மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

31.7.20

Astrology: Quiz: புதிர்: ஜாதகருக்கு உடற் கோளாறால் நடக்க முடியாமல் போனது ஏன் ?


Astrology: Quiz: புதிர்: ஜாதகருக்கு உடற் கோளாறால் நடக்க முடியாமல் போனது ஏன் ?

ஒரு அன்பரின் ஜாதகம் கீழே உள்ளது. திருவோண நட்சத்திரம் தனுசு லக்கினம் மகர ராசி. ஜாதகருக்கு அவருடைய 17வது வயதில் தண்டுவடத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக நடக்க முடியாமல் போய் விட்டது. என்ன காரணம் ? ஜாதகத்தை அலசி அதற்கு மட்டும் பதிலைச் சொல்லுங்கள்!!!

சரியான விடை 2-8-2020 ஞாயிற்றுக்கிழமையன்று வெளியாகும்

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
கேள்விக்கு உரிய ஜாதகம்:

==========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

30.7.20

வடமொழி இலக்கியங்களும் தமிழ் இலக்கியங்களும்!!!!


வடமொழி இலக்கியங்களும் தமிழ் இலக்கியங்களும்!!!!

*இராமன் தன் மனைவியை சந்தேகித்து தீயில் இறங்க பணிக்கிறான். இறங்கி தான் பத்தினி என்பதை சொல்கிறாள். அதற்கு பிறகு கூட ஊராரின் சந்தேகத்தை காரணங் காட்டி கர்ப்பிணியான தன் மனைவியை வனத்தில் தள்ளுகிறார் கணவன்.*
அங்கேயே குழந்தைகள் பெற்று வனத்திலேயே வாழ்கிறாள், இரண்டு குழந்தைகள் வளர்ந்து ஊர் திரும்பியதும் மடிகிறாள். -
*இது ராமாயணம்*

ஓர் அழகிய இளம் மங்கை. அவளுக்கு முதிர்ந்த கணவன்.
 மனமுவந்து வாழ்கிறாள். ஒரு கட்டத்தில் கணவன் குஷ்டரோகியாகிறான்.
அதன் பிறகும் அவளுக்கு வெறுப்பு ஏற்பட வில்லை. பண்ணாத குசும்பெல்லாம் அக் கிழடு செய்தும் அவனை ஆராதிக்கிறாள்.
 ஒரு கட்டத்தில் ஒரு தாசியை பார்த்து "நான் இவளோடு கூட வேண்டுமென்கிறான். அதற்கும் அவள் இசைகிறாள்.
  தாசிக்கு கூலியாக தாசியின் வீட்டை துப்புரவு செய்வது உள்ளிட்ட பணிகளை செய்கிறாள். தன் கணவனை தோளில் தூக்கிச் சென்று தாசியின் வீட்டுக்குச் செல்கிறாள்.
*இது நளாயினி கதை*.

*இது அனைத்தும் வட மொழிஇலக்கியங்கள்*...

தன் கணவனை செய்யாத குற்றத்திற்காக கொலை செய்து விட்டது அரசு.
தன் கோப தீயால் ஒரு நகரத்தையே எரிக்கிறாள்,
 தன் உள்ளத்து எரிச்சல் பற்றி எரிகிறது என கெக்கலிட்டு சிரிக்கிறாள், ஆவேசமாக எரித்த படியே வேகமாக நடந்து சென்று சற்று நிதானித்து திரும்பி பார்க்கிறாள், 'அனைத்தும் எரிந்து விட்டதா அல்லது இன்னும் மிச்சமிருக்கிறதா' என்று. -
*இது சிலப்பதிகாரம்*.

அவள் ஓர் பேரழகி. அவள் அழகில் கவரப்பட்டு ஓர் இளவரசன் தன் காதலை அவளிடம் கூறுகிறான்.
 அவள் வலக் கையில் வாங்கி இடக் கையில் தூர வீசிவிட்டு சலனமற்று நடக்கிறாள். இளவரசனும் ஆசிட் வீச வில்லை,
ஆபாச படமெடுத்து மிரட்ட வில்லை.
 அவள் உணர்வுக்கு மதிப்பளித்து சென்று விடுகிறான்.
*இது மணிமேகலை*

அவள் கணவன் அவளை கொல்வதற்காக திட்டமிட்டு மலை உச்சிக்கு அழைத்துச் செல்கிறான்.
அவளும் விவரமறியாது கூடவே செல்கிறாள்.
 மலை உச்சியை எட்டியதும்தான் தெரிகிறது,
'இவன் தன்னை கொலை செய்ய அழைத்து வந்திருக்கிறான்' என்று.
யோசிக்கிறாள்.
இறுதியாக கணவனிடம் பேசுகிறாள்,
"நீ என்னை கொல்லத்தானே அழைத்து வந்திருக்கிறாய்?
நான் மடிவது பற்றி எந்த கவலையுமில்லை.
ஒரே ஒரு வேண்டுகோள்தான். என் கணவர் நீங்கள். உங்களை மூன்று முறை சுற்றி வந்து காலில் விழுந்து ஆசி வாங்கினால் மோட்சம் செல்லும் பாக்யம் கிட்டும் எனக்கு" என்று.
"அட அதனாலென்ன? தாராளமாக சுற்றி வா" என்று கணவனும் சொல்ல,
சுற்றுகிறாள்.
 முதல் சுற்று,
இரண்டாம் சுற்று, மூன்றாம் சுற்றில் தன் கணவனை மலையிலிருந்து கீழே தள்ளி விட்டு கொல்கிறாள்.
*இது குண்டலகேசி*

*இவை அனைத்தும் தமிழ் இலக்கியங்கள்*...

ஓர் ஆண் என்ன செய்தாலும் அவனுக்கு சேவகம் செய்வதொன்றே பெண்ணின் பணி என்பதினை சொன்னது தான் வடமொழி இலக்கியங்கள்.

அவன் ஆணோ, கணவனோ,  அரசனோ, ஆண்டவனோ அநீதி என்றால்,
*அறம் தவறினால் அடங்காதே, அவனை எதிர்த்து போராடு* என்பதை போதிப்பதுதான் தமிழ் இலக்கியங்கள்.

தமிழ் மொழி எப்போதுமே பெண்களை கொண்டாடுவது.

வடமொழிகள் பெண்களை அடிமைத் தனமாக்குவது.

உலகம் முழுவதுமே பெண்களைக் காலுக்கு கீழே வைத்திருந்த கால கட்டத்தில் பெண்களை மேன்மை மிகு பொக்கிஷமாக போற்றிப் புகழ்ந்தது தமிழ் சமூகம்.

*சங்ககாலத்திலேயே,  47 பெண் எழுத்தாளர்களைக் கொண்டது உலகிலேயே தமிழ் சமூகம் மட்டும்தான்.* உலக மொழிகளின் தாய் என்று கூறிக் கொள்ளும் கிரேக்கத்தில் கூட 7 பெண்கள் தான் உண்டு.

தேவபாஷை என்று கூறிக் கொள்ளும் சமஸ்கிருதத்தில் ஒரு பெண் எழுத்தாளர் கூட கிடையாது.
ஏன்? சமஸ்கிருதத்தை வாசிக்கவோ, பேசவோ கூட பெண்களுக்கு உரிமை கிடையாது.

ஆனால் கீழடி போன்ற இடங்களில் இருந்து கிடைத்ததில் தங்கத்திலும், பானை ஓடுகளிலும் பெண்களின் பெயரைப் பொறித்து புழங்குமளவிற்கு தமிழ் சமூகம் நாகரீகம் கொண்டது.

ஆண்டாண்டு காலமாக  பெண்களை போற்றிப் புகழ்ந்து கொண்டாடியது நம் தமிழ் சமூகம்...

தமிழ், தமிழ் சமுதாயம் இன்றும் நிலைத்து இருப்பதற்கு காரணம் பெண்களைக் கொண்டாடியதால் தான். பெண்கள் உலகத்தின் ஆணிவேர்கள்.
-----------------------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

29.7.20

வேலை வேண்டுமா - இதைப் படியுங்கள்!!!!


வேலை வேண்டுமா - இதைப் படியுங்கள்!!!!

*விவசாய வேலைக்கு ஆள் தேவை*
-----------------------------------------------------------------------
எங்கள் இயற்கை விவசாயப் பண்ணைக்கு, தங்கி பணி செய்ய ஆள் தேவை. விவசாயம் செய்வது மற்றும் பராமரிப்பு பற்றிய பயிற்சிகள் அளிக்கப்படும்.

*பணியிடம்:* திருவில்லிபுத்தூர் அருகில்
*தொடர்புக்கு:* 9655458148, முனீஸ்வரன் கருப்பசாமி

குறிப்பு: நேர்காணலுக்கு வருபவர்களுக்கு போக்குவரத்து செலவு தரப்படும்.

*சம்பளமும் மற்ற சலுகைகளும்*
--------------------------------------------------------------
1. மாத ஊதியம் *ரூ.12000* *+ மாதாந்திர வைப்புநிதி*
2. மாதம் *25கிலோ அரிசி* பை
3. *தங்குமிடம் இலவசம்*
4. *24 மணிநேர இலவச மின்சாரம் (இன்வெர்டர்* தரப்படும்)
5. வருடம் இருமுறை *போனஸ்*(லாபத்தில் பங்கு)
6. வருடம் ஒருமுறை *சம்பள உயர்வு* வழஙகப்படும்
7. பணிக்கொடை எதிர்கால வைப்பு நிதி *(கிராஜூவிட்டி)* உண்டு
8. மாதமொரு நாள் *சம்பளத்துடன் விடுப்பு*
9. *இலவசக் காப்பீடு* (இன்ஷூரன்ஸ்)
10.தோட்டத்தில் விளையும் காய்கறிகள், கனிகளை தங்கள் குடும்பத்திற்கு மட்டும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
11. பணிச்சுமை அதிகமாகும் அறுவடை காலங்களில் தேவையான அளவு உபரி ஆட்கள் வேலைக்குத் தரப்படும்.
12. வருடம் ஒரு முறை *சம்பளத்துடன் கூடிய நீண்ட நாட்கள் விடுப்பும்,* ஊருக்கு சென்று வர போக்குவரத்து செலவும் அளிக்கப்படும்.
13. அரசு பள்ளிக்கூடம் பண்ணைக்கு மிக அருகில் உள்ளது.

*பணி சார்ந்த எங்கள் எதிர்பார்ப்பு*
----------------------------------------------------------------
1. குடும்பமாக வருபவர்களுக்கு/ஆதரவற்றோருக்கு *முன்னுரிமை* அளிக்கப்படும்.
2. விவசாயம் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. விவசாயத்தின் மீதுள்ள பற்றும் பக்தியுமே முக்கியத் தகுதி
3.படிப்பறிவு அவசியமில்லை
4. பண்ணையிலுள்ள பயிர்களையும், கோழி,மாடு போன்ற உயிர்களையும் பற்றோடு பராமரிப்பது.
5. தேவையான தகவல்களை எங்களுக்கு உடனடியாக அளிப்பது.
6. எங்களோடு தினசரியோ, வாரம் ஒருமுறையோ கலந்துரையாடல் செய்வது.
7. குறைந்த பட்சம் *3 ஆண்டுகள்* கண்டிப்பாக வேலை செய்ய வேண்டும்.
---------------------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
=========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

28.7.20

இந்து - முஸ்லீம் மத நல்லிணக்கம்!!!


இந்து - முஸ்லீம் மத நல்லிணக்கம்!!!

மராட்டிய வீர சிவாஜியின் படைகளில் இருந்த 1,50,000 படை வீரர்களில் 60,000 பேர் இஸ்லாமியர்கள். சிவாஜியின் அந்தரங்க காரியதரிசி மவுலி பஷீர்கான்.

* சிவாஜியை எதிர்த்துப் போராடிய பாமினி சுல்தான்களின் படைகளில் பெரும் பான்மையினர் இந்துக்கள்.

* 1857 இல் நடந்த முதல் விடுதலைப் போரில் வீர காவியம் படைத்த ஜான்சி ராணி லட்சுமி பாயின் காலாட் படைத் தளபதி குதாபாகஸ், படைத்தளபதி கவுஸ்கான், அவரது தனிப்பாதுகாப்பு அதிகாரி மன்ஸர் ஆகியோர் இஸ்லாமியர்.

* நாகூர் தர்காவின் கோபு ரத்தைக் கட்டியது சரபோஜி மன்னன்.

* சிதம்பரம் அருகில் உள்ள கிள்ளை தர்கா நிர்வாகம் - திருமுட்டத்திலிருந்து வரும் பூவராகவர் சாமிக்குத் திரு விழா நடத்த, திருவிழா நாள் தோப்பு என்று 15 ஏக்கர் புஞ்சை நிலத்தை அளித்தது. அந்த சாமியின் வருமானத் திற்கு 40 ஏக்கருக்கும் மேற் பட்ட நிலத்தை சாசுவத தானமாக 1891 ஆம் ஆண்டு வழங்கி உள்ளனர். இப் போதும் கிள்ளைக்கு அந்த சாமி வரும்போது, இஸ்லாமியர்கள் வந்து வரவேற்பார்கள்.

* எட்டுக்குடி முருகன் கோவில் திருவிழாக்களில் மின் விளக்குகளைக் கட்டுவது முஸ்லீம்கள்.

* ஆத்தூர் வண்டிக் காளியம்மன் சிகப்பு உடை அணியும்போது காளி, பச்சை உடை அணியும்போது முத்தாளம்மன். கடவுள் புறப்படும் போது நான்கு பக்கங்களில் ஒரு பக்கம் தூக்கும் உரிமை முஸ்லீம் மக்களுக்கும், இன்னொரு பக்கம் தூக்கும் உரிமை கிறிஸ்தவர்களுக்கும்; மீதமுள்ள இரண்டு பக்கங்கள் இந்துக்களுக்கும் உண்டு. சாமி வரும்போது முஸ்லீம் தெருக்களில் முறைப்படி தேங்காய் உடைப்பார்கள்; ஆரத்தித் தட்டை வீட்டுத் திரையிலிருந்து கைநீட்டுவார்கள். பூசாரி வாங்கிச் சென்று, அர்ச்சனை செய்து பிரசாதத்தைத் தருவார்.

* வைணவத்தின் தலைமையிடமான ஸ்ரீரங்கத்தில் நம்பெருமாளுக்கு கைலி சாத்தப்படுகிறது. துலுக்க நாச்சியார் சன்னதியும் அங்குண்டு.

* பாண்டிச்சேரி மக்களால் பாய் முருகர் என்று அழைக் கப்படுபவர் 1940 இல் பிறந்த முகம்மது கவுஸ் என்ற இஸ்லாமியர். துளசி முத்துமாரியம்மன் ஆலயத்தையும், கௌசிக பாலசுப்பிரமணியர் கோவிலையும் கட்டியது அந்த இஸ்லாமியரே! அந்த முருகன் ஆலயத்தில் முகமது கவுசின் திருவுருவப்படம் உள்ளது.

எடுத்துக்காட்டுகளுக்குச் சிலவே என்று - இவ்வளவையும் எழுதி இருப்பவர் - இந்து அறநிலையத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரி எஸ்.ஜி.ரமேஷ்பாபு! நூலின் பெயர் ‘யார் கைகளில் இந்து ஆலயங்கள்?' என்ப தாகும். (2019, வெளியீடு பாரதி புத்தகாலயம்).

இப்படி இந்துக்களும் - முஸ்லீம்களும் சகோதரர் களாகப் பழகியும், பாவித்தும் வந்த தமிழ்நாட்டில் - இந்து - முஸ்லீம் கலவரங்களை உருவாக்கும் வெறியர்களை அடையாளம் கண்டு ஒதுக்கிட வேண்டாமா?

- மயிலாடன் முகநூல் பதிவு.
-----------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

27.7.20

இந்து மதத்தைத் தழுவிய அமெரிக்க செல்வந்தர்!!!


இந்து மதத்தைத் தழுவிய அமெரிக்க செல்வந்தர்!!!

பிரபல அமெரிக்க கார் தயாரிப்பு நிறுவனம் ஃபோர்ட் (Ford) நிறுவன உரிமையாளர்  ஆல்பிரட் ஃபோர்ட் தன் குடும்பத்துடன் இந்து மதத்தை தழுவியது அனைவரும் அறிந்ததே..!

