மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label தர்மம். Show all posts
Showing posts with label தர்மம். Show all posts

17.10.18

வறுமையிலும் நேர்மையாக இருந்ததற்குக் கிடைத்த பரிசு!!!!


வறுமையிலும் நேர்மையாக இருந்ததற்குக் கிடைத்த பரிசு!!!!

*வறுமையிலும் நேர்மை!!*👍👍🌹🌹

🙏🙏 *உண்மை சம்பவம்*🙏🙏

சவுதிஅரேபியாவின் பாலைவனப் பகுதியில் சூடான் நாட்டைச் சேர்ந்த யூசுஃப் என்ற நபர்  ஒரு அரபியின் ஆட்டுப் பண்ணையில்   புறவெளிப்பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார்

அப்போது அந்த வழியாக காரில் வந்த  சிலர் யூசுஃப்பை பார்த்து எங்களுக்கு  ஒரு ஆடு வேண்டும்

நான் உனக்கு 200 ரியால் பணம் தருகிறேன் உன் முதலாளிக்கு தெரியாமல் எனக்கு ஒரு ஆட்டை எடுத்து தருகிறாயா என்று கேட்டனர்? (ஆட்டின் விலை 800 ரியால் இருக்கும்,யூசுப்பின் சம்பளம் 100 ரியால்)

அதற்கு அந்த யூசுஃப் இல்லை என்னால் முடியாது நான் என் முதலாளிக்கு துரோகம் செய்ய மாட்டேன் என்று கூறுகிறார்.

அதற்கு அந்த அரபி ஏன் முடியாது என்கிறாய்? இங்கிருக்கும் நூற்றுக்கணக்கான ஆடுகளில் ஒரு ஆட்டை எடுத்துக் கொடுப்பதினால் உன் முதலாளிக்கு என்ன தெரியப் போகிறது? உன் சம்பளம் என்ன? இந்த வெயிலில் இவ்வளவு பாடுபட்டு உன் முதலாளிக்கு நீ உழைத்துக் கொடுப்பதினால் உனக்கு அவர் பெரிதாக என்ன கொடுத்து விட போகிறார்? அதனால் இந்த பணத்தை வாங்கிக் கொண்டு எனக்கு ஒரு ஆட்டை எடுத்துக் கொடு என்று கூறுகிறார்.

அதற்கு மறுபடியும் யூசுஃப் சொன்ன பதில் !

இதிலிருக்கும் நூற்றுக்கணக்கான ஆடுகளில் ஒன்றை உங்களுக்கு எடுத்துக் கொடுத்தால் என் முதலாளி பார்க்க மாட்டார் தான் :
ஆனால் என்னைப் படைத்த இறைவன் பார்த்துக் கொண்டிருக்கிறான். நாளை மறுமை நாளில் நான் அவனிடம் போய் பதில் சொல்ல முடியாது. ஆகவே நான் இவ்வுலகில் கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை. நாளை மறுவுலகில் சொர்க்கத்தில் நிம்மதியாக வாழ ஆசைப்படுகிறேன். எனவே என்னுடைய இந்த நேர்மையான  சம்பாத்தியம் மட்டுமே எனக்கு போதும். உங்களுடைய பணம் எனக்கு வேண்டாம். நீங்கள் கிளம்புங்கள் என்று கூறுகிறார்

அதைக்கேட்ட அந்த அரபி அசந்துவிட்டார்! பரவாயில்லையேப்பா உன்னிடமிருந்து இப்படியொரு பதிலை நான் எதிர்  பார்க்கவில்லை? இறைவன்  உனக்கு அருள்புரிவானாக என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்று விடுகிறார்.

அதேசமயம் அந்த காரில் பக்கத்தில் அமர்ந்திருந்த அந்த அரபியின் நண்பர் கையில் வைத்திருந்த போனில் ஏதேர்ச்சையாக அங்கு நிற்கும் ஆட்டுக்குட்டிகளை வீடியோ எடுக்கும் போது கேமராவை இந்த சூடானி முகத்திற்கு முன் திருப்பி அவர்கள் இருவரும் பேசிக்கொண்ட காட்சியையும் சேர்த்து பதிவு செய்து விடுகிறார்.

பிறகு அவர்கள் வீட்டிற்கு சென்றடைந்ததும் அந்த நபர் தன்னுடைய நண்பர்களிடம் நடந்த விசயத்தை சொல்லிக் காட்டி அந்த வீடியோவையும் காட்ட அவர்கள் எனக்கும் இதை அனுப்பி வை என்று கேட்க அந்த சூடானி தன்னுடைய நேர்மையை பறைசாற்றும் விதமாக கையை உயர்த்திக் காட்டி கத்திப் பேசிய அந்த  வசன வீடியோ வாட்ஸ்அப், இன்ஸ்டாக்ராம் மூலமாக சவுதி முழுவதும் காட்டுத் தீ போல பரவுகிறது

இது ஒன்றன்பின் ஒன்றாக கடைசியில் சவுதியின் உள்துறை அமைச்சகம் வரை சென்றடைந்து!

