மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

8.1.10

Doubt: பெரியமாமா வீட்டுச்சொத்து எப்போது கிடைக்கும்?

===========================================
Doubt: பெரியமாமா வீட்டுச்சொத்து எப்போது கிடைக்கும்?

Doubts: கேள்வி பதில் பகுதி பத்து!

நீங்களும் உங்கள் சந்தேகங்களும் - பாடம் பத்து!

Question & answer session
கேள்வி பதில் வகுப்பு
---------------------------------------------------
email No.39
S. உமா

வணக்கம் சார்,

கேள்வி பதில் பகுதி மிகவும் உபயோகமாக உள்ளது. நிறைய கேள்விகள் முன்னர் கேட்க நினைத்து, தொந்தரவாக இருக்குமோ என நினைத்து கேட்காமல் விட்டிருக்கிறேன்.

1. ஒரு கேள்விக்கான விடையில், மாந்தி மற்ற கிரஹங்களின் பார்வையை ஏற்காது எனக் கூறியுள்ளீர்கள். அப்படி என்றால் குரு பார்வை இருந்தாலும் மாந்தி இருக்கும் இடத்திற்கான பலனை அனுபவித்துதான் தீரவேண்டும் இல்லையா?

ஆமாம்! அவர் இருக்கும் வீட்டின் மூன்று காரகத்துவங்களில் ஒன்றுதான் கெட்டிருக்கும்! அதையும் பார்க்க வேண்டும்!

2. மகர லக்னத்திற்கு சூரியன் 8ம் இட அதிபதி. நவாம்சத்தில் அவர் சுக்கிரனு டன் சேர்ந்து 7 ல் இருந்தால், அதாவது 8 க்கு 12ல் இருந்தால், அவரால் தீமை இல்லை என்று எடுத்துகொள்வதா?

அவர் எட்டாம் இட அதிபதி. (Owner of a malefic house for Magara Lagna) அவர் எங்கே சென்று அமர்ந்தாலும், அமர்ந்த இடத்திற்குத் தீமைதான்.

3. ராகு சனியைப் போல செயல்படுவார் என்று சொல்லியிருக்கிறீர்கள். கும்பத்தில் ராகு இருந்தால், சனி அங்கே உச்சம் / ஆட்சி பெற்றுள்ளார் என்று அர்த்தமா? அதை நன்மை என்று எடுத்துகொள்வதா?

அதெப்படி அம்மணி? அப்பா மாதிரி செயல்படுவார் என்பதற்காக, அவர் அப்பா ஆக முடியுமா? ராகுவிற்கு எங்கேயும் ஆட்சி கிடையாது. விருச்சிகத்தில் மட்டும்தான் உச்சம் பெறுவார்!

4. லக்னத்தில் சனி இருந்தால் சோம்பேறியாக இருப்பார் என்று கூறியுள்ளீர் கள். அவர் லக்ன அதிபதியாக இருந்தால்?

மகர லக்கினம் மற்றும் கும்ப லக்கிங்களுக்கு சனி அதிபதி. அவர் அதிபதியாகி விடுவதால், தனக்குத்தானே (ஜாதகனுக்கு) சோம்பேறித்தனம் வராமல் பார்த்துக்கொள்வார்!

5. ஒருவர் ரியல் எஸ்டேட் பிசினெஸ் செய்வதாக இருந்தால், செவ்வாய் நீச்சமாக இருந்தாலும் செய்யலாமா? செவ்வாய் பூமி காரகன் என்பதால் கேட்கிறேன்.

செவ்வாய் நீசமடைந்திருந்தால், இடம் வாங்கி வைத்திருந்து பின்னால் காசு பார்க்கலாம் என்பது நடக்காது. வாங்கி வைத்த இடத்திற்கு ஏதாவது வில்லங்கம் வந்து சேரலாம். நான்காம் அதிபதியையும் கவனியுங்கள்.
அவர் நன்றாக இருந்தால், செய்யலாம். ஆனால் அதற்கு பதினொன்றாம் அதிபதியும் துணை வரவேண்டும். எல்லாம் ஒன்றுக்குள் ஒன்று சம்பந்தப்பட்டவை.
As the 11th lord is in the 4th, the native accumulates via estates, produce of the earth and rentals.The technical and mechanical expertise given by Mars also calls for builders, designers, surgeons, engineers and professional dealing in real estate.

