மாணவர் பதிவேடு (Enrolment Register)
என்னைப் பற்றி
Contact vaaththiyar
Please write to Vaaththiyar
திருமணப் பொருத்தம்
Marriage Matching
My Phone Number and whatsApp number
94430 56624
My email ID
எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624
வந்தவர்களின் எண்ணிக்கை
வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?
வாத்தியாரின் அடுத்த புத்தகம்

தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label வாழ்த்து மடல்கள். Show all posts
Showing posts with label வாழ்த்து மடல்கள். Show all posts
27.10.19
14.1.18
வாத்தியாரின் பொங்கல் வாழ்த்து!
15.8.17
வாத்தியாரின் வாழ்த்துக்கள்!
வாத்தியாரின் வாழ்த்துக்கள்!
நம் வகுப்பறையின் மாணவக் கண்மணிகள், வலைப்பதிவு நண்பர்கள், மற்றும் நம் வகுப்பறைக்கு வந்து செல்லும் நண்பர்கள் என்று அனைவருக்கும் வாத்தியாரின் சுதந்திரதின வாழ்த்துக்கள்!
சுதந்திர தினத்தை முன்னிட்டு நமது வகுப்பறைக்கு இன்று விடுமுறை!
அன்புடன்
வாத்தியார்
======================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
26.1.17
விடுமுறை நாளில் என்ன செய்வீர்கள்?
விடுமுறை நாளில் என்ன செய்வீர்கள்?
இன்று குடியரசு தினம்.
தேசிய விடுமுறை நாள்.
வகுப்பறைக்கும் இன்று விடுமுறை நாள்!
விடுமுறை நாளில் என்ன செய்வீர்களோ - அதைச் செய்யும்படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.
நாளை வகுப்பறை நடைபெறும்.
அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்!
அன்புடன்
வாத்தியார்
===========================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
இன்று குடியரசு தினம்.
தேசிய விடுமுறை நாள்.
வகுப்பறைக்கும் இன்று விடுமுறை நாள்!
விடுமுறை நாளில் என்ன செய்வீர்களோ - அதைச் செய்யும்படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.
நாளை வகுப்பறை நடைபெறும்.
அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்!
அன்புடன்
வாத்தியார்
===========================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
லேபிள்கள்:
classroom,
அறிவிப்புக்கள்,
வாழ்த்து மடல்கள்
1.1.17
வாத்தியாரின் வாழ்த்துக்கள்!
வாத்தியாரின் வாழ்த்துக்கள்!
வகுப்பறைக் கண்மணிகள் அனைவருக்கும் மற்றும் பதிவுலக நண்பர்களுக்கும், சக பதிவர்களுக்கும் வாத்தியாரின் இனிய
புத்தாண்டு வாழ்த்துக்கள்!
வரும் ஆண்டில் உங்கள் அனைவருக்கும் எல்லா நலன்களும் கிடைத்து நீங்கள் மகிழ்ச்சியுடன் இருக்க பழநி ஆண்டவரைப் பிரார்த்திக்கின்றேன்!
அன்புடன்
வகுப்பறை வாத்தியார்
============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
வகுப்பறைக் கண்மணிகள் அனைவருக்கும் மற்றும் பதிவுலக நண்பர்களுக்கும், சக பதிவர்களுக்கும் வாத்தியாரின் இனிய
புத்தாண்டு வாழ்த்துக்கள்!
வரும் ஆண்டில் உங்கள் அனைவருக்கும் எல்லா நலன்களும் கிடைத்து நீங்கள் மகிழ்ச்சியுடன் இருக்க பழநி ஆண்டவரைப் பிரார்த்திக்கின்றேன்!
அன்புடன்
வகுப்பறை வாத்தியார்
============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
லேபிள்கள்:
classroom,
அறிவிப்புக்கள்,
வாழ்த்து மடல்கள்
14.4.16
வாத்தியாரின் வாழ்த்துக்கள்!
21.10.15
வாத்தியாரின் வாழ்த்துக்கள்!
லேபிள்கள்:
classroom,
அறிவிப்புக்கள்,
வாழ்த்து மடல்கள்
15.8.15
வாத்தியாரின் வாழ்த்துக்கள்!
14.4.15
வாத்தியாரின் வாழ்த்துக்கள்!
வாத்தியாரின் வாழ்த்துக்கள்!
இன்று புதிய தமிழாண்டு பிறக்கின்றது. ஸ்ரீமன்மத வருடம் சித்திரைத் திங்கள் முதல் நாள். வகுப்பறைக் கண்மணிகள் அனைவருக்கும் மற்றும் நண்பர்களுக்கும் சக பதிவர்களுக்கும் வாத்தியாரின் புத்தாண்டு வாழ்த்துக்கள். வரும் வருடம் மகிழ்ச்சியையும் செல்வத்தையும் உங்கள் அனைவருக்கும் அள்ளித் தரட்டும். பழநிஅப்பனைப் பிரார்த்திக்கின்றேன்.
அன்புடன்
வாத்தியார்
===================================================
வளர்க நலமுடன்!
15.1.15
வாத்தியாரின் வாழ்த்துக்கள்!
1.1.15
வாத்தியாரின் வாழ்த்துக்கள்!!!!!
வாத்தியாரின் வாழ்த்துக்கள்!!!!!
