மாணவர் பதிவேடு (Enrolment Register)
என்னைப் பற்றி
Contact vaaththiyar
Please write to Vaaththiyar
திருமணப் பொருத்தம்
Marriage Matching
My Phone Number and whatsApp number
My email ID
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624
வந்தவர்களின் எண்ணிக்கை
வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?
வாத்தியாரின் அடுத்த புத்தகம்

தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
8.6.22
50 வயதிற்கு மேற்பட்ட காலங்களுக்கான விளக்கம்!!!
13.1.21
இனிமேல் யாராவது கேட்பார்களா பெட்ரோல், டீசல் விலை ஏன் உயர்கிறது என்று ?
22.12.20
அறிக்கை போர்
அறிக்கை போர்
*"வைரஸ் என்பது ஒரு உயிர், அதை யாரும் உருவாக்க முடியாது"*
கொரோனா வைரஸை சீனா உருவாக்கியது என அமெரிக்கா குற்றம்சாட்ட, சீனா தந்திரமாக பதிலளிக்கின்றது, "வைரஸ் என்பது ஒரு உயிர், அதை யாரும் உருவாக்க முடியாது. உயிரை உருவாக்கும் நுட்பம் இன்னும் வரவில்லை"
மேலோட்டமாக பார்த்தால் இது சரியென தோன்றும், வைரஸ் கண்ணுக்கு தெரியாத உயிர் தான் நிச்சயம் அதை உருவாக்க முடியாது. விஷவாயு தாக்குதல் வேறு, நோய்பரப்பும் கிருமிகளை கண்டறிந்து வளர்த்து பரப்புதல் என்பது வேறு.
சீனா இதைத்தான் சொல்கின்றது, இதற்கு முன் இல்லாத ஒரு கிருமியினை நாங்கள் எப்படி உருவாக்கி உயிர் கொடுக்க முடியும்?
ஆனால் மேற்கு நாடுகள் அதற்கும் பதில் வைத்திருக்கின்றன *"அப்பனே, உயிரை யாரும் உருவாக்க முடியாது, ஆனால் இருக்கும் உயிருக்கு எப்படி வெறியூட்டி மிருகமாக்குவது என்பது உலகம் கண்ட கலை.*
மாட்டுக்கே சாராயம் ஊற்றினால் தறிகெட்டு திரிவதை போல, மதம்பிடித்த யானை கண்ணில்பட்டதை எல்லாம் நொறுக்குவதை போல, *வைரஸ்களுக்கும் சில விஷயங்களை செய்தால் அவை வெறிபிடித்த கொலைவெறி வைரஸாக மாறாதா?*
நீ ஏதோ செய்து அதன் இயல்பினை மாற்றி வெறி பிடிக்க வைத்திருகின்றாய், அதை ஒப்புகொள்" என சீறுகின்றன.
"போய்யா யோவ் அதெல்லாம் உன் வேலை, நாங்கள் அப்படி அல்ல" என சொல்லி முகத்தை திருப்புகின்றது சீனா.
மேற்குலகம் விடுவதாக இல்லை, நிலமை சீரியசாக செல்கின்றது
======================================
படித்ததில் தெரிந்துகொண்டது
அன்புடன்
வாத்தியார்
=================================
15.12.20
இனி நமக்கு பருவமழை கிடையாது - புயல்கள் மட்டுமே - ஏன்?
2.11.20
நீங்களும், உங்கள் LPG சிலிண்டரும்!
இனி OTP இல்லாமல் LPG சிலிண்டர் கிடைக்காது,
ஆதாரங்களின்படி, உள்நாட்டு IPL சிலிண்டர் (LPG Cylinder) ஆர்டர் செய்யும் முறை நவம்பர் 1 முதல் மாற்றப்படும். சிலிண்டர்கள், சிலிண்டர் திருட்டு ஆகியவற்றிலிருந்து எரிவாயு திருடப்படுவதைத் தடுக்கவும் சரியான வாடிக்கையாளரை அடையாளம் காணவும் இந்த நடவடிக்கை செயல்படுத்தப்படுகிறது.
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
4.8.20
சென்னையின் கண்ணீர்க் கதை!!!!
OMR ல் விழுந்த இடி !!
கொரானா பாதிப்பில், சென்னை OMR IT COMPANY மற்றும் அதை நம்பியுள்ள தொழில்களை பற்றிய, ஒரு கண்ணீர் கதை.
ஐடி துறையில் வொர்க் ஃப்ரம் ஹோம் நிறைய பிசினஸ்களுக்கு ஆப்பு வைத்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்!!!!.
இந்த ஐடி துறையை நம்பித்தான் சென்னை ஓஎம்ஆர் சாலை முழுக்க வானுயர்ந்த கட்டிடங்கள் வணிக வளாகங்கள்ன்னு கடந்த 20 வருஷத்துல எக்கச்சக்கமா வளர்ந்துவிட்டது.
பலரது வியாபாரம் பெருகியது. ஏராளமான அடுக்கு மாடிக்குடியிருப்புகள் உருவாகியது. பல முன்னணி வர்த்த நிறுவனங்கள், குறிப்பாக ஆட்டோ மொபைல் இன்ட்டஸ்ட்ரி, ஹோட்டல்கள், பிராண்டட் ரெடிமேட்ஷோரூம்ஸ், மொபைல் ஷோரூம்ஸ், சர்வீஸ் சென்டர்ஸ் எல்லாம் இவர்களை நம்பி கடைகளை விரித்தார்கள்
இப்பொழுது வொர்க் ஃப்ரம் ஹோமில் செலவினங்கள் கணிசமா குறைந்து போய்விட்டது.. கீ போஸ்ட்ல இருக்கறவங்க, மத்தவங்களை மானிட்டர் பண்ண, ஆயிரம் சதுர அடி அளவில் கட்டிடம் இருந்தால் போதும். அதுவும் அந்த ஏரியாவில்தான் இருக்க வேண்டும் என்கின்ற அவசியம் இல்லை.
இந்த வொர்க் ஃப்ரம் ஹோம்ல ஐடி நிறுவனங்களுக்கு இலட்சக்கணக்கான ரூபாய் வாடகை மிச்சம். கரன்ட் பில் மிச்சம். தண்ணீர், பேன்ட்ரி, ஹவுஸ் கீப்பிங், செக்யூரிட்டி இன்ன பிற செலவினங்கள்ன்னு எதுவும் இருக்காது. அதனால பல முன்னணி நிறுவனங்கள் சின்ன கட்டிடங்களுக்கு தங்களது அலுவலகத்தை மாற்ற முயற்சிக்கின்றன.
ஓம்எம்ஆர் ல இருக்கற ஆயிரக்கணக்கான வணிக வளாகங்கள், இதனால காலியாகற சூழல் வரலாம். கமர்சியலுக்காக கட்டியிருக்கற கட்டிடங்களோட டிசைனை இனி டொமஸ்டிக் பர்ப்பசிற்கு மாற்றவும் முடியாது. மாற்ற முயற்சி பண்ணினால் ஏகப்பட்ட சிக்கல்கள்.
இந்த பில்டிங்குகளை கோடிக்கணக்கில் செலவு பண்ணி (வங்கிகளில் கடன் வாங்கி கட்டிய கட்டிடங்கள் தான் ஏராளம்) கட்டி வாடகைக்கு விட்டு, அதுல கிடைத்த வருமானத்தில், இஎம்ஐ கட்டி விட்டு தங்களுடைய வாழ்க்கையை நடத்திகிட்டு இருந்தவர்கள், நிலைமை இப்பொழுது ரொம்ப பரிதாபமாகவே இருக்கிறது. ஐடி நிறுவனங்கள் ஒன்றன்பின் ஒன்றாகக் காலி செய்துவிட்டால் அந்த ஏரியாவில் அதைச் சார்ந்த மற்ற வியாபாரங்களும் படுத்துவிடும்.
வொர்க் ஃப்ரம் ஹோமில் நிர்வாகத்திற்கு செலவினங்கள் மிகமிகக்குறைவு என்பதை அறிந்து கொண்ட ஐடி நிறுவனங்கள் இனி மிகப்பெரிய கட்டிடங்களில் இயங்குகின்ற மாதிரி வாய்ப்பிருக்கப் போவது இல்லை. பல நிறுவனங்களில் ஆட்குறைப்பும் செய்து கொண்டே வருகிறார்கள். இந்த நிறுவனங்களையே நம்பி கான்ட்ராக்ட் பேசிஸ்ல ஓடிகிட்டு இருந்த டிரான்ஸ்போர்ட் சர்வீஸ்,கேண்ட்டீன் தொழில், எல்லாம் கோரோனா என்ற கொடிய அரக்கனால், மோசமான சூழலை சந்திக்க நேரிடலாம்.
