மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label Lessons 141 - 150. Show all posts
Showing posts with label Lessons 141 - 150. Show all posts

24.12.08

எங்கிட்ட மோதாதே! நான் வீராதி வீரனடா!

கிராமங்களில்,"மாப்ளே அவன் தகிரியமான ஆள்டா. வம்பு கிம்பு
வச்சிக்காதேடா. சாத்திப்புடுவான்டா" என்று ஒருவனைப் பற்றி
சிலாகித்துச் சொன்னால், அவன் துணிச்சல் மிக்கவன் என்று பொருள்.

சிலருக்கு இயற்கையாகவே துணிச்சல் அதிகமாக இருக்கும். அதோடு
கோபமும் இருக்கும். ஒரு சின்னச் சலசலப்பிற்குக் கூட, இடுப்புப்
பெல்ட்டைக் கழற்றிக் கொண்டு, அல்லது கையில் கிடைக்கும்
எதாவது ஒன்றை எடுத்துக் கொண்டு சண்டையில் இறங்கி விடுவார்கள்.
பின் விளைவுகளைப் பற்றிக் கவலைப்பட மாட்டார்கள். அது ஒரு
வகைத் துணிவு.

இன்னும் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் எவ்வளவு உடல் வலியையும்
அல்லது மன வலிகளையும் தாங்கிக் கொண்டு ஒன்றும் நடக்காதுபோல
இருப்பார்கள். முகத்தில் எதையும் காட்ட மாட்டார்கள். அது ஒருவகைத்
துணிவு

தேசிய பாதுகாப்பில் இருக்கும் வீரர்கள், காவல்துறையில் இருக்கும் பல
வீரர்களின் துணிவு ஒப்பிட்டுப் பார்க்க முடியாத ஒன்று!

அதுதான் அவர்களுக்கு ஆதாரம் அல்லது ஜீவாதாரம். அதுதான்
அவர்களின் வாழ்க்கை. அது ஒருவகைத் துணிவு

ஒரு மனிதனுக்கு துணிவைக் கொடுக்கக்கூடிய கிரகம் செவ்வாய்
.
ஜாதகத்தில் செவ்வாய் நன்றாக இருக்கும் ஆசாமிகள், அபாயச்சூழல்
நிறைந்த வேலைகள், சவாலான வேலைகள், ரிஸ்க்கான வேலைகள்
என்று எதையும் பிரித்துப் பார்க்காமல் துணிந்து செய்யக் கூடியவர்கள்.

அவர்களுக்கு மனபயம் இருக்காது. துக்கம், கஷ்டங்கள், மரணபயம்
போன்றவைகளை அவர்கள் சீரியஸாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள்

சிலர் ஊழல் செவதற்கோ, அவமானத்திற்கோ, அல்லது தண்டனைக்கோ
பயப்படாமல் இருப்பார்கள். அதே செவ்வாய் வேறு ஒரு கிரகக் கூட்டணி
யால் அல்லது பார்வையால் அவர்களுக்கு அந்த வித்தியாசமான
துணிவைக் கொடுக்கும்.

செவ்வாய்தான் கிரகங்களில் ராணுவ அதிகாரியைப் போன்றவர். வீரர்களின்
நாயகன் அவர்தான். யுத்தத்தின் நாயகனும் அவர்தான்.

குணங்களில், துணிவு, பொறுமை, தன்னம்பிக்கை, தலைமை தாங்கிச்
செல்லும் தன்மை ஆகியவற்றை ஒரு ஜாதகனுக்குக் கொடுப்பவர் அவர்தான்.
சட்டென்ற கோபம் (short-tempered) அதிரடி, அடிதடி, வாக்குவாதம்,
விதண்டாவாதம் ஆகிய குணங்களுக்கும் அதிபதி அவர்தான்.

ராணுவத் தளபதிகள், ராணுவ அதிகாரிகள், ராணுவ வீரர்கள் மற்றும்
காவல்துறையில் பணியாற்றுபவர்களுக்கு செவ்வாய்தான் நாயகன்!

தொழில்நுட்ப அறிவிற்கும், இயந்திரங்கங்களை வடிவமைத்தல் மற்றும்
இயந்திரங்களை லாவகமாகக் கையாளும் அறிவிற்கும், திறனுக்கும்
ஆற்றலிற்கும் அவரே அதிபதி.

நாட்டில் சட்டம், ஒழுங்கு, எரிபொருள் போன்றவற்றிற்குக்கான காரகன்
அவர்தான்.

மனஉறுதி, தன்முனைப்பு, ஆற்றல், நிவாகத்திறன், சுதந்திர மனப்பான்மை
ஆகிய அற்புத மனித குணங்களுக்கும் அவர்தான் அதிபதி.
---------------------------------------------------------------------------------
ஜாதகனின் உடன்பிறப்புக்களுக்கும் அவர்தான் காரகன். உடன்
பிறப்புக்களுடான நல்ல உறவுகளுக்கும், அல்லது அவர்களோடு
ஏற்படும் மனக் கசப்புக்களுக்கும் அவரே காரகர் (Authority)

நெருப்பு, மற்றும் இரத்தத்திற்கும் அவரே காரகன்

செவ்வாயைக் குறிக்கும் மற்ற பெயர்கள். அங்காரகன், குஜன்
ஆங்கிலத்தில் Mars. செவ்வாய் கிரகத்தின் நிறம் சிவப்பு!
கடகம் மற்றும் சிம்ம லக்கினங்களுக்கு செவ்வாய் யோககாரகன்
நவரத்தினங்களில் செவ்வாய்க்கு உரியது பவளம்.
இந்திய எண் கணிதத்தில் செவ்வாய்க்கு உரிய எண் 9
செவ்வாய்க்கு உரிய தெய்வங்கள் சுப்பிரமணியர், பத்ரகாளி1
=============================================
1. ஜாதகத்தில் செவ்வாய் உச்சமாகவோ அல்லது 1,4,9,10ஆம் வீடுகளில்
அமர்ந்திருந்து தனது சுய வர்க்கத்திலும் 8 பரல்களைப் பெற்றிருந்தால்
ஜாதகன் கோடீஸ்வரனாக உயர்வான். தன் திறமை மற்றும் செயல்
ஆற்றும் தன்மையால் பெரும் செல்வம் ஈட்டுவான்.

2. தனுசு, சிம்மம், மேஷம், கடகம், மகரம் ஆகிய ஏதாவது ஒன்று
லக்கினமாக இருந்து, அதில் செவ்வாயும் இருந்து, சுய வர்க்கப்பரல்
களும் 4ற்கு மேல் இருந்தால், ஜாதகன் ஆட்சியாளனாக இருப்பான்
அல்லது அதிகாரம் மிக்கவனாக இருப்பான்.

ஆட்சியாளன் என்றவுடன் இந்தியாவின் பிரதமர் பதவி வரும் என்று
நினைக்க வேண்டம். கிராம முன்சீப் பதவி அல்லது நகர சேர்மன்
பதவிகூட ஆட்சிப் பதவிதான் சுவாமி!

3. சுய வர்க்கத்தில் 8 பரல்களை உடையவர்கள், தாங்கள் பங்கு
பெற்றுள்ள துறையில் உச்சமான பதவியை அடைவார்கள்.

வங்கியில் குமாஸ்தாவாகச் சேருகிறவன், படிப்படியாக முன்னேறி
அதே வங்கியின் தலைமை அதிகாரியாக ஒருநாள் உயர்வான்.

துவக்கத்தில் ஒரு இசைக்குழுவில் ஆர்மோனியம் அல்லது கீ போர்டு
வாசித்துக் கொண்டிருப்பவன் திடீரென ஒரு நாள் நாடறிந்த இசை
அமைப்பாளனாக உயர்ந்து விடுவான், அதெல்லாம் செவ்வாயின்
உற்சாகமான சேட்டைகள்.

4, இரண்டாம் வீட்டிலோ அல்லது ஆறாம் வீட்டிலே செவ்வாய்
அமர்ந்திருந்து சுய வர்க்கத்திலும் ஆறு பரல்களைக் கொண்டிருந்தால்
ஜாதகனுக்கு வாழ்க்கையின் எல்லா செளகரியங்களும், சுகங்களும்
கிடைக்கும். அதே நேரத்தில் ஏராளமான விரோதிகளும் இருப்பார்கள்.

5. செவ்வாய் ஜாதகத்தில் நீசம் அடைந்ததுடன், 6ஆம் வீட்டிலோ
அல்லது 8ஆம் வீட்டிலோ அல்லது 12ஆம் வீட்டிலோ அமர்ந்திருந்து
உடன் வலுவில்லாத சந்திரனும் (waxing Moon) கூட்டணி போட்டிருந்தால்
ஜாதகனுக்கு உடன் பிறப்புக்கள் இருக்காது. அப்படியே ஒரிருவர்
இருந்தாலும் ஜாதகனுக்கு அவர்களுடன் நல்ல உறவு இருக்காது.
(அதற்கு இல்லாமலேயே இருக்கலாம்)

6. மூன்றாம் இடத்தில் செவ்வாயும், சனியும் கூட்டாக இருந்து, செவ்வாய்
சுயவர்க்கத்தில் முன்று பரல்களுடன் அல்லது அதற்குக் கீழான
பரல்களுடன் இருந்தால், ஜாதகன் தன் உடன் பிறப்பைப் பறிகொடுக்க
நேரிடும்.

7. பத்தில் செவ்வாய் இருந்து, அதன் சுயவர்க்கத்தில் 4 அல்லது
அதற்கு மேற்பட்ட பரல்களைக் கொண்டிருந்தால், அதோடு அந்த
அமைப்பில் செவ்வாய் சனியின் பார்வையைப் பெற்றால் ஜாதகன்
ராணுவத்தில் பணி புரிவான்.

8. செவ்வாய் பதினொன்றாம் அதிபதியாக இருந்தால், அவருடைய
திசையில் ஜாதகனுக்கு ராஜ யோகங்கள் கிடைக்கும்.

9. லக்கினம் செவ்வாயின் வீடுகளில் ஒன்றாக இருந்து அதாவது
மேஷம் அல்லது விருச்சிகமாக இருந்து, லக்கினம் அதன் சுய
வர்க்கத்தில் 7 பரல்களைப் பெற்றிருப்பதோடு, 7ஆம் வீட்டில்
செவ்வாய் இருந்து அதன் பார்வை தன் சொந்த வீட்டில் விழுந்தால்
ஜாதகன் சர்வ அதிகாரியாக இருப்பான். உலகில் சில சர்வாதிகாரி
களின் ஜாதகம் இத்தகைய அமைப்பைக் கொண்டது.

10. பெண்களின் ஜாதகத்தில் மாதவிடாய்க்குக் காரகன் செவ்வாய்.
மாதவிடாய் சமயத்தில் இரத்தப் பெருக்கு, irregular periods, அடி
வயிற்றில் வலி, மற்றும் அந்த மூன்று நாட்கள் உபாதைகளுக்கு
செவ்வாய்தான் காரணகர்த்தா.

இருபத்தியேழு நாட்களுக்கு ஒருமுறை சந்திரன் வட்டமடிக்கும்போது
ஜாதகி புஷ்பவதியான அன்று செவ்வாய் இருந்த இடத்தைச் சந்திரன்
கடக்கும் நேரத்தில்தான் ஜாதகிக்கு மாதவிடாய் ஏற்படும்.

செவ்வாய் வலிமை இல்லாத ஜாதகிகளுக்குதான் irregular periods
மற்றும் மாதவிடாய் சமயத்தில் அடிவயிற்றில் அதீத வலி போன்ற
உபாதைகள் (pains)ஏற்படும். அவர்கள் செவ்வாய்க்கிழமைகளில்
விரதம் இருந்து முறைப்படி இறைவனை வணங்கினால் அந்தக்
குறைகள் நிவர்த்தியாகும்

இயற்கையாகவே பல பெண்கள் பவள மோதிரம் அணிந்திருப்பார்கள்
எதற்காக அதை அணிகிறோம் என்று தெரியாமலேயே அணிந்திருப்
பார்கள். வழி வழியாக அணியப் பட்டு வருவதால் (mere copying)
அணிந்திருப்பார்கள். அப்படி அணிந்திருப்பவர்களுக்கு இந்த
மாதவிடாய் உபத்திரவங்கள் குறைந்திருக்கும்.

அது எப்படி சார்? பவளத்திற்கும் மாதவிடாய்க்கும் என்ன சம்பந்தம்
என்று குடையாதீர்கள். சம்பந்தம் உண்டு. விவரித்தால் பத்துப்
பக்கங்களுக்கு எழுத வேண்டியதிருக்கும். அது தனி டிராக். பிறகு
ஒரு நாள் எழுதுகிறேன். நினைவு படுத்துங்கள்
=======================================================
ஜாதகத்தில் செவ்வாயின் பங்கு!

கடவுளின் சந்நிதானத்தில் கிரகங்கள் வடிவில் ஒன்பது அமைச்சர்கள்
ஊழல் இல்லாத அமைச்சர்கள். அவர்களில் செவ்வாய்தான் ராணுவ
அமைச்சர்.

நிவாகத் திறமைகளைக் கொடுக்கின்ற கிரகமும் செவ்வாய்தான்

ஒரு ஜாதகத்தில் செவ்வாய் வலிமையாக இல்லாவிட்டால், ஜாதகனுக்கு
வேற்றிகளைப் பெறக்கூடிய செயல் திறன் (ability) இருக்காது.
ஜாதகன் பல வேற்றிகளைப் பகற் கனவுகளில் காண்பவனாக இருப்பான்.

martial என்கின்ற ஆங்கிலச் சொல் Mars என்ற சொல்லில் இருந்து
வந்தது. martial arts என்கின்ற சொல்லிற்கும் அதுதான் அடிப்படை
------------------------------------------------------------------------------------------
Good temparament and skill in war are the tasks of Mars.
If he is exalted in one's horoscope, the native will become
cruel in his tendencies. Some people will be cruel rulers or
cruel administrators
=====================================================
ஜாதகத்தில் செவ்வாய் அமர்ந்திருக்கும் நிலைகளுக்கான பலன்கள்!

1
லக்கினத்தில் செவ்வாய் இருந்தால்:
ஜாதகன் கோபக்காரன். எடுத்தற்கெல்லாம் சட்டென்று கோபம் வரும்!
உக்கிரமானவன். சிலருக்கு அடிக்கடி உடற் காயங்கள் ஏற்படும்.
சிலருக்கு (ஜாதகத்தில் மற்ற அமைப்புக்கள் சரியாக இல்லாவிட்டால்)
குறைந்த ஆயுளிலேயே போர்டிங் பாஸ் கொடுக்கப்பட்டுவிடும்.
ஒரு வியாதி போனால் இன்னொரு வியாதி கதைவைத் திறந்து கொண்டு
உடனே வரும்!

