மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

17.10.13

Astrology: புதிர் எண்.17ற்கான பதில்: திரைப்பட நாயகி அஞ்சலீனா ஜோலி’’யா அவர்?

 

Astrology: புதிர் எண்.17ற்கான பதில்: திரைப்பட நாயகி அஞ்சலீனா ஜோலி’’யா அவர்?

ஆமாம்! ஆமாம்! ஆமாம்!

Hollywood Actress Angelina Jolie தான் அவர்!!!!
---------------------------------
Angelina Jolie
June 4, 1975 (age 38)
Los Angeles, California, U.S.
Citizenship: United States, Cambodia, Sarajevo (honorary)
Occupation: Actress, film director, screenwriter
Years active: 1982; 1991–present
Spouse(s): 1.Jonny Lee Miller (m. 1996–d. 1999)
              2.Billy Bob Thornton (m. 2000–d. 2003)

Partner(s): Brad Pitt (2005–present)
Children     6 (Most of them are adopted)
-------------------
மேலதிக விபரத்திற்கு:
http://en.wikipedia.org/wiki/Angelina_Jolie

++++++++++++++++++++++++++++++++++++++++++++
நேற்றையப் பதிவில் கேட்கப்பெற்ற கேள்விகள்:

இது ஒரு பெண்ணின் ஜாதகம். இந்தப் பெண்ணின் லக்கினம், இரண்டாம் வீடு, ஐந்தாம் வீடு, ஏழாம் வீடு ஆகிய பாவங்களை அலசி உங்கள் கணிப்பை எழுதுங்கள் என்று கேட்டிருந்தேன்.

சரியான பதில்கள்:
1.  ஜாதகி மிகவும் அழகானவர். புகழ் பெற்றவர்
2. கையில் அபரிதமான பணப்புழக்கம் உள்ளவர்
3. திருமணமானவர். குடும்ப வாழ்க்கையில் பிரச்சினைகள் உள்ளது. விவாகம் ரத்தில் முடிந்துவிட்டது.
4. ஜாதகிக்குக் குழந்தை உள்ளது.
------------------------------------------
ஜாதகத்தைப் பாருங்கள்.


1
கடக லக்கின ஜாதகி. லக்கினாதிபதி சந்திரன், மிகச் சிறந்த திரிகோண ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் ஐக்கியமாகி உள்ளார். உடன் அந்த வீட்டில் ஆட்சி பலத்துடன் உள்ள குரு பகவான். மேலும் பூர்வ புண்ணியாதிபதி செவ்வாயும் அதே வீட்டில். கேட்கவும் வேண்டுமா? சந்திர மங்கள யோகமும், குருச் சந்திர யோகமும் அமைந்து ஒன்பதாம் வீட்டை மேன்மைப் படுத்தின. பெண்களுக்கு ஒன்பதாம் வீடு (பாக்கிய ஸ்தானம்) முக்கியமானது. ஒன்பதாம் வீடு சிறப்பாக அமைந்ததற்கு உதாரண ஜாதகம் இது.

2.
லக்கினத்துடன் சந்திரன் சம்பந்தப்படும்போது, அழகான தோற்றத்தை அது கொடுக்கும். இங்கே லக்கினாதிபதியே சந்திரனாகி, ஒன்பதில் அமர்ந்ததால் ஜாதகிக்கு அழகான தோற்றத்தைக் கொடுத்தார். அத்துடன் சுபக் கிரகமான சுக்கிரனும் லக்கினத்தில் வந்து அமர்ந்து ஜாதகியின் அழகிற்கு அணி சேர்த்தார். திரைப்பட நாயகி என்றால் சொல்லவும் வேண்டுமா? அதே அமைப்புக்கள் அவருக்குப் பெரும் புகழையும் தேடிக் கொடுத்தது.

3.
சூரியனும், புதனும் ஒன்று சேர்ந்து (புதாதித்யா யோகம்) ஜாதகிக்கு பன்முகத் திறமைகளைக் கொடுத்தன. ஜாதகி திரைப்பட நாயகி, இயக்குனர், கதாசிரியை என்று பல துறைகளிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

4.
இரண்டாம் வீட்டில் மாந்தி இருப்பது உசிதமல்ல. அந்த வீட்டின் செயல்பாடுகள் 3ல் ஏதாவது ஒன்றைக் கெடுப்பார் என்பது விதி. அவர் ஜாதகியின் குடும்ப வாழ்க்கையைக் கெடுத்தார். இரண்டு முறைகள் திருமணம் செய்து கொண்டும், நல்ல குடும்ப வாழ்க்கை அமையவில்லை. இரண்டு விவாகங்களுமே ரத்தில் முடிந்தது.

இரண்டாம் வீட்டு அதிபதி 11ல் அமர்ந்ததாலும், தனகாரகன் குரு லக்கினாதிபதியுடன் சேர்ந்ததாலும், ஜாதகிக்கு எந்தவித பணப்பிரச்சினையும் இல்லை.

