மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

6.2.13

Astrology.Popcorn Post: சித்தப்பன் மகனுக்கு மட்டும் ஏன்டா சின்னவயசிலேயே திருமணம் ஆச்சு?


Astrology.Popcorn Post: சித்தப்பன் மகனுக்கு மட்டும் ஏன்டா சின்னவயசிலேயே திருமணம் ஆச்சு?

பாப்கார்ன் போஸ்ட் எண்.35

ஒரு இளைஞனுக்கு மிகுந்த வருத்தம். 34 வயதாகியும், அவனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ஆனால் அவனுடைய தம்பிக்கு (சித்தப்பா மகனுக்கு) 24 வயதிலேயே திருமணம் முடிந்துவிட்டது.

இதுபற்றி தன் தம்பி கேட்டபோது, நமது நாயகனின் அப்பா சொல்லிவிட்டார்,  “இவனுக்கு இன்னும் நேரம் வரவில்லை. கால சர்ப்பதோஷம் ஏழரைச் சனி என்று எல்லா கெரகமும் வந்து தள்ளிக்கொண்டே போகிறது. அதற்காக அவனுடைய திருமணத்தைத் தள்ளிப் போடாதே! நீ பாட்டுக்கு செய்து முடி!”

அப்படி வீட்டாரின் சமமதத்துடன்தான் அந்தத் திருமணமும் நடைபெற்றது

அதோடு மட்டுமல்லாமல அதுபற்றி, வீட்டில் உள்ள பெரிசுகள் பேசிக் கொண்டது நமது நாயகனின் காதில் விழுந்தது.

“என்னங்க நம்ம பையனுக்கு மட்டும் இன்னும் திருமணம் அமைய மாட்டேன் என்கிறது. அதற்குக் காரணம் இந்தப் பாழாய்ப்போன ஜாதகத்தை கட்டிக்கொண்டு  நீங்கள் அழுவதால்தான்!” இது நாயகனின் அம்மா!

“ஆமாம்டி ராசாத்தி, என்னை மட்டும் குறை சொல்! நாம் பார்க்கிற பெண் வீட்டில் எல்லாம் இவனுடைய ஜாதகத்தைப் பார்த்துவிட்டு, கடுமையான களத்திர தோஷம் உள்ளது என்று சொல்லிப் பின் வாங்கி விடுகிறார்கள். அதற்கு நான் என்ன செய்வது?”

“அதுசரி, இனிமேல் பெண் பார்க்கும்போது, அவர்கள் கேட்டால், இவனுக்கு ஜாதகம் இல்லை. வீடு மாற்றும்போது ஒரு பெட்டியோடு அதுவும் தொலைந்து
விட்டது என்று சொல்லுங்கள்”

“பிறந்த தேதியைக் கேட்பார்களே?”

“கேட்டால் சொல்லுங்கள். பிறந்த நேரத்தை மட்டும் மாற்றி சொல்லுங்கள். காலை எட்டு மணி என்பதை இரவு எட்டு மணி என்று சொல்லுங்கள். அதான்
இரண்டு மணி நேரத்திற்கு ஒரு லக்கினம் மாறிக்கொண்டே இருக்குமாமே - ஒரு புத்தகத்தில் படித்தேன். அப்படியாவது இவன் திருமணம் முடியட்டும்!”

“அது அதர்மமில்லையா?”

“பகவனே ஒரு நல்ல காரியத்திற்காக அமாவாசையையே மாற்றி ஒரு நாள் முன்பாக தர்ப்பணம் செய்யவில்லையா? நன்மைக்கு எனும்போது எதுவும் அதர்மம்  ஆகாது”

“ஆமாம், உனக்கென்று செய்யும்போது எல்லாமே தர்மக்கணக்கில்தான் வரும்” என்று நக்கலாகச் சொன்னவர், அதற்குமேல் பேசவில்லை

அப்படி எல்லாம் மாற்றிக் கொடுக்கலாமா?

