மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label Lessons 951 - 960. Show all posts
Showing posts with label Lessons 951 - 960. Show all posts

9.12.16

Astrology: ஜோதிடம்: அலசல் பாடம்: கஷ்டங்களுக்கு ஒரு உதாரண ஜாதகம்!


Astrology: ஜோதிடம்: அலசல் பாடம்: கஷ்டங்களுக்கு ஒரு உதாரண ஜாதகம்!

பிரச்சினை இல்லாத மனிதனே கிடையாது. வாழ்க்கை என்பது சீட்டாடத்தைப் போன்றது. கையில் 13 கார்டுகளுடன் நீங்கள் ஆடித்தான் ஆகவேண்டும். ஒரு கார்டை நீங்கள் கீழே இறக்கினால், பதிலுக்குக் கீழே இருந்து ஒரு கார்டை எடுத்துக்கொள்ள வேண்டும். சீட்டாடுபவர்களுக்கு அல்லது முன்பு ஆடியவர்களுக்கு அது நன்றாகத் தெரியும்.

அத்துடன் சிலருக்கு ஒரு பிரச்சினைதான் இருக்கும். அதைத் தீர்த்தவுடன் அடுத்த பிரச்சினை வரும். ஆனால் சிலருக்குக் ஒரே நேரத்தில் நான்கைந்து பிரச்சினைகள் இருக்கும். அதாவது ரம்மி சேராமல, கையில் சில ஜோக்கர்க்ளும் பல பெரிய கார்டுகளும் கையில் இருப்பது போன்ற நிலைமை!

அதுபோல ஒரு அன்பருக்கு ஒரே நேரத்தில் பல பிரச்சினைகள். செய்யும் தொழில் சீராக இல்லை. அதில் நஷ்டம். திருமண வாழ்க்கையில் பிரச்சினை. மனைவியுடன் சுமூகமான உறவு இல்லை. கடும் பணப் பிரச்சினை. உடல் நலமின்மை. இப்படி எல்லாமுமாகச் சேர்ந்து படுத்தி எடுத்தன!

ஆளை விட்டால் போதும் எங்காவது ஓடிப் போய்விடலாம் என்னும் நிலைமை!

அது எப்படி ஓடிப்போக முடியும்? விதி விடுமா?

என்ன ஆயிற்று அவருக்கு?

வாருங்கள் அவருடைய ஜாதகத்தை அலசுவோம்? அவருக்கு நாம் என்ன உதவியா செய்யப் போகிறோம்? இல்லை! நமது பயிற்சிக்காக அதை இன்று அலசுவோம்
--------------------------------------------------------------
கீழே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்


1. ஜாதகத்தில் உள்ள பெரிய குறை கேமதுருமா யோகத்தின் பிடியில் ஜாத்கம் உள்ளது.  கேமதுருமா யோகம் என்பது மோசமான அவ யோகம். உங்கள் மொழியில் சொன்னால் தரித்திர யோகம். அந்த அவயோகம் உள்ள ஜாதகன் வறுமையில் வாடும்படியாகிவிடும். Kema Druma Yoga is said to occur when there is no planet positioned in either second house or in the twelfth house from Moon; சந்திரனுக்கு இரண்டு பக்கமும் எந்த கிரகமும் இல்லாமலும், உடன் எந்த கிரகமும் இல்லாமலும், சந்திரன் தனித்து இருக்கும் நிலைமை!

2. யோககாரகனான செவ்வாய் சூரியனுக்கு அருகில் சென்று அஸ்தமித்துவிட்டான். அவனால் பயனில்லாமல் போய்விட்டது.

3. அதே போல 2ஆம் மற்றும் 11ஆம் இடத்திற்கு உரிய புதனும் சூரியனுக்கு அருகில் சென்று அஸ்தமித்துவிட்டான். இரண்டாம் வீடு பணத்திற்கான வீடு. பதினொன்றாம் வீடு லாபத்திற்கான வீடு.

4. லக்கினத்திற்கு எட்டாம் வீட்டுக்காரன் (அஷ்டமாதிபதி) குரு அந்த வீட்டிற்கு 12ல், அதாவது லக்கினத்திற்கு ஏழில் அமர்ந்து திருமண வாழ்க்கையில் கஷ்டங்களைக் கொடுத்தான். எட்டாம் அதிபதி என்றாலே கஷ்டங்களைக் கொடுப்பவன். அதை மனதில் வையுங்கள்.

5. அத்துடன் ஜாதகனுக்குக் குரு திசை நடந்த போது, எட்டாம் அதிபதி லக்கினத்தையும் சூரியனையும் பார்த்ததால் ஜாதகனுக்கு உடல் நலம் இல்லாமலும் போய் விட்டது.

ஜாதகன் கடைசிவரை எந்த நன்மையையும் அடையவில்லை. சிம்ம லக்கின ஜாதகன் என்பதால், பல்லைக் கடித்துக்கொண்டு, எல்லாத் துன்பங்களையும் தாங்கிக் கொண்டு வாழ்க்கையை ஓட்டினான்.

அன்புடன்
வாத்தியார்
================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

2.12.16

Horoscope: ஜோதிடம்: அலசல் பாடம்: கல்வியும், கிடைக்கும் வேலையும்!


Horoscope: ஜோதிடம்: அலசல் பாடம்: கல்வியும், கிடைக்கும் வேலையும்!

தலைப்பு: கல்வியும், வேலையும்

அந்தக்காலத்தில், அதாவது 40களில் பத்தாம் வகுப்பு வரை படித்திருந்தால், வேலை கிடைத்தது. இந்தியன் வங்கியிலும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிலும் (அப்போது அவ்விரண்டு வங்கிகளும் தனியார்கள் வசம் இருந்தது) அல்லது டி.வி.எஸ் போன்ற நிறுவனங்களிலும் வேலை கொடுத்தார்கள்

பிறகு ஒரு முப்பது ஆண்டுகள் கழித்து, பட்டப் படிப்பு (எந்தப் படிப்பு படித்திருந்தாலும் பட்டதாரி என்றால் போதும்) படித்தவர்களுக்கு வேலை கிடைத்தது.

இன்று நிலைமை அப்படியல்ல. தொழில் சார்ந்த கல்விகள் படித்தவர்களுக்கும், உயர் கல்வி படித்தவர்களுக்கும் அல்லது பொறியியல் படித்தவர்களுக்கும் மட்டுமே வேலை கிடைக்கிறது.

உலகம் போட்டிகள் நிறைந்ததாக உள்ளது. பொருளாதாரம் தாறு மாறாக உள்ளது. விலைவாசி அன்றாடம் ஏறிக்கொண்டிருக்கிரது. வாழ்க்கை பல அவலங்கள் நிறைந்ததாக உள்ளது.

ஒவ்வொரு பெற்றோர்களுக்கும் தங்கள் குழந்தையின் எதிர்காலம் பற்றிய கவலை வாட்டி எடுக்கிறது. படி, படி என்று குழந்தைகளை அவர்கள் வாட்டி எடுக்கும் சூழ்நிலை உள்ளது.

இந்த்ச் சூழ்நிலையில், ஒரு இளைஞன் கல்வியில் ஆர்வம் இல்லாமல் இருந்தால் என்ன ஆகும். அவனுடைய பெற்றோர்களின் நிலை என்ன?

