மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

7.8.13

Astrology: Second short cut - இரண்டாவது குறுக்கு வழி

 
Astrology: Second short cut - இரண்டாவது குறுக்கு வழி

குறுக்கு வழி என்றால் நமக்கு எப்பவும் (எப்பொழுதும்) பிடிக்கும்.

ஒன்பது கிரகங்கள், பன்னிரெண்டு ராசிகள், ராசிச் சக்கரம், நவாம்சச் சக்கரம், தசா புத்திகள், கோள்சாரம் என்று பல மேட்டர்களை வைத்து ஒரு ஜாதகத்தை அலசுவதைவிட, அஷ்டக வர்க்கத்தை வைத்து ஒரு ஜாதகத்தை சுலபமாக அலசிவிடலாம். அஷ்டகவர்க்கமே ஒரு குறுக்கு வழிதான்.

அஷ்டகவர்க்கத்திலும் ஒரு குறுக்கு வழி இருக்கிறது!

என்ன அஷ்டகவர்க்கமே குறுக்கு வழி அதில் ஜாதகத்தை அலச ஒரு குறுக்கு வழி உள்ளதா என்று யாரும் ஆச்சரியப்பட வேண்டாம்.

ஒரு குறுக்கு வழி உள்ளது அதை இன்று பார்ப்போம்!
------------------------------------------------------------
ஒரு ஜாதகத்தில், ஜாதகனுக்கும், அவனுடைய நெருங்கிய உறவுகளுக்கும் உள்ள நெருக்கத்தை அல்லது விரிசல்களை சுலபமாகவும், விரைவாகவும், கீழ்க்கண்டவாறு கணக்கிடலாம்.

ஜாதகத்தில் உள்ள 12 ராசிகளில், மிக அதிகமான பரல் உள்ள ராசியையும், மிகக்குறைவான பரல் உள்ள ராசியையும் குறித்துக்கொள்ளுங்கள். பிறகு கீழே குறிப்பிட்டுள்ள காரகர்களில் யார், யார் அந்த வீடுகளில் உள்ளார்கள் என்று பாருங்கள். மிக அதிகமான பரல் உள்ள வீட்டில் இருப்பவர்களால் உங்களுக்கு நன்மைதான். அவர்கள் உங்களுடன் நெருக்கமாக இருப்பார்கள். அவர்களால் உங்களுக்கு உதவியாக இருக்குமே தவிர உபத்திரவம் இருக்காது. அவர்கள் உங்களின் மேல் அன்பாகவும், பாசமாகவும் பிரியமாகவும் இருப்பார்கள்.

மிக அதிகமான பரல்கள் உள்ள வீட்டில் உங்கள் லக்கினம் அமைந்தால், அனைத்தும் உங்களுக்கு தன்னிச்சையாகவே அமையும்.

1. ஜாதகனின் மேன்மையைப் பார்ப்பதற்கு உரிய இடம் (காரகத்துவம்) லக்கினம்
2. ஜாதகனின் தந்தையின் மேன்மையைப் பார்ப்பதற்கு உரிய கிரகம் (காரகன்) சூரியன்
3. ஜாதகனின் தாயைப் பற்றிப் பார்ப்பதற்கு உரிய கிரகம் (காரகன்) சந்திரன்
4. ஜாதகனின் சகோதரர்களைப் பற்றிப் பார்ப்பதற்கு உரிய கிரகம் (காரகன்) செவ்வாய்
5. ஜாதகனின் மனைவியைப் பற்றிப் பார்ப்பதற்கு உரிய கிரகம் (காரகன்) சுக்கிரன்

மாறாக மிகவும் குறைந்த பரல்கள் உள்ள வீட்டில், உங்கள் லக்கினம் அமைந்திருந்தால், ஜாதகனின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்காது. உறவுகளிடமும் அவனுக்கு ஒரு பிடிப்பு இல்லாமல் போய்விடும்.

