மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

10.5.22

பல வெற்றிகளைக் கண்ட ஸ்டுடியோ!!!!


பல வெற்றிகளைக் கண்ட ஸ்டுடியோ!!!!

ஜெமினி_ஸ்டுடியோஸ் - 

தமிழ் சினிமாவில் தன் தடயத்தை ஆழப் பதித்த பெரிய நிறுவனம் ஜெமினி ஸ்டுடியோ. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி படங்களையும் எடுத்து சாதனைப் பட்டியலை அடுக்கிக்கொண்டே சென்றது. 1941ல் ‘மதன காமராஜன்’ என்ற படம் ஜெமினி ஸ்டுடியோவில் எடுக்கப்பட்டது, அக்கால பிரபல கர்நாடக சங்கீதக் கலைஞர் வி.வி.சடகோபன், அன்றைய பேரழகி கே.எல்.வி.வசந்தா ஆகியோர் இணைந்து இந்த படத்தில் நடித்தனர். பிரபல டைரக்டர் பி.என்.ராவ் இயக்கினார்.

‘மதன காமராஜன்’ படத்தைத் தொடர்ந்து ‘மிஸ் மாலினி’ வரையில் 7 ஆண்டுகளில் 11 திரைப்படங்களை எடுத்து வெற்றிக்கண்டது. வாசன் தன் 12-வது படமாக தனது ஜெமினி ஸ்டுடியோவின் நிரந்தர ஆஸ்தான ஹீரோ நடிகரான எம்.கே.ராதா, ரஞ்சன் மற்றும் அன்றைய சினிமா ரசிகர்களின் கனவுக்கன்னியாக விளங்கிய டி.ஆர்.ராஜகுமாரி ஆகியோரை வைத்து, ஆங்கிலப்படங்களுக்கு நிகரான ஒரு பிரமாண்டமான படத்தைத் தயாரிக்கும் திட்டத்திலும், லட்சியத்திலும் 1948ல் ‘சந்திரலேகா’வைத் தொடங்கினார்.

ஆங்கிலப் படங்களுக்கு நிகரான அற்புதக் காட்சிகள் நிறைந்த, தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதன் முறையாக 30 லட்ச ரூபாய்களுக்கு மேல் செலவு செய்து, பதினெட்டாயிரம் அடிகள் நீளத்தில் தயாரிக்கப்பட்டு, தமிழ்ப் புத்தாண்டுக்கு 5 நாட்கள் முன்னதாக 9.4.1948ல் ரிலீசானது ‘சந்திரலேகா’ திரைப்படம். தமிழ் சினிமா ரசிகர்கள் பிரமித்து திகைத்துத் திரும்பத் திரும்ப அந்தப் படத்தைக் கண்டுகளித்தனர். ‘சந்திரலேகா’ போன்ற பல பிரமாண்டமான திரைப்படங்களையும் தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழி படங்களையும் தயாரித்து சரித்திரச் சாதனை படைத்தது ஜெமினி ஸ்டுடியோ.

அன்றைய சினிமாவின் பிதாமகரும், இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் ஸ்டுடியோ அதிபருமான கே.சுப்ரமணியம் அவர்கள், மவுன்ட் ரோட்டில் தனக்குச் சொந்தமான ஸ்டுடியோவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதன் காரணமாக அதை விற்றுவிடத் தீர்மானித்திருந்தார். இதைக் கேள்விப்பட்ட எஸ்.எஸ்.வாசன், எண்பத்தைந்தாயிரம் ரூபாய்க்கு விலைக்கு வாங்கி ‘ஜெமினி ஸ்டுடியோஸ்’ என்று பெயரிட்டு அதன் கீழே ‘மூவிலேண்ட்’ என்றும் ஆங்கிலத்தில் பொறித்து வைத்தார்.

ஜெமினி - ஸ்டுடியோஸ் ஆகிய இரண்டு சொற்களுக்கும் இடையில் ‘இரட்டை’ என்பதைக்  குறிப்பதன் பொருட்டு கோவணம் கட்டிக்கொண்டு குழலூதும் இரண்டு குழந்தைகளின் அழகிய உருவத்தையும் வரைந்து வைத்தார்... 78 ஆண்டுகளுக்கு முன்பு உருவான ‘சதிலீலாவதி’ திரைப்படம் அது சம்பந்தப்பட்ட அத்தனை பேருக்குமே அறிமுகப்படமாகவும், ஒரு லட்சியப் படமாகவும் அமைந்தது. அந்தப் படத்தின் ஒரு சாதாரண கதாசிரியராகத்தான் எஸ்.எஸ்.வாசன் தனது திரைப்படப் பயணத்தையும், திக் விஜயத்தையும் தொடங்கினார்!