வீட்டில் தன்னுடைய பெற்றோர்கள், பணம் செல்வழித்துப் படிக்க வைப்பதற்குத் தயாராக இருந்தும் அந்த இளைஞனுக்குப் படிப்பில் ஆர்வம் இல்லை. அவர்கள் எவ்வள்வோ வற்புறுத்தியும், அவன் தத்தித் தத்தி ஒரு இளங்கலை பட்டப் படிப்பு வரை படித்து, அதில் பார்டரில் தேர்வு பெற்றான். B.A (Literature) படித்தான். அதற்குப் பிற்கு, மேல் படிப்புப் படிக்க சண்டித்தனம் செய்தான்.

அவன் நிலை என்னவாயிற்று? அவனுக்கு என்ன வேலை கிடைத்தது? ஜாதகப்படி அது சரிதானா?

வாருங்கள் இன்று அதை அலசுவோம்!

கீழே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்:


கடக லக்கின ஜாதகம். லக்கினத்தில் லக்கின அதிபதி சந்திரன் உள்ளார்.

அஷ்டம அதிபதி (எட்டாம் வீட்டுக்காரன்) சனி, லக்கினத்தில் வந்து அமர்ந்துள்ளான். விரையதிபதி (12ஆம் வீட்டுக்காரன்) புதன் 7ல் அமர்ந்து லக்கினத்தைத் தன் பார்வையில் வைத்துள்ளான். அவர்களால் நன்மையல்ல!

நான்காம் வீட்டில் ராகு அமர்ந்துள்ளார். அவர் அமர்ந்த காரனத்தினால் ஜாதகனுக்கு உயர் கல்வியில் ஆர்வமில்லாமல் போய்விட்டது.

பாக்கிய ஸ்தானத்தில் (9ஆம் வீட்டில்) குரு பகவான். ஆட்சி பலத்துடன் உள்ளார். இது சற்று ஆறுதலான விஷயம்

ஐந்தாம் அதிபதி செவ்வாயும், பதினொன்றாம் அதிபதி சுக்கிரனும் பரிவர்த்தனை யோகத்தில் உள்ளார்கள். இது ஜாதகத்திற்கு ஒரு சிறப்பை, மேன்மையைக் கொடுக்கும்
-----------------------------------------------
1
பத்தாம் வீட்டில் கேது வந்து டெண்ட் அடித்து அமர்ந்துள்ளார். ஆனாலும் பத்தாம் வீட்டுக்காரன் செவ்வாய் 11ல் (லாப ஸ்தானத்தில்) உள்ளார். அத்துடன் 11ஆம் வீட்டுக்காரன் சுக்கிரனின் பார்வையும் பத்தாம் அதிபதி செவ்வாயின் மேல் உள்ளது. அதனால் ஜாதகன் எந்த வேலை பார்த்தாலும் அதில் உயர்வு உண்டு. அதில் முன்னேற்றம் காண்பான். செய்யும் வேலை அல்லது தொழிலால் வளம் பெரும்!

2
கர்மகாரன் சனி தன்னுடைய விசேடப் பார்வையால் பத்தாம் வீட்டைப் பார்க்கின்றான். அதனால் அவனும் கைகொடுப்பான். பாக்கியாதிபதி குருவின் பார்வையும் சனியின் மேல் விழுகிறது. அதுவும் கர்மகாரகனுக்கு நன்மையானதே. லக்கினத்திற்கும் நன்மையானதே!. குரு தனது ஆட்சி வீட்டில் வலுவாக உள்ளார்
.
3
இரண்டாம் வீட்டுக்காரன் (House of finance) சூரியனின் பார்வையும் லக்கினத்தின் மேல் விழுகிறது. சனியின் மேலும் விழுகிறது. அதுவும் நன்மையானதே. இந்தக் கூட்டு அமைப்புக்கள் ஜாதகனை நல்ல இடத்தில் உட்கார வைக்கும்! ஜீவனத்திற்கு எந்த பாதிப்பும் இருக்காது.

4
கர்மகாரகன் சனியுடன் இருக்கும் பூர்ண சந்திரன், ஜாதகனுக்கு எழுத்து, பத்திரிக்கை, நிருபர் போன்ற வேலைகளில் நல்ல திறமையை வழங்கும்.(Media, reporting, communication fields etc)

5
ஜாதகன் முதலில் ஒரு பத்திரிக்கை அலுவலகத்தில் ஒரு ஆண்டு வேலை செய்து பயிற்சி பெற்றுப் பிறகு ஒரு பத்திரிக்கைக்கு மாறிச் சேர்ந்து படிப்படியாக உயர்வு பெற்றான்.

6
ஜாதகனின் 25ஆவது வயதில் அது நடந்தது. அப்போது அவனுக்கு சுக்கிர திசை. சுக்கிரனின் மேல் குருவின் பார்வை படுவதையும் கவனியுங்கள். பாக்கியநாதன் கை கொடுக்க ஜாதகனுக்கு எல்லாம் கூடி வந்தது. பாக்கிய நாதன் கை கொடுத்தால் எதுவும் கூடி வரும். அதை மனதில் வையுங்கள்!

7.
கடக லக்கினத்திற்கு யோககாரகனான செவ்வாயின் பார்வையும் சுக்கிரன் மேல் விழுவதைப் பாருங்கள். யோககாரகனின் பார்வையும் கை கொடுக்கும். அதையும் மனதில் வையுங்கள்

அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

25.11.16

Astrology: ஜோதிடம்: அலசல் பாடம்: தாமதமாக நடக்கும் திருமணங்கள்!


Astrology: ஜோதிடம்: அலசல் பாடம்: தாமதமாக நடக்கும் திருமணங்கள்!
தாமதமாகத் திருமணம் நடைபெற்றதற்கு ஒரு உதாரண ஜாதகம்!

திருமணம் உரிய காலத்தில் நடைபெற வேண்டும். அந்தக் காலத்தில், அதாவது ஐம்பது, அறுபதுகளில், பெண்ணிற்கு 18 வயதிலும், பையனுக்கு 21 வயதிலும் திருமணத்தைச் செய்து வைத்துவிடுவார்கள்.

இப்போது அப்படியல்ல, படிப்பு, வேலை வாய்ப்பு காரணமாக, திருமணம் செய்து கொள்வதில் இளைஞர்களும், கன்னிகளும் முனைப்பாக இருப்பதில்லை. பெற்றோரும் அக்கறையில்லாமல், அல்லது வேறு வழியில்லாமல் இருக்கிறார்கள்.

இப்போதும், படிப்பு, வேலை வாய்ப்பு என்று எப்படிக் கண்க்கிட்டாலும் பெண்ணிற்கு 23 வயதிலும், பையனுக்கு 25 வயதிலும் திருமணத்தைச் செய்து விட வேண்டும்.

நடக்கிறதா? செய்கிறார்களா? பெரும்பாலும் இல்லை என்றே சொல்ல வேண்டும். எல்லோரும் ஜாதக்த்தைக் குற்றம் சாட்டுவார்கள். உரிய நேரம் வரவில்லை, உரிய வரன் கிடைக்கவில்லை என்பார்கள்.