தற்போது அவர் இந்து-கலாச்சாரம் பற்றிய ஆராய்ச்சிக்காக ரூ. 250 கோடி நன்கொடை அளித்துள்ளார். உலகின் மிகப்பெரிய இந்து கோவில் இந்தியாவில் கட்டுவதற்கான திட்டத்தையும் இவர் செயல்படுத்தி வருகிறார்.

இந்து மதத்தை தழுவிய பிறகு ஆல்பிரட் ஃபோர்டு தனது பெயரை அமர்இஸா தாஸ் என்றும் அவரது மனைவி பெயர் ஷர்மிளா என்றும் மாற்றிக்கொண்டார்.

இது தான் நமது சனாதன மதத்தின் சக்தி..!

ஹர ஹர மஹாதேவ்...!

Additional information

Alfred Brush Ford (born 1950), also known as Ambarish Das (IAST: Ambarīśa Dāsa), is an American heir to the Ford fortune. He is a great-grandson of Henry Ford, founder of the Ford Motor Company.

Background
See also: Ford family tree
Alfred Ford's father was Walter B. Ford II (1920–1991), whose family were prominent in chemical manufacturing in the Downriver area south of Detroit. His mother, Josephine Clay Ford (1923–2005) was the daughter of Edsel Ford (1893–1943), who was the son of Henry Ford (1863–1947).[4] The two Ford families were unrelated to each other; both his father and mother were born with the last name Ford.

Alfred and William Clay Ford, Jr. (b. 1957), the current executive chairman of the Ford Motor Co., are first cousins. Alfred's mother was the sister of William Clay Ford, Sr. (1925–2014), William Clay Ford, Jr.'s father.

Alfred Ford currently serves on the board of directors of privately held digital marketing firm ChannelNet, where he is also an investor. Ford Motor Company was one of ChannelNet's early clients.

Association with the Hare Krishna Movement

He is an initiated disciple of A.C. Bhaktivedanta Swami Prabhupada (Srila Prabhupada) since 1974. He first met Bhaktivedanta Swami in Dallas, USA.Alfred Ford joined the International Society for Krishna Consciousness (the Hare Krishnas) in 1975 and that same year he made his first trip to India with Prabhupada. He assisted in the establishment of the first Hindu temple in Hawaii and also donated $500,000 to help establish the Bhaktivedanta Cultural Center in Detroit[6] which was completed in 1983.[3] Alfred Ford has made many significant donations to ISKCON over the years which have assisted ongoing projects to build the Pushpa Samadhi Mandir of Prabhupada. He is the chairman of the Sri Mayapur Temple of the Vedic Planetarium (also called TOVP).

Ford is said to have supported the construction of a Vedic cultural centre in Moscow at an estimated cost of $10 million.He also bought a $600,000 mansion to house a Hare Krishna temple and learning centre in Honolulu.
------------------------------------------------------------------
படித்தேன்; பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
=====================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

26.7.20

Astrology: Quiz: புதிர்: 24-7-2020 தேதியிட்ட புதிருக்கான விடை!

Astrology: Quiz: புதிர்: 24-7-2020 தேதியிட்ட புதிருக்கான விடை!

கேட்டிருந்த கேள்வி இதுதான். ஒரு அன்பரின் ஜாதகம் கீழே உள்ளது. உத்திரட்டாதி நட்சத்திரம் தனுசு லக்கினம் மீன ராசி. ஜாதகர் படித்து முடித்தவுடன் தனது 22வது வயதில் கேட்ட கேள்வி - வேலைக்குத்தான் போக வேண்டுமா - அல்லது வியாபாரம் அல்லது சுய தொழில் செய்யலாமா? ( என்று கேட்ட போது) ஜோதிடர்கள் அடித்துச் சொல்லிவிட்டார்கள் - வேலைக்குத்தான் போக வேண்டுமென்று! சரி வேலைக்கு என்றால் எந்த வேலைக்குச் செல்வது? எந்த வேலையில் முன்னேற்றம் இருக்கும்? இப்போது அவருடைய கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.  ஜாதகத்தை அலசி அதற்கு மட்டும் பதிலைச் சொல்லுங்கள்!!!” என்று கேட்டிருந்தேன்.

பதில்: ஒரு பெரிய தொழிற்சாலையின் நிர்வாகப் பிரிவில் வேலைக்குச் சேர்ந்தார். படிப்படியாக முன்னேறி அந்த தொழிற்சாலையின் நிர்வாக மேலாளராக பதவி உயர்ந்து சிறப்பாகப் பணியாற்றினார், ஜாதகப்படி அதற்கான காரணங்கள். பத்தாம் வீட்டின் மேல மனகாரகனான சந்திரனின் பார்வை. புத்திகாரகனும் பத்தாம் வீட்டு அதிபதியுமான புதன் 3ல் உள்ளார் (அது தைரிய ஸ்தானம்) 9ம் வீட்டு அதிபதியும் வர்கோத்தமம் பெற்றவருமான சூரியன் புதனுடன் கூட்டாக உள்ளார். அவர் அதிகாரத்தைப் பெற்றுத் தரக்கூடியவர். மேலும் அவர் செவ்வாயின் பார்வையோடு உள்ளார். Mars is the karaka for energy and enterprise.  இந்த அமைப்புக்களே அவருடைய முன்னேற்றத்திற்குக் காரணம். அவற்றை மட்டும் இங்கே குறிப்பிட்டுள்ளேன்,

இந்தப் புதிரில் 10 அன்பர்கள் கலந்து கொண்டு தங்கள் கணிப்பை வெளியிட்டு உள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்.

அடுத்த வாரம் 31-7-2020 வெள்ளிக்கிழமை  அன்று வேறு ஒரு புதிருடன் மீண்டும் நாம் சந்திப்போம்!!!!

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
1
Blogger C Jeevanantham said...
Dear sir,
The given horoscope person's 10th lord mercury is with Sun. Sani neecham.
1. He can go to the job mercury related. That means, accounts related., computer works related.,
2. Since sun is join with mercury, he can get a job as accountant in government related jobs.
Thanking you,
Yours sincerely,
C. Jeevanantham.
Friday, July 24, 2020 9:51:00 AM
----------------------------------------------------
2
Blogger ஜகதீஸ்வரன் said...
ஜகதீஸ்வரன் கானாடுகாத்தான்: செவ்வாயின் காரகங்களில் வேலை.
Friday, July 24, 2020 3:35:00 PM
--------------------------------------------------
3
Blogger csubramoniam said...
ஐயா
கேள்விக்கான பதில்
1 .லக்கினாதிபதி குரு விரயாதிபதி செவ்வையுடன் அமர்ந்துள்ளார்
2 .பத்தாம் அதிபதி புதன் ஒன்பதாம் அதிபதி சூரியனுடன் மூன்றில்
3 .ஆகவே ஜாதகருக்கு கணினி துறையில்
4 .சந்திரன் பத்தாம் இடத்தை பார்ப்பதால் விற்பனை பிரிவு பொருத்தமாக இருக்கும்
நன்றி தங்களின் பதிலை ஆவலுடன்
Friday, July 24, 2020 5:04:00 PM
------------------------------------------------------------------
4
Blogger Jeyalaxmi said...
வணக்கம் ஐயா. 24/7/20 சோதிட புதிருக்கு பதில். லக்னாதிபதி குரு திக்பலத்திற்கு அருகில் இருப்பதாலும் சுக்கிரன் சூரியன் வர்கோத்தமாக இருப்பதாலும் சந்திரன் பத்தாம் பாவத்தை வலுப்படுத்துவதாலும்
அரசு் ஆசிரியர் கணக்கர் வங்கி காசாளர் போன்ற பணிகளில்்முயற்சி செய்து பார்க்கலாம். ஆசிரியர் பணிக்கு வாய்ப்புகள் உள்ளது.
Friday, July 24, 2020 10:08:00 PM
---------------------------------------------
5
Blogger gkc said...
Sevvai karakathuva thozhil amaiyum. May be engineering related.
Friday, July 24, 2020 11:14:00 PM
--------------------------------------------------
6
Blogger P. CHANDRASEKARA AZAD said...
வணக்கம்
தாங்கள் கேட்டு இருந்த கேள்விக்கான பதில்
தனுசு லக்கின உத்திரட்டாதி நக்ஷத்திர மீன ராசி ஜாதகர் வேலையின் தன்மை பற்றி அறிய , அவரின் லக்கினத்தில் இருந்து ஆறாம் இடம், பத்தாம் இடம் போன்றவற்றை பார்க்க வேண்டும்.
இவரின் ஆறாம் இடத்து அதிபதி சுக்கிரன் இரண்டில் ராகுவுடன் வர்கோத்தமாக உள்ளார். மேலும் ராகு தகவல் தொடர்பு சம்பந்த பட்ட கிரகம் ஆதலால் இவர் இன்ஜினியரிங் சம்பந்தப்பட்ட தகவல் தொழில் நுட்ப துறையிலேயே வேளையில் அமர்வார்.
மேலும் பத்தாம் இடத்து அதிபதி புதன் மூன்றில் சூரியனுடன் இணைந்து உள்ளார். புதனும் இன்ஜினியரிங் துறையில் நல்ல உயர் பதவியில் அமர செய்வார். மேலும் பத்தாம் இடத்தை சந்திரன் பார்ப்பதால் இன்ஜினியரிங் துறையில் தகவல் தொழில் நுட்ப வல்லுனராக சேவை துறையில் ( கால் சென்டர் ) போன்ற வேளையில் உயர் பதவியில் அமர்வார்.
மேலும் இவர் புதன் தசை சூரிய புக்தியில் வேலை கிடைக்க பெற்று மென்மேலும் வளர்ந்து அந்த துறையிலேயே கேது தசையில் வெளி நாட்டில் வேலை கிடைக்க பெறுவார்.
நன்றி
இப்படிக்கு
ப. சந்திரசேகர ஆசாத்
கைபேசி : 8879885399
Saturday, July 25, 2020 6:27:00 PM
--------------------------------------------------------
7
Blogger இராம. சீனிவாசு, திருச்செங்கோடு. said...
பெருமதிப்பிற்குரிய ஐயா, வணக்கம்.
கொடுக்கப்பட்டுள்ள ஜாதகத்தில் லக்னம் பாபகத்ரி யோகத்தால் பாதிக்கப்பட்டு பலம் இழந்துள்ளது. லக்னாதிபதியும் மறைவு ஸ்தானமான 12ம் வீட்டில் மாந்தியுடன் அமர்ந்து பலமிழந்துள்ளார். தொழில் காரகரான சனி பகவானும் தனது நீச வீட்டில் நின்று பலமிழந்துள்ளார். இவ்வாறான நிலையில் 9ம் இடத்து அதிபதியான சூரியன் வர்கோத்தமம் பெற்று 3ல் அமர்ந்துள்ள நிலையில், அவருடன் கர்ம ஸ்தானதிபதி புதன் இணைந்து புதாதித்ய யோகம் மற்றும் தர்மகர்மாதிபதியோகம் உருவாகியுள்ளதால் ஜாதகர் அரசுத் துறையில் எழுத்தர் நிலையில் நுழைந்து பின்னாளில் பதவி உயர்வுகள் பெற்று முன்னேற்றம் அடைந்திருக்க வாய்ப்புள்ளது.
இராம. சீனிவாசு,
திருச்செங்கோடு.
Saturday, July 25, 2020 11:10:00 PM
--------------------------------------------------------------
8
Blogger Sridhar said...
பத்தாம் அதிபதி புதன். வர்கோத்த சூரியனுடன் சேர்க்கை. செவ்வாய் பார்வை புதன் மற்றும் சூரியன் மீது. ஜாதகர் அறிவு சார்ந்த (intelectual) துறையில் சிறந்து விளங்குவர். உயர் பதவியை அடைவார்
Accountant, Teacher, Astrologer, Editor etc.
Sunday, July 26, 2020 1:15:00 AM
---------------------------------------------
9
Blogger RAMVIDVISHAL said...
I have arrived DOB 27/02/1971 time 2:18 am
Option 1
He should prefer to enter own business of share trade/broker
Rahu in 2nd place will give unexpected earnings
Option 2
Mercury being 10th house along with sun (9th lord) in 3rd house ( communication house) will become accountant/stenographer/lawyer/speaker in politics/magazine editor or marketing
Sunday, July 26, 2020 1:20:00 AM
-----------------------------------------------------------
10
Blogger kmr.krishnan said...
ஜாதகருக்கு லக்கினத்திற்குப்பத்தாமிடம் புதன்வீடான கன்னி. அந்த புதன் மூன்றாமிடமான கும்பத்தில் 9ம் அதிபதியான சூரியனுடன் இருந்து 9ம் இடத்தினையே பார்த்தார்கள்.
லக்கினம் தனுசு அதிபதி குரு.குருவின் பார்வை 4ம் இடத்தில் விழுகிறது.4ம் இடம் கல்விக்கானது.
இவர் தொழில் வாய்பேச்சு சாமர்த்தியத்தில் நடைபெறவேண்டும். கல்லூரிப் பேராசிரியர், வழக்குறைஞர், நாடக/சினிமாக் கலைஞர், போல தன் தகவல் தொடர்பு சாமர்த்தியத்தால் வேலை.சூரியன் தொடர்பால் அரசாங்கத் தொடர்புள்ள வேலை.
Sunday, July 26, 2020 5:04:00 AM
=====================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

24.7.20

Astrology: Quiz: புதிர்: ஜாதகருக்கு எந்த மாதிரி வேலை உகந்தது ?


Astrology: Quiz: புதிர்: ஜாதகருக்கு எந்த மாதிரி வேலை உகந்தது ?

ஒரு அன்பரின் ஜாதகம் கீழே உள்ளது. உத்திரட்டாதி நட்சத்திரம் தனுசு லக்கினம் மீன ராசி. ஜாதகர் படித்து முடித்தவுடன் தனது 22வது வயதில் கேட்ட கேள்வி - வேலைக்குத்தான் போக வேண்டுமா - அல்லது வியாபாரம் அல்லது சுய தொழில் செய்யலாமா? ( என்று கேட்ட போது) ஜோதிடர்கள் அடித்துச் சொல்லிவிட்டார்கள் - வேலைக்குத்தான் போக வேண்டுமென்று! சரி வேலைக்கு என்றால் எந்த வேலைக்குச் செல்வது? எந்த வேலையில் முன்னேற்றம் இருக்கும்? இப்போது அவருடைய கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.  ஜாதகத்தை அலசி அதற்கு மட்டும் பதிலைச் சொல்லுங்கள்!!!

சரியான விடை 26-7-2020 ஞாயிற்றுக்கிழமையன்று வெளியாகும்

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
கேள்விக்கு உரிய ஜாதகம்:


==============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

23.7.20

கரோனா வராமல் தப்பிக்க நான் செய்வது போதுமா டாக்டர்?


கரோனா வராமல் தப்பிக்க நான் செய்வது போதுமா டாக்டர்?

"டாக்டர்.. டாக்டர்.. நான் கரோனாவிலிருந்து தப்பிக்க எல்லா முயற்சி யும் பண்ணறேன்.. இருந்தாலும் பயமாருக்கு..."