1958ம் ஆண்டு ஜூலை 31ம் தேதி தென்னக திரை வரலாற்றில் முதன்முதலாக ஜெமினி கலர் லெபாரட்டரி திறக்கப்பட்டது அதன் தனிச்சிறப்பு. ஜெமினி ஸ்டுடியோவில் தமிழில் 28 படங்களும், தெலுங்கில் 19 படங்களும், இந்தியில் 24 படங்களும், குஜராத்தி, பெங்காலி, கன்னடம், மலையாளம், ஆங்கிலம், பிரெஞ்சு மொழிகளில் 7 படங்களும் எடுக்கப்பட்டுள்ளது. சந்திரலேகாவைப்போல மற்றொரு பிரமாண்ட படைப்பாக 1953ல் ‘அவ்வையார்’ படத்தை வாசன் தயாரித்து வெற்றி பெற்றார்.

சினிமாவிற்கான எந்தச் சிறப்பம்சமும் இல்லாத அவ்வையாரின் வரலாற்றை அனைத்துத் தரப்பு ரசிகர்களும் பார்த்துப் பாராட்டும்படியான ஒரு வெற்றிப்படத்தை தந்தது. அவ்வையார் பாத்திரத்தில் தோன்றி நடிக்க அன்றைய பிரபல கர்நாடக சங்கீதப் பாடகியாகப் புகழ் பெற்ற ‘கொடுமுடிக்கோகிலம்’ என்று அழைக்கப்பெற்ற கே.பி.சுந்தராம்பாளை வாசன் தேர்ந்தெடுத்தார். அவ்வையார் வேடம் அணிந்து அற்புதமாகப் பாடி, அருமையாக நடிக்கவல்ல ஒரு நடிகை இன்றுவரையில் வேறு எந்தப் பெண்ணும் பிறக்கவில்லை என்று அனைவருமே கூறும் அளவிற்கு கே.பி.சுந்தராம்பாள் வயதிலும், தோற்றத்திலும் அப்படிப் பொருந்தி அமைந்திருந்தார்.

அந்த ஒரு சினிமா சிந்தனையே அவருடைய அறிவிற்கும், அனுபவத்திற்கும் மாபெரும் வெற்றியை தந்தது. தஞ்சாவூர் பகுதியில் அமைந்த திருத்துறைப்பூண்டியில் 1904ம் வருடம் ஆகஸ்ட் மாதம் 26ம் தேதி ஒரே மகனாகப் பிறந்தார் ஸ்ரீநிவாசன் என்னும் வாசன். நான்கு வயது இளம் பருவத்திலேயே தன் தந்தையை இழந்து தாயாருடன் அவருடைய உடன் பிறந்த மூத்த சகோதரியின் வீட்டில் தங்கி ஆரம்பக் கல்வி கற்று வந்தார்.

ஏழ்மை நிலையின் காரணமாக சகோதரியின் வீட்டில் தங்கியிருந்த தாய் வாலாம்பாள், அந்தக் காலத்தில் கைம்பெண்களுக்குக்கென்றே ஏற்பட்ட இட்லி வியாபாரம் செய்து கொண்டு தன் மகனை வளர்த்து அருகிலிருந்த எலிமென்டரி ஸ்கூலில் படிக்க வைத்தார். உயர்நிலைப்பள்ளிக் கல்வி முடிந்து மேற்கொண்டு பட்டப்படிப்பிற்காக சென்னைக்கு வந்து கல்லூரியில் சேர்ந்து பட்டப்படிப்பு நிறைவு பெற்று அரசாங்க உத்தியோகம் பார்ப்பதைவிட தொழில் செய்து முன்னேற்றம் அடையலாம் என்ற நோக்கத்துடன் பலவிதமான சிறு சிறு தொழில்களை மேற்கொண்டு அதில் கணிசமான லாபமும் பெற்ற வாசன் ஜெமினி ஸ்டுடியோவையும் வரலாற்றில் இடம்பெறச் செய்தார்.

ஜெமினி ஸ்டுடியோ குறித்து பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி கூறுகையில், ‘‘என்னுடைய வாழ்நாளில் மறக்கவே முடியாத ஒரு நிறுவனம் ஜெமினி ஸ்டுடியோ. 19வது வயதிருக்கும் போது ஜெமினி சார் என்னுடைய திறமையைக் கண்டு அழைத்தார். அவர் மூலமாகத்தான் எஸ்.எஸ்.வாசன் அவர்களை சந்தித்தேன். தெலுங்கில் ‘மூன்று பிள்ளை’ தொடங்கி தமிழில் ‘ஒளி விளக்கு’, ‘மோட்டார் சுந்தரம் பிள்ளை’, ‘இருகோடுகள்’, ‘பாமா விஜயம்’, ‘எதிர் நீச்சல்’ ஆகிய படங்கள் எல்லாம் ஜெமினி ஸ்டுடியோவில் எடுக்கப்பட்டதுதான்.

