மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label Lessons 681 - 690. Show all posts
Showing posts with label Lessons 681 - 690. Show all posts

20.8.13

Astrology: பாடலுடன் பாடத்தைக் கேட்டு ரசிப்பதிலேதான் சுகம் சுகம்!

 
--------------------------------------------------------------------------------------------
Astrology: பாடலுடன் பாடத்தைக் கேட்டு ரசிப்பதிலேதான் சுகம் சுகம்!

புதிய தொடர் - பகுதி 1

ஜோதிடத்தைக் கணித்த அல்லது வகுத்த முனிவர்கள் தாங்கள் எழுதியதை எல்லாம் பாடலாக அல்லது வடமொழியில் இரண்டு வரி  ஸ்லோகங்களாக எழுதிவைத்துள்ளார்கள். காகிதம், பேனா போன்ற எழுது சாதனங்கள் இல்லாத காலம். பனை ஓலைகளில், எழுத்தாணிகளைக் கொண்டு எழுதிவைத்துள் ளார்கள். சிறிய பனை ஓலைகளில் எழுதியதால் உரை நடையில் எழுதாமல் பாட்டாகவே எழுதிவைத்துள்ளார்கள். அத்துடன் அவர்கள் வாழ்ந்த காலத்துத் தமிழ். அல்லது அவர்களுடைய வடமொழி

அவற்றில் நிறைய ஜோதிட விதிகள் மற்றும் ஜோதிடச் செய்திகள் நறுக்குத் தெரித்தாற்போல உள்ளன.

அவற்றை சம்பந்தப் பட்ட பாடல், அதற்கான விளக்கம் ஆகியவற்றுடன் தருவதுதான் இத்தொடரின் நோக்கம். உங்கள் ஜோதிட அறிவு மேம்பட இந்தத் தொடரைத் தொடர்ந்து படித்துக் கொண்டு வாருங்கள். வாரம் ஒருமுறை பதிவாகும்
----------------------------------------------------------------------------------------------------
கிராமத்தில் ஒரு நல்லவன் கெட்டவனுடன் சேர்ந்து சுற்றினால் இப்படிச் சொல்வார்கள். “பன்றியோடு பசுவும் சேர்ந்து சுத்துதுடா. எல்லாம் கேடுதான்”

அதனால் நல்லதும் கெட்டதும் கலந்ததுதான் வாழ்க்கை என்றாலும், நல்ல விஷயங்கள் எப்போதும் கெட்டவற்றுடன் கலக்கக்கூடாது.

ஐந்தாம் அதிபதி திரிகோண வீட்டிற்குச் சொந்தக்காரன். பூர்வ புண்ணியாதிபதி, குழந்தை பாக்கியத்திற்குச் சொந்தக்காரன். அவன் வில்லனான ஆறாம் வீட்டுக்காரனுடன் சேர்ந்தால் என்ன ஆகும்?

பாடலைப் பாருங்கள்

“ஆரப்பா அயன்விதியை அறையக் கேளு
      அப்பனே ஐந்துள்ளோன் ஆறோன் கூடில்
சீரப்பா ஜென்மனுக்கு புத்திர தோஷம்
      சிவாசிவ்வா யிது மூன்றில் சேர்ந்து நிற்க
கூறப்பா கொடியோர்கள் கண்ணுற்றாலும்
      கொற்றவனே கொள்ளிக்குப் பிள்ளையில்லை
பாரப்பா பரமகுரு கண்ணுற்றாலும்
      பலனுண்டு பல தீர்த்தமாடச் சொல்லே!

.....................புலிப்பாணி முனிவர்

ஆமாம். அவர்கள் இருவரின் சேர்க்கையால் ஜாதகனுக்கு அல்லது ஜாதகிக்குக் குழந்தை பிறப்பது தள்ளிக்கொண்டு போகும். அதாவது தாமதமாகும். அத்துடன் அவர்கள் ஒரு தீய கிரகத்தின் பார்வையைப் பெற்று மூன்றாம் வீட்டில் குடியிருந்தால், குழந்தை இல்லாமல் போகும் அபாயம் உண்டு.

தோஷத்தைப் போக்க என்ன வழி?

புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று தீர்த்தமாடி, அங்கே உறையும் இறைவனை வணங்கிவிட்டு வருவதுதான் பரிகாரமாகும்!

இராமேஸ்வரம்தான் சிறந்த பரிகார ஸ்தலம்!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

19.8.13

Astrology: Quiz புதிர் - பகுதி 1

 
---------------------------------------------------------------------------------------------------------------
Astrology: Quiz புதிர் - பகுதி 1

உட்தலைப்பு: எனது கேள்வியும் உங்கள் பதிலும்

புதிய தொடர் - பகுதி ஒன்று

இதுவரை சுமார் ஆறரை ஆண்டுகளாக 700 பாடங்களுக்கு மேல் நடத்தியுள் ளேன். வகுப்பறைக்கு சுமார் ஐயாயிரம் பேர்கள் வந்து செல்கிறீர்கள். எத்தனை  பேர்கள் ஆர்வத்துடன் படிக்கிறீர்கள்? எத்தனை பேர்கள் படித்தவற்றை மனதில் தக்க வைத்துக்கொள்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியாது. பழநிஅப்பனுக்கு மட்டும்தான் தெரியும். அதாவது இறைவனுக்கு மட்டும்தான் தெரியும்.

உங்கள் ஜோதிட அறிவையும், நினைவாற்றலையும் மேம்படுத்துவதற்கான புதிய பகுதி இது! அனைவரையும் பங்கு கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.

வாரம் ஒருநாள் இப்பகுதி வெளிவரும். ஒவ்வொரு பதிவிலும் ஒரு கேள்வி தான் இருக்கும். யோசித்து தகுந்த பதிலைச் சொல்லுங்கள். முயற்சி செய்யுங் கள்.  மனதிற்குப் பட்ட பதிலைச் சொல்லுங்கள். உங்கள் பதில் சரியாக இருக்க வேண்டும் என்பதைவிட, நீங்கள் கலந்துகொண்டு பதில் அளிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்

That is your participation is important than the correct answer

என்ன சரியா?
------------------------------------
இன்றைய கேள்வி:

கீழே உள்ள ஜாதகம் யாருடையது?

நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டு பிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும்  ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்ல லாம்.  Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள்

க்ளூ வேண்டுமா? ஆஹா தருகிறேன்.