*" என்னெல்லாம் பண்றீங்க"*

"யோகா
+
வாக்கிங்
+
😋லெமன் வாட்டர்
+
மஞ்சள் பொடி கலந்து சூடான பால் சாப்பிட றேன்
+
ச்யவன்பிராஷ் லேகியம்
எடுத்துக்கறேன்
+
முளைகட்டிய தான்யங்கள்
(Sprouts)
+
இஞ்சி
+
கொஞ்சம் பாதாம்
+
அத்திப்பழம் உலர்ந்தது
(காபூல்அத்திப்பழம் பேமஸ்..அது தான்.. டாக்டர்)
+
துபாய் பேரீச்சை
+
கொஞ்சம் dry fruits
எல்லாம் சாப்பிடறேன்
+
கப சுர குடிநீர் குடிக்கறேன்
+
வாயிலே ரெண்டு மிளகு,
லவங்கம்
அடக்கி வைச்சுக்கறேன்
+
மூக்கில ரெண்டு சொட்டு எண்ணெய்
விட்டுக்கறேன்
+
மஞ்சள் பொடி ,உப்பு கலந்து வெதுவெதுப்பான
ஜலத்தில தொண்டை வரைக்கும் படறா மாதிரி
gogle பண்ணறேன்..
+
ஓமம் எல்லாம் போட்டு
ஆவி பிடிக்கறேன்..
+
நாள் பூரா வென்னீர் தான் குடிக்கறேன்
+
பதஞ்சலி நீம்+துளசி மாத்திரை
+கிலோய்(அம்ருதவல்லி) மாத்திரை
எல்லாம் சாப்பிட்டேன்..
கைவசம் வைச்சும் இருக்கேன்..
+
ஹோமியோபதி ல
சொன்னாங்கன்னு
ஆர்சனிக் எல்போ+
கேம்ஃபர் மாத்திரை மாசத்துக்கு 5 நாள்
சாப்பிட்டேன்
+அல்லோபதிலே Hcqc+
Eginthryl+iverameqtin
ஒரு கோர்ஸ் எடுத்து ண்டேன்
+
அப்பறம்..
எப்பவும் முக கவசம்
+
கழுத்தில ஸ்கார்ஃப்
+
சேனிடைசர்லே
ஒரு நாளைக்கு 50தடவையாவது
கை கழுவுவேன்..
+
சாமான்லாம் door delivery தான்
+
Paytm ல தான் பேமெண்ட் எல்லாம்
+
💁♀️வேலைக்காரி கிடையாது.. நான் தான்
பாத்திரம் தேய்க்கிறேன்..
+
வீட்டு வேலை எல்லாம் செய்யறேன்
+
Daily தோய்த்த துணி தான் போட்டுக்குவேன்.. பார்ட்டி, function, எதுக்கும்
போறதில்லை...
+
சாமி கும்பிடறேன்
கை தட்டி, பஜனை பண்ணி சாம்பிராணி போட்டு எல்லாம் பண்றேன்..
+
*கரோனா தேவிக்கு* என்னால முடிஞ்ச அளவுக்கு விரதம் விடாமல் செய்ஞ்சுட்டேன்..
ஒரு பாபா கொடுத்த தாயத்து கூட கட்டிக்கிட்டேன்..
+
ஹெல்த் இன்சூரன்ஸும்
டேர்ம் இன்சூரன்ஸும்
எடுத்து வைச்சுண்டிருக்கேன்..
🤔டாக்டர்.. கொஞ்சம் சொல்லுங்க..வேற ஏதாவது விட்டு போச்சா..பண்ணறதுக்கு
🤔
👨🏻⚕️
டாக்டர்:-"போதும்.. போதும்.. 
ஹிரண்ய கசிபு போல
ஆயிட்டீங்க... 
😀உங்களே கரோனா என்ன எமனே எதுவும் பண்ணமுடியாது.. பகவானே இன்னொரு அவதாரம் எடுக்கணும் உன்னை கொண்டு போக..🤭
😂😂😂😂😂
--------------------------------------------------
படித்து ரசித்தது: பகிர்ந்தது!!!!
அன்புடன்
வாத்தியார்
===============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

22.7.20

நகைச்சுவை: தெனாலி ராமனும் கொரோனாவும்!!!!


நகைச்சுவை: தெனாலி ராமனும் கொரோனாவும்!!!!

டீல் வித் கொரோனா தி தெனாலி வே!

தெனாலி ராமன் வீட்டில் ஹாயாக நெட்ஃபிளிக்ஸில் மலையாளப்படம் பார்த்து கொண்டிருக்கிறார். 

அப்போது அவர் மனைவி அவரின் பர்சனல் மொபைலை எடுத்து வந்து,

தெனாலி ராமனின் மனைவி : சுவாமி, மன்னர் கான்ஃப்ரன்ஸ் காலில் இருக்கிறார். உங்களுடன் ஏதோ அவசரமாக பேச வேண்டுமாம்!

தெனாலி : நான் உறங்கிக் கொண்டிருப்பதாக சொல்லி சமாளிக்க வேண்டியது தானே? இந்த லாக்டவுனிலும் விடாமல் கழுத்தை.........

மன்னர் : தெனாலி........நான் லைனில் தான் இருக்கிறேன்.

தெனாலி : மன்னியுங்கள் மன்னா! மைக் ம்யூட்டில் இருப்பதாக நினைத்து உள்ளத்தில் இருந்தவற்றை உரக்க பேசி விட்டேன்.  எதற்காக இந்த அவசர ஆலோசனை?

மன்னர் : அமைச்சர்களே நன்றாக கவனியுங்கள்!
அஷ்டதிக்கஜங்கள் என்று உங்களுக்கு பட்டப்பெயர் கொடுத்தது சும்மா வீட்டில் சாப்பிட்டு தூங்க இல்லை. கொரோனாவை ஒழிக்க ஏதாவது யோசித்தீர்களா?

அமைச்சர் 1 : மன்னா, முக கவசம், மூலிகை குடிநீர், நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் அனைத்து மக்களுக்கும் கொடுத்தாயிற்று.

அமைச்சர் 2 : மக்கள் அனைவரையும் அவரவர் வீட்டிலேயே இருக்கும்படி எல்லோருடைய வீட்டின் முன்புற வாசலையும், பின்புற வாசலையும் பூட்டி, அனைத்து சாவிகளையும், நம்பர் ஒட்டி, அரண்மனை வைத்தியரின் பி.ஏ.விடம் ஒப்படைத்தாயிற்று.

அமைச்சர் 3 : மக்களுக்கு தேவையான பொருட்கள், காய்கனி முதலியவற்றை அவர்கள் வீட்டின் ஜன்னல் சாளரத்தின் வழியே பட்டுவாடா செய்வதற்கான அனைத்து  ஏற்பாடுகளும் தயார் மன்னா !

அமைச்சர் 4 : அரண்மனை வைத்தியரின் சிஷ்யர்கள் தினமும் வீடு வீடாக சென்று ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் மக்கள் அனைவரும் உடல்நலக்குறைவில்லாமல் நன்றாக இருக்கின்றனரா என்று விசாரித்து, அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்கின்றனர் மன்னா!

அமைச்சர் 5 : நம் நாட்டில் இருக்கும் ஆலயங்கள், குருகுலங்கள், மல்யுத்த கூடங்கள், வீர விளையாட்டுக்கள், கேளிக்கை கூடங்கள், எல்லாவற்றையும் மூடச்சொல்லி உத்தரவிட்டு ஐந்து மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது மன்னா!

அமைச்சர் 6 : நாடு முழுவதும் இண்டு இடுக்கு, சந்து பொந்து எல்லா இடங்களிலும் கிருமி நாசினி கூட தெளித்தாயிற்று அரசே!

அமைச்சர் 7 : அரண்மனை வைத்தியரும், அவருடைய பிரதான சிஷ்யர்களும் இந்த நோய்க்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பணியில் ராப்பகலாக ஈடுபட்டிருக்கின்றனர், மன்னரே!

மன்னர் : என்ன தெனாலி, நீ மட்டும் மௌனமாக இருக்கிறாய்? கொரோனாவை ஒழிப்பதில் உன் பங்களிப்பு என்ன?

தெனாலி : மன்னா, எனக்கு ஒரு வார கால அவகாசம் வேண்டும்.

மன்னர் : மக்கள் அனைவரும் வெளியில் வராமல் வீட்டிற்குள்ளேயே அடைபட்டு மிகவும் தவிக்கிறார்கள். அவர்களை காப்பது நம் அரசின் கடமை.  உனக்கு ஒரு வாரம் அவகாசம் தருகிறேன். அதற்குள் நீ உருப்படியான யோசனை எதுவும் சொல்லவில்லை என்றால் சிறையில் தள்ளப்படுவாய்.

தெனாலி : உத்தரவு மன்னா!

(ஒரு வாரம் கழிந்தது)

மன்னர் :  என்ன தெனாலியிடமிருந்து எந்த தகவலும் இல்லை!

இந்த சந்தர்ப்பத்தில் அவன் புத்திசாலித்தனம் எப்படி வேலை செய்கிறது என்பதை பார்க்க ஆவலாக இருக்கிறது.
ஹே.......சிரி.......... தெனாலியை கூப்பிடு!

தெனாலியின் மனைவி : வணக்கம் மன்னா! அவர் காலையிலேயே கிளம்பி எங்கோ வெளியே போய் விட்டார். நீங்கள் அழைத்தால் உங்களிடம் அவர் ஃபேஸ்புக் பேஜில் சரியாக நான்கு மணிக்கு லைவில் அவரை பார்க்கலாம் என்று சொல்ல சொன்னார்.  உங்களுடன் சேர்த்து நம் நாட்டில் இருக்கும் அனைத்து மக்களையும் ஃபேஸ்புக் லைவ் பார்க்க உத்தரவிடுமாறும் கேட்டுக்கொள்ள சொன்னார்.

மன்னர் : “அப்படியா, ஆச்சர்யமாக இருக்கிறதே! என்னவாக இருக்கும்?”

“சரி, மக்கள் அனைவரையும் இன்று நான்கு மணிக்கு ஃபேஸ்புக் லைவ் வரும்படி ஆணையிடுகிறேன். “

நேரம் சரியாக நான்கு மணி!

ஃபேஸ்புக் லைவில் மன்னர் லாக் இன் செய்ததும், தெனாலி ஒரு மலை உச்சியில், கையில் தாம்புக்கயிற்றை கெட்டியாக பிடித்துக்கொண்டு நிற்பதை பார்க்கிறார்.

பார்வையாளர்கள் பட்டியலில் நாட்டு பிரஜைகள் அனைவரும் இருக்கிறார்கள்.

காற்று வேகமாக வீசுகிறது.

எங்கே தெனாலி ஸ்லிப்பாகி விழுந்து விடப்போகிறாரோ என்று அனைவருக்கும் டென்ஷனாக இருக்கிறது.

மன்னர் “தெனாலி என்ன பண்ற?” என்று மெசேஜ் டைப் செய்கிறார்.

தெனாலி உரத்த குரலில் பேச ஆரம்பிக்கிறார்.

“மன்னா வணக்கம்! மக்கள் அனைவருக்கும் வணக்கம்!
இங்க பாருங்க, என் கையில் இருக்கும் தாம்பக்கயிறில் கொரோனாவை கட்டி இழுத்து வந்திருக்கிறேன். உங்கள் கண்களுக்கு அது தெரிகிறதா?
வீரர்களின் கண்களுக்கும், இளமையான யுவதிகளுக்கும் அது கண்டிப்பாக கண்ணில் தெரியும்.  தெரிந்தவர்கள் மட்டும் கமென்டில் ‘எஸ்’ போடுங்கள்.

மன்னர் : என்னது இது? கயிற்றின் நுனியில் ஒன்றுமே இல்லை. வீரர்களுக்கு கண்ணில் தெரியும் என்று பொடி வைத்து பேசுகிறானே, எதற்கு வம்பு, நமக்கு வீரம் இல்லை என்று நினைத்து விடப்போகிறான். ‘எஸ்’ போட்டு விடுவோம் என்று நினைத்து மெசேஜை டைப் செய்தார்.  அவர் ‘எஸ்’ என்றதும் ஆயிரக்கணக்கான ‘எஸ்’ கள் குவிந்தன.

தெனாலி : “ஓகே, குட், எல்லாரும் நல்லா பாருங்க.”

“இப்போ இந்த மலை உச்சிலேர்ந்து கொரோனாவை கீழே தள்ளிவிடப் போறேன், இன்னியோட கொரோனா ஒழிஞ்சது, நீங்க எல்லாரும் பழையபடி ஆட்டம், பாட்டு என்று நிம்மதியா இருக்கலாம்”
என்று சொல்லியபடியே தாம்பக்கயிற்றை கஷ்டப்பட்டு இழுப்பது போல் பாவ்லா செய்து, அதை மலை உச்சியின் மேலிருந்து கீழே தூக்கி வீசினான்.

மக்கள் மிகவும் ரசித்து, நிம்மதி பெருமூச்சுடன்,
“மன்னர் வாழ்க!
  தெனாலி வாழ்க” என்று கமென்ட் எழுதி ஸ்மைலியுடன் சேர்த்து மெசேஜ் எழுதி பாராட்டினார்கள்.

தெனாலியின் லைவ் வீடியோவிற்கு லைக்ஸும், கமென்டும், பாராட்டும் குவிந்து அன்றைய தினத்தின் டாப் ட்ரெண்டிங் ஆனது.

மன்னர் : “தெனாலி இது என்ன விளையாட்டு?”

என்று இன்பாக்ஸில் கேட்க,

தெனாலி : “மன்னா, இதற்கு பேர் தான் ‘பிளாஸிபோ எஃபெக்ட்’”.

மன்னர் : “அப்படின்னா?”

தெனாலி : “உங்கள் கேள்விக்கு கூகிளில் விரிவான விளக்கம் இருக்கிறது மன்னா! அந்த பக்கத்தை இன்பாக்ஸில் அனுப்புகிறேன். படித்து பாருங்கள். “

என்று பதில் மெசேஜும், அதனுடன் ஒரு லிங்க்கும் வந்தது.

இந்த நிகழ்ச்சி முடிந்து தொடர்ந்த வாரங்களில் கொரோனாவின் பயம் குறைந்து, வீரியம் குறைந்து, அந்த விஷக்கிருமி முற்றிலுமாக அழிந்தது.

ஒரு மாதம் கழித்து மன்னரின் ராஜ தர்பார்!

தெனாலி : வணக்கம் மகாராஜா!

மன்னர் : வாரும் தெனாலி அவர்களே!

கண்ணுக்கு தெரியாத கிருமியை மலை உச்சியின் மேலிருந்து தள்ளுவது போல் நாடகமாடி, அந்த கிருமியின் மேல் இருந்த பயத்தை மக்களிடமிருந்து அறவே போக்கி விட்டீர்கள்.

அதனால், அவர்கள் எதிர்ப்பு சக்தியும் அதிகரித்து ‘கொரோனா’ நோய் முற்றிலுமாக ஒழிந்தது.

நாடும், மக்களும் சுபிட்சமாக இருக்கிறார்கள்.

உங்கள் சமயோசிதமான  அறிவுக்கு என் உயர்ந்த பரிசு,

இதோ அங்கிருக்கும் அலங்கார இருக்கையில் அமருங்கள்!

இனிமேல் நீர் தான் இந்த ராஜ்யத்தின் முதல் அமைச்சர்!
சந்தோஷம் தானே!

தெனாலி : “அலங்கார இருக்கையா, எங்கே மன்னா? என் கண்ணுக்கு எதுவும் புலப்படவில்லையே!”

மன்னர் : “அது அறிவாளிகளின் கண்களுக்கு மட்டும் தான் தெரியும்”

தெனாலி : “ஹா....ஹா.....ஹா.... இப்போது நன்றாக தெரிகிறது மன்னா! உங்கள் அன்புக்கு நன்றி!”

உங்கள் கண்ணுக்கும் கிருமி மலை உச்சியிலிருந்து விழுந்தது தெரிந்ததா? 
----------------------------------------------------------------
படித்து ரசித்தது; பகிர்ந்தது
அன்புடன்
வாத்தியார்
========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

21.7.20

பிரச்சினைகளுக்குத் தீர்வு முதலில் சிந்தித்துப் பாருங்கள்!!!!


பிரச்சினைகளுக்குத் தீர்வு முதலில் சிந்தித்துப் பாருங்கள்!!!!

*பிரச்சினையா? அசௌகரியமா?*

அமெரிக்க கப்பற்படையில் மிகப் பெரிய பதவி வகித்து ஓய்வு பெற்ற ஒருவர், *’நான் கற்ற பாடம்’* என்ற தலைப்பில் அவர் வாழ்க்கையில் கற்ற பாடத்தைப் பற்றி எழுதியுள்ளார்.

அவர் கப்பற்படையில் சிறிய பதவியில் இருந்த காலம் அது. நடுக்கடலில் இருந்த கப்பலில் ஏதோ சிரமமான வேலை அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. வேலைப் பளு அதிகம் இருந்த ஒரு நாள், வேறு சில கூடுதல் பணியும் அவர் தலையில் விழ... அவருக்கு கோபம் தாளவில்லை. நேராக தன் உயரதிகாரியான கப்பலின் கேப்டனிடம் சென்று கோபத்தில் கத்தியிருக்கிறார்.

