மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

30.9.20

*எதையும் ஒத்திபோடுதல் சரியல்ல!!!!!


*எதையும் ஒத்திபோடுதல் சரியல்ல!!!!!
.................................................................

இன்றைய வேலைகளிருந்து தப்பிக்கும் ஒரே ஒரு எளிமையான வழி ஒத்திப் போடுவதுதான். பொதுவாக ஒரு செயலை எப்படிச் செய்வது என்பது தெரியாது என்பதால் ஒத்திப் போடுகிறோம்...

நம்மால் செய்ய முடியும் என்ற நம்பிக்கை இல்லாததனால் ஒத்திப் போடுகிறோம்...

நம்மிடையே உள்ள தாழ்வு மனப்பான்மை காரணமாக ஒத்திப் போடுகிறோம்...

வெற்றி பெற முடியாது என்று எண்ணி ஒத்திப் போடுகிறோம்...

சோம்பலின் காரணமாக ஒத்திபோடுகிறோம்...

உடலுமும் உள்ளமும் களைப்பாக இருக்கிறது என்பதற்காக ஒத்திப் போடுகிறோம்..

துக்கத்தின் காரணமாக ஒத்திப் போடுகிறோம்...

இப்படியெரு செயலை ஒத்திப்போட பல காரணங்களை 
அடுக்கிக்கொண்டே போகலாம். ஒத்திபோடுவதற்கு காரணம் தேடும் நாம், நமது வீடு தீப்பற்றிக் கொண்டது என்றால் தீயை அணைப்பதை ஒத்திப் போடுவோமா...?

எந்த முடிவையும் எடுப்பதில்லை என்று முடிவு எடுப்பதை விட, எதாவது ஒரு முடிவை எடுக்கலாம். அது தோல்வியில் முடிந்தால் கூட முயற்சி எடுத்தோம் என்ற அளவிலாவது மகிழ்ச்சியடையலாம்...

சில நேரங்களில் முடிவு எடுக்க முடியாததிற்கு இதுவா...? அதுவா...? இப்படி செய்யலாமா...! அல்லது அப்படி செய்யலாமா...! என்ற குழப்பமே காரணம்...

ஒரு தீர்க்கமான முடிவு எடுப்பதில் ஒரு தயக்கம்
முடிவெடுக்கும் தருணத்தில் ஆலோசிப்பது நாம் செயல்படுவததை தள்ளிப்போட வைக்கிறது...

எடுத்துக்காட்டாக, உங்கள் வாகனத்தை சுத்தம் செய்தல், குளியலறையை சுத்தம் செய்தல், கடிதத்திற்கு பதில் கடிதம் அனுப்புதல், உடல் நலம் குன்றிய நெருங்கிய நண்பரை சென்று பார்ப்பது என்று நாளும் எதையாவது ஒத்திவைத்துக் கொண்டேதான் இருக்கிறோம்...

நாம் செயல்படுவதில் முன்னுரிமை காரணமாக தள்ளிபோடுவதாக கூறிகொண்டாலும், அதற்குப் பிறகு அப்பணியை செய்வதே இல்லை அப்பணியை நிறுத்தியே விடுகிறோம்...

*ஆம் நண்பர்களே...!*

*நாளை என்று எதையும் தள்ளிப் போடாதீர்கள், எந்த ஒரு முடிவும் துணிச்சலாக எடுங்கள்...!*

*இன்றைய வேலையை இன்றே செய்யுங்கள் – நாளைய வேலையைக்கூட முடிந்தால் இன்றே செய்யுங்கள். ஆனால்!, இன்று செய்ய வேண்டிய வேலையை, நாளைக்கு என்று ஒருபோதும் ஒத்திப் போடாதீர்கள்...!!*

*நாளை என்பது நமதில்லை. நேரம் கிடைப்பதில்லை என்பதல்ல. நம் சோம்பல்தான் காரணம். வெற்றி பெற்றவன் காரணத்தை தேடுவதில்லை, காரணத்தை தேடுபவன் வெற்றி பெறப்போவதில்லை...!!!*
-----------------------------------------------
படித்தத்தில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
===========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

29.9.20

ஒர் எச்சரிக்கை பதிவு*👇👇


ஒர் எச்சரிக்கை பதிவு*👇👇

கடந்த புதன்கிழமை... இரவு ஒன்பது மணி அளவில் காரில் வரும்பொழுது ஆதிரங்கம் அருகில் வெள்ளெருக்கு செடி பார்த்தேன்..
அதன் பூக்கள் எனக்கு தேவைப்பட்டதால் பூக்களைப் பறித்துக் கொண்டேன் எருக்கம் பால்  ஒரு துளி விரல்களில் பட்டிருந்தது... துடைத்து விட்டேன்..

வீட்டுக்கு வந்து சுமார் அரை மணிநேரம் கழித்த பிறகு எதேச்சையாக எனது விரல் கண்களில் பட லேசாக எரிந்தது..

அலர்ஜியாக இருக்குமோ என்ற நினைப்பில் அந்த விரலால் மேலும் கண்களை தேய்க்க எரிச்சல் அதிகரித்தது..

ஒரு கட்டத்தில் ஏதோ விபரீதமாக நடந்து கொண்டிருக்கிறது என்று உள்மனம் சொன்னது அப்போதுதான் எனக்கு எருக்கம்பால் கையில் பட்டது நினைவுக்கு வந்தது.

கண்கள் சிவந்தது.. தண்ணீரில் அலசினேன் எரிச்சல் குறைந்தது...

உடன் மருத்துவரை பார்க்க வேண்டும் என்று பலரும் வற்புறுத்தினாலும்.. கொ ரோனா காலத்தில் திருத்துறைப்பூண்டியில் மருத்துவரைப் பார்ப்பது கடினம் என்பதால் காலையில் பார்த்துக்கொள்ளலாம் என்று இருந்துவிட்டேன்..

காலை மூன்று மணிக்கு எழுந்த போது.. வலது கண்ணில் ஏதோ மாற்றத்தை உணர்ந்தேன்... பார்வை .. மங்கியது ..

அதிர்ந்தேன்.. முகம் பார்க்கும் கண்ணாடியில் இடது கண்ணை மறைத்தபடி வலது கண்ணால் பார்த்தால் எனது உருவம் தெரியவில்லை..

பார்வை இழந்து விட்டது என்ற நினைப்பே எனக்கு கலக்கத்தை கொடுத்தது.. உள்ளுக்குள் அழுது கொண்டிருந்தேன்..

மறு நாள் புதுமனை புகுவிழா.. இப்படி ஆகிவிட்டது... எல்லோரும் உற்சாகமாக இருக்கும்போது எனக்கு ஒரு கண் பார்வை தெரியவில்லை என்பதை எப்படிச் சொல்வது..

பொழுது விடிந்த பிறகு

அருகே இருந்த டூவீலரில் பதிவு எண்ணை படிக்க முடியவில்லை...

காலை பதினோரு மணிக்கு திருத்துறைப்பூண்டி கண் மருத்துவர் பன்னீர்செல்வம் அவர்களை சந்தித்தேன்.. பரிசோதித்துவிட்டு கண்ணின் கருவிழி கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது என்றார்.. கசக்கி போட்ட காகிதம் போல இருக்கிறது என்றார்.....

வலது கண்ணால் எதிரே இருக்கும் எழுத்துக்களை படிக்கச் சொன்னார்..எனக்கு எழுத்துக்கள் இருப்பதே தெரியவில்லை என்றேன்..
பார்வை தற்காலிகமாக போயிருக்கிறது

பயப்பட வேண்டாம் 10நாளில் பார்வை திரும்பி விடும் என்றார் சில மருந்துகளை எழுதிக் கொடுத்தார்... அடிக்கடி போட்டேன்..
இரண்டு நாளில் 100% பார்வை திரும்பியது...

எருக்கன் செடியின் பால் விரல்களில் பட்டு கண்ணில் வைத்ததற்கு இந்த நிலை என்றால்... 

நேரடியாக கண்ணில் பட்டு  இருந்தால்பார்வை இழப்பு தவிர்க்க இயலாது போயிருக்கும்

ஆசிரியர்கள் தங்கள் பள்ளிச் சிறுவர்களை எருக்கஞ்செடி பக்கம் செல்ல விடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்...

எருக்கன் செடியின் பால் பற்றி எல்லோரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே என் அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறேன்.

கே பாலசுப்பிரமணியன்.
திருத்துறைபூண்டி

இல்லாதவனுக்கும் இழந்தவருக்குமே தெரியும்

இழந்த ஒன்றின் அருமை...

*இனிய காலை வணக்கம்...இந்த நாள் இனிதாகட்டும்
--------------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
===========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

28.9.20

இது தான் தமிழ் ! அனைத்தையும் படிக்க ஒரு பிறவி போதாது.. பெயர்களையாவது படித்து அறிவோம்..


இது தான் தமிழ் ! அனைத்தையும் படிக்க ஒரு பிறவி போதாது..
பெயர்களையாவது படித்து அறிவோம்..
1. தேவாரம் 
2. திருவாசகம்
3. திருமந்திரம்
4. திருவருட்பா 
5. திருப்பாவை 
6. திருவெம்பாவை 
7. திருவிசைப்பா
8. திருப்பல்லாண்டு
9. கந்தர் அனுபூதி
10. இந்த புராணம்
11. பெரிய புராணம்
12. நாச்சியார் திருமொழி 
13. ஆழ்வார் பாசுரங்கள் போன்ற மிகச் சிறந்த பக்தி இலக்கியங்கள்..!

1.நற்றிணை 
2.குறுந்தொகை 
3.ஐங்குறுநூறு 
4.அகநானூறு 
5.புறநானூறு 
6.பதிற்றுப்பத்து 
7.பரிபாடல் 
8.கலித்தொகை என்னும் "எட்டுத்தொகை" சங்க நூல்கள்.. !

1.திருமுருகாற்றுப்படை 2.சிறுபாணாற்றுப்படை 3.பெரும்பாணாற்றுப்படை 4.பொருநராற்றுப்படை 
5.முல்லைப்பாட்டு 
6.மதுரைக்காஞ்சி 
7.நெடுநல்வாடை 
8.குறிஞ்சிப் பாட்டு 
9.பட்டினப்பாலை 
10.மலைபடுகடாம் என்னும் "பத்துப்பாட்டு" சங்க நூல்கள்....!

1.திருக்குறள் 
2.நாலடியார் 
3.நான்மணிக்கடிகை 
4.இன்னாநாற்பது 
5.இனியவை நாற்பது 
6.கார் நாற்பது 
7.களவழி நாற்பது 
8.ஐந்திணை ஐம்பது 
9.திணைமொழி ஐம்பது 
10.ஐந்திணை எழுபது 
11.திணைமாலை       நூற்றைம்பது 
12.திரிகடுகம் 
13.ஆசாரக்கோவை 
14.பழமொழி 
15.சிறுபஞ்சமூலம் 
16.முதுமொழிக் காஞ்சி 
17.ஏலாதி 
18.இன்னிலை என்னும் பதினெண்கீழ்க்கணக்கு நீதி நூல்கள்...!

1.சிலப்பதிகாரம் 
2.மணிமேகலை 
3.சீவக சிந்தாமணி 
4. வளையாபதி 
5. குண்டலகேசி 
போன்ற ஐம்பெருங்காப்பியங்கள்... !

1.அகத்தியம்  
2.தொல்காப்பியம்
3.புறப்பொருள்
வெண்பாமாலை 
4.நன்னூல் 
5.பன்னிரு பாட்டியல் போன்ற இலக்கண நூல்கள் மற்றும்
6.இறையனார் களவியல் உரை எனும் உரைநூல்..!

1.கம்பராமாயணம்-வழிநூல்.

1.முத்தொள்ளாயிரம் 
2.முக்கூடற்பள்ளு 
3.நந்திக்கலம்பகம் 
4.கலிங்கத்துப்பரணி 
5.மூவருலா போன்ற எண்ணற்ற சிற்றிலக்கிய வகைகள்...!

ஒரு மொழியின் மிகச்சிறந்த பண்பே செம்மொழிக்கான கீழ்க்கண்ட பதினோரு தகுதிகளைக் கொண்டிருப்பதுதான்..

1.தொன்மை 
2.தனித்தன்மை (தூய்மைத் தன்மை) 
3.பொதுமைப் பண்புகள் 
4.நடுவுநிலைமை 
5.தாய்மைத் தன்மை 
6.கலை பண்பாட்டுத் தன்மை 
7.தனித்து இயங்கும் தன்மை 
8.இலக்கிய இலக்கண வளம் 
9.கலை இலக்கியத் தன்மை 
10.உயர் சிந்தனை 
11.மொழிக் கோட்பாடு
இந்தப் பதினோரு பண்புகளையும் கொண்ட உலகின் மிக மூத்த மொழி என் தாய்மொழி தமிழ்..!

சமய குரவர்கள்
----------------------------

1. திருஞானசம்பந்தர்
2. திருநாவுக்கரசர்
3. சுந்தரமூர்த்தி சுவாமிகள்
4. மாணிக்கவாசகர்

சைவம் வளர்த்தோர்
-----------------------------------
1. சேக்கிழார்
2. திருமூலர்
3. அருணகிரிநாதர்
4. குமரகுருபரர்

12 ஆழ்வார்கள்
---------------------------
1. பொய்கையாழ்வார்
2. பூதத்தாழ்வார்
3. பேயாழ்வார்
4. திருமழிசை ஆழ்வார்
5. நம்மாழ்வார்
6. மதுரகவி ஆழ்வார்
7. குழசேகராழ்வார்
8. பெரியாழ்வார்
9. ஆண்டாள் நாச்சியார்
10. தொண்டரடிப் பொடியாழ்வார்
11. திருப்பாணாழ்வார்
12. திருமங்கையாழ்வார்
-----------------------