6. 11 அதிபதி செவ் 8 ல், கேதுவுடன் சேர்ந்து, அதாவது டபுள் செவ்வாய் சேர்ந்து ஓர் இடத்தில் (நவாம்சத்தில்) ஆனால் குருவின் 5 ம் பார்வை. குருவின் பார்வை எந்த அளவு இந்த அமைப்பில் தீய பலனை குறைக்கும்?

பார்வை என்பது மந்திரக்கோலாகச் செயல்பட்டு மொத்தத் தீமையையும் குறைத்து அப்படியே நன்மையாக மாற்றித் தராது.தீமை குறையும். ஆனாலும் தொடரும். எட்டாம் இடத்தில் அமர்ந்ததற்கு ஒரு அர்த்தம் வேண்டாமா?

7.இன்னும் நிறைய கேள்விகள் உள்ளன. மீண்டும் எழுதுகிறேன். ஆலாசியம் அவர்கள் கூறியது போல், வாரம் 2 நாள் கேள்வி பதிலுக்கு ஒதுக்கினால் என் போன்ற அரைகுறை ஜோதிடர்கள் முழுமையடைய உதவும்.

மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கலாம். பிறகு முடிவு எடுக்கலாம்!

Thanks & regards,
S. UMA
-------------------------------------------
email No.40
SP. கருப்பையா

அய்யா வணக்கம்.

1. நீச பங்கம் 6,8,12 ல் இருந்தாலும் அந்த யோகம் கிடைக்குமா அதன் பலன் நன்மையா? தீமையா?.

நீசபங்க ராஜ யோகத்தைப் பற்றிக்கேட்கிறீர்களா? 6, 8,12 ஆம் இடங்கள் மறைவிடங்கள். தீய இடங்கள் (inimical places) யோகம் அங்கே போய் உட்கார்ந்து கொண்டால் பலன்கள் குறைந்துவிடும்.

2.மேலும் 6,8, 12 ல் பரல்கள் < 30 இருந்தால் அதன் பலன் நன்மையா? தீமையா?.

6, 8,12 ஆம் இடங்கள் மறைவிடங்கள். தீய இடங்கள் (inimical places) அங்கே பரல்கள் அதிகமாக இருப்பதால் நன்மை என்று எப்படிச் சொல்ல முடியும். ஒரே ஒரு நன்மை உண்டு. அதிகப் பரல்கள், ஜாதகனுக்குத் தாக்குப்பிடிக்கும் சக்தியைக் கொடுக்கும்!

இப்படிக்கு
SP.karuppiah
KKDI
............................................................................
email No. 41
சுரேந்திரன் சங்கர்

அன்புள்ள ஆசானே,

01. கோணாதிபதி கேந்திரத்தில் இருந்தால் அது யோகத்தில் வருமா ?

குழப்பியிருக்கிறீர்களே சாமி! கோணாதிபதி எதற்காகக் கேந்திரத்தில் இருக்க வேண்டும்? கோணாதிபதியாகி விட்டவரை யார் அங்கே அனுப்பி வைத்தார்கள்? கோணாதிபதி எனும் பதவி கிடைத்த பிறகு, பெட்டி
படுக்கைகளைத் தூக்கிக் கொண்டு அதைவிடக் கீழான பதவிக்கு அவர் எப்படிப் போவார்? இதையெல்லாம் யோசித்தீர்களா?

சரி, உங்கள் கேள்வியைச் சற்றுப் புரியும்படியாகக் கேட்போம்: லக்கினத்திற்கு 5, 9ற்கு உரிய கிரகம் 4, 7, 10ஆம் இடங்களில் அமர்ந்தால் என்ன யோகம்? அதாவது திரிகோணங்களுக்கு உரிய கிரகம் கேந்திரங்களில் அமர்ந்திருக்கும் நிலைமை!
5, 9ல் அமர்ந்தால் திரிகோண யோகம்.
4,7,10ல் அமர்ந்தால் கேந்திர யோகம்.
அததற்கு உரிய பலன் கிடைக்கும்.
பலன்களுக்குப் பழைய பாடங்களைப் படியுங்கள். மீண்டும் அதை இங்கே மொத்தமாக எழுதுவது உசிதமாக இருக்காது!

