மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

28.11.10

இசைந்தபடி பேசுவது எப்படி?

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

இன்றைய வாரமலரை, நமது வகுப்பறை மூத்த மாணவர் ஒருவரின் கட்டுரை அலங்கரிக்கிறது. படித்து மகிழுங்கள்!
----------------------------------------------------------------------------------------
இசைந்தபடி பேசுவது எப்படி?

அந்தக் காலத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடத்தில் ஒரு வாக்கியத்தினை மட்டும் கொடுத்து விட்டு அந்த வாக்கியம் ஒரு பாடல் அல்லது நாடகத்தில் எங்கே வருகிறது என்று விளக்கச் சொல்லி  கேள்வி  இருக்கும். அதற்கு  "இடம் சுட்டிப் பொருள் விளக்குக"என்று பெயர். ஆங்கிலத்தில் explain with reference to the context  என்று சொல்வார்கள்.

மகான்களின் பொன் மொழிகளைப் படிக்கும் போதும் இந்த ERC ஐப் பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் உபதேசங்கள் முன்னுக்குப் பின் முரணாக இருப்பதாகத் தோன்றும்.

மகான்களின் உபதேசங்கள் ஒரு குறிப்பிட்ட சீடருக்கு ஒரு குறிப்பிட்ட சமயத்தில் சொல்லியது. அதற்கு நேர்மாறான கருத்துக்கள் சொல்லப் பட்டிருந்தால் அது வேறு ஒரு சீடருக்கு வேறு ஒரு சமயத்தில் கூறப்பட்டதாக இருக்கும். இர‌ண்டையும் சேர்த்து வைத்துப் படிக்கும் போது மகான் குழ்ப்புவதாகப் பலரும் எண்ணுவார்கள்.

பரமஹம்சரின் வாழ்விலிருந்து  ஒரு சம்பவத்தைப் படித்தால்  இது புரியும்.

பரமஹம்சருக்கு இளைஞர்களாகப் பல சீடர்கள். ஒவ்வொருவரும் வெவ்வேறு பின்னணி கொண்டவர்கள். மாறுபாடான குண இயல்புகள் உடையவர்கள். அவர்களின் குண இயல்புகளில் உள்ள குறைகளைக் களைந்து 
சமநோக்கு உடைவர்களாக மாற்றம் செய்வதே ஒரு நல்ல குருவின் வேலை.

பரமஹம்சரின் ஒரு சீடர் யோகின். பிற்காலத்தில் இவர் யோகானந்தர் என்று பெயர் தாங்கித் துறவு பூண்டார். செல்வக் குடும்பத்தில் பிறந்து வளந்தவர். யாரிடமும் அதிர்ந்து பேச மாட்டார்.கரப்பான் பூச்சியைக் கூட அடிக்கத் தயங்குவார்.கூச்ச சுபாவமும், தயக்கமும், பயமும் கலந்த ஒருவிதமான‌ மன நிலை உடையவர்.

கல்கத்தாவில் படகில் பயணம் செய்து வெவ்வேறு இடங்களுக்கு மக்கள் செல்வார்கள்.அப்படி ஒருமுறை தட்சிணேஸ்வரத்திற்கு யோகின் படகில் வந்து கொண்டு இருந்தார். அந்தப் படகில் பயணம் செய்தவர்கள் பரமஹம்சரைப் பற்றி அவதூறாகப் பேசிக் கொண்டு  வந்தார்கள். அதையெல்லாம் கேட்டுக் கொண்டு வந்த யோகின் மனத்துக்குள்ளேயே மருகினார்.அவர்களுக்கு ம‌று மொழி கூற விரும்பினாலும் அவரால் பேச முடியாமல் துக்கம் நெஞ்சை அடைத்தது.பேசாமல் கரை இறங்கி பரமஹம்சரின் காலடியில் விழுந்து கதறினார்.நடந்தவற்றைக் கேட்டு அறிந்த பரமஹம்சர் யோகினிடம் கண்டிக்கும் தொனியில்,

"யோகின்!என்ன இப்படிக் கோழையாக இருக்கிறாய்.அவர்கள் உன் குருவை நிந்திக்கும் போது எப்படி அவர்களை சும்மா போக விட்டாய்? ஓங்கி ஒரு சத்தமாவது போட்டிருக்க வேண்டாமா? இப்படி பயங்கொள்ளியாக இருந்தால் ஆன்மீகத்திலோ, வாழ்விலோ எப்படி முன்னேறுவாய்?இப்போது வெட்டிப்பேச்சு பேசியவர்களை சும்மா விட்டு விட்டாய். வேறு யாரேனும் எனக்கு நேரடியாக‌வே தீங்கு செய்தால் கூட என்னைப் பாதுகாக்காமல் அழுது
கொண்டு  நிற்பாயா?"

யோகின் பதில் கூறமுடியாமல் தலை கவிழ்ந்தார்.

யோகினுக்கு ஏற்பட்டது போலவே படகு சம்பவம் வேறு ஒரு நாள் தாரக் (பின்னர் துரியானந்தர்?) என்ற தோழருக்கு ஏற்பட்டது. உடனே கடும் கோபமான தாரக், படகின் இரண்டு பக்கமும் காலால் உதைத்து கொண்டு,
"இப்போ என் குருவைப் பற்றி அவதூறு பேசுவதை நிறுத்தாவிட்டால் படகைக் கவிழ்த்து விடுவேன்" என்று கூப்பாடு போட்டாரம்.

நடந்ததைக் கேள்விப்பட்ட பரமஹம்சர் தாரக்கிடம், "என்னப்பா  இது! இவ்வளவு கோபப்படலாமா? என்னை அவர்கள் திட்டினால்தான் என்ன? நான் என்ன உயரம் குறைந்தா போய்விடுவேன்? எனக்கும் நீ செய்ய இருந்த‌  கொலைப்பழியில் பங்கு உண்டு என்று ஊர் பேசும்படி செய்து விடுவாய் போல உள்ளதே! வேண்டாம் அப்பா, எனக்காக யாரிடமும் சண்டை போடாதே!" என்றாராம்.

இந்த சம்பவம் கூறவரும் கருத்து என்ன? யாரிடம் பய உணர்வும் தயக்கமும் இருந்ததோ அந்த சீடருக்கு பயத்தைப்போக்கும் வண்ணம் குருதேவர் பேசினார். பயமே இல்லாமல் இருந்த சீடரை பிறருக்குத் தீங்கு இழைத்துவிடுவாரோ என்று எண்ணி நிதானத்துக்கு வரும்படி பேசினார். இதில் முர‌ண்பாடு ஏதும் இல்லை.

கண்ணபரமாத்வைப் பற்றி பாரதி கூறுவார்,  "ஆளுக்கு இசைந்தபடி பேசி..." என்பதாக.

குருதேவரும் கண்ண‌னைப் போலத்தானே!

யாருக்கு எது தேவையோ அதைக் கொடுத்து விடுவார்.

ஆக்கம்: கே.முத்துராமகிருஷ்ணன் (kmrk), தஞ்சாவூர்

 அந்தக்கால்ப் புகைப்படம்
kmrk மேடையில் பேசும்போது எடுக்கப்பெற்ற படம்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


வாழ்க வளமுடன்!

27.11.10

எங்கும் இலவசம்; எதிலும் இலவசம்!

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எங்கும் இலவசம்; எதிலும் இலவசம்!

"எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்னும் நிலை வேண்டும்
எங்கள்கவி பாரதி எண்ணப்படி வேண்டும்
தங்கத் தமிழ் தணிகைத் தமிழ் மதுரைத்தமிழ் வேண்டும்
தமிழே என் ஊனாக உயிராக வேண்டும்”


என்று எனது நண்பரும், பிரபல கவிஞருமான கவித்தென்றல் காசு.மணியன் அவர்கள் மேடைதோறும் முழங்குவார்.

அந்த வைர வரிகளைச் சற்று மாற்றி நான் இப்படிச் சொல்வேன்.

“எங்கும் இலவசம் எதிலும் இலவசம் என்னும் நிலை வேண்டும்
எங்கள் மக்கள் எண்ணப்படி வேண்டும்”


ஏன் அப்படிச் சொல்வேன்?

விவரம் பதிவில் உள்ளது. படித்துப்பாருங்கள்
______________________________________________
இலவசத்தைப் பற்றி ஒரு கதை உண்டு:

முற்காலத்தில், நாகபட்டினம் அருகே ஒரு நிலச்சுவான்தார் இருந்தார். அந்தப் பகுதியில் நூற்றுக் கணக்கான ஏக்கர் நிலங்கள் அவருக்குச் சொந்தமாக இருந்தன. ஜமீந்தார், மிராசுதார், பண்ணையார் என்று எப்படி  வேண்டு மென்றாலும் வைத்துக்கொள்ளுங்கள்.

ஆசாமி கஞ்சன். அவர் வாங்கிவந்த வரம் அப்படி! பண்ணையில் ஆயிரக் கணக்கான மூட்டைகள் நெல் விளைந்தலும், ஆசாமி பத்துக் காசுகள்கூட தர்மம் செய்ய மாட்டார். யாருக்கும் ஈய மாட்டார். கொடுக்க மாட்டார். மதியம் வைத்த சோற்றில் தயிரையும், தண்ணீரையும் ஊற்றி வைத்து, இரவில் சின்ன வெங்காயம் ப்ளஸ் மாங்காய் ஊறுகாய் ஆகையவற்றைத் தொட்டுக் கொண்டும் கடித்துக்கோண்டும் உண்பார்.

ஒரு சமயம் அவருடைய நண்பர் ஒருவர் வந்து சொன்னார்:

“பக்கத்து நாட்டிலிருந்து ஆயிரம் இளம் பெண்கள் கப்பலில் வருகிறார்கள்”

இவர் கேட்டார்: “எதற்கு?”

“அங்கே வறட்சியாம். வேலை தேடி வருகிறார்கள். சம்பளம் எதுவும் கொடுக்க வேண்டாம். இருக்க இடம்.உடுக்க உடை. உண்ண உனவு கொடுத்தால் போதும். சொல்லும் வேலையை செய்வார்கள். அத்துடன் எல்லா வேலைகளுக்கும் லாயக்கானவர்கள்”

எல்லா’ வேலைகளுக்கும் லாயக்கானவர்கள் என்று அவர் சொன்னதில் ஒரு உள் அர்த்தம் உள்ளது. அதை நான் பதிவில் எழுத முடியாது. உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன்.

மிராசுதார் உடனே கேட்டார்: “அவர்களை என்ன செய்யப் போகிறீர்கள்?”

“கேட்கிறவர்களுக்குக் கேட்கிறபடி கொடுக்கப் போகிறோம்”

“அப்படியென்றால் எங்கள் வீட்டிற்கு மூவரை எழுதிக்கொண்டு, ஏற்பாடு செய்”

“என்ன கணக்கு?”

“எனக்கு ஒன்று. என் அப்பனுக்கு ஒன்று. என் தம்பிக்கு ஒன்று!” என்று இவர் சொல்ல, வந்தவர் எழுதிக்கொண்டு போய்விட்டார்.

என்ன நடந்தது?

மீதிக்கதை மின்னஞ்சலில். 

மீதிக்கதை மட்டுமல்ல - கதைக்கான காரணமும் மின்னஞ்சலில்!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!

26.11.10

e class - தகாத பெண் உறவால் வந்த கேடு!


++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
e class - தகாத பெண் உறவால் வந்த கேடு!
துன்பங்களில் இரண்டு வகைகள் உண்டு. தாங்கக்கூடிய துன்பம், தாங்கமுடியாத துன்பம்..

தாங்க முடியாத, சமாளிக்க முடியாத துன்பங்கள் எல்லாம், கெட்ட சிநேகங்களாலும், கெட்ட நடவடிக்கைகளாலுமே  பெரும்பாலும் உண்டாகும். மனமில்லாத மனைவி, மனிதநேயம் இல்லாத சிநேகிதன், அடிப்படைப் பண்பில்லாத  கூட்டாளி அல்லது முதலாளி என்று அதை வகைப்படுத்திக்கொண்டே போகலாம்.

எல்லாவற்றிலும் மோசமானது தகாத பெண்ணுடன் கொள்ளும் தவறான உறவாகும்.

ஒரு பெண்ணுடன் முறையில்லாத சகவாசம் (உறவு) ஏற்பட்டால் அதில் வரும் கேடு, சாதாரணமாக வரும் கேட்டைவிட இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும்.

பணம், பெயர், புகழ் என்று எல்லாம் கெடுவதுடன், சமயத்தில் சட்ட சிக்கலுக்கும் ஆளாக நேரிடும்.

அது சம்பந்தமாக இப்போது ஒரு ஜாதகத்தை அலசுவோம்.

ஜாதகத்தை அலசினால் வரப்பொகும் அவலம் தெரியும். எப்படி அலசுவது? அதற்கான விதிமுறைகள் என்ன? ஒரு உதாரண ஜாதகத்தை வைத்துப் பார்ப்போம்!
+++++++++++++++++++++++++++++++++++++++
தலைப்பு: பெண்ணின் சகவாசத்தால் வந்த கேடு!
குறிச்சொல்: அலசல் பாடங்கள்
-----------------------------------------------------------------------------------
மேலே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்.

ஜாதகன் தன்னுடைய .........வது வயதில் தன்னுடன் வேலை பார்க்கும் பெண்ணுடன் தகாத உறைவை ஏற்படுத்திக் கொண்டார். தகாத உறவில் சுகத்தைத் தந்த அந்தப் பெண், தான் வேலை செய்த அலுவலகத்தில் தில்லு முல்லு செய்து பெரும் பணத்தைச் சுருட்டினார்.

வேலையை விட்டு விலகி ஓடுவதற்குள் வசமாகச் சிக்கிக் கொண்டார். கள்ள உறவால் சுகம் கொடுத்த  பெண்ணிற்கு கண்ணை மூடிக்கொண்டு உதவி செய்த குற்றத்திற்காக இந்த ஜாதகரும் வசமாகச் சிக்கிக்கொண்டார்.

சட்டச் சிக்கலுக்கும் ஆளாகி நீதிமன்றத்திற்கு அலைந்து திரிந்தார். இறுதியில் எல்லாவற்றையும் இழந்து  தெருவிற்கு வர நேர்ந்தது.
-----------------------------------------------------------------------------------
1. லக்கினாதிபதி________  ______________ஆம் அதிபதியுடன் சேர்ந்ததால், பெண்ணின் சகவாசத்தால் சீரழிய  நேர்ந்தது.

2. லக்கினாதிபதி ___________ஆம் அதிபதியுடன் சேர்ந்தால், சொந்த விவகாரங்கள் கோளாறில் முடியும்.  இவருடைய கேஸில் ____________சம்பந்தப்பட்டதால் அது (கோளாறுகள்) பெண் மூலம் அரங்கேறியது.

3. அத்துடன் ஜாதகனுக்குப் _________ அதிபதி __________ திசையும் நடைபெற்றதால், எல்லாவற்றையும் இழக்க  நேரிட்டது.
_____________________________________________
இதுபோன்ற அலசல் பாடங்கள் முழு ஜாதகம், மற்றும் விவரங்களுடன் இணைய வகுப்பில் தொடர்ந்து வர உள்ளது. (திருட்டுப்போகும் வாய்ப்பு உள்ளதால் இங்கே கொடுக்கவில்லை) பொறுத்திருங்கள்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++
பயணர் பெயர், கடவுச்சொல் வசதி, எழுத்துக்களைப் பிரதி எடுப்பதைத் தடுக்கும் வசதி, மற்றும் முழுக் காப்புரிமையுடன் நம் வகுப்பறைக்கென்று இணைய தளம் ஒன்று உருவாகிக் கொண்டிருக்கிறது.

தை மாதம் ஒரு நன்னாளில் இணையதளம் உங்கள் பயன்பாட்டிற்கு வரும்.

இங்கே வலைப் பதிவில் எழுதுவதும் தொடரும். இதில் என்ன எழுதுவது, அதில் என்ன எழுதுவது என்பதை நான் முடிவு செய்து வைத்திருக்கிறேன். இரண்டுமே வழக்கம்போல படிப்பவர்களுக்குப் பயனுள்ளதாகவும் சுவாரசியமாகவும் இருக்கும்.

