Astrology.Popcorn Post யார் யார் எங்கே இருக்கக்கூடாது?
Popcorn Post No.37
நமக்கு வேண்டியவர்கள் வேண்டாத இடத்தில் இருக்கக்கூடாது. வேண்டாதவர்கள், நமக்கு வேண்டிய இடத்தில் இருக்கக்கூடாது.
ஜோதிடத்தில் சுபக்கிரகங்கள் மூவர். சந்திரன், குரு, சுக்கிரன் ஆகியோர் நமக்கு மிகவும் வேண்டியவர்கள். அவற்றுள் சந்திரன் வளர்பிறைச் சந்திரனாக இருந்தால் மிகவும் நல்லது. அத்துடன் தனித்திருக்கும் அதாவது தீய கூட்டணி இல்லாத புதனும் நமக்கு வேண்டியவர்தான். அவர்கள் நல்ல இடங்களில் இருக்க வேண்டும். அதாவது கேந்திரம் அல்லது திரிகோண வீடுகளில் இருக்க வேண்டும். அதோடு ஒருவருக்கொருவர் எழில் இருந்தாலும் நல்லதுதான்.
அத்துடன் அவர்கள் காரகர்களை விட்டு விலகியும் இருக்ககூடாது.
குரு தனகாரகன். சந்திரன் மனகாரகன். இருவரும் ஒருவருக்கொருவர் எட்டு/ஆறு நிலைப்பாட்டில் அதாவது அஷ்டம சஷ்டம ஸ்தானங்களில் இருக்கக்கூடாது. இருந்தால் பணம் இருந்தாலும் அல்லது பணவரவு இருந்தாலும் மகிழ்ச்சி இருக்காது.
அதேபோல சூரியன் உடல்காரகன். அவருக்கு எட்டில் குரு சென்று அமரக்கூடாது. உடல் நலத்திற்கு அவருடைய ஆசீர்வாதம் வேண்டுமல்லவா?
சனியும், சுக்கிரனும் நண்பர்கள். சனி கர்மகாரகன். சுக்கிரன் சுகபோகங்களுக்கு அதிபதி. இருவரும் ஒருவருக்கொருவர் எட்டு/ஆறு நிலைப்பாட்டில் அதாவது அஷ்டம சஷ்டம ஸ்தானங்களில் இருக்கக்கூடாது. இருந்தால், ந்ல்ல வேலை அல்லது தொழில் அமைந்தாலும், அது நாம் சுகப்படும்படி இருக்காது.
அத்துடன் அரசகிரகமான சூரியனுக்குக் கேந்திர வீடுகளில் அதாவது 4, 7 மற்றும் பத்தில் ராகு இருக்கக்கூடாது. நமக்கு சூரியனால் கிடைக்ககூடிய அரச செல்வாக்குகள், பெயர், புகழ் ஆகியவற்றை ராகு கிடைக்காமல் செய்து விடுவான்
இதை எல்லாம் யார் சொன்னது?
வேறு யார் சொல்வார்கள்? நம் முனிசாமி (அதாங்க நம் முனிவர்களில் ஒருவர்) சொல்லியிருக்கிறார். அவர்களுக்குத்தான் எதையும் உரையாகச் சொல்லும் பழக்கம் இல்லாததால், பாடலாகச் சொல்லியிருக்கிறார். பாடல் கீழே உள்ளது. படித்துப் பாருங்கள்
குடியவனாட்சியாகக் குருவுதையத் தினிற்க
அடியவனுக்குச் சமமாகியவர்க் கேழில்ப் பிறையுதிக்க
வெடியவன்காரி சேய்க்கு விண்ண ரவியவரைப்பாரார்
கொடியிடைனிற் பனூறாய்க் குறியிதுப்பா மாதே!
குருவுக்கு எட்டாமிடத்தில் சந்திரனும் இருக்கலாகாது
சூரியனுக்கு எட்டில் குருவும் இருக்கலாகாது
சனிக்கு எட்டில் சுக்கிரனுமிருக்கலாகாது
சூரியனுக்கு ஏழாம் இடத்திலும் நான்காமிடத்திலும் ராகுவும் இருக்கலாகாது
----------------------------------------------
அடுத்த பாப்கார்ன் பொட்டலம் நாளைக்கு! அதுவரை பொறுத்திருங்கள்
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

குரு வணக்கம்.
