அன்பும், அன்பின்மையும் (unkindness) கலந்தது மனித வாழ்வு.
அன்பும், வெறுப்பும் கலந்தது மனித வாழ்வு!
(Life mixed with Love and cruelty)
அல்லது இப்படி வைத்துக் கொள்ளலாம்.
நேசமும் விரோதமும் கலந்த வாழ்வு.
இன்பமும், துன்பமும் கலந்த வாழ்வு.
நேசமும் துரோகமும் கலந்த வாழ்வு.
பாசமும், விரோதமும் கலந்த வாழ்வு.
உறவும், பிரிவும் கலந்த வாழ்வு.
வறுமையும், செழுமையும் கலந்த வாழ்வு.
பெருமையும், சிறுமையும் கலந்த வாழ்வு
எப்படி வேண்டுமென்றாலும் வைத்துக்கொள்ளுங்கள்.
ஆனால் அன்புதான் எல்லாவற்றையும் விட உயர்வானது.
உன்னிடம் அன்பிருக்கிறதா? அது இருந்தால் போதும். உன்னிடம்
எல்லாம் இருக்கிறது. உன்னிடம் அன்பு இல்லையா? உன்னிடம்
எதுவும் இல்லை! அல்லது வேறு எதுவும் இருந்து பயனில்லை.
அன்பு இருந்தால் மட்டுமே உன் வாழ்க்கை சிறக்கும்.
நீ எல்லோராலும் விரும்பப் படுவாய்.
யார் இதைச் சொன்னது?
யார் சொன்னால் மறுப்பின்றிக் கேட்போமே, அவர் சொன்னது!
ஆமாம் வள்ளுவப் பெருந்தகைதான் சொல்லியிருக்கிறார்
குறளைப் பாருங்கள்:
"அன்பிலார் எல்லாம் தமக்குஉரியர்
அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு"
தனிமரம் தோப்பாகாது. நமது வாழ்க்கை கூட்டு வாழ்க்கை. மனதில்
அன்பு இருந்தால் மட்டுமே நீங்கள் அடுததவருடன் இயைந்து
வாழமுடியும்.
நான் பதிவில் மாய்ந்து மாய்ந்து எழுதுவதும் வாசகர்களாகிய
உங்கள் மேற்கொண்டுள்ள அன்பினால்தான். இல்லையென்றால்
அரிய நேரத்தைச் செலவழித்து எப்படி என்னால் எழுத முடியும்?
என் எழுத்திற்கு ஆதாரம் அன்பு! நான் அறிந்தவற்றை அடுத்த
தலைமுறையினர் அறிய வேண்டும் என்கின்ற அன்பு!
உங்களுடைய அன்புதான் எனக்குக் கிரீடம் அல்லது மகுடம்
அன்புதான் நமது வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தைக் கொடுக்கிறது.
Love gives meaning to our lives
Love gives meaning to our lives as do friendship or faith in God.
These are factors of true happiness, of inner peace, of feelings
of harmony, allowing meaning to our existence.
------------------------------------------------------------------------------------------------
வாழ்க்கையின் மறுபக்கம் ஒன்று இருக்கிறது. அது நம்மைக்கேட்டு
ஏற்படாது. அல்லது நம் விருப்பத்திற்கு நடைபெறாது. அதைத்
தவிர்க்கவும் முடியாது அல்லது விரட்டியடிக்கவும் முடியாது.
வாழ்க்கையின் அவலங்கள். வலிகள். வேதனைகள். துயரங்கள்
துன்பங்கள். என்று நம்மைச் சுற்றிப் பல விலங்குகள் உள்ளன.
அந்த விலங்குகளினால் நாம் எப்போது வேண்டுமென்றாலும் தாக்கப்
படலாம்.

இந்த இரண்டு நிலைப்பாடுகளுக்குள் தடுமாறும் அல்லது அடிவாங்கும்
மனிதன் வாழ்க்கையைப் பற்றி இருவிதமான சிந்தனைகளைக்
கொள்கிறான்.
ஒருவன் வாழ்க்கையை இனிமை என்கிறான்.
இன்னொருவன் வாழ்க்கையைக் கொடுமை என்கிறான்.
பாடலைப் பாருங்கள்:
"கடவுள் ஒரு நாள் உலகைக் காண தனியே வந்தானாம்
கண்ணில் கண்ட மனிதரை எல்லாம் நலமா என்றானாம்"
மனிதன் என்ன பதில் சொன்னான்?
"ஒரு மனிதன் வாழ்வை இனிமை என்றான்
ஒரு மனிதன் அதுவே கொடுமை என்றான்
படைத்தவனோ உடனே சிரித்து விட்டான்"
விட்டாரா கடவுள்? இல்லை தொடர்ந்து கேட்டார்:
"கள்ளம் இல்லா பிள்ளை உள்ளம் நான் தந்தது
காசும் பணமும் ஆசையும் இங்கே யார் தந்த்து
எல்லையில்லா நீரும் நிலமும் நான் தந்தது
எந்தன் சொந்தம் என்னும் எண்ணம் ஏன் வந்தது
இறைவனுக்கே இது புரியவில்லை
மனிதனின் கொள்கை தெரியவில்லை
ஒரு மனிதன் வாழ்வை இனிமை என்றான்
ஒரு மனிதன் அதுவே கொடுமை என்றான்
படைத்தவனோ உடனே சிரித்து விட்டான்"
சரி முடிவு என்ன ஆயிற்று?