தமிழ் பெரும் புலவர்கள் பட்டியல்..!
------------------------------------------------------------
அகம்பன் மாலாதனார்
அஞ்சியத்தை மகள் நாகையார்
அஞ்சில் அஞ்சியார்
அஞ்சில் ஆந்தையார்
அடைநெடுங்கல்வியார்
அணிலாடு முன்றிலார்
அண்டர் மகன் குறுவழுதியார்
அதியன் விண்ணத்தனார்
அதி இளங்கீரனார்
அம்மூவனார்
அம்மெய்நாகனார்
அரிசில் கிழார்
அல்லங்கீரனார்
அழிசி நச்சாத்தனார்
அள்ளூர் நன்முல்லையார்
அறிவுடைநம்பி
ஆரியன் பெருங்கண்ணன்
ஆடுதுறை மாசாத்தனார்
ஆதிமந்தி
ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக்கண்ணத்தனார்
ஆலங்குடி வங்கனார்
ஆலத்தூர் கிழார்
ஆலம்பேரி சாத்தனார்
ஆவூர்கிழார் மகனார் கண்ணனார்
ஆவூர் காவிதிகள் சகாதேவனார்
ஆவூர்கிழார்
ஆலியார்
ஆவூர் மூலங்கீரனார்
இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார்
இடைக்காடனார்
இடைக்குன்றூர்கிழார்
இடையன் சேந்தன் கொற்றனார்
இடையன் நெடுங்கீரனார்
இம்மென்கீரனார்
இரணியமுட்டத்து பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார்
இருங்கோன் ஒல்லையன் செங்கண்ணனார்
இருந்தையூர்க் கொற்றன் புலவன்
இரும்பிடர்தலையார்
இளங்கீரந்தையார்
இளங்கீரனார்
இளநாகனார்
இளந்திரையன்
இளந்தேவனார்
இளம்புல்லூர்க் காவிதி
இளம்பூதனார்
இளம்பெருவழுதி
இளம்போதியார்
இளவெயினனார்
இறங்குடிக் குன்றநாடன்
இறையனார்
இனிசந்த நாகனார்
ஈழத்துப் பூதந்தேவனார்
உகாய்க் குடிகிழார்
உக்கிரப் பெருவழுதி
உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார்
உம்பற்காட்டு இளங்கண்ணனார்
உருத்திரனார்
உலோச்சனார்
உவர்கண்ணூர் புல்லங்கீரனார்
உழுந்தினைம் புலவர்
உறையனார்
உறையூர் இளம்பொன் வாணிகனார்
உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்
உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார்
உறையூர்ச் சல்லியங் குமரனார்
உறையூர்ச் சிறுகந்தனார்
உறையூர்ப் பல்காயனார்
உறையூர் மருத்துவன் தாமோதரனார்
உறையூர் முதுகண்ணன் சாத்தனார்
ஊட்டியார்
ஊண்பித்தை
ஊண்பொதி பசுங்குடையார்
எயிற்றியனார்
எயினந்தையார்
எருமை வெளியனார்
எருமை வெளியனார் மகனார் கடலனார்
எழூப்பன்றி நாகன் குமரனார்
ஐயாதி சிறு வெண்ரையார்
ஐயூர் முடவனார்
ஐயூர் மூலங்கீரனார்
ஒக்கூர் மாசாத்தனார்
ஒக்கூர் மாசாத்தியார்
ஒருசிறைப் பெரியனார்
ஒரூத்தனார்
ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்
ஓதஞானி
ஓதலாந்தையார்
ஓரம்போகியார்
ஓரிற்பிச்சையார்
ஓரேர் உழவர்
ஔவையார்
கங்குல் வெள்ளத்தார்
கச்சிப்பேடு இளந்தச்சன்
கச்சிப்பேடு காஞ்சிக்கொற்றனார்
கச்சிப்பேடு பெருந்தச்சனார்
கடம்பனூர்ச் சாண்டில்யன்
கடலூர்ப் பல்கண்ணனார்
கடியலூர் உருத்திரங்கண்ணனார்
கடுந்தொடைக் காவினார்
கோவர்த்தனர்
கோவூர்க் கிழார்
கோவேங்கைப் பெருங்கதவனார்
கோழிக் கொற்றனார்
கோளியூர்க் கிழார் மகனார் செழியனார்
கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக்குமரன்
சங்கவருணர் என்னும் நாகரியர்
சத்திநாதனார்
சல்லியங்குமரனார்
சாகலாசனார்
சாத்தந்தந்தையார்
சாத்தனார்
சிறுமோலிகனார்
சிறுவெண்டேரையார்
சிறைக்குடி ஆந்தையார்
சீத்தலைச் சாத்தனார்
செங்கண்ணனார்
செம்பியனார்
செம்புலப்பெயல்நீரார்
செயலூர் இளம்பொன்சாத்தன் கொற்றனார்
செய்திவள்ளுவன் பெருஞ்சாத்தன்
செல்லூர்கிழார் மகனார் பெரும்பூதன் கொற்றனார்
செல்லூர்க்கோசிகன் கண்ணனார்
சேந்தங்கண்ணனார்
சேந்தம்பூதனார்
சேந்தங்கீரனார்
சேரமானெந்தை
சேரமான் இளங்குட்டுவன்
சேரமான் கணைக்கால் இரும்பொறை
சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை
சோனாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார்
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்
சோழன் நலங்கிள்ளி
சோழன் நல்லுருத்திரன்
தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனார்
தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்
தனிமகனார்
தாமாப்பல் கண்ணனார்
தாமோதரனார்
தாயங்கண்ணனார்
தாயங்கண்ணியார்
தாயுமானவர்
திப்புத்தோளார்
திருத்தாமனார்
தீன்மதிநாகனார்
தும்பிசேர்கீரனார்
துறைக்குறுமாவிற் பாலங்கொற்றனார்
துறையூர்ஓடைக்கிழார்
தூங்கலோரியார்
தேய்புரி பழங்கயிற்றினார்
தேரதரன்
தேவகுலத்தார்
தேவனார்
தொடித்தலை விழுத்தண்டினர்
தொண்டி ஆமூர்ச்சாத்தனார்
தொல்கபிலர்
நக்கண்ணையார்
நக்கீரர்
நப்பசலையார்
நப்பண்ணனார்
நப்பாலத்தனார்
நம்பிகுட்டுவன்
நரிவெரூத்தலையார்
நரைமுடி நெட்டையார்
நல்லச்சுதனார்
நல்லந்துவனார்
நல்லழிசியார்
நல்லாவூர்க் கிழார்
நல்லிறையனார்
நல்லுருத்திரனார்
நல்லூர்ச் சிறுமேதாவியார்
நல்லெழுநியார்
நல்வழுதியார்
நல்விளக்கனார்
நல்வெள்ளியார்
நல்வேட்டனார்
நற்சேந்தனார்
நற்றங்கொற்றனார்
நற்றமனார்
நன்பலூர்ச் சிறுமேதாவியார்
நன்னாகனார்
நன்னாகையார்
நாகம்போத்தன்
நாமலார் மகன் இளங்கண்ணன்
நிகண்டன் கலைக்கோட்டுத் தண்டனார்
நெடுங்கழுத்துப் பரணர்
நெடும்பல்லியத்தனார்
நெடும்பல்லியத்தை
நெடுவெண்ணிலவினார்
நெட்டிமையார்
நெய்தற் கார்க்கியார்
நெய்தற் சாய்த்துய்த்த ஆவூர்க்கிழார்
நெய்தற்றத்தனார்
நொச்சி நியமங்கிழார்
நோய்பாடியார்
பக்குடுக்கை நன்கணியார்
படுமரத்து மோசிகீரனார்
படுமரத்து மோசிக்கொற்றனார்
பதடிவைகலார்
பதுமனார்
பரணர்
கடுந்தொடைக் கரவீரன்
கடுவன் இளமள்ளனார்
கடுவன் இளவெயினனார்
கடுவன் மள்ளனார்
கணக்காயன் தத்தனார்
கணியன் பூங்குன்றனார்
கண்ணகனார்
கண்ணகாரன் கொற்றனார்
கண்ணங்கொற்றனார்
கண்ணம் புல்லனார்
கண்ணனார்
கதக்கண்ணனார்
கதப்பிள்ளையார்
கந்தரத்தனார்
கபிலர்
கம்பர்
கயத்தூர்கிழார்
கயமனார்
கருங்குழலாதனார்
கரும்பிள்ளைப் பூதனார்
கருவூர்க்கிழார்
கருவூர் கண்ணம்பாளனார்
கருவூர் கதப்பிள்ளைச் சாத்தனார்
கருவூர் கலிங்கத்தார்
கருவூர் கோசனார்
கருவூர் சேரமான் சாத்தன்
கருவூர் நன்மார்பனார்
கருவூர் பவுத்திரனார்
கருவூர் பூதஞ்சாத்தனார்
கருவூர் பெருஞ்சதுக்கத்துப் பூதனார்
கல்பொருசிறுநுரையார்
கல்லாடனார்
கவைமகன்
கழாத்தலையார்
கழார்க் கீரனெயிற்றியனார்
கழார்க் கீரனெயிற்றியார்
கழைதின் யானையார்
கள்ளிக்குடிப்பூதம்புல்லனார்
கள்ளில் ஆத்திரையனார்
காக்கைப்பாடினடியார் நச்செள்ளையார்
காசிபன் கீரன்
காட்டூர்கிழார் மகனார் கண்ணனார்
காப்பியஞ்சேந்தனார்
காப்பியாற்றுக் காப்பியனார்
காமஞ்சேர் குளத்தார்
காரிக்கிழார்
காலெறி கடிகையார்
காவட்டனார்
காவற்பெண்டு
காவன்முல்லையார்
காவிரிப் பூம்பட்டினத்துக் கந்தரத்தனார்
காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்
காவிரிப் பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்
காவிரிப் பூம்பட்டினத்துச் சேந்தன் கண்ணனார்
காவிரிப் பூம்பட்டினத்துப் பொன்வாணிகனார் மகனார் நப்பூதனார்
கிடங்கில் காவிதிக் கீரங்கண்ணனார்
கிடங்கி்ல் காவிதிப் பெருங்கொற்றனார்
கிடங்கில் குலபதி நக்கண்ணனார்
கிள்ளிமங்கலங்கிழார்
கிள்ளிமங்கலங்கிழார் மகனார் சேரக்கோவனார்
கீரங்கீரனார்
கீரந்தையார்
குடபுலவியனார்
குடவாயிற் கீரத்தனார்
குட்டுவன் கண்ணனார்
குட்டுவன் கீரனார்
குண்டுகட் பாலியாதனார்
குதிரைத் தறியனார்
குப்பைக் கோழியார்
குமட்டூர் கண்ணனார்
குமுழிஞாழலார் நப்பசலையார்
குழற்றத்தனார்
குளம்பனார்
குளம்பாதாயனார்
குறமகள் இளவெயினி
குறமகள் குறியெயினி
குறியிறையார்
குறுங்கீரனார்
குறுங்குடி மருதனார்
குறுங்கோழியூர் கிழார்
குன்றம் பூதனார்
குன்றியனார்
குன்றூர்க் கிழார் மகனார்
கூகைக் கோழியார்
கூடலூர்க் கிழார்
கூடலூர்ப பல்கண்ணனார்
கூவன்மைந்தன்
கூற்றங்குமரனார்
கேசவனார்
கொடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார்
கொட்டம்பலவனார்
கொல்லன் அழிசி
கொல்லிக் கண்ணன்
கொள்ளம்பக்கனார்
கொற்றங்கொற்றனார்
கோக்குளமுற்றனார்
கோடைபாடிய பெரும்பூதன்
கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்
கோட்டியூர் நல்லந்தையார்
கோண்மா நெடுங்கோட்டனார்
கோப்பெருஞ்சோழன்
பராயனார்
பரூஉமோவாய்ப் பதுமனார்
பறநாட்டுப் பெருங்கொற்றனார்
பனம்பாரனார்
பாண்டரங்கண்ணனார்
பாண்டியன் ஆரியப்படைகடந்த நெடுஞ்செழியன்
பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார்
பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்
பாண்டியன் பன்னாடு தந்தான்
பாண்டியன் மாறன் வழுதி
பாரதம் பாடிய பெருந்தேவனார்
பாரிமகளிர்
பார்காப்பான்
பாலைக் கௌதமனார்
பாலை பாடிய பெருங்கடுங்கோ
பாவைக் கொட்டிலார்
பிசிராந்தையார்
பிரமசாரி
பிரமனார்
பிரான் சாத்தனார்
புதுக்கயத்து வண்ணக்கன் கம்பூர்கிழார்
புல்லாற்றூர் எயிற்றியனார்
பூங்கணுத் திரையார்
பூங்கண்ணன்
பூதங்கண்ணனார்
பூதபாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு
பூதம்புல்லனார்
பூதனார்
பூதந்தேவனார்
பெருங்கண்ணனார்
பெருங்குன்றூர்க் கிழார்
பெருங்கௌசிகனார்
பெருஞ்சாத்தனார்
பெருஞ்சித்திரனார்
பெருந்தலைச்சாத்தனார்
பெருந்தேவனார்
பெருந்தோட் குறுஞ்சாத்தன்
பெரும் பதுமனார்
பெரும்பாக்கன்
பெருவழுதி
பேயனார்
பேய்மகள் இளவெயினி
பேராலவாயர்
பேரிசாத்தனார்
பேரெயின்முறுவலார்
பொதுக்கயத்துக் கீரந்தை
பொதும்பில் கிழார்
பொதும்பில் கிழார் மகனார் வெண்கண்ணி
பொதும்பிற் புல்லாளல் கண்ணியார்
பொத்தியார்
பொய்கையார்
பொருந்தில் இளங்கீரனார்
பொன்மணியார்
பொன்முடியார்
பொன்னாகன்
போதனார்
போந்தைப் பசலையார்
மடல் பாடிய மாதங்கீரனார்
மதுரை அளக்கர் ஞாழற் கவிஞர் மகனார் மள்ளனார்
மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்
மதுரை ஆசிரியர் கோடங்கொற்றனார்
மதுரை இளங்கண்ணிக் கௌசிகனார்
மதுரை இனங்கௌசிகனார்
மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார்
மதுரை ஓலைக்கடைக் கண்ணம் புகுந்தாராயத்தனார்
மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையார்
மதுரைக் கடையத்தார் மகன் வெண்ணாகனார்
மதுரைக் கணக்காயனார்
மதுரைக் கண்டராதித்தனார்
மதுரைக் கண்ணத்தனார்
மதுரைக் கவுணியன் பூதத்தனார்
மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார்
மதுரைக் காமக்கணி நப்பாலத்தனார்
மதுரைக் காருலவியங் கூத்தனார்
மதுரைக் கூத்தனார்
மதுரைக் கொல்லன் புல்லன்
மதுரைக் கொல்லன் வெண்ணாகனார்
மதுரைச் சுள்ளம் போதனார்
மதுரைத் தத்தங்கண்ணனார்
மதுரைத் தமிழக்கூத்தனார் நாகன் தேவனார்
மதுரைத் தமிழக் கூத்தனார்
மதுரைப் படைமங்க மன்னியார்
மதுரைப் பாலாசிரியர் சேந்தங்கொற்றனார்
மதுரைப் பாலாசிரியர் நப்பாலனார்
மதுரைப் பாலாசிரியர் நற்றாமனார்
மதுரைப் புல்லங்கண்ணனார்
மதுரைப் பூதனிள நாகனார்
மதுரைப் பூவண்ட நாகன் வேட்டனார்
மதுரைப் பெருங்கொல்லன்
மதுரைப் பெருமருதனார்
மதுரைப் பெருமருதிளநாகனார்
மதுரைப் போத்தனார்
மதுரை மருதங்கிழார் மகனார் சொகுத்தனார்
மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார்
மதுரை மருதங்கிழார் மகன் இளம்போத்தன்
மதுரை வேளாசன்
மருங்கூர்கிழார் பெருங்கண்ணனார்
மருங்கூர்ப் பட்டினத்துச் சேந்தன் குமரனார்
மருங்கூர்ப் பாகை சாத்தன் பிரியனார்
பூதனார்
மருதம் பாடிய இளங்கடுங்கோ
மருதனிளநாகனார்
மலையனார்
மள்ளனார்
மாங்குடிமருதனார்
மாடலூர் கிழார்
மாதீர்த்தன்
மாமிலாடன்
மாமூலனார்
மாயேண்டன்
மார்க்கண்டேயனார்
மாலைமாறன்
மாவளத்தன்
மாறோக்கத்துக் காமக்கண்ணியார்
மாறோக்கத்து நப்பசலையார்
மாற்பித்தியார்
மிளைக் கந்தன்
மிளைப் பெருங்கந்தன்
மிளைவேள் பித்தன்
மீனெறி தூண்டிலார்
முக்கல் ஆசான் நல்வெள்ளையார்
முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன்
முடத்தாமக்கண்ணியார்
முடத்திருமாறன்
முதுகூத்தனார்
முதுவெங்கண்ணனார்
முப்பேர் நாகனார்
முரஞ்சியயூர் முடிநாகராயர்
முள்ளியூர்ப் பூதியார்
முலங்கீரனார்
மையோடக் கோவனார்
மோசிக்கண்ணத்தனார்
மோசிக்கீரனார்
மோசிக்கொற்றன்
மோசிக்கரையனார்
மோசிசாத்தனார்
மோசிதாசனார்
வடநெடுந்தத்தனார்
வடவண்ணக்கன் தாமோதரன்
வடமோதங்கிழார்
வருமுலையாரித்தி
வன்பரணர்
வண்ணக்கன் சோருமருங்குமரனார்
வண்ணப்புறக் கந்தரத்தனார்
வாடாப்பிராந்தன்
வாயிலான் தேவன்
வாயிலிலங்கண்ணன்
வான்மீகியார்
விட்டகுதிரையார்
விரிச்சியூர் நன்னாகனார்
விரியூர் நன்னாகனார்
வில்லக விரலினார்
விழிகட்பேதை பெருங்கண்ணனார்
விற்றூற்று மூதெயினனார்
விற்றூற்று வண்ணக்கன் தத்தனார்
வினைத் தொழில் சோகீரனார்
வீரை வெளியனார்
வீரை வெளியன் தித்தனார்
வெண்கண்ணனார்
வெண்கொற்றன்
வெண்ணிக் குயத்தியார்
வெண்பூதன்
வெண்பூதியார்
வெண்மணிப்பூதி
வெள்ளாடியனார்
வெள்ளியந்தின்னனார்
வெள்ளிவீதியார்
வெள்வெருக்கிலையார்
வெள்ளைக்குடி நாகனார்
வெள்ளைமாளர்
வெறிபாடிய காமக்கண்ணியார்
வேட்டகண்ணன்
வேம்பற்றூர்க்கண்ணன் கூத்தன்
வேம்பற்றுக் குமரன்
ஒட்டக்கூத்தர்

