மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label Pickup and Drop Posts. Show all posts
Showing posts with label Pickup and Drop Posts. Show all posts

27.8.21

Astrology கோள்களும் அவற்றின் சாரமும்! பகுதி 2

Astrology கோள்களும் அவற்றின் சாரமும்!  பகுதி 2 

கோள் என்றால் கிரகம் (planet) என்று பொருள்படும். சாரம் என்றால் தாவரம், இலை, மூலிகைகள் ஆகியவற்றில் இருந்து எடுக்கப்பெறும் சாறு.essence. அதாவது  எடுக்கபெற்ற சாரம். 

கட்டட வேலைகளுக்கு, உயரமான இடத்தில் இருந்து வேலை செய்ய வசதியாகச் சுவரை ஒட்டிக் கம்புகளை ஊன்றி அவற்றின் மேல் கட்டைகளைப் பரப்பிய தள அமைப்பும் சாரம் என்றுதான் சொல்லப்படும் ஆங்கிலத்தில் scaffolding என்பார்கள். 

சஞ்சாரம்  என்றால் நடமாட்டம் என்று பொருள்படும். (of human beings) movement. for animals roaming 

சரி, கோள்சாரம் (கோச்சாரம்) என்றால் என்ன? கோள்களைப் பிழிந்து எடுக்கும் சாறா? அல்லது சாரமா? கோள்களைப் பிழிந்து எடுப்பதா? அதெப்படி முடியும்? இங்கே அதன் பொருள் கோள்களின் நடமாட்டம் என்று எடுத்துக் கொள்ள வேண்டும். 

கோள்களின் நடமாட்டத்தை எப்படித் தெரிந்து கொள்வது? தெரிந்து கொள்வதால் என்ன பயன்? அதை சற்று விரிவாக, உங்களுக்குப் புரியும்படி   சொல்லித் தருவதுதான் இக்கட்டுரையின் நோக்கம். 

இன்றைய கோள்கள் எங்கே நடமாடிக் கொண்டிருக்கின்றன?  

உங்களுக்குப் பலமுறை சொல்லிக்கொடுத்துள்ளேன். அதன்படி எந்த நாளுக்கும், எந்த இடத்திற்கும், எந்த நேரத்திற்கும் அதைத் தெரிந்து கொள்ளலாம்.26-8-2021 அன்று மாலை 5 :00 மணிக்கு சிங்காரச் சென்னையில் இருந்து பார்த்தால் கோள்களின் நிலவரம் கீழே உள்ளபடி இருக்கும்

சூரியன், சிம்மத்தில் செவ்வாயும் சிம்மத்தில் சந்திரன், மீனத்தில் புதன் கன்னியில் சுக்கிரனும் கன்னியில் குரு கும்பத்தில் சனி மகரத்தில்  ராகு ரிஷபத்தில் கேது விருச்சிகத்தில்  உள்ளன. 

என்ன பலன்? ஒவ்வொரு ராசிக்கும் பலன்கள் மாறும். ஏன் மாறும்? 

சனியை எடுத்துக்கொள்வோம்.மகர ராசிக்காரர்களுக்கு ராசியில் சனி

கடக ராசிக்கார்ர்களுக்கு ஏழில் சனி

கும்ப ராசிக்காரகளுக்கு பன்னிரெண்டில் சனி

இப்படி பல விதமான அமைப்புக்கள். அவற்றிற்குத் தகுந்தமாதிரி கோச்சாரப் பலன்கள் மாறுபடும்

அவற்றை எல்லாம் ஒரு நாள் விரிவாகப் பார்ப்போம்

பிக் அப் அண்ட் டிராப்பிற்கு இவ்வளவுதான் பாடம் 

அன்புடன்

வாத்தியார்

 வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

26.8.21

Astrology Pick up and drop Post: கோள்களும் அவற்றின் சாரமும்!

Astrology Pick up and drop Post: கோள்களும் அவற்றின் சாரமும்!

கோள் என்றால் கிரகம் (planet) என்று பொருள்படும். சாரம் என்றால் தாவரம், இலை, மூலிகைகள் ஆகியவற்றில் இருந்து எடுக்கப்பெறும் சாறு.essence. அதாவது  எடுக்கபெற்ற சாரம்.