5.
ஐந்தாம் வீட்டில் ராகு இருந்தாலும், அந்த வீட்டிற்கு உரிய செவ்வாய், அந்த வீட்டிற்கு ஐந்தில் (9ல்) அமர்ந்ததாலும், குழந்தை பாக்கியத்திற்கு காரகன் அவருடன் இருப்பதாலும் ஜாதகிக்குக் குழந்தை பிறந்தது. அந்த பாக்கியத்திற்குக் குறை இல்லாமல் போனது.

6.
ஏழாம் வீட்டைத் தன் பார்வையில் வைத்திருக்கும் சுக்கிரன் அவருக்குத் திருமணத்தை நடத்தி வைத்தான். ஆனால் ஏழாம் வீட்டதிபதி சனி 12ல் (விரையத்தில்) அமர்ந்ததால், திருமணங்கள் நிலைக்கவில்லை. ரத்தில் முடிந்தன.

7.
22 வயதில் (சரியான நேரத்தில்) ஆரம்பித்த சுக்கிர திசை, ஜாதகிக்கு எல்லா நன்மைகளையும் வாரி வழங்கியது. சுக்கிரன் 4 and 11ஆம் வீடுகளுக்கு அதிபதி, அத்துடன் அவர் லக்கினத்தில் அமர்ந்திருப்பதைக் கவனியுங்கள்!

8.
ஜாதகிக்கு, ஜாதகத்தில் பல யோகங்கள் உள்ளன. மொத்தம் 27 யோகங்கள் உள்ளன. அவற்றுள் ஒன்பதாம் வீட்டால் கிடைத்த யோகங்கள்தான் மிகவும் சிறப்பானவை. ஆகவே மற்ற யோகங்களைப் பட்டியலிடவில்லை!

 9.
கடக லக்கினத்திற்கு செவ்வாய் யோககாரகன். அவன் லக்கினாதிபதியுடன் சேர்ந்திருப்பது மிகவும் நன்மையானதாகும். ஜாதகியின் கனவையெல்லாம் நனவாக்கிக் கொடுத்தான் அவன்!
 +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இந்த ஜாதகியின் பிறப்பு விவரங்களைக் கொடுத்து வகுப்பறையில் பதிவிடச் சொன்னவர். திருவாளர் kaven alias Gowri Shankar, Mumbai. அவருக்கு நம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டுள்ளார்கள். அனைவருக்கும் பாராட்டுக்கள். ஆணித்தரமாக சரியான சொற்பிரயோகத்துடன் பதிலை ஒரு சிலரே எழுதியுள்ளனர். இருந்தாலும் சரியான பதிலைத் தொட்டு எழுதியவர்களின் பெயர்களைக் கீழே கொடுத்துள்ளேன்:

1.Dallas Kannan
2.AK.Anandh
3.M.Srinivasa Rajulu
4.Kaven
5.Dinesh
6.Thiru Mahesh
7.S.Bagavathi
8.Murali
9.Janani Murugesan
10.Palani Shanmugam
11.Chandrasekaran
----------------------
4ற்கு மூன்றை மட்டும் சரியாக எழுதியவர்கள்:
1.G.Murali Krishna
2.Kmr.Krishnan
3.Redfort
4.Kohilam
5.Swaravani
6.Susila Kandaswamy
7.Ravichandran
8.Dhanalakshmi
9.Pathi Raghu
10.AMG
11.Chandrasekaran Suryanarayanan
---------------------------

பங்கு கொண்ட அனைவருக்கும் பாராட்டுக்கள்

”2ல் மாந்தி, 5ல் உச்சம் பெற்ற இராகு. இராகு கடக இலக்கினாதிபதி சந்திரனுக்கு பகைவர். அதனால் குடும்ப ஸ்தானமும் புத்திர ஸ்தானமும் பாதிக்கப்பட்டிருக்க கூடும்” என்று எழுதிய ஒருவர், அடுத்த பத்தியில் "குடும்ப காரகன் மற்றும் புத்திர காரகனான குருபகவான் பாக்கிய ஸ்தானத்தில் இலக்கினாதிபதி சந்திரனோடு இருப்பதால் பிரச்சனைகளை எதிர் கொள்ளும் திறன் ஜாதகிக்கு இருக்கும். ஜாதகிக்கு குழந்தை பாக்கியம் உண்டு. திருமணம் நடந்து சிறிது காலம் கழித்தே குழந்தை பிறந்திருக்கும்." என்று எழுதியுள்ளார்.

இப்படி இரண்டு நிலைப்பாடுகளை எழுதாமல், ஆணித்தரமாக ஒன்றை மட்டுமே எழுத வேண்டும். எழுதினால்தான் நல்லது. கணிப்பும் சரியாக இருக்கும்!

