மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

14.10.16

ஜாதகத்தை அலசித் துவைப்பது எப்படி? பகுதி இரண்டு


ஜாதகத்தை அலசித் துவைப்பது எப்படி? பகுதி இரண்டு
--------------------------------------
கர்மவினையின்படி நமக்கு என்ன வேலை விதிக்கப்பட்டுள்ளதோ அதைத்தான் நாம் செய்ய வேண்டியதிருக்கும்.
அரசாங்க உத்தியோகம் என்றால் அதுதான் அமையும். இல்லை என்றால் என்ன கரணம் போட்டாலும் அமையாது.

சிலருக்குத் தாங்கள் செய்கின்ற வேலை பிடிக்கும். சிலருக்கு பிடித்தம் இல்லாமல் இருக்கும். வேலையில் இருப்பவர்களுக்குத் தொழில் செய்தால் பரவாயில்லை, நிறைய காசு பார்க்கலாமே, வேலைக்குச் செல்வதில், கைக்கும் வாய்க்குமாக இருக்கிறதே என்ற மன நிலை இருக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு, இதில் ஏற்ற இறக்கங்கள், ரிஸ்க் எல்லாம் உள்ளதே, வேலை என்றால் மாதாமாதம் வருமானம் இருக்குமே என்ற ஆதங்கம் இருக்கும்.

பொதுவாகப் பலரும் திருப்தியாக இல்லை. நிம்மதியாக இல்லை. இக்கரைக்கு அக்கரை பச்சை என்ற நிலைமை.

பலர் மனதிலும் உள்ள கேள்விகள் இவைதான்:

1. நமக்கு ஏற்ற தொழில் எது?
2. வெளி நாட்டில் வேலை கிடைக்குமா?

அது சம்பந்தமாக இப்பொது ஒரு ஜாதகத்தை அலசுவோம்
-----------------------------------------------------------------------------------
கீழே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்.


இது மகர லக்கின ஜாதகம். யோககாரகன் சுக்கிரன் (அதாவது ஒரு திரிகோண வீடு & ஒரு கேந்திர வீடு ஆகியவற்றிற்கு உரியவன்) இந்த ஜாதகத்திற்கு அவன் யோகாரகன் என்பதோடு 10ஆம் வீட்டிற்கும் அதிபதி.

அவன் எங்கே இருக்கிறான். அடடா, 12ல் மறைந்து விட்டான். ஜாதகருக்கு எந்தத் தொழிலும் அல்லது வியாபாரமும் அமையாது. வேலக்குச் செல்ல வேண்டிய ஜாதகம். அல்லது சுய தொழிலாக இருந்தால், பணமுதலீடு இல்லாமல் கமிஷன் அடிப்படையில் உள்ள தொழில்களைச் செய்யலாம்.

சுக்கிரனுக்கு, 9ஆம் அதிபதி மற்றும் 7ஆம் அதிபதியுடன் தொடர்பு இல்லை. ஆகவே வெளிநாடு சென்று வேலை செய்யும் அமைப்பு ஜாதகத்தில் இல்லை. ஆசாமி இங்கேயே வேலை செய்ய வேண்டியதுதான்.

அது மட்டுமா? லக்கினாதிபதி சனீஷ்வரன் நீசமாகி உள்ளான். செல்லாத நோட்டு. அத்துடன் அவன்தான் கர்மகாரகன். Authority for work.ஆகவே ஜீவனத்துக்கு சிரமப்பட வேண்டிய ஜாதகம்!

அன்புடன்
வாத்தியார்
=============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

33 comments:

  1. Ayya vanakkam .Enna thelivana vilakkam. vathiyar is always vathiyar. ennaippontra last bench students kkum. thanks a lot for giving these type of alasal.
    endrum anbudan.

    ReplyDelete
  2. Ultra Clean, Super Quick அலசல்!!! லேட்டஸ்ட் டெக்னாலஜியா!!!...

    அருமை வாத்தியார் அவர்களே!!!

    சுருக்கமாக, அதே நேரத்தில் தெளிவாகவும் தந்ததிற்கு நன்றி...



    அன்புள்ள மாணவன்,
    பா. லெக்ஷ்மி நாராயணன்.
    தூத்துக்குடி.