உண்மையிலேயே ஜோதிடத்தின் மீது மதிப்பும், ஆர்வமும், கற்றுக் கொள்ள முனைப்பும் உள்ளவர்கள் மட்டும் இணையத்தில் சேரலாம். மற்றவர்கள். இதில் - அதாவது இந்த வலைப் பதிவில் எழுதுவதை மட்டும் படித்தால் போதும். இதுவரை எழுதியுள்ள பாடங்களைப் படித்தால் மட்டும் போதும். இணையதளம் பயன்பாட்டிற்கு வரும்வரை பாடங்கள் மின்னஞ்சல் மூலமாக நடத்தப்படும். மின்னஞ்சலில் எழுதப்படுபவைகள் அனைத்தும், இணையதளம் பயன்
பாட்டி ற்கு வந்தவுடன் அதில் சேர்க்கப்படும்.

மின்னஞ்சல் வகுப்பில் குறைந்த அளவு எண்ணிக்கையில் மட்டுமே மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். பழைய (சீனியர்) மாணவர்கள் மட்டுமே சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். குறுகிய காலம் மட்டுமே நடக்க இருப்பது என்றாலும், அதற்குச் சில விதிமுறைகள் உண்டு.

சேரவிருப்பமுள்ளவர்களும், விதிமுறைகளுக்குக் கட்டுப்படுகிறேன் என்பவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும். மற்ற அனைவரும் பொறுத்திருங்கள். தை மாதம் இணையதளம் துவங்கியவுடன் அனைவருக்கும் அதில் சேரும்
வாய்ப்பு அளிக்கப்படும். தொடர்ந்து பாடங்களைப் படிக்கும் வாய்ப்பு அளிக்கப்படும்.

வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com

அன்புடன்
வாத்தியார்.

வாழ்க வளமுடன்!

25.11.10

e class - பெயர்ச்சியைக் கண்டு அயர்ச்சி எதற்கு?

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
e class- பெயர்ச்சியைக் கண்டு அயர்ச்சி எதற்கு?

தூங்கிக் கொண்டிருந்த தமிழனைத் தட்டி எழுப்பியவர் பாரதியார். எழுந்த தமிழனுக்கு சட்டை, வேஷ்டிகள் கொடுத்ததோடு,, தன்னுடைய தத்துவப் பாடல்களால் நல்வழிப்படுத்தி, நம்பிக்கை கொடுத்து நடமாடவிட்டவர் கவியரசர் கண்ணதாசன். அவர்கள் இருவரும்தான் அழகு தமிழைப் பாமரனிடம் சேர்த்தவர்கள் என்றால் அது மிகையல்ல!

தன் வேலையுண்டு, தானுண்டு என்று இருந்த தமிழனை, கடந்த இருபது ஆண்டுகளாக ஜோதிடத்தின் பக்கம் திருப்பி விட்டவர்கள் ஜனரஞ்சகப் பத்திரிக்கைக்காரர்கள். குருப் பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி, ராகு & கேதுப் பெயர்ச்சி என்று அத்தனை பெயர்ச்சிகளுக்கும் தனி மலர்களை வெளியிட்டு, சிலரை மகிழவும் வைத்தார்கள். பலரைக் கலங்கவும் வைத்தார்கள்.

நண்பர் ஒருவர் வந்தார். “இந்தக் குருப் பெயர்ச்சி எனக்கு எப்படி இருக்கும்?” என்று கேட்டார்.

“எந்தப் பெயர்ச்சியும், உங்களை ஒன்றும் செய்யாது! வழக்கம்போல அன்னபூர்னாவில் காப்பி சாப்பிட்டுவிட்டு வீட்டிற்குச் செல்லுங்கள்”

“ஏன் ஒன்றும் செய்யாது?”

“நீங்கள் தீவிர முருக பக்தர். எந்தத் துன்பம் வந்தாலும் விலகி விடும். மலைபோல வந்தாலும், பனிபோல் விலகிவிடும். வேல் இருக்கப் பயம் எதற்கு? மயில் இருக்கத் துணை எதற்கு?” என்று சொன்னதோடு, திருமுருகாற்றுப்டைப் பாடல் ஒன்றையும் சொல்லி அவரை அனுப்பிவைத்தேன்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
புலிப்பாணி முனிவர் எழுதிய பாடல் ஒன்றைக் கிழே கொடுத்துள்ளேன்:

“கேளப்பா குருபதியும் மூன்றில் ஏறக்
கெடுதி மெத்த செய்வானடா வேந்தன் தானும்
ஆளப்பா அகத்திலே களவும் போகும்
அப்பனே அரிட்டமடா சிசுவுக்கேதான்
கூளப்பா குவலயங்கள் எல்லாம் ஆண்ட
குற்றமிலா காந்தாரி மைந்தன் தானும்
வீளப்பா வீமன்கை கதையினாலே
விழுந்தானே மலைபோலே சாய்ந்தான் சொல்லே!”


மன்னனுக்குரிய அந்தஸ்துடன் இருக்கும் குருபகவான், கோள்சாரத்தில் சந்திரராசிக்கு மூன்றில் வரும்போது ஜாதகனுக்குக் கெடுதிகளை அதிகமாகச் செய்வான். முக்கியமாக பொன் பொருள் களவு போகும். பறிகொடுக்க நேரிடும்.

(காந்தாரி மைந்தன் என்பது துரியோதனனைக் குறிக்கும். அவன் பீமன் கை ஆயுதத்தால், உயிர் விட்டதும் அந்தச் சூழ்நிலையில்தான் என்றும் சொல்லியிருக்கிறார். அது பற்றி பிறகு பார்ப்போம்)

குருபகவான் கும்பத்தில் இருந்து, மீன ராசிக்கு தாவியிருக்கிறார். மகர ராசிக்கு அது மூன்றாம் இடம்.

அடியேன் மகரராசிக்காரன். புலிப்பணி சொன்னது நடந்திருக்கிறது. எனது பாடங்கள் களவு போயிருக்கின்றன.
_____________________________________________________________________
பெயர்ச்சியால் தொல்லைகள் மட்டும்தானா? நன்மைகள் இல்லையா?

ஏன் இல்லை? இருக்கிறது!

மீனத்தில் இருக்கும் கோச்சாரக் குரு தனது 5ஆம் பார்வையால், மகர ராசியின் 7ஆம் இடத்தையும், 7ஆம் பார்வையாக 9ஆம் இடத்தையும், 9ஆம் பார்வையாக 11ஆம் இடத்தையும் பார்ப்பார். அந்த இடங்களுக்கு உரிய பலன்களை அவர் செவ்வனே பெற்றுத்தருவார். இந்த Loss எல்லாம் அதில் Pack -up & Make-up ஆகிவிடும்

அதைப் பற்றி அடுத்த அத்தியாயத்தில் விவரமாக அலசுவோம். அத்துடன் மற்ற 12 ராசிக்காரர்களுக்கும் என்னென்ன நன்மை, தீமைகள் என்பதையும், surf excel போட்டு அலசுவோம்.

அலசல்கள் எல்லாம் பதிவில் வராது. மின்னஞ்சல்பாடமாக வரும்.

இங்கே அலசிக் காயப்போட்டால், காயும் முன்பாகவே, அவற்றை ஈரத்துடன், சுருட்டி எடுத்துக்கொண்டுபோய், தங்கள் வீட்டுக் கொடியில் காயப்போட்டு, காய்ந்தவுடன், தேய்த்து, மடித்து, வைத்திருந்து, போட்டுக்கொள்ளும் ஆசாமிகள் இணையத்தில் நிறைய இருக்கிறார்கள்.

ஆகவே நமது துணிகளைக் காவலுடன் பாதுகாப்பாக காயப் போடுவோம்.

முக்கியமான பாடங்கள் அனைத்தும் முதலில் மின்னஞ்சல் பாடமாகவும், பிறகு வகுப்பறைக்கு என்று இணையதளம் துவங்கிய பிறகு அதிலும் தொடர்ந்து வெளிவரும். அதுவரை பொறுத்திருங்கள்.

மின்னஞ்சல் பாடங்கள் 12.12.2010 முதல் துவங்கும்

அன்புடன்,
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

24.11.10

ஆடிய கால்களும், பாடிய வாயும்!

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஆடிய கால்களும், பாடிய வாயும்!

நடனம் ஆடிப் பழகிய கால்களும், சங்கீதத்தைப் பாடிப் பழகிய வாயும் சும்மா இருக்காது என்பார்கள்.

அதுபோல எழுதிப் பழகிய கையும் சும்மா இருக்காது.

கடந்த 10 நாட்களாக பாடங்கள் எதையும் எழுதவில்லை. அதற்கான சூழ்நிலை என்ன என்பதை நீங்கள் அறிவீர்கள்.

“பாதி மனதில் தெய்வம் இருந்து பார்த்துக்கொண்டதடா
மீதி மனதில் மிருகம் இருந்து ஆட்டி வைத்ததடா”


என்று மனிதனின் மனநிலையை கவிதை வரிகளில் அழகுறச் சொன்னவர் கவியரசர் கண்ணதாசன்.

இன்று பாதி என்ற அளவில்லாமல் முழு மனதிலும் மிருக உணர்வுகளுடன் அலைபவர்களின் எண்ணிக்கைதான் அதிகம். என்ன செய்வது கலி முற்றிக்கொண்டிருக்கிறது. பகவான் தன்னுடைய பத்தாவது அவதாரத்தை மேற்கொண்டால் மட்டுமே இந்த நிலை மாறும். அதுவரை நல்லவர்கள் எச்சரிக்கையுடன் இருப்பதே அவர்களுக்கு நல்லது.

வழியில் குறுக்கிடும் நான்கு கால் பிராணிகளால் நம் பயணம் தடைப்படக் கூடாது.

பயனர் பெயர், கடவுச்சொல் வசதி, எழுத்துக்களைப் பிரதி எடுப்பதைத் தடுக்கும் வசதி, மற்றும் முழுக் காப்புரிமையுடன் நம் வகுப்பறைக் கென்று இணையதளம் ஒன்று உருவாகிக் கொண்டிருக்கிறது. அந்தப் பணி நல்ல முறையில் முடிவடைய வேண்டும். ஆண்டவனைப் பிரார்த்திப்போம். பிரார்த்தியுங்கள்

கடந்த ஐந்து ஆண்டுகளாக எழுதுவதால் வலைப்பதிவு எனக்கு வசப்பட்டுள்ளது. இணைய தள செயல்பாடுகளும் எனக்கு வசப்பட வேண்டும். அது ஒரே நாளில் ஆகின்ற செயல் அல்ல!. பத்து அல்லது பதினைந்து தினங்கள் பயிற்சி மேற்கொள்ள நேரலாம்.

அகவே தை மாதம் ஒரு நன்னாளில் இணையதளம் உங்கள் பயன்பாட்டிற்கு வரும்.

இங்கே வலைப் பதிவில் எழுதுவதும் தொடரும். இதில் என்ன எழுதுவது, அதில் என்ன எழுதுவது என்பதை நான் முடிவு செய்து வைத்திருக்கிறேன். இரண்டுமே வழக்கம்போல படிப்பவர்களுக்குப் பயனுள்ளதாகவும் சுவாரசி யமாகவும் இருக்கும். அதற்கு 100% கியாரண்டியை நான் தருகிறேன்.

உண்மையிலேயே ஜோதிடத்தின் மீது மதிப்பும், ஆர்வமும், கற்றுக் கொள்ள முனைப்பும் உள்ளவர்கள் மட்டும் இணையத்தில் சேரலாம். மற்றவர்கள். இதில் - அதாவது இந்த வலைப் பதிவில் எழுதுவதை மட்டும் படித்தால் போதும். இதுவரை எழுதியுள்ள பாடங்களைப் படித்தால் மட்டும் போதும்.

இணையதளம் பயன்பாட்டிற்கு வரும்வரை பாடங்கள் மின்னஞ்சல் மூலமாக நடத்தப்படும். மின்னஞ்சலில் எழுதப்படுபவைகள் அனைத்தும், இணையதளம் பயன்பாட்டிற்கு வந்தவுடன் அதில் சேர்க்கப்படும்.

மின்னஞ்சல் வகுப்பில் குறைந்த அளவு எண்ணிக்கையில் மட்டுமே மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். பழைய (சீனியர்)  மாணவர்கள் மட்டுமே சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். குறுகிய காலம் மட்டுமே நடக்க இருப்பது என்றாலும், அதற்குச் சில விதிமுறைகள் உண்டு.

சேரவிருப்பமுள்ளவர்களும், விதிமுறைகளுக்குக் கட்டுப்படுகிறேன் என்பவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.

மற்ற அனைவரும் பொறுத்திருங்கள். தை மாதம் இணையதளம் துவங்கியவுடன் அனைவருக்கும் அதில் சேரும் வாய்ப்பு அளிக்கப்படும். தொடர்ந்து பாடங்களைப் படிக்கும் வாய்ப்பு அளிக்கப்படும்.

வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com

அன்புடன்
வகுப்பறை வாத்தியார்

வாழ்க வளமுடன்!

22.11.10

ஒரு கன்னத்தில் அறைந்தால், மறு கன்னத்தைக் காட்டலாமா?

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஒரு கன்னத்தில் அறைந்தால், மறு கன்னத்தைக் காட்டலாமா?

“ஒருவன் உன் கன்னத்தில் அறைந்தால், மறு கன்னத்தையும் காட்டு. ஒருவன் உனது மேலங்கியை (coat) திருடிக்கொண்டு போனால், உன்னுடைய சட்டையையும், அவனிடம் கழற்றி கொடு” என்கிறது யேசு கிறிஸ்து பெருமகனாரின் அறிவுரை!

When someone hits you on the cheek offer the other as well.
When someone takes your coat let him have your shirt too.
Lk 6:29  Mt 5:39f   - 60

எனக்கு அந்தப் பக்குவம் இன்னும் வரவில்லை. கன்னத்தில் அறைந்தாலாவது பரவாயில்லை. முதுகில் கத்தியால் குத்திவிட்டுச் செல்பவனைக் கூப்பிட்டு, தம்பி,  நெஞ்சிலும் சொருகி விட்டுப்போ என்று சொல்ல முடியமா?

இது கலியுகம். கருணை கொண்டவனைவிட, அப்படித் திரிபவர்கள்தான் அதிகம்.

எனது ஜோதிடப் பாடங்களை ஒட்டு மொத்தமாகக் கடத்திக்கொண்டு சென்று தனது தளத்தில் பதிவிட்டுள்ளார் ஒரு அன்பர்.

கேட்டால் நான் உங்களிடமிருந்து கடத்தவில்லை என்கிறார். data files downloaded from http://www.4shared.com/ and http://gkgupthag.blog.com/ என்று எனக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.

அந்த அருமைமிகும் குப்தாஜி என்ன சொல்கிறார்?

“பல இணைய தளங்களில்  இருந்த சுட்ட ஜாதக விபரங்களை வைத்து psssrf.org.in க்கு லிங்கு கொடுக்கிறேன் எனக்கு அலுவலக நேரம் முடிந்ததும் மாலை இரவு நேரங்களில் இன்டர்நெட்டில் இரண்டு ஆண்டிற்கு மேலாக இணையதளங்களில் இருந்த ஜாதக விபரங்களை சேகரிப்பது என் பொழுதுபோக்கு”

அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர், அவருக்குத் தமிழ் தெரியுமா? என்பது தெரியவில்லை! அவர் தன்னுடைய  வலைப்பூவில் அவற்றைக் கொடுக்கவில்லை. இவரும் அதை இன்னும் கொடுக்கவில்லை.

அத்துடன் http://www.4shared.com/ இணைய தளத்தில் இருந்து எடுத்ததாகக் குறிப்பிட்டதற்கு, அதன் சுட்டியைக் கேட்டிருந்தோம். அதற்கும் இதுவரை பதில் தரவில்லை.

கடத்திப் பதிவிட்டுள்ள பாடங்களின் அளவு சுமார் 140 MB.