கமர்சியல் கட்டிடங்களை, ஒண்ணும் பண்ணவும் முடியாது. ஐடி துறைக்கு அடுத்தபடியாக அந்த விஸ்தாரமான சதுர அடி கொண்ட பல அடுக்கு மாடி கட்டிடங்களுக்கு, வேறு எந்த துறையும் வர்றதுக்கு வாய்ப்பில்லை. அப்படியென்றால் அந்தக் கட்டிடங்களோட நிலைமை?
இந்த ஏரியாவில் கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு , லோன் கொடுத்த வங்கிகள், இனி தவணையை வசூலிக்க, ரொம்ப சிரமப்படனும். வாடகையே இல்லாத கட்டிடத்துக்கு கமர்சியல் டாக்ஸ் இலட்சக்கணக்குல எப்படி கட்டுவது? இந்தக் கட்டிடங்களை ஏலத்துக்கு விட்டாலும், எடுக்க யாரும் முன்வரப்போவது இல்லை.
கொரோனா வந்தாலும் வந்துச்சு. இன்னைக்கு பல தொழில்களை தன்னுடைய கோரக்கரங்களால் நசுக்கி போட்டுடுச்சு. பலருக்கு வாழக்கையில் சிக்கனத்தை கத்துக்கொடுத்து இருந்தாலும், இலட்சக் கணக்கானோரின் வாழ்வாதாரத்தை சிதைச்சுடுச்சுன்னு தான் சொல்லனும்.
சென்னைக்கு பெருமை சேர்த்த, ஓஎம்ஆர் சாலையானது இந்த கொரோனா முடிந்து சந்திக்கப்போகும் சவால்கள் ஏராளம். மீண்டு வருவதற்கான வழிமுறைகளை பொருளாதார வல்லுனர்கள் ஆய்வு செய்ய வேண்டும்.
இந்த கட்டிடங்கள் கட்டியவர்களாகட்டும், ஐடி துறையையே நம்பி, அங்கே தொழில் நடத்திக்கொண்டிருந்த பலரது வாழ்வாதாரம் ஆகட்டும், கொரோனா தாக்கம் முடிந்த பிறகு என்ன ஆகப்போகின்றது என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இந்த ஓஎம்ஆர் ரோட்டில் ஏராளமான ஹாஸ்டல்கள், ஐடி துறையில் வேலை செய்யும் பெண்களுக்கும், ஆண்களுக்கும், கட்டிடங்களை வாடகைக்கு எடுத்து, அதில் சின்ன சின்ன அறைகளா தடுத்து, அவங்களை தங்க வைச்சு உணவு சமைச்சுப்போட்டு நல்லகாசு பார்த்தாங்க.
இந்த வொர்க் ஃப்ரம் ஹோம்ல எல்லாருமே அந்த ஹாஸ்ட்டல்களை காலி பண்ணிட்டுப் போய்ட்டாங்க. அது மட்டுமில்லே, இந்த துறையில் இருந்த ஒரு நாலைஞ்சு பேரு ஒண்ணா சேர்ந்து, அங்க இருக்கற அபார்ட்மென்ட்டுகளை வாடகை எடுத்து தங்கிகிட்டு, இருந்தாங்க. அவங்கள்ல நிறைய பேருகாலி பண்ணிட்டு, போய்ட்டாங்க. இதனால அடுக்குமாடி குடியிருப்புகள், நிறைய காலியாகிகிட்டே இருக்கு. வேலை பறிபோனவங்க, கொடுத்த மூனு மாசம் அட்வான்சை கழிச்சுட்டு அவங்கவங்க சொந்த ஊருக்கும் கிளம்பிட்டாங்க.
SRS Travels மட்டும் இந்த ஐடி நிறுவனங்களை நம்பி சுமார் 1000 பேருந்துகளை கான்ட்ராக்ட் பேசிஸ்ல இயக்கிகிட்டு இருந்துச்சு. இப்போ அந்த டிரான்ஸ்போர்ட் சர்வீஸ், இந்த லாக்டவுன்ல தொழில் நடத்தமுடியாம சிக்கித் தவிக்குது.
எத்தனை டிராவல்ஸ் நிறுவனங்கள், தங்களது கார்களை இந்த துறைகளில் கான்ட்ராக்ட் பேசிஸ்ல வாடகை விட்டு, தங்களது வாழ்வை நடத்திக் கொண்டிருந்தன. அத்தனையும் தற்போது முடங்கிப்போய்டுச்சு.
விடியகாலை 4 to 6 மணிக்குள், 350 முட்டை போன்டா சேல்ஸ் ஆகிடும். ஒரு முன்னணி IT பார்க் முன்னாடி இருக்கிற கடையில்.... 10 இந்தி காரர்கள், 6 தமிழர்கள் வேலை செய்து வந்தனர். தண்ணீர்,காய்கறிகள்,முட்டை, மளிகை , இதற்கெல்லாம், சப்ளை செஞ்சவங்க ... மொத்தத்தில் ஒரு நாளைக்கு ௹ 50,000/ வரவு செலவு செய்தவர் மனம் நொந்து பேசுகிறார், இப்போ இந்திகாரங்களும் இல்லை, தமிழர்களும் இல்லை, அவரும் அவர் மனைவி மட்டுமே.... என்ன ஆறுதல் சொல்ரது??
ஓலா, உபர் வளர்ந்ததெல்லாம், முழுக்க முழுக்க ஐடி துறையாலதான். இனி அவங்க வாழ்வாதாரம் மோசமாகக்கூடும். வாகனங்களை லோன் போட்டு வாங்கி, இந்த நிறுவனங்கள்ல அட்டாச் பண்ணி ஓட்டிகிட்டு இருந்தவங்க, வாங்கின கடனுக்கு இஎம்ஐ கட்ட முடியாம தவிக்கறாங்க. அவங்களோட வாழ்வாதாரமும் போய்டுச்சாம்.
------------------------------------------------
படிதத்ததில் தெரிந்து கொண்டது: பகிர்ந்தது!!!!
அன்புடன்
வாத்தியார்
=====================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
22.10.19
நம் சேமிப்பை இழக்காமல் சிகிச்சை பெற சிறந்த இடம்!!!!!
நம் சேமிப்பை இழக்காமல் சிகிச்சை பெற சிறந்த இடம்!!!!!
27.8.19
ஏ.சி யை எப்படிப் பயன்படுத்த வேண்டும்?
ஏ.சி யை எப்படிப் பயன்படுத்த வேண்டும்?
தமிழ்நாடு மின்சார வாரிய செயல் பொறியியலாளரால் அனுப்பப்பட்ட மிகவும் பயனுள்ள தகவல்.