மற்றும் பெண்பாற்புலவர்கள்:
---------------------------------------------------

அச்சியத்தை மகள் நாகையார்
அள்ளுரர் நன்முல்லை
ஆதிமந்தி - குறுந் 3
இளவெயினி - புறம் 157
உப்பை ஃ உறுவை
ஒக்கூர் மாசாத்தியார்
கரீனா கண்கணையார்
கவியரசி
கழார் கீரன் எயிற்றியார்
கள்ளில் ஆத்திரையனார்
காக்கை பாடினியார் நச்செள்ளையார்
காமக்கணிப் பசலையார்
காரைக்காலம்மையார்
காவற்பெண்டு
காவற்பெண்டு
கிழார் கீரனெயிற்றியார்
குட புலவியனார்
குமிழிநாழல் நாப்பசலையார்
குமுழி ஞாழல் நப்பசையார்
குறமகள் ஃ இளவெயினி
குறமகள் ஃ குறிஎயினி
குற மகள் இளவெயினியார்
கூகைக்கோழியார்
தமிழறியும் பெருமாள்
தாயங்கண்ணி - புறம் 250
நக்கண்ணையார்
நல்லிசைப் புலமை மெல்லியார்
நல்வெள்ளியார்
நெட்டிமையார்
நெடும்பல்லியத்தை
பசலையார்
பாரிமகளிர்
பூங்கண்ணுத்திரையார்
பூங்கண் உத்திரையார்
பூதபாண்டியன் தேவியார்
பெண்மணிப் பூதியார்
பெருங்கோப்பெண்டு
பேய்மகள் இளவெயினி
பேயனார்
பேரெயென் முறுவலார்
பொத்தியார்
பொன்மணியார்
பொன்முடியார்
போந்தலைப் பசலையார்
மதுவோலைக் கடையத்தார்
மாற்பித்தியார்
மாற்பித்தியார், இயற்பெயர் பித்தி
மாறோக்கத்து நாப்பசலையார்
முள்ளியூர் பூதியார்
முன்னியூப் பூதியார்
வரதுங்க ராமன் தேவியார்
வருமுலையாருத்தி
வில்லிபுத்தூர்க் கோதையார்
வெண்ணிக் குயத்தியார்
வெள்ளி வீதியார்
வெறிபாடிய காமக்கண்ணியர்.

சித்தர்கள்: பதினெண் சித்தர்:

1. திருமூலர்   
2. இராமதேவர் 
3. கும்பமுனி 
4. இடைக்காடர்
5. தன்வந்திரி  
6. வான்மீகி
7. கமலமுனி 
8. போகநாதர் 
9. குதம்பைச் சித்தர்
10. மச்சமுனி
11. கொங்கணர்
12, பதஞ்சலி
13. நந்திதேவர்
14. போதகுரு
15. பாம்பாட்டிச் சித்தர்
16. சட்டைமுனி
17. சுந்தரானந்த தேவர்
18. கோரக்கர்

இது ஒரு பட்டியல்.

1. அகப்பேய் சித்தர்
2. அழுகணிச் சித்தர்
3. ஆதிநாதர் வேதாந்தச் சித்தர்
4. சதோகநாதர்
5.இடைக்காட்டுச் சித்தர்
6. குதம்பைச் சித்தர்
7. புண்ணாக்குச் சித்தர்
8. ஞானச்சித்தர்
9. மௌனச் சித்தர்
10. பாம்பாட்டிச் சித்தர்
11. கல்லுளி சித்தர்
12.கஞ்சமலைச் சித்தர்
13. நொண்டிச் சித்தர்
14. விளையாட்டுச் சித்தர்
15. பிரமானந்த சித்தர்
16. கடுவெளிச் சித்தர்
17. சங்கிலிச் சித்தர்
18. திரிகோணச்சித்தர்

இது  மற்றொரு  பட்டியல்.  இந்தப்  பட்டியலில் நவநாத சித்தர்களும் அடங்குவர்.

1. வான்மீகர்
2. பதஞ்சலியார்
3. துர்வாசர்
4. ஊர்வசி
5. சூதமுனி, 
6. வரரிஷி
7. வேதமுனி
8. கஞ்ச முனி
9. வியாசர்
10. கௌதமர் - இது இன்னொரு  பட்டியல்.  

பெரிய  ஞானக்கோவை சித்தர்கள் நாற்பத்தெண்மர் என்று இதனிலும் மாறுபட்ட ஒரு பட்டியலைத் தருகின்றது.

1. காலாங்கி
2. கமலநாதர்
3. கலசநாதர்
4. யூகி
5. கருணானந்தர்
6. போகர்
7. சட்டைநாதர்
8. பதஞ்சலியார்
9. கோரக்கர்
10. பவணந்தி
11. புலிப்பாணி 
12.அழுகணி
13. பாம்பாட்டி
14. இடைக்காட்டுச் சித்தர்
15. கௌசிகர்
16. வசிட்டர்
17. பிரம்மமுனி
18. வியாகர்
19. தன்வந்திரி
20. சட்டைமுனி
21. புண்ணாக்கீசர்
22. நந்தீசர்
23, அகப்பேய்
24. கொங்கணவர்
25. மச்சமுனி
26. குருபாத நாதர்
27. பரத்துவாசர்
28. கூன் தண்ணீர்
29. கடுவெளி
30. ரோமரிஷி
31. காகபுசுண்டர்
32. பராசரர்
33. தேரையர்
34. புலத்தியர்
35. சுந்தரானந்தர்
36. திருமூலர்
37. கருவூரார்
38, சிவவாக்கியர்
39. தொழுகண்
40. நவநாதர் 
(அ. சத்ய நாதர்,  ஆ. சதோக நாதர்,  இ. ஆதி நாதர், ஈ. அனாதி நாதர், உ. 
வகுளி நாதர்,  ஊ. மதங்க நாதர்,  எ. மச்சேந்திர நாதர், ஏ. கஜேந்திர நாதர், ஐ. கோரக்க நாதர்)
41. அஷ்ட வசுக்கள்
42. சப்த ரிஷிகள்.

இப்படிச்  சித்தர்கள் பட்டியல்  கணக்கில்லாமல் பெருகிக்கொண்டே செல்கிறது.  கிடைத்தவை இவைமட்டுமே.
     *தொகுப்பு*
நன்றி:திரு. விஜயன்.
------------------------------------------------
படித்து வியந்தது!
அன்புடன்
வாத்தியார்
============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

27.9.20

Astrology: Quiz: புதிர்: 25-9-2020 தேதியிட்ட புதிருக்கான விடை!

Astrology: Quiz: புதிர்: 25-9-2020 தேதியிட்ட புதிருக்கான விடை!

கேட்டிருந்த கேள்வி இதுதான். ஒரு அன்பரின் ஜாதகத்தைக் கொடுத்து, ஜாதகர் சித்திரை நட்சத்திம், துலா லக்கினக்காரர். வெளிநாட்டு வேலைக்குச் செல்ல ஆசைப் பட்டார். ஜோதிடர்களைக் கேட்டபோது, அவருக்கு வெளிநாட்டு வேலை நிச்சயம் கிடைக்கும் என்று ஆணித்தரமாகக் கூறிவிட்டார்கள். அவரும் அதன்படியே வெளிநாட்டு வேலை ஒன்று கிடைத்து, மகிழ்ச்சியோடு வெளிநாட்டிற்குச் சென்று விட்டார். அதற்கு என்ன காரணம்?  ஜாதகத்தை அலசி அதற்கு மட்டும் பதிலைச் சொல்லுங்கள்!!!” என்று கேட்டிருந்தேன்.

பதில்: ஜாதருக்கு யோககாரகனான சனீஷ்வரன் லக்கினத்தில் இருந்து 9ம் வீட்டில் அமர்ந்திருப்பதோடு சந்திரனிலிருந்து 10ம் வீட்டில் அமர்ந்திருப்பது சிறப்பாகும். அந்த சிறப்பு அவர்க்கு வெளிநாட்டு வேலையை வாங்கிக்கொடுத்தது. அத்துடன் சந்திரலக்கினத்திற்கு ஒன்பதாம் வீட்டுக்காரனான சுக்கிரன் 12ல் அமர்ந்திருப்பதோடு 10ம் அதிபதி புதனும் கூட்டாக உள்ளார். தசாநாதன் சனீஷ்வரன் பத்தில் இருப்பதும் சிறப்பாகும். இந்த அமைப்புக்களே அவருக்கு வெளிநாட்டு வேலையைப் பிடித்துக்கொடுத்தன!!!!!

அவற்றை மட்டும் இங்கே குறிப்பிட்டுள்ளேன், 

இந்தப் புதிரில் 12 அன்பர்கள் கலந்து கொண்டு தங்கள் கணிப்பை வெளியிட்டு உள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள். 

அடுத்த வாரம் 2-10-2020 வெள்ளிக்கிழமை  அன்று வேறு ஒரு புதிருடன் மீண்டும் நாம் சந்திப்போம்!!!!

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
உங்களுடைய பின்னூட்டங்கள் பிரதி எடுக்க வரவில்லை! கூகுள் புதிய இண்டெர்பேஸ் உபயம் நீங்களே பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

25.9.20

Astrology: Quiz: புதிர்: ஜாதகருக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்கும் என்று ஆணித்தரமகச் சொன்னது ஏன்?


Astrology: Quiz: புதிர்: ஜாதகருக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்கும் என்று ஆணித்தரமகச் சொன்னது ஏன்?

ஒரு அன்பரின் ஜாதகம் கீழே உள்ளது. சித்திரை நட்சத்திரக்காரர். துலா லக்கினக்காரர். வெளிநாட்டு வேலைக்குச் செல்ல ஆசைப் பட்டார். ஜோதிடர்களைக் கேட்டபோது, அவருக்கு வெளிநாட்டு வேலை நிச்சயம் கிடைக்கும் என்று ஆணித்தரமாகக் கூறிவிட்டார்கள். அவரும் அதன்படியே வெளிநாட்டு வேலை ஒன்று கிடைத்து, மகிழ்ச்சியோடு வெளிநாட்டிற்குச் சென்று விட்டார். அதற்கு என்ன காரணம்?  ஜாதகத்தை அலசி அதற்கு மட்டும் பதிலைச் சொல்லுங்கள்!!!

சரியான விடை 27-9-2020 ஞாயிற்றுக்கிழமையன்று வெளியாகும்

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
கேள்விக்கு உரிய ஜாதகம்:


================================================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

24.9.20

அப்பளக் கதைகள்!!!!


அப்பளக் கதைகள்!!!!

தேவன் எழுதிய ஒரு புத்தகமான அப்பளக் கச்சேரி யை சமீபத்தில் படித்தேன். அப்பளம் இடும் மாமிகளும் பாட்டிகளும் ஒரே இடத்தில் கூடி ஒன்றாக அப்பளம் இடும் பொழுது அவர்கள் கை மாவு இடித்து , அப்பளம் இட்டாலும் வாய் பல விஷயங்களைப் பேச காதுகள் அவற்றை உள்வாங்கும் செயலைத் தவறாமல் செய்கின்றன. அந்த நிகழ்வுகளை மிக சுவாரஸ்யமாக தேவன் வருணித்து இருப்பார். 

அதற்குப் பின் பல ஆண்டுகள் கழித்து சாவி தனது வாஷிங்டனில் திருமணம் என்ற கதையில் அதே பாட்டிகளை விமானத்தில் அமெரிக்காவிற்கு அழைத்துச் சென்று அவர்கள் அப்பளம் இட்ட கதையை ஒரு ட்வெண்டி ட்வெண்டி மாட்ச் மாதிரி ஸ்கோர் போர்டோடு சொல்லி சிரிக்க வைத்துள்ளார்.

ஆனால் இந்த பதிவு அப்பளம் பற்றிய என் சில நினைவுகள். அப்பளம் என்றவுடன் ஞாபகம் வருவது அது பற்றிய ஒரு ஜோக். ஆனந்த விகடனில் அறுபது ஆண்டுகளுக்கு முன் வந்தது.

பாட்டி : டீ.ருக்கு . அப்பள மாவ வெறும போக வர சாப்பிடாதேடி. காது செவிடாகி விடும்.
பேத்தி : சரி.பாட்டி. இனிமே ஸ்கூலுக்கு அழாம போறேன்.

இந்த ஜோக்கிற்கு கோபுலு வரைந்திருந்த படம் இன்னும் ஞாபகத்தில் இருக்கின்றது. நீட்டிய கால்களுடன் அப்பளமிடும் பாட்டி. கட்டம் போட்ட பாவாடைச் சட்டையுடன் இரட்டை சடையுடன் , மை தீட்டிய விழிகளில் குறும்பு வழிய அப்பள மாவுப் பாத்திரத்தில் கைவிடும் பேத்தி
இந்த கூத்தினை ரசிக்கும் ஈசிச் சேர் தாத்தா. இந்த படத்தின் கீழ் மேலே சொன்ன ஜோக். எப்படி மறக்கும்.?