‘முதலிலேயே என் பணிக்கு உதவியாளரை தரவில்லை. இப்போது கூடுதல் வேலை வேறு தருகிறீர்கள். எனக்கு பிரச்சினைக்கு மேல் பிரச்சினை (problem) தருகிறீர்களே? எப்படி என்னால் வேலை பார்க்க முடியும்?’ என்கிற ரீதியில் சுமார் கால் மணி நேரம் விடாமல் பொரிந்து தள்ளியிருக்கிறார். அவர் பேசியதில் *’பிரச்சினை’* என்ற சொல் பல முறை உபயோகப் படுத்தப் பட்டிருக்கிறது. எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்ட கப்பலின் வயதான கேப்டன் அமைதியாகச் சொன்னாராம்:

‘நீ பேசும் போது *பிரச்சினை*’ என்ற வார்த்தையை அதிகம் பயன்படுத்தினாய். பிரச்சினை என்றால் என்ன என்று உனக்குத் தெரியுமா? உனக்கு முதுகுத் தண்டு முறிந்து போய் படுத்த படுக்கையாய் இருக்கிறாய். அது குணமாக வருடக்கணக்காகும் என்றால் அது *பிரச்சினை.*

உன் வீடு எரிந்து போய், இருக்கின்ற எல்லாவற்றையும் இழந்து நீ நடுத்தெருவில் நின்றால் அது *பிரச்சினை...* ஆண்டாண்டு காலம் முயன்றால் மட்டுமே சரி செய்ய முடியும் அல்லது சரி செய்யவே முடியாது என்கிற வகையில் வருவது மட்டுமே *பிரச்சினை.*

இதுபோன்ற பிரச்சினைகள் மனிதனின் வாழ்க்கையில் ஓரிரண்டு வரலாம். வராமலும் இருக்கலாம். மற்றபடி நீ *பிரச்சினை* என்ற பெயரில் சொல்கின்ற எல்லாமே *அசௌகரியங்கள் (inconveniences).*

இதுபோன்ற *அசௌகரியங்கள்* வாழ்க்கையில் நிறைய வரும். அந்தந்தச் சமயத்தில் இவை பெரிதாகத் தோன்றும். ஆனால் மணிக்கணக்கிலோ, நாட்கணக்கிலோ இவை சமாளிக்கப்பட்டு மறக்கப்படக் கூடியவை. பின்னாளில் யோசித்துப் பார்த்தால் அவை, அற்ப விஷயங்களாகத் தோன்றும். இப்போது ஆத்திரப்படும் உனக்கே ஆறு மாதம் கழித்து நினைத்துப் பார்க்கையில் இது அவ்வளவு பெரிய விஷயமாய் தோன்றாது. நான் சொல்வதை நன்றாக நினைவு வைத்துக்கொள்.

*நமது வாழ்க்கை முழுவதும் எல்லாக் கட்டங்களிலும் இதுபோன்ற அசௌகரியங்கள் நிறையவே இருக்கும். இதற்கெல்லாம் பிரச்சினை என்ற பெயரிட்டு வாழ்க்கையைப் பார்த்தால் நீ என்றுமே மகிழ்ச்சியாய் இருக்க முடியாது‘* என்று மிகவும் அமைதியாக அறிவுரை கூறியிருக்கிறார்.

அவர் சொன்னது மிகப் பெரிய பாடமாக எனக்கு இருந்தது. அன்றிலிருந்து நான் எனக்கு சிக்கலை ஏற்படுத்தும் சூழ்நிலைகள் வரும் போதெல்லாம் அது *உண்மையான பிரச்சினையா, இல்லை அப்போதைய அசௌகரியமா* என்று என்னையே கேட்டுக் கொள்ள ஆரம்பித்தேன். நம் வாழ்க்கையில் அசௌகரியங்களைத் தான் அதிகம் சந்திக்கிறோம் என்றும் உண்மையில் அவை அவ்வளவு பெரிய விஷயங்கள் அல்ல என்றும் புரிய ஆரம்பித்தது.

*கோபம், வருத்தம் எல்லாம் குறைய ஆரம்பித்து பொறுமையும், அமைதியும் என்னில் பெருக ஆரம்பித்தது"* என்று அனுபவப் பூர்வமாகச் சொல்லியிருந்தார்..

*நாமும் நிதானமாக யோசிப்போம்..நமது பிரச்சினை உண்மையில் பிரச்சினை தானா, இல்லை தற்போதைய அசௌகரியமா என்று..!!*
----------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!!!
அன்புடன்
வாத்தியார்
========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

20.7.20

கேஜ்ரிவாலும் அரசாங்க உத்தியோகமும்!


கேஜ்ரிவாலும் அரசாங்க உத்தியோகமும்!

டெல்லி  முதல்வருக்கு பாராட்டு மழை குவிந்து வருகிறது...*

*கணவன், மனைவி* இருவரில் யாராவது ஒருவர் தான் *அரசு சம்பளம்* வாங்க வேண்டும் .

அது மாநில அரசாக இருந்தாலும் சரி.

 மத்திய அரசாங்கமாக இருந்தாலும் சரி.

 சட்டம் உடனடியாக அமுலுக்கு வருகிறது.

 *இருவர்களில் ஒருவர் ராஜினாமா செய்தாக வேண்டும்.*

கெஜ்ரிவாலின் அதிரடித் திட்டம்...👏👌

குடும்பத்தில் ஒருவருக்கு கட்டாய
அரசு வேலை

முதலமைச்சரின் புதிய திட்டம்

இதனால் அனைவரும் மகிழ்ச்சி. இத்திட்டத்தை உடனடியாக செயல்படுத்த மக்கள் அதிக ஆர்வம். மீண்டும் அவரே முதல்வர் என முதல்வருக்கு பாராட்டு

 1.இத்திட்டத்தின்படி குடும்பம் என்பது கணவன் மற்றும் மனைவி இரண்டு பேர் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளபடும்

 2. கணவன் அல்லது மனைவி யாராவது ஒருவருக்கு கட்டாய அரசு வேலை  வழங்கபடும்

3. ஏற்கனவே கணவன் மனைவி இரண்டு பேரும் அரசு பதவியில் இருந்தால், யாராவது ஒருவர் பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். அல்லது ஒருவர் பதவி பறிக்கப்படும் . ராஜினாமா செய்தவர்கள் தனியார் துறையில் வேலை செய்யலாம். அவர்கள் அரசு துறையில் பணியாற்ற வேண்டும் என நினைத்தால், அதற்கு அரசும் சம்மதித்தால் அவருக்கு contract   சம்பளம் Rs. 10, 000 மட்டுமே வழங்கபடும்.

3. திருமணம் ஆகாத,  ஏற்கனவே அரசு வேலையில் இருப்பவர்கள் இரண்டு பேரும் திருமணம் செய்ய நினைத்தால், அவர்கள் யாராவது ஒருவர் கண்டிப்பாக அரசு வேலையை ராஜினாமா செய்ய வேண்டும். இல்லை என்றால் அது  சட்டபடி குற்றம்

4.  இத்திட்டத்தின் படி  குறைந்தது ஒருகோடிக்கு  அதிகமான சொத்து உள்ள குடும்பங்களுக்கு  அரசு வேலை கிடையாது. அவர்கள் PAN Card, Income tax விவரங்களை அரசு சோதனை செய்யும்.

5. கணவன் அல்லது மனைவி யாராவது ஒருவர்  மத்திய அரசு ஊழியர் என்றால், நல்ல ஊதியம் பெறுபவர் என்றால் மற்றவருக்கு  மாநில அரசு வேலை கிடையாது.

6. இத்திட்டத்தின் படி எந்த ஒரு நபரும் , வேலைக்கு சேர்ந்தது முதல் 30   வருடம் மட்டுமே அரசு வேலை செய்ய வேண்டும். அதற்கு மேல் வேலை செய்தால் குற்றம்

7.ஏற்கனவே அரசு பதவியில் இருப்பவர்கள் வருமான வரித்துறையின் சோதனைக்கு உட்படுவார்கள். அவர்கள் சொத்து மதிப்பு ஒருகோடிக்கு மேல் இருந்தால் அது குற்றம். மற்றும் பதவி பறிக்கப்படும்

8.  இதன்படி புதிதாக அரசு வேலைக்கு ஆள் எடுக்கும் போது தற்போதுள்ள கல்விதகுதி, உடற்தகுதி,    எழுத்துதேர்வு தகுதி, ஜாதி தகுதி,  பிற சிறப்பு தகுதி(வாரிசு தகுதி, தனியார் துறை அனுபவம், விளையாட்டு வீரர்கள்... )   மட்டும் இல்லாமல் கீழ்கண்ட புதிய  தகுதியும் கணக்கில் கொள்ளட்டும்.

a.   ஒருகோடிக்கு மேல் குடும்ப சொத்து அல்லது வருமானம் இருக்ககூடாது.

b.  குழந்தைகள் உள்ளவர்களுக்கு முன்னுரிமை

c.  இதுவரை அரசு  வேலை இல்லாத குடும்பத்தில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை.

d.ஏற்கனவே கணவன் அல்லது மனைவி யாராவது ஒருவர் மத்திய மாநில அரசு வேலையில் இருந்தால் மற்றவர் அரசு வேலைக்கு விண்ணப்பிப்பதே குற்றம்

f. கிராமத்தில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை

g. வேலைக்கு சேர்ந்தவர்கள் எந்தெந்த தகுதி அடிப்படையில் சேர்க்கப்பட்டார் என்ற விவரம் ஒளிவுமறைவின்றி தனியாக  வெப்சைட்டில் பொதுமக்கள் பார்வைக்கு தெரியபடுத்த படும்.,

h. ஒப்பந்த தொழிலாளர் மற்றும் குழந்தைகள் உள்ள விதவை பெண்களுக்கு முன்னுரிமை

இப்படிப்பட்ட குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்னும் உன்னதமான திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம்  கீழ்கண்ட் நன்மைகள் நடைபெறும்

a. குடும்பத்தில் ஒருவருக்கு கட்டாயம் அரசு வேலை கிடைக்கும்.

b. சமூகத்தில் குற்றங்கள் குறையும்

c. குடும்பத்தில் ஒருவர் அரசு வேலை செய்யும்போது அரசின் மற்ற திட்டங்களை மிக எளிதாக அவர் குடும்ப உறுப்பினர்களுக்கு தெரியபடுத்துவார்

d.  குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே அரசு வேலை என்பதால்  , அரசியல் மற்றும் பண பலத்தால் ஒரே குடும்பத்தில் அதிக அரசு வேலை பெறுவோர் வேலை பறிக்கப்படும். அந்த பதவி மற்ற ஏழை குடும்பத்திற்கு வழங்கப்படும்.

e. பணக்காரர்களுக்கு அரசு வேலை கிடையாது என்பதால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர குடும்பத்திற்கு அரசு வேலை கிடைக்கும். வாழ்வு மகிழ்ச்சியாகும்

f.  திருமணம் ஆகாத அரசு ஊழியர்  இரண்டு பேர் திருமணம் செய்யும்  போது யாராவது ஒருவர் அரசு வேலையை ராஜினாமா செய்ய வேண்டும் என்பதால் அந்த வேலை இன்னொரு குடும்பத்திற்கு கிடைக்கும்.

g. குழந்தைகள் உள்ளவர்களுக்கு புதிதாக அரசு பணியில் முன்னுரிமை என்பதால் அந்த குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாகும்

h. 30 வருடத்திற்கு மேல் அரசு பதவியில் இருக்ககூடாது என்பதால் வீணாக அரசு அதிகார சுகத்தை அனுபவிப்பவர்கள் பதவி பறிக்கப்படும். அந்த பதவி மற்ற ஏழை குடும்பத்திற்கு கொடுக்கபடும்

i. இதன்மூலம் தனியார் துறையில் குறைந்த ஊதியத்தில் அதிக நேரம் வேலை செய்யும் ஏழை, நடுத்தர குடும்ப உறுப்பினர்கள் பலகோடி பேருக்கு  அரசு வேலை கிடைக்கும்.

j. இதன் மூலம் இதுவரை அரசு வேலை இல்லாத குடும்பத்தில் உள்ளவர்களுக்கு அரசு வேலை கிடைக்கும்

k.  ஏற்கனவே உள்ள தகுதியோடு கூடுதலாக சில தகுதிகளை சேர்த்துள்ளதால் சமுக நீதிக்கு எந்த பாதிப்பும் இல்லை. அந்தந்த சமூகத்தில் உள்ள ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தில் உள்ளவர்களுக்கு கண்டிப்பாக அரசு வேலை கிடைக்கும்

i.  கிராமத்தில் உள்ளவர்களுக்கு அரசு  வேலை கிடைக்கும்

j. எந்தெந்த   தகுதி  அடிப்படையில் வேலைக்கு சேர்ந்தார் என்ற விவரம்  வெப்சைட்டில் வெளியிடுவதால் அரசை ஏமாற்றி யாரும்  அரசு வேலையில் தரமுடியாது. அப்படி சேர்ந்தாலும் அவர்கள்  மீது பொதுமக்கள் புகார் அளிக்க முடியும்.  ,

k. ஒப்பந்த தொழிலாளர்   மற்றும் குழந்தைகள் உள்ள விதவை வாழ்வு வசந்தமாகும்

தற்பொழுது அரசு வேலையில் ஏமாற்று சக்திகள் அதிக அளவில், பல்வேறு மறைமுக வழியில் புகுந்து கொண்டதால், வேலையே செய்யாமல்  ஒரு லட்சத்திற்கும் அதிகமான சம்பளம் வாங்குவதால் மற்றும் குறைவான அரசு வேலையே இருப்பதால், ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு அரசு வேலை என்பது எட்டாத கனியாகவும், நிறைவேறாத கனவாகவும் உள்ளது. இதனால் படித்த பல குடும்பம் பல ஆண்டுகளாக  ஏழ்மை நிலையில் உள்ளது. 

எனவே குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்னும் இந்த உயரிய திட்டம் செயல்படுத்தபடும்போது அனைத்து குடும்பமும் மகிழ்ச்சி அடையும்.   

       மொத்தத்தில்  அரசு வேலை என்பது ஏழை எளிய  நடுத்தர  மக்களின் வாழ்வாதாரத்தை உயர்துவதற்கும், லஞ்சம் ஊழல் இல்லாமல் நேர்மையாக பணி செய்வதற்கும் தான்.

பணக்காரர்களும், சொகுசு வாழ்க்கை வாழ்பவர்களும், அடிக்கடி போராட்டம் நடத்தி அரசை மிரட்டுபவர்களும், லஞ்சம் ஊழல் செய்பவர்களும், பரம்பரையாக அரசு பதவியில் இருப்பவர்களும், அரசை ஏமாற்றி குறுக்கு வழியில் வந்தவர்களும்    நீக்கபட்டால் அரசு அலுவலகம் சிறப்பாக இயங்கும்

மேலும் இத்திட்டத்தை தொடங்க நினைப்பது டெல்லியில் உள்ள ஏழை மக்களின் நாடிதுடிப்பை அறிந்த,  மக்களின் முதல்வர் திரு. கெஜ்ரிவால் அவர்கள். அவர் இரண்டு முறை முதல்வர் ஆனவர். இத்திட்டத்தை தொடங்கியதும் மூன்றாவது முறையாக அவரே முதல்வர் ஆவார்.

  இவரை போலவே மற்ற அனைத்து மாநிலங்களிலும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கொடுக்க வேண்டும் என்பது அனைவரின் பெரும் எதிர்பார்பாக உள்ளது. வாழ்க கெஜ்ரிவால். வளர்க அவரது புகழ். தொடரட்டும் அவர் மக்கள் பணி. இவர் இந்த திட்டத்தை தொடங்க இருக்கிறார் என்பது அவரது கட்சியினர் மூலம் பொதுமக்களுக்கு தெரியவந்தது. இதனால் அனைவரும் அவரை ஊடகம் மற்றும் சமுக வலைதளம் மூலம் தொடர்ந்து பாராட்டி வருகின்றனர்.
------------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
==================================================================


வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

19.7.20

Astrology: Quiz: புதிர்: 17-7-2020 தேதியிட்ட புதிருக்கான விடை!


Astrology: Quiz: புதிர்: 17-7-2020 தேதியிட்ட புதிருக்கான விடை!