இது ஒரு பிரபலமான அரசியல்வாதியின் ஜாதகம்!

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++

14.8.13

Astrology: அஷ்டகவர்க்கமும் கோள்ச்சாரமும்!

 
Astrology: அஷ்டகவர்க்கமும் கோள்ச்சாரமும்!

கோள்சாரத்திற்கு (transit planets) அஷ்டகவர்க்கப் பரல்களை எப்படிப் பயன் படுத்துவது?

அதை இப்போது பார்ப்போம்
--------------------------------------------------------
முதலில் சூரியனுக்கான கோள்சாரப்பலன்

சூரியனின் சுயவர்கக அட்டவணையை வைத்து அதைப் பார்க்க வேண்டும்! சூரியன் தன்னுடைய சுற்றை முடிக்க ஒரு ஆண்டு காலத்தை எடுத்துக்கொள்ளும். அதாவது

ஒவ்வொரு ராசியிலும் ஒரு மாத காலம் இருக்கும். சித்திரை மாதம் மேஷத்தில் இருந்து தனது கோள்சாரப் பயணத்தை சூரியன் துவங்கும். அதை நினைவில் கொள்க!

1. கோள்சாரச் சூரியன் தன்னுடைய சுயவர்க்கத்தில் 5 முதல் 8 பரல்கள் உள்ள ராசிகளில் சஞ்சாரம் செய்யும் காலங்களில் ஜாத்கனுக்கு சாதகமான பலன்களைக் கொடுக்கும் அக்காலத்தில் நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்ளலாம். திருமணம் போன்ற சுபகாரியங்களை வீட்டில் செய்யலாம். முக்கியமான செயல்களை அக்காலகட்டத்தில் துவங்கலாம்.

2. மாறாக சூரியன் 1 முதல் 3 பரல்கள்வரை தன் சுயவர்க்கத்தில் உள்ள இடங்களில் இருக்கும் (சஞ்சாரம் செய்யும்) காலங்களில் செய்யும் செயல்கள் நிறைவடையாமல் பாதியிலேயே நின்று போய் விடும் அபாயம் உள்ளது. ஆகவே அக்காலங்களைத் தவிர்ப்பது நல்லது. அதுபோல அந்தக் காலகட்டத்தில் சுபகாரியங்களைத் தள்ளிப் போடுவதும் நல்லது.

3. 4 பரல்கள் உள்ள இடத்தில் சூரியன் சஞ்சாரம் செய்யும் காலங்களில் நல்லதும் கெட்டதும் கலந்த கலவையான பலன்கள் இருக்கும் That is mixed results

4. சூரியனின் சுயவர்க்க அட்டவணையில், சூரியன் இருக்கும் இடத்தில் இருந்து 4 ராசிகளில் உள்ள பரல்களைக் கூட்டுங்கள். (சூரியன் இருக்கும் ராசியையும் சேர்த்துக் கூட்ட வேண்டும்) அது போல அடுத்து உள்ள 4 ராசிகளின் பரல்களையும் கூட்டுங்கள். அதாவது சூரியனுக்கு 5 முதல் 8ஆம் இடம்வரை உள்ள ராசிகள். பிறகு அதற்கு அடுத்துள்ள 4 ராசிகளையும் கூட்டுங்கள். அதாவது சூரியனுக்கு 9ஆம் இடம் முதல் 12ஆம் இடம் வரை உள்ள இடங்கள், அந்த 1, 2 & 3 பகுதிகளில் எந்தப் பகுதியில் கூட்டல் அதிகமாக உள்ளதோ அதை மனதில் வைத்துக்கொண்டு ஒரு நாளின் துவக்கப் பகுதி, நடுப்பகுதி, கடைசிப் பகுதி என்று முக்கிய காரியங்களைச் செய்ய வேண்டும். காரியம் வெற்றியடையும். அதாவது முதல் பகுதியில் கூட்டல் அதிகமாக இருந்தால் பகல் முன் வேளையிலும். நடுப்பதியில் பரல்கள் அதிகமாக இருந்தால், அதற்கு அடுத்து வரும் பகல் வேளையிலும் (அதாவது மதியமும்), கடைசிப் பகுதியில் அதிகமாக இருந்தால் பிற்பகலிலும் காரியங்களைச் செய்ய வேண்டும்

எந்தப் பகுதியில் கூட்டல் மிகவும் குறைவாக உள்ளதோ அந்தப் பகுதிக்கு உரிய பகல் நேரத்தைத் தவிர்த்துவிட வேண்டும்.

இதெல்லாம் நடக்கிற காரியமா என்று சலிக்காமல், ஜோதிடத்தின் மீதும் அஷ்டகவர்க்கத்தின் மீதும் நம்பிக்கை வைத்து செய்து பாருங்கள்
-----------------------
சந்திரனுக்கான கோள்சாரப் பலன்கள்

சந்திரன் தன்னுடைய சுயவர்க்கத்தில் எந்தெந்த வீடுகளில் அதிகமான பரல்களைக் கொண்டுள்ளதோ,  அந்த வீடுகளில் பயணிக்கும் காலத்தில் சாதகமான பல்ன்களைத் தரும்

என்ன ஒரு கஷ்டம் என்றால், சந்திரன் தன்னுடைய ஒரு சுற்றை முடிக்க எடுத்துக் கொள்ளும் காலம் 27 நாட்கள் மட்டும்தான்! ஒவ்வொரு ராசியிலும் அது இரண்டே கால் நாட்கள் மட்டும்தான் இருக்கும்.

1. தன்னுடைய சுயவர்க்கத்தில்  6 முதல் 8 பரல்கள் வரை இருக்கும் இடங்களில் பயணிக்கும் போது அந்த நாட்கள் மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். எடுத்துச் செய்யும் காரியங்கள் வெற்றியடையும். அதனால் முக்கியமான பணிகளை அந்த நாட்களில் செய்ய வேண்டும். ஒரு வேலையில் சேர்வதற்கு, அல்லது ஒரு தொழிலைத் துவங்குவத்ற்கு, அல்லது திருமணம் செய்துகொள்வதற்கு அல்லது ஒரு பாடத்தைப் படிக்கத் துவங்குவதற்கு, ஒரு நட்பை உண்டாக்குவதற்கு போன்ற செயல்களுக்கு அந்த நாட்கள் உரியனவாகும்.