80 சதவிகிதம் அதெல்லாம் கிடையாது. கிடைக்கும் வரனைப் போதும் என்று முன்வந்து மணந்து கொள்ள வேண்டாமா? இதைவிட நல்லது கிடைக்குமா? என்று கிடைப்பதை எல்லாம் ஒதுக்கும் சம்பவங்கள் நிறைய உள்ளன. அனுபவத்தில் பார்த்திருக்கிறேன்

சரி, அதெல்லாம் போகட்டும். உண்மையிலே ஜாதகப்படி திருமணம் தாமதமாகுமா? ஆகும்

ஏழாம் வீட்டுக்காரனும், களத்திரகாரனும் ஜாதகத்தில் வலிமையாக இல்லாவிட்டால், திருமணம் தாமதமாவதற்கோ அல்லது திருமணம் மறுக்கப் படுவதற்கோ வாய்ப்பு உண்டு (That is delay or denial of marriage)

உங்களுடைய பயிற்சிக்காக ஒரு உதாரண ஜாதகத்தைக் கீழே கொடுத்துள்ளேன்
----------------------------------------------------------------------------------


மீன லக்கின ஜாதகம்.
லக்கினாதிப்தி குரு எட்டில் இருக்கிறார்.
ஆறாம் வீட்டுக்காரன் சூரியன் லக்கினத்தில் இருக்கிறான்
பூர்வபுண்ணியாதிபதி சந்திரன் பன்னிரெண்டில் அமர்ந்திருக்கிறார்.
இரண்டாம் வீட்டில், புதன், சுக்கிரன், செவ்வாய், சனி ஆகியோருடன் மாந்தியும் இருக்கிறார்.
சந்திரனுடன், ராகுவும் கூட்டாக உள்ளார்
இதுதான் ஜாதக அமைப்பு
---------------------------------
1. சனியின் பிடியில் ஏழாம் அதிபதி புதன் இருக்கிறார்.
2. அதே சனியின் பிடியில் களத்திரகாரகன் சுக்கிரனும் இருக்கிறார்.

அதனால் ஜாதகனுக்கு 32 வயதுவரை எத்தனையோ முயற்சிகளை அவனுடைய பெற்றோர்கள் மேற்கொண்டும் திருமணம் நடக்கவில்லை!
குரு பகவான் தன்னுடைய நேரடிப்பார்வையால், இரண்டாம் வீட்டையும், அதில் அமர்ந்திருக்கும் நான்கு கிரகங்களையும் பார்ப்பதால், அத்துடன் அவர் லக்கினாதிபதியாகவும் இருப்பதால், ஜாதகனுக்கு, ஏழாம் இடத்ததிபதியின் புதன் திசை துவங்கியவுடன், தன்னுடைய கோச்சாரப்படி, இரண்டாம் வீட்டிற்கு வந்தவுடன், திருமண்த்தை நடத்தி வைத்தார்.

அன்புடன்
வாத்தியார்

================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

18.11.16

Astrology: ஜோதிடம்: அலசல் பாடம்: குழந்தையின்மைக்கு ஒரு உதாரண ஜாதகம்

Astrology: ஜோதிடம்: அலசல் பாடம்: குழந்தையின்மைக்கு ஒரு உதாரண ஜாதகம்

குழந்தை இன்மை என்பது ஒரு சாபம்தான். சாபம் என்றாலும் குழந்தை இல்லாதவர்கள் வருந்தாதீர்கள். காலதேவன் கொடுக்கும் சாபங்களுக்கெல்லாம், இறைவன் நஷ்ட ஈட்டையும் கொடுத்துத்தான் மனிதர்களைப் படைக்கிறார். இல்லை என்றால் அனைவருக்கும் 337 என்ற மந்திரம் எப்படி வரும்?

தங்கள் குழந்தைகளைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்து, தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து, அவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் ஏற்படாமல் பாதுகாத்து வளர்த்த பெற்றோர்களை எத்தனை பிள்ளைகள உதாசீனப் படுத்துகின்றன தெரியுமா? எத்தனை பெற்றோர்கள் உரிய அன்பு பாசம் அரவணைப்பு கிடைக்காமல் முதியோர் இல்லங்களில் வாடிக்கொண்டிருக்கிறார்கள் தெரியுமா?

அவர்களைப் பார்க்கும் போது, குழந்தை இல்லாதவர்களின் நிலைமை எவ்வளவோ மேல்!

என்ன, சமூகம் அவர்களைச் சீண்டும். அது ஒன்றுதான் வருத்தத்திற்கு உரியது! உறவினர்களோ அல்லது நண்பர்களோ திடீரென்று உங்கள் குழந்தைகள் என்ன செய்கின்றன என்று கேட்டு அவர்களைச் சங்கடத்திற்கு ஆளாக்குவார்கள்

லைசென்ஸ் இல்லாத வாகன ஓட்டியைப் போலீஸ்காரன் மடக்கிக் கேள்வி கேட்பதைப் போல கேள்வி கேட்பார்கள்!

கேட்டால் என்ன? அடக்கமாகப் பதில் சொல்லுங்கள்

“I do not have a child. I don't know whether it is a curse or boon. But i accepted the out come of the life destined to me, happily!”

“எனக்குக் குழந்தை இல்லை. அது சாபமா அல்லது வரமா என்று தெரியவில்லை. விதிக்கப்பெற்றதை ஏற்றுக்கொண்டு வாழும் மனப்பக்குவம் எனக்கு உள்ளது. அதனால் நான் குழந்தையின்மைக்காக வருந்தவில்லை”. என்று சொல்லுங்கள்!

குழந்தை இருப்பவனுக்கு அவன் குழந்தைகள் மட்டுமே குழந்தைகளாக இருக்கும். குழந்தை இல்லாதவனுக்கு, அவன் செலுத்தும் அன்பினால் உறவினர்கள், நண்பர்கள் என்று மற்ற வீட்டுக் குழந்தைகளும் அவனுடைய குழந்தைகள்தான் என்ற பெருந்தன்மையால் நிறையக் குழந்தைகள். ஆகவே குழந்தையின்மை சாபமல்ல ஒரு வித்ததில் அது வரம்தான்!
----------------------------------------------------------------
சரி சொல்ல வந்த விஷயத்திற்கு வருகிறேன்!

கீழே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்


கடக லக்கின ஜாதகம். லக்கினாதிபதி சந்திரன் லக்கினத்திலேயே இருக்கிறார்.

குடும்ப ஸ்தான அதிபதி (Lord of the 2nd house) சூரியன் பாக்கியத்தில் (9ஆம் வீட்டில்) ஆகவே நல்ல குடும்ப வாழ்க்கை அமைந்தது

குழந்தையின்மைக்கான காரணங்கள் என்ன என்பதைக் கீழே பட்டியலிட்டுள்ளேன்.

1
குழந்தை பாக்கியத்திற்கான வீட்டில் (ஐந்தில்) ராகு,
2
அந்த (ஐந்தாம்) வீட்டு அதிபதி செவ்வாய் கேதுவுடன் சேர்ந்து கெட்டிருக்கிறார். வீக்காக உள்ளார்
3
குழந்தைக்குக் காரகன் குரு  (authority for children) அஷ்டமத்தில் மறைந்துவிட்டார் அதாவது எட்டாம் இடத்தில் அமர்ந்து விட்டார். அத்துடன் விரையாதிபதி அத்துடன் அவர் விரையாதிபதி. செல்லாக் காசாகிவிட்டார்.
4
அத்துடன் அதே குரு பகவான்தான் இந்த ஜாதகத்திற்கு பாக்கியாதிபதி அதாவது Ninth Lord அவர் தன்னுடைய இடத்திற்குப் பன்னிரெண்டில் அமர்ந்திருக்கிறார். அது மோசமான இடமாகும் (It is the most melefic place for a house lord)
5
மேலும் இயற்கையாகவே சுபக்கிரகங்களான சுக்கிரன், குரு, மற்றும் புதன் ஆகிய மூவரும் எட்டில் அமர்ந்ததால் எந்தப் பயனும் இல்லாமல் போய்விட்டது!