4shared தளத்தில் அதன் உறுப்பினர்களுக்கு கோப்புக்களுக்காகத் தரப்படும் கொள்ளளவு 10 MB மட்டுமே.ஆகவே 140 MBக்கள் அளவிற்கான கோப்புக்களை அங்கிருந்து எடுத்திருக்க வாய்ப்பு இல்லை.

அவரே 40% அளவில் அங்கிருந்து எடுத்ததாகத் தன் வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார். மீதியை எங்கிருந்து எடுத்தார்?

சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்போது, இவை அனைத்திற்கும் அவர் பதில் சொல்லியாக வேண்டும்!

அதுவரை, தற்சமயம், தகாத மொழியில் வசை பாடிக்கொண்டிருப்பதை அவர் தொடர்ந்து செய்யட்டும். வழக்கு என்னும்போது, இந்த வசை பாடல்களும் அதில் சேர்க்கப்படும். அதை அவர் மனதில் கொள்வது நல்லது.

அதைவிட ஒருபடி மேலே சென்று கையகப்படுத்திய எனது எழுத்துக்களை நீக்குவது அவருக்கு இன்னும் நல்லது!


படத்தின் மீது கர்சரை வைத்துக் கிளிக்கினால் படம் பெரிதாகத் தெரியும். படிப்பதற்கு வசதியாக இருக்கும்!

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இதுவரை 400 ஜோதிடப் பதிவுகளை வலையில் ஏற்றியுள்ளேன்.

தொடர்ந்து எழுத உள்ளேன்.

எழுத உள்ள அனைத்துமே மேல் நிலைப் பாடங்கள். அஷ்டகவர்க்கத்தில் மேல் நிலைப் பாடங்களைத் துவங்கினேன். அதைத் தொடர்ந்து எழுத உள்ளேன். ஜோதிட நுட்பங்களைப் பாடமாக நடத்த உள்ளேன். பிறகு பயிற்சிப்பாடங்கள், தொடர்ந்து அலசல் பாடங்கள் என்று என் பணி என் உயிர் உள்ளவரை தொடரும். ஜோதிடம் பெரிய கடல். என்னால் முடிந்த அளவு உங்களுக்குச் சுற்றிக் காட்டலாம் என்று உள்ளேன். அதற்கு அந்தப் பழநிஅப்பன் துணை மட்டும் வேண்டும்.

எழுத உள்ளவைகள் அனைத்துமே ஜோதிடத்தின் உயிர் நாடியான பகுதிகள். ஜீவனுள்ள பகுதிகள். சுவாரசியமான பகுதிகள். எழுத்தின் மேல் உள்ள காதலால், எழுதிப் பழகிவிட்டதால், செட்டிநாட்டு மண்வாசனைக் கதைகள் என்று நான் எழுதிய 60 சிறுகதைகளைப் புத்தகங்களாக்கிப் பலர் கைகளில் தவழ விட்டதால், அந்த ஆர்வம் கூடிக்கொண்டே செல்கிறது.

இனி எழுத உள்ள பகுதிகள் திருட்டுப்போகக்கூடாது. தனிப்பட்ட நபர் பயன் பாட்டிற்கு மட்டுமே அது உதவ வேண்டும்.

என்ன செய்யலாம்?

உங்களுடைய மேலான ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன.

இதுவரை நான் கேட்கும் முன்பாகவே 7 அன்பர்கள் தங்களுடைய ஆலோசனைகளை எழுதியுள்ளார்கள். அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

உங்களுடைய பார்வைக்காக அவற்றைத் தொகுத்துக் கீழே கொடுத்திருக்கிறேன். அவற்றையும் படித்துப்பார்க்க வேண்டுகிறேன்

அன்புடன்
வகுப்பறை வாத்தியார்
++++++++++++++++++++++++++++++++++++============
1
/////Sridhar Subramaniam said...
    அய்யா,
    போலீஸ் complaint எந்த அளவுக்கு உதவ முடியும் என தெரியவில்லை. இது ஒரு சைபர் crime
    எனக்கு தெரிந்து ஒரே வழி, மின் அஞ்சல் மூலம் பாடம் நடத்துவது தான்!
    நன்றி
    ஸ்ரீதர்
    ஸ்ரீதர்
    Sunday, November 14, 2010 11:11:00 PM
------------------------------------------------------------------------------
2
///////hamaragana said...
    அன்புடன் வணக்கம்
    எனக்கு தெரிந்த யோசனை..!!!வகுப்பறை ஐ இணையதளமாக மாற்றிவிடலாம் தற்போது இருக்கும் மாணவர்களுக்கு பயனர் எண்ணும்!! பாஸ்வோர்ட் கொடுக்கலாம் !!
    வகுப்பறையின் மூத்த மாணவர்கள் கலந்து ஆலோசித்து இணையதள அமைப்புக்கு ஆகும் செலவை வகுப்பறை மாணவர்கள் அனைவரும் பங்கு ஏற்றுகொள்ளலாம் !! தட்சிணை இல்லாத வித்தை பாழ் ??அடியேன் எதோ எனக்கு தெரிந்ததை கூறினேன் பிழை இருந்தால் பொருததுகொள்க நன்றி
    Tuesday, November 16, 2010 6:58:00 AM
------------------------------------------------------------------------------
3   
//////Sai said...
    //////அன்புடன் வணக்கம்
    எனக்கு தெரிந்த யோசனை..!!!வகுப்பறை ஐ இணையதளமாக மாற்றிவிடலாம் தற்போது இருக்கும் மாணவர்களுக்கு பயனர் எண்ணும்!! பாஸ்வோர்ட் கொடுக்கலாம் !!
    வகுப்பறையின் மூத்த மாணவர்கள் கலந்து ஆலோசித்து இணையதள அமைப்புக்கு ஆகும் செலவை வகுப்பறை மாணவர்கள் அனைவரும் பங்கு ஏற்றுகொள்ளலாம் !! தட்சிணை இல்லாத வித்தை பாழ் ??அடியேன் எதோ எனக்கு தெரிந்ததை கூறினேன் பிழை இருந்தால் பொருததுகொள்க நன்றி/////
    இந்த யோசனையை நானும் வரவேற்கின்றேன். இலவச bloggerல் தான் இப்படிப்பட்ட பிரச்சனை வரும்
    தனியார் இணைய தளத்தில் வர வாய்ப்பு குறைவு
    Tuesday, November 16, 2010 8:50:00 AM/////
-----------------------------------------------------------------------------
4   
kmr.krishnan said...
    'காப்பி ரைட் மீறல் இருந்தால் "முறைப்படி" தெரிவிக்கவும்' என்பதில் இருந்தே தெரிகிறது எப்பேர்ப்பட்ட "விளைஞ்ச கட்டை" அவர் என்பது.முறையற்ற செயலை செய்பவர்கள்தான் சட்டம் என்ற இருட்டறையில் புகுந்து கொண்டு மற்றவர்களுக்கு ஆட்டம் காட்டுவார்கள்.
    மனசாட்சி,தர்மம்,நியாயம் என்று சொல்பவர்கள் சட்டத்தின் ஓட்டைகளில் புகுந்து புறப்பட மாட்டார்கள்.கோவிந்தன் "கோவிந்தா" ஆகட்டும்! நல்லவர்களின் சாபத்திற்கு ஆளாக‌ வேண்டாம் என்று எச்சரிகிறேன்.
    வகுப்பறையை இணையமாக மாற்றும் யோசனையை நானும் வரவேற்கிறேன்.
    ஆனால் இதுபோன்ற திருடர்களும் உறுப்பினர் ஆகி திருடாமல் இருக்க அதில் வழி உண்டா?
    ஆம்!ந‌டராஜன் சார் சொல்லும் "தட்சணை தராத கல்வி பாழ்"என்பது மிகச் சரி.சிறிய அள‌வாக இருந்தாலும் ஒரு தொகையை வலியுறுத்தி விட்டால், உண்மையான ஆர்வம் இருப்பவர்கள் மட்டுமே மிஞ்சுவார்கள். ஆர்வக்கோளாறு மட்டும் இருப்பவர்கள் விலகிக் கொள்வார்கள்.
    Tuesday, November 16, 2010 10:25:00 AM //////
-------------------------------------------------------------------------------
5  
//////sanjay said...
    வணக்கம் அய்யா,
    பதிவை இனணயதளமாக மாற்றுவது நல்ல யோசணை.'லாகின், பாஸ்வர்ட்' வைத்தாலும், கள்வர்கள் தானும் ஒரு உறுப்பிண‌றாகி கள்ளச்சாவியைப்போட்டு பெட்டியை உடைப்பார்! ஆகவே, இணையதளமாக‌ மாற்றினாலும் தொகுப்பு உள்ள பக்கத்திற்கு மட்டும் 'ரைட் க்ளிக்கை டிஸேபிள்' செய்துவிடவேண்டும். அய்யா, நம்முடைய இனணயதளத்தை வடிவமைத்துக் கொடுக்க நான் பொறுப்பேற்கிறேன். அதனுடைய 'வெப் ஹோஸ்டிங், டொமைன் ரெஜிஸ்ட்ரேஸன்' உங்களுடைய பொறுப்பு.(இரண்டுக்கும் சேர்த்து அதிகபட்சமாக ரூ.2500/‍ வருடச் சந்தா வரும்) அதன் இணைய முகவரி 'ஈவெப்குரு.காம்' சென்று சற்று நோட்டமிடுங்கள் உங்களுக்கே எல்லாம் புரிந்துவிடும்.
    டிஸ்கி:
    'இனணயதள வடிவமைப்பை ஒரு பொழுதுபோக்காகச் செய்துவருகிறேன். நான், சரக்குக் கப்பலில் முதல்நிலை அலுவலராகப் பணிபுறிகிறேன். ஆகவே, இந்த இனணயதள வடிவமைப்பை குரு தட்ச்சனையாக எற்றுக்கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்'
    Tuesday, November 16, 2010 11:49:00 AM /////
----------------------------------------------------------------------------------
6
//////SHEN said...
    மதிப்புமிக்க பதிவுகளைக்கொண்டது உங்கள் வலைப்பூ..இதை இணையதளமாக ஆக்குவதே நல்லது..அதற்கு நாங்கள் என்ன செய்யவேண்டும் என அறிவிக்கவும்.
    அன்புடன்
    செங்கோவி
    Tuesday, November 16, 2010 8:42:00 PM //////
----------------------------------------------------------------------------------------
7.   
//////aryboy said...
    வணக்கம் அய்யா,
    திருடர்கள் எவ்வளவுதான் தன்டனை பெட்ராலும் காலம் காலமாக‌
    இது நடக்கதான் செய்யும்.நம் பாதுகாப்பை நாம் தான் அமைத்துக்
    கொள்ள வேண்டும்.நடக்கும் எதிர்மைரை சம்பவங்கல் நன்மை அளிக்கவே
    வருகிரது.எந்த முடிவு எடுத்தாலும் எங்களது ஆதரவு உண்டு.
    நன்றி,அரிபாய். வாழ்க வளமுடன்.
    Thursday, November 18, 2010 3:33:00 PM /////
---------------------------------------------------------------------------------------

வாழ்க வளமுடன்!

21.11.10

கிடைக்காமல்போன ஆங்கிலப் பேராசிரியர்!


+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கிடைக்காமல்போன ஆங்கிலப் பேராசிரியர்!

இரவு மணி 2.30; 27 ஜனவரி 1977ம் நாள் பிறந்து 150 மணித் துளிகள்
ஆகிவிட்ட நேரம். அப்போதுதான் 'ம‌வுன்ட்டு ஹவுஸ்'( தஞ்சையில்
என் இரண்டாவது அண்ணன்) வீட்டு வாசலில் தந்தி பட்டுவாடா
செய்யும் ஊழிய‌ரின் குரல் கேட்டது. வேளை கெட்ட வேளையில்
வந்த அவரைப் பார்த்துத்  தெரு  நாய்கள் குரைக்கின்றன. கருப்பு
நாய் ஒன்று பெருங்குரல் எடுத்து ஊளையிடுகிறது. நேரம்,சகுனம்
ஒன்றுமே  சரியில்லை. தந்திக்காரரின்  குரல் கேட்டு நான் தான்
முதலில் துள்ளி எழுந்தேன். கையெழுத்து இட்டு விட்டு  தந்தியைப்
பிரித்தால், என் மூச்சு ஒருகணம் நின்றுவிட்டது.மயங்கி  விழுந்தேன். மற்றவர்களும் ஓசைகேட்டு எழுந்து  விட்டார்கள். ஒவ்வொருவராகத் தந்தியைப் படித்துவிட்டு திகைத்துப்  போய்  வாயடைத்து
நிற்கிறார்கள். அப்படி என்ன  செய்தி அந்தத் தந்தியில்?

என் மூத்த‌ அண்ண‌ன் அய்யாசா‌மி கோவையில் 26 ஜன‌வ்ரி 1977 இர‌வு 10.30 ம‌ணியள‌‌வில் மார‌டைப்பால்  கால‌மான‌ர் என்ற‌ பெரும் துக்கச் செய்தியைத் தாங்கி வ‌ந்திருந்த‌து அந்தத் த‌ந்தி. முத‌லில் த‌ன்னிலைக்கு வ‌ந்து சுதாரித்தது என் அப்பாதான்.தெருமுனை வ‌ரை சென்று விட்ட‌ தந்தி ஊழிய‌ரைக்  கூவி அழைத்து‌ அவ‌ரிடமே "கிளம்பிவிட்டோம்,காத்திருக்கவும்"என்ற‌ ப‌தில் த‌ந்தி வாச‌க‌த்தை எழுதிக் கொடுத்து,  த‌ந்திக்கு ஆகும் செல‌வுக்கு மேலேயே அவ‌ர் கையில் கொடுத்து அனுப்பி வைத்தார். அக்க‌ம் ப‌க்க‌த்து வீட்டாரை  எழுப்பி அவ‌ர்க‌ள் மூல‌ம் வாட‌கைக் காருக்கு ஏற்பாடு செய்தார். விடிய‌ற் காலை சுமார் 4 ம‌ணிக்கெல்லாம் கோவையை நோக்கி எங்க‌‌ள் துக்க‌ப் ப‌ய‌ண‌ம் துவ‌ங்கிவிட்ட‌து.

26 ஜ‌ன‌வ‌ரி 1977 காலை வாஸ்து நாளாக‌ இருந்த‌து.அப்போது நான்
என் இர‌ண்டாவ‌து அண்ண‌ன் முனைவ‌ர்  க‌ண்ண‌ன் அவ‌ர்க‌ளுட‌ன்
அவ‌ருடைய‌ இல்ல‌மான‌ 'ம‌வுன்ட் ஹ‌வுஸி'ல் என் ம‌னை‌வி,
முத‌ல் பெண் ஹ‌ம்ஸ‌புவ‌னாவுட‌ன் (அப்போது ஒரு வ‌ய‌து),
என் தாய் த‌ந்தைய‌ருட‌ன் கூட்டுக் குடித்த‌ன‌மாக‌ வா‌ழ்ந்து வ‌ந்தேன்.
என்  அண்ண‌ன் க‌ண்ண‌ன் அன்றும் இன்றும் சிக்க‌ன‌மாக‌வும்
செட்டாக‌வும்  குடும்ப‌ம் ந‌ட‌த்த‌க் கூடிய‌வ‌ர்.நான் அளித்து வ‌ந்த‌
சொற்ப‌ ச‌ம்ப‌ள‌த்தில்  மீத‌ம் வைத்து, என‌க்கும் அவ‌ர் வீட்டுக்கு அருகாமையிலேயே  11 சென்ட் நில‌ம் வாங்கி  வீடு க‌ட்ட‌ ஏற்பாடு
செய்தார்.