கோணத்தில் இருந்து தொலைக்காமல் கேந்திரத்திற்குப்போனதால், கோணத்துப் பலனையும் கேட்டு வாங்க முடியுமா என்றால், முடியாது! சின்ன மாமன் வீட்டில் வாழ்க்கைப்பட்ட பெண்ணிற்கு, பெரிய மாமன் வீட்டுச்
சொத்துக்கள் கிடைக்காது! எந்தக் கோர்ட்டுக்குப் போனாலும் கிடைக்காது!
இப்போது அர்த்தமாகியதா சாமி?

02. அப்படி கோணாதிபதி கேந்திரத்தில் இருந்து, கேந்திரம் பகை விடாகவோ/ நீச்ச விடாக இருந்தால் எதேனும் பலன் உண்டாகுமோ ?

சின்ன மாமன் வீடு நீச வீடாக இருந்தால், அங்கே செல்லும் பெண், கடைசி வரை பற்றுப் பாத்திரம் தேய்த்து வயிற்றைக் கழுவிக்கொண்டு மனதையும் தேற்றிக்கொண்டு சின்ன மாமா வீட்டில் இருக்க வேண்டியதுதான்.
ஒன்றும் பிரயோஜனமில்லை! பகை வீடாக இருந்தால் கொஞ்சம் பரவாயில்லை. சின்ன மாமா வீட்டில் அந்த வேலைக்கெல்லாம் ஆள் வைத்திருப்பார்கள். இருந்தாலும் நிலைமை சுமார்தான்!
------------------------------------------------------
email No. 42
அருள்ராஜ் விக்டர்

ஐயா
பாடங்களோ அருமை. கேள்வி‍‍ பதில்களோ மிக மிக அருமை.

1. ஒரு சிறு சந்தேக‌ம். குரு சுப‌ கிர‌க‌ம். ஆனால் ப‌கை வீட்டினில் (ரிசபம் 8 ஆம் வீடூ) இருக்கும்போது ஜாத‌க‌னுக்கு தீமை செய்வாரா அல்ல‌து ந‌ன்மை குறைவாக‌ செய்வாரா ? மேலும் அந்த‌ ஜாத‌க‌னுக்கு ராசி நாத‌னாக‌ (த‌னுசு ராசி) இருக்கும் ப‌ட்ச‌த்தில் அவரது பலன்கள் எப்படி இருக்கும் ? குரு த‌சை எப்ப‌டி
இருக்கும்? நன்றி ஐயா
விக்ட‌ர்

குரு முதல்தர சுபக்கிரகம். அவர் எங்கே இருந்தாலும், எந்த இடத்தைப் பார்த்ததாலும் நன்மையையே செய்வார். ஜாதகத்தில் அவருக்குக் கிடைத்திருக்கும் பாத்திரத்தைவைத்து (சமையல் செய்யும் பாத்திரமல்ல)
அதற்குத் தகுந்த சீன்களில் மட்டும் வந்து போவார். ராஜபார்ட் என்றால் அதற்குத் தகுந்தது மாதிரி. தமாத்துண்டு ரோல் என்றால் அதற்குத் தகுந்தமாதிரி என்று வைத்துக்கொள்ளுங்கள். எட்டாம் வீடு அல்லது
12ஆம் வீடுகளில் அமர்ந்திருக்கும் குரு அவருடைய தசாபுத்தி பெரிய பலன்களைத் தரமாட்டார். ஆனால் அவருடைய மகாதசையில் வரும் வேறு கிரகங்களின் புத்தி, அதன் நாதர்களைவைத்துப் பலன்களைத்தரும்!
ஆகவே அதையும் பார்க்க வேண்டும். குறுக்கு வழி மற்றும் ஒருவரிக் கதையெல்லாம் ஜோதிடத்தில் கிடையாது!
-----------------------------------
(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!

40 comments:

Shyam Prasad said...

மிக்க நன்றி

kannan said...

அச்சனே !!!

நமஸ்காரம்.

எம்பெருமான்

"திருஅனந்தபத்மநாபசுவாமி"!

"அனந்த சயனத்தில்வீற்றிருக்கும் "!

