மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label Lessons 621 - 630. Show all posts
Showing posts with label Lessons 621 - 630. Show all posts

28.2.13

Astrology உண்மை ஜெயிக்க வேண்டும் என்பதற்காக என்னடா செய்தார் கண்ண பரமாத்மா?


Astrology உண்மை ஜெயிக்க வேண்டும் என்பதற்காக என்னடா செய்தார் கண்ண பரமாத்மா?
இந்தப் பதிவின் முதல் பகுதி 4.2.2013 அன்று வெளியானது. அதன் தொடர்ச்சியை இன்று தந்துள்ளேன். முன் பதிவைப் படித்திராதவர்கள் அதைப் படித்துவிட்டு வந்து இதைப் படிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அதற்கான சுட்டி (URL LInk): http://classroom2007.blogspot.in/2013/02/astrology.html
--------------------------------------------------------------------------------------------------------------
கண்ண பரமாத்மா, தன்னுடைய கோபத்தை மறந்து புன்னகை செய்தார். அத்துடன் “என்னுடைய வேலை என்ன என்பதைச் சொல்லிவிட்டாய் அல்லவா? என்ன செய்ய வேண்டும் என்பது எனக்குத் தெரியும். நான் பார்த்துக்கொள்கிறேன்” என்று சகாதேவனிடம் சொன்னவர், அந்த இடத்தை விட்டு, புறப்பட்டுச் சென்று விட்டார் என்று முன் பதிவில் எழுதியிருந்தேன்.

புறப்பட்டுச் சென்ற கண்ண பரமாத்மா என்ன செய்தார்?

அவர் தன் வேலையைச் செய்தார். அதுவும் சுவாரசியமாக இருக்கும். அந்த நிகழ்வு கீழே உள்ளது. படித்து மகிழுங்கள்

அன்புடன்
வாத்தியார்.

-------------------------------------------------------------------------------------------------------
பகுதி 2

அமாவாசைத் திதியின் முக்கியத்துவம்

கண்ண பரமாத்மா இறைவனில்லையா? அவர் நினைத்தால் என்ன வேண்டுமென்றாலும் அவரால் செய்ய முடியும். ஆனால் தான் அவதாரம் எடுத்த நோக்கத்தை நிறைவேற்ற அவரும் மனிதர்களுக்கு விளங்கும்படியாகச் சில செயல்களைச் செய்ய வேண்டும். செய்தார்

அதனால் மார்கழி அமாவாசையன்று காளிக்குக் களபலி கொடுத்து, யுத்தத்தை துவங்க இருந்த துரியோதனனைக் குழப்புவதற்காக, கண்ண பரமாத்மா, அமாவாசையை ஒரு தினம் முன்னதாக வரும்படி செய்தார்

எப்படி?

'அதெல்லாம் எனக்குத் தெரியும்’ என்று சிரித்துக்கொண்டே வந்த கண்ணபிரான், 14-ஆம் நாளான சதுர்த்தசியன்று, ஆற்றங்கரைக்குத் தர்ப்பணம் செய்யச் சென்றார். அதைக் கண்ட அனைவரும் அதிர்ந்து போனார்கள். 'இதென்ன குழப்பம்! நாளைக்குத்தானே அமாவாசை! கிருஷ்ண பரமாத்மா இன்றைக்குத் தர்ப்பணம் செய்கிறாரே...’ என்று பிரகஸ்பதியிடம் கேட்டார்கள். அதே நேரத்தில் சூரியனும் சந்திரனும் குழம்பிப்போன நிலையில் ஒன்று கூடினார்கள். புலம்பித் தீர்த்தார்கள். 'என்ன இது... ஒன்றுமே புரியவில்லையே..?’ என்று தவித்துப் போனார்கள்.

அமாவாசைக்கு முதல் தினம் ஆற்றங்கரைக்குச் சென்று தர்ப்பணம் கொடுப்பதற்கு வேத சாஸ்திரிகளை வைத்து ஏற்பாடு செய்து கொண்டிருந்தார் கண்ண பரமாத்மா. அமாவாசை அன்று இல்லை என்பது அவர்களுக்கும் தெரியும். ஆனாலும் இறைவடிவான பகவான் சொல்லும்போது, எப்படி எதிர்த்துப் பேசுவது என்று வாளாவிருந்து விட்டார்கள்.

சப்த ரிஷிகளும் திகைத்துபோய் அந்த இடத்திற்கு வந்து விட்டார்கள். அவர்கள் மட்டுமா? அதிர்ச்சி அடைந்த சூரியபகவானும், சந்திர பகவானும் ஒன்றாக அங்கே வந்துவிட்டார்கள்.

அதற்குள் தர்ப்பணம் செய்வதற்காக கண்ண பரமாத்மா அமர்ந்து விட்டார்

ஆனாலும், துணிச்சலை வரவழைத்துக்கொண்டு, சூரிய, சந்திரர்கள் அவரிடம் கேட்டார்கள்

“பகவானே, இது என்ன வேடிக்கை? இன்று அமாவாசை இல்லையே? நீங்கள் எப்படி இன்று தர்ப்பணம் கொடுக்கலாம். இது மக்களுக்குத் தவறான வழி காட்டுதல் ஆகாதா?”

பரமாத்மா திருப்பிக் கேட்டார், “எப்படித் தவறாகும்? அமாவாசை என்றால் என்ன? சொல்லுங்கள்”

“'இதென்ன கேள்வி... சூரிய பகவானாகிய அவரும் சந்திரனாகிய நானும் சந்தித்துக் கொள்வதுதான் அமாவாசை திதி'' என்றார் சந்திர பகவான்.

“இப்போது நீங்கள் இருவரும் ஒன்றாகத்தானே இருக்கிறீர்கள்? இப்போது சொல்லுங்கள் இன்று அமாவாசைதானே?”

அவர்கள் இருவரும் வாயடைத்துபோய் விட்டார்கள்

அது உண்மையில் அமாவாசை நாளாக இல்லாவிட்டாலும், அவர்கள் இருவரும் சேர்ந்ததால் அமாவாசை நாளாகிவிட்டது.

கண்ண பரமாத்மா எண்ணி வந்த காரியம் தங்கு தடையின்றி நிறைவேறியது!

உண்மை ஜெயிக்க வேண்டும் என்பதற்காக, அதாவது பஞ்ச பாண்டவர்கள் வெற்றிபெற வேண்டுமென்பதற்காக் இப்படி ஒரு தந்திரத்தைக கையாண்டார் கண்ண பரமாத்மா!