வாசன் சார் பெண்களுக்கு கொடுத்த அந்த முக்கியத்துவம் இன்று வரை எந்த நிறுவனமும் அளிக்கவில்லை என்றுதான் சொல்லுவேன். என்னுடைய திறமைகளை கண்டறிந்து அதை சரியான முறையில் பயன்படுத்தி வெளிச்சத்துக்கு கொண்டுவந்தது ஜெமினி ஸ்டுடியோதான். ஒழுக்கமும், பாதுகாப்பும் நிறைந்தது. முக்கியமாக பெண்களுக்கு கொடுக்கப்படவேண்டிய மரியாதை அங்கு கொடுக்கப்பட்டது. ஜெமினி ஸ்டுடியோவில் பணிபுரிந்ததில் எல்லோருமே பெருமைப்படுவார்கள்.

ஒவ்வொரு துறையையும் வாசன் சார் அவர்கள் தனது நேரடி பார்வையில் வைத்திருப்பார். பணியாற்றக்கூடிய அனைத்து ஊழியர்களிடமும் அன்போடும் பழகக்கூடியவர். ஜெமினி ஸ்டுடியோவில் ஆண்-பெண் அனைவரும் சமம். இது ஒரு நிறுவனமாக இருந்தது என்பதை விட ஒரு குடும்பமாகத்தான் இருந்தது. கடைநிலை ஊழியரின் கருத்துக்களையும் கூட கேட்பவர் வாசன். ஒரு தந்தையை விட அதிகமாக அக்கறை எடுத்துக்கொள்ளும் மனிதாபிமானம் மிக்க மனிதர். ஒரு நிகழ்வு நினைவிற்கு வருகிறது.

ஒரு நாள் படப்பிடிப்பின் போது மயங்கி விழுந்து விட்டேன். அப்போது நான் குழந்தை பெற்று மூன்று மாதங்கள் இருக்கும். உடல்நிலை கொஞ்சம் பலவீனமாக இருந்தது. உடனே அவருக்கு தெரிந்த மருத்துவரை அழைத்து வந்து மருத்துவம் பார்த்து, நான் எழுந்தவுடன்  என்னை அழைத்து என்னுடன் உரையாடி, கவலைப்படாமல் உன்னை நீ கவனித்துக்கொள்ள வேண்டும். உனக்கு இருக்கின்ற திறமை கண்டிப்பாக உன்னை உயர்த்தும் என்று தன்னம்பிக்கையை தந்தார். என்னுடைய வாழ்நாளில் அப்படி ஒரு தயாரிப்பாளரையும் ஒரு நிறுவனரையும் நான் இதுவரை பார்த்ததில்லை’’ என்றார்.

- ஜெ.சதீஷ்
------------------------------------------
படித்தேன்: பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

24.11.15

சினிமா: என்ன நக்கல்டா சாமி!



சினிமா: என்ன நக்கல்டா சாமி!

 திரைப்படப் பாடல். அதுவும் தத்துவப் பாடல். அதில் என்ன நக்கலாக சமூகத்தின் அவலங்களைக் கவிஞர் பிளந்து கட்டியிருக்கிறார் - நீங்களே பாருங்கள்!

 பாடலின் சரணத்தை இப்படித் துவக்கினார் கவிஞர்:

 ”உண்டாக்கி விட்டவர்கள் ரெண்டு பேரு - இங்கே 
கொண்டு வந்து போட்டவர்கள் நாலு பேரு 
கொண்டாடும் போது ஒரு நூறு பேரு - உயிர் 
கூடு விட்டுப் போன பின்னே கூட யாரு?” 
(உண்டாக்கி விட்டவர்கள்) 

 ஒரு மனிதன் உலகத்திற்கு வருவதற்குக் காரணம் இரண்டு பேர்கள். அதாவது அவனது பெற்றோர்கள். ஆடி முடித்து, அவன் சனீஷ்வரனிடம் போர்டிங் பாஸ் வாங்கி தன் கடைசிப் பயணத்தை நடத்துவதற்கு உதவுபவர்கள் 4 பேர்கள். அதை எளிமையாகச் சொன்ன கவிஞர், அதற்கு பிறகுதான் சாட்டையைக் கையில் எடுக்கிறார். வரிகளைப் பாருங்கள்:

 ”தீராத நோய்களையும் தீர்த்து முடித்தான் - இவன் 
தேராத வைத்தியத்தைத் தேர்ந்து படித்தான் 
படித்தான் முடித்தான் ஹோய் 
தீராத நோய்களையும் தீர்த்து முடித்தான் - இவன் 
தேராத வைத்தியத்தைத் தேர்ந்து படித்தான் - பிறர் 
நோய் தீர்க்கும் வைத்தியன் தன் 
நோய் தீர்க்க மாட்டாமல் பாய் போட்டுத் தூங்குதப்பா - உயிரும் 
பேயோடு சேர்ந்ததப்பா ஹோய்” 

 மருத்துவர். எத்தனையோ மனிதர்களின் நோய்களைத் தீர்த்தவர், அவருக்கு நோய் வந்த போது, அதைத் தீர்க்க முடியாமல் போய்ச் சேர்ந்ததைச் சொல்லி, காலம் வரும்போது, மருத்துவமாவது, மருந்தாவது - ஒன்றும் பயன்படாது என்பதை கவிஞர் தனக்கே உரிய பாணியில் சொல்கிறார்

