===========================================
Doubt: அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்; யார் யாரைப் பார்த்தார்கள்?
Doubts: கேள்வி பதில் பகுதி 13
நீங்களும் உங்கள் சந்தேகங்களும் - பாடம் எண் பதிமூன்று!
Question & answer session
கேள்வி பதில் வகுப்பு
----------------------------------------------------
email.No.51
அரியப்பன் சாத்தப்பன்
வணக்கம் அய்யா,
பெஞ்சுமேல் நிற்கச் சொன்னதற்கு மிக்க நன்றி.தனுசு லக்கனத்துக்குத்தான் சந்திரன்,செவ்வாய் தான் பரிவர்த்தனை. சரிதான்.
1,சந்திரன் கேதுவும்(விருச்சிகம்),குருவும் செவ்வாயும்(கடகம்)இவ்வாறு இருந்தால் பலம்பெறுமா(தனு.லக்)?
விருச்சிகத்தில் சந்திரன் நீசம். அவருடன் உச்ச கேதுவும் சேர்ந்து நீச பங்க ராஜ யோகத்தில் உள்ளார். கடகத்தில் செவ்வாய் நீசம், உச்ச குருவுடன் சேர்ந்து நீச பங்க ராஜ யோகத்தில் உள்ளார். ஆனால் தனுசு லக்கினத்திற்குக் கடகம் எட்டாம் இடம். விருச்சிகம் 12ஆம் இடம். முழுப் பலன்கள் இல்லை. பஸ்ஸில் இடம் கிடைத்தும், பணம் கொடுத்து டிக்கெட் வாங்கியும் நின்று கொண்டே பயணிக்க வேண்டிய நிலைமை!
2,உச்சம், நீசம் பரிவர்த்தனை (சனி,செவ்வாய்) பலம் அடையுமா?
பரிவர்த்தனை அடைந்த பிறகுதானே, உச்ச நீசக் கணக்கு வரும்! உச்சன் அதற்கான பலனைத்தருவார். நீசனால் பலன்கள் இருக்காது.
-----------------------------------------------------
email.No.52
AG.பாலகுமாரன்
Dear Sir,
Can you kindly clarify my doubt.
1. It's said that the strength of the planets conjuncting Yogakarakas or Lagnathipathi will be absorbed by themselves (Yogakarakas or Lagnathipathi). Is that true. Can you clarify.
Regards,
Balakumaran A G
கிரகங்கள் கையில் என்ன பெப்ஸியா வைத்திருக்கின்றன? ஸ்ட்ரா போட்டு ஒன்றின் பலனை இன்னொன்று உறிஞ்சிக்குடிப்பதற்கு? லக்கினதிபதியாகட்டும் அல்லது யோககாரகனாகட்டும், அவர்களுடன் கூட்டணி போடும் கிரகத்தை வைத்து அவர்களுடைய நிலைமை மாறும். பலன்களும் வேறுபடும். அதற்காக சேரும் கிரகங்கள் தங்கள் கையில் அவற்றை எப்படி எடுத்துக்கொள்ளும்? உதாரணத்திற்கு லக்கினாதிபதியுடன் சனி ஒன்றாக இருந்தால், லக்கினாதிபதியோடு அவரும் சேர்ந்து லக்கினத்திற்கான பலன்களைத் தரமாட்டார். சேரும் லக்கினாதிபதி வலுவாக இருந்தால் அடக்கி வாசிப்பார். லக்கினாதிபதி வலுவாக இல்லையென்றால் இருப்பதையும் கெடுத்து விடுவார்!
---------------------------------------------------
email.No.53
செல்லபிரசாத் ராமசாமி
அன்புள்ள அய்யா,
என்னுடைய சந்தேகங்கள் (2)
1. வாக்ய பஞ்சாங்கத்தின்படி நட்சத்திர பாதசாரங்களை கொண்டு தசாம்ச சக்கரம் எழுதுவது எப்படி?