( ஸ்ரீ பத்மநாபஸ்வாமி )

"ஆதிஷேசன் "! என்னும் நாகத்தின் மறு அவதாரம்தான் "ஆயில்ய நட்சத்திரம்"!

என்று செவிவழி செய்தி மாசே!

இது உண்மையா ?

சிங்கைசூரி said...

பதில்கள் பிரமாதம், நன்றி ஆசானே.

astroadhi said...

இனிய காலை வணக்கம்,

கேள்வி பதில் பகுதி அருமை அய்யா .
செவ்வாய் பற்றி விளக்கம் சிற்ப்பு ,,,அதில் ஒரு சிறு சந்தேகம் செவ்வாய் ஒரு லக்னத்திற்க்கு யோக காரகனாக இருந்து தான் இருக்கும் இடத்தில் இருந்து தன் உச்ச வீட்டை (அந்த உச்ச வீடு லக்னதுக்கு நல்ல இடமாக இருக்கும் பட்சதில்)பார்த்தால் அந்த அமைப்பு எந்த அளவிற்க்கு பலன் தரும்
நன்றி வணக்கம்...

சிங்கைசூரி said...

பதில்கள் அருமை.

ஒரு சந்தேகம், சுக்கிரன் நான்காம் விடாக, சிம்மத்தில் இருந்தால்- கேந்திர யோகம் உண்டா?
சிம்மத்தில் சுக்கிரன் பகையாயிற்றே- எதேனும் நல்ல பலன் தருவாரா ? அல்லது- சுக்கிரன் அஜால் குஜால் பர்ட்டி ஆயிற்றே, Characterரை கெடுத்துவிடுவாரா ?

Success said...

வணக்கம் ஐயா.

சின்ன மாமன் வீட்டில்
வாழ்க்கைப்பட்ட பெண்ணிற்கு, பெரிய மாமன் வீட்டுச் சொத்துக்கள் கிடைக்காது!

எந்தக் கோர்ட்டுக்குப் போனாலும் கிடைக்காது!

சாமியோ நீங்க மட்டும்...விடுங்க என்ன சொல்லரது...

நன்றிகள், வாழ்த்துக்கள் - இன்னும் இன்னும் கலக்குங்க.

உங்கள் மாணவி said...

அன்புள்ள ஐயா
செவ்வாய் நீசமடைந்திருந்து அவர் 4-ம் வீட்டிற்கும், 11-ம் வீட்டிற்கும் அதிபதி என்றால் சொத்து வாங்கவே முடியாதா?.
4-ம் வீட்டின் பரல் 36.
11-ம் வீட்டின் பரல் 28.

SP.VR. SUBBIAH said...

/////Shyam Prasad said...
மிக்க நன்றி/////

உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

SP.VR. SUBBIAH said...

/////kannan said...
அச்சனே !!!
நமஸ்காரம். எம்பெருமான் "திருஅனந்தபத்மநாபசுவாமி"! "அனந்த சயனத்தில்வீற்றிருக்கும் "!
( ஸ்ரீ பத்மநாபஸ்வாமி ) "ஆதிஷேசன் "! என்னும் நாகத்தின் மறு அவதாரம்தான் "ஆயில்ய நட்சத்திரம்"!
என்று செவிவழி செய்தி மாசே!
இது உண்மையா?//////

தெரியவில்லை ஸ்வாமி! தெரியாததைத் தெரியாது என்று சொல்வதில் தவறு இல்லை ஸ்வாமி!

SP.VR. SUBBIAH said...

/////சிங்கைசூரி said...
பதில்கள் பிரமாதம், நன்றி ஆசானே.////

நல்லது.நன்றி!

SP.VR. SUBBIAH said...

/////astroadhi said...
இனிய காலை வணக்கம்,
கேள்வி பதில் பகுதி அருமை அய்யா . செவ்வாய் பற்றி விளக்கம் சிறப்பு ,,,அதில் ஒரு சிறு சந்தேகம் செவ்வாய் ஒரு லக்னத்திற்க்கு யோக
காரகனாக இருந்து தான் இருக்கும் இடத்தில் இருந்து தன் உச்ச வீட்டை (அந்த உச்ச வீடு லக்கினத்திற்கு நல்ல இடமாக இருக்கும் பட்சதில் பார்த்தால் அந்த அமைப்பு எந்த அளவிற்கு பலன் தரும்? நன்றி வணக்கம்.../////

கேள்வி பதில் பகுதிக்கு எழுதுங்கள். முகவரி: classroom2007@gmail.com மறக்காமல் subject பெட்டியில்
Doubts in the lessons என்று குறிப்பிடுங்கள். எழுதிய மறுநாளே பதில் வரும் என்று நினைக்க வேண்டாம். வரிசைப்படி வரும்!

