மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label Jothidam. Show all posts
Showing posts with label Jothidam. Show all posts

15.9.25

Astrology: மகாபாக்கிய யோகம்!

Astrology: மகாபாக்கிய யோகம்! 

இன்றைய பாடத்தில் ஒரு எளிமையான யோகத்திற்கான விளக்கம் தரப்பட்டுள்ளது. அனைவரும் படித்துப் பயன் பெறுங்கள்.
----------------------------------------------------------

ஒற்றைப்படை ராசிகளான மேஷம், மிதுனம், சிம்மம், துலாம்,தனுசு, கும்பம் ஆகிய ஆறு இடங்களில் லக்கினம், சூரியன், சந்திரன், ஆகியவைகள் அமைந்திருக்கப் பகல் நேரத்தில் பிறந்த ஜாதகனுக்கு இந்த யோகம் உண்டு.

இப்படியும் நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ளலாம் - மிதுனம், துலாம், கும்பம் ஆகிய மூன்றும் காற்று ராசிகளிலும். மேஷம், சிம்மம், தனுசு ஆகிய மூன்றும் நெருப்பு ராசிகளிலும் சூரியன், சந்திரன், ஆகியவைகள் அமைந்திருக்கப் பகல் நேரத்தில் பிறந்த ஜாதகனுக்கு இந்த யோகம் உண்டு.

பகற் பொழுதில் பிறக்கும் ஜாதகனுக்கு, ஆண்களுக்கென்று ஜோதிடத்தில் சொல்லப்படும் பலன்கள் எல்லாம் தேடி வரும்
--------------------------------------------------
பெண்களுக்கு:

இரட்டைப்படை ராசிகளான ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் ஆகிய ஆறு இடங்களில் லக்கினம், சூரியன், சந்திரன், ஆகியவைகள் அமைந்திருக்க இரவு நேரத்தில் பிறந்த ஜாதகிக்கு இந்த யோகம் உண்டு.

இப்படியும் நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ளலாம் - ரிஷபம், கன்னி, மகரம் ஆகிய மூன்றும் பூமி ராசிகளிலும், கடகம், விருச்சிகம், மீனம் ஆகிய மூன்றும் நீர் ராசிகளிலும்,லக்கினம், சூரியன், சந்திரன், ஆகியவைகள் அமைந்திருக்க இரவு நேரத்தில் பிறந்த ஜாதகிக்கு இந்த யோகம் உண்டு.

இரவுப் பொழுதில் பிறக்கும் ஜாதகிக்கு, பெண்களுக்கென்று ஜோதிடத்தில் சொல்லப்படும் பலன்கள் எல்லாம் தேடி வரும்
--------------------------------------------------
பலன்: நல்ல பண்புகளைப் பெற்றவனாக அல்லது பெற்றவளாக ஜாதகன்/ஜாதகி இருப்பார்கள். மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை இருக்கும். அன்பே உருவானவர்களாக இருப்பார்கள். மற்றவர்களிடம் இவர்களுக்கு மதிப்பும், மரியாதையும் இருக்கும்!

Mahabhagya Yoga for Men - in day time birth, when Sun,Moon and ascendant in odd signs and for Women - night time birth when Sun,Moon and ascendant in even signs,than this yoga is formed.The native of this yoga is to be of good character,Helping to others,Kind and famous. Nullification is depend on placement of other planets.
+++++++++++++++++++++++++++++++++++++++
”ஓகோ, இதுதான் இந்த யோகத்தின் பலனா? நான் மகா பாக்கியம் எனும் தலைப்பைப் பார்த்தவுடன், ரிலையன்ஸ் அம்பானி போல செல்வந்தராகும் பாக்கியமோ என்று நினைத்து, மூச்சிரைக்க ஓடோடி வந்தேன்.” என்று சொல்பவர்கள் அடுத்துவரும் வரிகளைப் படியுங்கள்.

பணம் மகிழ்ச்சியைத்தராது; குணம்தான் மகிழ்ச்சியைத்தரும். நல்ல குணத்தைப் பெறுவதற்கான யோகம் இது! நல்ல குணத்தைப் பெற்றிருப்பதுதான் மகாபாக்கியம். ஓக்கேயா?

அன்புடன்
வாத்தியார்
======================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

14.9.25

Astrology: வேட்டு வைக்கும் யோகங்கள்! Lesson on Yogas: Mathru Nasa Yoga

Astrology: வேட்டு வைக்கும் யோகங்கள்! 
Lesson on Yogas: Mathru Nasa Yoga

மனிதன் சக மனிதனுக்கு வேட்டுவைப்பதை அறிவோம். சில அவயோகங்களும் வேட்டு வைக்கும் தன்மைகளை உடையவை. இன்று, வேட்டு வைக்கும்

அவயோகங்களில் இரண்டைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளேன்.

”சார், எனக்கு இந்த யோகம் இல்லையே!” என்று யாரும் கவலைப் பட வேண்டாம்.
++++++++++++++++++++++++++++++++++++++
1
பந்துபிஸ்த்தயக்த யோகா:
(உறவைக் கெடுக்கும் அவயோகம்)

4ஆம் வீட்டு அதிபதி தீய கிரகங்களுடன் சேர்ந்து இருந்தாலும், அல்லது 6, 8, 12ஆம் இடங்களில் சென்று அமர்ந்தாலும், அல்லது
பகை வீடுகளில் அமர்ந்திருந்தாலும், அல்லது நீசம் பெற்றிருந்தாலும் இந்த அவயோகம் உண்டு!

பலன்: ஜாதகனுக்கு தனது நெருங்கிய சொந்தங்களுடன் நல்ல உறவு இருக்காது. உறவுகளுடன் பிரச்சினைகள் இருக்கும்.
அது தவறான புரிதல்கள் அல்லது வேறு காரணங்களால் இருக்கலாம். எப்படியிருந்தாலும் அல்லது என்ன காரணமாக இருந்தாலும் ஜாதகன் தனிப்பட்டுப் போவான்.
+++++++++++++++++++++++++++++++++++++++++
2
மாத்ருநாச யோகா:
(தாய்ப் பாசத்திற்கு வேட்டு வைக்கும் யோகம்)

சந்திரன் இரண்டு தீய கிரகங்களுக்கு இடையில் (Moon is hemmed between malefic) மாட்டிக்கொண்டு விட்டாலும் அல்லது தீய
கிரகத்துடன் கூட்டணி போட்டிருந்தாலும் அல்லது தீய கிரகத்தின் பார்வையைப் பெற்றிருந்தாலும் இந்த அவயோகம் உண்டு!

பலன்: ஜாதகனின் தாய், ஜாதகன் சிறுவனாக அல்லது இளைஞனாக இருக்கும்போதே இறந்து போய்விடுவார். தவறி நல்ல ஆயுள்
பாவத்தோடு, அவர் உயிர் வாழ்ந்தாலும், ஜாதகனுடன் சுமூகமான உறவு இருக்காது.

அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

13.9.25

Astrology: கோள்சாரச் சனியின் பயண காலம் Saturn's transit period

Astrology: கோள்சாரச் சனியின் பயண காலம் Saturn's transit period 

பிள்ளை வளர்ந்து இளைஞனாகி விட்டால், தன் தந்தை சொல்லும் அறிவுரைகளைக் கேட்கமாட்டான். இல்லாளும், வயதாகிவிட்டால், கணவனை மதிக்க மாட்டாள். கல்விக் கற்றுத் தேரிய மாணவனும் ஆசிரியரைத் தேடமாட்டான். வியாதி முற்றிலும் குணமாகிவிட்டால், மக்களும் வைத்தியரைத் தேட மாட்டார்கள் என்று ஞானி ஒருவன் சொல்லிவைத்தான்.

உரைநடையாகச் சொல்லவில்லை. பொட்டில் அடித்த மாதிரிப் பாடலாகச் சொல்லிவைத்தான். நீங்கள் அறிந்து கொள்ளப் பாடலைக் கீழே கொடுத்துள்ளேன்.