பஞ்சாங்கத்தை வைத்து ஜாதகம் எழுதுவதற்கு நல்ல பாண்டித்யம் வேண்டும். அதோடு ஜாதகனின் பிறந்த வருட வாக்கியப் பஞ்சாங்கமும் வேண்டும்.அதை இப்போது கணினி மென்பொருட்கள் எழுதித்தருவதால், அவற்றைப் பயன் படுத்துங்கள். Gas Stove, Induction Stove, Oven, mixie, wet grinder என்று எல்லாவற்றிற்கும் சாதனங்கள் வந்து விட்டன!. நான் விறகு அடுப்பில்தான் சமைக்க விரும்புகிறேன் என்று சொன்னால் எப்படி?
2. மிதுனம், தனுசு லக்னங்களிற்கு தர்ம/கர்மாதிபதி யோகம் அமைந்து, முறையே குரு, புதன் (உபய ராசியின் பாதகாதிபதிகள் மற்றும் யோகத்தை தருபவர்கள்) தசைகள் நடைபெறும் போது, யோகம்தான் வலிமை தருமா? அல்லது பாதகாதிபதி பாதகம் செய்வாரா?
யோகம் அமைந்துவிட்டது. அமைந்த யோகத்தில் சந்தேகம் எதற்கு? தங்கள் தசா/புத்திகளில் யோகத்திற்கான பலன்களைத் தருவார்கள். பாதக அமைப்பும் சேர்வதால், பலன்கள் குறையலாம். ஆனால் இல்லாமல் போகாது!
3.தங்களுடைய இமெயில் கேள்வி 33ற்கு பதிலில் பார்வைகளே இல்லாத வீட்டிற்கு பலன் சொல்லவில்லை. என்னுடைய ஜாதகத்தில் லக்னம், 6வது வீடு மற்றும் 8வது வீடுகளில் எந்த கிரகமும் இல்லை. எந்த பார்வையும் இல்லை (சனி, செவ்வாய் மற்றும் குரு ஓர பார்வை உட்பட). என்ன பலன்கள் ஏற்படும்? (இது சொந்தக் கேள்வி ஆனால் சொந்த கேள்வி இல்லை)
அங்கே எந்த கிரகமும் இல்லை என்பதற்காக நீங்கள் தப்பிக்க முடியுமா? 6ஆம் வீட்டு அதிபதி மற்றும் 8ஆம் வீட்டு அதிபதிகள் எங்கே இருக்கிறார்கள் என்று பாருங்கள். யாருடன் இருக்கிறார்கள் என்று பாருங்கள். எவருடைய பார்வைகளைப் பெற்றிருக்கிறார்கள் என்று பாருங்கள். அதை வைத்துப் பலன்கள் கிடைக்கும். அதிபதிகள் இல்லாமல் வீடுகள் இல்லை. வீடுகள் இல்லாமல் ஜாதகம் இல்லை! முதலில் அதை உணருங்கள்!
4.வெளிநாட்டு பயணங்களை கணக்கிடுவதற்கு சந்திரன், ராகு மற்றும் கேது இவர்களின் பங்கு என்ன?
ஒரு பெண்ணின் திருமணத்தில், அண்ணன், தம்பிகளின் பங்கு என்ன என்று கேட்பதைப்போல உள்ளது உங்கள் கேள்வி. காதல் திருமணம் என்றால், அவளுடைய பங்கு மட்டுமே முக்கியம். மற்றவர்களுடைய பங்கு தேவையில்லை. பெற்றோர்கள் நடத்திவைக்கும் திருமணம் என்றால், அவர்களுடைய பங்கு முக்கியம். அத்துடன் பெண்ணின் சம்மதமும் முக்கியம். (பிடிக்காத மாப்பிள்ளையைக் கட்டிவைக்க முடியாது)
அதுபோல வெளிநாட்டுப் பயணங்களுக்கு ஒன்பதாம் வீடும், அதன் சாராம்சங்களும் மட்டுமே முக்கியம். அதைப்பற்றிய விரிவான பாடம் என்னுடைய முன்பதிவில் உள்ளது. தேடிப்பிடித்துப் படியுங்கள்
5.வாக்ய பஞ்சாங்கத்தின்படி ஜாதகம் கணிக்கும்போது (கணினி மூலம் அல்ல) பாதசாரங்களை கொண்டுதான் எழுதுகிறோம். அனைத்து கட்டங்களும் 9 நட்சத்திர பாதங்களை கொண்டுள்ளது. ஓவ்வொரு நட்சத்திரமும் ஓவ்வொரு நேரங்களை கொண்டுள்ளது. சந்திரனின் வேகமோ ஒரே மாதிரியானது. என்னுடைய சந்தேகம் என்னவெனில் அனைத்து கட்டங்களும் சரிசமமாகதான் (30 டிகிரி) பிரிக்கப்பட்டுள்ளதா? இல்லை வித்தியாசங்கள் உள்ளதா?