ஜாதகன் சலனபுத்திக் காரணாக இருப்பான். தீரனாகவுன் இருப்பான்
சிலர் வன்கன்மையாளராகவும் (cruel) இருப்பார்கள்.
---------------------------------------------------------------------------------------

2
இரண்டாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்:
குறைந்த அளவு செல்வம் இருக்கும். கல்வியும் குறைந்த அளவே
இருக்கும். சிலர் தீயவர்களுக்கு சேவை செய்வார்கள். வாக்குவாதம்
செய்பவர்கள் (argumentative)

செவ்வாயின் இந்த அமைப்பு, கல்விக்கும், செல்வத்திற்கும் ஏற்றதல்ல!
இரண்டாம் வீட்டில் தீய கிரகங்கள் இருந்தால் அது செல்வத்திற்குக்
கேடானது. செல்வம் இருக்காது. அப்படியே தேடிப் பிடித்தாலும் தங்காது
அல்லது நிலைக்காது!
---------------------------------------------------------------------------------------

3
******மூன்றாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்:
ஜாதகன் பிடிவாதக்காரன். சாதனையாளன்.செல்வச்சூழல்களை
அனுபவிக்கக்கூடியவன். புகழ் பெறுவான். எல்லா வசதிகளும்
வந்து சேரும். தனித்தன்மை வாய்ந்தவன்.நீண்ட ஆயுளை
உடையவன்.

தர்ம, நியாயங்கள், நன் நடத்தைகள் ஆகியவற்றை உதறி விட்டுச்
சிலர் வாழ்வார்கள்.
---------------------------------------------------------------------------------------

4
நான்காம் வீட்டில் செவ்வாய் இருந்தால்:
உறவுகள், வீடு வாசல், சொத்துக்கள், தாய்ப்பாசம், வாகனவசதி
போன்றவைகள் இல்லாத அல்லது கிடைக்காத அல்லது மறுக்கப்பட்டவனாக
ஜாதகன் இருப்பான்.

இது அத்தனையும் எனக்கு இருக்கிறது என்று ஒருவர் சொன்னால் இந்த
அமைப்பின் மேல் சுபக்கிரகங்களின் பார்வை பட்டுக் கொண்டிருக்கும்

ஜாதகன் பெண்களின்மேல் அதீதமான ஈர்ப்பு உள்ளவன். சிலர்
பெண்களுக்காக உருகி கோதாவரி ஆறு போல ஓடக்கூடியவர்களாக
இருப்பார்கள். மனப் போராட்டங்கள் மிகுந்த ஜாதகம்.

(பெண்பித்து இருந்தால் மனப்போராட்டம் ஏன் இருக்காது?:-))))
--------------------------------------------------------------------------------------

5
ஐந்தாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்:
பெண்குழந்தைகள் மட்டுமே இருக்கும். வாழ்க்கை வசதிகள், சொத்துக்களில்
குறைபாடுகள் இருக்கும். அல்லது சொத்து, சுகம் இல்லாமல் இருக்கும்.
சிலர் மனம் வெறுக்கும் சூழ்நிலைகளைச் சந்திக்க நேரிடும். தர்ம, நியாயங்கள்,
நன்நடத்தைகள் ஆகியவற்றை உதறி விட்டு வாழ நேரிடும்.

சிலர் குறுகியமனப்பான்மை கொண்டவர்களாக இருப்பார்கள். சிலர்
எடுத்ததெற்கெல்லாம் கோபம் கொள்ளுகின்ற குணத்தை உடையவர்களாக
இருப்பார்கள்.
-------------------------------------------------------------------------------------
6
********ஆறாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்:
நல்ல கட்டுமஸ்தான மற்றும் ஆரோக்கியமான உடல் அமைப்பு இருக்கும்
ஜாதகன் ஊராக இருந்தாலும் சரி, போராக இருந்தாலும் சரி, எதிரிகளை
துவம்சம் செய்யக்கூடியவனாக இருப்பான்.

மனதில் பயமே இருக்காது. சிலருக்கு அதீத பெண் ஆசை இருக்கும்
அதாவது ஆதீதமான காம உணர்வுகள் இருக்கும். எப்போதும் காம
சிந்தனைகள் மேலோங்கி இருக்கும்.

சிலர் தங்கள் முயற்சியால் மேன்மை அடைவார்கள். புகழ்பெறுவார்கள்
=======================================================
7
ஏழாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்:
தர்ம நியாயம் இல்லாத காரியங்களைச் செய்பவான ஜாதகன் இருப்பான்.
சுபக்கிரகங்களின் பார்வை இருந்தால் அது குறையும்.

சிலருக்கு மண வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்காது. சண்டைபிடிக்கும்,
அல்லது சண்டை போட்டு சட்டையைப் பிடிக்கும் மனப்பான்மை இருக்கும்
அநேக நோய்கள் ஒவ்வொன்றாகத் தேடிவரும். மனையாளும் அதனால்
பாதிக்கப்படுவாள்.

சிலர் கல்மனதுக்காரர்களாக இருப்பார்கள்.
--------------------------------------------------------------------------------------
8
எட்டாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்:
உடலும், உள்ளமும் நலமாக இருக்காது. சொத்து சேராது. சுகம்
எட்டிபார்க்காது.

சிலருக்கு ஆயுள் குறைவாக இருக்கும். ஜாதகத்தில் வேறு அம்சங்கள்
நன்றாக இல்லாவிட்டால் ஜாதகன் சீக்கிரமே சிவனடி சேர்ந்து விடுவான்.
தர்ம, நியாயங்களைப் பற்றிக் கவலைப்படாத மனதைக் கொண்டிருப்பான்.
--------------------------------------------------------------------------------------

9
ஒன்பதாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்:
தந்தையோடு நல்ல உறவு இருக்காது. தந்தை மேல் அன்பு பாசம்
இருக்காது. ஜாதகன் அதிரடியான ஆள். கடுமையான ஆள்

ஜாதகன் கண்களுக்குப் புலப்படாத கலைகளில் ஆர்வம் உள்ளவனாக
இருப்பான். அதில் தேர்ச்சியும் பெறுவான்.
--------------------------------------------------------------------------------------
10
*******பத்தாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்:
இது செவ்வாய் நமக்கு நன்மைகளை அள்ளித் தரும் இடம்.
ஜாதகன் ராஜ அந்தஸ்துடன் இருப்பான். வீரன். சூரன். வெற்றியாளன்
ஆற்றல் உடையவன்.ஆர்வம் உடையவன்.

மகன்கள் இருப்பார்கள்.சொத்து சுகம், புகழ் என்று எல்லாம் கிடைக்கும்
ஜாதகன் தேடிப்பிடிப்பான்.
----------------------------------------------------------------------------------------
11
********பதினொன்றாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்:
மகன்கள் இருப்பார்கள்.சொத்து சுகம், புகழ், வளம் எல்லாம் இருக்கும்
வயாக்ரா சாப்பிடமலேயே ஆண்மை உணர்வு அதிகமாக இருக்கும்
மன உறுதி இருக்கும்.(அது இருந்தால் இது இருக்காதா என்ன?)

நிறைய நண்பர்கள், கூட்டாளிகள் இருப்பார்கள். ஜாதகன் உண்மையிலேயே
தனித்தன்மை வாய்ந்தவனாக இருப்பான்.

ஜாதகன் எதையும் தெளிவாகப் பேசக்கூடியவனாக இருப்பான்
=======================================================
12
பன்னிரெண்டாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்:
கண்களில் குறைபாடுகள் ஏற்படும். பயப்பட வேண்டாம். கண் நோய்கள்
ஏற்படலாம். ஜாதகன்

சோம்பல் உடையவன். சோம்பல்தான் அவனுடைய முதல் மனைவி!:-)))

பொருளாதார இழப்புக்கள் இருக்கும். பல சொத்துக்களைத் தொலைப்பான்
துன்பங்கள், துயரங்கள் என்று எல்லாமே ஜாதகனுக்கு எதிராகக் கொடிபிடிக்கும்

சிலர் படு கருமியாக இருப்பார்கள். சாப்பிடும்போது காக்காய் வந்தால்
கையைக் கழுவி விட்டு காகத்தை ஓட்டுபவர்கள் என்று வைத்துக் கொள்ளூங்கள்
===========================================================
வெவ்வேறு ராசிகளில் செவ்வாய் இருக்கும் பலன்கள்:
(Since this portion is in simple english. I have given it as it is)
1
மேஷத்தில் செவ்வாய்:

The individual will be inspiring, generous and active
He will be powerful and will be good at Mathematics.
He will be blessed with a dark sensual body
-----------------------------------------------------------------------------
2
ரிஷபத்தில் செவ்வாய்:

The individual will be timid, stubborn and sensitive.
He will have a strong inclination towards sports and magic
He will have a strong animal instinct.
------------------------------------------------------------------------------
3
மிதுனத்தில் செவ்வாய்:

The individual will be ambitious, quick, rash, fearless and tactless.
He will be blessed with a loving family and children
He will be skilled in music.
------------------------------------------------------------------------------
4
கடகத்தில் செவ்வாய்:

The individual will be intelligent, wealthy, and fickle minded
He will be proficient in any one of following fields
Agriculture, Medical and surgical
------------------------------------------------------------------------------
5
சிம்மத்தில் செவ்வாய்:

If Mars is in Leo, the individual will be liberal, generous, noble and
successful. They will also have an interest in occult science, astrology,
astronomy and mathematics and will also have deep love and respect
for their parents.
-------------------------------------------------------------------------------
6
கன்னியில் செவ்வாய்:

If Mars is in Virgo, the individual will be self-confident,
conceited, boastful and materialistic. Their marriage will usually not be
successful and these individuals can also suffer from digestive disorders.
--------------------------------------------------------------------------------
7
துலா ராசியில் செவ்வாய்:

The individual will be ambitious, perceptive
He will be fond of adulation.
He will be blessed with a tall, symmetrically body and a fair complexion.
--------------------------------------------------------------------------------
8
விருச்சிகத்தில் செவ்வாய்:

The individual will be indulgent, clever and aggressive!
He will have a medium stature and make great progress in life.
----------------------------------------------------------------------------------
9
தனுசில் செவ்வாய்:

The individual will be conservative, indifferent, impatient and quarrel
some.
He can make a good minister or a statesman!
----------------------------------------------------------------------------------
10
மகரத்தில் செவ்வாய்:

The individual will be rich, brave, generous,bold and respected
He can easily attain a high political position and will usually be
blessed with many sons.
--------------------------------------------------------------------------------
11
கும்பத்தில் செவ்வாய்:

The individual will be unhappy, miserable, poor unwise, controversial
and will have a tendency to forget things.
These individuals will be in constant danger from water.
-----------------------------------------------------------------------------------
12
மீனத்தில் செவ்வாய்:

The individual will be passionate, restless, faithful and willful.
He will have a fair complexion, can have troubles in their love affairs
and will also have a few children.
-----------------------------------------------------------------------------------
செவ்வாயின் சொந்த வீடுகள்: மேஷம், விருச்சிகம் (2 இடங்கள்)
செவ்வாயின் உச்ச வீடு: மகரம்
செவ்வாயின் நீச வீடு: கடகம்
செவ்வாயின் நட்பு வீடுகள்: சிம்மம்,தனுசு, மீனம் (3 இடங்கள்)
செவ்வாயின் சம வீடுகள்: ரிஷபம், துலாம், கும்பம் (3 இடங்கள்)
செவ்வாயின் பகை வீடுகள்: மிதுனம், கன்னி, (2 இடங்கள்)

சொந்த வீட்டில் ஆட்சி பலத்துடன் இருக்கும் செவ்வாய்க்கு
100% வலிமை இருக்கும்.

சம வீட்டில் இருக்கும் செவ்வாய்க்கு 75% பலன் உண்டு!

நட்பு வீட்டில் இருக்கும் செவ்வாய்க்கு 90% பலன் உண்டு.

பகை வீட்டில் இருக்கும் செவ்வாய்க்கு 50% பலன் மட்டுமே உண்டு

நீசமடைந்த செவ்வாய்க்கு பலன் எதுவும் இல்லை

உச்சமடைந்த செவ்வாய்க்கு இரண்டு மடங்கு (200%) பலன் உண்டு!

இந்த அளவுகள் ஒரு உத்தேச அளவுகளே!
===================================================
செவ்வாயின் சுய அஷ்டவர்க்கப் பலன்கள்:
சுயவர்க்கத்தில் செவ்வாய் கொண்டிருக்கும் பரல்களை வைத்துப் பலன்கள்:
எல்லாம் பொதுப்பலன்கள். உங்களுடைய ஜாதகத்தின் மற்ற அம்சங்களை
வைத்து இவைகள் மாறுபடலாம், அல்லது வேறுபடலாம். அதையும் மனதில்
கொள்க!

1, 2, 3 பரல்வரை : உயர்வாகச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. உடல்
உபாதைகள். காய்ச்சல் போன்ற நோய்கள் அடிக்கடி வரும். எதற்கு
எடுத்தாலும் விவாதம் அல்லது சண்டை போடக்கூடிய அமைப்பு. உறவுகள்,
நெருங்கிய உறவுகளுடன் பிரிந்து வாழும் வாழ்க்கை அமையும்

4. பரல்கள்: சமமான அளவில் நன்மை மற்றும் சமமான அளவில் தீமைகள்
கொண்ட ஜாதகம்

5. பரல்கள்: அனைவரையும் ஈர்க்கக்கூடிய பழக்கவழக்கங்கள், நன்நடத்தை
உள்ள ஜாதகர்.

6. பரல்கள். அரசிடம் இருந்து ஆதரவும் சலுகைகளும் கிடைக்கக்கூடிய
ஜாதகர். அல்லது ஆட்சியில் உள்ளவர்களுடன் நெருக்கமான தொடர்பு உள்ள
ஜாதகர்

7. பரல்கள்: ஜாதகரால் அவருடைய உடன்பிறப்புக்களுக்கும், உடன்
பிறப்புக்களால் ஜாதகருக்கும் தொடர்ந்து நன்மைகள் கிடைக்கும்
பாசமலர்கள்.

8. பரல்கள்: எதிரிகளைத் துவம்சம் செய்யக்கூடிய ஜாதகர். இடங்களும்
சொத்துக்களும் ஆதாயமாகக் கிடைகக்கூடிய ஜாதகர்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
செவ்வாயின் கோச்சாரப் பலன்கள்:

குறிப்பிட்டுள்ளவைகள் எல்லாம் சந்திரனில் இருந்து நடப்பில் செவ்வாய்
இருக்கும் ராசியை வைத்துப் பலன்கள்:

3ஆம் வீடு, 6ஆம் வீடு, 11ஆம் வீடு ஆகிய இடங்களில் கோச்சார
செவ்வாய் சஞ்சரிக்கும் காலங்கள் மட்டுமே நன்மையுள்ளதாகும்

மற்ற இடங்களில் அவர் சஞ்சாரிக்கும் காலங்களில் நன்மைகள்
இருக்காது
=======================================================
செவ்வாயின் கோச்சாரப் பலன்களைப் பெரிதாக எடுத்துக் கொள்ள
வேண்டாம். குரு அல்லது சனியைப் போல் அல்லாமல் அவர் ஒரு
ராசியில் தங்கிச் செல்லும் காலம் மிகக் குறைவானது!