“பிள்ளைதான் வயதில் மூத்தால் பிதாவின் சொல்புத்தி கேளான்
கள்ளின் நல்குழலாள் மூத்தால் கணவனைக் கருதிப்பாராள்
தெள்ளற வித்தை கற்றால் சீடனும் குருவைத் தேடான்
உள்ள நோய் பிணிகள் தீர்ந்தால் உலகோர் பண்டிதரைத் தேடார்!
-விவேக சிந்தாமணி என்னும் நூலில் வரும் பாடல் இது!

உலக இயல்பு அது. சில விதிவிலக்குகள் இருக்கலாம். அதுபோல நல்ல நிலைமையில் இருக்கும் எவனும் ஜோதிடத்தையோ அல்லது ஜோதிடரையோ நாடமாட்டான். ஒரு கஷ்டம் வரும்போதுதான், அதுவும் அவனால் அதைத் தீர்க்க முடியாத நிலை அல்லது சூழ்நிலை வரும்போதுதான், தன் ஜாதகத்தைத் தூசி தட்டிக் கையில் எடுப்பான்.

முன்பு ஒரு முறை நண்பர் ஒருவர் வந்து என்னிடம் சொன்னார்: “நான் செய்யாத தவறிற்காக, இப்போது என் அலுவலகத்தில் பெரிய பிரச்சினைக்கு உள்ளாகியிருக்கிறேன்”

நான் கேட்டேன்: “நீ தவறு செய்யாமல் எப்படி அவர்கள் உன்னை ஆட்படுத்துவார்கள். அதில் உன் பங்களிப்பு ஏதாவது நிச்சயமாக இருக்க வேண்டும்”

“ஆமாம், எனக்குக் கீழே உள்ளவன் செய்த தவறு. அவன் மீது நம்பிக்கை உள்ள காரணத்திற்கக, அவன் வைத்த காகிதங்களில் அவற்றை ஆராயமல் கையெழுத்துப் போட்டேன். அது மட்டுமே நான் செய்த தவறு!”

“போதாதா? அவனைப் போன்றவர்கள் செய்யும் வேலையை மேற்பார்வை இடுவதற்குத்தானே உன்னை நியமித்திருக்கிறார்கள். நீ  ஒன்றைப் படிக்காமல் எப்படி கையெழுத்துப்போடலாம்? இது வேலையில் அக்கறையின்மை கணக்கில் வரும்”

“வரும் என்ன, வந்துவிட்டது. இப்போது என்ன செய்வது என்று தெரியவில்லை. விசாரணை நடைபெறுகிறது. எனக்கு ஒலையோடு நிற்குமா அல்லது வேலை போய்விடுமா என்று தெரியவில்லை. பயமாக இருக்கிறது”

அவன் தன்னுடைய ஜாதகத்தை எடுத்துக்கொண்டு வந்திருந்தான். வாங்கிப் பார்த்தேன்.

இதுபோன்ற கேள்விகளுக்கு, தொழில் ஸ்தானமாகிய 10ஆம் இடத்தை லக்கினமாக வைத்துக் கொண்டு, ஜாதகத்தில் உள்ள அமைப்புக்களைப் பார்க்க வேண்டும்.

அவர் மேஷ லக்கினக்காரர். பத்தாம் இடம் மகரம். அதன் அதிபதி, அதாவது பத்திற்கு உரியவன், சனீஷ்வரன், அவன் அந்த வீட்டிற்கு 5ஆம் இடத்தில் திரிகோணமேறி இருந்தான். அதுவும் நட்புவீட்டான ரிஷபத்தில். ஆகவே வேலையில் ஒரு ஸ்திரமும், முன்னேற்றமும் இருக்கும்.

சரி, இப்போது உள்ள பிரச்சினை எதனால்? அது தற்காலிகமானதா? எத்தனை நாட்கள் நீடிக்கும்? எப்போது உய்வு வரும்?

அதற்கு கோள்சாரச் சனியைப் பார்க்க வேண்டும். அதுவும் கேள்விக்குரிய பத்தாம் வீட்டை வைத்தே பார்க்க வேண்டும்.

அன்றையத் தேதியில், சனி சிம்மத்தில் இருந்தார். அது 10ஆம் வீட்டிற்கு எட்டாம் இடம். அதனால்தான் வேலையில் பிரச்சினை. அடுத்த சனிப்பெயர்ச்சி இன்னும் 3 மாதகாலத்தில் நடைபெறவுள்ளது.

ஆகவே நான் சொன்னேன். ”மூன்று மாத காலம் உன்னைப் பணிநிறுத்தம் (suspend) செய்யலாம். அதற்குப் பிறகு உண் பணி அங்கேயே தொடரும். வேலையை விட்டு உன்னைத் தூக்கும் வாய்ப்பு இல்லை”

அதன்படியே நடந்தது.

இதை ஒரு உதாரணத்திற்காகவே சொன்னேன்.

ஆகவே இதுபோன்ற சூழ்நிலைகளில் ஜாதகத்தை ஆராயும் வழிமுறைகளைக் கீழே கொடுத்துள்ளேன்:

1. கோள்சாரச் சனி 10ஆம் இடத்திற்கு, 6, 8 & 12ஆம் வீடுகளில் பயணிக்கும் காலங்களில், வேலை அல்லது தொழிலில் சரிவுகள் ஏற்படலாம். பிரச்சினைகள் உண்டாகலாம்.

2. ஆறாம் வீட்டில் (அந்த வீட்டிற்கு ஆறாம் இடத்தில்)பயணிக்கும் காலத்தில், தொழிலில் போட்டியாளர்கள் உருவாகி, நமக்கு இடைஞ்சலை உண்டாக்கலாம். எதிரிகள் ஏற்படலாம். நமது தொழிலை ஸ்தம்பிக்கச் செய்யலாம். அதே நபர் வேலையில் இருந்தால், அலுவலகத்தில், நமக்கு எதிரானவர்களால், அல்லது நம்மைப் பிடிக்காதவர் களால், பாதிப்புக்கள் உண்டாகலாம். அவப்பெயர் உண்டாகலாம். அந்தக் காலகட்டத்தில் வேலையில் கவனமாக இருக்க வேண்டும்

3. எட்டாம் இடத்தில் (அந்த வீட்டிற்கு எட்டாம் இடத்தில்) சனி சஞ்சாரம் செய்யும் காலங்களில், தொழிலில் சரிவுகள் ஏற்படலாம். தொழிலை மாற்ற நேரிடலாம். தொழிலில் பலவிதமான சிக்கல்கள் (difficulties) ஏற்படலாம். அதே நபர் வேலையில் இருந்தால், அலுவலகத்தில் அவருக்கு இடமாற்றம் ஏற்படலாம். கீழ் நிலைக்குத் தள்ளப்படலாம் (depromotion) அல்லது தண்ணியில்லாக் காட்டுக்கு மாற்றப்படலாம்.

4. பன்னிரெண்டாம் இடத்தில் (அந்த வீட்டிற்கு பன்னிரெண்டாம்  இடத்தில்) சனி சஞ்சாரம் செய்யும் காலங்களில், தொழிலில், விரையங்கள் (Financial losses) ஏற்படலாம். தொழிலைக் கைவிட நேரிடலாம். அதே நபர் வேலையில் இருந்தால், அலுவலகத்தில் சம்பளம் குறைக்கப்படலாம். நமது பணியால், அலுவலில் ஏற்படும் நஷ்டத்திற்கான ஈட்டுத்தொகையை நாம் கட்டும்படி நேரிடலாம். அல்லது வேலையை விட்டே விலக நேரிடலாம்.

பயப்பட வேண்டாம். இவை எல்லாமே பொதுப்பலன்கள். தனிப்பட்ட ஜாதகங்களுக்கு, அவற்றில் உள்ள கிரக நிலைகளை வைத்துப் பலன்கள் மாறுபடும்!