"பள்ளிக் கூடம் செல்லும் வழியில் கடவுள் நின்றானாம்
பச்சை பிள்ளை மழலை மொழியில் கவிதை கண்டானாம்
உள்ளம் எங்கும் வெள்ளம் பொங்கும் அன்பைக் கண்டானாம்
உன்னைக் கண்டேன் போதும் என்றே வானம் சென்றானாம்"
****************************************************************
உள்ளம் எங்கும் வெள்ளம் பொங்கும் அன்பு" என்றார்
பாருங்கள், அங்கே கவியரசர் கண்ணதாசன் அவர்கள் அந்தப்
பாடல் வரிகளோடு நம் மனதிற்குள் வந்து தங்கி விடுவார்.
ஆகவே கடவுள் நமக்கு அள்ளிக் கொடுத்தது இந்த அன்பு
உணர்வு!
கடவுள் மனிதனுக்குக் கொடுக்காதது ஒன்று உள்ளது.
அது என்ன?
ஒரு கதை மூலம் அதைச் சொல்கிறேன்
================================================
கடவுள் ஒரு நாள் பூமிக்கு வந்தார். அவர் வந்து இறங்கிய இடம்
ஒரு வனாந்திரக் காடு.
அங்கே ஒருவன் விறகிற்காகச் சின்னச் சின்ன மரங்களையும்,
மரக் கிளைகளையும் வெட்டிக் கொண்டிருந்தான். அவனுக்கு
நாற்பது வயதிருக்கும்.
நெடு நேரமாக வெட்டிக்கொண்டிருந்தான் போலும். அவன்
உடம்பு தொப்பலாக வியர்வையால் நனைந்திருந்தது.
அவன் அருகில் சென்ற கடவுள், கணீரென்ற குரலில் சொன்னார்
"வெட்டியது போதும்! போ!"
திடுக்கிட்டுத் திரும்பிய அவன், கடவுளைப் பார்த்தான்.அந்தக்
கம்பீரமான தோற்றமும், கணீர்க் குரலும் அவனுள் ஒரு பயத்தைத்
தோற்றுவித்தது.
வந்திருப்பது இறை என்பதை அவன் அறியவில்லை. இந்தக்
காட்டின் சொந்தக்காரர் போலும் என்று நினைத்தான்.
"அய்யா, என்னை நம்பி பத்து ஜீவன்கள் வீட்டில் இருக்கின்றன.
இந்த விறகுகளைக் கொண்டுபோய் சந்தையில் விற்றால்தான்
நான்கு நாட்களுக்காவது அந்த ஜீவன்களின் வயிற்றுப் பசியைப்
போக்க முடியும்" என்று பணிவுடன் அவன் சொன்னான்.
அவன் சொல்வதில் உண்மை இருப்பதை உணர்ந்த கடவுள்,
அவனுடைய தலைவிதியை மாற்றுவோம் என்று எண்ணினார்..
"உன்னுடைய வறுமையைப் போக்குகிறேன். அந்தக் கல்லை எடுத்துக்
கொண்டு வா" என்றூ சொல்லி அருகில் கிடந்த செங்கல் ஒன்றைக்
காட்டினார்.
அவன் சட்டென்று அதை எடுத்துக் கொண்டு வந்து அவர் முன்பு
நீட்டினான்.
கடவுள் தன் விரலால் அதைத் தொட, உடனே அது தங்கமாக
மாறியது.
என்ன ஆச்சரியம்? செங்கல் சொக்கத்தங்கமாக மாறியவுடன்
அவனுக்கு மிக்க மகிழ்ச்சி.
ஆனாலும் அப்போதும் அவன் அவரைக் கடவுள் என்று உணர்ந்தான்
இல்லை. அவன் அறிவு அவ்வளவுதான். அவன் அவரை ஏதோ
சித்து வேலை செய்யும் சாமியார் என்று நினைத்து விட்டான்.
'இந்தத் தங்கம் உன்னுடைய வறுமையைப் போக்கும் போ, போய்
சந்தோஷமா இரு!" என்றார் கடவுள்.
அவன் மனம் சிந்தனையில் ஆழ்ந்தது. அதைக் கண்ட கடவுள்,
தொடர்ந்து கேட்டார், "என்ன யோசிக்கிறாய்?"
புன்னகைத்த அவன் சொன்னான்,"அய்யா, இதைக் கொண்டு போவதால்
என் முழுப்பிரச்சினையும் தீராது. ஒரளவிற்குத்தான் தீரும்"
உடனே கடவுள் சொன்னார்."அதை கீழே வை. அதோ அந்தக்கல்லை
எடுத்துவா!" என்று அம்மிக்கல் அளவில் இருந்த பெரிய கல் ஒன்றைக்
காட்டினார். அது முப்பது அல்லது நாற்பது கிலோ அளவு எடை
கொண்டதாக இருந்தது.