 அத்துடன் விட்டாரா? அடுத்து பஞ்சாங்கம் பார்த்து சுப காரியங்களுக்கு நேரம் குறித்துக் கொடுக்கும் ஜோதிடரையும் ஒரு பிடி பிடிக்கிறார்: வரிகளைப் பாருங்கள்:

 கல்யாணம் செய்வதற்கும் நாள் சொல்லுவார் - எந்தக்
காரியத்தை செய்வதற்கும் தேதி குறிப்பார்
கல்யாணம் செய்வதற்கும் நாள் சொல்லுவார் - எந்தக்
காரியத்தை செய்வதற்கும் தேதி குறிப்பார் - நல்ல
சேதி சொல்லும் ஜோசியர்க்கும் நீதி சொல்லும் சாவு வந்து
தேதி வைத்து விட்டதடியோ - கணக்கில்
மீதி வைக்கவில்லையடியோ ஹோய்

 காலம் அவருக்கே தேதி குறித்துக் கொடுத்துவிட்டதை அசத்தலாகச் சொல்கிறார்!

 பிறகு பணம் பணம் என்று அலைந்து பல வழிகளிலும் பணத்தைச் சேர்த்து சொத்துக்களாக வாங்கிக் குவிக்கும் பணக்காரர்களையும் தன் சாட்டையால் ஒரு பிடி பிடிக்கிறார். பாடல் வரிகளைப் பாருங்கள்:

பட்டணத்தில் பாதி இவன் வாங்கி முடித்தான் - அந்தப்
பட்டயத்தில் கண்டது போல் வேலியெடுத்தான்
எடுத்தான் முடித்தான் ஹோய்
பட்டணத்தில் பாதி இவன் வாங்கி முடித்தான் - அந்தப்
பட்டயத்தில் கண்டது போல் வேலியெடுத்தான் - அதில்
எட்டடக்கு மாடி வைத்துக் கட்டிடத்தைக் கட்டி விட்டு
எட்டடிக்குள் வந்து படுத்தான் - மண்ணைக்
கொட்டியவன் வேலியெடுத்தான் ஹோய்

உண்டாக்கி விட்டவர்கள் ரெண்டு பேரு - இங்கே
கொண்டு வந்து போட்டவர்கள் நாலு பேரு
கொண்டாடும் போது ஒரு நூறு பேரு - உயிர்
கூடு விட்டுப் போன பின்னே கூட யாரு?

 நீ நன்றாக பணம் பதவி செல்வாக்கோடு இருக்கும்போது அதைக்
கொண்டாடி அனுபவைப்பதற்கு உன்னோடு ஒரு நூறு பேராவது இருக்கிறார்களே - நீ இறந்து இடுகாட்டுக்குப் போகும் போதும்,
அதற்குப் பின் மேல் உலகம் போகும்போதும் உன்னுடன் யார்
வருவார்கள் என்று என்றைக்காவது யோசித்துப் பார்த்தாயா என்று
நச்’சென்று கேட்டார் பார்த்தீர்களா? அதுதான் இந்தப் பாடலின்
முத்தாய்ப்பான வரி!

 படம்: முகராசி 
 பாடலை இயற்றியவர்: கவிஞர் வாலி 
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன் 
இசை: கே.வி. மஹாதேவன் 
ஆண்டு: 1968 
சரி நடிப்பு யார்? பாடலின் காணொளி உள்ளது நீங்களே பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்!
 அன்புடன் 
வாத்தியார் 
======================================


Our sincere thanks to the person who uploaded this video in the net
===================================================
வாழ்க வளமுடன்!வளர்க நலமுடன்!

14.11.15

Week end post: இதல்லவா காதல் மயக்கம்!!!


Week end post: இதல்லவா காதல் மயக்கம்!!!

கவியரசர் கண்ணதாசனின் காதல் பாடல்கள் - பகுதி ஒன்று  

அன்பு, பாசம், நேசம், கருணை, தியாகம், மகிழ்ச்சி, நெகிழ்ச்சி, பரவசம், காதல், கோபம், தாபம், வருத்தம், துக்கம் என்று பல கலவையான உணர்வுகளால் ஆனதுதான் மனித மனம்!

அவற்றுள் மிகவும் சக்திவாய்ந்த உணர்வு காதல் உணர்வு என்றால் அது நிதர்சனமான உண்மை!

"காதல் வந்துவிட்டால் கண் உறங்காது" என்றார் கவியரசர். கண் மட்டுமா உறங்காது? மனதின் எல்லா செயல்பாடுகளுமே மாறிவிடும். அதையும் அவர் தன்னுடைய பல பாடல்களில் சிறப்பாக விவரித்து எழுதியுள்ளார்.

ஒரு பாடலா அல்லது இரண்டு பாடலா நூற்றுக்கணக்கான காதல் பாடல்களை அவர் எழுதியுள்ளார்.

