மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label Star Temples. Show all posts
Showing posts with label Star Temples. Show all posts

9.3.17

வருடத்திற்கு ஒருமுறை என்ன செய்ய வேண்டும் நீங்கள்?


வருடத்திற்கு ஒருமுறை என்ன செய்ய வேண்டும் நீங்கள்?

வருடத்திற்கு ஒருமுறையாவது உங்களது பிறந்த நட்சத்திர ஸ்தலத்திற்கு உங்களின் நட்சத்திரம் வரும் நாளன்று சென்று வணங்கி வளம் பெறுங்கள்...

1
அஸ்வினி -  முக்கிய ஸ்தலம் - கூத்தனூர்
மற்ற தலங்கள்  - ஸ்ரீரங்கம், திருத்துறைபூண்டி, கொல்லிமலை.
-----------------------------------
2
பரணி -  முக்கிய ஸ்தலம் - நல்லாடை
மற்ற தலங்கள் - திருநெல்லிக்கா, கீழப்பறையார், பழனி, பட்டீஸ்வரம், திருத்தங்கல், திருவாஞ்சியம்.
----------------------------------
3
கார்த்திகை -  முக்கிய ஸ்தலம் - கஞ்சானகரம்
மற்ற தலங்கள் - காஞ்சிபுரம், திருப்புகலூர், கீரனூர், திருச்செந்தூர், திருவொற்றியூர், கானாட்டுமுள்ளூர்.
---------------------------------------
4
ரோஹிணி -  முக்கிய ஸ்தலம் - திருக்கண்ணமங்கை
மற்ற தலங்கள் - காஞ்சிபுரம், திருவானைக்கோவில், ஜம்பை, கழுகுமலை, செம்பாக்கம், கொரட்டூர், நெல்லிச்சேரி, மன்னார்குடி, பெருமாள் அகரம், திருவரங்கம், திருக்கண்ணபுரம், திருக்கண்ணங்குடி.
--------------------------------------------------
5
மிருகசீரிடம் - முக்கிய ஸ்தலம்  - எண்கண்
மற்ற தலங்கள் - அம்பர் மாகாளம், ஓசூர், முசிறி, தாழமங்கை.
-------------------------------------------------------
6
திருவாதிரை - முக்கிய ஸ்தலம்  - சேங்காலிபுரம்
மற்ற தலங்கள் - சிதம்பரம், அதிராம்பட்டினம்.
-----------------------------------------------
7
புனர்பூசம் - முக்கிய ஸ்தலம்  - சீர்காழி
மற்ற தலங்கள் - பழைய வாணியம்பாடி, திருவள்ளூர், திருநெல்வேலி, திருப்பாசூர், திருவெண்ணெய்நல்லூர்.
---------------------------------------------
8
பூசம் - முக்கிய ஸ்தலம்  - திருச்சேறை
மற்ற தலங்கள் - விளங்குளம், ஒழுந்தியாபட்டு, ஆவூர், கோனேரிராஜபுரம், பரிதிநியமம், திருச்சுழி, அழகர் கோயில்.
-------------------------------------------------
9
ஆயில்யம் -  முக்கிய ஸ்தலம் - திருப்புறம்பியம்
மற்ற தலங்கள் - திருந்துதேவன்குடி, நண்டான் கோயில், சங்கரன்கோயில், திருப்புனவாசல், புள்ளபூதக்குடி, திருவிடந்தை.
---------------------------------------------
10
மகம் -  முக்கிய ஸ்தலம் - திருவெண்காடு
மற்ற தலங்கள் - திருக்கச்சூர், திருவரத்துறை, கீழப்பழுவூர், ஆலம்பொழில், அன்பில், திருவாலங்காடு.
-----------------------------------------------
11
பூரம் -  முக்கிய ஸ்தலம் - தலைசங்காடு
மற்ற தலங்கள் - நாலூர், கஞ்சனூர், திருவரங்குளம், புரசைவாக்கம்.
-----------------------------------------------------------
12
உத்திரம் -  முக்கிய ஸ்தலம் - கரவீரம்
மற்ற தலங்கள் - காஞ்சிபுரம், திருவக்கரை, செய்யூர், கூவத்தூர், மயிலாடுதுறை, இடையாற்றுமங்கலம்.
-----------------------------------------------------------
13
ஹஸ்தம் -  முக்கிய ஸ்தலம் - கோமல்
மற்ற தலங்கள் - தர்மபுரி, செய்யாறு, புவனகிரி, ஏமப்பூர் , எழிலூர், திருவாதவூர், திருவேற்காடு.
--------------------------------------------------------
14
சித்திரை -  முக்கிய ஸ்தலம் - திருவையாறு
மற்ற தலங்கள் - அண்ணன்கோயில், தாடிக்கொம்பு, திருநாரயணபுரம், நாச்சியார் கோயில், திருவல்லம், திருவக்கரை, திருக்கோயிலூர், திருமாற்பேறு.
-----------------------------------------------
15
சுவாதி -  முக்கிய ஸ்தலம் -  திருவிடைமருதூர்
மற்ற தலங்கள் - திருப்புடைமருதூர், பெரியதிருக்கோணம், கடத்தூர், பிள்ளையார்பட்டி, நயினார் கோயில், ஸ்ரீரங்கம்.
------------------------------------------------
16
விசாகம் -  முக்கிய ஸ்தலம் - கபிஸ்தலம்
மற்ற தலங்கள் - திருமலைக்கோயில், அத்தாளநல்லூர், தீயத்தூர், திருநன்றியூர், நத்தம்.
-----------------------------------------
17
அனுஷம் -  முக்கிய ஸ்தலம் - நாச்சியார் கோயில்
மற்ற தலங்கள் - திருவொற்றியூர், திருவண்ணாமலை, திருப்புனவாசல், திருக்கண்ணமங்கை, நீடூர், திருநன்றியூர்.
-----------------------------------------------
18
கேட்டை -  முக்கிய ஸ்தலம் - வழுவூர்
மற்ற தலங்கள் - பிச்சாண்டார் கோயில், பசுபதி கோயில், பல்லடம், திருப்பராய்த்துறை.
--------------------------------------------
19
மூலம் -  முக்கிய ஸ்தலம் - மயிலாடுதுறை
மற்ற தலங்கள் - மாந்துறை, ஆச்சாள்புரம், பாமணி, கோயிலூர், குலசேகரப்பட்டினம், பொழிச்சலூர், மம்பேடு.
----------------------------------------------
20
பூராடம் -  முக்கிய ஸ்தலம் - கடுவெளி
மற்ற தலங்கள் - நகர், சிதம்பரம், இரும்பை மகாகாளம்.
------------------------------------------------
21
உத்திராடம் -  முக்கிய ஸ்தலம் - இன்னம்பூர்
மற்ற தலங்கள் - கோயம்பேடு, காங்கேயநல்லூர், பேளூர், கீழ்பூங்குடி, திருப்பூவனூர், திருக்கடிக்குளம், திருப்பூவணம், திருக்கோஷ்டியூர், திருக்குற்றாலம்.
--------------------------------------------------
22
திருவோணம் -  முக்கிய ஸ்தலம் - திருவிடைமருதூர்.
மற்ற தலங்கள் -  ராஜேந்திரப்பட்டினம், திருமுல்லைவாயில், திருப்பாற்கடல்.
-----------------------------------
23
அவிட்டம் -  முக்கிய ஸ்தலம் -  திருபூந்துருத்தி
மற்ற தலங்கள் - விருதாச்சலம், திருவான்மியூர், திருக்காட்டுப்பள்ளி, திருகொள்ளிக்காடு, திருமறைக்காடு, கொடுமுடி.
--------------------------------------------------
24
சதயம் -  முக்கிய ஸ்தலம் - திருப்புகலூர்
மற்ற தலங்கள் - கடம்பனூர்,  கோயில் கடம்பனூர், ஆதி கடம்பனூர், இளங்கடம்பனூர், வாழிக்கடம்பனூர், பெருங்கடம்பனூர், கடம்பர் கோயில், மேலக்கடம்பூர் , பிச்சாண்டார் கோயில், மதுரை.
------------------------------------------------
25
பூரட்டாதி -  முக்கிய ஸ்தலம் - திருக்குவளை
மற்ற தலங்கள் - ரெங்கநாதபுரம்.
-----------------------------------
26
உத்திரட்டாதி -  முக்கிய ஸ்தலம் - திருநாங்கூர்.
மற்ற தலங்கள் - தீயாத்தூர், வைத்தீஸ்வரன் கோயில்.
-------------------------------------------
27
ரேவதி -  முக்கிய ஸ்தலம் - இலுப்பைப்பட்டு
மற்ற தலங்கள் - காருகுடி, இரும்பை மாகாளம், திருச்செங்கோடு.
--------------------------------------------------------
படித்தேன் பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
=============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

26.11.15

Astrology: நீங்களும் உங்கள் நட்சத்திரமும்!


Astrology: நீங்களும் உங்கள் நட்சத்திரமும்!

27 நட்சத்திரங்களுக்குரிய திருத்தலங்கள்

நமது மாணவக் கண்மணிகளின் நலம் கருதி , ஒவ்வொரு நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் உரிய திருத்தலங்களைப் பற்றிக் கீழே கொடுத்துள்ளேன். அந்த ஸ்தலங்கள் அனைத்தும் , பலப்பல யுக வரலாறுகளைக் கொண்டவை. இடையில் அழிவு ஏற்பட்டாலும், அதன் பிரதி பிம்பங்களாய் தன்னையே புதுப்பித்துக் கொண்டவை.  எத்தனையோ மகான்களும், ரிஷிகளும், தேவர்களும் வழிபட்ட, இன்றளவும் நல்ல ஆன்மீக அதிர்வுகளைக் கொண்டு, தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அருள் பாலிப்பவை.

அவற்றையெல்லாம் விட முக்கியமான செய்தி - அந்த நட்சத்திரங்களுக்குரிய தேவதைகள் , சூட்சும ரீதியாக இங்கே தினமும் ஒரு தடவையாவது தங்களுக்குரிய ஆலயத்திற்கு வந்து வழிபாடு செய்கின்றனவாம்.

அதற்கு ஆதாரம் கேட்டு மண்டையைப் பிய்த்துக் கொள்ளாதீர்கள். சில விஷயங்களை நம்பிக்கையின் அடிப்படையில் கடைப்பிடிக்க வேண்டியதுதான்.

மனிதராய் பிறந்த அனைவர்க்கும், அவரவர்  கர்மவினையே -  லக்கினமாகவும், ஜென்ம நட்சத்திரமாகவும், பன்னிரண்டு வீடுகளில் நவக்கிரகங்கள் அமர்ந்து -  பெற்றெடுக்கும் பெற்றோர்களையும், பிறக்கும் ஊரையும்,  வாழ்க்கை துணையையும் , அவர் வாழ்வில் நடக்கும் முக்கிய சம்பவங்களையும் , வாழ்க்கையையுமே தீர்மானிக்கிறது.

நமது பூர்வ ஜென்ம தொடர்புடைய ஆலயங்களுக்கு, நம்மை அறியாமலே நாம் சென்று வழிபடும்போது,  நமது கர்மக்கணக்கு நேராகிறது. அப்படி நிகழும்போது நம் வாழ்வில் ஏற்படும் பல தடைகளும், தீராத பிரச்னைகளும் தீர்ந்து , மனதளவில் நமக்கு பலமும், மாற்றமும் ஏற்படுகின்றன.

கீழே கொடுக்கப்பட்டுள்ள அவரவர்க்குரிய நட்சத்திர தலத்தை  -  உங்கள் ஜென்ம நட்சத்திரம் வரும் தினத்தன்று , ஆத்ம சுத்தியுடன், நம்பிக்கையுடன் வழிபட்டு வாருங்கள். அதன் பிறகு உங்கள் வாழ்வில் நிச்சயம் ஒரு புது வெளிச்சம் பிறக்கும்.

உங்களால் முடிந்தவரை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சாதாரண தினங்களில் கூட  இந்த ஆலயங்களில் சென்று வழிபட்டு வர , உங்கள் கஷ்டங்கள் வெகுவாகக் குறையும்.

செலவோடு செலவாக பணத்தைச் செலவழித்துக் கொண்டு, ஒரு முறை உங்களுக்கு உரிய ஆலயத்திற்குச் சென்று வழிபட்டுவிட்டு வாருங்கள்!

அன்புடன்,
வாத்தியார்
--------------------------------------------------
நட்சத்திரங்களுக்கான ஆலயங்களும், அவைகள் அமைந்த இடங்களும்:

1.அஸ்வினி.
அருள்மிகு பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோயில்.
இருப்பிடம்: திருவாரூரில் இருந்து 30 கி.மீ.தூரத்தில் திருத்துறைப் பூண்டி உள்ளது. பஸ் ஸ்டாண்டில் இருந்து ஒரு கி.மீ. தூரத்தில் கோயில் உள்ளது.

2.பரணி.
அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில்.
இருப்பிடம்: மயிலாடு துறையிலிருந்து(15 கி.மீ.)நெடுங்காடு வழியாக காரைக்கால் செல்லும் வழியில் நல்லாடை என்னும் ஊரில்  உள்ளது.

3.கார்த்திகை.
அருள்மிகு காத்ர சுந்தரேஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம்:  மயிலாடுதுறையிலிருந்து பூம்புகார் செல்லும் வழியில் 8 கி.மீ., தூரத்தில் கஞ்சாநகரம் அமைந்துள்ளது. மெயின் ரோட்டிலிருந்து பிரியும் ரோட்டில் அரை கி.மீ., சென்றால் கோயிலை அடையலாம்.

4.ரோஹிணி.
அருள்மிகு பாண்டவதூதப்பெருமாள் திருக்கோயில்
இருப்பிடம்: காஞ்சிபுரம் ஏகாம் பரேஸ்வரர் கோயில் எதிரில் உள்ள சாலையில் கோயில் அமைந்துள்ளது.

5.மிருக சீரிஷம்.
அருள்மிகு ஆதிநாராயணப்பெருமாள் திருக்கோயில்
இருப்பிடம் : தஞ்சாவூரிலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் 50 கி.மீ., தூரத்தில் முகூந்தனூர் உள்ளது. இந்தஸ்டாப்பில் இருந்து, ஒரு கி.மீ. தூரம் சென்றால் கோயிலை அடையலாம்.

6.திருவாதிரை.
அருள்மிகு அபய வரதீஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம் : தஞ்சாவூரில் இருந்து 70 கி.மீ., தூரத்திலுள்ளபட்டுக்கோட்டை சென்று, அங்கிருந்து 12 கி.மீ. சென்றால் அதிராம்பட்டினத்தில் உள்ள இந்த ஆலயத்தை அடையலாம்.

7.புனர்பூசம்.
அருள்மிகு அதிதீஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம் : வேலூரிலிருந்து கிருஷ்ணகிரி செல்லும் வழியில், 67 கி.மீ., தூரத்தில் வாணியம்பாடி உள்ளது. பஸ்ஸ்டாண்டில் இருந்து 3 கி.மீ. தூரத்தில் உள்ள பழைய வாணியம் பாடியில் கோயில் உள்ளது.

8.பூசம்.
அருள்மிகு அட்சய புரீஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம்: பட்டுக்கோட்டையிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் 30 கி.மீ., சென்றால் விளங்குளம் விலக்கு வரும். அங்கிருந்து தெற்கே 2 கி.மீ. சென்றால் கோயிலை அடையலாம். புதுக்கோட்டையில் இருந்து பேராவூரணி வழியாகவும் விளங்குளத்தை அடைய வழியிருக்கிறது.

9.ஆயில்யம்.
அருள்மிகு கற்கடேஸ்வரர் திருக்கோயில்.
இருப்பிடம்: கும்பகோணத்தில் இருந்து சூரியனார் கோவில் செல்லும் ரோட்டில் 11 கி.மீ., தூரத்தில் உள்ள திருவிசநல்லூர் சென்று, அங்கிருந்து பிரியும் ரோட்டில் 2கி.மீ., சென்றால் கோயிலை அடையலாம். திருவிசநல்லூரில் இருந்து ஆட்டோ வசதி உண்டு

10.மகம்.
அருள்மிகு மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில்.
இருப்பிடம்: திண்டுக்கல்லில் இருந்து நத்தம் செல்லும் ரோட்டில் 12 கி.மீ., தூரத்தில் விராலிப்பட்டி விலக்கு உள்ளது. இங்கிருந்து 2 கி.மீ., மினிபஸ்சில் சென்றால் கோயிலை அடையலாம். ஆட்டோ வசதியும் உண்டு.

11.பூரம்.
அருள்மிகு ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம்: புதுக்கோட்டையிலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் வழியில் 7 கி.மீ., சென்றால் வரும் திருவரங்குளம் என்னும் ஊரில் ஆலயம் உள்ளது.