கொடுக்கக்கூடாது. அப்படியொரு மூல நட்சத்திர ஜாதகத்தை ஒரு நாள் தள்ளி பூராட நட்சத்திரமாக்கினார்கள். எட்டில் இருந்த சனி ஏழுக்கு வந்துவிட்டது.

அது பற்றி இன்னொரு நாள் விரிவாகப் பார்ப்போம். இப்போது சொல்ல வந்த மேட்டருக்கு வருகிறேன்!

சிலருக்கு இளம் வயதிலேயே திருமணம் ஆகிறது. சிலருக்கு காலம் கடந்து திருமணமாகிறது. இளம் வயதிலேயே திருமணம் ஆகிவிடுவதற்கான ஜாதக
அமைப்பு என்ன? அதை இன்று பார்ப்போம்!

1. லக்கினத்திலும், ஏழாம் வீட்டிலும் சுபக்கிரகங்கள் மட்டுமே இருக்க வேண்டும். அல்லது அந்த வீடுகள் சுபக்கிரகங்களின் பார்வையைப் பெற வேண்டும்.

2. ஏழாம் வீட்டுக்காரன் தீய கிரகங்களின் கூட்டோடு அல்லது பார்வையோடு இருகக்க்கூடாது

3. குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீடும் அப்படியே இருக்க வேண்டும்

4. சுக்கிரன் அஸ்தமனமாகி இருக்கக்கூடாது

5. சுபக்கிரகங்கள் வக்கிரமாகி அதாவது வக்கிரகதியில் இருக்கக்கூடாது.

6. லக்கினம், மற்றும் ஏழாம் வீட்டில் 28ற்கும் அதிகமான பரல்கள் இருக்க வேண்டும்

7. லக்கினாதிபதியும் ஏழாம் வீட்டுக் காரனும் தங்கள் சுயவர்க்கத்தில் 4 அல்லது அதற்கு மேலான பரல்களுடன் இருக்க வேண்டும்

அப்படி இருந்தால் சின்ன வயதிலேயே திருமணம் கூடிவரும்!

நூறு கிராம் பாப்கார்ன பொட்டலத்திற்கு இதுதான் அளவு. இன்னொரு பொட்டலத்துடன் அடுத்த வாரம் சந்திப்போம்

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++=

18 comments:

  1. Subbaiya Sir,

    This applies to almost 75% in my Horoscope. I am running 32 now but still I am not married. Anyone has Astrological reasons?
    1) Ist & 7th house without bad aspect and has aspects of good planets: Yes

    2) 7th House lord without bad aspects: 7th Lord Moon gets 7th Aspect from Jupiter and 8th Aspect from Mars.

    3) Venus not combusted: Yes

    4) Benefic planets should not retrogade: Venus is retrograde

    5)Ashtakavarga:

    Lagna 24, 7th 28, lagna lord 4, 7th lord 4

    DOB: 04/01/82, TOB 8:46, POB: Erode

    Thanks

    ReplyDelete
  2. இந்த பாப்கார்ன் பதிவு வழக்கத்தை விட சற்று நீளமாகதான் இருக்கிறது. திருமணம் சரி. திருமணத்திற்குப் பிறகு? Lived happily ever after என்ற முடிவுக்கு நாம் வருவோம்.

