அசைவ பிரியாணிக்கு ஒரு புது விளக்கம்!
என்னைக்கவர்ந்த பகிர்வு!
*நான் நல்லவன் என்பதற்கு சாட்சி, நான் செய்த எந்தத் தவறுக்கும் சாட்சி இல்லை என்பதே*
*கடைசியில் இது சரியாகும் என்று நம்புங்கள். சரியாகாவிட்டால் இது கடைசி இல்லை என்று நம்புங்கள்.*
*ஆசையை கட்டுப்படுத்த புத்தனாக பிறக்கத் தேவையில்லை. நடுத்தர குடும்பத்தில் ஆணாக பிறத்தலே போதுமானதாகிறது.*
*சீதையின் தீக்குளிப்பில் நிரூபிக்கப்பட்டது இராவணனின் கற்பு.*
*வெள்ளி இரவுப் பேருந்துகள் கனவுகளையும், ஞாயிறு இரவுப் பேருந்துகள் நினைவுகளையும் சுமந்து செல்கின்றன.*
*வாழ்ந்து முடித்த கோழியும் வாழ வேண்டிய முட்டையும் ஒரே தட்டில் செத்துக் கிடப்பதையே பிரியாணி என்கிறோம்.*
*ஒரு நாளைக்கு ஐந்து டிரெஸ் மாற்ற வேண்டுமானால் பணக்காரனாக இருக்க வேண்டிய அவசியமில்லை, கைக்குழந்தையாக இருந்தாலே போதும்.*
*உயிர் மட்டுமே உலகின் சிறந்த வாசனைப் பொருள். அது இல்லையேல் உடல் நாற்றமெடுக்கும்.*
*ஏமாற்றங்கள் பழகிவிட்டன. இந்த முறை அதில் என்ன புதுமை இருக்கப் போகிறது என்ற ஆவல் தான் அதிகமாக எதிர்பார்க்க வைக்கிறது.*
*உலகத்தின் குறைகளை எல்லாம் கண்டு பிடிக்கும் சிலருக்கு தன் குறைகள் மட்டும் தெரியாமல் போவதற்கு பெயர் தான் சுயநலம்.*
*நெருக்கமானவர்களிடம் நாம் நம்பி சொன்ன வார்த்தைகளை மூன்றாம் மனிதர் வாயால் கேட்கையில் அவமானப் படுகிறது நம் நம்பிக்கை.*
*கழன்று விழும் வரை சிலரது முகமூடிகளை முகம் என்றே நம்பித் தொலைக்கிறோம்.*
======================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
குருவே வந்தனம்,
ReplyDeleteசபாஷ்!
The BEST!
வகுப்பறையில் சேர்ந்த நாள் முதல் நான் தங்களது பதிவுகளை விடாமல் படித்து வருகிறேன். பின்னூட்டங்களும் புதிர் தவிர்த்து கிட்டத்தட்ட எல்லாவற்றுக்கும் எழுதுவதைப் பழக்கமாக்கிக் கொண்டுள்ளேன். ஆனால்,தங்களின் இன்றைய பதிவு மிகவும் பிரமாதம்!கொடுக்கப்பட்டுள்ள 12 Quotesமே தனித்வம் வாயந்தது! ஒவ்வொன்றுமே முத்துக்கள்...அசைவ பிரியாணியின் வர்ணணை "கலக்கல்"; அதேபோல் சனி, ஞாயிறுக்கும், கனவு, நினைவு; ஏமாற்றத்தைப் பற்றிக் கூறும் Quotes...இப்படி சொல்லிக் கொண்டேபோகலாம்!!
சிறப்பான தொகுப்பு!
மேலும் ஒரு சபாஷ், வாத்தியார்!
வணக்கம் ஐயா,*வாழ்ந்து முடித்த கோழியும் வாழ வேண்டிய முட்டையும் ஒரே தட்டில் செத்துக் கிடப்பதையே பிரியாணி என்கிறோம்.**உயிர் மட்டுமே உலகின் சிறந்த வாசனைப் பொருள். அது இல்லையேல் உடல் நாற்றமெடுக்கும்.*அசைவத்தில் இருக்கும் மிச்ச,மீத ஆசையையும் விட்டுவிட தோன்றுகிறது.அனைத்து விளக்கங்களுமே மிகவும் எதார்த்தம்.நன்றி.
ReplyDeletebiriyaani FREE
ReplyDeletepay only for Goat
நிதர்சனமான நிகழ்கால மணித்துளிகள்...
ReplyDeleteசுவாசம் இன்றி வாசம் இல்லை...இவை இருந்தால் உயிர்...
இனிய பகிர்வு...
//////Blogger வரதராஜன் said...
ReplyDeleteகுருவே வந்தனம்,
சபாஷ்!
The BEST!
வகுப்பறையில் சேர்ந்த நாள் முதல் நான் தங்களது பதிவுகளை விடாமல் படித்து வருகிறேன். பின்னூட்டங்களும் புதிர் தவிர்த்து கிட்டத்தட்ட எல்லாவற்றுக்கும் எழுதுவதைப் பழக்கமாக்கிக் கொண்டுள்ளேன். ஆனால்,தங்களின் இன்றைய பதிவு மிகவும் பிரமாதம்!கொடுக்கப்பட்டுள்ள 12 Quotesமே தனித்வம் வாயந்தது! ஒவ்வொன்றுமே முத்துக்கள்...அசைவ பிரியாணியின் வர்ணணை "கலக்கல்"; அதேபோல் சனி, ஞாயிறுக்கும், கனவு, நினைவு; ஏமாற்றத்தைப் பற்றிக் கூறும் Quotes...இப்படி சொல்லிக் கொண்டேபோகலாம்!!
சிறப்பான தொகுப்பு!
மேலும் ஒரு சபாஷ், வாத்தியார்!/////
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!
//////Blogger adithan said...
ReplyDeleteவணக்கம் ஐயா,*வாழ்ந்து முடித்த கோழியும் வாழ வேண்டிய முட்டையும் ஒரே தட்டில் செத்துக் கிடப்பதையே பிரியாணி என்கிறோம்.**உயிர் மட்டுமே உலகின் சிறந்த வாசனைப் பொருள். அது இல்லையேல் உடல் நாற்றமெடுக்கும்.*அசைவத்தில் இருக்கும் மிச்ச,மீத ஆசையையும் விட்டுவிட தோன்றுகிறது.அனைத்து விளக்கங்களுமே மிகவும் எதார்த்தம்.நன்றி.//////
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஆதித்தன்!
////Blogger வேப்பிலை said...
ReplyDeletebiriyaani FREE
pay only for Goat/////
தகவலுக்கு நன்றி வேப்பிலையாரே!
//////Blogger dearsreeni said...
ReplyDeleteநிதர்சனமான நிகழ்கால மணித்துளிகள்...
சுவாசம் இன்றி வாசம் இல்லை...இவை இருந்தால் உயிர்...
இனிய பகிர்வு.../////
நல்லது. நன்றி நண்பரே!
Every thing is good sir
ReplyDelete