12.உத்திரம்.
அருள்மிகு மாங்கல்யேஸ்வரர் திருக்கோயில்.
இருப்பிடம் : திருச்சி சத்திரம் பஸ்ஸ்டாண்டிலிருந்து 22 கி.மீ. தூரத்திலுள்ள லால்குடி சென்று அங்கிருந்து 5 கி.மீ. தூரத்திலுள்ள இடையாற்று மங்கலம் என்னும் ஊரில் உள்ளது.

13.ஹஸ்தம்.
அருள்மிகு கிருபா கூபாரேச்வரர் திருக்கோயில்.
இருப்பிடம்: கும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் உள்ள குத்தாலத்திலிருந்து பிரியும் ரோட்டில் 8 கி.மீ. தூரத்தில் கோமல் என்னும் ஊரில் உள்ளது.குத்தாலத்திலிருந்து பஸ், ஆட்டோ வசதி உள்ளது.

14.சித்திரை.
அருள்மிகு சித்திரரத வல்லபபெருமாள் திருக்கோயில்.
இருப்பிடம்: மதுரையில் இருந்து 23 கி.மீ., தூரத்திலுள்ள குருவித்துறைக்கு மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டிலிருந்து பஸ் உள்ளது. குருவித்துறையில் இருந்து 3 கி.மீ. தூரத்தில் கோயில் உள்ளது. வியாழன், பவுர்ணமி தினங்களில்  கோயில் வரை பஸ்கள் செல்லும். மற்ற நாட்களில் ஆட்டோவில் செல்ல வேண்டும்.

15.சுவாதி.
அருள்மிகு தாத்திரீஸ்வரர் திருக்கோயில்.
இருப்பிடம்: சென்னை பூந்தமல்லியில் இருந்து தண்டுரை என்ற ஊருக்கு செல்லும் வழியில் 8 கி.மீ., தூரத்தில் சித்துக்காடு என்ற ஊரில் இத்தலம் உள்ளது. குறித்த நேரத்தில் மட்டுமே பஸ் உண்டு என்பதால், பூந்தமல்லியில் இருந்து வாகனங்களில் சென்று திரும்பலாம்.

16.விசாகம்.
அருள்மிகு முத்துக்குமாரசுவாமி திருக்கோயில்.
இருப்பிடம் : மதுரையில் இருந்து 155 கி.மீ., தொலைவிலுள்ள செங்கோட்டை சென்று, அங்கிருந்து 7 கி.மீ., தூரத்திலுள்ள திருமலைக்கோவிலை பஸ் மற்றும் வேன்களில் அடையலாம். இவ்வூரைச் சுற்றி பிரபல ஐயப்ப ஸ்தலங்களான ஆரியங்காவு, அச்சன் கோவில், குளத்துப்புழை ஆகியவை உள்ளன

17.அனுஷம்.
அருள்மிகு மகாலட்சுமிபுரீஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம்: மயிலாடுதுறையில் இருந்து சீர்காழி செல்லும் வழியில் 7 கீ.மீ. தூரத்தில் திரு நின்றியூர் என்னும் ஊரில் இத்தலம் அமைந்துள்ளது.

18.கேட்டை.
அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில்
இருப்பிடம்: தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் 13 கி.மீ., தூரத்திலுள்ள பசுபதிகோயில் பஸ் ஸ்டாப்பில் இருந்து அரை கி.மீ., தூரத்தில் கோயில் உள்ளது.

19.மூலம்.
அருள்மிகு சிங்கீஸ்வரர் திருக்கோயில்.
இருப்பிடம்: சென்னை கோயம்பேட்டில் இருந்து தக்கோலம் செல்லும் வழியில் 45 கி.மீ., தூரத்தில் மப்பேடு என்ற ஊரில்  உள்ளது. (பூந்தமல்லியிலிருந்து 22 கி.மீ. பேரம்பாக்கம் செல்லும் வழியில் மப்பேடு உள்ளது.)

20.பூராடம்.
அருள்மிகு ஆகாசபுரீஸ்வரர் திருக்கோயில்.
இருப்பிடம்: தஞ்சாவூரில் இருந்து (13 கி.மீ.,) திருவையாறு சென்று, அங்கிருந்து கல்லணை செல்லும் வழியில் 4 கி.மீ., தூரம் சென்றால் கடுவெளியை அடையலாம். பஸ் ஸ்டாப் அருகிலேயே கோயில் அமைந்துள்ளது.

21.உத்திராடம்.
அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்.
இருப்பிடம்: சிவகங்கையில் இருந்து காரைக்குடி செல்லும் வழியில் உள்ள (12 கி.மீ.,) ஒக்கூர் சென்று, அங்கிருந்து பிரியும் ரோட்டில் 3 கி.மீ., சென்றால் பூங்குடி என்ற ஊரில் உள்ளது. ஆட்டோ உண்டு. மதுரையில் இருந்து (45 கி.மீ.,) இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை நேரடி பஸ் வசதி உண்டு.

22.திருவோணம்.
பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோயில்.
இருப்பிடம்: வேலூரிலிருந்து சென்னை செல்லும் வழியில் 20 கி.மீ., தூரத்திலுள்ள காவேரிப்பாக்கத்தில் இறங்கி, அங்கிருந்து பிரியும் ரோட்டில் 2 கி.மீ. சென்றால் திருப்பாற்கடலை அடையலாம். ஆற்காடு, வாலாஜா விலிருந்தும் பேருந்துகள் உள்ளன. இவ்வூரில் இரண்டு பெருமாள் கோயில்கள் இருப்பதால், பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோயில் என கேட்டு செல்லவும்

23.அவிட்டம்.
அருள்மிகு பிரம்மஞான புரீஸ்வரர் திருக்கோயில்.
இருப்பிடம் : கும்பகோணம் மகாமகக்குளம் மேற்குக் கரையிலிருந்து 4 கி.மீ. தூரத்தில் கோயில்அமைந்துள்ளது. கும்பகோணத்திலிருந்து தாராசுரம், முழையூர் வழியாக மருதாநல்லூர் செல்லும் பஸ்களில் கொருக்கை என்னும் இடத்தில் உள்ளது..

24.சதயம்.
அருள்மிகு அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில்.
இருப்பிடம்: திருவாரூர் மாவட்டம், நன்னிலத்திலிருந்து நாகப்பட்டினம் செல்லும் வழியில் 10 கி.மீ. தொலைவில் திருப்புகலூர் என்னும் ஊரில் உள்ளது.

25.பூரட்டாதி.
அருள்மிகு திருவானேஷ்வர் திருக்கோயில்.
இருப்பிடம்: திருவையாறிலிருந்து 17 கி.மீ. தூரத்தில் உள்ள திருக் காட்டுப்பள்ளி சென்று, அங்கிருந்து அகரப் பேட்டை செல்லும் ரோட்டில் 2 கி.மீ. தூரம் சென்றால் ரங்கநாதபுரம் என்னும் ஊரில் உள்ளது.

26.உத்திரட்டாதி.
அருள்மிகு சகஸ்ரலட்சுமீஸ்வரர் திருக்கோயில்.
இருப்பிடம்: புதுக்கோட்டையில் இருந்து 40 கி.மீ.தூரத்திலுள்ள ஆவுடையார்கோவில் சென்று, அங்கிருந்து திருப்புவனவாசல் செல்லும் வழியில் 21 கி.மீ தூரத்தில் தீயத்தூர் உள்ளது.  மதுரையில் இருந்து செல்பவர்கள், அறந்தாங்கி சென்று, அங்கிருந்து திருப்புவனவாசல் செல்லும் பஸ்களில் சென்றால் தீயத்தூர் என்னும் இடத்தில் உள்ளது. தூரம் 120 கி.மீ.

27.ரேவதி.
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்.
இருப்பிடம்: திருச்சியிலிருந்து முசிறி (40கி.மீ)சென்று, அங்கிருந்து வேறு பஸ்களில் தாத்தய்யங்கார் பேட்டை(21 கி.மீ) செல்ல வேண்டும். இங்கிருந்து 5 கி.மீ.தூரத்திலுள்ள காருகுடி என்ற ஊரில் இக்கோயில் உள்ளது.
---------------------------------------------------------------------------------------
என்ன சரிதானா?
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

20.3.12

Astrology நேசம் தரும் பூசம்.

சனீஸ்வரன்


Astrology நேசம் தரும் பூசம்.

பூச சனி நேசம் தரும் என்பது பழைய மொழி.

பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆக்கிய 3 நட்சத்திரங்களும் சனி பகவானுக்கு உரிய நட்சத்திரமாகும். அந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு துவக்க திசை சனிதசை ஆகும். அந்த மூன்றில் பூச நட்சத்திரம் சற்று மேனமை யானதாகும்.

சனி பகவான் சூரியனின் மகன். எமதர்மன் சனியின் சகோதரன். சூரியனின் முதல் தாரத்து மகன். அவனுடைய அன்னையின் பெயர் உஷா தேவி.
எப்ப்டியொரு காம்பினேஷன் பாருங்கள். உடல்காரகன், ஆயுள்காரகன், ஆயுளை முடிப்பவன் - என்று என்னவொரு அசத்தலான கூட்டணிக் குடும்பம்
பாருங்கள்.

எமதர்மராஜன் ஒரு முறை தன் சகோதரனான சனீஸ்வரனின் காலில் அடிக்க அது ஊனமானது.(அப்பொழுதே அண்ணன், தம்பி சண்டை இருந்திருக்கிறது.
ஆனால் இந்தச் சண்டை அப்பனின் இருதாரப் பிரச்சினையால் ஏற்பட்டுள்ளது)

Shani is a deva and son of Surya and his wife Chhaya, hence also known as Chayyaputra. He is the elder brother of Yama, the Hindu god of death, who in some scriptures corresponds to the deliverance of justice. Interestingly, Surya's two sons Shani and Yama judge. Shani gives us the results of one's deeds through one's life through appropriate punishments and rewards; Yama grants the results of one's deeds after death.

http://en.wikipedia.org/wiki/Shani

ஊனமான காலுக்கு நிவாரணம் தேடிப் பல சிவத்தலங்களுக்கும் சனீஸ்வரன் சென்றாராம். இத்தலத்திற்கு அவர் வந்தபோது, விளாமரவேரில் கால் இடறி அருகில் உள்ள பள்ளத்தில் விழுந்துவிட்டாரம். அவர் விழுந்தநாள் திருதியைத் திதியும், பூச நட்சத்திரமும், சனிக்கிழமையும் சேர்ந்த நன்னாளாம்.
அவர் விழுந்த இடத்தில் இருந்து, பல காலமாக மறைந்திருந்த பூச ஞானவாவி தீர்த்தம் சுரந்து சனீஸ்வரரை மேல் எழுப்பிக் கரை சேர்த்ததாம். அச்சமயம் சிவபெருமான் அட்சயபுரீஸ்வரராக சனீஸ்வரருக்கு காட்சி தந்து அருள்பாலித்தாராம். சனீஸ்வரரின் ஊனம் நிவர்த்தி ஆனதாம். விளாமரம் இருந்ததாலும், தீர்த்தம் சுரந்ததாலும் இவ்வூர் விளங்குளம் ஆனது.

பூச நட்சத்திர உலகத்தில் வசித்த பூசமருங்கர் என்ற சித்தர், சனீஸ்வர உலகத்திலிருக்கும் சனி தீர்த்தத்தை எடுத்து, பூமியில் பல கோயில்களில் உள்ள தீர்த்தங்களுடன் அதைச் சேர்ப்பாராம். அந்தத் தலங்களில் எல்லாம் சனீஸ்வரருக்கு முக்கியத்துவம் உண்டாயிற்றாம். இந்தப் பூசமருஙக சித்தர் பித்ருக்கள் உலகத்திற்கும் சென்று வரும் அரிய சக்தியை உடையவராம். காக்கைகளுக்கு சற்குருவாக விளங்குகின்றாராம். இவர் தினமும் இத்தலத்தில் வழிபாடு செய்வதாக நம்பப் படுகிறது.

இதை நீங்களும் நானும் நம்புவது முக்கியமில்லை. நம்பாவிட்டாலும் அது முக்கியமில்லை. இதுதான் தல புராணம்.

உலகம் உருண்டையா,  தட்டையா  என்று தெரியாத காலத்தில் ஆர்யபட்டா எப்படி, கிரக சஞ்சாரங்களைத் துல்லியமாகக் கணித்து எழுதி வைத்தானோ, அவனுக்கு அந்த சித்தி அல்லது ஞானம் எப்படிக் கிடைத்ததோ, அதறகு எது அடிப்படையோ, அதே அடிப்படைதான் இந்த சித்தர்களுக்கும். அதை மனதில் வையுங்கள்

ஆரயபட்டா வாழ்ந்த காலத்தில், கணினி, சாட்டிலைட், டெலஸ்கோப், கோளரங்கங்கள் என்று எந்தப் புண்ணாக்கும் இல்லை. அதையும் மனதில்
வையுங்கள்.

பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்கள் நட்சத்திர தினத்தன்று சனி பகவானுக்கு அபிஷேகம் செய்வதோடு, எட்டு முறை சுற்றி வந்து வழிபட்டால் தீராத பிரச்னைகள் எல்லாம் தீரும் என்று நம்பப்ப்படுகிறது.

உடல் நலக்குறைவு உடையவரகள். கடன் பிரச்னையால் அவதிப்படுபவர்கள், மன நிம்மதி வேண்டுபவர்கள், ஊனமுற்றவர்கள், கால் சம்பந்தமான நோய் உள்ளவர்கள், திருமணத்தடை உள்ளவர்கள் விளங்குளம் சென்று சனீஸ்வரரை வழிபட்டு விட்டு வரலாம். நல்ல பலன் கிடைக்கும். இங்கு சனீஸ்வர பகவான் மந்தா, ஜேஷ்டா என்ற இரு மனைவியருடன் திருமணக் கோலத்தில் ஆதி பிருஹத் சனீஸ்வரர் என்ற பெயரில் அனுக்கிரக மூர்த்தியாக அருள்பாலிக்கின்றார். இத்தல அபிவிருத்தி நாயகியை வழிபட்டால் சகல காரியங்களும் அபிவிருத்தியாகும். இத்தலத்தில் நவக்கிரக சன்னதி கிடையாது. அதற்கு பதில் சூரியனும் அவரது புத்திரர் சனிபகவானும் தனித்தனி சன்னதிகளில் அருள் பாலிக்கின்றனர். விநாயகப் பெருமான் இத்தலத்தில் மேற்கு நோக்கி அருள்பாலிக்கின்றார். அவரை வழிபட்டால் அனைத்துக் காரியங்களிலும் வெற்றி (விஜயம்) கிடைக்கும் என்பதால் அவர் விஜய விநாயகர் என்று அழைக்கப்படுகின்றார்.
 
கோவிலின் சுற்றுப் பிரகாரத்தில் விநாயகர், வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான், சண்டிகேஸ்வரர், மனைவியருடன் சனீஸ்வரர், சூரியன், பைரவர், நந்தி, தட்சிணாமூர்த்தி, பிரம்மா, லிங்கோத்பவர், துர்க்கை, கஜலட்சுமி, நாகர், நடராஜர் சன்னதிகள் உள்ளன.
-----------------------------------------
நட்சத்திரக்கோவில்கள் - பகுதி எண் 19
பூச நட்சத்திரம்
அருள்மிகு அட்சய புரீஸ்வரர் திருக்கோயில்

இறையனாரின் பெயர்: அட்சயபுரீஸ்வரர்
அம்பிகையின் பெயர்: அபிவிருத்தி நாயகி
தல விருட்சம்: வில்வமரம்
இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட கோவில்
திருக்கோவில் இருக்கும் இடம்:
பட்டுக்கோட்டையிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் (East Coast Road) 30 கிஇலோ மீட்டர் தூரத்தில் விளங்குளம் பிரிவுச் சாலை. அதில் 2 கிலோ மீட்டர் தூரம் பயணித்தால் இத்திருக்கோவிலை அடையலாம். அல்லது புதுக்கோட்டையில் இருந்து பேராவூரணி செல்லும் சாலையில் சென்றாலும் இத்திருக்கோவிலை அடையலாம்.

முகவரி:
அருள்மிகு அட்சயபுரீஸ்வரர் திருக்கோயில்,
விளங்குளம் - 614 612,
பேராவூரணி தாலுக்கா,
தஞ்சாவூர் மாவட்டம்.
கோவிலின் நடை திறந்திருக்கும் நேரம்:
காலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை
திருவிழாக்கள்: மகாசிவராத்தரி, திருக்கார்த்திகை, திருவாதிரை
   
பூச நட்சத்திரத்காரரர்கள் நல்லெண்ணெய், தேன், பஞ்சாமிர்தம், புனுகு, இளநீர், சந்தனம், பால், தயிர் ஆகிய எட்டு வகை பொருட்களால் சனி பகவானுக்கு அபிஷேகம் செய்து, எட்டு முறை சுற்றி வந்து வழிபட்டால் தீராத பிரச்னைகள் தீரும் என்ற நம்பிக்கை நிலவுகிறது!
 
