மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label Lessons 291 - 300. Show all posts
Showing posts with label Lessons 291 - 300. Show all posts

20.1.10

Doubt: எப்போது பயணம் தாமதமாகும்?

ஒன்றுமில்லை! ஸ்பைடர்மேன் தன் குடும்பத்தினருடன்
நடைப் பயிற்சி மேற்கொண்டுள்ளார்!


++++++++++++++++++++++++++++++++++++++++++++
Doubt: எப்போது பயணம் தாமதமாகும்?

Doubts: கேள்வி பதில் பகுதி 15

நீங்களும் உங்கள் சந்தேகங்களும் - பாடம் எண் பதினைந்து!

Question & answer session
கேள்வி பதில் வகுப்பு
----------------------------------------------------
email.No.59
எழில் அரசன்

Dear Sir,

1.You have said in your lessons that if a house has got more parals (eg-30 and above) then that house benefits will be good. Ascendant will receive all the factors concerned to that house.
One doubt sir, If the house lord or the kargan receives less suyavargam points e-g 3 will the ascendant still receive the benefits of the house? Suppose for example 4th house has 31 parals and the house lord has less points e-g 3 points in suyavargam,then also ascendant will get the benefits of 4 house?( Education, vehicle, property, mother) Same for example when the Karagan is also has less suyaparals (e-g 3 points) and the house is having more than 30 parals.(e.g. Budan is karagan for studies, and if he gets 2 point in his suyavargam.and 4th house more than 31 parals ) Will the ascendant will get good studies?

ஒரு வீட்டில் அதிகமாகப் பரல்கள் இருந்து, அதன் அதிபதியும், அதற்கான காரகனும் குறைவான சுயவர்க்கப் பரல்களுடன் இருந்தால் என்ன ஆகும்? பஸ் நன்றாக இருக்கிறது. ஓட்டுனர் திறமையானவர் இல்லை, சாலையும் சரியாக இல்லை என்றால் என்ன ஆகும்? அதுதான் நடக்கும். பயணம் தாமதமாகும். அதுபோல அந்த வீட்டிற்கான பலன்கள் தாமதமாகும். சிலருக்குப் பலன்கள் உரிய காலத்தில் கிடைக்காமலும் போகலாம்!

2. Sir, who is the kargan for ancestral property.
(9 Th house is related to Bhagyam, Father& ancestral properties, charity etc) who is the karagan for this. Is it suryan sir?

ஆமாம்! சூரியன்தான் பூர்வீகச் சொத்துக்களுக்கான காரகன் (authority)!
-------------------------------------------
email.No.60
ராமசுப்பிரமணியன்

Dear Sir,

1. I have seen one rasi chart dhanshu lagnam,lagnapathi in guru in his exalted house (katagam).But in navmsam guru is in makaram in his debilitated house.Guru has 6 parals in birth chart.So how he will give result?

நவாம்சத்தில் நீசம் பெற்றாலும், சுயவர்க்கத்தில் 6 பரல்களுடன் இருப்பதால் நல்ல பலன்களைத் தருவார்.இல்லையென்றால் சுயவர்கப்பரல்களுக்கு அர்த்தம் என்ன? அதை அவருடைய தசா/புத்தியில் தருவார்!

2.In rasi chart Venus(10th house lord) with sun(lagna lord) in 10th house.Saturn having 7th dristi to that house.And 9th house has ragu and mercury ;11th house has mandi.Venus has 3 parals in birth chart.Saturn has 4 parals.Astavarga of 10th house is 27.But in navamsam venus in his debilitated house (with guru 5th dristi).How the Venus result related to profession?
3.The above mentioned (Point.2) chart having parivatna yoga with budan in navamsam.Birth chart Guru in 7th house and 7th lord saturn (vakram) vargottamam yoga.Birth chart 7th house having 27 astavarga parals. So how Venus result related marriage?

தனிப்பட்ட ஜாதகங்களுக்கான கேள்விகளுக்கு, முழு ஜாதகத்தையும் பார்த்தால்தான் பலன் சொல்ல முடியும். அதற்கு உரிய வகுப்பு/பாடம் பின்னால் நடைபெற உள்ளது. பொறுத்திருக்கவும்

4.Neeshabanga raja yoga means one plant in excited with one planet in debilited.But last two months (October and November ,2009) mars in debilited house (katagam) and jupiter in debilitated house (magaram).Both are aspecting each other with 7th dristi.Some astrologers said this also neeshabanga raja yogam.How it is?

அவர்களைத்தான் கேட்க வேண்டும்!
---------------------------------------------------
email.No.61
K.சுந்தர், மலேசியா

Dear Sir,

Questions & Answer session is really good... i have been going thru,
learning more. Thanks again.
i have few questions:

1) Mandhi will spoil the benefit of the house where it residing, but if it reside together with the other planets in the house? eg., 4th House - Moon + Mandhi ( astavargam 4th house 24 paral, Moon suyavargam paral 4), this is my son's jathagam,he is 2 years +, also wanted to let you know this jathagam got saraswathi yogam.

மாந்தியுடன் வேறு நல்ல/சுபக் கிரகங்கள் சேர்வதால், மாந்தி நல்லவனாக மாறமாட்டான். சேர்ந்த கிரகங்களுக்குத்தான் இடைஞ்சல் உண்டாகும்.

குழந்தைகளின் ஜாதகம் 12 வயதிற்குப் பிறகுதான் வேலை செய்யும். அதுவரை பெற்றோர்களின் ஜாதகம்தான் அதனால்தான் குழந்தைகள் 12 வயதுவரை சந்தோஷமாக இருக்கிறார்கள். உங்கள் குழந்தையின் ஜாதகத்தைப் பன்னிரெண்டு வயதிற்குமேல் பாருங்கள்

2) Astavarga parals for the houses 3 , 6 , 8, & 12 , how the benifit will be predicted, more parals are bad? or less parals are good?

அங்கே குறைவான பரல்கள் இருப்பதே நன்மை. தீயவர்களும், தீய வீடுகளும் ஜாதகத்தில் வலிமை இல்லாமல் இருப்பதே நல்லது. அதோடு, அங்கே குறையும் பரல்கள், வேறு இடங்களில் அதிகரிக்கும் இல்லையா? மொத்தப் பரல்கள் 337 தானே?

3) planets such as sun,mars,mercury should be always in the rashi
chart next houses or within 90 degrees otherwise the chart is wrong?,
i am doing research with my family & friends jathagam using
jagannatha hora, in some the charts these planets are not in the next
houses. could you please explain more?

நான்கு வீடுகளுக்குள் அவைகள் இருக்கும். 4 X 30 பாகைகள் = 120 பாகைகள். 120ற்குள் 90 பாகை அடக்கமல்லவா? மேஷத்தில் 15 பாகையில் துவங்கினால் என்று வைத்துக்கொள்ளுங்கள் 105 பாகைக்குள் அவைகள் இருக்கும். 20 பாகையில் துவங்கினால் என்று வைத்துக்கொள்ளுங்கள்
110 பாகைக்குள் அவைகள் இருக்கும்.மீண்டும் ஒருமுறை பாருங்கள்
---------------------------------------------------
email.No.62
விஜய் ஆனந்த்

Respected sir,

1.You have given birth details of 33 popular personalities for our reference, in your 200th blog (great job!!! thank u sir!!!)....In that list my favourites personality Dr. A.P.J Abdul kalam's is missing....if possible can you give me his birth chart?........(what a great man!!! I am realy eager to see how the planets are placed in his birth chart)
thanking you,
N.Vijaianand

ஜாதகம் இல்லை நண்பரே! இருந்தால் அத்துடன் சேர்த்திருக்க மாட்டேனா?
--------------------------------------------------------------
சந்தேகங்களைக் கேட்டு நிறைய மின்னஞ்சல்கள் வந்துள்ளன. மின்னஞ்சல் பெட்டியில் உள்ளன. பதில்கள் வரிசையாக வரும். அத்தனை பொது சந்தேகங்களுக்கும் நிச்சயம் பதில் வரும். நம்முடைய கேள்விகளுக்குப் பதிலை இன்னும் காணோமே என்று யாரும் நினைக்க வேண்டாம். பொறுத்திருங்கள். வரிசைப்படி பதில்கள் நிச்சயம் வரும்!
---------------------------------------------------------------
(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்

19.1.10

Doubt: எல்லாவற்றிற்கும் குறுக்குவழி கேட்டால் எப்படி ராசா?

ஆண்டுத் தேர்வுகள் முடிந்துவிட்டன! அடுத்து என்ன?
பார்ட்டிதான்! அதுதான் நடக்கிறது!
---------------------------------------------------------------------
நாங்களும் பாடல்களை ரிமிக்ஸ் செய்வோம்ல!

Jhonny Johnny Remixed
Johny Johny
Yes Papa
Pvt Company
Yes Papa
Any Motivation
No Papa
Many Tension
Yes Papa
Do u Sleep well
No Papa
Onsite Opportunity
No papa
Increment
Ha ha ha
+++++++++++++++++++++++++++++++++++++++++++
Doubt: எல்லாவற்றிற்கும் குறுக்குவழி கேட்டால் எப்படி ராசா?

Doubts: கேள்வி பதில் பகுதி 14

நீங்களும் உங்கள் சந்தேகங்களும் - பாடம் எண் பதினான்கு!

Question & answer session
கேள்வி பதில் வகுப்பு
----------------------------------------------------
email.No.55
அருள் நிதி

வணக்கம் ஐயா...

எனது சந்தேகங்கள்...

1.ஒரு கிரகத்தின் தசையில் மற்றொரு கிரகத்தின் புத்தியில் பலன்கள் அந்த கிரகங்கள் குறிக்கின்ற இடங்களுக்கு தகுந்தாற் போலவும்,அவை இரண்டிற்கும் இடையேயான தொடர்பு ( 6/8 position,1/12 position,niserkiga,temproral relationship) பொருத்தும் அமையும் என்பது உங்கள் பாடங்களின் மூலம் நான் புரிந்துள்ளேன்.சுய தசை சுய புத்தியில் பலன்கள் எதைப் பொருத்து அமையும்???

A.ஒரு தீய கிரகத்தின் மகா தசையில், ஒரு தீய கிரகத்தின் புத்தி கஷ்டங்களைக் கொடுக்கும். துன்பமான சூழலைக் கொடுக்கும்/அனுபவிக்க நேரிடும். (During the main period of a Functional Malefic, the sub period of a Functional Malefic will cause sufferings)

B.ஒரு தீய கிரகத்தின் மகா தசையில், ஒரு நல்ல கிரகத்தின் புத்தி நன்மைகளைக் கொடுக்கும் (During the main period of a Functional Malefic the sub period of a strong Functional Benefic will bestow good results)

C.ஒரு தீய கிரகத்தின் மகா தசையில், ஜாதகத்தில் வலிமை இல்லாத ஒரு நல்ல கிரகத்தின் புத்தி நன்மைகளைக் கொடுக்கும் என்று ஜாதகன் நம்பிக்கை மட்டுமே கொள்ளலாம். ஆனால் உண்மையில் நன்மை எதையும் தராது. (During the main period of a Functional Malefic the sub period of a weak functional benefic will give only hopes which may not get fulfilled)

D. நன்மை செய்யக்கூடிய ஒரு நல்ல/சுபக் கிரகத்தின் மகா தசையில், ஒரு நல்ல/சுபக் கிரகத்தின் புத்தி நன்மைகளை வாரி வழங்கும்.ஜாதகன் அண்டாக்களில் பிடித்து வைத்துக் கொள்ளலாம்! (During the main period of a Functional Benefic the sub period of a strong Functional Benefic will bestow very good results)

E. நன்மை செய்யக்கூடிய ஒரு நல்ல/சுபக் கிரகத்தின் மகா தசையில், ஜாதகத்தில் வலிமை இல்லாத ஒரு நல்ல/சுபக் கிரகத்தின் புத்தி சராசரி பலன்களைக் கொடுக்கும் (During the main period of a Functional Benefic, the sub period of a weak Functional Benefic will bestow average results with mishaps during unfavorable transit influences)

F. நன்மை செய்யக்கூடிய ஒரு நல்ல/சுபக் கிரகத்தின் மகா தசையில், ஒரு தீய கிரகத்தின் புத்தி சராசரி பலன்களைக் கொடுக்கும். சிலர் அவ்வப்பொது சிறு சிறு துன்பங்களை அனுபவிக்க நேரிடும். (During the main period of a Functional During the main period of a Functional Benefic, the sub period of a Functional Malefic will cause mild sufferings)

G.நன்மை செய்யக்கூடிய ஒரு நல்ல/சுபக் கிரகத்தின் மகா தசையில், ஒரு தீய கிரகத்தின் புத்தி ஒரு (அந்த தீய கிரகம் வலிமை இழந்த வேறு கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வை பெற்றிருக்கும் நிலையில்)அதிகக் கஷ்டங்களை ஜாதகன் அனுபவிக்க நேரிடும். ( During the main period of a Functional Benefic, the sub periods of a Functional Malefic (if involved in close conjunction or aspect with weak planets) will cause grave concerns and/or tragic happenings.

H.தனது சுய புத்தியில் கிரகங்கள், பெரிய அளவில் தனக்குத்தானே (அதாவது ஜாதகனுக்கு) எதையும் செய்து கொள்ளாது. இது பொதுப்பலன். சுய புத்தி முடிந்தவுடன், மேற்கூறிய முறையில் பலன்கள் நடைபெறும்!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
2.சிலர் எப்போது படுத்தாலும் உடனே தூங்கி விடுவார்கள்...சிலர் தூக்கம் இன்மையால் அவதிபடுகிறார்கள்...இதற்கு ஜாதகத்தில் எந்த இடம் காரணம் வகிக்கிறது? எனக்கு தெரிந்த ஜாதகங்களில் லக்னாதிபதி 12ல் உள்ள சிலர் நன்றாக தூங்குகின்றனர்.லக்னம் தன்னைப் பற்றி குறிப்பதால் தன்னை மறக்கும் நிலைக்கு(தூக்கம்) 12ம் இடத்தை இடத்தை எடுத்துக் கொள்ளலாமா?இது சரியா??ஏதாவது கிரகம் இதனுடன் சம்பந்தபடுகிறதா???

12ஆம் வீட்டை அயன சயன போக பாக்கிய வீடு என்பார்கள். அந்த விட்டின் அதிபதி நன்றாக இருக்கும் ஜாதகனுக்கு நீங்கள் குறிப்பிட்டுள்ள பாக்கியம் இருக்கும்!

3.அந்தரத்தின் நாட்களை கணிக்க குறுக்கு வழி சொல்லவும்...Ex. குரு தசை,ராகு புத்தி,புதன் அந்தரம்?