சரியாகத்தான் பிரிக்கப்பட்டுள்ளது சாமி! அதிலென்ன சந்தேகம்? விமானத்தில் ஏறும் முன்பு, அந்த விமானம் ஒழுங்ககத்தான் தயாரிக்கப்பட்டுள்ளதா? (வடிவமைக்கப்படுள்ளதா?) என்று பார்த்துவிட்டா ஏறுவீர்கள். அதில் சந்தேகம் கொண்டால், நீங்கள் எப்படிப் பயணிக்க முடியும்?
6.ஆறு மற்றும் எட்டாம் அதிபதிகள் ஒன்று கூடுவது விபரீத ராஜயோகத்தை கொடுக்குமா?
அன்புடன்
செல்லபிரசாத் ராமசாமி
விபரீத ராஜயோகம் என்றால் என்னவென்று பாடம் நடத்தியுள்ளேன். அதைச் சரியாகப் படிக்காமல் கேள்விகேட்டால் என்ன செய்வது? ஒரு துஷ்ட ஸ்தானத்தின் அதிபதி, மற்றொரு துஷ்ட ஸ்தானத்தில், ஒரு துஷ்டனுடன் அமர்ந்திருந்தால் அந்த யோகம் உண்டாகும்.
நீங்கள் வெறுமனே கூடினால் என்று மட்டும் சொல்லியிருக்கிறீர்கள். கூட வேண்டிய இடத்தில் கூட வேண்டும் அல்லவா? அதைப் பாருங்கள். காதலனும், காதலியும் கூட வேண்டிய இடத்தில்தான் கூட வேண்டும். பொது இடத்தில் கூடினால் பிரச்சினையாகிவிடும். அதைப்போலத்தான் இதுவும்!
--------------------------------------------
email.No.54
G.ஆலாசியம்
அன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம்,
இது பொதுவான கேள்வி.....
1.எல்லா கிரகங்களுக்கும் நேரடிப் பார்வை என்பது, 7- ஆம் பார்வை; இதில் எதை எது பார்க்கிறது என்று கொள்ளவேண்டும்? 1.எதிரெதிரே பார்க்கும் கிரகங்கள் ஒன்றை ஒன்றுப் பார்க்கும் போது எதனுடையப் பலன் மிகும்? உம்:- தனுசு லக்னம், 5-இல் குரு 11-இல் சந்திரன்.
அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள். இது கம்ப ராமாயணத்தில் வரும் வரி. யார் யாரைப் பார்த்தார்கள் சொல்லுங்கள்? எதனுடைய பார்வை பவர்புஃல்லாக இருக்குமா? காதலர்களின் பார்வை என்றால், பெண்ணின் பார்வைதான் கிறங்கவைக்கும். அதில் பெண்கள்தான் கில்லாடிகள். ஆனால் கிரகங்களின் பார்வைகளில் அப்படி எல்லாம் பேதப் படுத்திப் பார்க்கமுடியாது!
2.எதிரெதிரே பார்க்கும் கிரகங்கள் பார்ப்பது கிரகங்களை மட்டும் அல்லாது அதன் வீட்டையும் பார்க்கும் அதில் எதன் பலன் மிகும்? உம்:- 3-க்கும், 4-க்கும் அதிபதி சனி 5-இல் மீனத்தில் இருந்து 9-க்கு அதிபதி சந்திரனை (கன்னியில்) பார்த்தல்.
திருடன் வந்தான் வீட்டிலுள்ள பணத்தையும் நகைகளையும் சுருட்டிக்கொண்டு போனான். அதோடு வீட்டில் இருந்த பெருசுகள் இரண்டுபேர்களின் மண்டையிலும் கட்டையால் ஒரு போடு போட்டு, மருத்தவமனையில் படுக்கும் படியாகப், படுக்கவைத்துவிட்டுப் போனான். இதில் எந்த வலி அதிகம்? பொருளைப் பறி கொடுத்த வலியா? அல்லது மண்டையில் அடிவாங்கிய வலியா? நீங்களே சொல்லுங்கள்?