ஜாதகியின் அழகைப் பற்றி சிலர் எழுதவில்லை. விவாகம் ரத்தானதைப் பற்றி சிலர் எழுதவில்லை. அதை எல்லாம் எழுதினால்தானே கணிப்பு முழுமை பெறும்!

அன்புடன்,
வாத்தியார்

+++++++++++++++++++++++++++++=
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

39 comments:

kohilam said...

Vanakkam Aiya...

Muthu Muthiah said...

வணக்கம் ஐயா....
அருமையான அலசல்.

Ak Ananth said...

இந்த பெண் இந்தியர் என்று நினைத்து எனது பதிலை எழுதியிருந்தேன். பெண் இந்தியர் அல்ல என்றோ, மேல் நாட்டைச் சேர்ந்தவர் என்ற ஒரு க்ளு கொடுத்திருக்கலாம். இரண்டு முறை விவாகரத்தாகி 3வது கணவருடன் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறார் என்பதேல்லாம் மேல் நாட்டுக் கலாச்சாரத்தில் உள்ளது. நம் கலாச்சாரத்தில் இல்லாதது. இது போன்ற ஜாதக அமைப்புள்ள இந்தியப் பெண் விவாகரத்து வரை போகாமல் சகித்துக் கொண்டு வாழ்பவராகக் கூட இருக்கலாம். (ஒரே வீட்டில் இருந்துக் கொண்டு மனதளவில் பிரிந்து வாழ்பவர்களைப் பற்றி சொல்கிறேன்).

லக்கினத்தில் சுக்கிரன் இருப்பதும், சந்திரன் லக்கினாதிபதியாகி குருவுடன் இருப்பதும் ஜாதகர் அழகானவர் என்பதற்கான அறிகுறி. இதை நான் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. Oversight என்று சொல்லலாம். அடுத்த முறை பார்ப்போம்.

seetha said...

வணக்கம் ஐயா,
சந்திர மங்கள யோகமும், குரு சந்திர யோகமும் ஒரு சேர பெற்று 12ஆம் வீட்டில் அமர்வது நல்ல பலனா, ஐயா?

Kaven said...

ஐயா, இந்த ஜாதகம் இந்தியாவில் பிறந்த பெண்ணுடையது அல்ல என்பதை ஜகந்நாத ஹோராவில் தசா இருப்பு மற்றும் லக்னம் வைத்து அறிந்து கொண்டு latitude longitude மாற்றி அமைத்து பலரும் ஜாதகி யார் என்று கண்டுபிடித்திருப்பார்கள் என்று நினைத்தேன். ஆனால் தங்களது வார்த்தை விளையாட்டு googly யால் everybody missed it. இந்த ஜாதகத்தை முன்பே பார்த்ததால் தான் என்னால் பதிலளிக்க முடிந்தது. நன்றி ஐயா.

manikandaprakash said...

Tharma karmathipathi yogam vula jathagam... (combination of 10th and 9 th lord)..

Anonymous said...

வணக்கம் !
சிறப்பான கேள்விகள் மூலம் எங்களுக்குப் பயிற்சி அளிப்பதற்கு என் நன்றிகள். இப்போது ஓரளவு அனுபவம் வந்து இருக்கிறது என்று தைரியமாகச் சொல்லலாம்.
லக்கினாதிபதி , யோககாரகன் , மற்றும் 9-ம் இடம் வலுத்து இருப்பதால் ஜாதகி பிரபலமானவர் என்று தான் நான் ஊகித்து இருந்தேன் .ஆனால் மேல்நாட்டவர் என்று நினைக்கவில்லை. கணினி பார்த்து
பிறந்த தேதி எல்லாம்கணிக்கவில்லை. அப்படியே கேட்டதற்கு மட்டும் எழுதியது தான்.
நல்ல அழகு என்று மனத்தில் நினைத்த நான் அதை எழுத்தில்சொல்லவில்லை.
இனிமேல் கவனமாக சொற்களைத் தேர்ந்து எடுப்பேன். நன்றி !
அனைவருக்கும் வாழ்த்துக்கள் !

ravichandran said...

Respected Sir,

Happy to participate in our classroom tests.

Thank you so much to give this opportunity to everybody.

With kind regards,
Ravichandran M.

janani murugesan said...

Respected Sir,
In a horoscope, we can find a person is a divorcee and he/she will get married again or not.But Sir, how we can find more than one marriage got failed in a horoscope...? For example,in angelina's horoscope which planet combo or placement indicates two failure of marriage...?

kmr.krishnan said...

நன்றி ஐயா!

