மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

13.10.16

ஓதியப்பா, உடன் வந்து காட்சி கொடு அப்பா!


ஓதியப்பா, உடன் வந்து காட்சி கொடு அப்பா!

போகருக்கு வழிகாட்டிய ஓதியப்பர் - ஓதிமலை முருகன்:

            >> சத்தியமங்கலம் அருகே 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது  ஓதி மலை, இங்கே பழமையான முருகன் கோவில் அமைந்துள்ளது  .ஒதிமலையில் உலகிலேயே வேறு எங்கும் இல்லாத வகையில் ஐந்து  முகங்களும்  , எட்டு  கரங்களும்  கொண்ட ஸ்ரீ முருகபெருமான் அருள்பாலிக்கிறார் . ஆறுபடை உள்பட முருகபெருமான் வீற்றிருக்கும் மலைகளிலேயே இதுதான் மிகவும் உயர்ந்தது. கோவில் 1800  செங்குத்தான படிகளை  கொண்டது, மலையேற  சற்று சிரமமாகத்தான்  இருக்கும் ..கைப்பிடி இல்லை ..வெயில் நேரத்தில் ஏறுவது கடினமாக இருக்கும் ..

        >>  புஞ்சைப்புளியம்பட்டியிலிருந்து சிறுமுகை -மேட்டுப்பாளையம் செல்லும் வழி அல்லது பவானிசாகரில் இருந்து சிறுமுகை செல்லும் வழியில் இரும்பறையை அடுத்து இந்த மலை உள்ளது. இது மிகப்பழமையான பாடல்பெற்ற முருகன் கோவிலாகும்..

       >> சுவாமிமலையில்  சிவனுக்கு பிரணவத்தின்  பொருளை  உணர்த்திய   முருகன், இந்த ஓதிமலை தலத்தில் வேதம், ஆகமங்களை  உபதேசித்தார். இவ்வாறு சிவனுக்கு வேதம் ஓதி உபதேசம் செய்த மலை என்பதால் இந்த தலம் “ஓதிமலை” என்றும், சுவாமிக்கு “ஓதிமலை முருகன்” என்ற பெயரும் ஏற்பட்டது.

         >> பதினெட்டு சித்தர்களின் ஒருவரான போகர்  ஒதிமலையில் முதலில்  முருகபெருமானை தரிசித்தார் பின்புதான் முருக பெருமானின் பரிபூரண அனுகிரகத்தால் இறைவனின் வழிகாட்டுதலின் பேரில்  பழனிக்கு சென்றதாக சொல்லப்படுகிறது ..ஓதிமலை முருகனை போகரின் ஆலோசனைப் படிதான் ஐந்து முகமுருகன் விக்கிரகம் பிரதிஷ்டை   செய்யப்பட்டதாகவும்  சொல்லப்படுகிறது ...

போகர் தவம் செய்த பூதிக்காடு:

          >> இம்மலையின் உச்சியில்  ஈசான திக்கிலிருந்து  பார்த்தால் அடிவாரத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் ஒரு  பகுதி மட்டும் வெண்மை  நிறத்தில் காணப்படும்.. இது  பூதிக்காடு என்று அழைக்கப்படுகிறது .. இங்குதான் போகர்  முருகனை வேண்டி யாகம் நடத்திய இடம் ..இங்கு மண்ணே  விபூதியாகி வெண்மை நிறத்தில் இருக்கும் ,, விபூதிக்காடு  - தான் காலப்போக்கில் பூதிக்காடு என்று  அழைக்கப்படுகிறது.. இங்கே சிறிய குடில்  அமைத்து அதில் கல்பீடம்  வைக்கப்பட்டு உள்ளது ..  

        >>  இத்தலத்தில் பக்தர்கள் முருகனிடம் எந்த ஒரு காரியத்திற்கும் பூ வைத்து   உத்தரவு கேட்கின்றனர். அதன் பிறகுதான் ஒரு காரியத்தை நிறைவேற்றுகின்றனர்.  இதை வரம் கேட்டல் என இப்பகுதி மக்கள்கூறுகின்றனர். ஒதிமலை அடிவாரத்தில் பிள்ளையார் கோவில் அமைந்துள்ளது. அதனை தொடர்ந்து மலையேற படிக்கட்டுகள் ஆரம்பம் ஆகின்றன.

