மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label உதிரிப் பூக்கள். Show all posts
Showing posts with label உதிரிப் பூக்கள். Show all posts

3.10.19

எவ்வளவு கேட்டாலும் மறுக்காமல் தருபவர் யார்?


எவ்வளவு கேட்டாலும் மறுக்காமல் தருபவர் யார்?

தேவை என்பது வாழ்க்கை முழுவதும் மாற்று வடிவத்தில் வந்து நம்மை ஏங்க வைக்க கூடியது தான்.

*யாரும் பாத்துடாமல் அழுவது ஆண்கள். யாராச்சும் ஆறுதல் சொல்லுவாங்கனு அழுவது பெண்கள். எல்லாரும் நம்மள பாக்கனும்னே அழுவது குழந்தைகள்.*

கணவன் மனைவிக்குள்ள யார் அதிகமா நேசிக்கறாங்க அப்படிங்கறது முக்கியமில்லை, சின்ன சின்ன சண்டைகள் வரும் பொழுது அதில் யார் விட்டு குடுத்து போறாங்க அப்படிங்கறது தான் முக்கியம்.

*பணம் தான் பிரதானம் என்பதில் ஐயமில்லை. ஆனால் உறவுகளுக்குள் பாசத்தை தீர்மானிப்பதும் பணம் எனும் போது தான் யார் மீதும் பற்றில்லாமல் போகிறது.*

எவ்வளவு கேட்டாலும் மறுக்காமல் தருபவன் இறைவன். கொஞ்சம் கொடுத்தாலும் சொல்லிக் காட்டுபவன் மனிதன். இறைவனை நம்பியே உங்கள் வாழ்க்கைப் பயணத்தை தொடருங்கள்.

ஒரு விஷயத்தை அடைய எந்த முயற்சியும் செய்யாமல், அதற்காக திட்டமிடாமல் அதற்கான தகுதியே கூட இல்லாத நிறைய பேருக்கு அதிர்ஷ்டவசமாக அந்த விஷயங்கள் தானாகவே கிடைக்கும்.* நிறைய திட்டமிட்டு, நிறைய உழைத்து அதற்காகவே அல்லும் பகலும் கஷ்டப் பட்டுக் கொண்டு இருக்கின்ற நிறைய பேருக்கு அவர்கள் நினைத்த விஷயங்கள் நடக்காமலே போய் விடும், இந்த இரண்டுக்குமே *காரணமாக இருப்பது வினைப் பயன் மட்டுமே!* நாம் செய்த, செய்து கொண்டு இருக்கும் புண்ணியங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து எதிர்பாராத நேரத்தில் நமக்கு அதிர்ஷ்டங்களாக வருகின்றன, அதே போல் பாவங்களும் கூட ஒன்று சேர்ந்து எதிர்பாராத நேரத்தில் துரதிர்ஷ்டங்களாக வந்து துயரத்தில் தள்ளும்!

*நம்முடைய சந்தோஷங்களுக்கும் நமக்கு கிடைத்த செல்வங்கள் மற்றும் வசதி வாய்ப்புகளுக்கும் காரணம் நாம் மற்றும் நமது முன்னோர்கள்  செய்த புண்ணியங்கள்* என நினைத்திருந்தால், நமக்கு அகங்காரமோ நான் என்ற கர்வமோ வந்திருக்காது, அதன் மூலம் பிறருக்கு தீங்கு செய்யாமல் இருந்திருப்போம், அந்த தீங்கின் மூலம் பிறர் துன்பப் பட்டு இருக்க மாட்டார்கள், அந்த துன்பமும் அவர்களின் சாபமும் நமக்கு வந்திருக்காது, நமக்கு சாபமோ பாவமோ வராமல் இருந்திருந்தால், நமது குழந்தைகள் அந்த பாவத்தினால் கஷ்டப்பட்டு இருக்கமாட்டார்கள், நாமும் மீண்டும் மீண்டும் பிறந்து அதற்கான தண்டனையை அனுபவிக்க வேண்டிய அவசியமும் இருந்திருக்காது! நாமும் வாழ்ந்து, பிறரும் கூட நம்மை போல் வாழ இடமளித்து அனைத்து உயிர்களோடும் இணைந்து வாழ்வதே பூரணமான வாழ்வு!!!!

பெற்றுக் கொண்ட உதவியை மறக்காதீர்கள். எதையாவது எதிர் பார்த்து உதவி செய்தால் அதற்குப் பெயர் உதவி அல்ல வியாபாரம்.

*சொல்ல தயங்கி போக போக எல்லாம் சரியாகி விடும் என்கிற சில விஷயங்கள், சில சமயம் நம்மை சின்னா பின்னமாக்கி ஒன்றும் இல்லாமல் கூட ஆக்கி விடும்.*

இன்னும் ஏன் அந்த கோபமும் பிடிவாதமும். மன்னிக்க வேண்டியவர்களை மன்னித்து விடுங்கள், பேச வேண்டியவர்களிடம் பேசி விடுங்கள். நிலை இல்லாத வாழ்க்கை இது. அர்த்தமுள்ள வாழ்வை அனுபவித்து வாழ்ந்து விடுங்கள்.

*பிடித்தவர் என்பதற்காக அவருக்கு பிடித்தது போல் நாம் நடந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. நம் சுய கவுரவம் அவசியம்.*

வசதியான வாழ்க்கை அமைந்தால் கூட, வசதிகளை குறைத்து வாழ்ந்து பாருங்கள், பின் சிறிது கஷ்டத்தை கூட எளிதாக ஏற்று கொண்டு விடும் நம் மனது.
-------------------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
======================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

11.9.19

சட்டமும், நீதியும், மனிதாபிமானமும்!!!!


சட்டமும், நீதியும், மனிதாபிமானமும்!!!!

இந்தோனிஷியாவில் நீதிமன்றமொன்று சற்று வித்தியாசமான வழக்கொன்றை சந்தித்தது.........!!!

வயதான பெண்மணியொருவர், தோட்டமொன்றில் மரவள்ளிக்கிழங்கு திருடியதாக அத்தோட்ட பொறுப்பாளரினால் வழக்கு தொடரப்பட்டார்.

வழக்கை மிகக்கவனமாக செவியுற்ற நீதிபதி, அம்மூதாட்டியிடம் விசாரித்தபொழுது, அவர் இப்படி கூறினார்........:

"நான் களவாடியது உண்மைதான். எனது சிறிய பேரன் பசிக்கொடுமையால் வாடுகிறான். வேறுவழியின்றி இச்செயலை செய்தேன்." என்று தனது தவறை ஏற்றுக்கொண்டார்.

இதை கேட்டதும் நீதிபதி.........:

"என்னை மன்னிக்கவேண்டும். சட்டத்தின் முன்னால் நான் உங்களை வேறுபடுத்தி பார்க்க முடியாது. எனவே உங்களுக்கு பத்து இலட்சம் ருபாய் (100 அமெரிக்க டாலர்) அபராதமாக விதிக்கின்றேன். இதை கட்டத் தவறினால் இரண்டரை வருடங்கள் சிறையில் இருக்க வேண்டும்."

இவ்வாறு தீர்ப்பளித்துவிட்டு, தன்னுடைய நீதிபதி தொப்பியை கழற்றி அங்கு குழுமியிருந்த மக்களை பார்த்து......

"இங்குள்ள ஒவ்வொருவர்மீதும் நான் ஐம்பதுனாயிரம் ருபாய் (5 டாலர் ஐம்பது காசு) தண்டணையாக இடுகின்றேன். காரணம் !!!! இந்த நகரத்தில் ஒரு சிறு குழந்தை உணவின்றி பட்டினியால் வாடுவதற்கும், அதன் காரணமாக குழந்தையின் பாட்டி தவறான செயலை செய்யும் சூழலை உருவாக்கியதற்காகவும், உங்களுக்கு இத்தண்டணையை அளிக்கின்றேன்."
என்று உத்தரவிட்டு நீதிமன்ற உதவியாளர் மூலமாக, அங்குள்ள அனைவரிடமும் தண்டணைப் பணத்தை வசூலித்தார். இதில் தோட்டத்தின் பொறுப்பாளரும் அடங்குவார்.

இவ்வாறு சேர்ந்த 35 இலட்சம் ருபாயாவிலிருந்து (350 அமெரிக்க டாலர் ) 10 இலட்சம் ருபாயை நீதிமன்றத்திற்கு அளித்துவிட்டு, அம்மூதாட்டியை தண்டணையிலிருந்து விடுவித்து, மிகுதிப் பணத்தை அவரிடம் கொடுத்து, அவரது கஷ்டத்திற்கு பயன்படுத்தும்படி கூறி, அங்கிருந்து எழுந்து சென்றார்.!!!!!!!

சட்டம், மனிதாபிமானம், நீதி ஒன்றுக்கொன்று கைகோர்த்து தர்மத்தை நிலைக்கவைத்துவிட்டன !

நீதிபதி என்றால் இவர்போல சட்டத்தையும் மனிதாபிமானத்தையும் ஒருங்கே கையாள வேண்டும்.முன்னுதாரணமான இந்த நீதிபதிக்கு வாழ்த்துக்கள்......
--------------------------------------------------------------
படித்து நெகிழ்ந்தது!!!!
அன்புடன்
வாத்தியார்
============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

4.3.19

நானூறு ஆண்டுகால காதல் வரலாறு!!!


நானூறு  ஆண்டுகால காதல் வரலாறு!!!

மதுரை மாவட்டத்தில் எங்கு ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டாலும், குறிப்பாக அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் அவனியாபுரம் பகுதிகளில் சாமி மாடு என்று முதலாவாக ஒன்றை அவிழ்த்து ஓடவிடுவார்கள். அதை யாரும் பிடிக்கக்கூடாது என்பது ஆண்டாண்டு கால மரபு. விபரம் அறிந்தவர்களுக்குத் தெரியும் அந்த மாடு மாவீரன் அழகாத்தேவன் நினைவாகவே அவிழ்த்துவிடப்படுகிறது என்பது.

யார் இந்த அழகாத்தேவன்?

மதுரை மாவட்டத்தில் சொரிநாயக்கன்பட்டியைச் (இன்றைக்கு அது சொரிக்காம்பட்டி) சேர்ந்தவர் கருத்தமாயன். நிலபுலன்களோடு வாழ்ந்த செல்வந்தர். அவரது கடைக்குட்டி அழகாத்தேவன் புஜபல பராக்கிரமுடைய இளைஞன். ஆனால் பொறுப்பில்லாமல் தனது நண்பன் தோட்டி மாயாண்டியோடு ஊர் சுற்றுகின்ற நாடோடி.

அழகாத்தேவனுக்கு கால்கட்டு (கல்யாணம்) போட்டுவிட்டால் பையன் ஒழுங்காக இருப்பான் என்று பெரியவர்கள் கூறியதைக் கேட்ட கருத்தமாயன் பெண் பார்க்கும் படலத்தைத் தொடங்கினார்.
நாகமலைக்கு அருகேயுள்ள கீழக்குயில்குடியில் வாழ்ந்து வரும் கருத்தமலையின் மகள் ஒய்யம்மாள் குறித்து அறிந்து, தன் செல்வாக்குக்கு சமமாக இல்லையெனினும் கருத்தமாயன், கருத்தமலையின் வீட்டிற்கு பெண் பார்க்கச் செல்கிறார்.

கருத்தமலைக்கோ ஏக மகிழ்ச்சி. தனது மகளைப் பெண் பார்க்க கருத்தமாயன் வருவதையறிந்து ஊருக்குள் தடபுடல் செய்கிறார். வழக்கமான சம்பிரதாயங்கள் முடிந்த பின்னர் கருத்தமாயன், தனது மகன் அழகாத்தேவனுக்கு ஒய்யம்மாளைக் கேட்கிறார். கருத்தமலையோ தனது மகளிடம் ஒரு வார்த்தை கேட்க வேண்டும் என்று கூறி ஒய்யம்மாளிடம் கேட்கிறார்.

அவளுக்குப் அழகாத்தேவனைப் பிடித்துப்போனாலும், நிபந்தனை ஒன்றை விதிக்கிறாள். தான் வளர்த்து வரும் ஏழு காளைகளை அழகாத்தேவன் அடக்கினால், திருமணத்திற்கு ஒத்துக் கொள்வதாகவும், ஒருவேளை தோற்றால் தனது வீட்டில் பண்ணை அடிமையாக வேலை பார்க்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கிறாள்.

இந்த சவாலை அழகாத்தேவனும் ஏற்றுக் கொள்கிறான். காளையை அடக்குவதற்கு நாள் குறிக்கிறார்கள். தனது நண்பன் தோட்டி மாயாண்டியோடு இணைந்து கடும் பயிற்சி மேற்கொள்கிறான் அழகாத்தேவன். அந்த நாளும் வருகிறது. இரண்டு ஊர்ப் பொது மக்கள் மட்டுமன்றி, பக்கத்து ஊர் ஜனங்களும் கூடி நிற்க அழகாத்தேவன், வாடிவாசல் அருகே ஒய்யம்மாள் வளர்த்த ஏழு காளைகளை ஒவ்வொன்றாக எதிர்கொள்கிறான்.

அனைத்துக் காளைகளையும் மிகத் திறமையாகக் கையாண்டு வீழ்த்திய அழகாத்தேவன், ஏழாவது காளையோடு மல்லுக்கட்டுகிறான். கடுமையான போராட்டத்திற்கிடையே அந்தக் காளை அழகாத்தேவனின் வயிற்றைப் பதம் பார்க்கிறது.