விளக்கம் போதுமா?

அன்புடன்
வாத்தியார்
----------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

11.11.16

Astrology: ஜோதிடம்: அலசல் பாடம்: இருதய நோயால் (Heart Disease) அவதிப்பட்ட ஜாதகர், என்ன செய்தார்?


Astrology: ஜோதிடம்: அலசல் பாடம்: இருதய நோயால் (Heart Disease) அவதிப்பட்ட ஜாதகர், என்ன செய்தார்?

ஜாதகருக்கு இருதய நோய். ஆயுளைப் பற்றிக் கவலை. அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள்
பரிந்துரைக்க, ஜாதகருக்கு அதில் விருப்பம் இல்லை. என்ன நடந்தது?

ஜாதகர் 1939ஆம் ஆண்டில் பிறந்தவர். 62 வயதில் கடுமையான இருதய நோய் ஏற்பட்டது. குரு திசை முடியும் தருவாயில் இது நடந்தது.

Chart

கன்னி லக்கின ஜாதகர். லக்கினாதிபதி புதன் 12ல். ஆறாம் வீட்டுக்காரன் சனி நீசம் பெற்றுள்ளான். குருவின் நேரடிப் பார்வையில் லக்கினம். சூரியன், சந்திரன், புதன், சுக்கிரன் ஆகிய 4ல்வரும் சேர்ந்துள்ளார்கள்

இருதயத்திற்கு உரிய வீடு நான்காம் வீடு. இந்த ஜாதகத்தில் தனுசு நான்காம் வீடு. அதன் அதிபதி குரு வக்கிரம் பெற்றிருந்தாலும் தனது சொந்த வீட்டில் ஆச்சி பலத்துடன் இருக்கிறார். அத்துடன் லக்கினத்தைத் தன் நேரடிப்பார்வையில் வைத்துள்ளார்.

முதல் நிலை சுபக்கிரகமான் குருவின் லக்கினப் பார்வையால் ஜாதகருக்கு நீண்ட ஆயுள் உண்டு. இந்த அமைப்பு உள்ளவர்கள் கவலைப் படத்தேவையில்லை.

சந்திரனில் இருந்து (சந்திர ராசியில் இருந்து) நான்காம் வீடு விருச்சிகம். அதன் அதிபதி செவ்வாய் மகர வீட்டில். மகர வீட்டின் நாதன் சனீஸ்வரனின் பார்வை (பத்தாம் பார்வை) அவரின் மேல் அழுத்தமாகப் பதிகின்றது. சனி லக்கினத்தில் இருந்து ஐந்து மற்றும் ஆறுக்குரியவன்

உடல்காரகன் சூரியன் 12ல். ஆனால் அது அவருக்கு சொந்தவீடாகையால் ஆட்சி பலத்துடன் உள்ளார். ஆனால் சூரியனின் மீது செவ்வாயின் பார்வை உள்ளது (8ஆம் பார்வை) ஆகவே ஜாதகர் சர்ஜெரி செய்யும் நிலைமைக்குத் தள்ளப்பட்டார். ஜாதகத்தில் சனி திசை சனி புத்தியில் (சுய புத்தியில்) இந்தப் பிரச்சினை ஏற்பட்டது. சனியின் மீது செவ்வாயின் பார்வை விழுகிறது (4ஆம் பார்வை)

மருத்துவர்கள் சர்ஜெரி’க்குப் பரிந்துரைத்தார்கள். ஆனால் அவர் துணிச்சலுடன் செய்துகொள்ளவில்லை. (செய்து கொள்ளாமல் இருப்பதற்கும் துணிச்சல் வேண்டும்)

ஆனால் அந்தக் குறிப்பிட்ட தசா புத்தி முடிந்ததும், அவர் சற்று உடல் நலம் தேறினார். மருந்துகளின் உதவியினால் காலத்தை ஓட்டினார். நீண்ட நாட்கள் வாழ்ந்தார். எல்லாம் குரு பகவானின் கருணை!

நீண்ட ஆயுள் கொண்டவர்கள் அறுவை சிகிச்சை செய்துகொண்டாலும் சரிதான். அறுவை சிகிச்சை செய்து கொள்ளா விட்டாலும் சரிதான். ஆயுள் காலத்தில் மாற்றம் ஏற்படாது.

அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

4.11.16

Astrology: ஜாதகத்தைத் துவைப்போம் வாருங்கள் - பகுதி 5


Astrology: ஜாதகத்தைத் துவைப்போம் வாருங்கள் - பகுதி 5

ஆளையே அள்ளிக்கொண்டு போகும் நோய்!

நோய் யாருக்கு வேண்டுமென்றாலும் எப்பொது வேண்டுமென்றாலும் வரலாம். வரட்டும்.

ஆனால் அதிகம் தொந்தரவு இன்றி அதிகம் செலவின்றித் தீர்ந்துவிட்டால் பரவாயில்லை. அதற்கு மாறாக அதிகம் செலவாகி, அதிகமான உபத்திரவத்தைக் கொடுத்து, இறுதியில் ஆளையே அள்ளிக்கொண்டு போனால் என்ன செய்வது?

நம் கையில் ஒன்றும் இல்லை.

நோயிலேயே புற்று (cancer) நோய்தான் அதிகம் கொடூரமானது.

எனக்கு சமீபத்தில் ஏற்பட்ட அனுபவம் வடுவாக மனதில் பதிந்து விட்டது.

என் தங்கையின் கணவருக்கு புற்றுநோய் வந்து 4 ஆண்டுகள் போராட்ட்டத்திற்குப் பிறகும், தீவிர சிகிச்சையளித்தும், பலனில்லாமல் சென்ற பிப்ரவரித் திங்கள் 17ஆம் தேதியன்று (2011) அவர் உயிர் நீத்துவிட்டார். அந்த 4 ஆண்டுகளில் புற்று நோயின் தீவிரத்தை அருகில் இருந்து பார்க்கும்படியாகிவிட்டது. இறக்கும் போது அவரின் வயது 52

ஒரு ஆண்டு கழித்து, என் புத்தகப் பணிகள் முடிந்த பிறகு, நோய்கள் குறித்து, பல ஜாதகங்களை வைத்து ஆய்வு செய்யலாம் என்றுள்ளேன். இறைவன் அதற்கு எனக்கு அருள் செய்ய வேண்டும்

அது சம்பந்தமாக இப்பொது ஒரு ஜாதகத்தை அலசுவோம். இது அவருடைய ஜாதகம் அல்ல! வேறு ஒருவருடைய ஜாதகம்!
-----------------------------------------------------


---------------------------------------------------------------------------------------------------
மேலே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்.

ராகு, செவ்வாய், சனி ஆகிய மூன்று கிரகங்கள்தான் புற்று நோயை உண்டாக்கும் என்பார்கள்.