2. மாறாக  சந்திரன் தனது சுயவர்க்கத்தில் 4 அல்லது அதற்குக் குறைவான பரல்கள் உள்ல இடங்களில் பயணிக்கும் காலத்திற்கு உரிய நாட்களில், மேற்சொன்ன செயல்களைச் செய்யாமல் ஒத்திப் போடுவது நல்லது.

3. ஒரு நேர்காணல், அல்லது ஒரு வேலையில் சேர்வதற்கான இன்டர்வியூவிற்குச் செல்வதற்கு இந்தப் பரல்கள் அதிகம் உள்ள நாட்கள் உகந்ததாக இருக்கும். சில சமயங்களில், அது நமக்கு சரிப்பட்டு வராது. நமக்கு வரும் உத்தரவுப்படி செய்ய முடியுமே தவிர, நாள் நட்சத்திரங்களை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அது போன்ற சந்தர்ப்பங்களில், இறைவனைப் பிரார்த்திவிட்டு நீங்கள் அதைச் செய்ய வேண்டியது முக்கியம். இறைவன் பிரார்த்தனைகளுக்கு நிச்சயம் உதவுவார். கை கொடுப்பார்!

4. திருமணப் பொருத்தம் பார்க்கும்போது, பெண்ணின் ஜாதக ராசி என்னவோ (அதாவது சந்திரன் இருக்கும் ராசி) அந்த ராசியில் பையனின் சுயவர்க்கத்தில் (பையனின் ஜாதகத்தில்) அதிகமான பாரல்கள் (அதாவது 6ற்கு மேற்பட்ட ) இருந்தால், திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். இது இருபாலருக்கும் பொதுவானது
-------------------------
செவ்வாய் கிரகத்திற்கான கோள்சாரப் பலன்:

செவ்வாய் இடம், பூமி, வீடு வாசல் முதலியவற்றிற்கான அதிபதி.  He is the lord for immovable properties. செவ்வாய் தனது சுயவர்க்கத்தில் எந்த ராசியில்  அதிகமான பரல்களுடன் உள்ளாரோ, அந்த் ராசியில் அவர் பயணிக்கும் காலத்தில், இடம் அல்லது வீடு அல்லது அசையாத சொத்துக்கள் வாங்குவதற்கு உகந்ததாகும்.

அப்படிப் பார்த்து வாங்கும் சொத்து தங்கி விடும். நம்மை விட்டுப் போகாது!
--------------------------------------------------------------------
”சரி, மூன்று கிரகங்களுக்கு மட்டும்தானே கொடுத்திருக்கிறீர்கள். அஷ்டகவர்க்கத்தை வைத்து மற்ற கிரகங்களுக்கான கோள்சாரப் பலன்களை எப்படிப் பார்ப்பது? முக்கியமாக குரு மற்றும் சனீஷ்வரனின் கோள்சாரப் பலன்களை எப்படிப் பார்ப்பது?”

”பொறுத்திருங்கள். இன்னொரு நாள் அதை விரிவாகத் தருகிறேன். இது திறந்தவெளி இணைய வகுப்பு.இங்கே எழுதுவது என்பது ஒரு இளம் பெண் திறந்தவெளியில் குளிப்பதற்குச் சமமானது. இங்கே முழுமையாகக் குளித்தால் பல ஆசாமிகள் வீடியோ காமெராவுடன் தயாராக உள்ளார்கள், படமாக்கிக் கொண்டு போவதற்கு! ஆகவே எப்படித் தரலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். உங்களுக்கு ஏதாவது யோசனை தோன்றினால் சொல்லுங்கள்!”

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

13.8.13

Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ தொடர் நிறைவுப் பகுதி!

 
Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ தொடர் நிறைவுப் பகுதி!

ஜோதிடத் தொடர் பாடம். பகுதி 36 (இத்துடன் இந்தத் தொடர் நிறைவுறுகிறது)

இந்தத் தொடரில் இதற்கு முன் உள்ள பாடங்களைப் படித்திராதவர்கள், அவற்றைப் படிக்கவும்!
-------------------------------------------------------
பெண்ணின் நட்சத்திரத்தை வைத்து, பொருத்தமான நட்சத்திரத்தைத் தெரிவு செய்வது நல்லது! ஆனால் அதே பொருத்தம் இரு பாலருக்குமே
பொதுவானதுதான். அதை மனதில் வையுங்கள்.

நட்சத்திரப் பொருத்தம் மட்டும் போதுமா?

மற்ற பொருத்தங்கள் முக்கியமில்லையா?

தசா சந்திப்பு இன்றி இருப்பது. தோஷங்கள் இல்லாமல் இருப்பது, தோஷங்கள் இருந்தால் ஆணைவிட பெண்ணிற்குக் சற்றுக் குறைவாக இருப்பது
பொன்ற மற்ற விஷயங்களும் உள்ளன. ஆகவே முதலில் நட்சத்திரப் பொருத்தத்தை மட்டும் தொடர்ந்து பார்ப்போம். பிறகு மற்றவற்றைப் பார்ப்போம்!! 
-----------------------------------------------------
ரேவதி நட்சத்திரம். இது மீன ராசிக்கு உரிய நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரம் புதன் கிரகத்தின் நட்சத்திரமாகும்.

இந்த நட்சத்திரத்திற்கு

1. கார்த்திகை
2. புனர்பூசம்
3. பூசம்
4. பூரம்
5. உத்திரம்
6. ஹஸ்தம்
7. சுவாதி
8. அனுஷம்
9. பூராடம்
10.உத்திராடம்
11. திருவோணம்
12. சதயம்
13. உத்திரட்டாதி.

ஆகிய 13 நட்சத்திரங்களும் பொருந்தக்கூடிய நட்சத்திரங்களாகும்.

அஷ்டம சஷ்டம நிலைப்பாடு (6/8 position to each rasi) பார்த்தால் மீனத்திற்கு சிம்மம் 6/8 நிலைப்பாட்டில் வரும். பூர நட்சத்திரம் பொருந்தாது. மீன
ராசிக்கு  கும்பம் 12ம் வீடு. ( 2/12 & 12/2 position to each rasi)  ஆகவே கும்ப  ராசிக்கு உரிய நட்சத்திரமான சதயம் பொருந்தாது. கூட்டிக் கழித்தால்
ஆக மொத்தத்தில் 11 நட்சத்திரங்கள் மட்டுமே சிறப்பாகத் தேரும்.

