மனிதனுக்குள் எல்லா ரசனையும் உண்டு!
ரசிப்பவன், ரசிக்கும்தன்மை உடையவன் எல்லாவற்றிலும் ஒன்றிப் போய்
விடுவான்! காலம் அவனை மாற்றாது!
எப்படி?
என்னையே உதாரணமாகச் சொல்லலாம்
நான் சுசிலா அம்மையாரின் பாடல்களில் பல முறை கரைந்திருக்கிறேன்
அதேபோல சித்ரா அவர்களின் பாடல்களில் பலமுறை என்னையே பறி
கொடுத்திருக்கிறேன். டி.எம்.எஸ் முதல் இன்றைய ஹரிஹரன்வரை
அத்தனை பாடகர்களையும் எனக்குப் பிடிக்கும்
"ஏரிக்கரையின் மேலே போறவளே பெண் மயிலே..." பாடலில் இருந்து
"பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன்; ஒற்றை நாணயம்" வரை ஏராளமான
பாடல்களுக்கு நான் ரசிகன்
தள்ளுபடி எதுவும் கிடையாது.
கண்ணதாசனையும் பிடிக்கும், கங்கை அமரனையும் பிடிக்கும்
கரகாட்டக்காரன் பாடல்களை லேசில் மறக்க முடியுமா?
ஆகவே ஒப்பிடுவது தவறு. ஒவ்வொன்றிலும் ஒரு சிறப்பு இருக்கிறது.
எனக்கு அந்தக்காலத்தில் எப்படி சரோஜாதேவியைப் பிடித்ததோ, அதே போல
இன்று சிநேகாவையும் பிடிக்கும், பாவனாவையும் பிடிக்கும் (ஒரு உதாரணத்
திற்காகச் சொல்லியிருக்கிறேன்)
ஸ்டார் ஓட்டலும் பிடிக்கும், கையேந்தி பவனும் பிடிக்கும்
எல்லாவற்றிற்கும் காரணம்: 1, ரசனை உணர்வு, 2.மனப்பக்குவம்
------------------------------------------------------------------------------------------------
ஆகவே எதையும் ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள்.
மல்லிகைப்பூவிற்கு ஒரு சிறப்பு என்றால்
தாழம்பூவிற்கும் ஒரு சிறப்பு இருக்கிறது
புறாவிற்கு ஒரு சிறப்பு என்றால்
காகத்திற்கும் ஒரு சிறப்பு இருக்கிறது
உருளைக்கிழங்கிற்கு ஒரு சிறப்பு என்றால்
பாகற்காய்க்கும் ஒரு சிறப்பு இருக்கிறது
ஆகவே எல்லாவற்றையும் ரசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்
அதோடு ஏற்றுக் கொள்ளவும் கற்றுக் கொள்ளுங்கள்
தீ (Fire)க்கு ஒரே குணம்தான்!
ரசனைக்கும் அப்படித்தான்
-----------------------------------------------------------------------------------------------
"வாத்தியார், இதற்கும் பாடத்திற்கும் என்ன சம்பந்தம்?"
"இருக்கிறது!"
"என்ன சொல்லுங்கள்!"
"அடுத்த பாடம் வரை பொறுத்திருங்கள். அடுத்த படம் சூரியனைப்
பற்றியது. இதுவரை குரு, சுக்கிரன் என்று சுகமான கிரகங்களைப்
படித்தீர்கள் அல்லவா? அதே உணர்வுடன், சமயங்களில் எரிக்கும்
சூரியனையும் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும். கிரகங்களில்
அவன்தான் முதன்மையானவன். He is the king of all planets.
அதே நேரத்தில் அதிக நன்மையைத் தரும் கிரகங்களின் வரிசையில்
அவன் பெயர் இல்லை. அதே ரசனை உணர்வுடன் நீங்கள் சூரியனைப்
பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்காகத்தான் இந்த முன்னோட்டம்."
_________________________________________________________
அன்புடன்
வகுப்பறை வாத்தியார்
வாழ்க வளமுடன்!
Me the first..Present sir,
ReplyDeletewaiting for the classes to start
ReplyDeletevanakkam ayya....
ReplyDeletei will write more tomorrow....
சூரியன் எனது லக்னத்திற்கு பாதகாதிபதி .சமயங்களில் அவர் பண்ணுகிற torture தாங்க முடியவில்லை. உங்கள் கருத்து ஒரு நல்ல ஆறுதலான கருத்தாக உள்ளது. மிக்க நன்றி.