பூசம் நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் ஜாதக தோஷங்கள் நீங்க இத்தலத்தில் உறையும் இறைவனை வழிபாடு செய்வது நலம் பயக்கும். உடல் ஊனமுள்ளவர்கள், கால் வலி உள்ளவர்கள், தோஷங்களினால் திருமணத்தில் தடை உள்ளவர்கள் ஆகியவர்களும் இங்கே வழிபாடு செய்து நலம் பெறலாம்.

ஒருமுறை சென்று வாருங்கள். வந்த பிறகு பலனைப் பாருங்கள்!

அன்புடன்,
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

19.3.12

Astrology பூராடம் என்றால் எல்லாம் ஆடும்!



Astrology பூராடம் என்றால் எல்லாம் ஆடும்!

பூராடம் நூலாடாது என்ற சொல்லடை திருமண வளையத்திற்குள் மிகவும் பிரசித்தம். பூராட நட்சத்திரத்தில் பிறந்த பெண்ணின் கழுத்தில் நூலாடாது - அதாவது கழுத்தில் தாலி தங்காது என்பார்கள். அதில் உண்மையில்லை. எவனோ வேலை வெட்டியற்றவன் உதிர்த்த சொல்லடை.

பூராட நட்சத்திரத்தில் பிறந்த ஆணின் கழுத்தில் என்ன ஆடாது என்று சொல்லியிருக்க வேண்டுமல்லவா அவன்?

பூராட நட்சத்திரம் சுக்கிரனின் நட்சத்திரம். பூராட நட்சத்திரக்காரர்களுக்கு எல்லாமே ஆடும். சுக்கிரன் என்றாலே ஆட்டம் பாட்டம்தானே ராசா!
தங்கள் ஆட்டம் பாட்டத்தால் யாரையும் வளைத்துப் போட்டு விடுவார்கள்.

பூராட நட்சத்திரப் பெண்களைக் காதலிக்கும் காதலர்களிடம் கேட்டுப் பாருங்கள் தெரியும்!
-----------------------------------------------------------------------
சித்தர் என்றால் யோகத்தின் மூலம் அரிய சக்திகளைப் பெற்றவர். மரபு நெறியில் நில்லாதவர் என்று பொருள். கடுவெளி என்றால் பறந்த வெளி என்று பொருள்.

முற்காலத்தில் கடுவெளிச் சித்தர் என்ற பெயரில் ஒரு தவயோகி இருந்தார். தனது அனுபவங்களை மக்களுக்கு எடுத்துச் சொன்னார். அக்காலத்து மக்களும் அதிசயமாக சொன்னதைக் கேட்டுக் கொண்டார்கள். எதிர்க் கேள்விகள் இல்லாத காலம். சித்தர் என்ற பயத்தாலும் அது இருந்திருக்கலாம்.

ஒருமுறை சிவபெருமானைக் காண வேண்டி அவர் கடும் தவம் மேற்கொண்டார். தஞ்சைத் தரணியில் இருந்து 17 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கடுவெளி என்ற கிராமத்தில் தன் தவத்தை மேற்கொண்டார். அவருடைய தவத்தை மெச்சிய சிவன் அங்கே எழுந்தருளினார். சித்துக்களில் வல்லமைபெற ஆசீர்வதித்தார்.

கதை அத்துடன் முடிந்துவிட்டது.

என்ன சுவாரசியமே இல்லாமல் முடிந்துவிட்டது?

அதற்குப் பிறகுதான் மேட்டர் இருக்கிறது.

தஞ்சையை ஆட்சி செய்த சோழ்மன்னன், சித்தருக்கு அருளிய சிவனாருக்கு அத்தலத்தில் கோவில் ஒன்றைக் கட்டினான். அத்தல சிவன் பஞ்ச பூதங்களில் ஆகாயத்தைக் குறிக்கும் முகமாக அங்கே எழுந்தருளியதால் ஆகாசபுரீஸ்வரர் என்ற் பெயரையும் பெற்றார்

இறையனார் ஆகாசபுரீஸ்வரர் பூராடம் நட்சத்திரத்திற்கு அதிபதியாக அருளுகின்றார். மங்களகரமான வாழ்க்கையைத் தருபவள் என்பதால், அம்பிகைக்கு மங்களாம்பிகை என்று பெயர். ஆகாயவெளியில் உள்ள அனைத்து தேவதைகளும், வாஸ்து பகவானும், பூராட நட்சத்திரநாளில் இங்கே வந்து ஆகாசபுரீஸ்வரரை வழிபடுவதாக நம்பப்படுகிறது.

ஆரம்ப காலத்தில் இக்கோவிலில் கடுவெளிச்சித்தரின் சிலை இல்லை. சில ஆண்டுகளுக்கு முன், இக்கோயிலைத் திருப்பணி செய்தபோது, சித்தரின் சிலை கிடைக்கப்பெற்றதாம். கோவிலின் முன் மண்டபத்தில் அச்சிலையை பிரதிஷ்டை செய்துள்ளார்கள்.

சித்தருக்கு சிவன் காட்சி தந்தபோது, அவருக்காக நந்திதேவர் வெளியே நின்று கொண்டாராம். அதன் காரணமாக இத்தலத்தில் நந்தி பகவான், கோபுரத்திற்கு வெளியே உள்ளார்.

சித்தர் வழிபாட்டில் ஈடுபாடு உள்ளவர்கள் வணங்க வேண்டிய தலம் இது.
--------------------------------------------------------
நட்சத்திரக் கோவில்கள் - பகுதி 18
பூராடம் நட்சத்திரம்
அருள்மிகு ஆகாசபுரீஸ்வரர் திருக்கோயில்
--------------------------------------------------------
இறைவனின் பெயர்: ஆகாசபுரீஸ்வரர்
அம்பிகையின் பெயர்: மங்களாம்பிகை
இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட கோவில்
இருக்கும் இடம்: தஞ்சாவூரில் இருந்து திருவையாறு சென்று, அங்கிருந்து கல்லணை செல்லும் வழியில் 4 கி.மீ., தூரம் சென்றால் கடுவெளியில் உள்ள இத்திருக்கோவிலை அடையலாம். மொத்த தூரம் 17 கிலோ மீட்டர்கள் நடை திறந்திருக்கும் நேரம்: காலை 9-10 மணி வரை, மாலை 5-6 மணி வரை
பூராட ந்ட்சத்திர நாட்களில் காலை 8-1 மணி வரை.
திருவிழாக்கள்: ஐப்பசியில் அன்னாபிஷேகம், தைப்பூசம், சிவராத்திரி, நவராத்திரி, பங்குனி உத்திரம்.

முகவரி:
அருள்மிகு ஆகாசபுரீஸ்வரர் திருக்கோயில்,
கடுவெளி,
திருவையாறு தாலுக்கா,
தஞ்சாவூர் மாவட்டம்.
 
பூராட நட்சத்திரக்காரர்கள் என்று இல்லை. அனைவரும் வணங்க வேண்டிய் தலம் இது. ஒருமுறை சென்று வாருங்கள் இறையருளைப் பெற்று வாருங்கள்

அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

12.3.12

Astrology பொன் காய்க்கும் மரம்!



Astrology பொன் காய்க்கும் மரம்!

பொன்காய்க்கும் மரமா? என்னய்யா சொல்கிறீர்கள் என்று அவசரப்படுபவர்கள் எல்லாம் பதிவை விட்டு விலகவும். மற்றவர்கள் பதிவில் உள்ள செய்திகளைப் பொறுமையாகப் படிக்கவும். படித்து முடித்துவிட்டு ஆராய்ச்சி எல்லாம் செய்ய வேண்டாம். புராணங்களை நம்ப வேண்டும். அவ்வளவுதான்! கேள்வி கேட்க ஆரம்பித்தால் எல்லாப் புராணங்களுமே செல்லாமல் போய்விடும்; சொல்லாமல் போய்விடும்!

நம்பிக்கையின் அடிப்படையில்தான் எல்லாமும் கடை பிடிக்கப்பட்டு வருகின்றன!

இரவு படுக்கின்றோம். காலையில் எழுவோம் என்ற நம்பிக்கையில்தான் படுக்கிறோம். எழுவோம் என்பதற்கு என்ன உத்திரவாதம் (guaranty) இருக்கிறது?
ஆம்னி பஸ்ஸில் பயணிக்கிறோம். முன்பின் தெரியாத ஓட்டுனர். பயணிக்கின்ற ஊருக்குப் போய்ச் சேருவோம் என்ற நம்பிக்கையில்தான் பயணிக்கிறோம். அதற்கு என்ன உத்திரவாதம் இருக்கிறது? அந்த உத்திரவாதத்தை யார் உங்களுக்குக் கொடுக்க முடியும்?

ஏழு நாளில் சிவப்பழகு என்கிறான். நம்பிக்கையோடு பணம் கொடுத்து, கண்ட க்ரீமை எல்லாம் வாங்கிப் பூசிக்கொள்கிறோம். மேனி சிவப்பாக
மாறியிருக்கிறதா? நம்பிக்கையை விடாமல் மேலும் மேலும் பூசுகிறோம். அந்த நம்பிக்கையில் ஒரு பகுதியையாவது புராணங்களின் மேல் வையுங்கள்!

பல விஷயங்கள் நம்பிக்கையில் அடிப்படையில்தான் நடந்து கொண்டிடருக்கின்றன!
----------------------------------------------------
சோழ மன்னன் ஒருவனுக்கு திருமணமாகி நீண்ட காலமாகியும் குழந்தை இல்லை. சிவபக்தனான அவன், தனக்கு பின் சிவசேவை செய்ய ஆளில்லை என்பதை நினைத்து வருந்தினான், அகத்திய முனிவரைச் சந்தித்துத் தன் மனக்குறையைச் சொல்லி அழுதான். திருவரங்குளம் சென்று, அங்கிருக்கும் சிவலிங்கத்தை வணங்கும்படி அவர் கூறி, அவனை அனுப்பி வைத்தார்.

மன்னனும் அத்தலம் சென்று சிவலிங்கத்தைத் தேடி அலைந்தான். அப்பகுதியில்தான் இருக்கும் இடத்தை அரசனுக்கு உணர்த்த, சிவபெருமான் திருவுளம் கொண்டார். அப்போது அப்பகுதியில் பசு மேய்க்கும் இடையர்கள் மூலம் ஒரு தகவலை மன்னன் அறிந்தான். அப்பகுதி வழியாக யாராவது பூஜைப் பொருள்களைக் கொண்டு வந்தால், ஒரு குறிப்பிட்ட இடத்தில் தவறி விழுவதாக அவர்கள் கூறினார்கள். மன்னன் அந்த இடத்திற்குச் சென்று பூமியில் தோண்டிப் பார்த்தான். அப்போது பூமியிலிருந்து ரத்தம் பீய்ச்சியடித்தது. அவ்விடத்தில் ஒரு லிங்கமும் தென்பட்டது. சிவனின் தலையில் கீறிவிட்டோமோ என வருத்தப்பட்ட மன்னன், உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றான். இறைவன் மன்னனை தடுத்தாட்கொண்டு பார்வதியுடன் திருமணக் கோலத்தில் காட்சி கொடுத்து மன்னனுக்கு அருள் புரிந்தார். அந்த இடத்தில் அந்த மன்னன் எழுப்பிய கோயில்தான்  அருள்மிகு ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர் திருக்கோயில்.

ஒரு பூர நட்சத்திர நன்நாளில்தான் அந்த நிகழ்ச்சி நடந்ததாம். அதனால் அது பூர நட்சத்திரக் கோவிலாகக் கொண்டாடப்படுகிறது.

இறைவனின் அருளால் கோயிலைக் கட்டிய மன்னனுக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்து அவனை மகிழ்வித்தது.

பூரதீர்த்தம் என்பது அக்னிலோகத்தில் (அடடா, அப்படி ஒரு உலகம் உள்ளதா?) உள்ள ஒரு புனித தீர்த்தமாகும். பூர நட்சத்திர லோகத்தில் சிவ தீர்த்தம், நாக
தீர்த்தம், ஞான பிரம்ம தீர்த்தம், இந்திர தீர்த்தம், ஸ்ரீதீர்த்தம், ஸ்கந்த தீர்த்தம், குரு தீர்த்தம் ஆகிய ஏழு தீர்த்தங்கள் உள்ளதாம். (அங்கே தண்ணீர்ப்
பிரச்சினையே இருக்காது போல் உள்ளது)

அந்த ஏழு தீர்த்தங்களும் இத்தலத்தில் இருப்பதால் இது பூரம் நட்சத்திரத்திற்குரிய கோயிலானது என்பதும் குறிப்பிடப்பட வேண்டிய செய்தியாகும். பூரம்

நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் பிறந்தநாள், மாதாந்திர நட்சத்திர நாள், திருமணநாள், ஆடிப்பூரம் ஆகிய நாட்களில் இங்கு சென்று வழிபட்டு
நன்மையடையலாம்!

கோவிலின் வெளிப் பிரகாரத்தில் பொற்பனை மரம் ஒன்று அக்காலத்தில் இருந்ததாம். அதிலிருந்து காய்த்த பொற்பழங்கள் மூலம் பணம் பெற்று  இக்கோவில் கட்டப்பெற்றதாகக் கூறப்படுகிறது.

(அப்படியொரு மரம் நம் வீடுகளிலும் இருந்தால் எப்படி இருக்கும்? ரோல்ஸ் ராய்ஸ் கார்தான். பெட்ரோல்? வீட்டிலே பங்க் ஒன்றை வைத்துக்கொண்டு
விடமாட்டோமா?)

ஆனால் தற்போது அந்த இடத்தில் அதன் அடையாளமாக கல் ஸ்தூபி ஒன்று மட்டும் உள்ளது. பதினோராம் நூற்றாண்டில் சோழர்களும், பாண்டியர்களும்
போட்டிபோட்டுக் கொண்டு செய்த திருப்பணியில் உருவான கோயிலாம் இது. இத்தல தீர்த்தம் சிவனது தலையில் இருந்து உருவானதால் ஹரதீர்த்தம் என
அழைக்கப்படுகிறதாம். இத்தலத்தின் பெயரும் திருவரங்குளம் ஆனதாம்!
------------------------------------------
நட்சத்திரக்கோவில் பகுதி - 17
பூர நட்சத்திரத்திற்கான கோவில்
அருள்மிகு ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர் திருக்கோயில்
-----------------------------------------
இறைவனின் பெயர்: ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர் (திருவரங்குளநாதர்)
அம்பிகையின் பெயர்:  பிரஹன்நாயகி (பெரியநாயகி)
தல விருட்சம: மகிழமரம்
தீர்த்தம்: ஹர தீர்த்தம்
கோவில் இருக்கும் இடம்: புதுக்கோட்டையிலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் வழியில் 7ஆவது கிலோ மீட்டரில் திருவரங்குள நாதர் கோவில் உள்ளது.
கோவிலின் நடை திரந்திருக்கும் நேரம்: காலை 7 மணி முதல் 12 மணிவரை. மாலை 5 மணி முதல் 7.30 மணி வரை.
திருவிழாக்கள்: ஆடிப்பூரம் அம்மன் திருக்கல்யாணம், மகா சிவராத்திரி, திருவாதிரை, திருக்கார்த்திகை, வைகாசி விசாகம் ஆகிய நன்நாட்கள்
சிறப்பு: இறைவன் சுயம்பு மூர்த்தியாக கிழக்கு நோக்கி அருள்பாலிக்கின்றார்.

முகவரி:
அருள்மிகு ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர் திருக்கோயில்
திருவரங்குளம்- 622 303
புதுக்கோட்டை மாவட்டம்.
 
சிவனது மூல ஸ்தானத்திற்கு பின்புறம் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியரின் தனி சன்னதி உள்ளது. பிரகாரத்தில் பொற்பனை விநாயகர், அரங்குள விநாயகர், வீணாதர தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை, சண்டிகேஸ்வரர், நந்தி, சதுர்த்தி விநாயகர், சப்த மாதர்கள், 63 நாயன்மார்கள்,  ஐயனார், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, சரஸ்வதி, மகாலட்சுமி, ஜேஷ்டா தேவி, பாலமுருகன், நவகிரகம், பைரவர், சூரியன், சந்திரன், நடராஜர், நால்வர் சன்னதிகளும் உள்ளன.
 
பூரம் நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் ஜாதக தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்யலாம். குழந்தை பாக்கியம் வேண்டுபவர்களும், கிரக தோஷம், நாகதோஷம், மன நோயால் பாதிக்கப் பட்டவர் போன்றோர்கள் இக்கோவிலில் உறையும் அம்பிகையை வழிபடுவது ந்ன்மை பயக்கும்

சென்று வாருங்கள். வந்தபின் கிடைக்கும் நன்மைகளைப் பாருங்கள்!

அன்புடன் 
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

6.3.12

Astrology: நெருப்பில் இட்டது திரும்பக் கிடைத்த இடம்!