*AC யின் சரியான பயன்பாடு:*
*நாம் தொடர்ந்து**ஏர் கண்டிஷனர்கள்* *பயன்படுத்துகிறோம்.**அதில் சரியான முறையை பின்பற்றுவோம்.*
*பெரும்பாலான மக்கள் 20-22 டிகிரிகளில் தங்கள் ஏசியை இயக்கும் பழக்கம் உள்ளவர்கள். மேலும் குளிர்ச்சியாக இருக்கும்போது, அவர்கள் போர்வையால் போர்த்திக் கொள்கின்றனர்.**இது இரட்டை இழப்புக்கு வழிவகுக்கிறது. எப்படி ???*
*நமது உடலின் வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் என்று உங்களுக்குத் தெரியுமா? 23 டிகிரி முதல் 39 டிகிரி வரை வெப்பநிலையை எளிதில் சமாளிக்க முடியும்.* * இது மனித உடல் வெப்பநிலை சகிப்புத்தன்மை என்று அழைக்கப்படுகிறது.*
*அறையின் வெப்பநிலை குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருக்கும் போது, உடல் தும்மல், நடுக்கம், ஏற்படுகிறது.*
*நீங்கள் 19-20-21 டிகிரிகளில் ஏசியை இயக்கும்போது, அறை வெப்பநிலையானது சாதாரண உடல் வெப்பநிலையைவிட மிகக் குறைவாகவும், உடலின் சில பகுதிகளில் இரத்த ஓட்டம் பாதிக்கவும் உடலில் உள்ள சிறுநீர்ப்பை எனப்படும் செயல்முறையைத் தொடங்குகிறது. கீல்வாதம் போன்ற நீண்ட கால தீமைகள் பல ஏற்படுகின்றன.*
*பெரும்பாலான நேரங்களில் ஏசி இருக்கும் போது எந்த வியர்வையும் வெளிப்படுவது இல்லை. அதனால் உடலின் நச்சுகள் வெளியே வர முடியாத நிலை ஏற்படுவதுடன், தோல் அலர்ஜி அல்லது அரிப்பு, உயர் இரத்த அழுத்தம் போன்ற பல நோய்கள் ஏற்படலாம்.*
*இது போன்ற குறைந்த வெப்பநிலையில் நீங்கள் ஏசி இயக்கும்போது, அது 5 நட்சத்திர தரத்துடன் இருந்தாலும்கூட,* *தொடர்ந்து முழு சக்தியிலும் இயங்குகிறது, அதிகமான மின்சாரம் உறிஞ்சப்படுகிறது,*
*ஏசி இயக்க சிறந்த வழி என்ன ?? *
*25 டிகிரிக்கு வெப்பநிலை* *அமைக்கவும்.*
*25+ டிகிரிகளில் ஏசி இயக்கவும்.*
*மெதுவான வேகத்தில் விசிறியை வைப்பது சிறந்தது.*
*இதனால் குறைவான மின்சாரம் செலவாவதுடன், உங்கள் உடல் வெப்பநிலையும் கட்டுப்பாட்டில் இருக்கும். மற்றும் உங்கள் ஆரோக்கியத்தில் எந்தவிதமான பாதிப்பும் இருக்காது.*
*இதில் மற்றொரு சாதகமாக, AC குறைந்த மின்சாரம் சாப்பிடுவதால், மூளையின் மீது இரத்த அழுத்தம் குறையும் மற்றும் சேமிப்புடன் இறுதியில் புவி வெப்பமடைதலின் விளைவுகளை குறைக்க உதவும்.* *எப்படி ??*
*26 டிகிரியில் ஏறத்தாழ 10 லட்சம் வீடுகள் ஏசி பயன்படுத்துவதன் மூலம் இரவில் ஏசி ஒன்றுக்கு சுமார் 5 யூனிட்களை நீங்கள் சேமிக்கலாம். எனில், நாளொன்றுக்கு 5 மில்லியன் யூனிட்டு மின்சாரம் சேமிக்கப்படும்.*
*பிராந்திய அளவில் இந்த சேமிப்பு நாள் ஒன்றுக்கு கோடிக்கணக்கான அலகுகள் இருக்கலாம்.*
*தயவு செய்து மேலே குறிப்பிட்டபடி, உங்கள் AC ஐ கீழே 25 டிகிரிகளுக்கு கீழ் இயக்க வேண்டாம். உங்கள் உடலையும் சூழலையும் ஆரோக்கியமாக வைத்திருங்கள்.*
பொது ஆர்வத்தில் முன்னனுப்பப்பட்டது
சக்தி மற்றும் சக்தி அமைச்சகம். இந்திய அரசாங்கம்.
-----------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
===============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
26.8.19
வயிற்றில் புளியைக் கரைக்கும் தொழில்நுட்ப மாற்றங்கள்!!!!
வயிற்றில் புளியைக் கரைக்கும் தொழில்நுட்ப மாற்றங்கள்!!!!
அழிவை சந்திக்கிறதா ஆட்டோமொபைல் சந்தை?
இந்த நிகழ்வு மோடியின் ஆட்சியால் அல்ல என்பதை முதலிலேயே சொல்லி விடுகிறேன்.....
இது காலத்தின் கட்டாயம்! ராகுல் பிரதமராக (அடக் கடவுளே! ஒரு பேச்சுக்குச் சொன்னேன்... கோச்சுக்காதீங்க! ) இருந்தாலும் இந்த மாற்றம் தவிர்க்க முடியாத ஒன்று. ஒவ்வொரு தொழில் நுட்ப மாற்றத்தின் போதும் நாம் ஒன்றில் அழிந்து ஒன்றில் புதிதாய் பிறந்தே வந்துள்ளோம்.... நம்மை எப்போதும் புதுப்பித்தே வருகிறோம் எந்த ஒரு மாற்றத்திலும்!
அமெரிக்காவின் டெஸ்லா நிறுவனம் தனது முதல் மின்சார காரை மூன்று வருடங்கள் முன் அறிமுகப் படுத்தியபோதே பெட்ரோலிய வகை கார் கப்பெனிகளின் வயிற்றில் புளியைக் கரைக்க ஆரம்பித்து விட்டது.
டெஸ்லா தவிர மற்ற கார் நிறுவனங்களும் அந்த சமயத்தில் தங்கள் மின்சார காரின் மாடல்களை ஆமை வேகத்தில் ஆர் & டி செய்து கொண்டிருந்தன. ₹35 லட்சம் கொடுத்து யார் வாங்கப் போகிறார்கள் என எண்ணின. ஆனால் டெஸ்லாவில் பதிவு செய்து காத்திருப்போர் எண்ணிக்கை கூடி மூன்று வருடங்களுக்கு புக் ஆகி விட்டதைக் கண்ட போதுதான் மற்றவர்கள் விழித்துக் கொண்டனர்!
டெஸ்லா மின் கார் வெளியானதும், மற்றவர்களிடமும் அவசரம் தொற்றிக் கொள்ள, தங்களின் புதிய வகை மின்சார காரை உலக ஆட்டோ எக்ஸிபிஷனில் வைக்கத் தொடங்கினர்...
இதனிடையில் கூகுளின் ஆளில்லா கார் சற்றே புருவத்தை உயர்த்த வைத்தாலும், தற்போது நடைமுறைக்கு சாத்தியமில்லாதது போலத் தோன்றுகிறது.
அதே நேரம் ஃபோக்ஸ்வேகன் கம்பெனி தனது நாட்டு சகாக்களான பிஎம்டபிள்யு, ஆடி, மெர்ஸிடஸை முந்திக் கொண்டு மூன்று ரகங்களில் மின் காரை வெளியிட்டு அசத்தினர்...
சும்மா இருப்பார்களா ஜப்பானின் கார் ஜாம்பவான்கள்! தங்களின் பங்காக நிஸ்ஸான் மூலம் நடுத்தர வகை மின் காரை உருவாக்கி விட்டது. ஹோண்டா, டொயோட்டோவும் தயாராக உள்ளது.... கூடவே கொரியாவின் ஹுண்டாய், கியா!
சந்தையில் இன்றைய நிலவரப்படி, ஃபோக்ஸ்வேகன் நிறுவனமே உலக மார்க்கெட்டை முதலில் பிடிக்கும் என்றும், அடுத்து பிஎம்டபிள்யு, அடுத்து நிஸ்ஸான் என்றும் கணிக்கிறார்கள்..... டெஸ்லா தொடர்ந்து அமெரிக்க மார்க்கெட்டை தக்க வைக்கும்....
சீனாவும் தனக்கான பங்களிப்பான சகாய விலை உதிரி பாகங்கள், பேட்டரிகளைத் தந்து பின்புலத்தில் இயங்கும்!
இனி இந்தியாவில் எப்படி இருக்கும்....?
முதல் மின்காரை ஹுண்டாய் போன வாரம் முதலமைச்சரை வைத்து வெளியிட்டு விட்டு முதல் இந்திய மின் கார் எனும் பெருமையை தட்டிச் சென்று விட்டனர்... ₹35 லட்சமாம்.... அதனாலென்ன? இங்கே வாங்க ஆளிருக்கிறது! HDFC, ICICI EMI இருக்கும் வரை நாம் கவலையே பட வேண்டாம்!
இந்திய கார் ஜாம்பவான் டாடா நிறுவனம் தன் தயாரிப்புடன் ரெடியாக உள்ளது. அதே நேரம் யாருக்கும் வெளியே தெரியாமல் மாருதி சுசுகியும் தன் பங்கிற்கு ஏழைகளுக்கான மாடலை தயார் செய்து விட்டது. அந்த மாடல் மாருதி வேகன் ஆர் மாடலின் இஞ்சினை வெளியே எடுத்து விட்டு புற வடிவை பழையது போல வடிவமைத்துள்ளனர்... வேகன் ஆர் மாடல் மாருதியின் ஃப்ளாக் ஷிப் மாடல்.... அதை சட்டென்று மாற்ற ஒப்புக் கொள்ள மாட்டார்கள்....