SP.VR. SUBBIAH said...

/////சிங்கைசூரி said...
பதில்கள் அருமை.
ஒரு சந்தேகம், சுக்கிரன் நான்காம் விடாக, சிம்மத்தில் இருந்தால்- கேந்திர யோகம் உண்டா?
சிம்மத்தில் சுக்கிரன் பகையாயிற்றே- எதேனும் நல்ல பலன் தருவாரா ? அல்லது- சுக்கிரன் அஜால் குஜால் பார்ட்டி ஆயிற்றே, Characterரை கெடுத்துவிடுவாரா?////

கேள்வி பதில் பகுதிக்கு எழுதுங்கள். முகவரி: classroom2007@gmail.com மறக்காமல் subject பெட்டியில்
Doubts in the lessons என்று குறிப்பிடுங்கள். எழுதிய மறுநாளே பதில் வரும் என்று நினைக்க வேண்டாம். வரிசைப்படி வரும்!

SP.VR. SUBBIAH said...

/////Success said...
வணக்கம் ஐயா.
சின்ன மாமன் வீட்டில்
வாழ்க்கைப்பட்ட பெண்ணிற்கு, பெரிய மாமன் வீட்டுச் சொத்துக்கள் கிடைக்காது! எந்தக் கோர்ட்டுக்குப் போனாலும் கிடைக்காது! சாமியோவ் நீங்க மட்டும்...விடுங்க என்ன சொல்லறது...
நன்றிகள், வாழ்த்துக்கள் - இன்னும் இன்னும் கலக்குங்க./////

புரியும்படியாக இருக்கவேண்டும் என்பதற்காக, உதாரணங்களைக் கொடுக்கிறேன்! அதை நீங்கள் எப்படி எடுத்துக்கொண்டாலும் சரி!

SP.VR. SUBBIAH said...

/////Blogger உங்கள் மாணவி said...
அன்புள்ள ஐயா
செவ்வாய் நீசமடைந்திருந்து அவர் 4-ம் வீட்டிற்கும், 11-ம் வீட்டிற்கும் அதிபதி என்றால் சொத்து வாங்கவே முடியாதா?.
4-ம் வீட்டின் பரல் 36.
11-ம் வீட்டின் பரல் 28.//////

கேள்வி பதில் பகுதிக்கு எழுதுங்கள். முகவரி: classroom2007@gmail.com மறக்காமல் subject பெட்டியில் Doubts in the lessons என்று குறிப்பிடுங்கள். எழுதிய மறுநாளே பதில் வரும் என்று நினைக்க வேண்டாம். வரிசைப்படி வரும்!

RVC said...

உள்ளேன் அய்யா! கேள்வி-பதில் பகுதி அருமை.
6,8,12 ஆம் வீடுகளில் பரல்கள் குறைவாக இருக்க வேண்டும் என்கிறீர்களா? அப்போதுதான் நன்மையா?

RVC said...

பொதுவான சந்தேகம் : ராகு, கேதுக்கு சுய பரல்கள் கிடையாது. தான் நிற்கும் வீட்டின் அதிபதியின் சுயபரல்களே அவர்களின் சுய பரல்களும். உதாரணத்திற்கு - கேது- மீனத்தில். குரு - சிம்மத்தில் 3 பரல்களுடன். கேதுவால் நன்மையா? தீமையா? ராகு - கன்னியில்- புதன் -வேறொரு இடத்தில் 6 பரல்களுடன் என வைத்துக் கொண்டால் ராகுவால் நன்மையா? தீமையா? ஒரு கால சர்ப்ப ஜாதகத்திற்கு இவர்களின் தசா, புக்திகள் நன்மையைத் தரும் எனில் அது இவர்களின் சுயவர்க்கப்பரல்களைப் பொறுத்ததா?

A. said...

Very very interesting and like me so many people learn from your class.