ReplyDeleteஐயா,
ReplyDeleteதினம் தினம் தரிசிக்கும் ஒரே கிரகம் சூரியன்தான்(மழை நேரத்தில் கேட்காதீர்கள்). அதிகாலை கடலில் சூரியன் உதயத்தையும், அஸ்தமன சூரியனையும் ரசிக்க கண்கோடி வேண்டு்ம் அய்யா.தினம் அவரை வணங்கினால் கெடுதல்களை குறைத்துக்கொள்ள மாட்டாரா? என்ன?
வாழ்க வளமுடன்,
வேலன்.
This comment has been removed by the author.
ReplyDeleteஅய்யா,
ReplyDeleteஇந்த முன்னோட்டத்தில் சூரியனின் தீ சுட்டே தீரும், அதுவும் தீமையை செய்யும் என்று அதன் காரகத்தை தொட்டு பின் விட்டு விட்டீர்கள்.
பயம் கலந்த ஆவலுடன் அடித்த வகுப்புக்கு காத்து இருக்கிறேன்.
நன்றி!
ஸ்ரீதர் S
This comment has been removed by the author.
ReplyDeleteபடத்துக்கும் பாடத்துக்கும் என்ன சம்பந்தம் அய்யா..? ஒன்னும் விளங்கலையே ??
ReplyDeleteDear sir,
ReplyDeleteSun - wow he is the lagna lord for me:-) he is in lagna and his dasa is starting from 2010...so waiting!!!
-Shankar
////படத்துக்கும் பாடத்துக்கும் என்ன சம்பந்தம் அய்யா..? ஒன்னும் விளங்கலையே ??///
ReplyDeleteTo my knowledge, He did many things like from conductor to actor...merges with all class of people....
OR
Sun is the lagna lord for him....
-Shankar
சூரியனின் அறிமுகம் "மிரட்டுது"ல்ல!
ReplyDelete//அதிகாலை கடலில் சூரியன் உதயத்தையும், அஸ்தமன சூரியனையும் ரசிக்க கண்கோடி வேண்டு்ம் அய்யா// ஆம். அதுவும் காலை எழுந்தவுடன் அவரைப் பார்த்தவுடன் தான் மற்ற வேலை எல்லாம்!
//ஆகவே எல்லாவற்றையும் ரசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்
ReplyDeleteஅதோடு ஏற்றுக் கொள்ளவும் கற்றுக் கொள்ளுங்கள்//
அருமையான சிந்தனை!
//எதையும் ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள்//
ReplyDeleteரொம்ப சரி! ஒப்பிடறதுதான் நிறைய பிரச்னைக்குக் காரணம்
உள்ளேன் ஐயா. அட்வைஸ் பதிவுகளுக்கெல்லாம் வழக்கமாக எல்லோரும் உள்ளேன் ஐயா தான் போடுவாங்களாம், உண்மையா ?
ReplyDelete:)
ஐயா காலை வணக்கம் (சூரியன் உதிப்பதால்)
ReplyDelete1) பாவக்கிரகம் கொடுப்பது போல் சுபக்கிரகம் கொடுக்காது என்பார்கள், இது உண்மையா
2) சூரியனை நீசமாகக் கொண்டவர்கள் அதிகமாகப் பேசுவதாக ஒருவர் சொன்னார் , இது உண்மையா
/////Geekay said...
ReplyDeleteMe the first..Present sir,//////
முதலில் வந்ததற்காக தங்கக்காசு போன்ற பரிசெல்லாம் கிடையாது!
//////mannar said...
ReplyDeletewaiting for the classes to start/////
அடுத்த வகுப்பு நாளை!
////கூடுதுறை said...
ReplyDeletevanakkam ayya....
i will write more tomorrow..../////
எங்கே சுவாமி போய்விட்டீர்? பத்து நாட்களாக வகுப்பிற்கு வேறு டிமிக்கி!
//////Ragu Sivanmalai said...
ReplyDeleteசூரியன் எனது லக்னத்திற்கு பாதகாதிபதி .சமயங்களில் அவர் பண்ணுகிற torture தாங்க முடியவில்லை. உங்கள் கருத்து
ஒரு நல்ல ஆறுதலான கருத்தாக உள்ளது. மிக்க நன்றி.////
நன்றி சிவன்மலையாரே!
/////வேலன். said...
