மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

13.8.13

Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ தொடர் நிறைவுப் பகுதி!

 
Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ தொடர் நிறைவுப் பகுதி!

ஜோதிடத் தொடர் பாடம். பகுதி 36 (இத்துடன் இந்தத் தொடர் நிறைவுறுகிறது)

இந்தத் தொடரில் இதற்கு முன் உள்ள பாடங்களைப் படித்திராதவர்கள், அவற்றைப் படிக்கவும்!
-------------------------------------------------------
பெண்ணின் நட்சத்திரத்தை வைத்து, பொருத்தமான நட்சத்திரத்தைத் தெரிவு செய்வது நல்லது! ஆனால் அதே பொருத்தம் இரு பாலருக்குமே
பொதுவானதுதான். அதை மனதில் வையுங்கள்.

நட்சத்திரப் பொருத்தம் மட்டும் போதுமா?

மற்ற பொருத்தங்கள் முக்கியமில்லையா?

தசா சந்திப்பு இன்றி இருப்பது. தோஷங்கள் இல்லாமல் இருப்பது, தோஷங்கள் இருந்தால் ஆணைவிட பெண்ணிற்குக் சற்றுக் குறைவாக இருப்பது
பொன்ற மற்ற விஷயங்களும் உள்ளன. ஆகவே முதலில் நட்சத்திரப் பொருத்தத்தை மட்டும் தொடர்ந்து பார்ப்போம். பிறகு மற்றவற்றைப் பார்ப்போம்!! 
-----------------------------------------------------
ரேவதி நட்சத்திரம். இது மீன ராசிக்கு உரிய நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரம் புதன் கிரகத்தின் நட்சத்திரமாகும்.

இந்த நட்சத்திரத்திற்கு

1. கார்த்திகை
2. புனர்பூசம்
3. பூசம்
4. பூரம்
5. உத்திரம்
6. ஹஸ்தம்
7. சுவாதி
8. அனுஷம்
9. பூராடம்
10.உத்திராடம்
11. திருவோணம்
12. சதயம்
13. உத்திரட்டாதி.

ஆகிய 13 நட்சத்திரங்களும் பொருந்தக்கூடிய நட்சத்திரங்களாகும்.

அஷ்டம சஷ்டம நிலைப்பாடு (6/8 position to each rasi) பார்த்தால் மீனத்திற்கு சிம்மம் 6/8 நிலைப்பாட்டில் வரும். பூர நட்சத்திரம் பொருந்தாது. மீன
ராசிக்கு  கும்பம் 12ம் வீடு. ( 2/12 & 12/2 position to each rasi)  ஆகவே கும்ப  ராசிக்கு உரிய நட்சத்திரமான சதயம் பொருந்தாது. கூட்டிக் கழித்தால்
ஆக மொத்தத்தில் 11 நட்சத்திரங்கள் மட்டுமே சிறப்பாகத் தேரும்.

அஸ்விணி, ஆயில்யம், மகம், கேட்டை, மூலம் ஆகிய 5 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களாகும். அவற்றையும் விலக்கி
விடுவது  நல்லது.

பெண்ணிற்கும், பையனுக்கும் ரேவதி ஒரே நட்சத்திரமாக இருந்தால் பொருந்தும். அதாவது ஏக நட்சத்திரம் பொருந்தும்.

சித்திரை, விசாகம்  ஆகிய 2 நட்சத்திரங்களும் பொருந்தாது. (அதமக் கணக்கில் வரும்)

பரணி, ரோஹிணி, மிருகசீர்ஷம், திருவாதிரை, அவிட்டம், பூரட்டாதி ஆகிய 6 நட்சத்திரங்களும் மத்திம பொருத்தம் (average) உடையதாகும். தேவைப் பட்டால் அவற்றில் கிடைக்கும் வரன் ஒன்றைத் தெரிவு செய்து கொள்ளலாம்!
----------------------------------------------------------------------------
காதல் திருமணங்களுக்கு இந்தப் பொருத்தம் பார்க்க வேண்டுமா?