இறைவனின் அருள் இருந்தால் என்னதான் நடக்காது?
---------------------------------------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

27.2.13

Astrology: பிறப்பும் இறப்பும் ஒருமுறைதானா?

Astrology: பிறப்பும் இறப்பும் ஒருமுறைதானா?

அலசல் பாடம்

தலைப்பு: இரண்டாம் கல்யாணம்!

வாழ்க்கையில் முக்கியமான நிகழ்வுகள் எல்லாம் ஒருமுறைதான் நடக்கும். பிறப்பும் ஒருமுறைதான். இறப்பும் ஒருமுறைதான். அதுபோல் இன்னும் சில நிகழ்வுகளும் ஒருமுறை நடப்பதுதான் சிறப்பாக இருக்கும். உதாரணம் திருமணம்.

ஆனால் சிலருக்கு துரதிர்ஷ்டவசமாக முதல் திருமணம் அவலத்தில் முடிந்துவிடுவது உண்டு! விவாகரத்தில் முடிந்திருக்கலாம் அல்லது முதல் மனைவி இறந்து போயிருக்கலாம். அவர்களிடம் இந்த ஒருமுறை விதி எடுபடாது. தக்க காரணத்துடன் அவர்கள் இரண்டாவது திருமணம் செய்து கொள்வதில் தவறில்லை

ஆனால் அதற்கு ஒரு வயது வரம்பு உண்டு. அதிக பட்சம் நாற்பது வயது வரை அது சாத்தியப்படும். அதற்கு மேற்பட்ட வயது என்றால் ஒரு சிக்கல் உள்ளது.
மணந்து கொள்ள ஒரு மகராசி கிடைக்க வேண்டுமே?

பெரிய செல்வந்தர் என்றாலும், அவருடைய செல்வத்திற்காக அவரை மணந்துகொள்ள ஒருத்தி முன் வர வேண்டுமே?

ஒரு ஜாதகருக்கு அவருடைய 32ஆவது வயதில் மனைவி இறந்து போய் விட்டாள். அவர் தன்னுடைய 40ஆவது வயதில் மறுமணத்திற்கு முயற்சி செய்தார். என்ன ஆயிற்று? சாத்தியமாயிற்றா?

ஜாதகம் எப்படியோ அப்படித்தானே ஆகும்?

வாருங்கள், அவருடைய ஜாதகத்தை அலசுவோம்!
------------------------------------------------------
கீழே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்:


1. சிம்ம லக்கின ஜாதகம். ரோஹிணி நட்சத்திரக்காரர்.
2. லக்கினாதிபதி கேந்திரத்தில் (4ல்)
3. இரண்டில் (குடும்ப் ஸ்தானத்தில்) ராகு
4. களத்திரகாரகன் சுக்கிரன் பாபகர்த்தாரி யோகத்தில்.
5. யோககாரகன் செவ்வாய் அஸ்தமன்ம் ஆகியுள்ளான்.
6. லக்கினாதிபதி சூரியனும், ஏழாம் அதிபதி சனியும் 2/12 என்னும் பாதக நிலையில் உள்ளார்கள்.
7. அவருக்கு அவருடைய மத்திய வயதில் குரு மகா திசை நடந்து
கொண்டிருந்தது. குரு பகவானும் சூரியனால் அஸ்தமித்துவிட்டார். 8.அஸ்தமனமான கிரகத்தின் திசை நன்மையைச் செய்யாது.
அவர் பல வழிகளில் முயற்சி செய்தும் உரிய பெண் கிடைக்கவில்லை. அவரது இரண்டாவது திருமண ஆசை நிறைவேறவில்லை.

இரண்டாவது திருமணத்திற்கு வேண்டிய அமைப்பு அவர் ஜாதக்த்தில் இல்லை!
-------------------------------------------------------------------------------------------------
இது மேல்நிலை வகுப்பில் எழுதப்பெற்ற பாடம். நான்கு நாட்களாக சில சொந்த வேலைகள் காரணமாகப் புதிதாக எதுவும் எழுத முடியாத சூழ்நிலை. ஆகவே
இந்தப் பாடத்தை இன்று வலை ஏற்றியுள்ளேன். அனைவருக்கும் பயன்படும் என்று நினைக்கிறேன். இதை நான் முன்பே படித்திருக்கிறேன் என்று யாரும்
சொல்ல வேண்டாம். தினமும் என் பதிவிற்கு வந்து செல்லும் சுமார் 4,000 பேர்களும் இதைப் படித்திருக்க வாய்ப்பில்லை. அவர்களுக்கு இது பயன் படட்டும் என்றுதான் பதிவில் ஏற்றியுள்ளேன்.

இதைப்போன்ற அலசல் பாடங்களை இந்தத் தளத்தில் ஏற்றுவதற்குத் தயக்கமாக உள்ளது. இணையத்தில் உலவும் பதிவுத் திருடர்கள்தான் அதற்குக் காரணம். பதிவைப் படித்த மறு நிமிடமே அதைத் திருடிக்கொண்டுப்போய் தங்கள் தளங்களில் காயப் போடுகிறார்கள்.

அதைத் தடுப்பதற்கு ஒரு வழி உள்ளது. இதுபோன்ற பாடங்கள் அனைத்தும் புத்தக வடிவில் வரவுள்ளது. அப்போது அனைவரும் படிக்கலாம். ஆகவே இது
போன்ற அலசல் பாடங்களுக்குப் பொறுத்திருங்கள்.

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++

26.2.13

Astrology.Popcorn Post யாரைப் பார்த்து என்ன(டா) சொல்ல வேண்டும்?


Astrology.Popcorn Post யாரைப் பார்த்து என்ன(டா) சொல்ல வேண்டும்?

Popcorn Post No.41

புதிதாகத் திரையுலகத்திற்கு வருபவர்களுக்கு Screen Test எடுத்துத்தான் நடிப்பிற்குத் தேர்வு செய்வார்கள். சிலருக்கு இயற்கையிலே வசீகரமான முகத்தோற்றம் இருக்கும். சிலருக்கு Photogenic Face இருக்கும் (A subject, generally a person is photogenic if appearing aesthetically or physically attractive or appealing in photographs. Photogenic, describes the earliest method for recording camera images)

அதை வைத்து ஆசாமி கதாநாயகனுக்கு ஏற்றவன் அல்லது வில்லனாக அல்லது காமெடியனாக நடிக்க லாயக்கானவன் என்று முடிவு செய்வார்கள்.