ரொனோவும் தன் பங்கிற்கு நிஸ்ஸானின் பட்டறையில் லேபிள் மட்டும் மாற்றி தனது வாடிக்கையாளரை திருப்தி படுத்த தயாராகி விட்டது!
தவிரவும் மகிந்திரா, உலக அளவில் அதிக எண்ணிக்கை கார்களை தயாரிக்கும் கம்பெனி, தனது சீன தொழிற்சாலையில் மின் காரை வடிவமைத்து விட்டது...
மத்திய அரசின் வரி விலக்கிற்காகவே காத்திருந்தன அனைத்து நிறுவனங்களும்... மின் கார்களுக்கான ஜிஎஸ்டி வரியை 12% லிருந்து 5% த்திற்கு குறைத்ததும், இந்த நிறுவனங்கள், தங்களுக்குள் யார் முதலில் மின் காரை சந்தைக்குக் கொண்டு வரப் போகிறோம் எனும் போட்டிக்குத் தயாராகி விட்டது!
இனி உங்கள் பழைய கார்கள் கதி என்ன?
2025 இல் மின்கார்கள் சந்தையில் முழு வீச்சில் இயங்கும்....
பழைய கார்களை மின் கார்களாக மாற்றும் ஒர்க்ஷாப்கள் அதிகரிக்கும். ஆனால் இதற்கு அரசு அனுமதி தருமா எனத் தெரியவில்லை. அப்படி மாற்ற முடியவில்லை என்றால் பேரிச்சம் பழம் அல்லது எள்ளும் தண்ணியும்தான்....
மின் கார்கள் விலை சுமார் ₹10 லட்சத்திலிருந்து (விலை குறைந்த மாருதி மாடல் ஒரு சார்ஜிங்கில் 165 கிமி) ₹35 லட்ச நிஸ்ஸான், ரெனோ, ஃபோக்ஸ்வேகன், டொயோட்டோ, (265 கிமி) அடுத்து ஒரு கோடி வரை பிஎம்டபிள்யு, ஆடி (400 கிமி) என தோராய விலை இருக்கும்....
மின்காருக்கான லித்தியம் அயர்ன் பேட்டரிகளே இனி 30 வருடங்களுக்கான பரபரப்பு சந்தையாக விளங்கப் போகிறது. கிட்டத்தட்ட வீட்டு இன்வெர்ட்டர் பிசினஸ் போல. வாங்கி விற்பவர்களுக்கு நல்ல லாபம் இருக்கும்... அதே போல சார்ஜர்கள் (ஜிஎஸ்டியை இதற்கும் 5% ஆக குறைத்துள்ளனர்). சார்ஜர் மார்க்கெட் ஏசி ஸ்டெபிலைசர் மார்க்கெட் போலவே. பல கம்பெனிகள் இதில் இறங்க வாய்ப்புள்ளது.
பயண வழியில் நாம் தேடும் பெட்ரோல் பங்க், பங்க்சர் கடை போல மின் சார்ஜர் கடைகள் நிறைய ஹைவேக்களில் பார்க்கலாம்.... சின்ன வியாபாரம்தான்.... ஒரு மணி நேர சார்ஜுக்கு ₹500 வரை வாங்கலாம்.... வண்டிகள் நிறுத்த நிறைய இடம் தேவைப்படும்.... அங்கே ஒரு மணி நேரத்தை செலவு செய்ய சிறிய ஷாப்கள் அல்லது பானி பூரி ஃபாஸ்ட் ஃபுட் அவுட்லெட்கள், தவிர்க்கவே முடியாமல் வழக்கம் போல இந்தி பேசும் பீகார் மற்றும் பெங்காலி பையன்களும், சகாயமான சம்பளத்தில்!....
அரசு பெட்ரோலிய இறக்குமதியை குறைத்து, அந்நிய செலாவணி இருப்பை ஏற்றிக் கொண்டு, தனது ஜிடிபியை உயர்த்திக் காட்டும்....
மின் உற்பத்தி அதிகரிக்கும். குறிப்பாக சூரிய சக்தி. அதை சார்ந்த தொழில்கள் அதிகரிக்கும்... தண்ணீரில்லாத மானாவாரி நிலங்களில் சோலார் பேனல் தோட்டங்களை வழியுங்கும் இனி காணலாம்.... வீட்டு மாடிகளில் சோலார் செல்களால் நிரப்பப் படும்... பெட்ரோல் போல மின்சார விலையும் உயரும். ஆனால் கட்டுக்குள் இருக்கும்.... வீட்டில் காற்றாலைகளால் மின் உற்பத்தி பெருகும்! சுய சார்பு அதிகரிக்கும்.... (பக்கத்து வீட்டிலிருந்து 'பத்து யூனிட் கரெண்ட் கிடைக்குமா? எங்க வீட்டு சார்ஜர் வேலை செய்யலை' எனும் மத்திய வர்க்கத்தின் கொடுக்கல் வாங்கல் இதிலும் தொடரும்).
நேற்றைய தினம் என் காரை சர்வீசுக்கு விட்டேன். பில் ₹27000 வந்தது....
2025 இல் இதே கார் சர்வீசுக்கு வரும்போது டிசி மோட்டாரின் கார்பனை மட்டும் மாற்ற ₹500 செலவு மட்டுமே என எண்ணும்போது, எனக்கு சிரிப்புதான் வந்தது!
அமெரிக்காவில் டெஸ்லா கம்பெனி வாசலில் ஒரு வாசகத்தை வைத்துள்ளார்கள்!
"இந்தியாவின் பழம்பெரும் புராண இதிகாசங்களே காந்தம் பற்றிய எனது ஆராய்ச்சியை ஊக்குவித்தது! அவைகளில் இல்லாத தொழில் நுட்பமே இல்லை. இன்னொரு ஜென்மம் என்று இருந்து நான் பிறக்க நேரிட்டால், இந்தியாவில் பிறக்கவே விரும்புகிறேன்!
- நிகோலஸ் டெஸ்லா!"
இனி எங்க ஆட்சிதான்!
- டிமிட்த் பெட்கோவ்ஸ்கி எனும் எலக்ரிகல் பொறியாளன்
----------------------------------------------------------------
படித்து அதிர்ந்தது!!!!
அன்புடன்
வாத்தியார்
====================================
31.7.19
முடிவிற்கு வருகிறது நமது முக்கியமான பிரச்சினை!
முடிவிற்கு வருகிறது நமது முக்கியமான பிரச்சினை!
முடிவுக்கு வருகிறது, அமெரிக்காவின் GPS.
வந்துவிட்டது, இந்தியாவின் IRNSS
( Indian Regional Navigation Satellite System)
இனி யாரும் தப்பிக்க முடியாது
அமெரிக்காவிற்குச் சொந்தமானது, GPS
( Global Positioning System)
ரஷ்யாவிற்குச் சொந்தமானது, GLONASS
( Global Navigation Satellite System)
சீனாவிற்கு சொந்தமானது, BDS ( BeiDou Navigation Satellite System)
ஐரோப்பாவிற்கு சொந்தமானது, GNSS ( GALILEO, Global Navigation Satellite System)
இது வரை இந்தியாவிற்கென்று சொந்தமான நேவிகேஷன் சிஸ்டம் இல்லாமல் இருந்தது.
அமெரிக்காவை நம்பியே இந்தியா இருந்து வந்தது.
அந்த நேவிகேஷன் சிஷ்டத்திற்கு மொத்தம் ஒன்பது செயற்கை கோள்கள் தேவை!!
விண்ணில் ஏழும், standby ஆக மண்ணில்(பூமியில் ) இரண்டும் தேவை.
இந்தியாவின் IRNSS ( Indian Regional Navigation Satellite System) கடந்த 2016 ஆண்டு செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தி வந்தது!!
ஏழாவதாக வெற்றிகரமாக ஏவப்பட்ட IRNSS-1G மூலம் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
இன்னும் மூன்று முதல், ஆறு மாதங்களில், அமெரிக்காவின் GPSக்கு விடை கொடுத்து விட்டு நம்முடைய IRNSS வசதி, பயன்பாட்டிற்கு வரும் என்ற தகவல், தற்போது வெளியாகியுள்ளது.