அதுபோல மிகவும் குறைந்த பரல்கள் உள்ள வீட்டில், மேற்கூறிய காரகர்கள் அமர்ந்திருந்தால, சம்பந்தப்பட்ட கிரகத்திற்கு உரிய உறவு, உங்களுடன் ஒட்டுதல் இல்லாமல் இருக்கும். அவர்களால் உங்களுக்கு மகிழ்ச்சி ஏற்படாது.

ஒரு ஜாதகத்தில் மிக அதிகமான பரல் உள்ள வீட்டிற்கும், மிகக் குறைவான பரல்கள் உள்ள வீட்டிற்கும் கிடைத்துள்ள பரல்களின் வித்தியாசம் குறைவான அளவிலேயே இருந்தால், அதாவது எல்லா வீடுகளிலும் பரல்களின் அளவு 26 முதல் 30ற்குள் இருந்தால், ஜாதகனின் வாழ்க்கை சீரான ஓட்டத்துடன் இருக்கும். பெரிய, திடீரென்ற உயர்வையோ அல்லது தாழ்வையோ ஜாதகன் சந்திக்க மாட்டான். His life will be with no great upheavals or downfalls!

இது அஷ்டகவர்க்கப் புத்தகத்தில் வரவுள்ள பாடம். அத்துடன் மேல்நிலைப் பாடம். அனைவருக்கும் பயன்படட்டும் என்று அதை இன்று இங்கே பதிவிட்டுள்ளேன்

அன்புடன்
வாத்தியார்

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

46 comments:

 1. Respected Sir,
  Does this short cut apply to the 6th, 8th and 12th place too?

  ReplyDelete
 2. Good morning Ayya thanks for the post

  ReplyDelete
 3. காலை வணக்கம் ஐயா ,என்னையும் வருகைப்பதிவில் எடுத்துக்கொள்ளுங்கள்.

  ReplyDelete
 4. காலை வணக்கம் ஐயா,

  ReplyDelete
 5. //மிக அதிகமான பரல் உள்ள வீட்டில் இருப்பவர்களால் உங்களுக்கு நன்மைதான்.//

  மிக அதிகமான பரல் உள்ள வீட்டில் எந்த கிரகமும் இல்லாவிட்டால்? யாராலும் நமக்கு எந்த பிரயோஜனமும் இல்லை என்ற முடிவுக்கு வரலாமா?

  ReplyDelete
 6. சார், உங்க புக் வருது வருது-னு சொல்றிங்க ஆனா ....! சீக்கிரம் தரணும்னு எல்லோர் சார்பிலும் பணிவோடு கேட்டுக்கிறேன்.
  இப்படிக்கு வகுப்பறை-யின் ஜன்னல் மாணவர் சங்க உறுப்பினர்-நாதன்.

  ReplyDelete
 7. Ananth அண்ணாக்கு எழுந்த சந்தேகம்தான் எனக்கும் !!!

  நன்றி,
  ராஜா

  ReplyDelete
 8. அதிகம் என்றால்
  அதன் அளவு எவ்வளவு?

  குறைவு என்றால் அதன்
  குறிப்பு எவ்வளவு?; தோழர்

  ஆனந்துக்கு உள்ள சந்தேகம்
  அய்யருக்கும் தான் என்ன செய்ய?

  பரல்களை மாற்றியமைக்க ஏதாவது வழி
  பார்த்து சொல்லுங்கள்; வாழ்க்கை

  பாதையை மாற்றியமைக்க இந்த
  பரல்களை மாற்றலாமா பார்ப்போம்

  பூஜ்ஜியம் பரல்கள் உள்ள ராசியும்
  50க்கு மேற்பட்ட உள்ள ராசியும்

  இருந்தால் எப்படி
  இருக்கும் (சும்மா ஒரு இதுக்கு தான்)

  ReplyDelete
 9. மிக அதிகமான பரல்கள் உள்ள வீட்டில் உங்கள் லக்கினம் அமைந்தால், அனைத்தும் உங்களுக்கு தன்னிச்சையாகவே அமையும்.

  பகிர்வுக்கு நன்றிகள் ஐயா..!