எல்லாவற்றிற்கும் குறுக்குவழி கேட்டால் எப்படி ராசா? கடைகளில் 25 ரூபாய்க்குப் பஞ்சாங்கம் கிடைக்கும். ஒன்றை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அதில் எல்லாவற்றிற்கும் குறுக்கு வழி இருக்கிறது!

4.நாம் உண்ணும் உணவை குறிக்கும் இடம் இரண்டாம் இடம்...சிலர் சாப்பாட்டு ராமனாக இருக்கிறார்கள்...சிலர் அதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் கிடைத்ததை சாப்பிடுகிறார்கள்...சிலர் அசைவப் பிரியர்கள்...சிலர் சைவம்...இதற்கு காரணம் என்ன??? கிரகங்களுக்கு பிடித்த சுவைகள் என்ன???

நல்ல வேளை கிரகங்களுக்குப் பிடித்த நடிகைகளைக் கேட்காமல் விட்டீர்கள். சுந்தரி பாய், பண்டரிபாய், காந்திமதி, கண்ணாம்பா மாதிரி இழுத்துப் போர்த்திக்கொண்டுவந்தால் கிரகங்களுக்குப் பிடிக்குமா? அல்லது
நமீதா, நயன்தாரா மாதிரி Two Piece டிரெஸ்ஸில் வந்தால் கிரகங்களுக்குப் பிடிக்குமா? என்று கேட்காமல் விட்டுவிட்டீர்கள். தப்பித்தேன். நன்றி முருகா!

தனிப்பட்ட செயல்கள், குணங்களுக்கெல்லாம் லக்கினமும், லக்கின அதிபதியும், அவருடன் சேரும் கிரகங்களும், அவர் பெறுகின்ற பார்வைகளும்தான் காரணம். லக்கின அதிபதியுடன், சுக்கிரன், சனி, ராகு போன்ற கிரகங்கள் கை கோர்க்கும்போது, நீங்கள் சொல்கின்ற சுவையெல்லாம்....சாப்பாடு, பெண்களை மோப்பம் முடிப்பது முதல் மோகம் கொள்வதுவரை, தண்ணியடிப்பது (குழாயில் அல்ல) ரேசுக்குப் போவது, சீட்டாடுவது, பஃப்பிற்குப் போவது கப்பிற்குப் போவது என்று ஜாதகன் விதம் விதமான ஆட்டங்களில் நாட்டங்களை உடையவனாக இருப்பான்.

5.சில ஆலயங்களில் நவகிரகங்களின் திசைகளை வைத்து அவர்களை அடையாளம் கண்டு கொள்ளலாம்...சில ஆலயங்களில் 2 வரிசைகளில்(மேல், கீழ்) வைத்துள்ளனர்...குழம்பிவிடுகிறோம்...தான்சானியாவில் உள்ள கோவில்களில் அவ்வாறுதான் உள்ளது...இங்குள்ள பெரும்பான்மையோரின் கேள்வி இது...அவர்களின் வாகனங்களை வைத்து அடையாளம் காண்பது எவ்வாறு??? உதவுங்கள்...

தான்சானியாவில் உங்களைக் கோவில்கட்டி கிரகங்களை வைக்க விட்டதே பெரிய காரியம். அதற்காக சந்தோஷப்படுங்கள். இணையத்தில் பார்த்தால் கிரகங்கள், தங்கள் வாகனங்களுடன் இருப்பது தெரியும், அதைக் குறிப்பெடுத்து, போர்டில் எழுதி நீங்கள் குறிப்பிட்டுள்ள கோவிலில் வைக்கச் சொல்லுங்கள். அனைவருக்கும் அது உபயோகமாக இருக்கும்!

நன்றியுடன்,
அருள்நிதி
-------------------------------------------
email.No.56
G.ஆலாசியம்

Dear Sir,
I am sorry. My previous mail had some spelling mistakes.Kindly please ignore that mail and below is the corrected one. Thanks and regards,Alasiam G.
அன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம்.
"நான் எழுத்துருவை சரியாக அனுப்பாமல் தங்களின் வைரமான நேரத்தை வீணாக்கியமைக்கு மன்னிக்கவும்".
எனது கேள்விகள் அய்யா...

1.செவ்வாய் இரண்டில் பொதுவாக நல்லது அல்ல...அதுவும் முக்கியமான இடம் இரண்டில் இருந்தால்???... இரண்டாம் வீடு, மகரத்தில் உச்ச செவ்வாய். அவர் ஐந்துக்கும் பன்னிரெண்டுக்கும் அதிபதி. அவருக்கு கேந்திரத்தில் சந்திரன் (ஐந்தில்) மற்றும் லக்னாதிபதி குரு மற்றும் லாபாதிபதி சுக்கிரனும் (பதினொன்றில்). இரண்டாம் வீட்டின் பரல் இருபத்தேழு செவ்வாயின் பரல் நான்கு. இந்த அமைப்பில் உள்ள தீயக் கிரகம் செவ்வாய் (சகோதரகாரன் மற்றும் பூமிகாரகன் என்று அதற்கு தனி மதிப்புக் கொடுப்பார் திருவாளர் செவல் பட்டி சிங்காரம் செட்டியார் அவர்கள்) செவ்வாய் திசை எப்படி இருக்கும்? 2.அது தனம்,வாக்கு,குடும்பம் இவைகளுக்கு எந்தவிதமான விளைவுகளைத் தரும்? 2A. இரண்டில் செவ்வாய் உச்சம், ராசிக்கு அதிபதி அப்படி இருக்க ஜாதகனுக்கு வீடு, பூமி மற்றும் பூமியிலிருந்து கிடைக்கும் பொருள்கள் மூலம் லாபம் கிடைக்கும் என்பது எவ்வளவு உண்மை?

உண்மைக்கு ஒரே அளவுதான்!:-)))) செவ்வாய் உச்சம் பெற்று அமைந்துள்ளதை மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்ளுங்கள். பூர்வ புண்ணிய அதிபதி உச்சம் பெறுவது ஜாதகனுக்குப் பலவிதத்திலும் நன்மை உடையதாக அமையும். அதனால் நன்மைகளே நடக்கும் என்று நம்பிக்கையோடு இருங்கள்!

2.ராகு இருக்கும் இடம் பெறும் பார்வை இவைகளைக் கொண்டே நல்லவனா கெட்டவனா என்பது..... நிற்க, அந்த ராகு இருப்பது மூன்றில் அவர் இருக்கும் வீட்டுக்கு கேந்திரத்தில் லக்னாதிபதி குருவும் சுக்கிரனும். மூன்றாம் வீட்டுக்கு அதிபதி சனி (வக்கிரம், ஒரு பரல் நீசம்) சந்திரனுடன், அம்சத்தில் சந்திரன் வீட்டில் இருக்கிறார். ராகு இருக்கும் வீட்டின் பரல் முப்பத்தைந்து. (ராகுவைப் போல் கொடுப்பாரில்லை...ஜோதிட மொழி) 3. இந்த ராகு அவரின் தசையில் கட்டிவைத்து அடித்து பிழிந்து எடுப்பானா? மூன்றில் முப்பத்தைந்து பரலுடன் இருப்பதால் எதாவது கொடுப்பானா? 3.ராகு திசையில் முன் பாதி பின் பாதி என்று எதாவது பலன்கள் வேறுபடுமா? பொதுவான ஒரு கேள்வி அய்யா.

ராகு தசையைப்பற்றிய விரிவான பாடம் பழைய பதிவுகளில் உள்ளது. அதைப் படித்துத் தெளிவு பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

4. கால சர்ப்ப தோஷத்தில் அகப்பட்டவர்கள் வாழ்வில் பெரும்பாலும் அவதிப்பட்டு ஒரு நிலைக்கு வந்தவர்களே அப்படிப் பட்டவர்கள் மீண்டும் ஒரு சிரமமான கட்டத்திற்கு ஜாதகம் கொண்டு செல்லுமா (எல்லோருக்கும் மொத்தம் 337 பரல்கள் தான்).

பெரும்பாலனவர்களைக் கொண்டு செல்லும். உதாரணம் ஹர்ஷத் மேத்தாவின் ஜாதகம்!

5.பாடங்களில் சந்தேகம் வர வழி இல்லை அத்தனையும் அவ்வளவு தெளிவு; இல்லை இல்லை அதை இப்படிக் கூறலாம் என்போன்றோரின் ஜோதிட அறிவுக்கு தேவைக்குச் சற்று அதிகமான விளக்கம் என்பேன். ஆகவே இதை ஒரு case study- யை போல் கேட்டுள்ளேன்.

கேஸ் ஸ்டெடி என்று சொந்த ஜாதகத்தை வைத்து உங்களைப் போல எல்லோரும் கேட்டால், எப்படி பதில் சொல்வது? அதற்கு உரிய நேரம் எனக்கு வேண்டாமா? எனக்கும் நாளொன்றிற்கு 24 மணிகள்தானே?
---------------------------------------------------
email.No.57
சூர்யா

There is a lagna in rasi and in navamsam. How to assess navamsam? With respect to rasi lagna or navamsa lagna? I still remember you gave one example how to assess rasi and navamsam. In that case Both rasi lagna and navamsa lagna are same?

ராசியிலும், நவம்சத்திலும் ஒரே லக்கினம் என்றால் அது வர்கோத்தம லக்கினம் ஆகும். லக்கினம் வர்கோத்தம் ஆகும் பலன் அந்த ஜாதகனுக்குக் கிடைக்கும். நவாம்சம் & வர்கோத்தமப் பாடங்களை எடுத்துப் படியுங்கள்!
-----------------------------
email.No.58
S.தினேஷ், ராஞ்சி, ஜார்கண்ட் மாநிலம்

அய்யா வணக்கம். ஒரு சந்தேகம் கேட்க வேண்டும் .

1.என் தம்பிக்கு துலா லக்னம்,விருச்சிக ராசி. 10'ல் அதாவது கடகத்தில், குரு,செவ்வாய். குரு உச்சம் பெற்று விட்டான்.செவ்வாய் நீச்ச பங்கம் செவ்வியும் சந்திரனும் பரிவர்த்தனம் பெற்றுவிட்டனர். அனால் இருவரும்
நீச்சம்.செவ்வாய் நீச்ச பங்கம் பெற்றதால் சந்திரனும் நீச்ச பங்கம் பெறுவானா?? பரிவர்த்தனை ஆனதால் நீச்ச பலன்கள் இல்லாமல் போகுமா?? எப்படி இருக்கும். சற்று விளக்கி கூறுங்கள்.

துலா லக்கினத்திற்கு குரு 3 & 6ஆம் இடங்களுக்கு உரியவன். இருந்தாலும், குரு சுபக்கிரகம். உச்ச குரு 10ல் இருப்பதாலும், 2 மற்றும் 7ஆம் அதிபதி செவ்வாய் அவருடன் இருப்பதாலும் (நீசபங்கம், மற்றும் குருமங்கள யோகத்துடன் இருப்பதாலும்) அந்த இடத்து அதிபதி பரிவர்த்தனை யோகத்தில் இருப்பதாலும் உங்கள் தம்பிக்கு நல்ல வேலை கிடைக்கும் கவலையை விடுங்கள். 10ஆம் வீட்டில் 30ற்கு மேற்பட்ட பரல்களும்,
அதன் அதிபதி சந்திரன் தன்னுடைய சுயவர்க்கத்தில் 5அல்லது அதற்கு மேற்பட்ட பரல்களுடன் இருக்கிறாரா என்றும் பாருங்கள்.
--------------------------------------------------------------
சந்தேகங்களைக் கேட்டு நிறைய மின்னஞ்சல்கள் வந்துள்ளன. மின்னஞ்சல் பெட்டியில் உள்ளன. பதில்கள் வரிசையாக வரும். அத்தனை பொது சந்தேகங்களுக்கும் நிச்சயம் பதில் வரும். நம்முடைய கேள்விகளுக்குப் பதிலை இன்னும் காணோமே என்று யாரும் நினைக்க வேண்டாம். பொறுத்திருங்கள். வரிசைப்படி பதில்கள் நிச்சயம் வரும்!
---------------------------------------------------------------
(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்



வாழ்க வளமுடன்!

18.1.10

Doubt: அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்; யார் யாரைப் பார்த்தார்கள்?

===========================================
Doubt: அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்; யார் யாரைப் பார்த்தார்கள்?

Doubts: கேள்வி பதில் பகுதி 13

நீங்களும் உங்கள் சந்தேகங்களும் - பாடம் எண் பதிமூன்று!

Question & answer session
கேள்வி பதில் வகுப்பு
----------------------------------------------------
email.No.51
அரியப்பன் சாத்தப்பன்

வணக்கம் அய்யா,
பெஞ்சுமேல் நிற்கச் சொன்னதற்கு மிக்க நன்றி.தனுசு லக்கனத்துக்குத்தான் சந்திரன்,செவ்வாய் தான் பரிவர்த்தனை. சரிதான்.

1,சந்திரன் கேதுவும்(விருச்சிகம்),குருவும் செவ்வாயும்(கடகம்)இவ்வாறு இருந்தால் பலம்பெறுமா(தனு.லக்)?

விருச்சிகத்தில் சந்திரன் நீசம். அவருடன் உச்ச கேதுவும் சேர்ந்து நீச பங்க ராஜ யோகத்தில் உள்ளார். கடகத்தில் செவ்வாய் நீசம், உச்ச குருவுடன் சேர்ந்து நீச பங்க ராஜ யோகத்தில் உள்ளார். ஆனால் தனுசு லக்கினத்திற்குக் கடகம் எட்டாம் இடம். விருச்சிகம் 12ஆம் இடம். முழுப் பலன்கள் இல்லை. பஸ்ஸில் இடம் கிடைத்தும், பணம் கொடுத்து டிக்கெட் வாங்கியும் நின்று கொண்டே பயணிக்க வேண்டிய நிலைமை!

2,உச்சம், நீசம் பரிவர்த்தனை (சனி,செவ்வாய்) பலம் அடையுமா?

பரிவர்த்தனை அடைந்த பிறகுதானே, உச்ச நீசக் கணக்கு வரும்! உச்சன் அதற்கான பலனைத்தருவார். நீசனால் பலன்கள் இருக்காது.
-----------------------------------------------------
email.No.52
AG.பாலகுமாரன்

Dear Sir,
Can you kindly clarify my doubt.