அவர் வான வெளியில் ஒரு சுற்று சுற்றி முடிக்க எடுத்துக் கொள்ளும்
காலம் 18 மாதங்கள். ஒவ்வொரு ராசியிலும் சுமார் ஒன்றரை மாதங்கள்
இருப்பார்.

In short, Mars is the is significator of brothrhood, courage and
talents of a native
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
செவ்வாய் எப்போதும் தீமைகளையே கொடுப்பார். செவ்வாய் திசை
வந்தால் துன்பங்களும், சிரமங்களும் விபத்துக்களும் வந்து சேரும்
என்று சிலர் நினைப்பதுண்டு. அது உண்மையல்ல!

தமிழகத்தில் ஒரு மாபெரும் தலைவி மிதுன லக்கினக்காரர். அவருடைய
பதினொன்றாம் வீட்டு அதிபதியான செவ்வாய்தான், தன்னுடைய தசா
புத்தியில் அவரை முதல் மந்திரி பதவியில் உட்கார வைத்து அழகு
பார்த்தது.

அதுபோல செவ்வாயால் நன்மைகள் பெற்ற பலர் உண்டு. ஜாதகனின்
ஜாதகத்தில் தான் எந்த வீட்டிற்கு அதிபதியோ, அதற்குரிய செயல்களை
செவ்வாய் சரியாக உரிய நேரத்தில் செய்து விடுவான்

எந்தக் கிரகமும், முழுவதும் நன்மைகளையோ அல்லது முழுவதும்
தீமைகளையோ அளிக்காது.

ஒவ்வொரு கிரகமும், அதன் இருப்பிடம், சம்பந்தம் கொண்டுள்ள
மற்ற கிரகங்கள், பார்வை ஆகியவற்றைப் பொறுத்தே நன்மையையும்
தீமையையும் வழங்கும்
------------------------------------------------------------------------------------------
செவ்வாய் தோஷம் பற்றி இங்கு எழுதவில்லை. அது விரிவான
பாடம். ஜாதகத்தில் தோஷங்கள் என்கின்ற topic ல் எழதும்போது
அதை விவரிக்கிறேன். பொறுத்துக் கொள்ளவும்

ஜாதகத்தில் செவ்வாய் நீசமாக அல்லது பகை வீட்டில் அமர்ந்து
படுத்திக் கொண்டிருந்தால், அல்லது கஷ்டங்களை அதிகமாக
அனுபவிப்பதாக நீங்கள் நினத்தால் அதற்குப் பரிகாரம் இருக்கிறது

செவ்வாய்க் கிழமை விரதம் இருங்கள். எழுந்தது முதல் மாலை
ஆறுமணி வரை உபவாசம் இருக்க வேண்டும். தண்ணீர் மட்டும்
குடிக்கலாம். மாலையில் செவ்வாயின் நாயகர் சுப்பிரமணியரை
வணங்கி விட்டு இரண்டு வாழைப் பழங்கள் ஒரு டம்ளர் பால்
சாப்பிடலாம். அல்லது அரிசி வெல்லப் பாயாசத்தைப் பிரசாதமாக
வைத்து வணங்கிவிட்டு இரண்டு டம்ளர்கள் பாயாசத்தைக் குடிக்கலாம்

கோவிலுக்கு முடிந்தால் சென்று வணங்கி வரலாம். அல்லது வீட்டிலேயே
விளக்கு ஏற்றி வணங்கலாம். இறைவன் எங்கும் இருக்கிறான்

எத்தனை செவ்வாய்க் கிழமைகள் விரதம் இருக்க வேண்டும்?

ஒன்பது செவ்வாய்க் கிழமைகள் இருக்க வேண்டும். சிலர் இருபத்தோரு
செவ்வாய்க் கிழமைகள் விரதம் இருக்க வேண்டும் என்பார்கள்.

விரதம் எப்படி உங்கள் விருப்பமோ, நாட்களின் எண்ணிக்கையும் உங்கள்
விருப்பம்தான்

யார் யார் இருக்க வேண்டும்?

திருமணம் தள்ளிக்கொண்டே போகிறவர்களும், காரியத் தடைகள்
உள்ளவர்களும், மிகுந்த துன்பங்கள் மற்றும் கஷ்டங்களை அனுபவிப்பவர்களும்
செவ்வாய் விரதத்தை மேற் கொள்ளலாம்.வேலை இல்லாமல் இருப்பவர்களும்
மன அமைதியற்றவர்களும் மேற்கொள்ளலாம்.

என்ன பலன் கிடைக்கும்?

இருந்து பாருங்கள் தெரியும். படித்துப் பரிட்சை எழுதாமலேயே, என்ன
மதிப்பெண் வரும் என்று கேட்டால் எப்படி?

நான் அதைக் கண்கூடாகப் பார்த்தவன். என் இரண்டாவது சகோதரியின்
திருமணம் தள்ளிக்கொண்டே போனபோது. வள்ளுவர் இனத்தைச் சேர்ந்த
ஒரு அற்புதமான ஜோதிடர் ஒருவர், என் தந்தையிடம் கூறினார்.

"உங்கள் பெண்ணிற்கு கடுமையான மாங்கல்ய தோஷம். இரண்டாம் தாரமாகத்
தான் வாழ்க்கைப் பட நேரிடும். இல்லாவிட்டால் ஜாதகம் கணவனை எடுத்து
விடும். இந்தப் பெண் ஒன்பது வாரம் செவ்வாய்க் கிழமை விரதம் இருந்தால்
ஒன்பதாம் வாரம் முடியும் போது திருமணம் நிச்சயமாகும்!" என்றார்.

அவர் சொன்னதைக் கேட்டு என் சகோதரி செவ்வாய்க் கிழமைகளில் விரதம்
இருக்க ஆரம்பித்தார்.

என்னவொரு ஆச்சரியம்!

எட்டாவது வாரமே திருமணம் நிச்சயமாகிவிட்டது. 25 வயது இளைஞர்
ஒருவர் எந்து சகோதரியைக் கரம் பிடிக்க வந்தார். அவருக்கு அது இரண்டாவது
மணம். அவருடைய முதல் மனைவி அதற்கு முன் வருடம் தலைப் பிரசவத்தில்
இறந்து போயிருந்தாள். அவருடைய ஜாதகத்தில் லக்கினத்தில் சனி

வரன் கேட்டு வந்தவர்களுடைய குடும்பப் பிண்ணனி பிடித்துப்போக, அதோடு
அவரையும் பிடித்துப்போக அடுத்த மாதமே திருமணம் நிறைவேறியது.

அந்த சகோதரி ஹைதராபாத்தில் இருக்கிறார். அவர் மூலமாகத்தான் நான்
தெலுங்கு மொழியைக் கற்றுக் கொண்டேன்.

எந்த அளவிற்குத் தெலுங்கு வரும்?

மாட்லாடுதானிக்கு ஒஸ்ததண்டி! சதுவுதானிக்கு ராது!

நானும் செவ்வாய்க்கிழமை விரதம் இருந்திருக்கிறேன். முதலில் படும் சிரமங்கள்
போக வேண்டும் என்பதற்காக. ஒன்பது செவ்வாய்க்கிழமைகள் இருந்த பிறகு
அதுவே பழகிவிட தொடர்ந்து ஒரு வருட காலம் அதாவது 52 செவ்வாய்க்
கிழமைகள் தொடர்ந்து விரதம் இருந்திருக்கிறேன். அது முருகன் மேற்கொண்ட
பக்தியினால் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதோடு உடம்பைக் குறைக்கும்
முகமாகவும் வாரம் ஒரு நாள் லங்கனம். அதாவது பட்டினி அல்லது விரதம்
(ஹி.ஹி)

ஆகவே எதையும் நம்பிக்கையோடு செய்யுங்கள். நிச்சயம் பலன் உண்டு!

Prayer frees one from debts, poverty and illness afflicting the skin.
Mars bestows property and conveyance
Prayer to Mars can restore loss of eyesight.
Tuesdays are intended for the worship of Mars
If one observes the fast on Tuesday for 21 times, the unlucky influence
will be got rid off.
=============================================================
செவ்வாயைப் பற்றிய பாடம் நிறைவுறுகிறது.

அடுத்த பதிவில் வேறு ஒரு கிரகத்தைக் கையில் எடுத்துத் துவைப்போம்,

அது என்ன கிரகம்?

ராகு சாமி ராகு!

அவரை இரக்கமற்றவர் என்று கூறுவார்கள். He is called as merciless planet.

சனிக்கும் ராகுவிற்கும் ஒரு வித்தியாசம் இருக்கிறது.
சனி தண்டிக்க வேண்டிய நேரத்தில் தண்டிப்பார். ராகுவும் அப்படி தண்டிக்க
வேண்டிய நேரத்தில் தண்டிப்பார்.

என்ன வித்தியாசம்?

சனி நிற்க வைத்து அடிப்பார். ராகு தொங்க விட்டு அடிப்பார்!

அவரை நாம் துவைத்து அலசுவோம்

பொறுத்திருங்கள்
--------------------------------------------------------------------------------
இந்தப் பதிவில் உங்களுக்கான பகுதிகளை மட்டும் அல்லது வரிகளை
மட்டும் படித்து விட்டு வந்து, "சார், அடுத்தபாடம் எப்போது?" என்று
யாரும் கேட்க வேண்டாம். 'செய்வன திருந்தச் செய்' என்பது முதுமொழி.
ஆகவே அனைவரும் பாடத்தை முழுமையாகப் படியுங்கள்.

அதுதான் நீங்கள் இந்த வகுப்பறைக்கு தரும் மரியாதை!

அன்புடன்
வகுப்பறை வாத்தியார்

வாழ்க வளமுடன்!

21.12.08

துருவன் அய்யரும் வெண்பொங்கலும்!

செல்வந்தர் வீட்டுத் திருமணம். அவருடைய ஒரே மகளுக்குத் திருமணம்.
அந்தக் காலத்து வழக்கப்படி அந்தப் பெண்ணிற்கு 18 வயதிலேயே திருமணம்.

செல்வந்தர் என் தந்தையாரின் பால்ய சிநேகிதர். அதோடு மிகவும் நெருங்கிய
நண்பர்.

காலம்?

நீலமலைத் திருடன் படம் வெளிவந்து தமிழ்த் திரையரங்குகள் களை கட்டிக்
கொண்டிருந்த காலம். சரியாகச் சொன்னால் 1957ஆம் ஆண்டு அக்டோபர் மாதம்
என்று வைத்துக் கொள்ளுங்கள்

"சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா
தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா.."


என்று தன் இனிய ப்ளஸ் கணீர்க் குரலால், பாடகர் திரு.T.M. செளந்தரராஜன்
அவர்கள் தமிழர்களைக் கட்டிப்போட ஆரம்பித்திருந்த காலம்.

உனக்கு எப்படித் தெரியும்?

நான் அப்போது சிறுவன். எனக்கு எல்லாம் என் தந்தையார் சொல்லித் தெரியும்
அவர் கதை சொல்வதில் சூரர். சாதாரணக் கதையைக்கூட சுவாரசியமாகச் சொல்வார்.

எனக்கு நினைவாற்றல் அதிகம் (ஹி.ஹி, ஏழில் புதன்) அதனால் அவைகள்
எல்லாம் என் மண்டைக்குள் கடவுள் கொடுத்த Hard Discல் ஏறி, பலப் பல
ஃபோல்டர்களில் வைரஸ் பிரச்சினைகள் இன்றி, ஸ்பைவேர் பிரச்சினைகள் இன்றிப்
பாதுகாப்பாக இருக்கின்றன!.

விட்டால் பேசிக் கொண்டே இருப்பேன். அது தெரியாமல் சிலர் என்னிடம் தொலைபேசி எண்ணைக் கேட்கிறார்கள் பாருங்கள்........பாவம்! :-))))

சரி, வாருங்கள் கதைக்குள் போவோம்
---------------------------------------------------------------------------------------
திருமணத்திற்கு மூன்று நாட்கள் முன்பிருந்தே விருந்தோம்பல்.

தஞ்சாவூர் தலை வாழை இலை போட்டு, நான்கு வேளையும் (4 என்கின்ற
எண்ணிக்கையைக் கவனிக்கவும்) விதம் விதமான உணவுகள்.

தினமும் மாலை வேளைகளில் விருந்தினர்களுக்கு இன்னிசைக் கச்சேரிகள்
மற்றும் பரதநாட்டிய நடன நிகழ்ச்சிகள்.

திருமணத்திற்கு முதல் நாள் மாலை. அப்போது மிகவும் பிரபலமாக இருந்த
நடன மங்கை, நடிகை ஈ.வி.சரோஜாவின் அவர்களின் நாட்டிய நிகழ்ச்சி.
(இந்த ஈ.வி.சரோஜா அப்போது வெளிவந்த நீலமலைத் திருடனில் நடித்து
அதிகப் படியான புகழைக் கொண்டிருந்தார். அந்தப் படத்தை எதற்காக
கதைக்குள் கொண்டு வந்தேன் என்பது உங்கள் அனைவருக்கும் இப்போது
தெரிந்திருக்கும்)

அதறகு முதல் நாள் திருமதி.M.L.வசந்த குமாரி ( Actress Srividhya's
mother) அவர்களின் இன்னிசைக் கச்சேரி.
----------------------------------------------------------------------------------
அதெல்லாம் முக்கியமில்லை. நண்பர் வீட்டுக் கல்யாணத்தில் விருந்தோம்பல்
பொறுப்பை என் தந்தையார் ஏற்றுக் கொண்டிருந்தார். உதவிக்கு என்னுடைய
பெரியப்பாவும் சேர்ந்திருந்தார்.

இங்கே என் பெரியப்பாவைப் பற்றி இரண்டு வரிகளாவது சொல்ல வேண்டும்.
அவர் பெரிய கலா ரசிகர். வகை வகையான உணவுகளில் ரசனை மிக்கவர்.
நன்றாகச் சமையல் செய்யவும் தெரிந்தவர். என் தந்தையாரை விடப் பத்து
வயது மூத்தவர். அவர் போல சாப்பாட்டை இரசித்துச் சாப்பிடும் மனிதரை
இதுவரை நான் கண்டதில்லை.