வேண்டாம். பார்த்து என்ன ஆகப்போகிறது? காதலைக் கைவிட முடியுமா? ஆகவே பார்க்காமல் வருவது வரட்டும், நடப்பது நடக்கட்டும் என்று வாளா விருப்பது நல்லது!
-----------------------------------------------
இந்தத் தொடர் நிறைவுறுகிறது. இதுவரை பொறுமையாகப் படித்த அன்புள்ளங்கள் அனைத்திற்கும் வாத்தியாரின் நன்றி உரித்தாகுக!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

16 comments:

  1. All good things must to an end. இதற்கு இந்த ஆங்கில பழமொழிதான் சொல்ல வேண்டும்.

    ReplyDelete
  2. தொடர் நிறைவுற்றது அடுத்த
    தொடர் Medical Astrology தானே

    காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி
    பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி

    ReplyDelete
  3. ஜோதிடத் தொடர் பாடம்.
    பயனுள்ளதாக அளித்தற்கு நன்றிகள் ஐயா..


    வலைச்சர அறிமுகத்தில்
    வகுப்பறை ..!
    வாழ்த்துகள்..!!

    http://blogintamil.blogspot.in/2013/08/blog-post_13.html

    ReplyDelete
  4. தொடர் நிறைவுற்றது. இத்தொடர் ஒன்றுதான் தொய்வின்றித் தொடர்ந்தது.நன்றி ஐயா!

    100 கிலோ அரிசியை வாங்கும் திறன் இருந்தும் அத்தனையையும் ஒரே நேரத்தில்
    உண்ண முடியாது. 100கிலோ அரிசியை வாங்கினாலும், 100 கிலோவை சுமப்பவனைப் போலவே ஆழாக்கு அரிசிதான் இருவருக்கும். அதற்கும் மேலே,
    வாய்க்கரிசியும் ஒரேஅளவுதான்.337 !!!! ?

    ReplyDelete
  5. Medical astrologyக்கு தற்காலிகமாக medical leaveதான் விட வேண்டும். It's not as easy as it seems to be.

    All good things must come to an end. எனது முதல் பின்னூட்டத்தில் இப்படிதான் இருந்திருக்க வேண்டும். ஒரு வார்த்தை விடுபட்டு விட்டது.

    ReplyDelete
  6. oh. at last finished this .

    வாழ்த்துகள்..!!

    ReplyDelete
  7. /////Blogger Ak Ananth said...
    All good things must to an end. இதற்கு இந்த ஆங்கில பழமொழிதான் சொல்ல வேண்டும்./////

    நல்லவை, கெட்டவை என்ற பாகுபாடின்றி துவங்கிய அனைத்துமே ஒரு நாள் முடிவிற்கு வந்துதான் ஆகவேண்டும். நன்றி ஆனந்த்!

    ReplyDelete
  8. ///Blogger வேப்பிலை said...
    தொடர் நிறைவுற்றது அடுத்த
    தொடர் Medical Astrology தானே
    காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி
    பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி/////

    12 வீடுகளையும் 12 தலைப்பில் பிரித்துவிடுவீர்கள் போலிருக்கிறதே! மருத்துவ ஜோதிடம் என்ற தலைப்பில் தொடர் எழுதுவது சிரமம் வேப்பிலை சுவாமி! அவ்வப்போது தனிக் கட்டுரைகளை எழுதலாம். எழுதுவேன். அடுத்து ‘ அள்ள அள்ளப் பணமா? அல்லது தள்ளத் தள்ள விதியா?’ என்ற தலைப்பில் தொடர் எழுத விருப்பம். பழநிஅப்பனின் உத்தரவிற்காகக் காத்திருக்கிறேன்!