மிதுன லக்கின ஜாதகம். ஆறாம் வீடு செவ்வாய்க்கு உரியது. அந்த வீட்டை செவ்வாய் அதற்கு ஏழில் இருந்து நேராகப் பார்க்கிறார். ஆறாம் வீட்டில் எட்டாம் அதிபதி சனியின் ஆதிக்கம். உடல்காரகன் சூரியனுடன், சந்திரன், புதன், சுக்கிரன் ஆகிய 3 கிரகங்கள் கிரக யுத்தத்தில். அத்துடன் அங்கே உள்ள சுக்கிரன் 12ஆம் வீட்டிற்கு உரியவர். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகுவின் ஆதிக்கம்.

12ல் உள்ள (விரையத்தில் உள்ள) செவ்வாய் தசையில் புற்று நோய் ஏற்பட்டது. செவ்வாயை 6ல் இருந்து நேரடியாகப் பார்க்கும் சனி நோயைத் தீவிரப் படுத்தினார். அதே தசையில் வந்த சனி புத்தியில் ஜாதகருக்கு மரணம் ஏற்பட்டது.

ஆறாம் வீடு, மற்றும் 12ஆம் வீடுகளில் அமரும் கிரகங்கள் தங்கள் தசா புத்திகளில் நோயை உண்டாக்கும். அமர்ந்திருக்கும் கிரகங்கள் சுபக்கிரகங்களின் சேர்க்கை பெற்றால் ஜாதகன் பிழைத்துவிடுவான். இல்லை என்றால் கஷ்டம்தான்!

அன்புடன்
வாத்தியார்
----------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

28.10.16

அடிக்காமல் துவைப்போம் வாருங்கள் - பகுதி 4


அடிக்காமல் துவைப்போம் வாருங்கள் - பகுதி 4

சில துணிகளை அடிக்காமல் துவைக்க வேண்டும். ஆமாம் பட்டுத் துணிகளை அடிக்காமல் அல்லவா துவைக்க வேண்டும். இன்று
மேதகு விக்டோரியா மகாராணியின் ஜாதகத்தைத் துவைப்போம் வாருங்கள்.

யார் யாரையோ மேதகு என்ற அடையாளத்துடன் சொல்கிறோம். 26 நாடுகளுக்கு 61 வருடங்களுக்கு, அரசியாக அல்ல பேரரசியாக இருந்த பெண்மணியை மேதகு என்று சொல்வதில் தவறில்லை!

ஜாதகப்படி அவருடைய மேன்மைக்கு என்ன காரணம்?

அதை இன்று அலசுவோம்!

அவரைப் பற்றித் தெரியாதவர்கள், இந்தத் தளத்திற்குச் சென்று அவரைத் தெரிந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

http://en.wikipedia.org/wiki/Queen_Victoria
++++++++++++++++++++++++++++++++++++++

விக்டோரியா மகாராணி
-----------------------------------------------------------------------------------------------------------------


---------------------------------------------------------------------
பெயர்: Alexandrina Victoria
வாழ்ந்த காலம்:  24 May 1819 முதல் 22 January 1901 வரை சுமார்
81 ஆண்டுகள் 7 மாதங்கள் 28 நாட்கள்
பதவிக்கு வந்த காலம்: 28.06.1938 (தனது 20வது வயதில்)

பிறப்பு விவரம்:
23/24.5.1819
அதிகாலை 4:40 மணி
L attitude: 51.30 North
Longitude: 0.5 West
Birth Star: Rohini
ரிஷப ராசி, ரிஷப லக்கினம்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சிறப்புக்கள்:
1. லக்கினம், சூரியன், சந்திரன் ஆகிய மூன்றும் ஒரு ராசியில் அமையப்பெற்றுள்ளது. அரச கிரகங்கள் என்று வர்ணிக்கப்படும் சூரியனும், சந்திரனும் லக்கினத்தில் அமர்ந்தது. மிகவும் சிறப்பு.

2. சந்திரன் வர்கோத்தமம் பெற்றுள்ளார். ராசி மற்றும் நவாம்சத்தில் ஒரே இடத்தில் சந்திரன் உள்ளது.

3. ரிஷப லக்கினத்திற்கு யோககாரகனான சனி, அத்துடன்  ரிஷப லக்கினத்திற்கு தர்மகர்மாதிபதியுமான சனி 11ஆம் வீட்டில் அமர்ந்தது சிறப்பு

4. முக்கிய ஸ்தானமான பாக்கிய ஸ்தானத்தில் குரு பகவான் அமர்ந்துள்ளார்

5. குருவும் சனியும் பரிவர்த்தனையாகி, உயர்ந்த பரிவர்த்தனை யோகத்தைக் கொடுத்துள்ளார்கள்.

6. புதன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கை. அவர்கள் முறையே பூர்வ புண்ணிய அதிபதியும் லக்கினாதிபதியும் ஆவார்கள்.

7. குருவின் விஷேச பார்வை (5ஆம் பார்வை) லக்கினத்தின்மேல்.

8. நவாம்சத்தில் சூரியன் உச்சம். சுக்கிரன் ஆட்சி பலத்துடன். புதன் உச்சம்.

9. ராசி மற்றும் நவாம்சம் ஆகிய இரண்டு இடங்களிலும் சந்திரன் உச்சம் பெற்றுள்ளது கூடுதல் சிறப்பு!
.................................................................................
பலன்கள்:

1. ரிஷப லக்கினக்கிரக்காரகள் நடைமுறைக்கு ஒத்துப்போகும் லக்கினக்காரர்கள். உறுதியான மனதைக்கொண்டவர்கள். ஜாதகத்தில் அதன் அதிபதி 12ல் மறைந்திருந்தாலும், அந்த அடிப்படைக் குணங்கள் இருக்கும்.

2. அரச கிரகங்கள் என்று வர்ணிக்கப்படும் சூரியனும் சந்திரனும், ஒன்றாக இருந்து குருபகவானின் பார்வையைப் பெற்றதால். ஜாதகிக்கு நல்ல ஆளுமை கிடைத்தது. ஜாதகிக்கு அவர் பிறந்த நோக்கத்தைச் செயல் படுத்தும் தன்மையை, சூழ்நிலைகளைக் கொடுத்தது.

அம்மையாருடைய காலத்தில்தான் ஆங்கில ஏகாதிபத்தியம் (British Empire) பரந்து விரிவடைந்தது.

3. 5ஆம் வீடு அதன் அதிபதி புதனாலும், ஏழாம் அதிபதி செவ்வாயாலும், புத்திரகாரகன் குருவாலும் பார்க்கப்பட்டது. குடும்ப அதிபதி அந்த வீட்டில் இருந்து கேந்திரத்தில் உள்லார். இந்த அமைப்புக்களால் மகராணிக்கு நல்லதொரு குடும்ப வாழ்க்கை அமைந்தது. நிறையக் குழந்தைகளும் பிறந்தன.(மொத்தம் 9 குழந்தைகள்)

யோகங்கள்:
1. அரச கிரகமான சந்திரன் உச்சமடைந்ததுடன், வர்கோத்தமமும் பெற்றுள்லது. அத்துடன் லக்கினத்திலும் அமர்ந்து பலத்த யோகத்தைக் கொடுத்தது.

2. செவ்வாயும், ராகுவும் 11ஆம் வீட்டில் அமர்ந்ததுடன், வர்கோத்தமும் பெற்றுள்ளன.

3. ரிஷப லக்கினத்திற்கு யோககாரகன் சனி, 11ல் அமர்ந்தது மட்டுமின்றி பரிவர்த்தனை பலத்துடன் இருக்கிறார்.