பார்ப்பது கிரகங்களை மட்டும் அல்லது அது இருக்கும் வீட்டையுமா? எப்படி சாமி இப்படியெல்லாம் யோசிக்கிறீர்கள்? தனி அறையில் உட்கார்ந்து யோசிப்பீர்களா? இனிமேல் அப்படி எல்லாம் யோசிக்காதீர்கள்!
வீட்டின் முற்றத்தில் விழுகும் சூரிய ஒளி முற்றத்துத் தரையின் மீதும் விழுகும், அங்கே நிற்பவரின் மேலும் விழுகும் இல்லையா? அப்படித்தான் அதுவும்!
3.நல்ல கிரகத்தை தீயக் கிரகம் பார்க்கிறது என்றால் அந்தத் தீயக் கிரகம் அந்த ஜாதகனுக்கு நல்லவனாக இருந்தால் அதன் விளைவு என்ன? மேல் உள்ள உதாரணமே:- 3-க்கும், 4-க்கும் அதிபதி சனி 5-இல் மீனத்தில் இருந்து 9-க்கு அதிபதி சந்திரனை (கன்னியில்) பார்த்தல்.
ஒரு மனநிலை சரியில்லாதவனுக்கு மருத்துவர் ஒருவர் வைத்தியம் பார்க்கிறார். அவருக்கும் மனநிலை சரியில்லாமல் இருந்தால் விளைவு என்ன ஆகும்? என்று கேட்பதைப் போல இருக்கிறது உங்கள் கேள்வி!
உங்கள் கேள்வியிலேயே பதில் இருக்கிறது. யோசித்துப் பாருங்கள்.
4. 10-க்கும் 11-க்கும் அதிபதி சனி 8-இல் இருந்து 7- ஆம் வீட்டை பார்க்கிறார் (காலியாக உள்ள ரிசபத்தைப்). அது அந்த 2- ஆம் வீட்டிற்கு பாதகமா? அப்படியானால் அது பெண் ஜாதகமானால் அதைப் போன்ற அமைப்பு (அதனை ஒத்த அமைப்பு உண்டா?) உள்ள ஆணை மனம் முடித்தாள் அவர்களுடைய 2-வது வீட்டுப் பலன் மேம்படுமா?.என்னுடைய கேள்விகள் எந்த அளவுக்கு ஆழமானது எந்த அளவுக்கு மற்றவர்களுக்குப் பயன் படும் என்றும் தெரிய வில்லை.
அன்புடன்,
ஆலாசியம் கோ.
சனியின் பார்வையால் பாதகம் இல்லாமல் இருக்குமா? இருக்கும்!!!
ஒத்த அமைப்பு இருந்தால், இருவருக்கும் ஒத்துப் போகும்.
ஒருவரை ஒருவர் சரிபண்ணிக் கொண்டு (adjust) போவார்கள் .
--------------------------------------------------------------
சந்தேகங்களைக் கேட்டு நிறைய மின்னஞ்சல்கள் வந்துள்ளன. மின்னஞ்சல் பெட்டியில் உள்ளன. பதில்கள் வரிசையாக வரும். அத்தனை பொது சந்தேகங்களுக்கும் நிச்சயம் பதில் வரும். நம்முடைய கேள்விகளுக்குப் பதிலை இன்னும் காணோமே என்று யாரும் நினைக்க வேண்டாம். பொறுத்திருங்கள். வரிசைப்படி பதில்கள் நிச்சயம் வரும்!
---------------------------------------------------------------
(தொடரும்)
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
மாணவர் பதிவேடு (Enrolment Register)
என்னைப் பற்றி
Contact vaaththiyar
திருமணப் பொருத்தம்
My Phone Number and whatsApp number
94430 56624
My email ID
எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624
வந்தவர்களின் எண்ணிக்கை
வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாத்தியாரின் அடுத்த புத்தகம்
18.1.10
Doubt: அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்; யார் யாரைப் பார்த்தார்கள்?
Subscribe to:
Post Comments (Atom)
மாஷே !
ReplyDeleteநமஸ்காரம்!
தை மாதத்தில் கூட உங்கள் காட்டில்தான் அட மழை ஐயா!!!