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

12.9.25

Astrology ஒரு வீட்டின் பலம் (Strength of a house)



Astrology ஒரு வீட்டின் பலம் (Strength of a house)

1. வீட்டு அதிபதிகள் பரிவர்த்தனை பெற்று இருத்தல். (exchange of houses) சூரியன் மற்றும் சனீஷ்வரனின் ஆகிய இருவரும்  பரிவர்த்தனை
பெற்றிருத்தல் விதிவிலக்கு. இந்தக் கணக்கில் வராது.
2. வீட்டின் அதிபதி உச்சம் பெற்று இருத்தல்.
3. உச்சம் பெற்ற கிரகம் அமர்ந்திருக்கும் வீடு. (A house occupied by an exalted planet - எந்த கிரகமாயிருந்தாலும் சரி.
4. வீட்டின் இருபுறமும் நன்மை பயக்கக்கூடிய கிரகங்கள் அமர்ந்திருப்பது. (hemmed between two good planets) சுபக்கிரகங்கள்,

மேலே கொடுத்திருக்கும் விதிகள் ஒரு வீட்டின் வலிமையை அதிகப் படுத்துவதாகும். அந்த எட்டு விதிகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட
விதிகளின்படி அமைந்திருக்கும் வீடுகள் வலிமை உடையதாகும்.

முதல் விதிதான் இருக்கும் விதிகளில் அதீத பவரானது. உங்கள் மொழியில் சொன்னால் சூப்பர் பவரானது. மற்றதெல்லாம் அதற்கு
அடுத்ததுதான். அதுவும் 2 to 8 என்று இறங்குமுக வரிசையில் இருக்கும். பலமும் அப்படித்தான் அமையும்.

அதாவது, முதல் விதிப்படி 8 மடங்கு பவர் என்றால், அடுத்த விதிக்கு ஏழு மடங்கு பலம் என்று குறைத்துக்கொண்டே வந்து பலனைப்
பாருங்கள்.
---------------------------------------------------------------------
பலம் எப்போது குறையும் அல்லது இல்லாமல் போகும்?

1. 6, 8 & 12ஆம் வீட்டு அதிபதிகளின் (Owners of inimical houses) பார்வையில் விழும் வீடுகள் வலிமையை இழக்கும்.
2. 6, 8 & 12ஆம் வீட்டு அதிபதிகள் வந்து அமரும் வீடுகளும் (houses occupied by the lord of 6, 8 &12th houses) வலிமையை இழக்கும்
3. ஒரு வீட்டின் அதிபதி  6, 8 & 12ஆம் வீடுகளில் போய் அமர்ந்தாலும், அவர் தன் வலிமையை இழந்து விடுவார். உதாரணம் லக்கினாதிபதி

12ல் அமர்ந்தால் - அது விரைய வீடு - தன் வலிமையை இழந்து விடுவார். அதுபோல எந்த அதிபதி அங்கே அமர்ந்தாலும் தன் வலிமையை
இழந்துவிடுவார். அந்த அமைப்புள்ள ஜாதகனின் வாழ்க்கை அவனுக்குப் பயன் படாது. மற்றவர்களுக்குத்தான் பயன்படும். 

அன்புடன்
வாத்தியார்
===================================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

6.9.25

Astrology: சனீஸ்வரனும் திருமணவாழ்க்கையும்!

Astrology: சனீஸ்வரனும் திருமணவாழ்க்கையும்!

சனீஸ்வரன் ஏழாம் வீட்டிலிருந்து சுய வீடாக இல்லாமலிருந்தால் மணவாழ்க்கை மணக்காது.

சனீஸ்வரன் மகரத்திலிருந்து ஏழாம் வீடானால் கடகலக்னமாகியிருந்தால் திருமண வாழ்க்கை எப்படியிருக்கும்.

ஏழாம் அதிபதி சந்திரனைக் கவனிக்க வேண்டாமா? களத்திரகாரகன் சுக்கிரனின் அமைப்பைப் பார்க்க வேண்டாமா?

அதை எல்லாம் பாருங்கள். அவைகள் நன்றாக இருந்தால் திருமண வாழ்வும் நன்றாக இருக்கும்!

அதேபோல் சனீஸ்வரன் ஏழாம் அதிபதியாகி கும்பத்திலிருந்தால், சிம்மலக்னமானால் மண வாழ்க்கை எப்படியிருக்கும்.

இதற்கும் அதே பலன்தான்!

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

4.9.25

Astrology: பாபகர்த்தாரி யோகத்தின் பலன் 

பாபகர்த்தாரி யோகத்தால் பாதிக்கப்பெறும் வீடுகளுக்கான பொதுப்பலன்கள்

இது ஒரு அவயோகம். அதை முதலில் நினைவில் வையுங்கள்.

ஒரு வீட்டின் இருபுறமும் தீய கிரகங்கள் நின்றால் அதாவது இருந்தால், அந்த வீடு இந்த பாப கர்த்தாரி யோகத்தால் பாதிக்கப்படும்.

1
ஒன்றாம் வீடு - அதாவது லக்கினம் பாபகர்த்தாரி யோகத்தால் பாதிக்கப்பெற்றிருந்தால், அந்த ஜாதகன் அடிக்கடி நோய்வாய்ப்படுவான். விபத்துக்கள் நேரிடும். எப்போதும் ஏதாவது ஒரு மன அழுத்தம் (Tension) இருக்கும்.
2.
இரண்டாம் வீடு: இழப்புக்கள் ஏற்படும். அது பெரும்பாலும் பணம் சம்பந்தப்பட்டதாக இருக்கும். (2nd house is the house of finance and family affairs) குடும்ப வாழ்க்கையில் பிரச்சினைகள் உண்டாகும். குடும்பத்தைவிட்டுப் பிரிந்திருக்க நேரிடும். குடும்பத்தை வைத்து மன அழுத்தங்கள் உண்டாகும்
3.
மூன்றாம் வீடு: மரியாதைக்கு பங்கம் ஏற்படும். உடன்பிறப்புக்களை இழக்க நேரிடும் (Loss of siblings) உடன்பிறப்புக்கள், மற்றும் நண்பர்களுடன் தேவையில்லாத விரோதங்கள் ஏற்படும்.
4.
நான்காம் வீடு: பெற்றோர்களை இழக்க நேரிடும். வாழ்க்கையில் சுகங்களை இழக்க நேரிடும். அமைதியை இழக்க நேரிடும். தண்ணீரில் கண்டங்கள் ஏற்படும்.
5.
ஐந்தாம் வீடு: குழந்தைகளுக்கு, குழந்தைகளை வைத்து ஜாதகனுக்கு சிரமங்கள், கஷ்டங்கள், துன்பங்கள் ஏற்படும். எப்போதும் மன நிம்மதி இருக்காது.
6.
ஆறாம் வீடு: தொழிலில், வேலையில் கஷ்டங்கள் உண்டாகும். விரோதிகளால், விரோதங்களால் அடிக்கடி மனதில் பய உணர்வு மேலோங்கி இருக்கும்.
7.
ஏழாம் வீடு: மனைவி அல்லது கணவன் அடிக்கடி நோய்வாய்ப்படுவான். அவர்களால் சிரமப்பட நேரிடும். அவர்களால் விரையங்கள் ஏற்படும்.
8.
எட்டாம் வீடு: வறுமை நிலவும். கடன்கள் உண்டாகும். நோய்கள் உண்டாகும். சிரமமான வழ்க்கை வாழ நேரிடும். பயணங்கள் அலுப்பை ஏற்படுத்தும்.
9.
ஒன்பதாம் வீடு: தந்தையை இழக்க நேரிடும். வறுமையான சூழல்கள் உண்டாகும். வறுமை வாட்டி எடுக்கும்.
10.
பத்தாம் வீடு: வேலையில், தொழிலில் பல பின்னடைவுகள் ஏற்படும் (There will be set backs in career)
11.
பதினொன்றாம் வீடு: காதுகளில் பிரச்சினைகள் ஏற்படும். கேட்கும் தன்மையில் குறைபாடுகள் உண்டாகும். வீட்டு மாப்பிள்ளையைப் பறிகொடுக்க நேரிடும்.
12
பன்னிரெண்டாம் வீடு: தூக்கமின்மையால் அவதிப்பட நேரிடும். ஆரோக்கியம் கெட்டு மருத்துவமனைக்கு அலைய நேரிடும். பலவிதமான பணச் செலவுகள் ஏற்பட்டு படுத்தி எடுக்கும்.