Thanks

ananth said...

என் ஜாதகத்தில் உப வில்லன் மாந்தி வில்லாதி வில்லனான கேதுவுடன் 11ல் இருக்கிறார். தாங்கள் சொன்னது போல் குரு பார்வை இருந்தாலும் அந்த ஸ்தானத்தின் ஒரு காரகமான மூத்த சகோதரம் அமையவில்லை. இன்னொரு காரகமான பண வரவிற்கு என்றும் குறைவிருந்ததில்லை. அது தேவையான போதெல்லாம் கிடைத்துக் கொண்டுதான் இருக்கிறது.

sundari said...

ஐயா வணக்கம்,
ரொம்ப நல்லா பதில் சொல்லறீங்க, கேள்வி,பதில் பாட்ம் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது ரொம்ப நன்றி.இன்று நம்ப கிருஷ்ணன் சகோதரர் பின்னூட்டமிடவில்லை அவருக்கு உடம்பு சரியில்லையா? அவர் அதிகாலையில்
எழுந்து பின்னூட்டமிடுவார் தாங்களைப் போலவே...
சுந்தரி.

Ram said...

Dear Sir,

thanks for the todays answer, I had one some doubt, i seen 3 of my friends horoscope in Jaganath Hora software, Out of that Two people had the Kalpaduruma Yoga and Jaganath Hora says they will be King, Warriors, strong and kind. and the third one says Friend of a King or Close Associate. Interesting thing is all the three are staying in a small room and working in dubai. Is the raja yoga can work in latter part suddenly or they can be highly respected in there families only due to other planets position.

minorwall said...

சின்ன மாமி பெரிய மாமாவை சைடிலே கவனித்து வந்தால் பெரியமாமனின் சொத்து கோர்ட்டுக்குப் போகாமலே கிடைக்கலாம்.
(எல்லாம் ஒரு கிரக சாரக் கோளாரினால்தான்..shortcut)
இப்படி சம்பவங்களும் ஆங்காங்கே நடப்பதால் கலியுகத்தில் இந்த உதாரணம் சரியாகப் படவில்லை.

ஜீவா said...

அன்பு அய்யா அவர்களுக்கு வணக்கம், தங்களின் பதில்கள் மிக அருமையாக இருக்கின்றன,தங்களிடம் ஒரு கேள்வி, மகர,கும்ப லக்ன‌காரர்களுக்கு சனி அதிபதி என்பதால், இவர்களுக்கு சனி மஹா தசை வந்தால் நன்றாக இருக்குமா? குருவின் பார்வையும் பெற்றிருக்க வேண்டுமா?

அன்புடன்
ஜீவா

SP.VR. SUBBIAH said...

/////RVC said...
உள்ளேன் அய்யா! கேள்வி-பதில் பகுதி அருமை.
6,8,12 ஆம் வீடுகளில் பரல்கள் குறைவாக இருக்க வேண்டும் என்கிறீர்களா? அப்போதுதான் நன்மையா?////

இரண்டு நன்மைகள் உள்ளன. அவைகள் வலுத்து இல்லாமல் இருப்பதில் சில நன்மைகள். அத்துடன் அங்கே குறையும் பரல்கள் வேறு நல்ல இடங்களில் கூடுதல் பரல்களுக்கு வழிவகுக்கும்!

SP.VR. SUBBIAH said...

/////RVC said...
பொதுவான சந்தேகம் : ராகு, கேதுக்கு சுய பரல்கள் கிடையாது. தான் நிற்கும் வீட்டின் அதிபதியின் சுயபரல்களே அவர்களின் சுய பரல்களும். உதாரணத்திற்கு - கேது- மீனத்தில். குரு - சிம்மத்தில் 3 பரல்களுடன். கேதுவால் நன்மையா? தீமையா? ராகு - கன்னியில்- புதன் -வேறொரு இடத்தில் 6 பரல்களுடன் என வைத்துக் கொண்டால் ராகுவால் நன்மையா? தீமையா? ஒரு கால சர்ப்ப ஜாதகத்திற்கு இவர்களின் தசா, புக்திகள் நன்மையைத் தரும் எனில் அது இவர்களின் சுயவர்க்கப்பரல்களைப் பொறுத்ததா?/////

கேள்வி பதில் பகுதிக்கு எழுதுங்கள். முகவரி: classroom2007@gmail.com மறக்காமல் subject பெட்டியில் Doubts in the lessons என்று குறிப்பிடுங்கள். எழுதிய மறுநாளே பதில் வரும் என்று நினைக்க வேண்டாம். வரிசைப்படி வரும்!