எங்கள் ஊர் சமையல் மேஸ்திரிகளுக்கெல்லாம், அவரைக் கண்டால் பயம்.
அவரிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதற்காக அவர் பந்தியில்
அமர்ந்து சாப்பிடும்போது எதிரில் பவ்வியமாக வந்து நின்று உபசரிப்பார்கள்

அவர் பெயர். "பவுன்" மாணிக்கம் செட்டியார். தொழில் மற்றும் பொழுதுபோக்கு
இரண்டுமே சீட்டு ஆடுவது. அவர் சிவந்த நிறமாக இருப்பார். அதனால் அந்த
அடையாளப் பெயர். அதோடு சீட்டாடும் பொது பவுனை வைத்துத்தான்
சீட்டாடுவார். அதற்கான காரணப் பெயரும் அது.

அதற்குக் காசு?

லட்சக்கணக்கான பணத்தைத் தொலைத்த பெரிய கதை அது! பல சுவாரசியங்கள்
நிறைந்த கதை. அதை இப்போது சொன்னால் கதை பாரதக்கதை மாதிரி நீண்டு
விடும். இன்னொரு நாள் அதைச் சொல்கிறேன்
------------------------------------------------------------------------------
என் பெரியப்பாவின் சொற்படி, என் தந்தையார் இரண்டு விதமான சமையலுக்கு
ஏற்பாடு செய்திருந்தார். ஒன்று வழக்கம்போல செட்டிநாட்டு சமையல்காரர்களின்
சமையல்.

இன்னொரு பக்கம் அப்போது மிகவும் பிரபலமாக இருந்த தஞ்சாவூர் துருவன்
அய்யர் குழுவினரின் சமையல்.

யார் வேண்டுமென்றாலும் எந்தப் பக்குவத்தில் வேண்டுமென்றாலும் ரசித்துச்
சாப்பிட்டுக் கொள்ளுங்கள் என்னும் பெருநோக்கு!

என் தந்தையார் அந்த மூன்று நாட்களிலும் இரவு பகல் என்று தூக்கத்தை
ஒதுக்கி வைத்துவிட்டு, சமையல் நடந்த கூடங்களே கதி என்று மேற்பார்வை
செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

என் தந்தையாருக்கு காப்பியும், சிகரெட்டும் இருந்தால் போதும். எத்தனை
நாட்கள் வேண்டுமென்றாலும் விழித்துக் கொண்டிருப்பார்.

அப்போதெல்லாம் சிகரெட்டுகள் டின்களில் வரும். வட்டவடிவடின். ஒரு
டின்னிற்கு 50 சிகரெட்டுக்கள். இந்த மாதிரிக் கண் விழிக்கும் நாட்களில் ஒரு
நாளைக்கு ஒரு டின் சிகரெட் காலியாகும்

Smoking is injurious to health' என்ற எச்சரிக்கையெல்லாம் அப்போது கிடையாது.
அதுபோல அதிகமாகப் புகைத்தால் கேன்சர் வருமென்ற பயமும் அப்போது
கிடையாது.

என் தந்தையாருக்கு ஒரு புண்ணாக்கும் வந்ததில்லை.
இறுதிவரை ஆரோக்கியமாக
இருந்தார். தனது 75 வது வயதில் பத்து நிமிட
போராட்டத்துடன் ஹார்ட் அட்டாக்கில்
இறந்து போனார். அவ்வளவுதான்.
மரணம் எப்படி வர வேண்டும் என்பற்கும்
அவர் உதாரணமாக இருந்தார்.

ஆசான் என்னும் மலையாள ஜோதிட நண்பர் அவருடைய மரணத்தைத்
துல்லியமாகக் குறித்துக் கொடுத்திருந்தார். அதுபோலவேதான் நடந்தது. அதை
என்னுடைய முன் பதிவு ஒன்றில் சொல்லியிருக்கிறேன்.

கதை தடம் மாறிக் கொண்டிருக்கிறது. மெயின் கதைக்குப் போவோம்
----------------------------------------------------------------------------------
திருமண தினத்தன்று அதிகாலை 5 மணி.

காலைப் பலகாரம் 7 மணி முதல் 8 மணிக்குள் அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும்.

எதிர் நோக்கியிருக்கும் விருந்தினர்களின் எண்ணிக்கையோ சுமார் மூவாயிரம்.

மெனு: பாதம் அல்வா, கேசரி, வடை, பொங்கல், இட்லி, சாம்பார், தேங்காய் சட்னி,
மற்றும் தக்காளிச் சட்னி். உடன் மசால் தோசை, உபரியாக செட்டி நாட்டுப் புகழ்
வெள்ளைப் பணியாரம்.

என் தந்தையார் எல்லாவற்றையும் நோட்டமிட்டார். பொங்கலைத் தவிர மற்ற
தெல்லாம் அளவில் சரியாக வரும் போலத் தோன்றியது.

வெண் பொங்கல், அதுவும் துருவன் அய்யரின் பிரபலமான வெண் பொங்கல்.
பறிமாறும் போது, பற்றாக்குறை ஏற்பட்டால் பந்தியில் அசிங்கமாகி விடாதா?

பெரிய விறகு அடுப்பில் மூன்றடி உயரம், மூன்றடி அகலம் உள்ள பாத்திரத்தில்,
பொங்கல் தயாராகிக் கொண்டிருந்தது. முக்கால் பாத்திர அளவிற்கு மட்டுமே
அது கொதித்துக் கொண்டிருந்தது.

அருகில் சமையல் உதவியாளர் ஒருவர் நின்று, அதைக் கிண்டிக்கொண்டிருந்தார்.

சமையல் கட்டின் நடுவில் நின்று கொண்டிருந்த தலைமை சமையல்காரர் துருவன்
அய்யரிடம் என் தந்தையார் பேச்சுக் கொடுத்தார்.

"ஸ்வாமி, பொங்கல் மட்டும் குறைவாகத் தெரிகிறதே?"

"அதெல்லாம் போதும். மிஞ்சும் பாருங்கோ.அதில் சேர்க்க வேண்டிய அயிட்டம்
ஒன்று பாக்கியிருக்கிறது. சித்த நாழி வெயிட் பண்ணுங்கோ!"

என் தந்தையார் காத்திருந்தார். ஐந்து நிமிடங்கள் கழித்து, கொதித்துக் கொண்டிருந்த
பொங்கல் பாத்திரத்தின் அருகே சென்ற துருவன் அய்யர், "நெய் டின்னை எடுத்துக்
கொண்டு வாங்கடா" என்று குரல் கொடுக்க, ஒருவன் ஒரு முழு டின் நெய்யை
அங்கே எடுத்துக் கொண்டு வந்தான்.

முழு டின் என்பது பதினைந்து கிலோ அளவுள்ள நெய்.

"உள்ளே ஊத்துடா" என்று அவர் சொன்னவுடன். அதை அவன் ஊற்றினான்.
இன்னொரு முழு டின்னை எடுத்துக் கொண்டு வந்து ஊற்றுடா என்று அவர்
மேலும் சொல்ல அதுவும் நடந்தது.

என் தந்தை வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார்.

இரண்டு முழு டின் நெய்யா? பெரிய சமாச்சாரமாக இருக்கிறதே.!

அதோடு விடவில்லை. மூன்று கிலோ அல்லது ஐந்து கிலோ அளவில்
வறுத்த முந்திரிப் பருப்பும் வந்து அதில் சேர்க்கப்பட்டது. அடுத்த இரண்டு
நிமிடங்களில் பொங்கல் ரெடி. நீர் ஊற்றி அடுப்பு அணைக்கப்பெற்றது.

"செட்டியார், நீங்களே பிள்ளையார் சுழி போட்டு துவங்கி வைங்கோ" என்று
சொன்ன துருவன் அய்யர், தன் உதவியாளரிடம் சொன்னார்,"டேய் ஒரு கின்னத்தில்
செட்டியாருக்கு பொங்கல் எடுத்துக் கொடுடா. ஸ்பூனோடு கொடுடா. அவர்
சாப்பிட்டுப் பார்க்கட்டும்"

நடந்தது.

அற்புதமாக இருந்தது பொங்கல். அவ்வளவு ருசி. அதோடு தொண்டைக்குள்
வழுக்கிக் கொண்டு சென்றது. செல்லுமுன் நாக்கின் மூலமாக உடலின் ருசி
சம்பந்தப்பட்ட அத்தனை நரம்புகளையும் சுண்டி விட்டுச் சென்றது. உங்கள்
மொழியில் சொன்னால் நரம்புகளைக் கிண்டிக் கிழங்கெடுத்து விட்டுச் சென்றது
அல்லது பின்னிப் பெடல் எடுத்துவிட்டுச் சென்றது

அதன் அசாத்திய ருசியில் என் தந்தையார் அசந்து போய் விட்டார்

கின்னத்துப் பொங்கலைச் சாப்பிட்டு முடித்தவுடன், அருகில் வந்த அய்யர் கேட்டார்

"செட்டியார், இன்னும் ஒரு கின்னம் சாப்பிடரேளா?"

"வேண்டாம் சாமி, நன்றாக இருக்கிறது. ஒரு கின்னத்திற்கு மேல் சாப்பிடமுடியாது"

"ஏன்?"

"திகட்டுகிறது."

"அதுதான் சங்கதி. திகட்டும்.அதனால் தான் மிஞ்சும் என்றேன். பந்தியில் ஒரு
கரண்டிக்கு மேல் ஒருத்தரும் கேட்கமாட்டார்கள்"

அப்படியே நடந்தது.

இதை, ஒரு மனிதன் தன் தொழிலில் அதீதத் திறமை பெற்று எப்படி விளங்க வேண்டும் என்பதற்கு உதாரணமாகச் சொல்வார் என் தந்தை.
பிறகு என் அனுபவத்தில் பல தொழில் வல்லுனர்களைப் பார்த்தும் நான் அதைத்
தெரிந்து கொண்டேன். திறமை உள்ளவன் மட்டுமே தன் தொழிலில் சிறக்கமுடியும்

அதனால்தான் செய்யும் தொழிலே தெய்வம் என்றும் சொல்லப் படுகிறது!
-------------------------------------------------------------------------------
"வாத்தியார் இந்தக் கதை பாடத்தோடு சம்பந்தப் பட்டதா?"

"ஆமாம்"

"என்ன சம்பந்தம்?

"ஆற்றல் (Ability) மற்றும் திறமை (Talent) ஆகிய இரண்டும் ஒரு மனிதனுக்கு
நன்றாக அமையக் காரணமாக இருக்கின்ற கிரகத்தைப் பற்றிய பாடம் அடுத்த
பாடம். அதற்கான முன்னோட்டம்தான் இந்தக் கதை!"
-------------------------------------------------------------------------------
பாடம் நாளை அல்லது நாளை மறுநாள் பதிவிடப்படும்!

(தொடரும்)

நன்றி, வணக்கத்துடன்,
வகுப்பறை,
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

20.12.08

பக்கா பதிவுத் திருடன்!

இணையம் ஒரு திறந்தவேளி. இங்கே உலாத்துபவர்கள் அனைவரும்
நேர்மையானவர்கள் அல்ல! ஒரு குறிப்பி்ட முடியாத சதவிகிதம் திருடர்கள்
இருக்கிறார்கள்.

பிக்பாக்கெட் கேசாக இருந்தால் பரவாயில்லை தொலைகிறது என்று விட்டுவிடலாம்

இருட்டில் திருட்டுத்தனமாக பெண்மேல் கை வைப்பவனை என்ன செய்வது?

கை வைத்தவன் மாட்டிக் கொண்டு விட்டால், என்ன நடக்கும்?

நகரமாக இருந்தால் பலரும் சேர்ந்து கும்முவார்கள். கிராமமாக இருந்தால்
அறிவாள் வெட்டு விழுகும். குறைந்த பட்சம் அவன் ஒரு மாதமாவது மருத்துவ
மனையில் படுக்கும்படி ஆகிவிடும்

சரி, சொல்ல வந்த விஷயத்திற்கு வருகிறேன்.

என்னுடைய ஜோதிடப் பதிவுகளை அப்படியே திருடி ஒருவர் தன் பெயரில்
வலைப்பதிவு ஒன்றைத் துவங்கிப் பதிவிட்டிருக்கிறார். இதுவரை 10 பதிவுகளைத்
திருடிப் பதிவிட்டிருக்கிறார்.

அவருடைய பெயர் வசந்த் என்பது மட்டும் தெரிகிறது. அது அவருடைய
சொந்தப் பெயரா அல்லது அதுவும் திருட்டுப் பெயரா என்பது தெரியவில்லை:-)))))

பதிவில் மின்னஞ்சல் முகவரி இல்லை. திருடியது சொற்பம்தான் 10 பதிவுகள்.
ஆனாலும் திருட்டு திருட்டுத்தான். அததனையும் நவம்பர் 18ஆம் தேதி வலையேற்றப்
பட்டுள்ளது. அதற்குப் பிறகு வேறு எங்காவது உண்மையான திருட்டைச் செய்யப்
போய் விட்டாரோ என்னவோ?:-)))))

எந்த அரிப்பில் பதிவுகளைத் திருடினார் என்பதும் தெரியவில்லை:-)))))

அவர் தன்னுடைய ஜாதகத்தை அனுப்பினால் அவருக்கு உள்ளே போகவேண்டிய
யோகம் இருகிகிறதா என்று பார்த்துச் சொல்லுவேன்:-)))))

எனக்கு பலமே என்னுடைய வாசகர்கள்தான். இன்றையத் தேதியில் என்னுடைய
இந்த வலைப் பதிவிற்கு ஏராளமான வாசகர்கள் இருக்கிறார்கள். திருட்டுக்கள்
என் கண்ணில் இருந்து தப்பினாலும், அவர்கள் கண்ணில் இருந்து தப்பாது.

என் மதிப்பிற்குரிய வாசகர் ஒருவர் அந்தத் திருட்டைச் சுற்றிக் காட்டியிருந்தார்.
அவருக்கு என் நன்றி!

அந்தத் திருட்டுப் பதிவின் சுட்டி இங்கே உள்ளது.
அனைவரையும் பார்க்க வேண்டுகிறேன்.

என்ன செய்யலாம் அந்தத் திருடனை?

உங்கள் மேலான யோசனைகள் வரவேற்கப்படுகின்றன!

அன்புடன்
வகுப்பறை வாத்தியார்
==============================================
படங்களின் மேல் கர்சரை வைத்துக் கிளிக்கினால் படங்கள் பெரிதாகத் தெரியும்














+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

17.12.08

சந்திரனைக் காணாமல் அல்லி முகம்மலருமா?

"சந்திரனைக் காணாமல் அல்லி முகம் மலருமா?
சிந்தையிலே கொண்ட சஞ்சலம் தீருமா?"

என்றார் கவியரசர் கண்ணதாசன்.

அல்லிக்கு ஏது சஞ்சலம்? கவியரசர் கூறியது அல்லி போன்ற முகம்
கொண்ட இளம் நங்கையரின் மனசஞ்சலத்தைக் கூறினார்.