Astrology: நெருப்பில் இட்டது திரும்பக் கிடைத்த இடம்!

மகரிஷிகளுக்குக் குறைவில்லாத நாடு நம் நாடு. எத்தனையோ மகரிஷிகள் தோன்றி, வாழ்ந்து, இறைவனடி சேர்ந்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவரான மிருகண்ட மகரிஷி (என்ன பெயருடா சாமி!), அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில் இருக்கும் தலத்தில் இறைவனுக்குப் பெரும் பொருட் செலவில் யாகம் ஒன்றை நடத்தினாராம். யாகத்திற்குத் தேவையான பொருட்களை மக்களும் வழங்கலாம் என்றாராம். மக்கள் ஒன்று சேர்ந்து தங்கம் கலந்த பட்டாடைகள் மூன்றை நெய்து அளித்தனர். ஒன்று இறைவனுக்கு, ஒன்று மிருகண்ட மகரிஷிக்கு, இன்னொன்று தங்கள் மன்னனுக்கு என்றார்கள்.

யாகத்தின் நிறைவில், இறைவனுக்காகக்கு கொடுத்த பட்டாடையையும், தனக்கென்று கொடுத்ததையும் மிருகண்ட மகரிஷி யாக குண்டத்தில் போட்டு விட்டார். நெருப்பில் போடப்பெற்ற பட்டாடைகள் இறைவனை அடைந்து விடுமா என்று மக்கள் மகரிஷியிடம் சந்தேகம் எழுப்பினர். நீங்கள் மூலஸ்தானத்தில் சென்று பாருங்கள், தெரியும் என்றார் மகரிஷி. மக்கள் ஆச்சர்யத்துடன் கோவிலுக்குள் சென்று மூலஸ்தானத்தைப் பார்த்தார்கள். அங்கிருந்த சிவலிங்கத்தின் மேல், யாககுண்டத்தில் போடப்பட்ட பட்டாடைகள் போர்த்தப்பட்டிருந்ததைக் கண்டு வியப்படைந்தார்கள். அவை எப்படி இங்கு வந்தன? என்று மிருகண்ட மகரிஷியிடம் கேள்வி கேட்டனர்.

மகரிஷி மக்களிடம் சொன்னார்: "அக்னியின் பல வகைகளில் பரணி என்னும் ருத்ர அக்னியும் ஒரு வகை. அந்த அக்னியில் இறைவனுக்கு நாமிடும் பொருட்களை அது அவரிடம் கொண்டு சேர்க்கிறது"

அதன் காரணமாகவே இத்தலம் பரணி நட்சத்திரத்திற்கு உரிய கோயிலாகக் கொண்டாடப் படுகிறது!

குலோத்துங்க சோழனின் மகனான இரண்டாம் ராஜராஜ சோழன் இப்பகுதியை ஆட்சி செய்த காலத்தில் இத்திருக்கோயில் கருவறை கருங்கல்லால் கட்டப்பெற்றது. இன்று நல்லாடை எனறு அறியப்படும் இந்த ஊர், முற்காலத்தில், ஜெயங்கொண்ட சோழநாட்டில் குறும்பூர் நாட்டில் நல்லாடை மங்களமான குலோத்துங்க சோழபுரம் என வழங்கப்பட்டதாக கல்வெட்டில் குறிப்பிடப் பெற்றுள்ளது. தற்போது அக்னீஸ்வரர் என அழைக்கப்படும் மூலவர் புராண காலத்தில் திருவன்னீஸ்வரம் உடையார் என்ற பெயரில் வணங்கப் பெற்றுள்ளார்.

அக்காலத்தில் இக்கோயிலில் சித்திரை விசாகத் திருவிழாவும், மார்கழி திருவாதிரை திருவிழாவும் சிறப்பாக நடைபெற்றுள்ளன!

கோவில் இரண்டு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. கோயிலின் மூன்று பக்கத்திலும் கோபுரத்துடன் கூடிய வாசல்கள் அமைந்துள்ளது. கோயில் பிரகாரத்தில் துவார விநாயகர், பால முருகன், செல்வ விநாயகர், மகா விஷ்ணு, சோமாஸ்கந்தர், மகாலட்சுமி, சனிபகவான், கைலாசநாதர், கல்யாணி, புவனேஸ்வரி, சண்டிகேஸ்வரர், வீரபத்திரர், தட்சிணாமூர்த்தி, சூரியன், பைரவர், துர்க்கை சன்னதிகள் உள்ளன. இங்கு சிவனே நவகிரக நாயகனாக இருப்பதால், இத்தலத்தில் நவக்கிரக சன்னதி கிடையாது. செம்பனார் கோவில், கீழப்பரசலூர், திருக்கடையூர், திருநள்ளாறு ஆகிய சிவத்தலங்கள் இத்தலத்தின் அருகில் உள்ளன.
-------------------------------------------------
நட்சத்திரக் கோவில்கள் - பகுதி 16
பரணி நட்சத்திர கோவில்
நட்சத்திர வரிசையில் இது இரண்டாவது நட்சத்திரம்.
சுக்கிரனுக்கு உரிய நட்சத்திரம
இந்த நட்சத்திரக்காரர்களுக்கு உரிய கோவில்:
அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில்
நல்லாடை கிராமம். நாகபட்டினம் மாவட்டம்
------------------------------------
சுவாமியின் பெயர்: அக்னீஸ்வரர்
அம்பிகையின் பெயர்: சுந்தரநாயகி
தல விருட்சம் : வன்னி, வில்வம்
ஆயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட கோவில்
மயிலாடுதுறையிலிருந்து காரைக்கால் செல்லும் வழியில் நல்லாடை உள்ளது.
தூரம் 15 கிலோ மீட்டர்கள்

முகவரி:
அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில்,
நல்லாடை-609 306
தரங்கம்பாடி தாலுக்கா,
நாகப்பட்டினம் மாவட்டம்.
காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை

திருவிழாக்கள்: ஐப்பசி அன்னாபிஷேகம், கார்த்திகை சோமவாரம், மார்கழி தனுர்பூஜை, தைப்பூசம், மகா சிவராத்திரி, பங்குனி உத்திரம், ஆருத்திரா தரிசனம்.

இத்தல இறைவன் மேற்கு நோக்கி அருள்பாலித்தவாறு அமர்ந்திருப்பது முக்கிய சிறப்பாகும். மூலஸ்தானத்தில் உள்ள லிங்கத்தை சுற்றி ஒரு தாழ்வான பகுதி உள்ளது. சுவாமி அக்னீஸ்வரர் அக்னி சொரூபமாக உள்ளதால் அதனை தணிக்கும் வகையில் அந்த தாழ்வான பகுதியில் தண்ணீர் ஊற்றப்பட்டு இருப்பது தலத்தின் மற்றுமொரு சிறப்பாகும்.

பரணி நட்சத்திரக்காரர்கள் நல்லாடை அக்னீஸ்வரர் தலம் சென்று வழிபாடு செய்வது நன்மை பயக்கும். பரணியில் பிறந்தவர் தரணி ஆள்வர் என்பது பழமொழி. இங்கு சிவன் அக்னி சொரூபமாக திகழ்வதால், பரணி நட்சத்திரக்காரர்கள் இவருக்கு ஹோமம் செய்து வழிபடுவது சிறப்பு. குறிப்பாக, கார்த்திகை மாதம் பரணி நட்சத்திரத்தன்று ஹோமம் செய்தாலரிரண்டு மடங்கு பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.  இறைவனுக்கே ஆடை நெய்து கொடுத்த காரணத்தினால் இத்தலம் நெய்தலாடை என வழங்கப்பட்டு, நாளடைவில் மருவி நல்லாடை ஆகிவிட்டதாம்

பரணி நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் ஜாதக தோஷங்கள் மற்றும் கஷ்டங்கள்  நீங்க இத்தல இறைவனை வழிபடலாம். திருமணத்தடை நீங்க, குழந்தை பாக்கியம் கிடைக்க, கல்வியில் சிறந்து விளங்க, வியாபாரம் செழிக்க, மற்ற நட்சத்திரக்காரர்களும் இங்கே உறைகின்ற இறைவனை வழிபட்டுப் பயனடையலாம்

அன்புடன்
வாத்தியார்
++++++++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்!

5.3.12

Astrology: மாயக் கண்ணன் செய்த மாய லீலை!



Astrology: மாயக் கண்ணன் செய்த மாய லீலை!

காலபைரவர், அதாங்க காலதேவன், ஒரு பூரட்டாதி நட்சத்திர நன்நாளில்தான் ஏழு கிழமைகளைப் படைத்தாராம். அவ்வாறு, காலச்சக்கரத்தை படைத்தருளிய தலம் இன்று அருள்மிகு திருவானேஷ்வர் திருக்கோயில் இருக்கும் இடம் என்று கோவிலின் தலபுராணம் கூறுகிறது. மூலவர் விமானம் கஜகடாட்ச சக்தி விமானம் எனப்படுகிறது. ஐராவத யானையும், தேவர்களின் தலைவன் இந்திரனும் பூரட்டாதி நாளில் இங்கு வந்து வழிபாடு செய்கின்றனராம். எல்லாம் நம்பிக்கைதான். அதற்காக ஒரு வீடியோ காமெராவுடன் சென்றால் படம் பிடித்து ஃபேஸ் புக்கில் போட முடியுமா என்ன?

இறையனார் திருவானேஸ்வரர் கிழக்கு நோக்கியும்  அம்பாள் காமாட்சி அம்மன் தெற்கு நோக்கி நின்ற கோலத்திலும் அருள்பாலிக்கின்றனர். வலம்புரி விநாயகரும், சண்டிகேஸ்வரரும் புடைப்பு சிற்பமாக உள்ளனர். பிரகாரத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், கஜலட்சுமி, துர்க்கை, பிரம்மா, நவக்கிரகம், நந்தி சன்னதிகள் உள்ளன. சுவாமிக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் அணிவித்து நேர்த்திக்கடனைச் செய்ய விரும்புகிறவர்கள் செய்யலாம்.

ஜாதகத்தில் மதிகாரனாகிய சந்திரனுக்கும், வித்யாகாரனாகிய புதனுக்கும் முக்கியத்துவம் உண்டு. சந்திரன் மதியை ஆள்பவர், புதன் அறிவை ஆள்பவர். பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள் நல்ல மனம், சிறந்த புத்திகூர்மை பெற்று வலம்வர, பூரட்டாதி நட்சத்திர நாளில் இங்கு வழிபாடு செய்வது நன்மை தரும்!

கல்விக்குரிய ஸ்தலம் இது. கல்வியறிவு என்றால் அனைவருக்கும் நினைவில் வருவது தர்மனின் தம்பி சகாதேவனைத்தான். மகாபாரதத்தில் கிருஷ்ணரே வியக்கும் வகையில் நல்லறிவு கொண்டவனாக பாண்டவர்களில் கடைசி தம்பியான சகாதேவன் விளங்கினான். அவன் ஜோதிட அறிவு கொண்டவன். பாரத யுத்தம் துவங்கும் முன்பு, துரியோதனன் அவனைத் தேடி வந்து, எந்த நாளில் போரைத் துவங்கினால் வெற்றி கிடைக்குமென அவனிடமே கேட்டான். தன்னை எதிர்த்து போரிட, தன்னிடமே ஆலோசனை கேட்க வந்த துரியோதனனை ஏமாற்ற சகாதேவன் விரும்பவில்லை. அமாவாசை அன்று போர் துவங்கினால் வெற்றி உனக்கே என அவன் நாள் குறித்துக் கொடுத்தான். அவனது கணிப்பு தப்பியதில்லை.

ஆனால், கிருஷ்ணர் தன் மாயத்தால் அமாவாசையை முந்தச் செய்து, துரியோதனனைத் தோற்கடித்தார். இவ்வாறு எதிரியை வெறுக்காத குணமும், உண்மையாகவும் நடந்து கொள்ளவும், சகாதேவன் போல் சாஸ்திர ஞானம் பெறவும் இங்கு வழிபடலாம்.

கிருஷ்ணர் எப்படி அமாவாசையை ஒரு நாள் முந்தச் செய்தார் என்பத்ற்கு சுவாரசியமான கதையொன்று உண்டு. யுத்தம் நடந்து கொண்டிருந்த போது, அமாவாசைக்கு முதல் நாள், கிருஷ்ணர் நதிக்கரையில் அமர்ந்து திதி கொடுப்பதற்குத் தயாராகிவிட்டார். திகைத்துப்போன சூரியனும், சந்திரனும் ஒன்றாக அங்கே தோன்றி, ஒரு சேர அவரிடம் கேட்டனர்:

"பகவானே! நாளை அல்லவா அமாவாசை?"

கிருஷ்ணர் எதிர்க் கேள்வி கேட்டார்: "நீங்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் தினம்தானே அமாவாசை?"

"ஆமாம்" என்று இருவரும் பதில் அளித்தனர்.

கிருஷ்ணர் புன்னகைத்தார்." இப்போது நீங்கள் இருவரும் ஒன்றாகத்தானே இருக்கிறீர்கள்?"

அப்போதுதான் அவ்விருவருக்கும் அந்த மாயக் கண்ணனின் லீலை புரிந்த்து.
-----------------------------------------------------
நட்சத்திரக் கோவில்கள் பகுதி 15
பூரட்டாதி நட்சத்திரத்திற்கான கோவில்
பூரட்டாதி நட்சத்திரம். நட்சத்திர வரிசையில் இது 25ஆவ்து நட்சத்திரம்
அருள்மிகு திருவானேஷ்வர் திருக்கோயில்
----------------------------------------
சுவாமியின் பெயர்: திருவானேஷ்வர்
அம்பிகையின் பெயர்: காமாட்சி அம்மன்
ஆயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட கோவில்
திருவையாறிலிருந்து 17 கி.மீ. தூரத்தில் உள்ள திருக்காட்டுப்பள்ளி சென்றால்,
அங்கிருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் இத்திருக்கோவில் உள்ளது
மாதம் தோறும் பூரட்டாதி நட்சத்திர நாளில் சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது

முகவரி
அருள்மிகு திருவானேஷ்வர் திருக்கோயில்
ரங்கநாதபுரம் போஸ்ட்- 613 104
திருக்காட்டுப்பள்ளி வழி,
திருவையாறு தாலுகா,
தஞ்சாவூர் மாவட்டம்.
கோவில் ந்சடை திறந்திருக்கும் நேரம்:
காலை 7 மணி முதல் 9 மணி வரை,
மாலை 5.30 மணி முதல் இரவு 7 மணி வரை

பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள ஜாதக தோஷங்கள், மற்றும் க்‌ஷ்டங்கள் நீங்க இத்தலத்திற்குச் சென்று அங்கு உறைகின்ற இறைவனை வழிபட்டு விட்டு வரலாம். இசையில் ஞானம்பெற விரும்புகிறவர்களும் இத்தலத்து இறைவனை வழிபடலாம். நல்ல பலன் கிடைக்கும்

அன்புடன்
வாத்தியார்
++++++++++++++++++++

வாழ்க வளமுடன்!

29.2.12

Astrology முருகப்பெருமானைத் தன் பிள்ளையாக்கிக் கொண்ட பெருமாட்டி!



Astrology முருகப்பெருமானைத் தன் பிள்ளையாக்கிக் கொண்ட பெருமாட்டி!

ஒரு காலத்தில தென்காசிக்கு அருகில் உள்ள திருமலைக் கோவில் என்னும் திருக்கோவிலில் ஒரு வேல் மட்டும்தான் இருந்ததாம்.. பூவன்பட்டர் என்ற பெயரை உடைய அர்ச்சகர் ஒருவர் அவ்வேலுக்கு நித்திய பூஜை செய்து வந்தாராம். ஒரு நாள் முருகப்பெருமான் அவருடைய கனவில் வந்து, "இந்த மலை எனக்குச் சொந்தமானது. நான் அருகில் உள்ள கோட்டைத் திரடு என்னும் கிராமத்தில் சிலை வடிவிலலுள்ளேன். எறும்புகள் சாரை சாரையாக செல்லும் ஒரு குழியைத் தோண்டினால் நான் கிடைப்பேன். அதை எடுத்து வந்து இந்த மலையில் பிரதிஷ்டை செய்து வழிபடுவாயாக" என்று உத்தரவிட்டாராம்.

அந்தப் பகுதியில் அப்போது இருந்த சிற்றரசனுக்குத் தகவலைச் சொல்லிவிட்டு, பூவன் பட்டர் முருகன் சிலையை எடுத்து வந்து பிரதிஷ்டை செய்தாராம்.