ReplyDeleteஅருமையான பாடம்..நன்றி
எனக்கு கன்னி லக்னத்தில் குரு அமர்ந்து ஆறாம் ஸ்தானமான கும்பத்தில் சூரியன்-சனி, புதனுடன் இருக்கிறார்.சூரியனுக்கு எட்டில்தான் குரு.எல்லாம் வல்ல நாராயணன் எல்லாம் அருளுவான் என்ற நம்பிக்கை உள்ளது..மீண்டும் ஐயாவுக்கு நன்றிகள்.
அரியும் பணியை எப்படி செய்வதென
ReplyDeleteஅறிய தந்த அனந்த முருகனுக்கு நன்றி
தனமும் அத்துடன்
மனமும் 6/8ல் கூடாதென சொன்ன
பதிவு பத்திர படுத்த வேண்டியது
பலருக்கும் இது இருப்பது உண்மையே
வலமாக சுழல விடுகிறோம்
வழக்கம் போல் இந்த பாடலினை
(படம் பலே பாண்டியா)
யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியல்லே
அண்டங்காக்கைக்கும்
குயில்களுக்கும் பேதம் புரியல்லே
பேரெடுத்து உண்மையைச் சொல்லி பிழைக்க முடியல்லே
நானிருக்கும் இடத்தினிலே
அவன் இருக்கின்றான்
அவனிருக்கும் இடத்தினிலே
நான் இருக்கின்றேன்
நாளை எங்கே யாரிருப்பார்
அதுவும் தெரியல்லே - இப்போ
நல்லவனுக்கும் கெட்டவனுக்கும் பேதம் தெரியல்லை
Simple but very useful lesson...Thank you Sir...
ReplyDeleteNice popcorn Thank U very much Sir.
ReplyDeleteRespected Sir,
ReplyDeleteHappy morning, small dose but highly effective. thanks for your post and support.
Have a pleasant day,
With kind regards,
Ravi
எனக்காக எழுதியது போல் உள்ளது.
ReplyDelete1. குருவும் சந்திரனும் 8/6
2. சுக்கிரனும் சனியும் 8/6
நீங்கள் மேற்கோள் காட்டிய அனைத்தும் எனக்கு பொருந்துகிறது.
வாத்தியார் ஐயா அவர்களுக்கு வணக்கங்கள்.இன்றைய பாடம் மிஹவும் நன்று.முனுசாமிகள் சொன்னவை உண்மைதான் எனினும் நாம் வாங்கி வந்த வரம் முனுசாமிகளின் அனுமதியை வாங்காமல் வந்து உட்கார்ந்து விட்டனரே.குருவும்,சந்திரனும் மிதுன லக்கினத்தில் கேதுவுடன் கூட்டணி.தொழில் காரகன் சனி துலாமில் உச்சம்,எனினும் சுககாரகன் சனிக்கு 6ம் இடமான மீனத்தில் உச்சம். உச்ச சூரியன் புதனுடன் மேசத்தில் இருந்து உச்ச சனியின் நேர் பார்வையில் உள்ளனர். சூரியனுக்கு 9ல் ராகு (கோணத்தில்).இந்த அமைப்பு பாதிப்பு தருமா.
ReplyDeleteமொத்தத்தில் இந்த அமைப்பு நித்திய கண்டம், பூரண ஆயுசு என்பதைப் போல உள்ளது.
நன்றியுடன்,
-Peeyes.
அய்யா வணக்கம் , எனக்கு ராகு சூரியனுக்கு ஏழாம் இடத்தில் ( சூரியன் கும்பத்தில் , ராகு சிம்மத்தில் ) அரசு வேலை நிலைக்கவில்லை
ReplyDeleteஐயா அவர்களுக்கு வணக்கம்.
ReplyDeleteநேற்றைய பாப்கார்ன் பாடமான வாசற்படியில்.... தங்களின் உதாரணம் 5ம் வீட்டு அதிபதியாக வரும் குரு, 9ம் வீட்டில் அமர்ந்தால் 5 மற்றும் 9 ம் வீடுகளுக்குரிய பலன்களை தருவார்.ஆனால் அதே குரு 8ம் வீடு அல்லது 2ம் வீட்டுக்கும் அதிபதியாக வருகிரார் அல்லவா? அப்போது அவர் அந்த 2/8 ம் வீட்டு பலனையும் சேர்த்து தர வேண்டும் அல்லவா?.
விளக்கம் கிடைத்தால் நன்று.