            >>   பச்சை பசேல் பின்னணியில் மலையேறுவது மனதுக்கு மிகவும் இதமாக இருக்கும். மலை பகுதியில் ஏராளமான மயில், குரங்குகளும், பல வண்ண பறவைகளும் உள்ளன. இது சித்தர்களின் இருப்பு கொண்ட   மலைப்பகுதி என ஆத்மசாதகர்களால் உணரப்படுள்ளது  ..பிரம்மாவை முருகன் இரும்பு அறையில் சிறைப்படுத்தியதால் இவ்வூர் இரும்பறை என்றே  அழைக்கப்படுகிறது. அடிவார - இரும்பறையில் பிரம்மன் சிறைப்பட்ட இடத்தினை தரிசிக்க மறக்க வேண்டாம் ..

ஓதிமலை குறித்த புராணச் செய்தி :

        படைப்புக் கடவுளான பிரம்மா கைலாயம் சென்றபோது, விநாயகரை மட்டும் வணங்கிவிட்டு முருகனை வணங்காமல் சென்றார். அவரை அழைத்த முருகன், பிரம்மாவிடம் பிரணவ மந்திரத்தின் விளக்கம் கேட்டார். தெரியாமல்  நிற்கவே, அவரை சிறையில் அடைத்து தானே  படைப்புத்தொழிலை தொடங்கியதாக சொல்லப்படுகிறது.

       >>  படைக்கும்  கடவுளான  பிரம்மாவிற்கு அப்போது ஐந்து முகங்கள் இருந்தது. எனவே, முருகனும் பிரம்மாவின் அமைப்பிலேயே ஐந்து முகங்களுடன் இருந்து  உலகை படைத்தார். இந்த அமைப்பு “ஆதிபிரம்ம சொரூபம்”எனப்பட்டது.

      >> முருகனின் படைப்பில் அனைத்து உயிர்களும் புண்ணிய ஆத்மாக்களாகவே பிறக்கவே பூமாதேவி பாரம் தாங்காமல் சிவனிடம்முறையிட்டாள். சிவன், முருகனிடம் பிரம்மாவை விடுவிக்கும்படி கூறினார். மேலும் அவரிடம் பிரணவத்தின் விளக்கம் கேட்டார். முருகன் அவருக்கு விளக்கம் சொல்லி, பிரம்மாவையும் விடுவித்தார்.

 ஓதி மலை அமைவிடம் :

      சத்தியமங்கலத்தில் இருந்து  புளியம்பட்டி வரவேண்டும். புளியம்பட்டியில் இருந்து 1௦ கீமீ தான்…ஆனா புளியம்பட்டியில் இருந்து ஒதிமலை போக பஸ் வசதி  குறைவு..

1. ஈரோட்டிலிருந்து - ஈரோடு > கோபி > சத்தியமங்கலம் > புளியம்பட்டி > ஒதிமலை வரவேண்டும் ..

2. கோவையிலிருந்து -கோவை >  அன்னூர் > ஒதிமலை வரவேண்டும் .

3.  மதுரையில் இருந்து மதுரை  -  பழனி > தாராபுரம் >திருப்பூர் > அவினாசி  > புளியம்பட்டி > ஓதி மலை வரவேண்டும்..

         ஒருமுறை  சென்றுவாருங்கள் ..  சித்தர்களின் அருளும் , முருகபெருமானின் பரிபூரண  கடாட்சியமும் ,அருமையான  அனுபவங்களையும்  பெறுவீர்கள் ..

முருகபெருமான் அருள்புரியும்  திருத்தலங்கள் :

1. ஆறுமுகம் பன்னிரண்டு கரங்களுடன்  --  அவினாசி அருகில் உள்ள திருமுருகன்பூண்டியிலும்,

2. ஐந்து முகம் எட்டு கரங்களுடன்  --  பெத்திக்கோட்டை ஓதிமலையிலும்,

3. நான்கு முகம் எட்டு கரங்களுடன்  --  திண்டுக்கல்சின்னாளப்பட்டியிலும்,

4. மூன்று முகம் ஆறு கரங்களுடன்  --  கோபி, காசிபாளையம் குமரன்கரட்டிலும்,

5. இரண்டு முகம் நான்கு கரங்களுடன்  --  சென்னிமலையிலும்,

6. ஒரு முகம்  தண்டாபுதபாணியாக  --  பழனியிலும்,மற்றும் அனேக இடங்களில்  முருகப் பெருமான் வீற்றிருக்கிறார்.