அந்த விறகு வெட்டியும் ஆர்வத்துடன் ஓடிச் சென்று அதைத் சிரமப்பட்டுத்
தூக்கிக் கொண்டு வந்து நீட்டினான்.
கடவுள் தன் விரல்களில் ஒன்றை அதன் மீது வைக்க, உடனே அது
தங்கமாக மாறியது.
அவனுக்கு அளவிட முடியாத ஆச்சரியம். அவனுடைய கண்கள்
மின்னின! உடல் முழுவதும் தீப்பிடித்ததைப் போன்று மகிழ்ச்சி பரவியது.
கடவுள் சொன்னார்,"சரி இதை எடுத்துக்கொண்டு போ! மகிழ்ச்சியாக
வாழ்க்கையை நடத்து!"
அவனுடைய சந்தோஷம் ஒரு நொடி கூட நீடிக்கவில்லை. அவன் முகம்
மீண்டும் வாட்ட முற்றது.
கடவுள் என்ன வென்று வினவ, கையில் இருந்த அத்தனை பெரிய தங்கக்
கல்லைத் தரையில் வைத்துவிட்டு, ஆதங்கத்துடன் அவன் கடவுளிடம்
சொன்னான்.
"ஐயா, எனக்கு ஒன்றே ஒன்றை மட்டும் தாருங்கள். உங்களைப் போலவே
எனக்கும் பத்து விரல்கள் இருக்கின்றன. நான் தொட்டால் தொட்ட
பொருள் தங்கமாகும் சக்தியை என் விரல்களில் ஒன்றிக்குத் தாருங்கள்.
நான் வேண்டும்போது, வேண்டிய பொருளைத் தொட்டுத் தங்கமாக்கிக்
கொள்கிறேன்"
----------------------------------------------------------------------------------------------------
அதுதான் மனிதனின் மனம். மனித மனம் எப்போதும் எதிலும் திருப்தி
அடையாது.
நூறு ஏக்கர் நிலம் கிடைத்தால் ஆயிரம் ஏக்கர் விளைநிலத்திற்கு ஆசைப்படும்
அம்மிஞ்சிக்கரையில் வீடு கொடுத்தால், அடையார் பங்களாவிற்கு ஆசைப்படும்.
மாருதி ஜென் காரைக் கொடுத்தால், பென்ஸ் டீலக்ஸ் காருக்கு ஆசைப்படும்.
டீம் மேனேஜர் வேலை கொடுத்தால், கம்பெனி சி.யி.ஓ வேலைக்கு ஆசைப்படும்
மாநிலத்தில் மந்திரியாக்கினால் மத்திய அரசில் மந்திரிப் பதவிக்கு ஆசைப்படும்.
சமீரா ரெட்டியைக் கொடுத்தால் அனுஷ்கா சர்மாவிற்கு ஆசைப்படும்
------------------------------------------------------------------------
இந்த சமீராவும், அனுஷ்காவும் யாரென்று தெரிகிறதா? அவர்கள்
தான் இன்றையத் தேதியில் இந்திய நாட்டின் கனவுக் கன்னிகள்.
அதாவது dream girls. வெள்ளித் திரையில் மின்னும் நட்சத்திரங்கள்
உங்களுக்குப் புரியும் படியாக எழுதவேண்டும் என்பதற்காக
அவர்களை உதாரணப் படுத்தி எழுதியுள்ளேன்.
சினிமாவை வைத்துச் சொன்னால்தான் சில விஷ்யங்கள் நமக்குப்
பிடிபடும்
இதை நான் சொல்லியாக வேண்டும். இல்லை என்றால் பிரம்பு சட்டாம் பிள்ளை உண்மைத் தமிழரின் கைக்குப் போய்விடும் அபாயம் உள்ளது:-))))))
அவருக்கு உதாரணம் சொல்ல கொடுமுடி சுந்தராம்பாளையும்,
பெங்களூர் ரமணி அம்மாள் அவர்களையும் பற்றிச் சொன்னால்
போதும். மனிதர் குளிர்ந்து விடுவார்.
பெண் என்றால் கண்களும், உதடுகளும், குரலும் பேச வேண்டும் என் அப்பா காலத்தில் பசுபலேட்டி கண்ணாம்பா மற்றும் டி.ஆர். ராஜகுமாரி ஆகியோரின் கண்களும், உதடுகளும், குரலும் பேசும். என் காலத்தில் சாவித்திரி மற்றும் சரோஜாதேவி ஆகிய இருவரின் கண்களும், உதடுகளும், குரலும் அசத்தலாக இருந்தது. இப்போது அந்த மாதிரி திலகங்கள் யாரும் இல்லை! அந்த மாதிரித் திலகங்கள் புதிதாகத் தோன்றினால் வரவேற்கும் மன நிலையில் இன்றைய இளைஞர்களும் இல்லை! என்ன கருமமோ, எல்லாம் கவர்ச்சி மயமாகி விட்டது. அதுவும் ஒரு அவலம்தான்.