1. It's said that the strength of the planets conjuncting Yogakarakas or Lagnathipathi will be absorbed by themselves (Yogakarakas or Lagnathipathi). Is that true. Can you clarify.
Regards,
Balakumaran A G

கிரகங்கள் கையில் என்ன பெப்ஸியா வைத்திருக்கின்றன? ஸ்ட்ரா போட்டு ஒன்றின் பலனை இன்னொன்று உறிஞ்சிக்குடிப்பதற்கு? லக்கினதிபதியாகட்டும் அல்லது யோககாரகனாகட்டும், அவர்களுடன் கூட்டணி போடும் கிரகத்தை வைத்து அவர்களுடைய நிலைமை மாறும். பலன்களும் வேறுபடும். அதற்காக சேரும் கிரகங்கள் தங்கள் கையில் அவற்றை எப்படி எடுத்துக்கொள்ளும்? உதாரணத்திற்கு லக்கினாதிபதியுடன் சனி ஒன்றாக இருந்தால், லக்கினாதிபதியோடு அவரும் சேர்ந்து லக்கினத்திற்கான பலன்களைத் தரமாட்டார். சேரும் லக்கினாதிபதி வலுவாக இருந்தால் அடக்கி வாசிப்பார். லக்கினாதிபதி வலுவாக இல்லையென்றால் இருப்பதையும் கெடுத்து விடுவார்!
---------------------------------------------------
email.No.53
செல்லபிரசாத் ராமசாமி

அன்புள்ள அய்யா,
என்னுடைய சந்தேகங்கள் (2)

1. வாக்ய பஞ்சாங்கத்தின்படி நட்சத்திர பாதசாரங்களை கொண்டு தசாம்ச சக்கரம் எழுதுவது எப்படி?

பஞ்சாங்கத்தை வைத்து ஜாதகம் எழுதுவதற்கு நல்ல பாண்டித்யம் வேண்டும். அதோடு ஜாதகனின் பிறந்த வருட வாக்கியப் பஞ்சாங்கமும் வேண்டும்.அதை இப்போது கணினி மென்பொருட்கள் எழுதித்தருவதால், அவற்றைப் பயன் படுத்துங்கள். Gas Stove, Induction Stove, Oven, mixie, wet grinder என்று எல்லாவற்றிற்கும் சாதனங்கள் வந்து விட்டன!. நான் விறகு அடுப்பில்தான் சமைக்க விரும்புகிறேன் என்று சொன்னால் எப்படி?

2. மிதுனம், தனுசு லக்னங்களிற்கு தர்ம/கர்மாதிபதி யோகம் அமைந்து, முறையே குரு, புதன் (உபய ராசியின் பாதகாதிபதிகள் மற்றும் யோகத்தை தருபவர்கள்) தசைகள் நடைபெறும் போது, யோகம்தான் வலிமை தருமா? அல்லது பாதகாதிபதி பாதகம் செய்வாரா?

யோகம் அமைந்துவிட்டது. அமைந்த யோகத்தில் சந்தேகம் எதற்கு? தங்கள் தசா/புத்திகளில் யோகத்திற்கான பலன்களைத் தருவார்கள். பாதக அமைப்பும் சேர்வதால், பலன்கள் குறையலாம். ஆனால் இல்லாமல் போகாது!

3.தங்களுடைய இமெயில் கேள்வி 33ற்கு பதிலில் பார்வைகளே இல்லாத வீட்டிற்கு பலன் சொல்லவில்லை. என்னுடைய ஜாதகத்தில் லக்னம், 6வது வீடு மற்றும் 8வது வீடுகளில் எந்த கிரகமும் இல்லை. எந்த பார்வையும் இல்லை (சனி, செவ்வாய் மற்றும் குரு ஓர பார்வை உட்பட). என்ன பலன்கள் ஏற்படும்? (இது சொந்தக் கேள்வி ஆனால் சொந்த கேள்வி இல்லை)

அங்கே எந்த கிரகமும் இல்லை என்பதற்காக நீங்கள் தப்பிக்க முடியுமா? 6ஆம் வீட்டு அதிபதி மற்றும் 8ஆம் வீட்டு அதிபதிகள் எங்கே இருக்கிறார்கள் என்று பாருங்கள். யாருடன் இருக்கிறார்கள் என்று பாருங்கள். எவருடைய பார்வைகளைப் பெற்றிருக்கிறார்கள் என்று பாருங்கள். அதை வைத்துப் பலன்கள் கிடைக்கும். அதிபதிகள் இல்லாமல் வீடுகள் இல்லை. வீடுகள் இல்லாமல் ஜாதகம் இல்லை! முதலில் அதை உணருங்கள்!

4.வெளிநாட்டு பயணங்களை கணக்கிடுவதற்கு சந்திரன், ராகு மற்றும் கேது இவர்களின் பங்கு என்ன?

ஒரு பெண்ணின் திருமணத்தில், அண்ணன், தம்பிகளின் பங்கு என்ன என்று கேட்பதைப்போல உள்ளது உங்கள் கேள்வி. காதல் திருமணம் என்றால், அவளுடைய பங்கு மட்டுமே முக்கியம். மற்றவர்களுடைய பங்கு தேவையில்லை. பெற்றோர்கள் நடத்திவைக்கும் திருமணம் என்றால், அவர்களுடைய பங்கு முக்கியம். அத்துடன் பெண்ணின் சம்மதமும் முக்கியம். (பிடிக்காத மாப்பிள்ளையைக் கட்டிவைக்க முடியாது)
அதுபோல வெளிநாட்டுப் பயணங்களுக்கு ஒன்பதாம் வீடும், அதன் சாராம்சங்களும் மட்டுமே முக்கியம். அதைப்பற்றிய விரிவான பாடம் என்னுடைய முன்பதிவில் உள்ளது. தேடிப்பிடித்துப் படியுங்கள்

5.வாக்ய பஞ்சாங்கத்தின்படி ஜாதகம் கணிக்கும்போது (கணினி மூலம் அல்ல) பாதசாரங்களை கொண்டுதான் எழுதுகிறோம். அனைத்து கட்டங்களும் 9 நட்சத்திர பாதங்களை கொண்டுள்ளது. ஓவ்வொரு நட்சத்திரமும் ஓவ்வொரு நேரங்களை கொண்டுள்ளது. சந்திரனின் வேகமோ ஒரே மாதிரியானது. என்னுடைய சந்தேகம் என்னவெனில் அனைத்து கட்டங்களும் சரிசமமாகதான் (30 டிகிரி) பிரிக்கப்பட்டுள்ளதா? இல்லை வித்தியாசங்கள் உள்ளதா?

சரியாகத்தான் பிரிக்கப்பட்டுள்ளது சாமி! அதிலென்ன சந்தேகம்? விமானத்தில் ஏறும் முன்பு, அந்த விமானம் ஒழுங்ககத்தான் தயாரிக்கப்பட்டுள்ளதா? (வடிவமைக்கப்படுள்ளதா?) என்று பார்த்துவிட்டா ஏறுவீர்கள். அதில் சந்தேகம் கொண்டால், நீங்கள் எப்படிப் பயணிக்க முடியும்?

6.ஆறு மற்றும் எட்டாம் அதிபதிகள் ஒன்று கூடுவது விபரீத ராஜயோகத்தை கொடுக்குமா?
அன்புடன்
செல்லபிரசாத் ராமசாமி

விபரீத ராஜயோகம் என்றால் என்னவென்று பாடம் நடத்தியுள்ளேன். அதைச் சரியாகப் படிக்காமல் கேள்விகேட்டால் என்ன செய்வது? ஒரு துஷ்ட ஸ்தானத்தின் அதிபதி, மற்றொரு துஷ்ட ஸ்தானத்தில், ஒரு துஷ்டனுடன் அமர்ந்திருந்தால் அந்த யோகம் உண்டாகும்.

நீங்கள் வெறுமனே கூடினால் என்று மட்டும் சொல்லியிருக்கிறீர்கள். கூட வேண்டிய இடத்தில் கூட வேண்டும் அல்லவா? அதைப் பாருங்கள். காதலனும், காதலியும் கூட வேண்டிய இடத்தில்தான் கூட வேண்டும். பொது இடத்தில் கூடினால் பிரச்சினையாகிவிடும். அதைப்போலத்தான் இதுவும்!
--------------------------------------------
email.No.54
G.ஆலாசியம்

அன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம்,
இது பொதுவான கேள்வி.....

1.எல்லா கிரகங்களுக்கும் நேரடிப் பார்வை என்பது, 7- ஆம் பார்வை; இதில் எதை எது பார்க்கிறது என்று கொள்ளவேண்டும்? 1.எதிரெதிரே பார்க்கும் கிரகங்கள் ஒன்றை ஒன்றுப் பார்க்கும் போது எதனுடையப் பலன் மிகும்? உம்:- தனுசு லக்னம், 5-இல் குரு 11-இல் சந்திரன்.

அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள். இது கம்ப ராமாயணத்தில் வரும் வரி. யார் யாரைப் பார்த்தார்கள் சொல்லுங்கள்? எதனுடைய பார்வை பவர்புஃல்லாக இருக்குமா? காதலர்களின் பார்வை என்றால், பெண்ணின் பார்வைதான் கிறங்கவைக்கும். அதில் பெண்கள்தான் கில்லாடிகள். ஆனால் கிரகங்களின் பார்வைகளில் அப்படி எல்லாம் பேதப் படுத்திப் பார்க்கமுடியாது!

2.எதிரெதிரே பார்க்கும் கிரகங்கள் பார்ப்பது கிரகங்களை மட்டும் அல்லாது அதன் வீட்டையும் பார்க்கும் அதில் எதன் பலன் மிகும்? உம்:- 3-க்கும், 4-க்கும் அதிபதி சனி 5-இல் மீனத்தில் இருந்து 9-க்கு அதிபதி சந்திரனை (கன்னியில்) பார்த்தல்.

திருடன் வந்தான் வீட்டிலுள்ள பணத்தையும் நகைகளையும் சுருட்டிக்கொண்டு போனான். அதோடு வீட்டில் இருந்த பெருசுகள் இரண்டுபேர்களின் மண்டையிலும் கட்டையால் ஒரு போடு போட்டு, மருத்தவமனையில் படுக்கும் படியாகப், படுக்கவைத்துவிட்டுப் போனான். இதில் எந்த வலி அதிகம்? பொருளைப் பறி கொடுத்த வலியா? அல்லது மண்டையில் அடிவாங்கிய வலியா? நீங்களே சொல்லுங்கள்?

பார்ப்பது கிரகங்களை மட்டும் அல்லது அது இருக்கும் வீட்டையுமா? எப்படி சாமி இப்படியெல்லாம் யோசிக்கிறீர்கள்? தனி அறையில் உட்கார்ந்து யோசிப்பீர்களா? இனிமேல் அப்படி எல்லாம் யோசிக்காதீர்கள்!

வீட்டின் முற்றத்தில் விழுகும் சூரிய ஒளி முற்றத்துத் தரையின் மீதும் விழுகும், அங்கே நிற்பவரின் மேலும் விழுகும் இல்லையா? அப்படித்தான் அதுவும்!

3.நல்ல கிரகத்தை தீயக் கிரகம் பார்க்கிறது என்றால் அந்தத் தீயக் கிரகம் அந்த ஜாதகனுக்கு நல்லவனாக இருந்தால் அதன் விளைவு என்ன? மேல் உள்ள உதாரணமே:- 3-க்கும், 4-க்கும் அதிபதி சனி 5-இல் மீனத்தில் இருந்து 9-க்கு அதிபதி சந்திரனை (கன்னியில்) பார்த்தல்.

ஒரு மனநிலை சரியில்லாதவனுக்கு மருத்துவர் ஒருவர் வைத்தியம் பார்க்கிறார். அவருக்கும் மனநிலை சரியில்லாமல் இருந்தால் விளைவு என்ன ஆகும்? என்று கேட்பதைப் போல இருக்கிறது உங்கள் கேள்வி!
உங்கள் கேள்வியிலேயே பதில் இருக்கிறது. யோசித்துப் பாருங்கள்.

4. 10-க்கும் 11-க்கும் அதிபதி சனி 8-இல் இருந்து 7- ஆம் வீட்டை பார்க்கிறார் (காலியாக உள்ள ரிசபத்தைப்). அது அந்த 2- ஆம் வீட்டிற்கு பாதகமா? அப்படியானால் அது பெண் ஜாதகமானால் அதைப் போன்ற அமைப்பு (அதனை ஒத்த அமைப்பு உண்டா?) உள்ள ஆணை மனம் முடித்தாள் அவர்களுடைய 2-வது வீட்டுப் பலன் மேம்படுமா?.என்னுடைய கேள்விகள் எந்த அளவுக்கு ஆழமானது எந்த அளவுக்கு மற்றவர்களுக்குப் பயன் படும் என்றும் தெரிய வில்லை.
அன்புடன்,
ஆலாசியம் கோ.

சனியின் பார்வையால் பாதகம் இல்லாமல் இருக்குமா? இருக்கும்!!!
ஒத்த அமைப்பு இருந்தால், இருவருக்கும் ஒத்துப் போகும்.
ஒருவரை ஒருவர் சரிபண்ணிக் கொண்டு (adjust) போவார்கள் .

--------------------------------------------------------------
சந்தேகங்களைக் கேட்டு நிறைய மின்னஞ்சல்கள் வந்துள்ளன. மின்னஞ்சல் பெட்டியில் உள்ளன. பதில்கள் வரிசையாக வரும். அத்தனை பொது சந்தேகங்களுக்கும் நிச்சயம் பதில் வரும். நம்முடைய கேள்விகளுக்குப் பதிலை இன்னும் காணோமே என்று யாரும் நினைக்க வேண்டாம். பொறுத்திருங்கள். வரிசைப்படி பதில்கள் நிச்சயம் வரும்!
---------------------------------------------------------------
(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்



வாழ்க வளமுடன்!

11.1.10

Doubt: வெறும் கையால் முழம் போட ஜாதகம் எதற்கு?

++++++++++++++++++++++++++++++++++++++++++++
Doubt: வெறும் கையால் முழம் போட ஜாதகம் எதற்கு?

Doubts: கேள்வி பதில் பகுதி பன்னிரெண்டு!

நீங்களும் உங்கள் சந்தேகங்களும் - பாடம் பன்னிரெண்டு!

Question & answer session
கேள்வி பதில் வகுப்பு
-------------------------------------------
email No.47
email No.
C.சுப்பையா

ஐயா வணக்கம்,
எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும். என்பதற்கேற்ப கற்றுகொடுக்கும் தாங்கள் இறைவன் தான் என்பதில் நான் ஒரு ஆசிரியரின் மகனாக இதை எழுதுவதில் முழு மகிழ்ச்சி.எனக்கு ஏற்பட்டுள்ள ஒரு சில சந்தேகங்களுக்கு விடை கிடைக்கும் என நம்புகிறேன்.

