மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

6.10.16

கவிதை: படிப்பது வேறு; படித்துத் தெளிவது வேறு!

கவிதை: படிப்பது வேறு; படித்துத் தெளிவது வேறு!

கவியரசர் கண்ணதாசன் அவர்களுக்கிருந்த ஞானத்தைப் பற்றி இன்று பார்ப்போம்!

ஞானம்

உள்ளத்திலிருந்து வெளிப்படுவது கவிதை! உள்ளத்திலிருந்து அது வந்தாலும் அதைச் சிறந்த முறையில் எழுத்தில் வெளிப்படுத்துவதற்கு மொழியாற்றல் வேண்டும்.

ஆனால் சினிமாவிற்கு பாட்டெழுதுவது என்பது சற்று வித்தியாசமானது. மேற்கூறிய இரண்டோடு மேலும் ஒன்று கூடுதலாக வேண்டும்.

அதுதான் ஞானம்!

விஷயஞானம் என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

சினிமா பாடல்களைப் பொதுவாக பக்திப்பாட்டு, தாலாட்டுப் பாட்டு, காதல் பாட்டு, தத்துவப் பாட்டு, பல்சுவைப் பாட்டு என்று ஐந்து விதமாகப் பிரிக்கலாம்.

ஒரு திரைப்படக் கவிஞருக்கு கற்றுணர்ந்த அனுபவமும், பட்டுத்தெளிந்த அல்லது பட்டுத்தேறிய அனுபவமும், மக்களின் நாடியைப் படித்துப் பார்த்த அனுபவமும் வேண்டும்.

அந்தக் கற்றுணர்ந்த அறிவும், பட்டுத்தேறிய அனுபவமும் கவியரசருக்கு அதீதமாக இருந்தது.

எப்படி இருந்தது என்று பார்ப்போம்.

கவியரசர் ஆன்மிகத்தில் மிகவும் ஈடுபாடு உள்ள ஒரு சமூகத்தில் பிறந்தவர். அதோடு பல புராணங்களும், இதிகாசங்களும் அவருக்குப் படித்துணர்வதற்கு இளம் வயதிலேயே கிடைத்தது.

அதேபோல அவர் பிறந்த மாவட்டத்தில் தாலாட்டுப் பாட்டிற்கும் பஞ்சமில்லை. அந்தக் காலத்து - அதாவது கவியரசர் காலத்துத் தாய்மார்களெல்லாம், தாய்ப்பாலோடு தமிழையும் சேர்த்து ஊட்டினார்கள். தங்கள் குழந்தைகளைத் தாலாட்டுப் பாடித்தான் தூங்கவைத்தார்கள்.

கவியரசர் இளைஞராக இருந்தபோது ஒரு பெண்ணைக் காதலித்து, அது கைகூடாமற்போய் சோகத்தில் மிதந்தவர்.

அந்த காதலிக்காக அவர் ஒரு நோட்டுப்புத்தகத்தில் எழுதி வைத்திருந்த எண்ணற்ற பாடல்களில் சில பாடல்கள் பின்னாளில் திரையில் ஒலித்தன.

உதாரணத்திற்கு சில பாடல் வரிகள்:

"நான்பேச நினைப்பதெல்லாம் நீபேச வேண்டும்
நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும்"

"பாலும் பழமும் கைகளில் ஏந்தி
பவளவாயில் புன்னகை சிந்தி
கோலமயில் போல் நீ வருவாயே
கொஞ்சும் கிளியே அமைதி பெறுவாயே!"

"உன்னைச் சொல்லிக் குற்றமில்லை
என்னைச் சொல்லிக் குற்றமில்லை
காலம் செய்த கோலமடி
கடவுள் செய்த குற்றமடி!"

அதேபோல அவர் சிறு வயதிலும், இளைஞராக இருந்தபோதும், கேட்ட, படித்த தாலாட்டுப் பாடல்கள் எண்ணற்றவை!

அந்தப் பகுதியில் மிகவும் பிரபலமான தாலாட்டுப் பாடல்களில் ஒன்றின் வரிகளை உங்களுக்காகக் கீழே கொடுத்துள்ளேன்

"வாரும்வாரும் தெய்வவடிவேல் முருகரே வரும்
வள்ளிமணாளரே வாரும், புள்ளிமயிலோரே வாரும்
சங்கும் ஒலித்தது, தாழ்கடல் விம்மிற்று
சண்முகநாதரே வாரும், உண்மைவினோதரே வாரும்"

இப்படி அசத்தலாக 24 வரிகளோடு கூடிய பாடல் அது! தாய் ராகம் போட்டுப் பாடுகையில் குழந்தை பத்தாவது வரியிலேயே தூங்கிவிடும்.