வகுப்பறைக் கண்மணீகள், வலைப்பதிவு நண்பர்கள் அனைவருக்கும் வாத்தியாரின் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
அன்புடன்
வாத்தியார்
=================================================
பயனுள்ள 33 சிறப்பு குறிப்புகள், புத்தாண்டில் பயன்படுத்துங்கள்
1. பேசும்முன் கேளுங்கள், எழுதும்
முன் யோசியுங்கள், செலவழிக்கும்
முன் சம்பாதியுங்கள்.
2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய
ஆதாயமாக இருக்கும்.
3. யாரிடம்
கற்கிறோமோ அவரே ஆசிரியர்.
கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர்
அல்லர்.
4. நான் மாறும்போது தானும்
மாறியும், நான்
தலையசைக்கும் போது தானும்
தலையசைக்கும்
நண்பன் எனக்குத் தேவையில்லை.
அதற்கு என்
நிழலே போதும்
5. நோயை விட அச்சமே அதிகம்
கொல்லும்!
6. நான் குறித்த நேரத்திற்குக்
கால்மணி நேரம்
முன்பே சென்று விடுவது வழக்கம்.
அதுதான் என்னை மனிதனாக்கியது.
7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக்
குறிப்பிடுவதற்கே, சிறிய
தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்
8. வாழ்க்கை என்பது குறைவான
தகவல்களை வைத்து கொண்டு சரியான
முடிவுக்கு வரும் ஒரு கலை.
9. சமையல் சரியாக அமையாவிடில்
ஒருநாள் இழப்பு.
அறுவடை சிறக்காவிடில்
ஒரு ஆண்டு இழப்பு. திருமணம்
பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.
10. முழுமையான மனிதர்கள் இருவர்.
ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. மற்றவர்
இறந்துவிட்டார்.
11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில்
புறப்படுங்கள்.
12. எல்லோரையும் நேசிப்பது சிரமம்.
ஆனால்
பழகிக்கொள்ளுங்கள்.
13. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும்
நல்லவனாவாய்.
14. காரணமே இல்லாமல் கோபம்
தோன்றுவதில்லை.
ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை.
15. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட,
இவர்கள்
இப்படித்தான் என எண்ணிக்கொள்.
16. யார் சொல்வது சரி என்பதல்ல,
எது சரி என்பதே முக்கியம்.
17. ஆயிரம் முறை சிந்தியுங்கள்.
ஒருமுறை முடிவெடுங்கள்.
18. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது
. பயத்தை உதறி எறிவோம்.
19. நியாயத்தின்
பொருட்டு வெளிப்படையாக
ஒரு வருடன் விவாதிப்பது சிறப்பாகும்.
20. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன்
பொய் பாதி உலகத்தை வலம்
வந்துவிடும்.
21. உண்மை தனியாகச் செல்லும்.
பொய்க்குத்தான்
துணை வேண்டும்.
22. வாழ்வதும் வாழவிடுவதும்
நமது வாழ்க்கைத் தத்துவங்களாக
ஆக்கிக்கொள்வோம்.
23. தன்னை ஒருவராலும் ஏமாற்ற
முடியாது எனச்
செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக
ஏமாந்து போகிறான்.
24. உலகம் ஒரு நாடக
மேடை ஒவ்வொருவரும் தம்
பங்கை நடிக்கிறார்கள்.
25. செய்வதற்கு எப்போதும்
வேலை இருக்கவேண்டும்.
அப்போது தான் முன்னேற முடியும்.
26. அன்பையும் ஆற்றலையும்
இடைவிடாது வெளிப்படுத்துகிறவர்
ஆர்வத்துடன் பணிபுரிவர்.
27. வெற்றி பெற்ற பின்
தன்னை அடக்கி வைத்து கொள்பவன்,
இரண்டாம் முறையும் வென்ற
மனிதனாவான்.
28. தோல்வி ஏற்படுவது அடுத்த
செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான
எச்சரிக்கை.
29. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த
வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம்
பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க
வேண்டும்.
30. கடினமான செயலின் சரியான
பெயர்தான் சாதனை. சாதனையின்
தவறான விளக்கம் தான் கடினம்.
31. ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப
வேண்டுமென்றால் எதையும்
சந்தேகத்துடனே துவக்க வேண்டும்.
32. சரியானது எது என்று தெரிந்த
பிறகும் அதைச் செய்யாமல்
இருப்பதற்குப் பெயர் தான் கோழைத்தனம்.
33. ஒரு துளி பேனா மை பத்து இலட்சம்
பேரைச் சிந்திக்க வைக்கிறது.
சொந்த சரக்கல்ல. WhatsApp ல் படித்தது
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++=========
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
லேபிள்கள்:
classroom,
உதிரிப்பூக்கள்,
வாழ்த்து மடல்கள்
21.10.14
வாத்தியாரின் தீபாவளி வாழ்த்துக்கள்!
வாத்தியாரின் தீபாவளி வாழ்த்துக்கள்!