கேட்டிருந்த கேள்வி இதுதான். ஒரு ஒரு பெண்மணியின் ஜாதகம் கீழே உள்ளது. பூராட நட்சத்திரம் துலா லக்கினம் தனுசு ராசி. அழகு, கல்வி , வேலை என்று எல்லா அமைப்புக்களும் ஒரு சேரப் பெற்றவர். 40 வயதாகியும் திருமணம் கூடிவராமல் போய் விட்டது. அவருக்கு தோதான வரன் அமையவில்லை. வெறுத்துப்போய் திருமணமே வேண்டாம் என்று கூறிவிட்டார். அதன்படி கடைசிவரை திருமணமும் செய்து கொள்ளாமல் முதிர் கன்னியாகவே காலத்தைக் கழித்துவிட்டார். ஜாதகப்படி என்ன காரணம்? ஜாதகத்தை அலசி அதற்கு மட்டும் பதிலைச் சொல்லுங்கள்!!! ” என்று கேட்டிருந்தேன்.

பதில்: லக்கினம் பாபகர்த்தாரி யோகத்தில் சிக்கி உள்ளது.ஒரு பக்கம் செவ்வாய். மறுபக்கம் சனி. 12ம் வீடு (அயன சயன போக பாக்கிய வீடு)  முழுமையாகக் கெட்டுள்ளது சூரியன், சனி மற்றும் கேதுவின் ஆதிக்கம் அங்கே! 2ல் செவ்வாய். விரும்பத்தக்க அமைப்பல்ல. 5ல் வியாழன் புத்திர பாக்கியத்திற்கு கேடானது. மேலும் செவ்வாயின் பார்வையும் குரு பகவானின் மேல் விழுகிறது. 7ம் வீட்டுக்கரனான செவ்வாய் அந்த வீட்டிற்கு எட்டில். அத்துடன் அவர் மீது சனீஷ்வரனின் பார்வை வேறு. அம்மணிக்கு திருமணம் கூடி வராததற்கு இந்த அமைப்புக்களே காரணம். அவற்றை மட்டும் இங்கே குறிப்பிட்டுள்ளேன்,

இந்தப் புதிரில்  14 அன்பர்கள் கலந்து கொண்டு தங்கள் கணிப்பை வெளியிட்டு உள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்.

அடுத்த வாரம் 24-7-2020 வெள்ளிக்கிழமை  அன்று வேறு ஒரு புதிருடன் மீண்டும் நாம் சந்திப்போம்!!!!

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
1
Blogger ஜகதீஸ்வரன் said...
ஜகதீஸ்வரன், கானாடுகாத்தான்: 2 7 8 ஆம் இடங்கள் பாதிப்பு. 7ஆம் அதிபதி தன் வீட்டுக்கு 8ல். 2ம் இடத்திற்கு பாபத்துவமான சனியின் பார்வை. 8ஆம் வீட்டுக்கு செவ்வாய் பார்வை. ராசிக்கு 2ஆம் அதிபதி சூரியன் மற்றும் கேதுவுடன் அஸ்தங்கம் மற்றும் கிரகணம். ராசிக்கு 7ஆம் வீட்டுக்கு சனி மற்றும் செவ்வாய் பார்வை.ராசிக்கு 8ஆம் அதிபதி தன் வீட்டுக்கு 6ல். 5ல் குரு கார்கோ பால் நாஸ்தி. 5 ஆம் அதிபதி சனி தன் வீட்டுக்கு 8ல் சூரியன் மற்றும் கேதுவுடன். கிரகணம் மற்றும் அஸ்தங்கம். ராசிக்கு 5ஆம் அதிபதி தன் வீட்டுக்கு 8ல். கடுமையான களத்திர மற்றும் புத்திர தோஷம்.
Friday, July 17, 2020 10:29:00 AM
--------------------------------------------------------------
2
Blogger P. CHANDRASEKARA AZAD said...
வணக்கம்..
தாங்கள் கேட்டு இருந்த முதிர் கன்னியின் திருமணம் நிகழா அமைப்பிற்கான காரணங்கள்
துலா லக்கின ( வர்கோத்தம லக்கின ) பூராட நக்ஷத்திர தனுசு ராசி ஜாதகியின் திருமணத்திற்கு இரண்டாம் இடம், ஏழாம் இடம், ஒன்பதாம் இடம் போன்றவற்றை பார்க்க வேண்டும்.
இந்த அமைப்பின் படி ஜாதகியின் இரண்டாம் இடத்து அதிபதி மற்றும் ஏழாம் இடத்து அதிபதி செவ்வாய் இரண்டிலேயே சொந்த வீட்டில் அமர்ந்து இருந்தாலும் மாந்தியுடன் கூடியதால் மாசாகி விட்டார் அல்லது கெட்டு விட்டார். மேலும் இரண்டாம் இடத்து செவ்வாய் யை சனி தனது மூன்றாம் பார்வையால் பார்த்து திருமண அமைப்பை மேலும் பலமில்லாமல் செய்கிறார்.
மேலும் ஒன்பதாம் இடத்து அதிபதியும். பாக்கிய அதிபதியான புதன் பாதக அதிபதியின் வீட்டில் அதாவது சிம்மத்தில் சூரியனின் வீட்டில் அமர்ந்து , ஆறாம் அதிபதி குருவின் நேரடி பார்வையில் உள்ளதால் திருமணம் கைகூடி வரவில்லை. மேலும் சுக்கிர தசையும் இவரின் இளமை காலத்திலேயே முடிந்து விட்டதால் திருமண அமைப்பிற்கான தசையும் நேரமும் கை கூடி வரவில்லை. நவாம்சத்திலும் சுக்கிரன் பனிரெண்டில் அமர்ந்து உள்ளார்.
மேலும் இவரின் இருபத்தியேழு வயதில் வந்த செவ்வாய் தசையும் , அதற்கு பின்னர் வந்த ராகு தசையும் திருமண பந்தத்தை ஏற்படுத்த வில்லை . ஏனென்றால் துலா லக்கினத்திற்கு உரிய சுப கிரக தசை களான சுக்கிரன் ( பத்து வயதிலேயே முடிந்து விட்டது ) , சனி தசை அவரின் அறுபத்தி எட்டு வயதிற்கு பிறகு தான் வரும். புதன் தசையும் அவரின் திருமண வயதில் வர வில்லை
நன்றி
இப்படிக்கு
ப. சந்திரசேகர ஆசாத்
கைபேசி : 8879885399
Friday, July 17, 2020 10:50:00 AM
---------------------------------------------------------------
3
Blogger csubramoniam said...
ஐயா கேள்விக்கான பதில்
1 .குடும்ப வாழ்க்கைக்கான இரண்டாம் இடத்தில செவ்வாயும் மாந்தியும்
திருமணத்திற்கு எதிரான அமைப்பு
2 .செவ்வாயின் எட்டாம் பார்வை மாங்கல்யஸ்தந்தின் மேல்
3 .ஆறாம் அதிபதி குருவின் நேரடி பார்வையில் எட்டாம் வீடும் எட்டு மற்றும் பனிரெண்டுக்குரிய புதன் லக்கினாதிபதி ,எட்டாம் அதிபதி சுக்கிரனின் மீது 4 .லௌகீக வீடான பனிரெண்டில் மேல் சனியும் கேதுவும்
,ஆகவே ஜாதகிக்கு திருமணம் மறுக்க பட்டுள்ளது
தங்களின் பதிலை ஆவலுடன்
நன்றி
Friday, July 17, 2020 11:37:00 AM
--------------------------------------------------------------------
4
Blogger sundari said...
vanakkam sir,
7th house owner mars in 2nd house with mandhi mandhi spoiled her family life due to 2nd house family house then mars is getting sani vision lagana sukuran combination with mercury mercury is 12th house owner that is why like this unmarried status sir.she is most beautiful person
thula lagana and pooradam sukura star.
Friday, July 17, 2020 3:29:00 PM
---------------------------------------------------------------------
5
Blogger kmr.krishnan said...
ஜாதகி 20 செப்டம்பர் 1950ல் காலை 8 மணியளவில் பிறந்தவர்.பிறந்த இடம் சென்னை என்று எடுத்துக்கொண்டேன்.
ராசிக்கட்டத்தில் லக்கினத்திற்கு 7ம் இடத்திற்குரிய செவ்வாய் இரண்டாம் இடத்தில் மாந்தியுடன் அமர்ந்தார். எனவே குடும்பம் அமைவதில் சிக்கல் இருந்தது.7ம் அதிபதி தன் வீட்டிற்கு 8ல் மறைந்தார். அது சொந்த வீடாயினும் 8ம் வீடு என்பது திருமணத்தடை ஏற்படுத்தியது.மேலும் சனியின் பார்வை 7ம் வீட்டுக்காரனான் செவ்வாய் மீது விழுந்தது.
ஜாதகிக்குக் குழந்தை பாக்கியமே கிடையாது 5ல் காரகன் குரு. 5ம் வீட்டுக்காரன் சனி 12ல் மறைந்தான் பகைவனுடன் கூட்டு.கேதுவுடனும் கூட்டு. எனவே படுக்கை சுகம் மறுக்கப்பட்டது. திருமணமும் இல்லை குழந்தையும் இல்லை.
நவாம்சத்தில் 7க்குடைய செவ்வாய் 10ல் நீசம் அடைந்து சனி, மாந்தியின் பார்வையால் பாதிக்கப்பட்டார்.திருமணகார‌கன் சுக்ரன் நீசம் பெற்று 12ல் மறைந்தார் எனவே படுக்கை சுகம் இல்லை
இக்காரணங்களால் ஜாதகி முதிர்கன்னியாகவே நின்றார்.
Friday, July 17, 2020 6:38:00 PM
------------------------------------------------------------------
6
Blogger Kannan L R said...
ஐயா வணக்கம்
**லக்கின அதிபதி 12 ஆம் அதிபதி கூட்டு
**7 ஆம் அதிபதி அந்த இடத்திற்கு 8 ல் மாந்தி வுடன் கூட்டு
***2 ல் மான்தி குடும்ப ஸ்தானம் பாதிப்பு
**சுக்கிரன் ___12 ஆம் அதிபர் உடன் கூட்டு__ மேலும் பகை ஸ்தானத்தில்.
வழு இழந்து விட்டார்.
**7 ஆம் அதிபதி, 2 ஆம் அதிபதி செவ்வாய யை சனி பார்வையால்
மேலும் வழு இழக்கிறது.
நவாம்சத்தில்....
7 ஆம் அதிபதி. நீசம்
ஆகிய காரணத்தால் திருமணதடை
ஆகிறது
நன்றி ஐயா
கண்ணன்
Friday, July 17, 2020 7:12:00 PM
--------------------------------------------------------
7
Blogger K.T.Vijayan Bharathi said...
1. 7th lord Mars in 2nd house along with Mandi and has 3rd aspect of Sani
2. Same Mars in Navamsa is in Debilitated house and also has 7th aspect of Sani / Mandi, Sani is strong in own house in Navamsa
3. both ways Mars got weak so marriage got postponed
4. Kalatra karaka / lagna lord Venus in enemy house in Rasi and debilitated house in navamsa
Think Jupiter go char gave guru's grace very late and now he is crossing Moon sign, probably that too brought late marriage.
other notes: The native will be blessed by Guru, will Earn high income from high expertise on luxurious fields. lagna lord Venus and Mercury in 11, getting Gurus aspect from 5th house.
Friday, July 17, 2020 10:40:00 PM
--------------------------------------------------------
8
Blogger RAMVIDVISHAL said...
DOB : 20/09/1950 8:30 AM
காரணங்கள்:
1. செவ்வாய் தோக்ஷம் (2ம் இடத்தில் செவ்வாய்)
2. சனி பார்வை 2ம் இடத்திற்கு (3ம் பார்வை)
3. கிரக தோக்ஷம் (சூரியன்/ சந்திரன் உடன் ராகு/கேது இணைவு) 12ம் இடத்தில் சூரியன் / கேது
4. குடும்ப ஸ்தானாதிபதி/7ம் அதிபதி - செவ்வாய் அம்சத்தில் நீசம்
5. லக்னாதிபதி/மாங்கல்ய ஸ்தானாதிபதி - சுக்கிரன் அம்சத்தில் நீசம் மேலும் அம்ச லக்னத்திற்கு 12ம் இடத்தில் உள்ளது
6. குரு பார்வை சுக்கிரன் மேல் உள்ளதால் ஜாதகர் அழகு. ஆனால் குரு புத்திர ஸ்தானத்தில் இருப்பதால் புத்ர பாக்யம் குறைவு.
Saturday, July 18, 2020 10:07:00 AM
---------------------------------------------------------
9
Blogger C Jeevanantham said...
Dear Sir,
The given horoscope 7th lord mars is in 2nd along with maandhi. 2nd lord and 7th lord both are same. Since saturn aspects from 12th place to 2nd place, the 2nd bhava is spoiled.
Maandhi also with mars spoiled the 2nd bhava.
7th lord is spoiled with maandhi. Also sani's 3rd aspect spoiled the 2nd bhava.
Lagna is in papakarthari yogam.
However, lagna lord is in 11th place helped the native for living. So she lived alone and spend her life.
Thanking you sir,
Yours sincerely,
C. Jeevanantham.
Saturday, July 18, 2020 11:17:00 AM
----------------------------------------------------------
-----
Blogger SUYASOTHANAI said...
ஐயா,
நான் உங்கள் பழய மாணவன்
அந்த பெண்னின் பிறந்த நேரம் தேதி நேரம் ஊர் கொடுத்தால் முயற்ச்சி செய்யலாம்
நன்றி
jawahar .p
Saturday, July 18, 2020 12:28:00 PM
----------------------------------------------------------
10
Blogger Ram Venkat said...
வணக்கம்.
ரிசப லக்கினம், தனுசு ராசி ஜாதகி.
1) லக்னாதிபதியும்,களத்திர காரகனுமான சுக்கிரன், நவாம்சத்தில் நீசம் பெற்று 11மிடமான சிம்மத்தில் அமர்ந்து 12ம் அதிபதி வக்கிர புதனுடன் கூட்டணியிலுள்ளார். அவர் மேல் ஆறாமதிபதி வக்கிர குருவின் பார்வையுள்ளது. லக்கினம் வர்கோத்தமம் பெற்றிருந்தாலும், கத்திரியின் பிடியில் வலுவிழந்துள்ளது.
2) குடும்பாதிபதியும், களத்திராதிபதியுமான செவ்வாயும் நவாம்சத்தில் நீசமடைந்து இரண்டில் அமர்ந்துள்ளார். அவருடன் மாந்தியின் கூட்டு வேறு. செவ்வாயின் மேல் 12ல் அமர்ந்துள்ள சனி பகவானின் 3ம் தனிப்பார்வையுமுள்ளது.
3) சயன சுக ஸ்தானமான 12ல் சனி+கேது+சூரியனின் கூட்டணி. ‌ஏழாமிடத்திற்கும், அதன் அதிபதி செவ்வாய்க்கும் வேறு நல்ல கிரகத்தின் பார்வையுமில்லை.
மேற்கண்ட காரணங்களால், அவருக்கு 40 வயதாகியும் திருமணம் கூடிவராமல் போய் விட்டது.கடைசிவரை திருமணமும் செய்து கொள்ளாமல் முதிர் கன்னியாகவே காலத்தைக் கழித்துவிட்டார்.
Saturday, July 18, 2020 1:13:00 PM
-------------------------------------------------------
11
Blogger seenivasan said...
Dear sir, My reply is under
1.Seventh lord is sitting in 8th place from seventh place.
2. Non of planets viewing 7th house.
3.lagna lord is in enemy`s place even though it is in 11 th house.
hence no marriage
Saturday, July 18, 2020 1:25:00 PM
---------------------------------------------------------
12
Blogger ravichandran said...
Respected Sir,
Happy afternoon,
My answer for today's quiz:
The native of the horoscope has not married due to the following reasons:-
1. 7th lord is in 8th place as well as Saturn having aspects over 7th house from 12th house.
2. 7th house or 7th house lord hasn't any good planet aspects.
3. SATURN AND SUN ASSOCIATED IN 12TH HOUSE. SO SHE HAS NOT BLESSED CONJUGAL PLEASURE.
4. DASA IS NOT SUPPORTED FOR HER (RAGHU DASA)
5. IN NAVAMSA, 7TH HOUSE LORD IS DEBILITATED.
Thanking you,
With regards,
Ravi-avn
Saturday, July 18, 2020 2:36:00 PM
---------------------------------------------------------------------
13
Blogger K. Ravi said...
ஐயா
ரிஷப லக்கின ஜாதகம் என்கிறீர்கள். ஆனால் இது துலா லக்கின ஜாதகம்.
ஜாதகம் மாறவில்லை என நினைக்கிறேன். எழுத்து பிழையாக யிருக்கலாம்
இந்த துலா லக்கின ஜாதகத்தை அலசுகையில்
ஏழாம் வீட்டிற்குரிய செவ்வாய் இரண்டில் மாந்தியுடன் சேர்க்கை
ஏழாம் வீடும் இரண்டாம் வீடும் கேட்டிருக்கிறது
களத்திர காரகன் சுக்கிரன் லாபஸ்தானத்தில் அனால் பகை வீட்டில்
திருமண வயதில் வந்த திசைகளும் கைகொடுக்கவில்லை.
எனவே திருமணம் மறுக்கப்பட்டிருக்கலாம்
K. Ravi
Saturday, July 18, 2020 4:23:00 PM
-----------------------------------------------------
14
Blogger seethalrajan said...
குருவிற்க்கு வணக்கம்,
இந்த ஜதகத்தில் சனி 12ல் அமர்ந்து கடுமையான பாபத்துவம் பெற்று 2ம் வீட்டையும், அதன் அதிபதியையும் பார்கிறார், 7ம் அதிபதி அதற்க்கு 8ல் மறைவு, சுக்கிரன் பாதக இடதில். இளைமையில் நடைபெற்ற தசை அனைதும் அவ யொக சூரிய, சந்திர, செவ்வாய், ராகு. ஆகவே திருமனம் இல்லை. நன்றி.
Sunday, July 19, 2020 4:22:00 AM
=================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

17.7.20

Astrology: Quiz: புதிர்: முதிர் கன்னியின் ஜாதகம்!