அஸ்விணி, ஆயில்யம், மகம், கேட்டை, மூலம் ஆகிய 5 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களாகும். அவற்றையும் விலக்கி
விடுவது  நல்லது.

பெண்ணிற்கும், பையனுக்கும் ரேவதி ஒரே நட்சத்திரமாக இருந்தால் பொருந்தும். அதாவது ஏக நட்சத்திரம் பொருந்தும்.

சித்திரை, விசாகம்  ஆகிய 2 நட்சத்திரங்களும் பொருந்தாது. (அதமக் கணக்கில் வரும்)

பரணி, ரோஹிணி, மிருகசீர்ஷம், திருவாதிரை, அவிட்டம், பூரட்டாதி ஆகிய 6 நட்சத்திரங்களும் மத்திம பொருத்தம் (average) உடையதாகும். தேவைப் பட்டால் அவற்றில் கிடைக்கும் வரன் ஒன்றைத் தெரிவு செய்து கொள்ளலாம்!
----------------------------------------------------------------------------
காதல் திருமணங்களுக்கு இந்தப் பொருத்தம் பார்க்க வேண்டுமா?

வேண்டாம். பார்த்து என்ன ஆகப்போகிறது? காதலைக் கைவிட முடியுமா? ஆகவே பார்க்காமல் வருவது வரட்டும், நடப்பது நடக்கட்டும் என்று வாளா விருப்பது நல்லது!
-----------------------------------------------
இந்தத் தொடர் நிறைவுறுகிறது. இதுவரை பொறுமையாகப் படித்த அன்புள்ளங்கள் அனைத்திற்கும் வாத்தியாரின் நன்றி உரித்தாகுக!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

12.8.13

Astrology.Popcorn Post: வர்கோத்தமம் என்றால் என்ன சாமி அர்த்தம்?

 
Astrology.Popcorn Post: வர்கோத்தமம் என்றால் என்ன சாமி அர்த்தம்?

Popcorn Post No.46


பாப்கர்ன் சாப்பிட்டு ரெம்ப நாள் அகிவிட்டது. அதனால் இன்று பாப்கர்ன்  பதிவு.
-----------------------------------------------------------------------------------
வர்கோத்தமம் என்பதும் ஒரு யோகம்தான் ராசா!

வர்கோத்தமம் என்பது ஒரு கிரகம் ராசிச் சக்கரத்திலும், நவாம்ச சக்கரத்திலும் ஒரே இடத்தில் இருப்பதைக் குறிக்கும்!

ராசி, மற்றும் நவாம்சத்தில் ஒரே இடத்தில் லக்கினம் இருந்தால் இருந்தால் அது வர்கோத்தம லக்கினம் எனப்படும்!

ராசி கட்டத்தில் சிம்மத்தில் செவ்வாய் இருந்து, அம்சத்திலும் சிம்மத்தில் செவ்வாய் இருந்தால் அதற்கு வர்கோத்தம செவ்வாய் என்று பெயர்!

சிம்மத்திற்கு செவ்வாய் யோககாரகன். அவன் வர்கோத்தமமும் பெற்றால் ஜாதகனுக்கு இரட்டிப்பு யோகங்களைக் கொடுப்பார். நல்ல பலன்களைக் கொடுப்பார்.

இதுபோன்று ஒவ்வொரு கிரகத்திற்கும், ஒவ்வொரு லக்கினத்தின் யோககாரனுக்கும் ஸ்பெஷல் வர்கோத்தமப் பலன்கள் உண்டு. கேட்டால், ஒரு வேளை உங்கள் ஜாதகத்தில் அப்படி யிருந்தால் அசந்துபோய் விடுவீர்கள். காற்றில் மிதப்பீர்கள். அப்படி ஒரு சந்தோஷமான மனநிலை ஏற்படும்!

உங்கள் மொழியில் சொன்னால், சாதாரணக் காருக்குப் பதிலாக உங்களுக்கு குளிரூட்டப்பெற்ற சொகுசுக்கார் கிடைக்கும். உங்களுக்குக் கிடைக்கும் பெண் (மனைவி) அனுஷ்கா சர்மாவைப் போன்ற அழகி என்பதோடு, நன்கு படித்தவளாக, நல்ல வேலையில் (மாதம் இரண்டு லட்ச ரூபாய் சம்பளம் சாமி) இருப்பவளாகவும் அமைந்துவிடுவாள். சந்தோஷப் படுவீர்களா - இல்லையா?

அப்படி வர்கோத்தமம் பெறும் கிரகம் வலிமை உடையதாக ஆகிவிடும். அந்த அமைப்பு ஜாதகனுக்கு அதிகமான அளவு நன்மையான பலனைக் கொடுக்கும்! இயற்கையில் தீய கிரகமாக இருந்தாலும், வர்கோத்தமம் பெறும்போது நன்மைகளைக் கொடுக்கும்.

உதாரணத்திற்கு லக்கினம் வர்கோத்தமம் பெற்றால், ஜாதகன் நீண்ட ஆயுளூடன் இருப்பான்!

அதுபோல ஒன்பது கிரகங்களுக்கும் தனித்தனியான விசேட பலன் உண்டு

என்னென்ன கிரகத்தால் என்னென்ன நன்மைகள் என்பதை இன்னொரு நாள் விரிவாக எழுதுகிறேன். பொறுத்திருங்கள்

பாப்கர்ன் பொட்டலத்தில் இவ்வளவுதான் தரமுடியும் சாமிகளா?

அன்புடன்
வாத்தியார்

 
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

7.8.13

Astrology: Second short cut - இரண்டாவது குறுக்கு வழி

 
Astrology: Second short cut - இரண்டாவது குறுக்கு வழி

குறுக்கு வழி என்றால் நமக்கு எப்பவும் (எப்பொழுதும்) பிடிக்கும்.

ஒன்பது கிரகங்கள், பன்னிரெண்டு ராசிகள், ராசிச் சக்கரம், நவாம்சச் சக்கரம், தசா புத்திகள், கோள்சாரம் என்று பல மேட்டர்களை வைத்து ஒரு ஜாதகத்தை அலசுவதைவிட, அஷ்டக வர்க்கத்தை வைத்து ஒரு ஜாதகத்தை சுலபமாக அலசிவிடலாம். அஷ்டகவர்க்கமே ஒரு குறுக்கு வழிதான்.

அஷ்டகவர்க்கத்திலும் ஒரு குறுக்கு வழி இருக்கிறது!