கட்டட வேலைகளுக்கு, உயரமான இடத்தில் இருந்து வேலை செய்ய வசதியாகச் சுவரை ஒட்டிக் கம்புகளை ஊன்றி அவற்றின் மேல் கட்டைகளைப் பரப்பிய தள அமைப்பும் சாரம் என்றுதான் சொல்லப்படும் ஆங்கிலத்தில் scaffolding என்பார்கள்.

சஞ்சாரம்  என்றால் நடமாட்டம் என்று பொருள்படும். (of human beings) movement. for animals roaming

சரி, கோள்சாரம் (கோச்சாரம்) என்றால் என்ன? கோள்களைப் பிழிந்து எடுக்கும் சாறா? அல்லது சாரமா? கோள்களைப் பிழிந்து எடுப்பதா? அதெப்படி முடியும்? இங்கே அதன் பொருள் கோள்களின் நடமாட்டம் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.

கோள்களின் நடமாட்டத்தை எப்படித் தெரிந்து கொள்வது? தெரிந்து கொள்வதால் என்ன பயன்? அதை சற்று விரிவாக, உங்களுக்குப் புரியும்படி   சொல்லித் தருவதுதான் இக்கட்டுரையின் நோக்கம்.

இன்றைய கோள்கள் எங்கே நடமாடிக் கொண்டிருக்கின்றன? 

உங்களுக்குப் பலமுறை சொல்லிக்கொடுத்துள்ளேன். அதன்படி எந்த நாளுக்கும், எந்த இடத்திற்கும், எந்த நேரத்திற்கும் அதைத் தெரிந்து கொள்ளலாம்.26.8.2011 அன்று மாலை 5:00 மணிக்கு சிங்காரச் சென்னையில் இருந்து பார்த்தால் கோள்களின் நிலவரம் கீழே உள்ளபடி இருக்கும் 

இதை வைத்து எப்படி பலனைப் பார்ப்பது?

அது நாளைக்கு உரிய பாடம்!

இன்றைய பிக் அண்ட் டிராப் போஸ்ட் இவ்வளவுதான் சாமிகளா!!!!

அன்புடன்
வாத்தியார்
---------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

18.8.21

Astrology: Pick up and  Drop post  13 யோகங்கள் {Luck} 

யோகங்கள்

ஒரு கிரகமோ அல்லது ஒரு ராசியோ பார்வையினாலோ அல்லது சேர்க்கையினாலோ மற்றொரு கிரகத்துடன் சம்பந்தப்படும்போது யோகங்கள் ஏற்படுகின்றன. 

ஒரு ஜாதகம் எப்படிப்பட்டது என்பதை தீர்மானிப்பதற்கு இந்த யோகங்கள் பயன்படும் 

யோகங்கள் பலவகைப்படும். 

கஜகேசரி யோகம், சரஸ்வதி யோகம் லெட்சுமி யோகம், ராஜ யோகம், நீசபங்க ராஜ யோகம் என்று பல யோகங்கள் உள்ளனஅவற்றைப் பற்ரி விரிவாக எனது வலைப் பதிவுகளில் எழுதியுள்ளேன். மேலும் புத்தகமும் வெளியிட்டுள்ளேன் 

அவற்ரைப் படித்து பயன் பெறுங்கள் 

சம்பந்தப்பட்ட கிரகங்களின் தசா புத்திகளில் யோகங்கள் உரிய பலனை உங்களுக்கு வழங்கும் 

இன்றைய பிக் அப் அண்ட் டிராப் பதிவு நிறைவு பெறுகிறது

அன்புடன்

வாத்தியார்

=======================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

17.8.21

Astrology:இளம் வயதில் விபத்தில் சிக்கிய இளைஞனின் ஜாதகம்!!!!

Astrology:இளம் வயதில் விபத்தில் சிக்கிய இளைஞனின் ஜாதகம்!!!!

ஒரு இளைஞனின் ஜாதகம் கீழே உள்ளது. சித்திரை நட்சத்திரக்காரர் (அதாவது செவ்வாயின் நட்சத்திரக்காரர்) அந்த இளைஞன் அவனுடைய 20வது வயதில் ஒரு விபத்தில் சிக்கி முகத்தில் பலமான அடிபட்டுவிட்டது. ஜாதகப்படி அந்த விபத்திற்கான காரணம் என்ன?
 
ஜாதகத்தை அலசுவோம் வாருங்கள்!!!!

