மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

26.5.16

செவ்வாழைப்பழமும், குழந்தைப் பேறும்!


செவ்வாழைப்பழமும், குழந்தைப் பேறும்!

திருமணமாகி நீண்ட நாட்களாக உங்களுக்கு குழந்தை இல்லையா ?

திருமணமான தம்பதியர் குழந்தை பேறுக்காக மருத்துவரையோ, ஜோசியரையோ நாடுவர்.அவர்களுக்கு செவ்வாழை அருமருந்தாகும்.

குழந்தை இல்லாத தம்பதிகள், தினசரி ஆளுக்கு ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு அரைஸ்பூன் தேன் அருந்த வேண்டும்.

தொடர்ந்து 40 நாட்களுக்கு சாப்பிட்டு வர நிச்சயமாக கருத்தரிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.

எளிமையுடன் எண்ணற்ற சத்துக்களும் கொண்டது வாழைப்பழம்.

வாழைப்பழத்தில் பல வகை உண்டு. சிலவற்றில் உயிர்ச்சத்தும், சிலவற்றில் சுண்ணாம்புச்சத்தும், இரும்புச் சத்தும் காணப்படுகின்றன.

பலரும் அரிய அளவிலேயே உட்கொள்ளும் செவ்வாழைப்பழம் பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது.

செவ்வாழையின் தாயகம் அமெரிக்க நாடுகளான கோஸ்டரீகா, மற்றும் கியூபா எனக் கூறப்படுகிறது.

இதில் உள்ள பீட்டா கரோட்டீன் கண்நோய்களை குணமாக்கும். செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம், உள்ளது.

இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது.

இதில் வைட்டமின் ‘சி’ அதிகம் உள்ளது.

செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது.

இதில் 50 சதவிகிதம் நார்ச்சத்து காணப்படுகிறது.

கண்பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும்.

கண்பார்வை குறைய ஆரம்பித்த உடன் தினசரி செவ்வாழை பழத்தை சாப்பிட பார்வை தெளிவடையும்.

மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இரவு ஆகாரத்திற்குப் பின்னர் தொடர்ந்து 40 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வர மாலைக்கண்நோய் குணமாகும்.பல்வலி, பல்லசைவு, போன்ற பலவகையான பல்வியாதிகளையும் செவ்வாழைப்பழம் குணமாக்கும்.

பல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டால் தொடர்ந்து 21 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட்டு வர ஆடிய பல் கூட கெட்டிப்படும்.
==============================================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

16 comments:

 1. Okay. I shall take one each day. Only for Eye sight improvement.

  ReplyDelete
 2. தகவலுக்கு நன்றி ஐயா . பயனுள்ள குறிப்பு...
  செ. ஆறுமுகவேல்

  ReplyDelete
 3. வணக்கம் ஐயா,ஆஹா!செவ்வாழையில் இத்தனை மேட்டரா?.பழத்தின் மணம்தான் கொஞ்சம் பிரச்சினை.நன்றி.

  ReplyDelete
 4. மஞ்சள் பழத்தை மருந்து போட்டு
  சிவப்பாக மாற்றுகிறார்கள்..

  இதை எப்படி கண்டு பிடிப்பது...
  இந்த பழம் எத்தனை சாப்பிட வேண்டும்...

  ReplyDelete
 5. Good Morning sir, lot of good details. thanks

  ReplyDelete
 6. அன்பு ஆசிரியரே! வணக்கம்,
  நல்ல பதிவு. "உணவே மருந்து" என்றார் திருமூலர். மனிதனுக்கு உண்டாகின்ற பிரச்சனை அனைத்திற்கும், இயற்கை பதில் வைத்துள்ளது. ஆனால் நம்மில் பலர் இந்த இயற்கையை பேனி காப்பதில்லை. இயற்கையை மதிப்போம். இயற்கையை ஒத்த வாழ்வை வாழ்வோம்!. முடிந்தவரை சமைக்காத இயற்கை உணவை உண்டு பயன் அடையோம். நன்றி!
  பன்னீர்செல்வம்.இரா