Astrology: Quiz: புதிர்: முதிர் கன்னியின் ஜாதகம்!

ஒரு பெண்மணியின் ஜாதகம் கீழே உள்ளது. பூராட நட்சத்திரம் துலா லக்கினம் தனுசு ராசி. அழகு, கல்வி , வேலை என்று எல்லா அமைப்புக்களும் ஒரு சேரப் பெற்றவர். 40 வயதாகியும் திருமணம் கூடிவராமல் போய் விட்டது. அவருக்கு தோதான வரன் அமையவில்லை. வெறுத்துப்போய் திருமணமே வேண்டாம் என்று கூறிவிட்டார். அதன்படி கடைசிவரை திருமணமும் செய்து கொள்ளாமல் முதிர் கண்ணியாகவே காலத்தைக் கழித்துவிட்டார். ஜாதகப்படி என்ன காரணம்? ஜாதகத்தை அலசி அதற்கு மட்டும் பதிலைச் சொல்லுங்கள்!!!

சரியான விடை 19-7-2020 ஞாயிற்றுக்கிழமையன்று வெளியாகும்

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
கேள்விக்கு உரிய ஜாதகம்:

====================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

16.7.20

கவியரசர் கண்ணதாசன் பெண்களின் விரகதாபத்தினை குறித்து எழுதும்போது காட்டிய விவேகம்!!!!


கவியரசர் கண்ணதாசன் பெண்களின் விரகதாபத்தினை குறித்து எழுதும்போது காட்டிய விவேகம்!!!!

கவியரசர் கண்ணதாசன் மறைந்து சிலநாட்களுக்குப் பின், ஒரு கச்சேரிக்கான விமர்சனத்தில், தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார் கலை விமர்சகர் சுப்புடு. "கண்ணதாசனை தமிழில் புதிய சாகித்யங்கள் நிறைய எழுதுமாறு நான் கேட்டுக் கொண்டிருந்தேன். செய்து தருவதாக சொல்லியிருந்தார். அதற்குள் மறைந்து விட்டாரே' என்று ஆதங்கப்பட்டிருந்தார் அவர்.

தமிழ் இசைமரபுக்கு மிகவும் புதிதான அம்சங்களை திரைப்பாடலிலேயே செய்தவர் கண்ணதாசன் என்பதால் தான் அப்படிக்கேட்டுக் கொண்டதாக சொன்ன சுப்புடு, "விரக தாபம் என்கிற விஷயம் இசைப்பாடல்களில் எழுதப்பட்டு வந்த விதத்தையும் கண்ணதாசன் கையாண்ட புதுமையையும் மேற்கோள் காட்டியிருந்தார்.

"காலம் காலமாகவே தமிழில் விரகதாபம் என்றால் பால் கசக்கும் பழம் புளிக்கும். இதையே வைத்துக் கொண்டு மன்னன் எப்படி மாற்றுகிறார் பாருங்கள்.

"பாலிருக்கும் பழமிருக்கும் பசியிருக்காது!
பஞ்சணையில் காற்று வரும் தூக்கம் வராது".
மேற்கண்ட வரிகளை இதயம் பேசுகிறது இதழில் சுப்புடு எழுதியதாக நினைவு. வரிகள் நினைவிருக்கின்றன. வருடமோ இதழோ நினைவிலில்லை . அப்போது நான் பள்ளி மாணவன்.

"கட்டவிழ்ந்த கண்ணிரண்டும் உங்களைத் தேடும்-பாதிக்
கனவுவந்து மறுபடியும் கண்களை மூடும்
பட்டுநிலா வான்வெளியில் காவியம் பாடும்-கொண்ட
பள்ளியறைப் பெண்மனது போர்க்களமாகும்"

என்று நயமும் நளினமுமாய் நகரும் அந்தப் பாடல். கண்ணதாசன் பெண்களின் விரகம் குறித்து எழுதும்போது சில அற்புதமான நியதிகளைக் கையாள்கிறார். வேட்கை மீதூற பெண் பாடுகிற போதுகூட அவள் காமுகியாக சித்தரிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதில் அவர் காட்டும் கவனம் நுட்பமானது "யார் நீ" என்றொரு படம். தான் கைப்பிடித்தவள் பெண்ணா பேயா என்று தெரியாத குழப்பத்தில் நாயகன் விலகியே இருக்கிறான். அவனை மெல்ல ஆசுவாசப்படுத்தி அணைத்துக் கொள்ள முயல்கிறாள் நாயகி

"பொன்மேனி தழுவாமல்
 பெண்ணின்பம் அறியாமல்
 போக வேண்டுமா
 கண்ணோடு கண்சேர
 உன்னோடு நான்சேர
 தூது வேண்டுமா"
 என்பது பல்லவி.

இதில் நாயகி மட்டுமே பாடுகிறாள்.ஆசைக்கும் அச்சத்திற்கும் இடையில் நாயகன் தடுமாறுகிறான்.

"இரவென்பதே நம்வாழ்விலே இல்லாமல் போகுமோ
உறவென்பது உன்நெஞ்சிலே இன்றேனும் தோன்றுமோ"

சராசரியான பாடலாசிரியர்களாக இருந்திருந்தால் அடுத்த வரியில் போதையை ஏற்றியிருப்பார்கள். ஆனால், பெண்மையின்மீது கவிஞருக்கிருக்கும் மரியாதை கண் மலர்த்துகிறது.
"நீசொல்வதை நான்சொல்வதா இது நீதியாகுமா?
 தாளாத பெண்மை தீண்டும்போது மௌனமாகுமா?
 என்று பாடவைத்து விடுகிறார்.

விரகம் வளர்க்கும் சூழல் என்றாலும் அடுத்த சரணத்தில் காதலின் தளும்பலையே கவிஞர் பாடலாக்குகிறார்,

"மழைமேகமே என் தீபமே என்காதல்தெய்வமே
மறுவாழ்விலும் உன்னோடுநான் ஒன்றாக வேண்டுமே
நீயென்பதும் நானென்பதும் ஒருராகம் அல்லவா..
நாமொன்று சேர்ந்து பாடும்போது வார்த்தை வேண்டுமா"
என்று காமக் கடலில் இறங்கிய பாட்டு காதல் கரையில் சேர்கிறது.
இந்த நாசூக்கு பாரதியிடம் உண்டு. குயில்பாட்டில் குயில் காளையைக் காதலிக்கும்.

"காமனே மாடாகக் காட்சிதரும் மூர்த்தியே
பூமியிலே மாடுபோல் பொற்புடைய சாதியுண்டோ?
காளையர்தம் முள்ளே கனம் மிகுந்தீர்,ஆரியரே!
நீள முகமும்,நிமிர்ந்திருக்கும் கொம்புகளும்
பஞ்சுப் பொதிபோல் படர்ந்த திருவடிவும்
மிஞ்சு புறச்சுமையும் வீரத் திருவாலும்...'
என்றெல்லாம் நீளப் புகழ்ந்துவிட்டு,

"காளை யெருதரே,காட்டிலுயர் வீரரே
தாளைச் சரணடைந்தேன் தையலெனைக் காத்தருள்வீர்
காதலுற்று வாடுகிறேன்!காதலுற்ற செய்தியினை
மாதருரைத்தல் வழக்கமில்லை யென்றறிவேன்.
ஆனாலும் என்போல் அபூர்வமாங் காதல்கொண்டால்
தானா வுரைத்தலன்றிச் சாரும் வழியுளதோ?"

என்று அதற்கான நியாயத்தையும் கற்பிக்கும். காதலை வெளிப்படுத்தும்போதுகூட அதில் கவனமாயிருக்கும் கலையை தன் நாயகியருக்கு கவிஞரும் கற்றுக் கொடுக்கிறார். (இடையில் ஒரு செய்தி .கவிஞருக்கு பாரதியின் குயில்பாட்டில் மிகுந்த ஈடுபாடு உண்டு. பாரதி குயில்பாட்டை எழுதும்போது என்ன மனநிலையில் இருந்திருப்பான் என்றொரு கவிதையில் சொல்கிறார்.

"ஓராயிரங் குயில்கள்
உட்காரும் சோலையிலே
ஓர் குயிலைக் கண்டானடி-பாரதி
உடன்குயில் ஆனானடி"
என்பது கவிஞரின் கவிதை)

நாயகியும்,நாயகனும் தங்களுக்குள் ஏற்படும் பிணக்கை பிள்ளையிடம் பாட்டுப்பாடி தீர்த்துக் கொள்கிறார்கள். காத்திருந்த கண்கள் படத்தில்

"வளர்ந்த கலை மறந்துவிட்டாள் கேளடா கண்ணா-அவள்
வடித்துவைத்த ஓவியத்தைப் பாரடா கண்ணா
என்ற பாடல்.அதில் நாயகன் கேட்பான்,

தினம்தினம் ஏன் கோபம்கொண்டாள் கூறடா கண்ணா-அவள்
தேவையென்ன ஆசையென்ன கேளடா கண்ணா!
அங்கே இருப்பது குழந்தையும் கணவனும்தான்.ஆனால் நாயகி என்ன சொல்கிறாள்?

நினைப்பதெல்லாம் வெளியில்சொல்ல முடியுமா கண்ணா-அது
நீபிறந்த பின்புகூட இயலுமா கண்ணா!
இது, கதாபாத்திரத்தின் கனத்தைக் கூட்ட கவிஞர் சேர்க்கும் தங்கம்.

தமிழிலக்கியத்தில் காலங்காலமாகவே தலைவி - தோழி உரையாடல் மரபு உண்டு.தலைவி என்றால் தோழி முக்கியம் என்பதை
இப்போதுகூட தமிழ்நாட்டில் நாம் பார்க்கலாம். தன் காதல் தலைவனைப் பிரிந்திருக்கும் தலைவியும் தோழியும் உரையாடிக் கொள்வதாக ஒரு பாடலை,கவிஞர் பச்சை விளக்கு படத்தில் எழுதியிருப்பார்.

தூது சொல்லவொரு தோழி இல்லையெனத்
துயர் கொண்டாயோ தலைவி
துள்ளும் காற்றுவந்து மெல்ல சேலைதொட
சுகம் கண்டாயோ தலைவி
என்று கேட்பாள் தோழி.

அன்று சென்றவனை இன்னும் காணவில்லை
என்ன செய்வதடி தோழி
தென்றல் தொட்டதடி திங்கள் சுட்டதடி
கண்கள் வாடுதடி தோழி
என்பாள் தலைவி.இந்தப் பாடலின் இரண்டாவது சரணத்திற்கு காப்பிய அந்தஸ்தே கொடுக்கலாம்.

முத்தும் மணியும் கருகிடும் வண்ணம்
மோகத்தில் ஆழ்ந்தாள் தலைவி
என்று தோழி சொன்னதுதான் தாமதம்.....
முத்தத்தை மறந்தவள் சித்தத்தில் இருந்ததை
மௌனத்தில் அறிந்தாள் தோழி
என்று நாயகி பாடுவாள்.

தன் விரகத்தை அவள் மறந்தும் தன் தோழியிடம்கூட சொல்லவில்லையாம்.
தோழி தானாகக் கண்டுபிடித்துவிட்டால் அதற்கு தலைவி பொறுப்பில்லையல்லவா!!
கோவலனைப் பிரிந்திருந்த கண்ணகி தன் பிரிவாற்றாமையை தோழி தேவந்தியிடம் கூடப்பேசவில்லை. சோமகுண்டம், சூரியகுண்டம்
ஆகியவற்றில் நீராடினால் கணவன் திரும்பக்கூடும் என்று பரிகாரம் சொல்கிற தோழியிடம்,"பீடன்று" என்று மறுத்துவிடுகிறாள் கண்ணகி. அப்படி பரிகாரம் செய்தால் தான் துன்பத்தில் இருப்பது தோழிக்கும் ஊருக்கும் தெரிந்துவிடும் என்பது கண்ணகியின் எண்ணம். இந்த நினைவு நமக்கே வருகிறபோது கவிஞருக்கு வராதாஎன்ன?பாடல் தொடர்கிறது.

காவிரிக்கரையின் ஓரத்தில் இவ்விதம்
காத்திருந்தாள் அந்தத் தலைவி
காவிய நாயகன் காதலன் வணிகன்
கோவலன் என்பாள் மனைவி!!

பெண்மையில் இன்னொரு வகையும் உண்டு. வாழ்வையே குடும்பத்திற்காகக் கரைத்துவிட்டு தன் ஆசைகளை அவித்துக் கொண்டு
தவமிருக்கும் பெண்கள். இவர்களுக்கெல்லாம் முன்னோடி ,பெரிய புராணத்தில் வருகிற திலகவதியார். திருநாவுக்கரசரின் தமக்கை.
நிச்சயிக்கப்பட்ட கணவர் போரில் மாள்கிறார். அந்த அதிர்ச்சியில் பெற்றோரும் மறைகின்றனர். இறந்து போகலாம் என்றால் சிறுவனாகிய தம்பியின் கதி? எனவே திருமணமே செய்து கொள்ளாமல் வீட்டிலேயே தவம்புரிகிறார் திலகவதியார். தம்பி வாழவேண்டும் என்ற தயையுணர்வே காரணம். அதை சேக்கிழார் சொல்கிறார்:

"தம்பியார் உளராக வேண்டுமென வைத்த தயா
உம்பர் உலகு அடையவுறும் நிலைவிலக்க உயிர்தாங்கி
அம்பொன்மணி நூல்தாங்காது அனைத்துயிர்க்கும் அருள்தாங்கி
இம்பர்மனைத் தவம்புரிந்து திலகவதியார் இருந்தார்"

கவிஞர் வாழ்ந்த இருபதாம் நூற்றாண்டிலும் தன்னையே தன் குடும்பத்திற்காக அர்ப்பணித்த முதிர்கன்னிகள் உண்டு. அவர்கள் திலகவதியார்போல் ஆசையை அவித்தவர்களில்லை. ஆனால் அவர்கள் மனதில் ஆசையே கிடையாது என்று கருதி குடும்பத்தினர் தங்கள் ஆசைகளுக்கான வாகனமாய் அவர்கள் உழைப்பை உறிஞ்சுகின்றனர். அவர்கள் மனதில் இருப்பதை அறிந்தவர்கள்யார்? ரவி அறியாததையும் கவி அறிவான் என்றொரு மலையாளப் பழமொழியைக் கேள்விப்பட்டதுண்டு. அப்படியொரு பெண்ணைப்பற்றிய கவிஞரின் பாடல் இது:

கண்ணிலே என்ன உண்டு கண்கள் தானறியும்
கல்லிலே ஈரமுண்டு கண்களா அறியும்?
என்மனம் என்னவென்று என்னையன்றி யாருக்குத் தெரியும்?