அதே போல சிறுவயதில், தன் பெற்றோர்களுக்கு எட்டாவது குழந்தையாகப் பிறந்தமையாலும், தங்கள் குடும்பத்தில் நிலவிய வறுமையாலும், பல அனுபவங்களைப் பெற்று வாழ்க்கையின், ஏற்றத்தாழ்வுகளையும், தத்துவங் களையும் அப்போதே புரிந்து கொண்டு விட்டவர் அவர்.

அதனால்தான் எல்லாவிதமான பாடல்களையும் அவரால் எழுத முடிந்தது.

கவியரசர் திரைத்துறையில் நுழைந்த காலத்தில் (1952 - 1960) பிரபலமாக இருந்த கவிஞர் ஒருவர் பக்திப்பாட்டு அல்லது தாலாட்டுப் பாட்டு என்றால், என்னால் முடியாது, நீங்கள் கண்ணதாசனிடம் வாங்கிக் கொள்ளுங்கள் என்று பெருந்தன்மையோடு இயக்குனர்களிடமும், சையமைப்பாளர்களிடமும் கூறிவிடுவாராம்.

அந்த நிகழ்வுகளெல்லாம் அடுத்து வரும் பதிவுகளில் விவரமாக வரும்.

இப்போது சொல்ல வந்த விஷயத்திற்கு வருகிறேன். கீழே உள்ள பாட்டைப் பாருங்கள்.
-------------------------------------------------
"ராமன் எத்தனை ராமனடி - அவன்
நல்லவர் வணங்கும் தேவனடி
ராமன் எத்தனை ராமனடி!

கல்யாணக் கோலம் கொண்ட கல்யாணராமன்
காதலுக்கு தெய்வம் அந்த சீதாராமன்
அரசாள வந்த மன்னன் ராஜாராமன்
அலங்கார ரூபன் அந்த சுந்தரராமன்
தாயே என்தெய்வம் என்ற கோசலராமன்
தந்தைமீது பாசம் கொண்ட தசரதராமன்,
வீரன்என்னும் வில்லை ஏந்தும் கோதண்டராமன்
வெற்றி என்று போர்முடிக்கும் ஸ்ரீஜெயராமன்

வம்சத்திற்கு ஒருவன் ரகுராமன்
மதங்களை இணைப்பவன் சிவராமன்
மூர்த்திக்கு ஒருவன் ஸ்ரீராமன்
முடிவில்லாதவன் அனந்தராமன்.

ராமஜெயம் ஸ்ரீராமஜெயம்
நம்பியபேருக்கு ஏது பயம்?
ராமஜெயம் ஸ்ரீராமஜெயம்
ராமனின் கைகளில் நான் அபயம்!

ராம், ராம், ராம்
ராம், ராம், ராம்

ராமன் எத்தனை ராமனடி!

படம் -லஷ்மி கல்யாணம்
பாடியவர்: பி..சுசீலா அவர்கள்
வருடம்: 1968
--------------------------------------------
இன்னொரு பாடல்:

"அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்றான்
கீதையிலே கண்ணன்.
பார்ப்பவர் கண்ணுக்குத் தெரிவேன் என்றான்
பாரதத்தில் கண்ணன்.

காற்றடித்தால் அவன் வீடாவான்
கடுமழையில் அவன் குடையாவான்
அற்றாதழுதால் அழுத கண்ணீரை
அங்கே துடைக்கும் கையாவான்!

சிறையினிலேதான் அவன் பிறந்தான்
மழையினிலே வேறு மனைபுகுந்தான்
உறவறியாத குழந்தைக் கெல்லாம்
உறவினனாக அவன் வருவான்!

அடையாக் கதவு அவன் வீடு
அஞ்சேல் என்பது அவன் ஏடு
அடைக்கலம் தருவான் நடப்பது நடக்கும்
அமைதியுடன் நீ நடமாடு!

படம்: அனாதை ஆனந்தன் (வருடம் 1970)
பாடியவர்: சீர்காழி. எஸ்.கோவிந்தரஜன் அவர்கள்
-------------------------------------------
இப்படிப் பல பாடல்களைச் சொல்லாம் இடமும், நேரமும், பதிவின் நீளமும்  இரண்டோடு நிறைவு செய்கிறேன்.