  ReplyDelete
 7. குருவே வந்தனம்!
  மிக உயர்ந்த தகவல்கள்! செவ்வாழையில் இத்தனை செல்வங்களா!அறியாமலிருந்தேனே? மிகவும் மலிவாகவும், அதேசமயம் ஏராளமாகவும் கிடைக்கும் எங்கள் ஊரில் தங்கி இருந்த சமயம் இப்பழத்தை உபயோகப்டுத்தவில்லை! இங்கு(புனே)யில் எங்கள் ஏரியாவில் (Pimple Saudagar)கிடைப்பதுமில்லை!? பரவாயில்லை, பழத்தின் அருமை தெரியும் வாய்ப்பு தந்த வாத்தியாருக்கு நன்றி!

  ReplyDelete
 8. ////Blogger kmr.krishnan said...
  Okay. I shall take one each day. Only for Eye sight improvement./////

  நல்லது. அப்படியே செய்யுங்கள் கிருஷ்ணன் சார்!

  ReplyDelete
 9. /////Blogger Arumugavel said...
  தகவலுக்கு நன்றி ஐயா . பயனுள்ள குறிப்பு...
  செ. ஆறுமுகவேல்/////

  நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

  ReplyDelete
 10. //////Blogger adithan said...
  வணக்கம் ஐயா,ஆஹா!செவ்வாழையில் இத்தனை மேட்டரா?.பழத்தின் மணம்தான் கொஞ்சம் பிரச்சினை.நன்றி.//////

  பிரச்சினை என்று நினைத்தால்தான் பிரச்சினை. மணத்தை மறந்து சாப்பிடுங்கள் நண்பரே!

  ReplyDelete
 11. ////Blogger வேப்பிலை said...
  மஞ்சள் பழத்தை மருந்து போட்டு
  சிவப்பாக மாற்றுகிறார்கள்..
  இதை எப்படி கண்டு பிடிப்பது...
  இந்த பழம் எத்தனை சாப்பிட வேண்டும்.../////

  செவ்வாழை சிவப்பாகத்தான் இருக்கும். ஒரு நாளைக்கு ஒரு பழம் சாப்பிட்டால் போதும் வேப்பிலையாரே!

  ReplyDelete
 12. ////Blogger saadu said...
  Good Morning sir, lot of good details. thanks/////

  நல்லது. நன்றி நண்பரே!

  ReplyDelete
 13. ////Blogger Selvam R said...
  அன்பு ஆசிரியரே! வணக்கம்,
  நல்ல பதிவு. "உணவே மருந்து" என்றார் திருமூலர். மனிதனுக்கு உண்டாகின்ற பிரச்சனை அனைத்திற்கும், இயற்கை பதில் வைத்துள்ளது. ஆனால் நம்மில் பலர் இந்த இயற்கையை பேனி காப்பதில்லை. இயற்கையை மதிப்போம். இயற்கையை ஒத்த வாழ்வை வாழ்வோம்!. முடிந்தவரை சமைக்காத இயற்கை உணவை உண்டு பயன் அடையோம். நன்றி!
  பன்னீர்செல்வம்.இரா/////

  நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

  ReplyDelete
 14. /////Blogger வரதராஜன் said...
  குருவே வந்தனம்!
  மிக உயர்ந்த தகவல்கள்! செவ்வாழையில் இத்தனை செல்வங்களா!அறியாமலிருந்தேனே? மிகவும் மலிவாகவும், அதேசமயம் ஏராளமாகவும் கிடைக்கும் எங்கள் ஊரில் தங்கி இருந்த சமயம் இப்பழத்தை உபயோகப்டுத்தவில்லை! இங்கு(புனே)யில் எங்கள் ஏரியாவில் (Pimple Saudagar)கிடைப்பதுமில்லை!? பரவாயில்லை, பழத்தின் அருமை தெரியும் வாய்ப்பு தந்த வாத்தியாருக்கு நன்றி!/////

  நல்லது. நன்றி வரதராஜன்.சென்னையில் கிடைக்கும். திரும்பி வந்தவுடன் சாப்பிடுங்கள்!

  ReplyDelete
 15. அய்யா செவ்வாழையை எந்த நேரத்தில் சாப்பிடவேண்டும்

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com