மாணவக் கண்மணிகளுக்கும், வகுப்பறைக்கு வந்து செல்லும் நண்பர்களுக்கும், சக வலைப்பதிவாளர்கள் அனைவருக்கும் வாத்தியாரின் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
அன்புடன்,
வாத்தியார்
---------------------------------------------------------
Diwali also known as Deepavali and the "festival of lights", is an ancient
Hindu festival celebrated in autumn every year. The festival spiritually
signifies the victory of light over darkness, knowledge over ignorance,
good over evil, and hope over despair. The festival preparations and rituals
typically extend over a five day period, but the main festival night of Diwali
coincides with the darkest, new moon night of the Hindu Lunisolar month
Kartika. In the Gregorian calendar, Diwali night falls between mid-October
and mid-November.
The Origin of Diwali
Diwali can be traced back to ancient India, when it was probably an important
harvest festival . However, there are various legends pointing to the origin of
Diwali or 'Deepawali.' Some believe it to be the celebration of the marriage of
Lakshmi with Lord Vishnu. Whereas in Bengal the festival is dedicated to the
worship of Mother Kali , the dark goddess of strength. Lord Ganesha , the
elephant-headed God, the symbol of auspiciousness and wisdom, is also
worshiped in most Hindu homes on this day. In Jainism , Deepawali has an
added significance to the great event of Lord Mahavira attaining the eternal
bliss of nirvana . Diwali also commemorates the return of Lord Rama along
with Sita and Lakshman from his fourteen year long exile and vanquishing the
demon-king Ravana. In joyous celebration of the return of their king, the
people of Ayodhya, the Capital of Rama, illuminated the kingdom with earthen
diyas (oil lamps) and burst crackers.
Source: wikipedia
-------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
லேபிள்கள்:
classroom,
வாழ்த்து மடல்கள்
15.8.14
சுதந்திரதின வாழ்த்துக்கள்!
சுதந்திரதின வாழ்த்துக்கள்!
மாணவக் கண்மணிகள், வாசகர்கள், பதிவிற்கு எப்போதாவது வந்து செல்கின்றவர்கள், சக பதிவர்கள் அனைவருக்கும் வாத்தியாரின் சுதந்திரதின வாழத்துக்கள்!
சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று வகுப்பறைக்கு விடுமுறை!
அன்புடன்,
வாத்தியார்
==========================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
19.5.14
சாதித்துக் காட்டிய மோடியும் லேடியும்!
சாதித்துக் காட்டிய மோடியும் லேடியும்!
நமது தேசத்தின் புதிய பிரதமராகப் பதவி ஏற்க உள்ள திரு.நரேந்திர மோடி அவர்களை நமது வகுப்பறையின் சார்பில் வரவேற்போம். இறையருளுடன் அவர் நல்லாட்சி புரிந்து, நாட்டு மக்கள் விரும்பும் மாற்றங்களைக் கொண்டு வரட்டும்!
வாழ்க மோடி! வளர்க மோடி!
-------------------------------------------------------------
தனித்து நின்று அமோக வெற்றிபெற்ற நமது தமிழக முதல்வர் செல்வி.ஜெயலலிதா அவர்களையும் நமது வகுப்பறையின் சார்பில் வாழ்த்துவோம்!
தமிழகத்தில் என்ன நடந்தது? ஒரு பார்வை:
அன்புடன்,
வாத்தியார்
-------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
நமது தேசத்தின் புதிய பிரதமராகப் பதவி ஏற்க உள்ள திரு.நரேந்திர மோடி அவர்களை நமது வகுப்பறையின் சார்பில் வரவேற்போம். இறையருளுடன் அவர் நல்லாட்சி புரிந்து, நாட்டு மக்கள் விரும்பும் மாற்றங்களைக் கொண்டு வரட்டும்!
வாழ்க மோடி! வளர்க மோடி!
-------------------------------------------------------------
தனித்து நின்று அமோக வெற்றிபெற்ற நமது தமிழக முதல்வர் செல்வி.ஜெயலலிதா அவர்களையும் நமது வகுப்பறையின் சார்பில் வாழ்த்துவோம்!
தமிழகத்தில் என்ன நடந்தது? ஒரு பார்வை:
அன்புடன்,
வாத்தியார்
-------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
14.4.14
Astrology: புத்தாண்டே வருக: பொன், பொருளைத் தருக!
பொன்மகளே வருக! பொருள் அனைத்தும் தருக!
Astrology: புத்தாண்டே வருக: பொன், பொருளைத் தருக!
விஜய வருடத்திற்கு டாடா சொல்லிவிட்டு, புதிதாய்ப் பிறக்கும் ’ஜய’ வருடத்தை வரவேற்போம். பெயரிலேயே ஜெயம் இருப்பதைப் பாருங்கள்
14.4.14 திங்கட்கிழமையன்று காலை 6:06 மணிக்கு, சுக்லபட்ச சதுர்த்தசி திதி, அஸ்த நட்சத்திரம் 2-ம் பாதத்தில் (கன்னிராசி) மேஷ லக்கினம் முதல் பாதத்தில் ஆண்டு பிறக்கிறது. மற்ற விபரங்கள் எல்லாம், அதாவது பஞ்சாங்கச் சொற்களுடன் கூடிய மற்ற விபரங்கள் எல்லாம் அவசியம் இல்லை!
நான் இரண்டு தினங்களுக்கு முன்பாகவே பஞ்சாங்கத்தை வாங்கி விட்டேன். நமக்கெல்லாம் அது அவசியம்.