அந்த‌ வாஸ்து நாளில் விடிய‌ற்காலையிலேயே அண்ண‌ன் வாங்கிக்
கொடுத்த‌ அந்த‌ நில‌த்தில் வாஸ்து பூஜை  செய்தோம்.
த‌ஞ்சையிலேயே ஒஸ‌த்தியான‌, (உருவ‌ம், உய‌ர‌ம், வேத‌ அறிவு எல்லா‌வ‌ற்றிலும்தான்  ஒஸ‌த்தி)  சாஸ்திரிக‌ள் வ‌ந்திருந்து பூஜையை
ந‌ட‌த்திக் கொடுத்தார். பூஜை முடிந்த‌ பின்ன‌ர் அன்று குடிய‌ர‌சு தின‌ம்
ஆன‌தால்  அந்த‌க்  கால‌னி பொது இட‌த்தில் அப்பா கொடியேற்றி கொடி வ‌ண‌க்க‌ம்  செய்தார். வ‌ந்திருந்த‌  வாண்டுக‌ளுக்கெல்லாம் கைநிறைய‌
மிட்டாய் கொடுத்துவீட்டு மிகுந்த‌ ம‌கிழ்ச்சியுட‌ன் வீடு திரும்பினார்.
அம்மாவும் அந்த‌ ம‌கிழ்ச்சியைக் கொண்டாட‌ வ‌டை பாய‌ச‌த்துட‌ன்
விருந்து ச‌மைத்து விட்டார்க‌ள்.வீடே விழாக்கால‌  ம‌கிழ்ச்சியில் திளை‌த்த‌து.எல்லாம் அந்த‌த் த‌ந்திவ‌ரும் வ‌ரைதான் நீடித்த‌து.
26 ஜ‌ன‌வ‌ரி முடிந்து 27 துவ‌ங்கும் போது ம‌கிழ்ச்சி எங்க‌ளை விட்டுப்
பிரிந்து வெகு தூர‌ம் போய்விட்ட‌து.

வாட‌கைக் கார் கோவையை நோக்கிப் போய் கொண்டு இருக்கும்
ச‌ம‌ய‌ம் ம‌றை‌ந்த‌ அண்ண‌ன் ப‌ற்றிய‌ "ஃப்ளேஷ்  பேக்" அவ‌ருடைய‌
பெய‌ர் அய்யாசாமி. வேறென்ன‌? முருக‌னின் திருநாம‌ம்தான்.
த‌க‌ப்ப‌ன்சாமி, சுவாமிநாத‌ன் என்ற‌ பெய‌ர்க‌ளின் ம‌ற்றோர் வ‌டிவ‌மே அய்யாசாமி.அது எங்க‌ள் அப்பா‌வின்  த‌ந்தை‌யாரின் பெய‌ர். அதாவ‌து
என் தா‌த்தாவின் பெய‌ர். மூத்த‌ அண்ண‌ன் என்ப‌தையே எங்க‌ள்
குடும்ப‌ங்க‌ளில் முத்த‌ண்ணா என்போம். என‌க்கு இர‌ண்‌டு
அண்ண‌ன்மார்க‌ள். எல்லோருக்கும் மூத்த‌வ‌ரான‌ அய்யாசாமி
அண்ண‌னை முத்த‌ண்ணா‌ என்ற‌  பெய‌ரில் இனி குறிப்பிடுகிறேன்.

முத்த‌ண்ணா 1942ல் பிறந்தார். நான் 1949. என‌க்கும் அவ‌ருக்கும்
7 வ‌ய‌து வித்தியாச‌ம்.என‌க்கு, என்னுடைய‌ 7,8  வ‌ய‌தில் ந‌ட‌ந்த‌
செய்திக‌ள் முத‌ல்தான் நினைவுக்கு வ‌ருகிற‌து. என‌க்கு 8 வ‌ய‌து
ஆகும் போது முத்த‌ண்ணாவுக்கு15 வ‌ய‌து ஆகி, அவ‌ர் ப‌ள்ளி
இறுதி வ‌குப்பு முடித்து விட்டார். முன்பே  சொன்ன‌து போல‌
அப்பாவுக்கு  வ‌ருமான‌ம் குறைவு. முத்தண்ணாவைக் க‌ல்லுரியில்
சேர்க்க்த் த‌ன்னா‌ல் இய‌லாது என்று அப்பா முடிவு  செய்து  விட்டார்.
என‌வே ஸ்ரீராம‌கிருஷ்ண‌‌ மிஷ‌ன் மாண‌வ‌ர் இல்ல‌ம் மைலாப்பூர்
சென்னையில் இல‌வ‌ச‌ மோட்டார் வாக‌ன‌ தொழிற் க‌ல்விப் ப‌டிப்பில்
ம‌ட‌த்து ச‌ந்நியாசிக‌ள் ப‌ரிந்துரை‌யின் பேரில்  சேர்க்க‌ப்ப‌ட்டார்.அந்த
மாணவர்  இல்லத்தில் இருந்தபோது ஸ்ரீம‌த் பகவத் கீதை 18 அத்தியாயஙளையும் மனப்பாடமாக ஒப்பிக்கவும், மேலும் பல
உபநிஷத் மந்திரங்களை பொருளுடன் கற்கவும், வேதத்தில் இருந்து
பல பகுதிகளைப் பிழையின்றி ஓதவும்  கற்றுக் கொண்டார். எப்போது கூப்பிட்டாலும் சேவை செய்ய முதன்மையாக அண்ணா நிற்பாராம்.
அதனால்  அவருக்கு "எவர் ரெடி" என்ற சிற‌ப்புப் பெயர் கொடுத்து பரிசு கொடுத்து மகிழ்ந்தது மிஷன் நிர்வாகம்.

முத்த‌ண்ணாவுக்கு மிக‌வும் பிடித்த‌து ஆங்கில‌மும் ஆங்கில‌  இல‌க்கிய‌மும். அவ‌ருடைய‌ ஆங்கில‌க் கையெழுத்து  அழ‌கு சொட்டும். ஆங்கில‌ப்பேச்சும் எழுத்தும் ஒரு க‌விஞ‌னை நினைவு ப‌டுத்தும். அவ‌ர் விருப்ப‌த்திற்கு விட்டு
இருந்தால் இன்று ந‌ம‌க்கு ஒரு சிற‌ப்பான‌ ஆங்கில‌ப் பேராசிரிய‌ர் கிடைத்து இருப்பார்.

ஆனால்,
  "குயிலைப் பிடித்துக் கூண்டில் அடைத்துப் 
    பாட‌ச் சொல்லுகின்ற‌ உல‌க‌ம்;
    ம‌யிலைப் பிடித்துக் காலை  ஒடித்து  

   ஆட‌ச் சொல்லுகின்ற‌ உல‌க‌ம்;
   அது எப்ப‌டிப் பாடும் அம்மா?

    இது எப்ப‌டி ஆடும் அம்மா?........"

அண்ணாவின் வாழ்க்கை ஆர‌ம்ப‌மே வேண்டா வெறுப்பாக‌த்
துவ‌ங்கிய‌து. அதிலும் அந்த‌ ஹாஸ்ட‌ல் வார்ட‌ன்  முத்த‌ண்ணாவின்
ம‌ன‌தைப் புண்ப‌டுத்துவ‌தையே தன் முழுநேர‌ வேலையாக‌க்
கொண்டு விட்டார்.

அது ஏன் எனில்  அப்பாவின் "உண்மை விள‌ம்பி"க் கொள்கையால்
விளைந்த‌து. அதாவ‌து அந்த‌க் க‌ல்வி நிறுவ‌ன‌த்தில் மாத‌ச் ச‌ம்ப‌ள‌ம்
ரூபாய் 100 க்குக் குறை‌வாக‌ உள்ள‌வ‌ர்க‌ளின் குழ‌ந்தைக‌ளுக்கே
இல‌வ‌ச‌ உண‌வு, உறைவிட‌ம், க‌ல்வி ஆகிய‌வை கிடைக்கும்.
அப்பாவுக்கு ரூபா‌ய் 103 ச‌ம்ப‌ள‌ம். அந்த‌த் த‌க‌வ‌லை ம‌றைக்காம‌ல்
அப்பா  விண்ண‌ப்ப‌த்தில் குறிப்பிட்டுள்ளார். ச‌ந்நியாசிக‌ள் விதியைத்
த‌ள‌ர்த்தி சேர்த்துக் கொண்டு விட்ட‌ன‌ர்.இது பிடிக்காத‌ வார்ட‌ன்,
முத்த‌‌ண்ணாவைக் காணும் போதெல்லாம் "103, 103" என்று கூப்பிட்டு க‌டுப்பேற்றி உள்ளார்.அந்த‌ விட‌லைப்  ப‌ருவ‌த்தில் ஏற்ப‌ட்ட‌
தா‌ழ்வுண‌ர்ச்சி முத்த‌ண்ணாவுக்கு அவ‌ர் ம‌றையும் வ‌ரை நீடித்த‌து.

முத்தண்ணா மோட்டார் வாகனத் தொழிற் கல்வியில் (டிப்ளமோ
இன் ஆட்டோமொபைல் இஞ்சினியரிங்) நல்ல  மதிப்பெண்களுடன்
தேறி சென்னை ராயல் என்ஃபீல்டு கம்பெனியில் சேர்ந்துவிட்டார்.
இந்தக் கால கட்டத்திற்குப் பின்னர் நடந்தது எல்லாம் எனக்கு
நினைவில் இருக்கிற‌து.

அண்ணா முன் அறிவிப்பு எதுவும் இல்லாமல் 2,3 மாததிற்கு
ஒருமுறை நீலகிரி விரைவு வண்டியில் சேலம் வந்து  சேர்வார்
'அம்மா' என்று விடிவதற்கு முன்பாக வீட்டு வாசலில் குரல்
கேட்டால் அம்மா துள்ளி எழுந்து போய்மகிழ்ச்சியாக 'வா வா'என்று
கதவைத் திறந்து கூட்டிவருவார்கள்.அன்று  முத்தண்ணாவுக்கு
மிகவும் பிடித்த  பருப்பு உருண்டைக் குழம்பு கட்டாயம் சாப்பாட்டில் இருக்கும்.அம்மாவும் பிள்ளையும்  பேசுவார்கள் பேசுவார்கள்
அப்படி பேசுவார்கள்.தாயன்பு என்பதைப் பிரிந்து இருந்த தனயன்
நிரம்பப் பெறுவார்.அப்பாவும் பிள்ளையும்  சம்பிரதாய விசாரிப்புடன்
விலகிக் கொள்வார்கள்.அம்மாவிடம் தான் எல்லா பகிர்வுகளும்.
கன்றைப் பிரிந்த தாய்ப்பசுவின் பாசத்தை அம்மாவிடமும், பிரிந்த
தாயைகண்ட கன்றின் மனநிலையில் உள்ள தனயனையும் நாங்கள்
கண்டு ஆனந்திப்போம். எப்படி நாங்க‌ள் கண் விழிப்பதற்கு முன்னர்
வீட்டுக்குள் வந்தாரோ அது போலவே நாங்கள் இரவு கண்
அயர்ந்தவுடன் வெளியேறி விடுவார் அத‌னால் அவ‌ருட‌னான‌
இன்டெராக்ஷ‌ன் என‌க்கு மிகக்  குறைவு.

என்னைக் க‌ருவில் சும‌ந்த‌ போது அம்மாவுக்கு வைசூரியும் மிகுந்த‌
காய்ச்ச‌லும் இருந்துள்ள‌து. அப்போது த‌ன்  நினைவு இல்லாம‌ல்  உள‌றியுள்ளார்க‌ள். அடிக்க‌டி,"என‌க்குப் பிள்ள‌யார் ம‌க‌னாக‌ப் பிற‌க்க‌ப்
போகிறார்" என்று பித‌ற்றிக் கொண்டு இருந்திருக்கிறார்க‌ள். ஒருமுறை முத்த‌ண்ணா வீட்டுக்கு வ‌ந்த‌ ச‌ம‌ய‌ம் நான் அவ‌ர்க‌ள் இருவ‌ரும்  பேசிக்கொண்டிருக்கும் இட‌த்தில் ந‌ட‌மாடினேன். அப்போது அம்மா‌வின்
அதீத‌ க‌வ‌னிப்பால் என் உட‌ல் ஊளைச்ச‌தை‌யும் தொந்தியும்
தொப்பையுமாக‌ இருக்கும்.என்னைக் க‌ண்ணுற்ற‌‌ முத்த‌ண்ணா,"
அம்மா! பிள்ளையார் பிற‌க்க‌ப்  போகிறார் என்று  சொல்லுவாயே! உண்மையாக‌வே இவ‌ன் பார்க்க‌ப் பிள்ளையார் போல‌த்தான் இருக்கிறான்"என்று  கூறிய‌து ந‌ன்றாக‌ நினைவு உள்ள‌து. அன்று
அதை  ந‌கைச்சுவை  உண‌ர்வுட‌ன் பார்க்க‌த் தெரிய‌வில்லை.

இப்போதுதான் அதில் உள்ள‌ ஆழ‌மான‌ ந‌கைச்சுவை புரிகிற‌து.
சோக‌த்துட‌ன் சிரித்துக் கொள்கிறேன். முத்த‌ண்ணாவுட‌ன் ந‌ன்கு
புரித‌லுட‌ன் வ‌ள‌ந்த‌வ‌ர். என் அக்கா ராம லக்ஷ்மி ம‌ட்டுமே.
அக்காவுக்கும் அவ‌ருக்கும் 2  வ‌ய‌து ம‌ட்டுமே வித்தியாச‌ம்.த‌ன்
த‌ங்கையை பாதுக்காக்க‌ எதுவும் செய்ய‌த் த‌ய‌ங்காத‌‌ ஒரு வீர‌ம்
செறிந்த‌ அண்ண‌னாக‌த் திக‌ழ்ந்து இருக்கிறார்.'‌ஜே' போட்டுக்
கொண்டு ஊர்வ‌ல‌ம் சென்ற‌ த‌ந்தைக்குப் பிற‌ந்த‌ இந்த‌க்  குழ‌ந்தை
க‌ளுக்கும் ஊர்வ‌ல‌ம் போவ‌து போல‌ விளையாடுவ‌து ஒரு பொழுது
போக்கு. அண்ண‌ன் த‌ல‌மை தாங்கிக்  கொடி பிடித்து முன்னால்
செல்ல‌ த‌ங்கை பின்னால் 'ஜே' போட்டு செல்வாராம்.

'பார‌த் மாதா‌க்கி'‍‍............ ..........   ஜே!
ம‌ஹாத்மா காந்திஜிக்கி.......   ஜே!
ஜ‌வ‌‌ஹ‌ர்லால் நேருஜிக்கி......ஜே!
நேதாஜி சுபாஷ் போஸ்க்கி...  ஜே!
எல்லா த‌லைவ‌ர்க‌ளின் பெய‌ரும் தீர்ந்துவிட்ட‌ நிலையில் அண்ண‌ன் கோஷ‌த்தை நிறுத்திவிடுவாராம். அக்கா

உட‌னே அழத் துவ‌ங்கி விடுவாராம்.
'ஜே' போட‌ பெய‌ர் இல்லாத‌ நிலையில்,
புளிய‌ ம‌ர‌த்துக்கு ......  ஜே!
வேப்ப‌ ம‌ர‌த்துக்கு......  ஜே!
மாம‌ரத்துக்கு........    ....ஜே!
வாழைம‌ர‌த்துக்கு..... ..ஜே
ஆட்டுக்குட்டிக்கு......  ஜே!
ப‌சு மாட்டுக்கு..........     ஜே!
அண்ணாச்சிக்கு.....     ஜே!
த‌ங்க‌‌ச்சிக்கு...............    ஜே!
இப்போதும் நிறுத்த‌ முடியாத‌ நிலையில் அண்ண‌னுக்குக் கோப‌ம் வ‌ந்து விடுமாம்!
ம‌ண்ணாங்க‌ட்டிக்கு ..... ஜே!
குப்பைத்தொட்டிக்கு....  ஜே!
விள‌க்குமாற்றுக்கு......   ஜே!