குடல் வெளியே சரிந்த நிலையிலும் போராடி அந்தக் காளையை அடக்கிவிடுகிறான். உயிருக்கு ஆபத்தான நிலையில், அழகாத்தேவனை அழைத்துச் செல்கின்றனர். ஆனாலும் வாக்குக் கொடுத்த காரணத்திற்காக கருத்தமலை பெண் கொடுக்க சம்மதம் தெரிவிக்கிறார்.

சுத்துப்பட்டு கிராம ஜல்லிக்கட்டுகளில் பெயர் பெற்ற தங்களது காளைகளை அடக்கிவிட்டானே என்ற பொறாமையின் காரணமாக ஒய்யம்மாளின் சகோதரர்களுக்கு அழகாத்தேவனைப் பிடிக்கவில்லை. ஆகையால் அவர்கள் ஒரு சூழ்ச்சி செய்து, அழகாத்தேவனுக்கு மருத்துவம் பார்த்த பெண்ணை சரிக்கட்டி, அவனது உடம்பில் கொஞ்சம் கொஞ்சமாக விஷம் ஏற்றிக் கொலை செய்துவிடுகிறார்கள்!!

இந்த செய்தி ஒய்யம்மாளுக்குத் தெரியவரும்போது, தாங்கொணாத துயரத்தில் அழகாத்தேவனோடு உடன்கட்டை ஏறி தனது உயிரை மாய்த்துக்கொள்கிறாள்!!

அழகாத்தேவன் நினைவாக அவனது பரம்பரையில் வந்தோர், மதுரை மாவட்டம் செக்கணூரணிக்கு அருகிலுள்ள சொரிக்காம்பட்டியில் கோயில் கட்டி வணங்கி வருகின்றனர்.

கருவறையில் காளையோடு அழகாத்தேவன் நிற்க... அக்கோயிலுக்கு வெளியே அமைக்கப்பட்ட நினைவு வளைவில் நண்பன் தோட்டி மாயாண்டிக்கும் சிலை எழுப்பியுள்ளனர்.

கீழக்குயில்குடிக்காரர்களிடம் சொரிக்காம்பட்டிக்காரர்கள் எந்தவித மண உறவோ, கொடுக்கல் வாங்கலோ இப்போதும் வைத்துக்கொள்வதில்லை. இந்த மரபு காலங்காலமாகத் தொடர்கிறது.

நானூறு ஆண்டுகால காதல் வரலாற்றை மதுரை மாவட்ட ஜல்லிக்கட்டு போட்டிகள் இன்றும் தழும்பாய் சுமந்து கொண்டிருக்கின்றன... சொரிக்காம்பட்டி கிராம எல்லையில்... தோட்டி மாயாண்டி காவல் நிற்க... அழகாத்தேவன் கருவறையில் காளையோடு அருள்பாலித்துக் கொண்டிருக்கிறான்... ஒய்யம்மாள் அக்கருவறை காற்றோடு காற்றாய்...

காதலும் துரோகமும் நாணயமும் ரோசமும் நிறைந்த இந்த வீர வரலாறு

(மூலம்: முகநூலில் கிடைத்தது)
சகோதரரின் பதிவுடன்....
---------------------------------------------
படித்ததில் மனம் கவர்ந்தது!!!
அன்புடன்
வாத்தியார்
==========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

18.2.19

எழுத்தாளர் சுஜாதாவின் காபி கதை!

எழுத்தாளர் சுஜாதாவின் காபி கதை!

காபி புராணம் ஒரு பெரிய புராணம்தான்! சேக்கிழார் எழுதியதல்ல!👍👍

எழுத்தாளர் சுஜாதாவின்  காபி கதை

பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்கு ( காஃபி வித் காப்பி)
--------------------------------------------
ஏண்ணா.. பால் பாக்கெட் போட்டுட்டான்னானு பாருங்கோ..

இல்லையேடி.. எல்லார் ஆத்துலேயும் போட்டுட்டு கடைசில தான் நம்மாத்துக்கு வர்றா..

அறுபது வயதிற்கு மேற்பட்ட தமிழ் நாட்டு பிராமணர்களின் வயிற்றிற்கு எரி பொருள் காப்பி தான்.. கார்த்தால ஒரு தடவை . அதே
போல் மத்யானம் மூணு மணிக்கு ஒரு தடவை. ஒரு வாய் காபி உள்ளே போனால் தான் அன்னிக்கு வேலையே நடக்கும். குறிப்பாக
ஆண்களுக்கு.

காபி அதுவும் முதல் டிகாக்ஷனில் போட வேண்டும். இரண்டு டைப் பீபரி கொட்டைகளையும் சம அளவு மிக்ஸ் பண்ணி , சிலருக்கு
சிக்ரியுடன், சிலருக்கு இல்லாமலேயும் சுட சுட அரைச்சு வாங்கணும்.. எவர்சில்வர் பில்டரில் குறைந்த பட்சம் மூணு ஸ்பூன் காபி பொடிய அமுக்கி போடணும்.. சிறிய ஜாலி மூடி போன்ற ஒன்றை கொண்டு மேலும் அமுக்கி விடணும். தள தள வென வெந்நீர் கொதித்தவுடன் , நேரே விடாமல் போக வர சுற்றி விட வேண்டும். 'ணங்' என்று செல்லமாக பில்டர் மூடியால் ஒரு தட்ட வேண்டும்.

அதிகமாய் தட்டி விட கூடாது. அப்போது தான் சொட்டு சொட்டாக டிகாக்ஷன் ஸ்ட்ராங்கா விழும். கொஞ்சம் கூட தட்டி
விட்டாலோ , பொடி அமுக்கா விட்டாலோ டிகாக்ஷன் நீர்த்து போய்விடும்.

அந்த கால கூட்டு குடும்பங்கள் , பெரிய சம்சாரிகள் வீட்டில் இரண்டாவது டிகாக்ஷன் தான் எல்லாம். முதல் டிகாக்ஷனில் குடும்ப
தலைவருக்கு மட்டும் ரகசியமாக தயாரிக்கபடும். இன்றைய காஃபி மேக்கர்களெல்லாம் ஃபில்டருக்கு இணையாகாது.

பழைய திரைப்படங்களில் 'பிறாமணாள் காபி க்ளப்' என்ற போஸ்டரை அதிகம் பார்க்க முடியும்

சுமார் நாற்பது வருடங்களுக்கு முன்பு எங்கள் ஸ்ரீரங்கம் ரெங்க பவன் ஹோட்டல் காப்பி மிகவும் பிரசித்தம்..அவர்களே கூட
பிரத்யேகமாக ரெங்கநாயகி காபி என்று ஒரு கடை வைத்து இருந்தார்கள்..எனது சீனு மற்றும் ராமநாதன் பெரியப்பாக்கள்
வெளியூரிலிந்து வருபவர்கள் .டவுன் பஸ்ஸில் இருந்து இறங்கி ரங்க பவனில் ஃபர்ஸ்ட் கிளாஸ் காப்பி கொடுத்தாம்பா என்று
ஸ்லாகிப்பதை கேட்டு இருக்கிறேன். ஒரு சிறிய டபராவின் உள்ளுக்குள்ளே சூடு இறங்காமல் இருப்பதற்காக ஒரு குட்டி டம்ப்ளரை கவுத்து காபியை கொடுக்கும் வழக்கம் இன்றும் பல ஊர்களில் இருக்கின்றது.. மிக ஜாக்கிரதையாக அதை பிரித்து டபராவில் கொட்டி ஆற்ற வேண்டும். இல்லையெனில் மேலே சிந்தும் அபாயம் உண்டு. இன்றைக்கு ஸ்ரீரங்கத்தில் காந்தி சிலை அருகே முரளி கடை ஒன்றில் தான் காபி சொல்லி கொள்ளும்படியாக இருக்கிறது .

காப்பி போடுவது என்பது ஒரு கலை. ரொம்பவும் பால் இருக்க கூடாது. ரொம்பவும் கறுத்து போய் விட கூடாது. ஓரிரண்டு முறை
பெரிதாக ஆற்ற வேண்டும். நல்ல சூடு அதன் சிறப்பு.. நுரை வந்து அதை பார்ப்பதே ஒரு அழகு .அளவாக சர்க்கரை போட
வேண்டும்.இந்த சுகர் ஃப்ரீ மாத்திரைகள் எல்லாம் அதன் சுவையை மங்க செய்து விடும். ஒரு மிதமான கசப்பு தான் அதன்
தனித்துவம். முக்கியமாக, குடித்த பிறகும் நாக்கில் அதன் சுவை ஒரு மணி நேரத்திற்காவது தங்க வேண்டும்.சில பிரகிருதிகள்
அதனுடன் சேர்ந்து மருந்து மாத்திரையை எடுத்து கொள்ளும்போது , ரசனை கெட்ட ஜென்மங்கள் என்று சொல்ல தோன்றும்.

காலையோ , மதியமோ பரபரப்பு இல்லாமல் குடிக்க வேண்டும்.

ம்..' மேலே படிக்க போறானா இல்லை வேலைக்கு போக போறானா?; ', என்ன இருந்தாலும் அவா சுப்பிணியை கல்யாணத்துக்கு
கூப்பிடாதது தப்பு தான்' - இப்படி சில வம்பு சம்பாஷனைகளையும் சேர்த்து கொண்டால் காப்பி கூடுதல் சுவையுடன் இருக்கும்.

இதெல்லாம் மிடில் கிளாசுக்கு தான். கொஞ்சம் வசதி இருந்தால் போர்ன்விட்டா,ஓவல்டின் என்று தடம் மாறி விடுவார்கள்.
அப்படியே காப்பி சாப்பிட வேண்டி இருந்தால் , பையன் கறுப்பாகி விடுவானோ என்ற பயத்தில் அம்மாக்கள் நிறைய பால் விட்டு
வெள்ளை காப்பி ஆக்கி விடுவார்கள்.. அவன் படித்து விட்டு பின்னாளில் இஞ்சினியர் ஆகி ராமகுண்டத்தில் இருந்து கறு கறு
என்று வருவான் என்பது வேறு விஷயம் .

காப்பியை டம்ளர் டபராவில் குடித்தால் தான் அது ருசிக்கும்.. இந்த கப் அண்ட் சாசர் எல்லாம் டீ யிற்கு வேண்டுமென்றால் சரியாக
இருக்கலாம், காபிக்கு அல்ல.. திருச்சியில் பத்மா கபே என்று ஒரு ஓட்டல் உண்டு. ஆர் ஆர் சபா சமீபம் . அங்கே இன்ன பிற
அயிட்டங்கள் இருந்தாலும் , அதன் காபிக்கு தான் மவுசும் கூட்டமும்...பிற்காலத்தில் திருச்சியில் அபிராமி , காஞ்சனா போன்ற
ஹோட்டல்களில் ஓரளவு தரமான காப்பி கிடைத்து வந்தது..

இந்த ப்ரு, நெஸ்கா ஃ பே எல்லாம் ஹனி மூன் தம்பதியரின் அசதிக்கும் , விளம்பரத்துக்கும் மட்டும் தான் சரியாக வரும்.

திடீர் என்று ஒரு நாள் எங்கள் மாரீஸ் தியேட்டரில் இடைவேளையின் போது புஸ் புஸ் என்று சத்தம் போட்டு ஒரு இரும்பு
கம்பிக்குள் காப்பி கப்பை செலுத்தினார்கள்.. நிறைய நுரையுடன் பாலாக ஒரு காபி வந்தது. எஸ்ப்ரெசோ என்று அழைத்தார்கள்.

ஆர்வ மிகுதியில் உடனே குடிக்க போக சூட்டில் நாக்கு பற்றி கொண்டது.

சென்னையில் தி நகர் பஸ் நிலையம் அருகில் இந்தியா காப்பி ஹவுஸ் என்று ஒரு கடை இன்றும் இருக்கிறது..ஒரு காலத்தில் புகழ்
பெற்றது.அங்கே ரயில்வே ஐ ஆர் ஆர் போல வெள்ளை பீங்கான் கப்பில் தான் காப்பி . ஆனால் சகாய விலையில் கிடைக்கும்.

நீரிழிவு நோயாளிகளை கேட்டு பாருங்கள் . காலையில் வெறும் வயிற்றில் ரத்தம் கொடுக்க க்யூவில் நின்று ஒரு மணி நேரத்திற்கு
பிறகு ஒரு காப்பி குடித்தவுடன் அவர்களுக்கு கிடைக்கும் நிம்மதி சொல்லி மாளாதது..

அதிகமாக காபி விளையும் கர்நாடகாவில் கூட காபியின் சுவை என்னை பொறுத்தவரை சுமார் தான். உடுப்பியும் , காமத்தும் ஓரளவு சொல்லி கொள்ளும்படியான ஹோட்டல்களாக இருந்தாலும் , நம்ம ஊர் கும்பகோணம் டிகிரி காப்பிக்கு நாக்கை அடகு
வைத்தவர்களால் ஒருவித தயக்கத்துடன் தான் அவைகளை ஏற்று கொள்ள முடியும் ..

கல்யாணங்களில் காபியின் தரம் என்பது திருமண உறவையே அசைக்கும் வல்லமை பெற்றது.