 விருச்சிக லக்கின ஜாதகம். 12ம் வீட்டில் ராகு. நடப்பு ராகு மகா திசை. 6ம் வீட்டுக்காரனான செவ்வாயின் அந்தரத்தில் விபத்து நடந்துள்ளது. சுக்கிர புத்தி அப்போது (sub period). துலா ராசியில் ராகு. அதுவும் அவர் செவ்வாயின் நட்சத்திர சாரத்தில் உள்ளார். அதனால் கடுகையான விபத்தும் காயங்களும் ஏற்பட்டுள்ளது.

அவற்றை மட்டும் இங்கே குறிப்பிட்டுள்ளேன்,

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
கேள்விக்கு உரிய ஜாதகம்:

------------------------------------------------------------

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

12.8.21

Astrology: Pick up and Drop post 12 சுக்கிர மகா தசை பலன்கள்

Astrology: Pick up and  Drop post  12 சுக்கிர மகா தசை பலன்கள் 

முன்பாக கேது மகா தசைப் பலன்களைப் பார்த்தோம் இன்று சுக்கிர மகா தசைப்  பலன்களைப் பார்ப்போம்

சுக்கிர மகா தசை – 20 ஆண்டுகள் 

பொதுவாக சுக்கிரன் எப்போதும் நன்மையான பலன்களையே வழங்குவதாகவும், சனி எப்போதும் தீமையான பலன்களையே வழங்குவதாகவும் மக்களிடையே ஒரு கருத்து நிலவுகிறது. அது தவறாகும் 

எந்த கிரகமும் முழு நன்மையையோ அல்லது முழு தீமையையோ வழங்குவதில்லை. எந்த கிரகமும் மற்ற கிரகங்கள், மற்றும் சம்பந்தப்பட்ட வீடுகளைப் பொறுத்தே நன்மை தீமைகளை வழங்குகின்றன அதை மனதில் கொள்க!!! 

சுக்கிரன் ரிஷபத்தில் {சொந்த வீட்டில்} இருப்பின், அவருடைய மகா திசையில் சுகமான வாழ்க்கையை நல்குவார்.

துலாத்தில் இருப்பின் அவர் தன்னுடைய மகா திசையில் ஜாதகருக்கு அரசாங்க ஆதரவு, செல்வம், கீர்த்தி முதலியவற்ரை வழங்குவார். 

பகை வீடுகளில் இருப்பின், மனைவி குழந்தைகளுக்கு உடல் நலக் குறைவு, வைத்தியச் செலவு. உறவினர் நண்பர்களுடன் பகை ஆகியவை உண்டாகும் 

இன்றைய பிக் அப் அண்ட் டிராப் பதிவு நிறைவு பெறுகிறது சாமிகளா!!! 

அன்புடன்

வாத்தியார்

 வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

6.8.21

Astrology: Pick up and Drop post 11 கேது மகா தசை பலன்கள்

Astrology: Pick up and  Drop post  11 கேது மகா தசை பலன்கள் 

முன்தினம் புதன் மகா தசைப் பலன்களைப் பார்த்தோம் இன்று கேது மகா தசைப்  பலன்களைப் பார்ப்போம்

கேது மகா தசை – 7 ஆண்டுகள் 

ஜாதகத்தில் கேது உச்சம் பெற்றிருந்தால் மட்டுமே அவர் தன்னுடைய மகாதிசையில் நற்பலன்களைத் தருவார். மற்றபடி தீய பலன்களையே தருவார் 

1.   லக்கினத்தில் கேது இருந்தால், சுரம், கெளரவ பங்கம், மனக் கவலை வெட்டுக்காயம் முதலியன உண்டாகும்

2.   2ம் வீட்டில் கேது ப்ருந்தால் அவருடைய மகா தசையில் செலவுகள் உண்டாகும். கண்களில் கோளாறு, குடும்பத் தொல்லைகள் உண்டாகும்    சிலருக்கு வீட்டை விட்டு வெளியேறும் சூழ்நிலை உருவாகும்/

3.   மூன்றாம் வீட்டில் இருந்தால், மகிழ்ச்சி நிலவும். சகோதரர்களுடன் சண்டை ச்ச்சரவுகள் உண்டாகும்/

4.   நான்கில் இருந்தால், பொருட்க்ளை திருட்டுக் கொடுக்க நேரிடும்.சிலருக்கு நெருப்பால் காயங்கள் ஏற்படலாம். தாய்க்குத் தொல்லை, வழக்குகள், மகிழ்ச்சியற்ற வாழ்க்கை முதலியன ஏற்படும் 