இந்த‌ச் செய்தியை அம்மாவும் அக்காவும் ப‌ல‌ த‌ட‌வை சொல்லி
இருக்கிறார்க‌ள். சில‌ ஆண்டுக‌ளுக்கு முன்ன‌ர்  நானும் அக்காவும்
சேர்ந்து அம‌ர்ந்து தொலைக்காட்சி பார்த்துக்கொண்டு இருந்தோம்.
அதில் ஒரு சோப்புத்தூள் விள‌ம்ப‌ர‌ம் வ‌ந்த‌து.அண்ண‌னும்
த‌ங்கையுமாக‌ இர‌ண்டு குழ‌ந்தைக‌ள் ப‌ள்ளியில் இருந்து புத்த‌க‌ப்
பையுட‌ன்  திரும்பிக்கொண்டு இருப்பார்க‌ள். த‌ங்கை கால் இட‌றி
சேற்றில் விழுந்து விடுகிறாள்.உட‌னே அழத் துவ‌ங்கி  விடுகிறாள்.
அவ‌ளை ச‌மாதான‌ப்ப‌டுத்த‌ அண்ண‌ன் வீர‌த்துட‌ன் தானும் சேற்றில்
பாய்ந்து அந்த‌ சேறு நிறைந்த‌  நில‌த்தை த‌ன் கைக‌ளால் ஒங்கி ஓங்கித் தாக்குகிறான். "ஆ! என் த‌ங்கையையா த‌ள்ளி விட்டாய்?  இந்தா வாங்கிக்கொள்!" என்று நில‌த்துக்குக் குத்து விடுகிறான். த‌ங்கையின்
முக‌ம் ம‌ல‌ர்வ‌தைக் க‌ண்ட‌ அண்ண‌ன் த‌ன்  ந‌டிப்பை விட்டுத்
த‌ங்கையுட‌ன் சேர்ந்து சிரிப்பான். இதைக் க‌ண்ட‌ அக்காவின்
க‌ண்க‌ள் ப‌னித்த‌ன‌."என் அண்ண‌னும்  இப்ப‌டித்தான் என‌க்காக‌
எதையும் செய்வார்"என்று விம்ம‌த் துவ‌ங்கினார்க‌ள்.

முத்த‌ண்ணாவின் திரும‌ண‌ நாள் அன்று மாலை மூத‌றிஞ‌ர்
ராஜாஜியின் ஆசிக‌ளைப் பெற‌ அப்பா ம‌ண‌ம‌க்க‌ளைக்  க‌ல்கி
கார்ட‌னுக்கு அழைத்துச் சென்றார்க‌ள்.வ‌ண‌ங்கி எழுந்த‌
அண்ண‌னைப் பார்த்து ராஜாஜி கேட்டார்:

"என்ன‌  ச‌ம்ப‌ள‌‌ம் வாங்க‌ற‌‌?"

அண்ண‌ன்: "500 ரூபா‌ய்".

ராஜாஜி :"மெட்ராஸ் ஊரில‌ இருக்க‌ற‌ விலை வாசியில‌ எப்ப‌டி குடித்த‌ன‌ம் ந‌ட‌த்துவ‌? வாட‌கைக் கொடுத்து,  சாப்பாட்டுக்கு உன் ச‌ம்ப‌ள‌ம் ப‌த்தாது"

என்ன‌டா இப்ப‌டி ப‌ய‌ம் காட்டுகிறாரே என்று அண்ண‌னும் உட‌ன்
சென்ற‌வ‌ர் க‌ளும் திகைத்துவிட்டார்க‌ள்.சிறிது நேர‌ மெள‌ன‌த்துக்குக்ப்
பின்ன‌ர் ராஜாஜியே பேசினார்:  "நடைபாதை‌யில் குடும்ப‌ம் ந‌ட‌த்துப‌வ‌ர்
க‌ளைப் பார்! அவ்ர்க‌ளுக்கு   ச‌ரியான‌ ஆடை, உணவு, இருப்பிட‌ம்,வ‌ச‌தி இல்லை.ஆனால் அவ‌ர்க‌ள் ஆணும் பெண்ணும் எவ்வ‌ள‌வு காத‌லுட‌ன்  ப‌ழ‌குகிறார்க‌ள்! என‌வே உங்க‌ள் இருவ‌ருக்கும் இடையில் அன்பு
ம‌ல‌ர‌வும் நிலைக்க‌வும்,ப‌ண‌ம், ச‌ம்ப‌ள‌ம் ஒரு த‌டையாக‌ இருக்காம‌ல் பார்த்துக்கொள்ளுங்க‌ள்.காத‌லுக்குப் ப‌ண‌ம் தேவையே இல்லை."

அறிவுரை சொல்வ‌தையும் ஓர் அதிர்ச்சி வைத்திய‌ம் செய்து சொன்னார் பாருங்க‌ள், அதுதான் ராஜாஜி!

ப‌ள்ளி இறுதித் தேர்வில் அண்ண‌ன் 412 ம‌திப்பெண் பெற்றுத் தேறினார்.
நான் எஸ் எஸ் எல் சி தேர்வு  எழுதும்போது என‌க்கு ஒரு போட்டி
வைத்தார். அதாவ‌து அவ‌ருடைய‌ 412ஐக் காட்டிலும் அதிக‌மாக‌ நான்
எடுக்கும்  ஒவ்வொரு ம‌திப் பெண்ணுக்கும் ரூபாய் ஒன்று ப‌ரிசு
அளிப்ப‌தாக‌ச் சொன்னார்.நான் 404ம‌திப்பெண்தான் எடுக்க‌ முடிந்த‌து.
ஒரு ப‌ரிசும் கிடைக்க‌வில்லை.எங்க‌ள் சுற்ற‌த்தார்க‌ளில் யாருமே
அண்ண‌ன்  வாங்கிய‌ ம‌திப்பெண்ணைத் தாண்ட‌ முடிய‌வில்லை.

ராய‌ல் என்ஃபீல்டில் ப‌த்து ஆண்டுக‌ளுக்கு மேலாக‌ சேவை செய்து
விட்டு, திருப்ப‌தியில் சுவேகா மொபெட்  உற்பத்தி செய்த‌ முத‌லாளி
க‌ளுக்கு ஆர‌ம்ப‌த்தில் இருந்து ஆலோச‌க‌ராக‌ப் ப‌ணியாற்றினார்
.டி வி எஸ் மொபெட் த‌யாரிக்கும் வ‌ரை சுவேகாதான் சந்தை‌யில்
முன்னால் நின்ற‌து.ஆக‌, மொபெட் என்ற‌ ஆக்க‌த்தை இந்தியாவுக்கு
அறிமுக‌ப் படுத்திய‌வ‌ர்க‌ளில் முத்த‌ண்ணா வுக்கு முத‌ன்மையான‌
இட‌ம் உண்டு.

திருப்ப‌தி முத‌லாளிக‌ளின் ப‌ங்குதார‌ர்க‌ள் கோவையில் மொபெட்
தொழிற் சாலை  ஒன்று அமைக்க‌ நினைத்து  அண்ண‌‌னை
கோவைக்கு அழைத்து வ‌ந்து விட்டார்க‌ள்.அண்ண‌ன் கோவைக்கு
வ‌ந்து ஒரு சில‌ மாத‌ங்க‌‌ளில் அந்த‌ 26 ஜ‌ன‌வ‌ரியும் வ‌ந்த‌து. 26 ஜ‌ன‌வ‌ரி
1977 அன்று ம‌லையில் அவ‌ருக்கு மார்வ‌லி க‌ண்டிருக்கிற்து.அவ‌ரை ஒரு ஃபிய‌ட் காரில் பெரிய‌  ஆஸ்ப‌த்திரிக்கு அழைத்துச் சென்று இருக்கி றார்க‌ள்.உட‌ன் சென்ற‌வ‌ர் காரின் ஜ‌ன்ன‌ல் க‌த‌வுகள் முழுதும் இற‌ங்கும்
என்று எண்ணி ஹாண்டிலை சுற்றிக்கொண்டே இருந்திருக்கிறார்.
"ஃபிய‌ட் காரில் பாதிதான் க‌ண்ணாடி இற‌ங்கும்.  ஹாண்டில் உடைந்து
விடும். சுற்றுவ‌தை நிறுத்து"என்று ச‌த்த‌ம் போட்டு இருக்கிறார். ந‌ல்ல‌ நினைவுட‌ன் இருக்கும்  போதே இர‌வு 10.30க்கு மின்சார‌ம் நின்று
போவ‌தைப் போல‌ இத‌ய‌ம் துடிப்ப‌தை நிறுத்திக்கொண்டு விட்ட‌து.
     ‍‍‍‍‍‍‍‍================================================
வாட‌கைக்கார் சூலூர் அருகில் வ‌ரும் போது ம‌க்க‌ர் செய்து நின்று
விட்ட‌து. அப்போதுதான் ஓட்டுன‌ர் முக‌த்தைப்  பார்த்தேன். தீவிரமான‌‌
பெரு வியாதியால் பாதிக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர். கைகால் விர‌ல்க‌ள் எல்லாம்
சிதைந்த‌ நிலையில்  இருந்தார். எப்ப‌டித்தான் ஸ்டிய‌ரிங்கையும், ஆக்சிலேட்ட‌ரையும் ப‌ய‌ன் ப‌டுத்தினாரோ! எங்க‌ளை எப்ப்டித்தான்
விப‌த்துக்கு உள்ளாக்காம‌ல் சூலூர் வ‌ரை கொண்டு சேர்த்தாரோ! ஆண்ட‌வ‌ன்தான் காப்பாற்றினார். சூலூரில்  இருந்து மீண்டும் ஒரு
வாட‌கை வ‌ண்டிபிடித்து கோவைப்புதூர் வ‌ந்து சேரும்போது உச்சி
வேளை தாண்டிவிட்ட‌து.

200 பேர் முத்தண்ணா‌ வீட்டு வாச‌லில் நிற்கிறார்க‌ள்.

அண்ணன் உட‌ல் அருகில் அழுது அழுது க‌ண்ணீர் வ‌ற்றிய‌ நிலையில் க‌ர்பிணியான‌ அண்ணி, 5 வ‌ய‌து ம‌க‌ன்,3  வ‌ய‌து ம‌க‌ள். நாங்க‌ள்
எல்லோரும் க‌த‌றுகிறோம். அப்பா ம‌ன‌ம் த‌ளராமல்‌ க‌ல் போல‌
இருக்கிறார்."ச‌ரி ச‌ரி சீக்கிர‌ம் த‌க‌ன‌த்துக்கு ஏற்பாடு செய்யுங்க‌ள்.
போன‌வ‌ன் போய்ட்டான். அழுதால் திரும்ப‌ வ‌ரப் போகிறானா?"
என்கிறார். கூட்ட‌த்தின‌ரைப் பார்த்து, "என் ம‌க‌னுக்காக‌ யாராவ‌து
ப‌ண‌ம் காசு செல‌வு செய்திருந்தாலோ, என் ம‌க‌னுக்குக்  க‌ட‌ன் கொடுத்திருந்தாலோ என்னிட‌ம் கேட்டுப்பெற்றுக் கொள்ளுங்க‌ள்.
அவ‌ன் க‌ட‌னாளியாக‌ப் போக‌க்கூடாது!"  என்கிறார்.

முத்தண்ண்ணாவின் உட‌லை எரித்த‌தும், ம‌றுநாள் சாம்ப‌லை
எடுத்து வந்து, ஸ்ரீர‌ங்க‌த்தில் அம்மா மண்டபத்தில்  க‌ரைத்த‌தும்,
க‌ர்பிணியான‌ அண்ணியுட‌ன் இர‌ண்டு குழ‌ந்தைக‌ளை த‌ஞ்சைக்கு
அழைத்து வ‌ந்த‌தும், அண்ணி  மேலும் ஒரு பெண்குழ‌ந்தையை
பெற்று அளித்துவிட்டு 1980ல் ம‌றைந்த‌தும், அப்பா 1985ல் இற‌ந்த‌தும்,

முத்தண்ணாவின் குழ‌ந்தைகளுக்குத் தாயும் த‌ந்தையுமாக‌ இருந்து
அம்மா தாய்க் கோழி த‌ன் குஞ்சுக‌ளை  சிற‌குக‌ளால் மூடிமூடிப்
பாதுகாப்பது போல் 2007 வ‌ரை ,த‌ன் 84 வ‌ய‌து வ‌ரை, காப்பாற்றிய‌தும்,
இன்று  அனைவ‌ரும் ந‌ல்ல‌ நிலையில் இருப்ப‌துவும் சொன்னால்
சீரிய‌ல் போல‌ 1000 எபிசோட் போகும்.

பின்ன‌ர் ஒருமுறை என்னால் சொல்ல‌ முடிந்தால் சொல்வேன்.
முடியும் என்று தோன்ற‌வில்லை.க‌ண்ணீர் க‌ண்‌க‌ளை  ம‌றைக்கும்
போது எப்ப‌டி த‌ட்ட‌ச்சு செய்வ‌து சொல்லுங்க‌‌ள்!
- ஆக்கம்: கே.முத்துராமகிருஷ்ணன் (KMRK)  தஞ்சாவூர்


நமது வகுப்பறையின் மூத்த  மாணவர்களில் ஒருவரான
கே.முத்துராமகிருஷ்ணன் (KMRK) அவர்களின் எழில்மிகு தோற்றம்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாரமலரின் இரண்டாம் பகுதி

சுவாமி விவேகானந்தரின் பார்வையில் வேதாந்தம்.

சுவாமி விவேகானந்தரைப் பற்றி அறிய விரும்பி தேடியபோது கிடைத்தது.

(இவைகளை பள்ளிப் பாடத்தில் இவ்வளவு காலம் வைத்து கற்றுத் தந்திருந்தால்! எத்தனையோ மெஞ்ஞானிகள் அல்ல நல்ல மனிதர்களையாவது நாடு பெற்றிருக்கும் என்பது எனது ஆதங்கம். உலக மதங்களுக்கெல்லாம்; கருவும், கருவறையும் நமது வேதங்கள் என்றால் அது மிகையாகாது. மேலைநாடுகளையும் அம்மக்களையும் இறைவன் விஞ்ஞானத்திற்கான கூரோடுப் படைத்திருக்கிறான் என்றால்.... கீழைநாடுகளையும் அம்மக்களை யும்  ... குறிப்பாக இந்தியாவையும் இந்தியர்களையும் மெஞ்ஞானத்திற்காகப்  படைத்திருக்கிறான் என்று சொல்லத் துணிகிறேன்).

வேதாந்தத் தத்துவம்

(ஹார்வர்ட் பல்கலைகழகத்தில், 25 மார்ச் 1896 -ல் சுவாமி விவேகனந்தர் அவர்கள் ஆற்றிய உரையின் சுருக்கம்)

வேதாந்தத் தத்துவம் என்று இன்று பொதுவாகக் கூறப்படுவது, உண்மையில், தற்போது இந்தியாவிலுள்ள எல்லாப் பிரிவுகளையும் (மதங்களையும்) தன்னுள் அடக்கியதாகும். (ஏன்? உலக மதங்களும் இதில் அடக்கம் என்று பிற்பகுதியில் அவரே  குறிப்பிடுகிறார்). எனவே அதற்குப் பல்வேறு விளக்கங்கள் இருந்திருக்கின்றன. இவை துவைதத்தில் துவங்கி, அத்வைதம் வரைப் படிப்படியாக முன்னேறி இருக்கவேண்டும் என்று நான் நினைக்கின்றேன். துவைதிகள் புராணங்களைப் பெரிதாகப் போற்று கின்றனர், அத்வைதிகள் வேதாந்த நெறிகளையே முதன்மையாகக் கொள்கின்றனர்)

வேதம் அதற்கு எழுதப்பட்ட உரை வேதாந்தம். வேதாந்தம் என்ற சொல்லின் பொருள் வேதங்களின் முடிவு என்பதாகும். வேதங்கள் இந்துக்களின் சாஸ்திரங்கள். வேதங்கள் என்பவை துதிப் பாடல்களும், சடங்குகளும் மட்டுமே என்று பலராலும் சிலவேளைகளில் கொள்ளப்படுகிறது. ஆனால் இந்தப் பகுதிகள் தற்போது ஏறக்குறைய  உபயோகத்தில் இல்லை.

பொதுவாக வேதம் என்றால் வேதாந்தம் என்றுதான் தற்போது இந்தியாவில் பொருள் கொள்ளப் படுகிறது. "வேதாந்தம்" என்பது "சுருதி" என்றத் தனிப் பெயராலும் அழைக்கப் படுகிறது. ("சுருதி" ஒரு பிரபல நடிகரின் மகள் ஒரு பெண் இசை அமைப்பாளரை நமக்கு நினைவுப் படுத்தும்... அவரும் இதன் பொருட்டே தனது மகளுக்குப் பெயர் வைத்து இருக்கலாம் காரணம் அவரும் வேதங்கள், அத்வைதம் சார்ந்த கருத்துக் களில் நம்பிக்கைக் கொண்டவர் என்பதை அவருடைய திரைப் படங்களும் அவரிடம் நேர்காணலின் பொது அவர் தரும் பதில்களும் நமக்கு உணர்த்தும். சரி சர்ச்சை வேண்டாம் விசயத்திற்கு வருவோம்).