அடடா, நெஞ்சைத் தொட்டுவிட்டீர்களே!:-)))) இறைவன் ரேஞ்சிற்கு என்னை உயர்த்தி, அண்டாப் பாலில் அழுத்திவிடாதீர்கள். நானும் உங்களைப் போல சாதாரண மனிதன்தான்.நான் கற்றதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அவ்வளவுதான்!

1. சூரிய உதயத்திற்கு முன் பிறந்தவர்களுக்கு முற்காலத்தில் பெரியவர்கள் எழுதிகொடுத்த ஜாதகங்களோடு, தாங்கள் வழங்கியுள்ள மென்பொருள்களில் நட்சத்திர வேறுபாடு வருவதை தவிர்க்க தங்களின் ஆலோசனை வழங்க பணிவுடன் வேண்டுகிறேன்.

வெள்ளைக்காரனுக்கு இரவு 12 மணிக்கு அடுத்த நாள் துவங்கிவிடும். நமக்கு சூரிய உதயத்திற்குப் பிறகுதான் நாள் துவங்கும். இரவு 12 மணிக்குப் பிறகு, அதிகாலை சூரிய உதயத்திற்குள் (அதாவது 5.50AM to 6:35 AM) சுமார் 6மணி நேரத்திற்குள் பிறக்கும் குழந்தைகளுக்கு அன்றைய சூரிய உதயத்தைக் கணக்கில் எடுத்துக் கொண்டுதான் ஜாதகத்தை எழுதுவார்கள்.

சித்திரை மாதம் சூரிய உதயம் 5:55, மாசி மாதம் சூரிய உதயம் 6:39 - இடையில் சூரிய உதயம் ஒவ்வொரு மாதமும் ஒரு நேரத்தில் - இந்த நேரத்திற்கு இடைப்பட்ட நேரத்தில் இருக்கும். சூரிய உதய அட்டவணை வகுப்பறைக் கிடங்கில் உள்ளது

அப்படி எழுதும்போது அவர்கள் விரோதி வருடம் மார்கழி மாதம் 24ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 2:00 மணி என்று எழுதிக் கூடவே 8/9.1.2010 2:00 AM என்றும் எழுதியிருப்பார்கள். அப்படி எழுதாவிட்டால் - அதாவது 8/9 என்று எழுதாவிட்டால் சிக்கல்தான். 7/8 ஆ, அல்லது 8/9 என்று ஜாதகன் மண்டையைப் பிய்த்துக்கொள்ள வேண்டியதாயிருக்கும். அதைச் சரிபார்க்க அவன் பிறந்த வருடத்திய பஞ்சாங்கம் வேண்டும். அதாவது ஜாதகன் 1984ஆம் வருடம் பிறந்திருந்தால் அந்த வருடப் பஞ்சாங்கம் வேண்டும்.

நமது வகுப்பறை மாணவர்களுக்கு அந்தப் பிரச்சினை வராது. என்னிடம் 75 ஆண்டுகளுக்கான வாக்கியப் பங்சாங்கம் உள்ளது. அதாவது 1926ஆம் ஆண்டு முதல் 2000 ஆண்டுவரை உள்ள காலத்திற்கான வாக்கியப் பங்சாங்கங்கள் உள்ளது. தமிழ்த்தேதியையும் நேரத்தையும் நீங்கள் எழுதினால், அதற்குச் சரியான ஆங்கிலத் தேதியை நான் தருகிறேன் (இலவசமாக)

விளக்கம் போதுமா அன்பரே?
-------------------------------------------
email No.48
சுனிதா நர்த்தகி

அன்புள்ள ஐயா
உங்கள் கேள்வி பதில் பகுதி அருமை. இதோ என்னுடைய கேள்விகள்.........

கேள்வி 1 :
செவ்வாய் நீசமடைந்திருந்து அவர் 4-ம் வீட்டிற்கும், 11-ம் வீட்டிற்கும் அதிபதி என்றால் சொத்து வாங்கவே முடியாதா?. இரு வீட்டின் பரல் 30 - க்கும் அதிகமாக இருந்தாலுமா?

அதிபதி நீசமடைந்திருக்கும்போது, அந்த வீட்டிற்கு 30 பரல்கள் எப்படிக் கிடைத்தது என்று யோசித்தீர்களா?

இப்படி வைத்து யோசித்துப்பருங்கள்: குடும்பத்தலைவர் வேலை வெட்டியில்லாத ஆசாமி. ஆனால் குடும்பத்திற்கு கோவை ரேஸ் கோர்ஸில் ஒரு ஏக்கரில் பங்களா இருக்கிறது. அவனாசி ரோட்டில் இரண்டு பெரிய வளாகங்கள் (மேன்சன்கள்) இருக்கின்றன!. மாதம் 4 லட்ச ரூபாய் வாடகை வருகிறது. கூடலூரில் 100 ஏக்கர் காஃபி எஸ்டேட் இருக்கிறது. தலைவர் சோம்பேறி. அதனால் எஸ்டேட்டை லீசிற்கு விட்டிருக்கிறார்கள். வருடத்திற்கு 20 லட்ச ரூபாய் வருமானம் வருகிறது. இப்போது சொல்லுங்கள். அந்தக் குடும்பம் செளகரியமாக இருக்குமா? இருக்காதா?

அப்படி, அதிபதி நீசமானாலும், 4ஆம் வீட்டில் மேல் விழும் நல்ல பார்வைகளால், அதற்கு வேறு தீய கிரகங்களின் உபத்திரவம் எதுவும் இல்லாத சூழ்நிலையில்தான் அந்த 30 பரல்கள் கிடைத்திருக்கும். அப்படிப்பட்ட 4ஆம் வீட்டை உடைய ஜாதகன் வசதிமிக்கவனாக இருப்பான். குடும்பத் தலைவனுக்கு 4ஆம் அதிபதி நீசமடைந்திருந்தபோதும் பரல்கள் அதிகமாக உள்ள வீடுகளின் பலன்கள் நன்மை உடையதாக இருக்கும். ஆகவே ஜாதகன், நீசனைக் கடாசிவிட்டு வீட்டின் அமைப்பைவைத்து சொத்தை வாங்கலாம்.
இல்லையென்றால் அதிக பரல்களுக்கு என்ன அர்த்தம் சகோதரி?

கேள்வி 2 :
குட்டி சுக்கிரன் கூடி கெடுக்கும் என்பதன் அர்த்தம்? 5 வயதில் குழந்தைக்கு சுக்கிர திசை வந்தால் பெற்றவர்களுக்கு ஆபத்தா? இதற்கு என்ன செய்ய வேண்டும்?
இப்படிக்கு
உங்கள் மாணவி

குட்டிச் சுக்கிரன் கூடிக்கெடுக்கும் என்பது சின்ன வயதில் - குழந்தைப் பருவத்தில் சுக்கிர தசை வருவதையும், அப்படி வரும் தசையால் அக்குழந்தை செல்லமாக வளர்ந்து, சுகவாசியாக இருந்து, படிப்பைக் கோட்டைவிடும் அபாயம் இருப்பதையும் மட்டுமே குறிக்கும். அக்குழந்தையால் பெற்றோர்களுக்கு எந்தவித ஆபத்தும் இல்லை. மேற்கொண்டு சொன்னால், அந்தக் குழந்தை வசதியாக வளரும் பொருட்டு அவர்களுக்கு நிறையப் பணம் வரும்.

இந்த அமைப்பையும் மீறி, சுக்கிரதிசையின் அழும்பையும் மீறி, சில குழந்தைகள், ஜாதகத்தில் வித்தியாகாரகன் புதன் நன்றாக இருக்கும் பட்சத்தில் நன்றாகப் படித்துத் தேர்ந்துவிடும்! அதுதான் ஜாதகப் பலனின் அதிசயம்!
-------------------------------------------
email No.49
ரமேஷ் வேலுச்சாமி

Sir,
For Real Estate, [lord of 4 th & 11 th ] the karaka Mars is in the 6th house[vagram] with guru parvai with less than 3 parals and in navamsa guru and mars are in parivartna. if so, is mars become powerful ? and will give good results in real estate.

நான்காம் வீடுதான் பூமி, மனைகளுக்கு உரிய இடம். அந்த வீடு நன்றாக இருந்தாலும் சரி அல்லது பதினொன்றாம் வீட்டு அதிபதி 4ஆம் வீட்டில் இருந்தாலும் சரி ரியல் எஸ்டேட் பிஸினெஸிற்கு உரிய அமைப்பு அது. அதுபோல 10ஆம் இடத்து அதிபதி 5ஆம் வீட்டில் அம்ர்ந்து பதினொன்றாம் வீட்டைப் பார்த்தாலும், ரியல் எஸ்டேட் பிஸினெஸில் வெற்றி கிடைக்கும்!

4 & 11ஆம் இடத்து அதிபதி 6ல் மறைந்துவிட்டதால் வாய்ப்புக் குறைவு. அம்சத்தில் அவர் பரிவர்த்தனையாகி உள்ளதைமட்டும் பார்க்காமல், அவர் அம்சத்தில் உச்சமாக இருக்கிறாரா அல்லது நீசமாகி இருக்கிறாரா அல்லது ஆட்சி பலத்துடன் பரிவர்த்தனையாகி இருக்கிறாரா என்று பாருங்கள்

இன்று எல்லோருக்குமே குறுகிய காலத்தில் அதீதமான பணம் சம்பாதிக்கும் ஆசை உள்ளது. ரியல் எஸ்ட்டேட் எனப்படும் இடம் வாங்கி விற்பது, கட்டிடங்கள் கட்டி விற்றுக் காசு பண்னும் தொழிலில் அனைவருக்குமே ஒரு கண் உள்ளது. எல்லோரும் அதில் வரும் வருமானத்தைத்தான் பார்க்கிறார்களோ ஒழிய, அதில் உள்ள பிரச்சினைகளை யாரும் நினைத்துப்பார்ப்பதில்லை. அதில் நுழைந்து பார்த்த பிறகுதான் பிரச்சினைகள் பூதாகரமாகத் தெரியும்.

முன்பே பலமுறை எழுதியுள்ளேன். பணம் அதிகமாகக் கையில் சேர்வதற்குச் ஜாதகத்தில் 2ஆம் வீடும், 11ஆம் வீடும் அதி முக்கியம். இரண்டாம் வீடு அண்டா. பதினொன்றாம் வீடு தண்ணிர் கொட்டும் குழாய். அது இரண்டும் இல்லாமல் தண்ணீரைப் பிடித்து வைக்க முடியாது. தண்ணீரைத் திறந்துவிடும் ஆசாமி வேண்டுமே. பத்தாம் வீட்டு அதிபதியும், கர்மகாரகன் சனியும் சேர்ந்துதான் அல்லது அந்த இருவரில் ஒருவர்தான் அந்த வேலையைச் செய்வார்கள்.அவர்கள்தான் தண்ணீரைத் திறந்துவிடும் ஆசாமிகள். சரி, எந்த ஆற்றில் இருந்து அல்லது எந்த அணைக்கட்டில் இருந்து தண்ணீர்வரும்? அதை அறியச் செய்வதுதான் மற்ற வீடுகளின் வேலை!

ஒன்பதாம் வீடு நன்றாக இருந்தால் பூர்வீகச் சொத்து என்னும் அணையில் இருந்து பணம் வரும். ஏழாம் வீடு நன்றாக இருந்தால் கூட்டு வியாபாரம், நிறுவன மேலான்மை (அதாவது 10% உங்கள் பணம். மீதம் 90% பொதுமக்கள் பணம் -share hoders money என்னும் நிலைமை) என்னும் அணையில் இருந்து பணம் வரும். ஆறாம் வீடு நன்றாக இருந்தால், தீயவழி (தாதா வேலைகள், கஞ்சாக் கடத்தல் வேலைகள் போன்ற இன்னபிற தவறான வேலைகள்) என்னும் அணையில் இருந்து பணம் வரும். 4ஆம் வீடு நன்றாக இருந்தால் ரியல் எஸ்டேட் என்னும் அணையில் இருந்து பணம் வரும்.

அணைகளை மட்டும் மனதில் வாங்கிக் கொண்டு, சார் எனக்குப் பணம் வரவில்லையே என்று கேட்காதீர்கள். அதற்கு முன் எழுதியுள்ள பகுதியையும் மனதில் வாங்கிக்கொண்டு பாருங்கள்.

Areas in which money can be earned, level of accumulation, instant financial gains and windfalls, level of rise, positive and negative period in the coming times என்று பலவிஷயங்கள் உள்ளன. ஒரு கிரகத்தின் உச்ச நீசத்தை வைத்து மட்டும் அல்லது பரிவர்த்தனையை மட்டும் வைத்து எதையும் முடிவு செய்ய முடியாது.

சரி, உங்கள் கேள்விக்கு வருவோம். காரகன் செவ்வாயை மட்டும் வைத்துக் கதை எழுதப்பார்க்கிறீர்களே? மேலே குறிப்பிட்டுள்ள மற்ற விஷயங்களையும் பாருங்கள்! எல்லாவற்றையும் அலசுங்கள்

மொத்த ஜாதகத்தையும் அலச வேண்டும். ஏன் அலச வேண்டும்? உங்களுடைய சொந்தப் பணம் எதுவுமில்லாமல் ரியல் எஸ்டேட் பிஸினசில் நீங்கள் நுழைவது சாத்தியமில்லை. அதனால் அலச வேண்டும்.

வெறும் கையால் முழம் போடும் திறமையுள்ளவரா நீங்கள்? அப்படி என்றால் பிரச்சினை இல்லை. ரியல் எஸ்ட்டேட் வியாபாரத்தில் கமிஷன் அடிப்படையில் நீங்கள் வேலை செய்யலாம். கல்லை எறிவோம்; மாங்காய் விழுந்தால் விழுகட்டும். விழாவிட்டால் கல்லிற்குப் பஞ்சமா என்னும் மனதைரியம்தான் மட்டும் அதற்குப் போதும்!