எல்லாமே பொதுப்பலன்கள். அவரவர்களின் ஜாதகத்தின் தன்மையைப் பொறுத்து இது கூடலாம் அல்லது குறையலாம் அல்லது இல்லாமல் போகலாம். அதையும் மனதில் கொள்ளவும்

என்ன பாடம் பயன் உள்ளதாக இருக்கிறதா?

அன்புடன்
வாத்தியார்
===========================================


வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

3.9.25

Astrology: ஆதி யோகம்! Adhi Yoga

Astrology: ஆதி யோகம்! Adhi Yoga 

புதன், குரு, சுக்கிரன் ஆகிய மூன்று சுபக் கிரகங்களும், ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் இடத்திலிருந்து 6, 7, 8 ஆம் வீடுகளில் இருந்தால், தனித்தனியாகவோ அல்லது சேர்ந்து இருந்தாலோ, அது ஆதியோகம் எனப்படும். அந்த வீடுகள் ஒன்றில் அல்லது இரண்டில் அல்லது மூன்றிலுமே அவைகள் இருந்தாலும் அது இந்த யோகத்தைக் கொடுக்கும்!

பலன்: ஜாதகன் செல்வாக்குடன் இருப்பான். ஆரோக்கியத்துடனும், செல்வங்களுடனும் இருப்பான். நோய், எதிரிகள், பயம் என்று எந்த அவலமும் அவனை அனுகாது!

Adhi Yoga : This is caused if the benefic planets - Mercury, Jupiter and Venus - are situated in the 6th, 7th and 8th houses from the Moon. These planets should be present in any one, two or in all the above-mentioned houses. A native with this Yoga will be very influential, healthy and wealthy. He will possess no fear, disease or enemy.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
”சார், அவற்றில் எனக்கு இரண்டு இருக்கிறது. பாதி யோகம் கிடக்குமா?” என்று யாரும் கேட்க வேண்டாம்! கிடைக்காது.

யானை என்று எழுதுவதற்குப் பதிலாகப் பூனை என்று எழுதிவிட்டேன். இரண்டிலுமே ”னை” என்று இருப்பதால் பாதி மார்க் போடுங்கள் என்று சொல்வதைப் போன்றது அது!

அன்புடன்,
வாத்தியார்
---------------------------------------------------------------------

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

2.9.25

Astrology: அமலா யோகம்! Amala Yoga


Astrology: அமலா யோகம்! Amala Yoga

கோவையில் இருந்து சென்னைக்குப் பயணிக்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். கோவையிலிருந்து சேலம் வரை ஒரு பேருந்திலும், பிறகு சேலத்திலிருந்து கள்ளக்குறிச்சிவரை ஒரு பேருந்திலும், பிறகு கள்ளக்குறிச்சியிலிருந்து விழுப்புரம்வரை ஒரு பேருந்திலும், பிறகு விழுப்புரத்திலிருந்து செங்கல்பட்டுவரை ஒரு பேருந்திலும், அதற்குப்பிறகு அங்கேயிருந்து சென்னைவரை வேறு ஒரு பேருந்திலும் பயணித்தால் பயணம் எப்படியிருக்கும்? அலுத்துவிடாதா?

முறையான பயணம் எப்படி இருக்க வேண்டும்? ஒரு நவீன குளிரூட்டப்பெற்ற வோல்வோ பேருந்தில், இரவு ஒன்பது மணிக்குக் கோவையில் ஏறி, காலை 6 மணிக்குச் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்குச் சென்று இறங்கினால் பயணம் சுகமாக இருக்கும்.

அதைப்போல ஏகப்பட்ட நிபந்தனைகளுடன் உள்ள யோகங்களைவிட, சுருக்கமாக ஒரு வரியில் உள்ள யோகங்கள், ஜோதிடத்தைக் கற்றுக் கொண்டிருப்பவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும்.

இன்று, உங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுப்பதற்காக ஒரு வரி விளக்கத்துடன் உள்ள யோகம் ஒன்றைக் கொடுத்துள்ளேன்.

அந்த யோகம் இருப்பவர்களுக்கு, இரட்டிப்பு மகிழ்ச்சி கிடைக்கும்
---------------------------------------------------------------------
யோகத்தின் பெயர்: அமலா யோகம். அமலா எனும் வடமொழிச்சொல்லிற்கு சுத்தமானது (pure) என்று பொருள்.

யோகத்தின் அமைப்பு: லக்கினத்திலிருந்து பத்தாம் வீட்டில் சுபக்கிரகம் இருக்க வேண்டும். சந்திரராசிக்குப் பத்தாம் வீட்டில் சுபக்கிரகம் இருந்தாலும் இந்த யோகம் உண்டு

பலன்: ஜாதகனின் வாழ்க்கை வளமாக இருக்கும். ஜாதகன் பெயர், புகழுடன் இருப்பான். நிறைய பொருள் ஈட்டுவான். நல்ல ஆண் வாரிசுகளை உடையவனாக இருப்பான்.

அன்புடன்
வாத்தியார்
==========================================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

1.9.25

Astrology: அமரக் யோகம்! Amarak Yoga


Astrology: அமரக் யோகம்! Amarak Yoga 
 
அமரக் என்றால் பானி பூரி, பேல் பூரி போல ஏதோ தின்பொருள் - சாட் அயிட்டம் என்று நினைக்கவேண்டாம். அமரக் என்னும் வடமொழிச்சொல் ஒரு வித அணிகலனைக் குறிக்கும். மயில்பதக்கம் போன்ற தோற்றமுடைய அணிகலனாம்.

பதிவை முழுதாகப் படித்தால், அதை நீங்களும் ஒத்துக்கொள்வீர்கள்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஏழாம் வீட்டதிபதி ஒன்பதாம் வீட்டிலும், ஒன்பதாம் வீட்டதிபதி ஏழாம் வீட்டிலும், இடம் மாறி அமர்ந்திக்கும் நிலைமையே இந்த அமரக் யோகத்தைக் குறிக்கும். மாறி அமர்ந்ததோடு அல்லாமல் வலுவாக வேறு இருக்க வேண்டுமாம். அதாவது ஆட்சி, அல்லது உச்சம் அல்லது அஷடகவர்க் கத்தில் 5ம் அல்லது மேற்பட்ட பரல்களையும் பெற்றிருக்க வேண்டும்

பலன்: ஏழாம் வீட்டோடும் பாக்கிய ஸ்தானத்தோடும் சம்பந்தப்பட்ட யோகம் இது. இந்த யோகம் உள்ள ஜாதகனுக்கு, டக்கராக மனைவி கிடைப்பாள். சினிமாவை வைத்து உதாரணம் சொல்ல விருப்பமில்லை. இதற்கு உதாரணம் சொன்னால், ராமனுக்கு ஒரு சீதை கிடைத்ததைப்போல அல்லது லெட்சுமணனுக்கு ஒரு ஊர்மிளா கிடைத்ததைப் போல அற்புதமான மனைவி கிடைப்பாள்.