இந்த மூன்று வரிகளில், அந்தரங்க வலி,தனிமையின் அழுத்தம், நிராதரவான நிலை எல்லாம் வெளிப்படுகின்றன.
அந்தப் பெண்ணுக்குள்ளும் ஒரு நெருப்பு இருக்கிறது...

"நெருப்பென்று சொன்னால் நீரிலும் அணையும்
நீரென்று சொன்னால் நெருப்பிலும் வேகும்
நான்கொண்ட நெருப்பு அணைக்கின்ற நெருப்பு
யாரணைப்பாரோ இறைவனின் பொறுப்பு"

கனலும் தவிப்பையும் காத்திருப்பையும் இதைவிட அழகாய் சொல்ல முடியாது. அதேநேரம் அந்தப்பெண்ணை இந்தத் தனிமை
பலவீனப்படுத்தவில்லை.அனுபவங்களும், காயங்களும்அந்தப்பெண்ணுக்குள் ஒரு ஞானத்தை வளர்த்திருக்கிறது.மேனி அழகாய் இருந்தாலும் ஞானம் உள்ளே ஒளிர்கிறது.ஞானிகள் தடுமாறினாலும் தான் தடுமாற மாட்டேன் என்று தருக்கிச் சொல்கிறாள் அவள்.

"சேலைக்குள் ஆடும் மங்கையின் மேனி
மேனிக்குள் ஆடும் மனம் எனும் ஞானி
ஞானியின் மனமும் ஆசையின் கேணி
நானொரு ராணி பெண்களில் ஞானி"

அரசர்களில் ஞானி,ஜனகர் என்கிறார்கள். ஜனரஞ்சகமான நாயகி ஒருத்தியை அந்த உயரத்திற்கு உயர்த்திவிடுகிறார் கவிஞர்..
-----------------------------------------------------
படித்தேன்: பகிர்ந்தேன்!!!
அன்புடன்
வாத்தியார்
============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

15.7.20

கொரோனா வைரஸை ஒழிக்க வீட்டு மருந்து!

கொரோனா வைரஸை ஒழிக்க வீட்டு மருந்து!

கோவை E S I  மருத்துவமனையில் 141/141 குணம் அடைந்து வீடு திரும்பினது எப்படி?

           *கொஞ்சம் கருப்பு மிளகு தூள், எலுமிச்சை சாறு, இஞ்சி துண்டு மூன்றையும் தண்ணீரில் கலந்து அந்த தண்ணீரை கொதிக்க வைத்து குடியுங்கள்.

 இதுபோல்  ஒருநாளைக்கு  2, 3 முறை குடித்து வந்தால் வைரஸ், பேக்டீரியா தொற்றால் நமக்கு எவ்வித பாதிப்பும் வராது.

நாட்டு மருந்து கடைகள் எல்லாம் மூடி இருக்கே,  கபசுரம் கிடைக்கலையே,? நிலவேம்பு கிடைக்கலையேன்னு யாரும் கவலைப்பட வேண்டாம்.!!!

 இஞ்சி, கருமிளகு, எலுமிச்சை சாறு மூன்றையும் நீரில் கலந்து அந்த நீரை கொதிக்க வைக்கும் பொழுது விசேஷமான ஒரு கெமிக்கல் ரியாக்க்ஷன் உருவாகும்.

 அந்த புதிய வேதியல் மாற்றம் எத்தகைய மோசமான வைரஸ், பேக்டீரியாவையும் கொன்று விடும். தினம், தினம் தனது மூலக்கூறு வடிவத்தை மாற்றிக் கொள்ளும் கொரோனா எனும் இந்த மாயாவியை எவ்வாறு அழிப்பது என மருத்துவ உலகம் விழி  பிதுங்கி நிற்கிறது.

அத்தகைய இந்த கொரோனா மாயாவி  போல் எத்தனை  புதிய மாயாவிகள் எதிர்காலத்தில் வந்தாலும் அனைத்து மாய அசுரர்களையும் அழிக்கும்  மும்மூர்த்திகள் தான் இந்த இஞ்சி, மிளகு, எலுமிச்சை.

மூன்றையும் தனித்தனியாக சாப்பிடாமல் இதுபோல் ஒன்றாக  சேர்த்தால் தான் முழுமையான  பலன் கிடைக்கும்....*

         *இஞ்சி, எலுமிச்சை, கருப்பு மிளகு எல்லாம் சர்வ சாதாரணமாக நம்ப வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் அண்ணாச்சி கடைகளில் கிடைக்கும்.

 மேலும் கொரோனா போன்ற வைரஸ்களை அழிப்பதில் கபசுரத்தை காட்டிலும், நிலவேம்பை காட்டிலும் சிறந்தது  இந்த இஞ்சி, எலுமிச்சை, கருமிளகு குடிநீர்....*

 உங்கள் வீட்டு சமயலறையில் இருக்கும் அஞ்சறை பெட்டியை முதலில் திறந்து பாருங்கள். இஞ்சி, மிளகு, எலுமிச்சை இந்த மூன்றும் இப்பகூட உங்க வீட்டில் இருக்கும்...*

        *தமிழர்கள் வீட்டில் இருக்கும் ஒவ்வொரு அஞ்சறை பெட்டியும் ஒரு  மருத்துவமனைக்கு சமானம்.இந்த அஞ்சறைப் பெட்டியை அஞ்சறைப் பெட்டியில் என்னென்ன பொருட்கள் இருக்க வேண்டும் என்பதை  தீர்மானித்தவர் தமிழ் மக்களின் ஆதிமூல முதல் குரு, சித்தர்களின் தலைவர் அகத்தியர்!!!அப்படி அவர் தீர்மானித்து பல நூற்றாண்டுகள் ஆகிவிட்டன.

அதை புரிந்து கொள்ளாமல் நாம் நமது பாரம்பரிய உணவை கைவிட்டதாலும் மேலும் எந்தெந்த பொருளை எதோடு  சேர்த்து உண்டால் என்ன பலன்? என்பது குறித்த புரிதல் இன்றைய தலைமுறையினர் பலருக்கு இல்லாததாலும் தான் இதுபோன்ற பிரச்சனைகள் நமக்கு வருகிறது...*

        *இஞ்சி, மிளகு, எலுமிச்சை சாறு நீரை கொண்டு தான் கர்நாடகாவில் பெருமளவு கொரோனா நோயை கட்டுப்படுத்தினார்கள்.

உயர் தரமான மிளகு விளையும் கூர்க், மடிகேரி போன்ற ஊர்கள் எல்லாம் கர்நாடகாவில் தான் இருக்கு. நாமும் கன்னடர்கள் வழியை பின்பற்றி  கொரோனா எனும் மாய அசுரனை கொல்வோம்....*

      *இந்த பதிவை நீங்க ஷேர் செய்யலாம் இல்லை காப்பி பேஸ்ட் செய்யலாம்.என்ன வேணாலும் பண்ணலாம். இந்த செய்தி அணைத்து தரப்பு மக்களுக்கும் போய் சேரவேண்டும். குறைந்த பட்சம் சென்னையில் வாழும் அனைத்து மக்களுக்கும் இந்த தகவல் போய் சேரவேண்டும். காரணம் தமிழ்நாட்டிலேயே சென்னையில் தான் மிக மோசமான கொரோனா பாதிப்பு....*

     *இந்த பதிவை எவ்ளோ facebook, வாட்ஸ் அப் குரூப்பில் நீங்கள் போஸ்ட் செய்ய முடியுமோ செய்யுங்கள்...*

     *இஞ்சி, எலுமிச்சை, மிளகு மூன்றும் அணைத்து நாடுகளிலும் கிடைக்கும் பொருட்கள் தான். அதனால் இந்த  அருமையான, எளிமையான மருத்துவ குறிப்பு அனைத்து உலக நாடுகளுக்கும் போய்  சேர்ந்தால் அதன்மூலம் 2, 3 வாரங்களில் இந்த உலகை கொரோனாவில் இருந்து நாம் மீட்டு விடலாம்....*

       வாழ்க வையகம் 💐 அனைவரும் வாழ்க வளமுடன் 💐💐
-----------------------------------------------------------------------------------
படித்தேன்; பகிர்ந்தேன்!!!
அன்புடன்
வாத்தியார்
========================================================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

14.7.20

கழுதையால் கிடைத்த ஞானம்!


கழுதையால் கிடைத்த ஞானம்!

"இன்பமும், துன்பமும்''.
......................................................

இரும்பு என்றாலே துருப்பிடிக்கத் தானே செய்யும். மரம் என்றாலே கரையான் அரிக்கத்தானே செய்யும்.

அது போல வாழ்க்கை என்றாலே இன்பமும், துன்பமும் இரண்டரக் கலந்து தானே இருக்கும்.

சக்கரம் போல சுழன்று ,மாறி,மாறி வருவதுதான் வாழ்க்கை என்ற சூட்சுமம் தெரிந்து கொண்டால், துன்பங்கள் நம்மைத் துரத்தாது.

 ஞானி ஒருவரிடம் குடும்ப வாழ்க்கை வாழ்க்கையை  மேற்கொண்ட ஒருவர் வந்தார்.. தான் ஞானம் பெற விரும்புவதாகவும், தாங்களே குருவாக இருந்து ஞானத்தில் சிறந்த ''ஞானம்'' எதுவோ அதை கற்பிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்...!

அறிவுரைகள் மூலம் ''ஞானத்தை'' புரிய வைக்க முடியாது என அறிவார் அந்த ஞானி.. 'ஞானத்தை''
புரிய வைக்க அவரிடம்,

''தினமும் உன் வீட்டின் முன்னால் திண்ணையில் காலை முதல் மாலை வரை அமர்ந்து இருக்கும்படியும், அந்த வழியாக சலவை தொழிலாளி கழுதையின் மீது பொதிகளை ஏற்றி வருவார் என்றும், காலையில் ஏற்றி வரும் போதும், மாலையில் திரும்பும் போதும் அதனை கவனிக்கும்படியும் கூறினார்..

மறு தினம் பொழுது புலர்ந்தது.. திண்ணையில் அமர்ந்தார் ஞானியிடம் வந்தவர்..சலவை தொழிலாளி அழுக்கு பொதிகளை கழுதை மேல் ஏற்றி வந்தார். மீண்டும் மாலையில் சலவை செய்த துணிகளையும் ஏற்றி சென்றார்.

மறுநாள் ஞானியிடம் சென்றான், நீங்கள் சொன்னது போல் காலையிலும், மாலையிலும் கழுதைகள் சென்றதையும், திரும்பியதையும் கவனித்தேன்..ஆனால், அதில் ஞானம் தொடர்பான செய்தி இருப்பது போல் தெரிய வில்லையே எனக் கூறினான்.

"அன்பனே .. காலையில் கழுதைகள் அழுக்கு துணிகளை சுமந்து சென்றன. அப்போது "அழுக்கு துணிகளை சுமக்கிறோம் என்று துன்பம் இல்லை."

அதே போல் 'மாலையில் "சலவை செய்த சுத்தமான துணியை சுமக்கிறோம் என்ற இன்பம் இல்லை" ..

துன்பம் வரும் போது, அதிக துன்பம்மின்மையும், இன்பம் வரும்போது அதிக மகிழ்ச்சி இல்லாமலும், இன்பம், துன்பம் இரண்டையும் நடுநிலையான மனதுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற செய்தி ,அந்த கழுதைகள் மூலம் தரும் ''ஞானம்'' என்றார் அந்த ஞானி...

 ஆம் ., நண்பர்களே ..,

 இன்பமும் , துன்பமும் நம் இடையே தங்கி விடுவது இல்லை
 இன்பம் வரும் போது மனசு மகிழ்ச்சியில் அடைகிறது .
 ஆனால், துன்பம் வரும் போது நம் இதயம் அதை ஏற்க மறுக்கிறது ..
 இன்பம் வரும் வேலையில் நாம் அதை வரவேற்பதைப் போல , துன்பத்தையும் நாம் வரவேற்க வேண்டும் ..
 அப்போதுதான் நம் இதயம் இரண்டையும் சரிசமமாக ஏற்றுக் கொள்ளும் !!!!!
------------------------------------------------------
படித்ததில் கிடைத்தது, உங்களுடன் பகிர்ந்தது!
அன்புடன்
வாத்தியார்
==========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

13.7.20

நீங்களும் நானும் சுய ஒழுக்கமும் - அதாவது *Self Discipline*


நீங்களும் நானும் சுய ஒழுக்கமும் - அதாவது *Self Discipline*

1. தொடர்ச்சியாக இரண்டு முறை யாரையும் Phoneல் அழைக்காதீர்கள். அவர்கள் முக்கிய வேலையாக இருக்கலாம், அல்லது பேச முடியாத சூழ்நிலையில் இருக்கலாம்.

2. திருப்பித் தருகிறேன் என்று உங்களிடம் பணம் கடனாக கேட்பவரிடம் மனப்பூர்வமாக கேட்டுக்கொடுங்கள். இது திரும்ப வருமா, வராதா என. இது உங்கள் Character ரை அவர் உணரச் செய்யும். இதே போல், இரவல் கொடுக்கும் பேனா, புத்தகம், Lunch box, குடை போன்றவைக்கும்.

3. Hotelல் சாப்பிடலாம் என நண்பர் உட்பட யார் அழைத்தாலும், Menu cardல் costly யாக உள்ள எதையும் Order செய்யாதீர்கள். அழைத்தவரையே உங்கள் விருப்பப்படி Order சொல்லுங்கள் என வேண்டலாம்.

4. தர்மசங்கடமான இது போன்ற கேள்விகளை தவிர்க்கலாம்.
"இன்னும் கல்யாணம் ஆகலயா?"
"குழந்தைகள் இல்லையா?"
"இன்னும் சொந்தவீடு வாங்கவில்லையா?"
"ஏன் இன்னும் Car வாங்கவில்லை?"
இது நமது பிரச்சினை இல்லைதானே!"

5. தானியங்கி கதவை திறக்க நேர்ந்தால் பின்னால் வருபவர் ஆணோ, பெண்ணோ, சிறியவரோ, பெரியவரோ அவர்கள் வரும்வரை மூடாமல் பிடித்திருப்பது அவர்களை சமூகத்தில் பொறுப்புள்ளவர்களாக மாறச்செய்யும்!

6. நண்பருடன் Taxiயில் சென்றால. இம்முறை  இயலாவிட்டால் மறுமுறை நீங்கள் காசு கொடுத்துவிடுங்கள்.

7. மற்றவர்களின் கருத்துக்கு மதிப்பளியுங்கள். மோசமாக இருந்தாலும், Choiceல் வைத்திருக்கலாம்.

8. அடுத்தவர்கள் பேசும்போது இடைமறிக்காதீர்கள். அவர்கள் கொட்டட்டும். இறுதியில் அவர்களுக்கே நல்லது தெரிந்துவிடும்.

9. நீங்கள் கிண்டலடிப்பதை சம்பந்தப்பட்டவர் ரசிக்கவில்லை என்றால், மீண்டும் அதைச் செய்துவிடாதீர்கள். அவரை உற்சாகப்படுத்துங்கள். உங்கள் மதிப்பை அது மேம்படுத்தும்.

10. யார்  உதவினாலும் பாரபட்சமின்றி நன்றி சொல்லுங்கள்.

11. பொதுவில் புகழுங்கள். தனியாக இருக்கையில் குறைகளை சுட்டிக்காட்டலாம்.

12. உடல்பருமனை ஒருபோதும் கிண்டலடிக்காதீர்கள்.
"நீங்கள் பார்க்க  Smartடாக, Cuteடாக இருக்கீங்க" என்று கூறுங்கள். உடல் எடை குறைக்க அவராக கேட்டால் ஒழிய நாம் அறிவுரை வழங்கக் கூடாது.

13. யாராவது அவர்கள் Photoவைக் காட்ட Phoneனைக் கொடுத்தால் Galleryயில் இடது வலதாக தள்ளிப் பார்க்காதீர்கள். அடுத்து என்ன இருக்கும் என்று உங்களுக்குத் தெரியாது.

14. யாரும் தனக்கு Doctor Appointment  இருக்கிறது, போகவேண்டும் என்றால், உடனே என்ன நோய்க்கு என்று கேட்டுவிடாதீர்கள். அவர்களின் தனிப்பட்ட நோய்கள் பற்றி மற்றவர்களுக்கு தெரியக்கூடாது என்று கருதலாம். "விரைவில் நலமடைவீர்கள் என்று நம்புகிறேன்" என்று கூறலாம்.