(உங்களை விட்டால் எனக்கு யார் இருக்கா ? நான் எங்கு போவேன்? எனக்கு யாரை தெரியும்?)
ஒரு பாவமன்னிப்பு! @ ஒரு ஷம்ஷியம்! ?
இலக்கணத்தில் இருந்து 3 - வது வீட்டில் 'புதன்! (அல்லது) 5 - வது வீட்டில் ' குரு'! இருந்தால் 'சகலகலாவல்லவன் எம்பரமாத்மா மாயகண்ணன்'! மேல் தன்னையும் அறியாமல் 'காதல்'! ( பக்தி ) வரும் என்று அடியேன் கேட்டுண்டு, ஒரு சேச்சி!!! (குரு) மூலம். இந்த அமைப்பு எதனால் அச்சா!!!
சுக்லபட்சத்தில்! அஷ்டமி திதில்! அடியேன் ஜனித்ததினால் (அதிகமான சேஷ்டைகள், திருட்டுத்தனம் உட்பட, அறியாத பருவத்தில் அதிகமாக செய்ததினால் ) அடியேனுக்கு! கள்வனின் பெயரை வைத்ததினால் தான், கள்வனின் ( மாயகண்ணனின்) புத்தி அப்படியே வந்து விட்டது என்று என் தாய், தாயின் அப்பா @ தாய் மாமன்கள் உட்பட எல்லோரும் அளவுக்கு அதிகமாக செல்லமாக திட்டுவார்கள். அதனால்,அறியாதபருவதில் 'கண்ணா'! என்ற எனது பேரை கேட்டாலே எனக்கு பிடிக்காமல் போனகாலங்கள் நிறைய உண்டு. இதற்க்கு எம்பெருமானிடம் பாவமன்னிப்பு கிடைக்குமா அப்பா !!!.
விபரம் அறிந்த நாள் முதல் வேண்டுகின்றேன் ஐயா!!!
பிறவாமை என்னும் வரம் வேண்டும்!. அப்படியே பிறந்தால், 'கண்ணா'!!! என்ற உன்னாமத்தை உடைய பெயரோடு! உன்னையே உருகிவாலும் நிலை வேண்டும் என்று! என் ஐயனே!!!
அந்த பெரும்பாக்கியம் கிடைக்குமா ஐயா!!!!
/////kannan said...
ReplyDeleteபிறவாமை என்னும் வரம் வேண்டும்!. அப்படியே பிறந்தால், 'கண்ணா'!!! என்ற உன்னாமத்தை உடைய பெயரோடு! உன்னையே உருகிவாலும் நிலை வேண்டும் என்று! என் ஐயனே!!! அந்த பெரும்பாக்கியம் கிடைக்குமா ஐயா!!!!/////
உருகி வாழும் என்று கேட்க வேண்டும் ராசா! வாலும் என்றால் மீண்டும் வால் கிடைத்துவிடப் போகிறது? அடுத்த பிறவி எதற்கு? இப்போதே துவரம் பருப்பு கிலோ 90 ரூபாய் விற்கிறது.
நீர் அடுத்த பிறவி எடுத்து, வளர்ந்து கல்யாணம் காட்சி எல்லாம் காணும் காலத்தில் துவரம் பருப்பு கிலோ 1,800 ரூபாய்க்கு விற்கலாம். ஆகவே மீண்டும் பிறந்தால் தொல்லையே அதிகம்! பிறவாமை வேண்டும் என்று பிரார்த்தனை செய்யும்!
மாணவர்கள் "ரூம்" போட்டு சிந்தித்து கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.
ReplyDeleteபோகிற போக்கை பார்த்தால் 1 வருடம் போல கே...ப.. தொடரும் என்று தோன்றுகிறது.நடு நடுவில் பாடமும் நடத்தலாம். 8ம் பாவத்தை எப்படி சொல்லப்போகிறீர்கள் என்று படிக்க ஆவலோடு காத்து இருக்கிறோம்.