அவளைப் பார்த்துப் பார்த்து ஜாதகன் மகிழலாம். வயதானா பிறகும் அருகில் வைத்துக் கொஞ்சலாம். ’உனக்காக நான், எனக்காக நீ’ என்று வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். Made for each other என்று போடுகிறார்களே அப்படியொரு அம்சம் வாழ்க்கையில் இருக்கும்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சார், எனக்கு இந்த அமைப்பு இருக்கிறது. ஆனால் ஒரு கிரகம் ஊற்றிக்கொண்டு விட்டது அதாவது, நீசமாகிவிட்டது - வக்கிரமாகிவிட்டது - அஸ்தனமாகிவிட்டது - கிரகயுத்ததில் உள்ளது - ஆகவே இதில் பாதி அம்சத்தோடாவது ஒரு மனையாள் கிடைப்பாளா? என்று யாரும் கேட்க வேண்டாம். ஜோதிட விதிகளை நமக்காக நாம் மாற்றிக்கொள்ள முடியாது. அதை மனதில் வையுங்கள். இருந்தாலும் சந்தோஷம். இல்லையென்றாலும் சந்தோஷம். நம் முகத்தை ஒரு முறை கண்ணாடியில் பார்த்து மனதைத் தேர்த்திக்கொள்ள வேண்டியதுதான்.

அன்புடன்
வாத்தியார்
=======================================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

31.8.25

Astrology: அரிஷ்ட யோகம் (படுக்கவைக்கும் யோகம்) Arishta Yoga

Astrology: அரிஷ்ட யோகம் (படுக்கவைக்கும் யோகம்) Arishta Yoga 

நாமாகப் படுத்தால் அதற்கு அர்த்தம் வேறு. வேறு யாராவது அல்லது வேறு ஏதாவது சூழ்நிலையில் நாம் படுக்க நேர்ந்தால் அதன் பொருள் வேறு.

நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் நம்மைப் படுக்க வைக்கும் யோகங்கள் உள்ளன. அவற்றைப் பற்றிய பாடம் கீழே உள்ளது.

இவைகள் பொது விதிகள். தனிப்பட்டவர்களின் ஜாதகங்களுக்கு, சுபக்கிரகங்களின் அமைப்பை வைத்துப் பலன்கள் மாறுபடும். ஆகவே அவசரப்பட்டு முடிவிற்கு வராதீர்கள். அதேபோல ஹோம் ஒர்க் நோட்டு புத்தகத்தைத் தூக்கிக் கொண்டு வந்து, என்னுடைய ஜாதகத்தை வைத்து இதற்கு விளக்கத்தை எழுதிக்கொடுங்கள் சார் என்று யாரும் கேட்காதீர்கள். உங்களுக்கு நீங்களே ருங்கள். இவை எல்லாம் மேல் நிலைப் பாடங்கள். அதை நினைவில் வையுங்கள்!
----------------------------------------------------------
அரிஷ்ட என்பது வடமொழிச்சொல். அது தீங்கு (evil) என்று பொருள்படும்.

அரிஷ்டயோகம் என்பது தீங்கை விளைவிக்கக்கூடிய தன்மையையுடைய யோகம் என்று பொருள்படும். அதேபோல ஆபத்தானது என்றும் பொருள் படும்.

உதாரணத்திற்குப் ‘பாலஅரிஷ்டம்’ என்பது பால + அரிஷ்ட = குழந்தைக்கு ஆபத்தை விளவிக்கக்கூடிய என்று பொருள்படும்
+++++++++++++++++++++++++++++++++++++++++
அரிஷ்ட யோகம் 1
(அவயோகம்தான்)
தீங்கை விளைவிக்கக்கூடிய கிரக அமைப்பு!

1
லக்கின அதிபதி, 6, 8, அல்லது 12ஆம் அதிபதிகள் எவரேனும் ஒருவருடன் கூட்டணி போட்டிருந்தாலும் அல்லது பார்வையில் இருக்க நேர்ந்தாலும், ஜாதகனுக்கு இந்த யோகம் உண்டு.

பலன்: ஜாதகன் தன்னுடைய உடல் ஆரோக்கியம் கெட்டு அவதிப்படுவான்.

Arishta Yoga:
The Lagna lord is in conjunction or mutual aspect with the 6th, or the 8th, or the 12th house lords (If the lords of the 2nd and 7th houses are involved the effects are more severe).

Result : The person will suffer from bad health (the planets that constitute this Yoga will give more specific information)
-----------------------------------------------------------------
2.
எட்டாம் வீட்டு அதிபதி 12ஆம் வீட்டுக்காரனுடன் கூட்டணி போட்டிருந்தாலும் அல்லது அவனுடைய பார்வையைப் பெற்றிருந்தாலும், ஜாதகனுக்கு இந்த யோகம் உண்டு.

பலன்: ஜாதகன் தன்னுடைய உடல் ஆரோக்கியம் கெட்டு அவதிப்படுவான்.

Arishta Yoga The 8th house lord is conjunct or in mutual aspect with the lord of the 12th house lord (If the lords of the 2nd and 7th houses are involved the effects are more severe).

Result : The person will suffer from bad health (the planets that constitute this Yoga will give more specific information).
--------------------------------------------------
அன்புடன்,
வாத்தியார்



30.8.25

Astrology: அஷ்டலெட்சுமி யோகம்! Ashtalakshmi Yoga

Astrology: அஷ்டலெட்சுமி யோகம்! Ashtalakshmi Yoga 

அஷ்டலெட்சுமி யோகம் என்பது குரு கேந்திர வீடுகள் ஒன்றில் இருந்து (அதாவது 1, 4, 7, 10ஆம் வீடுகள் ஒன்றில்), அத்துடன் ஆறாம் வீட்டில் ராகுவும் இருந்தால் இந்த யோகம் உண்டாகும்.

பலன்: ஜாதகனுக்கு தனிப்பட்ட பெயர், புகழ், வளர்ச்சி, உயர்ச்சி, அமைதி, மகிழ்ச்சி, எதையும் அனுபவிக்கும் பாக்கியம் அனைத்தும் கிடைக்கும்

Ashtalakshmi yoga is formed when Jupiter is in 1st,, 4th, 7th and 10th house and Rahu in 6th house. Ashtalakshmi yoga will give the individual name,fame, prosperity, and peaceful, enjoyment in life.

எட்டு மடங்கு யோகம் என்பார்கள் Yoga for the Eightfold Prosperity (Ashta Laksmi Yoga )

If the North Node ( Rahu ) is in the 6th And if Jupiter is angular Then this Yoga is formed. This combination for Eightfold Prosperity!

இதைக்குறிப்பிடும் ஜோதிட ஸ்லோகம் This is the sloka for Ashtalakshmi Yoga

சஷ்ட ஸ்தான கதே ராகு
லக்ன கேந்த்ர கதே குரு
அஷ்டலக்ஷ்மி சமயுக்தம்
மத்யவான் கீர்த்திமான் நர!

Shashta Sthana Gathe Rahu ( Rahu in the 6th )
Lagna Kendra Gathe Guru ( Jup angular )
Ashtalakshmee Samayuktham
Madhyavan Keerthiman Nara.
+++++++++++++++++++++++++++++++++++++
எட்டு மடங்கு யோகம் என்பது அஷ்ட லெட்சுமிகளைக் குறிக்கும் 
அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++++



29.8.25

Astrology: அனபா யோகம் Anapha Yogam

Astrology: அனபா யோகம் Anapha Yogam 

அனபா என்பதற்குத் தமிழில் அருஞ்சொற் பொருளைத் தேடாதீர்கள். அது வடமொழிச் சொல். அதை அப்படியே எடுத்துக்கொள்ளூங்கள்

அனபா யோகம்:
சந்திரன் இருக்கும் வீட்டிலிருந்து அதற்குப் 12ஆம் வீட்டில் (அதாவது சந்திரனுக்குப் பின்புறம் உள்ள ராசியில்) செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ஆகிய ஐவரில் ஒருவர் இருந்தால் அது இந்த யோகம்
----------------------------------------------------------------
பொதுப்பலன்:
ஜாதகன் நல்ல தோற்றத்தை உடையவனாக இருப்பான். பெருந்தன்மை உடையவனாக இருப்பான். மென்மையானவனாக இருப்பான். சுயமரியாதை உடையவனாக இருப்பான். வயதான காலத்தில் ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொள்வான்
---------------------------------------------------------------
Anapha yoga: If there are planets in the twelfth from the moon, Anapha yoga is caused. A planet other than the Sun occupying the 12th house from the Moon constitutes Anapha yoga. It indicates a person who is of good appearance, generous, polite, self -respecting and moves into spiritual life at a later stage. One born in Anapha Yoga will be eloquent in speech, magnanimous,virtuous, will enjoy food, drink, flowers, robes and females, will be famous, calm in disposition, happy, pleased and will possess a beautiful body.
-------------------------------------------------------------------
தனிப் பலன்கள்

1.சந்திரனுக்குப் பன்னிரெண்டில் செவ்வாய் இருந்தால்: ஜாதகன் வலிமையானவன். அதிகாரமுள்ளவன். சுயகட்டுப்பாடு உள்ளவன்.

