள். அவர் ஜாதகத்தில் அம்சமாக இருந்தால் போதும். ஜாதகன் யோகங்களுடன் இருப்பான்.

10. மிதுனம் மற்றும் கன்னி லக்கினங்களுக்கும் தனியாக யோககாரகன் கிடையாது. லக்கினாதிபதி புதனே யோககாரகன் வேலையையும் செய்வார். அவர் வித்யாகாரகன். வித்தைகளுக்கு அதிபதி. அவர் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால் போதும். ஜாதகன் யோகங்களுடன் இருப்பான்.

இது மேல்நிலை வ்குப்பில் பதியப் பெற்ற பாடம். மற்றவர்களுக்கும் பயன் படட்டும் என்று அதை இன்று இங்கே பதிவிட்டுள்ளேன்!

அன்புடன்
வாத்தியார்

26.9.12

Astrology: தலைமைப் பதவி என்ன தானாகக் கிடைக்குமா?!

Astrology: தலைமைப் பதவி என்ன தானாகக் கிடைக்குமா?!

எல்லா மனிதர்களுக்குமே ஒரு பொதுவான மனக்குறை உண்டு!

எவ்வளவுதான் உழைத்தாலும் அல்லது பாடுபட்டாலும் நாம் நினைத்த அளவிற்கு முன்னுக்குவர முடியவில்லையே என்பதுதான் அந்தக் குறை!

இங்கே முன்னுக்கு என்பது பணத்தைமட்டும் வைத்து அல்ல!

தலைமைப் பதவிக்கு வந்து அமர்வது. செல்வாக்கு, மற்றும் புகழோடு இருப்பது. பதவி, பட்டங்களைப் பெறுவது. அதை மனதில் வையுங்கள்

சிலர் வெளியே சொல்வார்கள். சிலர் சொல்லாமல் மனதிற்குள் வைத்திருப்பார்கள்.அது இல்லாமல் இருப்பவர்கள் அபூர்வம்! அது
இயற்கையானதுதான்.

”கடுமையாக உழைக்கிறேன் என்று சொல்லி பதினெட்டு மணி நேரம் தினமும் மண் வெட்டுவதால் ஒரு பிரயோஜனமுமில்லை. உழைப்போடு அறிவும் சேரும்போதுதான் முன்னுக்கு வரமுடியும்!” என்று ஒரு சிந்தனையாளன் சொன்னான்.

சிலர் அறிவோடும், திறமையோடும் வேலை செய்வார்கள். ஆனால் எப்போதுமே இரண்டாம் நிலையில்தான் இருப்பார்கள். அவர்களுடைய
உழைப்பால் விளைந்தவற்றையெல்லாம், அவனுக்கு மேலே உள்ளவன் சமர்ப்பித்து தான் வேலை பார்க்கும்  நிறுவனத்தில் நல்ல பெயரைத்
தட்டிக்கொண்டு செல்வதுடன், அதனால் கிடைக்கும் உயர்வையும் அவனே அனுபவிப்பான். நம்ம ஆளுக்கு ஒன்றும் கிடைக்காது.

இது ஒருவகை!

சிலர் இப்படிச் சொல்வார்கள், “நான் வீட்டிற்கு முத்தவன். பெரிய குடும்பதைச் சேர்ந்தவன். வீட்டில் உள்ள அனைவருக்காகவும் பாடுபடுகிறேன். ஆனால் ஒரு பிரயோஜனமும் இல்லை. எங்கள் வீட்டில் உள்ள இரண்டாவது மகனுக்கு எல்லாம் போய்விடுகிறது. எனக்கு வீட்டில் உரிய மதிப்பும் இல்லை. மரியாதையும் இல்லை”

அதற்கு வேறு சில காரணங்களும் இருக்கலாம். ஆனால் குறைகுறைதான். இது இரண்டாவது வகை!

ஊருக்காகப் பாடுபடுபவர்களுக்கும் இதே கதிதான். உண்மையாக உழைப்பவன் பஞ்சாயத்து ஒன்றியத்திற்குத் தலைவனாக வரமாட்டான்.
ஒன்றும் இல்லாத டகால்டி ஆசாமி தலைமைப் பதவியில் வந்து அமர்ந்து கொண்டு விடுவான்.