நம் முனுசாமிகள் (அதாங்க நம் முனிவர்கள்) கிரகங்களை அவ்வாறு வகைப் படுத்தியுள்ளார்கள். Screen Test எதுவும் எடுக்க வேண்டாம (எடுக்க முடியுமா என்ன?) பார்த்தவுடன் தெரிந்து கொள்ளும் விதமாக அதைப் பாட்டாகவும் எழுதி வைத்துள்ளார்கள்,

கீழே உள்ள பாடலைப் பாருங்கள்:

“காரியைப் பிடித்துப்பார்த்துக் கடுகவேவிதியைச் சொல்வாய்
சூரியனைப் பிடித்துச்சொல்லுவாய் பலன் பிதுர்க்கு
வீரிய பாம்பைப்பற்றி விளங்கவே யோகஞ் சொல்வாய்
சோர்விலாச் சுகங்கள்றன்னாற் களத்திர பலனைச் சொல்லே”


சனீஷ்வரனை வைத்து ஜாதகனின் விதியைச் சொல்லலாம். அவன் சந்திக்க இருக்கும் கஷ்டங்களைச் சொல்லலாம். எதிர்கொள்ளவிருக்கும் துன்பங்களைச் சொல்லலாம், ஆயுளைச் சொல்லலாம்.

சூரியனை வைத்து அவனுடைய தந்தையைச் சொல்லலாம், தந்தையால் கிடைக்கவிருக்கும் நன்மைகளைச் சொல்லலாம். தந்தைவழி சொத்துக்கள், உறவுகளைச் சொல்லலாம்.

ராகுவை வைத்து ஜாதகனுக்கு, ஜாதகத்தில் உள்ள யோகங்கள் கிடைக்குமா அல்லது ஊற்றிக் கொண்டுவிடுமா என்பதைச் சொல்லலாம்

சோர்வு அடையாத இன்பங்களுக்கும் சுகங்களுக்கும் களத்திரகாரகனான சுக்கிரனை வைத்துப் பலன் சொல்ல வேண்டும்

சரி, மற்ற கிரகங்களுக்கு? அதை அடுத்த பொட்டலத்தில் பார்ப்போம்!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

20.2.13

Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 18


Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 18

ஜோதிடத் தொடர் - பகுதி 18

இதற்கு முன் பகுதியைப் படித்திராதவர்கள் அதைப் படித்துவிட்டு வரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
------------------------------------------------------------------------------------------------
சித்திரை 1 & 2ஆம் பாதங்கள் (கன்னி ராசி)

இது செவ்வாயின் நட்சத்திரம்.

1. புனர்பூசம்
2. ஆயில்யம்
3. மகம்
4. திருவோணம்

ஆகிய 4 நட்சத்திரங்களும் பொருந்தக்கூடிய் நட்சத்திரங்களாகும்.

மகம், சிம்ம ராசிக்கு உரிய நட்சத்திரமாகும். கன்னிக்கு சிம்மம் பன்னிரெண்டாம் வீடு.  (12/2 position to each rasi) வேண்டாம் என்பார்கள். ஆகவே அந்த நட்சத்திரத்தை விலக்கிவிடுவது நல்லது.

அஷ்டம சஷ்டமக் கணக்கை பார்த்தால் 3 நட்சத்திரங்கள் மட்டுமே சிறப்பாகப் பொருந்தும்

அவிட்டம், மிருகசீரிஷம் ஆகிய 2 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களாகும். அவற்றை விலக்கி விடுவது நல்லது.

பெண்ணிற்கும், பையனுக்கும் சித்திரை ஏக நட்சத்திரமாக இருந்தால் பொருந்தாது.

அஸ்விணி, கார்த்திகை, ரோஹிணி, திருவாதிரை, பூசம், பூரம், ஹஸ்தம், விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், சதயம், பூரட்டாதி, ரேவதி ஆகிய 15 நட்சத்திரங்களும் மத்திம (average) பொருத்தம் உள்ள நட்சத்திரங் களாகும். அவற்றுள் ஒன்றைத் தெரிவு செய்து கொள்ளலாம். தவறில்லை.

பரணி, உத்திரம், சுவாதி, உத்திராடம், உத்திரட்டாதி ஆகிய 5 நட்சத்திரங்களும் பொருந்தாது!
-------------------------------------------------------------------------------
(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

19.2.13

Astrology.Popcorn Post சன்னியாசி ஆவதற்கு என்னடா செய்ய வேண்டும்?

 ஆதி சங்கரரின் படம் - ராஜா ரவி வர்மாவின் 
கைவண்ணத்தில் உருவானதாகும்
 
 Astrology.Popcorn Post சன்னியாசி ஆவதற்கு என்னடா செய்ய வேண்டும்?

Popcorn Post no.40

தலைப்பில் வரும் ‘டா’வை யாரும் கண்டு கொள்ள வேண்டாம். முகத்தைச் சுழிக்க வேண்டாம். எனக்கு நானே போட்டுக்கொள்வது அது! அப்போதுதான் ஒரு உற்சாகம், உத்வேகத்துடன் எழுத முடிகிறது!

சன்னியாசி ஆவதற்கு என்னடா செய்ய வேண்டும்?

ஒன்றும் செய்ய வேண்டாம். ஆசைகளைத் துறந்தால் போதும்! மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை ஆகிய மூன்று ஆசைகளையும் உதறித் தள்ளினால் போதும்! முடிகிற காரியமா அது? கஷ்டம்தான்!!

அமெரிக்காவில் வீடு வாங்கியவன். அந்தக் கடன் முடியுமுன்பாகவே, சென்னை அடையாறிலும் ஒரு வீட்டை, வங்கி உதவியுடன் வாங்குகிறான். கேட்டால் அமெரிக்க வீடு பிளைகளுக்காம். அடையாறு வீடு வயதான காலத்தில் அவன் வந்து தங்குவதற்காம். அத்துடன் கோவை சேலம் நெடுஞ்சாலை வழித்தடத்தில், அவனாசி அருகே பத்து ஏக்கர் நிலத்தையும் வாங்கிப் போடுகிறான். கேட்டால் அது சேமிப்புக் கணக்காம். எதிர்காலத்தில் இட விலை எல்லாம் எகிறும்போது ஒன்றுக்குப் பத்து மடங்காகப் பணம் வருமாம். எப்படி இருக்கிறது? இந்த மாதிரி ஆசாமி எல்லாம் சன்னியாசி ஆகவே முடியாது. யாருக்காகச் ச்ம்பாதிக்கிறான், எதற்காகச் சேர்க்கிறான் என்பது அவனுக்கே  தெரியாது. வயதான காலத்தில் சனீஷ்வரன் எப்படிப் புரட்டிப் போடுவான், எந்த மருத்துவமனையில் படுத்திருக்க நேரிடும், ஒருவாய்ச் சோறாவது உண்ண முடியுமா? என்பதெல்லாம் அவனுக்குத் தெரியாது.