வெறும் கையால் முழம் போட ஜாதகம் எதற்கு? அதற்குச் ஜாதகத்தையே பார்க்க வேண்டாம்!:-)))))
-------------------------------------------
email No.50
லெட்சுமணன், சென்னை

அன்புள்ள வாத்தியார் அவர்களுக்கு வணக்கம்,
இது நமக்கு நாமே திசா புத்தி பலனை அறிந்து கொள்ளும் குறுக்கு வழி பற்றிய கேள்வி:
மேஷ லக்னம்,
நாலில் ராகுவும் குருவும். நாலில் 31 பரல்,
குருவின் சுய பரல் 5 , சந்திரனின் சுய பரல் 4 , சனியின் சுய பரல் 3
ராகு திசைக்கு சனியின் அஷ்ட வர்க்கத்தை பார்க்க வேண்டுமா,
ராகு நின்ற வீட்டு அதிபதி சந்திரன் அஷ்ட வர்க்கத்தை பார்க்க வேண்டுமா,
ராகுவோடு குரு சேர்ந்து இருக்கிறாரே ஆகையால் குரு அஷ்ட வர்க்கத்தை பார்க்க வேண்டுமா? ரகுவின் சுய பரல் எது?ராகு திசையின் ஒவ்வொரு புத்தியின் பலனை நமக்கு நாமே தெரிந்துகொள்ள அந்த அந்த கிரகங்கள் இருக்கும் வீட்டில் உள்ள பரல்களை வைத்து தெரிந்துகொள்ளலாம் அல்லவா? சற்று விளக்கமாக சொல்லவும்
=Lakshmanan

ராகுவிற்கு சொந்த வீடும் கிடையாது. பரல்களும் கிடையாது. ஆகவே ராகுவிற்குப் பரல்களை வைத்துப் பலனை அறிய முடியாது. ராகு திசையில் அடுத்தடுத்து வரும் புத்திகளை வைத்துத்தான் பலன்களை அறிய முடியும்.

பொதுவாக ராகு மகா தசை 80% ஜாதகர்களுக்கு மகிழ்ச்சியைத்தராது. நன்மைகள் அதிகமாக இருக்காது. தொல்லைகளே மிகுந்து இருக்கும். படுத்தி எடுக்கும். ஒரேயடியாக படித்தி எடுக்குமா என்றால். அப்படி இருக்காது. 18 வருடங்கள் தொடர்ந்து தொல்லைகள் என்றால் ஜாதகன் நொடிந்து போய் விடமாட்டானா? அதனால் இடையிடைய வரும் வேறு கிரகங்களின் புத்திகளில் ஜாதகன் சற்று பெருமூச்சு விட்டுக்கொள்ளலாம். தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ளலாம். அதேபோல ராகுதசை 18 ஆண்டுகளில் செய்யும் கெடுதல்களை கேது 7 ஆண்டுகளில் கொடுத்து விடுவார்.

ராகு தசை ராகு புத்தி - 2 ஆண்டுகள் 8 மாதங்கள் 13 நாட்கள்
ராகு தசை கேது புத்தி - 1 ஆண்டு 18 நாட்கள்
ராகு தசை சூரிய புத்தி - 10 மாதங்கள் 24 நாட்கள்
ராகு தசை சந்திர புத்தி - 1 ஆண்டு 6 மாதங்கள்
ராகு தசை செவ்வாய் புத்தி - 1 ஆண்டு 18 நாட்கள்
ஆக மொத்தம் 7 ஆண்டுகள் 2 மாதங்கள் 13 நாட்கள்
கேடான பலன்கள் அதிகமாக இருக்கும்

ராகு தசை குரு புத்தி - 2 ஆண்டுகள் 4 மாதங்கள் 24 நாட்கள்
ராகு தசை சனி புத்தி - 2 ஆண்டுகள் 10 மாதங்கள் 6 நாட்கள்
ராகு தசை சுக்கிர புத்தி - 3 ஆண்டுகள்
ராகு தசை புதன் புத்தி - 2 ஆண்டுகள் 6 மாதங்கள் 18 நாட்கள்
ஆக மொத்தம் 10 ஆண்டுகள் 9 மாதங்கள் 18 நாட்கள்
ஒரளவிற்கு நன்மையான பலன்கள் இருக்கும்

பரணி, பூரம், பூராடம் (சுக்கிரனின் நட்சத்திரங்கள்)
கார்த்திகை, உத்திரம், உத்திராடம் (சூரியனின் நட்சத்திரங்கள்)
ரோகிணி, அஸ்தம், திருவோணம் (சந்திரனின் நட்சத்திரங்கள்)
மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் (செவ்வாயின் நட்சத்திரங்கள்)
திருவாதிரை, சுவாதி, சதயம் (ராகுவின் நட்சத்திரங்கள்)
ஆக மொத்தம் 15 நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் ராகு தசையைச் சந்திக்க நேரிடும்

புனர்பூசம், விசாகம், பூரட்டாதி (குருவின் நட்சத்திரங்கள்)
பூசம், அனுஷம், உத்திரட்டாதி (சனியின் நட்சத்திரங்கள்)
ஆயில்யம், கேட்டை, ரேவதி (புதனின் நட்சத்திரங்கள்)
அசுவினி, மகம், மூலம் (கேதுவின் நட்சத்திரங்கள்)
ஆக மொத்தம் 12 நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் கேது தசையைச் சந்திக்க நேரிடும்

சிலர் தங்களின் வயது காரணமாக இரண்டு (அதாவது ராகு & கேது) தசைகளையுமே சந்திக்க நேரிடும். அப்படிச் சந்திக்க நேரிடாதவர்களுக்குக் கூட ஒவ்வொரு கிரகத்தின் மகாதசையிலும் ராகு & கேதுவின் புத்திகளைச் சந்திக்க நேரிடும்.

மிதுனம், கன்னி, துலாம், தனுசு, கும்பம், மீனம் ஆகிய ராசிகள் ராகு & கேதுவிற்கு நட்பு ராசிகளாகும்.விருச்சிகம் உச்ச இடம். ஜாதகத்தில் இந்த 7 இடங்களில் இருக்கும் ராகு & கேதுவால் ஜாதகனுக்கு அதிகத் தொல்லைகள் இருக்காது

மேஷம், கடகம், சிம்மம், மகரம் ஆகிய ராசிகள் ராகு & கேதுவிற்குப் பகையான இடங்களாகும். ரிஷபம் நீச இடமாகும். ஜாதகத்தில் இந்த 5 இடங்களில் இருக்கும் ராகு & கேதுவால் ஜாதகனுக்கு அதிகத் தொல்லைகள் இருக்கும்.

இவை அத்தனையும் பொதுப்பலன்கள். புத்தி நாதர்கள் தங்கள் சுயவர்க்கத்தில் 5ம் அதற்கும் மேற்பட்ட பரல்களைக் கொண்டிருந்தால், கெடுதல்கள் வெகுவாகக் குறைந்துவிடும் இவை அத்தனையையும் அலசித்தான் பலனைப் பார்க்க வேண்டும்.

குறுக்கு வழி?

தசா நாதனும், புத்திநாதனும் (அவற்றிற்கு உரிய கிரகங்கள்) ஜாதகத்தில் ஒருவருக்கொருவர், 6/8 பொஸிசனில் (நிலைமையில்) அல்லது 1/12 பொஸிசனில் (நிலைமையில்) இருப்பது நன்மையைத் தராது. இது அத்தனை தசா/புத்திகளுக்கும் பொருந்தும்!

விளக்கம் போதுமா நண்பரே?
-------------------------------------------
(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்
அடிக்குறிப்பு: வாத்தியார் வெளியூர்ப்பயணம். ஆகவே வகுப்பறைக்கு 2 நாட்கள் விடுமுறை. அடுத்த பாடம்.14.1.2010 அன்று வெளியாகும்!


வாழ்க வளமுடன்!

9.1.10

Doubt: வேறு ஒரு மயில் கிடைக்காதா என்ன?

++++++++++++++++++++++++++++++++++++++++++++
Doubt: வேறு ஒரு மயில் கிடைக்காதா என்ன?

Doubts: கேள்வி பதில் பகுதி பதினொன்று!

நீங்களும் உங்கள் சந்தேகங்களும் - பாடம் பதினொன்று!

Question & answer session
கேள்வி பதில் வகுப்பு
---------------------------------------------------
email No.43
ஆண்டெஸ் ராஜ்!
வணக்கம் ஆசிரியரே..

1.மீன லக்ன ஜாதகத்திற்கு சுக்ரன் இரண்டு துஷ்ஸ்தானன்களுக்கு அதிபதி அல்லவா,அவர் ஆறாம் வீட்டில் மறைவது நல்லதா.மேலும் நவாம்சத்திலும் கடகத்தில் நீசமாகிறார்.சுயவர்க பரல்களும் 3 தான் உள்ளது.ஆனால் அவருடன் யோகாதிபதி செவ்வாயும் ஆறாம் வீடான சிம்மத்தில் உள்ளார்.
சுக்ரன் என் ஜாதகத்தில் very weak positionla இருக்கிறார் .என் சந்தேகம் என்னவென்றால் மீன லக்னத்திற்கு சுக்ரன் தீயவர் தானே,அவர் weak positionla இருக்கிறது நல்லதா ???....இப்போது ராகு திசை சுக்ர புத்தி நடக்கிறது..இந்த சுக்ர புத்தியில் காதல் கனிந்து வாடியும் விட்டது..Is it happened because of weak sukran.காதல் வாழ்க்கை காலி தானா வாத்தியாரே.ஒரே குழப்பமாக உள்ளது

சுக்கிரன் கடகத்தில் எப்படி நீசமடைவார். என்னைக் குழப்புகிறீர்களே? கனிந்து வந்த காதலை வாட விட்டது உங்கள் தவறு. வேறு ஒரு மயில் கிடைக்காமலா போய்விடும்? முயற்சி செய்யுங்கள். கிடைத்தால் உடனே மணந்து கொண்டுவிடுங்கள். மயில் கிடைக்காவிட்டால், உங்கள் பெற்றோர்கள் பார்க்கும் ஒரு குயிலை மணந்து கொள்ளுங்கள். சுக்கிரபுத்தி நடப்பதால் இதைச் சொல்கிறேன்!

2. லக்னத்தில் 35 பரல்கள் ,லக்னாதிபதி சுய வர்க்கத்தில் 6 பரல்கள்,ஏழாம் வீட்டில் 25 பரல்கள் ,ஏழாம் அதிபன் அமர்ந்த ஐந்தாம் வீட்டில் 23 பரல்கள்,புதன் சுயவர்க பரல்கள் 2...ஐந்தாம் அதிபன் சந்திரன் ரோகினி நட்சத்திரத்தில் உச்சமாக சுயவர்க்கத்தில் 8 பரல்களுடன் உள்ளார்.பலன் என்ன ஆசிரியரே..சிரமத்திற்கு மன்னிக்கவும் ..
நன்றி ஆசிரியரே..
ராஜ்

மூன்று வீடுகளை வைத்துக் கும்மி அடித்திருக்கிறீர்கள். அதுவும் கும்மிப்பாட்டு மூன்று மொழிகளில் கலந்து இருக்கிறது. லக்கினம், ஐந்தாம் வீடு, ஏழாம் வீடு என்று நீண்ட பாடலாக இருக்கிறது. என்ன பலன் எதிர்பார்க்கிறீர்கள் என்று சொல்லாமல் விட்டு விட்டீர்களே? பலன் என்ன என்று கேட்பது எந்த விதத்தில் நியாயம்? உங்களுக்கு என்ன நோய் என்ண்வென்று சொல்லாமல், மருத்துவரிடம் சென்று, எனக்கு என்ன நோயென்று சொல்ல முடியுமா? என்று கேட்பதைப் போல் அல்லவா இருக்கிறது உங்கள் கேள்வி!
-------------------------------------------
email No.44
G.சீனிவாசன்
Dear sir,
with your permission i would like to ask some questions

1.how will be the lagna lord period if he is placed in eigth place in exalted position/friend`s place/malefic position/neetcha ? as perception from reading during lagne lord period wherever he is there he will confer good result for nativity.

லக்கினாதிபதி எட்டில் இருந்தால் அவருடைய தசா/புத்தி எப்படி இருக்கும் என்பது வரை உங்கள் கேள்வி சரி. அது உச்ச வீடாக இருந்தால் என்ன பலன்? நட்பு வீடாக இருந்தால் என்ன பலன்? பகை வீடாக இருந்தால் என்ன பலன்? நீச வீடாக இருந்தால் என்ன பலன்? என்று ஏன் நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கிறீர்கள்? சென்னையில் வீடு வாங்கலாமென்று இருக்கிறேன். போயஸ் கார்டனில் வாங்கினால் என்ன விலை இருக்கும்? டி.நகரில் வாங்கினால் என்ன விலை இருக்கும்? அடையார் க்ரீன்வேஸ் சாலையில் வாங்கினால் என்ன விலை இருக்கும்?வேளாச்சேரியில் வாங்கினால் என்ன விலை இருக்கும்? அம்பத்தூரில் வாங்கினால் என்ன விலை இருக்கும்? ஸ்ரீஇபெரும்புதூரில் வாங்கினால் என்ன விலை இருக்கும்? என்று கேட்டுக்கொண்டே போனால் என்ன சொல்வது? சொல்லுங்கள்? பொட்டில் அடித்த மாதிரிக் கேள்வி சின்னதாகவும், கேட்க நினைப்பதைச் சொல்வதாகவும் இருக்க வேண்டாமா? Be specific with your question!

லக்கினாதிபதி ஜாதகனுக்கு எப்போதும் நன்மைகளைச் செய்வார் என்பது பொதுவிதி. ஜாதகத்தில் அவருடைய பொஸிசனை வைத்துப் பலன்கள் மாறாதா? மகனைச் சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே என்பது தந்தைக்கான பொது விதி! அதற்காக முப்பது லட்சரூபாய் capitation fee கொடுத்து மகனுக்கு மருத்துவக் கல்லூரியில் அவரால் எப்படி சீட் வாங்கித் தரமுடியும்? அல்லது எட்டு லட்ச ரூபாய் செலவழித்துப் பொறியியற் கல்லூரியில் அவரால் எப்படி சீட் வாங்கித் தரமுடியும். அவர் ஒரு சாதாரணக் குடிமகனாக (அந்தக் குடிமகன் அல்ல) குறைந்த ஊதியத்திற்கு இடுப்பு ஒடிய வேலை செய்துகொண்டிருப்பவரென்றால் அதெல்லாம் எப்படி சாத்தியமாகும்? மாநிலத்திலேயே முதல் 100 பேர்களில் ஒருவன் எனும் தரவரிசையில் ஒருவனாகப் படித்து மகனல்லவா அதற்கு முயற்சி செய்ய வேண்டும். அதுபோல ஜாதகத்தில் வித்யாகாரகன், அறிவுக்குக் காரகன், மனகாரகன் எல்லாம் சேர்ந்து நன்றாக இருந்தால்தானே ஜாதகன் அதைச் சாதிக்க முடியும். ஜாதகத்தில் பலன்கள் எல்லாம் கூட்டு முயற்சி. ஒரு விதியை மட்டும் வைத்துக் கொண்டு ரீல் ஓட்ட முடியாது. லக்கினகாரகனும் தனியாக ரீல் ஓட்ட முடியாது. தனியாக ஓட்டமுடிந்தால் அவன் ஒருவனே போதுமே சாமி. மற்ற கிரகங்கள் எல்லாம் எதற்கு?