நடைமுறையில் இந்துக்களின் சாஸ்திரங்களாக இருப்பது வேதாந்தமே. வைதீகத் தத்துவங்கள் எல்லாம் வேதாந்தத்தையே அடிப்படையாக கொள்ள வேண்டும். தங்களுக்கு ஒத்துவருகின்ற வேதாந்தக் கொள்கைகளை மேற்கோளாகக் காட்ட பெளத்தர்களும், சமணர்களும் கூடத் தயங்குவதில்லை.

இந்தியத் தத்துவப் பிரிவுகள் எல்லாம், வேதங்களே தங்களுக்கு அடிப்படை உரிமை என்றுக் கொண்டாடினாலும், அவைகள் தங்களின் நெறிகளுக்கு வெவ்வேறு பெயர்கள் வைத்துக் கொண்டன. இந்த நெறிகளுள் கடைசியானது வியாசருடையது. வியாசருக்கு முந்திய சிலவைகள் இருந்தும்.. வியாசரின் நெறிதான் சிறப்பாக வேதாந்தத் தத்துவம் என்று அழைக்கப் படுகிறது.

பொதுவாக இந்தியாவில் மூன்று விளக்க உரைகள் அதன் பொருட்டு மூன்று தத்துவப் பிரிவுகளும் அதனால் மூன்று நெறிகளும் தோன்றி இருக்கின்றன. (வேதங்களின் விளக்க உரைகள் பாஷ்யம், டீகா, டிப்பணி, சூர்ணி என்று பலவகைகள் இதில் பாஷ்யமே மூலப்பாடத்தை ஆதாரமாகக் கொண்டு ஒரு கோட்பாட்டு முறையை  நிலைநாட்டும் முயற்சித்தது.)

மூன்று நெறிகள்:
முதலில் துவைதம் (இரண்டு என்பது அதன் பொருள் அதாவது பரமாத்மா, ஜீவாத்மா என இரண்டு ஆத்மாக்கள் இருப்பதை நிலை நிறுத்தும் தத்துவம்), இரண்டாவது விசிஷ்டாத்வைதம், மூன்றாவது அத்வைதம் (அத்வைதம் இரண்டல்ல ஒன்றே அதாவது பரமாத்மாவும், ஜீவாத்மாவும் ஒன்றே எல்லா ஜீவன்களிலும் பரமாத்மாவே  இருக்கிறதாக கொள்வது) ஆகும். இதில் இந்தியாவில் அத்வைதிகள் குறைவு....

எல்லா வேதாந்திகளும் / வேதாந்த நெறிகள் பொதுவாக சில கருத்துக்களில் மட்டும் வேறுபடுகின்றன....ஆனால் மூன்று விசயங்களில் ஒத்துப்  போகின் றன...

அவைகள்: கடவுள், வேதங்கள் (வேதங்கள் என்பது வேதாந்திகள் மூலம் அந்தப் பரம் பொருளிடம் இருந்து வெளிப்பட்ட அருள் வெளிப்பாடு, அதாவது ஞானிகள் மெஞ்ஞானத்தினால் உணர்ந்தவைகள்...நமக்கு புரியும் படி  கூறினால்  அது ஒருத் திரைப்படமாக அவர்களுக்கு தெரிந்தது எனக் கொள்வோம்.... அப்படியானால்.... அவைகள் எத்தனைனாட்கள் நிற்காமல் ஓடி இருக்க வேண்டும் எனத் தோன்றலாம்.... இதை விளக்க யோகி ஓசோ அவர்கள் அற்புதமான விளக்கத்தைக் கூறுவார்... பகவத் கீதையில் போர்களத்திலே அவ்வளவு பேர் கூடிய அந்த வேளையிலே எப்படி பரமாத்மாவும்.... அர்சுனனும் அவ்வளவுப் பேசிக்கொண்டார்கள் அது நம்பும் படியான கால அவகாசம் இல்லையே என்பதற்கு அருமையான விளக்கம்.... அது நாம் பிறந்து வளர்ந்து, கல்யாணம் முடித்து என்றுத் தொடரும் வாழ்க்கையை எப்படி அரைமணிக் கனவில் கண்டு விடுவோமோ அதைப் போன்ற ஒரு நிலையில் நடந்த விவாதம் எனக் கொள்ளவேண்டும் என்று.... எவ்வளவு அற்புதமான விளக்கம்....) மூன்றாவதாக படைப்புச் சுழற்சி- இந்த மூன்றையும் அவர்கள் நம்புகிறார்கள்.

படைப்புச் சுழற்சிப்பற்றிய நம்பிக்கை பின்வருமாறு.......

ஆகாசம் என்ற மூல ஜடப்பொருள் (உயிரற்றப் பொருள்) ஒன்றிலிருந்து தோன்றியது தான் பிரபஞ்சம் முழுவதும்  காணப்படும் ஜடப்பொருள்கள் அனைத்தும். புவியீர்ப்பு சக்தி, இணைக்கும் சக்தி, விளக்கும் சக்தி போன்ற எல்லா சக்திகளும், உயிர் சக்தியும் பிராணன் என்ற ஓர் ஆதி சக்தியிலிருந்து தோன்றியவை. பிராணன் ஆகாசத்தின் மீது செயல் படுவதால் பிரபஞ்சம் படைக்கப் படுகிறது, அல்லது வெளிப்படுகிறது. படைப்பின் தொடக்கத்தில் ஆகாசம் அசைவின்றி, மாறுதல் இன்றி இருந்தது. அதன்மீது பிராணன் அதிக அளவில் செயல் பட்டு, அதிலிருந்து செடிகள், பிராணிகள், மனிதர்கள், விண்மீன்கள், போன்ற தூலப் பொருட்கள் படைத்தது.

அடுத்தது பிரபஞ்ச மறைவு பற்றியதையும் இங்கேயே அவர் கூறியதை நினைவு கூறுவோம்.......

கணக்கிட முடியாத காலத்திற்குப் பின்னர் இந்த விரிவு அல்லது தோற்றம் ஒடுங்கத் தொடங்குகிறது. ஒவ்வொன்றும் தூலநிலையில் இருந்து படிப் படியாக சூட்சும நிலைக்கு மாறி, கடைசியில் முதற்பொருளான ஆகாசமும் பிராணணுமாக மாறி ஒடுங்கிவிடுகிறது......

பிறகு, மீண்டும் ஒரு புது சுழற்சி தொடங்குகிறது. இந்த ஆகாசத்திற்கும் பிரானணுக்கும் அப்பால் ஏதோ ஒன்று இருக்கிறது. இந்த இரண்டையும் மூன்றாவது பொருளாகிய "மகத்" என்பதற்குள் சுருக்கலாம். இந்த மகத் என்பது தான் பிரபஞ்ச மனம் (Cosmic mind ). இந்த பிரபஞ்ச மனம், ஆகாசத்தையும், பிராணனையும் படைப்பதில்லை: தானே அவையாக மாறுகிறது.

மேலும்....... மனம், ஆன்மா, இறைவன் பற்றிய நம்பிக்கைகளை பற்றி சுவாமி விவேகனந்தர் கூறியதன் சுருக்கத்தை தொடர்ந்து பிறகு பார்ப்போம்.

ஆக்கம்: ஆலாசியம் கோவிந்தசாமி, சிங்கப்பூர்.


 நமது வகுப்பறையின் சமர்த்தான
  மாணவர்களில் ஒருவரான
 ஆலாசியம் கோவிந்தசாமி அவர்களின் எழில்மிகு தோற்றம்!
 ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

17.11.10

குளிரவைக்கும் பதிவு!

குளிரவைக்கும் பதிவு!

இரண்டு நாட்களாக சூடாகிவிட்ட மனதைக் குளிரவைக்கும் முகமாக இன்றையப் பதிவை வலையேற்றி இருக்கிறேன். கீழே சென்று பாருங்கள். குளிர்ந்ததா அல்லது இல்லையா என்பதை உங்களின் பின்னூட்டத்தில் சொல்லுங்கள்!
________________________________________________________
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V




1

2

3

4

5

6


7

8
-----------------------------------------------------------------------------------------
அதிரபள்ளி அருவி.
கேரள மாநிலத்தில், திருச்சூர் மாவட்டத்தில், சாலக்குடி நகரத்தில் இருந்து 30 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது இந்த அழகான, ரம்மியமான இடம். திருச்சூரில் இருந்து 60 கிலோ மீட்டர்கள் பயணிக்க வேண்டும். கொச்சியில் இருந்து 70 கிலோ மீட்டர்கள் பயணிக்க வேண்டும். வாய்ப்புக் கிடைத்தால் ஒருமுறை சென்று வாருங்கள்.
படங்கள் சொந்த சரக்கல்ல. மின்னஞ்சலில் வந்தது.

Athirappilly is a first grade Grama Panchayath with 489.00 km area in Mukundapuram Taluk, Thrissur district in Kerala, India. It is located 60 km from Thrissur city , 70 km from Kochi city, 55 km from Cochin International Airport, and 30 km from Chalakudy town.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
செட்டிநாட்டில் நிறையத் திருமணங்கள். வாத்தியார், காரைக்குடிக்குப் பயணம். 3 நாட்கள் வகுப்பறைக்கு விடுமுறை. அடுத்த பாடம் ஞாயிற்றுக்கிழமையன்று  வாரமலராக வெளிவரும். அதுவரை பழைய பாடங்களைப் (மொத்தம் 400க்கும் மேல் உள்ளது) புரட்டிப் படிக்க வேண்டுகிறேன்.

அன்புடன்
வகுப்பறை வாத்தியார்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்!

16.11.10

சுடப்பட்டது எப்படி?

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 சுடப்பட்டது எப்படி?

முன்பதிவிற்கு பின்னூட்டம் எழுதிய அனைத்து மாணவக் கண்மணிகளுக்கும் நன்றி!

அன்பர் கோவிந்தன் பதில் எழுதியுள்ளார். அதை அப்படியே கீழே கொடுத்துள்ளேன். அனைவரும் படித்துப் பாருங்கள்.

http://www.4shared.com/ இணைய தளத்தில் இருந்து எடுத்ததாகக் குறிப்பிட்டுள்ளார். அது அந்தத் தளத்திற்கான நுழைவு முகவரி மட்டுமே. கோப்புக்கள் உள்ள பகுதியின் சுட்டி கொடுக்கப்படவில்லை!

இரண்டாவதாக, http://gkgupthag.blog.com/ என்ற தளத்தின் முகவரியைக் கொடுத்துள்ளார். அந்த G.K.குப்தா  தன்னுடைய பதிவில் இப்படி ஒப்புதல் வாக்கு மூலம் அளித்துள்ளார்:
-------------------------------------------------------------------------------------
 “Hello world! 
By gkgupthag

psssrf.org.in இணையதளத்தில் என் ஜாதகத்தை ஆன் லைன்னில் கணித்தேன் மிகவும் திருப்திகரமாக இருந்தது. அந்த இணையதள
இயக்குனர் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் மேலும்
psssrf.org.in பலருக்கு தெரியவில்லை எனவே பல இணைய
தளங்களில்  இருந்த சுட்ட ஜாதக விபரங்களை வைத்து
psssrf.org.in க்கு லிங்கு கொடுக்கிறேன் எனக்கு அலுவலக நேரம்
முடிந்ததும் மாலை இரவு நேரங்களில் இன்டர்நெட்டில் இரண்டு
ஆண்டிற்கு மேலாக இணையதளங்களில் இருந்த ஜாதக விபரங்களை சேகரிப்பது என் பொழுதுபோக்கு”
--------------------------------------------------------------------------------------
இணைய தளங்களில் சுடுவதுதான் அவரது பொழுதுபோக்காம். நிலைமை எப்படி இருக்கிறது பாருங்கள்?

சுடுவது என்றால் என்னெவென்று தெரியுமல்லவா?

அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர், அவருக்குத் தமிழ் தெரியுமா? என்பது தெரியவில்லை! அவர் தன்னுடைய  வலைப்பூவில் அவற்றைக் கொடுக்கவில்லை.

என் வலைப் பதிவில் 1,941 பின் தொடரும் மாணவக் கண்மணிகள்
உள்ளீர்கள். திருவாளர் முகமது இஸ்மாயில்  போன்ற தொழில் நுட்ப வல்லுனர்கள் உள்ளீர்கள். உங்கள் உதவியுடன் அதைக்
கண்டுபிடிப்போம். அவரையும் எச்சரிப்போம்.

நமது வகுப்பறையில், உயர்ந்த பதவியில் இருக்கும் காவல்துறை
அதிகாரி ஒருவரும் மாணவர். அத்துடன் சைபர்  க்ரைம்களில்
கைதேர்ந்த நிபுனர் ஒருவரும் எனக்குப் பரீட்சயமானவர்.
இதை நம் பதிவுகளைப் பிரதி எடுத்து படிப்பதற்கல்லாமல்  
வேறு நோக்கங்களுக்குப் பயன்படுத்துபவர்கள் மனதில்
கொள்வது, அவர்களுக்கு நல்லது!
-------------------------------------------------------------------------------------
அன்பர் கோவிந்தன் அவர்களுக்கு என்னுடைய பதில் இதுதான்:

“உங்கள் தளத்தில் 16.8.2010 அன்று 1,370 பிரிவுகளில் பதிவிடப்பெற்றுள்ள எனது ஜோதிடப்பாடங்கள் அனைத்தையும் உடனே நீக்குங்கள். அதுதான் உங்களுக்கு நல்லது. உங்கள் மின்னஞ்சல்களுக்கு மிக்க நன்றி!”

அன்புடன்
வகுப்பறை வாத்தியார்
SP.VR.சுப்பையா

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Developer
to    classroom2007@gmail.com
date    15 November 2010 22:11
subject    psssrf.org.in
mailed-by    gmail.com
Signed by    gmail.com  
  
hi i am Govindan
want you want i am not use your database
data File download from http://www.4shared.com/
and http://gkgupthag.blog.com/
any information call to me Ok

thank
any information
main to me
vs2008w7@gmail.com
Gocindan
Pondicherry
++++==============================
Developer
to    classroom2007@gmail.com
date    15 November 2010 23:08
subject    psssrf.org.in
mailed-by    gmail.com
Signed by    gmail.com
  
எச்சரிக்கை பதிப்புரிமை மீரல் இருப்பின் http://psssrf.org.in க்கு முறைப்படி தெரிவிக்கவும் இமெயில்

vs2008w7@gmail.com
இப்படிக்கு
Govindan
8870974887
http://psssrf.org.in
-------------------------------------------------------------------
Developer
to    classroom2007@gmail.com
date    15 November 2010 23:16
subject    psssrf.org.in
mailed-by    gmail.com
Signed by    gmail.com

எச்சரிக்கை பதிப்புரிமை மீரல் இருப்பின் http://psssrf.org.in க்கு முறைப்படி தெரிவிக்கவும் இமெயில்

vs2008w7@gmail.com
இப்படிக்கு
Govindan
8870974887
http://psssrf.org.in
பதிப்புரிமை மீரல் இருப்பின் data base file-லில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


படத்தின் மீது கர்சரைவைத்து அழுத்தினால் படம் பெரிதாகத் தெரியும். படிப்பதற்கு வசதியாக இருக்கும்

------------------------------------------------------------------------------------------------


வாழ்க வளமுடன்!

14.11.10

இணையத் திருடர்களை என்ன செய்யலாம்?

---------------------------------------------------------------------
 இணையத் திருடர்களை என்ன செய்யலாம்?

அடியவன் ஐந்தாண்டுகளுக்கு முன்பு பதிவில் எழுதத் துவங்கிய காலத்தில், என் எழுத்தாள நண்பர் ஒருவர் என்னை இப்படி எச்சரித்தார்.

