மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

1. Galaxy 2007 சிறப்பு வகுப்பு

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க மீண்டும் திறந்து விடப்பட்டுள்ளது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம்,

2. Stars2015 சிறப்பு வகுப்பு

2016ம் ஆண்டு நடைபெற்ற ஸ்டார்ஸ்2015 வகுப்பறையில் 126 பாடங்கள் உள்ளன. அந்த மேல்நிலை வகுப்பும் நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 126 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம்,

இந்த இரண்டு வகுப்புக்களும் எனது சொந்த இணைய தளத்தில் உள்ளன. சென்ற வாரம்தான் பணம் செலுத்தி அந்த தளங்களைப் புதுப்பித்துள்ளேன். (Domain name and hosting server charges)

அவற்றுள் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்

19.5.16

அங்கே செல்வதற்கான மறைமுகமான விலைகள்!


அங்கே செல்வதற்கான மறைமுகமான விலைகள்!

அமெரிக்கா செல்வதற்கு கொடுக்கும் மறைமுகமான விலைகள் சில உண்டு. அவற்றைப் புரிந்துகொண்டு செல்லுங்கள். அவை இவை:

1. திரும்ப வரமாட்டீர்கள்… இது கட்டாயம், நூறு சதவிகிதம் நிகழும் ஒரு விளைவு. போய்விட்டு படிப்பு முடித்துவிட்டு உடனே வருகிறேன் என்று சொல்வதெல்லாம் பொய். அந்த நாடு உங்கள் மேல் படரும் நாடு. ஒரு ஆக்டோபஸ், அல்லது மலைப்பாம்பின் இறுக்கம் போல அது உங்களை விடாது. அதன் கிரெடிட் கார்டு சமூகத்தில் உங்களை மூன்றாவது தலைமுறை வரை கடன் வாங்க வைத்துவிடுவார்கள். மீளவே முடியாத கடன் சொர்க்கம் அது. அதைத் தெளிவாக அறிந்து கொள்ளுங்கள்.

2. அங்கே போனபின் உறவு, பாசம் இவற்றுக்கெல்லாம் புதிய அர்த்தங்கள் தோன்றும். எதற்காக அப்பா அம்மாவைக் கவனித்துக்கொள்ள வேண்டும். அவர்கள் கடமையைச் செய்தார்கள். வருஷம் ஒரு முறை ஃபாதர்ஸ் டே, மதர்ஸ் டே கார்டு அனுப்பினால் போதுமே… அல்லது அவ்வப்போது நூறு டாலர், இருநூறு டாலர்… - இப்படித் தோன்றும் இந்த எண்ணத்தையும் தவிர்க்க முடியாது. குறிப்பாக, பிசுநாரித்தனம் அங்கு கொஞ்சம் அதிகமாகும்.

3. அங்கே போய் நிறைய சம்பாதிக்கத் தொடங்கியதும் இந்திய விஷயங்கள் மேல் ஒரு ஏளனம் தோன்றும். என்னப்பா உங்க ஊர்ல சரியா ஒரு டாய்லெட் கட்டமாட்டாங்களா. வாட் ட்ராஃபிக்! ஐம் கெட்டிங் ம்யாட். ரோடுல ஒண்ணுக்கு போறவரைக்கும் உங்க தேசம் உருப்படாது… (கவனிக்கவும் உங்க ஊர். உங்க தேசம்)

4. தமிழ் பேசும் வழக்கத்தையும் மெல்ல இழக்க வேண்டியிருக்கும். நாங்கள் தமிழில் பேசினால் நீங்கள் இங்கிலீஷில் பதில் சொல்வீர்கள். நாளடைவில் தமிழ் படிக்கவே மறந்து போய்விட்டது என்று புளுகுவீர்கள்.

இந்தப் பக்கவிளைவுகள் எல்லாம் பரவாயில்லை என்றால் தாராளமாக வெளிநாடு செல்லுங்கள்.