ReplyDeleteஐயா,
தினம் தினம் தரிசிக்கும் ஒரே கிரகம் சூரியன்தான்(மழை நேரத்தில் கேட்காதீர்கள்). அதிகாலை கடலில் சூரியன்
உதயத்தையும், அஸ்தமன சூரியனையும் ரசிக்க கண்கோடி வேண்டு்ம் அய்யா.தினம் அவரை வணங்கினால் கெடுதல்களை
குறைத்துக்கொள்ள மாட்டாரா? என்ன?
வாழ்க வளமுடன்,
வேலன்./////
உங்கள் பெயரைக்கேட்டால் யாருமே கெடுதல் செய்ய மாட்டார்கள்!
//////Sridhar said...
ReplyDeleteஅய்யா,
இந்த முன்னோட்டத்தில் சூரியனின் தீ சுட்டே தீரும், அதுவும் தீமையை செய்யும் என்று அதன் காரகத்தை தொட்டு பின்
விட்டு விட்டீர்கள்.
பயம் கலந்த ஆவலுடன் அடித்த வகுப்புக்கு காத்து இருக்கிறேன்.
நன்றி!
ஸ்ரீதர் S/////
தீ எல்லா இடத்திலும் தன் வேலையை ஒன்றுபோலச் செய்யும். அதுபோல ரசனை உள்ளவர்களும்
ஒன்று போல அனைத்தையும் ரசிக்க வேண்டும் என்பதற்காகச் சொன்னது சுவாமி அது!
////Geekay said...
ReplyDeleteபடத்துக்கும் பாடத்துக்கும் என்ன சம்பந்தம் அய்யா..? ஒன்னும் விளங்கலையே ??/////
அதெப்படி விளங்கும்?
படத்தில் உள்ள இளம் பெண்ணின் முகத்தில் தெரியும் அளவிட முடியாத சந்தோசத்தைப் பாருங்கள்.
ஜப்பானில் இருந்து இவ்வளவு தூரம் வந்து ரஜினியைக் கட்டிப் பிடித்து தன் மன உணர்வை வெளிப்படுத்திய
அவர் எவ்வளவு பெரிய ரசிகையாக இருப்பார். ரசனை உணர்வுகள் அவரிடம் எவ்வளவு இருக்கும்?
அதை யோசித்தீர்களா?
பதிவு ரசனையைப் பற்றியது.
அந்தப் பெண் சிறந்த ரசிகைக்கு உதாரணம்
இப்போது படத்தைப் பாருங்கள். விளங்கும்!
////hotcat said...
ReplyDeleteDear sir,
Sun - wow he is the lagna lord for me:-) he is in lagna and his dasa is starting from 2010...so waiting!!!
-Shankar////
ரஜினிக்கும் லக்கின அதிபதி அவர்தான்.கமலுக்கும் லக்கின அதிபதி அவர்தான்
ஹி.ஹி... எனக்கும் அவர்தான் லக்கின அதிபதி!
//////hotcat said...
ReplyDelete////படத்துக்கும் பாடத்துக்கும் என்ன சம்பந்தம் அய்யா..? ஒன்னும் விளங்கலையே ??///
To my knowledge, He did many things like from conductor to actor...merges with all class of people....
OR
Sun is the lagna lord for him...
-Shankar/////
பதிவு ரசனையைப் பற்றியது சங்கர்
அந்தப் பெண் சிறந்த ரசிகைக்கு உதாரணம்
/////கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...
ReplyDeleteசூரியனின் அறிமுகம் "மிரட்டுது"ல்ல!
//அதிகாலை கடலில் சூரியன் உதயத்தையும், அஸ்தமன சூரியனையும் ரசிக்க கண்கோடி வேண்டு்ம் அய்யா// ஆம்.
அதுவும் காலை எழுந்தவுடன் அவரைப் பார்த்தவுடன் தான் மற்ற வேலை எல்லாம்!//////
ஆகா, நீங்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் சகோதரி. நன்றி!
//////கபீஷ் said...
ReplyDelete//ஆகவே எல்லாவற்றையும் ரசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்
அதோடு ஏற்றுக் கொள்ளவும் கற்றுக் கொள்ளுங்கள்//
அருமையான சிந்தனை!////
பாராட்டிற்கு நன்றி நண்பரே!
//////கபீஷ் said...
ReplyDelete//எதையும் ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள்//
ரொம்ப சரி! ஒப்பிடறதுதான் நிறைய பிரச்னைக்குக் காரணம்/////
உண்மைதான் நண்பரே!
/////கோவி.கண்ணன் said...
ReplyDeleteஉள்ளேன் ஐயா. அட்வைஸ் பதிவுகளுக்கெல்லாம் வழக்கமாக எல்லோரும் உள்ளேன் ஐயா தான் போடுவாங்களாம்,
உண்மையா ?
