மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label Lessons 481 - 490. Show all posts
Showing posts with label Lessons 481 - 490. Show all posts

8.11.11

Astrology நீங்களும் உங்கள் சந்தேகங்களும்!

---------------------------------------------------------------------------------------
Astrology  நீங்களும் உங்கள் சந்தேகங்களும் - பகுதி ஒன்று!

“சார், நான் ரிஷபலக்கினக்காரன். சுக்கிரன் எனக்கு லக்கினாதிபதி. அத்துடன் அவனே ஆறாம் இடத்திற்கும் அதிபதி. அவன் என்னுடைய  ஜாதகத்தில் 12ல் இருக்கிறான். அதாவது விரையத்தில் மறைந்துவிட்டான். ஆனால் நவாம் சத்தில் அவன் உச்சம் பெற்றுள்ளான். அவன் எனக்கு  ஹீரோவா? அல்லது வில்லனா?”

“இரண்டும்தான். இரண்டு இடங்களுக்கு அதிபதி என்னும் போது, அவன் இரண்டையுமே செய்வான்.”

“விளங்கவில்லையே சார்! ஒன்று ஹீரோ என்று சொல்லுங்கள். அல்லது வில்லன் என்று சொல்லுங்கள். ஏதாவது ஒன்றுதானே உண்மையாக இருக்கும்”

“உங்கள் வீட்டிற்கு நீங்கள் பிள்ளை. உங்கள் மாமனார் வீட்டிற்கு நீங்கள் மாப்பிள்ளை. அதில் ஏதாவது ஒன்றுதான் உண்மையா? அல்லது 
இரண்டுமே உண்மையா?”

“இரண்டுமே உண்மைதான்”

“அப்படித்தான் அதுவும். உங்கள் லக்கினத்திற்கு அவன் ஹீரோ. ஆறாம் வீட்டுக் காரியங்களுக்கு அவன் வில்லன். இரண்டு வீட்டு  வேலைகளையுமே அவன் கச்சிதமாகச் செய்வான். ஹீரோ என்பதால் வில்லன் வேலையை விட்டுக் கொடுக்க மாட்டான். இது எல்லாக்  கிரகங்களுக்கும் பொதுவான குணம்.”

“சரி, எப்போது செய்வான்?”

“தனது மகாதிசை, மற்றும் புத்திகளில் செய்வான்”

“ஒரே தசா புத்தியில் அவன் இரண்டு வேலைகளையும் எப்படிச் செய்ய முடியும்? ஏதாவது ஒன்றைத்தானே செய்ய முடியும்? அடுத்து எனக்கு
சுக்கிரபுத்தி வரவுள்ளது. அந்த புத்தியில் அவன் நன்மையைச் செய்வானா அல்லது தீமையைச் செய்வானா என்று எப்படித் தெரிந்து கொள்வது”

“இங்கே கோள்ச்சாரம் உங்களுக்கு உதவும். கோளாசாரச் சுக்கிரன் அல்லது சம்பந்தப்பட்ட கிரகத்தின் அன்றைய இருப்பிடம் (by placement) மற்றும் பார்வை (aspect) எந்த வீட்டின் மேல் விழுகிறதோ அந்த வீட்டிற்கான பலன்கள் கிடைக்கும். உதாரணத்திற்கு இன்றையத் தேதியில்  சுக்கிரன் கோச்சாரப்படி எங்கே இருக்கிறான் என்று படத்துடன் கீழே கொடுத்துள்ளேன். அதைப் பாருங்கள். இன்றையச் சுக்கிரன்  விருச்சிகத்தில் இருந்து கொண்டு உங்களுடைய லக்கினத்தைப் பார்க்கிறான். இப்போது அவனுடைய புத்தி உங்களுக்கு நடந்தால் அது  நன்மையானதாக இருக்கும். இப்படித்தான் பார்க்க வேண்டும். விளக்கம் போதுமா?”



“இது தலையைச் சுற்றி மூக்கைத் தொடுகிற வேலையாக இருக்கிறதே! குறுக்குவழி இல்லையா?”

“இருக்கிறது. அஷ்டகவர்க்கப் பாடம் நடத்தும்போது அதை எல்லாம் சொல்லித் தருகிறேன்”

“எப்போது துவங்கப் போகிறீர்கள்?

“விரிவாக எழுத வேண்டியதுள்ளது. தற்சமயம் நேரம் இல்லை! ஜனவரி முதல் வாரத்தில் ஆரம்பிக்கலாம் என்றுள்ளேன். பொறுத்திருங்கள்
-----------------------------------------------------------------------------------------------------------------
1. மேஷ லக்கினத்திற்கு வில்லன் புதன் (6th Lord) அதோடு அவனே மூன்றாம் இடத்திற்கும் அதிபதி
2. ரிஷப லக்கினத்திற்கு வில்லன் சுக்கிரன் (6th Lord) அதோடு அவனே லக்கினாதிபதியும் ஆவான்.
3. மிதுன லக்கினத்திற்கு வில்லன் செவ்வாய் (6th Lord) அதோடு அவனே லாபாதிபதியும் (11th Lord) ஆவான்.
4. கடக லக்கினத்திற்கு வில்லன் குரு (6th Lord) அதோடு அவனே பாக்கியாதிபதியும் (9th Lord) ஆவான்.
5. சிம்ம லக்கினத்திற்கு வில்லன் சனி (6th Lord) அதோடு அவனே ஏழாம் வீட்டிற்கு அதிபதியும் (7th Lord) ஆவான்.
6. கன்னி லக்கினத்திற்கு வில்லன் சனி (6th Lord) அதோடு அவனே ஐந்தாம் வீட்டிற்கு அதிபதியும் (5th Lord) ஆவான்.
7. துலா லக்கினத்திற்கு வில்லன் குரு (6th Lord) அதோடு அவனே மூன்றாம் வீட்டிற்கு அதிபதியும் (3rd Lord) ஆவான்.
8. விருச்சிக லக்கினத்தற்கு வில்லன் செவ்வாய் (6th Lord) அதோடு அவனே லக்கினத்திற்கும் அதிபதி ஆவான்.
9. தனுசு லக்கினத்திற்கு வில்லன் சுக்கிரன் (6th Lord) அதோடு அவனே லாபாதிபதியும் (11th Lord) ஆவான்.
10. மகர லக்கினத்திற்கு வில்லன் புதன் (6th Lord) அதோடு அவனே பாக்கியாதிபதியும் (9th Lord) ஆவான்.
11. கும்ப லக்கினத்திற்கு வில்லன் சந்திரன் (6th Lord)
12.  மீன லக்கினத்திற்கு வில்லன் சூரியன் (6th Lord)
++++++++++++++++++++++++++++++++++++
அன்புடன்
வாத்தியார்

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

4.11.11

Astrology வைத்தீஸ்வரன் என்ற "God of medicine"

----------------------------------------------------------------------------------------
Astrology வைத்தீஸ்வரன் என்ற "God of medicine"

ஆன்மிகம் cum ஜோதிடக் கட்டுரை!
---------------------------------------------------------
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு தனித்தன்மை உண்டு. ஒருவித துணிச்சல் உண்டு.

பணம் வைத்திருப்பவன் பணம் நம்மைக் காப்பாற்றும் என்று எதற்கும் கவலைப் படாமல் தெனாவெட்டாக இருப்பான். பணம் இல்லாதவன் நம்மைப் படைத்தவன் இருக்கிறான். அவன் பார்த்துக்கொள்வான் என்ற நம்பிக்கை யோடு துணிச்சலாக இருப்பான். மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான் என்பான்.

அதெல்லாம் பொது நம்பிக்கை. மனித குணம்.

ஆனால் ஜாதகப்படி நேரம் சரியில்லாத போது எது நடக்கும் எப்படி நடக்கும் என்றே சொல்ல முடியாது.

நீங்கள் நெடுஞ்சாலையில் பயணிக்கும் போது, உங்களுடைய வாகனத்தை, எதிரில் வரும் டிப்பர் லாரிக்காரன் முத்தமிட்டால் என்ன நடக்கும் தெரியுமா? யோசித்துப் பாருங்கள். கண நேரத்தில் உங்கள் உதட்டைச் சிவக்க வைத்து விடுவான்.

‘spot out' என்றால் பிரச்சினை இல்லை. சிவலோகம் அல்லது வைகுண்டம் போய்விடலாம். குற்றுயிரும் குளை உயிருமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டால் என்ன செய்ய முடியும்?

இன்றையத் தேதியில் சாதாரண சிகிச்சை என்றால், வங்கி இருப்பை வழித்துக் கொடுக்க வேண்டும். சீரியசான சிகிச்சை என்றால் சொத்தை எழுதிக் கொடுக்க வேண்டும்!

அதிர்ஷ்டம் வாசல் வழியாகத்தான் வரும். ஆனால் துன்பம் எப்படி வேண்டுமென்றாலும் வரும். கதவைச் சாத்தி வைத்திருந்தாலும், கதவு இடுக்கின் வழியாக வரும். சாவித் துவாரத்தின் வழியாக வரும். சாரளத்தின் வளியாக வரும். எப்படி வேண்டுமென்றாலும் வரும். எப்படி செக்யூரிட்டி போட்டிருந்தாலும் வரும். செக்யூரிட்டியைத் தட்டிப் படுக்க வைத்துவிட்டு வரும்.

“அதிர்ஷ்டம் தபாலில் வரும். தரித்திரம் தந்தியில் வரும்” என்று என் தந்தையார் சொல்வார்.

அதுதான் கிரகங்களின் விளையாட்டு. சனி, ராகுவெல்லாம் பெளலிங் போட்டால் ‘மிடில் ஸ்டம்ப்’ பறக்கும். இரண்டாக ஒடிந்து பதினைந்தடி தூரத்தில் இருக்கும் விக்கெட் கீப்பரின் கைக்குப் போய்ச் சேரும்.

தீய கிரகங்கள் என்றில்லை. நல்ல கிரகமே ஒரு ஜாதகத்தின் ஆறாம் அதிபதியாக இருக்கும்போது, தன்னுடைய தசா புத்தியில் ஜாதகனைப் போட்டுப் பார்த்துவிடுவான். புரட்டி எடுத்துவிடுவான். அதற்கு யாரும் விதிவிலக்காக முடியாது.

ஆறாம் இடத்தானின் (அவன்தான் ஜாதகத்தின் நம்பர் ஒன் வில்லன்) மகாதிசை அல்லது வேறு திசையில் அவனுடைய புத்தி உங்களுக்கு நடந்தால் எச்சரிக்கையாக இருங்கள். தினமும் இறைவனை வழிபடுங்கள். குறிப்பாக விநாயகப் பெருமானை வழிபடுங்கள். அவர்தான் அங்கிங்கெனாதபடி எங்கும் - குளக்கரை, அரசமரத்தடி என்று எங்கும் இருக்கிறார்.

27 நாட்களுக்கு ஒருமுறை உங்கள் ஜன்ம நட்சத்திர நாள் அன்று சிவன் கோவிலுக்குச் சென்று சிவபெருமானை அர்ச்சித்து வழிபடுங்கள். நம்பிக்கையோடு மனம் உருக வழிபடுங்கள்.

அந்த நம்பிக்கைதான் வழிபாட்டில் முக்கியம்!
----------------------------------------------------------------------
சீர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோவில் என்னும் சிவஸ்தலம், இரண்டு விதங்களில் முக்கியமானது.

பார்த்தால் அசரவைக்ககூடிய பிரம்மாண்டமான கோவில் உள்ளது.

அங்கே உறைகின்ற சிவனாருக்கு, வைத்தியநாதர் என்று பெயர். நோயால் அவதிப்பட்டு, தன்னிடம் அடைக்கலமாக வரும் பக்தர்களுக்கு வைத்தியம் பார்க்கும் வைத்தியர் அவர்! Fees எதுவும் வாங்காத மருத்துவர் அவர். இந்திய மருத்துவக் கழகத்தின் (Medical Council of India) அனுமதியைப் பற்றிக் கவலைப் படாமல் வைத்தியம் பார்க்கின்றவர். Blood Test, Urine Test, ECG Test, CT Scan என்று நம்மிடம் பணம் பிடுங்கும் மருத்துவ பரிசோதனைகளுக்கெல்லாம் அவரிடம் வேலை இல்லை!

நம்பிக்கையுடன் அவரைப் பார்த்து, மனம் உருகப் பிரார்த்தனை செய்தால் போதும். நோய்கள் ஓடிவிடும்.

இரண்டு அந்த ஊரில் உறையும் செவ்வாய் பகவானுக்கு தனி சன்னதி உண்டு. அங்கார தோஷம் உள்ளவர்கள் அங்கே சென்று வழிபட வேண்டும்.

முருகப்பெருமான் முத்துக்குமாரசாமி என்ற பெயரில் அங்கே இருக்கிறார். அவரை வழிபட்டால் கிரகக் கோளாறுகளை எல்லாம் அவர் நீக்குவார்!

வைத்தீஸ்வரன் கோவில் எங்கே உள்ளது? எத்தனை தூரத்தில் உள்ளது? அதன் தலபுராணம் என்ன? அதன் முழுச் சிறப்பு என்ன? என்று தெரிந்துகொள்ள விரும்புகிறவர்களுக்கான பக்கம் இணையத்தில் உள்ளது. அதன் சுட்டியைக் கொடுத்துள்ளேன். இங்கே க்ளிக்கிப் பாருங்கள்

அன்புடன்
வாத்தியார்
++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

3.11.11

Astrology ஒப்பற்ற துறவி ஒருவரின் ஜாதகம்!

--------------------------------------------------------------------------------------
Astrology  ஒப்பற்ற துறவி ஒருவரின் ஜாதகம்!

ஒப்பற்ற என்றால் ஒப்பு உவமை சொல்ல முடியாத என்று பொருள். No chance for any comparison என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

அப்படிப்பட்ட துறவி யார்? சுவாமி விவேகானந்தரைத் தவிர வேறு யாராக இருக்க முடியும் அது!!!!

இன்று சுவாமி விவேகானந்தாரின் ஜாதகத்தின் மேன்மையைப் பார்ப்போம். நன்றாகக் கவனிக்கவும்...அலசுவோம் என்ற சொல்லை நான் பயன்படுத்த வில்லை. மேன்மையை மட்டும் பார்ப்போம் என்றுதான் சொல்லியிருக்கிறேன். ஆகவே அதை மட்டுமே பாருங்கள். தேவையில்லாத  கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருக்காதீர்கள்!

சுவாமிஜியைப் பற்றி முழுமையாகத் தெரியாதவர்களுக்காக, அவரைப் பற்றிய செய்திகளுக்கான வலைப் பக்கத்தின் சுட்டியைக்  கொடுத்துள்ளேன். முதலில் அதைப் படித்துவிட்டு, பிறகு இங்கே வாருங்கள். அதுதான் நம் இருவருக்கும் நல்லது.