---------------------------------------------------------------------------
ஆசைக்கு எல்லை இல்லை! அந்த ஆசையில் மனிதன் ஆடட்டும்
என்று காலதேவன் மனிதனை ஆடவிட்டு வேடிக்கை பார்த்துக்
கொண்டிருக்கிறான்.
ஓய்வான் ஒரு நாள் - சாத்துவோம் அப்போது என்று காத்துக்
கொண்டும் இருக்கிறான்.
மனிதன் ஓய்வானா? எப்போது?
நாடி நரம்பெல்லாம் தளர்ந்து ஒரு நாள் கட்டாந்தரையில் படுக்காமலா
போவான்?
அப்போது வருவான். கால தேவன். ஆடிய ஆட்டதிற்கெல்லாம்
அப்போது கிடைக்கும் சாமி பரிசு!:-)))))
--------------------------------------------------------------------------------------------------------
கடவுள் மனிதனுக்குக் கொடுக்காதது திருப்தி (satisfaction)
கொடுத்தது அன்பு.
கொடுக்காதது திருப்தி!
------------------------------------------------------------------------------------------------------
"வாத்தியார் எதற்கு இதெல்லாம்? பாடத்திற்கு சம்பந்தம் உண்டா?
"இல்லாமலா? அடுத்தபாடம் மனகாரகனைப் பற்றியது.
Next lesson is about The Authority of Mind. மனகாரகன் சந்திரனைப்
பற்றியது. அதற்கான முன்னோட்டம்தான் இது!"
"சரி, பாடம் எப்போது?"
"இன்றே கொடுத்தால் "Over dose" ஆகிவிடும். அதனால் பாடம் நாளை
மறுநாள் (17.12.2008) பதிவிடப்படும்"

"வாத்தியார்...?"
"என்ன ராஜா?
"ஒரு சந்தேகம், கேட்கலாமா?"
"எனக்குக் கோபமே வராது. கேளு ராஜா?"
"இந்த இடுகைக்கும் தலைப்பிற்கும் என்ன சம்பந்தம்?"
"என்ன தலைப்பு வைத்திருக்கலாம்?"
" மனிதனுக்கு இறைவன் எதைக் கொடுக்கவில்லை?"
"அப்படித் தலைப்பு வைத்திருந்தால் யாரு ராஜா உள்ளே வருவார்கள்?
பதிவு உலகில் உலாத்துபவர்களின் சராசரி வயது 32. இறைவன், கடவுள்
என்று தலைப்பு வைத்தால் ஒரு ஆள் கூட உள்ளே எட்டிப் பார்க்காது
பதிவை அனைவரும் படிக்க வேண்டும். அதுதான் எனது நோக்கம்.
அதனால்தான் இந்த மாதிரித் தூண்டில் தலைப்புக்கள்.
தலைப்பை நன்றாகப் போடு; தானே வருவார்கள் என்று பலமுறை
மற்றவர்களுக்கு நான் அறிவுறுத்தியிருக்கிறேன். அதனால் தலைப்பைச்
சொதப்பாமல் அப்படிப் போட்டுள்ளேன். தலைப்பை மறந்து விட்டு
இடுகையை இன்னுமொரு முறை படி ராஜா! இடுகை எப்படி உள்ளது
அதை மட்டும் சொல்லு ராஜா!
-------------------------------------------------------------------------
மீண்டும் சந்திப்போம்
நன்றி, வணக்கத்துடன்,
அன்புடன்
வகுப்பறை வாத்தியார்
====================================================================
வாழ்க வளமுடன்!

present sir...not yet finished reading...will come back!!
ReplyDelete-Shankar
///கொடுத்தது அன்பு.
ReplyDeleteகொடுக்காதது திருப்தி!///
ஐயா,
உண்மையான வரிகள்.
"அன்புடையார் என்பும் உரியர் பிறர்கு"
பாடத்தோடு மட்டுமல்லாமல் உலக வாழ்வின் நியதிகளையும் இளந்தலைமுறைக்குக் கொண்டுசெல்லும் பாலமாக வகுப்பறை விளங்குகிறது.
போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து என்றனர்.
உணவைத் தவிர எதற்கும் இந்த வாசகம் அமையமாட்டேன் என்கிறதே!
இறைவன்
கொடுத்தது அன்பு.
கொடுக்காதது திருப்தி! அதனால்தானோ!
அய்யா,
ReplyDeleteகதை மற்றும் கருத்து அருமை. நீங்கள் சொன்னது போல் எதையுமே நம் மக்களுக்கு விஷயத்தை எடுத்து செல்ல ஒரு "கவர்ச்சி" தேவைப்படுகிறது.
கண்ணதாசன் "இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்பேன் - நினைத்து வாழ ஒன்று மறந்து வாழ ஒன்று" என்ற பாடலையும் நினைவு கூறுகிறேன்
"இன்பம் - துன்பம்"
"இரவு - பகல்"
"உறவு - பகை"
மற்றும் - "நினைக்க தெரிந்த மனமே - உனக்கு மறக்க தெரியாதா?" - என்ன அருமையான வரிகள்.
அன்பு மட்டுமே உலகை ஆளும் என்ற அற்புதத்தை பாமரன் பாஷையில் விளக்கிய பாடல்கள்!