    ReplyDelete
  9. ////Blogger இராஜராஜேஸ்வரி said...
    ஜோதிடத் தொடர் பாடம்.
    பயனுள்ளதாக அளித்தற்கு நன்றிகள் ஐயா..
    வலைச்சர அறிமுகத்தில்
    வகுப்பறை ..!
    வாழ்த்துகள்..!!
    http://blogintamil.blogspot.in/2013/08/blog-post_13.html/////

    தகவலுக்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  10. /////Blogger kmr.krishnan said...
    தொடர் நிறைவுற்றது. இத்தொடர் ஒன்றுதான் தொய்வின்றித் தொடர்ந்தது.நன்றி ஐயா!
    100 கிலோ அரிசியை வாங்கும் திறன் இருந்தும் அத்தனையையும் ஒரே நேரத்தில் உண்ண முடியாது. 100கிலோ அரிசியை வாங்கினாலும், 100 கிலோவை சுமப்பவனைப் போலவே ஆழாக்கு அரிசிதான் இருவருக்கும். அதற்கும் மேலே, வாய்க்கரிசியும் ஒரேஅளவுதான்.337 !!!! ?/////

    ஆமாம். ஆமாம். அதைப் பலரும் உணரவில்லை. பொருள் சார்ந்த இன்றைய உலகில், அதற்கான நேரமும் அவர்களுக்கு இல்லை! உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  11. /////Blogger Ak Ananth said...
    Medical astrologyக்கு தற்காலிகமாக medical leaveதான் விட வேண்டும். It's not as easy as it seems to be.
    All good things must come to an end. எனது முதல் பின்னூட்டத்தில் இப்படிதான் இருந்திருக்க வேண்டும். ஒரு வார்த்தை விடுபட்டு விட்டது./////

    நல்லது. நன்றி ஆனந்த்!

    ReplyDelete
  12. ////Blogger C Jeevanantham said...
    oh. at last finished this .
    வாழ்த்துகள்..!!/////

    நல்லது. உங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி!

    ReplyDelete
  13. முதல் பதிவில் சில வரிகள்
    'நட்சத்திரப் பொருத்தம் மட்டும் போதுமா? மற்ற பொருத்தங்கள் முக்கியமில்லையா?
    தசா சந்திப்பு இன்றி இருப்பது. தோஷங்கள் இல்லாமல் இருப்பது, இருந்தால் இருவருக்கும் இருப்பதுப்பொன்ற மற்ற விஷயங்களும் உள்ளன.
    ஆகவே முதலில் நட்சத்திரப் பொருத்தத்தை மட்டும் தொடர்ந்து பார்ப்போம். பிறகு மற்ற கதைகளுக்கு வருவோம்!'

    நட்சத்திரப் பொருத்தம் மட்டும் பதிந்துள்ளீர், மற்ற பொருத்தங்கள்?
    பதிவிற்கு நன்றி

    ReplyDelete
  14. /////Blogger விசயக்குமார் said...
    முதல் பதிவில் சில வரிகள்
    'நட்சத்திரப் பொருத்தம் மட்டும் போதுமா? மற்ற பொருத்தங்கள் முக்கியமில்லையா?
    தசா சந்திப்பு இன்றி இருப்பது. தோஷங்கள் இல்லாமல் இருப்பது, இருந்தால் இருவருக்கும் இருப்பதுப்பொன்ற மற்ற விஷயங்களும் உள்ளன.
    ஆகவே முதலில் நட்சத்திரப் பொருத்தத்தை மட்டும் தொடர்ந்து பார்ப்போம். பிறகு மற்ற கதைகளுக்கு வருவோம்!'
    நட்சத்திரப் பொருத்தம் மட்டும் பதிந்துள்ளீர், மற்ற பொருத்தங்கள்?
    பதிவிற்கு நன்றி/////

    மற்ற பொருத்தங்கள்தானே! தோஷங்கள், தசா சந்திப்பு போன்ற்வைகளையும் பார்க்க வேண்டும். அவற்றை நேரம் கிடைக்கும்போது பிறகு எழுதுவேன். கொடிபிடிக்காமல், சாலை மறியல் செய்யாமல் பொறுத்திருங்கள்!

    ReplyDelete
  15. ////Blogger kimu said...
    நன்றி ஐயா.////

    எதற்கு நன்றி? தொடர் பதிவிற்கா? அல்லது அதை ஒரு வழியாக முடிவிற்குக் கொண்டு வந்தமைக்கா?:-))))

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com