செய்திகளுக்கான சுட்டி: http://en.wikipedia.org/wiki/Swami_Vivekananda

இந்தப் பதிவு நமது வகுப்பறை மாணவமணி விசுவநாதன் (விசு அய்யர்) அவர்களுக்கு சமர்ப்பணம். அவர்தான் தொடர்ந்து கேட்டுக்
கொண்டிருந்தார்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

சுவாமிஜி 12.01.1863ஆம் தேதியன்று காலை 6:33 மணிக்கு கல்கத்தா நகரில் பிறந்தார்.
4.7.1902ஆம் தேதியன்று இறைவனடி சேர்ந்தார்.
வாழ்ந்த காலம் 39 ஆண்டுகள் 5 மாதங்கள் 22 நாட்கள் மட்டுமே!
நட்சத்திரம்: ஹஸ்தம், கன்னி ராசி
லக்கினம்: தனுசு
கர்ப்பச்செல் இருப்பு சந்திர திசையில் 3 ஆண்டுகள் 3 மாதங்கள் 22 நாட்கள்


ஜாதகத்தின் சிறப்பு அம்சங்கள்:
முதன்மைக் கிரகமான சூரியன் லக்கினத்தில்
அவர் இந்த ஜாதகத்தின் பாக்கியாதிபதி. இங்கே வந்து அமர்ந்ததால் ராஜயோகங்களைக் கொடுத்தார்.
லக்கினாதிபதியான குரு பகவான் பதினொன்றில், லாபஸ்தானத்தில் (குறைந்த முயற்சி, அதிகப் பலன் தரும் அமைப்பு அது)
கர்மகாரகன் சனி முக்கியமான கேந்திரத்தில் (பத்தாம் வீட்டில்)
அத்துடன் அந்த வீட்டுக்குரிய புதனுடன் சனீஷ்வரன் பரிவர்த்தனை செய்துகொண்டு பலத்த யோகத்துடன் அமர்ந்துள்ளார்.
புதனும் சுக்கிரனும் ஒன்று சேர்ந்து நிபுனா யோகம்
குருவும், செவ்வாயும் (இருவரும் திரிகோண அதிபதிகள்) ஒருவருக்கொருவர் நேரடிப்பார்வையில்
பன்னிரெண்டாம் இடத்து ராகு தொடர் பயண அனுபவங்களைக் கொடுத்தான்.

கிரகங்களின் சுயவர்க்கப்பரல்கள்:
சூரியன் - 5 பரல்கள்
சந்திரன் - 5 பரல்கள்
குரு - 7 பரல்கள்
சனி - 5 பரல்கள்
புதன் - 4 பரல்கள்
சுக்கிரன் - 4 பரல்கள்
செவ்வாய் - 3 பரல்கள்

நான்கு கிரகங்கள் அதீத வலிமையுடன் இருப்பதைப் பாருங்கள். சுக்கிரனும், புதனும் சராசரியான பரல்களுடன் உள்ளன. செவ்வாய்க்கு மட்டும்தான் பரல்கள் குறைவு. ஆனால் அதை செவ்வாய் கோணத்தில் அமர்ந்து சரிகட்டிவிட்டது. ஆக மொத்தம் அனைத்துக்கிரகங்களுமே  வலிமையாக உள்ளன.

மேன்மைகள்:

1. திரிகோணம் ஏறிய சூரியன் அவருக்கு நல்ல உடல் வலிமையையும், தாக்குப் பிடிக்கும் சக்தியையும் கொடுத்தான் He also confered will power

2. லக்கினத்தில் வந்தமர்ந்த பாக்கியதிபதி சூரியன் அவருக்கு மக்களிடையே மதிப்பு, மரியாதை, பெயர், புகழ் என்று எல்லாவற்றையும்  வழங்கினான். ஆத்மகாரகனும், பாக்கியாதிபதியுமான சூரியன் லக்கினத்தில் அமர்ந்து ராஜ யோகத்தைக் கொடுத்தான். துறவிகளில் அவர்  ராஜாவாக இருந்தார். மைசூர் மகாராஜா, ராமநாதபுரம் அரசர் சேதுபதி ராஜா போன்ற பல ராஜாக்கள் அவருக்கு சீடர்களாக இருந்தார்கள்!

3. தனுசுராசி நெருப்பு ராசியாகும். உலகறிந்த ஆன்மீகத் தலைவராக்கியது அந்த லக்கினத்தின் விஷேசமாகும். இன்னொரு நெருப்பு ராசியான  சிம்மத்தின் அதிபதி சூரியன் இங்கே வந்து அமர்ந்திருப்பதைப் பாருங்கள். அதுவும் இந்த மேன்மைக்குக் காரணம்

4. லக்கினாதிபதி 11ல் அமர்ந்ததால், அவர் எடுத்துச் செய்த பணிகளில் அவருக்கு முழு வெற்றி கிடைத்தது.

5. பத்தாம் அதிபதி புதன் இரண்டில், பரிவர்த்தனை யோகத்துடன் அமர்ந்தது, அவரை ஒரு தலை சிறந்த பேச்சாளர் ஆக்கியது. இரண்டாம்  வீடு வாக்கு ஸ்தானம் என்பதை நினைவிற்குக் கொண்டு வாருங்கள். கேட்பவர்களைக் கிறங்க வைக்கும் பேச்சுத் திறமை அவரிடம் இருந்தது.

6. செவ்வாய் 5ல் திரிகோணம் மற்றும் சொந்த வீட்டில் இருந்ததால், அவருக்கு அதீத செயல் திறனும், துரிதமாக முடிவெடுக்கும் திறனும்  இருந்தது.

7. சூரியனும், சந்திரனும் வலிமையாக,  கோணம் & கேந்திர பலத்துடனும், சுயவர்க்கத்தில் தலா 5 பரல்களுடனும் இருந்ததால், ஜாதகருக்கு  நல்ல தந்தையும், தாயும் கிடைத்தார்கள். இளம் வயது வாழ்க்கை மெச்சும்படியாக அமைந்தது.

8. வித்தைகளுக்கும் கல்விக்கும் காரகனான புதன் பரிவர்த்தனை யோகத்தில். அத்துடன் மனகாரகனும் சுபகிரகமுமான சந்திரனின் பார்வையில்  4ஆம் வீடு. ஜாதகரை இளங்கலை பட்டப் படிப்பு வரை படிக்க வைத்தன அவை. அந்தக் காலத்தில் பட்டப்படிப்பு என்றால் சும்மாவா?  பேப்பரை திருத்தினவனெல்லாம் வெள்ளைக்காரன். அதை மனதில் வையுங்கள்.

9. பத்தாம் இடத்துச் சனி ஜாதகரை (அவர் `நுழையும் துறையின் மூலம்) வாழ்க்கையின் உச்சத்திற்கு கொண்டு செல்லும் வலிமை உடையது.
தலைமைப் பொறுப்பில் இருந்த அனைவருக்கும் இது நடந்துள்ளது. விவேகானந்தருக்கும் அப்படியே நடந்தது. ஆன்மீக உலகத்தின் நம்பர் ஒன்
ஆக ஆனார்! உலகம் முழுவதும் அறியப்பட்டார். மக்கள் கூட்டத்தை வசியப்படுத்துவதில் அவருக்கு நிகரானவர் எவருமில்லை.

10. மறைவிடங்கள் வலிமையாக இருந்தால்தான் துறவியாக முடியும் (3, 6, 8 &12th Houses) அவற்றின் பரல்களைக் கூட்டிப் பாருங்கள்
30 + 35 + 32 + 31 = மொத்தம் 128.  337 வகுத்தல் 3 = 112 மட்டுமே இருக்க வேண்டும். ஆனால் அவருக்கு இருந்தது 128 (16 பரல்கள்  அதிகம்) அதனால்தான் முழுத்துறவியானார்

11. இரண்டாம் இடத்ததிபதி சனீஷ்வரன் 10ல் அமர்ந்து அவருக்கு ராஜயோகத்தைக் கொடுத்ததோடு, லட்சக் கணக்கான மக்களை பக்தி
மார்க்கத்திற்கு அழைத்துச் செல்லும் வலிமையையும் கொடுத்தான். அவரைப் புனிதராக்கினான். மனித நேயத்திற்குப் பாடுபட வைத்தான்.

12. இரண்டில் அமர்ந்த ஏழாம் இடத்துப் புதன், அவருக்கு உலகளாவிய புகழையும், மதிப்பையும் பெற்றுத் தந்தான்.

13. பன்னிரெண்டில் இருக்கும் ராகு அவரை நாடு முழுமைக்கும், ஏன் உலகில் பாதிக்கும் மேற்பட்ட இடங்களுக்குப் பயணிக்க வைத்தான்.

14. சரி, தசா கணக்கைப் பார்ப்போம்:
அவர் பிறந்தது. 12.1.1863ல். பிறப்பில் சந்திர திசை இருப்பு. சுமார் 3 ஆண்டுகள், மூன்று மாதங்கள் + செவ்வாய் மகா திசை 7 ஆண்டுகள் +  ராகு மகா திசை 18 ஆண்டுகள். ஆக மொத்தம் 28 ஆண்டுகள். அதற்குப் பிறகு மே’ 1891ல் துவங்கிய லக்கினாதிபதி குருவின் திசையில்  எல்லாம் அரங்கேறியது. வெறும் 11 ஆண்டுகளில் அவர் உலகப் புகழ் பெற்றார்

15. அதே குரு திசையில், சந்திர புத்தி துவங்கியவுடன் அவர் முக்தியடைந்தார். உங்கள் மொழியில் சொன்னால் அவர் காலமானார். சந்திரன்  எட்டாம் இடத்துக்காரன். அதை நினைவில் வையுங்கள். அத்துடன் அவன் ஆயுள்காரகன் சனியுடன் கூட்டாக உள்ளான்.

Death (4 July 1902)

His tours, hectic lecturing engagements, private discussions and correspondence had taken their toll on his health. He was suffering from asthma, diabetes and other physical ailments. A few days prior to his demise, he was seen intently studying the almanac. Three days before  his death he pointed out the spot for this cremation - the one at which a temple in his memory stands today. He had remarked to several  persons that he would not live to be forty.

On the day of his death, he taught Shukla-Yajur-Veda to some pupils in the morning at Belur Math. He had a walk with Swami Premananda,  a brother-disciple, and gave him instructions concerning the future of the Ramakrishna Math. Vivekananda died at ten minutes past nine P.M. on July 4, 1902 while he was meditating. According to his disciples, this was Mahasamadhi.

Afterward, his disciples recorded that they had noticed "a little blood" in the Swami's nostrils, about his mouth and in his eyes. The doctors  remarked that it was due to the rupture of a blood-vessel in the brain, but they could not find the real cause of the death. According to his disciples, Brahmarandhra - the aperture in the crown of the head - must have been pierced when he attained Mahasamadhi. Vivekananda had
fulfilled his own prophecy of not living to be forty years old.

சாதனைகள் செய்வதற்கும், மக்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடிப்பதற்கும், வயதும், வாழும் காலத்தின் அளவும் முக்கியமல்ல என்பதுதான்  உண்மை. அதை அதிரடியாக நமக்கு உணர்த்திவிட்டுப்போனவர் சுவாமி விவேகானந்தா! அதை மனதில் வையுங்கள்!
அன்புடன்
வாத்தியார்
------------------------------
அடிக்குறிப்பு:

இது  unofficial பதிவிற்கு அப்பாற்பட்டது. உங்களுக்கு சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் எழுதுகிறேன்.

1. விவேகானந்தரின் அன்னை புவனேஷ்வரி அம்மையார் காசி விஸ்வநாதரின் தீவிர பக்தை. ஆண் மகவு வேண்டி அந்த அம்மையார் கடும்  பிரார்த்தனைகள் செய்த காலத்தில், காசி விசுவநாதரே அந்த அம்மையாரின் கனவில் வந்து, நான் உனக்கு மகனாகப் பிறப்பேன் என்று  சொன்னாராம். விவேகானந்தர் பிறக்கும் முன்பாக அந்த அம்மையார் அதை அடிக்கடி நினைவு கூர்ந்து சொல்வாராம்.

2. நான் நாற்பது வயதிற்கு மேல் உயிர்வாழ மாட்டேன் என்று விவேகானந்தர் அடிக்கடி சொல்வாராம். அதன்படியே நடந்தது. அதாவது அவரே  தான் முக்தியடையும் நாளைத் தேடி, முக்தியடைந்ததாக ஒரு செய்தியும் உண்டு. அவருடைய தீவிர பக்தர்கள் (சீடர்கள்) அவர்  முக்தியடைந்ததாக மட்டுமே சொல்வார்கள்.

3. ஏழாம் அதிபதி புதன் ஆறாம் வீட்டுக்காரன் (வில்லன்) சுக்கிரனுடன் கூட்டணி போட்டு அந்த வீட்டிற்கு (அதாவது ஏழாம் வீட்டிற்கு)  எட்டில் அமர்ந்ததாலும், குடும்ப ஸ்தானம், பாக்கிய ஸ்தானம், குழந்தைகள் ஸ்தானம் ஆகியவற்றில் முறையே 25, 21, 21 என்று பரல்கள்  குறைந்து அந்த வீடுகள் வீக்காக இருப்ப தாலும் சுவாமி விவேகானந்தருக்கு (அவருடைய குருநாதரைப்போல அல்லாமல்) ஒரு பெண் துணைகூட இல்லாமல் போயிற்று. அத்துடன் ஜாதகத்தில் சந்திரனும் சனியும் ஒன்றாகச் சேர்ந்து கடுமையான புனர்பூ தோஷம். மனைவியைப்  பிரிந்து வாழ வேண்டிய தோஷம். அவர் மகான் அல்லவா? அதனால் காலதேவன், அவருக்கு இந்த சங்கடங்கள் எதுவும் ஏற்படமால் பார்த்துக்கொண்டான். பெண்ணாசை, பொன்னாசை, மண்ணாசை ஆகிய மூன்று ஆசைகளும் அறவே இல்லாமல் வாழ்ந்த மகான் அவர்!

இவைகள் எல்லாம் ஜோதிடத்திற்கு அப்பாற்பட்ட விஷயங்கள். இதை நான் நம்புகிறேனா அல்லது நீங்கள் நம்புகிறீர்களா என்பது  முக்கியமில்லை. இதைப் பதிவில் சொன்னால் சில ‘அரை டிக்கெட்டுகள்’ உள்ளே வந்து சான்று கேட்டு என் கழுத்தை அறுக்கும் அபாயம்  உண்டு. ஆகவே அடிக்குறிப்பில் (unofficialலாக)அவற்றைச் சொல்லியுள்ளேன்.

நன்றி, வணக்கத்துடன்
வாத்தி (யார்)
++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

1.11.11

Astrology வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும்?

-------------------------------------------------------------------------------------
Astrology வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும்?

வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும்?

கோயமுத்தூர் ஸ்ரீஅன்னபூர்ணா ஹோட்டல் சாப்பாட்டைப் போல எல்லாம் கலந்து ருசியோடு இருக்க வேண்டும்.

எல்லாம் என்றால்?

கூட்டு, பொரியல், பச்சடி, சாம்பார், வற்றல் குழம்பு, ரசம், தயிர், ஊறுகாய், வடை, பாயாசம், அப்பளம், சாதம் என்று  எல்லாம் கலந்து, சுவையாக, நிறைவாக இருக்க வேண்டும்.