    5 ஐந்தில் இருந்தால் குழ்ந்தைகள் மற்றும் தந்தையை இழக்க நேரிடும் மதங்களில் அவநம்பிகை ஏற்படும்

6 விஷம், நெருப்பு திருடர்களால் பயம் உண்டாகும்

7.மனத் துயரம் சரீர உபாதைகள் உண்டாகும்

8. நோய், மனைவிக்கு உடல் நலக்குறைவு- அதானால் செலவுகள் உண்டாகும்

9, உடல் நலக்குறைவு

10 வாகன சுகம் ஏற்படும் வழக்குகளில் வெற்றி உண்டாகும்

11. மகிழ்ச்சி, சகோதரர்களால் நன்மை,உண்டாகும்

12 உடல் நலக் குறைவு மற்றும் எதிர்பாராத தீய பலன்கள் உண்டாகும் 

இன்றைய பிக் அப் அண்ட் டிராப் பதிவு நிறைவு பெறுகிறது சாமிகளா!!!

 அன்புடன்

வாத்தியார்

=========================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

5.8.21

Astrology: Pick up and Drop post 10 புதன் மகா தசை பலன்கள்

Astrology: Pick up and  Drop post  10  புதன் மகா தசை பலன்கள் 

முன்தினம் சனி மகா தசைப் பலன்களைப் பார்த்தோம் இன்று புதன் மகா தசைப்  பலன்களைப் பார்ப்போம்

புதன் மகா தசை – 17 ஆண்டுகள் 

1.   புதன் ஜாதகத்தில் உச்சம் பெற்றிருந்தால், அவருடைய மகா தசையில் அதிக வருமானம், ஆன்மீகத்தில் ஈடுபாடு, உயர்ந்த படிப்பு, பிறருக்கு உதவி செய்தல், நற்பெயர் ஆகியவை உண்டாகும்

2.   புதன் நீசமானால், வியாபாரத்தில் நஷ்டம், கெளரவக் குறைவு, சச்சரவுகள், உண்டாகும்

3.   சுப கிரகங்களுடன் சேர்ந்திருந்தால், அதிக மகிழ்ச்சி, விவாகம், குழந்தைகள் பிறத்தல், வியாபாரத்தில் லாபம் முதலியன ஊண்டாகும்

4.   அசுபர்களுடன் சேர்ந்திருந்தால், உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் சச்சரவுகள் உண்டாகும், பகை மற்றும் பிறரால் அவமதிப்பு முதலியன உண்டாகும்.

5.   லக்கினத்திற்கு 6, 8, அல்லது 12ம் வீடுகளில் புதன் இருந்தால்அவருடைய மகா தசையில் தீய பலன்களே நடைபெறும் 

இன்றைய பிக் அப் அண்ட் டிராப் பதிவு நிறைவு பெறுகிறது சாமிகளா!!! 

அன்புடன்

வாத்தியார்

========================================= 

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

4.8.21

Astrology: Pick up and Drop post 9 சனி மகா தசை பலன்கள்

Astrology: Pick up and  Drop post  9 சனி மகா தசை பலன்கள் 

முன்தினம் குரு மகா தசைப் பலன்களைப் பார்த்தோம் இன்று சனி மகா தசைப்  பலன்களைப் பார்ப்போம்

சனி மகா தசை – 19 ஆண்டுகள்

பொதுப் பலன்ள்: சனி மகா தட்சையில் சிந்தனைக் குறைபாடும், கெளரவத்திறகு இழுக்கும், பொருள் நஷ்டமும் ஏற்படும். 

மகரத்தில் சனி இருந்தால், அது சொந்த வீடு, அவருடைய மகா தசையில் செல்வம் பெருகும் (சேரும்} பெரியோர்களின் நட்பு உண்டாகும். 

கும்பத்தில் சனி இருந்தால்,,வெளிநாட்டுப் பிரயாணம், வழக்குகளில் வெற்றி உடல் ஆரோக்கியம் முதலியன உண்டாகும் 

பகை வீடுகளில் சனி இருந்தால், ச்ச்சரவுகள் உண்டாகும். பதவியை இழக்க வேண்டியதிருக்கும். அதிகாரிகளின் தொல்லைகள் உண்டாகும். 

நட்பு வீட்டில் இருந்தால் மகிழ்ச்சி உண்டாகும். 