சுடு தண்ணி சுடு தண்ணி என்று திட்டிக்கொண்டே எல்லோரும் ரயிலில் வரும் காப்பியை குடிப்பது தவிர்க்க முடியாதது..ஒரு
காலத்தில் மாயவரம் ரயில்வே ஸ்டேஷனில் தரமான காப்பி கிடைக்கும் என்று பெரியவர்கள் சொல்ல கேட்டு இருக்கிறேன்.

தலையெழுத்தே என்று குடிக்கும் காப்பி என்றால், இரண்டை சொல்லலாம் ஒன்று விமானங்களில் கொடுக்கப்படுவது. .மற்றொன்று ஐந்து நட்சத்திர ஹோட்டல் ரூம்களில் நாமே கெட்டில் பயன்படுத்தி தயாரிப்பது.. விமானங்களில் ஒரு முழு கப்பிற்கு டிகாக்ஷன் கொடுத்தாலும் , ஒரு குட்டி குமிழிலிரிந்து சொட்டு பாலை கலப்பதற்குள் ஆறி தொலைத்து விடும்..மற்றொன்று பால் பவுடர்
வகையை சேர்ந்தது.

ஹௌ ஆர் யு டூயிங் டுடே என்று கூறி அறிமுகமில்லாதவரிடமும் சிரித்தால் , அது அமெரிக்கா..

மில்க் ?..

நோ தேங்க் யூ…

ஒரு குண்டு பீப்பாய்காரி உங்கள் ஆர்டரையும் , பெயரையும் ஸ்கெட்ச் கொண்டு ஒரு பெரிய பேப்பர் கப்பில் எழுதி காப்பி தயாரித்து கொடுத்தால் அது ஸ்டார் பக்ஸ்.. கை சுடாமல் இருப்பதற்காக ஒரு பேப்பர் மேலுறையை நீங்கள் சொருகி கொண்டு மேலுக்கு ஒரு மூடியை எடுத்து கொள்ள வேண்டும் .

எவ்வளவு தான் காபி புராணம் பாடினாலும், வீட்டில் மனைவி தரும் காபிக்கு இன்னொரு கூடுதல் சிறப்பும் உண்டு .

'டொங்க்' என்று டம்ப்ளரை கீழே வைக்கும் வேகத்தில் அன்றைய நாள் ராசி பலனை தெரிந்து கொண்டு விடலாம்
-------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
=============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

23.10.18

உங்கள் கஷ்டங்களைத் தீர்க்கும் பாடல்கள்!!!


உங்கள் கஷ்டங்களைத் தீர்க்கும் பாடல்கள்!!!

பஞ்சம்_தீர்க்கும்_பஞ்சபுராணம்
-
பஞ்சபுராணம் பாடுதல் என்ற வழக்கம் முற்காலத்தில் நன்றாக இருந்து வந்துள்ளது. தற்காலத்தில் அவ்வழக்கம் சில கோயில்களில் மட்டுமே உள்ளது. சமயக் குரவர்கள், திருமூலர், சேக்கிழார், திருமாளிகைத் தேவர் ஆகியோர் பாடியவை திருமுறைகள் எனப்படுகின்றன.

அவற்றில் #தேவாரம் (7 திருமுறைகள்),

#திருவாசகம் (திருக்கோவையார்),

#திருவிசைப்பா

#திருப்பல்லாண்டு

#திருத்தொண்டர்_புராணம் (பெரிய புராணம்) ஆகிய ஐந்தில் ஒவ்வொரு பாடல் பாடுவது இன்று வழக்காற்றில் உள்ளது. இதுவே பஞ்ச புராணம் பாடுதல் எனப்படுகிறது.

சமய நிகழ்வுகளில் விநாயகர் துதியுடன் ஆரம்பிப்பது வழமை. பஞ்சபுராணம் பாடத் துவங்கும் போதும் முடிக்கும் போதும் "திருச்சிற்றம்பலம்" என்று சொல்ல வேண்டும். பஞ்சபுராணம் ஓதியபின் அருணகிரிநாத சுவாமிகள் அருளிய திருப்புகழ் பாடல் ஒன்று ஓதி, “வான்முகில் வழாது பெய்க” என்ற கந்த புராண வாழ்த்து பாடி நிறைவு செய்வது வழமை.
-
சைவ நெறி பிறழா திருக்கோயில்களில் நாம் சென்று வழிபடுகின்ற நேரங்களில் அங்கே சில காட்சிகளைக் காண்பதுண்டு. பெரிய கோயில்களில் ஆறு கால பூஜைகள், நான்கு கால பூஜைகள், இரண்டு கால பூஜைகள் என வசதிக்கேற்றபடி நடைபெறுவது உண்டு. சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம், தூப, தீப ஆராதனை நடைபெற்ற பிறகு, வேதங்களை இசைப்பார்கள் வேதியர்கள்.
-
அவர்கள் முடித்த பிறகு திராவிட வேதமெனும் தமிழிசைப் பாக்களை ஓதுமாறு கூறுவார்கள். சிலர் பஞ்ச புராணம் பாடுங்கள் என்றும் கூறுவர். ஓதுவாரும் அவருக்கு தெரிந்த தேவாரம், திருவாசகம் போன்ற பாடல்களை இசைப்பார். அதன் பிறகு வேதியர்கள் தீபாராதனை நிறைவு செய்து விபூதி பிரசாதம் வழங்கும் வழக்கம் இருந்து வருகிறது.
-
மந்திர நாயகனான சிவனை பஞ்சபுராணம் என்னும் ஐந்து பாடல் பாடி வழிபட்டால் கஷ்டங்கள் பஞ்சாய் பறந்திடும் என்பர். தினமும் காலையில் சிவ ஸ்தலத்திற்கு சென்று அபிஷேகம் முடிந்த பின் இதனை பாடுவது சிறப்பு. இயலாதவர்கள் உங்கள் வீட்டிலேயே இந்த சுலப பஞ்சபுராணத்தை நீங்கள் பாரயணம் செய்யலாம்.
-
#விநாயகர்_வணக்கம்

"ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே."
-
#திருஞானசம்பந்தர்_அருளிய_தேவாரம்

"தோடுடைய செவியன் விடையேறி ஓர் தூவெண்மதி சூடிக்
காடுடைய சுடலைப் பொடிபூசி என் உள்ளம் கவர் கள்வன்
ஏடுடைய மலரான் முனைநாள் பணிந்தேத்த அருள்செய்த
பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே."
-
#மாணிக்கவாசகர்_அருளிய_திருவாசகம்

"பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து நீ பாவியேனுடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி
உலப்பிலா ஆனந்தமாய தேனினைச் சொரிந்து புறம் புறம் திரிந்த
செல்வமே சிவபெருமானே
யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
எங்கு எழுந்தருளுவது இனியே."
-
#சேந்தனார்_அருளிய_திருவிசைப்பா

"கற்றவர் விழுங்கும் கற்பகக் கனியைக் கரையிலாக் கருணைமா கடலை
மற்றவர் அறியா மாணிக்க மலையை மதிப்பவர் மனமணி விளக்கைச்
செற்றவர் புரங்கள் செற்றஎம் சிவனைத் திருவீழிமிழலை வீற்றிருந்த
கொற்றவன் தன்னைக் கண்டு கண்டுள்ளம் குளிரஎன் கண் குளிர்ந்தனவே."
-
#சேந்தனார்_அருளிய_திருப்பல்லாண்டு

"பாலுக்கு பாலகன் வேண்டி அழுதிடப் பாற்கடல் ஈந்தபிரான்
மாலுக்குச் சக்கர அன்றருள் செய்தவன் மன்னிய தில்லை தன்னுள்
ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற சிற்றம்பலமே இடமாகப்
பாலித்து நட்டம் பயில வல்லானுக்கே பல்லாண்டு கூறுதுமே."
-
#சேக்கிழார்_அருளிய_பெரியபுராணம்

"உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவு உலாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்
மலர் சிலம்பு அடி வாழ்த்தி வணங்குவாம்."
-
#அருணகிரிநாதர்_அருளிய_திருப்புகழ்

"ஏறு மயிலேறி விளையாடு முகம் ஒன்றே
ஈசனுடன் ஞானமொழி பேசுமுகம் ஒன்றே
கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே
குன்றுருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே
மாறுபடு சூரனை வதைத்த முகம் ஒன்றே
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே
ஆறுமுகமான பொருள் நீ அருளல் வேண்டும்
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமானே."
-
#கச்சியப்ப_சிவாச்சாரியார்_அருளிய_கந்தபுராணம்

"வான்முகில் வழாது பெய்க மலிவளம் சுரக்க மன்னன்
கோன்முறை அரசு செய்க குறைவிலாது உயிர்கள் வாழ்க
நான்மறை அறங்கள் ஓங்க நற்தவம் வேள்வி மல்க
மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்."
-
#திருஞானசம்பந்தர்_அருளியது

"வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்
வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயது எல்லாம் அரன் நாமமே
சூழ்க வையகமும் துயர் தீர்கவே."

-
தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! போற்றி!
---------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
=========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

22.2.18

அன்னையின் ஈமச் சடங்கில் பட்டினத்தடிகள் என்ன செய்தார்?


அன்னையின் ஈமச் சடங்கில் பட்டினத்தடிகள் என்ன செய்தார்?

பட்டினத்தடிகள் துறவியாக ஊர் ஊராகத் திரிந்து கொண்டிருந்த காலத்தில் அவருடைய அன்னையார் மரணமடைந்தார். அவருடைய ஈமச்சடங்கை எங்கிருந்தாலும் வந்து செய்து தருவேன் என்று வாக்களித்திருந்த பட்டினத்தடிகள் சரியான நேரத்தில் சுடுகாட்டினை அடைந்தார். அவருடைய தாயின் சிதைக்காக உறவினர்கள் அடுக்கியிருந்த காய்ந்த விறகுகளை அகற்றிவிட்டு பச்சை வாழைமட்டைகளையும் இலைகளையும் கொண்டு சிதை அடுக்கி பத்துபாடல்கள் பாடி சிதையைப் பற்றச் செய்தார். அந்தப் பாடல்கள் மிகப் புகழ்பெற்றவை.

1
ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப்
பையலென்ற போதே பரிந்தெடுத்துச் செய்ய இரு
கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை
எப்பிறப்பில் காண்பேன் இனி
2
முந்தித் தவம் கிடந்து முன்னூறு நாள்சுமந்தே
அந்திபகலாய்ச் சிவனை ஆதரித்துத் தொந்தி
சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ
எரியத் தழல் மூட்டுவேன்
3
வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும்
கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து முட்டச்
சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டிய தாய்க்கோ
விறகிலிட்டுத் தீமூட்டு வேன்
4
நொந்து சுமந்து பெற்று நோவாமல் ஏந்திமுலை
தந்து வளர்த்தெடுத்துத் தாழாமே அந்திபகல்
கையிலே கொண்டென்னைக் காப்பாற்றிய தாய்தனக்கோ
மெய்யிலே தீமூட்டு வேன்
5
அரிசியோ நானிடுவேன் ஆத்தாள் தனக்கு
வரிசையிட்டுப் பார்த்து மகிழாமல் உருசியுள்ள
தேனே திரவியமே செல்வத் திரவியப்பூ
மானே எனஅழைத்த வாய்க்கு
6
அள்ளி இடுவது அரிசியோ தாய்தலைமேல்
கொள்ளிதனை வைப்பேனோ கூசாமல் மெள்ள
முகமேல் முகம்வைத்து முத்தாடி என்றன்
மகனே எனஅழைத்த வாய்க்கு
7
முன்னை இட்ட தீ முப்புறத்திலே
பின்னை இட்ட தீ தென்இலங்கையில்
அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே
யானும் இட்ட தீ மூள்கமூள்கவே
8
வேகுதே தீயதனில் வெந்து பொடிசாம்பல்
ஆகுதே பாவியேன் ஐயகோ மாகக்
குருவி பறவாமல் கோதாட்டி என்னைக்
கருதி வளர்த்தெடுத்த கை
9
வெந்தாளோ சோணகிரி வித்தகா நின்பதத்தில்
வந்தாளோ என்னை மறந்தாளோ சந்ததமும்
உன்னையே நோக்கி உகந்து வரம் கிடந்து என்
தன்னையே ஈன்றெடுத்த தாய்
10
வீட்டிருந்தாள் அன்னை வீதிதனில் இருந்தாள்
நேற்றிருந்தாள் இன்றுவெந்து நீறானாள் பால்தெளிக்க
எல்லோரும் வாருங்கள் ஏதென்று இரங்காமல்
எல்லாம் சிவமயமே யாம்

அன்புடன்
வாத்தியார்
=========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

10.1.18

ஏழை மக்களின் உணர்வுகளுக்கு மதிப்புக்கொடுத்த முத்தான முதல்வர்!


ஏழை மக்களின் உணர்வுகளுக்கு மதிப்புக்கொடுத்த முத்தான முதல்வர்!

காமராஜர் முதல்வராக இருந்த சமயம் பழைய சட்டமன்ற விடுதியில் மண்ணாங்கட்டி என்பவர் கீழ்மட்ட ஊழியராக இருந்தார்.