இதுதான் இன்றையப் பணத் தேடலின் நிலைமை. ஆயிரங்களைத் தேடி அலைபவனும் இருக்கிறான். லட்சங்களைத் தேடி அலைபவனும் இருக்கிறான். கோடிகளைத் தேடி அலைபவனும் இருக்கிறான். ஆனால் அலைபவன் எவனும் நிம்மதியாக இல்லை. அது மட்டும் உண்மை!

பாலியல் பலாக்காரம் பற்றிய செய்திகள் தினமும் வருகின்றன. பெண்ணாசையையும் மனிதர்கள் துறப்பதில்லை.

சன்னியாசம் என்றால் என்ன? அதை முதலில் பார்ப்போம்!

renounce என்ற ஆங்கில வார்த்தைக்கு (to give up) கை விடு என்று தமிழில் பொருள் வரும்.  renouncer என்றால் எல்லாவற்றையும் விட்டவன் - துறந்தவன் என்ற பொருள்வரும். துறவி என்று வைத்துக்கொள்ளுங்கள். துறவி என்றால், நம்க்குப் புத்தரும், ஆதிசங்கரரும், விவேகானந்தரும், ரமண மகரிஷியும் மனதில் வந்து நிற்பார்கள்.

Sannyasa (Devanagari: संन्यास, saṁnyāsa) is the life stage of the renouncer within the Hindu scheme of āśramas. It is considered the topmost and final stage of the ashram systems and is traditionally taken by men or women over fifty or by young monks who wish to renounce worldly and materialistic pursuits and dedicate their lives to spiritual pursuits. People in this stage of life develop vairāgya, or a state of dispassion and detachment from material life, renouncing worldly thoughts and desires in order to spend the remainder of their lives in spiritual contemplation. A member of the sannyasa order is known as a sannyasin (male) or sannyasini (female).- உபயம் விக்கி மகராஜா!

சன்னியாசி ஆவதற்கான முக்கிய அமைப்பு ஜாதகப் படி என்ன?

நான்கு அல்லது ஐந்து கிரகங்கள் வலுவாகப் பத்தாம் வீட்டில் அல்லது ஏதாவது ஒரு கேந்திர வீட்டில் இருந்தால், அந்த அமைப்பு ஜாதகனைத் துறவறத்தில் த்ள்ளிவிடும். நிச்சயம் அவன் துறவறம் பூண்டு விடுவான். உலக ஆசைகளை எல்லாம் கடாசி விட்டு, இறைவன் திருவடிகளைப் போற்ற ஆரம்பித்துவிடுவான். இறைவனின் மேன்மையை அனுதினமும் நினைக்க ஆரம்பித்துவிடுவான். உலக வாழ்க்கை ஒரு மாயை (illusion)  என்பதை உணர்ந்துவிடுவான்

அவ்வாறு இருக்கும் கிரகங்களில்
சூரியன் அதிக வலுவுடன் இருந்தால், அத்தைகைய சன்னியாசி, காடுகளில் வசிப்பான்.
சந்திரன் அதிக வலுவுடன் இருந்தால், ஜாதகன் அதிகம் படித்தவனாகவும், மரியாதைக்கு உரியவனாகவும் இருப்பான்.
செவ்வாய் அதிக வலுவுடன் இருந்தால், தந்திர, மந்திர சித்து வேலைகளில் நாட்டமுடையவனாக இருப்பான்.
புதன் அதிக வலுவுடன் இருந்தால், அதிகமான சீடர்களுடனும், அதிகமான பேச்சுக்களுடனும் இருப்பான். (He will be a loose talker)
குரு அதிக வலுவுடன் இருந்தால், ஒரு கையில் திருவோட்டுடனும், ஒரு கையில் தண்டத்துடனும் இருப்பான். அவனுக்குப் பல சீடர்கள்/பக்தர்கள், பின்தொடர்பாளர்கள்/  followers  இருப்பார்கள்
சுக்கிரன் அதிக வலுவுடன் இருந்தால் தேசாந்திரியாக, ஊர் விட்டு ஊர் சுற்றுபவனாக இருப்பான்.
சனி அதிக வலுவுடன் இருந்தால், உடலில் ஆடை கூட அணியாமல் பக்கிரிபோல திரிவான்

எல்லாவற்றையும் விட முக்கியமாக அந்தக் கூட்டணியில், சூரியன், சனி, செவ்வாய் ஆகிய மூவரும் இருந்தால், அந்த ஜாதகன் மனைவி, மக்களை இழந்தவனாக இருப்பான். அல்லது அவகளால் துன்பமுற்றவனாக/ சோகமுற்றவனாக இருப்பான். அல்லது அவர்கள் இல்லாதவனாக இருப்பான். அதாவது பிரம்மச்சாரியாக இருப்பான். ஜாதகத்தில் உள்ள மற்ற அமைப்புக்களை வைத்து அந்த நிலை மாறுபடும்.

சன்னியாசி யோகத்திற்கு வேறு பல ஜாதக அமைப்புக்களும் உள்ளன. அது விரிவான பாடம். பின் ஒரு நாளில் அதைப் பார்ப்போம். பொறுத்திருங்கள்

உங்களில் யாரும் சன்னியாசி ஆக வேண்டாம். அதற்காக இதை நான் பதிவிடவில்லை. ஆனால் தேவையில்லாத  ஆசைகளை மனதிற்குள் வளர்த்துக்கொண்டு அவற்றை அடையும் நோக்கத்துடன் வாழ்க்கையின் மென்மையான, மேன்மையான தருணங்களை இழந்து விடாதீர்கள்.

அன்புடன்
வாத்தியார்

========================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

18.2.13

Astrology.Popcorn Post எட்டேகால் லட்சணமும் எமன் ஏறும் வாகனமும்!

Astrology.Popcorn Post எட்டேகால் லட்சணமும் எமன் ஏறும் வாகனமும்!

Popcorn Post No.39

ஒவ்வொன்றாக வருவோம். முதலில் எட்டேகால் லட்சணத்தை எடுத்துக்கொள்வோம். எட்டேகால் லட்சணம் என்றால் என்னவென்று தெரியுமா?