நன்றி
ஸ்ரீதர் S
பாடம் மிக அருமை அய்யா !!!.
ReplyDelete"பந்தியில் சாப்பாடு நிறைய வைக்கும் போது மட்டும்தான் நாம் போதும் என்று சொல்கிறோம் .அதுபோல் அனைத்து விசயங்களில் போதும் என்று சொல்ல பழகி கொண்டோம் என்றோம் என்றால் நிறைவான வாழ்க்கை வாழ முடியும் ."
பாடம் நன்றாக இருந்தது.
ReplyDeleteஅன்புடன்
இராசகோபால்
/////hotcat said...
ReplyDeletepresent sir...not yet finished reading...will come back!!
-Shankar////
நல்லது. படித்துவிட்டு வாருங்கள்.
//////தியாகராஜன் said...
ReplyDelete///கொடுத்தது அன்பு.
கொடுக்காதது திருப்தி!///
ஐயா,
உண்மையான வரிகள்.
"அன்புடையார் என்பும் உரியர் பிறர்கு"
பாடத்தோடு மட்டுமல்லாமல் உலக வாழ்வின் நியதிகளையும் இளந்தலைமுறைக்குக் கொண்டுசெல்லும் பாலமாக வகுப்பறை விளங்குகிறது.
போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து என்றனர்.
உணவைத் தவிர எதற்கும் இந்த வாசகம் அமையமாட்டேன் என்கிறதே!
இறைவன்
கொடுத்தது அன்பு.
கொடுக்காதது திருப்தி! அதனால்தானோ!/////
பாராட்டுக்களுக்கு நன்றி தியாகராஜன்!
/////Sridhar said...
ReplyDeleteஅய்யா,
கதை மற்றும் கருத்து அருமை. நீங்கள் சொன்னது போல் எதையுமே நம் மக்களுக்கு விஷயத்தை எடுத்து செல்ல ஒரு "கவர்ச்சி" தேவைப்படுகிறது.
கண்ணதாசன் "இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்பேன் - நினைத்து வாழ ஒன்று மறந்து வாழ ஒன்று" என்ற பாடலையும் நினைவு கூறுகிறேன்
"இன்பம் - துன்பம்"
"இரவு - பகல்"
"உறவு - பகை"
மற்றும் - "நினைக்க தெரிந்த மனமே - உனக்கு மறக்க தெரியாதா?" - என்ன அருமையான வரிகள்.
அன்பு மட்டுமே உலகை ஆளும் என்ற அற்புதத்தை பாமரன் பாஷையில் விளக்கிய பாடல்கள்!
நன்றி
ஸ்ரீதர் S/////
உங்கள் கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே!
/////Ragu Sivanmalai said...
ReplyDeleteபாடம் மிக அருமை அய்யா !!!.
"பந்தியில் சாப்பாடு நிறைய வைக்கும் போது மட்டும்தான் நாம் போதும் என்று சொல்கிறோம் .அதுபோல் அனைத்து விசயங்களில் போதும் என்று சொல்ல பழகி கொண்டோம் என்றோம் என்றால் நிறைவான வாழ்க்கை வாழ முடியும் ."///////
இன்றைய வாழ்க்கைச்சுழலில், உணவைத் தவிர மற்ற எதையும் போதும் என்று எந்த மனிதனும் சொல்வதில்லை!
அதானால் அவதிப்படுகிறான். தேடலில் தன்னையே தொலைத்து விடுகிறான்.
//////Blogger RAJA said...
ReplyDeleteபாடம் நன்றாக இருந்தது.
அன்புடன்
இராசகோபால்/////
நன்றி கோபால்!
பாடம் மிக அருமை அய்யா
ReplyDeleteஅன்புதான் எல்லாவற்றையும் விட உயர்வானது.தனிமரம் தோப்பாகாது. நமது வாழ்க்கை கூட்டு வாழ்க்கை. மனதில்அன்பு இருந்தால் மட்டுமே நீங்கள் அடுததவருடன் இயைந்து
ReplyDeleteவாழமுடியும்.என் எழுத்திற்கு ஆதாரம் அன்பு! நான் அறிந்தவற்றை அடுத்த
தலைமுறையினர் அறிய வேண்டும் என்கின்ற அன்பு!
உங்களுடைய அன்புதான் எனக்குக் கிரீடம் அல்லது மகுடம்//
ஐயா,
உங்களுடைய அன்பைதான் வகுப்பறை மாணவர்கள் கிரீடமாக வைத்துக்கொண்டாடுகின்றோம்.உங்கள்நல்ல உள்ளம் வாழ்க பல்லாண்டு!!
(வகுப்பறை மாணவர்கள் 30 முதல் 40வயதுவரை சரி. ஆனால் சமீராரெட்டியோ அனுஷ்கா சர்மாவோ
மேக்கப் இல்லாமல் நீங்கள் வெளியிட்டுள்ள படம் யாருடைய படம் இது என்று தெரியவில்லை)
வாழ்க வளமுடன்,
வேலன்.
/////saravanan said...