சட்டமன்ற ஊறுப்பினர்கள் கேட்பதை வாங்கிவந்து தருவார்.
முதல் தளத்தில் முன்பாகவே இருக்கும் முக்கையா தேவர்
அறையிலேயே இருப்பார். ’

ஒருமுறை ‘ஏம்பா மண்ணாங்கட்டி அவசரமாக வெளியில போறன். குளிச்சு முடிச்சு ரெடியாகுறதுக்குள்ள இட்லிய வாங்கி வந்துடு’
என்று 100 -ருபாயை கொடுத்தார் முக்கையா தேவர். சொன்னபடியே அவர் ரெடியாகி காத்திருந்தார்.

ரொம்ப நேரம் ஓடியது. தலையில் சுமையுடன் தட்டுதடுமாறி வந்தார் மண்ணாங்கட்டி. பார்த்ததும் ’ஏன்யா. நான் அவசரமா
வெளியில போகனும்னு காத்துகிட்டு இருக்கேன். இட்லி வாங்க இவ்வளவு நேரமா என்று எகிறினார் மூக்கையா தேவர்.

மண்ணாங்கட்டிக்கு கோபம். என்னங்கய்யா நீங்க. இங்க உணவகத்தில் அவ்வளவு இட்லி இல்லைன்னு சொல்லிட்டாங்க. மவுண்ட் ரோடெல்லாம் போய் அலைஞ்சு 100 ரூபாக்கும் இட்லி வாங்குறது லேசுபட்ட காரியமா’என்று பதிலுக்கு சத்தம் போட்டார்.

அதுதான் மண்ணாங்கட்டி என்ற வெகுளி. அப்பாவி. அவ்வளவு வெள்ளந்தி....

அப்படியான மண்ணாங்கட்டியின் தலையில் ஒருநாள் இடி விழுந்தது. அந்த உத்தரவை படித்துகாட்டச்சொல்லி வீட்டில் அழுது
புரண்டு கதறினார். ’அரசாங்க உத்தியோகத்தில் எழதப்படிக்கத் தெரியாதவர்கள் எல்லாம் இனி வேலையில் இருக்க கூடாது.
பணியில் இருந்து நீக்கப்படுகிறார்கள்’ என்று காமராஜர் போட்ட உத்தரவுதான் அந்த கடிதம். இரண்டு நாள் கழித்து பழைய
சட்டமன்ற உறுப்பினர் விடுதிக்கு ஓடிவந்தார். முக்கையா
தேவரிடம் தரையில் விழுந்து கதறி அழுகிறார்.

என்னவென்று கேட்கிறார். ’இப்படி ஒரு உத்தரவு வந்திருக்கிறதே. என் குடும்பம் எல்லாம் நடுத்தெருவுக்கு வந்துடுச்சே.
எப்படியாவது காப்பாத்துங்க ஐயா’ என்று பித்துப் பிடித்தவராக அழுகிறார். ஏதாவது சமாதானம் சொல்லனுமே என்று ’முதல்வர்
ஆபிசுக்கு போன் போடுடா.கேட்டுடலாம்’ என்றார். அப்போது எல்லாம் நேரடியாக தொலைபேசும் வசதி இல்லை. ஆப்ரேட்டரிடம்
கூறிவிட்டு காத்திருக்க வேண்டும். முதுல்வர் அலுவலகத்தில் யாராவது உதவியாளர் எடுப்பார்கள்.

மண்ணாங்கட்டி புக்செய்த நேரம் உடனே தொடர்பு கிடைத்தது. மறுமுனையில் முதல்வர் காமராஜ். யார் நீங்கள் உங்களுக்கு
என்ன வேண்டும் என்கிறார். அய்யா நான்தான் அசம்பிளி ஆஸ்டல் பியூன் மண்ணாங்கட்டி பேசுறங்க ஐயா என்றபடியே அருகில் இருந்த முக்கையா தேவரை பார்க்கிறார். அவருக்கு முதர்வர் அலுவலகத்தில் இருந்து யாராவது உதவியாளர்கள்தான் டெலிபோனை எடுத்திருப்பார்கள் என்ற நினைப்பு. ‘எழுதப்படிக்க தெரியாதவங்க எல்லாம் முதல்வரா இருக்கறப்போ நான் பியூனா
இருக்கக்கூடாதான்னு கேளுடா” என்கிறார்.

மறுமுனையில் இருந்த காமராஜரிடம் அதை அச்சுபிசகாமல்
 ‘ஐயா, எழுதப்படிக்க தெரியாதவங்க எல்லாம் முதல்வரா
இருக்கிறப்போ நான் பியூனா இருக்ககூடாதான்னு’ தேவர் ஐயா கேட்க சொல்றாருங்க என்கிறார் மண்ணாங்கட்டி. பிறகு
பேச்சில்லை....

அடுத்த 30 நிமிடத்தில் உயர் அதிகாரிகள் 3-பேர் அங்கே வந்துவிட்டார்கள். முதல்வருக்கு போன் செய்தது யார்?
என்றார்கள்.

நான்தான் ஐயா என்று முன்னே வருகிறார் மண்ணாங்கட்டி. உங்களை கையோடு அழைத்துவரச் சொல்லியிருக்கிறார்.
உடனே புறப்படுங்கள் என்று நிற்கிறார்கள். அப்போதுதான்
நாம் பேசியிருப்பது முதல்வர் காமராசர் என புரிகிறது.
முக்கையா தேவருக்கும் பதட்டம். மண்ணாங்கட்டி ’ஐயா
நீங்களும் வாங்க’ என்று அழுகிறார். பின்னாடியே வருகிறேன். நீ போப்பா என்று அனுப்பி வைக்கிறார். கோட்டையில் உள்ள
முதல்வர் காமராஜை நோக்கி வாகனம் பறக்கிறது.

முதர்வரின் அறையில் உள்ள ஷோபாவில், கண்ணத்தில் கைவைத்தபடி கவலைதோய்ந்த முகத்தோடு உட்கார்ந்திருக்கிறார்

காமராஜர். கதவு திறக்கப்படுகிறது. மண்ணாங்கட்டி முதலில் நுழைய அதிகாரிகள் சற்று ஒதுங்கி கதவோரம் நின்று கொண்டார்கள்.

நீங்கதான் மண்ணாங்கட்டியா...என்கிறார். ஆமாங்க ஐயா.
நான் தெரியாம பேசிட்டேன். என்னை மன்னிச்சுடுங்க ஐயா என்றபடியே கீழே விழுந்தார். அந்த கலாச்சாரம் காமராஜருக்கு பிடிக்காது. அதிகாரிகளை பார்க்க உடனே எழுப்பி நிற்க வைக்கிறார்கள்.

அவரை வா...வாண்ணே. வந்து பக்கதில உட்காருங்க என்றழைக்கிறார். மண்ணாங்கட்டி தயங்கி நிற்கிறார்.
காமராஜர் முறைக்க தயங்கி தயங்கி பக்கத்தில் சென்று உட்காருகிறார்.

மண்ணாங்கட்டியை முதுகில் தட்டிக்கொடுத்து முகத்தையே உற்றுப்பார்த்த முதல்வர் காமராஜ், பட்டென்று கையெடுத்து கும்பிட்டு ‘நான் தப்புபன்னிட்டன். தெரியாம செய்திட்டன். மன்னிச்சுடு. அந்த தவறை நீதான் புரியவைச்சே...ரெண்டு
நாளா உங்கவீட்ல சோறுதண்ணியில்லியாமே. சமைக்கலயாமே....உங்களுக்கு ரெண்டு பொம்பள புள்ளைங்க...எல்லாத்தையும் இப்பதான் ரிஞ்சுகிட்டேன்..
எவ்வளவு பெரிய தப்பு செய்திருக்கேன்.. நான் அப்படி ஒரு
உத்தரவு போட்டிருக்ககூடாது.

‘இனிமே புதிதாக வேலைக்கு வருபவர்களுக்கு எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்’னு போட்டிருக்க வேண்டும். நான்
செய்தது தவறுதான் என்று தட்டிக்கொடுத்து ஆதறவு சொல்ல மண்ணாங்கட்டி கதறி அழுகிறார். காமராஜருக்கும் பேச்சு இல்லை...

அடுத்து அங்கேயே ஒரு உத்தரவு தயாராகிறது. காமராஜர் கையொப்பமிடுகிறார். மண்ணாங்கட்டிக்கு மீண்டும் அரசு வேலை.

அதிகாரிகளை பார்த்து ‘இவரை அழைத்துக்கொண்டு போங்க. வேலை கொடுத்தாச்சு. இனி கவலைப்பாதீங்கன்னு அவரோட மனைவி, குழைந்தைங்ககிட்ட சொல்லுங்க’ன்னு அதிகார குரலில் உத்தரவிடுகிறார். பிறகென்ன நினைத்தாரோ சற்று தயங்கி
’போகிறபோது வெறும் கையோட போகாதீங்க. ஓட்டல்ல எல்லாருக்கும் சாப்பாடு வாங்கிட்டு போய் கொடுங்க. ரெண்டு நாளா அவர்கள் சாப்பிட்டிருக்க மாட்டர்கள்’ என கண்டிப்போடு கூறுகிறார் அந்த அதிகாரிகளிடம்.

மண்ணாங்கட்டிக்கு பேச வார்த்தைகளின்றி கையெடுத்து கும்பிட்டபடியே வெளியேற, முதர்வர் காமராஜரும் எழுந்தது கையெடுத்து கும்பிட்டபடியே அனுப்பிவைத்தார்.

ஒரு ஏழையின் கண்ணீர் வலி..இன்னொரு ஏழைக்குத்தான்
தெரியும். ஆமாம் காமராஜர் ஏழையாகவே, எழை
மக்களுக்காகவே இருந்தார்....

இனி இதுபோல முதல்வர் கிடைப்பாரா என்ற ஏக்கத்தோடு...
--------------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
==========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

3.1.18

பெண் குழந்தைகளுக்கு அம்மாவைவிட அப்பாவை ஏன் அதிகம் பிடிக்கிறது தெரியுமா?


பெண் குழந்தைகளுக்கு அம்மாவைவிட அப்பாவை ஏன் 
அதிகம் பிடிக்கிறது தெரியுமா?

பொதுவாக ஆண்கள் மனைவி மீதான அன்பை விட., பலமடங்கு அன்பை தனது மகள் மேல் கொண்டிருப்பார்கள்.

ஆண்மகனாகிய ஒருவன் தனது வாழ்வில் நான்கு தாய்களை சந்திக்கிறான்.

முதலில் பெற்றெடுத்த  தாய்,
இரண்டாவதாக சகோதரி உருவிலான தாய்.
மூன்றாவதாக தனது மனைவி உருவிலான தாய்.,
நான்காவதாக  மகள் உருவிலான தாய். இது ஆண்களுக்கு மட்டுமே கிடைத்த ஓர் வரம்.

மகள்கள் தங்களது அம்மாவை விட., அப்பாவை அதிகம் விரும்ப என்ன காரணம் என்பது பற்றி இதில் பார்ப்போம்..

தங்களது வாழ்நாளில் நீண்ட நாட்களாக கண்ட நேர்மையான தோழன் தங்களது தந்தைதான் என பெண்கள் எண்ணுகிறார்கள்.

பெண்கள் தங்களது வாழ்நாளில் அதிக நேரம் செலவழிப்பதும் அவர்களது தந்தையுடன் தான்.

தங்களது எந்த நிலையிலும் பாதுகாக்கும் ஒரே நபர் தந்தை தான் என்கின்றனர் பெண்கள்.

பிறந்த முதல் நாளில் இருந்து வளரும் ஒவ்வொரு நாளும், உலகை கற்றுத்தரும் ஆசான் தந்தை தான்.

இது மகன்களுக்கும் கிடைக்கும் வாய்ப்பு தான். ஆனால், பெண்களுக்கு வாழ்நாள் முழுதும் கிடைக்கும் பரிசு இது. மகன்களிடம் காண்பிக்கும் அதே கோபத்தை, அப்பாக்கள் தங்களது மகள்களிடம் காண்பிப்பது இல்லை.

வீட்டில் சகோதரன் வாங்கிய அடியை, எந்த மகளும் எப்போதும் வாங்கியது இல்லை. மகள்கள் கேட்கும் எந்த விஷயத்திற்கும் அப்பாக்கள், “முடியாது..” என்ற வார்த்தைகளை பிரயோகம் செய்வதில்லை.  தன்னால் முடிந்த வரை மகள்களை
மகிழ்ச்சியுடன் வளர்ப்பவர்கள் அப்பாக்கள்.

தங்களுக்கு என்ன மோசமான சூழ்நிலை வந்தாலும், ஏற்பட்டாலும் அதிலிருந்து மீட்டு வரும் சூப்பர் ஹீரோ அப்பா தான். தைரியம் ஊட்டும் அம்மா என்னதான் அம்மா பாலூட்டினாலும், பெண்களுக்குள் தைரியத்தை ஊட்டுவது அப்பாக்கள் தான்.

அம்மாவுக்கு எப்போதுமே தங்களது குழந்தைகள் மீது ஓர் பயம் இருக்கும் அது பயம் அல்ல, அக்கறை. ஆதலால், தைரியத்தை ஊட்ட அப்பாக்களால் மட்டும் தான் முடியும்.

மாற்றம் இல்லாதவர் ஓர் பெண்ணின் உறவில், அனைவரும் ஒவ்வொரு சூழ்நிலை வரும் போதும், மாறி, மாறி, தோன்றுவர்.

அவர்களுள் நிறையா மாற்றங்களை காணமுடியும். ஆனால், அம்மா, அப்பா மட்டும் தான் கடைசி வரை எந்த மாற்றமும் இல்லாமல், மகளை ஏமாற்றம் அடைய வைக்காமல் இருக்கும் உறவுகள்.