தமிழின் எண் வடிவத்தைக் கீழே கொடுத்துள்ளேன். தமிழில்  ‘அ’ என்று எண்ணால் குறிபிட்டால் எட்டு என்று பொருள். ‘வ’ என்ற எழுத்திற்கு கால் (1/4) என்று பொருள் எட்டேகால் என்பதை ‘அவ’ என்று குறிப்பிடுவார்கள். எட்டேகால் லட்சணம் என்றால் அவலட்சணம் என்று பொருள்படும்

 ஒரு பையனோ அல்லது பெண்ணோ அழகில்லாமல் இருந்தால், அவலட்சணமாக இருக்கிறான் அல்லது இருக்கிறாள் என்று சொல்லாமல் எட்டேகால் லட்சணம் என்பார்கள். எங்கள் பகுதியில் (காரைக்குடியில்) சற்றுக் கெள்ரவமாகச் சொல்வார்கள். உள்ளதுபோல இருக்கிறான் அல்லது இருக்கிறாள் என்று சொல்வார்கள். நாம அதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

எமன் ஏறும் வாகனம் என்பது எருமை மாட்டைக் குறிக்கும். படு சுட்டியாக இருக்கும் பையனைக் கிராமப் புறங்களில் ‘எமப் பயலாக’ இருக்கிறான் என்பார்கள். எமன் கொண்டு போவதைப் போல அசந்தால் பையனும் கொண்டு போய்விடுவான் என்று பொருள். சற்று மந்தமாக இருக்கும் பையனை எமன் ஏறும் வாகனம்போல பையன் இருக்கிறான் என்பார்கள்.

வாரியார் சுவாமிகள் சொல்வார்கள்  “இன்று எல்லோரும் எருமைப் பாலத்தான் குடிக்கிறார்கள். அதனால் தெருவில் பொறுப்பில்லாமல் எருமைகள் போலதான் நடந்து போகிறார்கள். வாகனங்களுக்கு வழி விட்டு ஒதுங்குவதில்லை”

மாடுகளிலும் பலவகை உள்ளன. உழுகின்ற மாடு, வண்டி மாடு. கோயில் மாடு என்று அவற்றையும் வகைப்படுத்தலாம். அவற்றைப் பற்றி சுவாரசியமாக எழுதலாம். அதைப் பின் ஒரு நாளில் எழுதுகிறேன். இப்போது பாடத்தைப் பார்ப்போம்

சனீஷ்வரன் சில வீடுகளில் இருக்கும்போது அழகான தோற்றத்துடன் இருப்பார். உதாரணம் துலாம் வீடு. அது அவருக்கு உச்ச வீடு. அங்கே இருக்கும்போது ஃபுல் மேக்கப்புடனும், பட்டு வேஷ்டி சட்டையுடனும், கையில் ஆறு பவுன் தங்க பிரேஸ்லெட்டுடனும், கழுத்தில் தங்கச் சங்கிலியுடனும் அழகாகக் காட்சியளிப்பார். மேஷத்தில் இருக்கும்போது சுய ரூபத்துடன் இருப்பார். எண்ணெய் தேய்த்துக் குளித்துவிட்டு வரும் பெண்ணைப்போல சுயரூபத்துடன் இருப்பார். அது அவருக்கு நீச வீடு.

அவர் அவலட்சணமாகக் காட்சியளிக்கும் வீடு ஒன்றும் உள்ளது. அது என்ன வீடூ?

எட்டாம் வீடு அது!

அதுதான் ஜாதகத்தில் உள்ள எட்டாம் வீடு

எட்டாம் வீட்டிற்கும் சனிக்கும் உள்ள உறவைப் பற்றி 4 பக்கங்களுக்கு விவரமாக எழுதலாம். எழுதியிருக்கிறேன், மேல்நிலைப் பாட வகுப்பில் (classroom2013) நேற்றுதைப் பதிவிட்டுள்ளேன். அதை இங்கே கொடுத்தால், பதிவிட்ட ஒரு மணி நேரத்திற்குள்ளாக, அதாவது துவைத்த ஈரம் காயுமுன்பாகவே அதைச் சுருட்டி எடுத்துக்கொண்டு ஓடிவிடுவார்கள். இணையத்தில் அத்தனை நல்லவர்கள் திரிகிறார்கள். ஆகவே இங்கே காயப் போடவில்லை. மேல் நிலைப் பாடங்கள் அடுத்த ஆண்டு புத்தகமாக வரும் அப்போது அனைவரும் படிக்கலாம்.

உங்களுடைய மேன்மையான தகவலுக்காக அதில் உள்ள சில விதிகளை (Rules) மட்டும் சுருக்கிக் கொடுத்துள்ளேன்!
---------------------------------------------------------------------------------------------------
எட்டில் சனி அமர்ந்து, தன்னுடைய மூன்றாம் பார்வையாக பத்தாம் வீட்டைப் பார்ப்பது நல்ல அமைப்பல்ல! அப்படி அமையப் பெற்ற ஜாதகன் பலவிதமான சோதனை களையும், தடைகளையும் தன்னுடைய வேலையில் அல்லது தொழிலில் சந்திக்க நேரிடும்.

அத்துடன் வேலை ஸ்திரமில்லாமல் இருக்கும். ஸ்திரமில்லாமல் என்றால் என்னவென்று தெரியுமா? Instability என்று பொருள்.

எந்தத் துறையென்றாலும், ஜாதகனுக்கு அது பிடித்தமில்லாமல் போகும். கவலை அளிப்பதாக இருக்கும்.

எத்தனை திறமை இருந்தாலும், எத்தனை திறமையை வேலையில் காட்டினாலும், அந்த வேலையில் கிடைக்கும் சொற்ப வருமானத்தை வைத்து, அதன் மேல் வெறுப்பும் கூடவே இருக்கும். வேலைக்குத் தகுந்த ஊதியம் இல்லாவிட்டால், எப்படிப் பிடிப்பு வரும்? வெறுப்புத்தானே வரும்!

பத்தாம் வீட்டில் அதிகமான பரல்கள் இருந்தாலும், அல்லது பத்தாம் வீட்டுக்காரனின் பார்வையிலும் அந்த வீடு இருந்தாலும், அல்லது சுபக்கிரகங்களின் பார்வையில் அந்த வீடு இருந்தாலும், மேற்சொன்ன பலன்கள் இல்லாமல் நல்ல பலன்கள் நடைபெறும். அதையும் மனதில் கொள்க!

100 கிராம் பாப்கார்ன் பொட்டலத்திற்கு இதுதான் அளவு. வேறு ஒரு பொட்டலத்துடன் நாளை சந்திக்கிறேன்

அன்புடன்
வாத்தியார்

+++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

14.2.13

Astrology.Popcorn Post. வாலன்டைன் தினமும் வாழைக்காய் பஜ்ஜியும்!