என்ன அஷ்டகவர்க்கமே குறுக்கு வழி அதில் ஜாதகத்தை அலச ஒரு குறுக்கு வழி உள்ளதா என்று யாரும் ஆச்சரியப்பட வேண்டாம்.

ஒரு குறுக்கு வழி உள்ளது அதை இன்று பார்ப்போம்!
------------------------------------------------------------
ஒரு ஜாதகத்தில், ஜாதகனுக்கும், அவனுடைய நெருங்கிய உறவுகளுக்கும் உள்ள நெருக்கத்தை அல்லது விரிசல்களை சுலபமாகவும், விரைவாகவும், கீழ்க்கண்டவாறு கணக்கிடலாம்.

ஜாதகத்தில் உள்ள 12 ராசிகளில், மிக அதிகமான பரல் உள்ள ராசியையும், மிகக்குறைவான பரல் உள்ள ராசியையும் குறித்துக்கொள்ளுங்கள். பிறகு கீழே குறிப்பிட்டுள்ள காரகர்களில் யார், யார் அந்த வீடுகளில் உள்ளார்கள் என்று பாருங்கள். மிக அதிகமான பரல் உள்ள வீட்டில் இருப்பவர்களால் உங்களுக்கு நன்மைதான். அவர்கள் உங்களுடன் நெருக்கமாக இருப்பார்கள். அவர்களால் உங்களுக்கு உதவியாக இருக்குமே தவிர உபத்திரவம் இருக்காது. அவர்கள் உங்களின் மேல் அன்பாகவும், பாசமாகவும் பிரியமாகவும் இருப்பார்கள்.

மிக அதிகமான பரல்கள் உள்ள வீட்டில் உங்கள் லக்கினம் அமைந்தால், அனைத்தும் உங்களுக்கு தன்னிச்சையாகவே அமையும்.

1. ஜாதகனின் மேன்மையைப் பார்ப்பதற்கு உரிய இடம் (காரகத்துவம்) லக்கினம்
2. ஜாதகனின் தந்தையின் மேன்மையைப் பார்ப்பதற்கு உரிய கிரகம் (காரகன்) சூரியன்
3. ஜாதகனின் தாயைப் பற்றிப் பார்ப்பதற்கு உரிய கிரகம் (காரகன்) சந்திரன்
4. ஜாதகனின் சகோதரர்களைப் பற்றிப் பார்ப்பதற்கு உரிய கிரகம் (காரகன்) செவ்வாய்
5. ஜாதகனின் மனைவியைப் பற்றிப் பார்ப்பதற்கு உரிய கிரகம் (காரகன்) சுக்கிரன்

மாறாக மிகவும் குறைந்த பரல்கள் உள்ள வீட்டில், உங்கள் லக்கினம் அமைந்திருந்தால், ஜாதகனின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்காது. உறவுகளிடமும் அவனுக்கு ஒரு பிடிப்பு இல்லாமல் போய்விடும்.

அதுபோல மிகவும் குறைந்த பரல்கள் உள்ள வீட்டில், மேற்கூறிய காரகர்கள் அமர்ந்திருந்தால, சம்பந்தப்பட்ட கிரகத்திற்கு உரிய உறவு, உங்களுடன் ஒட்டுதல் இல்லாமல் இருக்கும். அவர்களால் உங்களுக்கு மகிழ்ச்சி ஏற்படாது.

ஒரு ஜாதகத்தில் மிக அதிகமான பரல் உள்ள வீட்டிற்கும், மிகக் குறைவான பரல்கள் உள்ள வீட்டிற்கும் கிடைத்துள்ள பரல்களின் வித்தியாசம் குறைவான அளவிலேயே இருந்தால், அதாவது எல்லா வீடுகளிலும் பரல்களின் அளவு 26 முதல் 30ற்குள் இருந்தால், ஜாதகனின் வாழ்க்கை சீரான ஓட்டத்துடன் இருக்கும். பெரிய, திடீரென்ற உயர்வையோ அல்லது தாழ்வையோ ஜாதகன் சந்திக்க மாட்டான். His life will be with no great upheavals or downfalls!

இது அஷ்டகவர்க்கப் புத்தகத்தில் வரவுள்ள பாடம். அத்துடன் மேல்நிலைப் பாடம். அனைவருக்கும் பயன்படட்டும் என்று அதை இன்று இங்கே பதிவிட்டுள்ளேன்

அன்புடன்
வாத்தியார்

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

6.8.13

Astrology: Short Cuts - குறுக்கு வழிகள்

 
Astrology: Short Cuts - குறுக்கு வழிகள்

short cut என்றால் a route that is shorter than the usual one மற்றும் a means of saving time or effort என்று பொருள்படும்

மனிதர்களுக்குப் பொதுவாக, பொதுவாக என்ன 90/100 பேர்களுக்கு குறுக்கு வழி என்றால் மிகவும் பிடிக்கும். அதற்கு நானும் விதிவிலக்கல்ல!

ஜோதிடம் கற்றுக்கொள்ளும் போது ஏராளமான விதிமுறைகள், பாடல்கள் என்று அனைத்தையும் கற்றுக்கொள்ளும்போது, உள்ள முக்கியமான சிரமம் என்னவென்றால் அனைத்தையும் மண்டையில் ஏற்றி நினைவில் வைத்துக் கொள்வது ஆகும். பலருக்கும் அது சாத்தியப் படுவதில்லை. பத்துப் பாடங்களை மனதில் ஏற்றி வைத்துக்கொண்டு விட்டு, அடுத்து உள்ள பத்துப் பாடங்களைப் படித்து முடிக்கும்போது, முதலில் ஏற்றிய பத்துப் பாடங்களில் பாதி மறந்து போயிருக்கும். நினைவில் தங்காது. நினைவில் தங்குவது என்பது நமது முளையில் உள்ள Hard Disc Capacityயைப் பொறுத்ததாகும். ஒரு Terra Bite அளவுள்ள மூளை என்றால் பல விஷயங்கள் நினைவில் நிற்கும். ஆனால் 1995ஆம் ஆண்டில் இருந்தது போல, 486Dx கணினிகளில் இருந்ததுபோல 1 GB க்கும் குறைவான அளவுள்ள மூளை என்னும் போது என்ன செய்ய முடியும்? ஒன்றும் செய்ய முடியாது.