4. குரு நீசமடைந்தாலும் பரிவர்த்தனையால் மிகவும் பலமாக இருக்கிறார். அத்துடன் அது பாக்கியஸ்தானம். ஜாதகிக்கு அரசாளும் யோகத்தைக் கொடுத்தார்.

5. தனது 18 வது வயதில் அவர் அரியனையில் அமர்ந்தார். அப்போது அவர்க்கு ராகுதிசை, குரு புத்தி. வர்கோத்தம ராகுவும், பரிவர்த்தனை மற்றும் திரிகோண பலத்துடன் இருக்கும் குருவும் அதைச் செய்தார்கள்.

6. சனி 9 & 10ஆம் இடங்களுக்கு உரிய தர்மகர்மா அதிபதி. அவர் பரிவர்த்தனை யோகத்துடன் 11ல் அமர்ந்ததால் அவருடைய தசை முழுவதும் ராணிக்கு பலத்த யோகங்களைக் கொடுத்தான். அந்த காலகட்டத்தில்தான்  (Between 1867 to 1886) சாம்ராஜ்யம் விரிவடைந்தது. சூயஸ் கால்வாய் கட்டி முடிக்கபெற்றது. ராணி இந்தியாவிற்கும் ராணியானார்.

ஏழு கிரகங்கள் 100 பாகைக்குள் அமர்ந்திருப்பது கூடுதல் சிறப்பு!

குடும்ப அதிபதி புதனும், தர்மகர்மாதிபதி சனியும் கூட்டணி போட்டுள்ளதால், இருவரும் சேர்ந்து மகாராணிக்கு, கணவர், பிள்ளைகள், குடும்பம், அரசாட்சி, நாட்டு மக்கள் என்று எல்லாவற்றிலும் ஒரு ஈடுபாட்டைக் கொடுத்ததுடன், செல்வாக்கையும் கொடுத்தார்கள்.
-------------------------------------------------------------------------
பிறந்த அனைவருமே ஒரு நாள் இறக்க வேண்டுமே!
ராணியார் 1903ஆம் ஆண்டு இறந்தார்.
புதன் திசை, சனியின் புக்தி!
புதன் மாரகன் (2nd Lord), சனி ஆயுள்காரகன்
+++++++++++++++++++++++++++++++++++++++++
அன்புடன்
வாத்தியார்
==============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

25.10.16

உங்கள் கஷ்டங்களும் அதற்கான பரிகாரங்களும்


உங்கள் கஷ்டங்களும் அதற்கான பரிகாரங்களும்

முழு தெய்வ நம்பிக்கையும், பரிகாரங்களில் நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் மேலே படிக்கவும். மற்றவர்கள் பதிவை விட்டு விலகிக் கொள்ளலாம்.
அது நம் இருவருக்குமே நல்லது!

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------------------
🍉27 வகையான மனக் கஷ்டங்களும் அவற்றை போக்கும் எளிமையான பரிகார முறைகளும்

மனிதனாக பிறந்த எல்லோருக்கும் ஏதாவது ஒரு விதத்தில் ஒரு மனச் சஞ்சலம் அல்லது மனதளவில் ஏதாவது ஒரு கஷ்டம் இருந்து கொண்டே இருக்கும். அந்த கஷ்டத்தை ஒரு சில வழிபாட்டு முறைகளின் மூலம் விரட்டி விடலாம், அந்த வகையில் கஷ்டத்தை விரட்டும் பரிகார முறைகளை எளிமையாக தந்துள்ளதுள்ளார்கள் ஆன்மிக மலர் என்ற இணையதளதில் என்று சொல்லி நண்பர் ஒருவர் அனுப்பிய செய்திகளை உங்களுக்கு அறியத் தந்துள்ளேன். நீங்களும் பயனடைந்து, மற்றவருக்கும் கூறி அவர்களையும் பயனடைய உதவுங்கள்.

1.வெள்ளிக்கிழமைகளில் நவகிரக சுக்கிரனுக்கு அகல் விளக்கில்கற்கண்டு போட்டு ,அதில் நெய் தீபம் ஏற்றி வழிபட,கணவன்- மனைவி கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

2.இரண்டு சர்ப்பங்கள் இணைந்தது போல் இருக்கும் நாகராஜா சிலைக்கு, வெள்ளிக்கிழமை காலை [10.30-12.00 ]இராகு காலத்தில், மஞ்சள் குங்குமம் வைத்து, செவ்வரளிப் பூ சாற்றி, அபிசேகம் செய்து, . நெய்தீபம் ஏற்றி ,தம்பதிகள் பெயருக்கு அர்ச்சனை செய்தால்தம்பதிகள்

3.ஒற்றுமையாக,அன்னியோன்யமாக வாழ்வார்கள். குடும்பத்தில் தாங்க முடியாத கஷ்டங்கள் வந்தால், மன அமைதி குறைந்தால் , அருகில் உள்ள ஆலயங்களில் தீபம் ஏற்றி வழிபடுவது ரிஷிகள் சொல்லிய பரிகாரம்.

4.கொடிய கடன் தொல்லைகளுக்கு ஸ்ரீ யோக நரசிம்மரையும்,மற்ற கடன் தொல்லைகளுக்கு ஸ்ரீ லட்சுமி நரசிம்மரையும்வழிபடுவது நல்ல பரிகாரம் ஆகும்.

5.ஸ்ரீநரசிம்மரின் எந்த திருக்கோலத்தை தரிசித்தாலும் கடன் தொல்லைகள், பில்லி, சூனியம், ஏவல்,திருஷ்டி ,திருமண தடை விலகி நன்மை பெறலாம்.

6.ஆலய திரி சூலத்தில் குங்குமம் இட்டு, எலுமிச்சை பழம் குத்தி வழிபட, திருஷ்டி, செய்வினை தோஷம் நீங்கும்.

7.வெள்ளெருக்கு விநாயகரை வீட்டு அறைகளில் கைக்கு எட்டாத உயரத்தில் வைத்து இருந்தால்,ஏதும் பூதகண சேஷ்டைகள் இருந்தால் நின்று விடும்.

8.சக்கரத்தாழ்வார் சந்நிதியில் நெய்தீபம் ஏற்றி12 முறை, 48 நாட்கள் சுற்றி வழிபட தொழில், வழக்குசாதகமாதல், பில்லி, சூனியம்,ஏவல்நீங்கும்.21செவ்வாய்கிழமைகளில் நெய்தீபம் ஏற்றிவழிபட கொடுத்த கடன் வசூல் ஆகும்.

9.கொடுத்த கடன் வசூல் ஆக பைரவர் சந்நிதியில் தொடர்ந்து 8 செவ்வாய் கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி சகஸ்ர நாம அர்ச்சனை செய்ய வேண்டும்.

10.ஜாதகப்படிசனிபகவானின்பாதிப்புகுறைய,திங்கட்கிழமைகளில் சிவபெருமானுக்கு,பால் அபிசேகம் செய்து, அர்ச்சனை செய்ய வேண்டும். சனிக் கிழமைகளில் சனி பகவான் சந்நிதியில்தேங்காய் உடைத்து, இரண்டு மூடிகளிலும்நல்லெண்ணெய் ஊற்றி, எள்ளு முடிச்சு தீபம் ஏற்றவும்.சிவன் கோவிலில் கால பைரவரையும்,விஷ்ணு கோவிலில் சக்கரத்தாழ்வாரை யும்வழிபட செய்வினை தோஷம் நெருங்காது.