அல்லி, மல்லி, அல்லது கள்ளி என்று பெண்கள் மட்டுமல்ல, ஜீன்ஸ்
பாகி, டபுள் பேரல் பேண்ட் அணிந்த இளைஞர்களுக்கும் மன சஞ்சலம்
வரக்கூடாது. அந்த சஞ்சலங்களுக்குக் காரணமாக இருக்கும்
சந்திரனைப் பற்றி இன்று பார்ப்போம்
====================================================
சந்திரன் பெண் கிரகம். பெண்களைச் சிறப்படையச் செய்யும் கிரகம்.

"அது எப்படி சார்? இருபாலருக்கும் பொதுவானதல்லவா கிரகங்கள்.
ஏன் ஜல்லி அடிக்கிறீர்கள்?"


ஜல்லி இல்லை அப்பனே. சந்திரன் பொதுவான கிரகம்தான். சட்டம்
பொதுவானதுதான் ஆனால் பல சட்டங்கள் பெண்களுக்கு சாதகமாக
இல்லையா?

அதுபோல சந்திரன் அதிகமான அளவில் பெண்களுக்கே சாதகமாக
இருப்பான். அவன் தாய்க்கு உள்ள கிரகம் சாமி!

ஒரு குழந்தைக்கு நல்ல தாயையைக் கொடுப்பது அவன்தான்.

பிறக்கும் குழந்தைக்கு வேறு என்ன வேண்டும்?

கோடியில் ஒருத்தி தனக்குப் பிறந்த குழநதையை குப்பைத் தொட்டியில்
போட்டு விட்டுப் போவாள். அவளையெல்லாம் கணக்கில் எடுத்துக்
கொள்ள வேண்டாம்.

ஒரு ஞானி சொன்னான்:

"கடவுள் எல்லா இடங்களிலும் இருக்க முடியாது. அதானால்தான் தாயைப் படைத்தான்."

ஆகவே தாய் கடவுளுக்குச் சமம்.

இப்போது சொல்லுங்கள் சந்திரன் யாருக்கு அனுசரணையாக இருப்பான்?

சந்திரன் லக்கினத்தில் இருந்தாலும் அல்லது ஏழில் இருந்து லக்கினத்தைப் பார்த்தாலும், அல்லது உச்சம் பெற்றிருந்தாலும் ஜாதகி அழகாக இருப்பாள்.
பல நடிகைகளின் ஜாதகத்தில் இந்த அமைப்பு இருக்கும்.


Beauty என்பது பெண்களுக்கு மட்டுமே! :-)))))

ஆண்களுக்கு Handsome - அதற்கு அதிபதி சூரியன்
---------------------------------------------------------------------------------------------------------
விட்டால் நான் எழுதிக் கொண்டே இருப்பேன். நேற்று ஒரு பின்னூட்டக்காரர்
வந்து உங்கள் பதிவுகள் நீளமாக இருக்கின்றன என்றார். இன்றும் அவர் வரலாம்.
அதனால் கதைப்பதை நிறுத்தி விட்டுப் பாடத்திற்கு வருகிறேன்.
...............................................................................................................................
உடலுக்குள் பல உறுப்புக்கள் உண்டு. அவைகள் ஒழுங்காக இயங்கினால்
தான் மனிதன் உயிர் வாழ முடியும். அதுபோல மனத்திற்குள் பல
தாக்கங்கள் உண்டு. சில தாக்கங்கள் மனதை அதிரச் செய்யும். சில
தாக்கங்கள் மனதைக் குளிரச் செய்யும். அந்தத் தாக்கங்கள் அதிகமானால்
மனிதனுக்குப் பைத்தியம் பிடித்து விடும்.

நாசுக்காகச் சொன்னால் Mental ஆகி விடுவான்.

அவைகள் என்னென்ன தாக்கங்கள் என்பதைப் பட்டியல் இட்டிருக்கிறேன்
அவற்றில் நல்ல தாக்கங்களும் உண்டு. தீய்மை பயக்கும் தாக்கங்களும்
உண்டு. பாருங்கள் ஏதாவது விடுபட்டிருந்தால் சொல்லுங்கள்

1. சுகங்கள், துக்கங்கள்
2. கோபங்கள், தாபங்கள்
3. உடன்பாடுகள்
4. முரண்பாடுகள்
5. ஒட்டுதல்கள்
6. விரிசல்கள்
7. பிடிவாதங்கள்
8. விட்டுக்கொடுத்தல்கள்
9. சுயநலங்கள்
10. தியாகங்கள்
11. எதிர்பார்ப்புக்கள்
12. ஏமாற்றங்கள்
13. நம்பிக்கைகள்
14. துரோகங்கள்
15. காதல்
16. காமம்
17. மன நெகிழ்ச்சிகள்
18. மன எரிச்சல்கள்
19. புளங்காகிதங்கள்
20. பூசல்கள்

சந்திரன் மனதிற்குக் காரகன். ஜாதகத்தில் அவன் வலிமையாக இருந்தால்
மேற்கூறியவற்றில் குளிர வைக்கும் அதிர்வுகளையே ஜாதகன் அதிகமாகச்
சந்திப்பான்.

இல்லையென்றால் இல்லை! மனப் போராட்டம்தான்!
=====================================================
சந்திரனின் ஆதிபத்யங்கள்

சொந்த வீடு: கடகம் (1)
நட்பு வீடுகள்: சிம்மம், கன்னி, மிதுனம்.(3)
சமவீடுகள்: துலாம், தனுசு, மகரம், கும்பம், மீனம், மேஷம் (6)
உச்சவீடு: ரிஷபம் (1)
நீசவீடு: விருச்சிகம் (1)
பகைவீடு: எதுவுமில்லை! (அப்பாடா பிழைத்தோம்)

அதில் ஒரு உண்மையிருக்கிறது. சந்திரன் மனகாரகன். அவனுக்குப் பகை
உணர்வு இருந்தால், அவன் எப்படி மனகாரகனாக இருக்க முடியும்?
ஆகவே அவனிடமும் பகை இல்லை. அவன் சென்று அமரும் இடங்களிலும்
அவனுக்குப் பகை இல்லை. அவன்தான் அனுசரித்துப் போகிறான்.
அனுசரித்துப் போனால் பகை ஏது?

சொந்த வீட்டில் ஆட்சி பலத்துடன் இருக்கும் சந்திரனுக்கு 100% வலிமை
இருக்கும்.

சந்திரனுடன் குரு சேர்ந்திருந்தால் குருச்சந்திர யோகம்
சந்திரனுடன் செவ்வாய் சேர்ந்திருந்தால் சசிமங்கள யோகம்
அவற்றிற்கான பலன்களை யோகங்களைப் பற்றிய பாடம் நடத்தும்போது
அலசுவோம்

சம வீட்டில் இருக்கும் சந்திரனுக்கு 75% பலன் உண்டு! (என்ன
இருந்தாலும் சொந்த வீடு போல ஆகுமா?)

நட்பு வீட்டில் இருக்கும் சந்திரனுக்கு 90% பலன் உண்டு.

சந்திரனுக்குப் பகை வீடுகளே கிடையாது.

நீசமடைந்த சந்திரனுக்கு பலன் எதுவும் இல்லை

உச்சமடைந்த சந்திரனுக்கு இரண்டு மடங்கு (200%) பலன் உண்டு!

சந்திரன் மாத்ரு காரகன் எனப்படுவான். தாய்க்கு அதிபதி.
வியாதிகளில் - சித்த சுவாதீனம் அல்லது ஷயரோகம் ஏற்பட்டால்
அதற்குக் ஜாதகத்தில் உள்ள நலிவடைந்த சந்திரனே காரணமாவான்.

இந்த அளவுகளையெல்லாம் நான் எலக்ட்ரானிக் ஸ்கேல் வைத்து எடை
போட்டுச் சொல்லவில்லை; அனுபவத்தில் சொல்கிறேன். மனதில் கொள்க!
======================================================
நவரத்தினங்களில் சந்திரனுக்கு உரியது முத்து.
தானியங்களில் சந்திரனுக்கு உரியது அரிசி (நெல்)
எண் கணிதத்தில் சந்திரனுக்கு உரியது எண் 2 ஆகும்!
சந்திரனுக்கான உலோகம் வெள்ளி (Silver)ஆகும்!
அதிதேவதை: பார்வதி (பராசக்தி)
-----------------------------------------------------------------------------------------------------
Moon is the presiding deity of the element water,
and rules over the tides of the sea.
The sphere of the Moon is the reservoir of rainwater
and thus Moon is the ruler of plants and the
vegetable kingdom.

Moon represents the mother or female principle,
the energy that creates and preserves.

Moon rules peace of mind, comfort, general well-being,
and also the fortune of a person.

Some will be tender-hearted, wise, and learned.
--------------------------------------------------------------------------------------
Water Content of the Human Body:
The average person is about 70% water by weight!

சந்திரன் நீருக்கு அதிபதி. மழை, ஆறு, கடல், அனைக்கட்டுகள்
போன்ற அனைத்து நீர் நிலைகளுக்கும் அவன்தான் அதிபதி.

பெளர்ணமி தினத்தன்று சந்திரனிலிருந்து வரும் ரேகைகளின்
(Magnetic rays from the moon) அழுத்தம் அதிகமாக இருப்பதால்தான்
கடலில் கொந்தளிப்பு அதிகமாக இருக்கும்
ஆறுகளில் நீரோட்டம் அதிகமாக இருக்கும்.

மனநோயாளிகள் அன்று உத்வேகமாக இருப்பார்கள். சாதாரண
மனிதர்கள் அதை உணர்வதில்லை.

பெளர்ணமி நாளான்று மனிதனுக்கு ரத்த ஓட்டம் அதிகமாக
இருக்கும். அதனால் அன்று அறுவை சிகிச்சைகளைத் தவிருங்கள் என்று
மருத்துவர் ஒருவரே சொல்லியிருந்தார். அதன் விவரத்தை முன் பதிவு
ஒன்றில் குறிப்பிட்டிருந்தேன்.

The Moon gives illumination, sense of purpose, intuitive nature,
sensuality, taste, youth, love of poetry, fine arts and music,
love of jewelry, attractive appearance, wealth and good fortune.
It makes us moody, emotional, and sensitive.

வளர்பிறைச் சந்திரனின் காலத்தில் பிறந்தவர்களுக்குச் சந்திரன்
நன்மையளிக்கும் கிரகம். தேய்பிறைச் சந்திரனின் காலத்தில்
பிறந்தவர்களுக்கு சந்திரனால் பெரிய அளவு நன்மைகள்
கிடைக்காது. இது பொது விதி

அதென்ன வளர்பிறைச் சந்திரன்? தேய்பிறைச் சந்திரன்?

ஜாதகத்தில் சூரியன் இருக்கும் இடத்தில் இருந்து 180 பாகைக்குள்
இருக்கும் சந்திரன் வளர்பிறைச் சந்திரன். அந்த தூரத்தைக் கடந்து
181 பாகை முதல் 360 பாகைவரை உள்ள இடத்தில் இருக்கும்
சந்திரன் தேய்பிறைச் சந்திரன்

அதாவது அமாவாசைத் திதியில் இருந்து பெளர்ணமி திதி வரை
உள்ள 15 தினங்கள் வளரும் நாட்கள். பெளர்ணமி முதல்
அமாவாசை வரை உள்ள பதினைந்து தினங்கள் தேயும் (பிறை)
நாட்கள்.

ஒருவரின் ஜாதகத்தில் சந்திரன் சரியான இடத்தில் இல்லாவிட்டாலும்
அல்லது தீய சேர்க்கை அல்லது பார்வைகளால் கெட்டிருந்தாலும்,

அந்த ஜாதகனுக்கு வெற்றிகள் அரிதாகிவிடும். வசதியான வாழ்க்கை

கிடைக்காமல் போய்விடும். சிலர் சிறு வயதிலேயே வறுமைக்கு

ஆளாகி நொடித்துப் போவிடுவார்கள்

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

சந்திரன் அமர்ந்திருக்கும் ராசிகளை வைத்துப் பலன்கள்:

1.
மேஷத்தில் சந்திரன் இருந்தால்:
இந்த இடம் செவ்வாயின் ஆட்சிக்கு உட்பட்ட இடம். இந்த இடத்தில்
சந்திரன் அமைந்த ஜாதகன் செயல் வீரனாக இருப்பான். எடுத்த காரியத்தை
முடிக்காமல் விட மாட்டான். உடல், மனம் இரண்டிலும் பலம் பொருந்திய
வனாக இருப்பான். உணர்ச்சி வயப்பட்டவனாக இருப்பான். எளிதில்
தூண்டுதலுக்கு இறையாகிவிடுபவனாக இருப்பான். (Easily ignited;
flammable.). சிறந்த கருத்துக்களை அள்ளிக் கொடுப்பவனாக இருப்பான்.
----------------------------------------------------------------------------------------------------
2.
ரிஷபத்தில் சந்திரன் இருந்தால்:
இந்த இடம் சுக்கிரனின் ஆட்சிக்கு உட்பட்ட இடம். ஒரு ஜாதகத்தில்
சந்திரன் அமர்வதற்கு உகந்த இடம் இதுதான். This is the most favoured
position in the chart for the moon). எல்லா உணர்வுகளையும் கொண்டவனாக
ஜாதகன் இருப்பான். அதை அவ்வப்போது வெளிப்படுத்தும் திறமையும்
ஜாதகனிடம் இருக்கும். ரசனை உணர்வு மிக்கவனாக ஜாதகன் இருப்பான்.
அழகு, இயற்கை, கலைகள் என்று எல்லாவற்றையும் ரசித்துப் போற்றுபவனாக
இருப்பான். பிடிப்பான கொள்கை, கண்ணோட்டம் உடையவனாக ஜாதகன்
இருப்பான். நினைத்தை சாதிக்கும் ஆற்றல் உடையவனாகவும் இருப்பான்.

சில சமயங்களில் இந்த அதீதப் பிடிப்பினால் கோபமான சூழ்நிலைக்குத்
தள்ளப்படும் ஆளாகவும் இருப்பான்.
-----------------------------------------------------------------------------------------------------
3.
மிதுனத்தில் சந்திரன் இருந்தால்:
இந்த இடம் புதனின் ஆட்சிக்கு உட்பட்ட இடம். புத்திசாலிகளுக்கு உரிய
இடம். அதிக ஆர்வமும், அனைத்தையும் நேசிக்கும் தன்மை உடையவனாக
ஜாதகன் இருப்பான். பெண்ணிலிருந்து பேனா வரை ஒன்றைக்கூட விடாமல்
ரசிப்பான். எதையும் கற்றுக் கொள்ளக்கூடியவன். சிறந்த சிந்தனையாளன்.
எதையும் சிறப்பாகச் சொல்லும் திறமையாளன். ஒரே நேரத்தில் பல வேலை
களை வெற்றிகரமாகச் செய்து முடிக்கக்கூடியவன்.