வெளிநாட்டுக்காரர்களுக்கு அவ‌ர்களூடைய கலாச்சாரப்படி விவாகரத்து என்பது திருமணவாழ்வில் தோல்வி ஆகாது. திருமணமே ஆகவில்லை என்றால்தான்
களத்திர தோஷம் என்று கொள்ள வேண்டும். இது தேவகோட்டைப் பெண்ணின் ஜாதகம், அதுவும் ஜாதகிக்கு வயது 38தான், தற்போது வாழ்ந்துவருகிறார் என்ற எண்ணத்தினால் சிறிது ஜாக்கிரதை உணர்வுடன் எழுதினேன்.மேலும் கொடுத்துள்ள
கட்டத்தைத்தவிர

ஜாதகிக்கு 9,10 அதிபர்கள் 9ல் சேர்ந்ததால் தர்ம சிந்தனை அதிகம் இருந்துள்ளது. அகதிகளுக்கான பணி,அனாதைகளை தத்து எடுப்பது போன்ற சேவைகளைச் செய்துள்ளார். சுற்றுச்சூழல் ஆதரவாளரும் கூட‌.

Sathyanarayanan said...

Dear Sir,
I loved this quiz a lot. But because of my work pressures, I couldn't participate at the right time. I learnt through her horoscope that, Sukra in 1st house gives more of an attractive personality aside from just beautiful. But only thing that I couldn't understand was I expected that she would be stout, because both lagna and rasi are watery rasis, with guru in 9th house Generally people call as Neer udambu, But in Angelina Jolie's case, It didn't apply. Not sure, why. The only answer that I could think of is Sukra in 1st place but just want to confirm with you if thats the real reason for her being slim.

I agree with Ananth sir, There is a lot of difference between a person born in India or Foreign with the same planetary alignments. Especially approach to Education, family life and career etc, even in the physique level as well.

Another thing, I am really wondering how some of the foreign people get so many yogas in the chart, what good deeds that they did in their past life. As soon as i saw the horoscope, so many yoga names popped up in my mind though I didn't know who the person is.
redfort said...

ஐயா இவரும் நான் பிறந்த வருடத்தில் தான் பிறந்திருக்கிறார். குரு,சனி,ராகு,கேது ஆகிய கிரகங்களின் அமர்வு ஒரே மாதிரியுள்ளது.
என்னை விட 4மாதம் இளையவர். எனவே இவர் ஜாதகம் நிறைய தேடல்களை உண்டாக்கியுள்ளது.
என் பள்ளி நண்பர்களில் 4 மாதம் இளையவர்களின் ஜாதகத்தை தேடும் அளவிற்க்கு தேடலை உண்டாக்கிய ஜாதகம்.
மேலும் சுக்கிரனுடைய 7ம் பார்வையாலும் 7 மதிபதி சனிக்கு கிடைக்கும் குரு பார்வையாலும் 9ம் வீட்டில் குவிந்துள்ள யோகங்கலளல்லாம் சேர்ந்து ஜாதகிக்கு நல்ல திருமண வாழ்க்கை அமைந்திருக்கும் என்கிற கணிப்பை தவிடு பொடியாக்கினவர் திருவாளர் மாந்தி அவர்களே.
அவரை குறைத்து மதிப்பிடக்கூடாது என்பதற்க்கு உதாரணமான ஜாதகம்.

redfort said...

மன்னிக்கவும் 7மதிபதிக்கு கிடைக்கும் குரு பார்வை என்பதை லக்னத்திற்கு கிடைக்கும் குருபார்வை என மாத்தி வாசிக்கவும்

redfort said...

மேலும் சர ராசியான கடக லக்னத்திற்கு பாதகாதிபதியாகவும் வரும் (11மதிபதி) சுக்கிரனே லக்னத்தில் இருந்து 7ம் வீட்டைப் பார்ப்பதாலும் திருமண வாழ்க்கையில் சிக்கல்களை உருவாக்குகிறான். இரட்டை வேட சுக்கிரன் என்று சொல்லலாம்.
களத்திர காரகனாக செயல்பட்டு திருமணத்தை நடத்திவைத்தவன் பாதகாதிபதியாக செயல் பட்டு விவாகரத்தையும் செய்திருக்கிறான்.

redfort said...

Iyya
I got one horoscope as near by this chart.

Same kadaka laknam
Simma rasi
Magam natchathiram.

My friend Dob. 12/July/1975,6.30AM, Bhavani(Erode district)

Anonymous said...

janani ,

i also had the same and no of other doubts in my mind. but the reason which i could find is when all the three factors are problamatic i.e marriage karaga in paapa kartari yoga , 7 th lord in 12 th house , & maandi in 2 nd place but strong 11 th house [ see the no of planets sitting in this especially the 2 nd lord ] which is responsible for 2 nd marriages might have added to the scene.
what causes her bold action i.e upper part removal ? any guesses ?

raghupathi lakshman said...