கடைசி வரை தன்னுடன் இருக்க ஒவ்வொரு மகளும் விரும்பும்
உறவு அப்பா. அப்பாவின் மறைவு பெண்களின் கண்ணீருக்கு காரணமாகிறது.

ஓர் மகளின் வாழ்க்கையில் அப்பா என்பவர் ஓர் உறவு அல்ல, தோழன், ஹீரோ, காவலன் என எண்ணற்ற பாத்திரங்களை தாங்கிக் கொண்டிருப்பவர் தான் அப்பா.

அதனால்தான் பெண்கள் தங்களது தந்தையை அதிகமாக நேசிக்கிறார்கள்.
----------------------------------------------------
படித்ததில் பிடித்தது!!!

அன்புடன்
வாத்தியார்
==========================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

8.8.16

எப்படித் தேர்வு செய்தார் கர்மவீரர் காமராஜர்?


எப்படித் தேர்வு செய்தார் கர்மவீரர் காமராஜர்?

கர்மவீரர் காமராஜர் முதல்வராய் இருந்த போது, மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்ர்க்கை ஒதுக்கீட்டில், முதலமைச்சருக்கென 10 இடங்கள் Quota ஒதுக்கியிருந்தார்களாம். அதற்கென விண்ணப்பங்களும் வரவேற்கப்பட்டனவாம். அந்த விண்ணப்பங்களிருந்து யாரை வேண்டுமானாலும் 10 பேரை முதல்வர் தேர்ந்தெடுக்கலாம். காமராஜரின் உதவியாளருக்கு ஒரு எண்ணம் தோன்றியதாம். ஊரெல்லாம் இவரைப் பெரிய மனம்   கொண்டவர் என்று சொல்கிறார்களே, இவர் எந்த அடிப்படையில் மாணவர்களை தேர்ந்தெடுக்கிறார் என்று பார்ப்போம். தன் ஜாதி அடிப்படையிலா, தன் ஊர்க்காரர்களுக்கு கொடுப்பாரா, நண்பர்களின் பிள்ளைகளுக்கு கொடுப்பாரா அல்லது கட்சிக்காரர்களுக்கு கொடுப்பாரா? என்று பார்க்கலாம். அப்போது இவர் சுயரூபம் தெரிந்து விடும் என்று எண்ணினாராம்.

காமராஜர் முன்பு விண்ணப்பங்களை எடுத்து சென்று கொடுத்தாராம். சில நிமிடங்களில் அவற்றை பரிசீலித்த காமராஜர், கடகடவென பத்து விண்ணப்பங்களை எடுத்து கொடுத்து விட்டு சென்று விட்டாராம். அவற்றைப் பார்த்த உதவியாளருக்கோ மிகுந்த ஆச்சரியமாக இருந்தது. ஏனென்றால் அவர் எண்ணிய ஒரு அடிப்படையில் கூட அவர் தேர்ந்தெடுத்த விண்ணப்பங்கள் இல்லை. நேராக காமராஜரிடமே சென்று, நீங்கள் தேர்ந்தெடுத்த மாணவர்கள், உங்கள் ஜாதி, ஊர், நண்பர்கள் அல்லது கட்சிக்காரர்கள் என்று எந்த அடிப்படையிலும் வரவில்லையே, பிறகு எந்த அடிப்படையில் இவர்களை தேர்வு செய்தீர்கள்? என்று கேட்டாராம்.

சிரித்துக் கொண்டே கல்வி வள்ளல், கர்மவீரர் காமராஜர் சொன்னாராம், நீங்கள் கொடுத்த விண்ணப்பங்களையெல்லாம் வாங்கிப் பார்த்தேன், அவற்றில் பெற்றோர் கையொப்பம் என்ற இடத்தில் யார் விண்ணப்பங்களில் எல்லாம் கைய்யெழுத்துக்கு பதில் கைநாட்டு [கை ரேகை] இருந்ததோ, அவற்றைத் தான் நான் தேர்வு செய்தேன். எந்த குடும்பத்திலெல்லாம் கல்லாமை என்னும் இருள் இருக்கிறதோ, அவர்கள் வீட்டுக்குத் தான் நாம் முதலில் விளக்கேற்ற வேண்டும் என்று கூறினாராம். இப்படிப்பட்ட தலைவர்களும் நம் தமிழ்நாட்டில் தான் வாழ்ந்துள்ளனர் என்பதில் பெருமிதம் கொள்வோம்.
----------------------------------------------------------------------
2
மூன்று விஷயங்கள் யாருக்காகவும் காத்திருப்பது இல்லை.
👉 நேரம்
👉 இறப்பு
👉 வாடிக்கையளர்கள்
மூன்று விஷயங்கள் சகோதர சகோதரிகளையும் விரோதியாக்கும்.
👉 நகை
👉 பணம்
👉 சொத்து
மூன்று விஷயங்கள் யாராலும் திருடமுடியாது.
👉 புத்தி
👉 கல்வி
👉 நற்பண்புகள்
👑4. மூன்று விஷயங்கள் ஞாபகம் வைத்திருப்பது அவசியம்.
👉 உண்மை
👉 கடமை
👉 இறப்பு
👑5. மூன்று விஷயங்கள் வெளிவந்து திரும்புவதில்லை.
👉 வில்லிலிருந்து அம்பு
👉 வாயிலிருந்து சொல்
👉 உடலிலிருந்து உயிர்
👑6. மூன்று பொருள்கள் வாழ்க்கையில் ஒருமுறைதான் கிடைக்கும்.
👉 தாய்
👉 தந்தை
👉 இளமை
👑7. இந்த மூன்று பேர்களுக்கும் மரியாதை கொடு.
👉 தாய்
👉 தந்தை
👉 குரு
👑நம்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள் :
1) ஏழ்மையிலும் நேர்மை
2) கோபத்திலும் பொறுமை
3) தோல்வியிலும் விடாமுயற்சி
4) வறுமையிலும் உதவிசெய்யும் மனம்
5) துன்பத்திலும் துணிவு
6) செல்வத்திலும் எளிமை
7) பதவியிலும் பணிவு
👑வழிகாட்டும் ஏழு விஷயங்கள் :
1) சிந்தித்து பேசவேண்டும்
2) உண்மையே பேசவேண்டும்
3) அன்பாக பேசவேண்டும்
4) மெதுவாக பேசவேண்டும்
5) சமயம் அறிந்து பேசவேண்டும்
6) இனிமையாக பேசவேண்டும்
7) பேசாதிருக்க பழக வேண்டும்
👑நல்வாழ்வுக்கான ஏழு விஷயங்கள் :
1) மகிழ்ச்சியாக இருக்க பழகுங்கள்
2) பரிசுத்தமாக சிரிக்ககற்று கொள்ளுங்கள்
3) பிறருக்கு உதவுங்கள்
4) யாரையும் வெறுக்காதீர்கள்
5) சுறுசுறுப்பாக இருங்கள்
6) தினமும் உற்சாகமாக வரவேற்கத்தயாராகுங்கள்
7) மகிழ்ச்சியாக இருக்க முயற்சி மேற்கொள்ளுங்கள்
👑கவனிக்க ஏழு விஷயங்கள் :
1) கவனி உன் வார்த்தைகளை
2) கவனி உன் செயல்களை
3) கவனி உன் எண்ணங்களை
4) கவனி உன் நடத்தையை
5) கவனி உன் இதயத்தை
6) கவனி உன் முதுகை
7) கவனி உன் வாழ்க்கையை
---------------------------------------------------------------
3
சிறந்தவனாக இரு, சிறந்ததை வைத்திரு, சிறந்ததை செய்.
2.   ஓடாத நதியும், தேடாத மனமும் தெளிவு கொள்ளாது.
3.   போகும்போதே என்னை ரசித்து கொண்டே போ, திரும்பி வரமாட்டேன் உனக்காக. இப்படிக்கு - வாழ்க்கை.
உன் மனம் ஒன்றே உன்னை வீழ்த்தக்கூடிய ஒரே ஆயுதம். அது தெளிவாக இருக்கும் வரையில் நீ ஒருவராலும் வீழ்த்தப்படுவதில்லை
===================================================================
படித்ததில் பிடித்தது.உங்களுக்கு அறியத் தந்துள்ளேன்

அன்புடன்,
வாத்தியார்
===================================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

29.7.16

பதினேழு வயது இளைஞனின் பாராட்டப்பட வேண்டிய செயல்!



பதினேழு வயது இளைஞனின் பாராட்டப்பட வேண்டிய செயல்!

மும்பையில் 17 வயது மாணவர். அவர் செய்து இருக்கும் தனது அட்டகாசமானச் செயலால் வடக்கு மும்பையில் ஒரு திடீர் ஹீரோவாக உருவாகியிருக்கிறார்.

மும்பை “சாதே’ நகரில் ஒதுக்குபுறமாக ஒரு சேரி பகுதி உள்ளது. இங்குள்ள குழந்தைகள் பள்ளிக்கு செல்ல வேண்டுமெனில் சேரிப் பகுதியை ஒட்டியுள்ள 50 அடி நீள சாக்கடையை கடந்து தான் செல்ல வேண்டியிருந்தது.

இதனை சாதே நகரில் அடுக்கு மாடியில் வசிக்கும் 17 வயது இ­ஷான் பல்பாலே என்கிற இளைஞன் தினசரி பார்த்திருக்கிறார். சீருடை அணிந்த குழந்தைகள் சாக்கடையில் இறங்கி பள்ளிக்கு செல்வதை பார்த்து தனது பெற்றோர்களிடமும், நண்பர்களிடமும் சமூக அமைப்பினர்களிடமும் முறையிட்டு இருக்கிறார். உள்ளூர் நகராட்சிகளிடமும் இந்த விஷயம் சென்று இருக்கிறது.

ஆனால் ,அவர்கள் கடமையை செய்வதில் தமிழ்நாட்டை விட சிறந்தவர்கள். தப்பித்தவறிக் கூட அந்த சேரி பக்கம் சென்று பார்க்கவில்லை.

வெறுத்துப்போன இஷான் தனது சேமிப்புப்பணம், நண்பர்களின் கடன் என பெரும் பணம் திரட்டி சேரி குழந்தைகள் சாக்கடையை கடக்க 50 அடி நீளம், 5 அடி அகலத்தில் ஒரு பாலத்தையே கட்டிவிட்டார்.

அடிப்படையில் இவர் ஒரு சிவில் பொறியாளர் மாணவன் என்பதால் தனது முதல் புராஜக்டை பட்டம் வாங்காமலேயே செய்து அசத்தி உள்ளார். முழுக்க முழுக்க மரக்கட்டைகள் கொண்டே எட்டே நாட்களில் இந்த பாலத்தை கட்டிவிட்டார். தற்போது பள்ளிக் குழந்தைகள் மட்டுமின்றி சேரிப்பகுதிகளில் குடியிருக்கும் 15,000 மக்களுக்கும் இந்த பாலம் தான் சாக்கடையை கடக்க உதவி செய்கிறது.

பிற்பாடு இதே பாலத்தை பயன்படுத்தியே எம்.எல்.ஏக்களும் எம்.பிக்களும் ஓட்டு கேட்க வரலாம் யார் கண்டது. சரி, இஷான் பல்பலேவைப் பாராட்டலாம் என தொடர்பு கொண்டால், அவர் அடுத்தப் புராஜெக்ட்டில் பிஸியாக இருக்கிறாராம். அதாவது, சேரிக் குழந்தைகளுக்குக் கழிவறை கட்டும் பணியில். பலே ! பல்பாலே.
====================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

27.7.16

அசரவைத்த மேடைப் பேச்சுக்கள்!

அசரவைத்த மேடைப் பேச்சுக்கள்!

இன்று, அசர வைத்த மூவரின் மேடைப் பேச்சுக்களை காணொளி வடிவில் கொடுத்திருக்கிறேன். பார்த்து, கேட்டு இரசியுங்கள்! எல்லாம் சிறு சிறு காணோளிகள்தான். நேரமாகுமே என்ற கவலையின்றிப் பாருங்கள்!

அன்புடன்
வாத்தியார்
-------------------------------------------------
1
முதலில் ஆசிரியர் திரு.அருள் பிரகாஷ் அவர்களின் மேடைப் பேச்சு


2,
ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவரின் மேடைப் பேச்சு


3. திரு.பழ.கருப்பையா அவர்களின் மேடைப் பேச்சு!


==================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

25.7.16

இரசனை இருந்தால் கவலை காலி ஆயிரும்; வாழ்க்கை ஜாலி ஆயிரும்!

இரசனை இருந்தால் கவலை காலி ஆயிரும்; வாழ்க்கை ஜாலி ஆயிரும்!

கிச்சுகிச்சு மூட்டும்  போது வரும் அடக்கமுடியாத சிரிப்பு...

கடைசி தீக்குச்சிக்கு காட்டும் பொறுப்பு

மொட்டமாடி தூக்கம் ..

திருப்தியான ஏப்பம்...

கூட்டமான பஸ்ல ,  நா அடுத்த stoppingல எறங்கிருவேன்,   நீங்க உக்காந்துக்கோங்க என்ற வார்த்தை...

நாம் செய்யும் மொக்க மேஜிக்கை வியந்து ரசிக்கும்  குழந்தை..

7 கழுதை வயசானாலும் நமக்கு திருஷ்ட்டி சுத்தும் பாட்டி..

