மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

13.10.13

வாத்தியாரின் விஜயதசமி வாழ்த்துக்கள்!

வாத்தியாரின் விஜயதசமி வாழ்த்துக்கள்!

நவராத்திரி பண்டிகையின் இறுதி நாளான இன்று ஆயுத பூஜையையும், நாளை விஜயதசமியையும் கொண்டாடி மகிழும் நம் வகுப்பறைக் கண்மணிகள் அனைவருக்கும் வாத்தியாரின் உளம் கனிந்த ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துகள்.

ஆதிபராசக்தியை துர்க்கை வடிவில் வழிபட்டால் வீரம் பிறக்கும், லட்சுமி வடிவில் வழிபட்டால் செல்வம் பெருகும், சரஸ்வதி வடிவில் வழிபட்டால் கல்வி சிறந்தோங்கும் என்பது நம்பிக்கை. அதன் அடிப்படையில் நவராத்திரியின் முதல் மூன்று நாட்களில் துர்க்கா தேவியையும், அடுத்த மூன்று நாட்களில் லட்சுமி தேவியையும், கடைசி மூன்று நாட்களில் சரஸ்வதி தேவியையும் நாம் வழிபடுகின்றோம். செய்யும் தொழிலே தெய்வம்,  உழைப்பின் மூலமே வெற்றி என்பதையும் உணர்த்தும் வகையில் ஆயுத பூஜையையும், விஜயதசமியையும் கொண்டாடும் நீங்கள் அனைவரும் அனைத்து வளமும் பெற்று நல்வாழ்வு வாழ எனது உளமார்ந்த நல்வாழ்த்துகள்.

நாளை வகுப்பறைக்கு விடுமுறை! அடுத்த வகுப்பு 15.10.2013 செவ்வாய்க் கிழமையன்று நடைபெறும்!
அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

13 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

விஜயதசமி நல்வாழ்த்துக்கள் ஐயா...

சே. குமார் said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் விஜயதசமி வாழ்த்துக்கள்.

துரை செல்வராஜூ said...

அனைவருக்கும் - இனிய சரஸ்வதி பூஜை,விஜயதசமி நல்வாழ்த்துகள்!..

வாழ்க.. வளர்க!..

kohilam said...

Vanakkam Aiya...

Vazhthukkalukku nandri...

Ungalukkum, matrum anaivarukum en manamarndha Vazhthukkalai samarpikiren Aiya.

Nandri.

வேப்பிலை said...

மூன்று மூன்றாய் பிரித்து சொன்ன
முத்தான செய்திக்கும்

வாழ்த்துக்களுக்கும்
வணக்கமும் நன்றிகளும்..

மீண்டும் அடுத்த வாரம்
மறுபடியும் சந்திப்போம்

kmr.krishnan said...

வகுப்பறை வாத்தியார் ஐயா அவர்களுக்கும் சக மாணவர்களுக்கும் தசரா விழா வாழ்த்துக்கள்.

இலால்குடியில் கூத்தனூரைப் போலவே சரஸ்வதிக்கு தனிச் சன்னதி உள்ளது.
அருகிலேயே துர்கைக்கும் மகாலட்சுமிக்கும் தனிச் சன்னதி உள்ளது.

இலால்குடியின் தமிழ்ப்பெயர் திருத்தவத்துறை.திரு அதாவது இலக்குமி தவம் செய்த ஸ்தலம்.அம்பாளின் பெயர் ஸ்ரீமதி. பெருந்திருப் பிராட்டி.அதாவது பார்வதி
இங்கே இலக்குமியின் அம்சமாக இருக்கிறார்.

இன்று சரஸ்வதி அம்பாளுக்கு விசேஷ அபிஷேகமும் ஆராதனையும் நடந்தது.
அதற்கு புஷ்ப கைங்கர்யம் செய்து நம் வகுப்பறை ஐயாவுக்கும் மாணவ‌ர்களுக்கும்
வித்யா பலனை அருள மனமாற வேண்டிக் கொண்டோம்.

நன்றி ஐயா!
kmrk1949@gmail.com

Chandrasekaran Suryanarayana said...

அனைவருக்கும் - இனிய சரஸ்வதி பூஜை,விஜயதசமி நல்வாழ்த்துகள்!..

Ak Ananth said...

வாத்தியாருக்கும் சக மாணவர்களுக்கும் எனது சரஸ்வதி/ஆயுத பூஜை மற்றும் விஜய தசமி வாழ்த்துகள். வாத்தியாருக்காகவும் மாணவர்களுக்காகவும் வேண்டிக் கொண்ட KMRK அவர்களுக்கு நன்றி.

Subramaniam Yogarasa said...

வாழ்த்துக்கு நன்றி,வாத்தியாரைய்யா!

C Jeevanantham said...

அனைவருக்கும் - சரஸ்வதி பூஜை,விஜயதசமி நல்வாழ்த்துகள்!..

Kalai Rajan said...

அனைவருக்கும் - இனிய சரஸ்வதி பூஜை,விஜயதசமி நல்வாழ்த்துகள்!

Subbiah Veerappan said...

பின்னூட்டமிட்ட
1.திரு.திண்டுக்கல் தனபாலன்
2.திரு.சே.குமார்
3.திரு.துரை செல்வராஜூ
4.திருமதி.கோகிலம்
5.வேப்பிலை சுவாமி
6.திரு.kmr.கிருஷ்ணன்
7.திரு.சந்திரசேகரன் சூர்யநாராயணா
8.திரு.Ak.ஆனந்த்
9.திரு.சுப்பிரமணியம் யோகராஜா
10.திரு.சி.ஜீவானந்தம்
11. திரு. Kalai Rajan
ஆகியோருக்கு நன்றி உரித்தாகுக!

அன்புடன்
வாத்தியார்

Covai Ravee R said...

வணக்கம் ஐயா. தொடர் பண்டிகைகள் வாழ்த்துக்கள்.