2.சந்திரனுக்குப் பன்னிரெண்டில் புதன் இருந்தால்: சிறந்த பேச்சாளனாக இருப்பான். கலைகளின் நுட்பம் தெரிந்தவனாக இருப்பான்.

3.சந்திரனுக்குப் பன்னிரெண்டில் குரு இருந்தால்: ஜாதகன் தீவிர சிந்தனை, செயல்களை உடையவனாக இருப்பான். தர்ம சிந்தனை மிக்கவனாக இருப்பான். தன்னுடைய செல்வத்தை அறவழிகளில் பயன்படுத்துவான். அதாவது பல தர்மங்களைச் செய்வான்.

4.சந்திரனுக்குப் பன்னிரெண்டில் சுக்கிரன் இருந்தால்: ஜாதகன் பெண்பித்தனாக இருப்பான். அதிகாரத்தில் இருப்பவர்களின் தொடர்பு உள்ளவனாக இருப்பான்

5. சந்திரனுக்குப் பன்னிரெண்டில் சனி இருந்தால்: ஜாதகன் எதிலும் பிடிப்பு இல்லாதவனாக இருப்பான். பற்று இல்லாதவனாக இருப்பான்.

(ராகு அல்லது கேது இருந்தால்: ஜாதகன் இயற்கையான விஷயங்களுக்கு எதிராக நடப்பவனாக இருப்பான். அவற்றில் பற்று உள்ளவனாக இருப்பான்)

எல்லாம் பொதுப்பலன்கள்!

எல்லாக் கிரகங்களையும், தங்கள் ஜாதகத்துடன் சேர்த்துக் குழம்பு வைப்பதற்கு இதில் வேலை இல்லை.

அதேபோல, நல்ல தோற்றம் என்று எழுதியுள்ளீர்களே? அரவிந்தசாமி மாதிரியா அல்லது அஜீத் மாதிரியா என்று யாரும் கேட்கவேண்டாம். அது அங்கே அமரும் கிரகத்தின் உச்சம், நீசம், பகை, பரல்கள் என்பது போன்ற மற்றவிஷயங்களுடன் சம்பந்தப்பட்டதாகும்.

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

28.8.25

Astrology: ஆர செளரி யோகம்! Ara Sauri Yoga Lesson ]

Astrology: ஆர செளரி யோகம்! Ara Sauri Yoga Lesson ]

யோகத்தைத் தெரிந்து கொள்ளும் முன் அதன் பெயர் விளக்கத்தைத் தெரிந்துகொள்வோம். ஆர என்னும் வட மொழிச் சொல்லிற்கு நேரடி விளக்கம் இல்லை. ஆரண்யம் (காடு) என்பதன் சுருக்கம் என்கிறது ஒரு நூல்.

செளரி என்பதற்கு சனி என்று பொருளாம்.

சரி எப்படி எடுத்துக்கொள்வது?

எதெது எங்கே இருக்க வேண்டுமோ, அங்கே இருப்பது நல்லது. நம்மைக் கொண்டுபோய்க் காட்டில் விட்டால் என்ன ஆகும்? கிறுக்குப் பிடித்துவிடாதா?

அதுபோல காட்டில் இருக்க வேண்டிய ஒரு சிறுத்தையை வீட்டில் கொண்டு வந்து விட்டால் என்ன ஆகும்? சும்மா விடாமல் ஒரு கரடியுடன் சேர்த்துவிட்டால் என்ன ஆகும்?

அது போன்ற நிலைமைதான் ஆகும்போல உள்ளது, இந்த யோகத்தால்.
----------------------------------------------------------------
சனி மற்றும் செவ்வாய் ஆகிய இரண்டு கிரகங்களின் சேர்க்கையால் அல்லது கூட்டணியால் எற்படுவதுதான் இந்த ஆர செளரி யோகம்!

பலன்: சொல்லும்படியாக இல்லை. ஜாதகனுக்குப் பலவிதமான கேடுகள் ஏற்படும்.

Planetary combination between Saturn and Mars. It produces serious afflictions.
-----------------------------------------------------------------
என்னவிதமான கேடுகள்?

சனி இரண்டு வீடுகளுக்கு உரியவன், செவ்வாயும் இரண்டு வீடுகளுக்கு உரியவன். இருவரும் மூன்று காரகத்துவங்களுக்கு அதிபதி (authorities for different portfolios). அவை அத்தனையும் கெடும்.

என்னென்ன கெடும்? இது மேல் நிலைப் பாடம். ஆகவே அதை உங்கள் சிந்தனைக்கே விட்டு விடுகிறேன்.

எல்லோருக்குமா?

இல்லை!

வழக்கம்போல, அவர்கள் மீது விழும் சுபக்கிரகங்களின் பார்வை அல்லது சேர்க்கை, அதோடு அவர்களின் சுயவர்க்கப்பரல்கள், இருக்கும் இடத்தின் மொத்த வர்க்கப் பரல்கள் ஆகியவற்றை வைத்து ஜாதகத்திற்கு ஜாதகம் அது வேறுபடும்.

உதாரணம்?

இது off the record உதாரணம். படித்துவிட்டு மறந்து விடுங்கள்.

ஐந்து அல்லது ஆறு லார்ஜ் விஸ்கியைக் கல்ப்’பாக அடிப்பதற்கும், தண்ணீர் அல்லது சோடா கலந்து அடிப்பதற்கும் உள்ள வித்தியாசம். அல்லது விஸ்கியை ரம் அல்லது பிராந்தியுடன் கலந்து அடிப்பதைப் போன்றது. விஸ்கி எப்படியும் கேடு செய்யும். கலக்காமல் அடித்தால் அதிகக்கேட்டைச் செய்யாதா?

உங்களுக்கு உங்கள் மொழியில் சொன்னால் புரியும் என்பதனால் இதை எழுதியுள்ளேன். மற்றபடி எனக்கு அந்தப் பழக்கம் கிடையாது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்:-))))

இந்த அமைப்பு உள்ளவர்கள் கவலைப்பட வேண்டாம். நஷ்ட ஈடு வழங்கப்பெற்றிருக்கும். ஏனென்றால் ஆண்டி முதல் அரசன் வரை அல்லது ஆட்சியாளர்கள்வரை அனைவருக்கும் 337தான் மதிப்பெண். அதை நினைவில் வையுங்கள்!

அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------------

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

25.8.25

Astrology ஹம்ஸ யோகம்


Astrology ஹம்ஸ யோகம்
Hamsa Yogam
குரு - குரு பகவானை மட்டுமே வைத்து வருவது இந்த யோகம்.
குரு தனது சொந்த வீடுகளில் இருந்தாலும் அல்லது ஜாதகத்தில் உச்சம் பெற்று கடக ராசியில் இருந்தாலும் அல்லது ஜாதகனின் கேந்திர வீடுகளில் இருந்தாலும் இந்த யோகம் உண்டு.
------------------------------------------------------
வகுப்பறை புத்திசிகாமணி!:
”சார், குரு நீசம் பெற்று, அது கேந்திரமாக இருந்தாலும் பலன் உண்டா?”
“இல்லை! நீசம் பெற்றால் totally out.ஆகவே இல்லை!”
-------------------------------------------------------
என்ன பலன்?
ஜாதகன் மிகுந்த அதிர்ஷ்டசாலியாக இருப்பான்.
வாழ்க்கையின் எல்லா நலன்களும் அவனைத் தேடி வரும்.
இறை நம்பிக்கை உள்ளவனாக இருப்பான்.

சுருக்கமாக ஆங்கிலத்தில்:
Hamsa yoga: Jupiter in its own sign or in exaltation, and in a kendra house, the native will be religious minded and very fortunate.

அன்புடன்,
வாத்தியார்.

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

22.8.25

Astrology: பத்ரா யோகம்

Astrology: பத்ரா யோகம்
Badra Yogam

புதன் - புதனை மட்டுமே வைத்து வருவது இந்த யோகம்.
புதன் தனது சொந்த வீடுகளில் இருந்தாலும் அல்லது ஜாதகத்தில் உச்சம் பெற்று கன்னிராசியில் இருந்தாலும் அல்லது ஜாதகனின் கேந்திர வீடுகளில் இருந்தாலும் இந்த யோகம் உண்டு.
------------------------------------------------------
வகுப்பறை புத்திசிகாமணி!:
”சார், புதன் நீசம் பெற்று, அது கேந்திரமாக இருந்தாலும் பலன் உண்டா?”
“இல்லை! நீசம் பெற்றால் totally out.ஆகவே இல்லை!”
-------------------------------------------------------
என்ன பலன்?
ஜாதகன் அதி புத்திசாலியாக இருப்பான்.
அறிவுஜீவியாக இருப்பான். அறிவு ஊற்றெடுக்கும்!
அதிகம் கற்றவனாக இருப்பான்.கல்வியில் அல்லது சொந்த அனுபவத்தில்!
வேறு அமைப்புக்களால் முறையான கல்வி கற்கும் வாய்ப்புக் கிடைக்காமல் போயிருந்தாலும் தனது சொந்த முயற்சியால் பல புத்தகங்களையும் கற்றுத் தேறியிருப்பான்.
செல்வந்தனாக இருப்பான். அல்லது தன் முயற்சியால் செல்வத்தைத் தேடிப் பிடிப்பான்.

இந்த யோகத்தை சுருக்கமாக ஆங்கிலத்தில் கீழே கொடுத்துள்ளேன்:

Bhadra yoga: Mercury in its own sign or in exaltation, and in a kendra house, the native will be intellectual, learned and rich.

அன்புடன்,
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

21.8.25

Astrology ருச்சகா யோகம்

Astrology ருச்சகா யோகம்!
Ruchaga Yogam
----------------------------------
செவ்வாய் - செவ்வாயை மட்டுமே வைத்து வருவது இந்த யோகம்.
செவ்வாய் தனது சொந்த வீடுகளில் இருந்தாலும் அல்லது ஜாதகத்தில் உச்சம் பெற்று மகரராசியில் இருந்தாலும் அல்லது ஜாதகனின்
கேந்திர வீடுகளில் இருந்தாலும் இந்த யோகம் உண்டு.
------------------------------------------------------
வகுப்பறை புத்தி சிகாமணி!:

”சார், செவ்வாய் நீசம் பெற்று, அது கேந்திரமாக இருந்தாலும் பலன் உண்டா?”
“இல்லை! நீசம் பெற்றால் totally out.ஆகவே இல்லை!”
-------------------------------------------------------
என்ன பலன்?

ஜாதகன் துணிச்சலானவன்.எதிலும் வெற்றி காண்பவன். சிலர் இரக்கமில்லாமல் அரக்க குணமுடையவர்களாகவும் இருப்பார்கள்
----------------------------
அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

20.8.25

Astrology: யோகங்கள்

Astrology: யோகங்கள்
ருச்சகா யோகம்!
Ruchaga Yogam
----------------------------------
செவ்வாய் - செவ்வாயை மட்டுமே வைத்து வருவது இந்த யோகம்.
செவ்வாய் தனது சொந்த வீடுகளில் இருந்தாலும் அல்லது ஜாதகத்தில் உச்சம் பெற்று மகரராசியில் இருந்தாலும் அல்லது ஜாதகனின்
கேந்திர வீடுகளில் இருந்தாலும் இந்த யோகம் உண்டு.
------------------------------------------------------
வகுப்பறை புத்தி சிகாமணி!:

”சார், செவ்வாய் நீசம் பெற்று, அது கேந்திரமாக இருந்தாலும் பலன் உண்டா?”
“இல்லை! நீசம் பெற்றால் totally out.ஆகவே இல்லை!”
-------------------------------------------------------
என்ன பலன்?

ஜாதகன் துணிச்சலானவன்.எதிலும் வெற்றி காண்பவன். சிலர் இரக்கமில்லாமல் அரக்க குணமுடையவர்களாகவும் இருப்பார்கள்
----------------------------
அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

19.8.25

Astrology: யோகங்களின் முக்கியத்துவம்!

Astrology: யோகங்களின் முக்கியத்துவம்! 

சில ஜாதகங்களை அலசும்போது, ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளை வைத்து, அது சராசரி ஜாதகம் போல தோன்றும். ஆனால் உண்மை நிலை மாறாக இருக்கும். ஜாதகர் பிரபலமானவராக இருப்பார். நமது கணிப்பு தவறாகிவிடும்.

முன்பு வகுப்பறையில் புதிர் எண்.95ல் கொடுத்திருந்த ஜாதகமும் அந்த வகையைச் சேர்ந்ததுதான்.

ஜாதகர் உலகில் உள்ள மிகப் பெரிய பணக்காரர்கள் மூவரில் ஒருவர். அதைச் சொன்னால்தான்தான் தெரியும்.

ஆனால் ஜாதகத்தைச் சட்டென்று பார்த்தால் தெரியாது. குழப்பும். ஆமாம் இரண்டில் உள்ள சனீஷ்வரன் குழப்புவார்.

விருச்சிக லக்கின ஜாதகர்.லக்கினாதிபதி செவ்வாய் எட்டில்! பாக்கியநாதன்  (9th Lord) சந்திரன் நீசம். இரண்டில் (தன ஸ்தானத்தில்) சனி மூன்று நிலைப்பாடுகளுமே சரியில்லை

சுகாதிபதி சுக்கிரன் நீசம் (ஆனாலும் அவன் உச்சமான புதனுடன் சேர்ந்து நீசபங்க ராஜ யோகத்துடன் இருக்கிறான்) இரண்டில் சனி இருந்தாலும், அந்த வீட்டின் மேல் அதன் அதிபதியும், தனகாரகனுமான குருவின் பார்வை உள்ளது.

ஆகவே ஓரளவு நிதித் தட்டுப்பாடு இல்லாத ஜாதகம் என்று சொல்லத் தோன்றும். ஆனால் ஜாதகர் மிகப் பெரிய செல்வந்தரானது எப்படி?

ஜாதகத்தில் 26 யோகங்கள் உள்ளன. அவை அனைத்தும் வேலை செய்து ஜாதகரை செல்வத்தின் உச்சத்திற்குக் கொண்டு சென்றன.

யோகங்களின் முக்கியத்துவம் அப்போதுதான் நமக்குப் பிடிபடும்

ஜாதகர் யார் தெரியுமா?

வாரன் பஃபெட் (Warren Buffet) உலகின் இரண்டாவது பெரிய பணக்காரர்.

இந்த ஜாதகத்தை இன்னொரு நாள் விரிவாக அலசுவோம்.