கூடுதுறை நண்பர் சுந்தர் பாடங்களை வகைப்படுத்திக் கொடுப்பதை நிறுத்திவிட்டாரா?அவர் தொடர்பு இருந்தால் மாணாவர்கள் சார்பாக அவருடைய பணியைத் தொடரச்சொல்லலாமே! அப்படி அவ்ர் தொடர்பு இல்லை என்றால் வேறு யாராவது அப்பணியைத் தொடரலாமே!எனக்கு அவ்வளவாக கணினி அறிவு இல்லை. இருந்தால் நானே செய்ய்துவிடுவேன்.
'வாலும் என்றால் மீண்டும் வால் கிடைத்துவிடபோகிறது’
ReplyDeleteபாவம் சார் கண்ணன் இனிமேல் உங்களை சோதிக்க மாட்டார்.
இனிய காலை வணக்கம் ஐயா!!!
ReplyDelete"ஒரு மனநிலை சரியில்லாதவனுக்கு மருத்துவர் ஒருவர் வைத்தியம் பார்க்கிறார். அவருக்கும் மனநிலை சரியில்லாமல் இருந்தால் விளைவு என்ன ஆகும்?"
விளக்கம் அருமை ஐயா!!!
உள்ளேன் அய்யா...
ReplyDeleteவாழ்க வளமுடன்,
வேலன்.
ஆசானே, பதில் as usual பிரமாதம்.
ReplyDeleteஒரு சின்ன வேண்டுகொள், பாட தலைப்பு படம் (Article Picture) தயவு செய்து மாற்றவும், same boring tom and jerry, neither suits topic nor subject matter.
அதிகப்பிரச்கியாய் தோன்றினால் மன்னிக்கவும் sir, பேஞ்சுமேல் நிற்க சொல்லாதிங்க வாதியாரே.
good morning sir!
ReplyDeletei don't receive any lesson in this week. i received 1st lesson at 8.1.10. is that any new procedure to receive the lessons?
ஒரு ஜாதகத்திற்கு பாதகாதிபதி அதன்
ReplyDeleteபலன் இவற்றை பிரசன்ன ஜோதிடத்தில்தான் பார்ப்பார்கள் ஜனன ஜாதக பலன்கள் பார்ப்பதற்கு அல்ல என்று படித்திருக்கிறேன். சற்று ஆராய வேண்டிய விஷயம் இது.
ராசி சக்கரத்தில் ஒரு வீட்டை எந்த கிரகமும் பார்க்காவிட்டால் நவாசத்தில் அந்த வீட்டை எந்த கிரகம் பார்க்கிறது என்றும் பார்த்து பலன் காணலாம். சரிதானே ஐயா.
Dear Sir,
ReplyDeleteThanks for the clarifications
Balakumaran.A.G.
as usual, todays answers are excellent, thanks for answering the questions.
ReplyDeleteஅன்பு ஐயா வணக்கம், தங்களின் பதில்கள் மிகவும் எளிய நடையிலும், மனதிற்கு புரியும்படியான
ReplyDeleteஅற்புத விளக்கங்களுடன் உள்ளன. ஐயா தங்களிடம் ஒரு கேள்வி,எட்டாம் இடத்து கெட்டவன், நாலில்
உச்சம் பெற்றால், மிக கெடுதல் பலன் கிடைக்குமா?
அன்புடன்
ஜீவா
present sir
ReplyDeleteஐயா நான் பாடம் எண் வருகிறேன். ஆனால் எனக்கு குரு 7 ல் பார்க்கிறார், சனி பார்வை இதெல்லாம் புரிய வில்லை. ஒரு கிரகம் பார்கிறது என்பதை எப்படி கணிப்பது?
ReplyDeleteDear Sir Good Evening,
ReplyDeleteThanks for today lesson sir. All the answers are very very nice sir.
sundari
அன்புள்ள ஆசிரியருக்கு,
ReplyDeleteவணக்கம். ஐயங்களை தீர்த்து வைத்து வைக்கும் உங்களுக்கு நன்றிகள்.
ஜோதிடம் பற்றிய இந்த நிகழ்ச்சி விஜய் டிவியில் வந்தது.இதன் சுவாரஸ்யம் கருதி உங்களுடன் பகிர விரும்புகிறேன். சுட்டியை இணைத்துள்ளேன்.
http://tamil.techsatish.net/file/vanga-pesalam-3/
நன்றி.
உங்கள் மாணவன்,
குரு
Nice sir
ReplyDeletePriya
//////kmr.krishnan said...