அண்மையில் நான் ஹாசன் சென்றிருந்தேன். கர்நாடக
மாநிலத்தின் மத்தியில் உள்ள சிறிய டவுன். அங்கே இன்சாட்
2-இ செயற்கைக்கோளின் கட்டுப்பாட்டுக் கேந்திரம் உள்ளது. பல இளம் இன்ஜினீயர்களைச் சந்தித்தேன்.

24 மணி நேரமும் இந்தியாவின் செயற்கைக்கோளை திசை பிசகாமல் கட்டுப்படுத்தும் ஷிஃப்ட் வேலை பார்க்கிறார்கள். அவர்களில் ஒருவரைக் கேட்டேன். அமெரிக்கா போயிருக்கலாமே…அவர், போயிருக்கலாம். அட்மிஷன் கூட கிடைத்தது, ஸ்காலர்ஷிப்புடன் என்றார்.

ஏன் போகலை?

எல்லாரும் போய்ட்டா எப்படி? ஒன்றிரண்டு பேர் தங்கி நாட்டுக்கு சேவை செய்ய வேண்டாமா? என்றார்.

கார்கிலிலிருந்து துவங்கி நம் பிற்பட்ட கிராமங்களில் வயற்புறங்கள் வரை பணிபுரியும் இளைஞர்கள் இருக்கிறார்கள். இவர்கள் மேல்தான் எனக்கு மரியாதை. என்னைக் கேட்டால் இங்கேயே இருந்துகொண்டு எல்லா அசௌகரியங்களுக்கு மத்தியிலும் எதாவது சாதிக்கும் இளைஞர்கள் இந்நாட்டின் கண்கள்… நீங்களோ, நீங்கள் அனுப்பப்போகும் டாலரோ அல்ல! தாராளமாக செல்லுங்கள். சம்பாதியுங்கள். ஆனால், இந்தியாவைக் கேலி செய்யாதீர்கள்.

- எழுத்தாளர் சுஜாதா
--------------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

13 comments:

siva kumar said...

உள்ளேன் ஐயா

A.Ramakrishnan said...


Super Super Super sir

Senthil J said...

super. I salute that person and also like others including you sir. Apart from all the posts in your blog, this is amazing. Jai Hind!!!!!!
Santhanam Salem

adithan said...

வணக்கம் ஐயா,ஒன்றை இழந்தால்தான் மற்றொன்றை அடையமுடியும்.அதுதான் இயற்கை தத்துவம்.எதை இழக்க தயாராக இருக்கிறோம் என்பதுதான் இங்கே நீதி.நன்றி.

வரதராஜன் said...

குருவே வந்தனம்!
திருவாளர் சுஜாதா அவரகள் கூற்று 100% உண்மை.எனக்குத் தெரிந்து, பலர் மேல் படிப்புக்காகச அமெரிக்கா சென்றவர்கள் அங்கேயே settle ஆனார்கள்.அதேபோல் ஐடி தொழிற்பிரிவிலிருந்து பலர் deputationல் சென்றவர்களும் தங்கள் திறமைக்கு ஏற்ப, வேறு கம்பெனிகட்கு
மாறி அங்கேயே நிறந்தரமாகத் தங்கி விடுகிறார்கள்!?இத்தகையவர்கள் பணத்துக்கும், உல்லாச வாழ்க்கைக்கும் ஆசைப்பட்டு நம் நாட்டின் கலாசாரத்தின் மேன்மையை மறப்பதோடு,தாங்களின் குழந்தைகளிடத்தும், அதே மனப்பாங்கு வளர்வதை, ஆரம்பத்தில் அறிவதில்லை. பின்னர் அறியும்போது
குழந்தைகளைக் கண்டித்துத் திருத்தும் நிலை தாண்டிவிடுகிறது!?
மேலை நாட்டு நாகரீகத்தில் வளர்ந்த பின் அதிலிருந்து மாறி நம் நாட்டு நாகரீகத்தை பின்பற்றுவது எளிதான காரியம் அல்ல!!
எழுத்தாளர் இவற்றை மிக அழகாகத் தெளிவாக்கியுள்ளார்.
வகுப்பறை மாணவ சமுதாயத்துக்கு நல்லனவற்றைத் தேடிப் பகிர்ந்து தரும் வாத்தியாரின் பணிக்கு, "ஜே" போடுவதுடன், ஒரு பணிவான வணக்கமும் சொல்கிறேன். ஏற்றுக் கொள்வீர்களல்லவா?!