அப்பளம் என்றவுடன் அடுத்து ஞாபகம் வருவது அசோகமித்திரனின் கதை ஒன்று. மிகவும் வறுமையில் பீடிக்கப்பட்ட குடும்பம். கணவன் மிகுந்த கஷ்டப்பட்டு சம்பாதித்த சில்லறை காசில் கொஞ்சம் போல அரிசி வாங்கி சோறு சமைத்து பருப்பு இல்லாததால் மிளகு ரசத்துடன் பறிமாற கணவன் மெதுவாக சுட்ட அப்பளம் இருந்தால் நன்றாக இருக்குமே என்கிறான். இருக்கும்தான்.ஏற்கனவே பக்கத்து வீட்டில் இதுவரை நான்கு அப்பளங்கள் கடன் வாங்கிட்டேன். இனிமே போய் கேட்டா தரமாட்டா என்கின்றாள். சரி . வீடு. இந்த மாசம் பணம் கிடைச்சதும் அப்பளம் ஒரு கட்டு வாங்கி அவர்கள் கடனை தீர்த்து விடலாம் என்கின்றான் கணவன். இதைப் படித்தது முதல் அப்பளத்தைப் பார்த்தாலே அந்த கதை ஞாபகம் வரும். அசோகமித்திரனின் கடைசி வரிதான் கிளாஸ். அவர்களுடய கடனிலேயே அடைக்க கூடிய வாய்ப்பு இந்த கடனுக்கு மட்டும்தான். அவனுடய வருமனம் அப்படி என்று முடிப்பர்.

சுட்ட அப்பளம் தனி சுவைதான். குறிப்பாக மிளகு ரசம், மிளகு குழம்பு போன்றவற்றிற்கு அது சரியான ஜோடி. அதை கரி அடுப்பில் கையும் சுட்டுக் கொள்ளாமல், முழுமையாக சுடுவதே ஒரு அற்புதமான கலை. சில சமயம் அப்பளத்தின் சில பகுதிகள் சுடும் பொழுது கருகி விடுவதுண்டு.
அதுவும் ஒரு தனி சுவைதான். அதன் பின்னர் காஸ் அடுப்பில் அதற்கான வலையில் இட்டு சுடும் அப்பளங்கள் பரவாயில்லை ரகம். ஆனால்  ஓவனில் வைத்து சுடுவது அபத்தம். அது வெளுத்து சோகை வந்தது போல இருக்கும். கொஞ்சமும் சுவையில்லாமல் இருக்கும். என் மாமாவிற்கு சாப்பாடில் எத்தனை ஐட்டங்கள் இருந்தாலும் ஒரு அப்பளம் காய்ச்சேன் என்ற கோரிக்கையை வைக்காமல் இருக்க மாட்டார். என் கசின்கள அப்படி க்கேட்பதில்லை. அவர்களே காய்ச்சி தட்டில் முதலில் அதை போட்டுக் கொண்ட பின்னர்தான் சாப்பிடவே ஆரம்பிப்பார்கள். மதியம் வெறும் வாயிற்கு என்று  அப்பளம் சுட்டு சாப்பிடுபவர்களும் எங்கள் குடும்பத்தில் உண்டு. 

அப்பளம் என்பது பொரிக்க  வேண்டிய பொருள் . அதைச் சுட்டுச் சாப்பிடுவது தவறு என்று வீரபாண்டிய கட்ட பொம்மன் வசனம் மாதிரி பேசுபவர்கள் உண்டு. அவர்கள் சொல்வது வாஸ்தவமாக பேச்சு. எந்த குழம்புடனுடனும் , ரசத்துடனும் சேர்ந்து ருசியைக் கூட்ட வல்லமை உடையது பொரித்த அப்பளம். முன்பெல்லாம் கல்யாணங்களில் கூடையில் வைத்து பறிமாறுவார்கள். இலையை விட பெரிய சைசில் இருக்கும் அப்பளங்கள் அவை. மிகச்சரியாக குழம்பு முடிந்து ரசம் வரும்போது இரண்டாவது ரவுண்டு அப்பளம், அப்பளம் என்று வருவார்கள்.அப்பளம் + பாயசம் ஒரு நல்ல காம்பினேஷன் என்று சொல்பவர்களும் உண்டு. அப்பளம் மோர் சாதத்துடன் சேராது என்ற என் நினைப்பு தவறு என்று சமீபத்தில்தான் தெரிந்து கொண்டேன். கொஞ்சமும் புளிக்காத கெட்டித் தயிரில் பிசைந்த சாதத்துடன் பொரித்த  அப்பளம் ஒரு தனி டேஸ்ட் தான்.!  சில திருமணங்களிலில் மணமகன் மணமகள் பேர் போட்ட அப்பளங்கள் பறிமாறியதாக கேள்விப்பட்டுள்ளேன். 

அப்பளம் யானையைப் போல .இருந்தாலும் இறந்தாலும் ஆயிரம் பொன் என்று யானையைப் பற்றிச் சொல்வதுண்டு. அப்பளமும் அப்படித்தான். பொரித்த  அப்பளங்கள் சில சமயம் நமுத்துப் போய் துணி போல துவண்டு போகும். அந்த துவண்ட அப்பளமும் ஒரு தனி ருசிதான். அப்பளத்தூள்களைப் பொறித்து மெந்தியக் குழம்பு செய்தால் வாசனை ஊரையே கூட்டும்.

சேலம் பொருட்காட்சியில் ராக்‌ஷச அப்பளம் பொரித்து  விற்பார்கள். அதை சாப்பிட ஒரு கூட்டமே காத்து இருக்கும். அதை கீழே விழாமலும், பக்கத்து ஆள் அப்பளத்தில் இடிக்காமலும்சாப்பிடுவது ஒரு சேலஞ். சிலர் அதை வாங்கிக்கொண்டு ஒரு ஓரமாய் சாப்பிட இடம் தேடுவதும் உண்டு.

அப்பளம் என்றாலே என் நினைவுக்கு வருவது விஸ்வம் மாமாதான். அவர் சாப்பிட உட்கார்ந்தால் பக்கத்திலேயே ஒரு தட்டில் அப்பளங்களைப் பொரித்து  உடையாமல் அடுக்கி வைத்து இருப்பார்கள். தனது தட்டில் அப்பளங்களை குழம்பு , ரசம் சாதத்தின் மேல் ஐந்து அல்லது ஆறு அப்பளங்களை அடுக்கு ஒரு அமுக்கு அமுக்கு அதை நொறுக்கி சாதத்துடன் கலந்து சாப்பிடுவார். அவருக்கு அப்பளம் இன்றி அமையாது வாழ்வு என்பது கொள்கை. விஸ்வம் மாமா சாப்பிட வருகின்றார் என்றாலே அவர் சாப்பிட ஆரம்பிப்பது முதல் கை கழுவும் வரை நிறுத்தாமல் அப்பளம் பொரித்துக்கொண்டே இருப்பார்கள். அவர் இப்படி தன் வாழ்க்கையில் ஐம்பது வருடங்களாவது அப்பளம் சாப்பிட்டு இருப்பார். ( 12x2x365x50 ) .  அப்போதெல்லாம் ஹோட்டல்களில் கூடுதல் அப்பளங்கள் கேட்டால் தனியாக பில் போடுவ்வர்கள். ஆனால் சென்னை ஸ்வாகத் ஹோட்டலில் மட்டும் எவ்வளவு அப்பளம் வேண்டுமானாலும் கூடுதல் கட்டணம் இல்லாமல் போடுவார்கள். அதனால் விஸ்வம் மாமா அந்த ஹோட்டலில் மட்டும்தான் மதிய உணவு சப்பிடுவார். கடைசி வரையில் அவருக்கு காது நன்றாக கேட்டுக் கொண்டுதான் இருந்தது.

விஸ்வநாதன் ராம மூர்த்தி மாதிரிதான் அப்பளம் , வடாம்  . அருமையான காம்பினேஷன். அப்பளம் எம்.எஸ்.வி. மாதிரி. தனியாகவும் சோபிக்கும். கல்யாண கட்டு சாதத்தில் மட்டும் வடாம் மோர் மிளகாயுடன் அமர்க்களப்படுத்தும். பப்படம் என்பது அப்பளத்தில் செய்யப்பட்ட genetic manipulation என்பது என் கருத்து.

அரிசி அப்பளம் , உளுந்து அப்பளம் இதில் சிறந்தது என்று ஒரு பட்டி மன்றமே நடத்தலாம் என்றாலும் சாரதி பாப்பையாவின் தீர்ப்பு உ.அப்பளம் , அ. அப்பளம் இரண்டையும் 2: 1 என்ற விகிதத்தில் சாப்பிடலாம்  என்பதே. 

இப்போதெல்லாம் யார் வீட்டிலும் அப்பளம் இடப்படுவதில்லை. அதனால் அப்பள மாவின் ருசியை அனுபவிக்க முடிவதில்லை என்ற குறை இருக்கத்தான் செய்கின்றது.
சாரதி.
07/06/2020
VKN Sastrigal 9443481901
------------------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
------------------------------------------


வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

22.9.20

இதல்லவா தியாகம்!!!!!


இதல்லவா தியாகம்!!!!!

1877ம் ஆண்டு.. நம் நாட்டில் கடுமையான பஞ்சம்.. பட்டினிச்சாவு மட்டும் 50 லட்சத்தை தாண்டியது. பசியால் எலும்பும் தோலுமாக மாறிவிட்ட குழந்தைகளுக்கு ஒருவேளை கூட சாப்பாடு இல்லாத நிலை!! 

அதனால், அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்தவ அமைப்புகள் இந்தியாவுக்கு மருத்துவ சிகிச்சை, உணவு தருவதற்காக இந்தியா வந்தது. அப்படி ராணிப்பேட்டைக்கு வந்தவர்தான் டாக்டர் ஜான்.. இவரது மகள் ஐடா ஸ்கடர்!"

ஒரு நள்ளிரவு கதவு தட்டப்படுகிறது.. 14 வயது சிறுமி ஐடா கதவை திறக்கிறாள்.. ஒரு பிராமணர் நின்று கொண்டிருந்தார். "அம்மா, என் மனைவி பிரசவ வலியால் துடிக்கிறாள்... உடனே வாருங்கள்" என்றார். ஐடாவோ,  "நான் டாக்டரல்ல, என் அப்பாதான் டாக்டர், கொஞ்சம்  இருங்கள் அவரை எழுப்பறேன்" என்கிறார்.

"இல்லையம்மா.. என் மனைவிக்கு 14 வயசு தான். நாங்கள் பிராமணர்கள். பெண்ணை ஒரு ஆண் தொட அனுமதி இல்லை" என்று சொல்லிவிட்டு தலையை தொங்க போட்டுக் கொண்டு நகர்ந்துவிடுகிறார். சிறிது நேரத்தில் மற்றொருவர் கதவை தட்டுகிறார்.. அவர் ஒரு முஸ்லிம்.. மனைவிக்கு பிரவச வலி என்பதால் உடனே வருமாறு அழைத்தார். ஐடா தன் தந்தையை பற்றிக்கூற, "வேண்டாம்மா... நாங்கள் இஸ்லாமியர்கள்... எங்கள் பெண்ணை ஆண்கள் பார்க்கவே கூடாது" என்று அவரும் சோகத்துடன் திரும்பிவிட்டார். 

அந்த பெண்களுக்கு என்ன ஆச்சோ என்று இரவெல்லாம் பதட்டத்துடன் நடமாடுகிறாள் ஐடா... மறுநாள் காலை அந்த கர்ப்பிணிகளின் சடலம் கொண்டு செல்லப்படுவதை பார்த்து தேம்பி தேம்பி அழுகிறாள்.. "என்ன தேசமிது? பெண்களை படிக்க வைக்கவும் மாட்டார்களாம், ஆனால் பெண்ணுக்குப் பெண்தான் பிரசவம் பார்க்க வேண்டுமாம்? இந்த நாட்டில் பெண்களை படிக்கவிடவில்லை என்றால் என்ன, நான் படித்துவிட்டு வந்து இந்த பெண்களைக் காப்பாற்றுவேன்" என சபதமேற்கிறாள்!

திரும்பவும் அமெரிக்கா சென்று மருத்துவம் படிக்கிறார்.. இளம்வயது ஐடாவின் அழகையும், அறிவையும், சக தோழர் ஒருவர் விரும்பி கல்யாணம் செய்ய ஆசைப்படுகிறார்.. ஆனால் ஐடா அந்த காதலை நிராகரிக்கிறார்.. மருத்துவம் படித்து முடித்ததும் அமெரிக்காவிலேயே வேலை வாய்ப்புகள் வந்தன.. ஐடா அதையும் நிராகரிக்கிறார்.. தமிழகத்தில் இறந்து போன அந்த பெண்களின் சடலங்கள் மட்டுமே கண்முன் வந்து வந்து போயின!!

ஆனால், வெறும் படிப்பை மட்டும் வைத்துக் கொண்டு எவ்வளவு பேரை தமிழ்நாட்டில் காப்பாற்ற முடியும் என்று நினைத்து, ஒரு ஆஸ்பத்திரி தேவை என்பதை உணர்கிறார்.. பல நாடுகளில் இந்தியாவின் அவலத்தை சொல்லி உதவி கேட்கிறார்.. அதன்படி நிதி சேர்கிறது... இனி ஒரு கர்ப்பிணியைகூட சாக விடமாட்டேன் என்ற உறுதியுடன் 20-ம் நூற்றாண்டின் முதல் நாளில் தமிழகத்தில் கால் பதிக்கிறார் ஐடா.

மருத்துவமனை கட்டும் பணி ஒரு பக்கம் துவங்குகிறது.. மற்றொரு பக்கம், சோதனைகூடம், கருவிகள் எதுவும் இல்லாமல் காடுகள், மேடுகள், குடிசைகள், கூடாரங்கள் என ஊர் ஊராக ஓடி மருத்துவம் பார்க்கிறார்.. இறுதியில்,  40 படுக்கை வசதி, நோயாளிகளுக்கு இலவச கூடங்களுடன் அந்த மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டது.

பெண்ணுரிமை என்ற பேச்சுக்கே இடமில்லாத நேரத்தில், பெண்களுக்கென அந்த மருத்துவமனையை கட்டி முடித்தார் ஐடா! அதுதான் ஆசியாவிலேயே தனிப்பெருமை வாய்ந்து, கம்பீரமாய் உயர்ந்து.. நூற்றாண்டை கடந்து இன்றும் பிரம்மாண்டமாய் நிற்கும்  "சிஎம்சி" ஆஸ்பத்திரி!!

இந்த பெண் யார்? இவர் ஏன் நமக்காக அழுதார்? இவர் ஏன் நமக்காகவே வாழ்ந்தார்? எங்கேயோ பிறந்து, எங்கேயோ வளர்ந்து, நம்ம நாட்டுக்கு தன் வாழ்க்கையையே மொத்தமாக அர்ப்பணித்த ஐடா, அன்னை தெரசாவுக்கே வழிக்காட்டி என்று சொன்னால் நம்ப முடிகிறதா?!! 