2.if mars is lagna lord, if it is placed in sixth house how that will work as my perception from lessons mars is malefic planet & any planet positioned in sixth will not confer good result except saturn & ragu.

நீங்களே கேள்வியையும் கேட்டு, பதிலையும் சொல்லிவிட்டீர்கள். நான் சொல்வதற்கு என்ன இருக்கிறது?

3.sixth &eigth combination of major period & sub period lord will not give result even in the case of lagna lord & rasi lord.my question is any one has the period of Jupiter and sub period of mercury but both are in sixth/eighth in respective of each.
thanks
g.srinivasan

நீங்களே கேள்வியையும் கேட்டு, பதிலையும் சொல்லிவிட்டீர்கள். நான் சொல்வதற்கு என்ன இருக்கிறது? நான் நன்றியை மட்டும் சொல்லிக் கொள்கிறேன்!
............................................................................
email No. 45
ரதி தேவி

Dear Sir,

Your class is simply superb. Your doubt clarification is very efficient and useful.Your approaching method to explain subject is extra ordinary.Every one can understand easily.

வகுப்பறையில் மூன்று வருடங்களாகப் பாடங்களை நடத்திக் கொண்டி ருக்கிறேன். பாடங்களில் கேட்கப்படும் சில சந்தேகங்களைப் பார்த்தால் அப்படித்தெரியவில்லையே அம்மணி? (சகோதரி)

1.My doubt is that Rasiyil 10m idathu athibathi sani 5l irunthu,Amsathil 8l neechamahi uccha suriyanudan sernthirunthal yeena vilaivu?. in amsathil, Neecha panga raja yogam seyalbaduma? 10 place paralgal 31 and suyavarga paral 3. Is it good for job?
please clarify my doubts sir?
Your student,
Rathi Devi.

இங்கே சனியை மட்டும் பார்ப்போம். அவன் பத்தாம் இடத்து அதிபதி. நீசபங்க ராஜயோகம் பெற்றிருக்கிறான். அதோடு பத்தாம் வீட்டில் 31 பரல்கள் உள்ளன. உங்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். அதில் படிப்படியான உயர்வுகளும் இருக்கும். சுயவர்க்கப்பரல்கள் குறைவாக இருப்பதால், நீங்களும் கிடைக்கும் வேலையில் உண்மையாகவும், நேர்மையாகவும் உழைக்க வேண்டும். அப்போதுதான் உரிய அங்கீகாரம் கிடைக்கும் உரிய நேரத்தில் கிடைக்கும்
------------------------------------------------------
email No. 46
JP.தயாள்

Respected Sir,

1.Earlier u 've said ,Bhukthi and athram will have equal power What about the dasa ? which will dominate ?

அந்தரமும், புத்தியும் சேர்ந்ததுதானே சாமி தசை என்பது. அவை இரண்டும் இல்லாமல் தசை எப்படி இருக்கும் சொல்லுங்கள்?

2.Generally each grahga has two houses ? One good and other bad ( for dhaush lagna , 5 and 12 th house lord is sevvai , simmarly 6 and 11 house lord is sukran) How these house owners perform ??

கலவையான (mixed result) பலன்களைக் கொடுக்கும்.

3.Will lord of 12 owner (sevvai )is in eighth ( kadagam) and getting neesam, is it nesabangam ? is it comes under any yogam ?Is it good or bad ?

நீசபங்கத்தைப் பற்றி நீங்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்று எண்ணுகிறேன். 12ஆம் இட அதிபதி எட்டில் வந்து அமர்வதனாலேயே நீசபங்க யோகம் என்று எப்படிச் சொல்லமுடியும்? ஒரு உச்சனும், ஒரு நீசனும் ஒன்றாகச் சேர்ந்தால் மட்டுமே நீசபங்க யோகம் மலரும்! அதாவது கிடைக்கும். ஒரு வாலிபனும், ஒரு கன்னியும் சேர்ந்து மணந்து கொண்டால்தான் அதற்குத் திருமணம் என்று பெயர். அதைப்போல என்று வைத்துக் கொள்ளூங்கள்

4.Does rasi athapathi has any role ?

விடிய விடிய ராமாயணம் கேட்டுவிட்டு விடிந்தவுடன், ராசி அதிபதிக்கு என்ன ரோலென்று கேட்கிறீர்கள். சீதைக்கு ராமர் சித்தப்பா என்று ஒருவன் சொன்னானாம், அந்த ரோலை ராசியதிபதிக்குக் கொடுத்துவிடுவோம். மொத்தம் 300 பாடங்களை நடத்தியிருக்கிறேன். இன்னும் உங்களுக்கு முக்கிய பாத்திரங்களான ராமர், சீதை, லெட்சுமணன், ஊர்மிளாவை எல்லாம் தெரியவில்லை என்றால் என்ன செய்வது? மீண்டும் பத்துமுறை ராமாயணக்கதையைக் கேளுங்கள். அதாவது பழைய பாடங்கள் அனைத்தையும் குறைந்தது மூன்று முறைகளாவது படியுங்கள்! அப்போதுதான் ஜோதிடத்தின் அடிப்படை விஷயங்கள் புரியும்.1.

5.If the dasa of the particular planet is happening ? whether the suya varaga paral of the planet alone counts his performance of the dasa ?Or astavarga paral of his own house counts ? Or astavarga paral of the house where he is counts? which will dominate?If suya varga paral is less , and astavaraga paral is own house is more ? will this have any change ?

பெண்ணுக்கு அழகைத் தருவது எது? மலர்ந்த முகமா? சிவந்த நிறமா? வனப்பான மேனியா? இளமை ததும்பும் வயதா? கிறங்க அடிக்கும் விழிகளா? கொஞ்சும் அதரங்களா? மயக்கும் பேச்சா? எதைச் சொல்வது? நீங்கள் இதற்குப் பதில் சொல்லுங்கள். நான் அதற்குப் பதில் சொல்கிறேன்:-)))))

pl bear my questions and if iam rong
thanks and regards
Dayal

வேறுவழி? பொறுமையைத் துணையாகக் கொண்டுள்ளேன்!
-----------------------------------
(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!

8.1.10

Doubt: பெரியமாமா வீட்டுச்சொத்து எப்போது கிடைக்கும்?

===========================================
Doubt: பெரியமாமா வீட்டுச்சொத்து எப்போது கிடைக்கும்?

Doubts: கேள்வி பதில் பகுதி பத்து!

நீங்களும் உங்கள் சந்தேகங்களும் - பாடம் பத்து!

Question & answer session
கேள்வி பதில் வகுப்பு
---------------------------------------------------
email No.39
S. உமா

வணக்கம் சார்,

கேள்வி பதில் பகுதி மிகவும் உபயோகமாக உள்ளது. நிறைய கேள்விகள் முன்னர் கேட்க நினைத்து, தொந்தரவாக இருக்குமோ என நினைத்து கேட்காமல் விட்டிருக்கிறேன்.

1. ஒரு கேள்விக்கான விடையில், மாந்தி மற்ற கிரஹங்களின் பார்வையை ஏற்காது எனக் கூறியுள்ளீர்கள். அப்படி என்றால் குரு பார்வை இருந்தாலும் மாந்தி இருக்கும் இடத்திற்கான பலனை அனுபவித்துதான் தீரவேண்டும் இல்லையா?

ஆமாம்! அவர் இருக்கும் வீட்டின் மூன்று காரகத்துவங்களில் ஒன்றுதான் கெட்டிருக்கும்! அதையும் பார்க்க வேண்டும்!

2. மகர லக்னத்திற்கு சூரியன் 8ம் இட அதிபதி. நவாம்சத்தில் அவர் சுக்கிரனு டன் சேர்ந்து 7 ல் இருந்தால், அதாவது 8 க்கு 12ல் இருந்தால், அவரால் தீமை இல்லை என்று எடுத்துகொள்வதா?

அவர் எட்டாம் இட அதிபதி. (Owner of a malefic house for Magara Lagna) அவர் எங்கே சென்று அமர்ந்தாலும், அமர்ந்த இடத்திற்குத் தீமைதான்.

3. ராகு சனியைப் போல செயல்படுவார் என்று சொல்லியிருக்கிறீர்கள். கும்பத்தில் ராகு இருந்தால், சனி அங்கே உச்சம் / ஆட்சி பெற்றுள்ளார் என்று அர்த்தமா? அதை நன்மை என்று எடுத்துகொள்வதா?

அதெப்படி அம்மணி? அப்பா மாதிரி செயல்படுவார் என்பதற்காக, அவர் அப்பா ஆக முடியுமா? ராகுவிற்கு எங்கேயும் ஆட்சி கிடையாது. விருச்சிகத்தில் மட்டும்தான் உச்சம் பெறுவார்!

4. லக்னத்தில் சனி இருந்தால் சோம்பேறியாக இருப்பார் என்று கூறியுள்ளீர் கள். அவர் லக்ன அதிபதியாக இருந்தால்?

மகர லக்கினம் மற்றும் கும்ப லக்கிங்களுக்கு சனி அதிபதி. அவர் அதிபதியாகி விடுவதால், தனக்குத்தானே (ஜாதகனுக்கு) சோம்பேறித்தனம் வராமல் பார்த்துக்கொள்வார்!

5. ஒருவர் ரியல் எஸ்டேட் பிசினெஸ் செய்வதாக இருந்தால், செவ்வாய் நீச்சமாக இருந்தாலும் செய்யலாமா? செவ்வாய் பூமி காரகன் என்பதால் கேட்கிறேன்.

செவ்வாய் நீசமடைந்திருந்தால், இடம் வாங்கி வைத்திருந்து பின்னால் காசு பார்க்கலாம் என்பது நடக்காது. வாங்கி வைத்த இடத்திற்கு ஏதாவது வில்லங்கம் வந்து சேரலாம். நான்காம் அதிபதியையும் கவனியுங்கள்.
அவர் நன்றாக இருந்தால், செய்யலாம். ஆனால் அதற்கு பதினொன்றாம் அதிபதியும் துணை வரவேண்டும். எல்லாம் ஒன்றுக்குள் ஒன்று சம்பந்தப்பட்டவை.
As the 11th lord is in the 4th, the native accumulates via estates, produce of the earth and rentals.The technical and mechanical expertise given by Mars also calls for builders, designers, surgeons, engineers and professional dealing in real estate.

6. 11 அதிபதி செவ் 8 ல், கேதுவுடன் சேர்ந்து, அதாவது டபுள் செவ்வாய் சேர்ந்து ஓர் இடத்தில் (நவாம்சத்தில்) ஆனால் குருவின் 5 ம் பார்வை. குருவின் பார்வை எந்த அளவு இந்த அமைப்பில் தீய பலனை குறைக்கும்?

பார்வை என்பது மந்திரக்கோலாகச் செயல்பட்டு மொத்தத் தீமையையும் குறைத்து அப்படியே நன்மையாக மாற்றித் தராது.தீமை குறையும். ஆனாலும் தொடரும். எட்டாம் இடத்தில் அமர்ந்ததற்கு ஒரு அர்த்தம் வேண்டாமா?

7.இன்னும் நிறைய கேள்விகள் உள்ளன. மீண்டும் எழுதுகிறேன். ஆலாசியம் அவர்கள் கூறியது போல், வாரம் 2 நாள் கேள்வி பதிலுக்கு ஒதுக்கினால் என் போன்ற அரைகுறை ஜோதிடர்கள் முழுமையடைய உதவும்.

மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கலாம். பிறகு முடிவு எடுக்கலாம்!

Thanks & regards,
S. UMA
-------------------------------------------
email No.40
SP. கருப்பையா

அய்யா வணக்கம்.

1. நீச பங்கம் 6,8,12 ல் இருந்தாலும் அந்த யோகம் கிடைக்குமா அதன் பலன் நன்மையா? தீமையா?.

நீசபங்க ராஜ யோகத்தைப் பற்றிக்கேட்கிறீர்களா? 6, 8,12 ஆம் இடங்கள் மறைவிடங்கள். தீய இடங்கள் (inimical places) யோகம் அங்கே போய் உட்கார்ந்து கொண்டால் பலன்கள் குறைந்துவிடும்.

2.மேலும் 6,8, 12 ல் பரல்கள் < 30 இருந்தால் அதன் பலன் நன்மையா? தீமையா?.

6, 8,12 ஆம் இடங்கள் மறைவிடங்கள். தீய இடங்கள் (inimical places) அங்கே பரல்கள் அதிகமாக இருப்பதால் நன்மை என்று எப்படிச் சொல்ல முடியும். ஒரே ஒரு நன்மை உண்டு. அதிகப் பரல்கள், ஜாதகனுக்குத் தாக்குப்பிடிக்கும் சக்தியைக் கொடுக்கும்!

இப்படிக்கு
SP.karuppiah
KKDI
............................................................................
email No. 41
சுரேந்திரன் சங்கர்

அன்புள்ள ஆசானே,

01. கோணாதிபதி கேந்திரத்தில் இருந்தால் அது யோகத்தில் வருமா ?

குழப்பியிருக்கிறீர்களே சாமி! கோணாதிபதி எதற்காகக் கேந்திரத்தில் இருக்க வேண்டும்? கோணாதிபதியாகி விட்டவரை யார் அங்கே அனுப்பி வைத்தார்கள்? கோணாதிபதி எனும் பதவி கிடைத்த பிறகு, பெட்டி
படுக்கைகளைத் தூக்கிக் கொண்டு அதைவிடக் கீழான பதவிக்கு அவர் எப்படிப் போவார்? இதையெல்லாம் யோசித்தீர்களா?

சரி, உங்கள் கேள்வியைச் சற்றுப் புரியும்படியாகக் கேட்போம்: லக்கினத்திற்கு 5, 9ற்கு உரிய கிரகம் 4, 7, 10ஆம் இடங்களில் அமர்ந்தால் என்ன யோகம்? அதாவது திரிகோணங்களுக்கு உரிய கிரகம் கேந்திரங்களில் அமர்ந்திருக்கும் நிலைமை!
5, 9ல் அமர்ந்தால் திரிகோண யோகம்.
4,7,10ல் அமர்ந்தால் கேந்திர யோகம்.
அததற்கு உரிய பலன் கிடைக்கும்.
பலன்களுக்குப் பழைய பாடங்களைப் படியுங்கள். மீண்டும் அதை இங்கே மொத்தமாக எழுதுவது உசிதமாக இருக்காது!

கோணத்தில் இருந்து தொலைக்காமல் கேந்திரத்திற்குப்போனதால், கோணத்துப் பலனையும் கேட்டு வாங்க முடியுமா என்றால், முடியாது! சின்ன மாமன் வீட்டில் வாழ்க்கைப்பட்ட பெண்ணிற்கு, பெரிய மாமன் வீட்டுச்
சொத்துக்கள் கிடைக்காது! எந்தக் கோர்ட்டுக்குப் போனாலும் கிடைக்காது!
இப்போது அர்த்தமாகியதா சாமி?