பிற்காலத்தில், பந்தளத்தை ஆண்ட ராஜாக்கள். கேரள எல்லையில் உள்ள திருமலைக் கோயிலையும் புதுப்பித்துக் கட்டினர்களாம். இக்கோவிலில் 623 படிகள் உள்ளன. அவை அனைத்தும், கந்த கோட்டப் பித்ருக்கள் உறையும் தேவ படிக்கட்டுக்கள் என்கிறார்கள். ஆகவே முன்னோருக்கு இங்கே சென்று தர்ப்பணம் செய்தால் நமது சந்ததி தழைக்கும் என்பது காலம் காலமாக நிலவி வரும் நம்பிக்கை. ஆகவே நம்பிக்கைகளைக் கேள்வி கேட்காமல் செய்தியை மட்டும் உள்வாங்கிக் கொள்ளுங்கள்.

இக்கோயிலின் அர்ச்சகர் பூவன்பட்டர், கோட்டைத்திரடு சென்று முருகப்பெருமான் சுட்டிக்காட்டிய இடத்தைத் தோண்டிப் பார்த்த போது, முருகன் சிலையில் மூக்கில் கடப்பாரை பட்டு, சிறு துளி உடைந்து விட்டது. அந்த உடைசலுக்குப் பிறகுகூட பார்ப்பதற்குச் சிலை அழகாக இருந்தது. கிராமத்து மக்கள் இதைப் பார்த்து முருகன் என்பதற்குப் பதிலாக மூக்கன் என்ற செல்லப்பெயரை சுவாமிக்கு வைத்து விட்டார்களாம். நெல்லை மாவட்ட கிராமங்களில் குழந்தைகளுக்கு மூக்கன், மூக்காயி, மூக்கம்மாள் என்ற பெயர்கள் சூட்டப்படுவது இன்றும் வழக்கத்தில் உள்ளது. அது திருமலை முருகனின் பெயர். மேலும், சிலருக்கு குழந்தை பிறந்து, தொடர்ந்து இறந்து கொண்டே இருந்தால் மூக்கு குத்தி, மூக்கன் என பெயரிடுவதாக வேண்டிக் கொண்டால் அந்தக் குழந்தை பிழைத்துக் கொள்ளும் என்பது நீண்டகால நம்பிக்கை. ஆண் குழந்தைகளும் பதினைந்து வயது வரைகூட மூக்கு குத்தியிருப்பதை இப்பகுதியில் நீங்கள் பார்க்க முடியும்.

பிரபல ஐயப்ப ஸ்தலங்களான ஆரியங்காவு, அச்சன் கோவில், குளத்துப்புழை ஆகியவைகள் இப்பகுதியில்தான் உள்ளன.

சிவகாமி பரதேசி என்ற அம்மையார் இங்கு மண்டபம் எழுப்ப கற்களை கீழிருந்தே வாழைமட்டையில் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றி அதை மலையில் இழுத்துக் கொண்டே சென்று சேர்த்தார் என்பது சிறப்புச் செய்தி!

இக்கோயிலில் திருப்பணி நடந்த காலத்தில், கல்தூண்களையும், உத்தரங்களையும் மலையின் மீது இழுத்து செல்ல யானைகள் பயன்படுத்த பட்டனவாம். கனமான பெரிய கயிறுகள் கிடைக்காத அக்காலத்தில், பனைநார் கயிறுகள் மூலம் உத்தரங்கள் மேலே இழுக்கப்பட்டனவாம். சில நேரங்களில் கட்டு அவிழ்ந்து தூண்கள் கீழே விழுவதுண்டாம். தூண்கள் பயங்கர வேகத்துடன் கீழ்நோக்கி உருண்டு வரும்போது, அப்பகுதியில் வசித்த துறவியான சிவகாமி அம்மையார் என்பவர் தன் உயிரையும் பொருட் படுத்தாது முருகா எனக்கூறிக்கொண்டு தன் தலையைக் கொடுத்து உருண்டு வரும் தூணைத் தடுத்து நிறுத்துவாராம்.  மறுபடியும் அந்த தூண்கள் மேலே இழுக்கப்படும்வரை தன் தலையால் தாங்கியபடி இருப்பாராம். அப்படி அற்புத சாதனைகளை நிகழ்த்தும் சக்தியை முருகப்பெருமான் அவருக்கு அருளியிருந்தார் என்பார்கள். மேலும், வாழைமட்டைகளில் கற்களை ஏற்றிக்கொண்டு, மலை உச்சிக்கு இழுத்துச் சென்று கொடுத்துத் திருப்பணிக்கு உதவியுள்ளார். அவருக்கு அக்கோவிலில் சிலை இருக்கிறது.

சிவகாமி அம்மையார், இக்கோவில் இருக்கும் பண்பொழி கிராமத்திற்கு அருகில் உள்ள அச்சன்புதூரில் வசித்து வந்தாராம். அவரது கணவரின் பெயர்
கங்கைமுத்து தேவர் அத் தம்பதியருக்குக் குழந்தை இல்லை. திருமலை முருகனை வணங்கி, குழந்தை வரம் வேண்டினார் சிவகாமி அம்மையார். கோயிலில் கல் மண்டபம் ஒன்றை அமைக்கவும் அவர் முடிவு செய்தார். அதற்கான கற்களை அடிவாரத்தில் இருந்து வாழை மட்டையில் ஏற்றி, மேலே இழுத்துச் செல்வார். அப்படிப்பட்ட வைராக்கியமான பக்தி அவருடையது.

அவ்வளவு சேவை செய்தும் அவருக்கு பிள்ளை பாக்கியம் கிடைக்கவில்லை. தான் கட்டிய கல்மண்டபத்தில் வந்து தங்கிய ஒரு மகானிடம் தன் குறையைத் தெரிவித்தார். அந்த மகான் அவரிடம், இந்த திருமலை முருகனையே உன் குழந்தையாக ஏற்றுக்கொள், என்றதும், அதை ஏற்றுக் கொண்டு, கோவிலுக்கு தன் சொத்துக்களை எழுதி வைத்தாராம்.

 மேலும், புளியரை என்ற கிராமத்தில் முருகனுக்கு சொந்தமாக இருந்த சொத்துக்களை அனுபவித்து வந்த சிலர் மீது, திருவனந்தபுரம நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, கல்வெட்டு ஆதாரங்களைக் காட்டி அவற்றை மீட்டு தன் பிள்ளையான முருகனுக்கே சேர்த்தாராம் அந்த கல்வெட்டின் நகல்படிவம் இப்போதும் உள்ளது. இந்த அம்மையார் முருகனுக்கே தொண்டு செய்து துறவு பூண்டதால் சிவகாமி பரதேசி அம்மையார் என்று அழைக்கப்பெற்றார்.
------------------------------------------------
நட்சத்திரக் கோவில்கள் - பகுதி 14
விசாக நட்சத்திரம். நட்சத்திர வரிசையில் 16ஆவ்து நட்சத்திரம்
வி என்றால் மேலான என்றும், சாகம் என்றால் ஜோதி என்றும் பொருள்படும். 
அருள்மிகு திருமலைக் கோவில்
விசாக நட்சத்திரக்காரர்களுக்கான கோவில்
-----------------------------
அருள்மிகு திருமலைக்குமாரசுவாமி திருக்கோயில்,
பண்பொழி கிராமம் - 627 807,
செங்கோட்டை தாலுகா,
திருநெல்வேலி மாவட்டம்.
கோவிலின் நடை திறந்திருக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 1 மணி வரை,
மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை
திருவிழாக்கள்:  சித்திரை முதல் தேதி படித்திருவிழா, வைகாசி விசாகம், கந்தசஷ்டி, கார்த்திகையில் தெப்பம், தைப்பூசம்.
இறைவனின் பெயர்: முத்துக்குமாரசுவாமி
ஆயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட கோவில்
செங்கோட்டையில் இருந்து 7 கிலோமீட்டர் தூரத்திலும், தென்காசியில் இருந்து 15 கிலோமீட்டர் தூரத்திலும் இத்திருத்தலம் உள்ளது.
 
விசாகம் நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு உள்ள ஜாதக தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்யலாம். கேட்பதைக் கொடுப்பார் முருகப்
பெருமான். அந்த நம்பிக்கையோடு சென்று வழிபடுங்கள்

அன்புடன்,
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்!

27.2.12

Astrology வாணிக்குக் கை கொடுத்த வாணியம்பாடி!




Astrology வாணிக்குக் கை கொடுத்த வாணியம்பாடி!

சென்னையில் இருந்து சேலம் செல்லும் ரயில் வழித்தடத்தில், ஜோலார் பேட்டைக்கு முன்னதாக இருக்கும் ஊர் வாணியம்பாடி. சென்னையில் இருந்து அந்த ஊரின் தூரம் சுமார் 200 கிலோமீட்டர்கள். அங்கிருந்து ஜோலார் பேட்டை சுமார் 15 கிலோமீட்டர் தூரம். ரம்மியமான ஊர். பாலாறு ஓடிக்கொண்டிருக்கிறது.

அருகில் ஏலகிரி மற்றும் ஜவ்வாது மலைகள் உள்ளன. கடல் மட்டத்தில் இருந்து 1,200 அடிகள் உயரத்தில் உள்ள ஊர். தோல் பதனிடுதல், மற்றும் தோலால் செய்யப்படும் ஆடைகள், கையுறைகள் போன்ற பொருட்களால் அறியப்படும் ஊர்.

பலருக்கும் தெரிந்த ஊர்தான். ஆனாலும் அந்த ஊரின் பெயர்க் காரணம் ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும்!

உங்களுக்குத் தெரியுமா?

வாருங்கள், இன்று அதைத் தெரிந்து கொள்வோம்!
------------------------------------------
நட்சத்திரக் கோவில்கள் - பகுதி 13
புனர்பூச நட்சத்திரம்
நட்சத்திர வரிசையில் ஏழாவது நட்சத்திரம். குரு பகவானுக்கு உரிய நட்சத்திரம். ஸ்ரீராமர் அவதரித்த நட்சத்திரம் இது.
அருள்மிகு அதிதீஸ்வரர் திருக்கோயில், வாணியம்பாடி,
----------------------------------
த்ற்பெருமை பேசலாமா? அதுவும் படைக்கும் தொழிலைக் கொண்ட பிரம்மா பேசலாமா? அவருக்குப் போதாத நேரம், பேசினார். யாருடன் பேசினார்? தன்
அன்பு மனைவி சரஸ்வதி தேவியாரிடம் பேசினார்.

"மாதா, பிதா, குரு, தெய்வம் என்பதைப்போல, மக்கள், பிரம்மா, விஷ்ணு, சிவன் எனறு எனது பெயரைத்தான் முதலில் கூறுவார்கள்.ஏனென்றால்
உயிர்களைப் படைக்கும் நான்தான் அவர்கள் இருவரையும் விடப் பெரியவன்"

அதைக்கேட்டு கலைமகள் சிரித்து விட்டார். அது அவருக்குப் போதாத நேரம்.

கோபம் கொண்ட பிரம்மா, தன் மனைவியை சபித்து, பேசும் சக்தியற்றவளாகி விட்டார்.

வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பவளுக்கு, வீணை செய்யும் ஒலியில் இருப்பவளுக்கு, பேசும் சக்தியில்லை என்றால் என்ன ஆகும்? கொடுமையல்லவா?

வருத்தமடைந்த சரஸ்வதி, அவரைப் பிரிந்து பூலோகத்திற்கு வந்துவிட்டார். வந்தவர் சிருங்கேரியில் யாரும் அறியாத இடத்தில் இருந்து தவம் செய்யத் துவங்கி விட்டார்.

சரஸ்வதி தேவியார் தவமிருந்த சிருங்கேரியின் தற்போதைய தோற்றம்
சிருங்கேரி, கர்நாடக் மாநிலத்தில் சிக்மகளூர் மாவட்டத்தில் உள்ள மலை வாசக ஸ்தலம். துங்கபத்ரா நதி ஓடிக்கொண்டிருக்கும் ரம்மியமான இடம்.
பிற்காலத்தில் ஆதி சங்கரர் அந்த ஸ்தலத்தில் 12 ஆண்டுகள் தங்கி தன் சீடர்களுக்குப் போதனைகள் செய்த இடம்.

தேவியைப் பிரிந்த பிரம்மா, பல சிரமங்களுக்கிடையே தேடி கடைசியில் சிருங்கேரியில் அவரைக் கண்டுபிடித்தார். சமாதானம் செய்து தன்னுடன் அழைத்துச் சென்றார். அப்படிச் செல்கையில், வழியில், பாலாற்றின் வடகரையில் அமைந்துள்ள சிவாலயத்தில் ஒரு நாள் தங்கினார். அதனால் மகிழ்ந்த சிவபெருமானும், பார்வதியும் சரஸ்வதிக்கு அருள்செய்து, மீண்டும் பேசும் சக்தியைக் கொடுத்ததுடன், அவரைப் பாடும்படி கேட்டுக்கொண்டனர். வாணியும் பேசும் சக்தி பெற்று தன் இனிய குரலில் பாடினார். (கலை) வாணி பாடிய தலம் என்பதால், அந்த இடம் வாணியம்பாடி ஆனது. 
-----------------------------------------------------------------------------
இறைவனாரின் பெயர்: அதிதீஸ்வரர்
அம்பிகை: பெரியநாயகி,
தல விருட்சம் : வில்வ மரம்
தீர்த்தம் : சிவதீர்த்தம்
ஆயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட கோவில்
புராணப் பெயர் : வாணியம்மைபாடி 
தற்போதையப் பெயர்: வாணியம்பாடி
மாவட்டம் : வேலூர்
திருவிழாக்கள்: சித்திரை பிரமோற்சவம், மகா சிவராத்திரி, திருவாதிரை
கோவிலின் நடை திறந்திருக்கும் நேரம்:
காலை 6.30 மணி முதல் 10.30 மணி வரை,
மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை .

முகவரி:
அருள்மிகு அதிதீஸ்வரர்
வாணியம்பாடி,
வேலூர் மாவட்டம்.

புனர்பூசம் நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்யலாம். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கவும்,
திக்குவாய், ஊமைத்தன்மை நீங்கவும் மக்கள் இங்கு வந்து பிரார்த்தனை செய்கிறார்கள்.

ஒருமுறை சென்று வாருங்கள். வந்தபிறகு பலனைச் சொல்லுங்கள்.

அன்புடன்
வாத்தியார்  
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++=

வாழ்க வளமுடன்!

21.2.12

Astrology ரேவதிசந்திரன்



Astrology ரேவதிசந்திரன்

ஆஷா கேளுன்னி குட்டி என்ற நடிகை திருமதி ரேவதியை நமக்கெல்லாம் தெரியும். இருபது ஆண்டுகளுக்கு முன்பு இயக்குனர் பாராதிராஜா அவர்கள்
தன்னுடைய மண்வாசனை என்ற வெற்றிப் படத்தில் அவரை நமக்கு அறிமுகம் செய்து வைத்தார். பிறகு உதயகீதம், வைதேகி காத்திருந்தாள்,மெளனராகம்,
அரங்கேற்றவேளை போன்ற பல வெற்றிப்படங்களில் தன் நடிப்பால் கலக்கியவர் அவர்.

யார் அவர் ரேவதி சந்திரன்?

27 நட்சத்திரத் தேவியர்களில் ஒருவர்தான் அவர். மக்களுக்கு அழகைக் கொடுக்கக்கூடிய சந்திர பகவானை விரும்பி (உங்கள் மொழியில் சொன்னால்
காதலித்து) மணந்து கொண்டவர் அவர்.

சந்திரனை மணந்து கொண்டதால் அவர் ரேவதிசந்திரனாகிவிட்டார்

இன்று அவரைப்பற்றிப் பார்ப்போம்!
------------------------------
நட்சத்திரக் கோவில்கள் - பகுதி 12
ரேவதி நட்சத்திரம்
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்
-----------------------------------
முன்னரே 26 நட்சத்திர தேவிகளை மணந்த சந்திர பகவான்,சும்மா இருக்காமல் கடைசி நட்சத்திர தேவியான ரேவதியையும் மணந்தார். வந்தவள், தன்
நாயகனோடு சேர்ந்து, சிவபெருமானையும் பார்வதி தேவியையும் தரிசிக்க விரும்பினாள். கருணை கொண்ட அம்பிகை காட்சி கொடுத்தார். அந்த இடமே
இத்தலத்தில் சிவனாருக்கு ஒரு கோவிலுடன் சிறப்புப் பெற்றது.

மேகங்கள் எல்லாம் ரேவதி நட்சத்திர நாளில் இங்கு வழிபாடு செய்கின்றன வாம். எனவே ரேவதி நட்சத்திரத்தன்று இங்கு வருண பகவானுக்குப் பிரார்த்தனை செய்தால், மழை பெய்யும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. தட்டுப்பாடின்றி விவசாயத்திற்கும், குடிநீர் தேவைகளுக்கும் தண்ணீர் கிடைக்கு மெனற நம்பிக்கை நிலவுகிறது. விவசாயிகள் பெருமளவில் வந்து வணங்கிச் செல்லும் கோவிலாகும் இது

காசிக்கு அடுத்து காருகுடி என்ற சொல்லடைலை இத்தலத்திற்கு ஏற்பட்டுள்ளது. காசிக்கு இணையான தலம் என இதனைப் போற்றுகின்றனர். நோய் தீர்க்கும் தலம் எனவும் பெயர் பெற்றுள்ளது.