படத்தில் காதலர்களின் தன்மைக்கேற்ப, மனநிலைமைக் கேற்ப பல அற்புதமான பாடல்களை அவர் எழுதியுள்ளார்.

காதலினால் ஏற்படும் தவிப்பு, ஏக்கம், கிறக்கம், மயக்கம், வாட்டம், (பிரிவினால் ஏற்படும்) துக்கம், மகிழ்ச்சி, நெகிழ்ச்சி என்று எல்லா
உணர்வுகளுக்கும் பாட்டு எழுதியிருக்கிறார் அந்தக் கவிமாமன்னர்.

எந்த உணர்வை மேல்நிலைப் படுத்தி இந்தக் காதல் பாட்டு அத்தியாயத்தைத் துவக்குவது என்ற சிறு மனக்குழப்பம் என் மனதில் ஏற்பட்டது!.

காதல் என்ற நந்தவனத்திற்குள் வந்தாகிவிட்டது. கவியரசர் வைத்துவிட்டுப்போன பல நறுமண மலர்கள் உள்ளன. வரிசை என்ற கட்டுப்பாட்டை உடைத்துவிட்டுக் கண்ணில் படுவதை எல்லாம், படுகின்ற விதத்தில் உங்களுக்குக் கொடுப்பது என்ற முடிவிற்கு வந்து விட்டேன்.

இதோ காதல் வரிசையில் முதல் பாடல். பலருக்கும் இது மிகவும் பிடித்த பாடல் என்பதை இன்றும் வானொலியில் ஒலிக்கும் இந்தப் பாடல் சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கின்றது!
--------------------------------------------------
“சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திடக் கண்டேனே
செவ்வானம் கடலினிலே கலந்திடக் கண்டேனே
மொட்டு விரிந்த மலரினிலே வண்டு மூழ்கிடக் கண்டேனே
மூங்கிலிலே காற்று வந்து மோதிடக் கண்டேனே

(சிட்டு)

பறந்து செல்ல நினைத்து விட்டேன் எனக்கொரு சிறகில்லையே
பழக வந்தேன் தழுவ வந்தேன் பறவை துணையில்லையே
எடுத்துச் சொல்ல மனமிருந்தும் வார்த்தை வரவில்லையே
என்னென்னவோ நினைவிருந்தும் நாணம் விடவில்லையே..
ஹோய்...

(சிட்டு)

ஒரு பொழுது மலராக கொடியில் இருந்தேனா
ஒரு தடவை தேன் கொடுத்து மடியில் விழுந்தேனா
இரவினிலே நிலவினிலே என்னை மறந்தேனா
இளமை தரும் சுகத்தினிலே கன்னம் சிவந்தேனா..
ஹோய்..

(சிட்டு)

படம் : புதிய பறவை - வருடம் 1964
குரல் : சுசீலா
பாடல் : கண்ணதாசன்
இசை : எம்.எஸ்.வி.
நடிகை : சரோஜாதேவி

நாயகிக்கு வந்து விட்ட காதல் உணர்வைச் சொல்ல முத்தம் கொடுத்துக் கொஞ்சும் சிட்டுக்குருவிகளையும், கடலில் கலக்கின்ற செவ்வானத்தையும் உதாரணமாகக் காட்டிப் பாடலைத் துவக்கிய கவியரசர்,
"பறந்து செல்ல நினைத்து விட்டேன் எனக்கொரு சிறகில்லையே பழக வந்தேன் தழுவ வந்தேன் பறவை துணையில்லையே!
எடுத்துச் சொல்ல மனமிருந்தும் வார்த்தை வரவில்லையே என்னென்னவோ நினைவிருந்தும் நாணம் விடவில்லையே"
என்று தனக்கொரு காதல் துணை இன்னும் வரவில்லையே என்று ஏங்குவதைச் சிறப்பாகச் சொன்னதோடு, அவள் கனவு நாயகன் கிடைத்தும்கூட, அவனிடம் தன் காதலை எடுத்துச் சொல்ல வார்த்தைகள் வராததையும், நாணம் விடாததையும் சொன்னதுதான் இந்தப் பாடலின் சிறப்பு

அதோடு விட்டாரா?

"ஒரு பொழுது மலராக கொடியில் இருந்தேனா
ஒரு தடவை தேன் கொடுத்து மடியில் விழுந்தேனா
இரவினிலே நிலவினிலே என்னை மறந்தேனா
இளமை தரும் சுகத்தினிலே கன்னம் சிவந்தேனா.."

என்று நாயகியின் மன ஏக்கத்தையும் முத்தாய்ப்பாகச் சொல்லிப் பாடலை முடித்தார் பாருங்கள் - அதனால் இந்தப் பாடல் அமரத்துவம் பெற்றது!
-------------------------------------------------------------------------
மற்றொரு பாடல்.

“பொன்னை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே
புதையல் தேடி அலையும் உலகில்
இதயம் தேடும் என்னுயிரே!