தற்போது அமெரிக்க போன்ற நாடுகள், தங்களது தொழில் நுட்பம் மூலம், இந்தியா போன்ற வளரும் நாடுகளை இன்னும் தங்கள் கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்கின்றன
சுருக்கமாகச் சொல்லப் போனால், அமெரிக்காவின் GPS அமைப்பிற்கு இந்தியாவின் அனைத்து மூலை முடுக்குகளும் தெரியும்.
GOOGLE MAP போன்றவை இதன் மூலம் இயங்குகின்றன என்றால் தெரிந்து கொள்ளலாம், நம் நாடு எந்த அளவிற்கு அமெரிக்காவின் தொழில்நுட்பப் பிடியில் இருக்கிறது என்று!!!
இதனை அறிந்த, சீனா போன்ற நாடுகள் தங்களுக்கு என்று தனியாக Beidou என்ற ஒன்றை உருவாக்கி, தங்கள் நாட்டு ரகசியத்தை பாதுகாத்துக் கொண்டுள்ளன.
அப்போதைய பிரதமர், மன்மோகனிடம் இந்தத் தகவலை இஸ்ரோ விஞ்ஞானிகள் சொல்லி, அனுமதி கேட்டபோது, அவர் சிலரின் தலையீடுகள் காரணமாகக் காலந் தாழ்த்தி வந்ததாகவும், கூறப்படுகிறது.
பாஜக அரசு அமைந்ததும், மோடி உடனடியாக அமெரிக்காவின் பிடியில் இருந்து இந்தியாவை விலக்க எண்ணி, அதனை தற்போது நிகழ்த்திக் காட்டி விட்டார் என்றும், நமது நாட்டைச் சேர்ந்த IRNSS செயல்பாட்டிற்கு வந்ததும், முழுவதும் இந்தியா தன்னிறைவு அடையும் என்றும், அதன் பிறகு சமூக வலைத்தளங்களில் ஆதிக்கம் செலுத்தும், அந்நிய நிறுவனங்களை கொஞ்சம், கொஞ்சமாக குறைத்து, இந்தியத் தயாரிப்புகளை அதிகரிக்க, இப்போதே திட்டம் தீட்டி செயல்படுத்த ஆரம்பித்து விட்டார்கள் என்றும், விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்
இனி யாராவது குற்றச் செயல்களில் ஈடுபட்டால், யார் என அடையாளம் காண, அமெரிக்காவை தொடர்புகொள்ள வேண்டிய அவசியம் இல்லை!!
இனி நாமே நேரடியாக களத்தில் இறங்கி, குற்றச் செயல்களை கண்டறிந்து, உடனடியாக தண்டனை வழங்கலாம்.
பயங்கரவாதிகள் ஊடுருவலைக் கண்டறிய மற்றும் பல ராணுவ ரீதியிலான பயன்பாட்டிற்கும், IRNSS உறுதுணையாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
✨🌿இனி இந்தியாவின் கட்டுப்பாட்டில்தான், இந்தியா இருக்கும் என்று பலரும் மகிழ்ச்சியை பகிர்ந்து வருகின்றனர்.
WhatsApp முதல் Facebook என அனைத்து சமூக வலைத்தளங்களும், தற்போது GPS உதவியுடன் இயங்குவதும், விரைவில் இவை நமது நாட்டின் IRNSS கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும், என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனால் இந்திய அரசுக்கு பல கோடி ருபாய் வருவாயும் கிடைக்கும்.✨!!
வாழ்க பாரதம் 🇮🇳
-------------------------------------------------
படித்தேன்: பகிர்ந்தேன்!!!!
அன்புடன்
வாத்தியார்
=================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
9.1.19
நீங்களும், நானும் தனியார் தொலைக் காட்சிகளும்!!!!
நீங்களும், நானும் தனியார் தொலைக் காட்சிகளும்!!!!
*தனியார் தொலைக்காட்சிகள் வருவதற்கு முன் நாடு நன்றாகத்தானிருந்தது.*
இல்லத்தரிசிகள் இல்லத்தில் ஊறுகாய் போடுவார்கள், வடகம் போடுவார்கள், கூடை பின்னுவார்கள், ஸ்வட்டர் பின்னுவார்கள்.
இப்பொது இவை எல்லாம் செய்வது இல்லை. வேலை செய்யாததால் நோய்கள் பெருகி வருகின்றது. வந்தாரை வரவேற்கும் தமிழர் பண்பாடும் வழக்கொழிந்து வருகின்றது.
தொலைக்காட்சித் தொடருக்கு அடிமையாகி விட்டனர். இவர்களை மீட்டு எடுக்க வேண்டும்.
தொலைக்காட்சித் தொடர்களில் கள்ள உறவு, பழிக்குப் பழி வாங்கும் வக்கிரம் வளர்க்கும் விதமாகவே காட்சிகள் வருகின்றது.
மாமியார் மருமகள் சண்டையிட்டுக் கொள்ள பயிற்சி தரும் விதமாகவே தொடர்கள் வருகின்றது .
தொடர்கள் எடுக்கும் இயக்குனர்களுக்கு, தயாரிப்பவர்களுக்கு , ஒளிபரப்பும் தொலைக் காட்சிகளுக்கு யாருக்குமே சமூக அக்கறை இல்லை.
பணம் சேர்ப்பது ஒன்றே குறிகோளாக இருக்கின்றனர்.
திரைப்படங்கள் தணிக்கை செய்வது போல தொடர்களும் தணிக்கை செய்த பின்பே ஒளிப்பரப்பப்பட வேண்டும்.
திரைப்படங்கள் தணிக்கை சரியாக செய்வது இல்லை வேறு விஷயம். கொஞ்சமாவது கட்டுப் படுத்த முடியும்.
தொடர்களில் திரைப்படங்களை விஞ்சும் வண்ணம் வன்முறை தலைவிரித்து ஆடுகின்றது. மனிதர்களை விலங்காகும் வண்ணம் தீய எண்ணத்தை கற்பிக்கின்றனர்.
ஒரு பெண் இவ்வளவு மோசமாக இருப்பாளா? என்று கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு பெண்ணை மோசமாக,
கேவலமாக, கொடூரமாக தொடர்களில் காட்டிப் பெண் இனத்தையே கேவலப்படுத்தி வருகின்றனர்.
ரவுடிகளை கதாநாயகனாகச் சித்தரித்து வருகின்றனர். சமூக அக்கறை உள்ளவர்கள் சமூகத்தைச் சீரழிக்கும் இந்தத் தொடர்களுக்கு எதிராக உரக்கக் குரல் கொடுக்க வேண்டும்.
தொலைக்காட்சி அறிவியல் கண்டுபிடிப்பு ஆனால் அதனை மூடநம்பிக்கைப் பரப்பவே பயன்படுத்துகின்றனர்.
சாமியார் சகல சக்தி உள்ளவர் போல தொடர்களில் காட்டுகின்றனர். செய்தியில் சாமியாரின் பித்தலாட்டத்தை காட்டுகின்றனர்
முரண்பாட்டைப் பாருங்கள் .
------------------
அயல் நாடுகளில் தொலைக்காட்சியை ஊறுகாய் போல் தொட்டுக் கொள்கின்றனர். நம் நாட்டில் தொலைக்காட்சியை சாப்பாடுப் போல சாப்பிடுகின்றனர்.
------------------
பணம் வாங்கிக் கொண்டு படத்தில் நடிக்கும் நடிகர்களை அவதாரப் புருசர்கள் போல் சித்தரித்துப் பித்தலாட்டம் செய்கின்றனர்.
பாட்டுக்கு நடுவராக வரும் பாடகிகள் கவர்ச்சி நடிகைகளை மிஞ்சும் வண்ணம் குத்தாட்டம் போடுகின்றனர். குடும்பத்தோடு திரைப்படம் பார்க்க முடிய வில்லை. இப்போது தொலைக்காட்சியும் பார்க்க முடிவதில்லை.
ஆபாசத் திரைப்படப் பாடல்கள் ஒளிப்பரப்புவதற்கு என்றே தனி சேனல்கள். அரசு தொலைக்காட்சியில் அன்று வெள்ளிக் கிழமை மட்டும் அரை மணி நேரம் ஒளியும் ஒளியும் ஒளிப்பரப்பானது. இன்று 24 மணி நேரமும் ஒளிப்பரப்பாகின்றது. சமுதாயத்தைச் சீரழித்து வருகின்றனர்.