ஒரு பெண் தனி ஆளாக நின்று ஏற்றிய மெழுகுவர்த்தி, இன்று பிரகாசமாக, உலகத் தரத்தோடு, வேலூரில் இன்னமும் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது.. லட்சக்கணக்கான மக்களுக்கு உயிர் தந்து கொண்டுமிருக்கிறது.. தேசிய மருத்துவர் தினமான இன்றைய நாளில், இந்த வெள்ளுடை தாய்க்கு மட்டுமில்லை.. உயிரை பணயம் வைத்து சிகிச்சை தந்து வரும் அனைத்து மனித தெய்வங்களுக்கு என் கோடி நன்றிகள்!!
---------------------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
======================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

21.9.20

நமது வாழ்வியல் முறை!!!!


நமது வாழ்வியல் முறை!!!!          

புதுமனைப் புகுவிழா போன்ற பல நேரங்களில், வீட்டின் முன் சாம்பல் பூசணிக்காயைக் கட்டித் தொங்கவிடும் பழக்கம் நமது கலாசாரத்தில் இருக்கிறது.

*பூசணிக்காயை ஏன் கட்டுகிறார்கள், அந்தக் காய்க்கு மட்டும் அப்படி என்ன சிறப்பு?*

உணவுகளில் மிகவும் அதிக பிராண சக்தி கொண்ட சில உணவுகள் உள்ளன. அந்த உணவுகளிலும் மஹா பிராண சக்தி கொண்டது சாம்பல் பூசணி.

அந்தக் காய் மிக அதிகமான நேர்மறை பிராண சக்தி கொண்டது. எனவேதான் அதை வீட்டு முன் கட்டித் தொங்க விடுகிறோம்.

புதிய வீட்டில் குடியேறும் போது, சில தீய சக்திகள் அங்கே இருக்கலாம். எனவே, ஒரு பூசணிக் காயை நம் வீட்டின் முன் கட்டும் போதே,

அந்த இடத்தில் உண்டாகும் நேர்மறை அதிர்வுகள் அந்த இடத்தில் உள்ள எதிர்மறைச் சக்திகளை அகற்றி விடுகின்றன.

நாம் அதைச் சாப்பிடும் போது, அது நமக்கு மிகவும் நல்லது செய்கிறது. ஆனால், நம் கலாசாரத்தில் ஒரு வழக்கம் இருந்தது.

நம் வீட்டிலேயே ஒரு பூசணிக்காயை வளர்த்தாலும் அதை அந்தணருக்குத் தானமாகக் கொடுத்துவிடும் பழக்கம் இருந்தது.

நீங்கள் அதைத் தானமாகக் கொடுக்கும்போது உங்களுக்கு புண்ணியம் கிடைக்கும் என்று சொல்லி இருக்கிறார்கள். 
வாங்குபவருக்கோ இங்கேயே நல்ல உணவு கிடைத்துவிடுகிறது.

பூசணிக்காயைத் தொடர்ந்து சாப்பிடும்போது நம் மனம் மிகுந்த விழிப்புணர்வை அடைகிறது. புத்தி கூர்மையும் புத்துணர்வும் சமநிலையும் அதிகரிக்கிறது.

இவ்வளவு பிராண சக்தியுடன் இருப்பதால் தான் வீடு கட்டி புதிதாகக் குடியேறும்போது அனைத்து எதிர்மறைச் சக்திகளையும் களைவதற்கான ஒரு வாய்ப்பாக பூசணிக்காயைப் பயன்படுத்துகிறார்கள்! 

*பூஜைக்கு எது அவசியம்.?*

மகா பாரதத்தில் ஒரு கதை வரும். 
அர்ஜுனனுக்கு தான்தான் பெரிய சிவ பக்தன் என்ற கர்வம். ஒருநாள் அவன் கண்ணனுடன் கைலாயத்தை நோக்கி நடந்து போய்க் கொண்டிருந்த போது சிவ கணங்கள் மலை மலையாய் பூக்களை அள்ளிக் கொண்டு ஒரு இடத்தில கொட்டிக் கொண்டிருந்ததை கண்டான்.

அதைக் கண்ட அர்ஜுனன் யார் இவ்வளவு மலர்களை சிவபெருமானுக்கு அர்ச்சிக்கிறார்கள் என்று அவர்களிடம் கேட்டான்.

யாரோ பூலோகத்தில் பீமனாம் அவன் செய்யும் பூஜையில்தான் இவ்வளவு மலர்கள் குவிகின்றன , இன்னும் நிறைய குவிந்துள்ளதை அப்புறப்படுத்தவேண்டும் , உங்களிடம் பேசக்கூட நேரமில்லை நாங்கள் வருகிறோம்.

என்று அவன் பதிலுக்குக் கூட காத்திராமல் சென்றுவிட்டனர். அவனுக்கு தெரிந்து பீமன் என்றும் சிவ பூஜை செய்து பார்த்ததே கிடையாது.

வயிறு முட்டத் தின்றுவிட்டு உறங்குவதைத்தான் பார்த்திருக்கிறான். அர்ஜுனன்.

உடனே அவன் கண்ணனை இது எப்படி சாத்தியம் என்று கேட்டான். 
அது மிக எளிது.

பீமன் மனதினாலேயே இந்த அகிலத்தில் பூக்கும் அத்தனை மலர்களையும் சிவனுக்கு அர்ப்பணித்துவிடுகிறான்.

அவை முழுவதும் சிவனின் திருவடிகளில் போய் விழுந்துவிடுகின்றன என்றான் 
அத்துடன் அர்ஜுனன் கர்வம் அகன்றது.

இறைவனை பூஜிக்கும்போது அர்ப்பணிப்புத்தான் முக்கியமே அன்றி. 
கர்வம் கொள்ளுதல் கூடாது என்பதை உணர்ந்தான்..

*சூலாயுதங்களில் எலுமிச்சை ஏன் குத்தப்படுகிறது?*

குத்தப்படுவதற்கு காரணம் எலுமிச்சை தேவ கனி என்பதால் ஆகும்.

முக்கனிகளான மாம்பழத்தில் வண்டு குற்றம் உண்டு. பலாவில் வியர்வை குற்றம் உண்டு. வாழையில் புள்ளி குற்றம் உண்டு. ...

ஆனால் எலுமிச்சையில் மட்டும் இவ்வித குற்றங்கள் இல்லை.

மனிதனுடைய எண்ணங்களை ஈர்க்கும் சக்தி மற்ற கனிகளைக் காட்டிலும் எலுமிச்சைக்கு அதிகம் உண்டு.

அதனால் தான் சூலாயுதத்தில் எலுமிச்சை குத்தப்படுகிறது . 


*திருமண அழைப்பிதழில் மஞ்சள் பூசுவது ஏன் ?*

மஞ்சள் என்பது மங்களத்தின் அடையாளம். சுப நிகழ்ச்சிகள் துவங்கும் போது பிள்ளையார் பிடிப்பதிலிருந்தே மஞ்சளின் உபயோகம் ஆரம்பித்து விடுகிறது.

மஞ்சள் பயன்பாடு இவைகளுக்காக மட்டுமில்லை. மஞ்சள் நல்ல கிருமி நாசினி. அது இருக்கும் இடத்தில் பூச்சி பொட்டுகள் அவ்வளவு சீக்கிரம் அண்டாது.

அதனால் தான் திருமணம் போன்ற சுப நிகழ்வுகளுக்கு வைக்கப்படும் அழைப்பிதழ்களின் ஓரங்களில் மஞ்சள் பூசப்படும்.

திருமண பத்திரிக்கைகள் சம்பிரதாயங்களுக்காக உள்ளது மட்டுமல்ல. அதில் மனிதனின் நிகழ்வுகளும் மறைந்து கிடக்கிறது.

ஐம்பது வருடத்திற்கு முன்பு நடந்த திருமணத்தை அன்று அச்சடித்த அழைப்பிதழ்களை தொட்டு பார்த்தவுடனே நேராக அனுபவிப்பது போன்ற சுகம் கிடைக்கும்.

கறுப்பு இருட்டு அண்டிய இடங்கள் விரைவில் அழிந்து விடும். ஒரு அறையை வெகுநாட்களாக பயன்படுத்தாமல் வைத்திருந்தோமேயானால் அங்கே இருள் இருபத்தி நான்கு மணி நேரமும் மண்டியிட்டு உட்கார்ந்திருக்கும்.

சிறிது சிறிதாக சுவர்கள் ஈரமாகி கரையான்கள் அரித்து அறை யாருக்கும் பயன்படாதவாறு ஆகிவிடும்.

மரணம் என்பது மறக்கபட வேண்டிய நிகழ்வு. இறந்து போனவனையே நினைத்து கொண்டிருந்தால் வாழ்பவன் பிணமாகி விடுவான்.

உயிர்கள் அணைத்து வாழ்விலும் சாவு என்பது தவிர்க்க முடியாதது என்றால் அதை எப்போதுமே நினைத்து கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை.

அதனால் தான் மரணம் சம்மந்தப்பட்ட பொருட்கள்0 அனைத்தையும் விரைவில் அழிந்து போகுமாறு உருவாக்குகிறோம்.

கருமாதி பத்திரிக்கையில் பூசப்படுகின்ற கறுப்பும் அந்த காகிதத்தை விரைவில் செல்லரிக்க வைத்துவிடும். 


*சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது ஏன்.?*

முன்பெல்லாம் வாழை இலையில் தரையில் பரிமாறுவதுதான் கெளரவம்..ஆனால் இப்போது உணவு உண்ணும் மேசை (dining table)....

இது சரியா தவறா ?!!

*முதலில் முன்னோர்கள் இப்படி சம்மணமிட்டு சாப்பிட்டதின் நோக்கமென்ன?*

சாப்பிடும் பொழுதாவது நாம் காலை மடக்கி அமர்ந்து தான் சாப்பிட வேண்டும். சாப்பிடும் பொழுது காலைத்தொங்க வைத்து அமர்வதனால் ரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல் காலுக்கே அதிகமாகச் செல்கிறது.

எனவே செரிமானம் தாமதமாகிறது. காலை மடக்கி சுக ஆசனத்தில் அமர்ந்து சாப்பிட்டால் சாப்பிட, சாப்பிட, சாப்பாடு செரிமானமாகிவிடும்.

ஏனென்றால் கீழே ரத்த ஓட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் செல்லும் பொழுது நமக்கு செரிமானம் நன்றாக நடைபெறுகிறது.

எனவே தான் சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடும் படி வலியுறுத்த பட்டது. 
------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
=============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

19.9.20

Astrology: Quiz: புதிர்: 11-9-2020 தேதியிட்ட புதிருக்கான விடை!


Astrology: Quiz: புதிர்: 11-9-2020 தேதியிட்ட புதிருக்கான விடை!

கேட்டிருந்த கேள்வி இதுதான். ஒரு அன்பரின் ஜாதகத்தைக் கொடுத்து, ஜாதகர் திருவோண நட்சத்திம், கடக லக்கினக்காரர். எந்த வேலைக்குப் படிக்கலாம், எந்த வேலைக்குப் போகலாம் என்று ஜோதிடர்களைக் கேட்டபோது, அவருக்கு நீதித்துறை ஏற்றம் மிகுந்ததாக சிறப்பாக இருக்கும் என்று கூறிவிட்டார்கள். அவரும் அதன்படியே செய்து சிறப்பாக தனது தொழிலைச் செய்தார்.  அதற்கு என்ன காரணம்?  ஜாதகத்தை அலசி அதற்கு மட்டும் பதிலைச் சொல்லுங்கள்!!! ” என்று கேட்டிருந்தேன்.

பதில்: ஜாதருக்கு 28வது வயதில் குரு மகா திசை துவங்கியது. குரு பகவான் ஒன்பதாம் வீட்டில் - தன் சொந்த வீட்டில் இருக்கிறார்.அவருக்கு 10ன் அதிபதி செவ்வாயின் பார்வையும் சிறப்பாக அமைந்து, வழக்குரைஞராக துவங்கிய ஜாதகரின் வாழ்க்கையை நீதியரசர் (ஜட்ஜ்) பதவியில் கொண்டுபோய் குரு பகவான் அமர வைத்தார். அவற்றை மட்டும் இங்கே குறிப்பிட்டுள்ளேன், 

இந்தப் புதிரில் 10 அன்பர்கள் கலந்து கொண்டு தங்கள் கணிப்பை வெளியிட்டு உள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள். 

அடுத்த வாரம் 25-09-2020 வெள்ளிக்கிழமை  அன்று வேறு ஒரு புதிருடன் மீண்டும் நாம் சந்திப்போம்!!!!