    ReplyDelete
  3. /////Blogger sugumar said...
    Subbaiya Sir,
    This applies to almost 75% in my Horoscope. I am running 32 now but still I am not married. Anyone has Astrological reasons?
    1) Ist & 7th house without bad aspect and has aspects of good planets: Yes
    2) 7th House lord without bad aspects: 7th Lord Moon gets 7th Aspect from Jupiter and 8th Aspect from Mars.
    3) Venus not combusted: Yes
    4) Benefic planets should not retrogade: Venus is retrograde
    5)Ashtakavarga:
    Lagna 24, 7th 28, lagna lord 4, 7th lord 4
    DOB: 04/01/82, TOB 8:46, POB: Erode
    Thanks/////

    32 வயதாகிவிட்டதல்லவா? ஜாதகத்தை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு, கிடைக்கிற பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளுங்கள். கண்டிஷன்கள் இல்லாமல் கிடைக்கிற பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளுங்கள். நயன்தாரா அல்லது அனுஷ்கா சர்மா போன்ற அழகு, படிப்பில் கோல்டு மெடல், நூறு பவுன் நகை, 6 ஏக்கர் பூமி, இன்னோவா கார் ஆகியவை அடங்கிய் சீர்வரிசையுடன் பெண்ணைச் சிலர் தேடுவார்கள். செல்வந்தர் வீட்டுப் பிள்ளைகளுக்கு அது சாத்தியம். நமக்கு த்ண்ணீர் இருக்கும் குட்டையே ராமேஸ்வரம். அதை மனதில் வையுங்கள்.

    அத்துடன் ஒவ்வொரு பாடத்திற்கும் உங்கள் ஜாதத்தை வைத்துக் கேள்விகள் கேட்பதை முதலில் நிறுத்துங்கள். ஒருமுறை மாயவரத்திற்கு அருகிலுள்ள திருமணஞ்ச்சேரி என்னும் ஸ்தலத்திற்குச் சென்று அங்கு உறையும் ஈசனைப் பிரார்த்திவிட்டு வாருங்கள். உங்கள் திருமணத்தை அவர் நடத்திவைப்பார்!
    திருமணம் ஆனால் ஒரு செள்கரியம் வருகிறவளின் கேள்விகளுக்குப் பதில் சொல்வதற்கே உங்களுக்கு நேரம் சரியாக இருக்கும்: ஜாதகத்தை நோண்டிப் பார்ப்பதற்கெல்லாம் நேரம் இருக்காது-))))

    ReplyDelete
  4. /////Blogger Ak Ananth said...
    இந்த பாப்கார்ன் பதிவு வழக்கத்தை விட சற்று நீளமாகதான் இருக்கிறது. திருமணம் சரி. திருமணத்திற்குப் பிறகு? Lived happily ever after என்ற முடிவுக்கு நாம் வருவோம்.////

    நல்லது. அப்படியே வருவோம். உங்களின் யோசனைக்கு நன்றி ஆனந்த்! இன்றைய பொட்டலத்தில் பொரியின் அளவு அதேதான் பிளாஸ்டிக் பைதான் பெரிதாக உள்ளது. அதாவது சொன்ன கதையால் அது நேர்ந்து விட்டது!

    ReplyDelete
  5. மிஸ்டர் முரளி கிருஷ்ணா.ஜி, மிஸ்டர் TT. Gopinath.G தங்கராஜ் ஆகிய இருவரும் எங்கிருந்தாலும் வகுப்பறைக்கு வரவும். நீங்கள் புதிதாக சேர்ந்துள்ளீர்கள் சரிதான் அதற்காக வாத்தியாரை எத்ற்காக வதைக்க வேண்டும்? பதிவில் உள்ள 630 பாடங்களையும் ஒவ்வொன்றாகப் படியுங்கள் என்று சொன்னேன். ஒவ்வொரு பாடத்திற்கும் சந்தேகம் என்ற பெயரில் மின்னஞ்சல் கொடுக்கச் சொன்னேனா?

    வரிசையாக எல்லாப் பாடங்களையும் படித்து முடியுங்கள். சந்தேகம் வராது. இடையில் ஒரு முப்பது பாடங்கள் (மொத்தம் 400 கேள்விகள் & பதில்கள்)
    மாணாவர்களின் சந்தேகத்தை தீர்ப்பதற்க்காகவே எழுதப்பெற்றுள்ளது. அவற்றையும் படியுங்கள் சந்தேகம் வராது.