இப்போது சொல்ல வந்த செய்திக்கு வருகிறேன்.

யோகங்களைப் பற்றியும், அதாவது முக்கியமான யோகங்களைப் பற்றி நாம் அறிந்து வைத்திருப்பது அவசியம்.

ஆகவே யோகங்களைப் பற்றி அவ்வப்போது எழுதலாம் என்றுள்ளேன். யோகங்களைப் பற்றிய சில பாடங்களைப் படிக்கும்போது முன்பே படித்ததாகத் தோன்றலாம். புதிதாக நிறையப் பேர்கள் வந்துள்ளார்கள். அவர்கள் படிக்க வேண்டும் என்பதற்காக எழுதுகிறேன். முன்பே படித்த நினைவு வந்தால், தவறில்லை, மீண்டும் ஒருமுறை படியுங்கள்!

அன்புடன்
வாத்தியார்
======================================

16.8.25

Astrology: விபரீத ராஜயோகம்

Astrology: விபரீத ராஜயோகம் 

(Reversal of Fortune)

அதென்ன ஸ்வாமி விபரீதம்?

விபரீதம் என்பது சாதாரணமாக இல்லாததும், தவறானதும் ஆகும். விசித்திரமானதாகும்

நடக்கக்கூடாதது நடந்துவிட்டால், அதுவும் இயற்கைக்கு மாறாக நடந்துவிட்டால் 
அதை விபரீதம் என்போம். அதைப்போல கிடைக்கூடாத ராஜயோகம் விபரீதமாகக் 
கிடைத்து விட்டால் அது விபரீத ராஜயோகம்!

அது ஜாதகத்தில் எப்படி ஏற்படும்? அதன் பலன் என்ன?

விபரீத ராஜயோகம் என்பது வழக்கமான ராஜயோகங்களில் இருந்து மாறுபட்டது.

எப்படி மாறுபட்டது?

அனுஷ்கா சர்மா அல்லது பிரியா மணி போன்ற அழகான பெண்ணை நீங்கள் தேர்வு செய்து, கெஞ்சிக்கூத்தாடி,சம்மதிக்க வைத்து, நீங்கள் திருமணம் செய்து கொண்டால், அது  வழக்கமான ராஜ யோகம்

ஆனால், அதே அனுஷ்கா சர்மா அல்லது பிரியா மணி போன்ற அழகான பெண்கள், அவர்களாகவே முன்வந்து, உங்களிடம் கெஞ்சிக்கூத்தாடி, மன்றாடி, உங்களைத் திருமணம் செய்து கொண்டால் அது விபரீத ராஜயோகம்

இன்னும் விளக்கமாகச் சொன்னால், பிரிட்டீஷ்  அரச குடும்பத்தினரே முன் வந்து அவர்கள் வீட்டுப் பெண்ணை,உங்களுக்குத் தாரை வார்த்துக்  கொடுப்பதாகச் சொன்னால், அது விபரீத ராஜ யோகம்.

உதாரணங்கள் போதுமா?




மிதுன லக்கின ஜாதகத்தின் 12ஆம் வீட்டில் சுக்கிரனும், சனியும் ஒன்றாக இருக்கிறார்கள் 
என்று வைத்துக் கொள்ளுங்கள். களத்திரகாரகன் சுக்கிரன் 12ல் மறைந்து, உரிய நேரத்தில் 
திருமணமாவதும் தடைபட்டு, விரும்பும் அளவிற்கு ஒரு மங்கை நல்லாளும் ஜாதகனுக்குக்
கிடைக்கவில்லை என்று வைத்துக் கொள்ளூங்கள். அப்படிப்பட்ட நேரத்தில், ஜாதகனின் 
எட்டாம் வீட்டு அதிபதி சனி 12ல் இருப்பதால் (ஒரு துஷ்ட ஸ்தானத்தின் அதிபதி இன்னொரு
துஷ்ட ஸ்தானத்தில் அமர்வது) அவர் சுக்கிரனின் பென்டை நிமிர்த்தி, ஜாதகனின் திருமணத்தை 
உரிய நேரத்தில் நடத்தி வைப்பதுடன், மயக்கும் அழகுள்ள மங்கையையும் அவனுக்குப் பிடித்துக் 
கொடுத்து விடுவார்.அதுதான் விபரீத ராஜயோகம்

பெண்ணை உதாரணமாகச் சொன்னால்தான் சிலருக்கு மண்டையில் சுறுசுறுப்பாக ஏறும் என்பதற்காக இதைச் சொன்னேன்.

பணம், வேலை, பதவி, செல்வாக்கு என்று எதற்கு வேண்டுமென்றாலும் இந்த யோகம் ஒத்துவரும். அது அங்கே போய் அமரும் துஷ்டனையும், அவன் அடித்து வீழ்த்தும் சம்பந்தப்பட்ட அதிபதி அல்லது காரகனையும் பொறுத்து உண்டாகும்.

ஒரு துஷ்ட ஸ்தானத்தின் அதிபதி, மற்றொரு துஷ்ட ஸ்தானத்தில், ஒரு துஷ்டனுடன் அமர்ந்திருந்தால் இந்த யோகம் உண்டாகும்.

அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

14.8.25

Astrology: குழந்தை பாக்கியத்திற்கான அஷ்டகவர்க்க ஃபார்முலா இதுதான்.

Astrology: குழந்தை பாக்கியத்திற்கான அஷ்டகவர்க்க ஃபார்முலா இதுதான்.

5ஆம் வீடு
5ஆம் அதிபதி இருக்கும் இடம்
காரகன் குரு இருக்கும் இடம்
ஆகிய மூன்று வீடுகளும்
28 பரல்களுக்கு மேல் இருக்கவேண்டும்
இருந்தால் உடனே குழந்தை பிறக்கும்

இல்லையென்றால்?

அந்த மூன்று வீடுகளில் ஒரு வீட்டிலாவது 28ற்கு மேற்பட்ட பரல்கல்கள் இருக்க வேண்டும்.
அப்படியிருந்தால் தாமதமாகக் குழந்தை பிறக்கும்!

எப்போது பிறக்கும்?

ஐந்தாம் அதிபதி அல்லது காரகன் அல்லது லக்கினாதிபதி ஆகியவர்களின் தசாபுத்தியில் பிறக்கும்.

மூன்று வீடுகளிலுமே நீங்கள் சொல்லும் 28 பரல்கள் இல்லையென்றால்?

அவசரப்படவேண்டாம். 25 முதல் 28 பரல்களுக்குள் இருக்கலாம். சற்றுத்தாமதமாகப் பிறக்கும்.

மூன்று வீடுகளுலும் 25 பரல்கள் இல்லை - அதற்குக் கீழான பரல்கள்தான் உள்ளன என்றால்?

கணவன் அல்லது மனைவி இருவரில் ஒருவருக்கு அந்த வீடுகள் நன்றாக இருந்தால் போதும். அவரை வைத்து - அவருக்காகப் பிறக்கும்!

இருவருக்குமே அப்படியில்லையென்றால்?

கஷ்டம்தான். இறைவனை வழிபடுவதைத் தவிர வேறு வழியில்லை! பூர்வ புண்ணியத்தைச் சொல்லும் திறமை எந்த ஜோதிடனுக்கும் இல்லை. பூர்வ புண்ணிய பலனால் (மேலும் இறைவழிபாட்டால்) எல்லாவற்றையும் பொய்யாக்கிவிட்டுக் குழந்தை பிறக்கும்.

காசில்லாத பரிகார ஸ்தலம் எது?

ராமேஸ்வரம்!

Okayயா?

நட்புடன்
வாத்தியார்

(திருமணமாகாதவர்கள் இந்தப் பாடத்தைப் படித்துவிட்டுக் குழம்ப வேண்டாம். பெண் பார்க்கும்போது மகேந்திரப் பொருத்தம் பார்த்து, அது பொருந்துகின்ற பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளுங்கள்.)

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!