Astrology.Popcorn Post. வாலன்டைன் தினமும் வாழைக்காய் பஜ்ஜியும்!

Popcorn Post no.38

இன்று காதலர் தினம்! (Valentine Day)


காதலர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

காதலித்தவனையே அல்லது காதலித்த பெண்ணையே மணந்து கொள்ளுங்கள். ஆனால் உங்களை வளர்த்து ஆளாக்கிய பெற்றோரின் சம்மதத்தையும் பெற்று மணந்து கொள்ளுங்கள். அவர்கள் இல்லாமல் நீங்கள் இல்லை. காதலுக்காக அவர்களைப் புறந்தள்ளிவிடாதீர்கள். அவர்களை அழ வைத்தால் அந்தப் பாவம் உங்களைச் சும்மா விடாது!

ஜாதி, மதம், இனம் குறுக்கே வந்து அவர்கள் சம்மதிக்கவில்லை என்றால் என்ன செய்வது?

போராடுங்கள். உள்ளிருப்புப் போராட்டம் நடத்துங்கள். அவர்களைச் சம்மதிக்க வையுங்கள். ஒரு கள்ளியை அல்லது மங்கையாக இருந்தால் ஒரு கள்ளனை வசப்படுத்திக் கைக்குள் போட்டுக்கொண்ட உங்களுக்கு, பெற்றோர்களை வசப்படுத்துவதா கஷ்டம்?

ஆனால் ஜாதகப் பொருத்தம் மட்டும் பார்க்காதீர்கள். பார்த்துப் பொருந்தவில்லை என்றால் என்ன செய்வது? பாதியில் விட முடியுமா? பாதியில் விட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

எத்தனை ஆயிரம் குறுஞ்செய்திகள் (SMS), புகைப்படங்கள், மின்னஞ்சல்கள், நண்பர்கள் வட்டாரம் என்று சாட்சியாக மாட்டிக்கொண்டு உள்ளனவோ? அவற்றை எல்லாம் எப்படி விலக்க முடியும்? அத்துடன் புறநகர்ப் பகுதிகளில் உள்ள விடுதிகளில் அறை அல்லது காட்டேஜ் எடுத்து, போட்ட ஆட்டங்கள் எத்தனையோ? கணக்கு வைத்துக் கொள்ள முடியுமா என்ன? டூ வீலரில் அல்லது பஸ் பயணத்தில் உரசிய உரசல்கள் எத்தனையோ? ஆகவே ஜாதகத்தை எல்லாம் இருவரும் மூட்டை கட்டி வைத்துவிட்டு, திருமணம் செய்து கொள்ளுங்கள்.

திருமணத்திற்குப் பிறகு அவனுடைய அல்லது அவளுடைய உண்மையான குணம் மற்றும் குடும்ப பாரம்பரியம் முழுமையாகத் தெரியும்போது, பிடிக்கவில்லை என்றால் என்ன செய்வது?

காதல் புனிதமானது. ஒரு வருடம் அல்லது ஒரு மாதம் ஏன் ஒருவாரம் வாழ்ந்தாலும் போதும். காதலித்தவனையே மணந்து கொள்ளுங்கள்.

ஜாதகம் பார்க்காமல் மணந்து கொள்ளும்போது, அவனுடைய அல்லது அவளுடைய ஜாதகத்தில் சுபக்கிரகங்கள் வக்கிரமாகி அல்லது நீசமாகி ஒன்றுக்கும் லாயக்கில்லாமல் இருந்தால் என்ன செய்வது? அல்லது ஆயுள் பாவம் அடிபட்டுப்போயிருந்தால் என்ன செய்வது?

நீங்கள் ஒன்றும் செய்ய வேண்டாம். ஒன்றும் செய்ய முடியாது. இந்த வியாக்கியானம் எல்லாம் காதலில் குதிப்பதற்கு முன்பு இருந்திருக்க வேண்டும்.

என்னிடம் கேட்டிருந்த ஒரு பெண்ணிற்கு இதை எழுதியபோது, சட்டென்று அவள் பதில் அனுப்பினாள்: “சார், எனக்கு அவனைப் பற்றிக் கவலை இல்லை. திருமணத்திற்குப் பிறகு அவன் முரண்டு பிடித்தால், அவனைப் பிடித்துக் கொடுத்து, மகளிர் காவல் நிலைத்தில் வைத்து முட்டிக்கு முட்டி தட்டி சரி பண்ணி விடுவேன். எனக்குப் பிரச்சினை எல்லாம் என் பெற்றோர்களை வைத்துத்தான். என்னுடைய காதலுக்கு அவர்கள் சம்மதிப்பார்களா? என்னுடைய திருமணம் அவர்கள் ஆசியுடன் நடக்குமா? அதை மட்டும் நீங்கள் என் ஜாதகத்தைப் பார்த்துச் சொல்லுங்கள் ப்ளீஸ்....!”

எப்படி இருக்கிறது நிலைமை பாருங்கள்!

அந்தப் பெண்ணின் துணிச்சலைப் பாராட்டுவதா? அல்லது அவளிடம் மாட்டிக்கொண்டுள்ள அப்பாவி ஜீவனுக்காக ஒரு சொட்டுக் கண்ணீர் விடுவதா நீங்களே சொல்லுங்கள்!

பத்து சதவிகிதம் இப்படியும் இருக்கலாம். ஆகவே காதலர்களே ஜாதகத்தை மறந்து விட்டு, பெற்றோருடைய ஆசியுடன் திருமணம் செய்து கொள்ளுங்கள்

உங்கள் திருமண வாழ்வு வெற்றிபெற வாழ்த்துக்கள்!
-----------------------------------------------------------
“வாத்தி (யார்) கட்டுரைக்கும் தலைப்பிற்கும் என்ன சம்பந்தம்?”

“இருக்கிறது ராசா, காதலிக்க வழியில்லாமல் (அதாவது ஒருத்திகூடக் கிடைக்காமல்) அல்லது காதலுக்கு வாய்ப்பில்லாம்ல் நேரடியாக திருமண பந்தததில் மாட்டிக்கொண்டு விட்டவர்கள், அல்லது மாட்டிக்கொண்டு விட்டதாக நினைப்பவர்கள் எல்லாம், வருந்தாமல் சூடாக வாழைக்காய் பஜ்ஜி இரண்டைச் சாப்பிட்டுவிட்டு, ஒரு கோப்பைஃபில்டர் காப்பியையும் ருசித்துச் சாப்பிட்டுவிட்டுத் தங்கள் ஜாதகத்தை எடுத்துப் பார்க்கலாம். அதில் காதல் மறுக்கப்பட்டுள்ளது தெரியவரும்! டென்சன் இல்லாமல் பார்ப்பதற்குத்தான் வாழைக்காய் பஜ்ஜி & ஃபில்டர் காப்பி! சம்ஜே க்யா?