பாட்டியிடம் பம்மும் தாத்தா ...

தலைவர் படம்  First day first show ticket கிடைத்தவுடன் விடும் பெருமூச்சு ...

தாகம் தணித்த bore well  pipe தண்ணி ..

பத்து ரூவா change  குடுங்கனு,  கடைக்காரன்  மூஞ்சிய காட்டும்போது , எப்பவோ purse ல வெச்ச இத்து போன பத்து ரூவா...

Notebookன்  கடைசிப்பக்கம்...

கொளுத்தும் வெய்யிலிலும் முகமூடி அணியாத makeup  இல்லா அழகி ...

பல வருடம் ஆனாலும் நம் குறும்பை மறந்து , நம்மை மறக்காத ஆசிரியர் ...

தூங்க தோள் கொடுத்த சக பயணி ....

எரிந்து முடிந்த computer சாம்பிராணி ..

பாய் வீட்டு பிரியாணி ..

பார்த்த நொடியில் உரிமை எடுத்துகொள்ளும் பால்ய நண்பன்..

இப்பவும் டேய் என அழைக்கும் தோழி ..

இரவு 2 மணிக்கு கதவை திறந்துவிடும் அம்மா ...

கோபம் மறந்த அப்பா..

சட்டையை ஆட்டய போடும் தம்பி..

அக்கறை காட்டும் அண்ணன்..

அதட்டும் அக்கா ...

மாட்டி விடாத தங்கை ..

சமையல் பழகும் மனைவி ...

Sareekku fleets எடுத்துவிடும் கணவன்..

இதுவரை பார்த்திராத  பேப்பர் போடும் சிறுவன்..

Horn அடித்து எழுப்பிவிடும் பால்காரர்...

வழிவிடும் ஆட்டோக்காரர்...

High beam போடாத lorry driver...

ஊசி போடாத doctor..

சில்லறை கேட்காத conductor..

சிரிக்கும்  police...

முறைக்கும் காதலி..

உப்பு தொட்ட மாங்கா..

அரை மூடி தேங்கா..

12மணி குல்பி..

Atm a / c ..

sunday சாலை ...

மரத்தடி அரட்டை...

தூங்க விடாத குறட்டை...

புது நோட் வாசம்..

மார்கழி மாசம்..

ஜன்னல் இருக்கை..

தும்மும் குழந்தை..

கோவில் தெப்பகுளம்..

Exhibition அப்பளம்..

முறைப்பெண்ணின் சீராட்டு ...

எதிரியின் பாராட்டு..

தோசைக்கல் சத்தம் ..

எதிர்பாராத முத்தம் ...

பிஞ்சு பாதம்..

இதை எழுதும் நான்..

படிக்கும் நீங்கள்..

இன்னும் நிறைய இருக்கு இந்த உலகத்துல ரசிக்க ..

வாழ்க்கைய வெறுக்க  high heels அளவுக்கு பெருசா 10 காரணம் இருந்தாலும்

அதை ரசிக்க , mini meals மாதிரி வெரைட்டியான விஷ்யங்கள் நிறைய இருக்கு ..

அதையெல்லாம் water tank அளவுக்கு வாய திறந்து ரசிக்கனும்னு இல்ல ...

water  packet  அளவுக்கு மனச திறந்து ரசிச்சாலே போதும்....

கவலை காலி ஆயிரும்
வாழ்க்கை ஜாலி ஆயிரும்
Face fresh ஆயிரும்

...SO...

வாங்க ... வாங்க..
வாழ்க்கைய ரசிங்க .. !
====================================
2
இந்த பதிவைப் படித்து தலை சுத்துச்சுன்னா நான் பொறுப்பல்ல..!!!!

உறவுங்கறது ஒரு சங்கிலி...
அது போய்ட்டே இருக்கும்...
இப்போ மலையாள ஆக்டர் மோகன்லால் இருக்கார். அவரோட மாமனார் நடிகர் பாலாஜி. பாலாஜியோட சகோதரி ராஜேஸ்வரி பார்த்தசாரதி. இவர் Y.gee. மகேந்திரனோட அம்மா. மகேந்திரனோட மனைவியின் தங்கை தான் லதா ரஜினிகாந்த். லதாரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா. அவர் கணவர் தனுஷ்.
லதா ரஜினி தம்பி ரவி. இவர் மகன் அனிருத். Y.Gee.மகள் மதுவந்தி. இவர் கணவர் அருண். அருணின் பாட்டி நடிகை சாவித்திரி. தாத்தா நடிகர் ஜெமினி கணேசன்.
இப்போ மோகன்லாலுக்கு, ரஜினி என்ன உறவு?...
பாலாஜிக்கு ஜெமினி என்ன முறை?..
யாருக்காவது பதில் தெரிஞ்சா சொல்லுங்க...
எனக்கு சத்தியமா தெரியவில்லை!
==========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

29.6.16

இணையத்தில் இலவசமாகக் கிடைக்கும் சித்தர் நூல்கள்!


இணையத்தில் இலவசமாகக் கிடைக்கும் சித்தர் நூல்கள்!

சித்தர் நூல்கள்:

அன்புள்ள நண்பர்களே,

கீழே கொடுத்துள்ள இணைய தளங்களில்  நிறைய சித்தர் நூல்கள் உள்ளது. அங்கு சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். இந்த தகவலை தந்த நண்பருக்கு நிறைய நன்றிகள்.  இப்படியான இணையத் தளங்கள் உங்களுக்குத் தெரிந்தால் தயவு செய்து அந்த தகவல்களை அடியேனுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே!. அந்த நூல்களை அடியேன் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.

தயவு செய்து இந்த நூல்களை பதிவிறக்கம் செய்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். எல்லோரும் சேர்ந்து பயணிப்போம்.

http://www.tknsiddha.com/siddha-books.htm

http://www.tamilnavarasam.in/siddhamedicine.aspx

http://www.tamilnavarasam.in/illakkiyam.aspx

http://www.tamilnavarasam.in/grammar.aspx

http://www.tamilnavarasam.in/tamil-navarasam-thirukikural.aspx

http://www.tamilnavarasam.in/nattudamai.aspx

http://www.tamilnavarasam.in/panniru-thirumuraikal-tamil-
navarasam.aspx

http://www.tamilnavarasam.in/kathai-kavithai.aspx

http://www.tamilnavarasam.in/tamil-dictionary-tamil-navarasam.aspx

http://www.tamilnavarasam.in/siddhamedicine.aspx

http://www.tamilnavarasam.in/Spiritual.aspx

http://www.tamilnavarasam.in/morebooks.aspx

http://www.tamilnavarasam.in/kuzhanthaipadal.aspx

http://www.tamilnavarasam.in/studymaterial.aspx

http://www.tamilnavarasam.in/pothuarivu.aspx;
================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

13.6.16

என்னைக் கவர்ந்த வாசகங்கள்!

என்னைக் கவர்ந்த வாசகங்கள்!!!

*பேசி தீருங்கள்.
         பேசியே வளர்க்காதீர்கள்.

*உரியவர்களிடம்  சொல்லுங்கள்.
     ஊரெல்லாம் சொல்லாதீர்கள்.

*நடப்பதைப் பாருங்கள்.
     நடந்ததைக்  கிளறாதீர்கள்.

*உறுதி காட்டுங்கள்.
  பிடிவாதம்  காட்டாதீர்கள்.

*விவரங்கள் சொல்லுங்கள்.
     வீண்வார்த்தை சொல்லாதீர்கள்.

*தீர்வை விரும்புங்கள்.
      தர்க்கம் விரும்பாதீர்கள்.

*விவாதம்  செய்யுங்கள்.
     விவகாரம் செய்யாதீர்கள்.

*விளக்கம் பெறுங்கள்.
      விரோதம் பெறாதீர்கள்.

*பரிசீலனை செய்யுங்கள்.
     பணிந்து போகாதீர்கள்.

*சங்கடமாய் இருந்தாலும்
     சத்தியமே பேசுங்கள்.

*செல்வாக்கு இருந்தாலும்
    சரியானதைச் செய்யுங்கள்.

*எதிர் தரப்பும் பேசட்டும்.
  என்னவென்று கேளுங்கள்.
  எவ்வளவு சீக்கிரம் தீர்வு வரும் பாருங்கள்.

*நேரம் வீணாகாமல்
    விரைவாக முடியுங்கள்.

*தானாய்த்தான் முடியுமென்றால்,
     வேறு வேலை பாருங்கள்.

*யாரோடும் பகையில்லை என்பது போல் வாழுங்கள்....

மின்னஞ்சலில் வந்தது. உங்களுக்கு அறியத் தந்துள்ளேன்
அன்புடன்
வாத்தியார்
---------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

1.6.16

இனி எல்லாம் ஒரு க்ளிக்கில்!


இனி எல்லாம் ஒரு க்ளிக்கில்!

234 -எம் எல் ஏக்களும் இனிமே ஒரு கிளிக்கில் !!!
ஒவ்வொரு தொகுதி எம் எல் ஏக்கும் ஒரு ஈ மெயில் ஐடி கொடுக்கப்பட்டுள்ளது.
இனிமேல் உங்கள் " நியாமான " கோரிக்கைகளை நீங்கள் அனுப்பலாம்.
பதில் வருமா வராதான்னு தெரியாது,

எல்லா எம் எல் ஏக்கும் லேப் டாப் கொடுக்கப்பட்டுள்ளது
அதனால் கண்டிப்பாக பதில் கிடைக்கும் என நம்புவோம்.
234 தொகுதி எம் எல் ஏக்கு தனி தனியே ஈ மெயில் ஐடி கொடுக்கபட்டுள்ளது...