வாசன் திருக்கணித பஞ்சாங்கம் - விலை ரூ.86:00
கிரக கோள்சாரங்கள், சுப முகூர்த்த நாட்கள், விரத நாட்கள், அமாவாசை, பெளர்ணமி திதிகள், திருத்தலங்களில் நடைபெறவுள்ள உற்சவங்கள் போன்றவற்றை முன்கூட்டியே தெரிந்து கொள்ளலாம். தசா புத்தி அட்டவணை, திருமணப் பொருத்தங்கள். நட்சத்திரத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கான பெயர் வைப்பதற்கு உரிய முதல் எழுத்துக்கள் போன்றவைகள் கொடுக்கப்பட்டிருக்கும்.
ராகுகாலம், எமகண்டம், சுப ஹோரைகள் போன்ற பல விபரங்களையும் தெரிந்து கொள்ளலாம். வெளிநாட்டில் இருப்பவர்கள் சிரமப்பட வேண்டாம். இந்த செய்திகள் எல்லாம் இணையத்தில் கிடைக்கும். என்ன தேடிப் பிடிக்க வேண்டும். அவ்வளவுதான்.
இடைக்காடர் என்னும் சித்தர் அருளிய வருட பலன்கள் கொடுக்கப்பெற்றிருக்கும்.
இடைக்காடருக்கு ஞான உபதேசம் செய்தருளியவர் போக முனிவர். ஆமாம் பழநி மலையில் உள்ள முருகப்பெருமானை வடிவமைத்தவர் இந்த போக முனிவர்தான். தான் முக்தியடையும் முன்பாக தனது சீடர்களுக்குக் கட்டளை இட்டுச் சென்றவர் அவர். புலிப்பாணியைப் பழநியிலும், இடைக்காடரைத் திருவண்ணாமலையிலும் இருந்து இறைத் தொண்டாற்றி வரும்படி போக முனிவர் கட்டளையிட்டார் என்று சொல்வார்கள். அதற்குச் சான்றாக இடைக்காடரின் சமாதி திருவண்ணாமலையில் அமைந்துள்ளது. எண்ணற்ற நூல்களை இடைக்காடர் இயற்றியுள்ளார்.
சரி இந்தப் புது வருடத்திற்கான பலனைப் பற்றி என்ன சொல்லியிருக்கிறார் இடைக்காடர்?
பாடலைப் பாருங்கள்:
ஜய வருடந் தன்னிலே செப்புலங்களெல்லாம்
வியனுறவே பைங்கூழ்விளையும் - நயமுடனே
அஃகம்பெரிதா மளவில் சுகம்பெருகும்
வெஃகுவார் மன்னரிறைமேல்
இந்த ஆண்டில் தானியங்கள் அதிகமாக விளையுமாம்.விளையும். மக்கள் மனத்தில் மகிழ்ச்சி உண்டாகுமாம். நாட்டை ஆள்வோர் சாதி, மதபேதம் பார்க்காமல் எல்லோரையும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டுவார்களாம். ராஜாவாகவும், மந்திரியாகவும் சந்திரனே வருவதால் மத்தியில் ஆட்சி மாற்றம் உண்டாகுமாம். இந்த ஜய வருடம் அனைத்து தரப்பினருக்கும் நிம்மதியையும், வளர்ச்சியையும் பெற்றுத் தருவதாக அமையுமாம். இப்போதைக்கு இது போதும்!
அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
லேபிள்கள்:
Astrology,
classroom,
Lessons 791 - 800,
வாழ்த்து மடல்கள்
14.2.14
Astrology: Valentine Day வால் அறுந்த தினம்!
Astrology: Valentine Day வால் அறுந்த தினம்!
இன்று காதலர்கள் தினம் என்று வெள்ளைக்காரன் பட்டியலிட்டுருக் கிறான்.பர்கர்ரிலிருந்து ப்ளாக் அண்ட் ஒயிட் விஸ்கிவரை நமக்கு வெள்ளைக்காரன் சரக்கு எல்லாம் பிடித்துப்போய்விட்டதால், காதலர் தினத்தையும் நாம் கொண்டாடுவோம்.
ஒளிந்தும் ஒளியாமலும், வீட்டிற்குத் தெரிந்தும் தெரியாமலும், காதலித்துக் கொண்டிருப்பவர்கள் அனைவருக்கும் ஒரு வாழ்த்தைச் சொல்லி வைப்போம்.வாழ்க அவர்களுடைய காதல்! வளர்க அவர்களுடைய நேசம்!
நான் காதலுக்கு எதிரியல்ல! எங்கள் காலத்தில் காதலிக்கவெல்லாம் வாய்ப்பில்லாமல் போய்விட்டது. ஒரு பெண்ணைத் தொடர்ந்தால், கடிதம் கொடுத்தால் செருப்படி விழுகும். சடங்கான பெண்களை எல்லாம் தனியாக வெளியே அனுப்பமாட்டார்கள். வீட்டிற்கு யாராவது புதியவர்கள் வந்தால் அவர்கள், ஓடிப் போய் கதவிற்குப் பின்னால் நின்று கொண்டு விடுவார்கள். நடந்து போகின்ற அல்லது கடந்து போகின்ற அழகான பெண்களை அல்லது லட்சணமான பெண்களைத் தூரத்தில் இருந்து ரசிக்கலாம். அது மட்டுமே அக்காலத்தில் சாத்தியம்.
