![]() | ||
அருள்மிகு சனீஷ்வரர் |
சனிப்பெயர்ச்சிப் பலன்கள்
நவக்கிரகங்களில் ஈஸ்வரன் என்னும் பெயருடன் சேர்த்து அழைக்கப்பெறுபவர் சனீஸ்வரன். அதுவே அவருடைய முக்கியத்துவத்தை உணர்த்தும்.
கர ஆண்டு மார்கழித் திங்கள் 5ஆம் தேதி புதன்கிழமையன்று (21.12. 2011) அதிகாலையில் சனீஸ்வரன் கன்னி ராசியில் இருந்து, தனது உச்ச வீடான துலாம் ராசிக்குள் பிரவேசிக்கின்றார். அதாவது தனது மூட்டை முடிச்சுக் களுடன் வீடு மாறுகின்றார்
வாசகர்கள் சிலரின் வேண்டுகோளிற்காகவும், வகுப்பறைக் கண்மணிகளின் அறிந்து கொள்ள வேண்டியதற்காகவும் சனிப்பெயர்ச்சிப் பலன்களை
எழுதியுள்ளேன்.
கீழே கொடுக்கப்பெற்றுள்ளவை அனைத்தும் பொதுப்பலன்கள், இந்திய மக்கள் 121 கோடிப் பேர்களுக்குமான பொதுப்பலன்கள். உங்களுடைய ஜாதகத்தில் சனீஸ்வரன் நல்ல ஆதிக்கப் பலனுடன் இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால், நல்ல தொழிலையும் அல்லது வேலையையும் கொடுத்து, வருமானத்திற்கு எந்தக் குறையும் இல்லாமல் பார்த்துக் கொள்வார். நீண்ட ஆயுளையும் கொடுப்பார்.
தனிப்பட்ட ஜாதகர்களுக்கு, கோள்சாரத்தில் சனீஷ்வரன் கடந்து செல்லும் ராசிகளில் சர்வாஷ்டகவர்க்கப்படி, 30 அல்லது அதற்கு மேற்பட்ட
பரல்கள் இருந்தால், அவர்களுக்கு எந்த பாதிப்பு இருக்காது. இதை முக்கியமாக மனதில் கொள்ளவும்.
இறைவழிபாடும், சனீஷ்வர வழிபாடும் நன்மையளிக்கும். இந்தத் துன்பங்கள் இருக்காதா என்றால், இருக்கும். வருவதை, விதிக்கப்பட்டதை நீங்கள் அனுபவித்துத்தான் ஆக வேண்டும். ஆனால் வழிபாடுகள் தாக்குப் பிடிக்கும் சக்தியை உங்களுக்கு வழங்கும் (It will give you standing power in miserable or unwanted situation).
எந்த சூழ்நிலையிலும், தாக்குப் பிடிக்கும் சக்தி முக்கியம். அதை மனதில் கொள்ள வேண்டுகிறேன்.
அன்புடன்,
வாத்தியார்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++=
ஏழரை ஆண்டுகளாக ஏழரைச் சனியின் பிடியில் சிரமப் பட்டுக்கொண்டிருந்த சிம்ம ராசிக்காரகளும், சென்ற இரண்டரை ஆண்டுகளாக அஷ்டமச் சனியால் (8ஆம் இடத்துச் சனியால்) சிரமப்பட்டுக்கொண்டிருந்த கும்ப ராசிக்காரர்களும் மகிழ்ச்சி கொள்ளலாம். அவர்களுக்குப் பூரண நிம்மதி கிடைக்கும்.
அந்தச் சிரமங்களை இனி விருச்சிக ராசிக்காரர்களும் (ஏழரைச் சனியில் விரயச் சனி - 12ஆம் இடம்), மீன ராசிக்காரர்களும் (அஷ்டமச் சனி - 8ஆம் இடச் சனி) சந்திக்க நேரிடும்.
ரிஷப ராசிக்கார்கள் (ஆறாம் இடம்), மிதுன ராசிக்காரர்கள் (ஐந்தாம் இடம்), சிம்ம ராசிக்காரர்கள் (3ஆம் இடம்) தனுசு ராசிக்கார்கள் (11ஆம் இடம்), கும்ப ராசிக்காரகள் (9ஆம் இடம்) ஆகியோர்கள் இந்தப் பெயர்ச்சியால் நன்மையடைவார்கள் அவர்களும் மகிழ்ச்சி கொள்ளலாம்.
கடக ராசிக்காரர்கள் (4ல் சனி), கன்னி ராசிக்கார்கள் (பாதச் சனி - 2ஆம் இடம்), மகர ராசிக்காரர்கள் (ஜீவன ஸ்தானம் - 10ஆம் இடம்), மேஷ ராசிக்காரர்கள் (கண்டச் சனி - 7ஆம் இடம்) துலா ராசிக்காரர்கள் (ஜென்மச்சனி - ஒன்றாம் இடம்) ஆகியோர்கள் சிறிதளவு பாதிக்கப்பெறுவார்கள்.