திரைப்படத்தில் வரும் வன்முறை வசனங்களை தொலைக்காட்சியில் விளம்பரத்தில் அடிக்கடி ஒளிப்பரப்பி இன்று குழந்தைகள் கூட பொருள் புரியாமல் கொன்னு புடுவேன் என்கின்றனர்.
அரசியல் விவாதங்கள் பொய்யை பரப்பும் களமாக மாறிவிட்டது. புழுகுமூட்டை கொட்டப்பட்டு மக்களின் உள்ளங்களை அழுக்காக்குவதற்கே துணை போகின்றன, 90 சதவீத விவாதங்கள்.
குடியும், விபச்சாரமும் நாகரிகம் எனும் பிம்பம் பள்ளி கல்லூரி மாணவர்கள் மத்தியில் ஊடுருவ கங்கணம் கட்டிக்கொண்டு பல சேனல்கள் அலைகின்றன. தங்கள் வருமானத்தை பெருக்கிக் கொள்ள எந்தவித இழிவான செயலுக்கும் செல்ல மக்களை மக்களின் நற்குணங்களை சீரழிப்பது போலவே பல நிகழ்ச்சிகள் அறங்கேற்றப்படுகின்றன.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாக சொல்லி உள்ளேன் இது போன்று ஏராளம் கெட்ட பின் விளைவுகள் தொலைக் காட்சிகளால் நிகழ்கின்றது.
*இப்படிக்கு மனம் பதறும் ஒரு சாமானியன்....!!*
-----------------------------------------------------------
படித்து அதிர்ந்ததை பகிர்ந்துள்ளேன்
அன்புடன்
வாத்தியார்
=================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
13.12.18
இறங்கி அடிக்கும் இந்தியா
இறங்கி அடிக்கும் இந்தியா
டாலருக்கு எதிராக களமிறங்கிய இந்தியா கூட களம் இறங்கிய ரஷ்யா, இந்தியாவுடன் அணி சேர்ந்த இங்கிலாந்து .. அமெரிக்கா அதிர்ச்சி!
அமெரிக்க டாலருக்கு எதிராக இந்தியா எடுத்த நிலைப்பாடுக்கு ஆதரவாக சர்வதேச வர்த்தகத்தில் தங்கள் நாட்டு பணத்தையே பயன்படுத்த ரஷ்யாவும், பிரிட்டிஷும் முடிவெடுத்து இருப்பதாக தகவல்கள் வருகிறது.
அமெரிக்காவிற்கு எதிராக கொஞ்சம் கொஞ்சமாக உலக நாடுகள் அணி சேர்ந்து வருவது உலக அரசியலில் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று துபாய் மற்றும் ஐக்கிய அரபு அமீரக எண்ணெய் நிறுவன அதிபருடன் பிரதமர் மோடி வருடாந்திர சந்திப்பை நடத்தினார். எல்லா வருடமும் நடக்கும் இந்த சந்திப்பில் எப்போதும் இல்லாத அளவிற்கு முக்கியமான விவாதம் ஒன்று செய்யப்பட்டது. அதன்படி எண்ணெய் நிறுவனங்கள் எல்லாம் இந்தியாவிடம் கச்சா எண்ணெய் விற்கும் போது, டாலருக்கு பதிலாக இந்தியா ரூபாய் வழியாகத்தான் வியாபாரம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
உலகில் எண்ணெய் வள நாடுகளுக்கு மிக முக்கியமான கஸ்டமராக இந்தியா இருப்பதால் இந்த கோரிக்கை முக்கியத்துவம் பெற்றுள்ளது.
அதை தொடர்ந்து தற்போது பிரிட்டிஷ் நாடும், , அமெரிக்க டாலரை உலக வர்த்தகத்தில் பயன்படுத்த மாட்டோம் என்று முடிவு செய்துள்ளது. அதற்கு பதிலாக பவுண்டுகளை பயன்படுத்த முடிவெடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவிற்கு எதிராக ரஷ்யாவும் களமிறங்கி உள்ளது. தங்களது நாட்டு பணமான ரூபலை, டாலருக்கு பதிலாக சர்வதேச வர்த்தகத்தில் பயன்படுத்த இருப்பதாக அந்நாடு தெரிவித்துள்ளது.
இந்த மூன்று நாடுகளின் ( இந்தியா, ரஷ்யா, இங்கிலாந்து ) முடிவு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.
இதுவரை பெரும்பாலான உலக நாடுகள் எல்லாம் அமெரிக்க டாலரில்தான் பொருட்களை வாங்கி வந்தது. தற்போது அதற்கு எதிராக மூன்று பெரிய நாடுகள் களம் குதித்து உள்ளது.
இந்நிலையில் மோடி சீன அதிபரை சந்திக்கிறார் இதுவும் கவனிக்க வேண்டிய ஒன்று. இதை அமெரிக்கா எதிர்பார்க்கவில்லை
இது அமெரிக்காவிற்கு பெரிய அடியாக இருக்க வாய்ப்புள்ளது. அடுத்து என்ன நடக்க போகிறது என்று பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.
இந்தியாவின் துனிச்சளான முடிவுக்கு மக்களாகிய நாம் துணை நிற்போம்
பல சீர்திருத்தங்களை செய்து நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபடும் பாரதப் பிரதமருக்கு பாராட்டு!!!!
---------------------------------------------------------
படித்தேன்; பகிர்ந்தேன்!!!
அன்புடன்
வாத்தியார்
=======================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
12.12.18
கஜா புயலுக்கு காரணம் என்ன?
கஜா புயலுக்கு காரணம் என்ன?
ரொம்ப முக்கியமான,அதிர்ச்சியான விஷயம் ஒன்னு இந்த கஜா புயலை பற்றியது. பதிவு கொஞ்சம் பெரியது இருந்தாலும் படியுங்கள்
______________________________
நில அமைப்பு வல்லுனரின் கூற்று
எங்களோட எம்ப்ளாயி ஒருத்தர் பிரிட்டிஷ் காரர், ஜியோபிசிஸ்ட் தொழில், வயது 68 பழுத்த பழம் பார்க்க நம்ப இந்தியன் தாத்தா மாதிரியே இருப்பார், பூலோக சம்பந்த பட்ட விசயங்களில் அத்துபடி, ஆபிஸ் ரூம்ல உக்காந்துகிட்டே பெட்ரோல் ரிக்ல இன்னும் எத்தனை அடில பெட்ரோல் இருக்குன்னு கண்டுபிடிச்சு சொல்ற வேலை, மனுஷன் லொக்கேசனை பார்த்தே சொல்லுவார் அந்த அளவுக்கு மண்டை, சம்பளம் நம்ப இந்திய மதிப்பில் சுமார் மாதம் 15 லட்சம் கொடுத்து அவரோட சேவை சவூதி நாட்டுக்கு தேவை என்ற காரணத்தால் இன்னும் ரிடயர்ட் கொடுக்காம வச்சிட்டு இருக்கோம்.
இன்னைக்கு அவரை பார்க்க போய் இருந்தேன் பேசிக்கிட்டு இருக்கும் பொழுது கஜா புயலை பற்றிய பேச்சு வந்தது அப்படியே சொன்னேன் எங்க ஊரு திருச்சில புயல் வரத்துக்கு எல்லாம் சான்சே இல்லை ஆனால் போட்டு தாக்கிட்டு போய்டுச்சு எப்பவுமே நடக்காத விசயமாக ,கடலே இல்லாத திண்டுகல் என்ற ஊருல மையம் கொண்டு இருந்துச்சுன்னு சொன்னேன். இதை எல்லாம் கேட்டு கொண்டே இருந்த மனுஷன் நம்ப ஊரு மேப்பை எடுத்து அக்கு வேறாக ஆணி வேறாக ஒவ்வொரு கிரமாம் முதற் கொண்டு நமது ஊர் பெயரை சொல்லி ஆச்சரிய படுத்தினார்.
ஆனால் அவர் அதற்கு மேல் சொன்ன ராகம் எனக்கு தூக்கி வாரி போட்டது. இந்த கஜா புயல் தமிழகத்தை தாக்க கூடிய அவசியமே வந்து இருக்காது இது ஆந்திரா கொல்கத்தாவை தாக்கி இருக்க வேண்டியா புயல் என்ன பண்றது உங்க கவர்மென்ட் வெத்தலை பாக்கு வச்சு திரும்பி நின்னுட்டு ஏறிட்டு போடான்னு (அவர் இதவிட கொச்சையா சொன்னார்) புயலை வலியக்க கூட்டிட்டு வந்து விட்டார்கள் என்று கூறினார். அட என்னங்கசார் புயலை யாரவது கூப்பிட முடியுமான்னு நான் எதிர் கேள்வி கேட்டேன்.