ReplyDeleteபாடம் மிக அருமை அய்யா/////
நன்றி சரவணன்
/////வேலன். said...
ReplyDeleteஅன்புதான் எல்லாவற்றையும் விட உயர்வானது.தனிமரம் தோப்பாகாது. நமது வாழ்க்கை கூட்டு வாழ்க்கை. மனதில்அன்பு இருந்தால் மட்டுமே நீங்கள் அடுததவருடன் இயைந்து
வாழமுடியும்.என் எழுத்திற்கு ஆதாரம் அன்பு! நான் அறிந்தவற்றை அடுத்த
தலைமுறையினர் அறிய வேண்டும் என்கின்ற அன்பு!
உங்களுடைய அன்புதான் எனக்குக் கிரீடம் அல்லது மகுடம்//
ஐயா,
உங்களுடைய அன்பைதான் வகுப்பறை மாணவர்கள் கிரீடமாக வைத்துக்கொண்டாடுகின்றோம்.உங்கள்நல்ல உள்ளம் வாழ்க பல்லாண்டு!!
(வகுப்பறை மாணவர்கள் 30 முதல் 40வயதுவரை சரி. ஆனால் சமீராரெட்டியோ அனுஷ்கா சர்மாவோ
மேக்கப் இல்லாமல் நீங்கள் வெளியிட்டுள்ள படம் யாருடைய படம் இது என்று தெரியவில்லை)
வாழ்க வளமுடன்,
வேலன்./////
மேக்கப் இல்லாமல் நீங்கள் வெளியிட்டுள்ள படம் = தவறு.
படத்தை மீண்டும் ஒரு முறை பாருங்கள்.
படத்தில் உள்ள அம்மணி முழு மேக்கப்புடன்தான் இருக்கிறார்.
லிப்ஸ்டிக் எவ்வளவு அழகாகப் பொருந்தியுள்ளது!:-)))))))))
அன்புள்ள அய்யா !
ReplyDeleteஅன்பை பற்றி அன்பாய் சொன்னதற்கு நன்றி
எல்லா மனிதரும் உணர வேண்டிய கருத்து. ஆனால் ஆசை
அதை தவிர்க்கவே முடியாதே மனித குலத்தின் ஆணிவேர் அல்லவா ?
நிமிட நேரமும் எதற்காவது ஆசை படுவதே மனித மனதின் இயல்பாய் ஆகிவிட்டது இதனை வெல்ல ஒரு நல்ல வழி சொல்லுங்கள் அய்யா !
இன்றைய பதிவு மிக அருமை அடுத்த பாடத்திர்ற்குமிக ஆவலாய் உள்ளோம் !
/////ஆர்.கார்த்திகேயன் said...
ReplyDeleteஅன்புள்ள அய்யா !
அன்பை பற்றி அன்பாய் சொன்னதற்கு நன்றி
எல்லா மனிதரும் உணர வேண்டிய கருத்து. ஆனால் ஆசை
அதை தவிர்க்கவே முடியாதே மனித குலத்தின் ஆணிவேர் அல்லவா ?
நிமிட நேரமும் எதற்காவது ஆசை படுவதே மனித மனதின் இயல்பாய் ஆகிவிட்டது இதனை வெல்ல ஒரு நல்ல வழி சொல்லுங்கள் அய்யா!
இன்றைய பதிவு மிக அருமை அடுத்த பாடத்திர்ற்குமிக ஆவலாய் உள்ளோம் !//////
இது நமக்குத் தேவையா?
இது நமக்குக் கிடைக்குமா?
இது நமக்கு உண்மையான மகிழ்ச்சியைக் கொடுக்குமா?
என்று அடிக்கடி சுய பரிசோதனை செய்யுங்கள். ஆசை கட்டுப்பட்டுவிடும்!
தலைப்பின் முக்கியத்துவம் குறித்த என்னுடைய 'தல' பதிவைப் பார்த்தீர்களா?
ReplyDeletehttp://ilayapallavan.blogspot.com/2008/12/blog-post_2899.html
பாடம் அருமை அய்யா!!
ReplyDelete//நூறு ஏக்கர் நிலம் கிடைத்தால் ஆயிரம் ஏக்கர் விளைநிலத்திற்கு ஆசைப்படும்
அம்மிஞ்சிக்கரையில் வீடு கொடுத்தால், அடையார் பங்களாவிற்கு ஆசைப்படும்.
மாருதி ஜென் காரைக் கொடுத்தால், பென்ஸ் டீலக்ஸ் காருக்கு ஆசைப்படும்.
டீம் மேனேஜர் வேலை கொடுத்தால், கம்பெனி சி.யி.ஓ வேலைக்கு ஆசைப்படும்
மாநிலத்தில் மந்திரியாக்கினால் மத்திய அரசில் மந்திரிப் பதவிக்கு ஆசைப்படும்.
சமீரா ரெட்டியைக் கொடுத்தால் அனுஷ்கா சர்மாவிற்கு ஆசைப்படும்//
உண்மையான வரிகள்.!!
GK,BLR
///////இளைய பல்லவன் said...