1 Acharapakkam - mlaacharapakkam@tn.gov.in
2 Alandur - mlaalandur@tn.gov.in
3 Alangudi - mlaalangudi@tn.gov.in
4 Alangulam - mlaalangulam@tn.gov.in
5 Ambasamudram -- mlaambasamudram@tn.gov.in
6 Anaicut -- mlaanaicut@tn.gov.in
7 Andhiyur --mlaandhiyur@tn.gov.in
8 Andimadam --- mlaandimadam@tn.gov.in
9 Andipatti----mlaandipatti@tn.gov.in
10 AnnaNagar--- mlaannanagar@tn.gov.in
11 Arakkonam ----mlaarakkonam@tn.gov.in
12 Arantangi-- mlaarantangi@tn.gov.in
13 Aravakurichi --- mlaaravakurichi@tn.gov.in
14 Arcot --- mlaarcot@tn.gov.in
15 Ariyalur --mlaariyalur@tn.gov.in
16 Arni -- mlaarni@tn.gov.in
17 Aruppukottai ---mlaaruppukottai@tn.gov.in
18 Athoor--- mlaathoor@tn.gov.in
19 Attur ---mlaattur@tn.gov.in
20 Avanashi ---mlaavanashi@tn.gov.in
21 Bargur ---mlabargur@tn.gov.in
22 Bhavani---mlabhavani@tn.gov.in
23 Bhavanisagar---mlabhavanisagar@tn.gov.in
24 Bhuvanagiri-----mlabhuvanagiri@tn.gov.in
25 Bodinayakkanur----mlabodinayakkanur@tn.gov.in
26 Chengalpattu-----mlachengalpattu@tn.gov.in
27 Chengam---mlachengam@tn.gov.in
28 Chepauk---mlachepauk@tn.gov.in
29 Cheranmahadevi---mlacheranmahadevi@tn.gov.in
30 Cheyyar---mlacheyyar@tn.gov.in
31 Chidambaram---mlachidambaram@tn.gov.in
32 Chinnasalem---mlachinnasalem@tn.gov.in
33 CoimbatoreEast----mlacoimbatoreeast@tn.gov.in
34 CoimbatoreWest----mlacoimbatorewest@tn.gov.in
35 Colachel---mlacolachel@tn.gov.in
36 Coonoor----mlacoonoor@tn.gov.in
37 Cuddalore---mlacuddalore@tn.gov.in
38 Cumbum---mlacumbum@tn.gov.in
39 Dharapuram---mladharapuram@tn.gov.in
40 Dharmapuri---mladharmapuri@tn.gov.in
41 Dindigul---mladindigul@tn.gov.in
42 Edapadi---mlaedapadi@tn.gov.in
43 Egmore---mlaegmore@tn.gov.in
44 Erode----mlaerode@tn.gov.in
45 Gingee---mlagingee@tn.gov.in
46 Gobichettipalayam---mlagobichettipalayam@tn.gov.in
47 Gudalur----mlagudalur@tn.gov.in
48 Gudiyatham----mlagudiyatham@tn.gov.in
49 Gummidipundi----mlagummidipundi@tn.gov.in
50 Harbour-----mlaharbour@tn.gov.in
51 Harur----mlaharur@tn.gov.in
52 Hosur---mlahosur@tn.gov.in
53 Ilayangudi---mlailayangudi@tn.gov.in
54 Jayankondam---mlajayankondam@tn.gov.in
55 Kadaladi---mlakadaladi@tn.gov.in
56 Kadayanallur---mlakadayanallur@tn.gov.in
57 Kalasapakkam----mlakalasapakkam@tn.gov.in
58 Kancheepuram---mlakancheepuram@tn.gov.in
59 Kandamangalam----mlakandamangalam@tn.gov.in
60 Kangayam---mlakangayam@tn.gov.in
61 Kanniyakumari----mlakanniyakumari@tn.gov.in
62 Kapilamalai----mlakapilamalai@tn.gov.in
63 Karaikudi----mlakaraikudi@tn.gov.in
64 Karur----mlakarur@tn.gov.in
65 Katpadi----mlakatpadi@tn.gov.in
66 Kattumannarkoil---mlakattumannarkoil@tn.gov.in
67 Kaveripattinam---mlakaveripattinam@tn.gov.in
68 Killiyoor----mlakilliyoor@tn.gov.in
69 Kinathukadavu---mlakinathukadavu@tn.gov.in
70 Kolathur---mlakolathur@tn.gov.in
71 Kovilpatti---mlakovilpatti@tn.gov.in
72 Krishnagiri----mlakrishnagiri@tn.gov.in
73 Krishnarayapuram---mlakrishnarayapuram@tn.gov.in
74 Kulithalai----mlakulithalai@tn.gov.in
75 Kumbakonam---mlakumbakonam@tn.gov.in
76 Kurinjipadi---mlakurinjipadi@tn.gov.in
77 Kuttalam---mlakuttalam@tn.gov.in
78 Lalgudi---mlalalgudi@tn.gov.in
79 MaduraiCentral---mlamaduraicentral@tn.gov.in
80 MaduraiEast---mlamaduraieast@tn.gov.in
81 MaduraiWest----mlamaduraiwest@tn.gov.in
82 Maduranthakam----mlamaduranthakam@tn.gov.in
83 Manamadurai----mlamanamadurai@tn.gov.in
84 Mangalore----mlamangalore@tn.gov.in
85 Mannargudi----mlamannargudi@tn.gov.in
86 Marungapuri-----mlamarungapuri@tn.gov.in
87 Mayiladuturai----mlamayiladuturai@tn.gov.in
88 Melmalaiyanur---mlamelmalaiyanur@tn.gov.in
89 Melur---mlamelur@tn.gov.in
90 Mettupalayam---mlamettupalayam@tn.gov.in
91 Mettur---mlamettur@tn.gov.in
92 Modakkurichi---mlamodakkurichi@tn.gov.in
93 Morappur---mlamorappur@tn.gov.in
94 Mudukulathur---mlamudukulathur@tn.gov.in
95 Mugaiyur----mlamugaiyur@tn.gov.in
96 Musiri---mlamusiri@tn.gov.in
97 Mylapore---mlamylapore@tn.gov.in
98 Nagapattinam----mlanagapattinam@tn.gov.in
99 Nagercoil---mlanagercoil@tn.gov.in
100 Namakkal---mlanamakkal@tn.gov.in
101 Nanguneri---mlananguneri@tn.gov.in
102 Nannilam----mlanannilam@tn.gov.in
103 Natham-----mlanatham@tn.gov.in
104 Natrampalli----mlanatrampalli@tn.gov.in
105 Nellikkuppam----mlanellikkuppam@tn.gov.in
106 Nilakottai---mlanilakottai@tn.gov.in
107 Oddanchatram---mlaoddanchatram@tn.gov.in
108 Omalur---mlaomalur@tn.gov.in
109 Orathanad---mlaorathanad@tn.gov.in
110 Ottapidaram---mlaottapidaram@tn.gov.in
111 Padmanabhapuram----mlapadmanabhapuram@tn.gov.in
112 Palacode---mlapalacode@tn.gov.in
113 Palani----mlapalani@tn.gov.in
114 Palayamkottai---mlapalayamkottai@tn.gov.in
115 Palladam---mlapalladam@tn.gov.in
116 Pallipattu---mlapallipattu@tn.gov.in
117 Panamarathupatti---mlapanamarathupatti@tn.gov.in
118 Panruti---mlapanruti@tn.gov.in
119 Papanasam---mlapapanasam@tn.gov.in
120 Paramakudi---mlaparamakudi@tn.gov.in
121 ParkTown----mlaparktown@tn.gov.in
122 Pattukkottai----mlapattukkottai@tn.gov.in
123 Pennagaram-----mlapennagaram@tn.gov.in
124 Perambalur----mlaperambalur@tn.gov.in
125 Perambur---mlaperambur@tn.gov.in
126 Peranamallur---mlaperanamallur@tn.gov.in
127 Peravurani---mlaperavurani@tn.gov.in
128 Periyakulam---mlaperiyakulam@tn.gov.in
129 Pernambut---mlapernambut@tn.gov.in
130 Perundurai---mlaperundurai@tn.gov.in
131 Perur---mlaperur@tn.gov.in
132 Pollachi---mlapollachi@tn.gov.in
133 Polur---mlapolur@tn.gov.in
134 Pongalur---mlapongalur@tn.gov.in
135 Ponneri---mlaponneri@tn.gov.in
136 Poompuhar---mlapoompuhar@tn.gov.in
137 Poonamallee----mlapoonamallee@tn.gov.in
138 Pudukkottai----mlapudukkottai@tn.gov.in
139 Purasawalkam----mlapurasawalkam@tn.gov.in
140 Radhapuram---mlaradhapuram@tn.gov.in
141 Rajapalayam---mlarajapalayam@tn.gov.in
142 Ramanathapuram---mlaramanathapuram@tn.gov.in
143 Ranipet---mlaranipet@tn.gov.in
144 Rasipuram----mlarasipuram@tn.gov.in
145 Rishivandiyam----mlarishivandiyam@tn.gov.in
146 Dr.RadhakrishnanNagar----mlarknagar@tn.gov.in
147 Royapuram---mlaroyapuram@tn.gov.in
148 Saidapet---mlasaidapet@tn.gov.in
149 Salem -I---mlasalem1@tn.gov.in
150 Salem-II---mlasalem2@tn.gov.in
151 Samayanallur---mlasamayanallur@tn.gov.in
152 Sankaranayanarkoi---mlasankaranayanarkoil@tn.gov.in
153 Sankarapuram---mlasankarapuram@tn.gov.in
154 Sankari---mlasankari@tn.gov.in
155 Sathyamangalam---mlasathyamangalam@tn.gov.in
156 Sattangulam----mlasattangulam@tn.gov.in
157 Sattur---mlasattur@tn.gov.in
158 Sedapatti----mlasedapatti@tn.gov.in
159 Sendamangalam----mlasendamangalam@tn.gov.in
160 Sholavandan---mlasholavandan@tn.gov.in
161 Sholinghur----mlasholinghur@tn.gov.in
162 Singanallur---mlasinganallur@tn.gov.in
163 Sirkazhi----mlasirkazhi@tn.gov.in
164 Sivaganga----mlasivaganga@tn.gov.in
165 Sivakasi---mlasivakasi@tn.gov.in
166 Sriperumbudur---mlasriperumbudur@tn.gov.in
167 Srirangam---mlasrirangam@tn.gov.in
168 Srivaikuntam---mlasrivaikuntam@tn.gov.in
169 Srivilliputhur---mlasrivilliputhur@tn.gov.in
170 Talavasal---mlatalavasal@tn.gov.in
171 Tambaram---mlatambaram@tn.gov.in
172 Taramangalam---mlataramangalam@tn.gov.in
173 Tenkasi----mlatenkasi@tn.gov.in
174 Thalli---mlathalli@tn.gov.in
175 Thandarambattu---mlathandarambattu@tn.gov.in
176 Thanjavur---mlathanjavur@tn.gov.in
177 Theni---mlatheni@tn.gov.in
178 Thirumangalam---mlathirumangalam@tn.gov.in
179 Thirumayam---mlathirumayam@tn.gov.in
180 Thirupparankundram---mlathirupparankundram@tn.gov.in
181 Thiruvattar---mlathiruvattar@tn.gov.in
182 Thiruverambur---mlathiruverambur@tn.gov.in
183 Thiruvidamarudur---mlathiruvidamarudur@tn.gov.in
184 Thiruvonam---mlathiruvonam@tn.gov.in
185 Thiruvottiyur---mlathiruvottiyur@tn.gov.in
186 Thondamuthur---mlathondamuthur@tn.gov.in
187 Thottiam---mlathottiam@tn.gov.in
188 Tindivanam---mlatindivanam@tn.gov.in
189 Tiruchendur---mlatiruchendur@tn.gov.in
190 Tiruchengode----mlatiruchengode@tn.gov.in
191 Tirunavalur----mlatirunavalur@tn.gov.in
192 Tirunelveli---mlatirunelveli@tn.gov.in
193 Tiruppattur-194----mlatiruppattur194@tn.gov.in
194 Tiruppattur-41---mlatiruppattur41@tn.gov.in
195 Tirupporur----mlatirupporur@tn.gov.in
196 Tiruppur----mlatiruppur@tn.gov.in
197 Tiruthuraipundi----mlatiruthuraipundi@tn.gov.in
198 Tiruttani----mlatiruttani@tn.gov.in
199 Tiruvadanai---mlatiruvadanai@tn.gov.in
200 Tiruvaiyaru----mlatiruvaiyaru@tn.gov.in
201 Tiruvallur---mlatiruvallur@tn.gov.in
202 Tiruvannamalai----mlatiruvannamalai@tn.gov.in
203 Tiruvarur----mlatiruvarur@tn.gov.in
204 TheagarayaNagar----mlatnagar@tn.gov.in
205 Tiruchirapalli-I---mlatrichy1@tn.gov.in
206 Tiruchirapalli-II---mlatrichy2@tn.gov.in
207 Triplicane----mlatriplicane@tn.gov.in
208 Tuticorin---mlatuticorin@tn.gov.in
209 Udagamandalam---mlaudagamandalam@tn.gov.in
210 Udumalpet---mlaudumalpet@tn.gov.in
211 Ulundurpet---mlaulundurpet@tn.gov.in
212 Uppiliyapuram---mlauppiliyapuram@tn.gov.in
213 Usilampatti---mlausilampatti@tn.gov.in
214 Uthiramerur---mlauthiramerur@tn.gov.in
215 Valangiman----mlavalangiman@tn.gov.in
216 Valparai----mlavalparai@tn.gov.in
217 Vandavasi----mlavandavasi@tn.gov.in
218 Vaniyambadi----mlavaniyambadi@tn.gov.in
219 Vanur----mlavanur@tn.gov.in
220 Varahur-----mlavarahur@tn.gov.in
221 Vasudevanallur---mlavasudevanallur@tn.gov.in
222 Vedaranyam---mlavedaranyam@tn.gov.in
223 Vedasandur---mlavedasandur@tn.gov.in
224 Veerapandi---mlaveerapandi@tn.gov.in
225 Vellakoil---mlavellakoil@tn.gov.in
226 Vellore---mlavellore@tn.gov.in
227 Vilathikulam---mlavilathikulam@tn.gov.in
228 Vilavancode---mlavilavancode@tn.gov.in
229 Villivakkam---mlavillivakkam@tn.gov.in
230 Villupuram---mlavillupuram@tn.gov.in
231 Virudhunagar----mlavirudhunagar@tn.gov.in
232 Vridhachalam---mlavridhachalam@tn.gov.in
233 Yercaud---mlayercaud@tn.gov.in
234 ThousandLights---mlathousandlights@tn.gov.in

முடிந்தவரை பிறருடன் பகிரவும்...
==========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

25.5.16

எந்த ஊரில் என்ன வாங்கலாம்...?

எந்த ஊரில் என்ன வாங்கலாம்...?

நிச்சயம் அனைவரும் அறிய வேண்டிய விசயம்...
சுற்றுலா செல்லும் போது ரொம்ப உதவியாக இருக்கும்....