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
1
venkatesh r
19:09 (2 minutes ago)
to me
புதிருக்கான விடை:
வணக்கம்.
கடக இலக்கினம், மகர ராசி ஜாதகர்.
ஜாதகருக்கு நீதித்துறைதான் சிறப்பானது என்று சொன்னது ஏன்?
ஒருவர் வழக்கறிஞராக வேண்டும் வேண்டுமெனில், அவரது ஜாதகத்தில் சட்டத்துறைக்கு காரகனான சனி முதன்மை வலுப் பெற்று, நீதித்துறைக்கு காரக கிரகமான குருவின் தொடர்பு கொண்டிருக்க வேண்டும். சுபத்துவம் பெற்ற சனி பொய்யை தொழிலாக செய்ய வைப்பார்.
1) சட்டத்துறைக்கு காரககிரகமான சனி ஏழில் அமர்ந்து இலக்கினாதிபதி சந்திரனின் கூட்டணியிலுள்ளார்.
2) நீதித்துறைக்கு காரக கிரகமான குரு 9மிடமான மீன ராசியில் வலுவாக (சுய பரல் 7) உள்ளார்.
3) யோகாதிபதியும், கர்மாதிபதியுமான செவ்வாய் 2ல் சிம்ம ராசியில் அமர்ந்து குருவை தன் 8ம் பார்வையில் வைத்துள்ளார்.
மேற்கண்ட காரணங்களால், ஜாதகர் எந்த வேலைக்குப் படிக்கலாம், எந்த வேலைக்குப் போகலாம் என்று ஜோதிடர்களைக் கேட்டபோது, அவருக்கு நீதித்துறை ஏற்றம் மிகுந்ததாக சிறப்பாக இருக்கும் என்று கூறிவிட்டார்கள். அவரும் அதன்படியே செய்து சிறப்பாக தனது தொழிலைச் செய்தார்.
--------------------------------------------------------------------
2
Jeeva nantham
Thu, 17 Sep, 16:08 (1 day ago)
to me
Dear Sir,
ஜாதகருக்கு நீதித்துறைதான் சிறப்பானது என்று சொன்னது ஏன்? 
1. The given horoscope person's lagna lord moon is in 7th along with 7th lord saturn.  
2. 9th lord jupiter is in 9th place. own place. 
3. Saturn aspects 9th place as 3rd aspect. Also saturn in his own place.
4. 10 th lord mars in 2nd. Mars is aspecting 9th place.
Since karmakarakan, 10th lord, 9th lord is having connection, the person got the work as judge. 
Saturn will give very good judgement.
Thanking you sir,
Yours sincerely,
C. Jeevanantham.
----------------------------------------------------------
3
Lokeswaran S
Thu, 17 Sep, 02:24 (1 day ago)
to me
Dear Sir
PFA
Astrology: Quiz: புதிர்: ஜாதகருக்கு நீதித்துறைதான் சிறப்பானது என்று சொன்னது ஏன்?
DOB: 09/07/1963, 08.10 AM, Chennai
கடக லக்னம், மகர ராசி, ராசிக்கு  2 ஆம் அதிபதி (தனம், வாக்கு) பொய் சொல்ல வைக்கும் கிரகமான சனியாகி, அவர் லக்கினத்திற்கு 10 ஆம் அதிபதியான 2 இல் அமர்ந்த செவ்வாய் சாரம் பெற்று, ராசியில் பௌர்ணமி சந்திரனுடன் 12 டிகிருக்குள் இணைந்து சுபத்துவமாகி மூன்றாம் பார்வையால் ஆட்சி பெற்ற குருவையும், ராசிக்கு 10 ஆம் இடத்தையும் பார்த்து, உரிய வயதில் (28 முதல் 63 வரை) தொடர்ந்து நீதித்துறை யை குறிக்கும் குரு, சனி தசை நடந்ததால் ஜாதகர் நீதித்துறையில் பணியாற்றினார்.
ராசிக்கும் லக்கினத்திற்கும் 2,6,10 ஆம் அதிபதிகளும் பாவங்களும்  வழக்கறிஞர் தொழிலைக் குறிக்கும் குரு, சனி தொடர்புபெற்று, பௌர்ணமி சந்திரன், ஆட்சி குரு பார்வை யை லக்கினமும், லக்கினாதிபதியும் பெற்றதால், சட்டத்துறையில் உயர்நிலையான நீதிபதியாக பணியாற்றியிருப்பர்.
------------------------------------------------------------------
4
Ravi K
Tue, 15 Sep, 16:26 (3 days ago)
to me
ஐயா
தொழில் ஸ்தானமாகிய 10 ஆம் அதிபதி செவ்வாய் வாக்கு  ஸ்தானமாகிய 2ஆம் வீட்டில். நல்ல பேச்சுத்திறனை கொடுக்கக்கூடியது.
எனவே நீதித்துறை அல்லது விற்பனைத்த்துறை அல்லது வ்யாபாரத்துறையில் பரிமளிக்க வாய்ப்புள்ளது, சுக்கிரனும் புதனும் விரயத்த்தில் உள்ளதால் வியாபாரம் சிக்கல். எனவே நீதித்துறை பரிந்துரைக்கலாம்
கே. ரவி
M:9840601278
------------------------------------------------------
5
Chandrasekara Azad Palaniappan
Tue, 15 Sep, 15:46 (3 days ago)
to SP.VR.SUBBIAH, me
Dear Sir
KIndly find the Reason:
கடக லக்கின,  திருவோண நக்ஷத்திர,  மகர ராசி ஜாதகரின் வேலை அல்லது தொழில் பற்றிய நிலை அறிய , லக்கின அதிபதி , ஆறாம் அதிபதி மற்றும் பத்தாம் அதிபதி நிலையை பார்க்க வேண்டும் 
ஜாதகரின் லக்கின அதிபதி சந்திரன் மற்றும் ராசி அதிபதி சனி இருவரும் லக்கினத்தை தன் பார்வையால் சிறப்புற செய்கிறார்கள் .... மேலும் ஆறாம் அதிபதி குருவும் பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்து லக்கினத்தை தனது ஐந்தாம் பார்வையால் சிறப்படைய செய்கிறார்கள் 
ராசி அதிபதி சனியும், ஆறாம் அதிபதி குருவும் நீதி துறையை தன்வசம் கொண்டு உள்ள இரண்டு கிரகங்களாகும். இந்த நீதி துறை சார்ந்த இரு கிரகங்களும் ஜாதகருக்கு , ராசி அதிபதியாகவும் , ஆறாம் வீடு அதிபதியாகவும் அமைந்து லக்கினத்தை பார்ப்பதால் நீதி துறையில் சிறப்பினை அடைய செய்தது. 
மேலும் ஆறில் அமர்ந்து ஞானகாரகன்  கேதுவும்,  பத்தாம் அதிபதி செவ்வாயும் அரசு மூலமாக சேவகம் செய்ய செய்தது. மேலும் ஆறாம் இடத்தில் அமர்ந்த கேதுவின் மேல் ராஜ கிரகமான சூரியனின் நேரடி பார்வையும், வித்யா காரகன் புதனின் பார்வையும் ஜாதகரை நீதி துறையில் சிறக்க செய்தது. 
இப்படிக்கு 
ப. சந்திரசேகர ஆசாத்
கைபேசி : 8879885399 
--------------------------------------------------------------
6
csubramoniam
Tue, 15 Sep, 14:03 (3 days ago)
to me
ஐயா கேள்விக்கான பதில்
1 .லக்கினாதிபதி சந்திரன் மற்றும் ஏழாம் அதிபதி சனியின் நேரடி பார்வையில் லக்கினம்
2.பத்தாம் அதிபதி செவ்வாய் இரண்டில் அமர்ந்து ஒன்பதாம் அதிபதி குருவை பார்க்கிறார் ,குரு நீதி துறைக்கு அதிபதி
3 .மேலும் குருவின் பார்வை லக்னத்தின் மீது
3 .ஆகவே ஜாதகருக்கு நீதி துறை சிறப்பானது
நன்றி
தங்களின் பதிலை ஆவலுடன் 
------------------------------------------------------
7
Ramanathan Swaminathan
Sat, 12 Sep, 22:41 (6 days ago)
to me 
Astrology: Quiz: புதிர்: ஜாதகருக்கு நீதித்துறைதான் சிறப்பானது என்று சொன்னது ஏன்?
DOB 9/7/1963 approx 7:54 AM
The following may be strong reasons
1. 10th house owner Mars in the 2nd House of Sun (ability to speak and earn with speech)- Mars is Trikonathipathi as well as kendradhipathi (5th /10th ) for this Horoscope.
2. Saturn (Best judge) along with Lagnathipathi looking at Lagna makes the person as neutral / balance personality
3. Bakyastanathipathy Guru (karaga for law/finance) in his own house looking at Lagna
4. Rahu in 12th house -could be the person leading criminal lawyer
5. Seeing Bhadra Yoga (mercury in its own house) Hamsa yoga ( Guru in his own house) and Sasa yoga ( Saturn in its own house) - could be the reasons to shine in law field (Guru - Law; Saturn: Justice; Mercury ; Brilliance)
Blogger RAMVIDVISHAL
---------------------------------------------------------------------
8
KMR.Krishnan KMR.Krishnan
Sat, 12 Sep, 20:45 (6 days ago)
to me
As the new comments disabled by The admin, I send my comment by mail which please include.
லக்கினத்திற்கு யோக காரகனும், பத்தாம் இடத்துக்கு அதிபதியுமான செவ்வாய் வாக்கு ஸ்தானமான இரண்டில் அமர்ந்தது, வழக்கு வியாஜ்ஜியங்களுக்கான 6ம் இடத்து அதிபதி குரு பாக்கிய ஸ்தனமான ஒன்பதில் அமர்ந்து
லக்கினத்தைத் தன் பார்வையில் கொண்டிருந்தது.வேலைக்கான காரகன் சனிபகவான், 6ம் இடத்து அதிபனான குருவினத் தன் பார்வையில் வைத்தது. இக்காரணங்களால் ஜாதகர் நீதித்துறையில் பிரகாசித்தார்.
K.Muthuramakrishnan
-------------------------------------------------


===================================================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

15.9.20

சோதனைமேல் சோதனை!


சோதனைமேல் சோதனை!

கடந்த 20 ஆண்டுகளாக நன்றாகப் போய்க் கொண்டிருந்த வலைப்பதிவுகளூக்கு உதவுகிறேன் - தொழில்நுட்பத்தை அதிகப் படுத்துகிறேன் என்று சொல்லிக் கூகுள் ஆண்டவர் நமக்குப் பழக்கமான செல்லும் வழியை மாற்றிவிட்டார்.

அதாவது புதிய இண்ட்டர்ஃபேசை அறிமுகப்படுத்தியுள்ளார். அதை முழுமையாக புரிந்து கொண்டு உபயோகிக்க 4 அல்லது 5 தினங்கள் ஆகும்.

நீங்கள் அனுப்பும் பின்னூட்டங்கள் முறைப்படி வரவில்லை. அதனால் பிரச்சினையாக உள்ளது.

நமது வகுப்பறை மாணவர் சந்திரசேகர ஆஸாத்’ ஏன் பின்னூட்டங்கள் தடை செய்யப்பட்டுள்ளது என்று கேட்டு உள்ளார். நான் எதையும் தடை செய்யவில்லை.

ஆகவே 11-9-2020ம் தேதி புதிருக்கு உரிய விடையை வெளியிடாமல் நிறுத்தி வைத்திருக்கிறேன்

இந்த ஒரு தடவை மட்டும் அந்த புதிருக்கான உங்கள் கணிப்பை வாத்தியாரின் மின்னஞ்சலுக்கும் அனுப்புங்கள் அத்துடன் மீண்டும் ஒருமுறை பின்னூட்டப்பெட்டிக்கும் அனுப்புங்கள்

உங்களின் பதிலுக்காக நான் காத்திருக்கிறேன்.

வரும் வெள்ளிக்கிழமை காலை 6 மணிவரை நீங்கள் அனுப்பலாம் அன்று 7 AM மணிக்கு சரியான விடை உங்களுடைய கணிப்புக்களூடன் வெளியாகும்

என்ன Okay yaa?

அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

14.9.20

கற்றுக் கொடுக்கும் தொழிலின் மேன்மை!!!


கற்றுக் கொடுக்கும் தொழிலின் மேன்மை!!!

ஒரு விழாவில் இளைஞர் ஒருவர் தன்னுடைய பழைய ஆசிரியரை சந்திக்கின்றார். அப்போது அந்த முன்னாள் மாணவ இளைஞர் "தன்னை தெரிகின்றதா ? " என்று அந்த ஆசிரியரிடம் கேட்கின்றார். ஆசிரியரோ "எனக்கு நினைவில் இல்லை எனவே நீங்களே யார் என்று அறிமுகம் செய்து கொள்ளுங்களேன் " என்றார்.

இளைஞர் கூறினார், "நான் உங்கள் முன்னாள் மாணவன் " என்றார். அதற்கு அந்த ஆசிரியர் "மிக்க மகிழ்ச்சி, எங்கு உள்ளீர்கள், வாழ்க்கை எப்படி உள்ளது , என்ன செய்கிறீர்கள் " எனக் கேட்டார். இளைஞர், "நான் ஆசிரியராக உள்ளேன் ". என்றார். "அவ்வாறு ஆசிரியர் ஆக வேண்டும் என்று எது உங்களைத் தூண்டியது " என வினவினார் அந்த ஆசிரியர் . "உங்களால் தான் தூண்டப்பட்டேன். உங்களைப் பார்த்துத் தான் நானும் ஆசிரியனாக வேண்டும் என்ற உணர்வு மேலோங்கியது " என்றார். மேலும் "உங்களுடைய செயல்களின் தாக்கத்தினால் தான் நானும் கற்றுக் கொடுக்கும் தொழிலில் உள்ளேன் " என்றார். " எப்படி என்ன தாக்கம் உங்களிடததிலே உண்டாக்கினேன் " எனக் கேட்டார் ஆசிரியர்.

" நான் உங்களுக்கு ஒரு கதை கூறட்டுமா? " என்று கூறி சொல்ல ஆரம்பித்தார் அந்த இளைஞர். _ " ஒரு நாள் என்னுடைய வகுப்புத் தோழர் மிகவும் விலையுயர்ந்த கடிகாரத்தை அணிந்து வந்தார். அப்படிப்பட்ட ஒரு கைக்கடிகாரம் வாங்குவது என்னுடைய சக்திக்கு அப்பாற்ப்பட்டது. எனவே அதனை திருட நினைத்து அவர் கடிகாரத்தை பாக்கெட்டில் வைத்திருந்த போது எடுத்து விட்டேன். அவர் வகுப்பறைக்குள் வந்தவுடன் தன்னுடைய கடிகாரம் காணவில்லை என்று ஆசிரியரிடம் புகார் செய்தார். ஆசிரியர் அவர்களும் இவருடைய கடிகாரத்தை எவர் எடுத்து இருந்தாலும் அதனை திரும்பக் கொடுத்து விடுங்கள் என அறிவித்தார். நான் எப்படி கடிகாரத்தை திருப்பித் தருவேன் என நினைத்து எனக்கு மிகவும் சங்கடமாக போய்விட்டது.

ஆசிரியர் வகுப்பறையின் கதவை மூடச் செய்தார். எல்லோரையும் எழுந்து வரிசையாக நிற்கச் சொன்னார். எனக்கு மிகவும் அவமானமாக போய்விட்டது. அவர் கூறினார், மாணவர்களே வரிசையாக நில்லுங்கள் , ஆனால் எல்லோரும் கண்ணை மூடிக் கொண்டு தான் நிற்க வேண்டும் என்றார். அவர் ஒவ்வொருவரின் பாக்கெட்டுகளிலும் கையை விட்டு பார்த்துக் கொண்டே சென்றார். என்னுடைய பாக்கெட்டுக்குள்ளும் கையை விட்டார் கடிகாரத்தையும் எடுத்துக் கொண்டார். ஆனால் எல்லோரும் கண்களை மூடி இருந்ததால் எவரும் எதையும் பார்க்க இயலவில்லை.

பின்னர் அந்த கடிகாரத்தை உரியவரிடம் கொடுத்து விட்டார். ஆனால் இது பற்றி ஒரு வார்த்தை கூட என்னிடம் கேட்கவில்லை. வேறு எவரிடமும் இது பற்றி கூறவோ, சம்பவத்தை விவரிக்கவோ இல்லை. அந்நாளிலே நீங்கள் என்னுடைய மானத்தை காபாற்றினீர்கள் என்னை திருடன், மோசடிக்காரன், என்றெல்லாம் திட்டாமல் ஒன்றுமே பேசாமல் இருந்தீர்கள் என்னுடைய கவுரத்தையும், மானத்தையும் காபாற்றினீர்கள். என்னிடமும் எதுவும் கூறவில்லை. அது மட்டுமின்றி கடிகாரத்தின் உரிமையாளரிடமும் இது பற்றி எதுவும் கூறவில்லை. இது எனக்கு ஒரு செய்தியை கற்றுத் தந்தது. அது ஆசிரியர் என்பவர் இப்படி தான். கற்பித்தல் என்பது எவ்வளவு அற்புதம். இதைத் தான் என் வாழ்க்கையிலும் மேற்கொள்ள வேண்டும் என்றும் , கற்பித்தலை செய்ய வேண்டும் என விரும்பினேன்" இதனைக் கேட்ட அந்த ஆசிரியர் "அற்புதம்" என்றார்.