நல்ல பெற்றோர்கள், அன்பான மனைவி, ஆஸ்திக்கு ஒரு ஆண் மகவு, ஆசையாய் கொஞ்சி மகிழ ஒரு பெண் குழந்தை, நல்ல வேலை, கை நிறையச் சம்பளம், சொந்த வீடு, நான்கு சக்கர வாகனம், நோயில்லாத பெருவாழ்வு, சொந்த பந்தங்கள், இனிய நண்பர்கள் என்று எல்லாம் கலந்த நிறைவான வாழ்க்கை வேண்டும்.

அப்படி அமையுமா?

ஆயிரத்தில் ஒருவருக்கு அப்படி அமையலாம்!

மற்றவர்களுக்கெல்லாம் ஒரு நிறைவான வாழ்க்கை அமைவது கஷ்டம்!

“அனைக்க
ஒரு அன்பிலா மனைவி
வளர்க்க
இரு நோயுற்ற சேய்கள்
பிழைக்க
ஒரு பிடிப்பில்லாத தொழில்
ஆனாலும்
எனோ இன்னும்
உலகம் கசக்கவில்லை!”


என்றான் ஒரு புதுக்கவிஞன். பலருக்கு அப்படித்தான் வாழ்க்கை அமையும்.

ஆனால் எல்லோருக்கும் உரிய மொத்த மதிப்பெண் 337தான். கசக்கவில்லை என்று சொன்னான் பாருங்கள். அதைச் சொல்வதற்கான இடத்தில் அதிகமான பரல்கள் இருக்கும். எல்லாவற்றையும் தூக்கிக் கடாசிவிட்டு, எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பான். அதற்குரிய இடத்தில் அவனுக்குப் பரல்கள் அதிகமாக இருக்கும். போதாதா?

அரசனும் மகிழ்ச்சியாக இருப்பான். துறவியும் மகிழ்ச்சியாக இருப்பார். நாம் மகிழ்ச்சியாக இருப்பதற்கு அல்லது நிம்மதியாக இருப்பதற்கு மினிமம் என்ன வேண்டும்? ஜாதகப்படி என்ன வேண்டும்?

இன்றைய மினிமம் நாளைய பற்றாக்குறை!ஆகவே அதை ஒதுக்கிவிட்டுப் பொதுவாகப் பேசுவோம்.

லக்கினத்தில் குரு இருந்தால், அந்த ஜாதகனின் வாழ்க்கை பொதுவாக நன்றாக இருக்கும். லக்கினத்தில் இருக்கும் குரு அதைக் கொடுத்து  விடுவார். லக்கினத்தில் இருப்பதோடு, 5, 7 & 9 ஆம் பார்வையாக தான் பார்க்கும் இடங்களுக்கான வேலைகளை எல்லாம் செம்மையாகச் செய்து கொடுத்துவிடுவார். லக்கினத்தில் தீய கிரகங்கள் இருந்தால் அதற்கு நேர்மாறான வாழ்க்கை அமையும்!

அதே போல, லக்கினம், ஒன்பதாம் வீடு, பத்தாம் வீடு, மற்றும் பதினொன்றாம் வீடு ஆகிய நான்கு வீடுகளிலும் 28 அல்லது அதற்கு மேற்பட்ட பரல்களை உடைய ஜாதகனின் வாழ்க்கையும் நன்றாக இருக்கும். இந்தக் கட்டுரையின் ஐந்தாவது பத்தியில் சொல்லியுள்ளபடி எல்லா நலன்களையும் உள்ளடக்கியதாக இருக்கும்.

என்னிடம் நூற்றுக் கணக்கான ஜாதகங்கள் உள்ளன. அவற்றில் மேல்கண்ட விதிக்குப் பொருந்தி வரக்கூடிய என் நண்பர் ஒருவரின் ஜாதகத்தை உதாரண ஜாதகமாகக் கீழே கொடுத்துள்ளேன். எனக்கு நன்றாகத் தெரியும். நல்ல பெற்றோர்கள், மனைவி, மக்கள், செல்வம், வீடு, வாகனம் என்று எல்லாம் கலந்த நிறைவான வாழ்க்கை அவருடைய வாழ்க்கை. அதனால்தான் அதை இன்று உங்களுக்குப் பயிற்சிப் பாடமாகக் கொடுத்துள்ளேன்.

அந்த 4 வீடுகள் மட்டும் ஏன் முக்கியத்துவம் பெறுகின்றன?

லக்கினம் - இது முக்கியம். இது நன்றாக இருந்தால் மட்டுமே ஜாதகன் பலனை அனுபவிக்க முடியும்
ஒன்பதாம் வீடு - பாக்கிய ஸ்தானம். (House of Gains) எல்லா பாக்கியங்களையும் உள்ளடக்கிய வீடு.
பத்தாம் வீடு - நல்ல தொழில் அல்லது வேலை அமைவதற்கு இது முக்கியம்
பதினொன்றாம் வீடு - லாபஸ்தானம். லாபம் என்றால் என்ன வென்று தெரியுமல்லவா?

-----------------------------------------------------------------------------------

1, 9, 10 & 11 ஆம் வீடுகளில் உள்ள பரல்களைப் பாருங்கள். 
அஷ்டகவர்க்கத்தின் மேன்மை இப்போது புரிகிறதா?

அன்புடன்
வாத்தியார்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

24.10.11

Astrology என் கேள்விக்கென்ன பதில்? அவன் பார்வைக்கென்ன பொருள்?

-------------------------------------------------------------------------------------
Astrology என் கேள்விக்கென்ன பதில்? அவன் பார்வைக்கென்ன பொருள்?

எனக்கு நம் மாணவக் கண்மணிகளிடம் இருந்து வரும் மின்னஞ்சல்களைவிட, வழிப்போக்கர்களிடமிருந்து, அதாவது யாராவது சொல்லி நம் வகுப்பறைக்குள் நுழைபவர்களிடமிருந்து வரும் மின்னஞ்சல்களே அதிகம்!

ஜோதிட வகுப்பறை என்று தெரிந்தவுடன், செய்கின்ற முதல் காரியம் தங்கள் ஜாதத்தைப் பார்க்க வேண்டி மின்னஞ்சல் கொடுத்துவிடுவார்கள்.
நேரமில்லை என்று ஒதுக்கி வைத்தால், விடமாட்டார்கள். தொடர்ந்து நினைவூட்டல்கள் (ரிமைண்டர்கள்) வந்து கொண்டிருக்கும்.

“ஜோதிடம் என் தொழிலல்ல, என்னுடைய போதாத நேரம் பதிவில் எழுதிக்கொண்டிருக்கிறேன். எனக்குத் தெரிந்த ஜோதிடத்தை அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு செல்வது மட்டும்தான் எனது நோக்கம். எனக்கு இதற்கெல்லாம் நேரமில்லை. உங்களைப் போலவே எனக்கும் நாள் ஒன்றிற்கு 24 மணி நேரம்தான். கூடுதல் நேரத்தைக் கடவுள் அளிக்கவில்லை” என்றாலும் விடமாட்டார்கள்.

குறைந்தது தினமும் ஐந்து மின்னஞ்சல்களாவது வரும். அவை அனைத்திற்கும் எப்படி நான் பதில் எழுதுவது?

எல்லாம் - அதாவது 90 சதவிகிதம் இப்படித்தான் இருக்கும்.
-------------------------------------------------------------------------------------------
“சார், என்னுடைய பிறந்த தேதியையும், நேரத்தையும் கீழே கொடுத்துள்ளேன். என் எதிர்காலம் (Future) எப்படி இருக்கும் என்று பார்த்துச் சொல்லுங்கள்”

பிறந்த ஊரைக் குறிப்பிட்டிருக்க மாட்டார்கள். அத்துடன் தங்களுடைய ஜாதகத்தை இணைத்து அனுப்பியிருக்கவும் மாட்டார்கள். ஆனால் 108 தடவை..Please help me..என்று தவறாமல் குறிப்பிட்டிருப்பார்கள்.

அதில் இரண்டு விஷயம். பிறந்த ஊர் முக்கியமில்லையா? அது இல்லாமல் எப்படிச் ஜாதகத்தைக் கணித்துப் பார்ப்பது?
இரண்டாவது விஷயம் ‘எதிர்காலம்’ (Future) என்றால் என்ன?

எதிர்காலம் என்பது நூற்றுக் கணக்கான கேள்விகளை உள்ளடக்கியது.

ஜாதகருக்கு இப்போது 25 அல்லது 30 வயதென்றும் அவர் 75 முதல் 80 ஆண்டுகள் காலம்வரை உயிர் வாழக்கூடியவர் என்றும் வைத்துக் கொண்டால், இடைப்பட்ட அந்த 50 ஆண்டு காலத்திலும் அவர் வாழ்க்கை எப்படி இருக்கும், எங்கெங்கே முடிச்சு உள்ளது, எங்கெங்கே திருப்புமுனை உள்ளது, எங்கெங்கே மாத்து வாங்குவார் என்றேல்லாம், நாசா கழகத்தில் ஆராய்ச்சி செய்வது போல ஆராய்ந்து அவருக்குப் பதில் சொல்ல வேண்டும். அதற்கு அவருடைய ஜாதகத்தில் உள்ள லக்கினம், மற்றும் ஒன்பது கிரகங்களையும், 12 வீடுகளையும் அலசுவதோடு, எதிர் கொள்ளவிருக்கும் மகாதிசைகள் மற்றும் புத்திகள், 50 ஆண்டுகளுக்கான குரு, மற்றும் சனியின் கோள்சாரமாற்றங்களையும் பார்த்துப் பலன்களைச் சொல்ல வேண்டும்.

பன்னிரெண்டு வீடுகள். ஒருவீட்டிற்கு மூன்று காரகத்துவங்கள். ஆகமொத்தம் குறைந்தது அவருடைய 36 துணிகளையாவது சோப்புப் போட்டு அலசிப் பிழிந்து காயவைத்து, அயர்ன் செய்து, மடித்துப் பார்சல் செய்து தரவேண்டும்

அதெல்லாம் சாத்தியமா?

சாத்தியம்தான்!!! சாத்தியமில்லாதது எதுவுமே இல்லை!

ஒரு நாள் முழுக்க குறைந்தது எட்டு மணி நேரம் சிரத்தையாக அமர்ந்தால் அலசிவிடலாம். அதற்கு அடுத்ததாக அலசியதை எல்லாம் ஒரு 40 பக்க நோட்டுப் புத்தகத்தில் வரிசையாகப் பதிவு செய்ய வேண்டும். அதற்கு மேலும் ஒரு நாள் பிடிக்கும்

அந்தச் செயலுக்கு, ‘ஆயுள்காலப் பலன்’ என்று பெயர். அந்தக் காலத்தில், ஜோதிடர்கள், கஞ்சி வெள்ளம் + அச்சு வெல்லத்தைச் சாப்பிட்டுவிட்டுப் பொறுமையாகத் தங்களுடைய முக்கியமான வாடிக்கையாளர்களுக்கு அதைச் செய்து கொடுத்தார்கள். என் தந்தையாருக்கு, அவருடைய ஜோதிட நண்பர் திரு. ஆசான் என்பவர் செய்து கொடுத்தார். அது நடந்து அறுபது ஆண்டுகள் இருக்கும். கணினி வசதி இல்லாத காலம். அஷ்டவர்கத்தையெல்லாம் மனதால் கணக்கிட்டு எழுத வேண்டும். அதற்காக என் தந்தையார் அவருக்கு ஐநூறு ரூபாய் காணிக்கை யாகக் கொடுத்தாராம். அன்றைய காலகட்டத்தில் இந்தியன் வங்கியில் (அன்றையத் தேதியில் அது தனியார் வங்கி) குமாஸ்தாவின் மாத சம்பளம் வேறும் ரூ.125:00. என் தந்தையார் கொடுத்த பணத்தின் அன்றைய மதிப்பை நீங்களே கணக்கிட்டுக்கொள்ளுங்கள்.

ஆசான் எழுதிக் கொடுத்த பலன்கள் மிகத் துல்லியமாக இருந்தன. ஆயுள் 74 வயது என்று எழுதிக்கொடுத்திருந்தார். என் தந்தையாரும் அதை அடிக்கடி சொல்வார். அதன்படியே என் தந்தையாரும் 74ஆவது வயது முடிந்த நிலையில் இறந்துவிட்டார். மாஸிவ் ஹார்ட் அட்டாக். பத்து நிமிடத்தில் உயிர் பிரிந்துவிட்டது.

இன்றையத் தேதியில் எந்த ஜோதிடரும் ஆயுள்காலப் பலனைக் கணித்து எழுதிக் கொடுப்பதாகத் தெரியவில்லை.

ஆகவே எந்த ஜோதிடரிடம் சென்றாலும் என்னுடைய எதிர்காலம் எப்படி என்று அசட்டுத்தனமாக யாரும் கேட்காதீர்கள்.

உங்களுடைய பிரச்சினையைக் குறிப்பிட்டு அதற்கு மட்டும் தீர்வைக் கேளுங்கள்.

மூன்று உதாரணங்களைக் கொடுத்துள்ளேன்.

1. “பொறியாளர் படிப்பைப் படித்து முடித்துவிட்டேன். ஒரு ஆண்டாகிறது. இன்னும் வேலை கிடைக்கவில்லை. எப்போது கிடைக்கும்?”
2. “வீட்டில் கடந்த 3 ஆண்டுகளாக எனக்கு மாப்பிள்ளை பார்க்கிறார்கள். திருமணம் முடியமாட்டேன் என்கிறது. எப்போது திருமணம் நடைபெறும்?”
3. “எனக்குத் தொழிலில் பிரச்சினை. நிறையக் கடன் உள்ளது. எப்போது பிரச்சினை (கடன்) தீரும்?

Your question should be specific with a little narration of the prevailing problem and also you should produce your full horoscope

அதற்கு அடுத்து, வேறு ஒரு தொடர் பிர்ச்சினை இருக்கிறது. அதென்ன தொடர் பிரச்சினை?

“சார், என் பெண்ணின் பிறப்பு விபரத்தையும், அவளுக்குப் பார்த்திருக்கும் வரனின் பிறப்பு விபரத்தையும் அனுப்பியுள்ளேன். இருவருக்கும் ஜாதகம் பொருந்துகிறதா? திருமணம் செய்யலாமா? என்று சொல்லுங்கள். நேரமில்லை என்று ஒதுக்கிவிடாதீர்கள். என் பெண்ணின் வாழ்வே உங்கள் கையில்தான் இருக்கிறது” என்ற வேண்டுகோளுடன் மின்னஞ்சல்கள் வரும்.

பொருத்தம் பார்க்கும்போது நட்சத்திரப் பொருத்தம் (பத்துப் பொருத்தங்கள்), தோஷப் பொருத்தம், தசா சந்திப்பு இன்மை போன்றவற்றை அலசிப் பதில் சொல்ல வேண்டும். பாவம் போனால் போகிறது என்று பார்த்து, பொருந்தாத நிலையில், பொருந்தவில்லை. வேண்டாம் என்று சொன்னால், பிரச்சினை அத்துடன் தீர்ந்துவிடாது. நீங்கள் மாட்டிக்கொண்டு விடுவீர்கள். தொடர்ந்து திருமண மையங்களில் வாங்கிய வேறு ஐந்து வரன்களின் விபரத்தை அனுப்பி, அவற்றுள் எது பொருந்துகிறது சொல்லுங்கள் என்று அடுத்த தினமே வேறு ஒரு மின்னஞ்சல் வரும்.