மாங்கு மாங்கு என்று அருமையாக எழுதிக்குவித்தவனுக்கு விருது கிடைக்காது. ஒன்றும் இல்லாமல் ஒரே ஒரு புத்தகத்தை எழுதியவன்,
விருதை வாங்கிக் கொண்டு  போய்விடுவான்.

சுமார் 250 படங்களுக்கு மேல் நடித்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்கு  ஒரு முறை கூட சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்ததில்லை.

அதைவிட அருமையான உதாரணம் ஒன்று சொல்லலாம்.

மகாத்மா காந்தியை எடுத்துக்கொள்வோம். 1869ஆம் ஆண்டு பிறந்த காந்திஜி சுமார் 50  ஆண்டுகாலத்திற்கு மேல் (அவருடைய இளமைக் காலத்தைக் கழித்து விடுங்கள்) இந்த நாட்டிற்காகப் பாடுபட்டிருக்கிறார். பல துன்பங்களை அனுபவித் திருக்கிறார். அவர்  கடைபிடித்த அஹிம்சைப் போராட்டம்தான் நமக்கு சுதந்திரத் தைப் பெற்றுத் தந்தது. அனால் அவருக்குக் கிடைத்தது ஒன்றே ஒன்றுதான் -

தேசத்தந்தை என்ற பெயர் ஒன்றுதான் அவருக்குக் கிடைத்தது.

ஒரு போராட்டத்தை தலைமை ஏற்று நடத்திய அத்தனை பேர்களுமே, போராட்டத்தின் முடிவில் பதவியில் அமர்ந்திருக்கிறார்கள். ஆனால்
காந்திஜி அமரவில்லை. இந்தியாவின்  முதல் பிரதமராக அவர் மர்ந்திருக்க வேண்டுமா இல்லையா?

அவருக்கு மனம் இல்லை, அதனால் அமரவில்லை. அதனால் கட்சியில் அவருக்கு அடுத்த நிலையில் இருந்த ஜவஹர்லால் நேரு அவர்கள்
பதவியில் அமர்ந்தார் என்று சொல்லலாம்.

சரி, அப்படியே வைத்துக்கொள்ளுங்கள். அவர்க்கு ஏன் மனம் வரவில்லை?

அவருடைய ஜாதகப்பலன் அதுதான்.

அவருடைய ஜாதகத்தில், லக்கினத்தில் உள்ள பரல்கள் வெறும் 22 மட்டுமே. அதாவது  சராசரிக்கும் 6 பரல்கள் குறைவாக உள்ளது.

அதனால்தான் அவர் பதவியில் அமர முடியவில்லை. அதற்கான சூழ்நிலை உண்டாகவில்லை.

நேருஜியின் ஜாதகத்தில் 30 பரல்கள் உள்ளன

சீரியஸாகி அரசியல் பேச வேண்டாம். எனது நோக்கம் அதுவல்ல! இருவருடைய ஜாதகத்தையும் வைத்து உங்களுக்கு ஒரு முக்கியமான
குறிப்பைத் தர விரும்புகிறேன். லக்கினத்தில் 30ம் அதற்கு மேற்பட்ட பரல்களும் உள்ளவர்கள்தான் தலைமைப் பதவிக்கு வரமுடியும். புகழ்,
செல்வாக்கு ஆகியவற்றை அனுபவிக்க முடியும்.

337 வகுத்தல் 12 = 28 பரல்கள் என்பது சராசரி.

இந்த சராசரி அல்லது சராசரிக்கும் கீழே உள்ளவர்கள் மனதைத் தேற்றிக் கொள்ள வேண்டியதுதான். என்னதான் முக்கி வேலை செய்தாலும் தலைமைப் பதவி அல்லது தலைமை இடம்  என்பது கனவாகத்தான் இருக்கும்.

அது பொதுவாழ்க்கை அல்லது குடும்ப வாழ்க்கை அல்லது சொந்த வாழ்க்கை என்று  எதுவாக இருந்தாலும் இரண்டாம் இடம்தான் கிடைக்கும்.

குடும்பவாழ்க்கை என்றால் உங்கள் மனைவியின் கை ஓங்கியிருக்கலாம்  (அவருக்கு சராசரிக்கும் மேலான பரல்கள் அல்லது உங்களைவிட அதிகமான பரல்கள் இருக்கும்போது):-))))) குழந்தைகளின் மத்தியில் உங்களைவிட அவருக்கு செல்வாக்கு அதிகம் இருக்கலாம்.