அதுக்கு அவர் சொன்னது யாரும் புயலை கூப்பிட முடியாது ஆனால் வர வைக்க முடியும்ன்னு சொன்னாரு அதெப்படின்னு கேட்டேன்.
புயல் வந்த திசைகளை கவனித்தயான்னு கேட்டார் நாகப்பட்டினம் வழியாக வந்து அப்படியே வந்துடுச்சுன்னு சொன்னேன் ஆமாம் கரெக்ட் புயல் வந்த திசைகள் எல்லாம் என்ன தொழில் நடக்குதுன்னு கேட்டார்..அங்கே எல்லாம் விவசாயம் தான் இப்ப தான் ஒரு ரெண்டு மூணு வருசமாக மீத்தேன், குருட் ஆயில் எடுத்துகிட்டு இருக்காங்கன்னு சொன்னேன்..ஆங் நான் சொல்ல வந்த விஷயத்துக்கு நீ வந்துட்ட இப்ப சொல்றேன் கேட்டுக்கோ ஒரு குறைந்த காற்று அழுத்த தாழ்வு மண்டலம் உருவாசின்னா குளிர்ந்த இடத்தை நோக்கி அது பயணம் செய்யாது வெப்பம் எங்க அதிகமாக இருகிறதே அந்த இடத்தை நோக்கி தான் பயணம் பண்ணும் குளிர்ந்த இடம் நோக்கி போனால் வலுவிழந்து மழையாக மாறி போய்டும் நீ சொன்ன இடம் எல்லாம் மீத்தேன் போன்ற வெப்பமான பொருட்கள் எடுக்க படுவதால் அந்த இடம் முழுவது வெப்ப காடாக இருக்கும். புயலுக்கு வெப்பம் என்பது பிரியாணி சாப்பிடுவதை போன்றது ரொம்ப பிடித்த மான காரியம் வெப்பம் மண்டல பகுதிகள்
வெப்பமான இடத்தை நோக்கி செல்லலும் பொழுது அதோட வேகம் 1000 மடங்கு அதிகரித்து இருக்கிற இடத்தை எல்லாம் துவம்சம் செஞ்சிட்டு போய்டும்ன்னு சொன்னாரு. நீங்கள் உங்க ஊருல இன்னும் எவ்வளவுக்கு எவ்வளவு ரிக் தோண்டுரீங்களோ அந்த அளவுக்கு புயலின் வேகம் இனி வரும் காலங்களில் அதிகரிக்கும் என்ற ஷாக் நியுசையும் சொன்னார். சரி சவுதில ஆயிர கணக்கான ரிக் இருக்கு இங்கே ஏன் புயல் வர மாட்டேங்குதுன்னு சொன்னேன் சவூதி அரேபியாவை பொறுத்த வரை கிழக்கு சைடு தான் அராம்கோ எண்ணை நிறுவனம் எல்லாம் இருக்கு பூலோகப் படி அங்கே உள்ள கடலின் அளவு சிறியது ஈரானுக்கும் சவுதிக்கும் நடுவில் குறைந்த அளவு தூரம் தான் கடல் ஆகையால் புயலில் வேகம் மிக மிக குறைவு மேலும் இங்கே புயல் அடித்தாலும் ஒன்றும் ஆகப் போவது இல்லை இது பாலை வனம் மரங்கள் ஏதும் கிடையாது ஆகையால் நமக்கு எதுவும் தெரிவது இல்லைன்னு சொன்னார்.
அவர் சொன்னதை எல்லாம் வச்சு பார்க்கும் பொழுது மல்லி பட்டினம் - நாகபட்டினம் நரிமணம் எண்ணை சுத்திகரிப்பு ஆலை அங்கே உள்ளது அதன் வழியாக தமிழகத்தில் புகுந்து கொஞ்சம் கொஞ்சமா கிழக்கு நோக்கி நகர்ந்து அங்க இருந்து புதுகை, தஞ்சை டெல்ட்டா மாவட்டங்கள் வழியாக பயணித்து திருச்சி வழியாக திண்டுக்கல்லில் மையம் கொண்டு துவம்சம் செய்து சென்று இருக்கிறது. இந்த ஊர்கள் அனைத்தும் சிறிது காலத்துக்கு முன்பு மீத்தேன் எடுபதற்காக மக்கள் போராட்டம் செய்த பகுதிகள் என்பதை ஒன்று கூட்டி பார்க்கும் பொழுது எனக்கு தலை சுற்றி விட்டது.
எனக்கு ஜியோபிசிஸ்ட் போன்ற துறைகளில் அந்த அளவுக்கு பரிட்சியம் கிடையாது, இது எந்த அளவுக்கு உண்மை என்றும் என்னால் அளவிட முடியவில்லை .அந்த துறையை சார்ந்த நண்பர்கள் அந்த பிரிடிஷ் காரர் கூறியது சரியா என்று விளக்கவும்.
பதிவு எழுதி 10 மணி நேரம் கழித்து இடைச் செருகள்: இந்த பதிவை படித்த ஒரு மீடிய நண்பர் ஒரு கேள்வி கேட்டார் நாகபட்டினம் புயல், தனுஷ் கோடி புயல், தானே, நிஷா புயல் எல்லாம் எப்படி அதெல்லாம் இந்த மீத்தேன் வரதுக்கு முன்னாடியே வந்துடுச்சேன்னு உடனே அவருக்கு போனை போட்டு கேட்டேன்
அந்த புயலுக்கும் இந்த புயலுக்கும் உள்ள வித்தியாசத்தயும் பாதிபப்பையும் கவனிக்க சொன்னார் நாகபட்டினம் புயல் வந்த பொழுது குறிப்பிட்ட பகுதியில் மட்டும் தான் சேதாரம், தனுஸ்கோடி ராமேஸ்வரம் தீவு மட்டுமே சேதாரம். கரையை கடந்த உடனே வலுவிழந்து நீர்த்து போய் விட்டது, ஆனால் இந்த கஜா புயல் கரைக்கு ஏறிய உடன் தான் முன்பு இருந்த வலுவை விட மேலும் மேலும் ஆக்ரோஷமாக கிட்ட தட்ட நான்கு ஐந்து மாவட்டங்களை துவம்சம் செய்து முக்கியமாக மீத்தேன் எடுக்கும் நில பரப்புகளான டெல்ட்டா மாவட்டங்களை புரட்டி போட்டு தமிழகத்தின் மைய பகுதியில் (திண்டுக்கல்) நிலை கொண்டு கொடைக்கானல் மலை பகுதியில் மோதி நீர்த்து போய் விட்டது. அங்கே கொடைக்கானல் மலை இல்லாவிட்டால் இன்னும் மேற்கு நோக்கி நகர்ந்து என்றுமே புயலுக்கு வாய்போ இல்லாத கோவையையும் பதம் பார்து இருக்கும் என்று அடித்து கூறுகிறார்.
-------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
==========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
12.11.18
ஆசியாவிலேயே பெரிய அன்னதானக் கூடம்
ஆசியாவிலேயே பெரிய அன்னதானக் கூடம்
திருமலையில் நித்ய அன்னதானம் மிகச்சிறப்பாக கோடானு கோடி பக்தர்களுக்கு வயிறார சாப்பாடு போடப்பட்டு வருகிறது. ஆனால் ஒவ்வொரு முறையும் பக்தர்கள் வரிசையில் நின்று காத்திருக்க வேண்டிய நிலை ஏனெனில் முன் பந்தியில் குறைந்த அளவே மக்கள் அமர்ந்து சாப்பிடும் அளவில் மண்டபம் அமைந்து இருந்தது.
நம் கருணைக்கடல் திருவேங்கடவன் மெய் சிலிர்க்கும் ஓர் அற்புத நாடகத்தை நடத்தினார்.
ஒருநாள் மதியம் 2.00 மணி அளவில் திருமலை E.O அலுவலகத்திற்கு ஒருவர் வந்தார் .