இன்றைய பிக் அப் அண்ட் டிராப் பதிவு நிறைவு பெறுகிறது சாமிகளா!!! 

அன்புடன்

வாத்தியார்

=========================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

3.8.21

Astrology: Pick up and Drop post 8 குரு மகா தசை பலன்கள்

Astrology: Pick up and  Drop post  8  
குரு 
மகா தசை பலன்கள் 

முன்தினம் ராகு மகா தசைப் பலன்களைப் பார்த்தோம் இன்று குரு மகா தசைப்  பலன்களைப் பார்ப்போம் 

குரு மகா தசை – 16 ஆண்டுகள் 

1.ஒருவருடைய ஜாதகத்தில் குரு பகவான் உச்சம் பெற்றிருந்தால்அவருடைய மகாதசையில் ஜாதகருக்கு செல்வம், புகழ், மகிழ்ச்சி, மாலை மரியாதைகள் உண்டாகும்,  

2. குரு பகவான் நீசம் பெற்றிருந்தால் அவருடைய மகாதிசையில் அதைரியமாக இருக்க நேரிடும். பிறருக்கு உழைக்க நேரிடும். 

3. குரு பகவான் சொந்த வீட்டில் ஆட்சி பலத்துடன் இருந்தால், எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும், உறவினர்களின் ஆதரவு கிடைக்கும் மகிழ்ச்சி உண்டாகும் 

4. ஜாதகத்தில் லக்கினத்தில் குரு இர்ந்தால், ஆரோக்கியம் உண்டாகும் அத்துடன் செல்வம் சேரும். 

5 எட்டாம் வீட்டில் குரு இருந்தால், அவருடைய மகாதிசையில் பகைவர்களால் தொல்லை உண்டாகும். செல்வத்தை இழக்க நேரிடும் உடல் நோய் வாய்ப்பட நேரிடும். 

6 பத்தில் குரு இருந்தால், குடும்பத்தில் மகிழ்ச்சியும், தொழில் அல்லது வேலையில் மேன்மையும் உண்டாகும் 

7/ ஒன்பதில் குரு இருந்தால் அவருடைய மகாதசையில், புலமையும், சிறந்த அறிவும் உண்டாகும், அதிர்ஷ்டமாகவும் இருக்கும் 

8. பன்னிரெண்டில் குரு இருந்தால், அவருடைய மகாதசை துன்பமாகவும் அமைதியின்மை உடையதாகவும் இருக்கும் 

7. பன்னிரெண்டில் ராகு இருந்தால் அவருடைய மகா தசை அதைரியம் உடையதாகவும், எதிர்பாராத நஷ்டங்கள் உடையதாகவும் இருக்கும் 

பொதுவாக ராகு தசை சிறப்பாக இருக்காது. பிரேக் இல்லாத வண்டியில் பயணிப்பதைப் போன்றது. எப்போது என்ன நடக்கும் என்று கணிக்க முடியாது 

இன்றைய பிக் அப் அண்ட் டிராப் பதிவு நிறைவு பெறுகிறது சாமிகளா!!! 

அன்புடன்

வாத்தியார்

=========================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

2.8.21

Astrology: Pick up and Drop post 7 ராகுமகா தசைப் பலன்கள்

Astrology: Pick up and  Drop post 7  ராகு மகா தசை பலன்கள்

 முன்தினம் செவ்வாய் மகா தசைப் பலன்களைப் பார்த்தோம் இன்று ராகுமகா தசைப்  பலன்களைப் பார்ப்போம் 

ராகு மகா தசை – 18 ஆண்டுகள் 

1.ஒருவருடைய ஜாதகத்தில் லக்கினத்தில் ராகு இருந்தால் அவருடைய மகாதசையில் ஜாதகருக்கு நோய்கள் உண்டாகும், நண்பர்கள் உறவினர்களால் நஷ்டம் உண்டாகும்   

2. இரண்டாம் வீட்டில் ராகு இருந்தால், அவருடைய மகாதிசையில் நில புலன்களையும் செல்வத்தையும் இழக்க நேரிடும். 