    ReplyDelete
  3. Sir I am very new to astrology... I saw a test for basic astrology... Even in that I was able to answer just few questions... But when I read such posts I find these as a good examples... Post many things lik this sir

    ReplyDelete
  4. And sir paralgal means what sir... I cannot download jagannatha hora in my mobile... 0-8 paralgal how to find that sir... Is there any mobile version.... Please help me sir... I want to find paralgal of my horoscope for each Graham....

    ReplyDelete
  5. Dear Sir,

    The lesson was understandable and informative.

    Thanking you,

    ReplyDelete
  6. ஐயா வணக்கம்
    நானோ தொழில்நுட்ப ஜாதக அலசல் ஐயா
    அருமை
    கண்ணன்

    ReplyDelete
  7. Vanakkam Iyya,

    Arumayana pathivu :) :) Nandri

    ReplyDelete
  8. வணக்கம் ஐயா,பாக்யாதிபதி 12ல்.அதோடு பாப கர்தாரி யோகத்தில்.ஒரு சிறிய சந்தேகம்.லக்னாதிபதி நீசம் அதனால் கஷ்ட ஜீவனம் என்றால் அம்சத்தில் அவர் எப்படி என்று பார்க்க வேண்டுமா?மேலும் 4,11 அதிபதி செவ்வாய் ஆட்சி பலத்துடன் இருப்பதால் சுகம் மற்றும் லாபாதிபதி கஷ்ட ஜீவனத்தை கொடுக்குமா?விரையாதிபதி குருவும் லாப ஸ்தானத்தில் இருப்பதால் சுபவிரையம் என்று எடுக்கலாமா?.அலசலுக்கு எடுத்த தலைப்பிற்கு சம்மந்தம் இல்லை என்றாலும் கஷ்ட ஜீவனம் என்பதால் இந்த சந்தேகம் வந்தது. தயவுசெய்து தவறாக எடுக்கவேண்டாம்.விளங்கிக்கொள்ளதான்.
    நன்றி.

    ReplyDelete
  9. வெட்டு ஒன்று, துண்டு இரண்டு போல "நச்"சுனு இருந்த்தைய்யா அலசல். நன்றி.

    ReplyDelete
  10. //////Blogger kittuswamy palaniappan said...
    Ayya vanakkam .Enna thelivana vilakkam. vathiyar is always vathiyar. ennaippontra last bench students kkum. THANKS a lot for giving these type of alasal.
    endrum anbudan./////

    நல்லது. நாளை முதல் நீங்கள் முதல் பெஞ்சிற்கு வந்துவிடுங்கள் கிட்டுசாமி. உங்களுக்கு ஒரு இடம் அங்கே உள்ளது!

    ReplyDelete
  11. /////Blogger B. Lakshmi Narayanan, Tuticorin said...
    Ultra Clean, Super Quick அலசல்!!! லேட்டஸ்ட் டெக்னாலஜியா!!!...
    அருமை வாத்தியார் அவர்களே!!!
    சுருக்கமாக, அதே நேரத்தில் தெளிவாகவும் தந்ததிற்கு நன்றி...
    அன்புள்ள மாணவன்,
    பா. லெக்ஷ்மி நாராயணன்.
    தூத்துக்குடி./////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி லெட்சுமி நாராயணன்!

    ReplyDelete
  12. ////Blogger smruthi sarathi said...
    Sir I am very new to astrology... I saw a test for basic astrology... Even in that I was able to answer just few questions... But when I read such posts I find these as a good examples... Post many things lik this sir/////

    தொடர்ந்து படியுங்கள் சகோதரி. எல்லாம் வசப்படும்!

    ReplyDelete
  13. /////Blogger smruthi sarathi said...
    And sir paralgal means what sir... I cannot download jagannatha hora in my mobile... 0-8 paralgal how to find that sir... Is there any mobile version.... Please help me sir... I want to find paralgal of my horoscope for each Graham..../////

    உங்கள் ஜாதகத்திற்கு என்றால், பிறப்பு விபரங்களை எழுதுங்கள். என்னிடம் மென்பொருள் உள்ளது. நான் கணித்து அனுப்பிவைக்கிறேன். மின்னஞ்சலில் எழுதுங்கள்.

    ReplyDelete
  14. /////Blogger kmr.krishnan said...
    Very informative.////

    நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  15. /////Blogger Saravanan V said...
    Super sir/////

    நல்லது. நன்றி சரவணன்!