புத்தகங்களிலும், சினிமாக்களிலும் பார்த்த காதல்கள்தான் அந்தக் காலத்து இளைஞர்களுக்குத் தெரிந்த காதல்!
பொன்னியின் செல்வன் தொடரைப் படித்த காலத்தில் வந்தியத்தேவன் குந்தவை நாச்சியாரின் மேல் கொண்ட காதலையும், வானதி, அருள்மொழி வர்மனின் மீது கொண்ட காதலையும் ரசித்து உருகாதவர்கள் இருந்திருக்க முடியாது.
சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திடக்கண்டேனே
செவ்வானம் கடலினிலே கலந்திடக்கண்டேனே
மொட்டு விரிந்த மலரினிலே வண்டு மூழ்கிடக்கண்டேனே
மூங்கிலிலே காற்று வந்து மோதிடக்கண்டேனே- நான்
(சிட்டுக்குருவி)
பறந்து செல்ல நினைத்துவிட்டேன் எனக்கும் சிறகில்லையே
பருவம் வந்தேன் தழுவ வந்தேன் பறவைத் துணை இல்லையே
எடுத்துச்சொல்ல மனம் இருந்தும் வார்த்தை வரவில்லையே
என்னென்னவோ நினைவிருந்தும் நாணம் விடவில்லையே ஹோய்..
(சிட்டுக்குருவி)
ஒரு பொழுது மலராக கொடியில் இருந்தேனா
ஒரு தடவை தேன் கொடுத்து மடியில் விழுந்தேனா
இரவினிலே நிலவினிலே என்னை மறந்தேனா
இளமைத் தரும் சுகத்தினிலே கன்னம் சிவந்தேனா.... ஹோய்..
(சிட்டுக்குருவி)
என்ற பாடலுக்கு செல்வி (அந்தக் காலத்தில் அவர் செல்விதானே) சரோஜாதேவி அபிநயம் பிடித்து முகபாவம் காட்டும்போது மயங்காதவர்களே இருந்திருக்க முடியாது.
காதலைக் கனவில் மட்டும் கண்டவர்களுக்கெல்லாம், கவியரசர் கண்ணதாசன் அவர்களின் பாடல்கள்தான் அந்தக்காலத்து வேதம்!
-----------------------------------------------------------------------
சரி சொல்ல வந்த செய்திக்கு வருகிறேன்.
இப்போது நிலைமை தலை கீழாகி விட்டது. பொறியியற் படிப்பு, பன்னாட்டு நிறுவனங்களில் வேலை, கைகொள்ளாத அளவிற்கு ஊதியம் என்று எல்லாம் மாறிவிட்டது. இந்த மாற்றங்கள் எல்லாம் கடந்த 20 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ளது.
Education
Employment
Economical Freedom
Exposure
Ego
என்று ஐந்து ஈ’க்கள் கிடைத்த வேகத்தில் எல்லாம் அசுர வளர்ச்சி அடைந்திருக்கிறது. காதலையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்.SMS, Face Book, email களில் காதல் செட்டாகிவிடுகிறது. Flipcartல் onlineமூலம் சாமான்கள் வாங்குவதைப் போல காதலை வாங்கிவிடலாம்.
காதலிக்கும்போது தெரியாத பல விஷயங்கள் கல்யாணத்திற்குப் பிறகுதான் தெரியவரும். பையன் தம்’ அடிப்பான், தண்ணியடிப்பான் என்பதெல்லாம் திருமணத்திற்குப் பிறகுதான் தெரியவரும். அதுபோல அம்மணி காலை எட்டு மணிவரைக்கும் எழுந்திருக்க மாட்டாள், சமைக்க மாட்டாள். வீட்டை ஒதுங்க வைக்க மாட்டாள். போட்டது போட்டபடி கிடக்கும். வேளா வேளைக்கு சரவணபவனே கதி என்பதெல்லாம் திருமணத்திற்குப் பிறகுதான் தெரியவரும்.
தெரிந்தால் என்ன ஆகும்? சகித்துக்கொண்டு போனால், குடும்ப வாழ்க்கை தொடரும். இல்லை என்றால் குடும்ப நீதி மன்றங்களில் முடிவிற்கு வந்துவிடும். இருவரில் ஒருவர் சங்கை எடுத்து ஊதிவிடுவார்கள்.
---------------------------------------------------------------------
அடிப்படையாக ஒரு விஷயத்தைத் தெரிந்து கொள்ளுங்கள்.
காலதேவன் ஒரு மோசமான Match Maker. அவன் ரயிலையும் தண்டவாளத்தையும்தான் ஜோடி சேர்ப்பான். ரயிலுக்கு ரயிலைச் சேர்க்கமாட்டான். வண்டி எப்படி ஓடும்? கணவன் ரயில் என்றால், மனைவி தண்டவாளமாக இருப்பாள். மனைவி ரயில் என்றால், அவளுக்கு வரும் கணவன் தண்டவாளமாக இருப்பான்.