மீண்டும் அந்த இளைஞர் கேட்டார் , "இப்பொழுதாவது என்னை தெரிகின்றதா" எனக் கேட்டார். அதற்கு மீண்டும் "எனக்கு எதுவும் நினைவில் இல்லை, யார் என்பதும் தெரியவில்லை" ? என்றார். "ஏன் தெரியவில்லை " என்று கேட்டார் அந்த இளைஞர். *ஆசிரியர் கூறினார்,* "நானும் அந்த சமயத்தில் கண்ணை மூடிக் கொண்டிருந்தேன்" என்றார்.!
==========================================================
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
===================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

11.9.20

Astrology: Quiz: புதிர்: ஜாதகருக்கு நீதித்துறைதான் சிறப்பானது என்று சொன்னது ஏன்?



Astrology: Quiz: புதிர்: ஜாதகருக்கு நீதித்துறைதான் சிறப்பானது என்று சொன்னது ஏன்?

ஒரு அன்பரின் ஜாதகம் கீழே உள்ளது. திருவோண நட்சத்திரக்காரர். கடக லக்கினக்காரர். எந்த வேலைக்குப் படிக்கலாம், எந்த வேலைக்குப் போகலாம் என்று ஜோதிடர்களைக் கேட்டபோது, அவருக்கு நீதித்துறை ஏற்றம் மிகுந்ததாக சிறப்பாக இருக்கும் என்று கூறிவிட்டார்கள். அவரும் அதன்படியே செய்து சிறப்பாக தனது தொழிலைச் செய்தார்.  அதற்கு என்ன காரணம்?  ஜாதகத்தை அலசி அதற்கு மட்டும் பதிலைச் சொல்லுங்கள்!!!

சரியான விடை 13-9-2020 ஞாயிற்றுக்கிழமையன்று வெளியாகும்

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
கேள்விக்கு உரிய ஜாதகம்:


==================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

10.9.20

தங்கத்திற்கும் கொரோனாவிற்கும் உள்ள தொடர்பு!!!!


தங்கத்திற்கும் கொரோனாவிற்கும் உள்ள தொடர்பு!!!!

🔔BREAKING NEWS*

*🔷🔶கோவையில் நகைப்பட்டறை தொழிலாளர்கள், நகைக்கடையில் பணியாற்றும் ஊழியர்கள் என  தங்கத்துடன் தொடர்புடையவர்களுக்கு கொரோனா  தொற்று அதிகளவில் ஏற்பட்டு வருவதால்  தங்கம் மூலம் கொரோனா தொற்று பரவுகிறதா? என்ற சந்தேகம் சுகாதாரத்துறையினருக்கு ஏற்பட்டுள்ளது.*

*🔷🔶கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 11 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200-ஐ கடந்துள்ளது.*

*🔷🔶ஊரடங்கு தளர்வுக்கு பின் பல்வேறு கம்பெனிகள், நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களுடன் பணிகளை துவங்கியது. நகைக்கடைகள், நகைப்பட்டறைகளை சேர்ந்தவர்களும் தங்களின் பணிகளை துவங்கினர்.*

*🔷🔶இந்நிலையில், நகைக்கடையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அதிகளவில் கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது.*

*🔷🔶இதில், கோவையில் செயல்பட்டும் வரும் தங்க நகைக்கடை ஒன்றில் 58 பேர், மற்றொரு கடையில் 48 பேர், துடியலூர் அருகே செயல்பட்டு வரும் நகை தயாரிப்பு நிறுவனத்தில் உரிமையாளர் உள்பட 25க்கும் அதிகமானவர்கள், செல்வபுரத்தில் தங்க நகைப்பட்டறைகளில் பணியாற்றி வந்த 120க்கும் மேற்பட்டவர்களுக்கும் ஒரே நாளில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.*

*🔷🔶தொடர்ந்து தங்க நகைப்பட்டறைகள், நகைக் கடைகள் நிறைந்துள்ள செல்வபுரம், தெலுங்குவீதி, பெரியகடை வீதி, ராஜவீதி உள்பட பகுதிகளில் தினமும் 50 முதல் 100 பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.*

*🔷🔶கோவையில் பிரபலமான நகைக்கடை உரிமையாளர் ஒருவர்  கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளார். சமீப காலமாக கோவையில் நகைக்கடைகள், நகைப்பட்டறைகளில் வேலை பார்ப்பவர்கள், அவர்களுடன் தொடர்புடையவர்களுக்கு அதிகளவில் கொரோனா  பரவி வருகிறது.*

*🔷🔶இதனால் தங்க நகைகள் மூலம் கொரோனா பரவுகிறதோ என்ற சந்தேகம் சுகாதாரத்துறைக்கு எழுந்துள்ளது.  இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-*

*🔷🔶தங்கம் உள்ளிட்ட உலோகங்களில் 10 நாட்கள் வரை கொரோனா கிருமி உயிருடன் இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.*

*🔷🔶இதனால் நகைக்கடைகள், பட்டறைகளில் நகையை அனைவரும் தொடுவதன் மூலம் ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு எளிதில் பரவ வாய்ப்புள்ளது.*

*🔷🔶தவிர பட்டறைகளில் நெருக்கமான இடங்களில் அதிகளவிலானோர் பணிபுரிவதால் நோய்த்தொற்று ஏற்படும் இடங்களாக மாறியுள்ளன.*

*🔷🔶திருமணங்கள் உள்பட விசேஷங்களுக்கு நகைகள், துணிகள் எடுப்பதற்காக அருகிலுள்ள திருப்பூர், ஈரோடு உள்பட மாவட்டங்களில் இருந்தும் கோவைக்கு அதிகளவில் வருகின்றனர். இதன் முலம் அதிகளவு பரவும் வாய்ப்புள்ளது.*

*🔷🔶இதனை தவிர்க்க நகை, துணிக்கடைகள் உள்பட எந்த ஒரு பெரிய கடைகளாக இருந்தாலும் பொதுமக்களை அரை மணி நேரத்துக்கு மேல் இருக்க அனுமதிக்கக்கூடாது. பொது மக்களை கட்டாயம் கிருமி நாசினி மூலம் கைகளை தூய்மைப்படுத்திய பிறகே அனுமதிக்க வேண்டும்.*

*🔷🔶2 மணி நேரத்துக்கு ஒருமுறை கடை முழுவதும் கிருமி நாசினியால் சுத்தம் செய்ய வேண்டும். முடிந்த வரையில் கடைகளில் அதிகளவில் ஆட்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும்.*

*🔷🔶பொதுமக்களும் அவசியமின்றி கடைகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். தவிர்க்க முடியாத நிலையில் ஒன்றிரண்டு பேர் மட்டுமே செல்லலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.*
--------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
===============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

9.9.20

பச்சரிசியையும் கணவனையும் ஒன்றாக வறுத்தெடுத்த மனைவி!



பச்சரிசியையும் கணவனையும் ஒன்றாக வறுத்தெடுத்த மனைவி!

ஒருநாள் ரேசன் கடையிலிருந்து பத்து கிலோ பச்சரிசி வாங்கி வரச் சொன்னாள் மனைவி.  வாங்கி வந்ததும் அதை ஒரு பெரிய அண்டாவில் போட்டு மொத்தத்தையும் இரண்டு மூன்று முறை தண்ணீர் விட்டு அலசச் சொன்னாள்.

அலசிக் கொடுத்தேன்.  ஒரு போர்வையை எடுத்துக் கொண்டு,  "நீங்க அரிசிய தூக்கிட்டு மொட்டை மாடிக்கு வாங்க"னு சொன்னா.  போனேன்.  போர்வையை விரித்து அதில் அரிசியை தட்டி காயப் போட்டோம்.  

"ஏங்க கீழே போய் ஒரு நாக்காலியும் சின்னதா ஒரு குச்சியும் எடுத்துட்டு வாங்க" என்றாள்.  எடுத்து வந்து கொடுத்தேன்.  மொட்டை மாடியின் ஒரு மூலையில் கொஞ்சமாய் விழுந்திருந்த வேப்பமர நிழலில் நாற்காலியைப் போட்டு "உக்காருங்க "  என்றாள்.  உட்கார்ந்தேன்.  குச்சியைக் கையில் கொடுத்து "காக்கா குருவி அரிசிய கொத்தி தின்றாம பாத்துக்குங்க "  என்று சொல்லிவிட்டு கீழே போய்விட்டாள்.

விதியை நொந்துகொண்டு தேமே என்று உட்கார்ந்திருந்தேன்.  நிழலுக்கேற்றபடி நாற்காலி நகன்று கொண்டிருந்தது. ஒன்பதரைக்கு காலை உணவும் பதினோரு மணிக்கு ஒரு லெமன் ஜூஸும் ஒன்றரை மணிக்கு மதிய உணவும் நாலு மணிக்கு தேநீரும் என்னைத் தேடி வந்தன.  அதே போல் அடுத்த நாளும் நானும் அரிசியும் காய்ந்தோம்.

அடுத்த நாள் சாயந்திரம் "அரிசியை ரைஸ்மில்லில் கொடுத்து திரித்து வாருங்கள் " என்றாள்.  திரித்து வந்ததும் அதில் பாதியை பெரிய இரும்பு வடச்சட்டியில் கொஞ்சம் கொஞ்சமாக போட்டு வறுத்துக் கொண்டாள்.  மீதி மாவை  பச்சையாகவே ஒரு தூக்குவாளியில் வைத்தாள்.

மறுநாள் வறுத்த மாவில் கொஞ்சம் எடுத்து இட்லி சட்டியில் வைத்து புட்டு செய்தாள்.  அதற்கடுத்த நாள் வறுத்த மாவில் சுடுதண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசைந்து இடியாப்பம் சுட்டாள்.  பிழிய முடியாத கடைசி மாவை கொழுக்கட்டையாய் அவித்தாள்.

மூன்றாம் நாள் பச்சை மாவில் கொஞ்சம் எடுத்து ஊறவைத்து அரைத்த உளுந்து மாவை கலந்து பாதியை கொஞ்சம் கெட்டியாகவும் மீதியை சிறிதே இளக்கமாகவும் ஆக்கிக் கொண்டாள்.  கெட்டியான மாவை இட்லியாகவும்,  இளக்கமான மாவை தோசையாகவும் சுட்டெடுத்தாள்.

இதற்கிடையே சிறிது பச்சை மாவில் வெல்லம் ஏலக்காய் தூளெல்லாம் போட்டு புரோட்டா மாவு பதத்தில் பிசைந்து ஒரு பாத்திரத்தில் வண்டு கட்டி வைத்துக் கொண்டாள்.  இரண்டு நாள் கழித்து அதிரசம் சுட்டாள்.
இன்னொரு நாள் சிறிது பச்சை மாவில் ஓமம் உப்பு கலந்து முருக்கு சுட்டாள்.

ஹைலைட்டாக ஒருநாள் அரிசி மாவை கரைத்து அதில் சீனி ஏலக்காய் பொடி மற்றும் மாம்பழ எசென்ஸ் கலந்து கஞ்சி போல் காய்ச்சி ஒரு தட்டில் நெய் தடவி ஊற்றி ஆறிய பின் சதுரமாக கட் செய்து தந்தாள்.  "என்ன இது " என்றேன்.  "வட்டிலாப்பம் "  என்றாள். நல்லாத்தான் இருந்துச்சு.

அடுத்த நாள் அதே போல் கொஞ்சம் மாவில் சீரகம் உப்பு போட்டு கஞ்சியாய் காய்ச்சி ஒரு பழைய சேலையையும் டீஸ்பூன் ஒன்றையும் கொடுத்து "மொட்டை மாடிக்குப் போய் கூல் வடாம் ஊற்றுங்கள் "  என்றாள்.  நல்லவேளை காவலுக்கு நிற்கச் சொல்லவில்லை.

ஒரு அரிசி  மாவில் இப்படியே கிட்டத்தட்ட இருபது நாட்களை ஓட்டினாள்.  ஒருபக்கம் வியப்பாக இருந்தாலும் இன்னொரு பக்கம் தினமும் அரிசி மாவு அயிட்டம்தானா என கடுப்பாகவும் இருந்தது.

ஒருநாள் கேட்டேன்.  "ஏண்டி.... ஒரே மாவை வச்சுக்கிட்டு நீ எத்தனை டகாலக்கடி வேலை காட்றே.  கோதுமை  மைதா  ரவை என்று ஏதாவது வெரைட்டியா போட்டா என்ன... ?"

"நீங்களும் ஒரே மனுசன்தான்.   ஒவ்வொரு நாளும் எத்தனை விதமா லொள்ளு பண்றீங்க..!  நாங்க சமாளிக்கல...!?  நாங்க என்ன வெரைட்டியா தேடுறோம்...!? "

என் வாயில் சனி இருப்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாக,  வாயடைத்துக் கொண்டேன் நான்.
----------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

8.9.20

தண்ணீரி மூழ்காமல் மிதந்துவரும் கற்சிலை!!!


தண்ணீரி மூழ்காமல் மிதந்துவரும் கற்சிலை!!!

ஆஹா ஆச்சரியம்.. என் பகவான்..🙏🙏

 கடவுள் இருக்கிறாரா என்று நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால் இந்த வீடியோவைப் பாருங்கள்.  

விஷ்ணுவின் நான்காவது அவதாரமான நர்சிங் கிராமம் மத்திய பிரதேசத்தின் தேவாஸ் மாவட்டத்தின் ஹட்பிபாலியா கிராமத்தில் பல நூற்றாண்டுகள் பழமையானது.  

ஒவ்வொரு ஆண்டும் ஜல்ஜிலானி ஏகாதாஷியில், கல்லால் செய்யப்பட்ட நரசிம்மரின் கல் சிலை குளிப்பதற்காக உள்ளூர் பாமோரி நதிக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. பண்டிட் வழிபட்ட பிறகு, ஏழரை கிலோ கல் சிலை தண்ணீரில்  ஆற்றில் பாய்கிறது, ஆனால் சிலை மூழ்கவில்லை.  பாயும் தண்ணீருக்கு எதிராக நேரடியாக பண்டிட்ஜிக்கு வருகிறது.  

இந்த காட்சியைக் காண நாடு முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான சனாதானி வருகிறார்கள்.  நீங்களும் பார்க்கிறீர்கள்.  

ஓம் நமோ நாராயணனாய நம:
---------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
==============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

6.9.20

Astrology: ஜோதிடம்: வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்கள்!!!!


Astrology: ஜோதிடம்: வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்கள்!!!!

வாழ்க்கை ஏற்ற இறக்கம் நிறைந்தது. மேடு பள்ளம் நிறைந்தது. ஒரே மாதிரி சீராக இருக்காது. இரவு பகல் போல என்று வைத்துக்கொள்ளுங்கள்.

இப்போது நடக்கும் காலகட்டம் ஏற்றமானதுதானா? அல்லது இறக்கமானதுதானா?

ஏற்றம் என்று தெரிந்தால், மகிழ்ச்சி அடைவதுடன், சேமிக்கவும் துவங்கி விடலாம். இறக்கமானது என்று தெரிந்தால் எச்சரிக்கையாக இருக்கலாம். சிக்கனமாக இருக்கலாம். பொறுமையாக இருக்கலாம்.

1.உங்களுடைய ஏற்றத்தைத் தெரிந்து கொள்ள விருப்பமா? 