15. நண்பர்களிடமோ யாரிடமோ நேரில் சந்தித்துப் பேசும்போது Phoneனை நோண்டிக்கொண்டிருக்காதீர்கள்.

16. கேட்டால் தவிர அறிவுரை வழங்காதீர்கள்.

17. நீண்ட நாட்கள் கழித்து யாரையும் சந்தித்தால், அவர்களின் சம்பளம், வயது ஆகியவற்றைக் கேட்காதீர்கள். அவர்களாகவே சொன்னால் தவிர.

18. தெருவில் யாரையாவது சந்திக்க நேர்த்தால், Styleகாக கருப்புக்கண்ணாடி அணிந்திருந்தால் கழற்றிவிட்டுப் பேசுங்கள். கண்பார்த்து  பேசுதல் நம்பிக்கைக்கு நல்லது.

19. யார் தனிப்பட்டப் பிரச்சினையிலும் நேரடியாக வலிய போய் தலையிடாதீர்கள்.

20. இறுதியாக ஒன்று. இதுபோன்ற தகவல்கள் மற்றவர்களுக்கும் பயன்தரும் என்றால் பகிருங்கள்.
---------------------------------------------------------
படித்தேன்: பகிர்ந்தேன்!
அன்புடன்
வாத்தியார்
============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

12.7.20

Astrology: Quiz: புதிர்: 10-7-2020 தேதியிட்ட புதிருக்கான விடை!


Astrology: Quiz: புதிர்: 10-7-2020 தேதியிட்ட புதிருக்கான விடை!

கேட்டிருந்த கேள்வி இதுதான். ஒரு அன்பரின் ஜாதகத்தைக் கொடுத்து, அன்பர் ஹஸ்த நட்சத்திரம் விருச்சிக லக்கினம் கன்னி ராசிக்கரர். இது ஒரு அரசியல்வாதியின் ஜாதகம். அரசியலில் நுழைந்தவர் பெயரெடுத்து பிரபலமாக இருந்தார். ஜாதகப்படி அவரின் வெற்றிக்குக் காரணம் என்ன? ஜாதகத்தை அலசி அதற்கு மட்டும் பதிலைச் சொல்லுங்கள்!!!”  என்று கேட்டிருந்தேன்.

பதில்: 10ம் அதிபதி சூரியன் 10ம் வீட்டிலேயே ஆட்சி பலத்துடன் இருக்கிறார். அத்துடன் லக்கினாதிபதி செவ்வாய் 11ம் வீட்டில் (லாபஸ்தானத்தில்) அமர்ந்துள்ளார். இந்த அமைப்புக்கள்தான் அவர் அரசியலில் நுழைவதற்கும் பெயரெடுத்து பிரபலமாக இருந்ததற்குக் காரணம். அவற்றை மட்டும் இங்கே குறிப்பிட்டுள்ளேன்,

இந்தப் புதிரில் 13 அன்பர்கள் கலந்து கொண்டு தங்கள் கணிப்பை வெளியிட்டு உள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்.

அடுத்த வாரம் 17-7-2020 வெள்ளிக்கிழமை  அன்று வேறு ஒரு புதிருடன் மீண்டும் நாம் சந்திப்போம்!!!!

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
1
Blogger ஜகதீஸ்வரன் said...
ஜகதீஸ்வரன்,கானாடுகாத்தான்: லக்னம் வர்கோத்தமம். லக்னாதிபதி செவ்வாய் 11ல் வளர்பிறை சந்திரன் மற்றும் சுக்கிரனுடன்.சுக்கிரன் வர்கோத்தமம் மற்றும் நீச்ச பங்கம். குரு வர்கோத்தமம்.9 மற்றும் 11ஆம் அதிபதிகள் பரிவர்த்தனை. அரசாங்க கிரகம் சூரியன் 10ல் ஆட்சி.சனி 11 ஆம் அதிபதியுடன் மற்றும் அம்சத்தில் குருவுடன் இணைந்து உச்சம். குரு தசையில் இவருக்கு நல்ல வளர்ச்சி.
Friday, July 10, 2020 10:16:00 AM
-------------------------------------------------
2
Blogger C Jeevanantham said...
Dear Sir,
This horoscope native is having Kalasarpa yogam.
1. 10th lord sun is in 10th own plance. Kendra lord in kendra. Sun is good for political leader, placed in 10th, karmathipathi yoga.
2. Lagna is vargotama and lagna lord in 11th, lucky place.
Thank you,
Yours sincerely,
C. Jeevanantham.
Friday, July 10, 2020 10:29:00 AM
---------------------------------------------
3
Blogger Ramanathan said...
10th house lord(Sun implying politics and leadership) in 10th house(house of profession)
9th house lord(Moon implying politics and leadership) in 11th house(house of profit)
At the same time 11th house lord(Mercury implying business) in 9th house(house of gifts)
Lord of 3rd house(house of victory) Saturn in 9th house(house of gifts) aspecting 3rd house
Lagna Lord(Mars) too in 11th house could have helped
Friday, July 10, 2020 2:36:00 PM
---------------------------------------------------------
4
Blogger V Narayanan, Puducherry said...
மூன்று காரணங்களை சொல்லலாம்
1) லக்னதிபதி 11ல் சசி மங்கள யோகத்தில் இருப்பது
2) 10ல் ராஜ கிரஹம் சூரியன் ஆட்சி
3) 9 & 11 அதிபதி - சந்திரன்/புதன் பரிவர்த்தனை
வெ நாராயணன்
புதுச்சேரி
Friday, July 10, 2020 3:55:00 PM
-------------------------------------------------------
5
Blogger P. CHANDRASEKARA AZAD said...
வணக்கம்
தாங்கள் கேட்டு இருந்த புதிருக்கான பதில்
1. விருச்சிக லக்கின ஹஸ்த நக்ஷத்திர கன்னி ராசி ஜாதகரின் லக்கினமே வர்கோத்தமாக உள்ளது. ஆதலால் நினைத்ததை விடா பிடியாக எட்டி பிடிக்கும் மன திடம் கொண்ட ஜாதகர் ஆவார். இவரின் பூர்வ புண்ணிய அதிபதியான குரு பனிரெண்டாம் வீட்டில் வர்கோத்தமமாக இருந்து இவரின் வாழ்க்கையை சமூகத்திற்காக அர்ப்பணிக்க வைத்தது.
2. மேலும் பத்தாம் வீடு அதிபதி சூரியன் தன சொந்த வீட்டிலேயே திக் பலமாக அமர்ந்து அரசியலில் சாதிக்க வைத்தார் மேலும் லக்கின அதிபதி செவ்வாய் லாப ஸ்தானத்தில் பாக்கியாதிபதி சந்திரனுடன் அமர்ந்து சந்திரா மங்கள யோகத்தை செய்து வெற்றி அடைய செய்தது. ஏனென்றால் சந்திரன் சமூக சேவையில் நாட்டம் உண்டாக்கும் கிரகமாகும். அதனால் அரசியல் மூலம் சமூக தொண்டு ஆற்றினார்.
3. இவரின் அணைத்து கிரகங்களும் ராகு கேது பிடியில் கால சர்ப்ப யோகத்தில் இருந்ததால் இளமையில் பல கடினங்களை அனுபவித்து , குரு தசையில் இருந்து அது யோகமாக மாறி அணைத்து வெற்றிகளையும் அரசியலில் தந்தது.
4.நவாம்சத்தில் பனிரெண்டில் உச்சமாக அமர்ந்த சனி குருவுடன் சேர்ந்து அதனை அரசியல் மூலம் செய்ய செய்தது.
நன்றி
இப்படிக்கு
ப. சந்திரசேகர ஆசாத்
கைபேசி: 8879885399
Friday, July 10, 2020 4:00:00 PM
-----------------------------------------------------------------
6
Blogger csubramoniam said...
ஐயா கேள்விக்கான பதில்
1 . லக்கினாதிபதி லாபஸ்தானத்தில் பாக்கியாதிபதி சந்திரனுடன்
2 .பத்திற்குரிய சூரியன் ஆட்சி பலத்துடன் அமர்ந்துள்ளார் அவரே அரசியல்
வாழ்க்கையை அமைத்து கொடுத்துள்ளார் (அரசு தொடர்பு)
3 .வாக்குஸ்தானத்தின் மேல் லக்கினாதிபதியின் பார்வை பேச்சு திறமையை கொடுத்துள்ளது
4 .குடும்பஸ்தானதிபதி குரு விரயத்தில் அமர்ந்ததால் ஜாதகர் குடும்ப வாழ்க்கையை துறந்து பொது வாழ்வில் ஈடு பட்டுள்ளார்
5 .லக்கினத்தில் அமர்ந்த கேது ஞானத்தை வழங்கியுள்ளது
6 .லாபாதிபதி புதனும் பாக்கியாதிபதி சந்திரனும் பரிவர்த்தனையில்
7 .வெற்றிக்கான மூன்றாம் இடத்தின் மேல் அதன் அதிபதி சனி, புதனின் பார்வை
நன்றி
தங்களின் பதிலை ஆவலுடன்
Friday, July 10, 2020 9:23:00 PM
---------------------------------------------------------
7
Blogger Jeyalaxmi said...
வணக்கம் ஐயா. 10 7.20 புதிருக்கு பதில். விருச்சிக லக்னம்.லக்னாதிபதியும் பூமிகாரகனுமாகிய செவ்வாய் லாபத்தில் இருக்கிறார். அரச கிரகமான அரசியலுக்குரிய சூரியனார் ஆட்சி திக்பலம் அடைந்ததும் பாக்கியாதிபதியும் லாபாதிபதியும் பரிவர்த்தனை ஆனதும்.விருச்சிக லக்னத்திற்கு பூர்வ புண்ணியாதிபதியும்
யோகருமாகிய குரு பகவான் வர்கோத்தமம் பெற்றதும் தைர்ய வீர்ய ஸ்தானாதிபதி சனி பகவான் அம்சத்தில் உச்சபலம் பெற்று தன் வீட்டை பார்த்து பலப்படுத்தியதும் சுக்ரன் நீச பங்கம் பெற்றதும் வர்கோத்தமம் ஆனதும் அடுத்தடுத்து யோக திசைகள் வந்ததும் அரசியலில் ஜாதகர் புகழ் பெறக்காரணமாகும். பூர்வ புண்ணிய ஸ்தானம் லக்னாதிபதி ஸ்தானாதிபதி பாக்கியாதிபதி பார்வை பெற்றதும் ஒரு காரணமாகும். நன்றி வணக்கம்.
Friday, July 10, 2020 10:10:00 PM
------------------------------------------------------
8
Blogger RAMVIDVISHAL said...
வணக்கம். முயற்சி செய்கிறேன்.
1) சூரியன் இந்த ஜாதகரின் 10க்கு அதிபதி (அதிகாரம்/அரசியலுக்கு உகந்த இடத்தில் உள்ளது)
2) ராகு ரிக்ஷபத்தில் உச்சம்
3) செவ்வாய் பார்வை லக்னத்திற்கு 2ம் இடத்திற்கு (4ம் பார்வை / வாக்கு ஸ்தானம் அரசியலுக்கு உகந்தது)
நன்றி
Saturday, July 11, 2020 2:55:00 AM
--------------------------------------------------------
9
Blogger kmr.krishnan said...
ஜாதகர் 29 ஆகஸ்டு 1946 ல் மதியம் 12.30 மணி போலப் பிறந்தவர்.பிறந்த இடம் சென்னை என்று எடுத்துக்கொண்டேன்.தொழிலுக்குண்டான 10ம் இடத்துக்காரன் சூரியன் 10 லேயே அமர்ந்து ஆட்சி பெற்றார். ராஜ கிரகம் ஆட்சி பெற்று தன் வீட்டிலேயெ அமர்ந்தது அவருக்கு அரசியலில் பெரிய வெற்றியைத்தந்தது.
ராசி நவாம்சம் இரண்டிலும் லக்கினமும் குருவும் வர்கோத்தமம் பெற்று வலுவானார்கள்.லக்கினாதிபதி செவ்வாய் ராசிக்கட்டத்தில் சர்வலாபமான‌ 11ல் அமர்ந்தார். நவாம்சத்தில் குரு பார்வை பெற்றார். எனவே இது அதிகாரப்பதவியைக்கொடுத்தது.
நவாம்சத்தில் தொழில்காரகனான சனி உச்சம் பெற்று 3ம் இடமான வெற்றி சஹாயஸ்தானமான தன் வீட்டையே பார்த்தது.ராசியிலும் வெற்றி சஹாயஸ்தானத்திற்கு சனியின் பார்வை 9ல் அமர்ந்து.கால சர்ப தோஷ ஜாதகம் ராகு கொடி பிடித்து முன் செல்லும் கால சர்ப தோஷம். 33 வயது வரை ராகு தசா. 28 வயது முடிந்தவுடன் ராகு தோஷத்தை யோகமாக மாற்றி நற்பலன் கொடுக்கத் துவங்கிவிட்டார்.அடுத்துவந்த குரு தசா தனம் பூர்வ புண்ய ஸ்தானாதிபதியின் தசா. ஆகவே அந்த தசாவும் நல்ல பலன் கொடுத்து அவரை அரசியலில் தூக்கிவிட்டது.
Saturday, July 11, 2020 4:46:00 AM
----------------------------------------------------------
10
Blogger K. Ravi said...
பத்தாம் இடத்தில் சூரியன் தன்னுடைய ஆட்சி வீட்டில்
லக்கினாதிபதி மற்றும் ஆருக்குண்டான செவ்வாய் பதினொன்றாமிடமாகிய லாபஸ்தானத்தில். கூடவே பாக்கியாதிபதி சந்திரன் மற்றும் ஏழுக்குடையோன் சுக்கிரன் சேர்க்கை.
சுக்கிரன் மற்றும் லக்கினம் வர்கோத்தமம்.
தொழிலுக்குண்டான பத்தாம் வீடும் லாபஸ்தானமான பதினோராம் வீடும் மிக வலுவாக உள்ளது.
இவையே காரணங்கள்
K. ரவி
Saturday, July 11, 2020 4:48:00 PM
---------------------------------------------------------
11
Blogger sundari said...
vannakkam sir,
10th house sun and 11th hous sukuran chevvai and moon that is why he gets like that political chance sir.
Saturday, July 11, 2020 5:29:00 PM
-----------------------------------------------------------
12
Blogger Ram Venkat said...
விருச்சிக லக்கினம், கன்யா ராசி ஜாதகர்.
கேது கொடி பிடிக்கும் கால சர்ப்ப தோசமுள்ள ஜாதகம்.
ஜாதகத்தில் ராகு, கேது உச்சம் பெற்றுள்ளன. லக்கினாதிபதி 11மிடத்தில் அமர்ந்துள்ளார்.
10மிட அதிபதி சூரியன் தன் சொந்த ராசியான சிம்மத்தில் இருப்பதனால் தொழில் அரசாங்கம், அரசியலைக் குறிக்கிறது. 11மிடஅதிபதி புதன் மற்றும் 9மிட பாக்கியாதிபதி சந்திரனும் பரிவர்த்தனை யோகத்திலுள்ளனர்.
மேற்கண்ட காரணங்களால் ஜாதகர் அரசியலில் நுழைந்து பெயரெடுத்து பிரபலமாக இருந்தார்.
Saturday, July 11, 2020 9:18:00 PM
------------------------------------------------------
13
Blogger Sridhar said...
பத்தாம் இடத்தில் சூரியன், சொந்த வீட்டில்
சந்திரனும் புதனும் பரிவர்த்தனை
ராகு த்ரிகொணம் மற்றும் சனி கேந்திரத்தில்
குரு மற்றும் சுக்ரன் வர்கோதமம்
குருவின் பார்வை 6ஆம் இடத்தின் மீது. சத்ரு நாசம் மற்றும் மக்கள் செல்வாக்கு
லாப ஸ்தானத்தில் சுக்ரன் மற்றும் செவ்வாய்
இப்படி பல கிரகங்களின் அனுகூல அமைப்பால் ஜாதகர் அரசியலில் பிரபலமாக இருந்தார்
Sunday, July 12, 2020 2:55:00 AM
==============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!