ல‌ ரகுபதி
மதிப்பிற்க்குரிய ஐயா வணக்கம்.
நேற்றைய புதிரில் கொடுக்கப்பட்ட ஜாதகத்தில் தசா புத்தி இருப்பை வைத்து ஜகன்னாத் ஹோராவில் ச‌ந்திரன் இருந்த‌ நட்ச்த்திரக்காலை சரி செய்ய முயன்ற போது லக்னம் வேறுபட்டது.அப்போது வெளிநாட்டில் பிறந்தவரோ என்ற சந்தே கம் வந்தது.எனினும் அதை பற்றி மேலும் ஆராயாமல் முடிந்த அளவு பலனை கணிக்க முயற்சி செய்தேன் ஐயா.
பலனை கணிக்கும் திறனிலும் சொற்பிரயோகம் செய்வதிலும் குறை
இருந்த போதிலும் தங்கள் ஆசியினால் நான் என்னை மேலும் மேம்படுத்திக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை வந்துள்ளது ஐயா.மேலும் மூன்று விடைகள்
சரியாக அமைத்ததில் எனக்கு மகிழ்ச்சியையும் கொடுத்துள்ளது ஐயா.
நன்றி.

சே. குமார் said...

அருமையான அலசல்...

thozhar pandian said...

வாத்தியார் ஐயா, தவறு தான். நான் எழுத வந்தது இராகு 5ம் இடத்தில இருப்பதால் அந்த இடம் பாதிக்க பட்டிருக்கலாம். ஆனால் அந்த வீட்டுக்காரர் செவ்வாய் திரிகோணத்தில் நல்ல நிலையில் சந்திரனுடனும் குருவுடனும் இருப்பதால் அந்த குறை நீங்கிவிட்டது. ஆனால் நீங்கள் கூறியபடி அது இரண்டு நிலைப்பாடுகளை குறிப்பிடுவது போல் தான் உள்ளது. அடுத்த முறை சரியாக எழுத முயற்சிக்கிறேன். மன்னிக்கவும். நன்றி ஐயா.

Subbiah Veerappan said...

////Blogger kohilam said...
Vanakkam Aiya.../////

உங்களின் வருகைப் பதிவிற்கும் காலை வணக்கத்திற்கும் நன்றி சகோதரி!

Subbiah Veerappan said...

/////Blogger Muthu Muthiah said...
வணக்கம் ஐயா....
அருமையான அலசல்.////

நல்லது. உங்களின் பாராட்டுடன் கூடிய பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

/////Blogger Ak Ananth said...
இந்த பெண் இந்தியர் என்று நினைத்து எனது பதிலை எழுதியிருந்தேன். பெண் இந்தியர் அல்ல என்றோ, மேல் நாட்டைச் சேர்ந்தவர் என்ற ஒரு க்ளு கொடுத்திருக்கலாம். இரண்டு முறை விவாகரத்தாகி 3வது கணவருடன் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறார் என்பதேல்லாம் மேல் நாட்டுக் கலாச்சாரத்தில் உள்ளது. நம் கலாச்சாரத்தில் இல்லாதது. இது போன்ற ஜாதக அமைப்புள்ள இந்தியப் பெண் விவாகரத்து வரை போகாமல் சகித்துக் கொண்டு வாழ்பவராகக் கூட இருக்கலாம். (ஒரே வீட்டில் இருந்துக் கொண்டு மனதளவில் பிரிந்து வாழ்பவர்களைப் பற்றி சொல்கிறேன்).
லக்கினத்தில் சுக்கிரன் இருப்பதும், சந்திரன் லக்கினாதிபதியாகி குருவுடன் இருப்பதும் ஜாதகர் அழகானவர் என்பதற்கான அறிகுறி. இதை நான் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. Oversight என்று சொல்லலாம். அடுத்த முறை பார்ப்போம்./////

இந்த ஓவர்சைட் பிர்ச்சினை பொதுவானதுதான். எனக்கும் ஏற்படுவதுண்டு. உங்களுடைய கருத்துப் பகிர்விற்கு நன்றி ஆனந்த்!

Subbiah Veerappan said...

//////Blogger seetha said...
வணக்கம் ஐயா,
சந்திர மங்கள யோகமும், குரு சந்திர யோகமும் ஒரு சேர பெற்று 12ஆம் வீட்டில் அமர்வது நல்ல பலனா, ஐயா?//////

இல்லை. இடம் கிடைக்காமல் சமயத்தில் நாம் செய்யும் Foot Board பயணம் போன்றது அது!

Subbiah Veerappan said...

////Blogger Kaven said...
ஐயா, இந்த ஜாதகம் இந்தியாவில் பிறந்த பெண்ணுடையது அல்ல என்பதை ஜகந்நாத ஹோராவில் தசா இருப்பு மற்றும் லக்னம் வைத்து அறிந்து கொண்டு latitude longitude மாற்றி அமைத்து பலரும் ஜாதகி யார் என்று கண்டுபிடித்திருப்பார்கள் என்று நினைத்தேன். ஆனால் தங்களது வார்த்தை விளையாட்டு googly யால் everybody missed it. இந்த ஜாதகத்தை முன்பே பார்த்ததால் தான் என்னால் பதிலளிக்க முடிந்தது. நன்றி ஐயா./////

இல்லை. நண்பர் தினேஷ் மட்டும் அந்த வேலையைச் செய்து இருந்தார். அதை நான் வெளியிடவில்லை!