11.‎சிவன்‬ கோவில் வன்னி மரம், வில்வ மரத்தை 21 முறை வலம் வந்து நமது குறைகளைக் கூற,நல்ல பலன் கிடைக்கும். தீர்ப்புகள் சாதகம் ஆகும். இம்மரங்களுக்கு நாம் கூறுவதை கேட்கும் சக்தி உள்ள தாக ஒரு ஐதீகம் உண்டு.

12.பிரதோஷகாலத்தில், ரிஷபா ரூட மூர்த்தியாய்,மகேசனை தேவியுடன் வழிபடுவோர் 1000 அஸ்வமேத யாகங்களை செய்த பலனை பெறுவார்கள். அதிலும் ஈசானிய மூலையில் ஈஸ்வரனுக்கு காட்டப்படும் தீபாரதனையை பார்த்தால் எல்லா நோய்களும், வறுமையும் நீங்கும்.

13.மாதாமாதம் உத்திர நட்சத்திரத்தன்று சிவனுக்கு தொடர்ந்து 11 மாதங்கள் பால் அபிசேகம் செய்தால், விரைவில் திருமணம் நடை பெறும்.

14.கலியுகத்தில் காரிய சித்திக்கு துர்க்கை வழிபாடு அதுவும் இராகு காலத்தில்,செய்வது சிறந்தது. இராகு காலத்தில் கடைசி 1/2 மணி நேரமான அமிர்தகடிகை நேரமே சிறப்பான பரிகார நேரம்.நெய்விளக்கு ஏற்றவும் உகந்த நேரம். ஞாயிற்றுகிழமை மாலை 4.30-6.00 மணிக்குள் துர்க்கைக்கு விளக்கு ஏற்றி வழிபட நாம் வேண்டிய பிராத்தனை கள் நிறைவேறும்.

15.வெள்ளிக்கிழமை காலை 10.30-12.00 இராகு காலத்தில் துர்க்கைக்கு தாமரை தண்டு திரி போட்டு நெய்விளக்கு ஏற்றி வழிபட,தெய்வ குற்றம்,குடும்ப சாபம் நீங்கும். ஹஸ்த நட்சத்திரத்தன்று துர்க்கைக்குசிகப்பு பட்டு துணி சாற்றி, சிகப்பு தாமரையை பாதத்தில் வைத்து 27 எண்ணிக்கை கொண்ட எலுமிச்சை பழ மாலை சாற்றி, குங்கும அர்ச்சனை செய்து, அந்த குங்குமத்தை நெற்றியில் வைத்து வர உடனே திருமணம் நடை பெறும்.

16.சங்கடஹரசதுர்த்தியில் விநாயகருக்கு அருகம் புல் மாலைசாற்றி,அர்ச்சனை செய்து வழிபட ,சங்கடங்கள் தீரும். சங்கடஹரசதுர்த்தியில் விநாயகருக்கு எருக்கம் திரி போட்டு விளக்கு ஏற்றி வழிபடபிள்ளைகள் கல்வியில் முன்னேறுவார்கள்.

17.இரட்டைப் பிள்ளையாருக்கு ரோகிணி நட்சத்திரத்தன்று சந்தனக் காப்பு செய்து வழிபடகடன் பிரச்சனை தீரும்.

18.செவ்வாய்க்கு அதிபதியான முருகப் பெருமானுக்கு செவ்வாய் தோறும் நெய்விளக்கு ஏற்றி வழிபடமூன்று மாதத்தில் வேலை கிடைக்கும்.

19.விபத்துகளில் இருந்து தப்பிக்க அவிட்ட நட்சத்திரத்தன்று முருகனுக்கு வேலில் எலுமிச்சை சொருகி அர்ச்சனை செய்யவும்.

20.ருத்ராட்சம், சாளக்கிராமம், துளசி,வில்வம் உள்ள இடத்தில் இருந்து சுமார் 10கி.மி தூரத்திற்கு செய்வினை அணுகாது.

21.பஞ்சகவ்ய கலவையை வாரம் ஒரு முறை வீடுகளில் தெளிக்க ,தோஷம், தீட்டு நீங்கி, லஷ்மி கடாக்ஷ்சம் கிடைக்கும்.பால், தயிர், கோமூத்திரம், சாணம் கலந்தது பஞ்சகவ்ய கலவை.

22.புத்திர பாக்கியம் இல்லாதோர் 6 தேய்பிறை அஷ்டமிகளில் காலபைரவருக்கு சகஸ்ர நாம அர்ச்சனை செய்தால் விரைவில் புத்திர பாக்கியம் கிட்டும்.

23.வியாழக்கிழமைகளில் ஒரு நேரம் விரதம் இருந்து மாலையில் ஆலய தட்சணா மூர்த்திக்கு தொடர்ந்து நெய்விளக்கு ஏற்றி வர ,விரதம் ஏற்ற 192 நாட்களில் கருத்தரிப்பு ஏற்படும் வாய்ப்பு உண்டு.

24.பெருமாள் கோவிலில் உள்ள கருடாழ்வார் சந்நிதியை சுற்றி வந்து நெய்விளக்கு ஏற்றி வழிபடசர்ப்ப தோஷம், கால சர்ப்ப தோஷம் நீங்கும்.

25.வறுமையில் இருப்பவருக்கு தானம் கொடுத்தல், பூஜை நடக்காமலிருக்கும் கோவில்களில் பூஜை நடக்க உதவுதல்,அனாதைப் பிணங்களின் தகனத்திற்கு உதவுதல்- ஆகிய மூன்றும் செய்தால் அசுவமேத யாகம் செய்ததற்குச் சமம்.

26.தொழில் தடை, கணவன்- மனைவிக்கு கருத்து வேறுபாடு நீங்க, வாழ்வில் நலம் பெற, வெளிநாட்டு வேலை முயற்சி வெற்றி பெற, -என்று நல்ல காரியங்கள் நடைபெற பெளர்ணமி தோறும் நடைபெறும் சத்திய நாராயணா பூஜையில் கலந்து கொள்வது நற்பலன்களைத் தரும்.

27.எத்தகைய கிரக தோசமானாலும் தினமும் சுந்தர காண்டத்தில் ஒரு அத்தியாயம் பாராயணம் செய்வது மிக, மிக நன்மை தரும். வாழை தண்டு திரியினால் வீட்டில் தீபம் ஏற்றினால் குலதெய்வ குற்றமும், குலதெய்வ சாபமும் நீங்கும்!
=====================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

21.10.16

Astrology: ஜாதகத்தைத் துவைப்பது எப்படி - பகுதி மூன்று


Astrology: ஜாதகத்தைத் துவைப்பது எப்படி - பகுதி மூன்று

எனக்கு வரும் மின்னஞ்சல்களில் கணிசமான அளவு, தங்களுக்கு இன்னும் திருமணமாகாததைப் பற்றிக் குறிப்பிட்டு எழுதியதாக இருக்கும். “சார், எனக்கு எவ்வளவோ முயன்றும் இன்னும் திருமணம் கூடி வரவில்லை. எப்போது திருமணமாகும்?” என்று கேட்டிருப்பார்கள்.