  ReplyDelete
 10. புத்தகம் வெளியிடுவது குழந்தை பெற்றெடுப்பதுபோல்தான். குறைப் பிரசவம் போன்று இருக்கக் கூடாது என்பதால் புத்தகம் வெளியிடுவதற்கும் போதிய அவகாசம் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும்.

  ஜன்னல் மாணவர் சங்கம் போல் கடைசி பெஞ்ச் மாணவர் சங்கம் இருந்தால் நான் உறுப்பினராகச் சேர்ந்துக் கொள்கிறேன்.

  ReplyDelete
 11. என் மகனுக்கு விருச்சிக லக்னம்,ராசியும் அதுவே.லக்னாதிபதி செவ்வாய் அதிக பரல்கள்(39)உள்ள ஆறாம் இடத்தில் இருக்கிறது. 5 ஆம் இடத்தில் குறைவான பரல்கள்(20) அங்கு யாரும் இல்லை. எனவே யாராலும் தொல்லை இருக்காது. அதன் அதிபதி குரு 9-ல் உச்சம்+வர்கோத்தமம்.
  லக்னாதிபதி ஆறில் மறைந்து விட்டார் என்று கவலையாய் இருக்கும்.ஆனால் பரல்கள் அதிகம் அதில் தான் இருக்கு.இது வரை வயது 23 தன்னிச்சையாய் எல்லாம் அமைகிறது.

  ReplyDelete
 12. மிக அதிகமான பரல்கள் உள்ள பாவமானது ஒருக்கால் அரி, ரந்த்ர அல்லது வியாய பாவங்களாக அமைந்து, அதில் அமர்ந்த கிரகமும் இயற்கையில் சுபத்தன்மை இல்லாத ஒன்றாக அமையின் (உதாரணம் சாயா மார்த்தாண்ட சம்பூதம் aka மந்த பெருமான்)? அப்பொழுதும் இவ்விதி பொருந்தி அமையுமோ?

  ReplyDelete
 13. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு எங்கள் அலுவலகத்தில் இன்று முதல் திங்கள் வரை விடுமுறை. இங்கே பெரும்பாலான நிறுவனங்களில் இதுதான் நிலைமை. எந்த அறிவிப்பும் வெளிவராததால் வகுப்பறை தொடர்ந்து நடை பெறும் என்று நினைக்கிறேன்.

  ReplyDelete
 14. /////Blogger Dallas Kannan said...
  Respected Sir,
  Does this short cut apply to the 6th, 8th and 12th place too?/////

  ஏன் இந்த சந்தேகம்? ஆறாம் வீட்டில் அதிகமான பரல்களைக் கொண்ட ஜாதகன் தன் எதிரிகளைத் துவம்சம் செய்துவிடுவான் என்பது விதி (rule)

  ReplyDelete
 15. /////Blogger Mathy said...
  Good morning Ayya thanks for the post////

  நல்லது. நன்றி சகோதரி!

  ReplyDelete
 16. ////Blogger TTSS said...
  காலை வணக்கம் ஐயா ,என்னையும் வருகைப்பதிவில் எடுத்துக்கொள்ளுங்கள்.////

  ஆஹா, எடுத்துக் கொண்டு விட்டேன். உங்களின் வருகைப்பதிவிற்கும் வணக்கத்திற்கும் நன்றி!

  ReplyDelete
 17. ////Blogger boobalan vr said...
  காலை வணக்கம் ஐயா,/////

  உங்களின் வருகைப்பதிவிற்கும் வணக்கத்திற்கும் நன்றி!

  ReplyDelete
 18. ///Blogger Sattur Karthi said...
  Good morning sir!////

  உங்களின் வருகைப்பதிவிற்கும் வணக்கத்திற்கும் நன்றி!