“நீங்கள் பத்திரிக்கையில் செட்டிநாட்டு மண் வாசனைக்கதைகள் எழுதுவதைப்போல, ஜோதிடத்தையும் தனியாக  எழுதி, 'Copy Right’
உரிமைக்குப் பதிவு செய்து புத்தகமாக வெளியிடுங்கள். அதுதான்
நல்லது. இணையத்தில் எழுதினால் அதைத் திருடிக் கொண்டு
போவதற்கு இணையத்தில் நிறையத் திருடர்கள் இருக்கிறார்கள்.
உங்கள் பதிவுகள் திருட்டுப்போகும் அபாயம் உண்டு”

அதற்கு நான் சொன்னேன்:  “என் எண்ணங்களை, என் சிந்தனைகளை, என்னுடைய அறிவை, அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு செல்லும் நோக்கத்தில்தான் எழுதுகிறேன். எழுதிய பிறகு அதை ஆவணப் படுத்தும் முகமாக புத்தகங்களாக வெளியிடலாம் என்றுள்ளேன். என் எழுத்துக்கள் தனிதன்மை வாய்ந்தவை. நான்  என் ஸ்டைலில் எழுத உள்ளேன். அதைத் திருடுபவர்கள் மாட்டிக்கொண்டு விடுவார்கள்.”

ஒருபக்கம், இரு பக்கம் திருட்டுப்போனால் பரவாயில்லை. ஒட்டு மொத்தமாக வகுப்பறையில் எழுதப்பெற்ற  பாடங்கள் அனைத்தையும் ஒருவர் திருடி, தான் எழுதியதைப்போல பதிவிட்டுள்ளார். தொடர்ந்து செய்தும்  வருகிறார். அவர் பல ஜோதிட மென்பொருள்களை தான் தயார் செய்து விற்பதாகவும் தன் விலை விபரங்களையும்  எழுதியுள்ளார். அவைகளை அவர் தயார் செய்தாரா அல்லது அவைகளும் இதுபோலத் திருடப்பெற்ற  மென்பொருட்களா? கடவுளுக்கே வெளிச்சம். அவைகள் கிடக்கட்டும். சொல்ல வந்த விஷயத்திற்கு வருகிறேன்.

நம் வகுப்பறையில்  ‘பின் தொடர்பவர்கள்’ இன்றையத் தேதியில்
1,937 பேர்கள் இருக்கிறார்கள். அதுதவிர கூகுள்  ரீடர் வழியாகப்
படிப்பவர்கள் எண்ணிக்கை தெரியாது. மாதம் சராசரியாக ஒரு லட்சம்
ஹிட்ஸ் விழுகிறது. எவர் திருடி பதிவிட்டாலும், அவர்கள் 
கண்ணிலிருந்து எவரும் தப்ப முடியாது.

என் பதிவுகள் திருடப்பெற்றுப் பதிவிடுவதை, நம் வகுப்பு மாணவக் கண்மணி ஒருவர் மின்னஞ்சல் மூலம் எனக்குத் தெரியப்படுத்தியிருந்தார். அதைக் கீழே கொடுத்துள்ளேன். அவருக்கு என் நன்றி

------------------------------------------------------------------------------------
from    DHANA SEKARAN
to    classroom2007@gmail.com
date    9 November 2010 17:37
subject    வகுப்பறை மாணவன்
mailed-by    gmail.com
Signed by    gmail.com

ஐயா!
    வணக்கம் தாங்கள் வகுப்பறையில் நடத்தும் பாடங்கள்  இந்த தளத்தில் உள்ளது. .

(psssrf.org.in/usfullastro/tamilastrobooks.aspx?id=6237) நீங்கள் கவனித்து நடவடிக்கை
எடுக்குமாறு கேட்டு கொள்கிறேன் நன்றி!
------------------------------------------------------------------------------------
நானும் சென்று பார்த்தேன். அதற்கான சுட்டியைக் கீழே கொடுத்துள்ளேன். நீங்களும் சென்று பாருங்கள்


சுட்டி இங்கே!


நமது வகுப்பறையில் இருந்து கிட்டத்தட்ட அத்தனை பக்கங்களும் திருடப்பெற்று, அந்தத் தளத்தில் பதிவிடப்பெற்றுள்ளது. 1370 பிரிவுகளாகப் பதிவிடப்பெற்றுள்ளது. அத்தனையும் 16.8.2010 அன்று  வலையேற்றப் பெற்றுள்ளது. அத்தனை பக்கங்களையும் கொஞ்சம் கொஞ்சமாக வலையேற்றாமல், ஒட்டு மொத்தமாக பதிவில் ஏற்றப்பெற்றிருக்கிறது. அத்தனையும் copy & paste முறையில் பதிவிடப்பெற்றுள்ளது. சுமார் 2,000
பக்கங்கள் இருக்கலாம்.

நோகாமல் நொங்கு தின்பது இதுதான்!

இதைத் திருட்டு என்பதைவிடக் ‘கொள்ளை’ என்று சொல்லலாம்.

எனது எழுத்துக்கள் என்பதை சுட்டிக்காட்டும் விதமாக சில பகுதிகளை ஸ்கிரீன் ஷாட் எடுத்து சிவப்பு நிறத்தில்  கோடிட்டுக் காட்டியுள்ளேன்.

நீங்களும் சென்று பாருங்கள்.

கேள்வி 1: ‘திருடப்பெற்ற பகுதிகள் அனைத்தும் அந்தத் தளத்தில் இருந்து நீக்கப்பட வேண்டும். அதற்கு என்ன  செய்யலாம்?

கேள்வி 2: இனி எழுத உள்ள பாடங்கள் அனைத்தும் மேல் நிலைப் பாடங்கள். precise lessons அவைகள்  இதுபோல  திருடப்படாமல் இருக்க என்ன செய்யலாம்?

உங்கள் மேலான யோசனைகள் வரவேற்கப்படுகின்றன!

அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
படங்களின் மீது கர்சரைவைத்து அழுத்தினால், படங்கள் பெரிதாகத் தெரியும் 


1

2

3


4

5

6


7

8
--------------------------------------------------------------------------------------
அததனை பதிவுகளும் 16.08.2010ல் பதிவிடப்பெற்றுள்ளதைக் கவனியுங்கள்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

-----------------------------------------------------------------------------------------------
--------------------------------------------------------------------------------------
என் பெயர் கோவிந்தன் நேரம் கிடைக்கும்போது, இந்த முகவரிப் பக்கம் பூர்த்தியாகும் என்று குறிபிட்டுள்ளார். சுமார் 2,000 பக்கங்களைக் காப்பியடித்துப் பதிவு செய்தவர், இததனை மென்பொருட்களை விற்பவர், தன் முகவரியை மட்டும் ஏன் கொடுக்கவில்லை? பெயரும் உண்மைதானா? இல்லை அதுவும் பொய்யா என்பது தெரியவில்லை.

அலைபேசி எண் கொடுக்கப்பெற்றுள்ளது. 88709 - 74887 (ஏர்டெல் நம்பர்). மூன்று முறை முயன்றேன் ஸ்விட்சிடு ஆஃப் என்று வருகிறது. அந்த எண்ணைவைத்து அவரைப்பிடிப்பது ஒன்றும் சிரமம் இல்லை. அதற்கு வழி இருக்கிறது. அதை இப்போது சொல்ல விரும்பவில்லை!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

11.11.10

எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க எட்டு விதிமுறைகள்!



+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மகிழ்ச்சிக்கான எட்டு விதிமுறைகள்.
பிரபல எழுத்தாளரும், பத்திரிக்கையாளருமான திருவாளர்
குஷ்வந்த் சிங் அவர்கள் மகிழ்சிக்கான எட்டு விதிமுறைகளைச் சொல்லியிருக்கிறார். உங்கள் பார்வைக்காக அதைப் பதிவில்
ஏற்றியுள்ளேன். படித்துப் பயன்பெறுங்கள்.

மொழிமாற்றம் செய்ய நேரமில்லை. தனித்தமிழ் ஆர்வலர்கள் பொறுத்துக்கொள்ளவும்! இது இறக்கு மதிச் சரக்கு.
மின்னஞ்சலில் வந்தது!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
One on the most convincing pieces on happiness

Khushwant Singh at his best. The rationale applied to each preference is
absolutely top class.

EIGHT CLUES TO HAPPINESS
By- KHUSHWANT SINGH

Having lived a reasonably contented life, I was musing over what a person should
strive for to achieve happiness. I drew up a list of a few essentials which I
put forward for the readers' appraisal.

1. First and foremost is GOOD HEALTH. If you do not enjoy good health you can
never be happy. Any ailment, however trivial, will deduct from your happiness.

2. Second, A HEALTHY BANK BALANCE. It need not run into crores but should be
enough to provide for creature comforts and something to spare for recreation,
like eating out, going to the pictures, travelling or going on holidays on the
hills or by the sea. Shortage of money can be only demoralizing. Living on
credit or borrowing is demeaning and lowers one in one's own eyes.

3. Third, A HOME OF YOUR OWN. Rented premises can never give you the snug
feeling of a nest which is yours for keeps that a home provides: if it has a
garden space, all the better. Plant your own trees and flowers, see them grow
and blossom, cultivate a sense of kinship with them.

4. Fourth, AN UNDERSTANDING COMPANION, be it your spouse or a friend. If there
are too many misunderstandings, they will rob you of your peace of mind. It is
better to be divorced than to bicker all the time.

5. Fifth, ENVY towards those who have done better than you in life; risen
higher, made more money, or earned more fame. Envy can be very corroding;
avoid comparing yourself with others.

6. Sixth, DO NOT ALLOW OTHER PEOPLE to descend on you for gup-shup.
By the time you get rid of them, you will feel exhausted and poisoned
by their gossip-mongering.

7. Seventh, CULTIVATE SOME HOBBIES which can bring you a sense of
fulfillment, such as gardening, reading, writing, painting, playing or listening
to music. Going to clubs or parties to get free drinks or to meet
celebrities is criminal waste of time.

8. Eighth, every morning and evening, devote 15 minutes to
INTROSPECTION. In the morning, 10 minutes should be spent on stilling
the mind and then five in listing things you have to do that day. In the
evening, five minutes to still the mind again, and ten to go over what
you had undertaken to do.

RICHNESS is not Earning More, Spending More Or Saving More, but ...
"RICHNESS IS WHEN YOU NEED NO MORE"
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
செட்டிநாட்டில் நிறையத் திருமணங்கள். வாத்தியார், 
காரைக்குடிக்குப் பயணம். 3 நாட்கள் வகுப்பறைக்கு விடுமுறை. 
அடுத்த பாடம் திங்கட்கிழமையன்று  வெளிவரும். 
அதுவரை பழைய பாடங்களைப் (மொத்தம் 400க்கும் மேல் 
உள்ளது) புரட்டிப் படிக்க வேண்டுகிறேன்.

அன்புடன்
வகுப்பறை வாத்தியார்.

வாழ்க வளமுடன்!

7.11.10

என்னைக்கோ ஒருநாள் எனும்போது, அது தப்பில்லை!

 ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

 என்னைக்கோ ஒருநாள் எனும்போது, அது தப்பில்லை!

    என்னென்னவோ நினைத்த வண்ணம் அந்த ஜப்பானியப் பாட்டு கேட்க, கேட்க ஒரு வித்தியாசமான உணர்வை எழுப்பியது..flute சவுண்ட் ரொம்பவே சலனத்தை உண்டுபண்ணியது..

    என்னதான் வேற்றுமொழிப் பாடல்கள் மனத்தைக் கவர்ந்தாலும் பொருள் புரியாமல் என்னதான் சொல்கிறார்கள் என்று சுத்தமாகப் புரியாமல் பெரும் அவஸ்தைதான்..இருந்த போதிலும் எனக்கு ரங்கீலாவில் 'ஹாய் ராம்' பாடல் இதயத்தைக் கசக்கிப் பிழியும் அளவுக்கு உணர்ச்சி வேகத்தை ஊட்டும்..

    எதை அர்த்தமாக உள்ளடக்கியது என்பது படத்தில் பார்க்கும் போது உடலையே முறுக்கித் துவட்டி அடிக்கும் விதமான ஜாக்கி ஷெராப் ஊர்மிளா நடன மூவ்மென்ட்டுகள்  என்று படமாகப் பார்த்தாலுமே மொழி புரியாமல் என்ன சொல்லப் படுகிறது என்பது புரியாமல் கண்ணைத் திறந்து காட்டில் விட்டாலுமே காம்பஸ் இல்லாமல் வடக்கு தெற்கு தெரியாத கதைதான்..

    அதனால்  பாடல்கள்..என்றாலே தமிழ்ப் பாடல்கள்தான் என்றாகிப் போனது..

    எனக்குப் பிடித்த குரல் என்றால் அது ஜானகிதான்..

    ரொம்பப் பிடித்தது என்றால் அது ஜென்சி தான்!

    இவளது குரலோ சைலஜாவை ஒத்திருந்தது..இனிமைதான் என்றாலும் சின்னதாக கீச்சுக் குரலாகிப் போனது கொஞ்சம் மெருகூட்டத்தவறியது..  இந்த அழகுக்கு குரல் சரியாகப் பொருந்தி இருக்கவில்லையோ என்றே நினைக்கத் தோன்றியது..இந்த உலகத்தில் நாம் நினைத்தது போலவே எல்லாம் படைக்கப்பட்டிருக்கிறதா என்ன? எங்கே சுற்றினாலும் அவரின் நினைவுகளே மையம் கொண்டு அதைச் சுற்றியே நினைப்பு போவதுதான் ஆச்சரியம்..

    கன்னங்களில்  விழுந்து புரளும் செங்குழல் கற்றைகளை அலட்சியமாக தலையைக் குலுக்கி சரிசெய்து கொள்ளும் அவளின் மேனரிசம் மனதில் வந்து வந்து போனது..அவளின் இந்தக் குலுக்கலுக்கு ட்யூன் போடுவது போல அசைந்தாடிய காதில் மாட்டிய பெரிய சைஸ் வளையங்கள்   அவளது தலைக் குலுக்கலுக்குப்  பின்னும் சில நொடிகளைக் கொன்ற பின்பே ஓய்வுக்குத் திரும்பின...பிரவுன் நிற கண்கள் உயிர்த்துடிப்புடன்  ஏதேதோ தகவல்களை எனக்குப் பகிர்வதாகவே பட்டது அவளுடன் இருந்த கணங்களில்..

    முதல்தடவை சந்தித்துப் பேசும்போது அவளின் கண்களை அல்லது புருவமத்தியை மட்டுமே பார்த்துப் பேசுவதுதான் பண்பு என்று எவ்வளவுதான் நான் எச்சரிக்கையாக இருந்தபோதிலுமே என்னையும் அறியாமல்  அவள் அவ்வபோது தன் செவ்விதழ்களை நாவினால் ஈரப்படுத்தியதைக் கவனிக்கத் தவறவில்லை..அவளும் கவனித்திருப்பாளோ? இவன் ஒரு ஜொள்ளு பார்ட்டி என்று ஏதும் நம்மைப் பற்றி நினைத்திருப்பாளோ? கழுத்துக்குக் கீழே பார்க்காமல் பண்புடன்தானே நடந்துகொண்டோம்..

    பெண் நாகத்துக்கென்று மாதவி போன்ற சிலமுகவெட்டுக்களைத்தேர்ந்தேடுத்து தமிழ் சினிமா ஏற்படுத்தியிருந்த தாக்கத்தில் அப்படியொரு முகவெட்டை இவளிடம் கண்டு அதில் நாகத்தின் வேகம் சீறலாய் அவள் முகத்திலும் கண்களிலும் பொதிந்து கிடந்ததாய் உணர்ந்தேன்..செதுக்கிய கன்னக் கதுப்புகளில் மெலிதாக இழைந்திருந்த சிவப்பு ஷேட் அவளது நிறத்துக்கு மேலும் ஒரு கலர் ஷேட் தேவைதானா என்றே அங்கலாய்க்க வைத்தது..அதிலும்  ரெஸ்டாரெண்டின் சற்றே மஞ்சள் கலந்த மங்கிய வெளிச்சத்தில்  இந்த கலர்ஷேட் கொஞ்சம் பிரமிப்பையே கொடுத்தது என்றால் அது மிகையாகாது!