02. அப்படி கோணாதிபதி கேந்திரத்தில் இருந்து, கேந்திரம் பகை விடாகவோ/ நீச்ச விடாக இருந்தால் எதேனும் பலன் உண்டாகுமோ ?

சின்ன மாமன் வீடு நீச வீடாக இருந்தால், அங்கே செல்லும் பெண், கடைசி வரை பற்றுப் பாத்திரம் தேய்த்து வயிற்றைக் கழுவிக்கொண்டு மனதையும் தேற்றிக்கொண்டு சின்ன மாமா வீட்டில் இருக்க வேண்டியதுதான்.
ஒன்றும் பிரயோஜனமில்லை! பகை வீடாக இருந்தால் கொஞ்சம் பரவாயில்லை. சின்ன மாமா வீட்டில் அந்த வேலைக்கெல்லாம் ஆள் வைத்திருப்பார்கள். இருந்தாலும் நிலைமை சுமார்தான்!
------------------------------------------------------
email No. 42
அருள்ராஜ் விக்டர்

ஐயா
பாடங்களோ அருமை. கேள்வி‍‍ பதில்களோ மிக மிக அருமை.

1. ஒரு சிறு சந்தேக‌ம். குரு சுப‌ கிர‌க‌ம். ஆனால் ப‌கை வீட்டினில் (ரிசபம் 8 ஆம் வீடூ) இருக்கும்போது ஜாத‌க‌னுக்கு தீமை செய்வாரா அல்ல‌து ந‌ன்மை குறைவாக‌ செய்வாரா ? மேலும் அந்த‌ ஜாத‌க‌னுக்கு ராசி நாத‌னாக‌ (த‌னுசு ராசி) இருக்கும் ப‌ட்ச‌த்தில் அவரது பலன்கள் எப்படி இருக்கும் ? குரு த‌சை எப்ப‌டி
இருக்கும்? நன்றி ஐயா
விக்ட‌ர்

குரு முதல்தர சுபக்கிரகம். அவர் எங்கே இருந்தாலும், எந்த இடத்தைப் பார்த்ததாலும் நன்மையையே செய்வார். ஜாதகத்தில் அவருக்குக் கிடைத்திருக்கும் பாத்திரத்தைவைத்து (சமையல் செய்யும் பாத்திரமல்ல)
அதற்குத் தகுந்த சீன்களில் மட்டும் வந்து போவார். ராஜபார்ட் என்றால் அதற்குத் தகுந்தது மாதிரி. தமாத்துண்டு ரோல் என்றால் அதற்குத் தகுந்தமாதிரி என்று வைத்துக்கொள்ளுங்கள். எட்டாம் வீடு அல்லது
12ஆம் வீடுகளில் அமர்ந்திருக்கும் குரு அவருடைய தசாபுத்தி பெரிய பலன்களைத் தரமாட்டார். ஆனால் அவருடைய மகாதசையில் வரும் வேறு கிரகங்களின் புத்தி, அதன் நாதர்களைவைத்துப் பலன்களைத்தரும்!
ஆகவே அதையும் பார்க்க வேண்டும். குறுக்கு வழி மற்றும் ஒருவரிக் கதையெல்லாம் ஜோதிடத்தில் கிடையாது!
-----------------------------------
(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!

6.1.10

Doubt: பாட்டியாலா சுடிதாரும் காஞ்சிபுரம் பட்டுச்சேலையும்!

-----------------------------------------------------------------
Doubt: பாட்டியாலா சுடிதாரும் காஞ்சிபுரம் பட்டுச்சேலையும்!

Doubts: கேள்வி பதில் பகுதி ஒன்பது!

நீங்களும் உங்கள் சந்தேகங்களும் - பாடம் ஒன்பது!

Question & answer session
கேள்வி பதில் வகுப்பு
----------------------------------------------------
email No.36
சுந்தரி பரமசிவம்

1. மாந்திக்கு வர்கோத்தமம் உண்டு என்றால் அதன் செயல்பாடு என்ன?

தமிழ்நாட்டில் பல ஜோதிடர்கள் மாந்தியை ஆட்டத்திற்கு சேர்த்துக் கொள்வதில்லை! அதில் அவருக்கு பெளலிங் சான்ஸ் பத்து ஓவர்களுக்கு மேல் (அதாவது வர்கோத்தம சான்ஸ்) இருக்கிறதா என்று தெரியவில்லை!
உங்கள் சந்தோஷத்திற்காக இருப்பதாக வைத்துக்கொள்வோம். என்ன ஆகும்? கள்குடித்த குரங்கின் ஆட்டம்தான்! பெளன்சராக வந்து விழுகும். ஹெல் மட்டை யும் மீறி மண்டையில் அடிபடும் வாய்ப்பு ஜாதகனுக்கு அப்போது கிடைக்கலாம்!

2.புனர்பூ தோஷம் என்பது சந்திரன் சனியின் சேர்க்கை இது எப்பொழுதும் துன்பத்தை தான் கொடுக்குமா? கடமையை செய்யக் கடும் போராட்டத்தை கொடுப்பதுடன் தள்ளி தள்ளி வைத்து விடுகிறதே? இதன் தாக்கம் லக்கனத்திற்கு ஏற்றார்ப் போல மாறுபடுமா?

முதலில் புனர்பூ தோஷம் என்பது என்னவென்று பார்ப்போம்

சந்திரனுக்கும், சனிக்கும் ஜாதகத்தில் உள்ள தொடர்பு (குறிப்பாக சேர்க்கை அல்லது பரிவர்த்தனை) திருமணவாழ்வில் பல சிரமங்களை/துன்பங்களை உண்டாக்கும். தலைவலி, பய உணர்வு, பரபரப்பு, படபடப்பு போன்றவையும் அதன் உப விளைவுகள்தான்

(Connection between Saturn and Moon is known as Punarphoo Dosham. Whenever Saturn has got any connection what-so-even with Moon, there will be some obstacle or impediment, not only during negotiation but also at the time of fixation and even at the time of celebration of the marriage. This connection between Moon and Saturn causes delay)

இந்த அமைப்பில் சூரியன் உள்ளே நுழைந்தால் (அந்த இரண்டு கிரகங்களுடன் சூரியன் இருந்ததாலும், அல்லது அவைகளைத் தன் பார்வையில் வைத்திருந்தாலும்) புனர்பூ தோஷம் நீங்கிவிடும்.

connection of Sun with the Punarphoo causing planets (Saturn and Moon) results in cancellation of Punarphoo. Precisely speaking, cancellation takes place due to following conditions:

1. Sat or Moon or both in association with Sun in one sign (could involve even two houses)
2. Sat or Moon in the star of Sun
3. Sun is in a star, lord of which is near either Moon or Saturn.
4. Sun is in the star of either Moon or Sat
5. Any planet near the Moon or Saturn, but is posited in the star of Sun
6. Sat or Moon is in the sub-sub of Sun

3.சிம்ம லக்கனகாரர்களுக்கு சந்திரன் 12ஆம் அதிபதி சனி 6 ஆம் அதிபதி இவர்கள் இருவரும் சேர்ந்து மீனத்தில் 8ல் விற்றிருந்தால் அவை புனர்பூ தோஷத்தில் சேருகிறதா அல்லது விபரித ராஜயோகத்தில் சேருகிறதா? விபரித ராஜயோகம் புனர்பூ தோஷத்தினால் செயலிழந்து விடுகிறாதா? அப்படி செயல் இழக்க வில்லையென்றால் சந்திர மகா தசை/சனி மகாதசையில் விபரீத ராஜயோகத்தைப் பெற முடியுமா?

ஒரு படத்தில் நாகேஷ் சொல்வார்: ”மேலாக ஊற்றினால் ரசம். கலக்கி ஊற்றினால் சாம்பார்” ஒரு அமைப்பில் யோகமும், தோஷமும் கலந்த பலன் எனும் போது இரண்டுமே இருக்கும். ஒரு ஜாதகத்திற்கு 36 விதமான பலன்கள் உண்டு. திருமண வாழ்க்கை என்பது அதில் ஒன்று. கணவன்/மனைவி என்பது இரண்டு. அதில் கிடைக்கும் இன்பம்/துன்பம் என்பது மூன்று. அந்த மூன்றை மட்டும்தான் புனர்பூ கையில் எடுத்துக்கொள்ளூம். அந்த மூன்றைத்தவிர மீதம் 33 இருக்கிறதே அதில் வேறு ஒரு மூன்றை வி.ரா. யோகம் கையில் எடுத்துக் கொள்ளும். அதற்கான நன்மைகளைச் செய்யும்.

ஆகவே குழப்பிக்கொள்ளாதீர்கள். பாட்டியாலா சுடிதார் வேறு, காஞ்சிபுரம் பட்டுச் சேலை வேறு. இரண்டும் ஆடைகளே! ஆனால் இரண்டையும் ஒன்றாக உடுத்திக்கொள்ள முடியாது. விளக்கம் போதுமா சகோதரி?
---------------------------------------------------------
email No.37
ஆர். கதிரவன்

1. செய்கின்ற வேலைக்கும் தொழிலுக்கும் சம்பந்தமில்லை... எப்படி இது...?(மருத்துவம் சம்பந்தமாக படித்துவிட்டு கணிணியில் வேலை செய்து கொண்டு இருப்பவர்கள் நிறையபேர்)

அதைத்தான் கிரகக் கோளாறு என்பார்கள் (கிளி போன்ற மனைவி இருக்கும் போது, குரங்கு போன்ற தொடுப்புடன் அலைபவர்களைப் பார்த்திருக்கிறீர்களா? அந்தக் கணக்கில் இது வரும்) அதை வைத்துப் பத்துப் பக்கங்கள் கட்டுரை எழுதலாம். இப்போது நேரம் இல்லை. முடிந்தால் பின் ஒரு நாளில் எழுதுகிறேன்

2. ஜோதிடம் கற்றுக்கொள்வதற்கும், தொழிலாகச் செய்வதற்கும், ஆராய்ச்சி மட்டுமே செய்யவும் தனித்தனியான அமைப்புகள் உண்டா? புதனின் ஆதிபத்தியம் வேண்டும் என்று சொல்லி விடாதீர்கள்...(சில ஜோதிடர்கள் சொல்வதனால் கேட்கிறேன்)

கூட்டு, அவியல், பொரியல் என்று சமையலில் காய்களின் எண்ணிக்கையும் அளவும் வேறு படுவதைப் போல, இதிலும் வேறுபாடு உண்டு. புதன் நன்றாக இருந்தால் கற்றுக் கொள்ளலாம். புதனும் குருவும் நன்றாக இருந்தால் கற்றுக்கொண்டு ஆராய்ச்சி செய்யலாம். அவர்கள் இருவரோடு, சனி அல்லது பத்தாம் இடத்து அதிபதியும் கலக்கலாக இருந்தால் ஜோதிடத்தைத் தொழிலாகச் செய்யலாம். செய்து காசு பார்க்க வேண்டுமென்றால் அந்த அமைப்புடன், 2 & 11ஆம் வீடுகளும் நன்றாக இருக்க வேண்டும்.

என்ன தலை சுற்றுகிறதா?
தலை சுற்றாமல் இருக்க 3 & 6ஆம் இடத்து அதிபதிகள் வலிமையாக இருக்க வேண்டும்:-))))

3. கேது திசை எல்லாருக்குமே ஞானத்தை மட்டுமே தருமா?(அனுபவித்துத்தான் ஆகவேண்டும். தீய பலன்கள் மட்டுமே என்கின்றனர்.)

மண்டபத்தில் யாரோ எழுதிக் கொடுத்ததைப்போல கேள்வியைக் கேட்டிருக்கிறீர்கள். எல்லோருக்கும் எப்படி புத்தி வரும்? எப்படி அடிபட்டாலும் திருந்தாத ஞான சூன்யங்கள் பல உள்ளன. அவர்களுக்குக் கடைசி வரையில் ஞானம் வராது. ஜாதகத்தில் இரண்டிற்கும் மேற்பட்ட கிரகங்கள் வக்கிரமடைந்திருப்பவர்களுக்கு, குறிப்பாகப் புதன் கெட்டிருப்பவர்களுக்குப் புத்தி வராது. புத்தி இருந்தால் அல்லவா ஞானம்?

4. வாழ்க்கையின் இறுதியில் வரும் சுக்ரதிசை மட்டுமே நன்மைகளை அளிக்குமா? (சாண் ஏறினால் முழம் சறுக்கும் என்பதற்கு நானே உதாரணம்)

இறுதிக் காலத்தில் சுக்கிரதசை வந்து என்ன பயன் சொல்லுங்கள்? 20 - 30ற்குள் ஸ்டார்ட்டாகி 40 - 50 க்குள் முடிந்து பலன்கள் கிடைத்தால்தானே ஜாதகன் அவற்றை அனுபவிக்க முடியும்? ஒரு பெண்ணிற்கு எப்போது திருமணம் செய்வது - 55 வயதிற்குப் பிறகா? அதுபோலத்தான் சுக்கிரதசைப் பலன்களும்!

5. அஷ்டவர்க்கங்களினால் சரியான பலன்களை அறிவிக்கமுடியாது என்கிறார் என் நண்பர் ஒருவர் (ஜோதிடர்) அப்படியா?

எதைவைத்துச் சரியான பலனைச் சொல்ல முடியும் என்று அவரிடமே கேளுங்கள். கேட்டு அடுத்த மின்னஞ்சலில் சொல்லுங்கள். நம் வகுப்பறை மாணவர்களுக்கு அது பயனளிக்குமா என்று பார்ப்போம்!
-------------------------------------------------------------------
email No.38
அருள் நிதி

வணக்கம் ஐயா,

எனது சந்தேகங்கள்...

1.கோள்சாரத்தின் பலன் அறிய லக்னத்தை கணக்கில் எடுக்காமல் சந்திரராசியை கணக்கில் எடுப்பது ஏன்?

கோள்சாரம் என்பது இன்றையத் தேதியில் வானில் கிரகங்கள் இருக்கும் நிலைமையைக் காட்டுவது!. சந்திரன் எண்ணிக்கையில் ஒருவர். லக்கினங்கள் பன்னிரெண்டு. எதைவைத்துக் கணக்கிடுவது சுலபமாக இருக்கும் நீங்களே சொல்லுங்கள். கோள்சாரத்தில் Man of the match award எப்போதும் சந்திரனுக்குத்தான். மற்றவர்கள் எல்லாம் (லக்கினங்கள் எல்லாம்) டீம் மேட்ஸ். பரிசுத்தொகையை அல்லது கிடைக்கும் Champagnes பாட்டிலைப் பங்கு வைத்துக்கொள்வார்கள். அவ்வளவுதான்!