ReplyDeleteதலைப்பின் முக்கியத்துவம் குறித்த என்னுடைய 'தல' பதிவைப் பார்த்தீர்களா?
http://ilayapallavan.blogspot.com/2008/12/blog-post_2899.html/////
பார்த்தேன் நண்பரே! நன்றாக உள்ளது!
============================================
23.8.2006 தேதியன்று என்னுடைய பல்சுவைப் பதிவில் தலைப்பைப் பற்ரி நான் எழுதியது:
தலைப்பை நன்றாகப் போடு - தானாக வருவார்கள்
எதை நீ படித்தாய்
அவர்கள் படிப்பதற்கு?
எதற்கு நீ மறுமொழிந்தாய்
அவர்கள் உனக்கு மறுமொழிவதற்கு?
எதற்கு நீ ஒழுங்காகப் பின்னூட்டம் இட்டாய்
அவர்கள் உனக்கு பின்னூட்டம் இடுவதற்கு
எத்தனைபேர் பதிவுகளைக் காணவேண்டி ஆசைப்பட்டாயோ
அத்தனை சீக்கிரம் உன் பதிவுகள் பரணுக்குப் போவிடும்
உன்னுடைய எந்தப் பதிவு முதல் பக்கத்தில் இருக்கிறதோ
அது சில மணி நேரத்தில் அடுத்த பக்கத்திற்குபோய்விடும்
அதற்கு அடுத்த நாள் பரணுக்குள் போய் விடும்
பிறகு பூமிக்குள் புதையுண்டு போய்விடும்
பதிவை மட்டும் இடு
படிக்கப்பட வேண்டுமென்று எதிர்பார்க்காதே
நாளென்றுக்கு நூறு பதிவுகள் என்றால்
நானே அவதரித்தாலும் படிக்க முடியமா?
தலைப்பை மட்டும் நன்றாகப் போடு
தானாக வருவார்கள்
பதிவை மட்டும் இடு
படிக்கப்படுமென்று எதிர்பார்க்காதே
இதுவே வலைப்பூக்களின் (Blogs) நியதியும்
வலைஞர்களின் குணாம்சமும் ஆகும்!
சம்பவாமி யுகே யுகே!
சுட்டி:
http://devakottai.blogspot.com/2006/08/blog-post_23.html
//////Geekay said...
ReplyDeleteபாடம் அருமை அய்யா!!
//நூறு ஏக்கர் நிலம் கிடைத்தால் ஆயிரம் ஏக்கர் விளைநிலத்திற்கு ஆசைப்படும்
அம்மிஞ்சிக்கரையில் வீடு கொடுத்தால், அடையார் பங்களாவிற்கு ஆசைப்படும்.
மாருதி ஜென் காரைக் கொடுத்தால், பென்ஸ் டீலக்ஸ் காருக்கு ஆசைப்படும்.
டீம் மேனேஜர் வேலை கொடுத்தால், கம்பெனி சி.யி.ஓ வேலைக்கு ஆசைப்படும்
மாநிலத்தில் மந்திரியாக்கினால் மத்திய அரசில் மந்திரிப் பதவிக்கு ஆசைப்படும்.
சமீரா ரெட்டியைக் கொடுத்தால் அனுஷ்கா சர்மாவிற்கு ஆசைப்படும்//
உண்மையான வரிகள்.!!
GK,BLR//////
நன்றி ஜீக்கே!
அய்யா, சூப்பர். இதைத்தவிர வேறொன்றும் இல்லை.
ReplyDeleteபதிவுப்பக்கம் வந்ததற்கும் நன்றி!!!
Very very good post!!!! Keep posting like this:-)
ReplyDelete/////இளைய பல்லவன் said...
ReplyDeleteஅய்யா, சூப்பர். இதைத்தவிர வேறொன்றும் இல்லை.
பதிவுப்பக்கம் வந்ததற்கும் நன்றி!!!/////
இதற்கெல்லாம் எதற்கு நன்றி, நண்பரே?
/////கபீஷ் said...
ReplyDeleteVery very good post!!!! Keep posting like this:-)////
நன்றி நண்பரே!
//சமீரா ரெட்டியைக் கொடுத்தால் அனுஷ்கா சர்மாவிற்கு ஆசைப்படும்//
ReplyDeleteநாங்களெல்லாம் நயன்தாராவோடு நிறுத்திக் கொள்வோம் என்று உறுதி அளிக்கிறேன்!
(பின் குறிப்பு: இங்கு நாங்கள் என்பது நான் மட்டுமே)
Dear Sir,
ReplyDeleteGood Post!!! you are very eloquent in putting things together...
Thanks sir.
Shankar
////நாமக்கல் சிபி said...
ReplyDelete//சமீரா ரெட்டியைக் கொடுத்தால் அனுஷ்கா சர்மாவிற்கு ஆசைப்படும்//
நாங்களெல்லாம் நயன்தாராவோடு நிறுத்திக் கொள்வோம் என்று உறுதி அளிக்கிறேன்!
(பின் குறிப்பு: இங்கு நாங்கள் என்பது நான் மட்டுமே)//////
பார்வதி ஓமனக்குட்டன் என்கின்ற புயல் வந்து கொண்டிருக்கிறது. அப்போது இந்த உறுதிமொழியெல்லாம் காற்றில் பறந்து விடும்!