Subbiah Veerappan said...

////Blogger manikandaprakash said...
Tharma karmathipathi yogam vula jathagam... (combination of 10th and 9 th lord)..//////

ஆமாம். அதைப் போல இன்னும் பல யோகங்கள் உள்ளன. நேரமின்மையால் அவற்றை நான் பட்டியல் இடவில்லை!

Subbiah Veerappan said...

//////Blogger ஸ்ரவாணி said...
வணக்கம் !
சிறப்பான கேள்விகள் மூலம் எங்களுக்குப் பயிற்சி அளிப்பதற்கு என் நன்றிகள். இப்போது ஓரளவு அனுபவம் வந்து இருக்கிறது என்று தைரியமாகச் சொல்லலாம்.
லக்கினாதிபதி , யோககாரகன் , மற்றும் 9-ம் இடம் வலுத்து இருப்பதால் ஜாதகி பிரபலமானவர் என்று தான் நான் ஊகித்து இருந்தேன் .ஆனால் மேல்நாட்டவர் என்று நினைக்கவில்லை. கணினி பார்த்து
பிறந்த தேதி எல்லாம்கணிக்கவில்லை. அப்படியே கேட்டதற்கு மட்டும் எழுதியது தான்.
நல்ல அழகு என்று மனத்தில் நினைத்த நான் அதை எழுத்தில்சொல்லவில்லை.
இனிமேல் கவனமாக சொற்களைத் தேர்ந்து எடுப்பேன். நன்றி !
அனைவருக்கும் வாழ்த்துக்கள் !///////

நல்லது. அப்படியே செய்யுங்கள் சகோதரி!

Subbiah Veerappan said...

////Blogger ravichandran said...
Respected Sir,
Happy to participate in our classroom tests.
Thank you so much to give this opportunity to everybody.
With kind regards,
Ravichandran M./////

நல்லது. தொடர்ந்து பங்கு கொள்ளுங்கள். ஒரு நூறு பேராவது கலந்து கொள்ள வேண்டும் என்பதுதான் என்னுடைய எதிர்பார்ப்பு!

Subbiah Veerappan said...

/////Blogger janani murugesan said...
Respected Sir,
In a horoscope, we can find a person is a divorcee and he/she will get married again or not.But Sir, how we can find more than one marriage got failed in a horoscope...? For example,in angelina's horoscope which planet combo or placement indicates two failure of marriage...?////

ஏழாம் அதிபதி 12ல் போய் உட்கார்ந்து கொண்டு, எந்த சுபக்கிரகத்தின் சேர்க்கை அல்லது பார்வையை பெறாத நிலையில் அந்தத் திருமணம் விரையத்தில்தான் முடியும். separation/divorceல் முடியும். மாந்தி 2ல் இருப்பது அதை உறுதி செய்யும். புனர்பூ தோஷம் இருந்தாலும் பிரிவில்தான் முடியும்.

Subbiah Veerappan said...

/////Blogger kmr.krishnan said...
நன்றி ஐயா!
வெளிநாட்டுக்காரர்களுக்கு அவ‌ர்களூடைய கலாச்சாரப்படி விவாகரத்து என்பது திருமணவாழ்வில் தோல்வி ஆகாது. திருமணமே ஆகவில்லை என்றால்தான்
களத்திர தோஷம் என்று கொள்ள வேண்டும். இது தேவகோட்டைப் பெண்ணின் ஜாதகம், அதுவும் ஜாதகிக்கு வயது 38தான், தற்போது வாழ்ந்துவருகிறார் என்ற எண்ணத்தினால் சிறிது ஜாக்கிரதை உணர்வுடன் எழுதினேன்.மேலும் கொடுத்துள்ள
கட்டத்தைத்தவிர
ஜாதகிக்கு 9,10 அதிபர்கள் 9ல் சேர்ந்ததால் தர்ம சிந்தனை அதிகம் இருந்துள்ளது. அகதிகளுக்கான பணி,அனாதைகளை தத்து எடுப்பது போன்ற சேவைகளைச் செய்துள்ளார். சுற்றுச்சூழல் ஆதரவாளரும் கூட‌.///////

இல்லை. கோவை, சென்னை என்று பல ஊர்க்காரர்களின் ஜாதகங்கள் என் சேகரிப்பில் உள்ளன! பின்னால் அவைகள் வரும்! நன்றி

Subbiah Veerappan said...