  ReplyDelete
 19. ///Blogger Ak Ananth said...
  //மிக அதிகமான பரல் உள்ள வீட்டில் இருப்பவர்களால் உங்களுக்கு நன்மைதான்.//
  மிக அதிகமான பரல் உள்ள வீட்டில் எந்த கிரகமும் இல்லாவிட்டால்? யாராலும் நமக்கு எந்த பிரயோஜனமும் இல்லை என்ற முடிவுக்கு வரலாமா?////

  எந்த கிரகமும் இல்லாவிட்டால் என்ன? தன்னிச்சையாக அந்த வீட்டின் (House) செயல்பாடுகள் பிரமாதமாக இருக்குமே சாமி!

  ReplyDelete
 20. ////Blogger nathan said...
  சார், உங்க புக் வருது வருது-னு சொல்றிங்க ஆனா ....! சீக்கிரம் தரணும்னு எல்லோர் சார்பிலும் பணிவோடு கேட்டுக்கிறேன்.
  இப்படிக்கு வகுப்பறை-யின் ஜன்னல் மாணவர் சங்க உறுப்பினர்-நாதன்.////

  இடையில் 30,000 வாசகர்களைக் கொண்ட பத்திரிக்கை ஒன்றில் எழுதிய/எழுதிக்கொண்டிருக்கும் சிறுகதைகள், கட்டுரைகளைத் தொடர்ந்து புத்தகங்களாகக் கொண்டு வர வேண்டிய கட்டாயத்தால் (மொத்தம் எட்டு புத்தகங்கள்) அந்த இடர்பாடுகள். கூடிய விரைவில் ஜோதிட நூல்கள் வெளியாகும். அந்தப் பத்திரிக்கையின் வாசகர்களின் வேண்டுகோளை ஏற்க வேண்டிய கட்டாயம்!

  ReplyDelete
 21. ////Blogger raja said...
  Ananth அண்ணாக்கு எழுந்த சந்தேகம்தான் எனக்கும் !!!
  நன்றி,
  ராஜா////

  ஆனந்த அண்ணனுக்கு எழுதிய பதில்தான் உங்களுக்கும். அதைப் படித்துப் பாருங்கள் ராசா!

  ReplyDelete
 22. ////Blogger வேப்பிலை said...
  அதிகம் என்றால்
  அதன் அளவு எவ்வளவு?
  குறைவு என்றால் அதன்
  குறிப்பு எவ்வளவு?; தோழர்
  ஆனந்துக்கு உள்ள சந்தேகம்
  அய்யருக்கும் தான் என்ன செய்ய?
  பரல்களை மாற்றியமைக்க ஏதாவது வழி
  பார்த்து சொல்லுங்கள்; வாழ்க்கை
  பாதையை மாற்றியமைக்க இந்த
  பரல்களை மாற்றலாமா பார்ப்போம்
  பூஜ்ஜியம் பரல்கள் உள்ள ராசியும்
  50க்கு மேற்பட்ட உள்ள ராசியும்
  இருந்தால் எப்படி
  இருக்கும் (சும்மா ஒரு இதுக்கு தான்)/////

  மாற்றி எழுதி வைத்துக்கொள்ளூங்கள் வேப்பிலையாரே! யார் உங்களைக் கேட்க முடியும்?

  ReplyDelete
 23. ////Blogger இராஜராஜேஸ்வரி said...
  மிக அதிகமான பரல்கள் உள்ள வீட்டில் உங்கள் லக்கினம் அமைந்தால், அனைத்தும் உங்களுக்கு தன்னிச்சையாகவே அமையும்.
  பகிர்வுக்கு நன்றிகள் ஐயா..!/////

  உங்களின் பெயர் ராசிக்காகவே எல்லாம் தன்னிச்சையாகவே அமையும். சகோதரி!

  ReplyDelete
 24. /////Blogger eswari sekar said...
  vanakam.sir.////

  உங்களின் வருகைப்பதிவிற்கும் வணக்கத்திற்கும் நன்றி!