இப்போது சொல்லுங்கள் இது போன்ற பாடல்களை எழுதுவதற்கு, ராமாயணமும், மகாபாரதமும் கற்றுணர்ந்திருக்க வேண்டாமா?

படிப்பது வேறு, படித்துத் தெளிவது வேறு! அதுதான் ஞானம்!
-------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

8 comments:

kmr.krishnan said...

Nice Sir.

ravichandran said...

Respected Sir,

Happy morning... Article about King of poem is wonderful.

Have a great day.

Thanks & Regards,
Ravi-avn

adithan said...

வணக்கம் ஐயா,
இன்னும் சிலகாலம்
இக்கவிஞன்
வாழ்ந்திருந்தால்
இவன் கவிதையிலே
கரைந்து மண்ணாய்
மாறி மரம் வளர்த்துப்
பார்த்திருப்பேன்
என் விதி பிள்ளை
மனத்து உவமையாய்
பழி சுமக்கத்தானோ!
ஏக்கபெருமூச்சு விட்ட
கல் எதிர்பார்ப்புடன்
காத்திருக்கிறது.
நன்றி.


வரதராஜன் said...

வணக்கம் குருவே!
கவியரசர் நாத்திகத்தை ஆதரித்த காலம் போய் முழுவதும் ஆத்திகனாய் மாறிய காலம் தொட்டு அவரது நாளில்
சரஸ்வதி துணையாய் நின்று இந்து மதத் தத்துவங்கள் ஏனைய காவியங்கள்,புராணங்கள் அனைத்திலும் ஈடுபாடுடன் இணைந்திருந்தது ஆச்சரியமே! ஆனால், அவர் வாழ்க்கை ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இருந்தது அவர் கலை உலகில்,திரைத்துரையில் சிறந்த சிந்தனையாளராக விளங்கி மறைந்தாலும் மக்கள் மனதில் நிரந்தர இடத்தைப் பிடித்துள்ள மாபெரும் மேதை! அவரது எழுத்தாற்றலைச் சொல்ல எழுத்துக்களேயில்லை எனலாம்! அவர் அமரகவி.உலகம் உள்ள வரை அவர் புகழ் பாடும்!

Subbiah Veerappan said...

////Blogger kmr.krishnan said...
Nice Sir.////

நன்றி கிருஷ்ணன் சார்!

Subbiah Veerappan said...

////Blogger ravichandran said...
Respected Sir,
Happy morning... Article about King of poem is wonderful.
Have a great day.
Thanks & Regards,
Ravi-avn/////

நல்லது. நன்றி ரவிச்சந்திரன்!

Subbiah Veerappan said...

//////Blogger adithan said...
வணக்கம் ஐயா,
இன்னும் சிலகாலம்
இக்கவிஞன்
வாழ்ந்திருந்தால்
இவன் கவிதையிலே
கரைந்து மண்ணாய்
மாறி மரம் வளர்த்துப்
பார்த்திருப்பேன்
என் விதி பிள்ளை
மனத்து உவமையாய்
பழி சுமக்கத்தானோ!
ஏக்கபெருமூச்சு விட்ட
கல் எதிர்பார்ப்புடன்
காத்திருக்கிறது.
நன்றி./////

உங்களின் ஆதங்கம் புரிகிறது. நன்றி ஆதித்தன்!Subbiah Veerappan said...

/////Blogger வரதராஜன் said...
வணக்கம் குருவே!
கவியரசர் நாத்திகத்தை ஆதரித்த காலம் போய் முழுவதும் ஆத்திகனாய் மாறிய காலம் தொட்டு அவரது நாளில்
சரஸ்வதி துணையாய் நின்று இந்து மதத் தத்துவங்கள் ஏனைய காவியங்கள்,புராணங்கள் அனைத்திலும் ஈடுபாடுடன் இணைந்திருந்தது ஆச்சரியமே! ஆனால், அவர் வாழ்க்கை ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இருந்தது அவர் கலை உலகில்,திரைத்துரையில் சிறந்த சிந்தனையாளராக விளங்கி மறைந்தாலும் மக்கள் மனதில் நிரந்தர இடத்தைப் பிடித்துள்ள மாபெரும் மேதை! அவரது எழுத்தாற்றலைச் சொல்ல எழுத்துக்களேயில்லை எனலாம்! அவர் அமரகவி.உலகம் உள்ள வரை அவர் புகழ் பாடும்!/////

உண்மைதான். உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!