கதை எப்படி இருக்கிறது பார்த்தீர்களா?

இதைத்தான் கவியரசர் கண்ணதாசன் இப்படிச் சொன்னார் போலும்:

“சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் முடிவே இல்லாததது”

அதை நான் மாற்றி இப்படிச் சொல்வது வழக்கம்: “துன்பம் எப்போதும் தொடர்கதைதான் முடிவே இல்லாததது”
-------------------------------------------------------------------------------
பன்னாட்டு நிறுவனங்களில் வேலைபார்க்கும் பெண்களிடமிருந்து வரும் மின்னஞ்சல்கள் கலக்கலாக இருக்கும்.

“சார், நான் ஒருவரைத் தீவிரமாகக் காதலிக்கிறேன். மூன்று ஆண்டுகளாகக் காதலிக்கிறேன். எங்கள் இருவரின் ஜாதகங்களையும் அனுப்பியுள்ளேன். எங்கள் காதல் நிறைவேறுமா? தயவு செய்து பார்த்துச் சொல்லுங்கள்”

காதல் என்று வந்தாகிவிட்டது. அதற்குப் பிறகு எதற்கு ஜாதகம்? பார்க்க வேண்டும் என்று ஆசையிருந்தால், காதலிக்கும் முன்பு அல்லவா அதைப் பார்த்திருக்க வேண்டும்?

இப்போது பார்த்துப் பொருந்தவில்லை என்று சொன்னால், என்ன செய்வீர்கள்? அவனை வேண்டாம் என்று சொல்லிவிடுவீர்களா? சொன்னால் அவன் சும்மா விட்டுவிடுவானா? காதலுக்கு எத்தனை ஆதாரங்கள் அவனிடம் சிக்கி உள்ளதோ - பிரச்சினை செய்ய மாட்டானா?

“காதல் புனிதமானது. அவனுடன் அல்லது அவளுடன் ஒரு மாதம் வாழ்ந்தாலும் போதும். அதுதான் காதல். ஜாதகத்தை எல்லாம் பார்க்காதீர்கள். காதலித்தவனையே மணந்து கொள்ளுங்கள்.” என்று அறிவுறுத்தி எழுதினால், விட மாட்டார்கள்.

“சார், அவனைப் பொறுத்தவரை எந்தப் பிரச்சினையும் வராது. வந்தாலும், மகளிர் காவல் நிலையத்தில் அவனைக் கொண்டுபோய் நிறுத்தி, முட்டிக்கு முட்டி தட்டி சரி பண்ணிவிடுவேன். அதில் எனக்குத் தில் இருக்கிறது. என் பிரச்சினை எல்லாம் வேறு விதமானது. அவன் வேறு மதத்தைச் சேர்ந்தவன். எங்களுடைய காதல் தெரிந்தால் என் பெற்றோர்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அவர்களை எப்படி ஒப்புக்கொள்ளச் செய்வது? ஜாதகத்தில் அதற்கான சான்ஸ் இருக்கிறதா? அதை மட்டும் பார்த்துச் சொல்லுங்கள். இல்லை அதற்கு ஒரு உபாயத்தையாவது சொல்லுங்கள்.”

என் கேள்விக்கென்ன பதில்?
அவன் பார்வைக்கென்ன பொருள்?


அதாவது ஜாதகத்தில் உள்ள ஏழாம் இடத்தான் அல்லது களத்திரகாரன் சுக்கிரனின் பார்வையைத்தான் பார்வைக்கென்ன பொருள் என்று சொல்லியிருக்கிறேன்.

பல பக்கங்கள் எழுதலாம். எழுதியிருக்கிறேன். பழைய பாடங்களில் உள்ளது. படித்துப் பாருங்கள்.

பதிவில் பாடங்களை எழுதுவது மட்டுமே என்னுடைய பிரதான வேலை. மற்றதற்கெல்லாம் எனக்கு நேரமிருக்காது என்பதை அனைவரும் உணரும்படி கேட்டுக்கொள்கிறேன்.
---------------------------------------------------------------------------------------------------------
சரி, இவர்களையெல்லாம் எப்படி சமாளிக்கிறீர்கள்?

ஸிம்ப்பிள். நேரமில்லை. மன்னிக்கவும் என்று பதில் எழுதிவிடுவேன்.

எல்லோருக்குமா?

இல்லை. இரண்டொருவருக்குப் பார்த்துச்சொல்வேன். அவர்கள் கொடுத்திருக்கும் விவரங்களும், கேள்வியும் சரியாக இருந்தால்! அது மனிதாபிமான அடிப்படையில். அதுவும் வகுப்பறை உறுப்பினர்களுக்கு மட்டும்தான்.

வகுப்பறை உறுப்பினர் என்பதை எப்படிக் கண்டுபிடிப்பீர்கள்?

அதற்கு ஒரு வழி இருக்கிறது. ஆனால் இங்கே அதைச் சொல்ல முடியாது. ஆகவே அது ரகசியம்!:-)))))

நன்றி, வணக்கத்துடன்,
மற்றும் அன்புடன்
வாத்தியார்




வாழ்க வளமுடன்!

21.10.11

Astrology: புத்திரபாக்கியம் இல்லையா?

 -----------------------------------------------------------------------------
Astrology: புத்திரபாக்கியம் இல்லையா?
ஜோதிடம் cum ஆன்மீகக் கட்டுரை
--------------------------------------------------
புத்திரபாக்கியம் இல்லையா? கவலைகளை எல்லாம் மூட்டை கட்டி வையுங்கள். இந்தப் பதிவைப் படியுங்கள். உங்களுக்காக எழுதப்பெற்றது.

“சார், பார்க்காத ஜோதிடர்கள் இல்லை. போகாத நவக்கிரக ஸ்தலங்கள் பாக்கியில்லை. எங்களுக்கு எப்போது குழுந்தை பிறக்கும் என்று  உங்கள்  அஷ்டகவர்க்கம் மூலம் பார்த்துச் சொல்லுங்கள்” என்று எனக்குச் சிலர் கடிதம் எழுதுகிறார்கள்.

ஐந்தாம் வீடு, அதன் அதிபதி, காரகன் குருபகவான் ஆகிய மூவரும் அமர்ந்திருக்கும் வீடுகளின் பரல்கள் 28ற்கும் குறைவாக இருந்தால்,
(கணவன் அல்லது மனைவியின் ஜாதகத்தில்) குழந்தை பிறப்பது
தாமதமாகும். அதுவே பரல்கள் அவர்கள் இருவரின் ஜாதகத்திலும் 25 ற்கும்  குறைவாக (அம் மூன்று இடங்களிலும்) இருந்தால் குழந்தை பாக்கியம் இல்லை என்பது பொது விதி.

ஆனால் அதை எல்லாம் மீறி சிலருக்குக் குழந்தை பிறக்கும். அதுதான் இறையருள். தொடர் பிரார்த்தனையின் பலன். மனம் உருகிய உண்மையான பக்திக்குக் கிடைக்கும் பரிசு. எப்படி வேண்டுமென்றாலும் வைத்துக் கொள்ளுங்கள்.

எது எப்படியிருந்தாலும், ஜாதகத்தை எல்லாம் மூட்டைகட்டிப் பரண்மேல் போடுங்கள். இறைவனைப் பிரார்த்தனை செய்யுங்கள்.

இறையருளுக்குள் எல்லாம் அடக்கம். அதை நம்புங்கள். ஜோதிடம் எல்லாம் அதற்குக் கீழேதான்!

குழந்தைபேறுக்கான ஸ்தலத்தைப் பற்றிய விபரத்தைக் கீழே
கொடுத் துள்ளேன்!   ஒருமுறை சென்று வாருங்கள். நம்பிக்கையோடு வழிபட்டுவாருங்கள். நடப்பதைப் பாருங்கள்.

நடந்த பிறகு ஒருவரி எழுதுங்கள்.
-----------------------------------------------------------------------------------
     “வாத்தி (யார்) ஒரு சின்ன குழப்பம்!”

     “என்ன ராசா?”

      “ஜோதிடப் பாடம் நடத்தும் நீங்கள், ஜாதகத்தைத் தூக்கிப் பரணில் போட்டு விட்டுக் கோவிலுக்குப் போ என்கிறீர்களே? கோவிலுக்குப்  போவதால் மட்டும் எப்படிக் குழந்தை பிறக்கும்? ஜாதகம் பொய்யாகிவிடாதா?”

        “ராசா, அதே ஐந்தாம் வீடுதான் பூர்வபுண்ணிய வீடு. பூர்வ புண்ணியத்தைக் கணித்துச் சொல்ல யாருக்கும் பவர் (சக்தி) கிடையாது.  இறைவழிபாட்டால், பூர்வபுண்ணிய தர்மம் மேன்மைப் பட்டு குழந்தை பிறக்கும். புரிகிறதா? சில விஷயங்கள் ஜாதகத்தையும் மீறி நடப்பதற்கு  அதுதான் காரணம்.”
------------------------------------------------------------------------------------------------




----------------------------------------------------------------------------------

நவநீதகிருஷ்ணன் கோவில், Dodda mallur, Near Chennapatna, Karnataka

பெங்களூர் மைசூர் நெடுஞ்சாலையில், பெங்களூரில் இருந்து அறுபத்தி யிரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இப்புண்ணிய ஸ்தலம்.
நெடுஞ்சாலையில் செல்கையில் 60ஆவது கிலோமீட்டரில், இடது பக்கம் (சென்னபட்னா நகரைத் தாண்டிய பிறகு) மிகப் பெரிய அலங்கார வளைவு  (Arch) உங்களை வரவேற்கும். அதுதான் அக்கோவிலின் நுழைவாயில். சென்னபட்னா நகரில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவுதான். ஆட்டோ ரிக்‌ஷா வசதி உண்டு.

அக்கோவில் கி.பி.1,117ஆம் ஆண்டு விஷ்ணுவர்த்தன் என்னும் மன்னனால் கட்டபெற்ற புராதனக் கோவில் ஆகும். அங்கே உறையும் நவநீதகிருஷ்ணர் பல அதிசயங்களை நிகழ்த்திக் காட்டியவர். புத்திர தோஷம் உடையவர்களும், சயன தோஷம் உடையவர்களும், இக்கோவிலுக்குச் சென்று மனம் உருகி வழிபட அக்குறைகள் நிவர்த்தியாகும் என்பது வழிவழியான நம்பிக்கை.

அதற்கு ஆதாரம் கேட்டு யாரும் பிறாண்ட வேண்டாம். பின்னூட்டம் இட வேண்டாம். பன்னாட்டு நிறுவனங்களில் வேலை தேடி அலையும்போது தூக்கிக் கொண்டு செல்லும் உங்கள் பல்கலைக் கழகச் சான்றிதழ்களுக் கெல்லாம் அப்பாற்பட்ட விஷயங்கள் எத்தனையோஉள்ளன, அதில் இதுவும் ஒன்று!

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------------------------------------------
How to reach Dodda Mallur
From Bangalore 62 kms
From DHQ Ramanagara 12 kms
Route :
1.Bangalore-Ramanagara-Channapatna-Dodda Mallur.(SH 17)
2.Mysore-Srirangapatna-Mandya-Maddur-Dodda Mallur(SH 17)
Road :
Travelling on State Highway 17 which connects Bangalore - Mysore, you need to take a diversion just after two kms after Channapatna heading towards Maddur. You can find the temple Gopura visible to the main highway.
Rail :
Nearest Railway station is Channapatna and from there on, you can head by road either in Auto or in a taxi.
Airport :
The nearest Airport being Bangalore International Airport, heading either by Road or Rail from there on.
------------------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!

20.10.11

உலகை மயக்கிய மற்றுமொரு மந்திரப் பெயர்

 +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
உலகை மயக்கிய மற்றுமொரு மந்திரப் பெயர்

நம்ம ஊர் தமிழ்நாட்டிலுள்ள இளவட்டங்களெல்லாம் நமீதாவை விரும்புகிற அளவில், அவருக்காகச் செலவிடுகின்ற நேரத்தில் பத்தில் ஒரு பங்கைக்கூடத் தொன்மையான கலையான ஜோதிடத்தைத் தெரிந்துகொள்வதில் செலுத்துவதில்லை.

1,500 ஆண்டுகளாக இருக்கும் அக்கலையின் மேலான்மையைப் புரிந்து கொள்ளாததோடு, நமக்கு அதன் மீதுள்ள நம்பிக்கையை அசைக்க வேண்டுமென்ற நோக்கோடு அரைகுறையான கேள்விகளைக் கேட்டு எரிச்சலையும் உண்டாக்குவார்கள்.

ஜோதிடத்தைக் கற்றுக் கொள்வதற்காக இந்தியாவிற்கு வந்து இங்கே மகாராஷ்டிராவில் ஒரு அந்தனர் வீட்டில் இரண்டாண்டு காலம் தங்கி, ஜோதிடத்தைக் கற்றுக் கொண்டதோடு, திரும்பிச் சென்று சுமார் 40 ஆண்டு காலம் அக்கலையில் புகழ்பெற்று உலகையே தன்னைத் திரும்பிப் பார்க்க வைத்த ஒரு ஆங்கிலேயரைப் பற்றிய உண்மைச் செய்திகளை இன்று (மறு) பதிவிடுகிறேன்.

பதிவு சற்றுப் பெரிதாக இருக்கும். நீளமாக இருக்கும். பொறுமை இல்லாதவர்கள் பதிவை விட்டு இப்போதே விலகி விடலாம். ரசித்துப் படிப்பவர்கள் மட்டும் தொடரவும்.

உலகை மயக்கிய அந்த மந்திரப் பெயர்: வில்லியம் ஜான் வார்னர் - மற்றும் ஒரு பெயர் கவுன்ட் லூயி ஹாமோன். ஆனால் சீரோ என்று சொன்னால்தான் அவரை அனைவருக்கும் தெரியும். His name, Cheiro, derives from the word cheiromancy -- meaning palmistry

அவர் வாழ்ந்த காலம்: November 1, 1866 - October 8, 1936 (சுமார் 70 ஆண்டு காலம்)

ஜோதிடம், கைரேகை, எண் ஜோதிடம் என்று அத்தனை துறையிலும் உலகைக் கலக்கியவர் அவர்.

அவருடைய ரசிகர்கள் அல்லது அவரை ஆதரித்துக் கெளரவித்தவர்களைப் பட்டியலிட்டு மாளாது.

King Edward VII (இங்கிலாந்தின் பேரரசராக இருந்தவர்), William Gladstone, Charles Stewart Parnell, Henry Morton Stanley, Sarah Bernhardt, Oscar Wilde, Professor Max Muller, Blanche Roosevelt, the Comte de Paris, Joseph Chamberlain, Lord Russell of Killowen,Robert Ingersoll
(இவர் பிரபல நாத்திகர் - லண்டனில் வாழ்ந்தவர்) Ella Wheeler Wilcox, Lillie Langtry, Mark Twain, W.T. Stead, Richard Croker, Natalia Janotha என்று சிலரைக் குறிப்பிடலாம்.

இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் பெரும் புகழ் பெற்றிருந்த சீரோ, தனது கணிப்பை அது நன்மையோ அல்லது தீமையோ- அப்பட்டமாகச் சொல்லி விடுவார்.

பெரும் புகழையும் பணத்தையும் ஈட்டிய சீரோ ஐரீஷில் பிறந்தவர், ஆனால் அமெரிக்காவில் குடியேறி வாழ்ந்தவர். அவருடைய கணிப்பு என்றுமே தவறானது கிடையாது.

யுத்த நாயகன் என்று புகழ் பெற்ற ஃபீல்ட் மார்ஷல் லார்ட் கிச்சென்னரின் கையைப் பார்த்த சீரோ வழக்கமான தகவல்களைக் கூறிவிட்டு, இறுதியாகச் சொன்னார்,"நீங்கள் நீரில் மூழ்கி மரணமடைவீர்கள்" நீச்சல் தெரியாத, பயந்துபோன கிச்சென்னார், உடனே தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதோடு, நீச்சலும் கற்றுக் கொண்டார்.

ஆனால் சீரோ சொன்னதுதான் நடந்தது.

1916-ஆம் ஆண்டு ஹம்ப்ஷயர் என்ற கப்பலில் ஃபீல்டு மார்ஷல் பயணம் செய்தார். அக்கப்பல் கடற் கண்ணி ஒன்றில் மோதிச் சேதமுற்று மூழ்கியது. லார்ட் கிச்சென்னர் நீரில் மூழ்கி மரணமடைந்தார்.

சீரோவை நேரில் பார்த்து தங்கள் எதிர்காலத்தை அறிந்து கொள்ள மக்கள் கூட்டம் அலை மோதியது. நாள் ஒன்றிற்கு இருபது பேர்களுக்குக் குறையாமல் சந்தித்துப் பலன்களைச் சொல்லி வந்தார்.

பெரிய இடங்களிருந்தும் அவருக்கு அழைப்புகள் வந்து கொண்டிருந்தன!

இங்கிலாந்தின் மாமன்னர் ஏழாம் எட்வர்டின் உடல் நிலை மிகவும் மோசமாகி மரணத்தின் விளிம்பில் அவர் இருந்த நேரம், மூச்சிவிடத் திணறிக் கொண்டி ருந்தார் அவர். மருத்துவர்கள் எல்லாம் கை விட்டு விட்டனர். அரசரின் இறுதி நேரம் நெருங்கி விட்டது என்றனர்.

சீரோ வரவழைக்கப்பட்டார். அரசரின் கையை ஆராய்ந்த பிறகு சீரோ சொன்னார்.

"உங்கள் உயிருக்கு இப்போது ஒன்றும் ஆபத்தில்லை. 69வது வயதில்தான் உங்களுக்கு மரணம் ஏற்படும்"

அதன்படி 1841ல் பிறந்த அரசர், 1910ஆம் ஆண்டு மே மாதம் - தனது 69 வது வயதில்தான் காலமானார்.

அதேபோன்று பிறிதொரு சமயம், அரச குடும்பத்தினர் அனைவரையும் உட்காரவைத்து ஒவ்வொருவர் கையாகப் பார்த்துப் பலன் சொல்லும்போது, பட்டத்து இளவரசன் எட்டாம் எட்வர்ட் வேல்ஸின் கையைப் பார்த்துவிட்டு, சீரோ சொன்ன செய்தியால் மொத்த அரச குடும்பமும் திடுக்கிட்டுப் போய் விட்டது.

சீரோ சொன்னது இதுதான்."இளவரசனே, நீ பதவிக்கு வரமாட்டாய்.அரசனாகும் வாய்ப்பு உனக்கு இல்லை!"

அதன்படிதான் பின்னால் நடந்தது. திருமதி சிம்ப்சன் என்ற விவாகரத்தான - தன்னை விட இரண்டு வயது மூத்த பெண்ணை - அந்த இளவரசன்
காதலித்ததையும் - தன் காதலுக்கு எதிர்ப்புக் கிளம்பிய போது, காதலிதான் முக்கியம் எனக்கு - நாடும் பதவியும் முக்கியமில்லை என்று ஒரு
பெண்ணிற்காக ஒரு மிகப் பெரிய சாமராஜ்ஜியத்தையே (அப்போது பிரிட்டனின் கீழ் 26 நாடுகள் இருந்த காலம்) உதறிவிட்டுத் தன் காதலியோடு நாட்டையே விட்டு வெளியேறினான் அந்த இளைஞன் (அது மிகவும் சுவாரசியமான கதை - 40 ஆண்டுகளுக்கு முன்பு சாவி அவர்கள் ஆனந்த விகடனில் தொடராக அதை எழுதினார் - படித்தவர்களுக்கு நினைவிருக்கும்)

23 -06 - 1894 ஆண்டு பிறந்த - முடி துறந்த அந்த இளவரசன், பிறகு பிரான்ஸ் நாட்டில் 28 .05.1972 வாழ்ந்து தன்னுடைய 79 வது வயதில் இறந்து போனான். விக்டோரியா மகாராணியின் பேரன் அவன் என்பது உபரிச்செய்தி.

தெரியாதவர்கள் அக்கதையைப் படிக்க சுட்டியைக் கீழே கொடுத்துள்ளேன்

The story of Edward Eight

சீரோ எழுதிய நூல்கள்தான் இன்று ரேகை சாஸ்திரம் மற்றும் எண் கணித நிபுணர்களின் வேத புத்தகங்களாகும். நீங்களும் வாங்கிப் படியுங்கள்!
-------------------------------------------------------------------------------------
ரேகை சாஸ்திரஸ்தில் அவருக்குள்ள மேதைத்தனத்தையும், தனித்தன்மையையும் அறிந்து கொள்ளவும், உலகிற்கு அதை நிருபிக்கவும்
அமெரிக்காவில் இவருக்கு டெஸ்ட் ஒன்றிற்கு ஏற்பாடு செய்தார்கள்.

மிக உயர்ந்த பதவிகளில் இருப்பவர்களையும், புகழ் பெற்ற அறிஞர்களையும் கொண்ட கூட்டுக் குழு அதை நடத்தியது. ஏராளமான
பத்திரிக்கையாளர்களும் அதில் கலந்து கொண்டார்கள்.

புகை படர்ந்த காகிதத்தில் பன்னிரெண்டு பேருடைய கை ரேகைகளைப்பதிவு செய்து சீரோவிடம் கொடுத்தார்கள். கை ரேகைகளைத் தவிர அவற்றில் எந்த விதமான குறிப்போ அல்லது அடையாளமோ கிடையாது.

சீரோ அவற்றில் ஒன்றை மட்டும் எடுத்துத் தனியாக வைத்துவிட்டு, மற்றவற்றிற்கு குறிப்புகள் எழுதிக் கொடுத்தார்.

அத்தனையும் உண்மை.

இறுதியாக தனியாக எடுத்துவைத்திருந்த ரேகையை எடுத்தார். "இது ஒரு கொலைகாரனின் கை ரேகை" என்றார். அனைவரும் ஆச்சரியத்தால் அதிர்ந்து போயினர்.

அதற்குக் காரணம், உண்மையிலேயே ஒரு கொலைக்குற்றத்திற்காக மரண தண்டனையை எதிர் நோக்கிச் சிறையில் காத்திருக்கும் டாக்டர் மேயர் என்பவனின் கைரேகைதான் அது!

"ஆனால் இவனுடைய மரண தண்டனை நிறைவேறாது. ரத்தாகிவிடும்" என்றார் சீரோ.

அதன்படிதான் நடந்தது.

இறுதிவரை அந்தக் கணிக்கும் திறமை சற்றும் குறையாமல் இருந்தது

சீரோவிடம். தனது ஆயுள் நெருங்குவதை உணர்ந்த சீரோ, பதிப்பாளர்களிடம் தீவிரம் காட்டி, தன்னுடைய கண்டுபிடிப்புக்கள், கணிப்புக்கள், அனுபவங்கள் அத்தனையையும் புத்தகமாக வெளியிட்டு விட்டுத்தான் மறைந்தார்.

தன்னுடைய இறுதி நாளையும் சரியாகக் கணித்துத் தன் மனைவியிடமும், நண்பர்களிடமும் சொன்ன சீரோ, தன்னுடைய வாழ்நாளின் கடைசி
தினத்தன்று தன் நண்பர்களுக்கு மிகப் பெரிய விருந்தையும் அளித்தார்.

அன்று இரவு படுத்தவர்தான் அடுத்த நாள் காலையில் எழுந்திரிக்கவில்லை. அவர். படுக்கையிலேயே உயிர் பிரிந்திருந்தது. (3.10.1936) தான் கற்றுக் கொண்ட கலைக்காக, இந்தியாவின் புகழை அவர் தன்னுடைய நூல்களில் நன்றிக்கடனாக குறிப்பிடத்தவறவில்லை! That is his greatness!

The Story of Cheiro - Click here for the link

எண் கணிதத்தில் சீரோ எழுதிய பல சுவையான செய்திகள், மற்றும் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள் அடங்கிய பல குறிப்புகள் என்னிடம் உள்ளன. வேறு ஒரு சந்தர்ப்பத்தில் அவற்றைப் பதிவிடுகிறேன். பதிவின் நீளம் கருதி இன்று இத்துடன் நிறைவு செய்கிறேன்

அன்புடன்
வாத்தியார்


*************************************
சேர்க்கை
--------------------------
புதிய அட்டவணை!

திங்கள் முதல் வெள்ளிவரை வகுப்பறை நடைபெறும். ஐந்து நாட்களும் வாத்தியாரின் ஆக்கங்கள் வெளியாகும். சனிக்கிழமை விடுமுறை.

ஞாயிற்றுக்கிழமை மாணவர் மலர். அன்று உங்களின் ஆக்கங்கள் வெளியாகும். அனைவரையும் பங்குகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். கதை, கவிதை, கட்டுரை, நகைச்சுவை என்று எழுத்தின் எல்லா பரிமாணத் திலும் எழுதியனுப்புங்கள். தமிழில் சரளமாக எழுதமுடியாதவர்கள்
ஆங்கிலத்தில் எழுதியனுப்பலாம். தகுதியுடையவைகள் அனைத்தும் வெளியாகும். எழுத்தில் உங்கள் அனைவரையும் ஊக்குவிற்பதற்காக இந்தப் பகுதி. அன்று வரும் பின்னூட்டங்களுக்கு நீங்கள் (ஆக்கங்களை எழுதியவர்கள்) பதில் எழுதலாம்.

ஆக்கங்கள் உங்கள் சொந்த எழுத்தாக இருக்கட்டும். பிறர் எழுதியதை வெட்டி ஒட்டும் வேலையைச் செய்ய வேண்டாம். நீங்கள் எங்காவது படித்ததில் பிடித்தவற்றை உங்கள் மொழியில் எழுதியும் அனுப்பலாம்.

திருவாளர்கள் கே.எம்.ஆர்.கே, கோபாலன் சார், தமிழ் விரும்பி, மலேசியா ஆனந்த், விசு அய்யர், தில்லி உமா, ஜப்பான் மைனர், துபாய் கண்ணன், கோவை சகோதரி, யு.எஸ்.ஏ. ராமுடு, தேமொழி, ஸ்ரீசோபனா போன்ற முன் பெஞ்ச் மாணவியர், மாணவர்களுடன் மற்ற அனைவரையும் பங்கு  கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.

வாத்தியார் கலகலப்பான ஆசாமி. டேக் இட் ஈஸி’ கொள்கை உடையவர். ஆகவே பின்னூட்டங்கள் கலகலப்பாக இருப்பதில் தவறு இல்லை. யாரையும் காயப்படுத்தும்படி, குறை சொல்லும்படி இருக்கவேண்டாம்.

வரும் பின்னூட்டங்களில், பிரச்சினையான  பின்னூட்டங்களைத் தவிர மற்ற அனைத்துப் பின்னூட்டங்களும்  வெளியாகும்.

அன்புடன்
வாத்தியார்
20.10.2011

வாழ்க வளமுடன்!
-------------------------------------------------------------------

19.10.11

Astrology: உலகைக் கலக்கிய பெண்ணின் ஜாதகம்!

-----------------------------------------------------------------------------------
Astrology: உலகைக் கலக்கிய பெண்ணின் ஜாதகம்!

உலகை எப்படிக் கலக்க முடியும் என்பவர்கள் பதிவைவிட்டு விலகவும். மற்றவர்கள் தொடரவும்!

ஆமாம். சாதாரணப் பெண் அல்ல அவர். உலகையே கலக்கிய அழகான பெண். அவருடைய அந்த அழகுதான் உலகையே கலக்கியது. பலரைக் கிறங்கடித்தது. The Most Photographed lady of the century' என்ற பெயரைப் பெயரைப் பெற்றுத்தந்தது. அவருடைய பெயரே ஒரு மந்திரச் சொல்லாக விளங்கிய காலம் உண்டு.

போதும் சஸ்பென்ஸ்! யாரென்று சொல்லுங்கள் என்கிறீர்களா?

சரி, சொல்கிறேன். அவருடைய பெயர் ‘மர்லின் மன்றோ’

தெரியுமல்லவா? தெரியாவிட்டால் அவரைப் பற்றிய முழு விவரங்களுக்கான வலைத்தளத்தின் சுட்டியைக் கொடுத்துள்ளேன். படித்துவிட்டுப் பிறகு இங்கே வாருங்கள். அதுதான் நம் இருவருக்கும் நல்லது!

Link URL: http://en.wikipedia.org/wiki/Marilyn_Monroe
-----------------------------------------------------
அவருடைய சிறுவயது வாழ்க்கை மிகவும் அவலமாக இருந்திருக்கிறது. தந்தையும் சரியில்லை. தாயும் சரியில்லை. வளர்ப்புப் பேற்றோர் களிடமும், பிறகு வளர்ப்புக் காப்பகங்களிலும் வளர்ந்தார். இருபது வயதில் விமான உதிரிப்பாகங்களைத் தயாரிக்கும் ஒரு தொழிற்சாலையில் வேலைபார்த்து வயிற்றைக் கழுவினார். அதிர்ஷ்டம் ‘டேவிட் கொனோவர்’ என்னும் இராணுவ புகைப்படக்காரர் மூலம் வந்தது. இவரின் அழகைப் பார்த்த அந்த நபர், இவரை விதம் விதமாக புகைப்படங்கள் எடுத்துப் பத்திரிக்கைகளுக்குக் கொடுக்க, அதன் மூலமாக விளம்பர மாடலாகமாறி, கடைசியில் அமெரிக்கத் திரைஉலகம் இவரை பலவந்தமாகத் தூக்கிக்கொண்டுபோய் விட்டது.

அதற்குப் பிறகு?