👍ஆரணி&களம்பூர் உலகதரம் வாய்ந்த  அரிசி (திமலை மாவட்டம்)
👌கோயமுத்தூர் - மோட்டார் உதிரிப் பாகங்கள், காட்டன்
👌திருநெல்வேலி - அல்வா
👌ஸ்ரீவில்லிபுத்தூர் - பால்கோவா
👌கோவில்பட்டி - கடலைமிட்டாய்
👌பண்ருட்டி - பலாப்பழம்
👌மார்த்தாண்டம் - தேன்
👌பவானி - ஜமுக்காளம்
👍உசிலம்பட்டி - ரொட்டி
👌நாச்சியார் கோவில் - விளக்கு, வெண்கலப் பொருட்கள்
👌பொள்ளாச்சி - தேங்காய்
👌ஐதராபாத் - முத்து, வளையல், கழுத்து மணிகள்
👌வேதாரண்யம் - உப்பு
👌சேலம் - எவர்சில்வர், மாம்பழம், அலுமினியம், சேமியா
👌சாத்தூர் - காராசேவு, மிளகாய்
👍மதுரை - மல்லிகை, மரிக்கொழுந்து
👌திருப்பதி - லட்டு
👌மாயவரம் - கருவாடு
👌திருப்பூர் - பனியன், ஜட்டி
👌உறையூர் - சுருட்டு
👌கும்பகோணம் - வெற்றிலை, சீவல்
👌தர்மபுரி - புளி, தர்பூசணி
👌ராஜபாளையம் - நாய்
👌தூத்துக்குடி - உப்பு
👌ஈரோடு - மஞ்சள், துணி
👌தஞ்சாவூர் - கதம்பம், தட்டு, தலையாட்டி பொம்மை
👌பெல்லாரி - வெங்காயம்
👌நீலகிரி - தைலம்
👌மங்களூர் - பஜ்ஜி
👌கொல்கத்தா - ரசகுல்லா
👌ஊட்டி - உருளைக்கிழங்கு, தேயிலை, வர்க்கி
👌கல்லிடைக்குறிச்சி - அப்பளம்
👌காரைக்குடி - ஓலைக்கூடை
👌செட்டிநாடு - பலகாரம்
👌திருபுவனம் - பட்டு
👌குடியாத்தம் - நுங்கு
👌கொள்ளிடம் - பிரம்பு பொருட்கள்
👌ஆலங்குடி - நிலக்கடலை
👌கரூர் - கொசுவலை
👌திருப்பாச்சி - அரிவாள்
👌காஞ்சிபுரம் - பட்டு, இட்லி
👌மைசூர் - சில்க், பத்தி, சந்தனம்
👌நாகப்பட்டினம் - கோலா மீன்
👌திண்டுக்கல் - பூட்டு, மலைப்பழம்
👌பத்தமடை - பாய்
👌பழனி - பஞ்சாமிர்தம், விபூதி
👌மணப்பாறை - முறுக்கு, மாடு
👌உடன்குடி - கருப்பட்டி
👌கவுந்தாம்பட்டி - வெல்லம்
👌ஊத்துக்குளி - வெண்ணெய்
👌கொடைக்கானல் - பேரிக்காய்
👌குற்றாலம் - நெல்லிக்காய்
👌செங்கோட்டை பிரானூர் - புரோட்டா, கோழி குருமா
👌சங்கரன் கோவில் - பிரியாணி
👌அரியலூர் - கொத்தமல்லி
👌சிவகாசி - வெடி, தீப்பெட்டி, வாழ்த்து அட்டை
👌கன்னியாகுமரி - முத்து, பாசி, சங்குப் பொருட்கள்
👌பாண்டிச்சேரி - ஒயின், மதுபானங்கள்
👍திருச்செந்தூர் - கருப்பட்டி
👍குளித்தலை - வாழைப்பழம்
👌காஷ்மீர் - குங்குமப்பூ
👌ஆம்பூர் - பிரியாணி
👌ஒட்டன்சத்திரம் - முருங்கைக்காய், தக்காளி
👌ஓசூர் - ரோஜா
👌நாமக்கல் - முட்டை
👌பல்லடம் - கோழி
👌உடுப்பி - பொங்கல்
👌குன்னூர் - கேரட்
👌பாலக்காடு - பலாப்பழம்...
👌 ஆற்காடு - மக்கன்பீடா
👌 வாணியம்பாடி - தேனீர்
====================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

24.5.16

அசைவ பிரியாணிக்கு ஒரு புது விளக்கம்!


அசைவ பிரியாணிக்கு ஒரு புது விளக்கம்!

என்னைக்கவர்ந்த பகிர்வு!

*நான் நல்லவன் என்பதற்கு சாட்சி, நான் செய்த எந்தத் தவறுக்கும் சாட்சி இல்லை என்பதே*

*கடைசியில் இது சரியாகும் என்று நம்புங்கள். சரியாகாவிட்டால் இது கடைசி இல்லை என்று நம்புங்கள்.*

*ஆசையை கட்டுப்படுத்த புத்தனாக பிறக்கத் தேவையில்லை. நடுத்தர குடும்பத்தில் ஆணாக பிறத்தலே போதுமானதாகிறது.*

*சீதையின் தீக்குளிப்பில் நிரூபிக்கப்பட்டது இராவணனின் கற்பு.*

*வெள்ளி இரவுப் பேருந்துகள் கனவுகளையும், ஞாயிறு இரவுப் பேருந்துகள் நினைவுகளையும் சுமந்து செல்கின்றன.*

*வாழ்ந்து முடித்த கோழியும் வாழ வேண்டிய முட்டையும் ஒரே தட்டில் செத்துக் கிடப்பதையே பிரியாணி என்கிறோம்.*

*ஒரு நாளைக்கு ஐந்து டிரெஸ் மாற்ற வேண்டுமானால் பணக்காரனாக இருக்க வேண்டிய அவசியமில்லை, கைக்குழந்தையாக இருந்தாலே போதும்.*

*உயிர் மட்டுமே உலகின்  சிறந்த வாசனைப் பொருள். அது இல்லையேல் உடல் நாற்றமெடுக்கும்.*

*ஏமாற்றங்கள் பழகிவிட்டன. இந்த முறை அதில் என்ன புதுமை இருக்கப் போகிறது என்ற ஆவல் தான் அதிகமாக எதிர்பார்க்க வைக்கிறது.*

*உலகத்தின் குறைகளை எல்லாம் கண்டு பிடிக்கும் சிலருக்கு தன் குறைகள் மட்டும் தெரியாமல் போவதற்கு பெயர் தான் சுயநலம்.*

*நெருக்கமானவர்களிடம் நாம் நம்பி சொன்ன வார்த்தைகளை மூன்றாம் மனிதர் வாயால் கேட்கையில் அவமானப் படுகிறது நம் நம்பிக்கை.*

*கழன்று விழும் வரை சிலரது முகமூடிகளை முகம் என்றே நம்பித் தொலைக்கிறோம்.*
======================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

17.5.16

மனதை டச்சிங் டச்சிங் பண்ணிய வரிகள்


மனதை டச்சிங் டச்சிங் பண்ணிய வரிகள்

மனதைத் தொட்ட வரிகள்
Lines that touched our heart

1.ஒரு தகப்பனார் பத்துக் குழந்தைகளைக் காப்பாற்றலாம். ஆனால் பத்துக் குழந்தைகள் ஒரு தகப்பனாரைக் காப்பாற்றும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது.!

2.தெரிந்து மிதித்தாலும் தெரியாமல் மிதித்தாலும் மிதிபட்ட எறும்பிற்கு இரண்டுமே ஒன்றுதான்.!

3. பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லா விட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.!

 4.அதிர்ஷ்டத்திற்காக  காத்திருப்பதும் சாவுக்காக காத்திருப்பதும்ஒன்றே!.

5. மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல, தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழ்க்கை.!

6.ஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு கதவு திறக்கிறது. ஆனால், நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக் கொண்டு திறக்கப்படும் கதவை தவறவிடுகிறோம்.!

 7.மனிதன் தான் செய்த தவறுக்கு வக்கீலாகவும் ,பிறர் செய்த தவறுக்கு நீதிபதியாகவும் செயல்படுகின்றான்.!

8.வெள்ளை என்பது அழகல்ல..நிறம் ! ஆங்கிலம் என்பது அறிவல்ல .. மொழி> !

9.வாழும்போது சரியான சமூக அந்தஸ்து வழங்காத உலகம்......வாழ்ந்து முடித்த பின் சிலை வைக்கிறது !

10.நம்பிக்கை நிறைந்தஒருவர், யாரிடமும் மண்டியிடுவதுமில்லை...கையேந்துவதுமில்லை.

11.நேசிப்பவர்கள் எல்லாம் நம்மோடு நிலைத்து விட்டால்  நினைவின் மொழியும் பிரிவின் வலியும் ௨ணராமலே போய்விடும்...!!!

12.சிலரை சந்தோஷப்படுத்த ரொம்ப சிரமப்பட தேவையில்லை. நம்ப கஷ்டத்தைச் சொன்னாலே போதும்

13.வீட்ல ஃப்ரிட்ஜ் வாங்கின பிறகு, தினமும் நான்கு வகையான சட்னி கிடைக்குது. காலைல வச்சது, நேற்று வச்சது, முந்தாநாள் வச்சது...!!

14.கொஞ்சம் படித்தால் கிராமத்தை விட்டு வெளியேறுகிறோம்.
நிறையப்படித்தால் சொந்த நாட்டை விட்டே வெளியேறுகிறோம் !

15.நாய் நம்மளை இழுத்துக்கிட்டுப்போனா அது வாக்கிங், தொரத்திக்கிட்டுவந்தா அது ஜாக்கிங் !

16.பணத்தின் மதிப்பு தெரிய வேண்டுமென்றால் செலவு செய்யுங்க . உங்களின் மதிப்பு தெரியவேண்டுமானால் கடன் கேளுங்க !

17.ஆட்டோகாரனுக்கு பக்கம் கூட தூரம்தான்; ரியல் எஸ்டேட் காரனுக்கு தூரம் கூட பக்கம்தான் !

எல்லாம் சரிதானா? எது மிகவும் நன்றாக உள்ளது?

அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

3.5.16

நடக்காததை நடத்திக் காட்டும் மந்திரம்!


நடக்காததை நடத்திக் காட்டும் மந்திரம்!

எல்லா காரியங்களும் தடை பட்டுக் கொண்டே இருக்கின்றதா?
அப்படியானால், நீங்கள் சொல்ல வேண்டிய மந்திரம் இதுதான்!!!
நடக்காததை நடத்திக்காட்டும் நரசிம்ம மந்திரம்:

நீங்கள் ஒரு முயற்சி எடுக்கிறீர்கள்! என்னவெல்லாமோ செய்து பார்க்கிறீர்கள். ஆனால், ஏதோ தடங்கல், இடைஞ்சல் என்று தலை தூக்கி அந்த முயற்சி நிறைவேறாமல் போய்விட்டது. நீங்கள் மனவருத்தத்துடன் இருக்கிறீர்கள்.

அப்படியானால், நீங்கள் சொல்ல வேண்டிய மந்திரம் இதுதான். இந்த மந்திரம் நடக்காததையும் நடத்திக்காட்டும் தன்மையுடையது.

"யஸ்ப அபவத் பக்தஜன ஆர்த்திஹந்துபித்ருத்வம்
அந்யேஷு அவிசார்ய தூர்ணம்ஸ்தம்பே
அவதார தம் அநந்ய லப்யம்லக்ஷ்மி
ந்ருஸிம்ஹம் சரணம் பிரபத்யே."

இந்த ஸ்லோகத்தைச் சொல்ல முடியாதவர்கள் பொருளைச் சொல்லுங்கள்.

“பக்தியற்றவர்களால் அடைய முடியாதவனே!
தாயின் கர்ப்பத்தில் அவதரித்தால்
தாமதமாகுமென்று தூணில் அவதரித்தவனே!
நினைத்த மாத்திரத்தில் பக்தர்களின்
துன்பத்தைப் போக்குபவனே!
லட்சுமி நரசிம்மனே! 
--------------------------------------
இணையத்தில் படித்தது. உங்களுக்கு பயன்படும் என்று அறியத் தந்திருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்
================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

28.4.16

கவிதை: பிறப்பும், இறப்பும் அடுத்தடுத்த நடப்பும் உன் கையில் இல்லை!


கவிதை: பிறப்பும், இறப்பும் அடுத்தடுத்த நடப்பும் உன் கையில் இல்லை!

கவியரசரின் அசத்தலான பாடல்: அதில்தான் எத்தனை அர்த்தங்கள்!

ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
இதய சுரங்கத்துள் எத்தனை கேள்வி
ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
இதய சுரங்கத்துள் எத்தனை கேள்வி

காணும் மனிதருக்குள் எத்தனை சலனம்
காணும் மனிதருக்குள் எத்தனை சலனம் வெறும்
கற்பனை சந்தோஷத்தில் அவனது கவனம்
கற்பனை சந்தோஷத்தில் அவனது கவனம் (ஏழு)

காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி ஆ.....
காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி - அது
கையில் கிடைத்த பினனும் துடிக்குது ஆவி
கையில் கிடைத்த பினனும் துடிக்குது ஆவி

ஏனென்ற கேள்வி ஒன்று என்றைக்கும் தங்கும்
ஏனென்ற கேள்வி ஒன்று என்றைக்கும் தங்கும் - மனிதன்
இன்ப துன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும்
இன்ப துன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும் (ஏழு)

எனக்காக நீ அழலாம் இயற்கையில் நடக்கும் ஆ.........
எனக்காக நீ அழலாம் இயற்கையில் நடக்கும் - நீ
எனக்காக உணவு உண்ண எப்படி நடக்கும்
நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு - அதை
நமக்காக நம் கையால் செய்வது நன்று
நமக்காக நம் கையால் செய்வது நன்று

ஆரம்பத்தில் பிறப்பும் உன் கையில் இல்லை ஆ.........
ஆரம்பத்தில் பிறப்பும் உன் கையில் இல்லை - என்றும்
அடுத்தடுத்த நடப்பும் உன் கையில் இல்லை
பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம்
பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம் - அதில்
பயணம் நடத்திவிடு மறைந்திடும் பாபம்

நாளைப் பொழுது என்றும் நமக்கென வாழ்க - அதை
நடத்த ஒருவன் உண்டு கோவிலில் காண்க
நாளைப் பொழுது என்றும் நமக்கென வாழ்க - அதை
நடத்த ஒருவன் உண்டு கோவிலில் காண்க

வேளை பிறக்கும் என்று நம்பிக்கை கொள்க
வேளை பிறக்கும் என்று நம்பிக்கை கொள்க - எந்த
வேதனையும் மாறும் மேகத்தைப் போல
வேதனையும் மாறும் மேகத்தைப் போல

நாளையப் பொழுது என்றும் நமக்கென வாழ்க - அதை நடத்த ஒருவன் உண்டு கோவிலில் காண்க” என்று எழுதினார் பார்த்தீர்களா? அவைதான் இந்தப் பாடலின் முத்தாய்ப்பான வரிகள்!

எனது உடல் நலம் தேறி வருகிறது. தற்சமயம் பரவாயில்லை!  உங்கள் அனைவரின் அன்பிற்கும் நன்றி!

அன்புடன்
வாத்தியார்
===========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!