ஆயிரம் மலரில் ஒரு மலர் நீயே
ஆலய மணியின் இன்னிசை நீயே
தாய்மை எனக்கே தந்தவள் நீயே
தங்கக் கோபுரம் போல வந்தாயே!

புதிய உலகம் புதிய பாசம்
புதிய தீபம் கொண்டு வந்தாயே!

பறந்து செல்லும் பறவையைக் கேட்டேன்
பாடிச் செல்லும் காற்றையும் கேட்டேன்
அலையும் நெஞ்சை அவரிடம் சொன்னேன்
அழைத்து வந்தார் என்னிடம் உன்னை

இந்த மனமும் இந்த உலகும்
என்றும் வேண்டும் என்னுயிரே!

ஆலமரத்தின் விழுதினைப்போலே
அணைத்து நிற்கும் உறவு தந்தாயே
வாழைக்கன்று அன்னையின் நிழலில்
வாழ்வது போலே வாழ வைத்தாயே!

உருவம் இரண்டு உயிர்கள் இரண்டு
உள்ளம் ஒன்றே என்னுயிரே!’’

படம்: ஆலய மணி - வருடம் 1962
பாடல் : கண்ணதாசன்
இசை : எம்.எஸ்.வி.
குரல்: திரு. டி.எம்.செளந்தரராஜன்

கவியரசர் அவர்கள் எழுதிய பாடல்களில் மிகவும் சிறந்த நூறு பாடல்களைத் தேர்வு செய்தால், நிச்சயமாக இந்தப் பாடலும் அதில் அடங்கும்.

இந்தப் பாட்டிற்கு விளக்கம் எழுதுவது அறிவீனம் பாடலின் ஒவ்வொரு சொல்லுமே விளக்கமாக இருக்கும்.

பாடலின் முத்தாய்ப்பான வரிகள் என்ன என்கிறீர்களா?

அதைச் சொல்லாமல் இந்தப் பதிவை நிறைவு செய்வேனா? கீழே கொடுத்துள்ளேன்.

“உருவம் இரண்டு உயிர்கள் இரண்டு
உள்ளம் ஒன்றே என்னுயிரே!’’

காதல் பாடல்கள் அடுத்த வார இறுதியில் தொடரும்
-----------------------------------------------------
இந்த இரண்டு பாடல்களில் உங்கள் மனதை மிகவும் கவர்ந்தது எந்தப் பாடல்?
அன்புடன்,
வாத்தியார்

முதல் பாடலின் காணொளி வடிவம் கீழே உள்ளது.
our sincere thanks to the person who uploaded this song in the net



=====================================================
வாழ்க வளமுடன்!வளர்க நலமுடன்!

2.11.15

சினிமா: என்ன நடிப்புடா சாமி - கலக்கிட்டாங்க!


சினிமா: என்ன நடிப்புடா சாமி - கலக்கிட்டாங்க! 

 எழுதுவதற்கு வந்து 10 ஆண்டுகளான பிறகு திரைப்படங்களைப் பார்க்கும் பழக்கம் என்னிடம் குறைந்து விட்டது. நேரமின்மைதான் காரணம்.

 ஆனாலும் அவ்வப்போது கிளிப்பிங்களின் மூலம் சில நல்ல காட்சி
களையும் பாடல்களையும் பார்ப்பதுண்டு.

 அப்படி நேற்றுப் பார்த்த படம் ஒன்றின் க்ளிப்பிங்கை உங்களுக்காக
இன்று பதிவிட்டுள்ளேன். திரைப்பட நடிகை பிரியாமணி பிச்சு உதறியிருக்கிறார். சிறந்த நடிகைக்கான தேசிய விருதை அவருக்குப் பெற்றுத்தந்த படம் அது. படத்தின் பெயர். பருத்திவீரன். வெளியான
தேதி 23.2. 2007. பிரியாமணி பெங்களூரில் வசிக்கும் தமிழ் ஐயர் குடும்பத்தைச் சேர்ந்தவர். அப்படத்தில் கதாநாயகனாக நடித்தவர்
கார்த்திக் அவருக்கு அறிமுகம் தேவையில்லை. படத்தின் இயக்குனர்
அமீர்

 4 நிமிடங்கள் ஓடக்கூடிய காணொளிதான். அவசியம் பார்த்து மகிழுங்கள்

அன்புடன் 
வாத்தியார் ==============================================================


வாழ்க வளமுடன்!வளர்க நலமுடன்!

14.3.14

Film Songs அன்றும் இன்றும்


Film Songs அன்றும் இன்றும்

வாரம் முழுவதும் ஜோதிடத்தையே புரட்டிக்கொண்டு இருக்காமல், இன்று சற்று மனம் மாற்றத்திற்காக திரையிசைப் பாடல்களைப் பார்ப்போம்.
1958ஆம் ஆண்டில் வெளிவந்த படப் பாடல் ஒன்றையும், சமீபத்தில் வெளிவந்த படப் பாடல் ஒன்றையும் கொடுத்திருக்கிறேன்.