முற்காலத்தில் - அதாவது சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு, பெண்ணிற்குப் 18 வயதானால், பெற்றவர்கள் முட்டிமோதி அவளுக்குத் திருமணத்தை நடத்தி வைத்துவிடுவார்கள். ஆண்களுக்கு 21 வயதானால் போதும் செய்து வைத்துவிடுவார்கள்

இன்றையப் படிப்பு, வேலைவாய்ப்பு, மற்றும் பொருளாதார சூழ்நிலைகளால், பலருக்கும் திருமணம் செய்து கொள்ளும் வயது தள்ளிக்கொண்டே போகிறது. 25 வயது வரை பெண்களும், 30 வயதுவரை ஆண்களும் திருமணமாகாதது குறித்துத் துளியும் கவலைப்படுவதில்லை.

32 வயதைத் தாண்டினால்தான் கவலைப்பட ஆரம்பிக்கின்றார்கள்.

சிலருக்கு 35 வயது தாண்டியும் திருமணமாகவில்லை என்றால், யோசிக்க வேண்டிய விஷயம். அது அபாய கட்டம். குறிப்பாகப் பெண்களுக்கு அது சிக்கலான கட்டம்.

சில பெண்கள் திருமணமாகாமலேயே - அல்லது திருமணம் செய்து கொள்ளாமலேயே இருந்துவிடுவது உண்டு.

அதற்கு என்ன காரணம்?

ஜாதகக் கொளாறுதான் காரணம்.

அது சம்பந்தமாக இப்போது ஒரு ஜாதகத்தை அலசுவோம்
-----------------------------------------------------

---------------------------------------------------------------------------------------------------
மேலே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்.

அது ஒரு பெண்ணின் ஜாதகம். அம்மணி நன்றாகப் படித்தவர். வாத்தியாராகப் பணி செய்தவர். அவருக்குத் திருமணமே கூடி வராமல் போய்விட்டது. கடைசிவரை கன்னியாகவே வாழ்ந்தார்.

ஜாதகப்படி என்ன காரணம்?

ஏழாம் வீட்டில் ராகு. ஏழாம் வீட்டுக்காரன் சூரியனும் அந்த வீட்டிலேயே உள்ளான. ராகுவுடன் சேர்ந்து அவனும் கெட்டுள்ளான். 10ல் இருக்கும் சனிஷ்வரன் 10ஆம் பார்வையாக ஏழாம் வீட்டைப் பார்க்கிறார். அவர் லக்கினாதிபதியாக இருந்தாலும், 7ல் விழுகும் அவரது பார்வை தீமையானதுதான். placement, association & aspect of 4 malefic (including ketu) planets, 7th house is totally afflicted. ஏழாம் வீடு முழுதாகக் கெட்டு விட்டது.

அத்துடன் பாக்கியத்தைத் தரக்கூடிய ஒன்பதாம் அதிபதி சுக்கிரன் - அந்த வீட்டிற்கு - பாக்கியஸ்தானத்திற்குப் பன்னிரெண்டாம் வீட்டில் உள்ளார். அது அவருக்குத் தீய வீடு. அத்துடன் பாக்கியத்திற்கு 12ஆம் அதிபதி புதனும் அங்கேயே உள்ளார். அது சாதகமான அமைப்பு அல்ல!

ஆகவே ஜாதகப்படியே ஜாதககிக்குத் திருமணத் தடை உள்ளது. அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை.

ஒரே ஒரு ஆறுதல், லக்கினாதிபதி சனி, 11ஆம் அதிபதி குருவுடன் சேர்ந்து 10ல் உள்ளார். ஆகவே ஜீவனத்திற்குக் குறை ஏற்படவில்லை. ஜாதகி தன் காலிலேயே நின்று டீச்சர் வேலை செய்து வாழ்நாளைக் கெளரவமாக ஓட்டினார்

7ஆம் வீடு, 7ஆம் அதிபதி, பாக்கியாதிபதி ஆகிய மூன்றும் கெட்டிருந்தால் திருமணம் ஆவது மிகவும் கடினம்.It will be called as denial of marriage.

அன்புடன்
வாத்தியார்
=============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

14.10.16

ஜாதகத்தை அலசித் துவைப்பது எப்படி? பகுதி இரண்டு


ஜாதகத்தை அலசித் துவைப்பது எப்படி? பகுதி இரண்டு
--------------------------------------
கர்மவினையின்படி நமக்கு என்ன வேலை விதிக்கப்பட்டுள்ளதோ அதைத்தான் நாம் செய்ய வேண்டியதிருக்கும்.
அரசாங்க உத்தியோகம் என்றால் அதுதான் அமையும். இல்லை என்றால் என்ன கரணம் போட்டாலும் அமையாது.

சிலருக்குத் தாங்கள் செய்கின்ற வேலை பிடிக்கும். சிலருக்கு பிடித்தம் இல்லாமல் இருக்கும். வேலையில் இருப்பவர்களுக்குத் தொழில் செய்தால் பரவாயில்லை, நிறைய காசு பார்க்கலாமே, வேலைக்குச் செல்வதில், கைக்கும் வாய்க்குமாக இருக்கிறதே என்ற மன நிலை இருக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு, இதில் ஏற்ற இறக்கங்கள், ரிஸ்க் எல்லாம் உள்ளதே, வேலை என்றால் மாதாமாதம் வருமானம் இருக்குமே என்ற ஆதங்கம் இருக்கும்.

பொதுவாகப் பலரும் திருப்தியாக இல்லை. நிம்மதியாக இல்லை. இக்கரைக்கு அக்கரை பச்சை என்ற நிலைமை.

பலர் மனதிலும் உள்ள கேள்விகள் இவைதான்:

1. நமக்கு ஏற்ற தொழில் எது?
2. வெளி நாட்டில் வேலை கிடைக்குமா?

அது சம்பந்தமாக இப்பொது ஒரு ஜாதகத்தை அலசுவோம்
-----------------------------------------------------------------------------------
கீழே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்.


இது மகர லக்கின ஜாதகம். யோககாரகன் சுக்கிரன் (அதாவது ஒரு திரிகோண வீடு & ஒரு கேந்திர வீடு ஆகியவற்றிற்கு உரியவன்) இந்த ஜாதகத்திற்கு அவன் யோகாரகன் என்பதோடு 10ஆம் வீட்டிற்கும் அதிபதி.

அவன் எங்கே இருக்கிறான். அடடா, 12ல் மறைந்து விட்டான். ஜாதகருக்கு எந்தத் தொழிலும் அல்லது வியாபாரமும் அமையாது. வேலக்குச் செல்ல வேண்டிய ஜாதகம். அல்லது சுய தொழிலாக இருந்தால், பணமுதலீடு இல்லாமல் கமிஷன் அடிப்படையில் உள்ள தொழில்களைச் செய்யலாம்.

சுக்கிரனுக்கு, 9ஆம் அதிபதி மற்றும் 7ஆம் அதிபதியுடன் தொடர்பு இல்லை. ஆகவே வெளிநாடு சென்று வேலை செய்யும் அமைப்பு ஜாதகத்தில் இல்லை. ஆசாமி இங்கேயே வேலை செய்ய வேண்டியதுதான்.

அது மட்டுமா? லக்கினாதிபதி சனீஷ்வரன் நீசமாகி உள்ளான். செல்லாத நோட்டு. அத்துடன் அவன்தான் கர்மகாரகன். Authority for work.ஆகவே ஜீவனத்துக்கு சிரமப்பட வேண்டிய ஜாதகம்!

அன்புடன்
வாத்தியார்
=============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!