  ReplyDelete
 25. ////Blogger Ak Ananth said...
  புத்தகம் வெளியிடுவது குழந்தை பெற்றெடுப்பதுபோல்தான். குறைப் பிரசவம் போன்று இருக்கக் கூடாது என்பதால் புத்தகம் வெளியிடுவதற்கும் போதிய அவகாசம் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும்.//////

  உண்மைதான். 4000 பக்கங்கள். பிரித்து மேய்வதற்கு மிகவும் பிரயத்தனப் பட்டுக்கொண்டிருக்கிறேன். சிறப்பாக வர வேண்டும் என்ற ஆர்வத்தால் தாமதம் ஆவதையும் தடுக்கமுடியவில்லை!

  ///// ஜன்னல் மாணவர் சங்கம் போல் கடைசி பெஞ்ச் மாணவர் சங்கம் இருந்தால் நான் உறுப்பினராகச் சேர்ந்துக் கொள்கிறேன்./////

  நீங்களே ஆரம்பித்து வையுங்கள். KMRK முதல் பெஞ்ச் மாணவர் சங்கத்தின் தலைவராக இருக்கிறார்! வேப்பிலை சாமி எதிலும் சேராமல் one man army யைப் போல தனியாகத் தனக்கென்று ஒரு அமைப்பை (சங்கம்) வைத்திருக்கிறார்!

  ReplyDelete
 26. ///Blogger arul said...
  good lesson/////

  நல்லது. நன்றி அருள்!

  ReplyDelete
 27. ////Blogger அமுதா கிருஷ்ணா said...
  என் மகனுக்கு விருச்சிக லக்னம்,ராசியும் அதுவே.லக்னாதிபதி செவ்வாய் அதிக பரல்கள்(39)உள்ள ஆறாம் இடத்தில் இருக்கிறது. 5 ஆம் இடத்தில் குறைவான பரல்கள்(20) அங்கு யாரும் இல்லை. எனவே யாராலும் தொல்லை இருக்காது. அதன் அதிபதி குரு 9-ல் உச்சம்+வர்கோத்தமம்.
  லக்னாதிபதி ஆறில் மறைந்து விட்டார் என்று கவலையாய் இருக்கும்.ஆனால் பரல்கள் அதிகம் அதில் தான் இருக்கு.இது வரை வயது 23 தன்னிச்சையாய் எல்லாம் அமைகிறது./////

  நல்லது. உங்களின் மகிழ்ச்சி இறையருளால் தொடரட்டும். வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 28. ///Blogger க்ருத்திகாஸுனுதாசோஹம் said...
  மிக அதிகமான பரல்கள் உள்ள பாவமானது ஒருக்கால் அரி, ரந்த்ர அல்லது வியாய பாவங்களாக அமைந்து, அதில் அமர்ந்த கிரகமும் இயற்கையில் சுபத்தன்மை இல்லாத ஒன்றாக அமையின் (உதாரணம் சாயா மார்த்தாண்ட சம்பூதம் aka மந்த பெருமான்)? அப்பொழுதும் இவ்விதி பொருந்தி அமையுமோ?////

  உங்கள் தமிழ் எனக்குப் புரிய வில்லையே சாமி!~ உங்கள் பெயரையும் சேர்த்துத்தான் சொல்கிறேன். எந்த நாட்டில் வசிக்கிறீர்கள்?

  ReplyDelete
 29. /////Blogger Ak Ananth said...
  ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு எங்கள் அலுவலகத்தில் இன்று முதல் திங்கள் வரை விடுமுறை. இங்கே பெரும்பாலான நிறுவனங்களில் இதுதான் நிலைமை. எந்த அறிவிப்பும் வெளிவராததால் வகுப்பறை தொடர்ந்து நடை பெறும் என்று நினைக்கிறேன். ////

  தொடர்ந்து ஆறு நாட்களா? கொடுத்து வைத்தவர் சாமி நீங்கள்! வகுப்பறை வழக்கம்போல நடைபெறும்!நீங்கள் விரும்பினால் சொல்லுங்கள் - விடுமுறையை அறிவித்து விடுகிறேன்!

  ReplyDelete
 30. கடவுள் சோதிக்கிறாரா? சரிதான் தாடியெல்லாம் வைத்துக் கொண்டு இங்கிலீசில் கதைக்கிற சாமியார் சொன்னா ஏற்க வேண்டியதுதான்.