முற்காலத்தில் நாமக்கல்லிற்கு அருகில் உள்ள கொல்லிமலையை ஆட்சி செய்த வல்வில் ஓரி என்ற மன்னன் இக்கோயிலை புதுப்பித்துக் கட்டியுள்ளான்.
பிரகாரத்தில் விநாயகர், முருகன், காசி விசாலாட்சி, குங்குமவல்லி, அகோர வீரபத்திரர், கால பைரவர், கபால பைரவர், சூரியன், சந்திரன், நவக்கிரகம்,
நந்தி, தட்சிணாமூர்த்தி, பிரம்மா, விஷ்ணு, கோமு துர்க்கை, சண்டிகேஸ்வரர் சன்னதிகள் உள்ளன.

அந்தக் கோவில்தான் ரேவதி நட்சத்திரக்காரர்களுக்கு உரிய கோவிலாகும்
-------------------------------------------------
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்
சுவாமியின் பெயர்: கைலாசநாதர்
அம்பிகையின் பெயர்: கருணாகரவல்லி
சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கின்றார்
ஆயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட கோவில்

 
கோவிலின் விலாசம்:
அருள்மிகு கைலாச நாதர் திருக்கோயில்
காருகுடி கிராமம் - 621 210
தாத்தயங்கார் பேட்டை அருகில்,
முசிறி தாலுக்கா,
திருச்சி மாவட்டம்.

கோவிலின் நடை திறந்திருக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை

திருச்சியிலிருந்து 40 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் முசிறி நகருக்குச் சென்று, அங்கிருந்து 21 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தாத்தய்யங்கார் பேட்டைக்குச் செல்ல வேண்டும். அந்த ஊரில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள காருகுடி கிராமத்திற்குச் சென்றால கோவிலை அடையலாம்.

ரேவதி நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள ஜாதக தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்யலாம். மற்ற நட்சத்திரக்காரர்களும் இத்தல இறைவனை வணங்கலாம். இக்கோவிலில் பிரதட்சணம் செய்தால் பாவங்கள் விலகும் என்பதும், சிவனுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது நம்பிக்கை. நம்பிக்கையைக் கேள்வி கேட்காமல் சொல்லியுள்ளபடி பிரார்த்தனையை மட்டும் செய்யுங்கள்

ஒருமுறை சென்று வாருங்கள். வந்தபிறகு பலனைச் சொல்லுங்கள்.

அன்புடன்
வாத்தியார்  
++++++++++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்!

15.2.12

Astrology சேவைக்கு ஏற்பட்ட சோதனை!

ஸ்ரீவரதராஜப் பெருமாள்

திருக்கோவிலின் முகப்புத் தோற்றம்
Astrology சேவைக்கு ஏற்பட்ட சோதனை!

நட்சத்திரக் கோவில்கள் - பகுதி 11
கேட்டை நட்சத்திரம்
அருள்மிகு வரதராஜப் பெருமாள் திருக்கோவில்
-----------------------------------
ஆழ்வார்களில் முதன்மையானவர் ராமானுஜர். சென்னைக்கு அருகிலுள்ள ஸ்ரீபெரும்புதூரில் பிறந்த அவர், சுமார் 120 ஆண்டு காலம் வாழ்ந்தவர்.
1,017 ஆம் ஆண்டுமுதல் 1,137ஆம் ஆண்டுவரை வாழ்ந்தவர். வாழ்ந்தவர் என்று சொல்வதைவிட, வாழ்ந்த காலத்தில் பெருமாளுக்கு சேவைகள் செய்தவர்.

திருவரங்கம்  சென்று அங்கேயே தங்கி ரங்கநாதருக்கு சேவை செய்தவர். மக்களின் பார்வை வைணவத்தின் மேல் விழும்படியாக பல பாசுரங்களை இயற்றியவர்

அவர் தான் வாழ்ந்த காலத்தில் ஒரு அரசனுக்கு நிகரான புகழைப் பெற்றிருந்தார். அவருடைய குரு பெரிய நம்பிகளும் சீடர் கூரத்தாழ்வாரும் அவருடனேயே தங்கியிருந்தனர்

ராமானுஜர் புகழ் பெற்று விளங்குவதைப் பொறுக்காத சோழ மன்னன் ஒருவன், அவரைப் பிடித்துக்கொண்டு வரும்படி தனது படை வீர்ரர்களை அனுப்பினானாம். புகைப்படங்கள், செய்தித்தாள்கள் இல்லாத காலம், ராமானுஜரை அடையாளம் தெரியாது. ஆகவே வந்தவர்களிடம் தன் குருநாதர் மாட்டக்கூடாது என்று நினைத்த ராமானுஜரின் சீடர் கூரத்தாழ்வார், ராமானுஜர் போல வெண்ணிற ஆடை அணிந்து கொண்டு, சோழப் படையினரிடம் சென்று நான்தான் ராமானுஜர் என்று சொல்லி, அவர்களுடன் சென்றாராம. அவருடன் பெரிய நம்பிகளும் அவரது மகள் திருத்துழாயும் (என்ன பெயருடா சாமி!) சென்றார்களாம்.

பெரியநம்பியிடமும், கூரத்தாழ்வாரிடமும், தனது மதமே உயர்ந்தது என எழுதித்தரும்படி மன்னன் சொல்ல, சென்றவர்கள் மறுக்க, இருவரின் கண்களையும் பறிக்கும்படி கூறித் தண்டனை கொடுத்துவிட்டானாம் அந்தச் சோழ மன்னன். கூரத்தாழ்வார், தன் கண்களைத் தானே குத்திக்கொண்டு பார்வை இழந்தாராம் சோழ வீரர்கள் பெரியநம்பிகளின் கண்களைக் குருடாக்கினார்களாம்.

பார்வையிழந்த இருவரையும் திருத்துழாய் அங்கிருந்து அழைத்துகொண்டு வந்து தங்கிய தலம்தான் பிற்காலத்தில் பெரும் புகழ் பெற்றது. பெரிய நம்பிகளுக்கு வயது 105. வயதான காலத்தில் கண்களை இழந்து பெரும் துன்பத்திற்கு ஆளானாராம். அவர்மீது கருணை கொண்ட வரதராஜப்பெருமாள், அவருக்குக் கண்பார்வை அளித்துக் காட்சி கொடுத்ததோடு, அவருக்கு வைகுண்டப் பிராப்யதியையும் வழங்கி அருள்பாலித்தாராம்.

பசுபதி கோவில் என்னும் அத்தலத்தில் உள்ள அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோவில்தான் கேட்டை நட்சத்திரக்காரர்களுக்கான கோவில்!

அக்கோவிலில் பெரியநம்பிகளுக்குத் தனி சன்னிதானம் உள்ளது

பெரியநம்பிகள் மார்கழி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவராம். அன்றைய தினம் கோவிலில் அவரது திருநட்சத்திர விழா நடைபெறும். ஒவ்வொரு மாதமும் கேட்டை நட்சத்திரத்தில் அவருக்குப் பூஜை உண்டு.

கேட்டை நட்சத்திரத்தினர், தங்களுக்கு ஜாதக தோஷம் நீங்க அவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள். வெண்ணிற வஸ்திரம், மல்லிகைப்பூ மாலை, அதிரசம், வடை நைவேத்யம் முதலியவற்றுடன் அந்த வழிபாட்டை அவருக்குச் செய்கின்றனர்.

மருதாணி இலை, கரிசலாங்கண்ணி, செம்பருத்தி ஆகிய மூன்றும் சேர்த்த எண்ணெயில் தீபமேற்றி வழிபடுவது நல்ல பலன் தரும் என்பது நம்பிக்கை அங்கே நிலவுகிறது. அந்த எண்ணெய் கோயிலில் கிடைக்கிறது. கேட்டை நட்சத்திரத்துடன் கூடிய செவ்வாய்க் கிழமைகளில் வழிபட்டால் பலன் இரட்டிப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையும் உள்ளது. கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கூரத்தாழ்வாரிடம் வேண்டிக் கொள்ளலாம்!

தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் 12 கி.மீ தூரத்திலுள்ளது பசுபதிகோவில். கோவிலின் நடை திறந்திருக்கும் நேரம்: காலை 7 மணி முதல் 9 மணிவரை, மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணிவரை.

வரதராஜ பெருமாள் மட்டுமின்றி பெருந்தேவி தாயாரும் அங்கே அருள் பாலிக்கின்றார்.

ஒருமுறை சென்று வாருங்கள். வந்து பலனைப் பாருங்கள்

கல்யாண்ச் சந்தையில் விலை போகாத 4 நட்சத்திரங்களில் கேட்டையும் ஒன்று. மக்களின் முட்டாள் தனம் அது! நட்சத்திரங்கள் எல்லாம் சமமானவையே! ஒரு கேடும் வரப்போவதில்லை. ஜாதகத்தின் எழாம் வீடு, லக்கினம், அதன் அதிபதிகள், காரகர்கள் போன்ற மற்ற அம்சங்கள்தான் முக்கியம். அதை எல்லாம் யார் கேட்கிறார்கள்? தங்களுக்கு என்று வரும்போது கேட்க மாட்டார்கள்.

கேட்டை நட்சத்திரத்திற்கு மட்டும் ஒரு சின்ன குறைபாடு உண்டு. சந்திரன் நீசமாகியிருப்பான். கேட்டை நட்சத்திர ஜாதகர்களுக்கு லக்கினத்தை வைத்துப் பலன்கள் வித்தியாசப்படும். அவற்றை வேறு ஒரு நாள் பார்ப்போம்!

அன்புடன்
வாத்தியார்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

14.2.12

Astrology துர்வாசர் எத்தனை துர்வாசரடா?



Astrology துர்வாசர் எத்தனை துர்வாசரடா?

நட்சத்திரக் கோவில்கள் - பகுதி 10
ஆயில்ய நட்சத்திரம்
அருள்மிகு கற்கடேஸ்வரர் திருக்கோயில்
-------------------------------------------
துர்வாச முனிவர் என்றால் நமக்கு அவருடைய கோபமும், சகுந்தலைக்கு அவர் கொடுத்த சாபமும்தான் நினைவிற்கு வரும்.

சகுந்தலையின் காவியததை எழுதிய மாபெரும் கவிஞன் காளிதாசன், அந்த நிகழ்வை விவரிக்கின்றான்.

அதாவது சகுந்தலை தன் காதலன் துஷ்யந்தனைப் பற்றிப் பகல் கனவு கண்டு கொண்டிருந்தாளாம். அந்த நேரத்தில் அங்கே வந்த முனிவரை அவள் கண்டு
கொள்ளவில்லையாம். உடனே பிடி சாபம் என்று சாபமிட்டுவிட்டார் துர்வாசர். அவளது காதலன் அவளை மறந்து விடுவான் என்பதே சாபம்

சகுந்தலை விடுவாளா? முனிவரின் காலில் விழுந்து மன்னிப்பைப் பெற்று அந்த சாபத்திற்கு விமோசனம் தேடியதுடன், தன் காதலனைச் சேர்ந்தாளாம்.

அந்தக் காலத்தில் காளிதாசன் எழுதிய காதல் கதை அது.

நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் காளிதாசர். அதை மனதில் வைத்துக்கொண்டு மேலே படியுங்கள்
-------------------------------------------------------
வால்மீகி ராமாயணத்தின் உத்தர காண்டத்திலும் துர்வாசர் காணப்படுகின்றார்.

மகாபாரத்த்திலும் அவர் வருகிறார். குந்திக்கு அதர்வ மந்திரத்தை போதித்தவர் அவர் என்று சொல்லப்படுகிறது.

அவ்விரண்டு நிகழ்வுகளுமே வெவ்வேறு யுகங்களில் நடைபெற்றன.

சத்ய யுகம், த்ரேதா யுகம், துவபார யுகம், கலியுகம் என்று யுகங்கள் நான்கு பிரிவுகளாகச் சொல்லப்படுகின்றன. ராமாயணம் த்ரேதா யுகத்தில் நடந்தது.
மகாபாரதம் துவபார யுகத்தில் நிகழ்ந்தது. காளிதாசர் நம் யுகத்து ஆசாமி.

குழப்பம் என்ன்வென்றால், துர்வாசர் எப்படி மூன்று யுகங்களிலும் தலை காட்ட முடியும்?

அதற்கு ஒரு தீர்வு இருக்கிறது.

காலகட்டங்களை மற்ந்து விட்டு சொல்லப்படும் செய்திகளை மட்டும் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். அவ்வளவுதான்!
--------------------------------------------------------
இப்போது சொல்ல வந்த புதுக் கதைக்கு வருகிறேன்

முன்னொரு காலத்தில் துர்வாச முனிவர் சிவபூஜை செய்துவிட்டு சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே வந்த ஆசாமி ஒருவன் துர்வாசரின்
நடையைப் பார்த்து, " நடையா, இது நடையா, நண்டின் நடையல்லவா தெரிகின்றது" என்று கேலி செய்து பாட்டுப்பாடியதுடன், அவரைப் போல நடந்தும் காட்டினானானம். துர்வாசர் எசப்பாட்டு (எதிர்வினைப் பாட்டு) பாடாமல், அவனை அக்கணமே நண்டாகும்படி சபித்து விட்டாராம்.

அவன் தன் செயலுக்கு வருந்தி, மன்னிப்புக் கேட்டு வேண்டினானாம்.

அவர் அருள்மிகு கற்கடேஸ்வரர் திருக்கோவிலுக்குச் சென்று அங்கு உறையும் சிவனாரைப் பூஜித்து சாப விமோசனம் பெறச் சொன்னாராம, துர்வாசரின்
அறிவுரைப்படி இத்தலத்தில் நண்டு வடிவில் பூஜை செய்து சாபவிமோசனம் பெற்றானாம் அவன். சிவனின் திருமேனியில் நண்டு ஐக்கியமான துளையை
இப்போதும் காணலாம். கற்கடகத்திற்கு (நண்டு) விமோசனம் தந்தவர் என்பதால் அவர் கற்கடேஸ்வரர் என்னும் பெயர் பெற்றார் உள்ளூர் வாசிகள் சிரமப்பட்டு கற்கடேசுவரர் திருக்கோவில் என்று சொல்லாமல் சிம்ப்பிளாக நண்டுக்கோவில் என்று சொல்கிறார்கள்

அந்தக் கோவில்தான் ஆயில்ய நட்சத்திரக்காரர்களின் கோவில். அதாவது அந்த நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய ஸ்தலம்.
---------------------------------------------------------
அருள்மிகு கற்கடேஸ்வரர் திருக்கோயில்
இறைவனின் பெயர்: கற்கடேஸ்வரர்
அம்மனின் பெயர்: அருமருந்துநாயகி
தல விருட்சம் : நங்கை மரம்
தீர்த்தம் : நவபாஷாண தீர்த்தம்
ஆகமம் : சிவாகமம்
காலம்: சுமார் ஆயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட ஆலயம்
கோவில் இருக்கும் கிராமத்தின் பெயர்:: திருந்துதேவன்குடி, தஞ்சை மாவட்டம்
சிவராத்திரி, மற்றும் திருக்கார்த்திகை நாட்களில் கோவில் விழாக்கோலம் பூண்டிருக்கும்
கோவிலின் நடை திறந்திருக்கும் நேரம்:
காலை 9 மணி முதல் 1.30 மணி வரை,
மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை

முகவரி:
அருள்மிகு கற்கடேஸ்வரர் திருக்கோயில்,
திருந்துதேவன்குடி - 612 105.
வேப்பத்தூர் போஸ்ட்,
திருவிடைமருதூர் தாலுகா,
தஞ்சாவூர் மாவட்டம்.

ஆயில்யம் நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்யலாம்.

பிணி நீக்கும் சிவன என்று பெயர் பெற்றவர் இங்கே உறையும் சிவனார். ஆகவே பிணி உள்ள மற்ற நட்சத்திரக்காரர்களும் இத்தலத்திற்குச் சென்று வழிபடலாம். இவரைப் பிணி நீக்கும் சிவன் என்று சம்பந்தர் பதிகம் பாடியுள்ளார்.

கும்பகோணத்தில் இருந்து சூரியனார் கோவில் செல்லும் ரோட்டில் 11 கி.மீ., தூரத்தில் உள்ள திருவிசநல்லூர் சென்று, அங்கிருந்து பிரியும் ரோட்டில் 2கி.மீ.,
தூரம் சென்றால் கோயிலை அடையலாம். திருவிசநல்லூரில் இருந்து குலுக்கல் வண்டி (ஆட்டோ) வசதியும் உண்டு.

வடமொழியில் ஆயில்ய நட்சத்திரத்தின் பெயர் அஷ்லேஷா

இத்திருக்கோவிலுக்கு அருகில் உள்ள மற்ற கோவில்கள். போகிறது போகிறீர்கள் அவற்றையும் பார்த்துவிட்டு வாருங்களேன்.