2.சனிப்பெயர்ச்சி பற்றி சொல்லும் போது சில மாணவர்களின் பின்னூட்டங்களுக்கு அவர்களின் ராசி சக்கரத்தில் உள்ள லக்னத்தை வைத்து பலன் சொல்லி இருந்தீர்கள்...ஆனால் பொதுவாக ராசியை வைத்தும் பலன் சொல்லி இருந்தீர்கள்...இதில் எது சரியான கணிப்பை சொல்லும்?

அஷ்டமச்சனி, ஏழரைச் சனி போன்ற அவஸ்தைகளுக்கு ராசியைவைத்துப் பலனைப் பார்க்க வேண்டும். தசா/புத்திகளுக்கு லக்கினத்தில் இருந்து அவர் எந்த வீட்டிற்கு அதிபதி எந்த இடத்தில் இருக்கிறார் என்பதை வைத்துப் பலனைப் பார்க்க வேண்டும். துணியின் நீள அகலத்தை ஸ்கேலால் அளக்கிறோம். தண்ணீரை லிட்டரால் அளக்கிறோம். அதுபோலத்தான் இதுவும். ஒரே அளவுமுறை எனபது கிடையாது!

3.பிறந்த நேர திருத்தம் என்பது என்ன?கணினி மென் பொருள் இதை செய்யுமா?

நாட்டின் பொது நேரமும் (Standard Time) அந்த நாட்டில் ஜாதகன் பிறந்த ஊரின் நேரமும் மாறுபடும். நீங்கள் கேட்கும் நேர திருத்தம் அதுவாக இருந்தால், அதைக் கணினி மென் பொருள் செய்து கொள்ளும். கவலை வேண்டாம்!
---------------------------------
(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்



வாழ்க வளமுடன்!

4.1.10

Doubt: தலையில் என்ன பூ வைத்திருந்தால் என்ன?

++++++++++++++++++++++++++++++++++++++++
Doubt: தலையில் என்ன பூ வைத்திருந்தால் என்ன?

Doubts: கேள்வி பதில் பகுதி எட்டு

நீங்களும் உங்கள் சந்தேகங்களும் - பாடம் எட்டு!

Question & answer session
கேள்வி பதில் வகுப்பு
----------------------------------------------------
email No.32
ராஜன் குமரேசன்

வாத்தியார்,

thanks for the email lessons about the much waited 10th house.It will take few more days to understand as

it is too heavy one.It is very helpful for many people.
Below is the some of the doubts I have

1 .நீச கிரகத்தை இன்னொரு நீச கிரகம் பார்த்தால் என்ன பலன்.இது யோகா கணக்கில் வருமா? கடக செவ்வாய், மகர குரு இரண்டும் நீசம். இதன் 7 ஆம் பார்வை எப்படி இருக்கும்?

வராது! ஒரு சீட்டு வாங்காமல் பயணிப்பவர் (Ticketless Traveller) இன்னொரு சீட்டு வாங்காமல் பயணிப்பவருக்கு எப்படி உதவ முடியும்? ஆனால் குரு எந்த நிலைமையில் இருந்தாலும் அவருடைய பார்வை நன்மையைத்தரும். கெட்டாலும் மேன் மக்கள் மேன்மக்களே. அதனால், அவருடைய பார்வை சற்றுப் பயன்தரும்!

2 .சுக்கிரனுக்கு துலாம் ஆட்சி வீடு.இங்கே, சூரியன் நீசம். இந்த அமைப்பு நீச பங்க ராஜ யோகம் ஆகுமா?.இங்கே சந்திரன் இருந்தால் பலன் மாறுமா?

ஒரு உச்சனும் ஒரு நீசனும் சேர்ந்து இருந்தால்தானே நீசபங்க ராஜ யோகம் உண்டாகும்? அது இல்லாத நிலையில் இந்தக் கேள்வியை எப்படிக் கேட்கிறீர்கள்?

3.மிதுன லக்கின பத்தாம் இடம் மீனம். இதில் கேது இருந்து , லக்கினத்தில் குரு இருந்தால் சித்தர் போல இருக்கமுடியும் என்பது சரியா?

சரியில்லை! முதலில் ஜாதகனுக்கு ஞானம் வருமா என்று பாருங்கள். ஞானம் வருவதற்கு 4,8 12 ஆம் இடங்கள் நன்றாக இருக்க வேண்டும். ஞானத்திற்கு அடுத்த நிலைதான் சித்தியடைவது!

4 .லக்கினாதிபதிக்குப் ( 3 ) பதில் ராசியதிபதிக்கு நல்ல பரல் ( 6 ) இருந்தால் நல்லதா?

மனைவியாக வருபவளுக்குப் பதில் மாமியார் அழகாக இருந்தால் பரவாயில்லையா? என்று கேட்பதைப் போல் உள்ளது உங்கள் கேள்வி! லக்கினாதிபதிக்குப் பலன்கள் தனி. ராசி அதிபதிக்குப் பலன்கள் தனி. முதலில்
பழைய பாடங்களைப் படியுங்கள்

5.பத்தாம் இடக்கேது தொழிலில் இடைஞ்சல் பன்னாமல் இருக்க என்ன பண்ண வேண்டும்?

லஞ்சம் கொடுக்க முடியுமா என்று கேட்கிறீர்களா? நாட்டில் பலருடைய நிலைமை அப்படியாகிவிட்டது. நீங்கள் என்ன செய்வீர்கள்? பணத்தைக் காட்டி கேதுவை விலைக்கு வாங்க முடியாது. அவ்வளவு பணம் இருந்தால் எதற்காக வேலைக்குப் போக வேண்டும்? பத்து பேர்களுக்கு நாமே வேலை கொடுக்க லாமே? ஜாக்கிரதையாகத் தொழிலைச் செய்யுங்கள். இறைவனைத் தினமும் வழிபடுங்கள். அவ்வளவுதான் நம்மால் செய்ய முடியும்!
-----------------------------------------------------
email No.33
சந்திரசேகரம் சஞ்சீவகாந்த்

Sir
vanakkam. i am chanjeev

1.can you please let me know about how to analyse previous jenma in our horoscope deeply?

முன் ஜென்மத்தை அலசுவதற்கெல்லாம் வழி இல்லை! இருக்கிற உபத்திரவங்கள் போதாதா? அதை எதற்காகத் தெரிந்து கொள்ள வேண்டும் - சொல்லுங்கள்?

2.the houses are blank and there is no aspect what will happen?

பஸ்ஸில் கூட்டமே இல்லை என்ன செய்யலாம்? நன்றாகக் காலை நீட்டி செளகரியமாக உட்கார்ந்து கொண்டு செல்லுங்கள். கண்டக்டர் கண்டு கொள்ளவில்லையா? படுத்துக்கொண்டே செல்லுங்கள். எதற்காகக் கூட்டமே
இல்லையென்று கவலைப் படுகிறீர்கள்? பார்வை இல்லையே என்று கவலைப்படுவதும் அப்படித்தான். சரி, விஷயத்துக்கு வருவோம். கட்டம் காலியாக இருப்பதால், அதில் கிரகம் இல்லை, பார்வையும் இல்லை என்று
எப்படிச் சொல்கிறீர்கள்? பார்வைகளைப் பற்றி நீங்கள் சரியாகப் படிக்கவில்லை என்று தெரிகிறது.காலியாக உள்ள கட்டத்திற்கு எதிரில் உள்ள கட்டமும் (opposite house) காலியாக இருக்கிறதா? செவ்வாய், குரு, சனி
ஆகியவற்றிற்கெல்லாம் ஓரப் பார்வை உண்டு. அது தெரியுமா? முதலில் அவற்றை எல்லாம் தெரிந்து கொள்ளுங்கள்

3.if we want see A man when will go abroad(long distance). how?

ஒன்பதாம் வீடுதான் வெளி நாட்டுப் பயணத்திற்கானது. யார், யார் போவார்கள்? அந்தப் பாடத்தில் அதை எழுதியிருக்கிறேன். முதலில் நீங்கள் பழைய பாடங்களை எல்லாம் நன்றாகப் படியுங்கள். ஒரு திரைப்படத்திற்கு
இடைவேளைக்குப் பிறகு வந்து விட்டு, முன் கதையில் நடந்தவற்றை ஒவ்வொன்றாகக் கேட்பதைப் போன்றது இது!
-----------------------------------------------------------
email No.34
போஜராஜன்

என்னுடைய பத்தாம் (மேஷம்) வீட்டில் நான்கு கிரகங்கள் உள்ளன. சூரியன், புதன், குரு மற்றும் கேது. எந்த கிரகங்களும் யுத்தத்தில் இல்லை. அஷ்டவர்க்கம் பத்தாம் வீட்டில் 30 உள்ளது. மேலும் பத்தாம் அதிபதி
பன்னிரண்டாம் வீட்டில் உள்ளார். எனக்கு சுய தொழில் அமையுமா?

பத்தாம் அதிபதி விரைய ஸ்தானமான 12ல் இருந்தால், ஜாதகன் வேலைக்குச் செல்வது நல்லது.சொந்தத் தொழில் செய்தால், தொழில் நஷ்டமடையும். கைக்காசு விரையமாகும். போட்ட முதலை எடுக்க முடியாது!
எவ்வளவு பணம் போட்டாலும், பாழுங்கிணற்றில் போட்ட பணம்போல, போட்ட பணம் காணாமல் போய்விடும் அபாயம் உண்டு!

------------------------------------------------------------
email No.35
அருள் நிதி

அன்பான ஆசிரியர் அவர்களுக்கு,
சந்தேக விளக்கங்களுக்கு முதற்கண் நன்றி...

1. ராகு ஒரு வீட்டில் தனியாக,எந்த ஒரு கிரகத்தின் பார்வையுமின்றி ராசியிலும் அம்சத்திலும் இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.ஆனால் அவரின் நக்சத்திரத்தில் வேறு இரு கிரகங்கள் இருக்கின்றன...அப்போது அவர் நின்ற வீட்டிற்குண்டான அதிபதியின் பலன் மட்டும் கொடுப்பாரா அல்லது
அவர் நக்சத்திரத்தில் செல்லும் கிரகங்களின் பலனையும் கொடுப்பாரா?

குழப்புகிறீர்களே? அவருடைய நட்சத்திரத்தில் இருக்கும் கிரகங்களை அவருடன் உங்களை யார் இணைத்துப் பார்க்க சொன்னது? அவர் தான் இருக்கும் வீட்டை ஆக்கிரமித்துக் கொண்டு அதற்கான பலனைத் தருவார்.
அதை மட்டுமே பாருங்கள்!

2. செவ்வாய் தன் எதிரி சனியின் வீட்டில் உச்சம் அடைவதால் அந்த வீட்டிற்குண்டான உச்ச பலன்களை தருவாரா?

செவ்வாய் உச்சம் பெற்றதற்காக மகிழ்ச்சிகொள்ளாமல், அவர் எதிரி வீட்டில் இருக்கிறாரே என்று கவலை கொள்ளும் உங்களை என்ன செய்வது? தலையில் என்ன பூ வைத்திருந்தால் என்ன? குடிசையில் பிறந்திருந்தால் என்ன? அரண்மனைவாசியாக இருந்தால் என்ன? பெண் அழகாக இருந்தால் போதாதா? உங்களை மணந்து கொள்ள முன்வந்தால் போதாதா? உச்சமானதை மட்டும் கணக்கில் கொள்ளுங்கள்

3.கடக,சிம்ம லக்னத்துக்கு யோககாரனான் செவ்வாய், கடக லக்னத்துக்கு 7 -ல்(உச்சம்) சுய பரலில் நன்கு மற்றும் பாபர் பார்வையின்றி ராசி மற்றும் அம்சத்தில் இருந்து மேசத்தில் உள்ள சனியுடன்(பாபர் பார்வையின்றி
சுய பரல் நன்று) பரிவர்த்தனை ஆகி இருந்தால் செவ்வாய் நல்ல பலன்களை தருவாரா? அல்லது எதிரியுடன் பரிவர்த்தனையானதால் கெடுபலன் வருமா? இது ஒரு உதாரணம்தான் தனிப்பட்ட ஜாதகம் இல்லை.

Parivartanai of Sani and Kuja, no matter how repressed it makes the personality, will give full discipline from Sani and full productivity from Kuja. The native will definitely accomplish something in life despite one's habit of taking the longer, harder road toward nearly every goal.

4.சனியும் சூரியனும் பரிவர்த்தனையானால் (1,2,4,5,7,9அல்லது 10க்கு அதிபதிகள்) அந்த வீட்டிற்குண்டான பலன் பாதிக்கப்படுமா???

எம்.ஜி.ஆரும் நம்பியாரும் நடித்த படத்தில் சண்டைக் காட்சி இருக்குமா? என்று கேட்பதைப் போன்று இருக்கிறது உங்கள் கேள்வி! இருக்கும் பரிவர்த்தனைகளிலேயே சனி சூரியன் பரிவர்த்தனைதான் மோசமானது. அதிக தீமையானது. பலன்கள் பாதிப்பு அடையும்!

The combination of exchange/parivartan between sun and Saturn is the most worst combination and rest of the exchange/parivartan gives boosting and in this case of sun and satrun totally distroy the houses and the results related to those house in your case it is 5 & 11 house related to children ,mind ,income,elder brothers etc. all will be badly affected.

5.ராகு மற்றும் கேதுவுக்கு தனித்தனியே நண்பர்கள்,பகைவர்கள் உண்டா?

சனி, புதன் ஆகிய இருவரும் நண்பர்கள். சூரியன், செவ்வாய், சுக்கிரன் ஆகிய மூவரும் பகைவர்கள். குருவும், சந்திரனும் சமமானவர்கள்.

6.நம் உடலின் பகுதிகளுக்கு காரகம் வகிக்கும் கிரகங்கள் எவை எவை? நீங்கள் 7 கிரகங்களை பற்றி தனித்தனியே கொடுத்துள்ள பாடங்களில் இவை இல்லை....எடுத்துகாட்டாக
இரத்த செல்= ?
நரம்பு மண்டலம்=?
தசை மண்டலம்=?
மூளை=?
இதயம்=?

Planets & human body.
The planetary rulerships are as follows:
Sun rules bones.
Moon rules blood.
Mars rules marrow.
Mercury rules skin.
Jupiter rules fat.
Venus rules semen (materials related to the reproductive system).
Saturn rules muscles.
If Sun is afflicted, it can show some problems related to bones.
Weakness of Moon may give blood related problems. And so on.
---------------------------------------------------------
(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்



வாழ்க வளமுடன்!