நன்றியுடன்
-Peeyes.
important lesson for all
ReplyDeleteசந்திரனுக்கு எட்டாம் இடத்தில் குரு, அதாவது குருவிற்கு ஆறாமிடத்தில் சந்திரன்இந்த அமைப்புக்கும் மேற்படி பாடல் பொருந்தும் என்று தோன்றுகிறது.மற்ற கிரகங்களுக்கும் அவ்வாறேதானா?
ReplyDeleteஎப்படியாயினும் 8x6 அல்லது 6x8 சரியாக வருவதில்லை என்றே தோன்றுகிறது.
/////Blogger Thava Kumaran said...
ReplyDeleteகுரு வணக்கம்.
அருமையான பாடம்..நன்றி
எனக்கு கன்னி லக்னத்தில் குரு அமர்ந்து ஆறாம் ஸ்தானமான கும்பத்தில் சூரியன்-சனி, புதனுடன் இருக்கிறார்.சூரியனுக்கு எட்டில்தான் குரு.எல்லாம் வல்ல நாராயணன் எல்லாம் அருளுவான் என்ற நம்பிக்கை உள்ளது..மீண்டும் ஐயாவுக்கு நன்றிகள்./////
நம்பினோர் கைவிடப் படுவதில்லை. அந்த நம்பிக்கைதான் முக்கியம். நன்றி!
/////Blogger அய்யர் said...
ReplyDeleteஅரியும் பணியை எப்படி செய்வதென
அறிய தந்த அனந்த முருகனுக்கு நன்றி
தனமும் அத்துடன்
மனமும் 6/8ல் கூடாதென சொன்ன
பதிவு பத்திர படுத்த வேண்டியது
பலருக்கும் இது இருப்பது உண்மையே
வலமாக சுழல விடுகிறோம்
வழக்கம் போல் இந்த பாடலினை
(படம் பலே பாண்டியா)
யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியல்லே
அண்டங்காக்கைக்கும்
குயில்களுக்கும் பேதம் புரியல்லே
பேரெடுத்து உண்மையைச் சொல்லி பிழைக்க முடியல்லே
நானிருக்கும் இடத்தினிலே
அவன் இருக்கின்றான்
அவனிருக்கும் இடத்தினிலே
நான் இருக்கின்றேன்
நாளை எங்கே யாரிருப்பார்
அதுவும் தெரியல்லே - இப்போ
நல்லவனுக்கும் கெட்டவனுக்கும் பேதம் தெரியல்லை/////
நல்லது. உங்களின் கருத்துப் பதிவிற்கும் சுழல விட்ட பாடலுக்கும் நன்றி விசுவநாதன்!
/////Blogger Arul said...
ReplyDeleteSimple but very useful lesson...Thank you Sir.../////
உங்களின் பாராட்டிற்கு நன்றி அருள்!
//////Blogger manikandan said...
ReplyDeleteNice popcorn Thank U very much Sir.//////
உங்களின் பாராட்டிற்கு நன்றி மணிகண்டன்!
////Blogger ravichandran said...
ReplyDeleteRespected Sir,
Happy morning, small dose but highly effective. thanks for your post and support.
Have a pleasant day,
With kind regards,
Ravi/////
நல்லது. நன்றி ரவிச்சந்திரன்!
//////Blogger Rajan said...
ReplyDeleteஎனக்காக எழுதியது போல் உள்ளது.
1. குருவும் சந்திரனும் 8/6
2. சுக்கிரனும் சனியும் 8/6
நீங்கள் மேற்கோள் காட்டிய அனைத்தும் எனக்கு பொருந்துகிறது./////
உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி ராஜன்!
/////Blogger GOWDA PONNUSAMY said...
ReplyDeleteவாத்தியார் ஐயா அவர்களுக்கு வணக்கங்கள்.இன்றைய பாடம் மிஹவும் நன்று.முனுசாமிகள் சொன்னவை உண்மைதான் எனினும் நாம் வாங்கி வந்த வரம் முனுசாமிகளின் அனுமதியை வாங்காமல் வந்து உட்கார்ந்து விட்டனரே.குருவும், சந்திரனும் மிதுன லக்கினத்தில் கேதுவுடன் கூட்டணி.தொழில் காரகன் சனி துலாமில் உச்சம்,எனினும் சுககாரகன் சனிக்கு 6ம் இடமான மீனத்தில் உச்சம். உச்ச சூரியன் புதனுடன் மேசத்தில் இருந்து உச்ச சனியின் நேர் பார்வையில் உள்ளனர். சூரியனுக்கு 9ல் ராகு (கோணத்தில்).இந்த அமைப்பு பாதிப்பு தருமா. மொத்தத்தில் இந்த அமைப்பு நித்திய கண்டம், பூரண ஆயுசு என்பதைப் போல உள்ளது.