    அதையும் மீறி வந்தால், உங்கள் ஜாதகத்தில் புதன் எங்கே உள்ளது என்று பாருங்கள். வித்தைக் குறைவான ஜாதகருக்கு ஜோதிடம் எத்தனை சொல்லிக்கொடுத்தாலும் ஏறாது. பேசாமல் ஒரு நல்ல ஜோதிடராகப் பார்த்து உங்கள் ஜாதகத்திற்கான பலன்களை எழுதி வாங்கிக் கொள்ளுங்கள். அதுதான் உங்களுக்கும் நல்லது. எனக்கும் நல்லது! அர்த்தமாயிந்தா சுவாமி?

    ReplyDelete
  6. குருவிற்கு வணக்கம்,
    இன்றைய பாப்கான் சுவைமாறாமல் நன்றாக இருந்தது,உண்ண உண்ண
    கவரில் பாப்கான் தீர்ந்ததே தெரியவில்லை
    நன்றி

    ReplyDelete
  7. //“பகவானே ஒரு நல்ல காரியத்திற்காக அமாவாசையையே மாற்றி ஒரு நாள் முன்பாக தர்ப்பணம் செய்யவில்லையா? நன்மைக்கு எனும்போது எதுவும் அதர்மம் ஆகாது”///

    பனையம் இன்று தொடர்ந்து
    பந்தாட்டம் ஆட வந்துள்ளது..

    வீசி எறியப்பட்ட மாங்கொட்டையை
    விலை பேசி விற்பதை தவறு என்றால்

    தவறுக்கும் நியாயத்திற்கும்
    தகுந்த விளக்கம் சொல்வது எப்படி?

    தவறுக்கு மன்னிப்பு உண்டு
    தவறி நடக்கும் நியாம் குற்றம் தானே?

    தவறு வேறு பிழை வேறு தப்பு வேறு
    தகுந்த விளக்கம் சொல்ல

    உளவியல் துறையில் முதுகலைபெற்று
    உள்ள நம் வகுப்பறை தோழர் வருவார்

    போட்டது துண்டிலா..
    சிக்கியது மீனா..

    எதுவாக இருந்தாலும்
    எப்படி சொன்னாலும்

    அவன் குற்றவாளியே..
    அவன் கடவுள் இல்லை

    வழக்கம் போல் இந்த பாடலினை
    வலமாக சுழல விடுகிறோம்

    பொன்னொன்று கண்டேன்
    பெண்ணங்கு இல்லை

    என்னென்று நான் சொல்லலாகுமா?
    என்னென்று நான் சொல்ல வேண்டுமா?

    பூ ஒன்று கண்டேன்
    முகம் காணவில்லை

    நடமாடும் மேகம்
    நவநாகரீகம்

    நான் பார்த்த பெண்ணை
    நீ பார்க்கவில்லை

    நீ பார்த்த பெண்ணை
    நான் பார்க்கவில்லை

    உன் பார்வை போலே
    என் பார்வை இல்லை

    நான் கண்ட காட்சி நீ காணவில்லை
    என் விழியில் நீ இருந்தாய்

    உன் வடிவில் நானிருந்தேன்
    நீயின்றி நானில்லை
    நானின்றி நீயில்லையே

    ReplyDelete
  8. அய்யா அவர்களுக்கு வணக்கம்.
    இந்த பதிவு மிக அருமை.ஒரு அலசல் பாடம் தந்தால் மிக நல்லது. பின்னூட்டங்களுக்கு தங்கள் பதில்கள் அசத்தல்.
    நன்றியுடன்,
    -PEEYES.

    ReplyDelete
  9. பயனுள்ள பாடம்...எனக்கு தனுசு லக்கினத்தில் புதனும் 7மிடத்தில் லக்னாதிபதி குருவும் சந்திரனும் சேர்ந்து இருந்ததால் 24 வயதில் திருமணம் ஆகிவிட்டது.எனக்கு முதல் விதி பொருந்தி வந்துள்ளது.