தொழில் நுட்ப வளர்ச்சியால் இப்போது வரும் திரையிசைப் பாடல்களும் தனித் தன்மை பெறுவது காலத்தின் கட்டாயமாகிறது.

இரசனை என்பது தனி மனித உணர்வு. தனி மனித சம்பந்தமானது. இரண்டு பாடல்களுமே உங்கள் மனதைத் தொடுமானால் எனக்கு மகிழ்ச்சியே!

அன்புடன்
வாத்தியார்

-----------------------------------------
முதலில் அன்று வந்த பழைய பாடல்:

படம்: நாடோடி மன்னன் (1958)
பாடியவர்கள்: டி.எம்.செளந்தரராஜன் & ஜிக்கி
பாடலாக்கம்: கவிஞர் சுரதா
நடிப்பு: புரட்சித்தலைவர் & சரோஜாதேவி

--------------------------------------------------
கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே
இன்ப காவிய கலையே ஓவியமே
கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே
இன்ப காவிய கலையே ஓவியமே
செழும் கனி போல சுவை தரும் மாமணி
என் பாடிடும் பூங்குயிலே
செழும் கனி போல சுவை தரும் மாமணி
என் பாடிடும் பூங்குயிலே -
இன்ப காவிய கலையே ஓவியமே (கண்ணில் வந்து)

சுடர் மின்னல் கண்டு தாழை மலருவது போல
உனை கண்டு உள்ளமே மகிழ்ந்தேனே
சுடர் மின்னல் கண்டு தாழை மலருவது போல
உனை கண்டு உள்ளமே மகிழ்ந்தேனே
நீல வானம் இல்லாத ஊரே இல்லை
உலகினில் மழை இன்றி யேதும் இல்லை
அமுதே உனை அன்றி வாழ்வே இல்லை
அன்பே இது உண்மையே -
இன்ப காவிய கலையே ஓவியமே (கண்ணில் வந்து)

அங்கும் இங்கும் விளையாடி
அலை போல உறவாடி
அங்கும் இங்கும் விளையாடி
அலை போல உறவாடி
ஆனந்தம் காணும் நேரம் தானே
உள்ளத்தின் ஆசையே உன்னை உன்னை தேடுதே
உன்னை உன்னை தேடுதே ....
கொஞ்சி பேசும் கிழியே
நல் இன்பம் தரும் ஜோதியே
மானே மலரினும் மெல்லியது காதலே
கொஞ்சி பேசும் கிழியே
நல் இன்பம் தரும் ஜோதியே
மானே மலரினும் மெல்லியது காதலே
மகிழ்வோம் நாமே புதுமை வாழ்விலே
மகிழ்வோம் நாமே புதுமை வாழ்விலே -
இன்ப காவிய கலையே ஓவியமே (கண்ணில் வந்து)


பாடலின் காணொளி வடிவம்
Our sincere thanks to the person who uploaded this song in the net

)
=============================================================
2. இன்றையப் பாடல்

படம்: டிஷ்யும் (2006)
நடிப்பு: ஜீவா & சந்தியா
பாடலாக்கம்: கவிஞர் வைரமுத்து
இசை: விஜய்ஆன்ட்டனி
பாடியவர்கள்: காயத்ரி,விஜய்ஆன்ட்டனி

----------------------------------------
பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ கண் திறப்பதனால்
பூவுக்கு பனித்துளிகள் நீ முகம் கழுவுவதால்
கடலுக்கு நுரைகளெல்லாம் நீ பல் துலக்குவதால்
காலையில் அடித்தமழை நீ என்னை தழுவியதால்
பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ கண் திறப்பதனால்
பூவுக்கு பனித்துளிகள் நீ முகம் கழுவுவதால்
கடலுக்கு நுரைகளெல்லாம் நீ பல் துலக்குவதால்
காலையில் அடித்தமழை நீ என்னை தழுவியதால்

நீ விழியால் விழியை பறித்தாய்
உன் உயிரினை எனக்குள்ளே விதைத்தாய்
உன் அழகால் எனை நீ அடித்தாய்
அய்யோ அதிசய உலகத்தில் அடைத்தாய்

நீ இதமாய் இதயம் கடித்தாய்
என் இதழ் சொட்டும் அருவியில் குளித்தாய்
நீ மதுவாய் எனையே குடித்தாய்
இந்த உலகத்தை உடைத்திட துடித்தாய்

காலம் வந்த பிறகு ஒட்டிக்கொள்ளும் சிறகு
வாழ ஒரு பூமி இனி தேவை இல்லை
ஒப்புக்கொண்ட உயிர்கள் கட்டிக்கொண்டு பறந்தால்
எட்டி நிக்கும் வானம் ஒன்றும் தூரமில்லை

பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ கண் திறப்பதனால்
பூவுக்கு பனித்துளிகள் நீ முகம் கழுவுவதால்

நீ மெதுவாய் நடந்தால் கடந்தால்
என் உணர்ச்சிகள் தீப்பிடித்து எரியும்
ஏய் நீ துளியாய் எனக்குள் விழுந்தால்
என் உயிர் பனிக்கட்டியாக உறையும்