2.அதேபோல உங்கள் வாழ்க்கை உங்களுக்கானதுதானா? நீங்கள் முழுமையாக வாழ்க்கையை அனுபவிக்க முடியுமா?  அல்லது உங்களைச் சுற்றி உள்ளவர்களுக்காகப் பிறந்தவர்தானா நீங்கள்? அதையும் தெரிந்து கொள்ளலாம்.

3.அதுபோல பணம் வருமா? அல்லது வராதா? அதாவது வேண்டிய அளவு வருமா? பணம் கொட்டுமா அல்லது கொட்டாதா? கையில் காசு தங்குமா அல்லது தங்காதா?  அதையும் தெரிந்து கொள்ளலாம்.

இந்த மூன்றையும் தெரிந்து கொள்ளலாம்

வாத்தியாருக்கு எழுதுங்கள். ஒரு சிறு நிபந்தனையும் உண்டு. அதையும் தெரிந்து கொள்ளுங்கள். அது உங்களால் முடிந்ததுதான்

இந்த அலசல் எல்லோருக்கும் இல்லை. First cum first basis ஆக 50 பேர்களுக்கு மட்டும்தான்.

வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி spvrsubbiah@gmail.com

அன்புடன்
வாத்தியார்
======================================================= 
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

Astrology: Quiz: புதிர்: 4-9-2020 தேதியிட்ட புதிருக்கான விடை!


Astrology: Quiz: புதிர்: 4-9-2020 தேதியிட்ட புதிருக்கான விடை!

கேட்டிருந்த கேள்வி இதுதான். ஒரு அன்பரின் ஜாதகத்தைக் கொடுத்து, ஜாதகர் திருவோண நட்சத்திம், விருச்சிக லக்கினக்காரர். எந்த வேலையும் நீடித்து நிலைக்கவில்லை. பிடிக்கிறதோ அல்லது பிடிக்கவில்லையோ அடுத்தடுத்து வேறு வேலையில் சேர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுக்கொண்டே இருந்தது. அதற்கு என்ன காரணம்?  ஜாதய்கத்தை அலசி அதற்கு மட்டும் பதிலைச் சொல்லுங்கள். ” என்று கேட்டிருந்தேன்.

பதில்: ஜாதகருக்கு காலசர்ப்ப தோஷம். அத்துடன் 14 வயதிலிருந்து 32 வயதுவரை ராகு மகா திசை இரண்டுமே நன்மையான அமைப்பு அல்ல! அந்த தசாநாதன் ராகு எட்டில். எட்டாம் இடத்தில் அமர்ந்திருக்கும் நாதனின் திசை அதுவும் கேடானது. எட்டாம் இடத்து ராகு புதனின் பலனைக் கொடுக்கும், புதன் விருச்சிக லக்கினத்திற்கு தீயவன். அத்துடன் புதனின் பார்வை பத்தாம் இடத்தின் மேல். அதுவும் கேடானது. ஆகவே 32 வயதுவரை ஜாதகரை இவைகள் அல்லாட வைத்துவிட்டன. பல வேலைகளில் ஓட விட்டு வேடிக்கை பாரத்தன. அவற்றை மட்டும் இங்கே குறிப்பிட்டுள்ளேன், 

இந்தப் புதிரில் 9 அன்பர்கள் கலந்து கொண்டு தங்கள் கணிப்பை வெளியிட்டு உள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள். 

அடுத்த வாரம் 11-09-2020 வெள்ளிக்கிழமை  அன்று வேறு ஒரு புதிருடன் மீண்டும் நாம் சந்திப்போம்!!!!

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------

1
Blogger kmr.krishnan said...
ஜாதகர் 10 மார்ச் 1964 அன்று இரவு 11.31 க்குப் பிறந்தவர்.பிறந்தைடம் சென்னை என்று எடுத்துக்கொண்டேன்.
வேலைக்குரிய பத்தாம் இடதிற்குண்டான சூரியன் கும்பத்தில் பகைவரான‌ சனிபகவானின் இடத்தில் அமர்ந்ததும்,
சனி பகவானும் தன் வீட்டில் சூரியனுடன் இருந்ததும், 8ம் இடத்திர்கான புதனும் 6ம் இடத்திற்கான செவ்வாயும் சூரியனுடன் சேர்ந்து அமர்ந்ததும் இந்த நான்கு பேரும் 10 இடத்தினை நேர் பார்வை பார்ப்பதாலும் ஜாதகர் அடிக்கடி வேலை மாற்றம் செய்ய வேண்டி வந்தது. சுக்கிரன் 6ல் அமர்ந்ததால் கொந்தளிப்பான வாழ்க்கை.
Friday, September 04, 2020 7:19:00 AM 
--------------------------------------------
2
Blogger K. Ravi said...
ஐயா
ஜாதகர் 1964 இல் பிறந்துள்ளார்
லக்கினாதிபதி செவ்வாய், 10 ஆம் வீட்டு அதிபதி சூரியன், எட்டாம் வீட்டு அதிபதி புதன் ஆகியோர் நான்காம் வீட்டதிபதி சனியுடன் சேர்க்கை. மேலும் நவாம்சத்தில் சனி நீச்சம். மேலும் இந்த நன்கு கிரகங்களும், பத்தாம் வீட்டை நேரடி பார்வையில் வைத்துள்ளது. சனியின் ஏழாம் பார்வை நன்மை தராது. திசைகளும் 31 வயது வரை கைகொடுக்காது. இந்த ஜாதகத்தில் குரு 5 ஆம் வீட்டில் வர்கோத்தமம் பெற்று லக்கினத்தை 9 ஆம் பார்வையில் வைத்துள்ளார். இது ஆறுதல் தரும் அமைப்பு. எனவே குரு திசையில் ஜாதகர் நிலையான இடத்திற்கு வந்திருப்பார்.
கே. ரவி
Friday, September 04, 2020 12:20:00 PM 
-------------------------------------------
3
Blogger csubramoniam said...
ஐயா கேள்விக்கான பதில்
1 .லக்கினாதிபதி செவ்வாய் கேந்திரத்தில் கர்மகாரகன் சனி யுடன்
2 .பத்தாம் அதிபதி சூரியன் தன் வீட்டை (பத்தாம் வீட்டை )நேரடி பார்வையில் வைத்துள்ளார்
3 .பதினொன்றில் மாந்தி குருவின் பார்வையுடன் அரசவாழ்க்கை
4 .ஒன்பதாம் அதிபதி சந்திரன் தன் வீட்டை நேரடி பார்வையில் வைத்திருந்தாலும் பாபகர்தாரி யோகத்தில்
5 .சூரியனும் சனியும் ஆறு மற்றும் எட்டாம் அதிபதி செவ்வாய் ,புதனுடன்
6.பத்தாம் அதிபதி சூரியன் சனியின் வீட்டில் அமர்ந்ததால் அடிக்கடி வேலையில் மாற்றம்
நன்றி
தங்களின் பதிலை ஆவலுடன்
Friday, September 04, 2020 1:07:00 PM
------------------------------------------------
4
Blogger Ramanathan said...
Sun and Saturn combination aspecting 10th house could have caused instability
Friday, September 04, 2020 3:24:00 PM 
---------------------------------------------
5
Blogger P. CHANDRASEKARA AZAD said...
வணக்கம்
தாங்கள் கேட்டு இருந்த புதிருக்கான பதில்
விருச்சிக லக்கின திருவோண நக்ஷத்திர மகர ராசி ஜாதகர் தொடர்ந்து வேலையில் மாற்றம் வர காரணங்கள்
வேலை நிலையாக அமைவதற்கு ஆறாம் இடம், பத்தாம் இடம், லக்கினம் மற்றும் கர்மா காரகன் சனியின் நிலையை பார்க்க வேண்டும்.
இவரின் லக்கின அதிபதி செவ்வாய் மற்றும் கர்மா காரகன் சனியை சூரியன் நான்கில் அமர்ந்து அஸ்தங்கதம் செய்து உள்ளார். சூரியன் இவருக்கு பத்தாம் அதிபதி யாக இருந்தாலும் சனி மற்றும் செவ்வாய் கூட்டணி இவரையும் நிலையாக அமர செய்ய வில்லை.
மேலும் இவரின் ஆறாம் அதிபதியும் லக்கின அதிபதியும் செவ்வாய் ஆவர்.. இவரின் ஆறாம் அதிபதி செவ்வாய் யையும் பத்தாம் அதிபதி சூரியனையும், கர்மா காரகன் சனியையும் , கேது தனது மூன்றாம் பார்வையால் பார்த்து...வேளையில் நிலையில்லா பட்டற்ற தன்மை யை ஏற்படுத்துகிறார்
மேலும் ஆறாம் இடத்தில் பனிரெண்டரம் வீடு அதிபதி சுக்கிரன் செவ்வாயின் வீட்டில் அமர்ந்து தொடர்ந்து ஒரே நிலையில் அல்லது ஒரே நிறுவனத்தில் வேலை செய்யும் பாக்கியத்தை கெடுத்தார்.
நன்றி
இப்படிக்கு
ப. சந்திரசேகர ஆசாத்
கைபேசி : 8879885399
Friday, September 04, 2020 3:25:00 PM
-----------------------------------------------------
6
Blogger க. தமிழ்ச் செல்வன், மாச்சம்பட்டு, வேலுர் மாவட்டம். (tamilselvanabr@gmail.com) said...
Quiz: புதிர்: ஜாதகருக்கு எந்த வேலையிலும் நிலையாமை ஏன்?
பதில்: ஐயா, வணக்கம், ஆறாம் அதிபதி செவ்வாய், எட்டாம் அதிபதி புதன் மற்றும் மூன்றாம் அதிபதி ச்னியின் கூட்டனியுடன் (ஏழாம் பார்வை) 10 ஆம் வீடு பார்வை பெற்று கெட்டுள்ளது. நவாம்சத்தில் 10 ஆம் வீட்டில் கேது அமர்ந்து நிரந்தர வேலை அமையாமல் கெடுத்துள்ளது.
Friday, September 04, 2020 5:01:00 PM
------------------------------------------------------
7
Blogger gkc said...
Dear sir
லக்ன அதிபதி செவ்வாய் சனி உடன் சேர்க்கை. லக்ன அதிபதி வலு குறைவு. ஆனால் லக்னத்திற்கு ஆட்சி பெற்ற குரு பார்வை. லக்ன யோகர் குரு
13 வயசு முதல் நடந்த ராகு தசா நல்லது செய்து இருக்காது. ராகு நின்ற வீடு விருச்சிக லக்ன திற்கு ஆகாத புதன் வீடு.ராகு சுய சாரம் வேறு.
4 இல் அமர்த்த சனி 6 பாவத்தை பார்த்து கெடுத்தது.அதே சனி கர்ம ஸ்தானத்தையும் பார்த்து கெடுதார்.
அதனால் வேலையில் நிரந்தரம் இல்லை. ஆனால் கும்பத்தை பார்த்த சூரியன் 6 இல் நின்ற சுக்ரன் அடுத்தடுத்து வேலை கிடைக்க உதவி புரிந்தனர். ராகு தசா வரை இந்த பிரச்சினை இருந்து இருக்கும். அடுத்த வந்த குரு தசா யோக பலன்கள் செய்து இருக்கும்
Friday, September 04, 2020 11:24:00 PM 
----------------------------------------------------------
8
Blogger Ram Venkat said...
வணக்கம்.
விருச்சிக இலக்கினம், மகர ராசி ஜாதகர்.. காலசர்ப்ப தோச ஜாதகம்.
அவருக்கு எந்த வேலையும் நீடித்து நிலைக்கவில்லை. ஜாதகப்படி அதற்கு என்ன காரணம்?
விருச்சிக லக்கினத்தை பொறுத்த வரை செவ்வாய் இலக்கினாதிபதியும் 6ம் அதிபதியுமாகிறார்.
1) இலக்கினாதிபதி செவ்வாய் 4மிடமான கும்ப ராசியில் சூரியனுடன் சேர்ந்து அஸ்தங்கமடைந்து வலுவிழந்துள்ளார்.
2) பத்தாம் அதிபதி சூரியன், 4ல் மகரத்தில் அமர்ந்து கர்மகாரகன் சனி,செவ்வாய் மற்றும் அஷ்டமாதிபதி புதன் கிரகங்களின் கூட்டணியில் கிரக யுத்ததிலுள்ளார். 10மிடமும் இவர்களின் நேரடிப் பார்வையில் வலுவிழந்துள்ளது.
3) தசாம்ச சக்கிரத்தில் 10ம் அதிபதி சூரியன் இலக்கினத்திற்கு 12ல் மறைந்து இராகு கூட்டணியில் கேதுவின் பார்வையில் கெட்டுள்ளார்.
4) தசாம்சத்தில், லக்கினத்திற்கு 8ஆம் இடத்தைக் கொண்டு ஒருவர், அவர் தொழிலில் / வேலையில் ஏற்படும் கஷ்டங்களைப் பற்றி அறிய முடியும் . இந்த இடம் நீண்ட நாள் வேலை இழப்பைப் பற்றியும் தெரியப்படுத்தும். இங்கு, 8ம் அதிபதி புதனும் தசாம்ச லக்கினத்திற்கு 12ல் மறைந்தது மற்றும் ராகுவின் கூட்டணியில் கேதுவின் பார்வையிலுள்ளது.
மேற்கண்ட காரணங்களால், ஜாதகரின் தொழில் நிலையாமை மற்றும் அடுத்தடுத்து வேறு வேலையில் சேர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுக்கொண்டே இருந்தது.
Saturday, September 05, 2020 2:51:00 PM
-----------------------------------------------
9
Blogger RAMVIDVISHAL said...
DOB 10/03/1964 11:35 pm/ Chennai
This is due to 10th house owner sun conjunction with 3rd/4th house owner Saturn losing confidence /family disturbance/father mother conflict
lagnathpathy and 6th house Mars also conjunction with sun results to misbehaviour enemy formation In work places that force him to move the job consistently.
Bakyastanathipathy moon in 3rd place.
Rahu dasa up to 32 years not allowed the person to settle himself. He may not possess good education/marriage life/ speech/ savings since Kethu in second house.
However Guru in 5th house (own house and vargothamam) looking at 9th house/11th house and lagna may help him to shine his career during its dasa onwards.
Saturday, September 05, 2020 9:42:00 PM
====================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

4.9.20

Astrology: Quiz: புதிர்: ஜாதகருக்கு எந்த வேலையிலும் நிலையாமை ஏன்?


Astrology: Quiz: புதிர்: ஜாதகருக்கு எந்த வேலையிலும் நிலையாமை ஏன்?

ஒரு அன்பரின் ஜாதகம் கீழே உள்ளது. திருவோண நட்சத்திரக்காரர். விருச்சிக லக்கினக்காரர். எந்த வேலையும் நீடித்து நிலைக்கவில்லை. பிடிக்கிறதோ அல்லது பிடிக்கவில்லையோ அடுத்தடுத்து வேறு வேலையில் சேர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுக்கொண்டே இருந்தது. அதற்கு என்ன காரணம்?  ஜாதகத்தை அலசி அதற்கு மட்டும் பதிலைச் சொல்லுங்கள்!!!

சரியான விடை 6-9-2020 ஞாயிற்றுக்கிழமையன்று வெளியாகும்

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
கேள்விக்கு உரிய ஜாதகம்:

=========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!