ஸ்ரீமகாலிங்கசுவாமி திருக்கோவில், திருவிடைமருதூர்
திருமங்களக்குடிக் கோவில்,
சூரியனார் திருக்கோவில்
திருவிசை நல்லூர் திருக்கோவில்
சரபேஸ்வரர் திருக்கோவில் திருப்புவனம்

ஒருமுறை சென்று வாருங்கள். பலனை வந்து பாருங்கள்!

அன்புடன்
வாத்தியார்



வாழ்க வளமுடன்!

31.1.12

Astrology பூணூலை மாற்றுகிற தினம் மட்டுமா அது?


Astrology  பூணூலை மாற்றுகிற தினம் மட்டுமா அது?

நட்சத்திரக் கோவில்கள் - பகுதி 9

அவிட்ட நட்சத்திரம்

கோரக்கர் என்னும் பெயரைக்கொண்ட சித்தர் ஆலயங்களுக்கு யாத்திரையாக வந்தபோது, இத்தலத்திற்கு வந்தாராம். வந்தவர் இங்கே உறையும்
சிவபெருமானைத் தரிசித்துவிட்டு, அருகில் இருந்த மடம் ஒன்றில் தங்கினாராம்.

அந்தக் காலத்தில் ஊருக்கு ஊர் மடங்களும், வீட்டுக்கு வீடு திண்ணைகளும் இருந்தன. வழிப்போக்கர்களும், பயணிகளும் இரவு நேரத்தில் தங்கிச் செல்வார்கள்.

அப்படி மடம் ஒன்றில் தங்கிசென்றபோது கோரக்கர் (என்ன பெயருடா சாமி) ஒரு சோதனைக்கு உள்ளானார். பல பக்தர்கள் முன்பே அங்கு தங்கியிருந்தனர்.
அவர்களோடு ஒரு ஓரமாகப் படுத்திருந்த கோரக்கர் அசதியில் நன்றாக உறங்கிவிட்டார். நள்ளிரவில் திடீரென விழித்தவருக்கு, அதிர்ச்சியாக இருந்தது. அருகில்  ஒரு இளம் பெண் படுத்திருந்தாள். அத்துடன் அவளுடைய சேலைத்தலைப்பு விலகி, இவர் மேற்கிடந்தது. அப்பொழுதெல்லாம் ஒன்பது முளம் சேலை. பெண்கள் ரவிக்கை (Blouse) அணிவதில்லை. அதனால் இறுக்கி முடிந்துகொண்டுதான் படுப்பார்கள். அப்படி இருந்தும் எப்படி விழுந்தது என்று தெரியவில்லை.கோரக்கர் மிகவும் வருத்தமுற்றார்.

அதற்குப் பரிகாரமாக தன் கையை வெட்டிக் கொண்டு விட்டார். பிறகு அந்த மடத்திலேயே சில காலம் தங்கி, அங்குள்ள சந்திர புஷ்கரணியில் தினமும்
இருமுறை நீராடி, வெட்டுப்பட்ட கையோடு ஞானபுரீஸ்வரரையும், புஷ்பவல்லித்தாயாரையும் வணங்கி வந்தார். கோரக்கரின் பக்தியைக் கண்டு மகிழ்ந்த சிவனார் அந்தச் சித்தருக்கு அருள்பாலித்தார். சித்தருக்கு மீண்டும் கை கிடைத்தது. கோரக்கரின் கை வெட்டுப்பட்ட தலம் என்பதால் இவ்வூருக்கு கோரக்கை என்ற பெயர் உண்டானது. தனது வெட்டுண்ட கையால் பூஜை செய்ததால் குறுக்கை எனவும் வழங்கப்பெற்றது. காலப்போக்கில் அது கொருக்கை என்று மாறி விட்டது.

பிரம்மாவிடம் இருந்த வேத நூற்சுவடிகளை அசுரரகள் திருடிக் கொண்டு போய்விட்டார்கள். மகாவிஷ்ணு மீட்டுக் கொடுத்தார். அந்த நிகழ்வால், பிரம்மாவினால் இயல்பாக இருக்க முடியவில்லை. படைப்புத் தொழிலையும் ஒழுங்காகச் செய்ய முடியவில்லை. விஷ்ணுவின் ஆலோசனைப்படி, அவர் இத்தலம் வந்து, சந்திர புஷ்கரிணியில் நீராடி, பாதப்பிரதட்சணம் செய்து தினமும் சிவனை வழிபட்டு வந்தார். ஒரு ஆவணி அவிட்ட நட்சத்திர நன்நாளில், சிவன் பிரம்மாவிற்கு ஞானம்  (wisdom) கொடுத்தார். அதனால் பிரம்மா மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பி முன்போலவே சிறப்பாகச் செயல் புரிந்தார். அதனால் இத்தலநாதன் பிரம்ம  ஞானபுரீஸ்வரர் என்னும் பெயர் பெற்றார்.

இறைவன் இங்கே சுயம்பு மூர்த்தி. சிவனுக்கும் அம்பிகைக்கும் எதிரில் உள்ள இரண்டு நந்திகளும் ஒரே மண்டபத்தில் அமைந்திருப்பது குறிப்பிடத்தகுந்தது.
முந்திரிப்பருப்பு, நிலக்கடலை இரண்டையும் கலந்து மாலை கட்டி வெளி மண்டபத்தில் உள்ள இரட்டை நந்திக்கு அணிவித்து பிரார்த்தனை செய்தால் நினைத்த  காரியம் நடக்கும் என்பது இங்கே நிலவும் நம்பிக்கை.
     
அருள்மிகு பிரம்ம ஞானபுரீஸ்வரர் திருக்கோயில், கீழக்கொருக்கை என்னும் கிராமத்தில், பட்டீஸ்வரம் என்னும் சிற்றூருக்கு அருகில் உள்ளது. அந்தப்
பட்டீஸ்வரம்  கும்பகோணத்திற்கு அருகில் உள்ளது. சுவாமியின் பெயர் பிரம்மஞானபுரீஸ்வரர். தாயாரின் பெயர், அதாவது அம்பிகையின் பெயர் புஷ்பவல்லி.  கோவிலின் முன் உள்ள திருக்குளத்தின் பெயர்: சந்திர புஷ்கரிணி. 1000 ஆண்டுகட்கு முற்பட்ட புராதனக்கோவில். கோவிலின் நடை காலை 11 மணி முதல் 1  மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 6 மணி வரையிலும் திறந்திருக்கும். மகாசிவராத்திரியன்று திருவிழா நடைபெறும்.

மூன்றாம் குலோத்துங்க சோழ மன்னன் காலத்தில் இக்கோயில் கட்டப்பெற்றுள்ளது.

அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் நீங்கிச் சுகமடைய இத்தல இறைவனை வழிபாடு செய்வது நல்லது. அத்துடன் கல்வியில்  சிறக்க, திருமணத் தடைகள் நீங்க, குடும்ப ஒற்றுமை வளர இங்கு பிரார்த்தனை செய்வதும் நல்லது. அதாவது நன்மை பயக்கும்!

ஆவணிமாதம் அவிட்ட நட்சத்திரத்தன்று பெளர்ணமியும் சேர்ந்துகொள்ளும். அன்றைய தினம் இங்கே வந்து வழிபடுதல் மேன்மை உடையதாகும்

கோயில் மிகவும் சிதிலமடைந்துள்ளது. அவிட்ட நட்சத்திரக்காரர்கள் ஒன்று சேர்ந்து, இத்தலத்திற்கு திருப்பணி செய்வது நல்லது. அது புண்ணியக் கணக்கில்  வரும்! பணத்தை மட்டும் சேர்க்காமல் கொஞ்சம் புண்ணியத்தையும் சேருங்களேன்!
+++++++++++++++++++++++++++
ஆவணி அவிட்ட நட்சத்திரம் பற்றிய மேலதிகத்தகவல்:



கேள்வி : இந்த ஆவணி அவிட்டம் என்பது என்ன? பழைய பூணூலை கழற்றி விட்டு, புதிய பூணூலைப் போட்டுக் கொள்ள ஒரு தினம். அதுதானே ஆவணி
அவிட்டம் என்பது? அதாவது பூணூலை மாற்றுகிற தினம்தானே அது?

 சோ  நீங்கள் சொல்கிற மாதிரிதான் இப்போது ஆகிவிட்டது. ஆனால், ஆவணி அவிட்டம் என்பது அதுவல்ல. ஆவணி அவிட்டம் என்று சொல்லப்படுகிற
சடங்கின் உண்மையான பெயர் உபாகர்மா. உபாகர்மா என்றால் ஆரம்பம் என்று அர்த்தம். ச்ராவண மாதத்தில் பிரம்மதேவனுக்கு வேதம் கிட்டியது; அதாவது
உபதேசம் ஆகியது. அந்த தினம், ஆவணி மாதம், அவிட்ட நக்ஷத்திரம். அதனால்தான் இதற்கு ‘ஆவணி அவிட்டம்’ என்ற பெயரும் வந்தது. அப்போது
பிரம்மனுக்கு வேதம் கிட்டியதால், அவனுக்கு அது ஆரம்பம் ஆகியது. அந்த ஆரம்பத்தை இங்கே மனிதர்கள் கொண்டாடுகிறார்கள். இது வருடா வருடம்
செய்யப்படுகிறபோது, வேதத்திற்குச் செய்யப்படுகிற மரியாதையாக இது கருதப்படுகிறது.

வேதத்திற்கு ஆண்டு விழா என்றும் இதைச் சொல்லலாம். ப்ரம்ம தேவனுக்கு உபதேசமாகிய தினம்; அதிலிருந்து வழி வழியாக மனிதர்களுக்குக் கிடைத்தது.
அதனால் ஒவ்வொரு வருடமும் அந்த தினத்தைக் கொண்டாடுகிறோம். அது ஆண்டு விழா.

கேள்வி : ஆரம்பம் என்று சொன்னீர்கள். அது என்றோ ஆரம்பமாகி விட்டது. திரும்பவும் ஒவ்வொரு வருடமும் அதைப் புதிதாக ஆரம்பிப்பானேன்? அது
எதற்கு? இது பகுத்தறிவுக்கு ஏற்ற விஷயமாக இல்லையே?

சோ : இது பகுத்தறிவுக்கு ஏற்ற விஷயம் இல்லை என்கிறீர்கள்; சரி, இருக்கட்டும். தேசிய ஒருமைப்பாட்டுக்காக உறுதிமொழி, பிரமாணம் என்று வருடா  வருடம் எல்லோரும் எடுத்துக் கொள்கிறார்கள். ‘போன வருடம்தான் இந்த உறுதிமொழி, பிரமாணம் எல்லாம் எடுத்தாகி விட்டதே! அதே தேசம்தான்
இருக்கிறது; அதே பிரமாணம்தான் இது. அதை எதற்கு இன்னொரு முறை செய்ய வேண்டும்? தேசம் போய் விட்டதா? அல்லது பிரமாணம்தான் தீர்ந்து
விட்டதா? அந்த பிரமாணத்திற்கு ஒரு வருடம்தான் ஆயுளா? ஏன் இதை திரும்பவும் வருடா வருடம் செய்ய வேண்டும்? ஏன்? அந்தப் பிரமாணம் ஆறு
மாதத்திலேயே தீர்ந்து போகாதா? அல்லது மூன்று மாதத்தில் தீர்ந்து போகாதா? அல்லது தினம் தினம் அந்த பிரமாணத்தை எடுத்துக் கொள்ளக் கூடாதா? ஏன்,

இப்படி வருடத்திற்கு ஒருமுறை?’ என்றும் கேட்கலாம். ஆனால், அப்படி யாரும் கேட்பதில்லை. அது எப்படி பகுத்தறிவுக்கு உகந்ததாக இருக்கிறதோ, அதே மாதிரிதான் இதுவும்.

தேசம் என்கிற சிந்தனை, ஒருமைப்பாடு என்கிற சிந்தனை ஆகியவற்றை நமக்கு நாமே நினைவூட்டிக் கொள்கிறோம். அதற்காக இதைச் செய்கிறோம். அதே மாதிரிதான் இந்த உபாகர்மாவும். இந்த சிந்தனை, வேதம் எவ்வளவு உயர்வானது என்பது பற்றியது. ப்ரம்ம தேவனுக்குக் கிடைத்த தினம் பற்றியது. அங்கிருந்து நமக்கு அது கிடைத்தது என்ற விஷயம் பற்றியது. அந்த மாதம், அந்தத் தேதியில், அதாவது ஆவணி மாதம் அவிட்ட நக்ஷத்திரத்தில் நாம் இதையெல்லாம்  நினைத்துக் கொள்கிறோம். சொல்லப் போனால், இது தேசிய ஒருமைப்பாட்டு பிரமாணத்தை விட, பகுத்தறிவுக்கு உகந்த விஷயம்.

ஏனென்றால், தேசம் என்பது, என்றோ உண்டாகி விட்டது. ஒருமைப்பாடு என்பதும் என்றோ உண்டாகி விட்டது. ஆனால், தேசம் பிறந்த நேரத்திலோ,
ஒருமைப்பாடு உண்டான சமயத்திலோ, இந்த பிரமாணத்தை நாம் எடுத்துக் கொள்வதில்லை. இந்த உபகர்மாவை எடுத்துக் கொண்டால் பிரம்மனுக்கு அது
எப்போது உபதேசமாகியதோ, எப்பொழுது பிரம்மனுக்கு வேதம் கிட்டியதோ, அந்த மாதம், அந்த தினம் எது என்று பார்த்து, அந்த தினத்தில் நாம் இங்கே
அந்தச் சடங்கைச் செய்கிறோம். அன்று நமக்கு வேதம் பயில்வது மீண்டும் ஆரம்பம்.இது பிராமணர்களுக்கு மட்டும் விதிக்கப்பட்ட விஷயம் என்று நினைத்து  விடக்கூடாது. உபநயனம் என்பது முதல் மூன்று வர்ணத்தாருக்கும் உண்டு. அதாவது பிராமண, க்ஷத்ரிய, வைசிய வர்ணங்களைச் சார்ந்தவர் களுக்கு உபநயனம்  உண்டு. அவர்கள் மூவருமே வருடா வருடம் இந்த ‘ஆவணி அவிட்டம்’ என்கிற உபாகர்மாவைச் செய்ய வேண்டும். இதை வெறும் பூணூலை மாற்றிக் கொள்கிற விஷயமாகக் கருதி விடாமல், வேதம் நமக்குக் கிட்டியதை கொண்டாடுகிற தினம் என்று நாம் கருத வேண்டும்.

நன்றி: திருவாளர் சோ.ராமசாமி அவர்கள் மற்றும் சோ அவர்களின் செய்திகளைத் தொகுத்தளித்த திருவாளர் அல்லயன்ஸ் ஸ்ரீனிவாசன்

அன்புடன்
வாத்தியார்


அடிக்குறிப்பு: மகிழ்ச்சியான செய்தி - வாத்தியார் வெளியூர்ப் பயணம். நாளை ஒருநாள் வகுப்பறைக்கு விடுமுறை!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

30.1.12

Astrology காதலில் கிறங்கிய தேவயானி என்ன செய்தாள்?



Astrology காதலில் கிறங்கிய தேவயானி என்ன செய்தாள்?

Star Temples - Part 8

தேவயானி என்ற பெயரைப் பார்த்தவுடன், கோடம்பாக்கம் நினைப்போடு நீங்கள் உள்ளே நுழைந்திருந்தால், அதற்கு நான் பொறுப்பில்லை!

இது வேறு தேவயானி!

தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் முன்னொரு காலத்தில் நடந்த கடும் யுத்தத்தில், அசுரர்களில் பலர் போர்டிங் பாஸ் வாங்கிக்கொண்டு மேல் உலகம் போய்விட்டார்கள்.

அவர்களுக்கு ஏதய்யா மேல் உலகம் என்று கேட்பவர்கள் பதிவை விட்டு விலகவும். எல்லோருக்குமே ஒரு மேல் உலகம் உண்டு. ஒபாமாவுக்கும் உண்டு உங்களுக்கும் உண்டு எழுதும் எனக்கும் உண்டு. அதுதான் இறைவன் இருக்குமிடம். சிவலோகம் அல்லது வைகுண்டம் அல்லது சொர்க்கம் என்று எப்படி வேண்டுமென்றாலும் அவரவர் நோக்கப்படி வைத்துக்கொள்ளுங்கள். அதில் ஒன்றிற்குப் போய்விட்டார்கள். அதாவது மரணமடைந்து விட்டார்கள்.

அசுரர்களின் குருவான சுக்கிராச்சாரியார் சக்திவாய்ந்த மருதசஞ்சீவினி என்ற மந்திரம் மூலம் இறந்துபோன அத்தனை பேர்களையும் மீண்டும் உயிர் பெறச்செய்தார்.