வாழ்க்கையில் எல்லாவற்றையும் விதம் விதமாகத் தேடுபவன்.
தேடும்
வெரைட்டி கிடைக்காதபோது சோர்ந்து விடுபவன்
========================================================
4.
கடகத்தில் சந்திரன் இருந்தால்:
இந்த இடம் சந்திரனின் ஆட்சிக்கு உட்பட்ட இடம். அதாவது சந்திரனின்
சொந்த வீடு. இந்த இடத்தில் இருக்கும் சந்திரன் ஜாதகனுக்கு, நல்ல,
வலுவான, சக்தியுள்ள மனதைக் கொடுக்கும். A moon sitting in its own
sign is good and strong and shows a powerful mind.

சிலர் உணர்ச்சிவசப் படுபவர்களாக இருப்பார்கள். தங்கள் உணர்ச்சிகளை
வெளிப்படுத்தி ரஃப் & ட்ஃப்பாக நடந்து கொள்ளவும் செய்வார்கள்.சிலர்
மற்றவர்கள் மேல் அக்கறை கொண்டு அவர்களைப் போற்றி வளர்ப்பதில்
மிகுந்த மகிழ்ச்சி கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

பொதுவாக இந்த அமைப்புள்ள ஜாதகன் வாழ்க்கை ஓட்டத்தில் பல ஏற்றத்
தாழ்வுகளைச் சந்திக்க நேரிடும்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
5.
சிம்மராசியில் சந்திரன் இருந்தால்:

இது சூரியனின் வீடு. இங்கே சந்திரன் இருந்தால், இயற்கையாகவே
தலைமை ஏற்கும் உணர்வு மேலோங்கி இருக்கும்.ஜாதகனுக்குத்
தன்னுடைய குறிக்கோள்களை அடையக்கூடிய புத்தியும், மன
உறுதியும் இருக்கும். தனித்தன்மையோடு தன் முடிவுகளை எடுக்கக்
கூடியவன். மற்றவர்களுடைய யோசனைகளும் கருத்துக்களும்
அவனிடம் எடுபடாது. எளிதில் உணர்ச்சி வசப்படுபவனாக
இருப்பான். சட்டென்று யாராவது கோபத்தைத் தூண்டும்படி நடந்தால்
கோபத்துக்கு ஆளாகி விடுவான். சீக்கிரமே சமாதானமாகியும்
விடுவான். மனதில் எதையும் வஞ்சகமாக வைத்துக் கொள்ள மாட்டான்.
========================================================
6.
கன்னிராசியில் சந்திரன் இருந்தால்:

இது புதனின் வீடு. இங்கே சந்திரன் இருந்தால், ஜாதகன் தகவல் தொழில்
நுட்பம், தொலைபேசி, மற்றும் பத்திரிக்கைத் துறைகளோடு சம்பந்தப் பட்டால்
சிறப்பாகப் பணியாற்றுவான். மற்றவர்கள் வசதியாக வாழ ஜாதகன் உதவும்
மனப்பான்மை கொண்டவனாக இருப்பான். பல வழிகளில் பலருக்கும்
உதவியாக இருப்பான். அதீத பாசமும், நேசமும் கொண்டவனாக இருப்பான்.
புத்திசாலியாக இருப்பான். துறு துறுவென்ற மனதைக் கொண்டவனாக இருப்பான்
வியாபாரத்தில் ஈடுபட்டால், அதில் கெட்டிக்காரத்தனமாகச் செயல் படுவான்.
அழகையும், கலைகளையும் நேசிப்பவனாக, அவற்றில் ஈடுபாடு கொண்டவனாக
ஜாதகன் இருப்பான்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
7.
துலா ராசியில் சந்திரன் இருந்தால்:

இது சுக்கிரனின் வீடு. இங்கே சந்திரன் இருந்தால், சக்திவாய்ந்த சுக்கிரன்
அழகையும், அழகு சார்ந்த கலைகளையும் ஜாதகனை ஆராதிக்க வைத்து
விடும்.
பெண்ணையும், பெண்மையையும் மிகவும் ரசிப்பவனாக இருப்பான். அதன்
காரணமாக சிலர் உடல் உபாதைகளுக்கும் ஆளாகக் கூடும். வாழ்க்கையில்
பல வெற்றிகளைக் காண்பான். தொழிலில் நேர்மையானவனாக இருப்பான்.
வாழ்க்கையை முழுமையாக அனுபவிப்பான். விவேகம் உடையவனாக
இருப்பான். எந்த நேரத்தில் எதைச் செய்ய வேண்டும், அல்லது எதைப்பேச
வேண்டும் என்கின்ற ஞானம் உடையவனாக இருப்பான்.


சிலர் உலகியல் வாழ்க்கை, ஆன்மிக வாழ்க்கை ஆகிய இரண்டிலும் சம
அளவில் ஈடுபாடு உடையவர்களாக விளங்குவார்கள்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
8. **************விருச்சிக ராசியில் சந்திரன் இருந்தால்: இது செவ்வாயின் வீடு.
இங்கே சந்திரன் இருப்பது நல்லதல்ல! இருப்பதிலேயே
இந்த இடம்தான்
சந்திரனுக்கு சற்றும் பொருத்தமில்லாத இடம். வலிமை எதுவும்
இல்லாத இடம்.
இது சந்திரனின் நீச வீடு. அதை மனதில் கொள்க!
ஜாதகனுக்கு எப்போதும்
அமைதியற்ற மனநிலை இருக்கும். மன வருத்தத்துடன்
இருப்பான். ஒன்று
போனால் அடுத்த மன வருத்தம் தந்தி அடித்து வரச் சொன்னது
போல உடனே
வந்து நிற்கும். சிலர் காயப்பட்ட உணர்வுகளால் அல்லாடு
வார்கள்.
காயப்பட்ட உணர்வுகள் விட்டுப் போகவும் போகாது. அதுதான் இந்த
அமைப்பின்
துயரம். மற்றவர்கள் உங்கள் உனர்வுகளைப் புரிந்து கொள்ள
மாட்டார்கள்.
இறை வழிபாடு ஒன்றுதான் இந்த அமைப்புள்ளவர்களுக்குத் துணை!

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
9
தனுசு ராசியில் சந்திரன் இருந்தால்:
இது குரு பகவானின் வீடு. இங்கே சந்திரன் இருந்தால், ஜாதகன் அனேக நல்ல
குணங்களையும், செயல்பாடுகளையும் உள்ளவனாக இருப்பான். அனைவருடனும்
ஒத்துப் போகக்கூடியவனாக இருப்பான், நேர்மையானவனாக இருப்பான். நல்
ஒழுக்கமும், நடத்தையும் உடையவனாக இருப்பான். நேர்வழியில் மட்டுமே
அடுத்தவர்களுடன் பணம் முதலாக எல்லாப் பங்கீடுகளும் இருக்கும். ஜாதகனுடைய
லட்சியங்கள் நிறைவேறும்.புத்திசாலித்தனம் எல்லாவிதத்திலும் மேலோங்கி இருக்கும்.
குடும்பத்தில் அனைவருடனும் ஈடுபாடு உடையவனாக இருப்பான்.

தத்துவங்களிலும், ஆன்மிகத்திலும் ஆர்வமும் தேர்ச்சியும் உடையவனாக இருப்பான்
---------------------------------------------------------------------------------------------------------------------
10
மகரத்தில் சந்திரன் இருந்தால்:

இது சனியினுடைய வீடு. இங்கே சந்திரன் அமர்ந்திருந்தால், செய்யும் தொழிலை
அல்லது வேலையை ஆர்வமுடன் செய்வான். அதுவே அவனை வெற்றியின் பக்கம்
இழுத்துச் செல்லும். நல்ல குணவான். அதே நேரத்தில் சில விஷயங்களில் அடிக்கடி
மனமாற்றம் உடையவனாக இருப்பான். நம்பிக்கைக்கு உரியவனாக இருப்பான்.
இந்த அமைப்புள்ளவர்கள் அன்பிற்கு இலக்கணமாக இருப்பார்கள். பிரச்சினைகளை
பொறுமையுடன் எதிகொள்பவனாக இருப்பான். நகைச்சுவை உணர்வு மேலோங்கியவனாக
இருப்பான். நுண்கலைத் திறமைகள் கொண்டவனாக இருப்பான். பலராலும் பாராட்டப்
படுபவனாக இருப்பான்
----------------------------------------------------------------------------------------------------------------------
11
கும்பத்தில் சந்திரன் இருந்தால்:

இது சனியினுடைய வீடு. இங்கே சந்திரன் அமர்ந்திருந்தால், ஜாதகன் அதி புத்தி
சாலியாக இருப்பான். வாழ்க்கைத்ததுவம், இறைவழிபாடு ஆகியவற்றில் நாட்டம்
உடையவனாக இருப்பான். தியானம், மற்றும் யோகா போன்ற கலைகளில் நாட்டம்
இருக்கும். எதையும் சீர் தூக்கிப் பார்க்கும் தன்மை இருக்கும். சிலர் கலைஞர்களாக
பரிணமளிப்பார்கள். நன்றாக வேலைகளைச் செய்யக்கூடியவனாக இருப்பான்.
சிலரை வாழ்க்கையிம் ஏற்ற, இறக்கங்கள் அவ்வப்போது புரட்டிப் போடும். அதைத்
தாங்கி மீண்டும் மேலுக்கு வரும் மனநிலை கொண்டவனாக ஜாதகன் இருப்பான்.
===============================================================
12.
மீனத்தில் சந்திரன் இருந்தால்:

இது குரு பகவானுடைய வீடு. இங்கே சந்திரன் அமர்ந்திருந்தால், ஜாதகன்
பல லட்சியங்களையும், கொள்கைகளையும் உடையவனாக இருப்பான். நடத்தை
தவறாதவனாக இருப்பான். உணர்ச்சிவயப்படுபவனாக இருப்பான். அல்லது
உணர்ச்சி வசப்படுவர்களிக் கண்டு பாதிப்பிற்கு உள்ளாகிறவனாக இருப்பான்.
பெருந்தன்மையானவன். ஜெண்டில்மேன் என்று மற்றவர்களால் மதிக்கப்படுபவானாக
இருப்பான். புத்திசாலியாக இருப்பான். ஆன்மீகத்தில் நாட்டம் இருக்கும். உலக
வாழ்க்கையை நன்றாக அனுபவிக்கும் பாக்கியசாலியாக இருப்பான். நம்பிக்கைக்கு
உரிய நட்புக்கள் அவனைத் தேடிவந்து சேரும்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Mathematics gave birth to the Law of Probability.
When this Law based on astronomical facts & figures is applied,
it becomes the Wisdom of the Heavens, Astrology.
Rightly it has been defined as a Lamp in darkness.
Despite the allegations leveled against it, Astrology continues
its role as one of the noblest professions & one of the greatest
sciences which human intellect has built up.

The role of Moon in Horoscope
As the Queen of the Solar Logos, Moon is an important luminary
capable of conferring great mental power. The position of Moon
is very important from the perspective of prosperity. A strong Moon,
powerful in digit strength,can give immense courage to the native
and courage is essential for prosperity. Prosperity depends on the
position of Moon & Jupiter, the indicator of wealth.
The Moon is considered as a natural benefic in Vedic Astrology.
=======================================================
Effects of Moon in the 12 Houses
1
Moon in the Ascendant
If weak Moon ( weak in digit strength ) tenants the First House,
the native will be devoid of mental strength and longevity.
If Full Moon is posited in the Ascendant, the native will have
good longevity and will be a scholar.

If the Ascendant is Taurus or Cancer,the native will be wealthy & famous.
..........................................................................................................
2
Moon in the Second House
Will have wealth & all sorts of enjoyments.Will have the gift of the
gab or the divine gift of articulate speech. Will be handsome and
will have the ability to understand other's perspectives.
Will be educated with scientfic knowledge.
..........................................................................................................
3
Moon in the Third House
Will have wealth, education, virility & pride. Will have good strength.
Will have gains via brothers. Will be miserly.
.........................................................................................................
4
Moon in the Fourth House
Will have wealth and conveyances. Will be liberal and altruistic.
Will be fond of the other sex. Will not be too attached to anything.
Will be a donator.
.........................................................................................................
5
Moon in the Fifth House
Will be highly intelligent and kind. Will be interested in politics.
Will be affable and diplomatic.
..........................................................................................................
6
Moon in the Sixth House
Will be cruel and intelligent. Will have disorders of the digestive tract.
Will face many a defeat. Will be intelligent and clever.
Will be slightly lazy. This position is slightly detrimental to prosperity.
...........................................................................................................
7
Moon in the Seventh House
Will posses wealth & fortune. Will have a high standard of comeliness.
Will have accumulated property. Will be kind.
Will enjoy the pleasures of the mundane.
.............................................................................................................
8
Moon in the Eighth House
Will be quarrelsome and devoid of benevolent attitude. Will be afflicted
by many a disease. Will be handsome. Will have less longevity.
Will have marks caused by wounds on his/ her body.
..............................................................................................................
9
Moon in the Ninth House
Will be highly religious,liberal & will have devotion to elders and
preceptors. Will possess devotion of a high order.
.................................................................................................................
10
Moon in the Tenth House
Will be well off. Will have gains from education.Will be liberal and
altruistic. Will be famous and will get fame from many altruistic
deeds.
................................................................................................................
11
Moon in the Eleventh House
Will have wealth and a lot of subordinates. Will have education of a
high order. Will be versatile. Intelligence of a high degree will grace
the native. Will be altruistic and liberal.
....................................................................................................................
12
Moon in the Twelfth House
Will be lazy and devoid of wealth. Will be an outcast. Will have
to face a lot of defeats. Will live in foreign lands. Mother's health may
be affected.

=========================================================
சந்திரனின் சுய அஷ்டகவர்க்கப் பலன்கள்!

சுயவர்க்கத்தில் சந்திரன் கொண்டிருக்கும் பரல்களை வைத்துப் பலன்கள்:
எல்லாம் பொதுப்பலன்கள். உங்களுடைய ஜாதகத்தின் மற்ற அம்சங்களை
வைத்து இவைகள் மாறுபடலாம், அல்லது வேறுபடலாம். அதையும் மனதில்
கொள்க!

1.பரல்: விஷ ஜந்துக்களிடமிருந்தும், ஆயுதங்களில் இருந்தும் பாதகங்கள்
ஏற்படலாம். எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

2.பரல்கள்: ஜாதகனின் தாய்க்குப் பாதகங்கள் ஏற்படும்! ஜாதகனுக்கு
நோய்களால் அவதிப்படுவான்

3.பரல்கள்: மேற்கூறிய பலன்கள் குறைந்த அளவில் இந்த அமைப்பிற்கு
இருக்கும்
.
4.பரல்கள்: ஜாதகனின் குடும்பம் மேன்மையுறும்.

5.பரல்கள்: மன அமைதியும், நல்ல நடத்தையும் ஜாதகனிடம் குடி கொள்ளும்.

6.பரல்கள்: நல்ல மன திடமும், உயர்ந்தகோட்பாடுகளும் உடையவனாக
ஜாதகன் இருப்பான்.