          1. ஆறுமுகம் கொண்ட கோலம் -திருமுருகன் பூண்டி தலம் முருகப் பெருமான் சிவபெருமானை வழிபட்ட தலமாகும்.அகத்தியர், மார்க்கண்டேயர், துர்வாசர் போன்ற அருளாளர்கள் வழிபட்டுச் சென்றுள்ளனர். இத்தலத்தின் வழியாக சுந்தரர் செல்லும்போது, இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் தன் பூதகணங்களை வேடர் வடிவில் ஏவிச் சுந்தரரின் செல்வங்களைப் பறித்துக்கொண்ட தலம் எனக்கூறப்படுகிறது. இத்தலம் பிரம்மஹத்தி தோஷம் நீங்கவும், மற்றும் சித்தப்பிரமை, பைத்தியம், பில்லி, சூன்யம் போன்ற நோய்கள் நீங்குவதற்கும் ஏற்ற தலமாகும். இதனால்பக்தர்கள் பல நாட்கள் இங்கு வந்து தங்கி தீர்த்தமாடி, இறைவனை வழிபட்டுச் செல்கின்றனர்.

          2. ஐந்து முகம்கொண்ட திருக்கோலம் -போகருக்கு வழிகாட்டிய ஓதியப்பர் - ஓதிமலை முருகன்.

          3. நான்கு முகங்களுடன் முருகப்பெருமான்-  திண்டுக்கல் சின்னாளப்பட்டி என்ற தலத்தில் நான்கு முகங்களுடன் முருகப்பெருமான் காட்சியளிக்கிறார். ‘ஓம்’ என்னும் பிரணவ மந்திரத்திற்கு பொருள் தெரியாததால் பிரம்மனை முருகப் பெருமான் சிறையில் அடைத்தார். பின்னர் ஈசனின் மகனான கந்தக் கடவுளே படைப்புத் தொழிலை மேற்கொண்டார். அப்போது அவர் நான்கு முகங்களுடன் இருந்ததாக கோவில் தல புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

          4.  மூன்று முகத்திருக்கோலம் -  மூன்று முகமுருகனாக ஈரோடு மாவட்டம் கோபி வட்டம் தடப்பள்ளி கிராமம் காசிபாளையம் குமரன் கரட்டில் சிவகிரி ஸ்ரீ முத்து வேலாயுதசாமி ஆலயத்தில் அருள் பாலிக்கிறார். இது 800 ஆண்டுகள் பழமையானது. இத் தலத்தின் சிறப்பு என்னவென்றால்முருகப்பெருமான் மூன்று முகம் ஆறு கரங்களுடன் கிழக்கு பார்த்த  முகமாக நின்ற நிலையில் தேவியருடன் அருள் பாலித்து வருகிறார்.எங்கும் முருகப்பெருமான் முன்பு அவரது வாகனமான மயிலை பீடத்தில் அமைத்திருப்பதை காணலாம். ஆனால் இத்திருக்கோவில்முன்பு சக்திவேல் அமையப்பட்டிருக்கிறது. இவ்வேல் சூரபத்மனை வதம் செய்ய ஆதிசிவசங்கர அம்மை உமையவள் சகிதம் இவ்வேலின்ஒருபுறம் சரவணபவ சக்ரமும் மறுபுறம் ஓம் என்ற எழுத்துடன்சூலாயுதமும் வஜ்ஜராயுதமும் பொறிக்கப்பட்டுள்ளது.

          5..இரண்டு முகம் உடைய சென்னிமலை முருகன் கோவிலில் செவ்வாய் தவிர மற்ற எட்டு கிரகங்களையும் காணலாம். ஏனெனில் இந்த மூலவர் முருகனே செவ்வாய் கிரகமாக வீற்றிருக்கிறார். எனவே இத்தல முருகப்பெருமானை வணங்கினால் நவக்கிரக தோஷங்களும் அகலும். சனிதோஷம், நாக தோஷம், செவ்வாய் தோஷம் என சகல கிரக பீடைகளும் உடனே விலகும்.

          6.ஒரு முகங்கொண்ட முருகன் பழனி முதலான அனேக இடங்களில் தரிசிக்கலாம்~!!!!!
=======================================================
ஒரு முறை சென்று ஓதிமலை முருகனை தரிசித்து வாருங்கள்!

அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

12 comments:

kmr.krishnan said...

Very nice Sir. Thank you very much.

வரதராஜன் said...

வணக்கம் குருவே!
ஓதிமலை முருகன் பற்றிய தகவல் மிகவும் அற்புதம்!! ஓதிமலை முருகன் பற்றிய புராணச் செய்தி விருவிருப்பானது! ஒருதலை முருகன் முதல் அறுமுக முருகன் வரை உள்ள தகவல் அனைத்துமே வியப்பூட்டுபவை!
நன்றி குருநாதா!

ravichandran said...

Respected Sir,

Happy morning.... thanks for sharing such a holy info.

Have a great day.