3. ஆறாம் வீட்டில் ராகு இருந்தால், அவருடைய மகாதிசையில் தொடர்ந்து மனக் கவலைகள் உண்டாகும்  

4. ஏழாம் வீட்டில் ராகு இருந்தால், அவருடைய மகாதிசையில் விஷ சந்துக்களால் அபாயம் உண்டாகும்  

5 ஒன்பதாம் வீட்டில் ராகு இருந்தால், அவருடைய மகாதிசை துரதிர்ஷ்டமுடையதாக இருக்கும். தந்தை நோய்வாய் பட்டு அதற்கு ஜாதகர் செலவழிக்க நேரிடும். 

6 பதினொன்றில் ராகு இருந்தால், அவருடைய மகாதிசை நன்மைகள் உடையதாக இருக்கும் 

7. பன்னிரெண்டில் ராகு இருந்தால் அவருடைய மகா தசை அதைரியம் உடையதாகவும், எதிர்பாராத நஷ்டங்கள் உடையதாகவும் இருக்கும் 

பொதுவாக ராகு தசை சிறப்பாக இருக்காது. பிரேக் இல்லாத வண்டியில் பயணிப்பதைப் போன்றது. எப்போது என்ன நடக்கும் என்று கணிக்க முடியாது 

இன்றைய பிக் அப் அண்ட் டிராப் பதிவு நிறைவு பெறுகிறது சாமிகளா!!! 

அன்புடன்

வாத்தியார்

=========================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

30.7.21

Astrology: Pick up and Drop post 6 செவ்வாய் மகா தசைப் பலன்

Astrology: Pick up and  Drop post 6 செவ்வாய் மகா தசைப்  பலன்

மகா தசை பலன்கள் 

நேற்று  சந்திர மகா தசைப் பலன்களைப் பார்த்தோம் இன்று செவ்வாய் மகா தசைப்  பலன்களைப் பார்ப்போம் 

செவ்வாய் மகா தசை – 7 ஆண்டுகள் 

1.ஒருவருடைய ஜாதகத்தில் செவ்வாய் உச்சம் பெற்றிருந்தால் அவருடைய மகாதசையில் ஜாதகருக்கு கெளரவம் உண்டாகும் பொருள் வரவு உண்டாகும் 

2.நட்பு வீட்டில் செவ்வாய் இருந்தால்  அவருடைய மகா திசையில் ஜாதகருக்கு நிலம் பொருள் சேர்க்கை உண்டாகும் 

3. செவ்வாய் பகை வீட்டில் இருந்தால் அவருடைய மகா தசையில் வேலையில் குழப்பம்,அதிருப்தி மற்றும் உடலில் குறைபாடு, சச்சர்வு மன அமைதியின்மை முதலியன உண்டாகும் 

4. நீசம் பெற்றால் மனப்பிரம்மை உண்டாகும் 

5. சுப பார்வை பெற்ரிருந்தால் மகிழ்ச்சி உண்டாகும் 

6. அசுபர் பார்வை பெற்றிருந்தால் வறுமையில் வாட நேரிடும் 

இன்றைய பிக் அப் அண்ட் டிராப் பதிவு நிறைவு பெறுகிறது சாமிகளா!!! 

அன்புடன்

வாத்தியார்

=========================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

29.7.21

Astrology: Pick up and Drop post 5 சந்திர மகா தசைப் பலன்கள்

Astrology: Pick up and  Drop post 5 சந்திர மகா தசைப் பலன்கள்

மகா தசை பலன்கள்

நேற்று  சூரிய மகாதசைப் பலன்களைப் பார்த்தோம். இன்று சந்திர மகா தசைப் பலன்களைப் பார்ப்போம் 

1.ஒருவருடைய ஜாதகத்தில் லக்கினத்தில் சந்திரன் இருந்தால் அவருடைய மகாதசையில் ஜாதகருக்கு செல்வம், மகிழ்ச்சி, கீர்த்தி முதலியன உண்டாகும்

2.நட்பு வீட்டில் சந்திரன் இருந்தால்  அவருடைய மகா திசையில் ஜாதகருக்கு பணவரவு படிப்பு, வெற்றி முதலியன கிடைக்கும்,

3.சந்திரன் ஜாதகத்தில் பகை வீட்டில் இருந்தால் அவருடைய மகா தசையில் குடும்பத்தில் குழப்பம், வெறுப்பு வழக்குகளில் நஷ்டம் முதலியன உண்டாகும் 

இன்றைய பிக் அப் அண்ட் டிராப் பதிவு நிறைவு பெறுகிறது சாமிகளா!!! 

அன்புடன்

வாத்தியார்

=========================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!