 அவர்கள் இதைப்பார்த்ததும் ஒரு ஆடு மேய்ப்பவனுக்கு இந்த வறுமையிலும் இறைவன்  மீது இவ்வளவு பயமா  என்று ஆச்சரியப்பட்டு இவரைப் பாராட்டியே ஆக வேண்டும் என்று காவல்துறையை ஏவிவிட்டு ஆளைத் தேடி கண்டுபிடிக்க உத்தரவிடுகின்றனர்

அதன்படியே காவல்துறையும் யூசுஃபை தேடிப்பிடித்து அரசு முன் கொண்டு வந்து நிறுத்துகிறது

பின்பு அந்நாட்டு அரசு யூசுஃபை கண்ணியப்படுத்தும் விதமாக இரண்டு லட்சம் ரியால் பரிசுத்தொகையை அறிவித்தது மட்டுமில்லாமல்

இந்நாட்டில் பணிபுரியும் ஒவ்வொரு வேளையாட்களும் நேர்மைக்கு உதாரணமாக யூசுஃபை முன்மாதிரியாக கொண்டு திகழ வேண்டும் என்ற அறிவுரையையும் முன்மொழிந்ததோடு யூசுஃப்பை போன்றதொரு நல்ல மனிதரை எங்களுக்கு பணிக்கு அனுப்பி வைத்த சூடான் அரசுக்கும் எங்களது நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்று அறிவித்தது.

இதைப் பார்த்து தன் நாட்டு அரசுக்கும் இதை எத்திவைக்க வேண்டும் என்று எத்தனித்த சவுதிக்கான சூடான் நாட்டு தூதர் (Ambassador) அப்துல் ஹாஃபிஸ் என்பவர் சூடானின் மத்திய அரசின் கவனத்துக்கு இந்தச் செய்தியை கொண்டு செல்ல
அவர்களோ யூசுஃப் அங்கே வேலை செய்தது போதும் உடனே அவரை நம்நாட்டுக்கு திரும்பப் பெறுங்கள் என்று . உத்தரவிட்டது

அதன்படியே யூசுஃப் தன் தாய்நாட்டிற்கு திரும்பிச் சென்றதும் அங்கே அவருக்கு பலத்த மரியாதையுடன் கூடிய வரவேற்போடு மட்டுமில்லாமல் தன்னுடைய பங்குக்கு சூடான் அரசும் சவுதிக்கு சற்றும் குறைவில்லாமல் ஒரு பரிசுத் தொகையும் அறிவித்து பாராட்டியது.

அன்று யூசுஃப் நான் என்னுடைய இறைவனுக்கு  அஞ்சுகிறேன் என்று அடித்துக் கூறியதால் இன்று  அவர் சில கோடிகளுக்கு அதிபதி....

*அல்லாவோ, சிவனோ ஏசுவோ நீங்கள் யாரை  நம்பினாலும் இந்த ஆடு மேய்பவனைப்போல் நேர்மையாக இருந்தால் வாழ்க்கை சிறக்கும்!!*

🌹🌹👍👍 *வறுமையிலும் நேர்மை!!* *வறுமையிலும் நேர்மை!!*👍👍🌹🌹
🙏🙏 *உண்மை சம்பவம்*🙏🙏
-----------------------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
=======================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

11.9.18

மனம் திருந்திய திருடன்!


மனம் திருந்திய திருடன்!

இரவு நேரம். அந்தத் துறவி வந்து சேர்ந்த இடம் திருவொற்றியூர். பகலெல்லாம்  வெகு தூரம் நடந்து வந்திருந்தார். களைப்பும் உறக்கமும் சேர்ந்துகொள்ள கண்ணில்பட்ட ஒரு வீட்டுத்  திண்ணையில் ஏறினார். ஜில்லென்றிருந்த கட்டாந்தரையில் படுத்தார். அப்படியே உறங்கிப் போனார்.

நள்ளிரவானது. தெருவின் இருபுறமும் நோட்டமிட்டபடி மெள்ள எட்டுவைத்து ஒருவன் வந்தான். துறவி  படுத்திருந்த திண்ணைக்கருகே நின்றான். உச்சி முதல் உள்ளங்கால்வரை அவரைப் பார்த்தான்.  அவரிடம் மூட்டை முடிச்சு ஒன்றும் இல்லை. அணிந்திருந்த வேட்டியையும், தலைக்குவைத்துப்  படுத்திருந்த மேல் துண்டையும் தவிர உடைகள்கூட ஏதுமில்லை. `இடுப்பில் ஏதாவது  வைத்திருப்பாரோ...’ என்று யோசித்தபடி நெருங்கிய அந்த ஆளின் கண்ணில் அது பட்டது... நிலவொளியில், துறவியின் காதில் மின்னிக்கொண்டிருந்த கடுக்கண்.

அவன், அவரை நெருங்கினான்.