12 ராசிகளுக்கும் உரிய பொதுப்பலன்கள்:
1. மேஷம்: மனதில் கலக்கம் ஏற்படும். எடுத்துச் செய்யும் செயல்களில் தாமதம் உண்டாகும். பல வேலைகள் இழுத்துதடிக்கும். சட்டென்று முடியாது. நண்பர்கள், உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். எதிலும் நிதானமாக இருப்பது நல்லது.
2. ரிஷபம்: சாதகமான ஆறாம் இடத்தில் சனி. முன்பிருந்த சிரமங்கள் எல்லாம் நீங்கிவிடும். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். உறவினர்களும், நண்பர்களும் உங்களைப் போற்றத்துவங்குவார்கள். விரும்பிய செயல்களைச் செய்யும் அளவிற்குப் பணவரவும் உண்டாகும்.
3. மிதுனம்: புதிய, விரும்பத் தகுந்த மாற்றங்கள் உண்டாகும். இடம், பொருள் சேர்க்கை உண்டாகும். சிலருக்குப் புதிய வீடு கட்டும் யோகம் உண்டாகும். இரண்டரை ஆண்டு காலத்தில் சிக்கனமாக இருந்து, வாழ்வின் அடுத்த நிலைக்குச் செல்வது புத்திசாலித்தனமாகும்.
4. கடகம்: சுகக்கேடு, அலைச்சல் உண்டாகும். சிலருக்கு உடல் நலம் பாதிக்கும். செயல்களில் உங்களை அறியாமல் தவறுகள் ஏற்படலாம். கவனத்துடன் செயல்படுவது நல்லது. சிலருக்கு அவர்களது அன்னையின் உடல் நலம் பாதிக்கப்படலாம்.
5. சிம்மம்: இதுவரை உங்களை ஒருகை பார்த்துக்கொண்டிருந்த, வாட்டி, வதக்கிக்கொண்டிருந்த ஏழரைச் சனி முற்றிலுமாக விலகுகிறது. இனி
எல்லாம் நன்மையே. உற்சாகம் பொங்கி வழியும். முனைப்புடன் செயல் பட்டு வெற்றிக் கனிகளைப் பறிப்பீர்கள். செய்யும் வேலைகளுக்கான
பலன்கள் அதிகரிக்கும்
6. கன்னி: ஏழரைச்சனியின் கடைசிக் கட்டத்திற்கு வந்துள்ளீர்கள். அடை மழை இல்லை என்றாலும் தூறல் நிற்கவில்லை. பேச்சில், வாக்குக் கொடுப்பதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சிலருக்கு வழக்குகள் ஏற்படலாம். பணம் அதுவாக வராது. அலைந்து திரிந்துதான் பெற வேண்டியதாக இருக்கும். அத்துடன் எதிர்பார்க்காத செலவுகளும் ஏற்படும்.
7. துலாம்: ஏழரைச் சனிக்கு உரிய மூன்று கட்டங்களில் சனீஷ்வரன் இரண்டாவது கட்டத்திற்கு வந்துள்ளார். ஜென்மச் சனி என்று அதற்குப்
பெயர். வேலை செய்வதற்கே சலிப்பாக இருக்கும். மனதில் மந்தமான சூழ்நிலை நிலவும். சம்பந்தமில்லாத காரியங்களில் தலையிடாதீர்கள்.
அவப்பெயர் உண்டாகலாம். குடும்பஸ்தர்களுக்கு மனைவியுடன் கருத்து வேறு பாடுகள் உண்டாகலாம். அன்பு மனைவியை அனுசரித்துப் போவது நல்லது.
8. விருச்சிகம்: ஏழரைச் சனி துவக்கம். ராசிக்குப் 12ல் சனி. பணத் தட்டுப்பாடு ஏற்படும். வரவுக்கு மேல் செலவு ஏற்படும். ஒருமுறைக்கு இருமுறை யோசித்துச் செலவு செய்வது நல்லது. புதிய முயற்சிகள், புதிய முதலீடுகள் ஆகியவற்றைத் தவிர்ப்பது நல்லது. நீங்கள் விரும்பும் பலன்கள் கிடைக்காது. இறைவழிபாடு அவசியம். நன்மை பயக்கும்.