SP.VR. SUBBIAH said...

///A. Ramakrishnan said...
Very very interesting and like me so many people learn from your class.
Thanks////

நல்லது.நன்றி!

SP.VR. SUBBIAH said...

////ananth said...
என் ஜாதகத்தில் உப வில்லன் மாந்தி வில்லாதி வில்லனான கேதுவுடன் 11ல் இருக்கிறார். தாங்கள் சொன்னது போல் குரு பார்வை இருந்தாலும் அந்த ஸ்தானத்தின் ஒரு காரகமான மூத்த சகோதரம் அமையவில்லை. இன்னொரு காரகமான பண வரவிற்கு என்றும் குறைவிருந்ததில்லை. அது தேவையான போதெல்லாம் கிடைத்துக் கொண்டுதான் இருக்கிறது.////

தகவலுக்கு நன்றி நண்பரே!

SP.VR. SUBBIAH said...

////sundari said...
ஐயா வணக்கம்,
ரொம்ப நல்லா பதில் சொல்லறீங்க, கேள்வி,பதில் பாட்ம் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது ரொம்ப நன்றி.இன்று நம்ப கிருஷ்ணன் சகோதரர் பின்னூட்டமிடவில்லை அவருக்கு உடம்பு சரியில்லையா? அவர் அதிகாலையில் எழுந்து பின்னூட்டமிடுவார் தாங்களைப் போலவே...
சுந்தரி./////

உடல் நிலை சரியில்லை என்று ஏன் நினைக்க வேண்டும்? அவர் வெளியூர் சென்றிருக்கலாம். அல்லது அகண்ட அலைவரிசை இணைய இணைப்பில் ஏதாவது கோளாறு ஆகியிருக்கலாம். பொறுத்து இருங்கள்.
அவரே வந்து சொல்வார்!

SP.VR. SUBBIAH said...

////Ram said...
Dear Sir,
thanks for the todays answer, I had one some doubt, i seen 3 of my friends horoscope in Jaganath Hora software, Out of that Two people had the Kalpaduruma Yoga and Jaganath Hora says they will be King, Warriors, strong and kind. and the third one says Friend of a King or Close Associate. Interesting thing is all the three are staying in a small room and working in dubai. Is the raja yoga can work in latter part suddenly or they can be highly respected in there families only due to other planets position./////

கேள்வி பதில் பகுதிக்கு எழுதுங்கள். முகவரி: classroom2007@gmail.com மறக்காமல் subject பெட்டியில் Doubts in the lessons என்று குறிப்பிடுங்கள். எழுதிய மறுநாளே பதில் வரும் என்று நினைக்க வேண்டாம். வரிசைப்படி வரும்!

SP.VR. SUBBIAH said...

////minorwall said...
சின்ன மாமி பெரிய மாமாவை சைடிலே கவனித்து வந்தால் பெரியமாமனின் சொத்து கோர்ட்டுக்குப் போகாமலே கிடைக்கலாம். (எல்லாம் ஒரு கிரக சாரக் கோளாரினால்தான்..shortcut)
இப்படி சம்பவங்களும் ஆங்காங்கே நடப்பதால் கலியுகத்தில் இந்த உதாரணம் சரியாகப் படவில்லை./////

பதிவைச் சரியாகப் படியுங்கள் மைனர். மாமன் வீட்டிற்கு வாழ்க்கைப்பட்டுவரும் மருமகளைப் பற்றித்தான் சொல்லியிருக்கிறேன். மாமியைப் பற்றியல்ல! எந்த யுகமாக இருந்தாலும் அம்மா, அம்மாதான். அது மாறாது.
அதுபோல சில வாழ்க்கை நியதிகளும் மாறாது! வழி தவறி வரும் சொத்து குழியில் தள்ளிவிடும். அதை மனதில் வையுங்கள். எதுவும் முறையாக வரவேண்டும். எந்த யுகமாக இருந்தாலும் கர்மவினைகள் மாறாது!