  நமது சங்கடங்களுக்கோ, சந்தோஷங்களுக்கோ கடவுள்(அப்படி ஒருவர் தனியாக உண்டுமா?) பொறுப்பாளர் அல்லர்; நம்முடைய செயல்பாடுகளே காரணம் என்பது இந்திய தத்துவம். இச் செயல்பாடுகளின் விளைவுகள் ஜன்மாந்திரமாகத் தொடரும் என்பது நம் நம்பிக்கை.

  'பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
  பிற்பகல் தாமே வரும்'

  'தாமே' என்பது 'இன்னா'வைச்சுட்டுமே அல்லாது கடவுளை அல்ல.

  ஓஷோவின் தாடியும் கண்களும் அபாராம்.

  ReplyDelete
 31. அஷ்டம ஸ்தனத்திற்குதான் 21 பரல் ஆகிவிட்டது.மற்றவையெலாம் பரவாலேது.

  ReplyDelete
 32. ///kmr.krishnan said...
  நமது சங்கடங்களுக்கோ, சந்தோஷங்களுக்கோ கடவுள்(அப்படி ஒருவர் தனியாக உண்டுமா?) ///

  சம்வாதமாக கொள்வதானால்
  சரி என மேலே சொல்லி படியுங்கள்..

  வினையும் சடம்
  வினைப்பயனும் சடம் இவை

  தானே உயிர்களை சேர்வதில்லை
  தருபவன் ஒருவன் வேண்டும்

  உயிர்களுக்கு வினைப்பயனை
  ஊட்டுபவன் இறைவன்

  வகுத்தான் வகுத்த வகையல்லால் என
  வள்ளுவம் சொல்வது இது தானே

  கர்மா தியரியை கொஞ்சம்
  கவணமாக படித்தால் புரியும்

  அதைத்தான் அவ்வப்போது
  அய்யர் சொல்வதுண்டு நாம்

  அடிப்படைகளை கவணமாக தெரிந்துகொள்ள
  அக்கறை காட்டுவதில்லை என..

  ReplyDelete
 33. க்ருத்திகாஸுனுதாசோஹம் சொன்ன அரி = 6 ம் இடம், ரந்த்ர = 8ம் இடம், வியாய = 12ம் இடம். இவற்றில் அதிக பரல் இருந்து சாயா தேவியின் மகன் சனி பகவானைப் போன்ற பாப கிரகங்கள் இருந்தால் என்ன பலன் என்று கேட்கிறார். இதற்கு தமிழ் வார்த்தைகளைப் பயன் படுத்தியிருக்கலாம். சமஸ்கிருதம் எதற்கு என்று தெரியவில்லை/புரியவில்லை..

  ReplyDelete
 34. அய்யா தங்களுடைய முந்தய பதிவில் மறைவிடங்கள் ஆனா ஆறு ,எட்டு,பன்னிரண்டு ஆகிய வீடுகளில் குறைவான பரல்கள் இருப்பது நல்லது என்று கூறியுள்ளீர்கள் ஆனால் நேற்றைய
  கருத்துரையில் அதிகமான பரல் இருந்தால் ஆறாம் வீட்டில் எதிரிகளை துவம்சம் செய்வது விதி என கூறியுள்ளீர்கள்.

  ReplyDelete
 35. ///Ak Ananth said...
  சமஸ்கிருதம் எதற்கு என்று தெரியவில்லை/புரியவில்லை.///

  அவர் எட்டு மொழிகள்
  அறிந்தவர் என்றால் வியப்பாக உள்ளதா?

  தமிழே முதல் மொழி இந்த
  தரணியிலே அதனால் தான்

  இறைவனாரே தமிழ்சங்கம் அமைத்து
  இங்கு வழி நடத்தி உள்ளார்

  இப்படி சொல்வதினால் சில
  இந்திய "குடி"மகன்களுக்கு

  வருத்தம் வரலாம் என்ன செய்ய
  வழக்கத்தில் உள்ளதை மாற்ற முடியுமா?