Made for each other சேர்க்கை எல்லாம் சினிமாவில் மட்டும்தான். வாழ்க்கையில் இருக்காது. லட்சத்தில் ஒரு ஜோடி இருக்கலாம். அது அவர்கள் வாங்கி வந்த வரம். Exemption will not become example
---------------------------------------------------------------------
எனக்கு வரும் மின்னஞ்சல்களில் பல, காதல் சம்பந்தப்பட்டதாக இருக்கும். எங்கள் காதல் நிறைவேறுமா என்று பார்த்துச் சொல்லுங்கள்...ப்ளீஸ் என்ற வேண்டுகோளில் துவங்கும். மூன்று வருடங்களாக காதலிப்பதாகக் கால விளக்கமும் இருக்கும்.
காதல் என்று வந்துவிட்ட பிறகு, எதற்காக ஜாதகத்தைப் பார்க்கிறீர்கள்? பொருத்தம் இல்லை என்றால் காதலை விட்டு ஒழிக்க முடியுமா? முடியாதல்லவா? ஆகவே நடப்பது நடக்கட்டும். காதலிப்பவரையே மணந்து கொள்ளுங்கள் என்று பதில் எழுதி அனுப்பிவிடுவேன்
----------------------------------------------------------------------
சரி காதல் யாருக்கு வெற்றி அடையும்?
ஜாதகத்தில் 5ஆம் வீடும் 7ஆம் வீடும் வலிமையாகவும் ஒன்றுக்கொண்டு தொடர்பு உடையதாகவும் இருப்பவர்களுக்கு காதல் வெற்றியடையும்.
லக்கினம், எழாம் வீடு, இரண்டாம் வீடு ஆகையவை வலிமையாகவும் ஒன்றுக்கொண்டு தொடர்பு உடையதாகவும் இருப்பவர்களுக்கு நல்ல மனைவி, நல்ல குடும்ப வாழ்க்கை அமையும்.
காதல் ஆகட்டும் அல்லது பேற்றோர் பார்த்துச் செய்து வைத்த திருமணம் ஆகட்டும் எல்லாம் விதிப்படிதான் அமையும். வருபவள் தேவதையாகவும் இருக்கலாம் அல்லது பிசாசாகவும் இருக்கலாம். அதுபோல வருபவன் அன்பான நாயகனாகவும் இருக்கலாம் அல்லது அடாவடியான வில்லனாகவும் இருக்கலாம். எல்லாம் ஜாதகத்தில் விதித்தபடிதான் இருக்கும்.
அது பற்றி விபரமாக இன்னொரு நாள் நீண்ட கட்டுரையொன்றைக் கேலக்சி வகுப்பில் எழுதுகிறேன். (இங்கே எழுதினால் திருட்டுப்போகும் சாமிகளா!)
-------------------------------------------------------------------
பதினெட்டு வயதில் எல்லோருக்குமே வால் உண்டாகிவிடும். உலகமே என் காலடியில் என்ற நினைப்போடு கன்னியவள் இருப்பாள். உலகத்தையே என் கையில் சுழல வைக்கிறேன் என்ற மதமதப்போடு காளையவன் இருப்பான்.
காதல் வயப்படும்போது அந்த வால் அறுந்துபோகும்.
உனக்கென நான் எனக்கென நீ
நினைக்கையில் இனிக்குதே
உடலென நான் உயிரென நீ
இருப்பது பிடிக்குதே
உனதுயிராய் எனதுயிரும்
உலவிட துடிக்குதே
தனியொரு நான் தனியொரு நீ
நினைக்கவும் வலிக்குதே
அருகினில் வா அருகினில் வா
இரு விழி வலிக்குதே
உனதுயிரில் எனதுயிரை
ஊற்றிட துடிக்குதே
இதுபோன்று உருகி உருகிக் காதலிக்கும்போது இருவருடைய வால்களும் அதுவாகவே அறுந்து விழுந்துவிடும்! அல்லது காதல் சூட்டில் கரைந்து போய்விடும். அல்லது தேய்ந்து போய்விடும். எப்படி வேண்டுமென்றாலும் வைத்துக்கொள்ளுங்கள். அதனால் காதலர்கள் தினத்தை - வால்ண்டைன் டே என்பதை வாலறுந்த தினம் என்றும் சொல்லலாம். தவறொன்றுமில்லை:-)))))
அன்புடன்
வாத்தியார்
----------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
லேபிள்கள்:
Astrology,
classroom,
L 761 - 770,
Lessons 761 - 770,
வாழ்த்து மடல்கள்
14.1.14
பொங்கல் வாழ்த்துக்கள்!
பொங்கல் வாழ்த்துக்கள்!
வகுப்பறைக் கண்மணிகள், நண்பர்கள் மற்றும் சக பதிவாளர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள். அனைவரின் இல்லத்திலும் மகிழ்ச்சி பொங்கட்டும்!
பொங்கலை முன்னிட்டு நாளை வகுப்பறைக்கு விடுமுறை! அடுத்த வகுப்பு 16.1.2014 வியாழக்கிழமையன்று நடைபெறும்.
நேற்று வெளியான புதிருக்கான விடை:
அறிஞர் அண்ணா அவர்களின் ஜாதகம் அது. சரியான விடையை எழுதிய அத்தனை பேர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி!
15.9.1909ஆம் தேதியன்று காலை 9:30 மணிக்கு, காஞ்சிபுரத்தில் பிறந்தவர் அவர்!
அன்புடன்
வாத்தியார்
----------------------------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
25.12.13
கவியரசர் கண்ணதாசன் எழுதிய கிறிஸ்துமஸ் வாழ்த்துப் பாடல்!