9. தனுசு: முன்னேற்றப் பாதையில் செல்வீர்கள். எந்தச் செயலிலும் முன்பிருந்த தாமதம், தடை இருக்காது. பணவரவு அதிகரிக்கும். சமூக அந்தஸ்து அதிகரிக்கும். உத்தியோகத்தில், தொழிலில் மேன்மை உண்டாகும். புகழ், செல்வாக்கு என்று எல்லாவிதமான நன்மைகளும் ஏற்படும்
10. மகரம்: வேலையில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் ஏற்படும். சனீஸ்வரன் ராசிநாதன். அத்துடன் தன்னுடைய உச்ச வீட்டில் இருப்பதால். இடமாற்றம் என்பது சிலருக்குப் பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றமாக இருக்கும்.
11. கும்பம்: அஷ்டமச் சனியால் இதுவரை நீங்கள் அனுபவித்த துன்பங்கள் எல்லாம் நீங்கி, வாழ்க்கை வளம் பெறும். மகிழ்ச்சி நிலவும். வீட்டில் சுப காரியங்களைச் செய்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.
12. மீனம்: சென்ற இரண்டரை ஆண்டுகளாக அனுபவித்த சிரமங்களை விடக் கூடுதலான சிரமங்களை அனுபவிக்க நேரிடும். காரணம் 8ஆம் இடத்துச் சனி. சோதனைகள் அதிகரிக்கும். எது இருந்தாலும் தாக்குப் பிடித்து, இரண்டரை ஆண்டுகால முடிவில் நீங்கள் மனத்திடம் உள்ள மனிதராக மாறிவிடுவீர்கள்.
செய்திச் சுருக்கம் (News in brief)
பலனடையப்போகின்றவர்கள்: ரிஷபம், சிம்மம், தனுசு ஆகிய 3 ராசிக்காரர்கள்
குறைந்த அளவு - அதாவது சில்லறைப் பலன்கள்: மேஷம், மிதுனம், மகரம், கும்பம் ஆகிய 4 ராசிக்காரர்கள்
பரிகாரம் தேட வேண்டியவர்கள்: கஷ்டங்கள் வாராமலிருக்க சனீஷ்வரனை வணங்க வேண்டிய ராசிக்காரர்கள்: கடகம், கன்னி, துலாம், விருச்சிகம், மீனம் ஆகிய 5 ராசிக்கார்ரகள்
ஏழரைச் சனி: கன்னி ராசிக்காரர்கள் (கடைசி இரண்டரை ஆண்டுகள் - பாதச் சனி என்பார்கள்.அல்லது கழிவுச்சனி என்று கொள்ளுங்கள்)
துலாம் ராசிக்காரர்கள்: இரண்டாம் இடம் ஜென்மச்சனி
விருச்சிக ராசிக்காரர்கள்: ஏழரைச் சனி ஆரம்பம்.
அஷ்டமச் சனி ( எட்டாம் இடத்துச் சனி): ஏழரைச் சனிக்கு நிகரான கஷடங்களையும் துன்பங்களையும் தரக்கூடிய அமைப்பு. அது மீன
ராசிக்காரர்களுக்கு ஏற்படும்!
----------------------------------------------------------
இரண்டாவது முறையாக, முக்கியமான தகவல்களை மீண்டும் ஒருமுறை கொடுத்துள்ளேன்
மேலே கொடுக்கப்பெற்றுள்ளவை அனைத்தும் பொதுப்பலன்கள், இந்திய மக்கள் 121 கோடிப் பேர்களுக்குமான பொதுப்பலன்கள். உங்களுடைய
ஜாதகத்தில் சனீஸ்வரன் நல்ல ஆதிக்கப் பலனுடன் இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால், நல்ல தொழிலையும் அல்லது வேலையையும்
கொடுத்து, வருமானத்திற்கு எந்தக் குறையும் இல்லாமல் பார்த்துக் கொள்வார். நீண்ட ஆயுளையும் கொடுப்பார்.
தனிப்பட்ட ஜாதகர்களுக்கு, கோள்சாரத்தில் சனீஷ்வரன் கடந்து செல்லும் ராசிகளில் சர்வாஷ்டகவர்க்கப்படி, 30 அல்லது அதற்கு மேற்பட்ட பரல்கள் இருந்தால், அவர்களுக்கு எந்த பாதிப்பு இருக்காது. இதை முக்கியமாக மனதில் கொள்ளவும்.
இறைவழிபாடும், சனீஷ்வர வழிபாடும் நன்மையளிக்கும். இந்தத் துன்பங்கள் இருக்காதா என்றால், இருக்கும். வருவதை, விதிக்கப்பட்டதை நீங்கள் அனுபவித்துத்தான் ஆக வேண்டும். ஆனால் வழிபாடுகள் தாக்குப் பிடிக்கும் சக்தியை உங்களுக்கு வழங்கும் (It will give you standing power in miserable or unwanted situation).
எந்த சூழ்நிலையிலும், தாக்குப் பிடிக்கும் சக்தி முக்கியம். அதை மனதில் கொள்ள வேண்டுகிறேன்.
அன்புடன்,
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!