நீ இயல்பாய் அழைத்தால் சிரித்தால்
என் உள்ளம் வந்து மண்டியிட்டு தவளும்
நீ நெருப்பாய் முறைத்தால் தகித்தால்
என் நெஞ்சிக்குள்ளே கப்பல் ஒன்று கவிழும்

கண்களில் மின்மினி புன்னகை தீப்பொறி
மின்னலில் சங்கதி புரிகின்றதே
தொட்டவுடன் உருகும் ஒட்டிக்கொண்டு பழகும்
புத்தம் புது மிருகம் தெரிகின்றதே

பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ கண் திறப்பதனால்
பூவுக்கு பனித்துளிகள் நீ முகம் கழுவுவதால்

கடலுக்கு நுரைகளெல்லாம் நீ பல் துலக்குவதால்
காலையில் அடித்தமழை நீ என்னை தழுவியதால்


பாடலின் காணொளி வடிவம்
)

Our sincere thanks to the person who uploaded this song in the net

------------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!வளர்க நலமுடன்!

9.2.12

Cinema நம்மைக் கிறங்க அடிக்கும் குரல்கள்

 Cinema நம்மைக் கிறங்க அடிக்கும் குரல்கள்

குரல் வளம் மிக்கவர்கள் என்று சொல்லும்போது, பலரையும் சொல்லலாம். நம்மைக் கிறங்க அடிக்கும் குரல்கள் என்று சொல்லும்போது, ஒரு சிலரைத்தான் குறிப்பிட முடியும்.

என் மனத்திரையில் எப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கும் சிலருடைய குரல்களை இன்று பதிவிடுகிறேன்

1. முகமது ரஃபி, பின்னணிப் பாடகர்

24.12.1924 ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் அமிர்த சரசரஸிற்கு அருகே உள்ள கிராமம் ஒன்றில் பிறந்த இந்த மேதை. திரை இசைக்கு தனது 20ஆவது வயதில் அடியெடுத்து வைத்தார் (1944) 1949ஆம் ஆண்டு முதல் 1970ஆம் ஆண்டு வரை இந்தியத் திரை இசையில் இவரது கொடிதான் பறந்த்து. லட்சக்கணக்கான மக்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டார். எண்ணற்ற பாடல்களைப் பாடினார்

நமது வகுப்பறை மாணவி தேமொழியின் தோழி விக்கி காமாட்சியிடம் ரஃபியைப் பற்றிய எண்ணற்ற செய்திகள் உள்ளன. கேட்டு வாங்கிப் படித்து மகிழுங்கள்

எந்த ஸ்தாயில் வேண்டுமென்றாலும் அசத்தலாகப் பாடக்கூடியவர். எந்த உணர்வை வேண்டுமென்றாலும் நொடியில் தன் பாடல் மூலம் வெளிப்படுத்தக் கூடியவர். பிரபல பின்னணிப்பாடகர் கே.ஜே.ஜேசுதாசே நான் அவருடைய ஆத்மார்த்தமான ரசிகர் என்று சொல்லியுள்ளார். அதைவிட வேறு என்ன சான்றிதழ் வேண்டும்?

எடுத்துக்காட்டிற்கு ஒரு பாடலைக் கொடுத்துள்ளேன்:

பாடலும் படமும் ; Chahunga Mainh Tujhe / Film: Dosti (1964)


----------------------------------------------------------------------------------


அசத்தலான குரல் வளம் மிக்க நடிகர்கள் என்னும்போது சட்டென்று என் மனத்திரையில் நிற்பவர்கள் 3 பேர்கள். ஒருவரை இன்று பார்ப்போம். மற்றவர்களை அடுத்த் வாரம் பார்ப்போம்:

எம்.ஆர்.ராதா

மெட்ராஸ் ராஜகோபால ராதாகிருஷ்ண நாயுடு என்னும் பெயர் சுருக்கமாக எம்.ஆர்.ராதா என்றாகியது.

21.2.1907 ஆம் தேதியன்று திருச்சியில் பிறந்தவர். 72 ஆண்டு காலம் புகழோடு வாழ்ந்துள்ளார்.

6.11.1954ல் திரையுலகிற்கு வந்தவர் தன்னுடைய நடிப்பு மற்றும் குரல் வளம் மூலம் பலரது மனதிலும் இடம் பிடித்தார். அதற்கு முன் நாடக மேடைகளில் கொடிகட்டி பறந்தார். சுமார் 5,000ற்கும் மேற்பட்ட நாடக் நிகழ்ச்சிகளை பல ஊர்களில் அரங்கேற்றியுள்ளார்.

எடுத்துக்காட்டிற்கு ஒரு காட்சியைக் கொடுத்துள்ளேன்:

படம்: ரத்தக் கண்ணீர். (1954)



Our sincere thanks to persons who uploaded the video clippings

அன்புடன்
வாத்தியார்

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்!