    ReplyDelete
  10. இந்த பொய்யாக ஜாதகம் போடுபவர்கள் நன்மை என உள்ளி பெருங்கேட்டையே பண்ணுகிறார்கள்.

    எப்படியோ கல்யாணம் ஆகிவிட்டால் சரி என்று நினைக்கிறார்கள். அவர்கள் பொறுப்பு அதோடு ஓய்ந்தது. அதன் பின் இவர்கள் பொய்யாக பண்ணி சேர்த்து வைத்த ஜாதகன்களால், அந்த தம்பதி பாதிப்படைவரே என நினைக்கிறார்களா?

    சேராத ஜாதகத்தை சேர்த்து வைத்தால் கடைசியில் துன்பம் தானே? இதை யோசிக்க மாட்டார்களா?

    இது அந்த இளம் உள்ளங்களுக்கு தெரிய வரும் பொது, ஏமாற்றப்பட்ட ஆள் என்ன நினைப்பார்/நினைப்பாள்? அவர்களுக்குள் அன்பு கெடாதா? துரோகம் தானே இதுவும்? எனக்கு நல்ல வாழ்க்கை அமைந்திருக்குமே, இந்நாளும் அரும் பண்ணிய மோசடிக்கு நானா கிட்டினேன்? இதெல்லாம் வரும் தானே? (அவர் ஜாதகம் எப்படி இருந்தாலும்)

    ReplyDelete
  11. /////Blogger Udhaya Kumar said...
    குருவிற்கு வணக்கம்,
    இன்றைய பாப்கான் சுவைமாறாமல் நன்றாக இருந்தது,உண்ண உண்ண
    கவரில் பாப்கான் தீர்ந்ததே தெரியவில்லை
    நன்றி////

    அதுதான் பாப்கார்னின் மகத்துவம். சோளப் பொரியை சப்ளை செய்தது வால்மார்ட் கம்பெனிக்காரர்கள். வறுத்து பைகளில் அடைத்துக் கொடுத்தது மாக்டொனால்டு கம்பெனிக்காரர்கள். பிறகு எப்படி சுவை மாறும்? அடுத்ததாக பிஸ்ஸா பதிவுகளைப் போடலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன். பிஸ்ஸா என்றால் நமது மக்களுக்கு மிகவும் பிடிக்குமே! என்ன சொல்கிறீர்கள் உதயகுமார்?

    ReplyDelete
  12. //படிப்பில் கோல்டு மெடல்// - I promise, I will not want this one. சம்பளமோ படிப்போ அதிகமாக இருந்தால் இந்த பெண்கள் போடுற ஆட்டம் இருக்கே.... யப்போவ்.. தலை கால் புரிவதில்லை. தன்னை விட கம்மி படித்த / கம்மியாய் சம்பாதிக்கும் புருஷனை துச்சமாக எண்ணுவது..... வேண்டாமே வம்பு. கொஞ்சம் படித்த அடக்கமுள்ள குணவதி, கண்ணுக்கு லட்சணமாக, கடன் சுமை இல்லாம வந்தால் போதும். hi fi பெண்கள் வேண்டாம். :)))))))))))))))

    ReplyDelete
  13. //////Blogger அய்யர் said...
    //“பகவானே ஒரு நல்ல காரியத்திற்காக அமாவாசையையே மாற்றி ஒரு நாள் முன்பாக தர்ப்பணம் செய்யவில்லையா? நன்மைக்கு எனும்போது எதுவும் அதர்மம் ஆகாது”///
    பனையம் இன்று தொடர்ந்து
    பந்தாட்டம் ஆட வந்துள்ளது..
    வீசி எறியப்பட்ட மாங்கொட்டையை
    விலை பேசி விற்பதை தவறு என்றால்
    தவறுக்கும் நியாயத்திற்கும்
    தகுந்த விளக்கம் சொல்வது எப்படி?//////