அதற்குக் கை கொடுப்பதுதான் அஷ்டகவர்க்கம். அது தெரிந்திருந்தால் போதும். அதை வைத்து உங்கள் ஜாதகத்தையும், மற்றவர்களுடைய ஜாதகத்தையும் நீங்கள் அலசலாம். அஷ்டவர்கத்தை வைத்து தனி வகுப்பாக சுமார் 50 பாடங்களை நடத்தினேன். அந்தப் பாடங்கள் எல்லாம் புத்தகமாகத் தயாராகிக்கொண்டிருக்கின்றன. அந்தப் புத்தகம் சுமார் ஆறு மாதங்கள் கழித்து வெளிவரும். அதற்கு முன் தயாராகிக்கொண்டிருக்கும் அடிப்படைப் பாடங்களைப் பற்றிய இரண்டு புத்தகங்கள் வெளியான பிறகுதான் அது வெளிவரும். ஆகவே பொறுத்திருங்கள்.

அதுபோல யோகங்களும் முக்கியமானதாகும். ஒரு 100 யோகங்களையாவது, ஜாதகத்திற்கான யோக அமைப்புக்களையாவது நினைவில் வைத்துக் கொள்வது அவசியம். அது சாத்தியமானதே.

வாரம் 2/3 யோகங்கள் வீதம், முக்கியமான 150 யோகங்களை எழுதலாம் என்று உள்ளேன். இங்கே அல்ல! இங்கே எழுதினால் எழுதியவைகள் களவுபோகும் அபாயம் உண்டு. இது திறந்த வெளி வகுப்பு. இங்கே எழுதுவது என்பது திறந்த வெளியில் ஒரு பெண் குளிப்பதற்குச் சமமானது. ஆகவே classroom337 என்ற என்னுடைய தளம் (வகுப்பு) காலியாகத்தான் உள்ளது. அங்கே எழுதலாம் என்றுள்ளேன். அதில் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் அனுமதி அளிக்க வுள்ளேன். ஆகவே அதில் சேர்ந்து படிக்க விருப்பம் உள்ளவர்கள் அதன் விதிமுறைகளைத் தெரிந்துகொள்ள மெயில் அனுப்புங்கள். மறக்காமல் சப்ஜெக்ட் பாக்ஸில் யோகா கிளாஸ் (That is please mention as Yoga Class in the Subject Box) என்று குறிப்பிடுங்கள்.

யோகா பாடங்கள் பிறகு புத்தகமாக வரும். அப்போது அனைவரும் படிக்கலாம்

உதாரணத்திற்கு ஒரு யோகத்தைக் கீழே கொடுத்துள்ளேன்
-------------------------------------------------------
வேட்டு வைக்கும் யோகங்கள்!

மனிதன் சக மனிதனுக்கு வேட்டுவைப்பதை அறிவோம். சில அவயோகங்களும் வேட்டு வைக்கும் தன்மைகளை உடையவை. இன்று, வேட்டு வைக்கும் அவயோகங்களில் இரண்டைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளேன்.

”சார், எனக்கு இந்த யோகம் இல்லையே!” என்று யாரும் கவலைப் பட வேண்டாம்.

1. பந்துபிஸ்த்தயக்த யோகா: (உறவைக் கெடுக்கும் அவயோகம்)

4ஆம் வீட்டு அதிபதி தீய கிரகங்களுடன் சேர்ந்து இருந்தாலும், அல்லது 6, 8, 12ஆம் இடங்களில் சென்று அமர்ந்தாலும், அல்லது பகை வீடுகளில் அமர்ந்திருந்தாலும், அல்லது நீசம் பெற்றிருந்தாலும் இந்த அவயோகம் உண்டு!

பலன்: ஜாதகனுக்கு தனது நெருங்கிய சொந்தங்களுடன் நல்ல உறவு இருக்காது. உறவுகளுடன் பிரச்சினைகள் இருக்கும்.அது தவறான புரிதல்கள் அல்லது வேறு காரணங்களால் இருக்கலாம்.

எப்படியிருந்தாலும் அல்லது என்ன காரணமாக இருந்தாலும் ஜாதகன் தனிப்பட்டுப் போவான்.
++++++++++
2
மாத்ருநாச யோகா: (தாய்ப் பாசத்திற்கு வேட்டு வைக்கும் யோகம்)

சந்திரன் இரண்டு தீய கிரகங்களுக்கு இடையில் (Moon is hemmed between malefic) மாட்டிக்கொண்டு விட்டாலும் அல்லது தீய கிரகத்துடன் கூட்டணி போட்டிருந்தாலும் அல்லது தீய கிரகத்தின் பார்வையைப் பெற்றிருந்தாலும் இந்த அவயோகம் உண்டு!

பலன்: ஜாதகனின் தாய், ஜாதகன் சிறுவனாக அல்லது இளைஞனாக இருக்கும்போதே இறந்து போய்விடுவார். தவறி நல்ல ஆயுள் பாவத்தோடு, அவர் உயிர் வாழ்ந்தாலும், ஜாதகனுடன் சுமூகமான உறவு இருக்காது.
+++++++++++
இன்று ஆடி அமாவாசை. உகந்த நாள். ஆகவே இன்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளேன். அத்துடன் அந்த வகுப்பை இன்று துவங்குகிறேன்

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

1.8.13

Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 35

Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 35

ஜோதிடத் தொடர் பாடம். பகுதி 35

இந்தத் தொடரில் இதற்கு முன் உள்ள பாடங்களைப் படித்திராதவர்கள், அவற்றைப் படிக்கவும்!
-------------------------------------------------------
பெண்ணின் நட்சத்திரத்தை வைத்து, பொருத்தமான நட்சத்திரத்தைத் தெரிவு செய்வது நல்லது! ஆனால் அதே பொருத்தம் இரு பாலருக்குமே பொதுவானதுதான். அதை மனதில் வையுங்கள்.

நட்சத்திரப் பொருத்தம் மட்டும் போதுமா?

மற்ற பொருத்தங்கள் முக்கியமில்லையா?

தசா சந்திப்பு இன்றி இருப்பது. தோஷங்கள் இல்லாமல் இருப்பது, தோஷங்கள் இருந்தால் ஆணைவிட பெண்ணிற்குக் சற்றுக் குறைவாக இருப்பது பொன்ற மற்ற விஷயங்களும் உள்ளன. ஆகவே முதலில் நட்சத்திரப் பொருத்தத்தை மட்டும் தொடர்ந்து பார்ப்போம். பிறகு மற்றவற்றைப் பார்ப்போம்!! 
-----------------------------------------------------
உத்திரட்டாதி நட்சத்திரம். இது மீன ராசிக்கு உரிய நட்சத்திரமாகும். அத்துடன் இந்த நட்சத்திரம் சனீஷ்வரனின் ஆதிக்கத்தில் உள்ள நட்சத்திரமாகும்.