SP.VR. SUBBIAH said...

////ஜீவா said...
அன்பு அய்யா அவர்களுக்கு வணக்கம், தங்களின் பதில்கள் மிக அருமையாக இருக்கின்றன,தங்களிடம் ஒரு கேள்வி, மகர,கும்ப லக்ன‌காரர்களுக்கு சனி அதிபதி என்பதால், இவர்களுக்கு சனி மஹா தசை வந்தால் நன்றாக இருக்குமா? குருவின் பார்வையும் பெற்றிருக்க வேண்டுமா?
அன்புடன்
ஜீவா////

அந்த இரு லக்கினக்காரர்களுக்கு சனி தசை நன்றாக இருக்கும். எந்த அளவு? அது ஜாதகத்தில் சனியின் நிலைமையைப் பொறுத்து மாறு படும்!

kmr.krishnan said...

Answers are nice

kmr.krishnan said...

Thanks for sundari's concern for me and my welfare. In our town one great scholar is residing. Sekkizar
adippodi sri.t.n.ramachandran. he wanted me to search for a book titled"the history of india as told by its own historians". i was doing the search in the web. i could find an online version.that is why i could not comment earler.

அமர பாரதி said...

உள்ளேன் அய்யா.

SP.VR. SUBBIAH said...

////kmr.krishnan said...
Answers are nice////

நல்லது.நன்றி!

SP.VR. SUBBIAH said...

///kmr.krishnan said...
Thanks for sundari's concern for me and my welfare. In our town one great scholar is residing. Sekkizar
adippodi sri.t.n.ramachandran. he wanted me to search for a book titled"the history of india as told by its own historians". i was doing the search in the web. i could find an online version.that is why i could not comment earler./////

அதன் சுட்டியைக் கொடுங்கள் சார்! நேரம் கிடைக்கும்போது நானும் படித்துப்பார்க்கிறேன். நன்றி!

SP.VR. SUBBIAH said...

////அமர பாரதி said...
உள்ளேன் அய்யா./////

உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

Arulkumar Rajaraman said...

Dear Sir

Kelviyum Arumai Bhadhilum Arumai. Kelviyum Bhadhilum - most of the doubt clear.

Thank you

Loving Student
Arulkumar Rajaraman

kmr.krishnan said...

http://persian.packhum.org/persian/main?url=pf%3Ffile%3D80201018%26ct%3D7

"The history of India as told by its own Historians"by H.M.ELIOT
and JOHN DOWSON 1867-1877.
IN these 8 volumes the History of India till the end of Mohammeddn rule had been covered.The book is the English Translation of Persian historians as the Prsian language was the language of the courts during Mohmmaden rule.The online book is available for direct reading. If our co-students advice me how to download these 8 vloumes which I am unable to do,I shall thank them from the bottom of my heart. Not getting into pdf either. This is a must read for evry patriotic Indian.
I should, as an honest researcher, say that the rejoinder to these volumes had also come from Aligarh Muslim University under the leadership of an eminent Muslim Historian Dr.Prof.Nizami.

SP.VR. SUBBIAH said...

///Arulkumar Rajaraman said...
Dear Sir
Kelviyum Arumai Bhadhilum Arumai. Kelviyum Bhadhilum - most of the doubt clear.
Thank you
Loving Student
Arulkumar Rajaraman////

நன்றி ராஜாராமன்!

SP.VR. SUBBIAH said...

/////kmr.krishnan said...
http://persian.packhum.org/persian/main?url=pf%3Ffile%3D80201018%26ct%3D7
"The history of India as told by its own Historians"by H.M.ELIOT
and JOHN DOWSON 1867-1877.
IN these 8 volumes the History of India till the end of Mohammeddn rule had been covered.The book is

the English Translation of Persian historians as the Prsian language was the language of the courts during

Mohmmaden rule.The online book is available for direct reading. If our co-students advice me how to

download these 8 vloumes which I am unable to do,I shall thank them from the bottom of my heart. Not

getting into pdf either. This is a must read for evry patriotic Indian.
I should, as an honest researcher, say that the rejoinder to these volumes had also come from Aligarh

Muslim University under the leadership of an eminent Muslim Historian Dr.Prof.Nizami./////

தகவலுக்கு நன்றி கிருஷ்ணன் சார்!