ReplyDeleteமாணவர்கள் "ரூம்" போட்டு சிந்தித்து கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.
போகிற போக்கை பார்த்தால் 1 வருடம் போல கே...ப.. தொடரும் என்று தோன்றுகிறது.நடு நடுவில் பாடமும் நடத்தலாம். 8ம் பாவத்தை எப்படி சொல்லப்போகிறீர்கள் என்று படிக்க ஆவலோடு காத்து இருக்கிறோம்.//////
இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்கள் வரை எழுதலாம் என்று உள்ளேன். அதற்குப் பிறகு பாடங்கள் தொடரும் கிருஷ்ணன் சார். எனக்கு மிகவும் பிடித்த வீடு எட்டாம் வீடுதான். அதைப்பற்றி விவரமாக எழுத உள்ளேன்.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
கூடுதுறை நண்பர் சுந்தர் பாடங்களை வகைப்படுத்திக் கொடுப்பதை நிறுத்திவிட்டாரா?அவர் தொடர்பு இருந்தால் மாணாவர்கள் சார்பாக அவருடைய பணியைத் தொடரச்சொல்லலாமே! அப்படி அவ்ர் தொடர்பு இல்லை என்றால் வேறு யாராவது அப்பணியைத் தொடரலாமே!எனக்கு அவ்வளவாக கணினி அறிவு இல்லை. இருந்தால் நானே செய்ய்துவிடுவேன்.//////
அது தெரியுமே சார்! கூடுதுறை நண்பர் சுந்தர் அவர்களையே கேட்டுக் கொள்வோம்! அவர் செய்து தருவார்!
/////krish said...
ReplyDelete'வாலும் என்றால் மீண்டும் வால் கிடைத்துவிடபோகிறது’
பாவம் சார் கண்ணன் இனிமேல் உங்களை சோதிக்க மாட்டார்.//////
அவர் தனது அன்பு மிகுதியால் அப்படிச் செய்கிறார். அதில் தவறு இல்லை! நகைச்சுவைக்காக என்னுடைய பதில்களை அப்படி எழுதுகிறேன். பொறுத்துக்கொள்ளூங்கள்
/////Kumares said...
ReplyDeleteஇனிய காலை வணக்கம் ஐயா!!!
"ஒரு மனநிலை சரியில்லாதவனுக்கு மருத்துவர் ஒருவர் வைத்தியம் பார்க்கிறார். அவருக்கும் மனநிலை சரியில்லாமல் இருந்தால் விளைவு என்ன ஆகும்?"
விளக்கம் அருமை ஐயா!!!////
உங்களின் பாராட்டிற்கு நன்றி குமரேஸ்!
/////வேலன். said...
ReplyDeleteஉள்ளேன் அய்யா...
வாழ்க வளமுடன்,
வேலன்./////
உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!
////சிங்கைசூரி said...
ReplyDeleteஆசானே, பதில் as usual பிரமாதம்.
ஒரு சின்ன வேண்டுகொள், பாட தலைப்பு படம் (Article Picture) தயவு செய்து மாற்றவும், same boring tom and jerry, neither suits topic nor subject matter.
அதிகப்பிரச்கியாய் தோன்றினால் மன்னிக்கவும் sir, பேஞ்சுமேல் நிற்க சொல்லாதிங்க வாத்தியாரே./////
உங்கள் வேண்டுகோள் ஏற்கப்பட்டது. அடுத்த பதிவைப் பாருங்கள்
/////sasi said...
ReplyDeletegood morning sir!
i don't receive any lesson in this week. i received 1st lesson at 8.1.10. is that any new procedure to receive the lessons?/////
நீங்கள் குறிபிட்டுள்ள தேதிக்குப் பிறகு மின்னஞ்சல் பாடங்கள் எதையும் அனுப்பவில்லை. சகோதரி. வகுப்பறையில் தொடர்ந்து கேள்வி பதில் பகுதி நடைபெற்று வருவதால் அதற்கு நேரமில்லை. எழுதினால்/அனுப்பினால் அறிவிப்பு வகுப்பறையில் வெளியாகும். கவலை வேண்டாம். ஒரே நேரத்தில் இரண்டு குதிரைகளில் எப்படி பயணிக்க முடியும் சகோதரி?
/////ananth said...