    ReplyDelete
  16. /////Blogger C Jeevanantham said...
    Dear Sir,
    The lesson was understandable and informative.
    THANKINGyou,/////

    நல்லது. நன்றி ஜீவானந்தம்!

    ReplyDelete
  17. /////Blogger Kannan L R said...
    ஐயா வணக்கம்
    நானோ தொழில்நுட்ப ஜாதக அலசல் ஐயா
    அருமை
    கண்ணன்/////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கண்ணன்!

    ReplyDelete
  18. ////Blogger bala said...
    Vanakkam Iyya,
    Arumayana pathivu :) :) Nandri/////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி பாலா!

    ReplyDelete
  19. ///////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,பாக்யாதிபதி 12ல்.அதோடு பாப கர்தாரி யோகத்தில்.ஒரு சிறிய சந்தேகம்.லக்னாதிபதி நீசம் அதனால் கஷ்ட ஜீவனம் என்றால் அம்சத்தில் அவர் எப்படி என்று பார்க்க வேண்டுமா?மேலும் 4,11 அதிபதி செவ்வாய் ஆட்சி பலத்துடன் இருப்பதால் சுகம் மற்றும் லாபாதிபதி கஷ்ட ஜீவனத்தை கொடுக்குமா?விரையாதிபதி குருவும் லாப ஸ்தானத்தில் இருப்பதால் சுபவிரையம் என்று எடுக்கலாமா?.அலசலுக்கு எடுத்த தலைப்பிற்கு சம்மந்தம் இல்லை என்றாலும் கஷ்ட ஜீவனம் என்பதால் இந்த சந்தேகம் வந்தது. தயவுசெய்து தவறாக எடுக்கவேண்டாம்.விளங்கிக்கொள்ளதான்.
    நன்றி.////

    கர்ம வினை நஷ்டத்தைக் கொடுக்கும். ஆனால் கடவுள் நஷ்ட ஈட்டைக் கொடுத்திருப்பார். நீங்கள் சொல்லும் கணக்கெல்லாம் நஷ்ட ஈட்டுக் கணக்கில் வரும் ஆதித்தன்!

    ReplyDelete
  20. //////Blogger venkatesh r said...
    வெட்டு ஒன்று, துண்டு இரண்டு போல "நச்"சுனு இருந்ததைய்யா அலசல். நன்றி./////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete

  21. Blogger Subbiah Veerappan said...
    ///////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,பாக்யாதிபதி 12ல்.அதோடு பாப கர்தாரி யோகத்தில்.ஒரு சிறிய சந்தேகம்.லக்னாதிபதி நீசம் அதனால் கஷ்ட ஜீவனம் என்றால் அம்சத்தில் அவர் எப்படி என்று பார்க்க வேண்டுமா?மேலும் 4,11 அதிபதி செவ்வாய் ஆட்சி பலத்துடன் இருப்பதால் சுகம் மற்றும் லாபாதிபதி கஷ்ட ஜீவனத்தை கொடுக்குமா?விரையாதிபதி குருவும் லாப ஸ்தானத்தில் இருப்பதால் சுபவிரையம் என்று எடுக்கலாமா?.அலசலுக்கு எடுத்த தலைப்பிற்கு சம்மந்தம் இல்லை என்றாலும் கஷ்ட ஜீவனம் என்பதால் இந்த சந்தேகம் வந்தது. தயவுசெய்து தவறாக எடுக்கவேண்டாம்.விளங்கிக்கொள்ளதான்.
    நன்றி.////

    கர்ம வினை நஷ்டத்தைக் கொடுக்கும். ஆனால் கடவுள் நஷ்ட ஈட்டைக் கொடுத்திருப்பார். நீங்கள் சொல்லும் கணக்கெல்லாம் நஷ்ட ஈட்டுக் கணக்கில் வரும் ஆதித்தன்!

    வணக்கம் ஐயா,இரண்டே வரிகளில் அற்புதமாக விளங்க சொன்னமைக்கு நன்றி.