///hotcat said...
ReplyDeleteDear Sir,
Good Post!!! you are very eloquent in putting things together...
Thanks sir.
சங்கர்////
அதுதானே பாடம் நடத்துவதற்கான முதல் நியதி!
நன்றி சங்கர்!
ஐயா பதிவு ரொம்ப நீளமாக இருக்கு,
ReplyDeleteகரூர் தியாகராஜனைக் கேட்டதாகச் சொல்லவும், நெடுநாளாக அவர் சாட்டில் வரலை.
***
என்னோட பதிவு ஒண்ணு கீழே லிங்கி இருக்கிறதே எதுக்கு ? புரியலை.
/////கோவி.கண்ணன் said..
ReplyDeleteஐயா பதிவு ரொம்ப நீளமாக இருக்கு,//////
உண்மைத்தமிழர் பதிவுகளை விடவா?
/////// கரூர் தியாகராஜனைக் கேட்டதாகச் சொல்லவும், நெடுநாளாக அவர் சாட்டில் வரலை.////////
உங்கள் ஊர் அலுவலகங்களில் வேலை செய்வது கட்டாயம் இல்லை என்று நினைக்கிறேன் அதனால் உங்களுக்கு சாட்டில் நேரம் இருக்கிறது:-))))))
//////என்னோட பதிவு ஒண்ணு கீழே லிங்கி இருக்கிறதே எதுக்கு ? புரியலை.//////
பார்த்தேன். படித்துவிட்டேன். பதிவும் புரிய வில்லை! சில விஷயங்கள் புரியாமல் இருப்பதே நல்லது:-))))
//பார்வதி ஓமனக்குட்டன் என்கின்ற புயல் வந்து கொண்டிருக்கிறது. அப்போது இந்த உறுதிமொழியெல்லாம் காற்றில் பறந்து விடும்!
ReplyDelete//
ஹிஹி!
அர்ஜூனனுக்கொரு வில்லு!
நாமக்கல் சிபிக்கொரு சொல்லு!
என்னிக்கும் மாறாதது!
ஹலோ சார்,
ReplyDeleteஇன்றைய பாடம் நல்லாவே இருக்கு, தலைப்பும் சேர்த்து தான்.
//"அப்படித் தலைப்பு வைத்திருந்தால் யாரு ராஜா உள்ளே வருவார்கள்?//
ஹா ஹா ஹா ஹாஆ.........
அப்படியா? உங்களுக்குமா?அடக் கடவுளே.....
//அதனால்தான் இந்த மாதிரித் தூண்டில் தலைப்புக்கள்.//
பரவாயில்லையே நீங்க கூட ரொம்ம்பத்ததான் தெளிவாயிருக்கீங்க..ம்ம்ம்....
//////நாமக்கல் சிபி said...
ReplyDelete//பார்வதி ஓமனக்குட்டன் என்கின்ற புயல் வந்து கொண்டிருக்கிறது. அப்போது இந்த உறுதிமொழியெல்லாம் காற்றில் பறந்து விடும்!
// ஹிஹி!
அர்ஜூனனுக்கொரு வில்லு!
நாமக்கல் சிபிக்கொரு சொல்லு!
என்னிக்கும் மாறாதது!///////
இது பிரசவத்தில் பெண் செய்யும் சபதம் போன்றது!பார்ப்போம்:-)))))
///////Sumathi. said...
ReplyDeleteஹலோ சார்,
இன்றைய பாடம் நல்லாவே இருக்கு, தலைப்பும் சேர்த்து தான்.
//"அப்படித் தலைப்பு வைத்திருந்தால் யாரு ராஜா உள்ளே வருவார்கள்?//
ஹா ஹா ஹா ஹாஆ.........
அப்படியா? உங்களுக்குமா?அடக் கடவுளே.....
//அதனால்தான் இந்த மாதிரித் தூண்டில் தலைப்புக்கள்.//
பரவாயில்லையே நீங்க கூட ரொம்பத்தான் தெளிவாயிருக்கீங்க..ம்ம்ம்....////////
இன்றைய உலகில் தெளிவாக இல்லாவிட்டால், சாத்தி விட்டுப்போய் விடுவார்கள் சகோதரி!
அதனால்தான் தெளிவு!
முன்னோட்டம் அருமை !
ReplyDeleteபாடத்திற்காக waiting !
///அருப்புக்கோட்டை பாஸ்கர் said...
ReplyDeleteமுன்னோட்டம் அருமை !
பாடத்திற்காக waiting !////
பாடத்தை இன்று பதிவில் ஏற்றியுள்ளேன் பாருங்கள். பாஸ்கர்!
தலைப்பு நன்றாக உள்ளது... :-)
ReplyDelete////சரவணகுமரன் said...
ReplyDeleteதலைப்பு நன்றாக உள்ளது... :-)/////
முதலுக்கே மோசமாக இருக்கிறதே சாமி!:-)))))
பதிவிற்குத்தான் தலைப்பு
பதிவு அடுத்தபடியா?