  ReplyDelete
 36. Blogger kmr.krishnan said...
  கடவுள் சோதிக்கிறாரா? சரிதான் தாடியெல்லாம் வைத்துக் கொண்டு இங்கிலீசில் கதைக்கிற சாமியார் சொன்னா ஏற்க வேண்டியதுதான்.
  நமது சங்கடங்களுக்கோ, சந்தோஷங்களுக்கோ கடவுள்(அப்படி ஒருவர் தனியாக உண்டுமா?) பொறுப்பாளர் அல்லர்; நம்முடைய செயல்பாடுகளே காரணம் என்பது இந்திய தத்துவம். இச் செயல்பாடுகளின் விளைவுகள் ஜன்மாந்திரமாகத் தொடரும் என்பது நம் நம்பிக்கை.
  'பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
  பிற்பகல் தாமே வரும்'
  'தாமே' என்பது 'இன்னா'வைச்சுட்டுமே அல்லாது கடவுளை அல்ல.
  ஓஷோவின் தாடியும் கண்களும் அபாராம்./////

  அந்தக் கண்களை வைத்துத்தான் அவர் தன் சீடர்களையும், தொடர்பவர்களையும் கட்டிப்போட்டார்!

  ReplyDelete
 37. /////Blogger kmr.krishnan said...
  அஷ்டம ஸ்தனத்திற்குதான் 21 பரல் ஆகிவிட்டது.மற்றவையெலாம் பரவாலேது./////

  அதில் குறைந்த பரல்களால், வேறு இடத்தில் பரல்கள் கூடியிருக்குமல்லவா? அதை நினைத்துப் பார்த்து, அதையும் பரவாலேதண்டி என்று சொல்லுங்கள்!

  ReplyDelete
 38. Blogger வேப்பிலை said...
  ///kmr.krishnan said...
  நமது சங்கடங்களுக்கோ, சந்தோஷங்களுக்கோ கடவுள்(அப்படி ஒருவர் தனியாக உண்டுமா?) ///
  சம்வாதமாக கொள்வதானால்
  சரி என மேலே சொல்லி படியுங்கள்..
  வினையும் சடம்
  வினைப்பயனும் சடம் இவை
  தானே உயிர்களை சேர்வதில்லை
  தருபவன் ஒருவன் வேண்டும்
  உயிர்களுக்கு வினைப்பயனை
  ஊட்டுபவன் இறைவன்
  வகுத்தான் வகுத்த வகையல்லால் என
  வள்ளுவம் சொல்வது இது தானே
  கர்மா தியரியை கொஞ்சம்
  கவனமாகப் படித்தால் புரியும்
  அதைத்தான் அவ்வப்போது
  அய்யர் சொல்வதுண்டு நாம்
  அடிப்படைகளை கவனமாக தெரிந்துகொள்ள
  அக்கறை காட்டுவதில்லை என../////

  வினைப்பயன்களுக்கு இறைவன் காரணமல்ல! ஆனால் அவற்றைத் தாக்குப்பிடிக்கும் சக்தியை அவர் கொடுப்பார்! விதி கிள்ளி விட்டுப் போகும்போது, தொட்டிலை ஆட்டுபவர் அவர்தான்!தொட்டிலை ஆட்டி நம்மைத் தூங்க வைப்பவர் அவர்தான்!

  ReplyDelete
 39. ////Blogger Ak Ananth said...
  க்ருத்திகாஸுனுதாசோஹம் சொன்ன அரி = 6 ம் இடம், ரந்த்ர = 8ம் இடம், வியாய = 12ம் இடம். இவற்றில் அதிக பரல் இருந்து சாயா தேவியின் மகன் சனி பகவானைப் போன்ற பாப கிரகங்கள் இருந்தால் என்ன பலன் என்று கேட்கிறார். இதற்கு தமிழ் வார்த்தைகளைப் பயன் படுத்தியிருக்கலாம். சமஸ்கிருதம் எதற்கு என்று தெரியவில்லை/புரியவில்லை../////

  அதிக பரல்கள், அந்த தீய கிரகங்களுடன் சேர்ந்து கூட்டணி அமைத்து ஆட்டம் ஆடும்! மொத்தத்தில் கெடுதல்தான். அவஸ்தைதான். அவஸ்தையும் இருக்கும். அதிக பரல்கள் தாக்குப் பிடிக்கும் சக்தியையும் கொடுக்கும். விரையமும் இருக்கும். விரையத்தை எதிர்கொள்ளூம் மேன்மையும் இருக்கும்.