ReplyDeleteஒரு ஜாதகத்திற்கு பாதகாதிபதி அதன் பலன் இவற்றை பிரசன்ன ஜோதிடத்தில்தான் பார்ப்பார்கள் ஜனன ஜாதக பலன்கள் பார்ப்பதற்கு அல்ல என்று படித்திருக்கிறேன். சற்று ஆராய வேண்டிய விஷயம் இது.
ராசி சக்கரத்தில் ஒரு வீட்டை எந்த கிரகமும் பார்க்காவிட்டால் நவாம்சத்தில் அந்த வீட்டை எந்த கிரகம் பார்க்கிறது என்றும் பார்த்து பலன் காணலாம். சரிதானே ஐயா./////
ஆமாம் நண்பரே! உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி!
/////KUMARAN said...
ReplyDeleteDear Sir,
Thanks for the clarifications
Balakumaran.A.G.
நல்லது.நன்றி!
/////Ram said...
ReplyDeleteas usual, todays answers are excellent, thanks for answering the questions./////
நல்லது.நன்றி!
/////ஜீவா said...
ReplyDeleteஅன்பு ஐயா வணக்கம், தங்களின் பதில்கள் மிகவும் எளிய நடையிலும், மனதிற்கு புரியும்படியான
அற்புத விளக்கங்களுடன் உள்ளன. ஐயா தங்களிடம் ஒரு கேள்வி,எட்டாம் இடத்து கெட்டவன், நாலில்
உச்சம் பெற்றால், மிகக் கெடுதல் பலன் கிடைக்குமா?
அன்புடன்
ஜீவா//////
எட்டாம் அதிபதி என்ன காரகத்திற்கு உரியவனோ, அதற்கான பலனைத் தான் உச்சம் பெற்று 4ல் அமர்ந்ததற்கான (நன்மையான பலன்களை) ஜாதகனுக்குத் தருவார்! அதோடு 4ல் அமர்ந்ததால் 4ஆம் வீட்டிற்கான பலனைக் குறைக்கவும் செய்வார். கலவையான பலன்களாக இருக்கும்!
/////RVC said...
ReplyDeletepresent sir/////
உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!
///////Eswari said...
ReplyDeleteஐயா நான் பாடம் எண் வருகிறேன். ஆனால் எனக்கு குரு 7 ல் பார்க்கிறார், சனி பார்வை இதெல்லாம் புரிய வில்லை. ஒரு கிரகம் பார்கிறது என்பதை எப்படி கணிப்பது?//////
ஒரு கிரகம் தான் அமர்ந்திருக்கும் வீட்டில் இருந்து தன் வீட்டிற்கு ஏழாம் வீட்டிலுள்ள (அமர்ந்திருக்கும் வீட்டையும் சேர்த்து எண்ண வேண்டும்) கிரகத்தைப் பார்ப்பார். சனி, செவ்வாய், குரு ஆகிய மூன்று கிரகங்களுக்கும், 7ஐத் தவிர விசேஷப் பார்வைகள் என்று சில வீடுகளின் மேலான பார்வை உண்டு. இது அடிப்படைப்பாடம். பழைய பாடங்களைப் படியுங்கள் சகோதரி!
/////sundari said...
ReplyDeleteDear Sir Good Evening,
Thanks for today lesson sir. All the answers are very very nice sir.
sundari//////
உங்களின் பாராட்டிற்கு நன்றி சகோதரி!
/////Guru said...
ReplyDeleteஅன்புள்ள ஆசிரியருக்கு,
வணக்கம். ஐயங்களை தீர்த்து வைத்து வைக்கும் உங்களுக்கு நன்றிகள்.
ஜோதிடம் பற்றிய இந்த நிகழ்ச்சி விஜய் டிவியில் வந்தது.இதன் சுவாரஸ்யம் கருதி உங்களுடன் பகிர விரும்புகிறேன். சுட்டியை இணைத்துள்ளேன்.
http://tamil.techsatish.net/file/vanga-pesalam-3/
நன்றி.
உங்கள் மாணவன்,
குரு////
தகவலுக்கு நன்றி! நானும் பார்க்கிறேன் நண்பரே!
/////Priya said...
ReplyDeleteNice sir
Priya//////
நல்லது.நன்றி!