சுமார் 15 ஆண்டு காலம் 32 திரைப்படங்களில் நடித்துப் பேரும் புகழும் பெற்றதோடு உலகம் முழுவதும் எண்ணற்ற இரசிகர்களையும் பெற்றார்
The seven years itch (1955), Bus Stop (1956), Let us make Love (1960), The misfits (1961) போன்ற படங்கள் பெரும் வெற்றியைப் பெற்றன.

20th Century Fox, The Columbia Pictures, United Artists, Metro-Goldwyn Mayer போன்ற ஹாலிவுட்டின் பிரபல திரைப்பட நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு இவரை வைத்துப் படங்களை எடுத்தன

நடிகை, பாடகி, மாடல்பெண், ஷோ கேர்ள் என்று பன்முகத்திறமை கொண்டவர். அதைவிட முக்கியமாக major sex symbol (இந்தத் தகவல் மைனர்/களுக்காக) 50 - 60 களில் வியாபார ரீதியில் வெற்றிகரமான பல திரைப்படங்களில் நடித்துக் கலக்கியவர்

ஆனால் அவரது 36ஆவது வயது முடிந்தவுடன், ஆயுள்காரகன் சனீஷ்வரன் அவருக்குப் போர்டிங் பாஸைக் கைகளில் திணித்து, இந்த உலகைவிட்டே அவரை அனுப்பி வைத்துவிட்டான். தற்கொலை செய்து தன் உயிரை மாய்த்துக்கொண்டார். அதிக அளவு உட்கொண்ட தூக்க மாத்திரைகள் அதற்குக் காரணம். (Over dose of sleeping pills). சிலர் அதை விபத்து என்றும் சொல்வார்கள். எதாக இருந்தால் என்ன? பல ரசிகர்களைக் கலங்க வைத்துவிட்டு அம்மணி போய்விட்டார்!


அவருடைய ஜாதகத்தை இன்று அலசுவோம் (எல்லாம் ஒரு பயிற்சிக்காகத்தான்)
--------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------


பெயர்: மர்லின் மன்றோ
பிறந்த தேதி 1.6.1926
பிறந்த ஊர்: லாஸ் ஏஞ்சல்ஸ், யு.எஸ்.ஏ
பிறந்த நேரம்: காலை 9:30 மணி
நட்சத்திரம்: அவிட்டம்
லக்கினம்: கடகம்
கர்ப்பச்செல் இருப்பு: செவ்வாய் மகா திசையில் 5 ஆண்டுகள், 5 மாதங்கள், 15 நாட்கள்
காலமான தேதி 5.8.1962
வாழ்ந்த காலம்: 36 ஆண்டுகள் 2 மாதங்கள் 4 நாட்கள்
முதல் 30 ஆண்டுகள் கிறிஸ்துவ மதத்தையும், கடைசி ஆறு ஆண்டுகள் யூத மதத்தையும் தழுவினார்.

அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தால், பிறந்த வீட்டில் தவிட்டுப் பானை கூட மிஞ்சாது என்பார்கள். அது வெறும் சொல்லடை என்று ஒதுக்கிவிடலாம். ஆனால் அம்மணி ஜாதகத்தில் அது உண்மையாகியிருக்கிறது.

ஜாதகத்தின் சிறப்பு அம்சங்கள்.

சுபக்கிரங்களான குரு, சந்திரன், சுக்கிரன் ஆகிய மூன்றும் வலுவாக உள்ளன.
சந்திரன் கேந்திரத்தில் உள்ளார்
சுக்கிரனும் அவ்வாறே உள்ளார்
குரு பகவான் எட்டில் போய் உட்கார்ந்து கொண்டாலும், கடக லக்கினத்திற்கு யோககாரகனான செவ்வாயுடன் கூட்டணி போட்டு வலுவாக உள்ளார். கடக லக்கினத்திற்கு 5, மற்றும் 10ஆம் இடங்களுக்கு உரியவன் செவ்வாய். ஒரு திரிகோண இடம் மற்றும் ஒரு கேந்திரத்திற்கு அதிபதியான செவ்வாய்தான் கடகத்திற்கு யோககாரகன்.அதை மனைதில் கொள்க!
கர்மகாரகன் (Authority for Profession) சனீஷ்வரன் உச்சம் பெற்றுள்ளான்.
எந்த கிரகமும் கிரக யுத்தத்தில் சிக்கவில்லை!

சசமகா யோகம், சுனபா யோகம், அமலா யோகம், சதா சஞ்சார யோகம் போன்ற துக்கடா யோகங்கள் மட்டும் உள்ளன. குறிப்பிடும்படியாக பலத்த யோகங்கள் எதுவும் இல்லை.

கிரகங்களின் சுயவர்க்கப்பரல்கள்:
குரு - 7 பரல்கள்
புதன் - 5 பரல்கள்
சூரியன் - 4 பரல்கள்
சுக்கிரன் - 4 பரல்கள்
சந்திரன் - 3 பரல்கள்
செவ்வாய் - 3 பரல்கள்
சனி - 2 பரல்கள்

முதல் 2 கிரகங்கள் நல்ல பரல்களுடன் இருக்கின்றன. மற்ற கிரகங்கள் by placement அதை ஈடு கட்டிவிட்டன. சனி (உச்ச வீடு) சந்திரன் (கேந்திரம்) சுக்கிரன் (கேந்திரம்) செவ்வாய் (யோககாரகன் பதவி) சூரியன் (லாபஸ்தானம்)  ஆக மொத்தம் எல்லாக் கிரகங்களுமே வலுவாக உள்ளன!
===============================================

ராசிச் சக்கரம்
 சுயவர்க்கப்பரல்கள் கட்டம் கட்டிக்க் காட்டப்பெற்றுள்ளன!
-------------------------------------------------------------------------------

சரி இப்போது அலசுவோம்:

1. ஜாதகி கடக லக்கினக்காரர். கடக லக்கினம் அரச கிரகங்கள் இரண்டில் ஒன்றான சந்திரனுக்கு உரிய வீடு. இவர் ஜாதகத்தில் சந்திரன் கேந்திரத்தில் அமர்ந்து லக்கினத்தைத் தன் நேர் பார்வையில் வத்திருக்கிறார். அதனால் ஜாதகிக்கு நிற்கும் சக்தியைக் (Standing Power) கொடுத்தார்.

2. லக்கினத்தில் சந்திரன் இருந்தாலும் அல்லது லக்கினத்தைச் சந்திரன் பார்த்தாலும் அழகான தோற்றத்தைக் கொடுக்கும். ஜாதகிக்குப் பேரழகை ஏழில் அமர்ந்து லக்கினத்தைப் பார்க்கும் சந்திரன் கொடுத்தது.

3. புத்தி மற்றும் வித்தைகளுக்கு உரிய நாதன் புதன், தன் சுயவர்க்கத்தில் 5 பரல்களுடன் இருப்பதைக் கவனியுங்கள். ஜாதகிக்கு நல்ல புத்திசாலித்தனத்தை - கிடைத்த வாய்ப்பைத் தக்க வைத்துக்கொள்ளும் புத்திசாலித்தனத்தை புதன் வழங்கினார்.

4. சரி, அம்மணியின் மார்க் ஷீட்டைப் பார்ப்போம். மொத்த மதிப்பெண்கள் 337ல்:

அவருடைய ஜாதகத்தில் தீய இடங்களான 3, 6, 8 & 12 ஆம் இடங்களின் பரல்களைக் கூட்டுங்கள்.

3ல் -  28
6ல் -  36
8ல் -  31
12ல் - 23
------------------
     118

இந்த 4 இடங்களுக்கும் சேர்ந்து 112 ஐத் தாண்டக்கூடாது  (337 வகுத்தல் 3 = 112) ஆனால் எத்தனை இருக்கிறது பார்த்தீர்களா? 118 உள்ளது. தீமைகள் அதிகமாக இருந்துள்ளன.

சரி கேந்திர, கோணங்களைக் கூட்டுங்கள்
1ல் -  29
5ல் -  29
9ல் -  33
4ல் -  28
7ல் -  24
10ல் - 22
-------------------
      165

இந்த ஆறு இடங்களுக்கும் சேர்ந்து இருக்க வேண்டியது 168 (337 வகுத்தல் 2 = 168) ஆனால் அதிலும் 3 பரல்கள் குறைவாக இருந்திருக்கிறது. அதாவது ஜாதகத்தில் தீமைகளே அதிகமாக இருந்திருக்கின்றன

5. நான்கில் சனி நல்ல தாய் அமையவில்லை. ஒன்பதாம் வீட்டின் அதிபதி குரு அந்த வீட்டிற்குப் பன்னிரெண்டில் அத்துடன் நவாம்சத்தில் சூரியனுடன் சனியின் சேர்க்கை அதனால் நல்ல தந்தை அமையவில்லை.

6. ஏழாம் வீடு பாபகர்த்தாரி யோகத்தில். ஒரு பக்கம் கேது மறுபக்கம் செவ்வாய். அத்துடன் ஏழாம் வீட்டில் குறைவான (24) பரல்களே உள்ளன. நல்ல திருமண வாழ்க்கை அமையவில்லை. அம்மணி 3 முறைகள் திருமணம் செய்து கொண்டுள்ளார். மூன்று திருமணங்களுமே விவாகரத்தில் முடிந்தன.

கணவர்களின் பட்டியல்:
1. James Dougherty (1942 - 1946)
2. Joe DiMaggio (1954 - 1954)
3. Arthur Miller (1956 - 1961)

7. எட்டாம் வீட்டில் செவ்வாய். களத்திர தோஷம். உடன் குரு இருக்கிறாரே என்று கேட்காதீர்கள். அவனுக்கு ஆறாம் இடத்து வில்லன் வேலையையும் செய்ய வேண்டிய கட்டாயம். எட்டில் செவ்வாய் இருந்தால் திருமணம் பிரிவில் (Separation) முடியும் என்பது விதி. அம்மணி வாழ்வில் அது மூன்று முறைகள் அரங்கேறியுள்ளது.

8. குழந்தை பாக்கியத்திற்கான ஐந்தாம் வீடும் பாபகர்த்தாரி யோகத்தில் சிக்கியுள்ளது. ஒரு பக்கம் சனி. மறுபக்கம் கேது. அத்துடன் இந்த ஜாதகத்தின் ஐந்தாம் வீட்டு அதிபதியான செவ்வாயும், புத்திரகாரகனான (Authority for Children) குருவும் ஒன்றாக எட்டில் போய் அமர்ந்து விட்டார்கள். அதனால் இரண்டு முறை கருவில் உருவான குழந்தைகள் கருவிலேயே சிதைந்துவிட்டன.

9. தொழில் ஸ்தானத்தில் (பத்தாம் இடத்தில்) சுக்கிரன். சுக்கிரன் இருந்தால் கலைத்தொழில். அத்துடன் கர்மகாரகன் சனியின் நேரடிப்பார்வையில் - அதுவும் உச்சம்பெற்ற சனியின் நேரடிப் பார்வையில் பத்தாம் இடம் உள்ளது. அதனால் அவர்கள் இருவரும் சேர்ந்து ஜாதகியை உலகப் புகழ் பெற்ற நடிகையாக்கினார்கள். ஜாதகி தான் நுழைந்த துறையின் சிகரத்தை எட்டிப் பிடித்தார்
Venus in the 10th house is considered one of the best indicators for success. Those with Venus in the tenth will contribute something positive and loving to the world, and pleasure comes from their career or professional life. 

10. கடக லக்கினத்திற்கு யோககாரகனான செவ்வாய், தனகாரகன் குருவுடன் சேர்ந்து இரண்டாம் வீட்டை தன் பார்வையால் மேன்மைப் படுத்தி ராகு திசையில் ஜாதகிக்குக் கிடைக்காத பணத்தை குரு திசையில் வாரி வழங்க உதவினான்.

11. ஆறில் கேதுவும் மூன்றில் மாந்தியும் அமர்ந்து ஜாதகிக்கு அசாத்திய துணிச்சலை வழங்கினார்கள். உலகப் புகழ் பெற்ற நடிகை என்றால் எத்தனை பேரைச் சமாளிக்க வேண்டியது இருக்கும் அதற்குத் துணிச்சல் வேண்டாமா?

12. ஏழில் இருந்த லக்கினாதிபதி ஜாதகிக்கு நேர்மையான குணத்தை நல்கினான். இளம் வயதில் எடுக்கப்பெற்ற தன்னுடைய நிர்வாணப் படங்களைத் தான் புகழ் பெற்றிருந்த காலத்தில், படங்களை எடுத்த புகைப்படக்காரர் அவற்றைப் பணத்திற்காக பத்திரிக்கைக்காரர்களிடம் கொடுத்துவிட அவைகள் பெரிய களேபரத்தை உண்டாக்கின. பட நிறுவனங்கள் அதை மறுத்து அறிக்கைவிடச் சொன்னபோது ஜாதகி மறுத்துவிட்டார். அவரே பத்திரிக்கை நிருபர்களை வரவழைத்து, அவை தன்னுடைய படங்கள்தான் என்று நேர்மையாக ஒப்புக்கொண்டார். வறுமையால் தான் வாடிய காலத்தில் பணத்திற்காக அதைச் செய்ய வேண்டிய சூழலில் சிக்கினேன் என்று சொன்னார். அந்த நிகழ்வு மக்களிடையே அவருக்குப் பெரும் அனுதாபத்தை உண்டாக்கியது.

13. தசா புத்திகள் எப்படி விளையாடியுள்ளன என்பதைப் பார்ப்போம். தசா புத்திகள்தான் உரிய பலன்களை உரிய நேரத்தில் தரக்கூடியவை. அதை மனதில் கொள்க!

பிறந்த தேதி : 1.6.1926 + செவ்வாய் மகாதிசை இருப்பு 5 ஆண்டுகள் 5 மாதங்கள் 15 நாட்கள் + ராகு மகா திசை 18 ஆண்டுகள் ஆக அவருடைய 23ஆவது வயதுவரை பல சிரமங்களுக்கு ஆளாகியிருக்கிறார். (ராகு 12ல்) அதற்குப் பிறகு பாக்கியாதிபதி குரு பகவான் வந்து  கைகொடுத்திருக்கிறார். சுமார் 13 ஆண்டு காலம் சுகமான வாழ்க்கை. செல்வச் செழிப்பான வாழ்க்கை. செல்வச்செழிப்பு என்றால் சுகம் இருக்காதா என்ன?

14. அதே குரு திசையில் செவ்வாய் புத்தி துவங்கியதும் ஜாதகியை கேடுகள் சூழ்ந்தன. புத்தி துவங்கி 20 நாட்களில் ஜாதகி மரணமடைந்தார்.
குரு மகா திசையில் செவ்வாய் புத்தி 16.7.1962இல் துவங்கியது. ஜாதகி 5.8.1962ல் உயிர் நீத்தார். எட்டில் செவ்வாய் இருந்தால் பொதுவாகத் துர் மரணம். எட்டாம் இடத்தில் இருந்த செவ்வாய் தனது புத்தியில் (ஆறாம் இடத்தானின் மகா திசையில் அதை செய்து முடித்தான்) அந்த வீட்டில் இருவரும் ஒன்றாக இருப்பதைக் கவனியுங்கள். அத்துடன் ஜாதகத்தில் ஆயுள்காரகன் சனி இரண்டு பரல்களை மட்டுமே கொண்டு பலவீனமாக உள்ளான். அதனால் ஜாதகிக்கு அற்ப ஆயுள். 36 வயதில் அந்தப் பேரழகியின் கதை முடிந்து விட்டது.