அவர் மூச்சு சீராக வந்துகொண்டிருந்தது. அவர் உறங்குகிறார் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டவன், அவருடைய காதிலிருந்து ஒரு கடுக்கணை மெள்ளக் கழற்றினான். அவன் காதில் கைவைத்தவுடனேயே  துறவி விழித்துக்கொண்டார். அவன் திருட வந்தவன் என்பதும் அவருக்குப் புரிந்தது. ஆனாலும்  கண்களைத் திறக்காமல், அசையாமல் அப்படியே படுத்திருந்தார். அவன் ஒரு கடுக்கணைக்  கழற்றிவிட்டான். ஒருக்களித்துப் படுத்திருந்த துறவி, அவன் இன்னொரு கடுக்கணையும் கழற்றுவதற்குத் தோதாக மறுபக்கம் ஒருக்களித்துப் படுத்தார்.

அவன் ஆடிப் போனான். அவர்  விழித்திருக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டான். ``என்னப்பா அப்படியே நின்னுட்டே... ஒரு
கடுக்கணைவெச்சுக்கிட்டு என்ன செய்வே? இன்னொண்ணையும் கழட்டு!’’ அவன் பொத்தென்று  துறவியின் காலில் விழுந்தான். ``என்னை மன்னிச்சுடுங்கய்யா...’’

``நீ ஏம்ப்பா என்கிட்ட மன்னிப்புக்  கேட்கணும். என் மேலதான் தப்பு. எல்லாத்தையும் துறந்ததுக்கு அப்புறம் இந்தக் கடுக்கண் மட்டும் எனக்கு எதுக்கு? அதை ரொம்ப அழகா எனக்கு உணர்த்திட்டே. நீயே இதை வெச்சுக்கோ’’ இன்னொரு  கடுக்கணையும் அவனிடம் கொடுத்தார்.

அவன் ``இனிமேல் திருடமாட்டேன்’’ என்று அவரிடம்  சொல்லிவிட்டு திரும்பிப் போனான். ஒருவனின் தவறை நாசூக்காக உணர்த்திய அந்தத் துறவி வேறு  யாருமல்ல. `வள்ளலார்’ என்று போற்றப்படும் ராமலிங்க சுவாமிகள்தான் அவர்.. அப்படி ஒரு குணமும் மனமும்  வாய்த்திருந்ததால்தான் அவர் இன்றளவும் போற்றப்படுகிறார்!!!!

படித்ததில்_பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

15.11.17

உதவிக்கரம் நீட்டுங்கள்!


உதவிக்கரம் நீட்டுங்கள்!

நம் வகுப்பறையின் மூத்த மாணவர்.கே.முத்துராமகிருஷ்ணன் (KMRK) லால்குட, அவர்களின் சமூகசேவை.

அவர் பல ஆண்டுகளாக சமூக சேவை செய்து வருகிறார். அதுபற்றி முன்பு வெளியான கட்டுரையின் சுட்டியைக் கொடுத்துள்ளேன். அனைவரும் படித்துப் பாருங்கள்:

http://classroom2007.blogspot.in/2011/04/blog-post_11.html

அவரைப் பல ஆண்டுகளாக நான் நன்கு அறிவேன்’

தற்சமயம் தனக்குச் சொந்தமான 4000 சதுர அடி பிளாட் ஒன்றினை சேவாலயா(www.sevalaya.org) என்ற தொண்டு நிறுவனத்திற்கு தானமாக அளித்துள்ளார்.

அவர் அளித்துள்ள மனைக்கட்டில் அவர்கள் அவருடைய தந்தையாரின் பெயர் (காந்தி ஆசிரமம் கிருஷ்ணன்) சூட்டி ஒரு முதியோர் இல்லம் கட்டிடம் கட்டி நிர்வகிக்க வேண்டும் என்பது அவருடைய வேண்டுகோள்.அதனை அவர்கள் ஏற்று ஆயத்தப் பணிகள் நடந்து வருகின்றன.

அதற்காக நன்கொடை வேண்டி பலரையும் அணுகியுள்ளார்கள். கட்டிடப் பணிகளுக்கு ஒரு சதுர அடிக்கு ரூ2000/‍ தேவைப்படுகிறது.  அது போல 2000 சதுர அடி கட்ட ரூ 40 லட்சம் போல வேண்டியுள்ளது.

அதற்கான வேண்டுகோள் மடல் ஒன்றை எழுதியுள்ளார். நம் வகுப்பறையில் வெளியிடவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். சேவாலயா நிறுவனத்தைப் பற்றிய தகவல்கள் கீழே உள்ளன.

மேல் அதிகத் தகவல்களுக்கு அவருடைய மின் அஞ்சல் முகவரிக்கு எழுதலாம்.

சேவாலயாவின் வங்கிக் கணக்கு விபரங்களை அவர் உங்களுக்கு அனுப்பி வைப்பார்.

K.Muthuramakrishnan
email ID:  kmrk1949@gmail.com
mobile number : 9047516699

நல்ல மனம் வாழ்க!!!!
நாடு போற்ற வாழ்க!!!

உங்கள் ஆதரவைத் தெரிவிப்பதன் மூலம் ஒரு நல்ல சமூக சேவையில் பங்கு கொள்ள அனைவரையும் வேண்டுகிறேன்



அன்புடன்
வாத்தியார்
=========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!