அன்புடன்
வாத்தியார்




வாழ்க வளமுடன்!

வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

12.2.13

Astrology.Popcorn Post யார் யார் எங்கே இருக்கக்கூடாது?

Astrology.Popcorn Post யார் யார் எங்கே இருக்கக்கூடாது?

Popcorn Post No.37

நமக்கு வேண்டியவர்கள் வேண்டாத இடத்தில் இருக்கக்கூடாது. வேண்டாதவர்கள், நமக்கு வேண்டிய இடத்தில் இருக்கக்கூடாது.

ஜோதிடத்தில் சுபக்கிரகங்கள் மூவர். சந்திரன், குரு, சுக்கிரன் ஆகியோர் நமக்கு மிகவும் வேண்டியவர்கள். அவற்றுள் சந்திரன் வளர்பிறைச் சந்திரனாக இருந்தால் மிகவும்  நல்லது. அத்துடன் தனித்திருக்கும் அதாவது தீய கூட்டணி இல்லாத புதனும் நமக்கு வேண்டியவர்தான். அவர்கள் நல்ல இடங்களில் இருக்க வேண்டும். அதாவது கேந்திரம் அல்லது திரிகோண வீடுகளில் இருக்க வேண்டும். அதோடு ஒருவருக்கொருவர் எழில் இருந்தாலும் நல்லதுதான்.

அத்துடன் அவர்கள் காரகர்களை விட்டு விலகியும் இருக்ககூடாது.

குரு தனகாரகன். சந்திரன் மனகாரகன். இருவரும் ஒருவருக்கொருவர் எட்டு/ஆறு நிலைப்பாட்டில் அதாவது அஷ்டம சஷ்டம ஸ்தானங்களில் இருக்கக்கூடாது. இருந்தால் பணம் இருந்தாலும் அல்லது பணவரவு இருந்தாலும் மகிழ்ச்சி இருக்காது.

அதேபோல சூரியன் உடல்காரகன். அவருக்கு எட்டில் குரு சென்று அமரக்கூடாது. உடல் நலத்திற்கு அவருடைய ஆசீர்வாதம் வேண்டுமல்லவா?

சனியும், சுக்கிரனும் நண்பர்கள். சனி கர்மகாரகன். சுக்கிரன் சுகபோகங்களுக்கு அதிபதி. இருவரும் ஒருவருக்கொருவர் எட்டு/ஆறு நிலைப்பாட்டில் அதாவது அஷ்டம சஷ்டம ஸ்தானங்களில் இருக்கக்கூடாது. இருந்தால், ந்ல்ல வேலை அல்லது தொழில் அமைந்தாலும், அது நாம் சுகப்படும்படி இருக்காது.

அத்துடன் அரசகிரகமான சூரியனுக்குக் கேந்திர வீடுகளில் அதாவது 4, 7 மற்றும் பத்தில் ராகு இருக்கக்கூடாது. நமக்கு சூரியனால் கிடைக்ககூடிய அரச செல்வாக்குகள், பெயர், புகழ் ஆகியவற்றை ராகு கிடைக்காமல் செய்து விடுவான்

இதை எல்லாம் யார் சொன்னது?

வேறு யார் சொல்வார்கள்? நம் முனிசாமி (அதாங்க நம் முனிவர்களில் ஒருவர்) சொல்லியிருக்கிறார்.  அவர்களுக்குத்தான் எதையும் உரையாகச் சொல்லும் பழக்கம் இல்லாததால், பாடலாகச் சொல்லியிருக்கிறார். பாடல் கீழே உள்ளது. படித்துப் பாருங்கள்

குடியவனாட்சியாகக் குருவுதையத் தினிற்க
அடியவனுக்குச் சமமாகியவர்க் கேழில்ப் பிறையுதிக்க
வெடியவன்காரி சேய்க்கு விண்ண ரவியவரைப்பாரார்
கொடியிடைனிற் பனூறாய்க் குறியிதுப்பா மாதே!


குருவுக்கு எட்டாமிடத்தில் சந்திரனும் இருக்கலாகாது
சூரியனுக்கு எட்டில் குருவும் இருக்கலாகாது
சனிக்கு எட்டில் சுக்கிரனுமிருக்கலாகாது
சூரியனுக்கு ஏழாம் இடத்திலும் நான்காமிடத்திலும் ராகுவும் இருக்கலாகாது
----------------------------------------------
அடுத்த பாப்கார்ன் பொட்டலம் நாளைக்கு! அதுவரை பொறுத்திருங்கள்

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

11.2.13

Astrology.Popcorn Post: வாசல்படியில் உட்கார்ந்து கொண்டு ஏன்டா வம்பு செய்கிறாய்?


Astrology.Popcorn Post: வாசல்படியில் உட்கார்ந்து கொண்டு ஏன்டா வம்பு செய்கிறாய்?

பாப்கார்ன் போஸ்ட் எண்.36 

பாவ சந்திப்பில் இருக்கும் கிரகத்திற்கு என்ன சாமி பலன்?

ஒரு பாவத்திற்கு அல்லது ஒரு வீட்டிற்கு அல்லது உங்களுக்குப் புரியும்படி சொல்வதென்றால் ஒரு ராசிக்கு 30 பாகைகள் என்பது உங்களுக்குத் தெரியும்.

ஒரு வீட்டின் முடிவுப் பகுதியில் அதாவது 28 பாகைகள் அல்லது அதற்கு மேலான பாகையில் இருக்கும் கிரகம் பாவசந்தியில் இருப்பதாகக் கொள்வார்கள். அதாவது ஒரு பாவத்திற்கும் அடுத்த பாவத்திற்கும் இடையில் இருப்பதாகக் கொள்வார்கள். Border Position என்று கொள்ளலாம். சில ஜாதகங்களில் இந்த நிலைமை இருக்கும்.

அதாவது வீட்டிற்கு உள்ளேயும் இல்லாமல் அல்லது வெளியேயும் இல்லாமல், நிலைப்படி அருகே உட்கார்ந்திருக்கும் நிலைமை.

திருக்கணிதம் அல்லது வாக்கியப் பஞ்சாங்கப்படி ஜாதகங்களைக் கணிக்கும்போது, இந்த நிலைப்படி கிரகங்கள் படுத்தி எடுக்கும்.