The eighth house indicates death, losses, adversity, misery, misfortune, separation etc. If Mars in the 8th house in the horoscope is likely to cause his own death. 

அலசலில் ஏதாவது விடுபட்டிருந்தால், வகுப்பறையின் மூத்த மாணவர்களான திருவாளர்கள் KMRK யும், திருவாளர் மலேசிய ஆனந்த் அவர்களும் வந்து சொல்வார்கள்.

தேவையான அளவு அலசிவிட்டேன். இன்னும் அலசினால் உங்களுக்கும் போரடிக்கும். ஆகவே இத்துடன் நிறைவு செய்கிறேன்

அன்புடன்
வாத்தியார்
++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

18.10.11

Astrology: எனக்கு ஜோதிடம் வருமா? (அதாவது மண்டையில் ஏறுமா?)

------------------------------------------------------------------------------------
Astrology: எனக்கு ஜோதிடம் வருமா? (அதாவது மண்டையில் ஏறுமா?)

கல்வி, வைத்தியம், ஜோதிடம் ஆகிய மூன்றும் தர்மப் பணிகள். அதெல்லாம் முற்காலத்தில். அத்தொழிலைச் செய்பவர்களுக்கெல்லாம் மன்னர் மானியம் தருவார். அதனால் அன்றைய காலகட்டத்தில் அது சாத்தியப்பட்டது.

இப்போது மன்னர்களையும் ஒழித்துவிட்டார்கள். அதோடு அவர்களுக்குக் கொடுத்துவந்த மானியத்தையும் ஒழித்துவிட்டார்கள். எல்லாம் கலியுகம். கலி முற்றிக்கொண்டு வருகிறது.

இப்போது அவை மூன்றும்தான் காசு கொழிக்கும் தொழில்!

சரி, போகட்டும் சொல்ல வந்த விஷயத்திற்கு வருகிறேன். வகுப்பறைக்கு வருபவர்களில் சிலர் (தனி மின்னஞ்சல் மூலமாக) கேட்கும் முக்கியமான கேள்விகள் இரண்டு உண்டு!

1. சார், எனக்கு ஜோதிடம் வருமா? (அதாவது மண்டையில் ஏறுமா?)
2. சார், நான் ஜோதிடராகப் பணி புரிய ஆசைப் படுகிறேன். அதற்கான வாய்ப்பு (என் ஜாதகப்படி) எனக்கு உண்டா?


ஜோதிடம் கற்றுக்கொள்வதற்கு ஆர்வமும், முயற்சியும் இருந்தால் போதும். யார் வேண்டுமென்றாலும் கற்றுக்கொள்ளலாம்! அத்துடன் கற்றுக் கொண்டவை அவ்வப்போது மறந்து போகாமல் இருப்பதற்கு, நினைவாற்றல் முக்கியம். முக்கியமான விதிகளைத் திரும்பத் திரும்பவும் படிக்க வேண்டும்.

புரிதலுக்கும், நினைவாற்றலுக்கும், ஜாதகப்படி (அதைச் சொல்லாவிட்டால் கடைசி பெஞ்ச் கண்மணி விடமாட்டாரே) புதன் ஜாதகத்தில் வலுவாக இருக்க வேண்டும். வலு என்றால் என்ன என்பதைப் பலமுறை சொல்லித் தந்திருக் கிறேன். புதன் ஆட்சி அல்லது உச்சம் பெற்றிருக்க வேண்டும் அல்லது கேந்திரங்கள் அல்லது திரிகோணங்களில் இருந்தால் நல்லது.

விளக்கம் போதுமா?

போதாது!

இரண்டாவது கேள்வி பாக்கியுள்ளது.

நீங்கள் ஜோதிடத்தைக் கற்றுக்கொள்வதுடன், பலரது ஜாதகத்தைப் பார்த்து, அலசி, பலன் சொல்லி, அவர்கள் அதைக்கேட்டு முகம் மலர்ந்த அனுபவம் வேண்டும். ஜோதிடத் தொழில் முதலில் டல்’ லடிக்கும். நீங்கள் பிரபலமான பிறகு, உங்களிடம் வந்தவர்களே மீண்டும் மீண்டும் வருவார்கள். பலரையும் கூட்டிக் கொண்டு வருவார்கள். அல்லது பலரையும் அனுப்பி வைப்பார்கள். அப்போதுதான் நீங்கள் சம்பாதிக்க முடியும்!

“அந்தக் கதை எல்லாம் வேண்டாம். ஜாதகப்படி என்ன அமைப்பு வேண்டும்? அதைச் சொல்லுங்கள்”

புதன் (Planet for Astrology) வர்கோத்தமம் பெற்றிருக்க வேண்டும். அதாவது இராசியிலும், நவாம்சத்திலும் ஒரே வீட்டில் இருக்க வேண்டும்.

ஐந்தாம் அதிபதியும், பத்தாம் வீட்டுக்காரனும் ஒருவருக்கொருவர் பார்வையில் இருக்க வேண்டும்.

அதைவிட முக்கியமாக நீங்கள் அட்டை (Board) மாட்டி ஜோதிடம் சொல்லத் துவங்குவதற்கு உங்களுக்கு நல்ல தசா புத்தி நடைபெறவேண்டும்

அதெல்லாம் எதற்கு?

எதையும் கற்று அறிவதில் தவறில்லை. ஆகவே இந்தக் கட்டுரையின் ஏழாம் பத்தியை மீண்டும் ஒருமுறை தருகிறேன். அதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

ஜோதிடம் கற்றுக்கொள்வதற்கு ஆர்வமும், முயற்சியும் இருந்தால் போதும். யார் வேண்டுமென்றாலும் கற்றுக்கொள்ளலாம்! இறையருளால் நமக்கு வேறு தொழில் இருக்கிறது. ஆகவே கற்றுக்கொள்வதுடன், அதைவைத்து நமது நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் உதவி செய்வதுடன் நிறுத்திக் கொள்வோம்.

அன்புடன்
வாத்தியார்


++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இடைச் சேர்க்கை:

1  நம் மதிப்பிற்குரிய பெரியவரின் கடிதம் உங்கள் பார்வைக்கு:

2
வகுப்பறைக் கண்மணியின் கடிதம் உங்கள் பார்வைக்கு:

இவை இரண்டிற்கும் உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்
நட்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

10.10.11

Astrology ஆப்பிளின் ஜாதகம்!

------------------------------------------------------------------------------------
Astrology ஆப்பிளின் ஜாதகம்!

ஆப்பிளுக்கு ஏதைய்யா ஜாதகம் என்று கேட்பவர்கள் எல்லாம் பதிவை விட்டு விலகவும். மற்றவர்கள் மேலே தொடரவும்!

ஆப்பிள் என்றால் கிலோ நூறு ரூபாய்க்கு - அதுவும் உடலுக்குக் கேடான வாக்ஸில் முக்கி எடுத்துக் காய வைத்துப் பிறகு விற்கிறானே - அந்த ஆப்பிள் அல்ல! An apple a day..keeps the doctor away...Lala lal laa..Lala lal laa" என்று பாடிக்கொண்டே நீங்கள் கடித்துத் தின்னும் ஆப்பிள் அல்ல!

இது வித்தியாசமான ஆப்பிள். உலகையே கலக்கிய ஆப்பிள். ஆமாம். கணினி உலகத்தில், அலைபேசி உலகத்தில், இசை உலகத்தில் (IPod) பல புரட்சிகளைச் செய்த ஆப்பிள். ஆப்பிள் என்ற ஒற்றைச் சொல்லில் அனைவராலும் அறியப்படும் ஆப்பிள். ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் நிர்வாக மேலாளராக  இருந்து சமீபத்தில் புத்தபகவானின் திருவடியை அடைந்த திருவாளர் ஸ்டீவ் ஜாப்ஸ் அவர்களைத்தான் நான் ஆப்பிள் என்று செல்லமாகக் குறிப்பிடுகிறேன்.

அவர் ஏன் கைலாசம், வைகுண்டம் அல்லது பரமபிதாவின் திருவடிகளுக்குச் செல்லாமல் புத்தபகவானின் திருவடிக்குச் செல்ல வேண்டும் என்று சந்தேகம் எழுபவர்கள் எல்லாம், அவரது முழு வரலாற்றையும் படிக்கும்படி கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். இணையத்தில் ஏராளமான பக்கங்களில் இன்றும் அவர் வாழ்கிறார். இறந்த பிறகும் கதைகள், செய்திகள், பாராட்டுக்கள் வடிவாக வாழ்கிறார். என்றும், வாழ்வார்!!!

அவருடைய ஜாதகத்தை இன்று அலசுவோம்.

எதற்காக அதை அலச வேண்டும்?

நம் வகுப்பறைக் கண்மணி ஒருவர் நியூஜெர்சியில் இருந்து அதை அலசித் தரும்படி வேண்டுகோள் விடுத்திருந்தார். அது ஏற்கப்பட்டு, அவருக்காக அலசப்படுகிறது. இந்தப் பதிவு அந்த நியூஜெர்சி கண்மணிக்கு சமர்ப்பணம்!



++++++++++++++++++++++++++++++++++++++
தெரிந்த மொழியில் ஒரு திரைப்படத்தைப் பார்ப்பதற்கும், தெரியாத மொழியில் ஒரு திரை படத்தைப் பார்ப்பதற்கும் பல வேறுபாடுகள் உள்ளன.
முழி பிதுங்கிவிடும்.

அதுபோல அனைவருக்கும் தெரிந்த ஒருவரின் ஜாதகத்தை அலசுவது சுலபம். படிப்பவர்களுக்கும் எளிதாகக் காரணகாரியங்கள் புரியும். அதுபோல் புதிதாக ஒருவரின் ஜாதகத்தை அலசும்போது அவரைப் பற்றிய குறிப்புக்களைக் கொடுத்துவிட்டால், படிப்பதற்கு ஏதுவாக இருக்கும். பாடமும் விளங்கும்.
180 டிகிரி சாய்மானத்தில் மண்டையில் ஏறும்.

ஸ்டீவ் ஜாப்ஸைப் பற்றி ஒன்றும் தெரியாதவர்கள், அவருடைய வாழ்க்கைக் குறிப்பை முதலில் படித்து விட்டுப் பிறகு இங்கே அலசலுக்கு வாருங்கள். அதுதான் படிக்கும் உங்களுக்கும் நல்லது. எழுதும் எனக்கும் நல்லது.
அதற்கான சுட்டி (URL) இங்கே உள்ளது!
  --------------------------------------------------------------------
Over to his horoscope
-------------------------------------------------------------------- 



கிரகங்களின் சுயவர்க்கப் பரல்கள் கட்டம் கட்டிக் காட்டுள்ளேன்
- உங்கள் செள்கரியத்திற்காக
அத்துடன் சர்வாஷ்டகவர்க்கத்தில் 30 பரல்களுக்கு மேல் பெற்றுள்ள வீடுகளையும் கட்டம் கட்டிக் காட்டியுள்ளேன்!

நவாம்சத்தில் சுக்கிரனும், குருவும் வர்கோத்தமம் பெற்றுள்ளன. 
அதாவது இராசி மற்றும் அம்சத்தில் ஒரே இடத்தில் உள்ளன. 
அதை சிகப்புக் கட்டக் கட்டி சுட்டிக்காட்டியுள்ளேன். 
சந்திரன் நீசம் பெற்றுள்ளதையும் வட்டமிட்டுக் காட்டியுள்ளேன்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
பெயர்: ஸ்டீவ் ஜாப்ஸ்
பிறந்த தேதி: 24.02.1955
பிறந்த நேரம்: மாலை 7:15 மணி
பிறந்த இடம்: சான்பிரான்சிஸ்கோ, யு.எஸ்.ஏ
லக்கினம்: சிம்ம லக்கினம்
நட்சத்திரம்: உத்திரட்டாதி (மீன ராசி)
கர்ப்பச்செல் இருப்பு: சனிதிசையில் 3 ஆண்டுகளும் 20 நாட்களும்

ஜாதகத்தின் சிறப்பு அம்சங்கள்:

கர்மகாரகன் சனீஷ்வரன் உச்சம்.
வளர்பிறைச் சந்திரன்.
புதன் தனித்து நிற்பதால் சுபபலம்.
சுபகிரகமான குரு பதினொன்றில்
சுப கிரகமான சுக்கிரன் திரிகோணம் பெற்றுள்ளார்
எந்த கிரகமும் அஸ்தமனம் ஆகவில்லை
எந்த கிரகமும் மற்றொரு கிரகத்துடன் கிரகயுத்ததில் இல்லை

ஜாதகத்தில் உள்ள யோகங்கள்:

1. சுனபா யோகம்
2. கஜகேசரி யோகம்
3. வசுமதி யோகம்
4. அமலா யோகம்

கிரகங்களின் சுயவர்க்கப்பரல்கள்:
புதன் - 8 பரல்கள்
சந்திரன் - 5 பரல்கள்
சுக்கிரன் - 5 பரல்கள்
சனி - 4 பரல்கள்
செவ்வாய் - 4 பரல்கள்
சூரியன் - 3 பரல்கள்
குரு - 3 பரல்கள்

முதல் 3 கிரகங்கள் நல்ல பரல்களுடன் இருக்கின்றன. மற்ற கிரகங்கள் by placement அதை ஈடு கட்டிவிட்டன. சனி (உச்ச வீடு) செவ்வாய் (திரிகோண வீடு) சூரியன் (கேந்திர வீடு) குரு லாபஸ்தானத்தில். ஆக மொத்தம் எல்லாக் கிரகங்களுமே வலுவாக உள்ளன!

உத்திரட்டாதி நட்சத்திரத்தின் சிறப்பு: மனமறிந்து பேசும் திறமை. விஞ்ஞானம் மற்றும் தொழில் நுட்பங்களில் ஆர்வம்!
-----------------------------------------------------------------
சரி இப்போது அலசுவோம்:

1. ஜாதகர் சிம்ம லக்கினக்காரர். சிம்ம லக்கினக்காரர்கள் அனைவருமே ஒரு விதத்தில் நாயகர்கள்தான் (ஹீரோக்கள்) உதாரணத்திற்கு நம் ரஜினி மற்றும் கமல் இருவருமே சிம்ம லக்கினக்காரர்கள். சினிமாக்காரர்களைச் சொன்னால் தான் நமக்கு (என்னையும் சேர்த்துத்தான்) எளிதில் விளங்கும் அரச கிரகமான சூரியனின் சொந்த வீடு சிம்மம். அதனால்தான் அதற்கு சிங்கத்தை அடையாளமாகக் கொடுத்தார்கள். சிங்கம் எப்போதுமே ஹீரோதானே சாமிகளா?