7.பரல்கள்: ஜாதகன் எல்லாக் கலைகளிலும் ஆர்வமுடையவனாகவும்,
விற்பன்னனாகவும் இருப்பான்

8.பரல்கள்: மகிழ்ச்சியான அதிர்ஷ்டகரமான வாழ்க்கை ஜாதகனுக்கு அமையும்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சந்திரனின் கோச்சாரப் பலன்கள்:

குறிப்பிட்டுள்ளவைகள் எல்லாம் சந்திரன், ஜாதகனின், ராசியில் தான்
இருக்கும் ராசியை வைத்து கோச்சாரத்தில் இருக்கும் இடங்களுக்கான
பலன்கள்:

சந்திரன் ஒரு ரவுண்டு அடிப்பதற்கு எடுத்துக் கொள்ளும் நாட்கள் 27

(இது இளைஞர்கள் அடிக்கும் ரவுண்டு அல்ல!)

அதனால் ஒரு ராசியில் இருப்பது 2.25 நாட்கள் மட்டுமே

1ல், 3ல், 6ல், 7ல், 10ல், 11ல் இருக்கும்போது மட்டுமே நன்மை
அதாவது 27 நாட்களில் பாதி நாட்கள் மட்டுமே நன்மை.

2ல், 4ல் 5ல், 8ல், 9ல், 12ல் இருக்கும்போது நன்மைகள் இருக்காது.

சந்திரனின் கோச்சாரப் பலன்களைப் பெரிதாக எடுத்துக் கொள்ள
வேண்டாம். குரு அல்லது சனியைப் போல் அல்லாமல் அவர் ஒரு
ராசியில் தங்கிச் செல்லும் காலம் மிக, மிகக் குறைவானது!

அவர் ராசிக்கு எட்டாம் இடத்திலும், 12ஆம் இடத்திலும்
சஞ்சாரம் செய்யும் நாட்களில் காரிய சித்தி இருக்காது. எடுத்த
காரியங்கள் முடியாது. ஆகவே அன்றைய தினங்களில் Routine
work களை செய்தால் போதும்

சந்திரனின் கோச்சாரத்தை வைத்துத்தான், நாளிதழ்களில் தினப்பலன்
களை எழுதுவார்கள்.
=========================================================
சந்திரதசை மொத்தம் 10 ஆண்டுகள் காலம் நடைபெறும்.
அந்த காலகட்டத்தில் சந்திரனின் சுய புத்திக் காலமும், குரு புத்திக்
காலமும் மட்டுமே நல்ல பலன்களைத் தரும். மற்ற புத்திகளின்
காலத்தில் நன்மைகள் இருக்காது.

In short, Moon is significator of Mind
-----------------------------------------------------------------------------
பாடத்தின் நீளம், மற்றும் உங்கள் பொறுமை கருதி இன்று இத்துடன்
நிறைவு செய்கிறேன்.

பாடத்தில் உங்களுக்காக உள்ள செய்திகளை மட்டும் படித்து விட்டுப்
பையை தூக்கிக் கொண்டு நடையைக் கட்டி விடாதீர்கள். எல்லாவற்றையும்
படியுங்கள். அதோடு உங்கள் கருத்துக்களையும் சொல்லுங்கள்

நன்றி, வணக்கத்துடன்
அன்புள்ள
வகுப்பறை வாத்தியார்!
வாழ்க வளமுடன்!

15.12.08

சமீரா ரெட்டியும், அனுஷ்கா சர்மாவும்!

அன்பும், அன்பின்மையும் (unkindness) கலந்தது மனித வாழ்வு.
அன்பும், வெறுப்பும் கலந்தது மனித வாழ்வு!
(Life mixed with Love and cruelty)

அல்லது இப்படி வைத்துக் கொள்ளலாம்.

நேசமும் விரோதமும் கலந்த வாழ்வு.
இன்பமும், துன்பமும் கலந்த வாழ்வு.
நேசமும் துரோகமும் கலந்த வாழ்வு.
பாசமும், விரோதமும் கலந்த வாழ்வு.
உறவும், பிரிவும் கலந்த வாழ்வு.
வறுமையும், செழுமையும் கலந்த வாழ்வு.
பெருமையும், சிறுமையும் கலந்த வாழ்வு

எப்படி வேண்டுமென்றாலும் வைத்துக்கொள்ளுங்கள்.

ஆனால் அன்புதான் எல்லாவற்றையும் விட உயர்வானது.

உன்னிடம் அன்பிருக்கிறதா? அது இருந்தால் போதும். உன்னிடம்
எல்லாம் இருக்கிறது. உன்னிடம் அன்பு இல்லையா? உன்னிடம்
எதுவும் இல்லை! அல்லது வேறு எதுவும் இருந்து பயனில்லை.
அன்பு இருந்தால் மட்டுமே உன் வாழ்க்கை சிறக்கும்.
நீ எல்லோராலும் விரும்பப் படுவாய்.

யார் இதைச் சொன்னது?

யார் சொன்னால் மறுப்பின்றிக் கேட்போமே, அவர் சொன்னது!

ஆமாம் வள்ளுவப் பெருந்தகைதான் சொல்லியிருக்கிறார்

குறளைப் பாருங்கள்:

"அன்பிலார் எல்லாம் தமக்குஉரியர்
அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு"

தனிமரம் தோப்பாகாது. நமது வாழ்க்கை கூட்டு வாழ்க்கை. மனதில்
அன்பு இருந்தால் மட்டுமே நீங்கள் அடுததவருடன் இயைந்து
வாழமுடியும்.

நான் பதிவில் மாய்ந்து மாய்ந்து எழுதுவதும் வாசகர்களாகிய
உங்கள் மேற்கொண்டுள்ள அன்பினால்தான். இல்லையென்றால்
அரிய நேரத்தைச் செலவழித்து எப்படி என்னால் எழுத முடியும்?

என் எழுத்திற்கு ஆதாரம் அன்பு! நான் அறிந்தவற்றை அடுத்த
தலைமுறையினர் அறிய வேண்டும் என்கின்ற அன்பு!

உங்களுடைய அன்புதான் எனக்குக் கிரீடம் அல்லது மகுடம்

அன்புதான் நமது வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தைக் கொடுக்கிறது.
Love gives meaning to our lives

Love gives meaning to our lives as do friendship or faith in God.
These are factors of true happiness, of inner peace, of feelings

of harmony, allowing meaning to our existence.
------------------------------------------------------------------------------------------------
வாழ்க்கையின் மறுபக்கம் ஒன்று இருக்கிறது. அது நம்மைக்கேட்டு
ஏற்படாது. அல்லது நம் விருப்பத்திற்கு நடைபெறாது. அதைத்
தவிர்க்கவும் முடியாது அல்லது விரட்டியடிக்கவும் முடியாது.

வாழ்க்கையின் அவலங்கள். வலிகள். வேதனைகள். துயரங்கள்
துன்பங்கள். என்று நம்மைச் சுற்றிப் பல விலங்குகள் உள்ளன.
அந்த விலங்குகளினால் நாம் எப்போது வேண்டுமென்றாலும் தாக்கப்
படலாம்.
------------------------------------------------------------------------------------------------
இந்த இரண்டு நிலைப்பாடுகளுக்குள் தடுமாறும் அல்லது அடிவாங்கும்
மனிதன் வாழ்க்கையைப் பற்றி இருவிதமான சிந்தனைகளைக்
கொள்கிறான்.

ஒருவன் வாழ்க்கையை இனிமை என்கிறான்.
இன்னொருவன் வாழ்க்கையைக் கொடுமை என்கிறான்.

பாடலைப் பாருங்கள்:

"கடவுள் ஒரு நாள் உலகைக் காண தனியே வந்தானாம்
கண்ணில் கண்ட மனிதரை எல்லாம் நலமா என்றானாம்"


மனிதன் என்ன பதில் சொன்னான்?

"ஒரு மனிதன் வாழ்வை இனிமை என்றான்
ஒரு மனிதன் அதுவே கொடுமை என்றான்

படைத்தவனோ உடனே சிரித்து விட்டான்"


விட்டாரா கடவுள்? இல்லை தொடர்ந்து கேட்டார்:

"கள்ளம் இல்லா பிள்ளை உள்ளம் நான் தந்தது
காசும் பணமும் ஆசையும் இங்கே யார் தந்த்து
எல்லையில்லா நீரும் நிலமும் நான் தந்தது

எந்தன் சொந்தம் என்னும் எண்ணம் ஏன் வந்தது

இறைவனுக்கே இது புரியவில்லை
மனிதனின் கொள்கை தெரியவில்லை


ஒரு மனிதன் வாழ்வை இனிமை என்றான்

ஒரு மனிதன் அதுவே கொடுமை என்றான்

படைத்தவனோ உடனே சிரித்து விட்டான்"


சரி முடிவு என்ன ஆயிற்று?

"பள்ளிக் கூடம் செல்லும் வழியில் கடவுள் நின்றானாம்
பச்சை பிள்ளை மழலை மொழியில் கவிதை கண்டானாம்

உள்ளம் எங்கும் வெள்ளம் பொங்கும் அன்பைக் கண்டானாம்

உன்னைக் கண்டேன் போதும் என்றே வானம் சென்றானாம்"


****************************************************************
உள்ளம் எங்கும் வெள்ளம் பொங்கும் அன்பு" என்றார்
பாருங்கள், அங்கே கவியரசர் கண்ணதாசன் அவர்கள் அந்தப்
பாடல் வரிகளோடு நம் மனதிற்குள் வந்து தங்கி விடுவார்.

ஆகவே கடவுள் நமக்கு அள்ளிக் கொடுத்தது இந்த அன்பு
உணர்வு!

கடவுள் மனிதனுக்குக் கொடுக்காதது ஒன்று உள்ளது.

அது என்ன?

ஒரு கதை மூலம் அதைச் சொல்கிறேன்
================================================
கடவுள் ஒரு நாள் பூமிக்கு வந்தார். அவர் வந்து இறங்கிய இடம்
ஒரு வனாந்திரக் காடு.

அங்கே ஒருவன் விறகிற்காகச் சின்னச் சின்ன மரங்களையும்,
மரக் கிளைகளையும் வெட்டிக் கொண்டிருந்தான். அவனுக்கு
நாற்பது வயதிருக்கும்.

நெடு நேரமாக வெட்டிக்கொண்டிருந்தான் போலும். அவன்
உடம்பு தொப்பலாக வியர்வையால் நனைந்திருந்தது.

அவன் அருகில் சென்ற கடவுள், கணீரென்ற குரலில் சொன்னார்

"வெட்டியது போதும்! போ!"

திடுக்கிட்டுத் திரும்பிய அவன், கடவுளைப் பார்த்தான்.அந்தக்
கம்பீரமான தோற்றமும், கணீர்க் குரலும் அவனுள் ஒரு பயத்தைத்
தோற்றுவித்தது.

வந்திருப்பது இறை என்பதை அவன் அறியவில்லை. இந்தக்
காட்டின் சொந்தக்காரர் போலும் என்று நினைத்தான்.

"அய்யா, என்னை நம்பி பத்து ஜீவன்கள் வீட்டில் இருக்கின்றன.
இந்த விறகுகளைக் கொண்டுபோய் சந்தையில் விற்றால்தான்
நான்கு நாட்களுக்காவது அந்த ஜீவன்களின் வயிற்றுப் பசியைப்
போக்க முடியும்" என்று பணிவுடன் அவன் சொன்னான்.

அவன் சொல்வதில் உண்மை இருப்பதை உணர்ந்த கடவுள்,
அவனுடைய தலைவிதியை மாற்றுவோம் என்று எண்ணினார்..

"உன்னுடைய வறுமையைப் போக்குகிறேன். அந்தக் கல்லை எடுத்துக்
கொண்டு வா" என்றூ சொல்லி அருகில் கிடந்த செங்கல் ஒன்றைக்
காட்டினார்.

அவன் சட்டென்று அதை எடுத்துக் கொண்டு வந்து அவர் முன்பு
நீட்டினான்.

கடவுள் தன் விரலால் அதைத் தொட, உடனே அது தங்கமாக
மாறியது.

என்ன ஆச்சரியம்? செங்கல் சொக்கத்தங்கமாக மாறியவுடன்
அவனுக்கு மிக்க மகிழ்ச்சி.

ஆனாலும் அப்போதும் அவன் அவரைக் கடவுள் என்று உணர்ந்தான்
இல்லை. அவன் அறிவு அவ்வளவுதான். அவன் அவரை ஏதோ
சித்து வேலை செய்யும் சாமியார் என்று நினைத்து விட்டான்.

'இந்தத் தங்கம் உன்னுடைய வறுமையைப் போக்கும் போ, போய்
சந்தோஷமா இரு!" என்றார் கடவுள்.

அவன் மனம் சிந்தனையில் ஆழ்ந்தது. அதைக் கண்ட கடவுள்,
தொடர்ந்து கேட்டார், "என்ன யோசிக்கிறாய்?"

புன்னகைத்த அவன் சொன்னான்,"அய்யா, இதைக் கொண்டு போவதால்
என் முழுப்பிரச்சினையும் தீராது. ஒரளவிற்குத்தான் தீரும்"

உடனே கடவுள் சொன்னார்."அதை கீழே வை. அதோ அந்தக்கல்லை
எடுத்துவா!" என்று அம்மிக்கல் அளவில் இருந்த பெரிய கல் ஒன்றைக்
காட்டினார். அது முப்பது அல்லது நாற்பது கிலோ அளவு எடை
கொண்டதாக இருந்தது.

அந்த விறகு வெட்டியும் ஆர்வத்துடன் ஓடிச் சென்று அதைத் சிரமப்பட்டுத்
தூக்கிக் கொண்டு வந்து நீட்டினான்.

கடவுள் தன் விரல்களில் ஒன்றை அதன் மீது வைக்க, உடனே அது
தங்கமாக மாறியது.

அவனுக்கு அளவிட முடியாத ஆச்சரியம். அவனுடைய கண்கள்
மின்னின! உடல் முழுவதும் தீப்பிடித்ததைப் போன்று மகிழ்ச்சி பரவியது.

கடவுள் சொன்னார்,"சரி இதை எடுத்துக்கொண்டு போ! மகிழ்ச்சியாக
வாழ்க்கையை நடத்து!"

அவனுடைய சந்தோஷம் ஒரு நொடி கூட நீடிக்கவில்லை. அவன் முகம்
மீண்டும் வாட்ட முற்றது.

கடவுள் என்ன வென்று வினவ, கையில் இருந்த அத்தனை பெரிய தங்கக்
கல்லைத் தரையில் வைத்துவிட்டு, ஆதங்கத்துடன் அவன் கடவுளிடம்
சொன்னான்.