அந்த மந்திரம் தெரிந்தால், தங்களுக்கு அது உதவியாக இருக்கும் என்று நினைத்த தேவர்கள் ஒரு ஆசாமியைப் பிடித்தார்கள். அவன் பெயர் கசன். குரு பகவானின் மகன். அவனைச் சரிகட்டி அனுப்பிவைத்தார்கள். மருதசஞ்சீவினி மந்திரத்தை கற்றுவருவதற்காக. அவனும், அசுரகுருவிடம் சென்றான்.
அவனுடைய தந்தை குரு பகவானும் அவனை ஆசிர்வதித்து அசுரலோகத்திற்கு அனுப்பிவைத்தார்.

சுக்ராச்சாரியாரின் மகள் தேவயானி அவனுக்கு உதவி செய்ய, அவள் மூலமாக சுக்ராச்சாரியாரிடம் மருதசஞ்சீவினி மந்திரத்தைக் கற்றுக் கொண்டான். இதைக் கண்ணுற்ற அசுரர்கள் கசன் உயிரோடு இருந்தால் அசுரர்குலத்திற்குப் ஆபத்து வந்துவிடும் என நினைத்து, கசனை கொன்று தீயிலிட்டு சாம்பலாக்கி அசுரகுரு குடிக்கும் பானத்தில், சாம்பலைக் கலக்கி கொடுத்து விட்டார்கள். அவரும் குடித்து விட்டார்.

கசனைக் காணாது கலங்கிய தேவயானி, கசனின் இருப்பிடத்தை கண்டறிந்து சொல்லும்படி தன் தந்தையிடம் வேண்டினாள்.

அசுரகுரு தன் ஞான திருஷ்டியால் கசன் தன் வயிற்றில் இருப்பதை அறிந்து, மருதசஞ்சீவினி மந்திரம் மூலம் கசனை உயிர் பெறச் செய்தார். உயிர்பெற்று வந்த கசன், தன் உயிரைக்காப்பாற்றிய அசுரகுரு இறந்து கிடப்பதைக் கண்டு, தான் அவரிடம் கற்ற மந்திரம் மூலம் அசுரகுருவை உயிர்பெறச் செய்தான்.

சுக்கிராச்சாரியார், தன் மகள் தேவயானியை மணம் முடித்து செல்ல வேண்டும் என்று அவனிடம் கூற, அதற்கு கசன் சுக்கிராச்சாரியாரின் வயிற்றிலிருந்து மீண்டு வந்துள்ளதால் அவருடைய மகள் தேவயானி தனக்கு சகோதரி முறை வேண்டும் என்று கூறி, அவரது வேண்டுகோளைக் கடாசி விட்டு, தேவலோகத்திற்குப் புறப்பட்டான்.

கடும்கோபம் கொண்ட தேவயானி, கசனை சப்தமலைகளாலும் தேவலோகத்திற்குச் செல்லவிடாமல் தடுத்து நிறுத்திவிட்டாள். பையன் அசுரலோகத்தில், தேவயானியின் அரவணைப்பிலேயே தங்கும்படியாகிவிட்டது.

கசனைக் காணாத குருபகவான், தன் மகனை மீட்டுத்தரும்படி பெருமாளை வேண்டி, தவமிருந்தார். பெருமாள், கருணை கொண்ட பெருமாள், சக்கரத் தாழ்வாரை அனுப்பி கசனை மீட்டார். பின்பு குருபகவானின் வேண்டுதலுக்காக அவர் தவமிருந்த தலத்தில் எழுந்தருளினார்.

அந்தத்தலம்தான் இன்று சித்திரரத வல்லபபெருமாள் கோவில் இருக்கும் இடம்.

சித்திரை நட்சத்திர தலம் அது. பெருமாள், குரு பகவானுக்கு ஒரு சித்திரை மாதம், சித்திரை நட்சத்திரத்தன்று (சித்ரா பவுர்ணமியன்று), சித்திரத் தேரில் எழுந்தருளி காட்சி தந்தார். இதனால் அவர், சித்தி ரரத வல்லப பெருமாள் என்று அழைக்கப்படுகின்றார்.

எனவே அத்தலம் சித்திரை நட்சத்திரத்திற்குரிய கோயிலாக விளங்குகிறது.

அத்தல பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் சந்தன மரச்சிலையால் ஆன மூர்த்தியாக காட்சி தருவது குறிப்பிடத்தக்க அம்சம்.

கோயிலுக்கு எதிரே குருபகவான், சக்கரத்தாழ்வாருடன் சுயம்பு வடிவில் இருக்கிறார்.  குருபார்க்கக் கோடி நன்மை என்பதால், சித்திரை நட்சத்திரகாரர்களை தவிர மற்ற நட்சத்திரக்காரர்களும் இங்கு வழிபாடு செய்து பலன் அடையலாம். நம்பிக்கை முக்கியம். நம்பிக்கையோடு பிராத்தனை செய்து வலம் வந்தால், பலன் கிடைப்பது நிச்சயம்.

ஜாதகத்தில் தோஷம் உள்ளவர்கள், தங்கள் ஜாதகத்தைக் கையில் ஏந்தியபடி இந்தப் பெருமாளை சுற்றி வருவது நல்லது. நன்மையளிக்கும்.

கோவில் இருக்கும் இடம்: குருவித்துறை என்னும் சிறு கிராமம். ரியல் எஸ்டேட்காரர்களின் கையில் சிக்கி தனது அடையாளத்தை இழக்காத சிறு கிராமம்.

மதுரையில் இருந்து வடக்கில் 23 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. அங்கிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் சோழவந்தான் என்னும் பெரிய கிராமம் உள்ளது.

தில்லியில் வாசம் செய்தவாறு அரசியல்வாதிகள் பலரின் வயிற்றில் புளியைக் கரைத்துக்கொண்டிருக்கும் அன்பர் சுப்பிரமணிய சுவாமியின் சொந்த ஊர்தான் இந்த சோழவந்தான்,

அங்கே செல்ல மதுரை மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் உள்ளன. வசதி உள்ளவர்கள் வாடகை ஊர்திகளில் சென்று வரலாம். குலுக்கல் வண்டி - அதான் நம்ம ஆட்டோ ரிக்ஷா வசதியும் உள்ளது.

பவுர்ணமி நாட்களில் அல்லது ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமைகளில் செல்வது உசிதமானது.

கோவிலின் நடை திறந்திருக்கும் நேரம்: காலை 7.30மணி முதல் - மதியம் 12 மணி வரை. பிறகு மாலை 3மணி முதல் - 6 மணி வரை. விழாக்காலங்களில் இந்த நேரம் மாறுபடும்.
-------------------------------------------------------------
‘Star of Prosperity’ என்று புகழப்படும் சித்திரை நட்சத்திரக்காரர்களின் குண நலன்கள் பற்றிப் பிறகு பார்ப்போம். 27 நட்சத்திரங்களில் பிறந்தவர்களைப் பற்றி ஒரு தொடர் கட்டுரை எழுதவுள்ளேன். அப்போது பார்ப்போம். அதுவரை பொறுத்திருங்கள்

புராணங்களை எல்லாம் நம்ப வேண்டும். ஆராயக்கூடாது. நம்ப முடியா விட்டால், புராணங்களைப் படிப்பதை விட்டுவிட்டு, வேறு வேலையைப் பார்க்கலாம். அதுதான் உசிதமானது. நான் அடிக்கடி சொல்வதை மீண்டும் ஒருமுறை வலியுறுத்தி எழுதுகிறேன். சுக்கிராச்சாரியாரின் மருதசஞ்சீவினி மந்திரம், கசனைக் கொன்று, எரித்து சாம்பலை டாஸ்மாக் சரக்கில் சுக்கிராச்சாரியாருக்குக் கொடுத்த செயல்கள் எல்லாம் நடக்குமா?’ என்று கேள்வி கேட்டுக் கொண்டிருக்காமல் சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கான தலம் குறிவித்துறையில் இரூக்கிறது என்ற தகவலை மட்டும்  எடுத்துக்கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.


அன்புடன்
வாத்தியார்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

24.1.12

Astrology: OMR ரோட்டில் பண்ணை வீடு இருப்பவன் எதற்கு ஆசைப்படுவான்?

 Astrology: OMR ரோட்டில் பண்ணை வீடு இருப்பவன் எதற்கு ஆசைப்படுவான்?

நட்சத்திரக் கோவில்கள் பகுதி 7

மிருகசீரிடம்

சொந்த வீடு என்பது எல்லா மனிதர்களுக்கும் உள்ள (பொதுவான) கனவு. ஒரு வீடு உள்ளவன்கூட இரண்டாவது வீட்டிற்கு ஆசைப்படுவது இயல்பே!
சென்னையில் சிலருக்கு தி.நகரில் சொந்தவீடு இருக்கும். பழைய மகாபலிபுரம் சாலையில் (அதாங்க ஓ.எம்.ஆர் ரோட்டில்) ஒரு பண்ணை வீடும் இருக்கும்.
அப்படி இருக்கும்போதே ஊட்டி அல்லது கொடைக்கானலில் ஒரு சொந்த வீட்டிற்கு அவன் ஆசைப்படுவான்.

கிரகங்களில் ராகு & கேதுவைத் தவிர மற்ற ஏழு கிரகங்களுக்கும் சொந்த வீடு உள்ளது. அரச கிரகங்களான சூரியனுக்கும், சந்திரனுக்கும் ஒரு சொந்த வீடுதான். ஆனால் செவ்வாய், சுக்கிரன், புதன், குரு, சனி ஆகிய கிரகங்களுக்கு தலா இரண்டு வீடுகள் உள்ளன.

அதுபோல நடசத்திரங்களுக்கு சொந்த ராசியாக ஒவ்வொரு ராசி இருக்கும். சில நட்சத்திரங்களுக்கு இரண்டு ராசிகளைப் பங்கிட்டுக்கொண்டு சொந்தம் கொண்டாடும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தின் முதல் இரண்டு பாதங்களுக்கு ரிஷப ராசியில் இடம். அடுத்த இரண்டு பாதங்களுக்கு மிதுன ராசியில் இடம். ஆகவே மிருகசீரிடத்தில் பிறந்த ஜாதகனுக்கு அவன் பிறந்த பாதத்தை வைத்து ராசிகள் மாறுபடும்.
----------------------------------------------------------------------------------------------
மிருகசீரிடம்

இது நட்சத்திர வரிசையில் ஐந்தாவது நட்சத்திரம் ஆகும். இது செவ்வாய் கிரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நட்சத்திரம்.

மிருகசீரிட நட்சத்திரம் தோற்றத்தில் மூன்று பகுதிகளை உள்ளடக்கியதாக இருக்கும். சீர்ஷம் அல்லது சிரசு என்றால் தலை. நட்சத்திரத்தின் தலைப் பகுதி மானின் தலையைப் போன்ற தோற்றத்துடன் காட்சியளிக்கும். அதனால்தான் அதற்கு - அந்த நட்சத்திரத்திற்கு மிருகசீரிடம் என்ற பெயரைச் சூட்டினார்கள்.

மிருகசீரிட நட்சத்திரக்காரர்களின் பொதுவான குணம்:

விசாலமான புத்தியும், திறமையும் பெற்றிருப்பார்கள். காசு, பணம் (செல்வம்) சேர்ப்பதில் ஆர்வமாக இருப்பார்கள். துணிவு மிக்கவர்கள். சிலருக்கு முன்கோபம் அதிகமாக இருக்கும். தானதர்மம் செய்வதில் ஆர்வம் காட்டுவார்கள். பிறரின் மனதறிந்து நடப்பார்கள்.

They are seekers and are powerful investigators and researchers. Highly intelligent their quest will eventually take them to spiritual dimensions of their soul.
-----------------------------------------------------------------------------------------------
அந்த நட்சத்திரத்திற்கான கோவில்:

ஆதிநாராயண பெருமாள் திருக்கோவில், எண்கண் கிராமம், திருவாரூர் மாவட்டம்.

தஞ்சாவூரிலிருந்து திருவாரூர் செல்லும் வழியில், 50 கி.மீ தூரத்தில் முகூந்தனூர் உள்ளது. அங்கிருந்து, ஒரு கி.மீ. தூரத்தில் எண்கண் என்ற சிறுகிராமம் உள்ளது. அங்கேதான் ஆதிநாராயண பெருமாளின் திருக்கோவில் உள்ளது.

சுமார் ஆயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட திருத்தலம்.
சுவாமியின் பெயர்: ஆதிநாராயணப் பெருமாள்
அம்மன்களின் பெயர்: ஸ்ரீதேவி, பூதேவி
தல விருட்சம்: வன்னி மரம்
கோவிலின் நடை திறந்திருக்கும் நேரம்: மாலை 5 மணி முதல் - இரவு 7 மணி வரை.

தல வரலாறு:

முற்காலத்தில் வன்னி மரக்காடு என்று அழைக்கப்பெற்ற இத்தலத்தில், பிருகு முனிவர், பெருமாளின் அருள் வேண்டித் தவம் இருந்தாராம். அப்போது சோழ மன்னன் ஒருவன் (பெயர் தெரியவில்லை) தன் படைகளுடன் பெரும் சப்தம் எழுப்பியபடி சிங்கத்தை வேட்டையாட அங்கே வந்தானாம். (அந்தக் காலத்தில் திருவாரூர் பகுதி பெரிய வனாந்திரமாக இருந்திருக்கிறது. அத்துடன் சிங்கம் போன்ற கொடிய வனவிலங்குகளும் இருந்திருக்கின்றன. Mr.KMRK note this point) அந்த சப்தத்தினால் முனிவரின் தவம் கலைந்ததாம். கோபம் கொண்ட முனிவர், முனிவர்கள் தவம் செய்யும் அந்த வனத்தில் சிங்கத்தை வேட்டையாட வந்து, தன் தவத்தைக் கலைத்த அரசனுக்கு சாபமிட்டுவிட்டார். என்ன சாபம்? சிங்க முகத்துடன் அவன் அலையக் கடவது என்று சாபமிட்டு விட்டாராம்.

வருந்திய மன்னன், தனக்கு சாப விமோசனம் தரும்படி மன்றாட, மனம் இரங்கிய முனிவர், விருத்தகாவிரி எனப்படும் வெற்றாற்றில் நீராடி, இத்தல பெருமாளை வழிபாடு செய்து வரும்படி கூறினாராம். அரசனும் மனமுருகி வழிபாடு செய்து வந்தானாம். மகிழ்ந்த பெருமாள் கருட வாகனத்தில் காட்சி தர, பெருமாளின் அருளால் அரசனுக்கு மிருக முகம் நீங்கி, பழைய முகம் கிடைத்ததாம். அதன்காரணமாக இத்தலம் மிருகசீரிஷ நட்சத்திரத்திற்குரிய கோயிலாக போற்றப் படுகிறது.

தான் உறைகின்ற கோவில்களில் பெருமாள், நின்ற, இருந்த, கிடந்த கோலத்தில் அருள் பாலிப்பது வழக்கம். எதிரில் அல்லது அருகில் கருடாழ்வார் இருப்பார். திரு விழாக்காலங்களில் கருடன் மீது எழுந்தருளி அருள்பாலிப்பார். ஆனால், இங்கு கருடன் மீது அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கின்றார். இதுபோன்ற அமைப்பைக் காண்பது அரிது. பெருமாளின் நித்யகருட சேவையைத் தினமும் இங்கு தரிசிக்கலாம்.

மிருகண்டு மகரிஷி இத்தல பெருமாளை தினமும் அரூப வடிவில் வழிபடுவதாக நம்பப்படுகிறது. நம்பிக்கைகளை யாரும் கேள்வி கேட்க முடியாது!

மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் நட்சத்திரத்தன்று. இத்தல பெருமாளை வழிபாடு செய்தால், அவர்களின் பிரச்னை உடனடியாகத் தீரும் என்பதும் இங்கே நிலவுகின்ற நம்பிக்கை.

உற்சவர் ஆதிநாராயணப் பெருமாள் பிரயோகச் சக்கரம் ஏந்தி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் அருள்பாலிக்கின்றார். குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், திருமணத்தடை உள்ளவர்கள், நாகதோஷம் உள்ளவர்கள், தோல்நோய் மற்றும் பகைவர்களால் பாதிக்கப்பட்டவர்கள், பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேர நினைப்பவர்கள், அகால மரண சம்பவங்களால் மனநிலை பாதிக்கப்பெற்றவர்கள், குழந்தைகளுக்கு அடிக்கடி நோய் ஏற்பட்டு நிவாரணம் பெற விரும்புபவர்கள் ஆகியோர் பவுர்ணமி மற்றும் மிருகசீரிஷ நாட்களில் இங்கு வந்து வழிபாடு செய்வது வழக்கம்!

ஒருமுறை இத்தலத்திற்குச் சென்று வாருங்கள். வந்த பிறகு ஏற்படும் பலன்களைப் பாருங்கள்!

அன்புடன்
வாத்தியார்

---------------------------------
வாழ்க வளமுடன்!