//////Blogger Sathyanarayanan said...
Dear Sir,
I loved this quiz a lot. But because of my work pressures, I couldn't participate at the right time. I learnt through her horoscope that, Sukra in 1st house gives more of an attractive personality aside from just beautiful. But only thing that I couldn't understand was I expected that she would be stout, because both lagna and rasi are watery rasis, with guru in 9th house Generally people call as Neer udambu, But in Angelina Jolie's case, It didn't apply. Not sure, why. The only answer that I could think of is Sukra in 1st place but just want to confirm with you if thats the real reason for her being slim.//////

உடல்காரகன் சூரியன் 11ல் இருப்பதால் நல்ல உடல்வாகைக் கொடுத்தான் என்று எடுத்துக்கொள்ளுங்கள்!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
////I agree with Ananth sir, There is a lot of difference between a person born in India or Foreign with the same planetary alignments. Especially approach to Education, family life and career etc, even in the physique level as well.
Another thing, I am really wondering how some of the foreign people get so many yogas in the chart, what good deeds that they did in their past life. As soon as i saw the horoscope, so many yoga names popped up in my mind though I didn't know who the person is./////

யோகங்கள் எல்லாம் பிறந்த நேரத்தையும், கர்மவினைப் பயன்களையும் வைத்துக் கிடைக்கும். முன் பிறவிகளில் அவர்கள் தர்மங்கள் செய்திருக்க மாட்டார்களா என்ன?

Subbiah Veerappan said...

////Blogger redfort said...
ஐயா இவரும் நான் பிறந்த வருடத்தில் தான் பிறந்திருக்கிறார். குரு,சனி,ராகு,கேது ஆகிய கிரகங்களின் அமர்வு ஒரே மாதிரியுள்ளது.
என்னை விட 4மாதம் இளையவர். எனவே இவர் ஜாதகம் நிறைய தேடல்களை உண்டாக்கியுள்ளது.
என் பள்ளி நண்பர்களில் 4 மாதம் இளையவர்களின் ஜாதகத்தை தேடும் அளவிற்க்கு தேடலை உண்டாக்கிய ஜாதகம்.
மேலும் சுக்கிரனுடைய 7ம் பார்வையாலும் 7 மதிபதி சனிக்கு கிடைக்கும் குரு பார்வையாலும் 9ம் வீட்டில் குவிந்துள்ள யோகங்கலளல்லாம் சேர்ந்து ஜாதகிக்கு நல்ல திருமண வாழ்க்கை அமைந்திருக்கும் என்கிற கணிப்பை தவிடு பொடியாக்கினவர் திருவாளர் மாந்தி அவர்களே.
அவரை குறைத்து மதிப்பிடக்கூடாது என்பதற்க்கு உதாரணமான ஜாதகம்.//////

உண்மைதான். உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி கோட்டையாரே!

Subbiah Veerappan said...

////Blogger redfort said...
மன்னிக்கவும் 7மதிபதிக்கு கிடைக்கும் குரு பார்வை என்பதை லக்னத்திற்கு கிடைக்கும் குருபார்வை என மாத்தி வாசிக்கவும்////

நல்லது. நன்றி!

Subbiah Veerappan said...

/////Blogger redfort said...
மேலும் சர ராசியான கடக லக்னத்திற்கு பாதகாதிபதியாகவும் வரும் (11மதிபதி) சுக்கிரனே லக்னத்தில் இருந்து 7ம் வீட்டைப் பார்ப்பதாலும் திருமண வாழ்க்கையில் சிக்கல்களை உருவாக்குகிறான். இரட்டை வேட சுக்கிரன் என்று சொல்லலாம்.
களத்திர காரகனாக செயல்பட்டு திருமணத்தை நடத்திவைத்தவன் பாதகாதிபதியாக செயல் பட்டு விவாகரத்தையும் செய்திருக்கிறான்.//////

12ல் அமர்ந்த ஏழாம் வீட்டுக்காரனின் பங்கும், இரண்டில் அமர்ந்த மாந்தியின் பங்கும்தான் அதி முக்கியமானது!

Subbiah Veerappan said...

/////Blogger redfort said...
Iyya
I got one horoscope as near by this chart.
Same kadaka laknam
Simma rasi
Magam natchathiram.
My friend Dob. 12/July/1975,6.30AM, Bhavani(Erode district)////

4.6.1975ற்கும் நீங்கள் குறிப்பிட்டுள்ள தேதிக்கும் 38 நாட்கள் வித்தியாசம் உள்ளதே. நட்சத்திரமும் மாறியுள்ளது. ஆகவே அதை ஒப்பிட முடியாது!

Subbiah Veerappan said...