    என்னவென்று ஊகிக்க முடியாத ஒரு brand perfume சுகந்தமணம் நாசியை வருடியவண்ணம் கிறங்கடித்திருக்க, பேக்ரௌண்டில் லைட் மியூசிக் வேறு..மொத்தத்தில் வேறு ஏதோ உலகத்தில் இருப்பதைப் போன்றதொரு ரம்மியமான சூழலைத் தோற்றுவித்திருந்தது.பேச்சும் வேறு சுவாரஷ்யத்தினைக் கூட்டியிருக்க தன்னை மறந்து லயித்து இப்படி நேரம் போனதே தெரியாமல் கட்டுண்டு கிடப்பதைத்தான் எனக்கே தெரியாமல் என்னுள் புகுந்து வசியம் செய்வது என்று சொல்கிறார்களோ?  

    இந்த கணங்களுக்காக கொஞ்சம் பணம், நேரம் தொலைந்தால்தான் என்ன? வாழ்க்கை  ஒவ்வொரு நிமிடமும் புதுப்புது விஷயங்களாலேயே பொலிவு பெறுகிறது..அந்த வகையில் இன்று இவளைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததுக்கு ஒரு சின்னதா சந்தோஷப்படுறதை வுட்டுட்டு ஏன் ரூமுக்குத் திரும்பிப் போக முடியலையேன்னு நினைச்சு வருத்தப் படணும்?

    ஒகே..லீவ் இட்.. நேரமாயிடுச்சு..என்ன பண்ணலாம்?..மணி பத்தை நெருங்கிக் கொண்டிருக்க..இரவு நேரத்து காற்று சில்லிப்பைக் கூட்டியிருந்தது..இவ்வளோ நேரம் மக்டொனல்ட்ஸ்லே கதையடிச்சுக்கிட்டு இருந்ததாலே ஏர் கண்டிசன் செட்டப்பிலே குளிர் தெரியலே..சீக்கிரமே வீட்டுத் திரும்பிடுவோமின்னு நினைச்சு ஓவர்கோட் வேற இல்லாமே வந்தாச்சு..

    சரிதான்..என்னிக்கோ ஒரு நாள்..இப்பிடி..வித்தியாசமான அனுபவ லிஸ்டில் இதையும் சேர்த்துட வேண்டியதுதான்..

    யோசித்தவாறே நடந்து கொண்டிருந்த நான் திரும்பிப் பார்த்தபோது ஸ்டேஷனிலிருந்து  கொஞ்சம் தூரமாகவே வந்து விட்டிருந்தேன் என்று புரிந்தது..

    சோடியம் வேப்பர் விளக்கு வெளிச்சத்தில் சற்று தூரத்தில் ஏதோ ஆட்டோமாடிக் வெண்டிங் மெஷின் கண்ணில் பட்டது..  குளிருக்கு இதமா ஏதும் ட்ரிங்க்ஸ் இருக்கான்னு பாக்கலாம்..கிட்டே நெருங்கிப் பார்த்தால் சிகரட் வெண்டிங் மெஷின் ..ஆகா... ரொம்ப நாளாச்சு.. நிப்பாட்டி..  இருந்தாலும் இப்போ மூடுக்கு அடிக்கணும்போல தோணுது..என்ன யோசனை..எப்போவோ ஒரு நாள் அடிக்குறதுலே அப்பிடி என்னதான் ஆகிடப் போகுது ...ம்ம்ம் ..சரிதான்..

    மூணு நூறு yen சில்லறை காய்ன் எடுத்து காய்ன்  ஸ்லாட்டில் போட்டு பட்டனை அழுத்த ஒரு parliyament சிகரட் பாக்கெட் வந்து விழுந்தது..எப்போவுமே லைட்டர் பர்ஸ்லேயே வெச்சுருக்குறதாலே வசதியாப் போச்சு..எடுத்து ஒரு சிகரெட்டை வாயில் வெச்சு பத்தவெச்சேன்..லேசா ஒரு இழுப்பு இழுத்து கொஞ்ச நேரம் உள்ளடக்கி குளிருக்கு இதமா உணர்ந்தபோது லேசா தலைக்கு கொஞ்சம் தூக்கலாத் தெரிய ரொம்ப நாளா அடிக்காம இருந்துட்டு அடிக்கும்போது இப்படித்தான் இருக்கும்னு உணர்ந்தேன்..நிதானமா அடுத்த ' பஃப் ' இழுத்து விட்டபடியே அங்குமிங்கும் நோட்டமிட்டேன்..ரோட்டோரம் ஒரு பாறை கண்ணில் பட அதில் சென்று சாய்ந்தவாறு உட்கார்ந்தேன்..இந்தப் பக்கம் அவ்வளவாக ஆட்கள் நடமாட்டமில்லை..பத்து மணிக்கெல்லாம் மக்கள் புழக்கம் குறைந்து விட்டது..சனிக் கிழமை என்றால் நைட் அக்டிவிடீஸ் அதிகமா இருக்கும்..இன்னிக்கு வெள்ளிக் கிழமைங்குறதாலே ஒருவேளை ஊரடங்கிப் போச்சோ? வலது பக்கம் பிரிந்தசந்தில் இருந்து ஏதோ சத்தமாகப் பேசிச் சிரித்தபடியே நாலு பேர் கடந்து போனார்கள்..அவர்களில் ஒரு சின்ன வயசுப்பெண்வேறு  ..குடித்திருப் பார்கள் போல..நடை காட்டிக் கொடுத்தது..சந்தை எட்டிப் பார்த்தேன்..நைட்க்ளப் போல..பூசணிக்காய் சைசில் சிவப்பு  லைட் தொங்க விட்டிருந்தார்கள்...

    மேலே ஆகாயம்.. நிச்சலனமாக அதிக வெளிச்சமுமில்லாமல் அதேநேரம்.. கும்மிருட்டுமில்லை .நிலா ..எங்கே..என்று தேடித் பார்த்தேன்..எனக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு என்னையே பார்த்துக் கொண்டிருந்தது ..கழுத்தைத் திருப்பிப் பார்க்க சிரமாயிருந்ததால் பாறையில் கொஞ்சம் மேலேறி அண்ணாந்து வானத்தைப் பார்த்தவண்ணம் படுத்தேன்..பாறையின் மேடு பள்ளங்கள் முதுகில் அழுத்த கொஞ்சம் அப்படி இப்படி புரண்டு ஓரளவுக்கு வசதியாக படுத்த வண்ணம் அடுத்த ' பஃப் ' இழுத்து விட்டேன்..நிம்மதின்னா..இதுதான்..

    iPod தேடி எடுத்து பிளேலிஸ்டில் தேடி 70 எவர்கிரீன் ஹிட்சில் துழாவி..' வெள்ளி நிலாவினிலே..தமிழ் வீணை வந்தது..அது பாடும் ராகம்.. நீ ராஜா..' என்ற 'சொன்னது நீதானா' படத்து ஜெயச்சந்திரன்  பாட்டை செலக்ட் செய்து  ஹெட் செட்டைக்  செருகி மெல்லிய சத்தத்தில் இன்பத்தேனை புகவிட்டபடி இன்னும் சற்று ரிலாக்ஸ்ஸாக  அசைந்து படுத்தேன்..ஆங்காங்கே விண்மீன்களை அள்ளித் தெளித்து..கருநீலவானம்..  தேங்காய்க் கீற்று  போலே..சின்னதாய்..வெள்ளி நிலா...இன்னும் தூரத்தில் ஒரு புள்ளி 'ப்ளின்க்' ஆகிக் கொண்டிருப்பது தெரிந்தது..கூர்ந்து கவனித்த போது  இன்னும் சரியான உயரத்தில் ஏதோ மெதுவாக ஊர்ந்து செல்லும் சிறு புள்ளியான வெளிச்சம் தெரிந்தது..இது ஏதும் ஸ்பேஸ்க்ரேப்ட் ஆக இருக்குமோ? இவ்வளவு உயரத்துக்கு பிளைட் போகாதோ?என்று சந்தேகம் தோன்றியது..இது சின்ன வயசுலேருந்தே தோணுகிற சந்தேகம்தான்..இன்னிக்கும் தோணியது.. பெரிசும் சிறுசுமாக எண்ணிக்கையிலடங்காத விண்மீன்கள் கூட்டம்.. என்ன ஒரு அருமையான சூழல்..வெட்டவெளி..இப்படி..இயற்கையை அனுபவிப்பதற்கு மேலே ஆகாயத்தில் வேறு சொர்க்கம் இருக்கிறதா என்ன? உளறுகிறார்கள் மடையர்கள் என்று தோன்றியது..

    ஷூவில் ஏதோ தட்டுப்பட கொஞ்சம் சுதாரித்து எழுந்தவாறு பார்த்தால் யாரோ ஒரு ஆளின் தலை கண்ணில் பட்டது..யாரிவன்? எதற்கு நம்மை எழுப்புகிறான்? என்று குழப்பத்துடன் சற்று மிரட்சியுடனும் பாறையி லேருந்து இறங்கினாலும் அவன் ஏதோ சொல்கிறான் எனக்குத்தான் கேட்கவில்லை..என்று புரிந்து ஹெட்செட்டைக் கழட்டி என்ன? என்றொரு பார்வை பார்த்தேன்..'பாபுஜி' என்று வணக்கம் சொல்லும் தோரணையில் தலையை குனியும் இவன் முகத்தின் அந்தப் பக்கத்துக்கு கொஞ்சம் வெளிச்சம் பட்டுக்கொண்டிருந்ததால் அந்தப் பக்கமாய் நகர்ந்து  பார்த்தபோதுதான் நீக்ரோ என்பது புரிந்தது..சுருள் முடியுடன் முரட்டு ஆளாய்த் தெரிந்தான்..காந்தியின் நேட்டால் சேவை..இங்கும் இந்தியனைக் கண்டால் 'பாபுஜி' என்றே கூப்பிடுகிறார்கள் இவர்கள்..

    'என்ன வேண்டும்' என்றேன்..

    'ரெகுலர் சிஸ்டம் 2 ஹவர்ஸ்..7000 yen தான்..இன்னிக்கு அதிகம் கூட்டமில்லை..அதுனாலே 5000 yen தான் .நைட்டு முழுசுமே தங்கிக்குங்க..ட்ரிங்க்ஸ் எவ்வளோ வேணும்னாலும் குடிச்சுக்கலாம்..20 வயசுப் பொண்ணுங் கதான் சப்ளையர்ஸ்...பட் ஒன் கண்டிஷன்..தொடக் கூடாது..பேசிட்டே இருக்கலாம்..நீங்களே யார் வேணுமின்னு  செலக்ட் பண்ணிக்கலாம்..பொண்ணுங்களுக்கு ட்ரிங்க்ஸ் ஆர்டர் பண்ணுணீங்கன்னா அதுக்குத்  தனி  பில்.'னு

    மெனு கார்டு அயிட்டமா லிஸ்டை நீட்டி வாசித்தான்..பக்கத்து சந்து க்ளப்பைக் கையை காட்டி.ஆள் பிடிக்கும் வேலை பார்ப்பான் போலே..

    'உன்னை யாரு இதெல்லாம் இப்போ கேட்டா? நான் அதுக்காக வரலை..நீ வேற ஆளைப் பாரு..எனக்கு இதெல்லாம் பழக்கமில்லே..' என்று சொன்னாலும் அவன் விடுவதாக இல்லை..

    'பாபுஜி..பாபுஜி..இன்னிக்கு ஒரே தரம்..ஜஸ்ட் வந்து ஒரு ட்ரையல் பாருங்க..உங்களுக்குப் புடிச்சிருந்தா continue பண்ணலாம்..இல்லேன்னா வேணாம்..உங்க விருப்பம்தான்..'

    கொஞ்சம் சபலப்பட்டால் அவ்வளோதான் 'யப்பா..நீ..ஆளை விடு.. எனக்கு வேற வேலை இருக்கு'ன்னு உர்ருன்னு மூஞ்சியைக்காமித்தபடியே விருட்டென்று நடையைக் கட்டினேன்..

    மனுஷன் கொஞ்ச நேரம் நிம்மதியாய்ப் படுக்க முடியலியே..இவனுங்க தொல்லை பெரும் தொல்லை யாயில்லே இருக்கு..ஏரியாவையே குத்தகைக்கு எடுத்துருப்பானுங்க போலருக்கே?

    மொத்தமா சுருட்டிட்டுதான் விடுவானுங்க போலருக்கே..இது ஒரு பொழப்புன்னு கிளம்பிடுறானுங்க திட்டியபடியே..இன்னொரு சிகரெட் எடுத்துப் பத்தவெச்சேன்..காரணமேயில்லாமல் டென்சன் ஏறி கொஞ்சம் படபடப்பாக இருந்தது..சிகரெட் இழுத்தால் வேறு ஏதோ கருகின பொசுங்கின வாடை புகையாக வாய்க்குள் புகுந்தது

    என்ன என்று பார்த்தால் பில்ட்டர் சைடை பத்த வெச்சு விட்டேன்..ச்சே..டென்சனில் என்னதான் பண்றோமுன்னு நிலை தடுமாறிப் போகுது..தூக்கிப் போட்டுவிட்டு வேறு ஒண்ணை எடுத்து கவனமாப் பத்தவெச்சேன்.. நாம கேக்காமே இவனா வந்து ஏன் இதெல்லாம் நம்மகிட்டே சொல்றான்..என்னதான் பதில் சொன்னாலும் லேசுல வுடமாட்டேங்குறானே? நாமில்ல ஏதோ தப்புப் பண்ணிட்டப்போலே அந்த இடத்தைக் காலி பண்ணி நகர்ந்தாப் போதும்னு ஓடியார்ர மாதிரி ஆகிடுச்சு..வெக்கங்கெட்டவன் ..கொஞ்சம் அசந்து அவன்கூடவே போயிப் பார்த்திருந்தால் என்னா ஆயிருந்திருக்கும்?

    நமக்குத்தான் இது புதுசு..ஸீன் போடுறோம்..அவனவன் போயிட்டு வந்துட்டுத்தானே இருக்கான்..?இந்த நாட்டுலே இதெல்லாம் சர்வ சாதாரணம்..நல்ல வேளை.. இத்தோட போச்சு..வேறு மாதிரி இடமா இருந்தால் வேற என்னத்துக்கெல்லாம் கூப்டுவானுங்களோ? இப்பிடியே பலதுமாய் எண்ணவோட்டத்தின் அலைவேகம் எகிறி டர்புலேன்ட் ஆகிப் போனது. சற்று முன் படுத்து ஆகாயத்தப் பார்த்து 'இதைவிட சொர்க்கம் வேறு உண்டா?' ன்னு கேட்டதுக்குத்தான் பதில் சொல்லும் விதமாய் இவன் வந்து 'இன்னிக்கு நைட் கிளப்புக்கு வந்து பாரு'ன்னு  வந்துருப்பானோ? வேகவேகமாக டென்சனில் இழுத்த இழுப்பில் சிகரெட் காலியாகிப்கியிருந்தது..இன்னொண்ணு பத்தவெச்சே ஆகணுமுன்னு ஏதோ ஒரு வேகம்..அடுத்ததைப் பத்த வெச்சேன்..தண்ணீர் தாகம் எடுத்து தொண்டை வறட்சியாய் அங்குமிங்கும் ஆட்டோமாடிக் வெண்டிங் மெஷின் இருக்கான்னு  பார்த்தபடியே வேகம் வேகமாய் நடையைக் கட்டினேன்..

    பாட்டு கேட்டால் கொஞ்சம் படபடப்பு அடங்கும்..iPod  எடுத்து randomமாய் பாட்டைப் போட்டால்...

    'கண் போன போக்கிலே கால் போகலாமா?
    கால் போன போக்கிலே மனம் போகலாமா?
    மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா?'
பாட்டு ஓடிக் கொண்டிருந்தது.
  
    ஆக்கம்: நெப்போலியன் ஞானப்பிரகாசம், டோக்கியோ, ஜப்பான்.

 மைனரின் எழில் மிகு தோற்றம். 
மைனர் புதிதாக ஒரு படத்தை அனுப்பி வைக்கும்வரை 
இந்தப்படம்தான் பதிவில் வரும். பொறுத்துக்கொள்க!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++===


வாழ்க வளமுடன்!''''