:)//////
சிங்கப்பூரில் இருப்பவர்களுக்கு விதிமுறைகளைச் சொல்லியா தர வேண்டும்?
//////KS said..
ReplyDeleteஐயா காலை வணக்கம் (சூரியன் உதிப்பதால்)
1) பாவக்கிரகம் கொடுப்பது போல் சுபக்கிரகம் கொடுக்காது என்பார்கள், இது உண்மையா
2) சூரியனை நீசமாகக் கொண்டவர்கள் அதிகமாகப் பேசுவதாக ஒருவர் சொன்னார் , இது உண்மையா//////
இரண்டுமே உண்மையல்ல!
உள்ளேன் ஐயா...
ReplyDeleteMr Subbaiah!
ReplyDeleteThe tendency to accept things without question on the grounds that each thing is unique in its own way, can’t be a good tendency at all contexts.
Especially, for a teacher like you, it is dangerous. You will create morons of your students who will never question anything. Because, they know their teacher is a person who likes status quo. If questioned, he will thrash you!!
Our education system is based on the belief that the teacher should not be questioned. In the West, he can be.
Each song is unique, no doubt. But, what if two songs is on the same theme. and you are asked to choose one of the two. You need to compare the two; and choose the one which handles the theme better and more acceptable way; choose the one which brings out the meaning in a more melodious way.
Bernad Shaw said: "The reasonable man adapts himself to the conditions that surround him... The unreasonable man adapts surrounding conditions to himself... All progress depends on the unreasonable man."
Teach your students the meaning of the abve Quote and tell them that the world has progressed only because people questioned what went before; and improved on it. If they had done it, we would be living in a stone age.
Ask your students to dare to see things in a different and new way.
எனக்கும் ப்ரசண்ட் போட்டுக்கோங்க.
ReplyDeleteபதிவு அருமை.
ஒப்பீடக்கூடாது என்பதில் இன்னொன்னையும் சேத்திருக்கலாம். :)
ReplyDeleteஅது ரங்கமணிகள் தன் தங்கமணியை அம்மாவுடன் ஒப்பிட்டு பார்ப்பதால்தான் பல பிரச்சனை வருது.
Chuttiarun said...
ReplyDeleteவணக்கம்
நாங்கள் தமிழ் ஸ்டுடியோ.காம் எனும் குறும்படங்களுக்கான இணைய தளம் ஒன்றை நடத்தி வருகிறோம். எங்களுக்கு உங்கள் ப்ளாகில் ஒரு இணைப்பு தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் தளத்தியா பாருங்கள் பயனுள்ளவை எனக் கருதினால் இணைப்பு கொடுங்கள்.
http://www.thamizhstudio.com/
Add a Gadget - ல் இதை பயன்படுத்துக
வழி --> Add a Gadget --> select HTML/JavaScript
Title : தமிழ் ஸ்டுடியோ.காம்
Content : img alt="தமிழ் ஸ்டுடியோ.காம்" src="http://thamizhstudio.com/images/home_stud_logo.jpg"/>/////
என்னுடைய இன்னொரு பதிவில் உங்கள் வேண்டுகோளுக்கு செவி சாய்த்து சைடு பாரில் சுட்டியை இணைத்தேன். அது வேலை செய்யவில்லை. என்ன குறையென்று முதலில் சொல்லுங்கள்
//////VIKNESHWARAN said...
ReplyDeleteஉள்ளேன் ஐயா.../////
வெறும் உள்ளேன் அய்யா மட்டுமா?
நன்றி!
////karikkulam said...
ReplyDeleteMr Subbaiah!
The tendency to accept things without question on the grounds that each thing is unique in its own way, can’t be a good tendency at all contexts.
Especially, for a teacher like you, it is dangerous. You will create morons of your students who will never question anything. Because, they know their teacher is a person who likes status quo. If questioned, he will thrash you!!
Our education system is based on the belief that the teacher should not be questioned. In the West, he can be.
Each song is unique, no doubt. But, what if two songs is on the same theme. and you are asked to choose one of the two. You need to compare the two; and choose the one which handles the theme better and more acceptable way; choose the one which brings out the meaning in a more melodious way.
Bernad Shaw said: "The reasonable man adapts himself to the conditions that surround him... The unreasonable man adapts surrounding conditions to himself... All progress depends on the unreasonable man."