"ஐயா, எனக்கு ஒன்றே ஒன்றை மட்டும் தாருங்கள். உங்களைப் போலவே
எனக்கும் பத்து விரல்கள் இருக்கின்றன. நான் தொட்டால் தொட்ட
பொருள்
தங்கமாகும் சக்தியை என் விரல்களில் ஒன்றிக்குத் தாருங்கள்.
நான்
வேண்டும்போது, வேண்டிய பொருளைத் தொட்டுத் தங்கமாக்கிக்
கொள்கிறேன்"

----------------------------------------------------------------------------------------------------
அதுதான் மனிதனின் மனம். மனித மனம் எப்போதும் எதிலும் திருப்தி
அடையாது.

நூறு ஏக்கர் நிலம் கிடைத்தால் ஆயிரம் ஏக்கர் விளைநிலத்திற்கு ஆசைப்படும்

அம்மிஞ்சிக்கரையில் வீடு கொடுத்தால், அடையார் பங்களாவிற்கு
ஆசைப்படும்.

மாருதி ஜென் காரைக் கொடுத்தால், பென்ஸ் டீலக்ஸ் காருக்கு
ஆசைப்படும்.

டீம் மேனேஜர் வேலை கொடுத்தால், கம்பெனி சி.யி.ஓ வேலைக்கு
ஆசைப்படும்

மாநிலத்தில் மந்திரியாக்கினால் மத்திய அரசில் மந்திரிப் பதவிக்கு ஆசைப்படும்.

சமீரா ரெட்டியைக் கொடுத்தால் அனுஷ்கா சர்மாவிற்கு ஆசைப்படும்

------------------------------------------------------------------------
இந்த சமீராவும், அனுஷ்காவும் யாரென்று தெரிகிறதா? அவர்கள்
தான் இன்றையத் தேதியில் இந்திய நாட்டின் கனவுக் கன்னிகள்.
அதாவது dream girls. வெள்ளித் திரையில் மின்னும் நட்சத்திரங்கள்
உங்களுக்குப் புரியும் படியாக எழுதவேண்டும் என்பதற்காக
அவர்களை உதாரணப் படுத்தி எழுதியுள்ளேன்.

சினிமாவை வைத்துச் சொன்னால்தான் சில விஷ்யங்கள் நமக்குப்
பிடிபடும்

இதை நான் சொல்லியாக வேண்டும். இல்லை என்றால் பிரம்பு சட்டாம் பிள்ளை உண்மைத் தமிழரின் கைக்குப் போய்விடும் அபாயம் உள்ளது:-))))))

அவருக்கு உதாரணம் சொல்ல கொடுமுடி சுந்தராம்பாளையும்,
பெங்களூர் ரமணி அம்மாள் அவர்களையும் பற்றிச் சொன்னால்
போதும். மனிதர் குளிர்ந்து விடுவார்.

பெண் என்றால் கண்களும், உதடுகளும், குரலும் பேச வேண்டும் என் அப்பா காலத்தில் பசுபலேட்டி கண்ணாம்பா மற்றும் டி.ஆர். ராஜகுமாரி ஆகியோரின் கண்களும், உதடுகளும், குரலும் பேசும். என் காலத்தில் சாவித்திரி மற்றும் சரோஜாதேவி ஆகிய இருவரின் கண்களும், உதடுகளும், குரலும் அசத்தலாக இருந்தது. இப்போது அந்த மாதிரி திலகங்கள் யாரும் இல்லை! அந்த மாதிரித் திலகங்கள் புதிதாகத் தோன்றினால் வரவேற்கும் மன நிலையில் இன்றைய இளைஞர்களும் இல்லை! என்ன கருமமோ, எல்லாம் கவர்ச்சி மயமாகி விட்டது. அதுவும் ஒரு அவலம்தான்.
---------------------------------------------------------------------------

ஆசைக்கு எல்லை இல்லை! அந்த ஆசையில் மனிதன் ஆடட்டும்
என்று காலதேவன் மனிதனை ஆடவிட்டு வேடிக்கை பார்த்துக்
கொண்டிருக்கிறான்.

ஓய்வான் ஒரு நாள் - சாத்துவோம் அப்போது என்று காத்துக்
கொண்டும் இருக்கிறான்.

மனிதன் ஓய்வானா? எப்போது?

நாடி நரம்பெல்லாம் தளர்ந்து ஒரு நாள் கட்டாந்தரையில் படுக்காமலா
போவான்?

அப்போது வருவான். கால தேவன். ஆடிய ஆட்டதிற்கெல்லாம்
அப்போது கிடைக்கும் சாமி பரிசு!:-)))))
--------------------------------------------------------------------------------------------------------
கடவுள் மனிதனுக்குக் கொடுக்காதது திருப்தி (satisfaction)

கொடுத்தது அன்பு.

கொடுக்காதது திருப்தி!
------------------------------------------------------------------------------------------------------
"வாத்தியார் எதற்கு இதெல்லாம்? பாடத்திற்கு சம்பந்தம் உண்டா?

"இல்லாமலா? அடுத்தபாடம் மனகாரகனைப் பற்றியது.
Next lesson is about The Authority of Mind. மனகாரகன் சந்திரனைப்
பற்றியது. அதற்கான முன்னோட்டம்தான் இது!"

"சரி, பாடம் எப்போது?"

"இன்றே கொடுத்தால் "Over dose" ஆகிவிடும். அதனால் பாடம் நாளை
மறுநாள் (17.12.2008) பதிவிடப்படும்"
------------------------------------------------------------------------
"வாத்தியார்...?"

"என்ன ராஜா?

"ஒரு சந்தேகம், கேட்கலாமா?"

"எனக்குக் கோபமே வராது. கேளு ராஜா?"

"இந்த இடுகைக்கும் தலைப்பிற்கும் என்ன சம்பந்தம்?"

"என்ன தலைப்பு வைத்திருக்கலாம்?"

" மனிதனுக்கு இறைவன் எதைக் கொடுக்கவில்லை?"

"அப்படித் தலைப்பு வைத்திருந்தால் யாரு ராஜா உள்ளே வருவார்கள்?
பதிவு உலகில் உலாத்துபவர்களின் சராசரி வயது 32. இறைவன், கடவுள்
என்று தலைப்பு வைத்தால் ஒரு ஆள் கூட உள்ளே எட்டிப் பார்க்காது
பதிவை அனைவரும் படிக்க வேண்டும். அதுதான் எனது நோக்கம்.
அதனால்தான் இந்த மாதிரித் தூண்டில் தலைப்புக்கள்.

தலைப்பை நன்றாகப் போடு; தானே வருவார்கள் என்று பலமுறை
மற்றவர்களுக்கு நான் அறிவுறுத்தியிருக்கிறேன். அதனால் தலைப்பைச்
சொதப்பாமல் அப்படிப் போட்டுள்ளேன். தலைப்பை மறந்து விட்டு
இடுகையை இன்னுமொரு முறை படி ராஜா! இடுகை எப்படி உள்ளது
அதை மட்டும் சொல்லு ராஜா!
-------------------------------------------------------------------------
மீண்டும் சந்திப்போம்
நன்றி, வணக்கத்துடன்,
அன்புடன்
வகுப்பறை வாத்தியார்

====================================================================
வாழ்க வளமுடன்!

10.12.08

SOME AUTHENTICATED VEDIC ASTROLOGERS

SOME AUTHENTICATED VEDIC ASTROLOGERS TO CONSULT

I am reproducing the article written by Mr.Vinodhavel, one of our class students,
for the benefit of one and all who comes to the classroom
=====================================
This post is dedicated to Mr.Vinodhavel!
=====================================
1. Pandit Sanjay Rath
We all know that Dr.B.V.Raman spread the power to the entire world thru his
speeches, predictions, articles and books for about 40 years. Pt. Sanjay rath follows
similar path. He has been revealing the many secrets of Vedic astrology, Nadi
astrology, Prasna, etc to the public. Many details were hidden by earlier selfish
astrologers. Each word he utters has the authenticity of classic books like BPHS,
Saravali, Jataka Paarijatha, etc and most of the time he is able to give us the entire
quotes for the topic in discussion. Like B.V.Raman, he is one of the few astrologers
who daringly advised people that Numerology is a fake- business as it is not at
all based on astronomy unlike astrology. Like B.V.Raman, he is celebrated for
his strong scientific basis of astrology. He has many renowned disciples like
PVR Narasimha Rao, Visti, Goravani and disciples from various parts of
world.

He is associated with more than 10 websites and blogs.
All the SJC websites are very resourceful and most contents are free.
He is the founder Sri Jagannatha Centre, which has branches all over the world.
He is the founder of the leading magazine ‘The Jyotish Digest’.
You can have more information in this URL
You can know his contact details and fee in corresponding website or by E-Mail.
======================================
2. PVR Narasimha Rao
Follower of B.V.Raman & Sanjay Rath.
One of the Jyotish Gurus in SJC (Sri Jagannath Centre).
An IIT (Madras) Student.
A software engineer near Boston.
His unselfishness is very remarkable. He is author of the world famous
freeware software ‘Jagannatha Hora’.
There is no other software that can compete the software Jagannatha
Hora in terms of accuracy of calculations, level of details availability,
ephemeris (has 10,000 years) and flexibility.
Above all, it is completely a Free Software. I searched almost 50 software
programs and found that only Parashara Light software has similar features.
He is also the author of a good book “Vedic Astrology - an integrated approach”.
You can know more about him, contact details and fee in corresponding
website or by E-Mail.
(our teacher Subbiah sir is also using the same software)
=======================================
3. Visti Larsen
Follower of Sanjay Rath.
Admirer of B.V.Raman.
One of the Jyotish Gurus in SJC (Sri Jagannath Centre).
He is a cool and young person by biological age (DOB: 12-Nov-1981)
but his mental age conquers even 70. He has studied many classics and lot
of contemporary books on Vedic and western astrology. His knowledge
is a lot more than that of many very expeienced astrologers all over India.
His unselfishness is also very remarkable. As on Nov’2008, he has
published more than 500 classes as MP3 Audio files in his website.
All for Free Download. You can see his profile, contact details and fee
and all info in his website.
=========================================
4. Other Gurus in / associated with SJC centre:
There are many other eminent Gurus like Sarbanji, Freedom cole,
Goravani, Rafal, Gauranga Das. But, I am not much aware of them.
So, I leave it to seeker’s choice.
=========================================
5. Authenticated Websites List-1:



===================================================
6. K.N.Rao:
One of the most renown and eldest astrologers of India.
He has played a major role in finding the fault of Raman’s ayanamsa and making
Lahiri Ayanamsa as a standard.
He is an author of about 15 unique books on astrology, which are specified in
“reference” in many articles found in http://Wikipedia.org.
His books are most selling ones in America after B.V.Raman’s books.
He is founder of the largest ‘formal educational school for astrology’ in India.
You can know more about in his websites.
To know about his life, knowledge and experience in a snapshot, you just read
an interview with him taken in 2005
(http://www.lightonvedicastrology.com/articles-knrao-printer.htm).
Criticisms:
Many scholars disagree with some of his methods - for example most scholars
use 4th house of a horoscope for educational perspectives but he claims that
it is only 5th house that signifies education.
===========================================
7. Vaughn Paul:
He was one of the well known students of K.N.Rao, Late R.Santhanam & some
more Indian astrologers.
He is known for his clean articles and genuine predictions.
===========================================
8. Authenticated Websites List - 2:

====================================================

9. Authenticated Websites List - 3:
Many genuine Gurujis occasionally visit this site and give their wise guidance:
http://www.indiadivine.org/audarya/vedic-astrology-jyotisha
This site is very useful like srijagannath.org & yahoo vedic astrology group
and it has good discussions on astrology.
============================================
10. Prof. Mu. Matheswaran
In tamilnadu, I could not think any body equal to his profound knowledge.
About him:
He is multifaceted personality - An Astrologer, Teacher, Writer, Trainer,
Vaasthu consultant, Palmist, Body Reader & Photographer!
Out of about 50 astrologers I have met so far, he stands quite distinct.
I was amazed by his predictions!

Disciple of P. S. Iyer (Kerala) who amazed the South India with his
profound astrological knowledge and

predictions. P.S.Iyer was a thickest friend of B.V.Raman.
Follower of Dr. B. V. Raman who made the entire world esp. western
world and scientists admire the power of Indian astrology.
(BTW: B.V.Raman is the ‘Bill Gates’ in astrology!)
Writer of 30 unique Tamil books on astrology, numerology, gems, palmistry, etc.
Teacher of more than 1000 students and uncountable followers in Tamilnadu.
Revolutionist in astrology - who first condemned the cheating techniques
and superstitions of many fake astrologers.

Note:
He gets mostly ordinary visitors everyday. So, if you really want ‘Special’ &
‘Masterly’ predictions for you, you have to explain to him about you serious
seeking first.
A word on his life:
He was born in 1945. He lost his parents in his age of 18 and was brought up
under his relatives.
He started his career as an ordinary photographer.
He studied most of the astrology by himself & became astrologer.
Later he joined with P. S. Iyer.

His contact Details:
Mu. Matheswaran MICAS
Maruthi Jothidar Illam,
215 (107), Gandhi Nagar,
Water tank road,
Athur - 636 102,
Salem (DT)
Tamilnadu, India.
Tel: 04282 - 250532.
=====================================
11. What about other Astrologers?
Of course, there are many so-called ‘famous astrologers’ but many of them
appear to be too commercial, not genuine or less knowledgeable when we meet
them in person. Some modern styled astrologers (like V.K.Choudhry) lack
authenticity of classics or strong base for their so-called ‘new approaches’.
So, I excluded them.
=====================================
12. Misc:
Out of the above astrologers, I have met only Mr.Mu.Matheswaran
in person. But, I have come across the articles, chart readings, reputations &
books of all other people especially of Sanjay

Rath and Visti Larsen.
Unluckily, nobody at present could equal or even become close to the level of
Dr.B.V.Raman, ‘The Naveena Varahamihira’ (Pt. Sanjay Rath, C.S.Patel,
Bepin Behari, P.S.Iyer & many more scholars explicitly accepted this fact).
Please understand that none can understand one’s life completely just by
visiting an astrologer twice or thrice.
For that, you have to try to practice the various things in the life like
spirituality, philosophy, astrology, etc.
Also, follow somethings before meeting an astrologer, to make it successful:
Have at least basic knowledge in Astrology.
Get an appointment with an astrologer on the date (& time, if possible)
that is most favourable to you (this you can judge to some extent using things
like Tara Bala, Ashtakavarga, Daily hora, etc.
Have your questions list ready on hand. See that your questions are specific
and to-the-point instead of the general things.

Hope this enlightens you considerably!
Comments are welcome!
Do correct me, if I am mistaken anywhere.
May Ketu Bless All!

Written by Vinodhavel

படங்களின் மேல் கர்சரை வைத்து அழுத்தினால் படங்கள் பெரிதாகத் தெரியும்!
=======================================
நன்றி உரித்தாகுக வினோதவேல்!
அன்புடன்
வகுப்பறை வாத்தியார்

வாழ்க வளமுடன்!