  ReplyDelete
 40. /////OpenID Keerthana said...
  அய்யா தங்களுடைய முந்தய பதிவில் மறைவிடங்கள் ஆனா ஆறு ,எட்டு,பன்னிரண்டு ஆகிய வீடுகளில் குறைவான பரல்கள் இருப்பது நல்லது என்று கூறியுள்ளீர்கள் ஆனால் நேற்றைய கருத்துரையில் அதிகமான பரல் இருந்தால் ஆறாம் வீட்டில் எதிரிகளை துவம்சம் செய்வது விதி என கூறியுள்ளீர்கள்./////

  அம்மா என்றழைக்காத உயிரில்லைதான். ஆனால் அதே அம்மா மாமியார் பதவி கிடைத்தவுடன் என்ன செய்வார் என்பது உங்களுக்குத் தெரியுமல்லவா? இரண்டு அவதாரங்கள் உண்டு இல்லையா? அதுபோல அந்த இரண்டு நிலைப்பாடுகளுமே ஜோதிட விதிகளில் சொல்லப்பட்டிருப்பதுதான்!

  ReplyDelete
 41. ////Blogger வேப்பிலை said...
  ///Ak Ananth said...
  சமஸ்கிருதம் எதற்கு என்று தெரியவில்லை/புரியவில்லை.///
  அவர் எட்டு மொழிகள்
  அறிந்தவர் என்றால் வியப்பாக உள்ளதா?
  தமிழே முதல் மொழி இந்த
  தரணியிலே அதனால் தான்
  இறைவனாரே தமிழ்சங்கம் அமைத்து
  இங்கு வழி நடத்தி உள்ளார்
  இப்படி சொல்வதினால் சில
  இந்திய "குடி"மகன்களுக்கு
  வருத்தம் வரலாம் என்ன செய்ய
  வழக்கத்தில் உள்ளதை மாற்ற முடியுமா?/////

  வழக்கத்தில் உள்ளதைக் காலதேவன் மாற்றுவான். தாவணி எல்லாம் போய், இப்போது சுடிதார், ஜீன்ஸ், மிடி வந்துவிட்டது இல்லையா? முறுக்கு, கடலை உருண்டை எல்லாம் போய், பானி பூரி, பேல் பூரிகள் அந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளவில்லையா? வெற்றிலை பாக்கு, சுண்னாம்பு எல்லாம் போய், மானிக்சந்த், பான்பராக் அவ்விடத்திற்கு வரவில்லையா? அதுபோல எல்லா வழக்கத்தையும் மாற்றும் அதிகாரம் அவனுடைய கையில் உள்ளது வேப்பிலையாரே!

  ReplyDelete
 42. ///வினைப்பயன்களுக்கு இறைவன் காரணமல்ல! ஆனால் அவற்றைத் தாக்குப்பிடிக்கும் சக்தியை அவர் கொடுப்பார்! விதி கிள்ளி விட்டுப் போகும்போது, தொட்டிலை ஆட்டுபவர் அவர்தான்!தொட்டிலை ஆட்டி நம்மைத் தூங்க வைப்பவர் அவர்தான்!///

  உங்கள் கருத்து
  உங்களுக்கு சரி..

  சரியானது எப்போதும்
  சரியே

  ReplyDelete
 43. பகிர்வுக்கு
  நன்றிகள் ஐயா:)

  *வகுப்பறைக்கு கொஞ்சம் லேட் - மண்ணிக்கவும்!

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com