அங்கிருந்த உதவி செயலாட்சி தலைவரிடம் அய்யா ஒரு வேண்டுகோள், இங்கு ஸ்ரீனிவாசனை தரிசனம் செய்த பக்தர்கள் அன்னதான கூடத்தில் நீண்ட நேரம் காத்து இருக்கிறார்களே கொஞ்சம் பெரிய மண்டபம் இருந்தால் இன்னும் நிறைய பேர் சாப்பிட முடியும் அல்லவா என்று கூறினார்.
அதற்கு அவர் நீங்கள் வரிசையில் நின்று சாப்பிட முடிந்தால் சாப்பிடலாம் இல்லை என்றால் செல்லுங்கள் என்று சற்று கோபத்துடன் கூறினார்.
ஐயையோ ! நான் எனக்காக சொல்லவில்லை ஸ்ரீனிவாசனின் பக்தர்களுக்காகத்தான் கூறினேன் என்றார். அப்படி என்றால் நீங்களே ஒரு மண்டபம் கட்டி கொடுங்கள் அதில் நீங்கள் சொன்னபடி சாப்பாடு போடலாம் என்றார்.
உடனே அந்த பக்தர் சரி புதிய அன்னதான கூடம் கட்டுவதற்கு என்ன செலவு ஆகும் என்றார்.
அந்த அதிகாரி மிகுந்த கோபத்துடன் ஓஹோ அப்படியா ஒரு 25 கோடி கொடுங்கள் பெருசா மண்டபம் கட்டி உங்கள் பெயரிலேயே சாப்பாடு போடலாம் போய் வேலைய பாருங்க சார் என்றார்.
உடனே அந்த பக்தர் தான் வைத்திருந்த கைப் பையில் இருந்த காசோலை புத்தகத்தை எடுத்து 25 கோடிக்கு ஒரே காசோலையாக திருமலை தேவஸ்தானத்தின் பெயரில் எழுதி அந்த அதிகாரியிடம் கொடுத்தார்.
ஆனால் அந்த உதவி செயலாட்சி தலைவர் வாயடைத்து போய் மிகுந்த அதிர்சியுடன் வேர்த்து விருவிருக்க விரைந்து சென்று செயலாட்சி தலைவரை அழைத்து வந்து நடந்தவற்றை கூறினார்.அவரும் ஆடிப்போனார்.
பின்னர் தாங்கள் யார் என்று மிகுந்த மரியாதையுடன் அவரை அமர வைத்து கேட்டார்.அவர் அய்யா நான் ஆரம்ப காலத்தில் மிகுந்த ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவன் ஒரு வேலை சாப்பாட்டுக்கே கஷ்டபட்ட குடும்பம் . அப்படி இருந்தும் எழுமலை ஆண்டவன் மீது மிகுந்த பாசத்துடன் பக்தியும் வைத்து இருந்தேன் . திருமலைக்கு ஒவ்வொரு முறையும் நடந்தே வருவேன் தர்ம தரிசனத்தில் எவ்வளவு நேரம் ஆனாலும் என் அப்பன் ஏழுமலையானை பொறுமையுடன்தரிசனம் செய்து, எனக்கு ஒருவழி காட்டி நேர்மையுடன் நான் வாழ ஒரு தொழில் வேண்டும் அதில் உனக்கு லாபத்தில் சரி பாதி உன்னிடம் சேர்க்கிறேன் தந்தையே என்று வேண்டி பின்னர் இலவச சாப்பாடு வரிசையில் நின்று என் வயிறார நான் சாப்பிட்டு செல்வேன்.
பின்னர் நடைபாதை வழியாக மலையிறங்கி வீட்டிற்கு செல்வேன்.நாட்கள் செல்ல செல்ல பின்னர் என் தொழில் வளர்ச்சி அடைந்து இன்று மிகப்பெரிய செல்வந்தனாக இருந்தாலும் இது எல்லாம் என் அப்பன் எழுமலையான் சொத்து.
இன்று வரை நான் தனியாகவே ஒவ்வொரு முறையும் நடந்தே மலைக்கு வந்து தர்மதரிசனத்தில் நின்று தரிசனம் செய்து அவருக்கு சேர வேண்டிய பங்கை உண்டியில் போட்டு விட்டு அன்னதான கூடத்தில் வரிசையில் நின்று ஆனந்தமாய் சாப்பாடு சாப்பிட்டு விட்டு செல்வேன் .
நீங்கள் பலமுறை தினசரி பத்திரிக்கையில் அடையாளம் தெரியாத பக்தர் ஒருவர் உண்டியலில் இரண்டு கோடி ,மூன்று கோடி ஒரே பண்டிலாக போட்டுள்ளார் என்று செய்தி வெளியிட்டுள்ளீர்கள் அதை நான் தான் போட்டேன் . ஏனென்றால் இதை தேவஸ்தான அதிகாரி வாயிலாக கொடுத்திருந்தால் என்னை மிகுந்த மரியாதை செய்து சிறப்பு தரிசனம் அளித்திருப்பார்கள் .
ஆனால் அதை நான் விரும்ப வில்லை .
எந்த சூழ் நிலையிலும் என்னுடைய தந்தைக்கும் எனக்கும் உள்ள அந்த ஆரம்ப கால நினைவுகள் மாறிவிடக்கூடாது . இந்த பணம் என்னை என் பழைய வாழ்க்கையை மாற்றினாலும் நான் என்னுடைய நன்றியை மறக்காமல் இன்றும் இருபத்து ஐந்து வருடங்களுக்கு முன் நான் எப்படி திருமலைக்கு வந்தேனோ அதை போலவே இன்றும் நடந்தே வந்து நடந்தே செல்கிறேன் .
என் நண்பர்களையோ என் உறவினர்களையோ நான் அழைத்து வந்தால்அவர்கள் எண்ணப்படி நான் மாற வேண்டும் .இவ்வளவு வசதி இருந்தும் நடந்து செல்வதா , தர்ம தரிசனத்தில் காத்து இருப்பதா இலவச சாப்பாட்டிற்காக வரிசையில் நிற்பதா என்று புலம்பி தள்ளுவார்கள்.அதனால் தான் எப்பொழுதும் தனியாகவே வருவேன் .இன்று தரிசனம் முடிந்து அன்னதான கூடத்தில் வரிசையில் நிற்கும் போது நிறைய பேர் வரிசையில் காத்து நிற்பதை பார்த்து இன்று திடீரெனஎன் மனதில் இதை விட பெரிய மண்டபம் இருந்தால் ஒரே நேரத்தில் நிறைய பக்தர்கள் அமர்ந்து சாப்பிட முடியும் அல்லவா? இந்த எண்ணத்தை என்னில் உருவாக்கியதும் என் தந்தை திருவேங்கடவன் தான் .அவர் சொல்ல சொல்ல அவரை சுற்றி இருந்த அதிகாரிகளின் கண்களில்நீர் அருவியாய் பெருகி பெருமாளின் லீலைகளையும் ,அவர் பக்தரின் பக்தியையும் பார்த்து வாயடைத்து அமைதியாய் நின்றிருந்தனர் .
அந்த அறையில் மின் விசிறியின் சப்தம் மட்டுமே இருந்தது.பின்பு தான் அவர் ஆந்திரமாநிலத்தில் ஒரு பெரிய கோடீஸ்வரர் என்று அறிந்து ஆச்சர்யத்துடன் அவரிடம் உங்கள் விருப்ப படி புதிய அன்னதான கூடம் கட்டி உங்கள் பெயரையே அதற்கு வைத்து விடலாம் என்றனர்.வேண்டாம்! வேண்டாம் ! சாதாரண ஏழை என்னை செல்வந்தனாக வாழவைத்தது இந்த திருமலை அப்பனே இந்த பணம் என்னுடையதல்ல எழுமலையானுக்கு சொந்தமானது.தேவஸ்தானம் விரும்பும் பெயரில் நடக்கட்டும் என்றதும்,அதிகாரிகள் மெய்சிலிர்த்து போனார்கள்.ஒரே வருடத்தில் கட்டப்பட்ட இந்த புதிய அன்னதான கூடம் ஒரே நேரத்தில் 4 ஆயிரம் பேர் அமர்ந்து சாப்பிடும் அளவிற்கு கட்டப்பட்டு அதற்கு "மாத்ரு ஸ்ரீ தரிகொண்ட வேங்கமாம்பா" அன்னதான கூடம் என்று பெயரிடப்பட்டு உள்ளது .
இது ஆசியாவிலேயே பெரிய அன்னதான கூடமாகும்.
--------------------------------------------------------------
படித்து வியந்தது!!!!
அன்புடன்
வாத்தியார்
=================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!