கவியரசர் கண்ணதாசன் எழுதிய கிறிஸ்துமஸ் வாழ்த்துப் பாடல்!
இன்று கிறிஸ்துமஸ் தினம். அனைவருக்கும் வகுப்பறையின் சார்பில் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!
அன்புடன்
வாத்தியார்
நேற்றைய புதிருக்கான விடை கீழே கொடுக்கப்பெற்றுள்ளது.
================================================================================
கவியரசர் கண்ணதாசன் எழுதிய கிரிஸ்துமஸ் வாழ்த்துப் பாடலும் அதன் ஒளி மற்றும் ஒலி வடிவமும் கீழே உள்ளன
சத்திய முத்திரை கட்டளை இட்டது
நாயகன் ஏசுவின் வேதம்
கட்டளை கேட்டவர் தொட்டிலில் கேட்பது
பாலகன் ஏசுவின் கீதம்
அது வானகம் பாடிய முதல் பாடல்
அந்த தூதுவன் ஆடிய விளையாடல்
மெர்ரி மெர்ரி கிறிஸ்மஸ்.....
ஹாப்பி ஹாப்பி கிறிஸ்மஸ்...........
மேய்ப்பன் அவனே ஆடுகள் எல்லாம் குழந்தை வடிவத்தில்
மன்னவன் அவனே மக்கள் எல்லாம் மழலை வடிவத்தில்
மேய்ப்பன் அவனே ஆடுகள் எல்லாம் குழந்தை வடிவத்தில்
மன்னவன் அவனே மக்கள் எல்லாம் மழலை வடிவத்தில்
மேரி மாதா தேவ மகனைக் காப்பது எப்படியோ
தேவ தூதன் நம்மை எல்லாம் காப்பது அப்படியே
அவன் ஆலயம் என்பது நம் வீடு
மணி ஓசையைக் கேட்பது பண்பாடு
அவன் ஆலயம் என்பது நம் வீடு
மணி ஓசையைக் கேட்பது பண்பாடு
மெர்ரி மெர்ரி கிறிஸ்மஸ்.....
ஹாப்பி ஹாப்பி கிறிஸ்மஸ்...........
வாசல் கதவை மூடுவதில்லை தேவன் அரசாங்கம்
வந்தவர் வீட்டில் கண்டவர் நெஞ்சில் கருணை ஒளி பொங்கும்
வாசல் கதவை மூடுவதில்லை தேவன் அரசாங்கம்
வந்தவர் வீட்டில் கண்டவர் நெஞ்சில் கருணை ஒளி பொங்கும்
ராஜ வாழ்வு தேவ அமைதி தோன்றும் சிலுவையிலே
நாளை அல்ல தேவனின் கருணை இன்றே கைகளிலே
ராஜ வாழ்வு தேவ அமைதி தோன்றும் சிலுவையிலே
நாளை அல்ல தேவனின் கருணை இன்றே கைகளிலே
அவன் பாதங்கள் கண்டால் அன்போடு
ஒரு பாவமும் நம்மை அணுகாது
மெர்ரி மெர்ரி கிறிஸ்மஸ்.....
ஹாப்பி ஹாப்பி கிறிஸ்மஸ்...........
சத்திய முத்திரை கட்டளை இட்டது
நாயகன் ஏசுவின் வேதம்
கட்டளை கேட்டவர் தொட்டிலில் கேட்பது
பாலகன் ஏசுவின் கீதம்
---------------------------------------------------------
திரைப்படம்: கண்ணே பாப்பா (1969)
பாடியவர்: P.சுசீலா
பாடலாக்கம்: கவியரசர் கண்ணதாசன்
---------------------------------------------------------
Our sincere thanks to the person who uploaded this video clipping in the net
=========================================================
நேற்றையப் புதிரில் உள்ள ஜாதகத்தின் சொந்தக்காரர் பிரபலமான தமிழ் நடிகை. அவரின் படத்தைக் கீழே கொடுத்துள்ளேன். ஸ்க்ரோல் டவுன்
செய்து பாருங்கள்.
அவ்வாறு பிரபலங்களின் ஜாதகங்களை உங்களுக்கு இதுவரை கொடுத்ததில்லை. சிலர் ஜாதகரின் தேதியை வைத்து விக்கி மஹாராஜாவின்
துணையை நாடுவீர்கள் என்பது தெரியும். அதனால் கொடுப்பதில்லை. ஆனாலும் உங்களுடன் சற்று ஓடிப் பிடித்து விளையாடுவோம் என்றுதான் ஒரு பிரபலமான நடிகையின் ஜாதகத்தை வேண்டுமென்றே நேற்றுக் கொடுத்தேன்.கொடுத்ததுடன் நில்லாமல் அடித்துத் துவைக்க முடியாத மென்மையான ஜாதகம் என்ற க்ளூவையும் கொடுத்தேன்.
விக்கியின் துணையில்லாமல் எத்தனை பேர்கள் எழுதுகிறீர்கள் என்று பார்க்க விரும்பினேன். பின்னூட்டம் அனுப்பிய 29 பேர்களின் 25 பேர்கள் விக்கியின் துணையை நாடாமல் எழுதியுள்ளார்கள். அவர்களுக்கு எனது விசேடமான பாராட்டுக்கள்.