Thanks & Regards,
Ravi-avn

Nagendra Bharathi said...

அருமை

Kalai Rajan said...

ஐயா
கோவில் Timing என்ன என்பதையும் தெரியபடுத்தவும்.

Subbiah Veerappan said...

////Blogger kmr.krishnan said...
Very nice Sir. Thank you very much.////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

Subbiah Veerappan said...

////Blogger வரதராஜன் said...
வணக்கம் குருவே!
ஓதிமலை முருகன் பற்றிய தகவல் மிகவும் அற்புதம்!! ஓதிமலை முருகன் பற்றிய புராணச் செய்தி விருவிருப்பானது! ஒருதலை முருகன் முதல் அறுமுக முருகன் வரை உள்ள தகவல் அனைத்துமே வியப்பூட்டுபவை!
நன்றி குருநாதா!////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!

Subbiah Veerappan said...

/////Blogger ravichandran said...
Respected Sir,
Happy morning.... thanks for sharing such a holy info.
Have a great day.
Thanks & Regards,
Ravi-avn////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி அவனாசி ரவி!

Subbiah Veerappan said...

/////Blogger Nagendra Bharathi said...
அருமை/////

நல்லது. நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

//////Blogger Kalai Rajan said...
ஐயா
கோவில் Timing என்ன என்பதையும் தெரியபடுத்தவும்.//////

கோயில் எல்லா நாட்களிலும் திறப்பது இல்லையாம். வெள்ளிக்கிழமை மற்றும் கார்த்திகை நட்சத்திரத்தன்று திறந்திருக்குமாம். நமது வகுப்பறை அன்பர் ஒருவர் இது குறித்து மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அதை கீழே கொடுத்துள்ளேன். அதை படித்துப்பாருங்கள். பிரகு அதன்படி செல்லுங்கள்

Othiyappar kovil archagar(ganapthisivam) ph no 98659 70586
Kovil ella natkalium tirapathu ellai Friday kirurhigai pondra special natkalilum tirapuullathu.
Kovil special patri nengal solava ellai " poo varam (utharavu) ketpathu patri...
V.Saravanan

அவருக்கு நம் நன்றி உரித்தாகுக!
--------------------------

வேப்பிலை said...

மலை ஏறும் போது
பெயர் சொல்லி அழைக்கும்

அற்புதத்தை இங்கு மட்டும் தான்
பார்க்க முடியும்.. என நினைக்கிறேன்.

சுவாமி உதட்டு அசைத்து பேசுவது
இன்னொரு அற்புதம்...

இங்கு மட்டும் தான் எலுமிச்சை
பிரசாதமாக தருகிறார்கள்..

இது எத்தனை நாள் ஆனாலும்
கெட்டு போவதில்லை

நாம் ஏதேனும் கேட்க விரும்பினால்
சன்னதி முன் சென்று கேட்டு

ஆறு முறை வலம் வந்து
மீண்டும் தரிசனம் செய்யும் போது

பதில் கிடைக்கும் ...
நடக்கும் அல்லது நடக்காது என...

அத்தனை அற்புதமான தலம்
அனைவரும் ஒரு முறையேனும்

தரிசனம் செய்து வர வேண்டிய தலம்
சென்று பாருங்கள்... அப்புறம் சொல்வீர்கள்.

Subbiah Veerappan said...

////Blogger வேப்பிலை said...
மலை ஏறும் போது
பெயர் சொல்லி அழைக்கும்
அற்புதத்தை இங்கு மட்டும் தான்
பார்க்க முடியும்.. என நினைக்கிறேன்.
சுவாமி உதட்டு அசைத்து பேசுவது
இன்னொரு அற்புதம்...
இங்கு மட்டும் தான் எலுமிச்சை
பிரசாதமாக தருகிறார்கள்..
இது எத்தனை நாள் ஆனாலும்
கெட்டு போவதில்லை
நாம் ஏதேனும் கேட்க விரும்பினால்
சன்னதி முன் சென்று கேட்டு
ஆறு முறை வலம் வந்து
மீண்டும் தரிசனம் செய்யும் போது
பதில் கிடைக்கும் ...
நடக்கும் அல்லது நடக்காது என...
அத்தனை அற்புதமான தலம்
அனைவரும் ஒரு முறையேனும்
தரிசனம் செய்து வர வேண்டிய தலம்
சென்று பாருங்கள்... அப்புறம் சொல்வீர்கள்.////

மேலதிகத் தகவல்கள் மூலம் மெய் சிலிர்க்க வைத்துவிட்டீர்கள் வேப்பிலையாரே!
மிக்க நன்றி!