B. Lakshmi Narayanan, Tuticorin said...

இக்கரைக்கு அக்கரை பச்சைதானே வாத்தியார் அவர்களே!!!

Subbiah Veerappan said...

////Blogger siva kumar said...
உள்ளேன் ஐயா////

வருகைப் பதிவிற்கு நன்றி!

Subbiah Veerappan said...

////Blogger A.Ramakrishnan said...
Super Super Super sir/////

நல்லது. நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

/////Blogger Senthil J said...
super. I salute that person and also like others including you sir. Apart from all the posts in your blog, this is amazing. Jai Hind!!!!!!
Santhanam Salem/////

நல்லது. நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

/////Blogger adithan said...
வணக்கம் ஐயா,ஒன்றை இழந்தால்தான் மற்றொன்றை அடையமுடியும்.அதுதான் இயற்கை தத்துவம்.எதை இழக்க தயாராக இருக்கிறோம் என்பதுதான் இங்கே நீதி.நன்றி./////

உண்மைதான். உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி ஆதித்தன்!

Subbiah Veerappan said...

//////Blogger வரதராஜன் said...
குருவே வந்தனம்!
திருவாளர் சுஜாதா அவரகள் கூற்று 100% உண்மை.எனக்குத் தெரிந்து, பலர் மேல் படிப்புக்காகச அமெரிக்கா சென்றவர்கள் அங்கேயே settle ஆனார்கள்.அதேபோல் ஐடி தொழிற்பிரிவிலிருந்து பலர் deputationல் சென்றவர்களும் தங்கள் திறமைக்கு ஏற்ப, வேறு கம்பெனிகட்கு
மாறி அங்கேயே நிறந்தரமாகத் தங்கி விடுகிறார்கள்!?இத்தகையவர்கள் பணத்துக்கும், உல்லாச வாழ்க்கைக்கும் ஆசைப்பட்டு நம் நாட்டின் கலாசாரத்தின் மேன்மையை மறப்பதோடு,தாங்களின் குழந்தைகளிடத்தும், அதே மனப்பாங்கு வளர்வதை, ஆரம்பத்தில் அறிவதில்லை. பின்னர் அறியும்போது
குழந்தைகளைக் கண்டித்துத் திருத்தும் நிலை தாண்டிவிடுகிறது!?
மேலை நாட்டு நாகரீகத்தில் வளர்ந்த பின் அதிலிருந்து மாறி நம் நாட்டு நாகரீகத்தை பின்பற்றுவது எளிதான காரியம் அல்ல!!
எழுத்தாளர் இவற்றை மிக அழகாகத் தெளிவாக்கியுள்ளார்.
வகுப்பறை மாணவ சமுதாயத்துக்கு நல்லனவற்றைத் தேடிப் பகிர்ந்து தரும் வாத்தியாரின் பணிக்கு, "ஜே" போடுவதுடன், ஒரு பணிவான வணக்கமும் சொல்கிறேன். ஏற்றுக் கொள்வீர்களல்லவா?!/////

உங்களின் பாராட்டிற்கு நன்றி வரதராஜன்!

Subbiah Veerappan said...

//////Blogger B. Lakshmi Narayanan, Tuticorin said...
இக்கரைக்கு அக்கரை பச்சைதானே வாத்தியார் அவர்களே!!!/////

சரி, அங்கேயிருந்து பார்த்தால் நம் ஊர் ஏன் பச்சையாகத் தெரிவதில்லை?

Subathra Suba said...

Vanakkam sir.how is your health sir.last 15 days my phone was problem.so I am not able to saw the lessions