    தகுந்த விளக்கம் சொல்லாவிட்டால் விடுவீர்களா? மாங்கொட்டையின் உள்ளே இருக்கும் பருப்பின் மகத்துவம் தெரியுமா சுவாமி உங்களூக்கு? எங்கள் பகுதியில் மாங்கொட்டையை வெய்யிலில் நன்றாக காயவைத்து பத்திரப்படுத்தி வைத்திருப்பார்கள். மருந்து தேவைப்படும்போது, அந்த மாங்கொட்டைகளில் இரண்டையோ அல்லது மூன்றையோ எடுத்து உடைத்து அதில் உள்ளிருக்கும் பருப்பை மருந்தாக பயன் படுத்திக்கொள்வார்கள். அது எதற்கான மருந்து என்று உங்களுக்குத் தெரியுமா சாமியோவ்....?

    ReplyDelete
  14. /////Blogger GOWDA PONNUSAMY said...
    அய்யா அவர்களுக்கு வணக்கம்.
    இந்த பதிவு மிக அருமை.ஒரு அலசல் பாடம் தந்தால் மிக நல்லது. பின்னூட்டங்களுக்கு தங்கள் பதில்கள் அசத்தல்.
    நன்றியுடன்,
    -PEEYES./////

    உங்கள் பூர்வீகம் பெங்களூரா? எனக்கும் உள்ளூரில் கெளடா நண்பர்கள் உள்ளார்கள் அதனால் கேட்டேன். உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!
    அலசல் பாடம்தானே? கொடுத்தால் போகிறது. அடுத்த வாரம் ஒன்று உண்டு!

    ReplyDelete
  15. ////Blogger Arul said...
    பயனுள்ள பாடம்...எனக்கு தனுசு லக்கினத்தில் புதனும் 7மிடத்தில் லக்னாதிபதி குருவும் சந்திரனும் சேர்ந்து இருந்ததால் 24 வயதில் திருமணம் ஆகிவிட்டது.எனக்கு முதல் விதி பொருந்தி வந்துள்ளது.////

    வாழ்க வளமுடன். உங்களின் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  16. ////Blogger Arul said...
    பயனுள்ள பாடம்...எனக்கு தனுசு லக்கினத்தில் புதனும் 7மிடத்தில் லக்னாதிபதி குருவும் சந்திரனும் சேர்ந்து இருந்ததால் 24 வயதில் திருமணம் ஆகிவிட்டது.எனக்கு முதல் விதி பொருந்தி வந்துள்ளது.////

    வாழ்க வளமுடன். உங்களின் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  17. மாங்கொட்டையில் உள்ள பருப்பு மூல நோயை குணப்படுத்துமாமே. வேறு நோய்களுக்கும் இது பயன்படலாம். எல்லாவற்றையும் தெரிந்துக் கொள்ள நான் மூலிகை வைத்தியன் அல்லவே.

    ReplyDelete
  18. /////Blogger Ak Ananth said...
    மாங்கொட்டையில் உள்ள பருப்பு மூல நோயை குணப்படுத்துமாமே. வேறு நோய்களுக்கும் இது பயன்படலாம். எல்லாவற்றையும் தெரிந்துக் கொள்ள நான் மூலிகை வைத்தியன் அல்லவே./////

    மாங்கொட்டைப் பருப்பை ஊற்வைத்து, அரைத்து, கெட்டியாகக் குழம்பு வைத்து சாதத்துடன் சேர்த்துச் சாப்பிடுவார்கள். அது வயிற்றுபோக்கு உள்ளவர்களுக்கு அருமையான மருந்தாகும். வயிற்றுப்போக்கு (Loose motion) உடனே சரியாகிவிடும். அது இயற்கை மருந்து!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com