இந்த நட்சத்திரத்திற்கு

1. திருவாதிரை
2. புனர்பூசம்
3. ஆயில்யம்
4. மகம்
5. உத்திரம்
6. ஹஸ்தம்
7. சுவாதி
8. கேட்டை
9. மூலம்
10. உத்திராடம்
11. திருவோணம்
12. சதயம்
13. ரேவதி

ஆகிய 13 நட்சத்திரங்களும் பொருந்தக்கூடிய நட்சத்திரங்களாகும்.

அஷ்டம சஷ்டம நிலைப்பாடு (6/8 position to each rasi) பார்த்தால் மீனத்திற்கு சிம்மம் 6/8 நிலைப்பாட்டில் வரும். மக  நட்சத்திரம் பொருந்தாது. மீன ராசிக்கு  கும்பம் 12ம் வீடு. ( 2/12 & 12/2 position to each rasi)  ஆகவே கும்ப  ராசிக்கு உரிய நட்சத்திரமான சதயம் பொருந்தாது. கூட்டிக் கழித்தால் ஆக மொத்தத்தில் 11 நட்சத்திரங்கள் மட்டுமே சிறப்பாகத் தேரும்.

பரணி, பூசம், பூரம், அனுஷம், பூராடம் ஆகிய 5 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களாகும். அவற்றையும் விலக்கி விடுவது  நல்லது.

பெண்ணிற்கும், பையனுக்கும் உத்திரட்டாதி நட்சத்திரமாக இருந்தால்  பொருந்தும். அதாவது ஏக நட்சத்திரம் பொருந்தும்!

கார்த்திகை, விசாகம் ஆகிய 2 நட்சத்திரங்களும் பொருந்தாது. (அதமக் கணக்கில் வரும்)

அஸ்விணி, ரோகிணி, மிருகசீர்ஷம், சித்திரை, அவிட்டம், பூரட்டாதி ஆகிய 6 நட்சத்திரங்களும் மத்திம பொருத்தம் (average) உடையதாகும். தேவைப்பட்டால் அவற்றில் கிடைக்கும் வரன் ஒன்றைத் தெரிவு செய்து கொள்ளலாம்!
----------------------------------------------------------------------------
காதல் திருமணங்களுக்கு இந்தப் பொருத்தம் பார்க்க வேண்டுமா?

வேண்டாம். பார்த்து என்ன ஆகப்போகிறது? காதலைக் கைவிட முடியுமா? ஆகவே பார்க்காமல் வருவது வரட்டும், நடப்பது நடக்கட்டும் என்று வாளாவிருப்பது நல்லது!
(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

31.7.13

Astrology: கைய கட்டி நிக்கச் சொன்னா காட்டு வெள்ளம் நிக்காது!

 

Astrology: கைய கட்டி நிக்கச் சொன்னா காட்டு வெள்ளம் நிக்காது!

சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்
முடிவே இல்லாதது
எங்கே சென்றாலும் தேடி இணைக்கும்
இனிய கதை இது


என்றொரு பாடல் உண்டு. மிகவும் பிரபலமான பாடல். அந்தப்பாடலை சற்று மாற்றி நம் வகுப்பறைப் பாடத்திற்குத் தகுந்த மாதிரி மாற்றினால் இப்படி எழுதலாம்:

துன்பம் எப்போதும் தொடர்கதைதான்
முடிவே இல்லாதது
எங்கே சென்றாலும் தேடி இணைக்கும்
விதியின் கதை இது


எல்லோரும் விரும்புவது துன்பம், கஷ்டம் இரண்டும் இல்லாத வாழ்க்கை. நிம்மதியும், மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்க்கை. அது எல்லோருக்கும் அமையுமா என்றால் அமையாது. ஒரு பத்து சதவிகிதம் பேருக்கு ஒரு வேளை அது போன்று அமையலாம். ஆனால் அது தொடர்ந்து அப்படியே நிலைத்திருக்குமா என்றால் இருக்காது. அவர்களுக்கும் நேரம் காலம் மாறும்போது அதுவும் மாறும். அதாவது அந்த நிலைமையும் மாறும்.

ஆனால் இன்பத்தையும், துன்பத்தையும் சரிசமமாகப் பாவிப்பவர்கள். எப்போதும், கவலையின்றி இருப்பார்கள். அந்த இரண்டு உணர்வுகளுமே அவர்களை அதிகம் பாதிக்காது. அறிவும், மனமும் தெளிவாக இருப்பவர்களுக்கு அது சாத்தியமே! அந்த நிலைப்பாடு சாத்தியமே!

நாம் சும்மா இருந்தாலும், நமது நேரம் நம்மைச் சும்மா இருக்க விடாது.

அதைத்தான் கிராமத்தில் உள்ளவர்கள் இப்படிச் சொல்வார்கள். அதிர்ஷ்டம் கடிதத்தில் வரும். தரித்திரம் தந்தியில் வரும்’ இப்போது தந்தி கிடையாது. அதனால் அதை இப்படிச் சொல்லலாம். தரித்திரம் எஸ்.எம்.எஸ்ஸில் (S.M.S) வரும்.
--------------------------------------------------------------------------------------
6ஆம் வீடும், 8ம் வீடும், 12ஆம் வீடும் தீய வீடுகளாகும். விளக்கமாகச் சொன்னால் துன்பத்திற்கும் கஷ்டத்திற்கும் உரிய வீடுகளாகும். 3ஆம் வீடும் தீய வீடுதான். ஆனால் குறைந்த அளவே பாதிப்புக்களைக் கொடுக்கும் வீடாகும். அந்த வீடுகள் (6, 8 & 12ஆம் வீடுகள்) நமது பொருளாதாரத்திற்கும், நிம்மதிக்கும் வேட்டு வைக்கும் வீடுகளாகும். அந்த வீட்டில் அமர்ந்திருப் பவர்களும், அந்த வீட்டிற்கு உரியவர்களும் தங்கள் தசாபுத்திகளில் வலிகளைக் கொடுக்கக்கூடியவர்கள்.