2. சிம்ம லக்கினம் மட்டும் அல்லாமல் அதன் அதிபதி கேந்திரத்தில் அமர்ந்து லக்கினத்தைத் தன் நேரடிப்பார்வையில் வைத்திருப்பது மிகவும் சிறப்பிற்குரியது - உங்கள் வீட்டிற்கு எதிரில் நீங்கள் பெஞ்சைப் போட்டு அமர்ந்திருப்பதைப் போல!!! எவனாவது அத்துமீறி நுழைய முடியுமா?

சிம்ம லக்கினக்காரர்களுக்கு, எந்த சூழ்நிலையையும் தங்கள் கட்டுப்பாடுக்குள் கொண்டுவரும் அல்லது வைத்திருக்கும் சாமர்த்தியம் இயற்கையாகவே உள்ளவர்கள். நம்பிக்கைக்கு உரியவர்கள். தாக்குப் பிடிக்கும் சக்தி உள்ளவர்கள். வாய்ப்புக்களைத்தேடி அவர்கள் செல்லமாட்டார்கள். வாய்ப்புக்கள் அவர்களைத் தேடி வரும்.

3. புத்தி மற்றும் வித்தைகளுக்கு உரிய நாதன் புதன், தன் சுயவர்க்கத்தில் அவர் 8 பரல்களுடன் இருப்பதைக் கவனியுங்கள். சுயவர்கத்தில் ஒரு கிரகத்தின் அதிகபட்சப் பரல்கள் 8 மட்டுமே. இங்கே அவர் எட்டுப் பரல்களுடன் இருப்பதால், ஜாதகருக்கு அதீதமான புத்திசாலித்தனத்தை வழங்கினார். அந்த அதீத புத்திசாலித்தனம்தான் அவருடைய பல கண்டுபிடுப்புக்களுக்கு ஆதாரமாக, உதவியாக இருந்திருக்கிறது.

  கேந்திரம் மற்றும் திரிகோணங்கள் குறியிட்டுக் காட்டப் பெற்றுள்ளது

4. எல்லோருக்கும் பரல்கள் 337தான். எல்லோரையும் போல ஸ்டீவ் ஜாப்ஸிற்குக் கிடைத்ததும் 337 தான். அமெரிக்கர் என்பதற்காக அவருக்குக் கூடுதலாகக் கிடைக்குமா என்ன?

அவருடைய ஜாதகத்தில் தீய இடங்களான 3, 6, 8 & 12 ஆம் இடங்களின் பரல்களைக் கூட்டுங்கள்.

3ல் -  31
6ல் -  35
8ல் -  24
12ல் - 19
------------------
     109

இந்த 4 இடங்களுக்கும் சேர்ந்து 112 ஐத் தாண்டக்கூடாது  (337 வகுத்தல் 3 = 112) ஆனால் எத்தனை இருக்கிறது பார்த்தீர்களா? குறைவாகத்தான் இருக்கிறது. அதனால் கிடைத்த அந்த 337ல் சராசரிக்கும் குறைவாகத்தான் தீமைகள் உள்ளன.

சரி கேந்திர, கோணங்களைக் கூட்டுங்கள்
1ல் -  30
5ல் -  27
9ல் -  28
4ல் -  32
7ல் -  22
10ல் - 37
-------------------
      176

இந்த ஆறு இடங்களுக்கும் சேர்ந்து இருக்க வேண்டியது 168 (337 வகுத்தல் 2 = 168) ஆனால் 8 பரல்கள் அதிகமாக இருக்கிறது. அதாவது ஜாதகத்தில் தீமைகள் குறைந்து நன்மைகள் அதிகமாக இருந்திருக்கின்றன

5. தொழில் ஸ்தானத்தில் (பத்தாம் வீட்டில்) 37 பரல்கள். அந்த வீட்டு அதிபதி சுக்கிரன் திரிகோணத்தில் (லக்கினத்தில் இருந்து) ஐந்தாம் வீட்டில். அதுவும் தன்னுடைய சுயவர்க்கத்தில் 5 பரல்களுடன் வலுவாக உள்ளார். இந்தப்படை போதுமா? இன்னும் கொஞ்சம் வேண்டுமா என்று கேட்பதைப்போல தொழில்காரகன் (authority for work) சனீஷ்வரன் உச்சம் பெற்றுள்ளான். கேட்க வேண்டுமா? எல்லாம் கூடி விட்டது. மனிதர் சாதித்துக் காட்டியிருக்கிறார்! தான் நுழைந்த துறையில் அடித்து நொறுக்கி அனைத்தையும் மாற்றிக் காட்டியிருக்கிறார்.

“எங்கிட்ட மோதாதே நான் வீராதி வீரனடா” என்று பாட்டுப் பாடும் அளவிற்கு சாதனைகளை அரங்கேற்றி இருக்கிறார்.

துவக்கத்தில் ஒரு கார் ஷெட்டில் வைத்துத் தன் தொழிலைத் துவங்கியவர், அசுர வளர்ச்சி பெற்று, அமெரிக்காவின் 42வது பணக்காரர் என்ற அந்தஸ்தைப் பெற்றிருந்திருக்கிறார்

1984--முதல் மக்கிண்டாஷ் அறிமுகம்
2001- ஐ-பாட் அறிமுகம்
2007 ஐ ஃபோன் அறிமுகம்
2010 ஐ பேட்(i pad) அறிமுகம்.

6. சிம்ம லக்கினத்திற்கு யோககாரகனான செவ்வாய், திரிகோணம் பெற்றதுடன், திரிகோணங்களில் உயர்ந்த இடமான ஒன்பதாம் வீட்டில் அமர்ந்து, இவருக்குப் பல யோகங்களைக் கொடுத்துள்ளான். அவற்றுள் முக்கியமானது எடுத்த காரியங்களில் வெற்றி. செவ்வாய் ஆற்றலுக்கு உரிய கிரகம் அதை மறந்து விடாதீர்கள்.

7. பணத்திற்கு உரிய இடமான 2ஆம் வீடு மற்றும் 11ஆம் வீடு (அண்டா & பைப் உதாரணம் சொல்வேனே அதை ஞாபகப் படுத்தில்லொள்ளுங்கள்) ஆகிய இரு வீடுகளுக்கும் அதிபதியான புதன் 8 பரல்களுடன் செமை ஸ்ட்ராங்காக இருந்ததனால், ஜாதகருக்குப் பெரும் பண வரவை உண்டாக்கி, அமெரிக்காவின் Top 50க்குள் ஒருவராக்கினான்.

8., கல்வி ஸ்தானமான நான்காம் வீடு பாபகர்த்தாரி யோகத்தில். ஒரு பக்கம் சனி, மறுபக்கம் ராகுவும் மாந்தியும்.  புதன் நன்றாக இருந்ததால் பட்டப்படிப்பு வரைக்கும் சென்றவர், இந்த பாபகர்த்தாரி யோகத்தினால் படிப்பை முடித்து பட்டம் வாங்க முடியவில்லை. drop out ஆனார்

9. தாய்க்கு காரணமான சந்திரன் அமசத்தில் நீசமடைந்தான். அத்துடன் தாய்க்குரிய நான்காம் வீடு பாபகர்த்தாரி யோகத்தில் மாட்டிக்கொண்டுள்ளது. நல்ல தாய் கிடைக்கவில்லை. மணமாகாத கல்லூரி மாணவிக்குப் பிறந்த ஜாதகரை, பெற்றதாய் பெற்றவுடன் வேறு ஒரு தம்பதியருக்குக் குழந்தையை சுவீகாரம் கொடுத்துவிட்டுப் போய்விட்டாள்.

10. ஏழாம் வீட்டில் 22 பரல்கள் மட்டுமே. அது மனைவிக்கு உரிய இடம். அங்கே பரல்கள் குறைந்தாலும், அதன் அதிபதி சனி உச்சம் பெற்றதால் இவருக்கு இல்லறம் நடத்த ஒரு பெண்ணைப் பிடித்துக்கொடுத்தான்..

11. அதுபோல குடும்பஸ்தானத்தில் 24 பரல்கள் அதுவும் சொல்லிக் கொள்கிறாற்போல இல்லை. அந்த வீட்டு அதிபதி அதிக பட்ச பரல்களுடன் இருந்ததால் குடும்ப வாழ்க்கையை உண்டாக்கிக் கொடுத்தான்.

12. ஐந்தாம் வீட்டு அதிபனும், புத்திரகாரனுமாகிய குரு 28 பரல்கள் உள்ள இடத்தில் வலுவாக அமர்ந்ததோடு, ஐந்தாம் வீட்டையும் பார்வையில் வைத்திருந்ததால் ஜாதகருக்குக் குழந்தைச் செல்வங்களைக் கொடுத்தான்.

13. ஆறாம் வீடு பாபகர்த்தாரி யோகச் சிக்கலில். ராகுவிற்கும் சூரியனுக்கும் மத்தியில். அதனால் கடுமையான நோய் உண்டானது.

14. எட்டாம் வீடும் பாபகர்த்தாரி யோகச் சிக்கலில். சூரியனுக்கும், செவ்வாய்க்கும் மத்தியில். அதனால் பூரண ஆயுள் கிடைக்கவில்லை. 56 வயதில் மரணமடைந்தார்

15. தசா புத்திகள் எப்படி விளையாடியுள்ளன என்பதைப் பார்ப்போம். தசா புத்திகள்தான் உரிய பலன்களை உரிய நேரத்தில் தரக்கூடியவை. அதை மனதில் கொள்க!

பிறந்த தேதி : 24.2.1955 + சனி மகாதிசை இருப்பு 3 ஆண்டுகள் 20 நாட்கள் + புதன் மகா திசை 17 ஆண்டுகள் ஆக அவருடைய இருபதாவது வயதில் கேது பகவான் வந்து அவர் தோளில் ஏறி அமர்ந்து, கழுத்தைக் கட்டிப்பிடித்துக் கொண்டு மனிதரை ஏழு ஆண்டுகள் சிரமப் படுத்தியிருக்கிறான். அவர் ஒரு வேளைச் சாப்பாட்டிற்காக ஹரே ராமா ஹரே கிருஷ்ணா மண்டபத்தில் காத்துக்கிடந்து சாப்பிட்டதெல்லாம் இக்காலம்தான். கல்லூரிப் படிப்பை முடிக்க விடாமல் செய்ததும் அதே கேது திசைதான்.

அதற்குப் பிறகு சுக்கிர மகாதிசை. வர வேண்டிய நேரத்தில் சுக்கிர மகா திசை வந்து சேர்ந்தது. சுக்கிர மகா திசை இந்த வயதில்தான் வர வேண்டும். பல் முளைத்த காலத்தில் அல்லது பல் கொட்டிப்போன காலத்தில் வந்து என்ன சாமி பயன்? அனுஷ்கா சர்மாவைப் போன்ற அழகான பெண்ணை எந்த வயதில் திருமணம் செய்து கொள்ள வேண்டும்? அறுபத்தைந்து வயதில் இடுப்பு வலி, முட்டி வலி என்று பலவிதமான வலிகள் வந்து படுத்தி எடுக்கும் காலத்தில் திருமணம் செய்து கோள்வது உசிதமா? தகுமா? அடுக்குமா? எழுந்து சென்று ஒரு முளம் மல்லிகைப்பூவைக்கூட  வாங்கிக் கொடுக்க முடியாத காலத்தில் அனுஷ்கா சர்மாவாவது? ஷ்ரேயா ரெட்டியாவது? ஆளைவிட்டால் போதுமென்று இருக்காதா? அது போல சுக்கிரதிசை நடு வயதில்தான் வரவேண்டும். அப்போதுதான் அது அள்ளிக்கொடுப்பதையெல்லாம் அனு அனுவாக இரசிக்க முடியும்!

சுக்கிர மகா திசை 20 ஆண்டு காலம். அதுவும் ஜாதகத்தில் சிறப்பாக உள்ள, பத்தாம் வீட்டு அதிபதியின் காலம். ஒரு ஆண்டு இரண்டு ஆண்டுகள் அல்ல - மொத்தம் 20 ஆண்டுகள். 27 வயது முதல், 47 வயதுவரை, சுக்கிரன் அருகிருந்து அனைக்க, உம்மா கொடுக்க, ஜாதகர் பல வெற்றி வாகைகளைச் சூடினார்.
பல கண்டு பிடிப்புக்களை உலகமே வியக்கத்தந்து, தானும் தன் தொழிலில் சிகரத்தை சர்வ சாதாரணமாக எட்டிப் பிடித்தார்.

நடுவில் இரண்டொரு இறக்கங்கள் இருந்தன. தான் துவங்கிய நிறுவனத்தை விட்டு வெளியேறியது. புதிய நிறுவனத்தை ஆரம்பித்தது. மீண்டும் தான் ஆரம்பித்த நிறுவனத்திற்கே திரும்பி வந்து அதைத் தூக்கி நிறுத்தியது போன்ற நிகழ்வுகள். அதற்கெல்லாம் காரணம் என்ன என்று கடைசி பெஞ்ச் கண்மணி பின்னூட்டத்தில் கேட்கக்கூடும். அதற்கான காரணத்தை இங்கேயே சொல்லி விடுகிறேன். அதற்கெல்லாம் காரணம் நடுவில் வந்து சென்ற வேண்டாத மற்ற கிரகங்களின் புத்திகள் (Sub periods of malefic lords)

5.03.1982ல் ஆரம்பித்த சுக்கிர மகாதிசை 15.3.2002ல் முடிவிற்கு வந்தது. அதற்குப் பிறகு 6ஆண்டுகள் சூரியதிசை. சூரிய மகாதிசையில் சனி புத்தி நடைபெற்ற காலம் 19.01.2005 முதல் 1.01.2006 வரை. அந்த காலத்தில்தான் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. கணயத்தில் புற்று நோய் உண்டானது. சனி ஆறாம் இடத்திற்கும் அதிபதி அதை மனதில் கொள்க! ஜாதகத்தில் சூரியன் பலமாக உள்ளதால் தாக்குப் பிடித்தார். அது முடிந்து அடுத்தது சந்திரதிசை துவங்கியது. எட்டாம் இடத்தில் அமர்ந்திருப்பவனின் திசை. அவன் விரையத்துக்குச் சொந்தக்காரன். அத்துடன் அம்சத்தில் நீசம் பெற்று செல்லாக் காசாகி விட்டவன். அவனுடைய திசையில் எட்டாம் இடத்து அதிபதி குருவின் புத்தியில், 5.10.2011 அன்று அந்த மேதை கதை முடிந்து விட்டது. ராசிக்கு ஏழில் தற்சமயம் இருக்கும் கோள்சாரச் சனியின் பங்கு அதில் முக்கியமானது. அத்துடன் குருவுடன் இருக்கும் கேதுவின் சேர்க்கையும் முக்கியமானது.

அலசலில் ஏதாவது விடுபட்டிருந்தால், வகுப்பறையின் மூத்த மாணவர்களான திருவாளர்கள் KMRK யும், திருவாளர் மலேசிய ஆனந்த் அவர்களும் வந்து சொல்வார்கள்.

இன்னும் அலசினால் என் கை வலிக்கும், உங்களுக்கும் போரடிக்கும். ஆகவே இத்துடன் நிறைவு செய்கிறேன்

அன்புடன்
வாத்தியார்
-------------------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!