Teach your students the meaning of the abve Quote and tell them that the world has progressed only because people questioned what went before; and improved on it. If they had done it, we would be living in a stone age.
Ask your students to dare to see things in a different and new way./////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
Dear friend,
When I told to accepts the things without questioning?
No body, even myself, will not accept the things without questions
I am getting number of questions daily through mails and also through comment box
Do you know what I do with them?
Don't worry, my classroom students are brilliant and they them selves know to differentiate the things on their own
without seeking guidance from anyone!
////புதுகைத் தென்றல் said...
ReplyDeleteஎனக்கும் ப்ரசண்ட் போட்டுக்கோங்க.
பதிவு அருமை.////
நன்றி புதுகையாரே!
/////புதுகைத் தென்றல் said...
ReplyDeleteஒப்பீடக்கூடாது என்பதில் இன்னொன்னையும் சேத்திருக்கலாம். :)
அது ரங்கமணிகள் தன் தங்கமணியை அம்மாவுடன் ஒப்பிட்டு பார்ப்பதால்தான் பல பிரச்சனை வருது./////
அம்மாக்களும் வாழ்க! தங்கமணிகளும் வாழ்க!
//எனக்கு அந்தக்காலத்தில் எப்படி சரோஜாதேவியைப் பிடித்ததோ, அதே போல
ReplyDeleteஇன்று சிநேகாவையும் பிடிக்கும், பாவனாவையும் பிடிக்கும் (ஒரு உதாரணத்
திற்காகச் சொல்லியிருக்கிறேன்)
//
வாத்தியாரின் ரசனைகளை மதிப்பவனே உண்மையான மாணவன்!
இப்படிக்கு,
தங்கள் உண்மையுள்ள,
நாமக்கல் சிபி.
//நன்றி புதுகையாரே!//
ReplyDeleteஐயா!
புதுகையார் அல்ல! புதுகை அம்மணி!
தானைத் தலைவி புதுகை அக்கா வாழ்க!
/////நாமக்கல் சிபி said...
ReplyDelete//எனக்கு அந்தக்காலத்தில் எப்படி சரோஜாதேவியைப் பிடித்ததோ, அதே போல
இன்று சிநேகாவையும் பிடிக்கும், பாவனாவையும் பிடிக்கும் (ஒரு உதாரணத்
திற்காகச் சொல்லியிருக்கிறேன்)
// வாத்தியாரின் ரசனைகளை மதிப்பவனே உண்மையான மாணவன்!
இப்படிக்கு,
தங்கள் உண்மையுள்ள,
நாமக்கல் சிபி./////
மற்றவரிகள் எல்லாம் கண்ணில் படாமல் இது மட்டும் எப்படி கண்ணில் படுகிறது சுவாமி....?
///////நாமக்கல் சிபி said...
ReplyDelete//நன்றி புதுகையாரே!//
ஐயா!
புதுகையார் அல்ல! புதுகை அம்மணி!
தானைத் தலைவி புதுகை அக்கா வாழ்க!//////
நானும் சொல்லிக் கொள்கிறேன்:
புதுகை அம்மணி வாழ்க! வளர்க!
Mr Subbiah!
ReplyDeleteGlad to see ur response.
Your students are not being gagged.
A good news.
Thank you.
////karikkulam said...
ReplyDeleteMr Subbiah!
Glad to see ur response.
Your students are not being gagged.
A good news.
Thank you./////
All of my class students are matured.Nobody can gag them:-)))))
/////அமர பாரதி said...
ReplyDeleteஉள்ளேன் ஐயா/////
நன்றி அமரபாரதி!
ஐயா,
ReplyDeletePhoto Selection SUPERB!
சூரியனைப் பற்றிய அறிமுகத்திற்கு
சூரியன் (Super Star - Simma Lagna)
அம்சம் பெற்றவரையே
பிடித்துவிட்டீரே!
/////விநோதவேல் said...
ReplyDeleteஐயா,
Photo Selection SUPERB!
சூரியனைப் பற்றிய அறிமுகத்திற்கு
சூரியன் (Super Star - Simma Lagna)
அம்சம் பெற்றவரையே
பிடித்துவிட்டீரே!////
நீங்கள்தான் கண்டுபிடித்திருக்கிறீர்கள். மற்றவர்களுக்கு அது நினைவில் வரவில்லை!
sir i am karthic new student .i read your website last 2 months. i am a student of your student kovi.kannan sir . realy i thank to you sir .i would like to regularly read your post please accept me as a student.
ReplyDeleteபாடம் அருமை, நன்றீ
ReplyDelete