அந்த வீட்டில் அமர்ந்திருப்பவர்கள், அல்லது அந்த வீட்டிற்கு உரியவர்கள் உச்சம் பெற்றிருந்தாலோ அல்லது ஆட்சி பலம் பெற்றிருந்தாலோ பாதிப்புக்கள் இருக்காது. அல்லது குறைவாக இருக்கும். அத்துடன் வரும் கஷ்டங்களைப் போக்கும் சக்தியை அல்லது தாக்குப் பிடிக்கும் சக்தியை அவர்கள் கொடுப்பார்கள்

6ஆம் வீடு தடைகள், நோய்கள், விபத்துக்கள். எதிரிகள், கடன்கள் என்று உபத்திரவப்படுத்தும். நன்றாக இல்லாவிட்டால் சம்பந்தப்பட்ட தசாபுத்தி உபத்திரவமாக இருக்கும்.

8ஆம் வீடு கஷ்டங்கள், எதிர்மறையான விளைவுகள், மன அழுத்தங்கள், மரணம் போன்ற கொடுமைகளை உண்டாக்கும்

12ஆம் வீடு, விரையம் (Losses) பிரிவுகள்,  வேண்டாத முடிவுகளை, வேண்டாத விளைவுகளை உண்டாக்கும்.பல ஏமாற்றங்களை, துரோகங்களைச் சந்திக்க வைக்கும்!

அவைகளால் நொந்து போகாமல், நம்மைப் புடம் போட்டு, மேன்மைப் படுத்தும் வீடுகள் அவைகள் என்று அவற்றையும் நாம் நேசிக்க வேண்டும்.

’கையைக் கட்டி நிக்கச் சொன்னா காட்டு வெள்ளம் நிக்காது’ என்று ஒரு கவிஞன் சொன்ன வரியை நினைவில் கொண்டு,  எந்த வெள்ளம் வந்தாலும் நீந்திக் கரை சேரும் சக்தி நமக்கு வேண்டும். வெள்ளத்தோடு வெள்ளமாகப் போய்ச் சேர்ந்து விடக்கூடாது.

அதுபோன்ற சமயங்களில் மனம் உருகி இறைவனைப் பிரார்த்தனை செய்யுங்கள். நீந்திக் கரை சேரும் வலிமையை அவர் கொடுப்பார்!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

25.7.13

Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 34

 
Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 34

ஜோதிடத் தொடர் பாடம். பகுதி 34

இந்தத் தொடரில் இதற்கு முன் உள்ள பாடங்களைப் படித்திராதவர்கள், அவற்றைப் படிக்கவும்!
-------------------------------------------------------
பெண்ணின் நட்சத்திரத்தை வைத்து, பொருத்தமான நட்சத்திரத்தைத் தெரிவு செய்வது நல்லது! ஆனால் அதே பொருத்தம் இரு பாலருக்குமே பொதுவானதுதான். அதை மனதில் வையுங்கள்.

நட்சத்திரப் பொருத்தம் மட்டும் போதுமா?

மற்ற பொருத்தங்கள் முக்கியமில்லையா?

தசா சந்திப்பு இன்றி இருப்பது. தோஷங்கள் இல்லாமல் இருப்பது, தோஷங்கள் இருந்தால் ஆணைவிட பெண்ணிற்குக் சற்றுக் குறைவாக இருப்பது பொன்ற மற்ற விஷயங்களும்உள்ளன. ஆகவே முதலில் நட்சத்திரப் பொருத்தத்தை மட்டும் தொடர்ந்து பார்ப்போம். பிறகு மற்றவற்றைப் பார்ப்போம்!! 
-----------------------------------------------------
பூரட்டாதி நட்சத்திரம் 4ஆம் பாதம் மட்டும். இது மீன ராசிக்கு உரிய நட்சத்திரமாகும்.இந்த நட்சத்திரம் குரு பகவானின் நட்சத்திரமாகும்.

இந்த நட்சத்திரத்திற்கு

1. மிருகசீரிஷம்
2. திருவாதிரை
3. ஆயில்யம்
4. மகம்
5. பூரம்
6. சித்திரை
7. அனுஷம்
8. மூலம்
9. பூராடம்
10. திருவோணம்
11. அவிட்டம்

ஆகிய 11 நட்சத்திரங்களும் பொருந்தக்கூடிய நட்சத்திரங்களாகும்.

அஷ்டம சஷ்டம நிலைப்பாடு (6/8 position to each rasi) பார்த்தால் மீனத்திற்கு சிம்மம் 6/8 நிலைப்பாட்டில் வரும். மகம் & பூரம் அகிய இரண்டு நட்சத்திரங்களும் பொருந்தாது.

மீன ராசிக்கு  கும்பம் 12ம் வீடு. ( 2/12 & 12/2 position to each rasi)  ஆகவே கும்ப  ராசிக்கு உரிய நட்சத்திரமான அவிட்டம் பொருந்தாது. கூட்டிக் கழித்தால் ஆக மொத்தத்தில் 8 நட்சத்திரங்கள் மட்டுமே சிறப்பாகத் தேரும்.

கார்த்திகை, புனர்பூசம், உத்திரம், விசாகம், உத்திராடம், ஆகிய 5 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களாகும். அவற்றையும் விலக்கி விடுவது  நல்லது.

பெண்ணிற்கும், பையனுக்கும் பூரட்டாதி நட்சத்திரமாக இருந்தால்  பொருந்தாது!.அதாவது ஏக நட்சத்திரம் பொருந்தாது!

பரணி, சுவாதி, ரேவதி  ஆகிய 3 நட்சத்திரங்களும் பொருந்தாது. (அதமக் கணக்கில் வரும்)

அஸ்விணி, ரோகிணி, பூசம், ஹஸ்தம், கேட்டை, சதயம், உத்திரட்டாதி ஆகிய 7 நட்சத்திரங்களும் மத்திம பொருத்தம் (average) உடையதாகும். தேவைப்பட்டால் அவற்றில் கிடைக்கும் வரன் ஒன்றைத் தெரிவு செய்து கொள்ளலாம்!
----------------------------------------------------------------------------
காதல் திருமணங்களுக்கு இந்தப் பொருத்தம் பார்க்க வேண்டுமா?

வேண்டாம். பார்த்து என்ன ஆகப்போகிறது? காதலைக் கைவிட முடியுமா? ஆகவே பார்க்காமல் வருவது வரட்டும், நடப்பது நடக்கட்டும் என்று வாளாவிருப்பது நல்லது!

(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++