ஆகவே உங்கள் ஜாதகத்தைப் பாருங்கள். 28ற்கும் அதிகமாக இருந்தால் சந்தோஷப் படுங்கள். இல்லையென்றல் மனதைத் தேற்றிக் கொள்ளுங்கள்.

லக்கினத்தை அலசும் குறுக்குவழி இதுதான்.

இது மேல்நிலை வகுப்பிற்கான பாடம் (classroom2012) அனைவருக்கும் பயன்படட்டும் என்று அதை இன்று இங்கே பொதுவகுப்பில் வலை
ஏற்றியுள்ளேன்!

அன்புடன்
வாத்தியார் 

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++

24.9.12

Astrology - Popcorn Post தோஷம் எத்தனை தோஷமடா?

 
Astrology - Popcorn Post தோஷம் எத்தனை தோஷமடா?

Popcorn Post No.26

பாப்கார்ன் பதிவுகள் - எண்.26


தேதி 24.9.2012 திங்கட்கிழமை
-----------------------------
சென்றவாரம் மின்னஞ்சலில் எனக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் அன்பர் ஒருவர் தன் ஜாதகத்தில் லக்கினத்தில் ராகுவும், ஏழில் கேதுவும் இருப்பதை வைத்து தனக்குக் காலசர்ப்ப தோஷம் இருக்கிறதா என்று கேட்டிருந்தார். அத்துடன் தனக்கு நாக தோஷம் இருக்கிறதா என்றும் கேட்டிருந்தார்.

காலசர்ப்ப தோஷத்தைப் பற்றி நிறைய எழுதியிருக்கிறேன். அதை மீண்டும் எழுதி, பல பேர்களுடைய சாபத்தை வாங்கிக்கொள்ள விரும்பவில்லை. இப்போது அந்த அன்பர் புதிதாகக் குறிப்பிட்டுள்ள நாக தோஷத்தை மட்டும் பார்ப்போம்!
--------------------------------------------------------------------------
நாக தோஷம் என்பது லக்கினம், சந்திரன், ராகு ஆகிய மூன்றும் ஒன்றாக இருந்தால் ஏற்படக்கூடியது. அத்தோடு லக்கினம், சுக்கிரன், ராகு ஆகிய மூன்றும் ஒன்றாக இருந்தாலும் ஏற்படக்கூடியது. அது எல்லா லக்கினத் திற்கும் பொருந்தும். ராகுவிற்குப் பதிலாக கேது அந்த இடத்தில் இருந்தாலும் அத்தோஷம் உண்டு.

அதனால் ஏற்படக்கூடிய பாதிப்பு என்ன?

உடல் உபாதைகள், நோய்கள்
எல்லாச் செயல்களிலும் ஒரு மந்தமான நிலைமை, தாமதம்
திருமண வாழ்க்கையில் பிரச்சினைகள்.
இம்மூன்றில் ஒன்று உண்டாகும். அது ஜாதகத்தில் அததற்கு உரிய காரகர்களின் நிலையைப் பொறுத்து உண்டாகும்

பரிகாரம் உண்டா?
உண்டு!

கசை வைத்துச் செய்யும் பரிகாரங்கள் அல்ல!
உங்கள் காசு யாருக்கு வேண்டும்? அதுவும் கிரகங்களுக்கு எதற்காக?
மந்திரம், யந்திரம், பரிகாரத் தகடுகள் என்று காசையும் நேரத்தையும் வீணாக்குவதை விட, பிரார்த்தனை செய்யுங்கள்.
கடுமையாகப் பிரார்த்தனை செய்யுங்கள்.
பாதிப்புக்கள் குறைந்துவிடும். நீங்கிவிடும். உங்கள் வாழ்க்கை ஒளிரும்!

யாரை வணங்க வேண்டும்?

ராகு, கேதுக்களை வணங்குங்கள். அவர்களுடைய ஸ்தலத்திற்குச் சென்று வணங்குங்கள் அல்லது அதைவிட மேலாக உங்கள் நட்சத்திரத்தன்று உபவாசம் இருந்து சிவபெருமானை வணங்குங்கள். ஒன்பது மதங்கள் அவ்வாறு தொடர்ந்து செய்யுங்கள். அவர் கருணை வைப்பார். அவர் கருணை வைத்தால் என்னதான் நடக்காது?

அன்புடன்,
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
 வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++