/////Blogger ஸ்ரவாணி said...
janani ,
i also had the same and no of other doubts in my mind. but the reason which i could find is when all the three factors are problamatic i.e marriage karaga in paapa kartari yoga , 7 th lord in 12 th house , & maandi in 2 nd place but strong 11 th house [ see the no of planets sitting in this especially the 2 nd lord ] which is responsible for 2 nd marriages might have added to the scene.
what causes her bold action i.e upper part removal ? any guesses ?/////

ஒன்பதில் இருக்கும் செவ்வாய்தான் அதற்கான துணிச்சலைக் கொடுத்துள்ளது. கருப்பையில் புற்று நோய் வர வாய்ப்புள்ளது என்று அறிந்த அவர் அதைத் தவிர்க்கவே இதைச் செய்துள்ளார். அதற்கு அவருடைய புத்திசாலித்தனமும் காரணம்.

Subbiah Veerappan said...

////Blogger raghupathi lakshman said...
ல‌ ரகுபதி
மதிப்பிற்க்குரிய ஐயா வணக்கம்.
நேற்றைய புதிரில் கொடுக்கப்பட்ட ஜாதகத்தில் தசா புத்தி இருப்பை வைத்து ஜகன்னாத் ஹோராவில் ச‌ந்திரன் இருந்த‌ நட்சத்திரக்காலை சரி செய்ய முயன்ற போது லக்னம் வேறுபட்டது.அப்போது வெளிநாட்டில் பிறந்தவரோ என்ற சந்தேகம் வந்தது.எனினும் அதை பற்றி மேலும் ஆராயாமல் முடிந்த அளவு பலனை கணிக்க முயற்சி செய்தேன் ஐயா.
பலனை கணிக்கும் திறனிலும் சொற்பிரயோகம் செய்வதிலும் குறை
இருந்த போதிலும் தங்கள் ஆசியினால் நான் என்னை மேலும் மேம்படுத்திக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை வந்துள்ளது ஐயா.மேலும் மூன்று விடைகள்
சரியாக அமைத்ததில் எனக்கு மகிழ்ச்சியையும் கொடுத்துள்ளது ஐயா.
நன்றி.//////

நல்லது. உங்களின் மனம் திறந்த பின்னூட்டத்திற்கு நன்றி!

Subbiah Veerappan said...

////Blogger சே. குமார் said...
அருமையான அலசல்.../////

உங்களின் பாராட்டிற்கு நன்றி! பாராட்டுக்கள்தான் எழுதுபவருக்கு ஊக்க மருந்து! (Tonic)

Subbiah Veerappan said...

/////Blogger thozhar pandian said...
வாத்தியார் ஐயா, தவறு தான். நான் எழுத வந்தது இராகு 5ம் இடத்தில இருப்பதால் அந்த இடம் பாதிக்க பட்டிருக்கலாம். ஆனால் அந்த வீட்டுக்காரர் செவ்வாய் திரிகோணத்தில் நல்ல நிலையில் சந்திரனுடனும் குருவுடனும் இருப்பதால் அந்த குறை நீங்கிவிட்டது. ஆனால் நீங்கள் கூறியபடி அது இரண்டு நிலைப்பாடுகளை குறிப்பிடுவது போல் தான் உள்ளது. அடுத்த முறை சரியாக எழுத முயற்சிக்கிறேன். மன்னிக்கவும். நன்றி ஐயா.//////

நல்லது. அப்படியே செய்யுங்கள். மன்னிப்பெல்லாம் எதற்கு? அதெல்லாம் பெரிய வார்த்தை. நமக்குள் வேண்டாம்!

murali krishna g said...

5-ல் உச்சம் பெற்ற ராகு, 9-ல் ஆட்சி பெற்ற குருவை விட வலிமையாக இருந்திருக்கும் என்று தப்பு கணக்கு போட்டு விட்டேன் !. ஆனால், குருவுடன் லக்னாதிபதி சந்திரனும், யோககாரகன் செவ்வாயும் சேர்ந்து குழந்தை பாக்கியத்தை கொடுத்திருக்கிறான் !. என்னுடைய நணபர் ஒருவருக்கு 5-ல் ராகு. அவருக்கு குழந்தை இருக்கிறது. ஆனால் , அந்த குழந்தை பிறந்ததிலிருந்து அவரை பிரிந்து தான் இருக்கிறது. அவருக்கு குழந்தை பிறந்தததையே மறைத்து அவர் மனைவி வீட்டார் பிரச்னை செய்து திருமண வீடும் ஜாதகத்தில் சரியில்லாததால் விவகாரத்தில் முடிவடைந்து விட்டது. இவை அனைத்தும் அவரது அஷ்டம சனி காலத்தில் நிறைவேறியது. அவர் மீது பல வீண் பழிகள் வேறு !. நண்பர் நொந்து போய் வாழ்க்கையை வெறுத்து தனி மரமாக நின்று கடவுள் நம்பிக்கையையும் இழந்து விட்டார் !. 5-ம் வீட்டு ராகு அவ்வளவு வலிமையானது என்று கண்டு அறிந்தேன் !. வாத்தியாருக்கு அலசலுக்கு மிக்க நன்றி !. வரும் புதிர்களில் உஷாராக இருக்க முயற்சி செய்கிறேன் !.