சரியான விடை:
1.ஜாதகி மிகவும் அழகான தோற்றம் உடையவர்
2.இதுவரை திருமணம் ஆகாதவர்.
இந்த 2 விடைகளை எழுதினால் போதும் என்று எதிர்பார்த்துத்தான் ஜாதகத்தை வலையில் ஏற்றினேன்.
திருவாளர்கள் கிருபானந்தன், ரவிச்சந்திரன்,ல.ரகுபதிதோழர், பாண்டியன், ஆகிய 4 பேர்களும் எதிர்பார்த்த சரியான விடையை எழுதியுள்ளார்கள்.
அவர்களுக்கு நன்றி உரித்தாகுக.
கலந்து கொண்டவர்களில் 4 பேர்கள். விக்கி மஹராஜாவின் உதவியை நாடிச் சென்றதை ஒப்புக்கொண்டுள்ளார்கள். அவர்களின் நேர்மைக்குப்
பாராட்டுக்கள். பலர் 2 எதிர்ப்பார்ப்பில் ஒன்றை சரியாக எழுதியுள்ளார்கள். அவர்களுக்கும் பாராட்டுக்கள். அத்துடன் கலந்து கொண்ட
அனைவருக்கும் எனது மனமுவந்த பாராட்டுக்கள்.
ஜாதகி கேரளாவைச் சேர்ந்த திருவல்லா என்னும் ஊரில் 8 நவம்பர் 1984 ஆம் தேதி இரவு 9.55ற்குப் பிறந்தவர். அவரின் படம் கீழே உள்ளது.
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
========================================================1.11.13
வாத்தியாரின் தீபாவளி வாழ்த்துக்கள்!!!
13.10.13
வாத்தியாரின் விஜயதசமி வாழ்த்துக்கள்!
வாத்தியாரின் விஜயதசமி வாழ்த்துக்கள்!
நவராத்திரி பண்டிகையின் இறுதி நாளான இன்று ஆயுத பூஜையையும், நாளை விஜயதசமியையும் கொண்டாடி மகிழும் நம் வகுப்பறைக் கண்மணிகள் அனைவருக்கும் வாத்தியாரின் உளம் கனிந்த ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துகள்.
ஆதிபராசக்தியை துர்க்கை வடிவில் வழிபட்டால் வீரம் பிறக்கும், லட்சுமி வடிவில் வழிபட்டால் செல்வம் பெருகும், சரஸ்வதி வடிவில் வழிபட்டால் கல்வி சிறந்தோங்கும் என்பது நம்பிக்கை. அதன் அடிப்படையில் நவராத்திரியின் முதல் மூன்று நாட்களில் துர்க்கா தேவியையும், அடுத்த மூன்று நாட்களில் லட்சுமி தேவியையும், கடைசி மூன்று நாட்களில் சரஸ்வதி தேவியையும் நாம் வழிபடுகின்றோம். செய்யும் தொழிலே தெய்வம், உழைப்பின் மூலமே வெற்றி என்பதையும் உணர்த்தும் வகையில் ஆயுத பூஜையையும், விஜயதசமியையும் கொண்டாடும் நீங்கள் அனைவரும் அனைத்து வளமும் பெற்று நல்வாழ்வு வாழ எனது உளமார்ந்த நல்வாழ்த்துகள்.
நாளை வகுப்பறைக்கு விடுமுறை! அடுத்த வகுப்பு 15.10.2013 செவ்வாய்க் கிழமையன்று நடைபெறும்!
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
நவராத்திரி பண்டிகையின் இறுதி நாளான இன்று ஆயுத பூஜையையும், நாளை விஜயதசமியையும் கொண்டாடி மகிழும் நம் வகுப்பறைக் கண்மணிகள் அனைவருக்கும் வாத்தியாரின் உளம் கனிந்த ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துகள்.
ஆதிபராசக்தியை துர்க்கை வடிவில் வழிபட்டால் வீரம் பிறக்கும், லட்சுமி வடிவில் வழிபட்டால் செல்வம் பெருகும், சரஸ்வதி வடிவில் வழிபட்டால் கல்வி சிறந்தோங்கும் என்பது நம்பிக்கை. அதன் அடிப்படையில் நவராத்திரியின் முதல் மூன்று நாட்களில் துர்க்கா தேவியையும், அடுத்த மூன்று நாட்களில் லட்சுமி தேவியையும், கடைசி மூன்று நாட்களில் சரஸ்வதி தேவியையும் நாம் வழிபடுகின்றோம். செய்யும் தொழிலே தெய்வம், உழைப்பின் மூலமே வெற்றி என்பதையும் உணர்த்தும் வகையில் ஆயுத பூஜையையும், விஜயதசமியையும் கொண்டாடும் நீங்கள் அனைவரும் அனைத்து வளமும் பெற்று நல்வாழ்வு வாழ எனது உளமார்ந்த நல்வாழ்த்துகள்.
நாளை வகுப்பறைக்கு விடுமுறை! அடுத்த வகுப்பு 15.10.2013 செவ்வாய்க் கிழமையன்று நடைபெறும்!
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
லேபிள்கள்:
classroom,
அறிவிப்புக்கள்,
வாழ்த்து மடல்கள்
Subscribe to:
Posts (Atom)