    ReplyDelete
  22. ஒருவனுடைய கர்ம வினையை கண்டு பிடிப்பது எப்படி என்று ஒரு ஜாதகத்துடன் நேரம் கிடைக்கும் பொழுது தாங்கள் விளக்கம் அளிக்க தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன்.
    சந்திரசேகரன் சூரியநாராயணன்

    ReplyDelete
  23. மகர லக்கினத்திற்கு 12-இல் சுக்கிரனுடன் குரு இருந்து 10-இல் லக்கினாதிபதி சனி இருந்து அந்த ஜாதகனுக்கு சனி திசை புதன் புத்தி நடந்து கொண்டுருந்தால் ?
    அவனுக்கு நிலையான தொழில் இருக்குமா? வெளிநாட்டு வாய்ப்பு கிடைக்குமா?

    ReplyDelete
  24. /////Blogger Chandrasekaran Suryanarayana said...
    Very Nice Sir.////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  25. ////Blogger adithan said...
    Blogger Subbiah Veerappan said...
    ///////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,பாக்யாதிபதி 12ல்.அதோடு பாப கர்தாரி யோகத்தில்.ஒரு சிறிய சந்தேகம்.லக்னாதிபதி நீசம் அதனால் கஷ்ட ஜீவனம் என்றால் அம்சத்தில் அவர் எப்படி என்று பார்க்க வேண்டுமா?மேலும் 4,11 அதிபதி செவ்வாய் ஆட்சி பலத்துடன் இருப்பதால் சுகம் மற்றும் லாபாதிபதி கஷ்ட ஜீவனத்தை கொடுக்குமா?விரையாதிபதி குருவும் லாப ஸ்தானத்தில் இருப்பதால் சுபவிரையம் என்று எடுக்கலாமா?.அலசலுக்கு எடுத்த தலைப்பிற்கு சம்மந்தம் இல்லை என்றாலும் கஷ்ட ஜீவனம் என்பதால் இந்த சந்தேகம் வந்தது. தயவுசெய்து தவறாக எடுக்கவேண்டாம்.விளங்கிக்கொள்ளதான்.
    நன்றி.////கர்ம வினை நஷ்டத்தைக் கொடுக்கும். ஆனால் கடவுள் நஷ்ட ஈட்டைக் கொடுத்திருப்பார். நீங்கள் சொல்லும் கணக்கெல்லாம் நஷ்ட ஈட்டுக் கணக்கில் வரும் ஆதித்தன்!
    வணக்கம் ஐயா,இரண்டே வரிகளில் அற்புதமாக விளங்க சொன்னமைக்கு நன்றி.///////

    நல்லது. நன்றி!

    ReplyDelete
  26. //////Blogger Chandrasekaran Suryanarayana said...
    ஒருவனுடைய கர்ம வினையை கண்டு பிடிப்பது எப்படி என்று ஒரு ஜாதகத்துடன் நேரம் கிடைக்கும் பொழுது தாங்கள் விளக்கம் அளிக்க தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன்.
    சந்திரசேகரன் சூரியநாராயணன்/////////

    தாழ்மை எல்லாம் எதற்கு? நேரம் கிடைக்கும்போது எழுதுகிறேன் நண்பரே!

    ReplyDelete
  27. ////Blogger C.Senthil said...
    மகர லக்கினத்திற்கு 12-இல் சுக்கிரனுடன் குரு இருந்து 10-இல் லக்கினாதிபதி சனி இருந்து அந்த ஜாதகனுக்கு சனி திசை புதன் புத்தி நடந்து கொண்டுருந்தால் ?
    அவனுக்கு நிலையான தொழில் இருக்குமா? வெளிநாட்டு வாய்ப்பு கிடைக்குமா?///////

    முழு ஜாதகம் இல்லாமல், இப்படி உதிரியாக ஒரு கேள்வியைக் கேட்டால் எப்படி பதில் சொல்வது?

    ReplyDelete
  28. அருமை ஐயா. கொஞ்ச நாள் வகுப்பறைக்கு மட்டம் போட்டு விட்டேன். மன்னிக்கவும்.

    அலசல் அருமை.
    அருமை ஆசான்.

    அவ்வளவுதான். சொல்வதற்கு வேறென்ன இருக்கிறது. அந்தக்காலத்து தெளிவான, புரியும்படியான திரைக்கதை போல உள்ளது.

    நன்றி ஐயா,
    வணக்கத்துடன் மோகனசுந்தரம்.ந.



    ReplyDelete
  29. Sir I am one of your fan, your way of writing and its explanations are simply great

    ReplyDelete
    Replies
    1. Sir I send a mail to Ur mails Id regarding my doubt.... Waiting for the reply sir...vazhga valamudan...

      Delete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com