ஒரு அட்டவணையில் (Chart) சிம்மத்தில் இருக்கும் கிரகம் அடுத்த அட்டவணையில் (Chart) கன்னியில் இருப்பதாகக் காட்டும். ஜாதகன் குழம்பிப்போவான்.

எதை எடுத்துக்கொள்வது?

நம் முனிசாமிகள் (அதாங்க நம் முனிவர்கள்) எழுதி வைத்துவிட்டுப்போனபடி வாக்கிய பஞ்சாங்கக் கணிப்புக்களையே எடுத்துக்கொள்வது நல்லது.

பாவசந்திப்பில் இருக்கும் கிரகம் எவ்வாறு பலன் கொடுக்கும்?

ஒரு பாவத்தின் மத்தியில் இருக்கும் கிரகம அந்த பாவத்திற்கு உரிய முழுப்பலனையும் கொடுக்கும். அதாவது உதாரணமாக ஒன்பதாம் வீட்டின் மத்தியில் இருக்கும் கிரகம்  தன் தசாபுத்தியில் தனக்குரிய பலனை முழுமையாகக் கொடுக்கும். (Both by placement and by ownership)

உதாரணமாக ஐந்தாம் வீட்டு அதிபதி குரு பகவான் ஒன்பதாம் வீட்டில் (திரிகோண வீடு) அமர்ந்திருந்தால், ஐந்தாம் வீட்டிற்கான பலனையும், ஒன்பதாம் வீட்டிற்கான பலனையும் ஒருசேரத் தன்னுடைய தசாபுத்திகளில் தருவார். அதேவீட்டில் அவர் வாசற்படியில் அமர்ந்திருந்தால் பலன்கள் வெகுவாகக் குறைந்துவிடும். மத்தியப் பகுதியில் இருந்து வாசற்படி நோக்கி ந்கர ந்கரவே அதற்குத் தகுந்தாற்போல பலன்கள் குறைந்து கொண்டே வரும்

ஆசாமி வாசற்படியில் அமர்ந்திருப்பதைக் கவனிக்காமல் பலன் சொன்னால, பலன்கள் தவறாகிப் போகும்.

ஏழாம் வீட்டில் சுபக்கிரகம் இருப்பதைப் பார்த்துவிட்டு, உனக்கு நல்லமனைவி, நீ விரும்பும்படி அழகான மனைவி கிடைப்பாள் என்று ஜோதிடர் சொன்னதை வைத்து, நம்ம நாயகன்  ஊ...லல்லல்லா என்று கனவுலகில் பாடிக்கொண்டிருப் பான். ஆனால் அதே சுபக்கிரகம் அந்த வீட்டின் வாசற்படியில் இருந்தால், அவன் பாட்டு திருமணத்தோடு முடிவிற்கு வந்து விடும். தொடராது! அதாவது ஜோதிடர் சொன்னது தவறான கணிப்பாகிவிடும்!

அர்த்தமாயிந்தா சாமிகளா?

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

7.2.13

Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 17

 Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 17

ஜோதிடத் தொடர் - பகுதி 17

இதற்கு முன் பகுதியைப் படித்திராதவர்கள் அதைப் படித்துவிட்டு வரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
------------------------------------------------------------------------------------------------
ஹஸ்த நட்சத்திரம் (கன்னி ராசி)

இது சந்திரனின் நட்சத்திரம்.

1. பரணி
2. கார்த்திகை
3. மிருகசீரிஷம்
4. புனர்பூசம்
5. பூசம்
6. ஆயில்யம்
7. மகம்
8. பூரம்
9. உத்திரம்
10. கேட்டை
11. மூலம்
12. பூராடம்
13. உத்திராடம்.
14. உத்திரட்டாதி
15. ரேவதி

ஆகிய 15 நட்சத்திரங்களும் பொருந்தக்கூடிய் நட்சத்திரங்களாகும். பூரட்டாதி 4ஆம் பாதம் மட்டும் பொருந்தும்

இவற்றுள் அவிட்டம் 3 &4ஆம் பாதங்களும், பூரட்டாதி 1, 2 & 3ஆம் பாதங்களும் கும்ப ராசிக்கு உரியனவாகும்.. ஜோதிடர்கள் கன்னிக்கு ஆறாம் இடம் கும்பம் கும்பத்திற்கு எட்டாம் இடம் கன்னி ஆகவே அஷ்டம சஷ்டம நிலைப்பாடு (6/8 position to each rasi) வேண்டாம் என்பார்கள். ஆகவே அவற்றை விலக்கிவிடுவது நல்லது.

மேஷ ராசிக்கு உரிய அஸ்விணி, பரணி, கார்த்திகை 1ம் பாதம் ஆகிய நட்சத்திரங்களுக்கு 8/6 நிலைப்பாடு வரும். ஆகவே அவற்றை விலக்கிவிடுவது நல்லது.

மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம் ஆகியவை சிம்ம ராசிக்கு உரிய நட்சத்திரங்களாகும். கன்னிக்கு சிம்மம் பன்னிரெண்டாம் வீடு.  (12/1 position to each rasi) வேண்டாம் என்பார்கள். ஆகவே அந்த நட்சத்திரங்களையும் விலக்கிவிடுவது நல்லது.

அஷ்டம சஷ்டமக் கணக்கை பார்த்தால் 8 நட்சத்திரங்கள் மட்டுமே சிறப்பாகப் பொருந்தும்

ரோஹிணி, திருவாதிரை, சுவாதி, திருவோணம், சதயம் ஆகிய 5 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களாகும். அவற்றை விலக்கி விடுவது நல்லது.

பெண்ணிற்கும், பையனுக்கும் ஹஸ்தம் ஏக நட்சத்திரமாக இருந்தால் பொருந்தும். என்ன ஒரே நட்சத்திரத்தில் தம்பதிகள் இருந்தால், ஏழரைச் சனி பிடிக்கும்போதும், அஷ்டமச்சனி (எட்டில் சனி) வரும்போதும், சனீஷ்வரன் இருவரையும் ஒன்றாகப் பிடித்து ஆட்டி வைப்பார்.. அதனால் பொதுவாக ஒரே நட்சத்திரம் அல்லது ஒரே ராசியைத் தவிர்ப்பது நல்லது.

அஸ்விணி, சித்திரை 1 & 2ஆம் பாதங்கள், விசாகம், அனுஷம், அவிட்டம் 1 & 2ஆம் பாதங்கள், பூரட்டாதி 1, 2 & 3ஆம் பாதங்கள் மத்திம பொருத்தம் உள்ளவையாகும்.

சித்திரை 3 & 4ஆம் பாதங்கள் பொருந்தாது!
-------------------------------------------------------------------------------
(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++