நன்றியுடன்,
-Peeyes./////
பாக்கியாதிபதி உச்சம் பெற்றுள்ளாரே! கவலையை விடுங்கள். அவர் பார்த்துக்கொள்வார் பொன்னுசாமி! பெயரிலேயே பொன் இருக்கிறதே சாமி! பிறகென்ன கவலை?
ReplyDelete/////Blogger Gnanam Sekar said...
அய்யா வணக்கம் , எனக்கு ராகு சூரியனுக்கு ஏழாம் இடத்தில் ( சூரியன் கும்பத்தில் , ராகு சிம்மத்தில் ) அரசு வேலை நிலைக்கவில்லை////
உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி சேகர்!
////Blogger GOWDA PONNUSAMY said...
ReplyDeleteஐயா அவர்களுக்கு வணக்கம்.
நேற்றைய பாப்கார்ன் பாடமான வாசற்படியில்.... தங்களின் உதாரணம் 5ம் வீட்டு அதிபதியாக வரும் குரு, 9ம் வீட்டில் அமர்ந்தால் 5 மற்றும் 9 ம் வீடுகளுக்குரிய பலன்களை தருவார்.ஆனால் அதே குரு 8ம் வீடு அல்லது 2ம் வீட்டுக்கும் அதிபதியாக வருகிரார் அல்லவா? அப்போது அவர் அந்த 2/8 ம் வீட்டு பலனையும் சேர்த்து தர வேண்டும் அல்லவா?.
விளக்கம் கிடைத்தால் நன்று.
நன்றியுடன்
-Peeyes./////
அதிபதியாக உள்ள வீடுகளுக்கு உரிய பலனையும் அவர் தருவார். கவலையை விடுங்கள்.
/////Blogger arul said...
ReplyDeleteimportant lesson for all/////
நல்லது. நன்றி நண்பரே!! வகுப்பறையில் அருள் என்ற பெயருடன் இருவர் உள்ளீர்களே சாமி. உங்களைத் தனியாக அடையாளப் படுத்தும்படி உங்களுடைய ஊரின் பெயரையும் உங்கள் பெயருடன் சேர்த்துக்கொள்ளுங்களேன்!
////Blogger kmr.krishnan said...
ReplyDeleteசந்திரனுக்கு எட்டாம் இடத்தில் குரு, அதாவது குருவிற்கு ஆறாமிடத்தில் சந்திரன்இந்த அமைப்புக்கும் மேற்படி பாடல் பொருந்தும் என்று தோன்றுகிறது.மற்ற கிரகங்களுக்கும் அவ்வாறேதானா?
எப்படியாயினும் 8x6 அல்லது 6x8 சரியாக வருவதில்லை என்றே தோன்றுகிறது.////
உண்மைதான்! உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!
I have the combination of the both very well and strong
ReplyDelete1. Guru and Moon in 6/8. ie. Moon in 2nd house and Guru in 7th house.
2. again Sun and Guru in 6/8 combination sun in 12th house and guru in 7th house.
decided to take the 337 tonic as guru and mercury in 1/7 position.
குருவிற்கு வணக்கம்
ReplyDeleteபாப்கான், நேற்றை விட இன்றறைய பாப்கான் உப்பு காரம் முறுமுறுப்புட்ன் சுவை அதிக ஆலத்தி.
நன்றி
////Blogger Ram said...
ReplyDeleteI have the combination of the both very well and strong
1. Guru and Moon in 6/8. ie. Moon in 2nd house and Guru in 7th house.
2. again Sun and Guru in 6/8 combination sun in 12th house and guru in 7th house.
decided to take the 337 tonic as guru and mercury in 1/7 position./////
ஆமாம் 337 டானிக்தான் எல்லாவற்றிற்கும் உரிய ஊக்க மருந்து!
////Blogger Udhaya Kumar said...
ReplyDeleteகுருவிற்கு வணக்கம்
பாப்கான், நேற்றை விட இன்றறைய பாப்கான் உப்பு காரம் முறுமுறுப்புட்ன் சுவை அதிக ஆலத்தி.
நன்றி////
நல்லது. நீங்கள் ருசித்துப் பார்த்து பின்னூட்டமிட்டமைக்கு நன்றி உதயகுமார்!